பீட்ரூட் தயிர் பச்சடி
தேவையான பொருள்கள்:
பீட்ரூட் பெரியது - 1
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
தேங்காய் துருவல் - 3 மேஜை கரண்டி
சீரகம் - 1 டீ ஸ்பூன்
தயிர் - 1 கப் அல்லது 200ml
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சமையல் எண்ணெய் மற்றும் கடுகு, உ.பருப்பு, 1 டீ ஸ்பூன், வற்றல் மிளகாய் 1.
செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி நன்றாக கழுவி துருவிக் கொள்ளவும். துருவிய பீட்ரூட்டோடு பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை தயிரில் கலந்து உப்பு போட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய் தாளித்தால் முடிந்தது. புலாவ், பிரியாணி, கலந்த சாதம் போன்றவைகளுக்கு அருமையான சைட் டிஷ்.
பீட்ரூட்டின் சிவப்பும் தயிரின் வெண்மையும் கலந்து மிக அழகான பிங்க் நிறம் கிடைக்கும் அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, குழந்தை மனம் கொண்ட என் போன்றவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். கேரட்டை வைத்தும் இதை செய்யலாம்.
இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குபீட்ரூட் தயிர்ப்பச்சடி! ஆஹா சூப்பரா இருக்கு பானுக்கா...மிகவும் பிடிக்கும். மகனுக்கு ரொம்பப் பிடிக்கும் பீட்ரூட்
கீதா
இனிய காலை வணக்கம் கீதா.
நீக்குகுழந்தை மனம் கொண்ட என் போன்றவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். கேரட்டை வைத்தும் இதை செய்யலாம். //
பதிலளிநீக்குஹா ஹா ஹா பானுக்கா இங்க இன்னும் ரெண்டு குழந்தைகள் உண்டு!!!
கேரட் யெஸ் அதிலும் செய்யலாம். பெரும்பாலான காய்களில் தயிர்ப்பச்சடி செய்யலாம்.
நான் பீட் ரூட்டை அரைக்காமலும் சின்னத் துருவலாகத் துருவியும்...அதே போல காரட்டையும் ..
ஜீரகம் சேர்க்காமலும் செய்வதுண்டு அதுவும் நன்றாக இருக்கும் பானுக்கா
கீதா
ஹா ஹா ஹா பானுக்கா இங்க இன்னும் ரெண்டு குழந்தைகள் உண்டு!!!
நீக்குஅவ்வளவுதானா? ஒரு மழலை பட்டாளமே இருக்கிறாற்போல் தெரிகிறதே!!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? நேற்றெல்லாம் தளத்தில் தங்களை பார்க்க இயலவில்லையே.! இன்றைய ரெசிபியாக சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் தயாரித்த பீட்ரூட் தயிர் பச்சடி மிகவும் அருமை. படங்களும் விளக்கங்களும் அருமையாக உள்ளது. பீட்ரூட் இரத்த விருத்தி தரும் ஒரு காய்கறி. அதன் நிறத்தால் சட்டென மற்ற காய்கறிகளுடன் சேராது தனித்து நிற்கும் தன்மை கொண்டது. கார்ட் தயிர் பச்சடி அடிக்கடி செய்துள்ளேன். இனி இவ்விதமும் செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பீட்ரூட்டின் நன்மையையும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
நீக்குஇனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குபீட் ரூட் துருவி செய்வதே வழக்கம். இதுவும் நன்றாக இருக்கும்
என்று நம்புகிறேன். நன்றி பானுமா.
நன்றி வல்லி அக்கா.
நீக்குபானுக்கா படங்களும் நல்லாருக்கு....செய்முறை விளக்கம் எல்லாமும் நீங்க சூப்பரா சொல்லிடறீங்க...க்ரிஸ்பா!!!
பதிலளிநீக்குபேத்தி மாப்பிள்ளை வந்திருக்கறதுனால கண்டிப்பா ஸ்பெஷல் செய்வீங்க ஸோ க்ரிஸ்ப் ரெசிப்பி ஒன்னு க்ரிஸ்பா போடுங்க!!! ஹா ஹா ஹா
ஓகே இன்னும் ரெண்டு மூன்று வீட்டுக்கு விசிட் கொடுத்துட்டு இரவில்தான் மீண்டும் விசிட்...
எல்லாரும் பீட்ரூட் பச்சடி ருசித்து எஞ்சாய் த டே!!
கீதா
//க்ரிஸ்ப் ரெசிப்பி ஒன்னு க்ரிஸ்பா போடுங்க!!!//
நீக்குவிரைவில் எதிர்பாருங்கள், டட்ட்ட டட்ட்ட டொய்ங்!
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபீட்ரூட் தயிர் பச்சடி நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபீட்ரூட் துருவி செய்து இருக்கிறேன் அரைத்து செய்தது இல்லை.
இப்படி செய்து பார்க்கிறேன்.
படங்கள் நன்றாக இருக்கிறது.
பெரும்பான்மையோர் துருவித்தான் செய்வார்கள் போலிருக்கிறது. நான் அப்படி ஒரு முறை முயற்சி செய்ய வேண்டும். நன்றி.
நீக்குதயிர் பச்சடியா, அருமை சாப்பிடாமலே இவ்வளவு ருசி,சாப்பிட்டால் அமோகமா இருக்கும் போல...
பதிலளிநீக்குஆமாம், மிக சுவையாக இருக்கும். முயற்சி செய்யுங்கள்.
நீக்குவந்திருக்கும் சிநேகிதிகளுக்கும், வரவிருக்கும் நண்பர்கள், நண்பிகளுக்கும் இனிய வணக்கம், நல்வரவு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவரவேற்பும் பிரார்த்தனைகளும் வாழ்த்துரைகளும்.....
நீக்குஆகா!..
வாழ்க நலம்....
பீட்ரூட்டைத் துருவித் தான் பச்சடி செய்வேன். அரைத்துச் செய்ததில்லை. அதிகமாக சாலட் தான்! காரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம் சேர்த்த எலுமிச்சம்பழம் பிழிந்த சாலட்! அதிலும் துருவித் தான் சேர்ப்பது. இதுவும் நன்றாக இருக்கிறது பார்க்க.
பதிலளிநீக்குபானுமதி குழந்தை மனசு கொண்டவர் தானே! நானெல்லாம் குழந்தையே தான்! பதினைந்து வருஷங்களாக இணையத்தின் அசைக்க முடியாத ஒரே குழந்தைத் தலைவி நான் தான்! ஆகவே யாரும் போட்டிக்கு வர வேண்டாம் எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொ"ல்"கிறேன். :))))))
//இணையத்தின் அசைக்க முடியாத ஒரே குழந்தைத் தலைவி நான் தான்! //
நீக்குஉண்மைதான், நீங்கள் மூத்த குழந்தை, நாங்களெல்லாம், இளைய குழந்தைகள். ;))
கில்லர்ஜியையும் இரண்டு நாட்களாகக் காணோம். துரை மகள், மருமகன், பேத்தியோடு இனிமையான பொழுதாகக் கழித்து வருகிறார். பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குகுடும்பத்தில் புதுவரவு (தங்கைக்கு பெயர்த்தி வந்து இருக்கிறாள்)ஆகவே சற்றே அலைச்சல்.
நீக்குதாயும்,சேயும் நலமே...
வாழ்த்துக்கள் புதுவரவுக்கு.
நீக்குதாயும் சேயும் நலமுடன் வாழ்க!
குடும்பத்தின் புது வரவிற்கு வாழ்த்துகள். ஒரு வகையில் நீங்களும் தாத்தாவாகி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
நீக்குமீசையைப் பிடித்து இழுக்க இன்னுமொரு பட்டுக் கை!..
நீக்குவாழ்க வளமுடன்....
பீட்ரூட் தயிர் பச்சடியா? கோடைக்கு ஏற்ற அருமையான ரெசிப்பி. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமற்றதை அரைத்துக்கொண்டு, பீட்ரூட்டை துருவியோ இல்லை துருவினதை அரைச் சுற்று சுற்றினால் கரகரவென இன்னும் நன்றாக இருக்குமோ?
பார்க்க அழகாக வந்திருக்கிறது.
நன்றி நெல்லை.
நீக்கு//பார்க்க அழகாக வந்திருக்கிறது.//grrrr! I will not read between the lines.
நீக்குநிஜமாகவே நிறம் ரொம்ப அழகா இருக்கு. நிஜமான பாராட்டு வந்தாலுமே சந்தேகம் உங்களுக்கு வருதே....
நீக்குஇந்த பச்சடியின் சிறப்பே இதன் கலர்தான். நன்றி.
நீக்குஇங்கு எனக்கு 'வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி' மட்டுமே கிடைக்கிறது, வாரம் மூன்றுமுறை...!!
பதிலளிநீக்குஅதுவும் வெய்யிலுக்கு உகந்ததுதானே. வெளியில் எங்கேயோ தங்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வீட்டுக்கு வரும்பொழுது செய்து சாப்பிடுங்கள். நன்றி!
நீக்குபுதுவிதமான குறிப்பு..
பதிலளிநீக்குநல்லதொரு பச்சடி...
நிறைந்த சத்துக்களுடன் கூடியது...
வாழ்க நலம்...
நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஆஹா பீட்ரூட் தயிர் பச்சடி.... துருவி அதில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பழக்கம் சிறு வயதில் உண்டு. இப்படி பச்சடியாக செய்தது இல்லை. முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதயிர்ப்பச்சடி ராமராஜன் கலரில் அழகாக இருக்கிறது மேடம்.
பதிலளிநீக்குஹாஹாஹா! நன்றி ஜி.
நீக்குஓ! இன்று என்னுடைய சமையல் குறிப்பா? மறந்தே விட்டேன். தவிர இரண்டு நாட்களாக ஜலதோஷம், லேசான ஜுரம், நேற்று பயங்கர மண்டையிடி. இன்று கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் தொண்டை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் காலையிலிருந்து இணையம் பக்கம் வரமுடியவில்லை.
பதிலளிநீக்குசத்துள்ள சைட் டிஷ்...
பதிலளிநீக்குநன்றி டி.டி.
நீக்குஆஆஆஆ பானுமதி அக்கா உங்களைப்போலவே பீற்றூட் டிஸ் உம் ரொம்ப அழகா இருக்கு.
பதிலளிநீக்குகீதா சொன்னதைப்போல எனக்கும் அரைக்காமல் சேர்த்தால்தான் பிடிக்கும் என நினைக்கிறேன் . சலாட் போல சாப்பிட்டதுண்டு இப்படி தயிர் சேர்த்ததில்லை... முயற்சிக்கிறேன்.
வாங்க அதிரா, பார்த்து ரொம்ப நாளாச்சு. கருத்துக்கு நன்றி!
நீக்குதயிர்ப் பச்சடி நல்லகாரஸாரமாக வந்திருக்கு. முதலிலிருந்து கடைசிவரை எல்லாவற்றுடனும் ஜோடி சேருகிறது. நானும் துருவிதான் சேர்ப்பேன். இதே பீட்ரூட்டுத் துருவலை தாளித்துக்கொட்டி, பச்சைமிளகாயுடன் வதக்கி புளித்தண்ணீர் சேர்த்து, உப்பு,வெல்லம் எல்லாம் போட்டு கொதிக்கவைத்து இனிப்புப் பச்சடியாகவும் செய்யலாம். எலந்தைவடாம்மாதிரி ருசிவரும். துளி செய்து பார்த்து பதிவு போடுங்கள். நான் செய்ததுண்டு. உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. அதான் இதையும் செய்து பாருங்கள் என்று எழுதுகிறேன். நன்றி. அன்புடன்
பதிலளிநீக்குவாங்க காமாட்சி அம்மா. நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொன்னபடி நான் முயற்சி செய்து விட்டு, படங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்குகலரை பார்த்தாலே எங்க வீட்டில் தள்ளி போய்டுவாங்க
பதிலளிநீக்கு