சங்கமித்ராவில் ஏறிக்கொண்டதும் ஒரு வாசனை வந்தது. நீண்ட நேரம் நிலைத்த அது செருப்புக்கடைக்குள் நுழைந்தது போல அல்லது கருவாட்டு வாசனை போலவும் அடித்துக்கொண்டிருந்தது. அப்புறம் அது பழகி விட்டதா, இல்லை அகன்று விட்டதா என்று தெரியவில்லை!
அவரவர் இருக்கையைத் தேடித் சென்றபோது எங்கள் இருக்கை ஒன்றில் ஒரு பெண் போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள். எழுப்பி எழுப்பிப் பார்த்தால் எழுவதாய்த் தெரியவில்லை. பிடிவாதத் தூக்கம் போலத் தோன்றியது! அத்தை அவள் தோள் தொட்டு உலுக்க, எழுந்த அவள் கண்களில் அவ்வளவு தூக்கமில்லை!
பின்னர் ஏற்பட்ட அனுபவங்களில் அவள் கல்லூரிப் பெண் என்பதும் அவள் தன்னுடைய தோழியின் சகோதரி திருமணத்துக்கு பெங்களூருவிலிருந்து ஜபல்பூர் செல்கிறாள் என்று தெரிந்தது. அவளைப்பார்த்தால் கல்லூரிப்பெண் போல தெரியவில்லை என்பது ஒருபுறம், அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பக்க இருக்கை அவள் உடல்வாகுக்கு சரிவரவில்லை என்பதால் எங்கள் பக்கம் இருக்கை காலியாயிருந்தால் அதை ஆக்ரமிப்பதில் ஆர்வமாயிருந்தாள். காலியாய்த்தான் இருந்தது. அது நாங்களே எதிர்பாராதது. எனினும் அவளை அங்கு விடவில்லை!
எங்கள் மாமாஒருவரை அங்கு வரவழைக்க முயன்ற முயற்சியும் பயனளிக்கவில்லை. எனினும் பயணத்தின் பெரும்பாலான நேரம் தூக்கத்திலேயே இருந்த அவளுக்கும் அது தெரியவில்லை!~ சாப்பிடவும், கழிவறை செல்லவும் மட்டுமே அவள் எழுந்தாள்!
இருக்கைக்கு அடியில் வைத்துவிட்ட அவள் காலணிகளை எடுத்துத்தரச்சொல்லி எண்களைக் கேட்டதும் நீயே எடுத்துக்கொள் என்றார் அத்தை. உங்கள்பெட்டியை வைத்து அதைப் பின்னால் தள்ளி விட்டீர்கள்... எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டு மேலும் எங்கள் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டாள்! ஏனெனில் அவள் செருப்பைத் தேடி எடுப்பது அவ்வளவு சிரமமாயிருந்தது!
இரவு ஏழரை மணிபோல இருவர் வந்தனர். அதில் ஒருவர் பிரசாந்த் என்பது பின்னர் தெரிந்தது. இப்போது சென்ற வார விமர்சனத்தில் கீதா அக்கா கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு மறந்துபோகும் முன்பு பதில்!
காசிப்பயணத்துக்கு மொத்தம் 80 பேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். எல்லோருமே வேறு வழி இல்லாமல் கூடூரில் வந்துதான் சங்கமித்ராவைப் பிடித்தார்கள். என் மாமாவின் நண்பர் அவர் மனைவி இருவரும்தான் இந்த ஜெயலட்சுமி டிராவல்ஸ்ஸில் முதலில் முன்பதிவு செய்து விட்டு, ஆறு டிக்கெட் இருக்கிறது, வருகிறீர்களா என்று மாமாவைக் கேட்க, அவர் எங்களைக் கேட்க, நாங்கள் ஆறுபேர் உறவினர்கள் சேர்ந்தோம். எனவே 80 பேர்கொண்ட மொத்தக்குழுவில் நாங்கள் ஆறுபேர் ஒரு குழு. ராமசுப்பு குழு என்று அறியப்பட்டோம்! அவர்தான் முதலில் சென்று முன்பதிவு செய்தவர். அவருக்கும் காசிப்பயணம் புதிது என்றாலும், அவர் திருமதிக்கு இது மூன்றாவது பயணம் என்று சொன்ன நினைவு.
பிரசாந்த்துக்கு வரும் முன்பு மேலும் சில விவரங்கள். நாங்கள் எட்டு பேர்கள் ஒரு குழு என்றாலும் எட்டு பேரும் இரண்டு கோச்சில் வெவ்வேறு இடங்களில் அமர வேண்டிய நிர்ப்பந்தம். அவ்வப்போது ஒவ்வொரு ஆளாகச் சேரச்சேர பயணச் சீட்டு முன்பதிவு செய்ததால் அப்படி அமைந்தது. அங்கு சென்று இருக்கை நிலவரங்கள் பார்த்து ஒன்று சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தது நடக்கவில்லை.
எங்களைத்தவிர மிச்ச 74 பேர்களும் யார் யார் என்றும் தெரியாது. கூடூர் ரயில் நிலையத்தில் ஓரிரு பேர்களைப் பார்த்திருந்தோம் என்றாலும் அவர்கள் முகம் மனதில் நிற்கவில்லை. அவர்கள் இந்த இரண்டு மூன்று கோச்சுகளுக்குள் விரவியிருந்தார்கள்.
பிரசாந்த்துக்கு வருகிறேன். குழு உறுப்பினர்கள் பெயர்ப் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு யார் யார் எங்கெங்கிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்ள வந்திருந்ததோடு,
அவர்கள் நிறுவன பெயர் போட்ட ஒரு கைப்பையையும் எல்லோருக்கும் கொடுத்தார்கள். எல்லாம் ஒன்று போலிருந்தாலும், இரண்டு நாட்களுக்குப்பின் சீனியர் சிட்டிசன்களுக்கு தரப்பட்டிருந்த சற்றே - சற்றுதான் - பெரிய பை என்று தெரிந்தது. எங்களைப்போன்ற சின்னப் பையன்களுக்கு சற்றே - சற்றுதான் - சிறிய பை!
எனக்கு அப்பர் பர்த் என்பதால் நான் உடனே மேலே ஏறி உட்கார்ந்துகொண்டு விட்டேன். பாதிப்படுக்கை ஸ்திதியில் இருந்து கொண்டேன். பேசுவதற்கு எனக்கு சரியான ஜோடி இல்லை ஆரம்பத்தில் என்று சொல்லலாம்.
அதற்கு முன் இரவில் கண்ணாடி வழியே எடுத்த ஒரு புகைப் படம்!
இவ்வளவு நுண்ணிய விவரங்கள் சொல்லிக்கொண்டு பயணக்கட்டுரை எழுதுவது சரியா என்று தோன்றுகிறது. படிப்பவர்களுக்கு போர் அடிக்கலாம். கீதா அக்கா இன்னும் ரயில் கிளம்பவே இல்லை என்று கிண்டல் அடிக்கும் அபாயமும் உண்டு! ஏதோ டைரி எழுதுவது போல எழுதிக் கொண்டிருக்கிறேன்.
உடன் வந்திருந்த கஸின் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இனிப்பு ஒன்றையும், மிக்ஸர் நிறையவும் கொடுத்துச் சென்றார். இரவு எட்டு நாற்பத்தைந்துக்கு சப்பாத்தியும், தக்காளி சட்னியும் வந்தது. பெயர் பார்த்தபடியே கையில் பேப்பர் தட்டைக்கொடுத்து பரிமாறினார்கள். நான்கு போட்டு விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து "இன்னும் பூரி வேண்டுமா?" என்று கேட்டபோது, என் கருத்து தவறு, அது சப்பாத்தி இல்லை, பூரி என்று தெரிந்தது.
எல்லோருக்கும் ரயில் பயணங்கள் தான் சௌகர்யம். எனக்கு மட்டும் ஏதோ ஒரு அலர்ஜி! அதில் திங்கள் காலை வரை இந்த ரயிலில்தான் கழிக்கவேண்டும் என்றால் கஷ்டமாக இருந்தது! (அது சனிக்கிழமை இரவு)
எல்லோரும் தூங்கும் நேரங்களில் கழிவறை வேலைகளை முடித்தேன். கழிவறைகள் சுத்தத்தின் சிகரங்களாய் இருந்தன. தண்ணீர் எப்போதுமே சிரமம் இல்லாமல் வந்துகொண்டிருந்தது.
ஒரு ரயில்வே அலுவலர் புதிய வெண்போர்வைகள் தந்து சென்றார். அவருடன் மறுநாள் பொழுது போகாத நேரத்தில் பேசிக்கொண்டிருந்தேன்.
===============================================================================================
நேற்று ஒரு பின்னூட்டத்தில் நெல்லைத்தமிழன் ஒரு கல்லில் பனிரெண்டு பதினைந்து தோசைகள் என்று சொன்னது படித்ததும் எனக்கு நான் முன்னர் எடுத்த புகைப்படம் நினைவுக்கு வந்தது. தேடி எடுத்துக் பகிர்கிறேன்.
இந்தப் படம் ஸ்ரீரங்கத்தில் எடுக்கப்பட்டது!
==================================================================================================
சென்னையில் வரலாறு காணாத வறட்சி. நிறைய பேர்கள் தண்ணீர் இல்லாத காரணத்தால் சொந்த வீட்டைக்கூட காலி செய்து விட்டு வாடகை வீட்டுக்குச் செல்கிறார்கள். (ஹிந்துப் பத்திரிகை லிங்க் கொடுத்திருக்கிறேன்)அங்கும் கூட எத்தனை நாட்களுக்கு தண்ணீர் வரும் என்பது நிச்சயமில்லை! அப்போது என்ன செய்வார்களோ... இப்போதாவது ஒரு பெருமழை வந்தாலொழிய மிகவும் சிரமப்படுவார்கள் மக்கள். மற்ற ஊர்களில் இல்லையா இந்தச் சிரமம் என்று கேட்பவர்களுக்கு... மற்ற ஊர்கள் பற்றி எனக்குத் தெரியவில்லை. மற்ற ஊர்களில் கொஞ்சமாவது சென்ற நவம்பர், டிஸம்பரில் மழைபெய்தது என்று நினைக்கிறேன்.
படம் : நன்றி இணையம்
தண்ணீர் லாரிகளுக்குச் சொன்னால்கூட ஒரு வரம் கழித்தே வரும் நிலை... எல்லா ஏரிகள், குளங்களும் வறண்டு விட்டன. செம்பரம்பாக்கமே வறண்டு விட்டது. இப்படி ஒரு வறட்சியை சந்தித்து வரும் நேரத்திலும், நமது பகுதிகளிலும் எப்போது தண்ணீர் நிற்குமோ என்கிற நிலையிலும் மக்களில் சிலர் தண்ணீரை வீண் செய்வது இருக்கிறது பாருங்கள்...
என்ன சொல்ல...
==================================================================================================
ஏன் சமையல் செய்யவில்லை என இனியும் கணவன்மார்கள் கேட்காமலிருப்பார்களாக....!
=========================================================================================================
நேற்றைய தினத்தில் நான்கு வருடங்களுக்குமுன் எழுதிய புதுமொழிகள்!
===================================================================================================
புதன் பதிவில் அவரவர்களை பொன்னியின் செல்வன் கதாபாத்திரமாகக் கற்பனை செய்தபோது கீதா ரெங்கன் ஆழ்வார்க்கடியானாக கோவை ஆவி நன்றாகக் பொருந்தி நடித்திருந்ததை நினைவு கூர்ந்திருந்தார். நேற்று எதையோ தேடும்போது அவர் படம் சிக்க, அதையும் எடுத்துக் பகிர்ந்திருக்கிறேன்!
புதன் பதிவில் அவரவர்களை பொன்னியின் செல்வன் கதாபாத்திரமாகக் கற்பனை செய்தபோது கீதா ரெங்கன் ஆழ்வார்க்கடியானாக கோவை ஆவி நன்றாகக் பொருந்தி நடித்திருந்ததை நினைவு கூர்ந்திருந்தார். நேற்று எதையோ தேடும்போது அவர் படம் சிக்க, அதையும் எடுத்துக் பகிர்ந்திருக்கிறேன்!
இன்று பின்னூட்ட விடுமுறையா!
பதிலளிநீக்குஆமாம் போல... எனக்கும் தனியா இருக்க பயமா இருந்தது. போயிட்டு இப்பதான் வர்றேன்!!!
நீக்குஅட்்்இன்னும் யாரும் வரலையா? காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம். யாரையும் காணோம் நெல்லை!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகாலை வணக்கம் கோமதி அக்கா.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஎன்ன இன்னும் யாரையும் காணோம்? அனைவருக்கும் நல்வரவு. கோவை ஆவியை ஆழ்வார்க்கடியானாகச் சொன்னது நான் தான் என்பதைத் தாழ்மையுடன் நினைவூட்டுகிறேன்.
பதிலளிநீக்குகீதாக்கா ஆமாம் ஸ்ரீராம் என்னைச் சொல்லிவிட்டார்....இப்பத்தான் அந்த வரியில் என் பெயரையே பார்த்தேன்....அப்புறம் யோசித்தேன் நான் சொல்லவில்லையே என்று. யோசித்தி யோசித்துப் பார்த்தேன் கீதாக்காவாக இருக்கும் மாறிடுச்சு என்று பார்த்தால் நீங்க இங்க சொல்லிட்டீங்க
நீக்குஆவி நன்றாகவே பொருந்துவார். அப்போது அவசர அவசரமாக கமென்ட் போட்டு போய்ட்டேன்...
கீதா
//கோவை ஆவியை ஆழ்வார்க்கடியானாகச் சொன்னது நான் தான் என்பதைத் தாழ்மையுடன் நினைவூட்டுகிறேன்.//
நீக்குஅக்கா.. உரிமையாக தலையில் குட்டி நினைவூட்டுங்கள். என் கவனக்குறைவு, மறதிதான் காரணம். மன்னிக்கவும்!
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr @Sriram :))))))
நீக்கு:))))))))))))
நீக்குமற்றவை பின்னர். இப்போக் கொஞ்சம் வேலை இருக்கு.
பதிலளிநீக்குபயணத்தில் கல்லூரி பெண் கொடுத்த தொந்திரவின் உச்சம் செருப்பை எடுத்து தரச்சொன்னது.
பதிலளிநீக்குhttps://www.facebook.com/vikatanweb/videos/2265820060132095/
இன்று காலைதான் தண்ணீர் பஞ்சத்தைப்பற்றி படித்து வருத்தப்பட்டேன். புள்ளி விவரங்களுடன் எல்லாம் சொன்னார்கள். ஆழ ஆழ பூமியை தோண்டிக் கொண்டு போனால் நிலமை என்னவாகும் என்றார்கள்.
தண்ணீர் வீணாகி வழிந்து போவதை படம் எடுத்து இருந்தேன் கிருத்திகை அன்று கோவில் போன போது.
ராமநாதபுரத்தில் மக்கள் ஊற்று தோண்டி அதில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் எடுக்கிறார்கள். அவர் அவர் தோண்டும் ஊற்றை முள் வேலி போட்டு துணிகளால் மறைத்து கதவு போட்டு பூட்டி வைத்து இருக்கிறார்கள். நிலமை பயத்தை தருது.(தொலைக்காட்சியில் பார்த்தது)
எங்களுக்கு குடித் தண்ணீர் விலைக்கு வாங்கி தான் தருகிறார்கள். மாதா மாதம் தண்ணீருக்கு அதிக காசு கொடுக்கிறோம்.
கோடை மழை பெய்தால் தான் விமோசனம். இரண்டு நாள் மழை பெய்து விட்டு போனது.
வாங்க கோமதி அக்கா.. முதலில் முறைத்து மறுத்தாலும் செருப்பைக் கஷ்டப்பட்டு காலை உள்ளே நீட்டி எடுத்துக்கொடுத்தது என் அத்தை. அவர் நியாய தர்மங்கள் நிறைய பார்ப்பார். நாம் பெட்டியை வைத்ததனால்தான் அது உள்ளே சென்று விட்டது என்றார். மாமா, "செருப்பை வெளியில் தெரியும்படி வைக்க வேண்டியதுதானே?" என்றார். அப்படி வைத்துக் காணாமல் போய்விட்டாள்? நாமே என்ன செய்வோம்?" என்றார் அத்தை!
நீக்குவிகடனிலும் தண்ணீர்க்கட்டுரை போட்டிருக்கிறார்களா? படிக்கிறேன் அக்கா.
அடி வாங்கி வந்த நிலையை காட்டும் படத்தில் கூடையில் அப்பளக்குளவி இருக்கே!
பதிலளிநீக்குமீண்டும் ஏதாவது பேசினால் அடிக்கவா?
ஹா... ஹா... ஹா... நீங்கள் சொன்னதும்தான் நான் பார்த்தேன் கோமதி அக்கா. பயங்கர ஆப்சர்வேஷன் உங்களுக்கு!
நீக்குபுது மொழிகளை எழுத யோசித்து தான் உங்களுக்கு தலைவலி என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா...
நீக்குபெரிதாக யோசிக்கவில்லை கோமதி அக்கா. அப்போ சட்டெனத் தோன்றியவை. அவ்வளவுதான். பாருங்கள் பழசு! அதுவே அதற்கு முதல் நாள் முதல் பாகம் வந்திருந்திருக்கும்! மெமரிஸ் செக்ஷனில் நான் முதல் நாள் கவனிக்கவில்லை!
கோவை ஆவி ஆழ்வார்க்கடியானாக பொருத்தம் தான்.கொஞ்சம் குள்ளமாக, முன் குடுமி வைத்தால் மிக பொருத்தம்.
பதிலளிநீக்குஆமாம் அப்போது இன்னும் மிகப் பொருத்தம். அபப்டி அமைவதும் கடினம்தானே? கேஜிஜி முகநூலில் இந்தப்பதிவைப் பகிர்ந்த இடத்தில ஆவி பதிவைப் படித்து விட்டதாய்ச் சொல்லியிருக்கிறார்.
நீக்குபயணக்கட்டுரை சுவையாக இரசிக்கும் விதத்தில் உள்ளது. தயக்கமே வேண்டாம். விரிவாக எழுதவும். பயணக்கட்டுரைகளின் வெற்றி எங்கே இருக்கிறது என்றால், பயணிப்பவர் பார்வையில் படுகின்ற பல விஷயங்களை அவர் வார்த்தைகளில் வடிப்பதைப் படிப்பவர்கள், 'அட! நமக்கும் இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கிறதே! அதை இவர் சுவையாக எழுதியிருக்கிறாரே' என்று வியக்க வைப்பதுதான்.
பதிலளிநீக்குகேஜிஜி சார் சொன்னது சரியான கருத்து (உலக அதிசயமாக பிறர் இடுகைக்கு கருத்து போட்டிருந்தாலும்). நெடுக எழுதுவது படிக்க ரசனையாத்தான் இருக்கு. பாருங்க.. எனக்கு பூரிகிழங்கா என்ற சந்தேகம் வந்தது. அடுத்து தக்காளிச் சட்னியில் வெங்காயம் போட்டிருந்தார்களா என்ற சந்தேகம்.
நீக்குஅடடே... கேஜிஜி... எதிர்பாராத ஊக்கம், பாராட்டு. நன்றி.
நீக்குநன்றி நெல்லைத்தமிழன்! உங்கள் சந்தேகம் (பூரியா, சப்பாத்தியா) சந்தேகம் சரியே... அவர்களும் ரயில் பயனத்தில் வேறு என்னதான் செய்வார்கள்? உட்கார்ந்து சமைக்க இடம் இருக்காது அல்லவா? இதை வைத்து மறுநாள் அவர்கள் என்னென்ன காலை, மதியம் தருவார்கள் என்று நாங்கள் சரியாகவே கெஸ் செய்துவிட்டோம்!
நீக்கு//அடுத்து தக்காளிச் சட்னியில் வெங்காயம் போட்டிருந்தார்களா என்ற சந்தேகம்.//
போட்டிருந்தால் நன்றாக இருந்திருந்திருக்கும்!!!
கௌ அண்ணா ரொம்பச் சரியே....அப்படி நுணுக்கமாக எழுதுவதுதான் நல்லது ஸ்வாரஸ்யமாகவும் இருக்கிறது...
நீக்குகுழுவாக ஒரே இடத்திற்குப் பயணித்தாலும் ஒவ்வொருவர் பார்வை, அனுபவம் வித்தியாசமாகத்தான் இருக்கும். ரசிப்பது உட்பட...
எனவே நானும் ஓட்டுப் போடுகிறேன் ஸ்ரீராமுக்கு!!
கீதா
முயற்சிக்கிறேன் முடிந்தவரை! பயணத்தின் பிற்பகுதியில் அவசரத்தில் நிறைய நினைவில் இல்லை! எழுதி வைத்துக்கொள்ளவும் நேரமில்லை.
நீக்குஉங்கள் பாணியில் நீங்கள் எழுதுங்கள். ஆனால் அவர் பிரசாந்தா? பிரசாத்தா? என்று கூறி விடுங்கள்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.
நீக்குநன்றி.
அவர் ப்ரசாந்த்தான்!!
ஸ்ரீராம் முதலில் நீங்கல் ப்ரசாந்த் என்று போட்டிருப்பதைப் பார்த்து ஆஹா ஒரு வேளை நடிகர் ப்ரசாந்து வந்துவிட்டாரா? இங்கு எதற்கு அதுவும் அவரெல்லாம் இப்படியா பயணிப்பார் என்றும் தோன்றியது அப்புறம் ப்ரசாத் என்று சொன்னதும் ஓகே அந்த ப்ரசாந்த் இல்லை நு புரிந்தது ..!!!!!!!!!!!
நீக்குகீதா
சென்ற வார பதிவில் இவர் புப போட்டிருக்கிறேன் பாருங்கள் கீதா!
நீக்குஶ்ரீரங்கம் கோவில் மடப்பள்ளியில் இருக்கும் தோசைக்கல் மிகவும் பிரபலம். அது குறித்து ஒரு சொலவடை கூட உண்டு.
பதிலளிநீக்குஎன்ன சொலவடை பானு அக்கா?
நீக்குஆனால் இது ஸ்ரீரங்கம் கோவில் தோசைக்கல் அல்ல!
ஶ்ரீரங்கம் கோவில் தோசைக்கல் இல்லை என்பது தெரியாதா?. அதில் ஒருவர் மாவை ஊற்றிக் கொண்டே வர, இன்னொருவர் எண்ணெய் ஊற்றுவாராம். மூன்றாவது ஆசாமி தோசையை எடுத்து விடுவாராம்.
நீக்குஎல்லோருக்கும் வணக்கம்!
பதிலளிநீக்குவந்துவிட்டேன் ஸ்ரீராம். காலையில் வெங்கட்ஜி தளத்தில் கருத்து போடும் போதே பிரச்சனை தொடங்கியது. அப்புறம் துரை அண்ணாவின் தளம் போய் விட்டிருந்த பதிவுக்கு துளசி அனுப்பியிருந்த கருத்தையும் போட்டு பப்ளிஷ் செய்ய பார்த்தால் பாதி தங்கிலிஷிலும் பெயர்கள் கன்னாபின்னாவென்று ஆங்கிலத்திலும் என்று என்னெனாவோ வந்து பப்லிஷ் ஆகாமல் நின்று அப்புறம் காணாமல் போய் என்று கணினி ஹேங்க் ஆக....எபி ஓபனே ஆக மாட்டேன் என கணினியை நான் மூடிவிட்டு இப்போதுதான் வர முடிந்தது.
பதிவும் பின்னர் வாசித்துவிட்டு வருகிறேன்...
ஆமாம் ஆவி ஆழ்வார்க்கடியானாக நன்றாகப் பொருந்துவார். இது துளசியின் குறும்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரம்...
ஆவி இப்படிச் சொல்லியிருப்பதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்.
கீதா
வாங்க கீதா ரெங்கன்.. வெங்கட் தளத்தில் உங்கள் கமெண்ட் பார்த்துவிட்டு, இங்கு காணோமே என்று நானும் நினைத்தேன். சமயங்களில் கணினி ரொம்பப் படுத்துகிறது!
நீக்கு//ஆவி இப்படிச் சொல்லியிருப்பதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்.
//
பார்த்து விட்டாராம். கேஜிஜியின் இந்தப் பதிவு பற்றிய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் சொல்லி இருக்கிறார்!
சூப்பர்!!! ஸ்ரீராம்
நீக்குகீதா
நீண்ட நேர இரயில் பயணங்கள் அலுப்புத் தரக் கூடியவை. பல முறை தனியாக, இப்படி தில்லி - சென்னை - தில்லி பயணங்கள் செய்தது உண்டு. அப்போது எல்லாம் தூக்கம்/படுக்கை தான் பிரதானமான நேரப் போக்கு வழி!
பதிலளிநீக்குசில சமயங்களில் படுத்தலான சக பயணிகள் வந்து விட்டால் திண்டாட்டம் தான்! :)
தொடர்ந்து வலைப் பக்கம் வர இயலாத சூழல். விடுபட்ட பதிவுகளை விரைவில் படிக்க வருவேன்!
வாங்க வெங்கட்... நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். பொழுது போகவேண்டுமே என்கிற கவலை இருந்தது. ஒரு வழியாய்க் கடந்து விட்டேன்!
நீக்கு//தொடர்ந்து வலைப் பக்கம் வர இயலாத சூழல். விடுபட்ட பதிவுகளை விரைவில் படிக்க வருவேன்!//
வாங்க... வாங்க!
இனிய காலை வணக்கம் அனைவருக்கும். சென்னைத் தண்ணீர்ப் பஞ்சம்
பதிலளிநீக்குமிகக் கொடுமை.
உங்கள் பயணம் இந்தப் பொண்ணு கொடுத்த தொந்தரவோடு
ஆரம்பித்ததா.
கேட்கவே சங்கடமாக இருக்கிறதே. பொதுவாக
நீங்கள் பயணத்தில் தூங்கவே இல்லை என்று எனக்குத் தோன்றியது.
ஆன்லைனில் அரட்டை தொடர்ந்தது உங்களோடு வந்தது போல
ஒரு தோற்றம்.
அத்தையம்மாவுக்கு நன்றி.அந்தப் பெண்ணை தட்டி எழுப்பியதற்காக.
ஆவி பாந்தமாக இருக்கிறார் ஆழ்வார்க்கடியான் வேஷத்தில். ஆனால் இன்னும் கொஞ்சம் வெயிட் போடணும்,
//கந்தலானால் தூக்கி எறி.கூழனால் போஸ்டர் ஒட்டு// சூப்பர்.
கணவன் வெட்டுப்பட்ட சம்பவம் பயங்கரம்.
பயணச் செய்திகள் போதாது. இன்னும் படங்களும் எழுத்தும் வேண்டும்.
ரிக்வெஸ்ட் சார்.
வணக்கம் வல்லிம்மா...
நீக்குசென்னை காணாத தண்ணீர்ப்பஞ்சம் என்று நினைக்கிறேன். திண்டுக்கல்லிலும் இதே நிலை என்று இன்றைய செய்தித்தாளில் படித்தேன். குடிநீர்ப்பஞ்சம் என்று சொல்லக்கூடாது. தண்ணீர்ப்பஞ்சம்!
பெண் தொந்தரவு பெரிய தொந்தரவு இல்லை அம்மா.. அவள் என் இருக்கையிலும் தூங்கவில்லை!
ஆமாம்.. அப்போது தூக்கம் வராததால் நாம் எபி வாட்ஸாப் க்ரூப்பில் 'சாட்'டிய நினைவு!
பாராட்டுகளுக்கு நன்றி. அப்பர் பெர்த்திலிருந்து நான் இறங்கிய நேரம் கம்மி. என்ன பாடம் போடுவது அம்மா?!!!
ப க பிரமாதம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி அம்மா.
நீக்குதண்ணீர் பஞ்சம் தமிழகம் முழுவதுமே பரவலாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குகில்லர்ஜி... வாக்குக்கு 2000ரூ வாங்கினவங்களுக்குப் பிரச்சனை இல்லை. நமக்குத்தான் பிரச்சனை... நேற்று எங்கள் வளாகத்தில் செடிகளுக்கு ஏராளமாக நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார்கள். கம்ப்ளெயின்ட் பண்ணலாமான்னு நினைத்தேன்.. பிறகு, மரங்களும் பாவம்தான் எனத் தோன்றியது... சென்னையில் ஒரு மாத delay தண்ணீர் கொண்டுவந்து தருவதில்.
நீக்குஉண்மைதான் கில்லர்ஜி. ஆனால் மற்ற ஊர்களில் / தென்மாவட்டங்களில் ஓரளவுக்காவது பெய்த மழை சென்னையில் பெய்யவே இல்லை என்பது சோகம். எப்போதோ சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீர் காலியாகிக்கொண்டிருக்கிறது.
நீக்குநீதிமன்றம் கூட தமிழக அரசை தண்ணீரை எதிர்காலத்தில் கேப்ஸ்யூலில்தான் பார்க்கும் நிலை வரப்போகிறது... அணை கட்டி சேமிப்பது எல்லாம் எப்போது என்று கேட்டிருக்கியது.
அதே... அதே நெல்லை. இந்த செடி மரங்களுக்கு நீர் பாய்ச்சுகிறேன் என்று ஹோஸ்பைப்பை வைத்துக் கொண்டு நிற்பவர்களை பார்க்கும்போது எனக்கும் மனம் பதறும்! குளியலறைக் கழிவு நீர், சமையலறையிலிருந்து வெளியாகும் நீர் ஆகியவற்றை வைத்தே சமாளிக்கலாம் என்று தோன்றும்.
நீக்குஹையோ ஸ்ரீராம் னீங்க சொல்லிருக்கறதுதான் நான் காலைல நெல்லைக்கு டைப்பி அது கணினி படுத்தி போகலை...இருங்க வேர்ட்ல இருக்கு அதை எடுத்து இங்கு போடறேன்...
நீக்குநெல்லை வளாகத்தில் செடிகளுக்குத் தண்ணீர் விடுவது முடிந்தால் சஜஷன் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் அரிசி, காய் கழுவும் தண்ணீரை சேர்த்துச் செடிகளுக்குக் கொட்ட. (சோப் தண்ணீர் கூடாது...) மக்கள் ஒத்துழைத்துக் கொடுப்பார்கள் என்றால் நல்லது. நான் ரொம்ப ஓவரா சொல்றேனோ ஹா ஹா ஹா ஹா. வேறு ஒன்றுமில்லை என் சொந்தக் கதை சோக்க் கதை நினைவுக்கு வந்துருச்சு அதான்…ஹிஹிஹி
கீதா
சோப் தண்ணீர் கூடாது. சரி. சொட்டுநீர்ப்பாசனம் போலச்செய்யலாம்.
நீக்குபயணக்கட்டுரை ரொம்ப நல்லாப் போகுது.. வாரம் ஒருமுறை எழுதறீங்க. சில கட்டுரைகளுக்கு அப்புறம் எழுத போரடித்து இல்லை சோம்பேறித்தனத்தினால் விடிவிடுவென சுருக்கமா எழுத ஆரம்பித்துவிடுவீர்களோ என்ற சந்தேகம். பார்க்கலாம்.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி நெல்லை.
நீக்கு//சில கட்டுரைகளுக்கு அப்புறம் எழுத போரடித்து இல்லை சோம்பேறித்தனத்தினால் விடிவிடுவென சுருக்கமா எழுத ஆரம்பித்துவிடுவீர்களோ//
எனக்கே அந்த பயம் இருக்கிறது!
"கழிவறைகள் சுத்தத்தின் சிகரங்களாய் இருந்தன. தண்ணீர் எப்போதுமே சிரமம் இல்லாமல் வந்துகொண்டிருந்தது."
பதிலளிநீக்கு.
இது கிண்டலா அல்லது உண்மையிலேயே சுத்தமாக இருந்திச்சா ?
பெயரிலா யார் என்று தெரியவில்லை. ஆனால் நான் கிண்டல் செய்யவில்லை. நிஜம்தான்.
நீக்குஇடத்தைப் பிடித்துக்கொண்டு பெண் செய்த அடாவடி... ஆஹாஹா... பெங்களூர் பயணத்தில் ஒரு பெண் என் இடத்தை மாற்றிக்கொள்ளும்படிச் சொன்னாள். நான் இதற்கெல்லாம் ஒத்துக்கொள்வதில்லை. பொதுவா இரயில் எனக்குமே இடமாறுதல் செய்துகொள்ளத் தோணாது. அப்பர் பெர்த் என்றால் அதுவும் ஓகே.. சைடு பெர்த் என்றால் அதுவும் ஓகே. என் மனைவிக்குதான் கதவு அருகில் இருந்தால் டாய்லெட் ஸ்மெல் என்று பிடிக்காது. எனக்கு வாசனை போனதில் இது ஒரு சௌகரியம்...ஹாஹா
பதிலளிநீக்குசைட் பெர்த்தில் சிலருக்கு உயரம் பத்தாது. உயரமானவர்களுக்கு அது சரிப்பட்டு வராது. ஆனால் இந்தப்பெண் அப்படி உயரமுமில்லை. ஆம், டாய்லெட்டுக்கு அருகில் இருந்தால் அது தனித்தொல்லைதான்!
நீக்குநெல்லை தம்பியும், அக்காவும் இல்லை இல்லை இல்லை இல்லை....அண்ணனும் தங்கையும் (ஹிஹிஹி....ஹைஃபைவ் சொல்லிக்கலாம்...நமக்கு எந்த ஸ்மெல்லும் தெரியாதது என்னா சௌகரியம் பாருங்க!!! ..
நீக்குகீதா
நீங்கள் பகிர்ந்த தோசைக்கல் சிறியதுதான்... ஸ்கூல் காலத்தில் ஹாஸ்டலில் இருந்தேன். (கல்லூரிகளிலும்தான்). ஒரு கல்லில் 30 தோசைகள்வீதம் கடகடவென வார்ப்பார்கள். 200+பேருக்கு, கிட்டத்தட்ட ஆயிரம் தோசைக்குமேல் வார்க்கணும். 9ம் வகுப்பு ஹாஸ்டலில் வெள்ளியன்று ஒருஒருக்கு 6-7 சப்பாத்திகள் வீதம், 200+ பேருக்கு அதிகாலையிலிருந்து இட ஆரம்பிப்பார்கள்.
பதிலளிநீக்குஇந்த ஹாஸ்டல் தோசை அளவு பற்றிதான் முன்னரும் இதே படத்துக்கு நீங்கள் கமெண்ட் போட்டிருந்தீர்களோ நெல்லை? படித்த நினைவாய் இருக்கிறது!
நீக்குபயண உணவில் இனிப்பு (அவர்கள் கொடுப்பது) இன்னும் வரலை... அது சரி... சென்னைக்கு அருகில்தானே இன்னும் இருக்கிறீர்கள்... ஹாஹா
பதிலளிநீக்குஆம், அவர்கள் முதல் உணவில் ஒரு ஸ்வீட் கொடுத்தார்கள். அப்புறம் ரயில் பயணத்தில் தரவில்லை.
நீக்குஒரு முறை ஐஆர்சிடிசியின் "பாரத் தர்ஷன்" பயணத்திட்டத்தில் ட்ராவல்ஸ் டைம்ஸ் மூலம் பயணித்துப் பாருங்கள். தினம் ஒரு ஸ்வீட் உண்டு. ரயிலிலேயே சமைத்துச் சுடச் சுடப் போடுவார்கள். சமையல் செஃப், மற்றும் உதவியாளர்கள், மளிகை சாமான்கள், காய்கறி, பால், தயிர் என சேமித்து வைத்து ஆங்காங்கே தங்குமிடங்களிலும் சூடாக சமைத்துப் பரிமாறுவார்கள். அவ்வப்போது சமைப்பது தான். இதைப் போல் கொண்டு வந்தெல்லாம் இல்லை! கேழ்வரகு புட்டு எல்லாம் பண்ணிப் போட்டார்கள்.
நீக்கு//ஒரு முறை ஐஆர்சிடிசியின் "பாரத் தர்ஷன்" பயணத்திட்டத்தில் ட்ராவல்ஸ் டைம்ஸ் மூலம் பயணித்துப் பாருங்கள். //
நீக்குசெய்துட்டாப் போச்சு... கொஞ்ச காலம் போகட்டும்!
சென்னையில் இரு நாட்களுக்கு முன் மழை பெய்தது பொல் இருக்கிறதேபெய் எனப் பெய்யும் மழை என்று சொல்லக் கூடியவர்கள் சென்னையில் இல்லைதான் பிரயாணக் கட்டுரைகளெழுதுவது அவரவர் பாணியில்தான் இருக்க வேண்டும்
பதிலளிநீக்கு////..பெய் எனப் பெய்யும்....///
நீக்குஎதற்காக இது?..
பெய் எனப் பெய்யவில்லை ஜி எம் பி ஸார்... சென்னைக்கு வெளியே திருவள்ளூர் போன்ற ஓரிரு இடங்களில் சிறுமழை இருந்தது என்று கேள்விப்பட்டேன்.
நீக்குபடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் செருப்புகளை சீட்டுக்குக்கீழே அடி ஆழத்தில் தள்ளிவிட்டது பெருந்தப்பு. அதற்கும் மேல், தூங்கமுயற்சித்துக்கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்ணை, தட்டி எழுப்பிய பாவம் உங்களை சும்மா விடாது. இதற்காக தனியாக தீர்த்த யாத்திரை செல்லவேண்டிவரும்..
பதிலளிநீக்குஇதென்ன... காலையிலேயே துர்வாசர் சாபம்... அடுத்த தீர்த்த யாத்திரைக்கு ஏகாந்தன் சார் ஸ்பான்ஸர்ஷிப்பா?
நீக்குஅடுத்தவங்களோட சீட்டுல தூங்குகிற மாதிரி நடித்துக் கொண்டிருந்தாள்னு எழுதியிருக்கிறாரே
//..தூங்குகிற மாதிரி நடித்துக் கொண்டிருந்தாள்னு எழுதியிருக்கிறாரே//
நீக்குஅது அவர் வர்ஷன்!
சரி, எழுப்பிவிட்டுவிட்டீர்கள்.. ஒரு சின்ன இண்டர்வியூவாவது அந்தப் பெண்ணை எடுத்திருக்கவேண்டாம்? அப்போதானே எபி வாசகர்களுக்கு ’அவள் வர்ஷன்’ என்ன என்பது தெரியவரும்! பார்த்தால், கல்லூரி மாணவியைப்போல் தெரியவில்லை என்கிறார். இவர்தான் பூரியை கையில் வைத்துக்கொண்டு சப்பாத்தி என நினைத்தவராயிற்றே!
வாங்க ஏகாந்தன் ஸார்... அந்தப்பெண் எப்போது பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருந்திராமல் இருந்திருந்தால் ஒருவேளை பேட்டி எடுத்திருப்பேன்!
நீக்குநீங்களே சொல்லுங்கள்... படத்தில் இருப்பதைப் பார்த்தால் பூரி மாதிரியா தெரிகிறது?
அன்பின் வணக்கம் அனைவருக்கும்....
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... தாய்நாடு சேர்ந்தாச்சா?
நீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குநான் இங்கே அபுதாபியில் இருக்கிறேன்..
அச்சச்சோ.... ஆனால் வந்து கொண்டிருக்கிறீர்கள்... சரிதானே?
நீக்குஅபுதாபியில் மகன் வீட்டில் இருக்கிறீர்கள் என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன்.
நீக்குஸ்ரீராம் பயணக் கட்டுரை நன்றாகத்தானே போகிறது. என்ன குறைச்சல். மைன்யூட் டிடெய்ல்ஸ் என்றெல்லாம் இல்லையே...உங்கள் நடை வண்டி இது இப்படியே வண்டி போகட்டும்....ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஅது என்ன ஸ்வீட்டோ?
கீதா
நன்றி நன்றி கீதா ரெங்கன். அவர் தந்த ஸ்வீட் சூர்யகலாவோ, சந்திரகலாவோ! அது ஒரு அளவுக்குமேல் சாப்பிட முடியாதே.. (என்னால்)
நீக்குவிளக்க்க்கமான பயணம்...
பதிலளிநீக்குபுதுமொழிகளை ரசித்தேன்...!
ஆவி சூப்பர்...!
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
நீக்கு/// ஏரி குளங்கள் வறண்டு விட்டன..////
பதிலளிநீக்குவறளச் செய்து விட்டார்கள் - அந்தப் பகுதி மக்கள் (!?)...
ஆம். எல்லாப்பகுதியிலும்!
நீக்குபூரி ( சப்பாத்தி) தக்காளிச் சட்னி!..
பதிலளிநீக்குபயங்கர வஸ்துவாக இருக்கிறதே!..
நீங்களாவது புரிந்துகொண்டீர்களே...!
நீக்குகண்ணாடி வழியே எடுத்த படம் மாலைச்சூரியனா? அழகு.
பதிலளிநீக்குஆமாம் அக்கா... அது மாலைச்சூரியன் இல்லை என்று நினைக்கிறேன். நிலா என்று நினைவு.
நீக்குபின்னர் யோசித்துப் பார்த்ததில் அது மாலைச்சூரியன்தான் என்று நினைவுக்கு வந்து விட்டது.
நீக்குஅந்தப் பெண் ஹா ஹா ஹா நல்லாவே கமான்ட் செய்திருக்கா. க்
பதிலளிநீக்குசில மாதங்களுக்கு முன் பங்களூரிலிருந்து சென்னைக்குப் போனப்ப அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்ல போக வேண்டியதானது. அப்ப மேலே ஒருவர் உட்கார இடம் இருக்க அங்கிருந்தவர்கள் என்னை அனுமதிக்க, கீழே இருந்தவரள் செருபை கீழே வைத்துவிட்டு ஏறச் சொல்ல...எனக்கோ பயம் எள்ளு போடக் கூட இடமில்லை செருப்பு இருக்க வேண்டுமே என்று. ஆனால் செருப்போடு உடக்காரக் கூடாது என்று சொல்லவே, ஏறி உட்கார்ந்தென். என் செருப்பு கீழே. அது அடியில் எங்கோ தள்ளப்பட்டது அத்தனை கூட்டம். எனக்கோ என் செருப்பு கிடைக்க வேண்டுமே என்ற கவலை. கீழே அமர்ந்திருந்த எந்தப் பெண்மணி செருப்பை கீழே போட வேண்டும் என்று சொன்னாரோ அவரிடம் என் செருப்பு அங்கு தென்படுகிறதா என்று கேட்டாலும் அவரோ எல்லாம் இங்க தாம்மா இருக்கும்...என்று சொல்லவே என்னால் கீழ இறங்கவும் முடியாது இடமே கிடையாது இறங்கக் கூட. இறங்கினால் நம் இடம் போய்விடும். சரி போனா போகுது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அப்புறம் அரக்கோணம் வந்ததும் கொஞ்சம் கூட்டம் குறைய, நான் இறங்கி தேடிநால் காணவில்லை...அது ஒருலக்கேஜின் பின்புறம் ஒளிந்து கொண்டிருக்க தேடி எடுத்துக் கொண்டு ஏறி ஒரு பேப்பரில் சுற்றி வைத்துக் கொண்டேன்.அருகில்.
கீதா
அப்போ கீதா ரங்கன் கோவிலுக்குப் போனால் தீப ஆரத்தி காண்பிக்கும்போது வேற வேண்டுதலெல்லாம் மறந்து, “கடவுளே கோவில் வாசல்ல இருக்கற செருப்பை யாரும் தூக்கிட்டுப் போகாமல் பத்திரமா இருக்க அருள் புரி”ன்னுதான் வேண்டிப்பீங்க போலிருக்கு. ஹாஹா (நான் கடவுளிடம்எதையும் வேண்ட மாட்டேன் என்ற பதில் தடை செய்யப்படுகிறது)
நீக்குஅடம் பிடிக்கும் பெண். அந்தஸீட் உங்களுடயதும் இல்லையா? நன்னா வேலை வாங்கத் தெரிந்திருக்கு. சங்கமித்ரா விவரமாக எழுதுவதற்கு,அதான் பிரயாணக் கட்டுரை எழுதுவதற்கு நேரம் கொடுக்கிறது. பூரி
நீக்குஅவ்வளவாகத் தரமாகத் தோன்றவில்லை. கூட மனைவியை அழைத்துப் போயிருந்தால் பேச்சுத்துணை கிடைத்திருக்குமோ என்னவோ? புதுமொழிகள் காலத்திற்கேற்றது. ஜன்னல் வழியாக எடுத்த படம். டைம் கிடைத்தது பாருங்கள். ஒரு காலத்திலே தூங்கும் வசதிகள் இல்லாத ரயிலில் கூட கல்கத்தா போன்ற இடங்களுக்கு பிரயாணம் செய்ததுண்டு. குழந்தை குட்டிகளுடன். வருடாவருடம். அப்போது குறையாகவேத் தெரியவில்லை. தண்ணீர் கஷ்டம் சென்னைக்கு. என்ன செய்வார்கள். பதிவு எல்லா விவரமும் சொல்கிறது. நானும் பின்னூட்டம் என்று கோர்வையில்லாமல். அன்புடன்
ஹா ஹா ஹா ஹா நெல்லை நானாக கோயிலுக்குப் போவது அபூர்வம். போகும் போது செருப்பு பத்தி நினைவே இருக்காது.
நீக்குஇது ரயில்ல இருந்து இறங்கி வெறுங்கால்ல நடக்கணுமேனு நினைச்சப்ப...ஆனால் கோயிலுக்கு படி ஏறும் போது அல்லது வெறுங்காலோடு செல்லும் போது தோன்றவே தோன்றாத நினைப்பு இது...
கீதா
கீதா... அந்தக் கூட்டத்துக்கு நானாக இருந்திருந்தால் முதலில் ஏறும்போதே செருப்பை பையில் பார்சல் செய்திருப்பேன்!
நீக்குநெல்லை.. சிலபேர் கோவிலுக்குள் செல்லும்போது பையில் செருப்பை எடுத்துக் போகிறவர்களை பார்த்திருக்கிறேன்!
நீக்குதேவை இல்லாமலா? காமாட்சி அம்மா உங்கள் பின்னூட்டங்கள் என்னை - எங்களை - உற்சாகப்படுத்துகின்றன. கோர்வை இல்லாமல் எல்லாம் இல்லை. எதிரில் அமர்ந்து பேசுவது போலிருக்கிறது. நன்றி அம்மா.
நீக்குஇந்துப் பத்திரிக்கை செய்தி படித்தேன். சொந்த வீட்டைக் காலி செய்து வாடகை வீட்டுக்கு போகிறர்வர்கள் , வாட்கை ஏற்றம் எல்லாம் படித்தேன். மழை பெய்தால் தான் மக்கள் கஷ்டம் தீரும். கோடை மழை வேண்டும், நீர் சிக்கனம் வேண்டும் . மக்கள் குடங்களை தூக்கி கொண்டு அலைவதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குரொம்பக் கஷ்டமாய் மட்டும் இல்லை, பயமாகவும் இருக்கிறது கோமதி அக்கா.
நீக்குஅந்த ரயில் பெண் அனுஷ்காவா இருந்திருந்தா? அப்படினு நினைச்சப்ப....ஹிஹிஹி சரி சரி சரி வேண்டாம் வம்பு அடுத்ததுக்கு ஸ்கிப் பண்ணிவிடுகிறேன்...!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
//அனுஷ்காவா இருந்திருந்தா? // - இதைப் பாருங்க... இந்த மாதிரி கிண்டல்லாம் பண்ணக்கூடாது. 'அத்தை சொல்லும் வரை காத்திருக்காமல்', தானாகவே 'பா த ர ட் சை க ளை' எடுத்துக் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? தமிழனை, ஒரு கன்னடிகை கிண்டல் பண்ணுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். ஹாஹா. நிச்சயம் 'நீயே இந்த சீட்டில் படுத்துக்கொள்' என்று சொல்லியிருக்கமாட்டார் ஸ்ரீராம். அவருக்கு ஒரு சீட்தானே உரிமை.
நீக்குகீதா... குண்டாய் இருந்தாள் என்றால் அனுஸ்கா ஆகிவிடுவாரா? அவர் என்ன ரயிலில் எல்லாமா வரப்போகிறார்? ம்...ஹூம்!
நீக்கு//'நீயே இந்த சீட்டில் படுத்துக்கொள்' என்று சொல்லியிருக்கமாட்டார் ஸ்ரீராம். அவருக்கு ஒரு சீட்தானே உரிமை.//
நீக்குஅது என்னுடைய சீட்டே இல்லையே நெல்லை!
நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இப்ப பங்களூர்னா உடனே கன்னடிகையா!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா...
நீக்குஸ்ரீராம் அது சரி அவங்க எங்க ரயிலில் எல்லாம்வ் அரப் போறாங்க..!!
ஓரு வேளை நம்ம அரம தலைவர் காசிக்குப் போறார்..காசிக்குப் போறவர் இனி என் ஃபோட்டோவை எபில போட மாட்டேன்னு அங்க விட்டுருவாரோனு ஒரு சம்சயம் பயத்துல வந்துட்டு....ஒரு எட்டு பார்த்துட்டு எபில போடும் போது ஒழுங்கா ஃபோட்டோ போடனும்னு உங்க கௌ அங்கிளுக்குச் சொல்லிடுங்கனு சொல்லி மிரட்டிட்டுப் போக ஹையோ எனக்கு அந்தக் குண்டு பொண்ணுனத்டும் என்னமா மனசு போகுது!!...ஒடிப் போயிடறேன்...
கீதா
புதுமொழிகளை மிகவும் ரசித்தேன் அதிலும் எந்தையும் தாயும்!! செம! உண்மைதானே..நாமளுமே கொஞ்சம் வருஷம் முன் வரை ஆண்ட்ற்றாய்ட் இல்லாமத்தானே இருந்தோம் இல்லையா...சாதாரண செல்ஃபோன் கூட...
பதிலளிநீக்குஎல்லா புது மொழிகளுமுஏ நல்லாவே கற்பனை ஸ்ரீராம் ....கூழானாலும் போஸ்டர் ஒட்டு ஹா ஹா ஹா...
நம்ம வீட்டுல கூட குழைந்த சாதம் கொஞ்சம் எடுத்து முன்னாடி லெட்டர் கவர் ஒட்டிய நினைவு இருக்கு...பள்ளில கூட கம் இல்லைனா டிபன் பாக்ஸ் சாதப் பருக்கை எடுத்து நசுக்கி கவர் ஒட்டியிருக்கேன்...
கீதா
கீதா
எந்தையும் தாயும்? இருங்கள் என்ன எழுதி இருந்தேன் என்று நானே ஒருமுறை பார்த்து விட்டு வந்து விடுகிறேன் கீதா... ஆ... அதுவா? நன்றி... நன்றி! நன்றி.. பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குரயில்ல டாய்லெட் அம்புட்டு சுத்தமா இருந்துச்சா ஸ்ரீராம்...ஒரு வேளை இது நக்கலோ?!!!!!!!!!
பதிலளிநீக்குகண்ணாடி ஜன்னல் வழி சூரியன் அழகு!
கீதா
கீதா
நிஜம்மா சுத்தமா இருந்தது கீதா... தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தவர்கள். அது சூரியன் இல்லை நிலா....
நீக்குஹை பரவால்லியே தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தது சூப்பர்!! நல்ல விஷயம். இப்படிச் சுத்தப்படுத்தலை ஒரே ஒரு முறை புனாவுக்குச் செல்லும் ரயிலில் வந்து க்ளீன் செய்து கொண்டே இருந்தார்கள்...பெட்டிகள் முதல் எல்லாம் யுனிஃபார்ம் போட்டு ப்ரொஃபஷனலாக....அப்புறம் பார்க்கவெ இல்லை..
நீக்குகீதா
ரயில் பயணத்தில் பெரும்பாலும் இளவயதுக்காரர்களே பிறருடன் ஒத்துப் போவதில்லை. நிறையத் தரம் பார்த்தாச்சு. நாங்க ஒரு முறை தில்லியில் இருந்து திரும்பி வருகையில் முதல் வகுப்பு நால்வர் செல்லும் ஏசி பெட்டியில் எங்கள் இருவருக்கும் கீழே உள்ள படுக்கை இருக்கைகள் கொடுத்திருந்தனர், மூத்த குடிமக்கள் என்னும் அடிப்படையில்! எங்களோடு ஏறிய கணவன், மனைவி இருவருக்கும் மேல் படுக்கை இருக்கை. சாமான்கள் வேறே நிறைய! அவங்களுக்கு வந்ததே கோபம் எங்களைப் பார்த்துட்டு!எங்களுக்கு ஹிந்தி புரியாது என்னும் நினைப்பில் கன்னாபின்னாவெனப் பேசிக் கொண்டு இவர்களோடு நாளை வரை எப்படிப் போவது என்றெல்லாம் கேட்டுக் கொண்டு டிடிஆர் வந்ததும் அவரிடம் புகார் கொடுத்தனர். டிடிஆர் கண்டிப்பாக மாற்ற முடியாது எனச் சொல்லி விட்டார். பின்னர் அவர்கள் கூப்பே கேட்டுக் கொண்டு போனார்கள் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஆமாம் கீதா அக்கா... எல்லோருக்கும் லோயர் பெர்த்தான் வேண்டும் என்றே சொல்கிறார்கள்.அதுதான் பிரச்னை. சின்னப்பையன், ஒல்லியான எனக்கே அப்பர் பெர்த் ஏறுவது கொஞ்சம் சிரமமாய் இருந்தது என்றால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் தோன்றும்.
நீக்கு//சின்னப்பையன், ஒல்லியான எனக்கே அப்பர் பெர்த் ஏறுவது கொஞ்சம் சிரமமாய் இருந்தது என்றால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் தோன்றும்.// ஹாஹாஹா, மாமாத்தாத்தா!
நீக்குஇல்லை கீதாக்கா... என்னுடைய மாமா தாத்தா இந்தப் பயணத்தில் என்னுடன் வரவில்லை!!
நீக்குஅந்த பூரி ஒரே எண்ணெய் குடிச்சிருக்கும் போல! நான் வேண்டாம்னே சொல்லி இருப்பேன்! இஃகி,இஃகி! அது சரி, பிரசாந்த் என்றால் சினிமாவில் நடிப்பாரே? அவரா? பிரசாத் என்றால் யார்? பிரசாந்த் யார்? இரண்டு பேரும் சொல்லி இருக்கீங்க! பயணக்கட்டுரையை உண்மையா விமரிசிக்கணும்னா இன்னும் விஷயத்துக்கே வரலை! ரொம்பவும் ஸ்லோ! திரும்பத் திரும்ப ரயிலில் ஏறியதையும்சீட் பார்த்து உட்கார்ந்ததையும், கழிவறைச் சுத்தம்ங்கறதையும் தான் சொல்லி இருக்கீங்க! அதோடு இந்த அழகிலே மற்றப் பயணிகள் எங்கே இருக்காங்கனும் தெரியலை! அது தெரிஞ்சிருந்தால் கொஞ்சம் சுவாரசியமா இருந்திருக்குமோ என்னமோ! ஏற்கெனவே வாரம் ஒரு முறையே எழுதும் பயணக்கட்டுரையில் இன்னமும் ஆந்திரா தாண்டவே இல்லை! கவலையா இருக்கு! நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து எல்லாமும் முடிச்சுட்டு நல்லபடியாத் திரும்பி வரணும்னு! வரும்போது ஏன் விமானம்?நீங்க மட்டுமா? அல்லது உங்களோட மொத்தக்குழுவுமா(70 பேருமா) அல்லது உங்கள் குடும்பக் குழு மட்டுமா?
பதிலளிநீக்குஸ்ரீராமுக்குப் பதிலா நானே உங்களுக்கு பதில் எழுதறேன் கீசா மேடம்.... இப்போதான் வந்தியத்தேவன் புறப்பட்டிருக்கிறான். அதற்குள் அருள்மொழி, தன்னுடைய மணி முடியையா எடுத்து சித்தப்பா தலையில் வைத்தார் என்று கேள்வி கேட்கறீங்க.....
நீக்குபிரசாந்த் - பாலாஜி இருவரும் டூர் ஆர்கனைஸர்ஸ். இருவரின் படங்களும் சென்ற வாரம் போட்டிருந்தேனே கீதா அக்கா...
நீக்கு//ரொம்பவும் ஸ்லோ! //
ஹா... ஹா... ஹா... உங்கள் கவலை புரிகிறது. தேவை இலலாத விவரங்களைக் கேட் செய்து விட்டு வ்வேட்டு ஒன்று துண்டு இரண்டுன்னு முடிச்சுடறேன் அக்கா...
//இந்த அழகிலே மற்றப் பயணிகள் எங்கே இருக்காங்கனும் தெரியலை! //
இன்று அதைச் சொல்லியிருக்கிறேனே அக்கா... அந்த இரண்டு கொச்சிலும் பரவலாய் அமர்ந்திருக்கிறார்கள். 74 பேர்கள் யார் என்றே தெரியாது. எங்கள் ஆறு பேர்களை மட்டுமே தெரியும்! வரும்போது... அதைக்கூட முன்னாலசொல்லியிருந்தேன். மேலும் நீங்கள் இப்போதே கடைசிப் பகுதியைப் போட்டு முடிக்கச் சொல்கிறீர்கள்... நான் ஏமாற மாட்டேன்.. இதை வைத்துதான் நான் வியாழனை டிசம்பர் வரி பிளான் பண்ணி இருக்கிறேன்!
ஹப்பாடி... நன்றி நெல்லை. முதல்முறையா நீங்கதான் என்னை வந்தியத்தேவனாக்கியிருக்கீங்க!!!!
நீக்கு//தேவை இலலாத விவரங்களைக் கேட் செய்து விட்டு வ்வேட்டு ஒன்று துண்டு இரண்டுன்னு முடிச்சுடறேன்// - அப்படீல்லாம் பண்ணாதீங்க. வேணும்னா, மற்ற நாட்களிலும் 'தொடர்கதை'போல, இதனையும் சேர்த்துடுங்க.
நீக்குயாரு வந்தியத் தேவன்? ஶ்ரீராமா? வந்தியத்தேவனின் வேகத்துக்கும் ஶ்ரீராமின் வேகத்துக்கும் ஒத்தே வராது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
நீக்கு//தேவை இலலாத விவரங்களைக் கேட் செய்து விட்டு வ்வேட்டு ஒன்று துண்டு இரண்டுன்னு முடிச்சுடறேன்/
நீக்குச்ச்ச்ச்சே... எவ்வளவு பிழைகள்!
"தேவை இல்லாத விவரங்களைக் கட் செய்துவிட்டு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என..."
இப்படித் தப்பில்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கிறது!
// வந்தியத்தேவனின் வேகத்துக்கும் ஶ்ரீராமின் வேகத்துக்கும் ஒத்தே வராது! //
நீக்குவந்தியத்தேவன் பயணக்கட்டுரை எல்லாம் எழுதி இருக்காரா என்ன?!!
சமைக்க மாட்டேன்னு அடிச்ச பெண் திருப்பி ஏதேனும் கேட்டால் அடிக்கறதுக்குனு குழவியைக் கொண்டு வந்திருக்கார் போல! இல்லாட்டி இங்கேயே சப்பாத்தி இட்டுக் கொடுக்கலாம்னா?
பதிலளிநீக்குபுதுமொழிகள் படிச்ச நினைவு வருது. இப்படி எல்லாம் யோசிச்சால் தலைவலி என்ன, மண்டைக்குள் இருப்பதே காணாமல் போகும் அபாயம் உண்டு.
அப்புறமா இந்தச் சாக்கிலேயாவது அனுஷ்கா, தமன்னாவை மறப்பீங்கன்னு பார்த்தால்! :))))
அடிச்ச குழவி கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால்தான் கணவன் கம்முனு இருப்பான் என்று நினைக்கிறாளோ என்னவோ!!!
நீக்குபுதுமொழிகள் எல்லாம் நான்கு வருடப் பழசு அக்கா..
அனுஷ்காவா? யாரது அக்கா? தமன்னா என்றால் இதயம் என்றுதானே அர்த்தம்... ஹிந்திப்படமா?
அனுஷ்கா? அது யாரது அதானே!!! கீதாக்கா ஸ்ரீராம் ரொம்பச் சின்னப் பையனாக்கும் அனுஷ்கா எல்லாம் தெரியாது...அனுஷ் மட்டும்தான் தெரியுமாக்கும்...ஹிஹிஹி
நீக்குகீதா
குப்பைகள் பக்கத்தில் இருக்க வார்க்கப் படும் தோசையைத் தின்ன மஹாதைரியம் வேண்டும். எங்க அப்பா வீட்டில் சதுரக் கல் பெரியது! ஒரே சமயம் 10 தோசைகள் வார்க்கும்படி இருந்தது. அதை அறுத்து அப்பா எனக்கும் ஒரு துண்டு கொடுத்தார். வேண்டாம்னுட்டேன். இப்போ நினைச்சா வாங்கிட்டு இருந்திருக்கலாமோனு தோணுது!
பதிலளிநீக்குஅட.... எதற்குத்தான் சொத்து பிரிப்பு என்று கிடையாதா? ஹா ஹா ஹா
நீக்கு//குப்பைகள் அருகில் இருக்க....//
நீக்குபாதி ஹோட்டலின் சமையலறைக்குள் எட்டிப்பார்த்தால் சாப்பிடவே மாட்டோம்! இது 2014 இல் உங்கள் வீட்டுக்கு வந்த வருடம் உங்கள் ஊர் கல்யாண மண்டபத்தில்...!
இதே தகவலைச் சொல்லித்தான் ஸ்ரீராம் முன்னரே இந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார் கீதாக்கா....உங்க வீட்டுக்கு வந்த இடத்தில் கல்யாண மண்டபத்தில் என்று...அந்தப் பதிவுல கூட நீங்க கூட ஒரு கல்யாணச் சாப்பாடு பத்தி சொல்லிருந்தீங்க...டிஃபன்!!
நீக்குகீதா
கீதா... மாற்றிச் சொல்கிறீர்கள். இந்தப் படம் எடுத்ததும் பகிர்ந்ததும் நான்தான். ஸ்ரீரங்கம் சென்றபோது எடுத்த படம்! ஒருகல்யாண மண்டபத்தின் பின்புறம் அது. குப்பைக்கும் தோசை வார்க்கும் இடத்துக்கும் தூரம் உண்டு. புகைப்படத்தில் அருகிலேயே இருப்பது போலத்தெரிவது ஆஇ!
நீக்குதண்ணீர்ப் பிரச்னையை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கிறது. ஆனால் இந்த நிலையிலும் ஐபிஎல் மாட்ச் நின்னுடும்னு மழை வேண்டாம்னும் மழை பெய்தால் பிரச்னை எனச் சிலரும், மழை கொட்டினால் தெருக்களில் தண்ணீர் தேங்கிடும் எனச் சிலரும் மழை வேண்டாம் என்றே வேண்டிக்கொள்கிறார்கள். சென்னைக்கும் வந்துட்டு தண்ணீரும் மழையே பெய்யாமல் நிறையக் கிடைக்கணும் என்கிற வித்தை எங்கேருந்து கொண்டு வருவாங்கனு யோசிக்கவே இல்லை. :( பொதுவாகத் தமிழக மக்களுக்கே தண்ணீர் என்றால் அலட்சியம் தான். கொஞ்சம் இருந்தாலும் உடனே செலவு செய்து தீர்த்துவிடுவார்கள். அப்புறம் தண்ணீர் இல்லை என அரசைக் குறை சொல்லுவார்கள். இதுக்கு நாம் தான் காரணம் என நினைக்கவே மாட்டார்கள்.
பதிலளிநீக்குஐ பி எல் மாட்சுக்கு செலவாகி இருக்கக்கூடிய தண்ணீர்... அப்பா... நினைத்தாலே பெருமூச்சுதான் வருகிறது.. இதேபோல நட்சத்திர ஓட்டல்களிலும் 'எப்படியாவது' தண்ணீர் ஏற்பாடு செய்து விடுவார்கள்தானே?
நீக்குஇங்கே ஒரே பெரிய தோசைக்கல்லில் 10 தோசைகள் வார்ப்பது பற்றிச் சொல்லி இருக்கீங்க! எங்க வீட்டிலே நான் இரண்டு பக்கமும் இரண்டு தோசைக்கல்லைப் போட்டுக் கொண்டு சுமார் 18 அல்லது 20 பேர்களுக்கு ஆளுக்கு சராசரி 5 தோசை வீதம் வார்த்திருக்கிறேன். இது கல்யாணம் ஆனதிலிருந்து தொடர்ந்து 88 ஆம் ஆண்டு 90 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. பின்னர் தான் கால்வலி ரொம்ப அதிகம் ஆனதும் கொஞ்சம்கொஞ்சமாகக் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதாலும் குறைந்தது. ஒரு நாளைக்கு 70,80 தோசைகள் வார்க்கணும் நின்று கொண்டே! இப்போ நினைச்சால் கூட மலைப்பாக இருக்கிறது! இப்போ எங்க இரண்டு பேருக்குச் செய்ய முடியலை! :((((
பதிலளிநீக்கு//இப்போ எங்க இரண்டு பேருக்குச் செய்ய முடியலை! // - அடடா... 70-80 தோசை ஒரு சமயத்துல பண்ணியிருக்கீங்களே... நாங்க உங்க வீட்டுக்கு வந்தால் உங்களை எனக்கு 10 தோசை வார்த்துப்போடச் சொல்லலாம் என்று நினைத்தால், எச்சரிக்கையாக இந்த வரியை எழுதியிருக்கீங்க. நல்ல முன்யோசனைதான்.
நீக்குஆமாம் அக்கா... இந்தக் கொளுத்தும் கோடையில் பாஸ் சமையலறையில் நின்று தோசை வார்ப்பது பற்றி நிறையவே புலம்புவார். இப்போதெல்லாம் இரவுகளில் தோசை, சப்பாத்தி கிடையாது!
நீக்குசப்பாத்தி எல்லாம் சாயங்காலமே பண்ணி வைச்சுடுவேன் அநேகமா! தோசை சீக்கிரம் ஆயிடும் என்பதால் அது ராத்திரி! ஆளுக்கு 2 தோசை தானே! கொஞ்சம் சாதம் இருக்கும். அதை மோர்சாதமாச் சாப்பிட்டுப்போம். அரைப்பதும் குறைவாகத் தான் அரைப்பேன். செலவாகாது. மாவு புளிச்சுப் போகும்! :(
நீக்குJayalakshmi Travels + Sanghamithra + Kashi yatra brings back my memories
பதிலளிநீக்குThe ticket from Allahabad junction to Gaya as booked for the previous day night. This was known after he distributed the tickets individually before leaving to the station from the hotel..When asked why he did the incharge guy threatened me ...in his own words ('onnaya kola panniruven')...when my aged mother was watching..
நீக்குSuch a gentleman..He will find his place...
யாரென்றே தெரியாமல் நினைவுகளை பகிர்ந்து கொல்லுகிறீர்களே... பெயர் சொல்லக்கூடாதா?!
நீக்கு//யாரென்றே தெரியாமல் நினைவுகளை பகிர்ந்து கொல்லுகிறீர்களே...//
நீக்குமறுபடியும் பிழையான தட்டச்சு!
"பகிர்ந்து கொள்கிறீர்களே" என்று இருக்க வேண்டும்.
மன்னிக்கவும்.
ஸ்ரீராம் பூரி உப்பி வரலை போல அதான் பாவம் சொங்கிப் போய் தட்டை போல இருக்கு!! என் கண்களுக்கு எண்ணை நிறைய குடித்த தட்டை போல இருக்கு. சப்பாத்தி போல இல்லை. ஹா ஹா
பதிலளிநீக்குவெங்காயம் போடாத தக்காளிச் சட்னியா ஹூம்! ஆன்மீக யாத்திரைனு வெ நா பூ நா எதுவும் சேர்க்கலையோ? இல்லை இது சாப்பிடாதவர்கள் குழுவில் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
வெ நா போடாத த ச கூட நல்ல டேஸ்டியா செய்யலாம் தான்...
கீதா
கீதா ரங்கன்... பிரயாணத்துக்குச் செய்யும் பூரிலாம் இந்த மாதிரி, கொஞ்சம் அதிகமா மாவு போட்டு கெட்டியா பூரியா பண்ணுவாங்க. அது கொஞ்ச நேரத்துல சவுக்குனு எண்ணைல முன்னொருகாலத்தில் பொரித்தெடுத்த தடியான பூரியாக தெரியும். வயிர் நிறையும். கூட ஓரு நாள் டிராவல்ஸ் வச்சிருந்தால்கூட கெட்டுப்போகாது.
நீக்குடிராவல்ஸ் உணவு - ரெயில் பிரயாணங்களுக்கு - பூரி, புளியோதரை, ஆரம்பத்தில் கதம்ப சாதம்/தயிர் சாதம்/சிப்ஸ் இதுமாதிரித்தான். இல்லைனா ஒருவேளை அரிசி உப்புமாவும் இருக்கலாம்.
நீங்க சொல்ற சாஃப்ட் பூரிலாம் ரெண்டாம்நாள் மனுஷன் சாப்பிடமுடியுமோ?
பிரயாணங்களுக்குச் செய்யப்படும் பூரியே வேறு வகை! இம்மாதிரி கனமான பூரியெல்லாம் பண்ணக் கூடாது. வெடக், வெடக்னு சாப்பிட முடியாமல் இருக்கும். பூரி மாவிலேயே கொஞ்சம் போல் கசூரி மேதி, உப்பு, காரம், ஓமம், பெருங்காயம் எல்லாம் போட்டு வெண்ணெய் அல்லது நெய் போட்டுத் தேய்த்துப் பிசைந்து பூரி இட்டு அதில் ஃபோர்க்கால் நடுவில் ஓட்டைகள் செய்துவிட்டுப் பொரிச்சு எடுத்து வைத்துக் கொண்டால் ஒரு மாசம் ஆனாலும் கெடாது. உருளைக்கிழங்கைத் தோல் உரிகிற மாதிரி வேக விட்டுக் கொண்டு எண்ணெயில் பொரித்தெடுத்து உப்பு, காரம், பெருங்காயம் தடவி வைச்சுட்டால் தொட்டுக்க ஆச்சு! இதைத் தவிர்த்தும் கொஞ்சம் மிக்சர், வட மாநிலங்களில் கிடைக்கும் சூடா போன்றவை வாங்கி வைத்துக் கொண்டால் கையில் தக்காளி, வெங்காயம் கொண்டு போய்க் கொத்துமல்லியும் வைத்துக் கொண்டு அதில் நறுக்கிச் சேர்த்துக் கலந்து சாப்பிட்டுக்கலாம். வயிற்றையும் ஒண்ணும் பண்ணாது. வெங்காயம் பச்சையாகச் சாப்பிடுவதால் வயிறு குளிர்ச்சி அடையும்.
நீக்கு@கீசா மேடம் - //பிரயாணத்துக்குச் செய்யும் பூரிலாம்// - இது யாத்திரை கூட்டிக்கிட்டுப் போகிற டிராவல்ஸ் காரங்க பண்ணுவது. நானெல்லாம் 1 1/2 நாள் இரயில் பிரயாணம் ஓரிரு தடவைதான் பண்ணியிருக்கிறேன். அப்போ சப்பாத்திகள், எலுமி கார ஊறுகாய்தான் எடுத்துக்கொண்டு சென்றேன்.
நீக்குதண்ணீர் கஷ்டம் பத்தி சொல்ல நிறைய இருக்கு...மக்களுக்குத் துளிக்கூட விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் தண்ணீர் வீணாவதைப் பார்க்கும் போது மனம் துடிக்கும்.
பதிலளிநீக்குநான் 30 வருடங்களுக்கு முன் நான் இந்த வாட்டர் மேனேஜ்மென்டில் (அக்ரிகல்சுரல் எக்கனாமிஸ் என் விருப்பப்பாடம்.) எம்ஃபில், பிஹெச்டி பண்ண விருப்ப்ப்பட்டேன். என்னென்னவோ ஆசைகள் கனவுகள்!! திருவனந்தபுரம் ஃப்யூச்சர் ஸ்டடிஸ் இன்ஸ்டிட்ட்யூட்டில் சேருவதற்கு ப்ரொப்போசல் சம்மரி எழுத வேண்டும். சப்ஜெக்ட்டில் நிறைய வாசித்துள்ளேன் அப்போது. குறிப்பாக டாக்டர் சிவனப்பன், கிசான் வேர்ல்டில் எழுதிய கட்டுரைகள். அவர் கோவை அக்ரிகல்சுரல் யுனிவேர்சிட்டியில் பேராசிரியராக இருந்தார்.
ஆனால் ப்ரொப்போசல் எழுதும் அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது. வெளிஉலக அனுபவம், அறிவு எதுவும் கிடையாது. எம்ஃபில், அப்புறம் பிஹெச்டி பண்ண ஆசைப்பட்டேனே தவிர அப்படிச் செய்தவர்கள் யாரெனும் உண்டா என்றும் தெரிந்திருக்கவில்லை. கிராமத்து ஃப்ரெஷ் பொண்ணு. நான் ஜஸ்ட் எப்படி எழுத வேண்டும் என்ற ஒரு கைட்லைன் கேட்டு உதவி கேட்க அந்த் நபர் இதெல்லாம் கூடவா தெரியாது என்ன எம் ஏ படிச்ச என்று கேட்ட்தோடு சரியாக கைட் செய்யவில்லை. சரி நாமே முயன்று எழுதுவோம் என்று எழுதிவிட்டு சரியாக இருக்கிறதா? இல்லை எப்படி மாடிஃபை பண்ன வேண்டும் என்று கேட்ட்தற்கும் இப்படி எழுதக் கூடாது என்று சொன்னாரே தவிர எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
அப்போதெல்லாம் கணினி இல்லையே நெட் இல்லையே. இருந்திருந்தால் கூகுள் தேவதை உதவியிருப்பாள் எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பாள்.
வருவது வரட்டும் என்று அப்ளை செய்தேன். ரிஜெக்ட் ஆனது. அப்புறம் மீண்டும் முயற்சி செய்ய முடியாத அளவிற்குச் சூழலே மாறிப் போனது.
கீதா
தண்ணீர் வறட்சி, கஷ்டம் என்று சொல்லுவதை விட தண்ணீர் பராமரிப்பு, சேகரிப்பு, மேலாண்மை இதுதான் குறைபாடு. இயற்கை எப்போதும் ஒரே போன்று இருக்காது. எனவே ஒரு நாடு, மாநிலம், ஊராட்சிகள் இவை எல்லாம், எப்படி நாம் எதிர்காலத்திற்காகப்பண சேமிப்பு அவசியம் என்று நினைக்கிறோமோ, அப்படி நினைத்து ஒவ்வொரு சிறு ஊரும் இதைச் செய்ய வேண்டும். க்ராஸ் ரூட் லெவலில் இது நடக்க வேண்டும்.
பதிலளிநீக்குசென்னை வெள்ளம் குறித்து எல்லோருக்கும் தெரியும். இன்று வரை மழை நீர் சேகரிப்பிற்கான எதுவும் கம்ப்ளீட் ஆகவில்லை. ஆனால் ஃப்ளாட்டுகள் மட்டும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
கலிஃபோர்னியாவில் தண்ணீர் என்பது பஞ்சம் தான் அதுவும் வெயில் காலத்தில். ஆனால் அந்த வறண்ட பிரதேசத்தை விளைச்சல் நிலமாக மாற்றியது பற்றிய கட்டுரை ஒன்று முன்பு வாசித்திருக்கிறேன். அங்கு ஃப்ளாட்களில் எல்லா வீட்டு கழிவு நீரும் சுத்தம் செய்யப்பட்டு புல்லிற்கு தெளிப்பது போல் பாய்ச்சப்படும். த எக்கனாமிக் வேல்யு ஆஃப் ட்ரிப் இரிகேஷன் இன் கலிஃபோர்னியா என்று பேப்பர் போட்டிருந்தார்கள். ரிசர்ச் பேப்பர். ஸ்பெயின், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இதை எப்படி உபயோகித்து பயிர் வளத்தைப் பெருக்கினார்கள் என்று இருக்கும். அங்கும் நீர் சேமிப்பு பற்றிப் பேசப்படும். நீர் மேலாண்மைக்கு மிகவுமே முக்கியத்துவம்.
அதை இங்கும் மிகத் தீவிரமாகக் கையிலெடுக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்ட அந்த பேராசிரியர் நிறைய சொல்லியிருப்பார். ஆனால் விவசாயமும், நீர் மேலாண்மையும் முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் தான் இப்போதைய நிலவரம்.
கீதா
இன்றைக்கு திண்டுக்கல் விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் பக்கம் எல்லாம் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதாமே...
நீக்குசென்னை?
நீக்குகீதா
ஆறிப்போனால் பூரியும் சப்பாத்தி மாதிரிதான் இருக்கும்.,...
பதிலளிநீக்குஎங்கும் தண்ணீர் கஷ்டம்....
ஆவி படம் பொன்னான காலத்துக்கு இட்டு சென்றது
நன்றி ராஜி.
நீக்குநெல்லை அது வித்யார்த்தி புரமா? வித்யார்த்திபவன் இல்லையா? காந்திபஜாரில் இருக்கும் வித்யார்த்திபவனில் ஒரு முறை இந்த் பென்னே தோசை சாப்பிட்டிருக்கிறேன். அங்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு அதுவும் டிபன் தான். மதியம் 2.30க்கு ஓபன் செய்யறாங்க காலையில் 11.30 என்று நினைவு மூடுவாங்க. 2.30க்கு உள்ளே செல்ல வாசலில் அத்தனை கூட்டம் கதவு திறக்கக் காத்திருந்து உள்ளே செல்லும். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அங்கு இடம் கொஞ்சம் தான் இடம் இல்லாதவர்கள் வெளியில் வெயிட் செய்யணும். அப்ப டோக்கன் கொடுக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅப்படி ஆஹா ஒஹோ என்று டோக்கன் கொடுக்கும் அளவு ஐட்டம்ஸ் இருப்பதாகத் தெரியலை. பென்னே தோசைக்குச் சட்னி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பக் காரம். கீதாக்கவை நினைத்துக் கொண்டேன். தோசையில் பென்னேயுஓ இல்லை எண்ணையோ அதுதான் விரல்கள் முழுவதும் பிசு பிசுவென்று....தோசையை அதில் முக்கி எடுத்திருப்பது போல இருக்கும். எனக்கு மணம் தெரியாது என்பதாலோ இல்லை ஓவர் எதிர்பார்ப்புடன் சென்றதாலோ தெரியலை பெயருக்கு தரம் மேச் ஆகலை..
கீதா
வித்யார்த்தி பவன். எனக்கு அங்கு உணவு பிடிக்கலை. நம்ம மைலாப்பூர் ராயர் மெஸ் போன்று, முன்னொரு காலத்தில் வேறு எங்கும் கடைகள் இல்லாதபோது நன்றாக இருந்திருக்கலாம். இப்போது இல்லை என்பது என் அபிப்ராயம் (அதை யார் கேட்டா ஹாஹா). இதைவிட பெட்டரா, ஜெயநகர் 4வது பிளாக் அருகில், 'தாவன்கெரே பெண்ணே தோசை' கடையை கூகுள் மூலக் கண்டுபிடித்துச் சென்று சாப்பிட்டுப்பாருங்கள். விவி புரம் தெரு என்பது உணவுக்கான தெரு. மாலை 7 மணிக்குமேல் சூடுபிடிக்கும். அங்கு பஜ்ஜி வெரைட்டி, ஜிலேபி போன்ற இனிப்புவகைகள், தோசை போன்றவை என்று கலந்துகட்டி உண்ணலாம். அங்குதான் விவி பேக்கரியும் இருக்கு.
நீக்குபெண்ணே தோசை, ஆணே இட்லி என்று என்னமோ போங்க... அதெல்லாம் நான் பார்த்ததே இல்லை.
நீக்குநெல்லை இங்கும் எங்க ஏரியால பக்கத்துல தவண்ட்கெரெ பென்னே தோசை கடை இருக்கு.
நீக்குநெல்லை நான் சாப்பிட்டிருக்கேன் ஏற்கனவே ...வீட்டிலும் செய்வதுண்டு. என்ன வெண்னை அம்புட்டு போடமாட்டேன். எனக்குப் பிடிக்கும் பென்னே தோகை. பால்யா..
கீதா
கீதா,உங்களுக்கு அந்த மேல்படிப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தமாக
பதிலளிநீக்குஇருக்கிறது.
துபாய்,அபுதாபி போகும்போது அதிசயமாக இருக்கும் ,கடல் நீர் சுத்திகரித்தல், desalinationplant,
waste water disposal into gardening.really wonderful.
no water scarcity.
en makaLin Machchinar IIT yil Water management professor..
He used to tell me so much about Chennai water problem. whatever he told me long back has come true.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇரண்டொரு நாட்களாக வலைத்தளம் வர இயலவில்லை. மன்னிக்கவும். விடுபட்டதை படிக்கிறேன். இன்றைய கதம்பம் சுவையீக இருந்தது. பிரயாண பதிவு நன்றாக எழுதுகிறீர்கள். படிக்க மிகவும் நன்றாக உள்ளது. படங்களும் மிக அருமையாக உள்ளன. தங்களுக்கெல்லாம் கொடுத்த பூரி முதலிலேயே பண்ணி யிருப்பார்கள்.(எல்லோருக்கும் பண்ண வேண்டுமென்றால் அவர்களும் என்ன செய்வார்கள்?) அதனால்தான் என் கண்ணுக்கும் சப்பாத்தியாக தெரிந்தது. ஒவ்வொன்றையும் விவரித்து எழுதுவது நன்றாகவே உள்ளது. தொடர்ந்து இவ்விதமே சுவாரஸ்யமாக எழுதுங்கள்.
சமையல் செய்யவில்லையா என கேட்ட கணவனுக்கு இப்படி ஒரு நிலையா? ஐயோ பாவம்.! இன்னமும் "இப்படி ஏன் தினமும் சமையல் (ருசியில்லாமல்) செய்கிறாய்?" என பக்குவமாக கேட்கும் கணவர்மார்கள் எல்லாம் எந்த நிலையில் உள்ளார்களோ?
புது மொழிகள் மிகவும் நன்றாக உள்ளது.படத்தில் உள்ளவரைப் போல யோசிக்க வைக்கிறது. அருமையான சிந்தனை.
தோசைகல்லில் நிறைய தோசைகள்.. இதை முன்பு எ.பியில்தான் பார்த்திருக்கின்றேனோ.!
தண்ணீர் கஸ்டம் மனதை வருத்துகிறது. வருண பகவான் மக்களுக்கு மனமிறங்க வேண்டும்.பிரார்த்தனை செய்வோம்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குமுடியும்போது மதுவா வாங்க... உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பாராட்டுகளுக்கு நன்றி. பூரியின் இருப்புக்கு அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்களும் ரயில் பயணத்தில் ன்னதான் செய்வார்கள்!
அந்தக் கணவன் ஸ்மார்ட் கணவன் இல்லை போலும். கேள்வியை சற்றே மாற்றிக் கேட்டிருக்கலாம். ஹா.. ஹா.. ஹா...
புதுமொழிகளை ரசித்ததற்கு நன்றி. ஆம், அந்த தோசைக்கல் படம் முன்பே எபியில் வந்திருக்கிறதுதான்!
தண்ணீர்க்கஷ்டம் சீக்கிரம் தீர அனைவரும் பிரார்த்திப்போம்.
நன்றி கமலா அக்கா.
//சற்றே.. //
பதிலளிநீக்குகம்பன் ஏமாந்தான்!
ஏன்?!
நீக்கு//என் கருத்து தவறு, அது சப்பாத்தி இல்லை, பூரி என்று தெரிந்தது.//
பதிலளிநீக்குஇந்த கிண்டல் தானே வேண்டாம், என்கிறது! :))
உண்மையைச் சொன்னேன் ஜீவி ஸார்!!
நீக்கு//எல்லோரும் தூங்கும் நேரங்களில்......//
பதிலளிநீக்குஐயே! இதை எல்லாமா பகிர்வார்கள்!...
அதையும் சொல்லணுமில்லே? டெக்கினிக்கி தெரியணும் இல்லையா?!!
நீக்குபுது மொழிகளில் முதல் மூன்று டாப் ரகம்!
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்.
நீக்குஆழ்வார்க்கடியான் புன்னகை மன்னன்! இப்படி சிரித்து நான் பார்த்ததில்லை!...
பதிலளிநீக்குகோவை ஆவியை நீங்கள் பார்த்ததில்லை!!!
நீக்குஸ்ரீராம்ஜி, ரயிலில் ஏறியதும் அந்த ஸ்மெல் வந்தது ஒரு வேளை அப்போதுதான் ரயிலை சுத்தம் செய்து கொண்டு ப்ளார்ஃபர்மில் கொண்டு விடிட்டிருப்பார்கள். அல்லது புதிய கோச்சாக இருந்தததோ? அப்புறம் வண்டி ஓட ஓட காற்றில் போயிருக்கும்
பதிலளிநீக்குபிரயாணம் வெகு ஸ்வாரஸ்யமாகவே இருக்கிறது. இப்படியானப் பிரயாணம் நான் செய்ததில்லை. இனிமேலும் குழுவாக எல்லாம் செல்லும் வாய்ப்பும் இல்லை. ஆனால் பெரிய குழுவாகப் போகும் போது உணவு பாவம் அவர்கள் எப்படி செய்ய முடியும்.
புதுமொழிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. எப்படி எல்லாம் சிந்திக்கின்றீர்கள் ஸ்ரீராம்ஜி!
தண்ணீர்க் கஷ்டம் இம்முறை அதிகமாகவே இருக்கிறது என்று தோன்றுகிறது. எங்கள் பகுதியில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயில் அதிகமாகத்தான் இருக்கிறது. தண்ணீர்க்கஷ்டம் இல்லை. வீட்டருகில் நதியில் கூட தண்ணீர் இருக்கிறது.
அட ஆவி! இது எங்கள் குறும்படம் பொயட் த க்ரேட் படத்தில் ஆவியின் வேஷம். எனது தம்பியாக நடித்தார்.
சாப்பாடு கேட்டதற்கு அடியா? இப்படி எல்லாம் கூட நடக்கிறதா? ஆச்சரியம்!
அனைத்தும் ரசித்தோம் ஸ்ரீராம்ஜி
மூன்று நாள் பயணம். திங்கள் அல்லது செவ்வாய் தான் வாசிக்க முடியும்.
துளசிதரன்
வாங்க துளஸிஜி...
நீக்கு//அப்போதுதான் ரயிலை சுத்தம் செய்து கொண்டு ப்ளார்ஃபர்மில் கொண்டு விடிட்டிருப்பார்கள்.//
இல்லை ஜி... ரயில் பெங்களூருவிலிருந்து வந்து கொண்டிருந்தது.. கூடூரில் அதைப் பிடித்தோம்.. சென்ற வாரம் சொல்லி இருந்தேன்!
பிரயாணம் இப்படி நானும் செய்ததில்லை. எனக்கும் புதிய அனுபவம்.
புதுமொழிகள் பற்றிய பாராட்டுக்கு நன்றி.
ஆமாம் உங்கள் குறும்பட ஆவிதான்!
உங்கள் மகள் பெற்ற மதிப்பெண்களுக்கு இங்கும் வாழ்த்துகளை சொல்கிறேன் ஜி.
தண்ணீரை வீண் செய்யாது
பதிலளிநீக்குபயன்படுத்தும் எண்ணம்
எல்லோர் உள்ளத்திலும் மலர வேண்டும்.
நன்றி யாழ்ப்பாவாணன்.
நீக்குபயண அனுபவங்கள் சுவாரஸ்யம். விதம் விதமான மனிதர்களின் அறிமுகம். ஜன்னல் வழியே எடுத்த நிலவு அழகு. புதுமொழிகள் ரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.