பக்கியும் பக்தியும்...
வண்டி மெதுவாக நிற்பது போல வரும்போது என்ன ஸ்டேஷன் வருகிறது என்று அவரிடம் கேட்டேன். மதன்மஹால் என்றார். மதன்மஹால் என்றதும் எனக்கு மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது.
வண்டி அங்கு எவ்வளவு நேரம் நிற்கும் என்று கேட்டதற்கு 20 நிமிடங்கள் என்றார் அந்த புத்திசாலி ஸ்டேஷன் மேனேஜர்!. இறங்கி நின்றேன். புகைப்படம் பார்த்தால் கரியமேகங்கள்சூழ்ந்த வானத்தையும், தரையில் லேஸான தூறலின் ஈரத்தையும் காணலாம்.
லேஸான தூறல்களுக்கு நடுவில் இறங்கி ஸ்டேஷனில் நின்றால் வண்டி உடனே நகர ஆரம்பித்தது. செல்பி (அவரையும் சேர்த்து) எடுத்துக் கொண்டிருந்த நான் உடனே வந்து வண்டியில் ஏறினேன். அவர் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தார்!
அது மட்டும்மல்ல, மழை பெய்வதால் வீட்டுக்கு எப்படிச் செல்வது என்று கவலையாகி விட்டார் என்று தெரிந்தது. அடுத்த நிறுத்தத்தில் - ஜபல்பூரில் அவர் இறங்கவேண்டும் என்று புரிந்தது. அப்போது ஒரு வினோதமான காரியம் செய்தார்.
கதவைத்திறந்து வைத்துக் கொண்டு கவனமாக நின்று, இரண்டு கை உள்ளங்கைகளையும் குவித்து இரண்டு கை விரல்களின் நகங்களையும் உரச ஆரம்பித்தார். "நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும்" என்கிற வைரமுத்து வரிகள் எனக்கு நினைவுக்கு வர, நான் சந்தோஷை கண்களால் கேள்வி கேட்டேன். 'வீடு செல்வதற்காக மழை நிற்க அப்படிச் செய்கிறாரெ'ன்றார் கிசுகிசுப்பாக சந்தோஷ். போகட்டும் மழையின் அருமை தெரியாதவர்!
எங்கள் ஊரில் வானத்தில் கருடனைப் பார்த்தால் இப்படிச் செய்வதுண்டு... "கிருஷ்ண கிருஷ்ண பூப்போடு... கிருஷ்ண கிருஷ்ண பூப்போடு... "
கருடன் நகங்களில் பூத் தோற்றம் உருவாக்குவார் என்று நம்பிக்கை!
அடுத்து ஜபல்பூர்தான் என்பதால் எ(ங்கள்)ன் கடமையைச் செய்ய உள்ளே சென்றேன். அத்தையிடம் "ஜபல்பூர் நெருங்குகிறது... அந்தப் பெண்ணை எழுப்புங்கள்" என்றேன்.
எழுப்பப் பட்ட அந்தப் பெண் முகம் கழுவி மேக்கப்பி இறங்கத் தயாரானாள். இடையில் அவள் செய்த காரியம் ஒன்றைச் சொல்ல மறந்து போனேன். வரலாறு முக்கியம் கீதா அக்கா...
இந்த ரூட் அவளுக்கு பழகிய ரூட்டா இல்லை எங்களைப்போல அவளும் கூகிளி தெரிந்துகொண்டதோ.. இடார்சியிலோ எங்கேயோ பத்து நிமிடம் வண்டி நிற்கும் எனத்தெரிந்தோ என்னவோ ஸ்விக்கி போல ஏதோ ஒன்றில் உணவே ஆர்டர் தந்திருக்கிறான். அந்த ஸ்டேஷனில் வண்டி நின்ற அந்தச் சில நிமிடங்களில் ஒரு ஆள் பரபரப்பாக உள்ளே வந்து அவர் உள்ளே வந்ததன் கஷ்டங்களை சொல்லி பொட்டலம் கொடுத்துச் சென்றார். "ஸாரி Bhபையா" என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அதை உண்டாள் அந்தப் பெண்.
அவள் இறங்க அவள் லக்கேஜ்களை இறக்கி உதவினோம் நானும் மாமாவும். இரண்டு தோழிகள் அவளை வந்து ரிஸீவிக்கொண்டு சென்றனர். லக்கேஜ் இறக்கியதால் அவர்களைப் ஃபோட்டோ தனியாக எடுக்கவில்லை. (ரொம்ப முக்கியம்)
இனி இந்தப் பெண் இந்தப் பயணக்கட்டுரையில் வரமாட்டாள் ஏகாந்தன் ஸார்....
ஜபல்பூரில் நீண்ட நேரம் நின்றிருந்தது ரயில். ஐந்தே முக்கால் முதல் ஆறரை மணி வரை என்று நினைவு. எனவே நீண்ட நேரம் பிளாட்பார்மில் உலாத்தினோம்.
இந்தப் பக்கம் பிளாட்பாரம்... தனியாய், கேட்பாரற்று வைக்கப் பட்டிருக்கும் அந்தக் கரிய பெட்டி.... அதில் என்ன வைக்கப்பட்டிருக்கும்...!
புத்தம் புதிதாக இருந்த ரயிலின் பாகங்களைக் கவனித்து படங்கள் எடுத்தோம்.
நீண்ட ரயில்... அமைதியான நடைமேடை!
அட... நம்மூரில் தயாரான வண்டி!
புத்தம் புதுசு!
பின்னர் ரயில் புறப்பட்டது.
மிளகாய்ப்பொடி வாளியைதான் ஃபோட்டோ எடுக்கவில்லை... சட்னி வாளியையாவது எடுக்கலாமே என்று...!
இரவு உணவு கீதா அக்கா சொன்னது போல மேத்தி பூரி! அல்லது மேத்தி சப்பாத்தி! தக்காளி சட்னியுடன்....
ஓடும் ரயிலிலிருந்து ஒரு படம்... சும்மா....
இரவு பனிரெண்டேகாலுக்கு இறங்கத் தயாராய் இருக்கும்படி பாலாஜி சொல்லிச் சென்றார். சீக்கிரம் படுத்து விடலாம் என்று பார்த்தாலும் பேச்சில் கொஞ்ச நேரம் கழிந்தது. அடுத்த பெட்டியில் இருந்த என் இன்னொரு மாமாவும் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்து விட்டார்.
அரைகுறைத் தூக்கத்திலிருந்து விழிப்பு வந்தபோது விவாதம் நடந்து கொண்டிருந்தது. டிரெயின் மூன்று மணி நேரம் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், இல்லை, இல்லை சரியான நேரம்தான் என்று ஒருவரும், இல்லை ஒன்றரை மணி நேரம் என்று ஒருவரும் வாதத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் கையில் செல். ஒருவருக்கும் நெட் அப்டேட்டே ஆகவில்லை என்பது பிரச்னை!
கடைசியில் பார்த்தால் சரியான நேரத்துக்கு ப்ரயாக்ராஜ் எனப்படும் அலஹாபாதை அடைந்தது ரயில். இறங்கினோம். எங்கள் குழு மொத்தமும் இறங்கியது. பாலாஜி, பிரசாந்த் இருவரும் வெளியே செல்ல வழி காட்டினர். சமையல் குழுவில் ஒருவர் எங்களை முன்னே வழி நடத்தி வெளியே பஸ் இருக்குமிடம் அழைத்த்துச் சென்றார்.
இரவு ஒரு மணி. ரயில்நிலையம் பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்தது. ஏறு பாதை வழியாக ஏறி ஸ்டேஷன் வாசலை அடைந்தோம்.
சூழ்ந்துகொண்ட ஆட்டோக்காரர்களை விலக்கிக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்த இரட்டை பஸ்களை அடைந்தோம்.
யார் யார் எந்தெந்த பஸ், எந்தெந்த ஸீட் என்று எழுதிக் கொடுத்து விட்டார்கள் பாலாஜியும் பிரசாந்தும். எங்கள் ஆறுபேர்கள் முதல் பஸ்ஸில் இடம் பிடித்தோம்.
ஏதோ அந்த பஸ்கள் எங்களுக்காகக் காத்திருக்காமல் புறப்பட்டு விடும் என்பது போல பரபரப்பாக அடித்துப் பிடித்து வேகமாக பஸ்களை அடைந்திருந்தோம். எங்கள் பெரிய பெட்டிகளை பஸ்ஸின் பின்புறம் கொண்டார் கிளீனர் / டிரைவர். அவர் தலையில் உற்றுப் பார்த்தால் ஒரு சிறு சிண்டு தெரிந்தது!
உடனே கிளம்பி தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீண்ட நேரம் சமையல் குழு தனது பொருட்களை ஏற்றிக்கொண்டு இருந்தது.
இது மெயின் அலஹாபாத் ஸ்டேஷன் இல்லை. அதற்கு முந்தைய ஸ்டேஷன். இன்னும் இரண்டு நிமிடங்களில் பெரிய ஸ்டேஷன் வந்து விடுமாம்.
ஒரு போலீஸ் வண்டி வந்து ரோந்து சுற்றிச் சென்றது. அதிலிருந்து ஒரு போலீஸ்காரர் இறங்கி குச்சியைத் தட்டிச் சென்றார். ஒரு நாய் இங்கும் அங்கும் பார்த்தபடி வந்து அந்த போலீஸ்காரர் கையில் இருந்த லத்தியைப் பார்த்துப் பதுங்கியது.
எங்கள் பஸ் கதவு திறந்தது.
"காலை ஆறரை மணிக்கு காஃபி நீங்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து விடும். உடனே குளித்துத் தயாராய் இருங்கள்... ஏழு மணிக்குக் கிளம்பி விடுவோம்" என்றார் ராமு. இவர் எங்களை வழி நடத்த வந்திருப்பவர்.
மணி அப்போதே இரவு இரண்டரை மணி. எப்போது தங்குமிடம் சென்று எப்போது தூங்க...?
எங்கள் பொறுமையைச் சோதித்தபின் ஒரு வழியாய் கிளம்பி தங்குமிடம் நோக்கி விரையத் தொடங்கியது பஸ்.
அமைதியான ஊர். எல்லா ஊர்களும் இரவில் சாதுவாய், அமைதியாய்தான் இருக்கின்றன. விடிந்தால் தெரியும் அல்லோலகல்லோலம்!
பஸ்ஸ்டேண்டுக்கு வெளியே இரண்டு டீக்கடைகள். இரண்டிலும் ஆட்கள். அதாவது கஸ்டமர்ஸ் இல்லை, கடை ஆட்கள். "ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குடா டீ ஆத்தறே" என்கிற புகழ்பெற்ற வசனத்துக்கேற்ப அந்த டீக்கடைகளில் விழுந்து விழுந்து ஜிலேபி போன்ற ஒன்றைப் பொரித்துப் பொரித்து எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள்! அந்த ஊரில் காலை அதுதான் பரபரப்பாக விற்கும் போலும்.
ஊரெங்கிலும் சுவர்கள், பாலங்கள், பாலங்களின் சுவர்கள் என்று கிடைத்த எல்லா இடங்களிலும் வண்ண வண்ண ஓவியங்களால் நிறைத்திருந்தார்கள். பூக்கள், தெய்வங்கள், விலங்குகள், இயற்கைக் காட்சிகள்... நம் ஊராய் இருந்திருந்தால் ஏகப்பட்ட எதிர்ப்புக் கிளம்பி இருக்கும்...
சாலையோரங்களில் சில இடங்களில் பத்தடிக்கு ஒரு பெரிய லிங்கம் இருந்தது.
சாலைச் சந்திப்புகள் அழகிய வேலைப்பாடான சிலைகளால் நிறைந்திருந்தன. இவற்றை நிறைய வெங்கட் தனது பதிவில் தரமான படங்களாக வெளியிட்டிருக்கிறார். அவர் படங்களுக்கு முன் என் படங்கள், அவர்கள் படத்தில் ரஜினி வாங்கி வரும் ஆப்பிள்கள் முன் கமல் வாங்கிய ஆப்பிள்கள் போல!
ப்ரயாக் ஹோட்டலை அடைந்தோம்.
அமர்ந்திருப்பவர் பாலாஜி.
பத்து பேருக்கு மூன்று அறை என்ற கணக்கில் சொல்லியிருந்தார்கள் ஜெயலக்ஷ்மி டிராவல்ஸ்காரர்கள். அதுவும் குளிர்சாதன வசதி இல்லாத அறைகள். நாங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தத் தயார் என்று கூறி ஏஸி அறை புக் செய்யச் செய்து, ஒரு அறைக்கு மூன்று பேர் என்று தங்கிக்கொண்டோம். இது சென்னையில் இருக்கும்போதே சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டது.
எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றோம். நல்ல வசதியாகவே இருந்தது. செல் சார்ஜிங், மற்றும் மறுநாள் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டோம்.
பயணத்துக்கான ஏற்பாடுகள் என்றால்?
நான் தோள்பை ஒன்றை இதற்காகததான் சென்னையிலேயே வாங்கி இருந்தேன். டிராவல்ஸ்காரர்கள் அவர்கள் பெயர் பொறித்த பேக் கொடுத்ததும் இந்தக் காரணத்துக்குதான்.
மறுநாள் யார் யார் திரிவேணி சங்கமத்தில் சங்கல்பம், சிராத்தம் தர்ப்பணம் செய்யப்போகிறீர்கள், யார் யார் வேணி தானம் செய்யப்போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டு ஒரு லிஸ்ட் எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவு பணம் யாரிடம் தரவேண்டியிருக்கும் என்றும் சொன்னார்கள்.
அந்தத் தோள்பையில் சாப்பிடும் தட்டு, டம்ளர், வேஷ்டி, அங்கவஸ்திரம், மாற்றுடை, தர்ப்பணத்துக்குத் தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.
வேணி தானம் செய்ய தம்பதிகளாய் வந்திருக்க வேண்டும். சிராத்தம் செய்யவும் அஃதே. இவை எல்லாம் செய்ய சுமார் எண்ணூறு ரூபாய்க்குள் ஆகும் என்று அதை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். மற்றவற்றை அறையிலேயே வைத்து விட்டு வரவேண்டியதுதான்.
பக்கி மார்க்கமு முடிந்து இனி பக்தி மார்க்கமு...
எனவே இனி பயணக்கட்டுரை விறுவிறுவெனச் சென்று முடிந்து விடும் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் அதில் எல்லாம் நான் வீக்!
============================================================================================
முன்பு எப்போதோ, எங்கோ படித்துப் பகிர்ந்ததுதான்... மறுபடி....
எல்லா அழுகையிலும் என்ன இருக்கிறது?!
எல்லாப் புன்னகையிலும் கொஞ்சம் சோகம் இருக்கிறது
எல்லாச் சோகங்களிலும் லேசான சுகம் இருக்கிறது
எல்லா மன்னிப்புகளிலும் கொஞ்சம் கோபம் மீதமிருக்கிறது
ஏன், எல்லாக் கோபங்களிலும் கொஞ்சம் பாசம் கூட இருக்கிறது.
எல்லா உறவுகளிலும் கொஞ்சம் போலி இருக்கிறது.
எல்லாப் பாசங்களிலும் கொஞ்சம் வேஷம் இருக்கிறது.
================================================================================================
மரவேரில் சித்தர்கள்....!
இது தாராசுரம் கோவில் வாசலில் எடுத்த புகைப்படம்! முன்னர் பார்த்தவர்கள் கூட மறந்திருப்பார்கள்... அதுதான் மறுபடியும்... ஹிஹிஹி.... சித்தர்களை மறுபடி பார்ப்பதில் தவறில்லையே...!!
================================================================================================
==================================================================================================
முன்பு எப்போதோ, எங்கோ படித்துப் பகிர்ந்ததுதான்... மறுபடி....
எல்லா அழுகையிலும் என்ன இருக்கிறது?!
எல்லாப் புன்னகையிலும் கொஞ்சம் சோகம் இருக்கிறது
எல்லாச் சோகங்களிலும் லேசான சுகம் இருக்கிறது
எல்லா மன்னிப்புகளிலும் கொஞ்சம் கோபம் மீதமிருக்கிறது
ஏன், எல்லாக் கோபங்களிலும் கொஞ்சம் பாசம் கூட இருக்கிறது.
எல்லா உறவுகளிலும் கொஞ்சம் போலி இருக்கிறது.
எல்லாப் பாசங்களிலும் கொஞ்சம் வேஷம் இருக்கிறது.
================================================================================================
மரவேரில் சித்தர்கள்....!
இது தாராசுரம் கோவில் வாசலில் எடுத்த புகைப்படம்! முன்னர் பார்த்தவர்கள் கூட மறந்திருப்பார்கள்... அதுதான் மறுபடியும்... ஹிஹிஹி.... சித்தர்களை மறுபடி பார்ப்பதில் தவறில்லையே...!!
================================================================================================
==================================================================================================
வரப்போகும் அனைவருக்கும் இனிய நல்வரவு, காலை வணக்கம்.
பதிலளிநீக்குகீதா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
நன்றி தம்பி, நன்றி. இங்கு வந்து தனியா தைரியமா இருக்கும் தம்பி ஸ்ரீராமுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் இனிய வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். வாழ்த்துகள் தெரிவிக்கப் போகும் அன்பர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.
நீக்குகீதா சாம்பசிவம் உங்களுக்கு இனிய பிறந்ததின நல் வாழ்த்துகள். ஆரோக்கியமுடன் இருக்க ஆசிகள். அன்புடன்
நீக்குநன்றி அம்மா.முகநூலிலும் பார்த்தேன். நமஸ்காரங்கள்.
நீக்குஎன்ன இன்னிக்கு ஈ ஓடுது இங்கே நிஜம்மா இன்னும் யாரும் வரலையா?
பதிலளிநீக்குவந்தோம். உங்க பிறந்த நாளுக்கு என் அக்கவுன்ட் கொடுத்து மொய் கலெக்ட் பண்ணலாமான்னு என்னை மாதிரியே எல்லாரும் யோசித்ததுல எல்லோரும் எழுத மறந்துட்டாங்க போலிருக்கு
நீக்குவாங்க நெல்லைத்தமிழன்....உங்கள் துணைவியாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
நீக்குகாலை வணக்கம். வந்துட்டேன். பயணத்தின் முடிவில் பாதி படித்திருக்கிறேன். (தாம்பரம் தாண்டியாச்சு).
பதிலளிநீக்குபயணம்... நேற்று முழுவதும் ஆளைக்காணோம்!
நீக்குநேற்று அதிகாலை 4 மணிலேர்ந்து இரவு 10 மணி வரை முழுவதும் பிஸி... படங்கள் எடுத்ததைத் தவிர வேறு எதற்கும் மொபைலை உபயோகப்படுத்த நேரமில்லை.
நீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம்.
பயணக்கட்டுரை படிச்சுட்டேன். மேதி தேப்லாவும் பண்ணி எடுத்துட்டு வந்துட்டாங்களா? புதுசாச் சமைச்சே போடலையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓட்டலில் தங்கினீங்களா? நாங்க ப்ரயாகில் தங்கலை. வாராணசியிலிருந்து காரில் ப்ரயாக் போய் அங்கே சிவ மடத்தில் இறங்கிக் கொண்டு ச்ராத்தம் செய்து பின்னர் படகில் திரிவேணி சங்கமம் போய் வேணி தானம் முதல் எல்லாம் முடித்துக் கொண்டு திரும்பி சிவமடம் வந்து சாப்பிட்டுவிட்டு மத்தியானமாக் கிளம்பி திரும்ப வாராணசி வந்தோம்.
பதிலளிநீக்குபுதுசா எப்படி ரயிலில் சமைச்சுப்போடுவாங்க கீதாக்கா? நாங்க அன்று ப்ரயாகில்தான் தங்கினோம்.
நீக்குநாங்க பயணம்/யாத்திரை போனப்போ ஐஆர்சிடிசி மூலம் ட்ராவல் டைம்ஸில் போறச்சே ரயிலில் அப்போதைக்கு அப்போது புதுசாச் சமைச்சுத் தான் போட்டாங்க!பான்ட்ரி கார், சாமான்கள், அடுப்பு, துடுப்பு எல்லாம் வந்திருந்தன.
நீக்குஓஹோ... இவர்கள் ப்ரயாக்கில்தான் தொடங்கினார்கள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று காசி பயண கட்டுரை சுவாரஸ்யமாக இருக்குமென்பதால் ஒரு விறுவிறு பார்வையுடன் எழுந்தவுடனே படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ரயில் படங்கள், செய்திகள் என அனைத்தும் அருமை.
படித்ததில் பிடித்தது எனக்கும் மிகவும் பிடித்தது. ஒவ்வொரு வரிகளும் மிக உண்மை.
கடைசி கவிதை அற்புதம். ரசித்தேன் காத்திருந்தால் எதையும் பெற முடியவில்லை. உண்மைதான்
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். என்றுமே இனிய நாளாக இருக்க பிராத்திக்கிறேன்.
நீக்குவாங்க கமலா அக்கா...
நீக்கு// இன்று காசி பயண கட்டுரை சுவாரஸ்யமாக இருக்குமென்பதால்//
நம்பிக்கைக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி.
காத்திருந்தாலே ஏமாற்றம்தான் இல்லையா? ஹா... ஹா... ஹா...
நன்றி கமலா அக்கா.
நன்றி கமலா
நீக்குகீதா சாம்பசிவம் மேடத்துக்கும் என் மனைவிக்கும் எபி மூலமா பிந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
பதிலளிநீக்குஅட நெல்லை உங்கள் ஹஸ்பெண்டுக்கும் பிறந்த நாளா..
நீக்குகீதாக்கா அண்ட் நெல்லைஸ் ஹஸ்பென்ட் ஸாரி மனைவிக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!! கீதாக்காவுக்கு தவழும் பருவ வாழ்த்துகளும்!! (6 மாசம் ஆயிடுச்சா அக்கா நீங்க பிறந்து!!) இருவருக்கும் பிரார்த்தனைகளும்
கீதா
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ? இன்னிக்குத் தான் இப்போத் தான் புத்தம்புதுசாப் பிறந்திருக்கேன். பல் முளைக்காத பச்சைக்குழந்தையாக்கும்!
நீக்குநெல்லைத் தமிழன் மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
நீக்குவாழ்க வளமுடன்.
கீசா மேடம்... நான், இன்னும் பிக்கவே பிறக்காத பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேனாக்கும்.. க்கும் க்கும்
நீக்குகோமதி அரசு மேடம், கீதா ரங்கன்க்கா - மிக்க நன்றி.
நீக்குநெல்லைத் தமிழன் உங்கள் மனைவிக்கு என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். ஆசிகளும் யாவருக்கும். அன்புடன்
நீக்குநன்றி நெல்லை, நன்றி தி/கீதா
நீக்குகாமாட்சி அம்மாவுக்கு நன்றி....... (இந்தத் தடவை காஞ்சீபுரம் 14+ வைணவக் கோவில்களுக்கு ஒரு நாள் யாத்திரை சென்றிருந்தோம். அதில் ஒரு பகுதியாக காஞ்சி காமாட்சி ஆலயத்தில் இருக்கும் 'கள்வன்'-திவ்யதேசப் பெருமாள் சேவிக்க இயலவில்லை. காமாட்சி அம்மன் கோவிலில் அவ்வளவு கூட்டம்-காஞ்சி கருடசேவை அன்று. நான் காஞ்சி காமாட்சியையும் கச்சி ஏகம்பனையும் இன்னும் தரிசிக்கவில்லை. உங்கள் பெயரைப் படித்தவுடன் இது நினைவுக்கு வந்துவிட்டது)
நீக்குபெயரின் மஹிமை. அன்புடன்
நீக்குஶ்ரீராம்.... அல்லோலகல்லோலம் - கோனார் நோட்ஸ் போடுங்க
பதிலளிநீக்குஅல்லோலகல்லோலத்துக்கு அர்த்தம் தெரியாதா? உண்மையாவா?????????????
நீக்குஶ்ரீராம் எப்படி விளக்கறார்னு பார்ப்போமே.. இல்லை இது ஏதடா புது வம்பு எந்தப் பக்கம் திரும்பினாலும் அணை போடறாங்களேன்னு பேள்வியை புதன் கிழமைக்கு மடை மாற்றுகிறாரான்னு பார்க்கலாம்
நீக்குஅல்லோலகல்லோலம் என்றால் அதகளம். ஏடாகூடம், அட்டகாசம். கலவரம். சிலசமயம் இதை அல்லோலகல்லோலம் என்றும் சொல்வார்கள். இதை வைத்து முன்னர் ஒரு விவாதமும் வைத்திருந்தேன்... (லிங்க் கேட்டுடாதீங்க...)
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் கீதாக்கா மற்றும் எல்லோருக்கும்...
பதிலளிநீக்குகணினி படுத்துக் கொண்டுவிட்டது அதான் லேட்டு..
வருகிறேன் பதிவிற்கு
கீதா
வாங்க கீதா.. ஆனாலும் அநியாய லேட்டு நீங்க!
நீக்குஸ்ரீராம் இன்று கும்மி அடிக்க மேட்டர் இருக்கே வருகிறேன்..
பதிலளிநீக்குதில்லில ஒரு கமென்ட் தான் போட முடிந்தது...அங்கும் போய்ப் பார்க்க வேண்டும்
கீதா
அங்கே என்னுடைய மொக்கை ஜோக் பார்த்தீர்களோ?
நீக்குவேஷம் இல்லாத பாசமே இல்லையோ? சில சமயங்களில் கண் மூடிக் காத்திருந்தால் தூக்கம் கூட வருவதில்லை! :)))) மர வேர்களில் சித்தர்கள் அருமை.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழரின் மனைவிக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள், ஆசிகள்.
நன்னி ஹை. காமிச்சுடறேன்
நீக்கு//கண் மூடிக் காத்திருந்தால் தூக்கம் கூட வருவதில்லை! ://
நீக்குஹா.... ஹா... ஹா...
எனக்கும்தான். ஆனால் காரணம் வேறு.
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா...
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநன்றி கோமதி
நீக்குபயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅத்தையின் மனம் கவர்ந்த பெண் இறங்கி விட்டார்.
பூரியை சப்பாத்தி என்றும், சப்பாத்தியை பூரி என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
கொக்கே ! கொக்கே ! பூ போடு தான் நாங்கள் சொல்வோம், அதுவும் வெண் கொக்கை பார்த்து தான்.
கருடனைப் பார்த்தால் கிருஷ்ணா! கிருஷ்ணா
!என்று கன்னத்தில் போட்டுக் கொள்வோம்.
விரல் நகங்களை உரசி கொண்டால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்போம்.
/பயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது.//
நீக்குநன்றி கோமதி அக்கா.
//அத்தையின் மனம் கவர்ந்த பெண் இறங்கி விட்டார்.//
ஆம்.
கொக்கு... கருடன்...
ஒவ்வொரு ஊருளொவ்வொரு பழக்கம். ஆனால் மழைநிற்க அப்படி வேண்டி நான் கேள்விப்பட்டதில்லை!!!
//பூரியை சப்பாத்தி என்றும், சப்பாத்தியை பூரி என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
நீக்கு//
இது வேறயா? எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். நான் எங்கே இதை எல்லாம் பார்த்திருக்கிறேன்.. இவளவு புதுசா ஒரு ரயிலையே அப்பதான் பார்த்தேன்!!!!
ஹாஹாஹா, உங்க பாஸ் அவ்வளவு தூரம் உங்களைப் பூரிக்கும் சப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாமலேயே வளர்த்திருக்கார்! :)))))))))
நீக்குஹா...ஹா... ஹா...
நீக்குசெந்தூர்புரம் முருகா.... இந்த கமெண்ட் பாஸ் கண்ணில் படக்கூடாது!
//முன்பு எப்போதோ, எங்கோ படித்துப் பகிர்ந்ததுதான்... மறுபடி....
பதிலளிநீக்குஎல்லா அழுகையிலும் என்ன இருக்கிறது?!//
சரிதான் என்று நினைக்கிறேன்.
எல்லா அழுகையிலும் என்ன இருக்கிறது?
நீக்குஒரு சுகம்?
துன்பமான இன்பம்
நீக்குஶ்ரீராம் இடுகையை நிம்மதியா படிக்க விட மாட்டேங்கறார். இப்போ அவர்கள் படம் என்ன, ரஜினி கமல் குணாதிசயங்கள், ஆப்பிளிக்கு என்ன வேலை படத்தில்னு யோசிக்கிறேன்
பதிலளிநீக்குகீழே உள்ள லிங்க்கில் 7:28 லிருந்து பாருங்கள்!ஆப்பிளோ... ஆரஞ்சோ...கருத்துதான் முக்கியம்!
நீக்குhttps://www.youtube.com/watch?v=QMfTpqp2MDM
பக்கி/பக்தி மார்க்கம்—- கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பேசாம கீசா மேடம் இல்லை கோமதி அரசு மேடம், துரை அண்ணா இவங்கள்ட நீங்க விளக்கி எழுதச் சொல்லியிருக்கலாம். விருந்து போடப் போறாங்கன்னு ஆறடி இலையை எடுத்துக்கொண்டு பந்தில நுழைய எத்தனிக்கும்போது, கொஞ்சம் பொறுங்க அரிசி உப்புமா ஆயிட்டிருக்புன்னு சொல்றதை கேட்கற எஃபெக்ட் ஒரு வரில உண்டாகிடுது
பதிலளிநீக்குநெல்லை ஹா ஹா ஹா ஹா
நீக்குமீக்கு எல்லாம் உங்கள் அளவு பக்திப் பதிவுகளில் மனம் போவதில்லை. ஃபுல் பக்தி என்றால் ஹிஹிஹிஹி....ஸ்ரீராம் இப்படி எழுதுவது பிடிச்சுருக்கு...குறிப்பா அவர் நதிகள், அவர் பார்த்த இயற்கை பத்தி, அங்கு மக்கள் பற்றி, அனுபவங்கள் பற்றி சொல்லப் போவதற்கு ஆவலுடன் வெயிட்டிங்க்...
கீதா
//கீசா மேடம் இல்லை கோமதி அரசு மேடம், துரை அண்ணா இவங்கள்ட நீங்க விளக்கி எழுதச் சொல்லியிருக்கலாம்//
நீக்குநம் வீட்டில் நாம்தான் சமைத்து விருந்து போடவேண்டும்! அது எப்படி அக்கா வீட்டில் எல்லாம் போய் வாங்கிவர முடியும்?
//ஆறடி இலையை எடுத்துக்கொண்டு பந்தில நுழைய எத்தனிக்கும்போது, கொஞ்சம் பொறுங்க அரிசி உப்புமா ஆயிட்டிருக்புன்னு சொல்றதை//
ஹா... ஹா...ஹா...
//ரீராம் இப்படி எழுதுவது பிடிச்சுருக்கு...குறிப்பா அவர் நதிகள், அவர் பார்த்த இயற்கை பத்தி, அங்கு மக்கள் பற்றி, அனுபவங்கள் பற்றி சொல்லப் போவதற்கு ஆவலுடன் வெயிட்டிங்க்...//
நீக்குநன்றி. நன்றி கீதா.
இனிய காலை வணக்கம். இப்போதான் சூடு பிடிச்சிருக்கு.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் பயணம் போகும் உணர்ச்சி கொடுக்கிறதுன்னு சொல்ல வந்தால்
சீக்கிரமா முடிப்பாராமே.
முடியாத்.
அன்பு கீதாமா. மறந்துவிட்டேன். 23 உங்கள் பிறந்த நாள் இல்லையா.
எங்களுக்கு இன்னும் 22 லேயே இருக்கோம்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் மா. உடம்பு ஆரோக்கியம்,மன சந்தோஷம்
பயண சந்தோஷம் எல்லாம் நிறைய நிறையக் கிடைக்கணும்னு ஸ்ரீரங்கராஜாவை வேண்டிக்கொள்கிறேன்.
அன்பு நெல்லை யின் மனைவிக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
வேணி தானம்னால் என்ன.
அவ்வளவாக சாஸ்திரம் தெரியாது.
ஸ்ரீராம் பரபரப்பாக காசிக்கு வந்தாச்சு. எல்லாம் சுபமாக இருக்கட்டும்.
ஓடும் ரயிலில் ஏறினீர்களா.
தப்பா சொன்ன அந்த ஆளை நாலு வார்த்தை கேட்கக் கூடாதோ.
பெரியவங்கள்டேர்ந்து எங்களுக்கு வேண்டியது மனம் நிறைந்த ஆசிகள். நன்றி திருக்குறுங்குடி வல்லிம்மா
நீக்கு//இப்போதான் சூடு பிடிச்சிருக்கு.
நீக்குபடங்கள் எல்லாம் பயணம் போகும் உணர்ச்சி கொடுக்கிறது//
வாங்க வல்லிம்மா...
படங்கள் பார்த்ததும் குஷி ஆயிட்டீங்க போல... படம் நல்லா காட்டுவேன்... அதையே அதிரா கிண்டல் செய்திருக்காங்க பாருங்க!
//சீக்கிரமா முடிப்பாராமே.
முடியாத்.//
ஹா... ஹா... ஹா... பார்க்கிறேன் அம்மா. ஓடும் ரயிலில் எல்லாம் ஏற்வில்லை. அருகிலேயே நின்றிருந்ததால் உடனே ஏறிவிட்டேன். மேலும் ரயில்கிளம்பும்போது மி....க மெதுவாகத்தானே கிளம்பும்!
வேணி தானம் என்பதில் கணவன், மனைவியைத் தன் மடியில் உட்கார்த்தி வைத்துத் தலை பின்னிப் பூச்சுட்டி வைத்துப் பின்னர் பின்னலின் ஒரு சின்ன நுனியைக் கத்திரித்துத் திரிவேணி சங்கமத்திற்குள் போட வேண்டும். அது சுழித்துக் கொண்டு உள்ளே போய்விடும். வெளியே மிதக்காது. மற்றவை மிதக்கும்! இது ஒரு சம்பிரதாயம் அங்கே திரிவேணி சங்கமத்தில் மட்டும் செய்வார்கள். இதன் தாத்பரியம் வேறே/ அது பின்னால் ஒரு சமயம் நேரம் கிடைக்கையில்.
நீக்குநன்றி ரேவதி
நீக்குசொல்ல மறந்துட்டேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரு கை விரல்களை (அவங்களோடதுதான்) நல்லா ஐந்து பத்து நிமிடம் உரசணும். முடி கறுக்க இது தீர்வு. நரை விழாது
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குவிபரம் அறிந்தேன்.இன்று பிறந்த நாள் காணும் தங்கள் மனைவிக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரு கை விரல்களை (அவங்களோடதுதான்) நல்லா ஐந்து பத்து நிமிடம் உரசணும். முடி கறுக்க இது தீர்வு. நரை விழாது//
நீக்குநன்றி நெல்லை. இது எனக்கு உதவும்! முயற்சிக்கிறேன்!!
பாபா ராம்தேவ் யோகாசனாவிலும் (செய்முறை வீடியோ) இன்னும் ஒரு சில யோகா புத்தகங்களிலும் இதனைப் படித்திருக்கேன். சில நாட்கள் செய்துபார்த்தேன். ஆனா எதையும் தொடர்ந்து செய்தால்தான் அதன் விளைவு தெரியும்.
நீக்குஇங்கு நான் தந்த கருத்தில்,"வணக்கம் நெல்லை தமிழன் சகோதரரே" என வந்திருக்க வேண்டும். மறந்து விட்டேன். மன்னிக்கவும். அதனால் அவர் துணைவியாருக்கு நான் தந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அவருக்கு போய் சேரவில்லை என நினைக்கிறேன். மீண்டும் தங்கள் மனைவிக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீக்குஊரை தெரிஞ்சுக்கிட்டேன்..
உலகம் புரிஞ்சுக்கிட்டேன்...ஏனோ ரஜினி பாட்டு நினைவுக்கு வருகிறது. ஹா ஹா ஹா. நன்றி..
இல்லை கமலா ஹரிஹரன் மேடம்... நெல்லை அலைச்சலில் ரொம்ப தூங்கிவிட்டேன். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
நீக்குஎன் பெண் கேக், அப்புறம் சில பரிசுகள் இவையெல்லாம் மனைவிக்குக் கொடுத்தாள் (எனக்கு எப்போதுமே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மீது விருப்பமே இருந்ததில்லை. பசங்களுக்கும் பிறந்த நாள் பார்ட்டிலாம் வச்சதே இல்லை. ஹாஹா)..
பயண அனுபவங்கள் சுவாரஸ்யம் ஜி
பதிலளிநீக்குவெங்கட் ஜி போன இடங்களும் வருகிறது போலயே...
தொடர்கிறேன்...
நன்றி கில்லர்ஜி. ஆமாம் இரண்டும் ஒன்றுதான்!
நீக்குபக்கி மார்க்கமு முடிந்து இனி பக்தி மார்க்கமு... //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா...நீங்கள் வீக் என்றால் நானும் இரண்டாவதில் ரொம்பவே என்ற பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய அடை மொழியைச் சேர்த்துக்கலாம்!! ஹிஹிஹி...
பதிவை ப்ராயாகிலிருந்து பேக்வேர்ட் பண்ணி போகிறேன் ஹிஹிஹி
கீதா
//பதிவை ப்ராயாகிலிருந்து பேக்வேர்ட் பண்ணி போகிறேன் ஹிஹிஹி//
நீக்குஅப்டீன்னா? அபுரி!
ஸ்ரீராம் இந்தப் பதிவு வாச்க்கும் போதே மனசுல ....நீங்க காசிக்குப் போய் தியாகராஜர் போல பக்தி மார்கவு ல துன்மார்க்கசரானு பாடிட்டே போனது போல ஒரு வீடியோ ஓடிச்சு!!! ஹா ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குசரி இனி குண்டு தேவதை வரமாட்டா...வானதேவதைகள் பத்தி வருமில்லையோ....அதான் ஃப்ளைட்ல ஏர்ஹோஸ்டஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாவம் நல்ல பெண் என்று சொன்ன அத்தைக்கு அந்தக் குண்டுப் பெண் இல்லாம போரடிச்சிச்சொ?!!
கீதா
குண்டுப்பெண் போர்வைக்குள்ளேயே இருந்ததால் அவள் முகம் கூட எனக்கு நினைவில்லை கீதா!
நீக்குஅடுத்து ஜபல்பூர்தான் என்பதால் என் கடமையைச் செய்ய உள்ளே சென்றேன். அத்தையிடம் "ஜபல்பூர் நெருங்குகிறது... அந்தப் பெண்ணை எழுப்புங்கள்" என்றேன்.//
பதிலளிநீக்குஆஹா ஆஹா இதல்லோ பொறுப்பு!! என்னே கடமை உணர்ச்சி!! ஏல்லாரும் இங்க வாங்க! யாரங்கே..பூஸார் ஓடி வாங்கோ...ஏஞ்சலையும் இழுத்துக்கொண்டு வாங்க.... ஸ்ரீராமை மேடைக்கு அழைத்து அவர் வீட்டு மொட்டை மாடியில நீங்க ஒளித்து வைத்திருக்கும் அந்த மூட்டையை அவரைப் பாராட்டி பரிசு கொடுத்துக் கௌரவியுங்க!!!!!!!!!!!!!! அப்படியே உங்க கடமையையும் முடிச்சுருங்க!!!!!!!!!!!
அதுக்காகவே ரயில் வாயிலில் நின்று ஒவ்வொரு ஸ்டேஷனா என்னனு பார்த்து இறக்கி விட்டிருக்கார்...பாருங்க!!
கீதா
வாங்க.. வாங்க... நானும் மொட்டை மாடியில் போய்த் தேடிப்பார்த்து விட்டேன். ஒன்றும் காணோம்!
நீக்குரயில் புதிய பாகங்களைப் பொறுப்புடன் ஃபோட்டோ எடுத்த ஸ்ரீராம்...ஹா ஹா பின்னே ரயில்வே ஒன்னும் சும்மா இல்லை எல்லாம் செய்யுறாங்கதான்னு ஒரு சாட்சி வேண்டாமோ!? வரலாறு முக்கியம்!!!
பதிலளிநீக்குகீதா
இப்படி போட்டோ எடுத்துக்கொண்டால் நான்கைந்து வரிகளுக்கு உதவுமே!
நீக்குஸ்ரீராம் அவர் மெய்யாலுமே ஸ்டேஷன் மாஸ்டர்தானா?!!!!!!!!!!!!!!!!!!! ஏன் அப்படிச் சொன்னார் இல்லையா? ஒரு வேளை வீட்டுக்குப் போகூம் டென்ஷனோ...
பதிலளிநீக்குநல்ல காலம் நீங்க கிட்டக்க இருந்துருக்கீங்க...இல்லைனா ஓடி ஏறுவது சிரமம் இல்லையா...ஓ நீங்கதான் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னப் பையனாச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புது வண்டி போல!! ரொம்ப அழகாக இருக்கிறது. இந்தக் கலர் ரயிலை சென்னையில் ப்ளாட்ஃபார்மில் பார்த்திருக்கேன்....
கீதா
ஸ்டேஷன் மாஸ்டரோ, மேனேஜரோ... என்னவோ சொன்னார். ஜபல்பூரில் இறங்கிச் சென்று விட்டார்.
நீக்குஆமாம் ரயில் நிலைய மேடியயில் மழைத்துளிகளின் ஈரம்!!
பதிலளிநீக்குநல்ல குளிர்ச்சியாக இருந்ததா ஸ்ரீராம்...
மதன்மஹால் ஸ்டேஷனில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள் என்பதை நானும் அறிந்தேன் ஸ்ரீராம் போன பதிவில் வந்ததும்...அதற்கு முன் மஹல் பற்றி மட்டும் தெரியும். அப்போதெல்லாம் கேமரா கிடையாதே.
ஸோ னெட்டில் இதே நீங்கள் இங்க கொடுத்திருகும் தகவலை வாசித்தேன்...அப்ப தெரிந்தது. மகளிர் ரயில் நிலையம்...
கீதா
கீதா
மதன் மஹால் பற்றி வேறு எதுவோ சொல்ல (எழுத) நினைத்திருந்தேன். மறந்து விட்டது!
நீக்குபயணக்கட்டுரைகள் பல விதம். உங்களுடையது தனி விதம். சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து, பயணிக்கும் புத்தம் புது கோச் வரை படமெடுத்து போட்டு அசத்துகிறீர்கள். Good job!
பதிலளிநீக்கு//பயணக்கட்டுரைகள் பல விதம். உங்களுடையது தனி விதம்.//
நீக்கு//பயணிக்கும் புத்தம் புது கோச் வரை படமெடுத்து போட்டு அசத்துகிறீர்கள். Good job!//
ஆஹா... தன்யனானேன். நன்றி.
வேறொன்றும் அறியேனே....!!!!!
நிறைய சித்தர்கள் தெரிகிறார்கள்.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக வந்து இருக்கிறது.
கற்பனை செய்தால் நிறைய உருவங்கள் தெரியும்.
//கற்பனை செய்தால் நிறைய உருவங்கள் தெரியும்.//
நீக்குரொம்பக் கற்பனை செய்யாமலேயே உடனே தெரிவதுதான் சித்தர்களோ!!
அதுவும் சரிதான்.
நீக்குநான் 18 சித்தர்களை மனதில் கொண்டு வந்து பார்த்து என்பதற்கு கற்பனை என்று போட்டு விட்டேன்.
காலை கங்கைகொண்ட சோழபுரம் என்று போட்டதால் பல வருடங்கள் போயும் இந்த மரத்தை பார்க்காமல் விட்டு விட்டேனே என்று நினைத்தேன்.
இப்போதும் நினைக்கிறேன் தாராசுரமும் பலமுறை பார்த்து இருக்கிறேன். சித்தர்கள் வாழும் இந்த மரத்தைப் பார்க்கவில்லை.
//இது கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வாசலில் எடுத்த புகைப்படம்! முன்னர் பார்த்தவர்கள் கூட மறந்திருப்பார்கள்... அதுதான் மறுபடியும்... ஹிஹிஹி.... சித்தர்களை மறுபடி பார்ப்பதில் தவறில்லையே...!!//
பதிலளிநீக்குநிறைய தடவை போய் இருக்கிறேன் கங்கைகொண்ட சோழபுரம் ஒரு தடவை கூட இந்த வாசலில் மரத்தை உன்னிப்பாக பார்த்தது இல்லை.
இன்னொரு முறை போகும் பாக்கியம் கிடைத்தால் சித்தர்களை நெரில் சந்தித்து வருகிறேன். இப்போது உங்கள் படம் மூலமாய் தரிசனம் ஆச்சு.
அது தாராசுரம் கோவில். மாற்றித் தப்பா சொல்லி இருக்கிறேன்.
நீக்குஹிஹிஹி, காலம்பரேயே இது தப்பா வந்திருக்குனு புரிஞ்சது. கேட்பதற்குள்ளாகத் தொலைபேசி அழைப்புகள்/
நீக்குமாற்றி விடவா?
நீக்குமாத்திட்டீங்க போல! :))))
நீக்குஆமாம்...!! மாற்றியே விட்டேன்!
நீக்கு//கேட்பாரற்று வைக்கப் பட்டிருக்கும் அந்தக் கரிய பெட்டி.... அதில் என்ன வைக்கப்பட்டிருக்கும்...!//
பதிலளிநீக்குரயில்வே ஊழியர்கள் பெட்டி இது, பேர் இருக்குமே! அதில்.
இதைவிட பெரிய பெட்டிகள் எல்லாம் இருக்கும் ஊழியர்களின் உடமைகள் அதில் இருக்கும்.
தொடர் பயணம் செய்யும் போது தேவை படுமே.
முன்பு கனமான கள்ளி பெட்டிகள் பூட்டு போட பட்டு ஊழியர்களின் பேருடன் இப்படி பிளாட்பாரத்தில் இருக்கும் பார்த்து இருக்கிறேன்.
காலம்பரேயே சொல்ல நினைச்சு மறந்துட்டேன். ராணுவத்தினரின் பெட்டியும் இப்படி இருக்கும். இன்னும் பெரிதாகவும் இருக்கும்.
நீக்குஓ... யூகிக்க முடிந்தது. சும்மா சுவாரஸ்யத்துக்காக அப்படிப் போட்டேன்!
நீக்குசின்ன வயதில் கொக்கு பூ போடு என்று நகத்தில் வரும் வெள்ளையா வருமே உடனே கொக்கு பூ போட்டுவிட்டது என்று...
பதிலளிநீக்குகருடன் கழுத்தில் வெள்ளை பார்த்தால் பாட்டி கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்வார். கருடன் என்று சொல்லப்படுவதும் கழுகு ஃபேமிலிதான்..
ஹோட்டல் ரூம் நன்றாக இருக்கிறது.
பஸ்ல ஏறியது பத்தி சொன்னப்ப....நகரப் பேருந்தில் ஏறிய பழக்கமோ...ஹா ஹா ஹா
கீதா
கேல்சியம் சத்து குறைவாக இருந்தால் நகங்களில் தானாகவே பூ விழும்!
நீக்குஹா... ஹா... ஹா...
நகரப்பேருந்தில் ஏறி ரொம்ப நாட்களாச்சு கீதா...
நீக்குகீதா அக்காவிற்கும், நெல்லை தமிழன் மனைவிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி பானுமதி!
நீக்கு/எல்லா மன்னிப்புகளிலும் கொஞ்சம் கோபம் மீதமிருக்கிறது
பதிலளிநீக்குஏன், எல்லாக் கோபங்களிலும் கொஞ்சம் பாசம் கூட இருக்கிறது.// உண்மை, அருமை.
மரவேர் சித்தர்கள் சிலிர்ப்பூட்டுகிறார்கள்.
நன்றி பானு அக்கா.
நீக்குஸ்ரீராம் அவர்கள் படம் பார்க்காததால் அந்த ஆப்பிள் கம்பாரிசன் புரியலை...ஹிஹிஹி
பதிலளிநீக்குமேத்தி தேப்லா/மேத்தி சப்பாத்தி பார்க்க சூப்பரா இருக்கிறது. பரவல்லியே மேத்தி சப்பாத்தி எல்லாம் தராங்களே..
கீதா
மேலே நெல்லைக்குலின்க் கொடுத்திருக்கேன் பாருங்க...
நீக்குஸ்ரீராம் அந்தக் கருப்பு பெட்டி ரயிலில் பயணம் செய்யும் பணியாளர்களின் பெட்டி.
பதிலளிநீக்குபடித்ததில் பிடித்து நீங்கள் பகிர்ந்தது அத்தனையும் சூப்பர்.
கங்கை கொண்ட சோழபுரம் தாராபுரம் மரத்தின் படம் வெகு அழகு....சித்தர் மரமா? ஓ! எனக்கு அதில் யாழி போன்ற உருவம், யானை முகம்துதிக்கை போன்றும் இருக்குது..
நீங்கள் இதுக்குப் போட்ட ஃபேஸ்புக் பதிவு சூப்பர் மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்.
கீதா
ஸ்ரீராம் இப்ப ஸ்ட்ரைக் ஆச்சு அந்தக் கருப்பு பெட்டி சோல்ஜர்ஸ்/ரயில் போலீஸ் ட்ராவல் பண்ணுவாங்கல்ல அவங்களும் கூட கருப்புப் பெட்டி வைச்சுருப்பாங்க இறக்கறத பார்த்திருக்கேன். ஏதோ நம்பர் எல்லாம் கூட எழுதியிருக்கும்...ரெஜிமென்ட் நம்பரா இருக்குமோ.....பணியாளர்களும் இறக்குவதைப் பார்த்திருக்கிறேன்...
நீக்குபேன்ட்ரி ஏத்தறத பார்த்தோம்னா கண்டிப்பா ரயில்ல வாங்கிச் சாப்பிட மாட்டோம்....சமீபத்தில் சென்னையில் ஒரு ரயில் கிளம்பும் முன் அதில் பேன்ட்ரி சாமான் ஏத்தினாங்க பாருங்க ரொம்ப பயந்தே போயிட்டேன்...ஹையோ இதையை ரயில்ல விக்கிறாங்கனு...
கவிதை அருமை ஸ்ரீராம்....ஆ கனவும் வரலையோ....பகல் கனவு கூடவா!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
கவிதை பாராட்டுக்கு நன்றி கீதா. பேட்டி பற்றிய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
நீக்கு///லேஸான தூறல்களுக்கு நடுவில் இறங்கி ஸ்டேஷனில் நின்றால் வண்டி உடனே நகர ஆரம்பித்தது. செல்பி (அவரையும் சேர்த்து) எடுத்துக் கொண்டிருந்த நான் உடனே வந்து வண்டியில் ஏறினேன். அவர் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தார்!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா அவர் புத்திசாலிதான்... நல்லவேளை நீங்க தூரமாகப் போய்விடவில்லை.
// 'வீடு செல்வதற்காக மழை நிற்க அப்படிச் செய்கிறாரெ'ன்றார் கிசுகிசுப்பாக சந்தோஷ். //
ஓ உண்மையாகவோ.. இந்த ட்தக்கினிக்கி இங்கு எங்களுக்கும் தேவை:))
வாங்க அதிரா... அந்த ஸ்டேஷனில் தூரமாக செல்லுமளவு தூரமும் இல்லை, கடைகளும் இல்லை (வண்டி நின்ற அந்த இடத்தில்)
நீக்கு//ஓ உண்மையாகவோ.. இந்த ட்தக்கினிக்கி இங்கு எங்களுக்கும் தேவை:))//
நீக்குநான் கேள்விப்பட்டதில்லை. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு நம்பிக்கை அதிரா.
//கருடன் நகங்களில் பூத் தோற்றம் உருவாக்குவார் என்று நம்பிக்கை!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா அதெதுக்கு நகங்களில்...
/// எ(ங்கள்)ன் கடமையைச் செய்ய உள்ளே சென்றேன். அத்தையிடம் "ஜபல்பூர் நெருங்குகிறது... அந்தப் பெண்ணை எழுப்புங்கள்" என்றேன்.///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இவ்ளோ நேரமும் ஓசிச்சேன்.. எதுக்கு ஸ்ரீராம் இன்னமும் நித்திரை கொள்ளவில்லை என.. என்னா ஒரு அக்கறை:)).. ஆஅருக்கும் இல்லாத அக்கறை:)) ஹா ஹா ஹா..
//இடையில் அவள் செய்த காரியம் ஒன்றைச் சொல்ல மறந்து போனேன். வரலாறு முக்கியம் கீதா அக்கா...//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா எதுக்கு இப்போ கீசாக்காவைத்துணைக்கு அழைக்கிறார்ர்:)).
//அவள் இறங்க அவள் லக்கேஜ்களை இறக்கி உதவினோம் நானும் மாமாவும். இரண்டு தோழிகள் அவளை வந்து ரிஸீவிக்கொண்டு சென்றனர். லக்கேஜ் இறக்கியதால் அவர்களைப் ஃபோட்டோ தனியாக எடுக்கவில்லை. (ரொம்ப முக்கியம்)/
கீசாக்காவைப்பற்றிக்கூட இவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருப்பாரோ என்னமோ:)) இது ஒவ்வொரு அசைவும் நோட்டட்:))
//இனி இந்தப் பெண் இந்தப் பயணக்கட்டுரையில் வரமாட்டாள் ஏகாந்தன் ஸார்....///
உங்கட கவலை புரியுது:)).. என்றாவது ஒருநாள்.. எதிரெதிரே செல்லும் இரு ரெயில்கள் இளப்பாறும் அந்த இடைவெளியில்:)) எதிர்ப்பெட்டியில் சந்திக்கவும் கூடும்.. :) விதி வலியது ஸ்ரீராம்:).. ஆனா கடவுளே ஆளை மட்டும் மறந்திடாதீங்கோ.. ஏனையவற்றை மறப்பதைப்போல:)) ஹா ஹா ஹா..
//எதுக்கு ஸ்ரீராம் இன்னமும் நித்திரை கொள்ளவில்லை என.. //
நீக்குஅப்போது மாலை நான்கு மணி அதிரா!
//எதிரெதிரே செல்லும் இரு ரெயில்கள் இளப்பாறும் அந்த இடைவெளியில்:)) //
பார்த்தால் 'குஷி" தான்!
படமெடுப்பதில் நீங்க கீசாக்காவுக்குத் தம்பியேதான்:)).
பதிலளிநீக்குஇரவிரவாகப் பயணம்... சிலசமயம் கஸ்டமாகவும், சிலசமயம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
//சாலையோரங்களில் சில இடங்களில் பத்தடிக்கு ஒரு பெரிய லிங்கம் இருந்தது.//
ஓ ஆச்சரியம்..
ஆஆஆஆஆஆஆ ஒருமாதிரி ரெயினால இறங்கிக் ஹோட்டலை அடைஞ்சாச்சூ..
//படமெடுப்பதில் நீங்க கீசாக்காவுக்குத் தம்பியேதான்:)).//
நீக்குவைரவா... என்ன சொல்ல வர்றாங்கன்னு அபுரியா இருக்கே...!
//சாலையோரங்களில் சில இடங்களில் பத்தடிக்கு ஒரு பெரிய லிங்கம் இருந்தது//
படம் போட மறந்துட்டேன். இந்த வாரம் போட முயற்சிக்கிறேன்.
haahhaahaahaa இது புரியலையா? என்னபோங்க! என்னை விட மோசமாப் படம் எடுக்கிறதைச் சொல்றாங்க!அப்படித்தானே அதிரடி!
நீக்குஅப்பாடா!வேலை முடிஞ்சது! நாராயணா! நாராயணா! :))))
grrrrrrrrrrrrrrrrrrr
நீக்குகீசா மேடம்.... 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்ற பழமொழி உங்க ஞாபகத்துக்கு வரலையா?
நீக்கு//முன்பு எப்போதோ, எங்கோ படித்துப் பகிர்ந்ததுதான்... மறுபடி....
பதிலளிநீக்கு//
அத்தனையும் உண்மை..
ஆலமரம் சூப்பர்.
காத்திருக்கும்போது எதுவும் பெரிசா கிடைக்காது
காத்திராத வேளை சில சமயம்
காத்திருந்தது கிடைக்கும்..
கண் போனபின் சூரிய நமஸ்காரம் போல:)).
அதுவும் உண்மைதான். அதுதான் வாழ்க்கை. கேக்கறது கிடைக்காது கிடைப்பதைக் கேட்க மாட்டோம்!
நீக்குஓஓஓ இன்று கீசாக்கா பிறந்துவிட்டாவோ.. விடியக்காலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுதே:).. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீசாக்கா.. பாருங்கோ அஞ்சு இன்னும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லல்ல:))..
பதிலளிநீக்குhttps://i.pinimg.com/736x/2e/fe/20/2efe2030e23d220c852202bc1e3327df.jpg
grrrr miyaw
நீக்குhttps://previews.123rf.com/images/alexandkz/alexandkz1302/alexandkz130200010/17718953-portrait-of-an-angry-baby-girl-in-hat.jpg
அட, அதிரடி, நீங்கதானா அது, கையிலே தூக்கி வைச்சுக் கொஞ்சினது? யாரோ பாட்டிம்மானு நினைச்சேன். :))))))
நீக்குமியாவ் கொடுக்கும் பூங்கொத்துக்கு நன்னி.
நீக்குஹாஹாஹா, ஏஞ்சல், அந்தக் குட்டி அக்கா ஏன் கோபமா இருக்காங்க? :))))
நீக்கு//பாருங்கோ அஞ்சு இன்னும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லல்ல:))..//
நீக்குஇதுக்குதான்க்கா :)
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீதாக்கா :)
இந்தாங்க உங்களுக்கு ஸ்பெஷல் இனிப்பு கேரட் கேக் :)
https://www.bbcgoodfood.com/sites/default/files/styles/recipe/public/recipe/recipe-image/2017/04/carrot.jpg?itok=aezSgM4c
நன்னி, நன்னி, ஏஞ்சல், காரட் போட்டால் கேக் சிவப்பா இருக்க வேண்டாமோ? இது ப்ரவுன் கலரில் இருக்கு! பரவாயில்லை. இதுவும் பிடிக்கும்! கேக்குக்கு நன்னி ஹை!
நீக்குஇங்கே எல்லா கேரட் கேக்கும் இப்படித்தான் இருக்கும்க்கா .இது vegan கேக் மேலே வெள்ளை ஐசிங் போட்டு ஒரு குட்டி கேரட் சுகர் டாப்பர் வைப்பாங்க அது வச்சித்தான் கண்டுபிடிப்போம் இது கேரட் கேக்னு
நீக்குOho, vegan cake? OK, OK. Thank You.
நீக்குஆவ் இன்னிக்கு பெர்த்டே கொண்டாடும் நெல்லை தமிழனின் ஹஸ்பண்டுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குஆஆஆஆஆஆஅ அஞ்சுட கண்ணுக்கு இது மட்டும் எப்பூடித் தெரிஞ்சுது:)).. எனக்கு பொறுமையாகக் கொமெண்ட்ஸ் படிக்க நேரமில்லை இன்று...
நீக்குநெல்லைத்தமிழன், அண்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. சுவீட் 16 அதிராவும் 68 வயசு அஞ்சுவும்:) சொல்லச்சொன்னார்கள் என மறக்காமல் சொல்லிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))
நன்றி ஏஞ்சலின்...... அதிரா... ரொம்ப நன்றி... ஏஞ்சலின் அவங்க பர்த் சர்டிஃபிகேட் சில வாரங்களுக்கு முன்னால் அனுப்பியிருந்தாங்களே.... அவங்க 2004க்கு அப்புறம்தான் பிறந்தாங்கன்னு அந்த சர்டிபிகேட் சொல்லுதே.... நீங்க கணக்குல 'டி' வாங்காததுனால, சர்டிபிகேட் சொல்றதுதான் சரியா இருக்கும் க்கும் க்கும் க்கும்..
நீக்கு/ மதன்மஹால் என்றதும் எனக்கு மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது.//
பதிலளிநீக்குசரீஇ அதில் யார் நினைவுக்கு வந்தும் தெளிவா சொல்லணும் :)
ஊர்வசியா இல்லை குஷ்பூவா ??
இருவரும் இல்லை... அந்த க்ளைமேக்ஸ் மாளிகையும், மனோரமா, ரூபிணியும்.. (மதன் மஹால்... அரண்மனையாட்டம் இருக்கும் இல்லே? ஓ... கெஸ்ட்டு அவுஸா/ நான் உங்க அவுஸ்னு நெனச்சேன்!)
நீக்குவாங்க ஏஞ்சல்...
இந்த படத்தை டிவில பார்த்தது :) விட்டு விட்டு பார்த்தேன் அதிலும் ஊர்/கம ஜோடி மட்டுமே பிடிச்சது
நீக்குகருடன் பூப்போடுமா ? நாங்க கொக்கு பறந்தப்போ இப்பிடி விரல்களை தேய்ப்போம் .கொக்கு பூ போடும்னு :)
பதிலளிநீக்குஅந்த மேத்தி ரொட்டீ என்ன இப்படி ஆயில் பாத் எடுத்திருக்கு ??
கழுத்தில் வெள்ளை இருக்கும் கருடனைப் பார்த்துதான் என் பெண் தோழிகள் *மூன்றாவது, நான்காவது படிக்கும்போது) இப்படிச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்)
நீக்குமூணாவது நாலாவதில் பெண் தோழிகளா ?? !!!! இந்த பூனைக்கு இதெல்லாம் கண்ணில் படாதோ :))
நீக்குஹாஹா :) அந்த பெண் இறங்கியாச்சா :))
பதிலளிநீக்கு//எல்லாப் பாசங்களிலும் கொஞ்சம் வேஷம் இருக்கிறது.//
இதை மட்டும் ஏற்க முடியலை
எல்லா அழுகையிலும் ஒரு வலி இருக்கிறது
வலியினால்தானே அழுகை? அதற்கு மாறாகச் சொல்லவேண்டும்!
நீக்குஅப்பாடி... எண்டுக்கு வந்துட்டேன்...
பதிலளிநீக்குஆமாம்...
எங்கே துரை செல்வராஜூ ஸார்? DD?
/மதன் மஹால் பற்றி வேறு எதுவோ சொல்ல (எழுத) நினைத்திருந்தேன்/ நானும் காசி பற்றி கேட்க நினைத்திருந்தேன் காசியில் மல்லிகை மணக்காதாமே மாடு முட்டசதாமெ காகம் பறக்காதாமே இன்னும் என்னென்னவோ
பதிலளிநீக்குமுட்டாதாமே காகம் கரையாதாமே
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்...
நீக்குநான் மல்லிகையை(யே) (முகர்ந்து) பார்க்கவில்லை!
மாடு முட்டவில்லைதான். அதிலும் குறுகிய மிகக்குறுகிய தெருக்களில் பிரம்மாண்ட மாடுகளைத் தாண்டிச் செல்லவேண்டி இருந்தது. பயந்துகொண்டேதான் தாண்டினோம். ஒன்றுமே செய்யவில்லை.
காகம் கண்ணில்படவில்லை, அல்லது கருத்தில் விழவில்லை!
ஸ்ரீராம்.... இந்த மாதிரி பயணத்தில் எப்போ சாப்பிட்டுட்டுத் தூங்கச் செல்வோம், எவ்வளவு சீக்கிரம் எழுந்துக்கணும் (எனக்கெல்லாம் இஷ்டப்படி எழுந்தால் உடல் ரெடியாகாது. நீங்க இதனைக் கவனிச்சிருக்கீங்களா? தினமும் 6 மணிக்கு பாத்ரூம் போவதை, ஒரு நாள் 3 மணின்னு மாத்தினால் சரிவராததை?) எப்போ கிளம்ப ரெடியாகணும் என்பதெல்லாம் நாளுக்கு மாறுபடும். சில நாள் இரவு பிரயாணம், தூக்கம் சரியா வராது... இதையெல்லாம் மீறித்தான் என் பயணங்களில் எல்லோருக்கும் முன்பாகவே நான் எழுந்து குளித்து ரெடியாகிடுவேன். இரண்டு நாள் ரயிலில் மசமசப்பா இருந்திருக்கும். திரும்ப காலை 3 மணிக்கு படுக்கைல விழுந்து 6 மணிக்கு ரெடியாகணும்னா மிகவும் சிரமப்பட்டிருப்பீங்க.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்தான் நெல்லை.. இது மாதிரி சமயங்களில் அது தவிர்க்க முடியாதே... ஆனால் தூக்கம், களைப்பு என்றெல்லாம் எதுவும் தெரியவில்லை. புதிய இடங்களில் உடனடியாக தூக்கமும் வரவில்லை!
நீக்குகீதா சாம்பசிவம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபயணம் தொடரட்டும்.
நன்றி மாதேவி.
நீக்கு'பக்தி' - இதிலும் நீங்க விலாவாரியா, புராணங்களில் என்ன சொல்லியிருக்காங்க, ஏன் வேணி தானம் பண்ணறோம், திரிவேணி சங்கமத்தின் தாத்பர்யம் என்ன - இதெல்லாம் நீங்க எழுதவே வேண்டாம். உங்க பார்வைல, அப்புறம் நீங்க என்ன பண்ணினீங்க என்பதை மட்டும் எழுதினால் போதும். மற்றபடி பயணத்தை உங்க பாணில விளக்கமாவே எழுதுங்க.
பதிலளிநீக்குஅதற்காக அடுத்த வாரம் சட்டென மொத்தத்தையும் எழுதி முடிச்சுடுவேன்னு நினைச்சீங்களா நெல்லை? அப்புறம் எடுத்த போட்டோவை எல்லாம் என்ன செய்வது?!!
நீக்குதேப்லா, தக்காளித் தொக்கு - இதெல்லாம் பார்த்தாலே எனக்கு வயத்தைக் கலக்குது. ரெண்டு நாள் சாப்பாட்டிலும் காய்கள் இல்லை... வெறும்ன தொக்கு, கலவை சாதம், சப்பாத்தி/பூரி போன்று.... ஆனா இந்த மாதிரி யாத்திரைகள்ல இதெல்லாம் தவிர்க்கமுடியாது. நாங்க, தனியா, கிடைக்கும் இடத்தில் லஸ்ஸி போன்று சாப்பிட்டோம் (உடல் சூடாயிடக்கூடாது என்று)
பதிலளிநீக்குசாப்பாடு என்பது ஒருபெரிய விஷயமாகவே படவில்லை. அந்தந்த நேரத்துக்கு ஏதோ வயிறு ரொம்ப வேண்டும்....! அவ்வளவுதான்! கேட்டரிங் என்பதுவும் ஏதோ வயிற்றைக் கெடுக்காமல் இருந்ததா? போதும். சிறப்பாக சுவை இருக்க வேண்டும் என்று இல்லை என்கிற எண்ணம் இருந்தது.
நீக்கு//மரமாகவே மாறிவிடுவார்களாமே// - சிந்தர்கள்னு நீங்க எழுதுனதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நான் வளர்ந்த வயதான மரங்களைப் பார்க்கும்போது, அது என் முந்தைய எத்தனை ஜெனெரேஷன்களைப் பார்த்திருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொள்வேன்... எல்லாவற்றிர்க்கும் உயிர் உண்டு என்பது என் நம்பிக்கை. (இறந்தைவைகளைத் தவிர..அதாவது மேசை, கட்டில் போன்று)
பதிலளிநீக்குசித்தர்கள் எங்கெங்கே மறைந்து வாழ்வார்கள் என்பதை யார் அறிவார்? நான் சும்மாதான் சொன்னேன் என்றாலும், திருவண்ணாமலையில் கிரிவல சுற்றுப்பாதையில் சித்தர்கள் இருப்பதாகச் சொல்வார்கள்.
நீக்கு///எல்லாவற்றிர்க்கும் உயிர் உண்டு என்பது என் நம்பிக்கை. //
பதிலளிநீக்குகௌதமன் சார் நோட் தீஸ் :) இதனால்தான் மலர்களை பறிக்கல வெள்ளை பேப்பர் மதிப்புகூட்டலுக்கு
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபயண கட்டுரையை மீண்டும் நிதானமாக படித்து ரசித்தேன். நாங்களும் தங்களுடன் பயணிப்பது மாதிரியான ஒரு உணர்வை ஒவ்வொரு வாரமும் இந்த கட்டுரை தருகிறது. எல்லாவற்றையும் நிதானமாக, பொறுமையாக விளக்கிக் கொண்டு, மேலும் அதிகபடியான தகவல்களுக்கு படங்களுடனும் இணைத்து தரும் தங்கள் எழுத்தாற்றல் காரணமாக இருக்குமென நினைக்கிறேன். அடுத்த வாரம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன்.
மரங்களின் வேர்களில் சித்தர்களின் உருவம் தரிசித்துக் கொண்டேன். அதிசயங்கள் நம்மைச்சுற்றி நடந்தபடிதான் உள்ளன. நம் பார்வையில் படவேண்டிய நேரங்களில், நம் கண்களுக்கு விருந்தாகின்றன.(ரயில் தேவதையும் அப்படித்தான் என நினைக்கறேன். இல்லையென்றால்,இக் கட்டுரைக்கு இடையிடையே அவள் ஜபல்பூரில் இறங்கும் வரை நாங்களும் காண முடியுமா? ஹா ஹா ஹா. சும்மா ஜோக்தான்.. தவறாக நினைக்க வேண்டாம்.)
எல்லா உறவுகளிலும் ஒரு போலி இருக்கிறது. ("அதுதான் இறைவன் மனித இனத்திற்கு அளித்த சாபமான சுயநலமோ?")
எல்லாப் பாசங்களிலும் ஒரு வேஷம் இருக்கிறது.. உண்மைதானே! உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் நடிக்க படைக்கப்பட்டவர்கள்தானே..! வேஷம் போடாமல் நடிக்க இயலாதே. ! ஒவ்வொரு வாசகங்களும் ஒவ்வொரு அர்த்தம் தருகிறது ரசித்தேன். இந்த வியாழன் கதம்பம் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா...
நீக்குமறுபடி வந்து ஒவ்வொன்றாகப் பாராட்டியுள்ளதற்கு நன்றிகள். எழுத்தாற்றல் எழுத்தாற்றல் என்று நீங்கள் ஆராட்டுவதில் உங்கள் அன்புதான் தெரிகிறது. ரயில் தேவதையா? அந்தப் பெண்ணை தேவதை என்று சொன்னால்...!
ரசனைக்கும், பாராட்டுக்கும் நன்றி அக்கா.
பெரிய பதிவு. மிகக்குறைவான நேரம்தான் கிடைத்தது இந்த historic dayயில். பின்னூட்டங்களும் முட்டாத மாடு, பறக்காத காக்கா என பிரமிக்கவைக்கிறது!
பதிலளிநீக்கு//.. எல்லா அழுகையிலும் என்ன இருக்கிறது..// கவிதையில்..
தமிழ்நாடை இன்று நினைத்து இப்படி சேர்க்கலாம்:
எல்லா வெற்றிகளிலும் கொஞ்சம் தோல்வி இருக்கிறது..
//எல்லா வெற்றிகளிலும் கொஞ்சம் தோல்வி இருக்கிறது.. //
நீக்குஹா.... ஹா.... ஹா...
செம ஏகாந்தன் ஸார்.
//மரவேரில் சித்தர்கள்.// சித்தர்களைத் தாண்டியும் மரங்கள், குறிப்பாக வயசான மரங்கள் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியவை. புரிந்துகொள்ளப்படவேண்டியவை.
பதிலளிநீக்குஸ்ரீராம்ஜி உங்கள் கவிதை மிக அருமை. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபயணக் குறிப்புகள் மிகவும் நுணுக்கமாக இருக்கிறது. ரயிலின் புது பாகங்கள் கூடப் படமெடுத்துப் போடும் அளவிற்கு.
உங்களுக்குப் பிடித்துப் பகிர்ந்த வரிகளில் //எல்லா மன்னிப்புகளிலும் கொஞ்சம் கோபம் மீதமிருக்கிறது
ஏன், எல்லாக் கோபங்களிலும் கொஞ்சம் பாசம் கூட இருக்கிறது.// இது மிகவும் சரி எனப்பட்டது
மரத்தில் சித்தர்.படம் அழகாக இருக்கிறது. மரத்திலும் சித்தர்கள் இருப்பார்கள் என்பது புது தகவல்.
அனைத்தும் ஸ்வாரஸ்யம் வழக்கம் போல்.
மகனின் நுழைவுத் தேர்விற்காகப் பயணம். நாளை இடுக்கிக்குப் பயணம் மறுநாள் ஞாயிறு அன்று எய்ம்ஸ் பரீட்சை. அடுத்து கோழிக்கோடில் ஜிப்மெர் என்று ஒவ்வொன்றாக இடையில் டபீங்க், எடிட்டிங்க் வேலைகள். நான் தற்போது வேலை செய்யும் கல்வி ஸ்தாபனத்தைக் குறித்த ஒரு படம். எங்கள் ஏரியா கொஞ்சம் பிற்பட்ட பகுதி கிராமம், சிறிய டவுன். இப்போது நன்றாக டெவலப் ஆகியிருந்தாலும் அத்தனை வளர்ச்சி அடையாத நேரத்தில் தொடங்கப்பட்டு இங்கிருக்கும் மக்களுக்கு கல்விச் சேவை செய்துவருவதால் ஸ்தாபனம் குறித்தும் அதனைத் தொடங்கியவர் குறித்தும் சொல்லும் படம். அதன் வேலைகள் என்று டைட்டாகப் போகிறது. இடையில் நேரம் கிடைக்கும் போது பதிவுகள் பார்க்கிறேன்.
துளசிதரன்
பயண அனுபவங்களும் படங்களும் அருமை. நீண்ட ரயில் நல்ல கோணம். தாரா சுர மரங்களில் யானை உருவங்களும் தெரிகின்றன. கவிதை நன்று.
பதிலளிநீக்குரஸித்தேன் ரஸித்தேன் பயணக் கட்டுரையை. அன்புடன்
பதிலளிநீக்கு