ஞாயிறு, 5 மே, 2019

ஷில்லாங் பாதையில் ஜில்லுனு ஒரு ரைடு...

அங்கே காரெல்லாம் நிற்பதைப் பார்த்தீங்கதானே...

அங்கே வலது புறம் திரும்பியதும்....


அப்பாடா... நெருங்கிட்டோம்னு சந்தோஷப்  பட்டுக்க  வேண்டாம்


ஷில்லாங் போக வலது புறம் போகணும்னு 7 குரல்கள்



ஆமாம், நேராகப் போவதை விட்டு இந்த கேட்டுக்குள் ....


அட தெரிந்துவிடக்கூடாது என்று தானே போர்டு இருக்கும் இடத்தில் கண்ணை மூடிக்கொள்ளச் சொன்னோம்?



சென்னை வாசிகள் யாராயினும் அங்கேயே இருந்து விடலாமா என்றெண்ணுவது இயல்பு 


நீங்க பாட்டுக்கு எங்கேயாவது போகாமல்  பின்னாலேயே வரணும் என்றால் இப்படியா?


இந்த view point  சும்மா சும்மா வருவதன் காரணம் கடைசியில் 

சொன்னாலும் சொல்வோம்...


அதுவரையிலும்...

படங்களை ரசித்துக்கொண்டே வரவும்!


 பழுவேட்டரையரும் கரிகாலனும் போன வழி மாதிரி இல்லை



re view point...!



இருபுறமும் ஓங்கியுர்ந்த மரங்கள் 
இடையே இலைவிழ சிறுஇடம்..
நடுவே நம் பாதை...
இயற்கையன்னை 
தன் 
இருப்பைக் 
காட்டிக்கொள்கிறாள்...


வலைச்சரம்  கூட்டுக்குடும்பம்?


ஒரு வழியாக உமியம் ஏரி வரை வந்துவிட்டோம்


உமியத்தில் குமிந்து...   அப்புறம் என்ன ஆச்சு?



66 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்...
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார். உங்களுக்கும் இனி வரப்போகும் அனைத்து நட்புறவுகளுக்கும் (மாத சந்தா கட்டியவர்கள் உட்பட) நல்வரவு.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் மற்றும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும், வணக்கமும்!

      நீக்கு
    3. சந்தாவெல்லாம் வாங்கறீங்க? ஙே!!!!!!!!!!!!!!!!!!!! எப்போலேருந்து? :)))))

      நீக்கு
    4. கடந்த பதிவொன்றில் உங்களை (மட்டும்) துரை ஸார் வரவேற்பதை எதிர்த்துக் குரல் கொடுத்த வீராங்கனையை நீங்கள் அறிய மாட்டீர்களா அக்கா?

      நீக்கு
    5. ஹாஹா, பூனைக்குப் பொறாமை! டாம் தானே! எப்போவும் ஜெரியிடம் தோற்றுப் போவதால் எழுந்த பொறாமை! இஃகி,இஃகி!

      நீக்கு
    6. ஓ... யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?

      நீக்கு
    7. டாமைத் தெரியாத ஜெரியும் உண்டா?

      நீக்கு
    8. அது யாருங்கோ - சந்தா!..

      அனுஷ்கா, தமன்னாவுக்கு போட்டியா?...

      நீக்கு
    9. //அனுஷ்கா, தமன்னாவுக்கு போட்டியா?...//ஐயய்யோ! இத என்ன புது கதை? அனுஷ்கா, தமன்னா இவர்களெல்லாம் யாரையும் கட்டியதாக தெரியவில்லையே.

      நீக்கு
    10. பூஸார் தான் சந்தாக் கட்டி இருப்பதாகச் சொன்னது!:))))

      நீக்கு
    11. சே சே சே..... ஒரு ஜண்டையை மூட்டி:), பசுமைப் புரட்சியைக் கிளப்பலாம் என வெளிக்கிட்டால் இப்பூடி புஸ்ஸ்ஸ் என அணைச்சிட்டினமே:).. இனிமேல் முகத்தைக் கொஞ்சம் சீரியசாக வச்சுக்கொண்டுதான் ஆரம்பிக்கோணும்போல கர்ர்ர்ர்ர்:)...

      சந்தா முடிஞ்சிட்டால் ஜொள்ளோணும்:) மீ கட்டுவேன்:)...

      நீக்கு
    12. //அது யாருங்கோ - சந்தா!..
      அனுஷ்கா, தமன்னாவுக்கு போட்டியா?...//

      துரை செல்வராஜூ ஸார்... 'சந்தா'ன்னா ஹிந்தியில் நிலவுன்னு அர்த்தம். அப்போ அது அனுஷ்தான்! த man னா வா இருக்காது!

      நீக்கு
    13. //அனுஷ்கா, தமன்னா இவர்களெல்லாம் யாரையும் கட்டியதாக தெரியவில்லையே.//

      ​ஹையோ பானு அக்கா... எத்தனை படங்களில் எத்தனை கட்டி நடித்திருக்கிறார்கள்...!!!!

      நீக்கு
    14. ////துரை செல்வராஜூ ஸார்... 'சந்தா'ன்னா ஹிந்தியில் நிலவுன்னு அர்த்தம். அப்போ அது அனுஷ்தான்! த man னா வா இருக்காது!/////

      ஆஆஆஆஆஆஆ விடுங்கோ என்னை விடுங்கோஓஓஓ ஆரும் தடுக்காதீங்கோ அமாவாசையும் முடிஞ்சு போச்சூஊஊஉ மீ தேம்ஸ்க்கு ஓடுறேன்ன்ன்ன்ன்ன்:)

      சே சே காசிக்குப் போயும் மாறல்லியே:)....

      போகாதையா போகாதூஊஊ எங்கு போனாலும் ..... போகாதூஊஊஉ

      https://www.youtube.com/watch?v=xNMzhl4VoYs&feature=share

      நீக்கு
    15. காசிக்குப்போய் ஏன் மாறணும்? காசிக்குப்போவதற்கு முன் அனுஷ் பற்றி மறந்திருந்தேன். காசி சென்று வந்த எபெக்டில் மறுபடி நினைவு வந்து விட்டது.

      நீக்கு
  2. >>> சென்னை வாசிகள் யாராயினும் அங்கேயே இருந்து விடலாமா என்றெண்ணுவது இயல்பு...<<<

    அவர் தமக்கு அடையாறும் கூவமுமே அழகின் அழகு..
    ஆதலின் இந்த அழகெல்லாம் அப்படி அப்படியே இருக்கட்டும்...

    அழகைக் கண்டு கண் வைக்க வேண்டாம்..
    அழகின் ஊடாக கையும் வைக்க வேண்டாம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி,

      நம் அழகு நம் கண்களுக்குப் பழகிவிட்டால் அயலழகெல்லாம் அழகே அல்ல!

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... எனக்கு அப்படித் தோன்றவில்லை. இருந்தாலும் பெங்களூரில் இருக்கும்போது 'இது நம்ம இடம் இல்லை' என்ற எண்ணம் வருவதைத் தடுக்கமுடியலை... 'அங்க' இருந்தபோது, அந்த ஊரே மிகவும் சுகமாக இருந்தது.. சுத்தம், மின்வெட்டின்மை, செளகரியம் போன்று பல...

      நீக்கு
    3. ரொம்ப சுத்தமா இருந்தா போர் அடிக்கும் நெல்லை... கொஞ்சம் அழுக்கு இருக்கணும்.. நம்ம ஊர் மாதிரி!

      நீக்கு
  3. கவிதையாகும் காட்சிகள்...
    அழகின் அழகு...

    பதிலளிநீக்கு
  4. அருமையாக இருக்கு. சென்னைவாசிகள் அங்கேயே தங்க நினைப்பாங்களா? தெரியலை. ஆனால் என் தம்பி குடும்பம் ஷிம்லா போயிட்டுக் குளிர் தாங்கலைனு (இத்தனைக்கும் மே மாதம்) போய் இறங்கிய மறுநாளேதிரும்பிட்டாங்க! வெயிலிலேயே பழகினவங்க கொஞ்சம் குளிர்னாலே ஒத்துக்காம பயந்துடறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் அக்கா... யாரும் இருக்கும் இடத்தில் பழகி விட்டால் அதுதான் அவர்களுக்கு சொர்க்கம். வெயிலாவது, நாற்றமாவது!

      நீக்கு
    2. கீதா அக்கா சொல்வது ரொம்ப சரி. என் அக்கா பெண்ணிற்கு மார்ச் கடைசியில் திருமணம் ஆனது. சிம்லாவிற்கு ஹனிமூன் போனார்கள். அங்கு போன ஒரு மணி நேரத்தில் "என்னால் இங்கு இருக்க முடியாது" என்று அக்கா மகள் அழ ஆரம்பித்து விட்டாளாம். மாப்பிள்ளை எப்படியோ அவளை சமாதானப்படுத்தி இருக்க வைத்தாராம்.
      இப்போது சமீபத்தில் விடுமுறைக்கு லண்டனுக்கு சென்றிருந்தார்கள். அவள் பெண் லண்டன் பிடிக்கவில்லை என்று கூறி விட்டது. காரணம் லண்டனில் குளிராக இருக்கிறதாம். அதற்கு வெய்யில்தான் பிடிக்குமாம்.

      நீக்கு
    3. லண்டன்ல உள்ள குளிர்..... ஆஹா.... சுகமாகத்தான் இருந்தது. நம்ம ஊர்ல வெக்கை.....

      ஆனால், அந்தக் காலநிலையிலேயே 3 மாதம் தாக்குப்பிடிக்க முடியுமா? இருந்து பார்த்தால்தான் தெரியும்.

      என், இதுவரை நிறைவேறாத ஆசை... பனி சூழ்ந்த, குளிர்காலத்தில் கனடா போன்ற நாடுகளில் ஒரு மூன்று மாதம் வசிக்கவேண்டும்.

      நீக்கு
    4. எனக்குச் சின்ன வயசிலேருந்து லண்டன் அக்டோபர் மாலையை அனுபவிக்கணும்னு ஒரு ஆசை உண்டு. அகதா க்றிஸ்டி கதைகளில் வரும்! :)))) ஆனால் லண்டன் போயே போனதில்லை. துபாய் இல்லைனா ஃப்ராங்க்ஃபர்ட் போய்த் தான் அம்பேரிக்கா போறோம். அதுவும் ட்ரான்சிட் தான்! வெளியே எல்லாம் வர முடியாது! :)))

      நீக்கு
    5. எனக்கு சென்னைக் குளிர் ரொம்பப் பிடிக்கும்!!!

      நீக்கு
  5. காட்சிகள் ரசிக்க வைத்தன... வர்ணனையும்.

    பதிலளிநீக்கு
  6. பயணம் சென்ற பாதைக் காட்சிகளும், அழகான உமியம் ஏரியும் அழகு.

    பதிலளிநீக்கு
  7. எங்கே செல்லும் இந்தப் பாதை
    யாரோ யாரோ அறிவாரோ
    காலம் காலம் சொல்ல வேண்டும்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷில்லாங்தான்... மேலே போர்ட் போட்டிருந்ததே பார்க்கவில்லையா நெல்லை?

      நீக்கு
  8. படங்கள் பேசும் மொழி
    அற்புதம்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    படங்கள் மிக அழகு. அதற்குரிய வாசகங்கள்
    கவிதையாய், மிக மிக அழகு. இயற்கை அன்னை பார்க்கும் இடங்களிலெல்லாம் கண் வழி குளிர்வாய், மனப்பாதைக்கு இதமாய் இருந்து மகிழ்வூட்டுகிறாள். அத்தனையும் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. படங்களும், வாசகங்களும் அருமை.
    //பழுவேட்டரையரும் கரிகாலனும் போன வழி மாதிரி இல்லை//

    ராஜ பாட்டை அழகு.


    இயற்கையை ரசிக்கலாம் .

    பதிலளிநீக்கு
  12. //பழுவேட்டரையரும் கரிகாலனும் போன வழி மாதிரி இல்லை//

    இல்லையே,அவங்க ரெண்டு பேரும் சந்திப்பதே கதைப்படி நான்காம் பாகத்தில் சம்புவரையர் மாளிகையில் தானே! அதனால் இரண்டு பேரும் போன வழி இல்லை. வேணா ஆழ்வார்க்கடியானும், வந்தியத் தேவனும் போன வழினு சொல்லலாம். அல்லது ஆதித்த கரிகாலனும், வந்தியத் தேவனும், சம்புவரையர் மாளிகையில் வேட்டைக்குப் போறாங்களே அந்த வழினு வைச்சுக்கலாம். எத்தனையோ வழிகள் இருக்கே எந்த வழினு சொல்ல! நாமாக ஏன் இந்த வழிதான் என முடிவு கட்டணும்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் அக்காவை அடிச்சுக்க முடியாது... கந்தமாறன் விஷயத்தில்தான் சொதப்புவார்களே தவிர...!!!!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கந்தமாறன் விஷயத்தில் நான் எங்கே சொதப்பினேன். உங்களை பானுமதி கந்தமாறன்னு சொல்லி இருந்ததை மறுத்து நல்ல பிள்ளையான சேந்தன் அமுதன்னு சொன்னதுக்கு எனக்கு இதுவும் வேண்டும், இதுக்கு மேலேயும் வேணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் உங்களை சேந்தன் அமுதன்னு சொன்னதை வாபஸ் வாங்கிட்டுக் கந்தமாறன் இல்லைனா பார்த்திபேந்திர பல்லவன், இல்லைனா ரவிதாஸன்னு வைச்சுக்கறேன். ஹிஹிஹி, ரவிதாஸன் பொருத்தமா இருக்குமோ? :))))))))))))))))))

      நீக்கு
    3. அச்சச்சோ... அச்சச்சோ.... நீங்கள் சொல்லவில்லையா? மன்னிச்சுடுங்க!

      நீக்கு
    4. நான் ரவிதாஸன் இல்லை... ரவிதாஸன் இல்லை...

      நீக்கு
    5. நிச்சயமாக நீங்கள் ரவிதாசன் கிடையாது. உங்கள் calibreக்கு சிறிய பழுவேட்டரையர் பொருத்தமாக இருக்கும்.

      நீக்கு
    6. என்னை பானுக்கா பூங்குழலி என்று சொல்லிருந்தாங்கனு நினைக்கிறேன். அப்பூடியா இருக்கேன்!!!??? ஆஹா!! அனுஷையே பூங்குழலிக்கு ஒத்து வரமாட்டாங்கனு சொல்லி எனக்கு பூங்குழலி ரோல் கொடுத்த பானுக்கா வாழ்க!! ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  13. போகுமிடம் வெகு தூரமில்லை நீவா ஒரு மலசியாளப்படமிதா இவிடம் வரெ என்று சொல்லியே வெகுதூரம்கூட்டிப் போவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைத்துப்போய் அன்போடு காட்டுமிடங்கள் ஜி எம் பி ஸார்...!!!

      நீக்கு
  14. அழகான வர்ணனையுடன் ஷில்லாங் போகிற வழி பூரவும் படங்கள் அருமை. நான் போயுள்ளேன்.எதுவுமே ஞாபகமில்லை. ரஸித்துப் பார்த்திருக்கமாட்டேன். இப்போது ரஸித்துப் பார்க்கிறேன். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. அன்பு காமாட்சி, உங்கள் நேபாள் நாட்களிலிருந்து
    மும்பை நாட்கள் வரை எத்தனையோ பயணித்திருப்பீர்கள் . நாங்கள் எல்லாம் அறிய நீங்கள் சொல்லணும். என் வேண்டுகோள்.
    ஷில்லாங்க் மிகப் பசுமை. அந்தப் பாடை எனக்கு சிவகாமியின் சபதத்தை நினைவு படுத்துகிறது. நரசிம்ம பல்லவர் முன்னே போக பல்லக்கில் சிவகாமி போவது போல ஒரு தோற்றம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் காமாட்சி அம்மா. எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. முடிந்தால் எழுதுங்கள்.

      நீக்கு
    2. நன்றி காமாட்சி அம்மா.

      நன்றி வல்லிம்மா.

      நீக்கு
    3. எனக்குப் பலவித தேக அஸௌகரியங்கள் உள்ளது. உங்கள் யாவரையும் விட்டுவிடக் கூடாது என்று வருகிறேன். மிக்க நன்றி வல்லிம்மா,ஸ்ரீராம். அன்புடன்

      நீக்கு
  16. கண்களுக்குக் குளிர்ச்சியான, இதமான புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  17. படங்கள் அழகாக இருக்கின்றன படங்கள் வழி ஷில்லாங்க பார்த்துக் கொள்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. பசுமை நிறைந்த படங்கள் ஏரி அழகாக இருக்கிறது. அந்த டவர் மீண்டும் மீண்டும் வருவது காரணம் என்னனு சொல்லலையே....

    சாப்பாடு பற்றி சொன்னாலும் நல்லாருக்கும். பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு சௌகரியமாக இருக்குமே என்றுதான்.

    எனக்குக் குளிர் தான் மிகவும் பிடிக்கும். ஊர் ஊராகச் சென்றிருப்பதால் எந்த ஊர் என்றாலும் எனக்கு ஓகே குளிர்பிரதேசம் என்றால் மிகவும் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!