ஞாயிறு, 26 மே, 2019

ரொம்ப 'வெஜ்'ஜாய் இருப்பவர்களுக்கு...

இது மாதிரி பழங்குடி உடைகள் அணிய கட்டணமாக 200 ரூபாய் வாங்கிய மாதிரி நினைவு.  இதை அணிந்துகொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் (அதாவது அந்த ஏரியாவுக்குள்) சுற்றலாம்! 

காஷி யை விட காவி அதிகமோ?



இந்த உடை அணியும்போதே வாழ்த்து கூறுவது போல கையில் ஒரு பூங்கொத்துடன் அனுப்புகிறார்கள்.


 மரம் சார்....   மறைக்கறீங்க !


ரொம்ப நடக்க முடியவில்லையா?  இங்கு அமர்ந்து ஓய்வு எடுக்கலாம்.  இங்கு அதிகபட்சம் கப் நூடுல்ஸ் கிடைக்கலாம்! நாம் உணவு கொண்டுபோனால் இங்கு வைத்துச் சாப்பிடலாம்.


மரத்தில் இலையா பூவா எது அதிகம்?


மஞ்சள்பூ புதர் நிறைய

மேகாலயா அரசாங்கம் கவுஹாத்தி ஷில்லாங் சாலையில் புதிய சாலைகளை அமைக்கும் சாத்தியக் கூறுகளை சென்ற ஏப்ரலிலேயே ஆராய்ந்து கொண்டிருந்ததாகத் தகவல்.  ஏனென்றால் இலகு, கனரக வாகனங்கள் சாலையில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால் உமியம் நீர்மின் அணையில் ஏற்படும் சேதங்களை தடுக்கத்தான்................

இயற்கை சூழலில் செயற்கை


அந்த வியூ பாயிண்ட் போய் ...

ஏறிப் பார்த்த பின் தான் தெரிந்தது .  நிற்பதற்கு கூட  அங்கு சரியான இடம் இல்லை என்று


முன்னரே பார்த்த வலைக்குடும்பம் தான்

................400 வருடங்களுக்குத் தாங்கும் என்று சொல்லப்படும் அணையின் ஆயுள் இதனாலேயே குறையலாம் என்கிறார்களாம் வல்லுநர்கள்.

இவ்வளவு தண்ணீர் இருந்தால் ஏன் நீர்மின்சாரம் எல்லாம் எடுக்க மாட்டார்கள்?  நாமோ வந்த தண்ணீரையும் கடலில் கலக்கவிட்டு வீண் செய்தோம்.  நமக்கு நீருக்கும் அவதி; மின்சாரத்துக்கு அவதி!

அதோ...   ஏரியின் நடுவே ஒரு அஸ்பெஸ்ட்டாஸ் கூரை...  அதன்பின் தெரியும் ஒரு வெள்ளைக்கோடு...    அது ஒற்றையடிப்பாதை...  கரையிலிருந்து அதன் வழியே இங்கு சென்று அதே ஓய்வை எடுக்கலாம், சாப்பிடலாம்.  ம்...  இயற்கையை ரசிக்கலாம்.


அங்கு வேறு உள்ளூர் மக்கள் யாரும் கண்ணில் படவில்லை,  நாங்களும் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் சீக்கிரமே சென்று விட்டோம்.  உள்ளூர் மக்கள்தான் இல்லை, சக சுற்றுலாப் பயணிகளையும் யாரையும் காணோமே, ஏன்?   தெரியவில்லை.  அலுத்து விட்டது போலும்!  க்ளீன் செய்யும் ஆட்கள் மட்டும் கண்ணில் பட்டார்கள்!

 உமியம் ஏரி  ரிசார்ட் விட்டு வெளி வரும் முன் ஒரு பிரியாவிடைப் பார்வை


அங்கு வெஜ் ஹோட்டல் இல்லை.  நூடுல்ஸ் தான் பெரும்பாலும் ப்ளஸ் முட்டை...  ப்ரெட் முட்டை,  கப் நூடுல்ஸ் இப்படி...    எல்லாவற்றிலும் முட்டையாவது இருக்கும். வெஜ் ஹோட்டலுக்கு சுற்றிச்சுற்றி 50 கி மீ போனோம்,.  அங்கிருந்த ஹோட்டல் 100 % பியூர் வெஜ் என்றாலும் அதுவும் உள்ளூர் மக்கள் நடத்துவதுதான்.  தோசை, இட்லி, பொங்கல், உப்புமா...  இவை கிடைத்தன.  




அங்கு கிடைக்கும் சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா எல்லாவற்றிலும் கடுகு எண்ணெய் வாசனை....  அது உடலுக்கு நலலதுதான்.  இல்லை என்று சொல்லவில்லை.  ஆனால் நமக்கு ஒத்து வரவில்லையே...  ஏற்கெனவே பயணத்தில் இருப்பதால் எதுவும் ஒத்துக்கொள்ளாமல் வாந்தி...   இதில் இந்த வாசனை வேறு..  பழங்கள்தான் கதி.  ரொம்ப 'வெஜ்'ஜாய் இருப்பவர்களுக்கு அஸ்ஸாம், மேகாலயா லாயக்குக் கிடையாது!





நம் மனத்திலும் ஒரு வெறுமை



Bye  பை bye 


 கண் கலங்கியதால்...

ஆமாம்,  இந்த இரண்டில் நாம் வந்த கார் எது?


டிரைவர் வரும் வரை காத்திருப்போம்

52 கருத்துகள்:

  1. வந்திருக்கும், வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும் வாழ்த்துகளும் வணக்கமும். இன்னமும் யாரும் வரலையா நிஜம்மாவே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா அக்கா.. நல்வரவு.

      நீக்கு
    2. அப்பாடா! எத்தனை நேரம் தனியாவே பேசிட்டு இருப்பேன்? ஏற்கெனவே நான் தானாச் சிரிக்கிறதைப் பார்த்துட்டு ரங்க்ஸ் சந்தேகப் படறார். இங்கே தனியா வேறே பேசினேன்னா அம்புடுதேன்! :))))) வந்தீங்களே இந்த மட்டுக்கும்!

      நீக்கு
    3. ஹா... ஹா.. ஹா... கீதா ரெங்கன் கணினி படுத்தலாம்... மெசேஜ் அனுப்பியிருக்கார்!

      நீக்கு
  2. சீக்கிரம் யாரானும் வாங்க, எனக்குத் தனியா இருக்க பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும்! :)))) அந்த பூக்கள் சொரிந்திருக்கும் மரம் மகிழ மரமா? மகிழம்பூவா? பள்ளிக்காலங்கள் நினைவில் வருது. மகிழ மரத்தடியில் தான் உட்கார்ந்து சாப்பிடுவோம், பேசுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி சென்ற கால பிள்ளைகளே.. பாலங்கள் மாடங்கள் மரங்கள் ஆஹா... (பாட்டு)

      நீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒருத்தரும் வரலையா இன்னமும்? ஞாயிற்றுக்கிழமன்னா இம்புட்டு நேரமா தூங்கறது? எழுந்திருங்கப்பா எல்லாரும்!

    பதிலளிநீக்கு
  4. விளக்கங்களோடு கூடிய படப்பதிவு நன்றாய் இருக்கிறது. சில இடங்களில் ஸ்ரீராமின் கைவண்ணமோ? அஸ்ஸாம், மேகாலயா எல்லாம் போனதில்லை. போகவும் முடியாது! காமாக்யா பார்க்கணும்னு ரொம்ப ஆசை! ஆனால் போக முடியலை. கே.ஜி.எஸ். அவர்கள் போயிட்டு வந்துட்டாரா? அது பற்றிய படங்கள் வந்தனவா? நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி. நானும் போனதில்லை. கே ஜி எஸ் அங்கெல்லாம் போனாரா தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க தான் திருப்பதி தாண்டியே போக மாட்டீங்களே! :P:P:P:P:P

      நீக்கு
    2. grrrrrrrrrrrrrrr காசி போயிட்டு வந்தேனே....

      நீக்கு
  6. அந்த அஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டில் போய் உள்ளே இருந்து கொண்டு நல்லாப் படுக்கை விரித்துத் தூங்கணும்போல் இருக்கு.

    பை பை சொல்லிக் கண்கலங்கும் சிட்டு! மனதைக் கவர்ந்தது.

    பிரியாவிடைப்பார்வையும் நல்லா வந்திருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் ஏரியில் இருந்தாலும் அஸ்பெஸ்டாஸ் சூடு இல்லையோ? தூக்கம் வருமோ? மேலும்,

      நிறைய பேர் இயற்கையையும் ஏரியையும் ரசிச்சுகிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தூங்க முடியுமோ? (ஹிஹிஹிஹிஹிஹி...)

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. பை பை சொல்லி இலை இல்லையா கீழே விழுகிறது சிட்டு போல் தெரிகிறதா ?
    இயற்கையை விட்டு பிரியும் போது கண்கலங்கியது படத்தில் தெரியுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ இலையா அது? என் கண்ணுக்குச் சிட்டு மாதிரித் தெரியுதே! :)))))

      நீக்கு
  9. மரம் சார் மறைக்கறீங்க ! படமும் மற்றும் அனைத்து படங்களும் அழகு.
    வலை நண்பர்கள் மீண்டும் !
    நிறைய செய்திகள் கிடைத்தன இன்றும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அழகான படங்கள்...
    நயமான வர்ணனைகள்...

    பதிலளிநீக்கு
  11. பிரியாவிடைப் பார்வை...

    அது மதுரையில் அல்லவா!...

    இல்லையில்லை... இது வேற!....

    கடைசியில் பிரியா விடை கொடுத்ததா?..

    பதிலளிநீக்கு
  12. படங்களும், சுருக்கமான விளக்கங்களும் நன்றாக இருந்தன. கார்களின் எண் ஒற்றுமை புன்னகைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா. எண் ஒற்றுமைகளை கவனித்த முதல் கவனிப்பாளர்?

      நீக்கு
  13. காலை வணக்கம் சொல்ல மறந்து விட்டேன். எல்லோருக்கும் இனிய வீக் எண்ட் வணக்கம்.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அழகு.
    நாம் தண்ணீரின் மகிமையை இன்னும் உணரவில்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள் ஆனால் முயற்சி எடுக்கவில்லை. ​

      நீக்கு
  15. கார் நம்பர் வியப்பளிக்கிறது!
    அதை கவனமாக பார்த்து படம் எடுத்தவர்களுக்கு பாராட்டு.

    பதிலளிநீக்கு
  16. உடை அணியும்ப்போதே வாழ்த்து கூறுவதைப்போல..ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. வலை நண்பர்களா மாட்டினால் தெரியும்

    பதிலளிநீக்கு
  18. அபுரி ஜி எம் பி ஸார்.

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பாரம்பர்ய உடையை, வலைத்தள நண்பர்கள் மாட்டினால் யார் என்று கண்டுபிடித்துவிடுவேன். ஆனால் படத்தில் போட்டுள்ளவர்களைத் தெரியாது என்று ஜி.எம்.பி சார் சொல்ல வருகிறார்.

      நீக்கு
  19. படங்கள் எல்லாமும், கூடவே கருத்துக்களோடு அருமை. மேகாலயா உடை மிக அழகு.
    கார் நம்பரைப் பார்த்துக் குழப்பமாயிருந்தது.
    இப்படி ஒரே மாதிரியா இருக்குமா.
    பிரியாவிடை வண்டுன்னு நினைத்தேன் இலையா.
    கண்கள் செய்யும் மாயம்.

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நேற்று கோவிலிலிருந்து வரும்போது
    நேரமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  20. அழகிய படங்கள். வர்ணனைகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    தாமதமாக வருகை தந்திருக்கிறேன். படங்கள் அனைத்தும் மிக அழகு. அதற்கேற்ற வாசகங்களும் பொருத்தமாய் இருக்கிறது. காஷி(காவி) உடையலங்காரம் மிக அழகாய் உள்ளது.

    ஆம் காவி என்றுமே விலை மதிப்பற்றதுதானே.!

    இலையுடன் கலந்த பூக்களும்,புதர் பூக்களும் இயற்கை வனப்புடன் அழகாய் உள்ளன.

    உமியம் ஏரியும், மலைகளும், மேகங்களும், இயற்கை காட்சிகளும் பார்த்த பின்பு அவைகளிடம் பிரியாவிடை பெற்று வரும் போது, இலைகளற்ற மரங்களாய் நம் மனதிலும் ஒரு வெறுமை சூழ்கிறது உண்மைதான்.! அதனால் நம்மை நோக்கி கண் கலங்கிய காய்ந்த சருகு ஒன்றும் படங்களில் விடாப்பிடியாக இடம் பெற்று கலங்கியதை இங்கே காண்பித்து விட்டது என எண்ணத் தோன்றுகிறது. அத்தனைப் படங்களும் அருமையாய் உள்ளது. ரசித்தேன்.

    வலை குடும்பம் எனக்கு ரொம்பவே ப..ய..ம். (இந்த வலை குடும்பமல்ல.)

    அதிசயமாய் ஒரே மாதிரி கார் நம்பராக இருக்கிறதே.! கார் நம்பர் இந்த மாதிரி ஒன்று போல் இருந்தால் நிச்சயம் குழப்பி விடும்.குழப்பம் தீர டிரைவர் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.( நம்பர் குழப்பத்தில், டிரைவர் முகம் மறக்காதிருக்க வேண்டும். அது வேறு.. ஹா ஹா ஹா) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      தாமதமாய் வந்தால் என்ன? தாமதம் என்றொரு மதம் இருக்கிறதா என்ன? ஹா.. ஹா.. ஹா.. வேலைகள்தான் முக்கியம். இவற்றை எல்லாம் அப்புறம்தான் வைத்துக்கொள்ள வேண்டும்!

      தாமதமாய் வந்திருப்பதாய்ச் சொன்னாலும் குறையில்லாமல் குறைவில்லாமல் ரசித்திருக்கிறீர்கள்.

      நன்றி அக்கா.

      நீக்கு
  22. கண்ணுக்கு இனிய காட்சியும்,படிக்க உறுத்தாத எழுத்தும்!

    பதிலளிநீக்கு
  23. படங்கள் அத்தனையும் நன்றாக இருக்கின்றன. பெண்கள் அணியும் பாரம்பரிய உடையும் பார்த்தாச்சு.

    விளக்கங்களும் இருப்பது இப்போது மெருகு கூடுது.

    அந்தக் கண்கலங்கல் படம் அது என்ன இலைச்சருகு விழுகிறது போல!! அழகா இருக்கு அந்தப் படம்..முதல் பை பை படம்...அடுத்த படத்தின் தலைப்பை மிகவும் ரசித்தேன்...படம் கொஞ்சம் கலங்கியிருப்பதை கண் கலங்கி என்று போட்டிருப்பது செம கற்பனை!!! மிக மிக ரசித்தேன்...

    வ்யூ பாயின்ட் மற்றும் வலைக்குடும்பம் அதுவும் நல்லாருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!