வெள்ளி, 24 மே, 2019

வெள்ளி வீடியோ : கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளையாடும் தென்னாட்டுப் பொன்வண்ணமே

 சிவந்த மண்.  1969 இல் வெளிவந்த திரைப்படம்.  அயல் நாட்டில் படமாக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம். 
இதன் பெரிய வெற்றி மற்ற தமிழ், தெலுங்கு திரைப்படங்களையும் வெளிநாட்டு லொகேஷன்களுக்கு ஓட வைத்தன.



கிருஷ் ஸார்...  கார்த்திக் ராஜா இசையில் தேடிப் பார்த்தேன்.  ஒன்றும் கிடைக்கவில்லை.  எனவே இந்தப் பாடலுக்கு வந்துவிட்டேன்!



ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி, காஞ்சனா நடித்த திரைப்படம்.  ஸ்ரீதர் சிவாஜியை வைத்து திரைபபடங்களை இயக்கி வந்தாலும் பின்னர் அவர்களிடையே ஒரு பிளவும் ஏற்பட்டதை காலச்சக்கரம் நரசிம்மா தனது தொடரில் சொல்லியிருந்தார்.  அது பின்கதை.



இன்னும் சொல்லப் போனால் இந்தப் படமே "அன்று சிந்திய ரத்தம்" என்கிற பெயரில் எம் ஜி ஆரை வைத்து ஸ்ரீதர் எடுக்கத் திட்டமிட்டிருந்த படம்.  இறுதியில் சிவாஜியை வைத்து 'சிவந்த மண்'  என்று எடுக்கப்பட்டது.



இந்தப் படத்தில் எனக்கு மிகமிகப்  பிடித்த ஒரே பாடல் இதுதான் என்று சொல்லலாம்.  'ஒரு ராஜா ராணியிடம்' பாடல் பெரிய பாடல்.  'பட்டத்து ராணி' எல் ஆர் ஈஸ்வரிக்கும் எம் எஸ் விக்கும் பெயர் வாங்கித் தந்த பாடல்.  'ஒரு நாளிலே 'பாடல் கூட நல்ல மெலடிதான்.  ஆனாலும் இந்த பார்வை யுவராணி கண்ணோவியம் நான் மீண்டும் மீண்டுக் கேட்டு ரசிக்கும் பாடல்.



எம் எஸ் வி யின் ஆரம்ப இசையே அமர்க்களமாக ஆரம்பிக்கும்.  கண்ணதாசன் பாடல்.   எந்த வரியைத் தலைப்பாக்குவது என்று திணற அடிக்கும் பாடல் வரிகள்.



மிகவும் மனோகரமான டியூன்.  பல்லவி ஒரு கவர்ச்சி என்றால் சரணம் தனிக்கவர்ச்சி!  டி எம் சௌந்தர்ராஜன் மிக அருமையாக அனுபவித்துப் பாடியிருக்கிறார்.

பார்வை யுவராணி கண்ணோவியம் 
நாணம் தவறாத பெண்ணோவியம் 
பாவை பண்பாடும் சொல்லோவியம் 
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம் 

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் 
ஏனென்று தேன் வாடுமே 
நூலென்ற இடை இன்னும் நூறாண்டு சென்றாலும் 
தேர்க்கொண்ட ஊர்கோலமே 
இன்று நானும் கவியாக யார் காரணம் 
அந்த நாலும் விளையாடும் விழி காரணம் 


கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளையாடும் 
தென்னாட்டுப் பொன்வண்ணமே 
மான் வண்ணம் என்றாலும் மலர்வண்ணம் என்றாலும் 
குறைவென்று தமிழ் சொல்லுமே 
வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன் 
எங்கும் தேடி முகம் பார்த்து பதம்பாடினேன் 

ஒருபக்கம் நான் பார்த்து மறுபக்கம் நாள் பார்க்க 
ஒருநாளும் போதாதம்மா 
மணிமுத்தம் வாய்சிந்த சிறுவெட்கம் முகம் சொல்லும் 
அது மட்டும் போதாதம்மா..

என்கேள்வி சுகம் என்று உனைக்கேட்பது 
நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதது 






இந்த வார மொக்கைப்புதிர்  :  கண்ணில் இடும் மை பற்றி தமிழில் என்னென்ன திரைப்பாடல்கள் வந்துள்ளன?  எனக்கு உடனே ஒன்று நினைவுக்கு வருகிறது.  அதுதான் நீங்களும் முதலில் உடனே  சொல்லப் போவது...  மற்ற பாடல்களை அறியக் காத்திருக்கிறேன்!

இதையே பெயராகக் கொண்ட சரித்திரக் கதா பாத்திரம் ஒன்றும் எனக்கு நினைவுக்கு வருகிறது...   உங்களுக்கு?

167 கருத்துகள்:

  1. KAYAL VIZHI. Good morning Sriram.வேறு பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
    பாட்டு கண்ணுக்கு மையழகு தோன்றியது.

    பார்வை யுவராணி பாடல் மிக இனிமை. காஞ்சனாவின் அழகு சொல்லி
    முடியாது.
    ஒவ்வொரு பாடலின் லிரிக்ஸ் நீங்கள் சொல்லும் போது அந்தப் பாடலின் அருமை
    மிக அழகாகத் தெரிகிறது. இவ்வளவு நாட்களாகப் பாடி வருகிறோமே
    இதை ஏன் யோசிக்கவில்லை என்று வருத்தப் படுகிறேன்.
    இசையில் மூழ்கும் போது பாடலை விட்டுவிட்டேனோ.

    ஒரு நல்ல ரசிகருக்கு வாழ்த்துகள்.
    வரப்போகும் அனைவருக்கும் இனிய நன்னாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் வல்லிம்மாவைப்போல கண்ணுக்கு மை அழகு மட்டுமே நினைவுக்கு வந்துது.. ஏனெனில் அது மிகவும் பிடித்த பாடல்.

      நீக்கு
  2. அட்! வல்லிம்மா ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

    வாங்க வல்லிம்மா இனிய மாலை வணக்கம்.

    ஸ்ரீராம் இனிய காலை வணக்கம். கணினி ஹேங்க் ஆகிவிட்டது. அதான்...

    படத்திற்கான விளம்பரம் அழகா இருக்கு இல்லையா...அதில் நாற்காலி ஒன்று போட்டு ரிசர்வ் செய்யப்படும் என்று போட்டது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... எங்கள் காலை, உங்கள் மாலை வணக்கம்!

      கயல்விழியில் மை இல்லையே...! ஆனாலும் மையலால் மட்டுமல்ல, மையாலும்தான் கயல் வந்திருக்கும் என்பதால் சொல்ஙலாம்!

      இந்தப்பாடலைப் பற்றிச் சொல்லும்போது மெட்டை ரசிப்பேனா, வரிகளை ரசிப்பேனா, டி எம் எஸ் கரலை - அதுவும் சரணத்தில் செல்லும் அந்தக் குரலின் உயரமும், குழைவும் - எதை ரசிப்பேன்?!!!

      பாராட்டுக்கு நன்றி அம்மா.

      நீக்கு
    2. பிழைகளைப் பொறுத்தருள்க... மொபைல் டைப்பிங்!

      நீக்கு
    3. வாங்க கீதா ரெங்கன்... இனிந காலை வணக்கம்.

      ஆமாம்... அம்மாதான் இன்று ஃபர்ஸ்ட்டு..்்்்்்்்்்்்்!!

      விளம்பரம்... ஸ்ரீதர்-கோபு ஸ்பெஷல்!

      நீக்கு
    4. வல்லிம்மா..

      சொல்ல மறந்தேனே... நீங்கள் சில நாட்களுக்குமுன் பகிர்ந்திருந்த - உங்கள் தம்பிக்குப்பிடித்த பாடல்கள் -லிஸ்டிலிருந்து இந்தப் பாடலை எடுத்துக் கொண்டேன்.

      நீக்கு
    5. ஸ்ரீராம்... காலையில் எழுத விட்டுப்போய்விட்டது. கிளிஞ்சல்கள் படம், விழிகள் மேடையாம் பாடல்.

      மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

      நீக்கு
    6. TR பாடல்.. ரசிக்கத்தக்க வரிகள்.. நல்ல பாடல்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். வாங்க வல்லிம்மா...

    சிவந்தமண் பாடல்கள் அனைத்துமே அருமை, குறிப்பா பட்டத்து ராணி.

    நான் 7வது படித்தபோது, என் அப்பா தாளவாடி என்ற ஊரில் இருந்த தியேட்டரில் இந்தப் படத்துக்குக் கூட்டிச் சென்றார்.

    நீங்க பாடல் வரிகளை எழுதும்போதுதான் உன்னிப்பாகப் படிக்கத் தோணுது.

    ஜிவாஜியின் தீவிர ரசிகை, அரங்கத்தில் இருப்பவரைக் காணலியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிவாஜியின் தீவிர ரசிகை..
      படத்தில் ஓவர் அலட்டல் என்று
      (திரை) அரங்கத்தை விட்டு வெளியே போய் விட்டதாகக் கேள்வி!..

      நீக்கு
    2. காலை வணக்கம் நெல்லைத்தமிழன்..

      நீங்கள் கேட்ட உடனேயே அல்லது தேடிய உடனேயே ஜிவாஜி ரசிகை ஆஜர்!

      நீக்கு
    3. நெல்லை அண்ட் துரை அண்ணா உங்க இருவர் கமென்டும் பார்த்துட்டு உருண்டு பெரண்டு சிரித்துவிட்டேன்....

      கீதா

      நீக்கு
    4. ///நான் 7வது படித்தபோது, என் அப்பா தாளவாடி என்ற ஊரில் இருந்த தியேட்டரில் இந்தப் படத்துக்குக் கூட்டிச் சென்றார்.///

      ஆஆஆஆஆஆஆஆஅ அஞ்சூஊஊஊஊஊ ஓடிக்கமோன்ன்ன்ன் கன்போம் ஆச்சூஊஊஊஊஊஊஊஊஊ:))

      நீக்கு
    5. //ஓடிக்கமோன்ன்ன்ன் கன்போம் ஆச்சூஊஊஊஊஊஊஊஊஊ:))// - நாந்தான் வல்லாரை யூசு அளவுக்கு அதிகமாக சாப்பிடறேனல்லோ... அதுனால போன ஜென்மத்துல நடந்ததும் நினைவுக்கு வந்து எழுதியிருக்கேன்...

      நீக்கு
    6. //நான் 7வது படித்தபோது, என் அப்பா தாளவாடி என்ற ஊரில் இருந்த தியேட்டரில் இந்தப் படத்துக்குக் கூட்டிச் சென்றார்.//நீங்கள் எனக்கு இளையவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன், ஆனால் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பார்த்த படத்தை நீங்கள் ஏழாம் வகுப்பு படிக்கும்போது பார்த்திருக்கிறீர்கள் என்றால்...?? என்னை பள்ளியில் சேர்க்கும் பொழுது ஒரு வயது அதிகம் கொடுத்தாக்கம் என்னை சேர்த்தார்கள்.

      நீக்கு
  4. கார்த்திக் ராஜா பாட்டு ஏன் கிடைக்கலை ஸ்ரீராம் (காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது அது செம ஹிட் சாங்க் அதைச் சொல்லலை வேறு பாடல்களும் கிடைக்கலையா?!!!)

    2019 வரையிலும் போட்டிருக்கார் ஆனால் அவர் பெயர் ஏனோ வெளியில் தெரிவதில்லையோ?!!

    நான் சமீபத்துல கேட்டேன்...நினைவுபடுத்தி சொல்லறேன்...இல்லைனா நெட்ல பார்த்து சொல்லுகிறேன். நல்லாருந்துச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்த்திக் ராஜா லிஸ்ட் நேற்று அலசினேன் கீதா.. ஆனால் பகிரும் அளவு இனிமையாய் எனக்கு எந்தப் பாடலும் தோன்றவில்லை!

      நீக்கு
    2. நான் கேட்ட பாட்டு ஓரளவு நல்லாருந்துச்சு ஆனா வழக்கம் போல நினைவில்லை. ஆனா ஒன்னு பொதுவாவே இப்ப வர பாடல்கள்ல ஒரு சிலது மட்டும் தான் உடனே ஒட்டிக் கொண்டு மீண்டும் பாடவேனும் வைக்கிது...

      கீதா

      நீக்கு
  5. பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு ஸார்.. நேற்று ஆளைக் காணோமே...

      நீக்கு
  6. அன்பின் வணக்கமும்
    நல்வரவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான வணக்கங்கள்..

      நல்வரவு துரை ஸார்...

      நீக்கு
    2. நேற்று கைத்தொலைபேசி மயங்கி விட்டது...

      மேலும் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டு இருந்ததில் நேரமாகிப் போனது....

      நீக்கு
  7. வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும், வரவேற்கப் போகும் துரைக்கும் ஒளிந்திருந்து பார்க்கும் ஸ்ரீராமுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. ம்ம்ம்ம்ம் ஜிவாஜி படம், அதிலும் ஸ்ரீதர் இயக்கத்தில். ஸ்ரீதர் இயக்கிய படங்கள் எல்லாமே அநேகமாப் பார்த்திருப்பேன். அதான் காரணம் சொல்லி இருக்கேனே பலமுறை! காஞ்சனாவை நேரிலே பலமுறை பார்த்திருக்கேன். அவங்களுக்கு ஒரு முறை தற்செயலாக எங்க வீட்டில் இருந்து சாப்பாடு போக என் அம்மாவின் மாவடுவை அவங்க ருசித்துவிட்டுப் பின்னர் அதே மாதிரிப் போட்டுக் கொடுக்கச் சொல்லிப் போட்டுக் கொடுத்திருக்கார் என் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஞ்சனா மாவடு போன்ற விஷயங்கள் நீங்கள் முன்னேயும் சொன்ன நினைவு இருக்கிறது.

      நீக்கு
    2. நான் காஞ்சனாவை ஒரு முறைதான் நேரில் பார்த்த்தேன். எங்கள் அத்தை பையன்களுக்கு பழனியில் பூணூல் போட்டார்கள். அது முடிந்து, ஸ்வாமி தரிசனமும் செய்து கொண்டு குடும்பத்தினர்கள் ப்ராகாரத்தில் அமர்ந்து கொண்டிருக்க, நானும், என் அத்தை பெண்ணும் சும்மா சுற்றி வரலாம் என்று வந்தால், சி.சப்பிரமணியன் அவர்களின் மகள் திருமணத்திற்காக ஒரு கும்பல் விஞ்சில் வந்து இறங்கியது. அதில் எங்களுக்கு தெரிந்த ஒரே முகம் காஞ்சனா. என்ன நிறம்! என்ன அழகு! பிரமித்த நாங்கள் இருவரும் ஓடிப்போய் மற்றவர்களை அழைத்து வந்தால்... அவரைக் காணோம்.

      நீக்கு
    3. //ஓடிப்போய் மற்றவர்களை அழைத்து வந்தால்... அவரைக் காணோம்.//

      காஞ்சனாவைப் பார்த்ததாக நினைத்தது ப்ரமையோ!!

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்... நீங்கள் யாரையோ பார்த்துவிட்டு காஞ்சனா என்கிறீர்கள் என்று குடும்பத்தினர் வெறுப்பேற்றினார்கள் என்றால் நீங்களுமா? அமைச்சர் சி.எஸ்ஸின் மகள் திருமணம் என்கிறேன், வி.வி.ஐ.பி.க்களை உடனே உள்ளே அழைத்துச் சென்றிருக்க மாட்டார்களா?

      நீக்கு
    5. அவர் சுப்பிரமணியன் இல்லை, சுப்பிரமணியம்.. :)

      நீக்கு
  9. இந்தப் படமும் பார்த்திருக்கேன். பின்னால் சென்னைத் தொலைக்காட்சியிலும் வந்தது. முத்துராமன் நடிப்பும் நம்பியார் நடிப்பும் ஓகே! ஜிவாஜி வழக்கம்போல் ஓவர் அலட்டல்! ஹிஹிஹி, நெல்லைத் தமிழரே, இப்போச் சரியா? பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையா!...

      சிவாஜியை ஜிவாஜி என்று சொல்லியாயிற்று...

      ஓவர் அலட்டல் என்று சொல்லிக் கொண்டே படத்தையும் பார்த்தாயிற்று....

      நீக்கு
    2. படம் பார்த்தாச்சு இல்லையா கீதாக்கா...? நான் இந்தப் படத்தைத் தியேட்டரில் பார்த்ததில்லை. டிவியில் ஒரே முறையில் தொடர்ச்சியாகவும் பார்த்ததில்லை.

      நீக்கு
    3. துரை ஸார்.. அவங்க ஜிவாஜிக்காக அந்தப் படம் பார்க்கவில்லை!!! சித்ராலயாவுக்காகவும் காஞ்சனாவுக்காகவும்... சரிதானே கீதா அக்கா?!!

      நீக்கு
    4. அதெல்லாம் ஏதும் இல்லை. ஓசிப் பாஸ் கிடைத்ததால் பார்த்தேன். அம்புடுதேன்! :))))) காசு கொடுத்துப் படம் பார்த்ததெல்லாம் கல்யாணம் ஆனப்புறமா ஏதோ ஒரு சில படங்கள்/ அதுவும் பின்னர் தொலைக்காட்சி வந்தாச்சு. கடைசியாக் காசு கொடுத்துப் பார்த்த படம் "மை டியர் குட்டிச் சாத்தான்!" அதோடு இல்லை. வாழ்க்கையிலேயே முதல்முறையாக முன்பதிவு செய்து கொண்டு போன படமும் கூட! பிக்னிக் மாதிரி எங்க தெருவிலே 2,3 குடும்பத்தார் சேர்ந்து சாப்பாடு கட்டி எடுத்துக் கொண்டு போய்ப் பார்த்துட்டு வந்தோம். தலையிலே விளக்கெண்ணெயும் ஜவந்திப்பூவும் மாட்டு வண்டியும் தான் இல்லை. மத்தது எல்லாம் தியேட்டரிலே அரங்கேற்றினோம். :)))))))

      நீக்கு
  10. ஸூப்பர் பாடல் ஜி அடிக்கடி ரசித்த பாடலே...

    பதிலளிநீக்கு
  11. "அன்று சிந்திய ரத்தம்" கதையும், "சிவந்த மண்" கதையும் கொஞ்சம் மாற்றம் எனக் கேள்வி. ஆனால் எம்.ஜி.ஆர் ஸ்ரீதர் பணக்கஷ்டத்துடன் இருந்த நாட்களில் அவருக்காக ஓர் படம் நடித்துக் கொடுத்திருப்பதாகவும் கேள்வி. ஜிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டதைப் பற்றிச் சொல்லவே இல்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் எம் ஜி ஆர் படம் உரிமைக்குரல். அப்போது பாதியில் நின்ற சிவாஜி படம் ஹீரோ 72. அது பின்னர் வைரநெஞ்சம் என்று பெயர் மாற்றி எடுக்கப்பட்டுத் தோற்றது. அதில் ஒரு இனிமையான பாடல் "செந்தமிழ் பாடும்"... ஏற்கெனவே பகிர்ந்த நினைவு.

      நீக்கு
    2. சிவாஜிக்கும், ஶ்ரீதருக்கும் உரசல் எதுவும் ஏற்படவில்லை. ஶ்ரீதர் பணக்கஷ்டத்தில் இருந்த காலத்தில் அவருடைய நெருங்கிய நண்பரான ஹிந்தி நடிகர் ராஜேந்திர குமார் ஶ்ரீதரிடம்,"நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரை வைத்து படமெடேக்கக்கூடாது?"என்று கேட்டாராம். அவர் அலோசனைப்படி எம்.ஜி.ஆரிடம் ஶ்ரீதர் பேச, எம்.ஜி.ஆர்.அவரை சிற்றுண்டிக்கு ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்தாராம். அப்போது ஶ்ரீதர் படப்பிடிப்பில் மற்றவர்கள் தலையிடுவது தனக்கு பிடிக்காது என்று கூற, தான் தலையிட மாட்டேன் என்று எம்.ஜி.ஆர் ஒப்புக்கொள்ள உரிமைக்குரல் உறுவானதாம்.
      நெ.த.வின் கவனத்திற்கு: இதை கேள்விப்பட்டதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள். ஶ்ரீதர் கல்கியில் எழுதிய தொடரில் இதை குறிப்பிட்டிருந்தார்.

      நீக்கு
    3. எழுத்துப் பிழைகளை மன்னிக்கவும். செல்ஃபோனில் டைப்புகிறேன். ட்ரை ஐ பிரச்சினை வேறு.

      நீக்கு
    4. ஸ்ரீதர் மட்டுமில்லை, ஏ பி என்னும் பணக்கஷ்டம் காரணமாகவே எம் ஜி ஆரிடம் வந்தார்கள்.

      இந்த உரிமைக்குரல் உரசல் பற்றி திரு கோபுவின் மகன் டி ஏ நரசிம்மா ஹிந்து கட்டுரையில் சொல்லியிருந்தார். எம்ஜி ஆர் 'இது தம்பி கணேசனுக்கான சப்ஜெக்ட் ஆச்சே' என்றாராம். ஆனாலும் உற்சாகமாக நடித்துக் கொடுத்தாராம்.

      இதில்தான் (உரிமைக்குரல்) எம்ஜி ஆர் - கண்ணதாசன் மறு இணைப்பும் நடந்தது (விழியே கதை எழுது)​

      நீக்கு
    5. //அப்போது ஶ்ரீதர் படப்பிடிப்பில் மற்றவர்கள் தலையிடுவது தனக்கு பிடிக்காது என்று கூற, தான் தலையிட.. //

      இதையெல்லாம் எங்கே படித்தீர்கள்?.. நல்ல ரீல்..

      இவரோ பணக்கஷ்டத்தில் இருக்கிறார். தீர்வுக்காக எம்ஜிஆரிடம் போயிருக்கிறார் என்று சொல்கிறீர்கள். அப்போ போய் இப்படியெல்லாம் அதுவும் எம்ஜிஆரிடம் டிமாண்ட் பண்ண முடியுமா?..

      நீக்கு
    6. //எம்ஜி ஆர் 'இது தம்பி கணேசனுக்கான சப்ஜெக்ட் ஆச்சே' //

      இந்த நிருபர்கள் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள், சாமி!!

      நீக்கு
    7. எல்லாம் ஒரு சுவாரஸ்யம்தான் ஜீவி ஸார்.

      எம் ஜி ஆர் ஸ்ரீதர் தன்னை நாடி வந்ததை மனதுக்குள் வரவேற்றிருப்பார். முதல் படத்தில் அவர் இஷ்டத்துக்குச் செய்யட்டும் என்று இருந்திருக்கலாம்.

      நீக்கு
  12. தமிழும் இசையும் கொஞ்சி விளையாடும் பாடல் இது...

    பள்ளி நாட்களில்
    சிவந்த மண் வெளியானதும்
    இந்தப் பக்கம் மாயவரத்துக்கும்
    அந்தப் பக்கம் கும்மோணத்துக்கும்
    ஓடிப் போய் படத்தைப் பார்த்து விட்டு வந்து காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு
    திரிந்தார்கள் விடலை மாணவர்கள் சிலர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய சூப்பர்ஹிட்!

      நீக்கு
    2. நான் தம்பியுடன் காரைக்குடியில் பார்த்தேன். அவன் தான்
      சிவாஜி படங்களை இரண்டு தடவை பார்ப்பான்.❤

      நீக்கு
    3. வல்லிம்மா என் அம்மா வழிப் பாட்டி என்ன செய்வார் தெரியுமா...ஜிவாஜி படம் வந்திருக்கு அதுவும் ஒழுகின சேரி தியேட்டரில் என்றால் அவ்வளவுதான் ஏற்கனவே வாரம் தோரும் சந்தைக்குக் எங்கள் பட்டாளத்தை அழைத்துக் கொண்டு செல்வார் ஜிவாஜி படம் என்றால் கேட்கவே வேண்டாம் நாங்கள் வட சேரியில் சந்தையில் காய் வாங்கிக் கொண்டு எல்லோரும் ஒழுகினசேரி வரை நடந்து வந்ததும் பாட்டி நைசாக நீங்க எல்லாரும் பஸ்ல ஏறிப் போயிடுங்க நான் இங்க வெயிலுக்கு கொஞ்சம் இப்படி கொட்டகைல ஒதுங்கிட்டு வரேன் என்று சொல்லி நைசாகத் தியேட்டருக்குள் நுழைந்துவிடுவார். அதுவும் அவரது கடைசி தங்கை கொச்சியிலிருந்து வந்துவிட்டால் அவ்வளவுதான் இருவருமாக ஒரு ஜிவாஜி படம் கூட விட மாட்டார்கள். எத்தனை முறை பார்த்தாலும்!!!!!!

      கீதா

      நீக்கு
  13. நரசிம்மாவின் அப்பா, "சித்ராலயா கோபு!" இந்த விரிசல் குறித்து எழுதிப் படிச்ச நினைவு. காஞ்சனா என்னதான் அழகு என்றாலும் நம்ம மு.மு.க்குக்கிட்டேக் கூட வரமுடியாது! அது தனி தான்! ஆனால் பாவம் விதி வஞ்சித்துவிட்டது அவங்களை. காஞ்சனாவும் ரொம்பக் கஷ்டப்பட்டு அண்ணனால்/தம்பியால் ஏமாற்றப்பட்டு ஓர் கோயிலில் தொண்டு செய்து சாப்பிட்டு வருவதாகப் பல வருடங்களுக்கு முன்னர் விகடன் வாராந்தரியை நம்பிக் கொண்டிருந்த நாட்களில் படித்தது. இப்போ வந்தால் நம்பி இருக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முமுவா? அது யாரது?

      காஞ்சனா பற்றிச் சொன்ன அந்த விகடன் செய்தி பாதி உண்மை, பாதி பொய். அவர் கஷ்டப்பட்டுக்கொண்டு சேவை செய்யவில்லை. விருப்பமுடன் செய்த சேவை என்று பின்னர் படித்த நினைவு. என் அக்கா பெண் பணியாற்றிய வங்கியில் அவருக்கு அக்கவுண்ட் இருந்தது. வந்து அவ்வப்போது பணம் எடுத்துச் செல்வார் என்று சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
    2. சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு ஏதோ விருது நிகழ்ச்சிக்கு வந்திருந்த காஞ்சனாவிடம் மௌனராகம் படத்தில் அவர் வக்கீலாக நடித்திருந்ததைப் பற்றி கேட்க அவருக்கு அது நினைவே இல்லை."அப்படியா?" என்றார்.

      நீக்கு
    3. ஓ... மௌனராகம் வக்கீல் இவர்தானா?

      நீக்கு
    4. மு.மு = முன்னாள் முதலமைச்சர் அதாவது ஜெ.

      நீக்கு
    5. ஜெ என்று யூகித்தேன். ஆனால் முமுவை உடைக்க முடியவில்லை! நானொரு தத்தி!!!

      நீக்கு
    6. அதான் பானுமதி வந்து சொல்லிட்டாங்க! நான் ஏற்கெனவே மு.மு.வையும் பல முறை அவங்க அழகை வியந்து பாராட்டி இருக்கேன். காஞ்சனாவை நேரில் பார்த்தாலும் அந்தச் சப்பை வாய் கொஞ்சம் உறுத்தும். ஆனால் நிறம்! அது தனி! மதுரையில் இவங்களுக்குக் "கலர் காஞ்சனா"என்றே அந்தக் கால கட்டத்தில் பெயர்.

      நீக்கு
    7. தெரியலை. காஞ்சனா மட்டுமில்லாமல் பல திரை நக்ஷத்திரங்களின் வாழ்க்கை! :(

      நீக்கு
    8. கீசா மேடம்.... பெண்கள் ஒருத்தரை அழகுன்னு சொன்னா உடனே முகத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வருவீங்க. என் எண்ணம் காஞ்சனா நல்ல அழகு (உடலை மெயிண்டெயின் செய்த விதத்தில்). ஜெ. அவர்கள் முகம் அழகு.

      காஞ்சனா அவர்கள் சொத்து கேசில் வெற்றி பெற்று அதனை திருப்பதிக்கு எழுதி வச்சுட்டாங்கன்னு படித்த ஞாபகம். 'திருமணம்' செய்துகொள்ளாத நடிகைகள் அனேகமாக உறவினர்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள்தாம்.

      நீக்கு
    9. நெல்லைத்தமிழன் கருத்தை அப்படியே, அப்படியே வழிமொழிகிறேன்.

      நீக்கு
    10. யப்பா இம்பூட்டு விஷயமா?!!!!!!!!!!!!!!!!!! வெள்ளிக்க்ழமையில் பாடலுடன் இப்படி நிறைய டிஆர்பி ரேட்டுக்கான செய்திகளும் ஹா ஹா ஹாஹ் ஹா ஹா

      கீதா

      நீக்கு
    11. நெல்லைத் தமிழரே, நான் ஜெயலலிதாவை முதல் முதல் பார்த்தது வெண்ணிற ஆடை படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தப்போ! அப்போ அங்கே இருந்து காரிலேயே மதுரையில் மேலாவணி மூலவீதியில் இருந்த சித்ராலயா அலுவலகம் வருவார். வயது பதினாறோ, பதினேழோ! தெரியாது! முகம் மட்டும் இல்லை. அவர் அங்க அமைப்புக்கள் எல்லாமும் செதுக்கினாற்போல் தான் இருந்தது!பாவம்! :( காஞ்சனா உடலை மெயின்டெயின் செய்தார் எனில் அவருக்குப் பணப் பிரச்னை தவிர்த்து ஜெயலலிதா மாதிரிக் கடுமையான சோதனைகள் ஏதும் இல்லைனு நினைக்கிறேன். காதலித்தவரைத் திருமணம் செய்துக்க ஆசைப்பட்டார் வசுந்தரா என்ற காஞ்சனா! ஆனால் அவர் உடன் பிறந்தவர்களே ஏமாற்றிக் கல்யாணத்தைக் கலைத்து விட்டார்கள். என்றாலும் மனோபலம்! ஜெயலலிதாவிடம் அது இல்லை.

      நீக்கு
  14. மை எழுதும் கண்ணாலே
    பொய் எழுதிப் போனாளே!...

    ஒற்றை வரியில் உயிரை உருவும் பாடல்..
    எது என்று எல்லாருக்கும் தெரியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வரி என்னையும் படுத்தும் துரை ஸார். என் நினைவிலும் அடிக்கடி ஊஞ்சலாடும் வரி இது. சமீபத்தில்கூட இந்த ஒற்றை வரியை இங்கு பகிர்ந்த நினைவு.

      நீக்கு
  15. மையேந்தும் விழியாட
    மலரேந்தும் குழலாட....

    ஆகா.. ஸ்ரீநிவாஸ் + சுசிலா அவர்களின் குரலில் சர்க்கரைப் பந்தலில் தேன்மழை..

    கவியரசரின் கை வண்ணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்கள் சொன்னதும் 'அட, ஆமாம்ல?' என்று நினைவுக்கு வருகிறது இந்தப் பாடல்.

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. நீலவண்ணக் கண்ணா வாடா..
    நீயொரு முத்தம் தாடா!..

    மிகவும் பழைய பாடல்....

    அதில்
    சின்னஞ்சிறு திலகம் வைத்து
    சிங்காரமாய் புருவம் தீட்டி..
    பொன்னாலான நகையும் பூட்ட
    கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு..

    என்று வரும்..

    புருவம் தீட்டுதலும் கண்ணுக்கு
    மை எழுதுவதும் அழகோ அழகு....

    பாலசரஸ்வதிதேவி அவர்கள் பாடியது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீலவண்ணக் கண்ணா வாடா பாடல் தெரியும்.. அதில் வரும் இந்த வரி நினைவில்லை. சுவாரஸ்யம்.

      நீக்கு
  18. பாடல் இனிமை, கேட்டு ரசித்தேன்.
    நிறைய செய்திகள் இந்த படத்தைப் பற்றி படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​​ஆமாம் கோமதி அக்கா... இந்தப் படம் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டு அதில் ஒரு சிறு பாத்திரத்தில் சிவாஜி நடித்ததாய் நினைவு.

      நீக்கு
    2. ஹிந்தியில் எடுக்கப்பட்டபோது
      தமிழில் முத்துராமன அவர்களது பாத்திரத்தை நடிகர் திலகம் ஏற்று நடித்தார்....

      நீக்கு
    3. ஓஹோ.... நன்றி தகவலுக்கு.

      நீக்கு
  19. காக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டா?
    கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா.. நீங்கள் இரண்டாவதாய்ச் சொல்லியிருக்கும் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்த முதல் பாடல்... முதல் பாடல் நீங்கள் சொன்னதும் நினைவுக்கு கொண்டுவந்தேன்.

      நீக்கு
    2. கண்ணுக்கு மை அழகு பாடல்தான் எனக்கும் டக்கென்று நினைவுக்கு வந்து கீழ சொல்லிருக்கேன்..கோமதிக்கா அண்ட் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  20. காக்கா காக்கா மை கொண்டா ...

    பாடலை எழுதுவதற்குள் -

    ஆகா... அருமையான பாடல்...

    பதிலளிநீக்கு
  21. ஓ... மையைப் போல நானும்
    கண்ணில் சேர வேண்டும்...

    காதலர் தினம் படத்தின் பாடல் வரிகள்..

    வாலி அவர்களது கவி ரசம்...

    பதிலளிநீக்கு
  22. கண்ணுக்கு மை அழகு..
    கவிதைக்குப் பொய் அழகு!...

    கவிதைக்குப் பொய் அழகு எனும் போதே
    கண்ணுக்கு அழகான மை கரைந்து போய் விடுகின்றது...

    ஆனாலும் உண்மை புரியாததால்
    ஓஹோ.. என்று கிடந்தது இந்தப் பாடல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணுக்கு மைஅழகு என்பது பொய் என்பது பொய்! அழகு என்பதே மெய்! சில கண்களுக்கு மையே தேவையில்லை! உதாரணம் ஸ்ரீவித்யா.

      நீக்கு
    2. ஆமாம்.. இன்னொரு ஜோடிக் கண்கள் உண்டே என்று நினைத்துக் கொண்டே டைப்பினேன். உடனே நினைவுக்கு வராததால் விட்டேன்!

      நீக்கு
  23. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து..

    வள்ளுவர் ஸ்வாமிகளின் திரு வாக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ... நீங்கள் திருக்குறளிலும் ஸ்பெஷலிட்டா...

      நீக்கு
    2. எல்லாந்தேங் கற்றேன்...
      என்ன பிரயோசனம்!...

      இது ரோசாராணி பேசும் வசனம்...

      பத்தாம் வகுப்பு படிக்கும் போது
      திருக்குறள் எழுதும் போட்டியில்
      மூன்றாம் இடம்..

      ஒரு எழுத்துப் பிழையால்
      இரண்டாம் இடம் பறிபோனது..

      முதல் பரிசு!.. அதை விடுங்கள்..

      இரண்டாம் இடத்தில் மாணவி..

      அவளது பெயர் ......

      ஆனாலும் பாவம்..
      நெஞ்சம் மறப்பதில்லை....
      மறப்பதே இல்லை...

      நீக்கு
    3. ஓ.. பாராட்டுகள் துரை ஸார்...​

      //அவளது பெயர் ......
      ஆனாலும் பாவம்..​//

      இப்படி எல்லாம் கூட பெயர் வைப்பார்களா? அதனால்தான் மறக்கவே முடியவில்லை போல!!​

      நீக்கு
    4. செண்பகப் பாண்டியனே
      நக்கீரராகவும் வந்தால்...

      என்னதான் செய்வது!?...

      அவள் பெயரைத் தற்போது சொல்வதற்கு இல்லை..

      அதனல் தான் - .....

      அவள் வளர்ந்த சூழல்...
      அதுதான் காலம் செய்த கோலம்!..

      அவளது பெயர் ஆனாலும் பாவம்!.

      என்று நினைத்துக் கொள்வது என்றால் -

      என்னே ஒரு வெள்ளந்தியான மனம்!....

      நீக்கு
    5. அப்போ....

      செண்பகப்பாண்டியன்ங்கறது....

      //நக்கீரராகவும் வந்தால்...//

      ஹா... ஹா... ஹா...

      //அதனல் தான் - .....
      அவள் வளர்ந்த சூழல்...
      அதுதான் காலம் செய்த கோலம்!..
      அவளது பெயர் ஆனாலும் பாவம்!.
      என்று நினைத்துக் கொள்வது என்றால் -​//

      அடடே...

      கே வா போ வுக்கு ஒரு கதை கிடைக்கும் போலவே....​

      நீக்கு
    6. கண்டிப்பாகக் கிடைக்கும்...

      நீக்கு
    7. துரை செல்வராஜு சார்... நானும் 8வது வகுப்பில் திருக்குறள் போட்டீல கலந்துகொண்டு 70 குறள்களைச் சொல்லி இரண்டாம் பரிசு பெற்றேன். 80 சொன்ன 10 வகுப்புக் காரர், முதல் பரிசு. அதுக்கு அப்புறம்தான் தலைமை ஆசிரியர் சொன்னார் 100 குறள்களை ஒப்பித்திருந்தால் 100 ரூபாய் பரிசு தந்திருப்பேன் என்று...

      நீக்கு
    8. //கண்டிப்பாகக் கிடைக்கும்...//

      சீக்கிரமே கிடைக்கட்டும்...! காத்திருக்கிறேன்.

      நீக்கு
    9. //நானும் 8வது வகுப்பில் திருக்குறள் போட்டீல கலந்துகொண்டு 70 குறள்களைச் சொல்லி //



      நான் கூட ஆறாம் வகுப்பில் ஐம்பது குறள்கள் சொன்னேன். பரிசு கிடைக்கவில்லை. வரிசையாகச் சொல்லியிருக்கக் கூடாதாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐம்பது குறள்களாம்...!

      நீக்கு
    10. அவள் பெயரைத் தற்போது சொல்வதற்கு இல்லை..//

      துரை அண்ணா இந்த வரி நம்ம அப்பாவியின் கண்களில் பட்டதென்றால் ஹா ஹாஹ் ஆ ஹா கலா அண்ணி என்று ஒரு கூவு கூவுவார்!!..ஹா ஹாஹ் ஆ

      ஹையோ துரை அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் பேசியிருபது தலையும் புரியலை காலும் புரியல ஹிஹிஹிஹி....செண்பகபாண்டியன்....நக்கீரர்....ஏதோ பூடகமாக....நானும் தத்தி தான் ஸ்ரீராம்...ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  24. கோடியக்கரை..

    புன்னகை சுமந்த
    பூங்குழலி நினைவுக்கு வருவாளே!...

    கோடியக்கரை குழகர் திருக்கோயிலில்
    அம்பிகையின் திருப்பெயர் -

    அஞ்சனாட்சி - மைத்தடங்கண்ணி...

    திருமால்பேறு எனும் தலத்திலும் அம்பிகைக்கு இதே திருப்பெயெர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூங்குழலி..... ம்ம்ம்.... அவள் ஏன் நினைவுக்கு?

      மைத்தடங்கண்ணி.. ஆஹா...

      எனக்கு நினைவுக்கு வந்த இளவரசி பெயர் (கற்பனையாய் இருக்கலாம்) 'மைவிழிச்செல்வி'. சாண்டில்யன் கதை!

      நீக்கு
    2. துரை சார்... 'மைத்தடங்க் கண்ணினாய் நீ உன் மணாளனை, எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண், எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்' - குத்துவிளக்கெரிய... திருப்பாவை நினைவுக்கு வரவில்லையா?

      நீக்கு
    3. நெல்லை ஹைஃபைவ்! மைத்தடங்கண்ணி என்றதுமே இந்தவரி உடனே நினைவுக்கு வந்தது...நீங்க சொல்லிருக்கீங்க..

      கீதா

      நீக்கு
    4. மைத்தடங்கண்ணி....

      நினைவுக்கு வந்ததது...

      அதற்குள் ஏதோ வேலை...

      நான் பாட்டுக்கு
      மைத்தடங்கண்ணி என்று எழுதப்போய்..

      அது யாரது... மைத்தடங்கண்ணி என்று யாராவது அப்பளக் குழவியுடன் வந்தால் என்ன செய்வது!?....

      நீக்கு
  25. பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி.. - என்ற
    பாடலில்

    பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி..
    - என்று

    தானும் உருகி நம்மையும் உருக்கி விடுவார் கவியரசர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..

      என்ன ஒரு பாடல் அது...

      தங்களின் மேல் பாசம் வைத்திருக்கும் அண்ணன்களுக்கான பாடல் வரிசையில் ஒன்று...

      நீக்கு
    2. பூ முடிப்பாள் பாட்டு ஆஹா செமையா இருக்கும் பாட்டு...அருமையான பாடல்...

      கீதா

      நீக்கு
  26. இன்னும் நிறைய இருக்கின்றன..
    இப்போதைக்கு இது போதும்..

    ஆனாலும் -
    செண்பகப்பாண்டியனுக்கு என்ன ஆயிற்று இன்றைக்கு!..

    பதிலளிநீக்கு
  27. என்ன ஸ்ரீராம்...

    காலையிலேயே
    மை போட்டு விட்டீர்கள்..
    கண்ணுக்குள் சிரிக்கின்றன
    கருமை விழிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...

      நினைவுக்கு கடலில் மிதக்க வைக்கின்றன மைவிழிகள்!

      அது சரி துரை ஸார்... நேற்றைய பதிவு.....

      நீக்கு
    2. //நினைவுக்கு கடலில்//

      நினைவுக் கடலில்....நினைவுக் கடலில்...

      grrrrr...

      நீக்கு
    3. ரசிக்க விட்டுப்போயிற்று...

      கண்ணுக்குள் சிரிக்கின்றன
      கருமை விழிகள்...

      கண்ணுக்குள் சிரிக்கின்றன
      கரு மைவிழிகள்...

      நீக்கு
    4. துரை அண்ணா உங்கள் கவி வரிகள் செமை!! கண்ணுக்குள் சிரிக்கின்றன கருமை விழிகள் அப்படினா அதுக்கு ஸ்ரீராம் சூப்பர் உங்கள் வரிக்ளும்...யப்பா என்னமா விளையாடறீங்க ரெண்டு பேரும்...!!!!!!!!!!!!!! ஒரு வார்த்தையை வைத்தே!!! கருமை கரு மை!!!!!! இதுபற்றி இங்கு அதிகம் பேசவில்லை...அப்புறம் சில ரகசியங்கள் வெளியாகிவிடும் ஹிஹிஹிஹி....(பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ரகசியம் என்னா அலட்டல் இந்த கீதாவுக்கு!!!!!)

      கீதா

      நீக்கு
  28. ஹலோ எவ்ரிபடி இனிய காலை வணக்கம். கொஞ்சம் பிஸி, அதற்குள் ஏகப்பட்ட பேர்கள் வந்து கருத்து மழை பொழிந்து விட்டார்கள்.
    இனிய பாடல். முன்பெல்லாம் சிறப்புத் தேன் கிண்ணம் என்று விவிதபாரதியில் வைப்பார்கள். அதில் சிவாஜி கணேசன் "ஒரு நாளிலே உறவானதே" பாடலை வைத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​இனிய காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
    2. பானுக்கா நானுமே இன்று லேட்டு வந்து பாத்தா அம்மாடியோவ்...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  29. ஸ்ரீவித்யா, ஜெயசுதா பாட்டில் ஒரு கண்ணும் மறுகண்ணும் பார்த்துகொண்டால்
    என்று ஒரு வரி வந்து உருக்கும்.அபூர்வராகங்கள்.

    பதிலளிநீக்கு
  30. எனக்கும் 'கண்ணுக்கு மை அழகு..' பாடல் தான் நினைவுக்கு வந்தது.
    துரை சார் சொல்லியிருக்கும் குறளும், 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடடித்தேன்..' பாடலில் வரும் அஞ்சன மையிடும் அம்பிகையே எம்பிரான்..' வரிகளும் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      காலையில் இனிய பாடலை நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்...

      ரஞ்சனியே ரட்சிப்பாய்..
      கெஞ்சுகின்றேன்... அம்மா!...

      நீக்கு
    2. ​வாங்க பானு அக்கா.... அடடே.... கற்பகவல்லி பாடலில் வரும் வரி இருக்கிறது இல்லை? ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகம்..​

      நீக்கு
    3. பா.வெ. மேடம்... உங்கள் எழுத்தில் குறை கண்டு எழுதக்கூடாது என்று தீர்மானித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது...

      'அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே' - முன்பெல்லாம் என்னால் பாட முடிந்த பாடல்

      நீக்கு
    4. பானுக்கா சூப்பர் பாட்டு சொல்லிருக்கீங்க....ஸ்ரீராம் ஆமாம் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகம் . என் அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடல். அவர் எப்போதும் பாடும் பாடல் இந்தப் பாடல். இந்தப் பாட்டை பாடும் போது கண்ணில் என்னை அரியாமல் தண்ணீர் வரும் அது போல ஸ்ரீ சக்ர ராஜ பாட்டிலும் ...
      அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான் பாருங்க இது நினைவுக்கு வரலியே சொல்ல.....

      கீதா

      நீக்கு
    5. //பா.வெ. மேடம்... உங்கள் எழுத்தில் குறை கண்டு எழுதக்கூடாது என்று தீர்மானித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது...// ஏன் அப்படி? நான் ஒரு தொட்டால் சுணுங்கி என்று நினைத்து விட்டீர்களே:(((

      நீக்கு
  31. சமீபத்திய பாடல் ஒன்றில் 'மை பூசும் கண்ணாலே பொய் பேசி போனாளே..'என்ற வரிகளை கேட்ட நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமீபத்திய பாடல் ஒன்றில்//

      பழைய வரிகளை காபி அடிச்சுட்டாய்ங்களா...

      நீக்கு
  32. காலச்சக்கரம் நரசிம்மா எதைத் தான் சொல்ல வில்லை?..

    பதிலளிநீக்கு
  33. பதில்கள்
    1. நன்றி DD. நேற்று பதிவில் உங்களைக் காணோமே...

      நீக்கு
    2. இரண்டு நாட்கள் கொடைக்கானல்... வரும் ஞாயிறு - புதன் : குற்றாலம்...!

      நீக்கு
    3. டிடி எஞ்சாய்!!!!!!

      வெயிலுக்கு இதம்!!

      கீதா

      நீக்கு
    4. திண்டுக்கல் தனபாலன் - நான் நேற்றைக்கு முந்தைய நாளில் குற்றாலத்தில் இருந்தேன். தண்ணீர் சுத்தமாக இல்லை. ஐந்தருவில, கொஞ்சம் (ஒரு நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர்) தண்ணீர் வந்தது. அவ்வளவுதான். மற்றபடி வெயில்.

      அங்க போனீங்கன்னா, நுங்கு, பலாப்பழம் சாப்பிடலாம். ரசனை இருந்தால் சித்திர சபை பார்க்கலாம். ஜூன் மழை வந்தபிறகுதான் குற்றாலம் களைகட்டும் என்று சொன்னார்கள்.

      நீக்கு
    5. DD... வாழ்க....

      கொடைக்கானல் பரவாயில்லையா? வெயிலாவது கம்மியாய் இருந்ததா? என்ஜாய்!

      நீக்கு
    6. நெல்லைத்தமிழன் ஐயா... வழக்கமாக அடுத்த மாதம் தான் செல்வோம்... அதுவும் அங்குள்ள நண்பர்கள் மூலம் கேட்டு கொண்டு செல்வோம்... ஆனால் இம்முறை ஒரு குழு மூலமாக செல்வதாக நிர்பந்தம்... அவர்களிடம் சொன்னாலும் கேட்கவில்லை...

      நீக்கு
    7. ஸ்ரீராம் சார்... கொடைக்கானல் மிகவும் அருமை... தங்கும் அறைகள் கிடைப்பதில் தான் சிரமம்... அதனால், ஒரு உயரமான இடத்தில்... ஆனால், தங்கின இடம் சூப்பரான இடம்...

      அனைத்தையும் விட ஒரு முக்கியமான விசயம்... அங்கு எந்த network-ம் கிடைக்கவில்லை... 7 கிலோமீட்டர் கீழ் இறங்கினால் தான் network... ஆனந்தம்... பேரானந்தம்... ஹா... ஹா...

      நீக்கு
  34. அம்மாடியோவ் இன்று சில வேலைகளில் மூழ்கி பையனுடன் நிறைய பேசிக் கொண்டிருந்ததில் இங்கு வர லேட்டானால் இம்பூட்டு கமென்ட்ஸ் இன்னிக்கு ஒவ்வொனா பார்க்கனும்...பாட்டு கேட்டுக் கொண்டே ...

    கண்ணுல மை பாடல்கள்...கண்ணுக்கு மை அழகு, இன்னொரு பாட்டு டக்கென்று இப்படித்தான் நினைவுக்கு வருது...யாரு வைச்ச மையு நான் வெச்ச மையி என்று வருமே அந்தப் பாட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நம்ம 'என்னடி முனியம்மா' பாட்டு!

      இன்னொருபாட்டு இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வருவது "மைவச்ச கண்ணம்மா.. வெக்கத்தைத் தள்ளம்மா..."

      நீக்கு
  35. ஸ்ரீராம் இந்தப் பாட்டு கேட்டப்ப உடனே இதே மெட்டில் அமைந்த வேறொரு பாட்டு டக்கென்று வந்தது...ஏன் இந்தக் கேள்வி அந்தப் பாடல் டக்கென்று வந்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை பாடலையா சொல்கிறீர்கள் கீதா? அப்படியா?

      ஆனால் ஆரம்ப இசை முடியும் கணம் கலாட்டா கல்யாணம் பாடல் நினைவுக்கு வந்தது எனக்கு..

      நீக்கு
  36. இந்தப் பாட்டு இப்பத்தான் கேட்கிறென் ஸ்ரீராம் நன்றாக இருக்கிறது...இருங்க மீண்டும் கேட்டுவிட்டு வருகிறென்...இன்னும் சொல்ல

    கீதா

    பதிலளிநீக்கு
  37. I think because people like Tamil Blog World exists ...otherwise it would have became extinct lang ago ..kudos

    பதிலளிநீக்கு
  38. சரணத்தில் தான் தொடங்குகிறது இல்லையா பாடல்...அழகாக இருக்கிறது...ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம். ரசித்தேன்....வரிகளும் நன்றாக இருக்கிறது.

    சரணத்தில் தொடங்குவதால் அதற்கு ஏற்றாற் போல் அழகான ஸ்டார்ட்டிங்க் இசை......டிஎம் எஸ் செமை....

    கீதா

    பதிலளிநீக்கு
  39. சரணங்கள் அசத்தல்..

    ஸ்ரீராம், பாலென்று சொன்னாலும் தேனென்று சொன்னாலும் // பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் நு பாட்டில் வருது/

    அப்புறம் கடைசி சரணத்தில் நீங்க கொடுத்திருக்கும் அந்த வரி பாடவில்லையே அவர்....பாடுவதில் என்கேள்வி சுகமென்று உனைக்கேட்பது
    நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதது / இதில் முதல் வரியோடு முடியுது

    அது போல மீண்டும் பல்லவி வரும் போது நாலாவது வரி இல்லையே பாடலில் ஒரு வரி வருது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் லிங்க் மாற்றி விட்டேன் கீதா.. இப்போ சரியாக இருக்கும். அதோடு வரிகளையும் திருத்தி விட்டேன்.

      நீக்கு
  40. பாட்ட்டுக் கேட்க மிக அருமையாக இருக்கிறது, படம் இன்னும் பார்த்ததில்லை, ஆனா நன்கு தெரிந்த பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பார்க்கவேண்டும் என்றெல்லாம் அவசியமா அதிரா? பாட்டை ரசித்தால் போதாது?

      நீக்கு
  41. https://i2.wp.com/78.media.tumblr.com/065cb9b0fce84eb1e97ff71a24a17871/tumblr_oqkxdlVH031vfbqwco1_400.gif?w=605&ssl=1

    hiiiii :) great uncle looks smart in this song without extra fittings :) wig and rice belly

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேக்கப் இல்லாமல் நடித்த படங்களில் ஒன்று ஏஞ்சல்... அல்லது அதிக மேக்கப்பில்லாமல்!

      நீக்கு
  42. கண், மை இவை பற்றி பாடல் தவிர சுஜாதாவின் வர்ணனை மறக்க முடியாதது. கொலையுதிர் காலம் நாவலில் ஒரு இடத்தில்,'பொய்யின்றி, மையின்றி இரண்டு கரிய சலனங்கள்' என்று எழுதியிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கொலையுதிர் காலம் நாவலில், ஓவியர் ஜெ. அவர்கள் வரைந்த ஓவியங்களைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை.

      நீக்கு
    2. ஆஹா... ஆமாம்... ஆமாம்.. அபார ஞாபக சக்தி உங்களுக்கு பானு அக்கா.. ரசிப்பவற்றை நினைவில் வைத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    3. நெல்லை.. கொலையுதிர்காலத்தில் எனக்கு கணேஷ்-வசந்தவாசனங்கள் பல நினைவில் இருக்கின்றன...

      "ஆ...கிள்றது... கிள்றது..."

      "டேய்... நான்தாண்டா..."

      நீக்கு
  43. 1. மை ஏந்தும் விழியாட... மலரே உன் குழலாட..
    2. கட்டழகன் கண்களுக்கு..மை எழுத்து எழுதட்டுமா...
    3. கண்ணுக்கு மை அழகு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாரதி... இரண்டாவது பாடல் இதுவரை சொல்லப்படாதது.

      நீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    பாடல் நன்றாக உள்ளது. இந்த பாடல் முன்பு ரசித்ததெனினும். இப்படி வார்த்தைகளை அக்கு வேறு ஆணி வேறாக பார்த்து படித்து, கேட்டு ரசித்ததில்லை. படமும் பின்னர் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். தியேட்டரில் அம்மா வீட்டவர்களுடன் இந்த படத்தை பார்க்கும் போது கதை புரியாத வயது.. ஹா ஹா ஹா.

    பாடலை விட கருத்துரைகளில் பதிந்த "பாட்டுக்கு பாட்டு" நன்றாக இருந்தது. ஒரு வரி விடாமல் படித்ததில் மையிடாத என் விழிகள் "சிவந்த மண்" மாதிரி சிவந்துதான் போய் விட்டன. சுவாரஸ்யமான பகிர்வு. ரசிக்க காரணமாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்குவேறு ஆணிவேராக...

      ஹா... ஹா... ஹா... கமலா அக்கா...

      பாட்டைப் பிச்சுப்புட்டேன்னு சொல்றீங்க!

      உங்களுடைய பின்னூட்டத்தையும் சேர்த்து பின்னூட்டங்கள்தானே நம் தளத்தின் சுவாரஸ்யம்!

      ஆமாம் நீங்க எப்போ அடுத்த கதை அனுப்பப் போறீங்க? சமையல் குறிப்பு?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      "அக்கு வேறு, ஆணி வேறு" என்பது என்னைப்பொறுத்த வரை எல்லாப் பாடல்களின் வரிகளையும் கேட்கும் போது, பல்லவி. அனுபல்லவி, சரணம் என அவ்வளவாக என் மனதில் நிற்காது. ரொம்பவும் மனசுக்கு பிடித்து போனால், அதையே முணுமுணுத்து கொண்டிருக்கும் போது. (முணுமுணுக்கத்தான் வேண்டும். சத்தம் போட்டு பாடினால் கேட்பவர்கள் அடிக்க வந்து விடுவார்கள். ஹா ஹா) அதுவாகவே மனனம் ஆகிவிடும். மேற் சொன்ன முறையில் தாங்கள் எல்லா பாடல்களையும் எழுத்து வடிவத்தில் கொடுத்திருப்பதை அப்படிச் சொன்னேன்.

      என்னுடைய பின்னூட்டமும் சுவாரஸ்யம் என்றதற்கு மனமார்ந்த நன்றிகள்.

      கதை என்ற பெயரில் இரண்டொன்று முன்பே எழுதி பாதியில் நிற்கிறது. அவைகளை முடிக்க நினைக்கிறேன். இடையில் என்னவோ சலனங்கள் வந்து ஆக்கிரமிப்பு செய்கின்றன. சமையல் குறிப்பும் அவ்வாறேதான் படங்களுடன் காத்திருக்கின்றன. தங்களுடைய ஊக்கமிகும் எழுதும் அழைப்புக்கு நன்றி. இந்த ஊக்கம் கேட்டு பழையன தொடராதிருக்க மறக்க முயற்சித்து வருகிறேன். ஆனால் முடியவில்லை. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சத்தம்போட்டு பாடினால் தானாகவே பாடல் வாய்வந்துவிடும்! (ஓவியம் வரையவரைய கைவந்துவிடும் என்பது போல) அதனால் தைரியமாகப் பாடுங்கள் கமலா அக்கா...

      பாதியில் நிற்கும் கதைகளை முடித்து அனுப்புங்கள். சமையல் குறிப்பையும் அனுப்புங்கள். என் மெயில் ஐடி நினைவிருக்கிறதுதானே?

      நீக்கு
  45. ஜூக் பாக்ஸ் தெரியுமா நாஙகள் ஹோட்டல்களில் நான்கணா நாணயம் செருகி விரும்பிய பாடல் கேட்போம் ஆனால் இங்கு ஸ்ரீராம் அவர் ரசித்த பாடல் களைப்போடுகிறார் பல நேரங்களில் நானும் ரசிக்கிறேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!