செவ்வாய், 21 மே, 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ


மறுபடியும் அம்மா..

துரை செல்வராஜூ 

****************************
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அந்த வண்டி கிளம்பியபோது பிற்பகல் மூன்றரை...

வண்டிக்குள் - அவ்வளவாகக் கூட்டமில்லை...

என்னது?.. வண்டியா?...

ஆமாம்.. வண்டி தான்...

பேருந்து என்று சொன்னால் கடவுளுக்கே அடுக்காது...


தலைநகர் சென்னையில் ஓடி ஓடி உருக்குலைந்து இற்றுப் போன பேருந்து அது...

எந்த நேரத்தில் அதன் இயந்திரப் பகுதிகள் கழன்று விழுமோ யாருக்கும் தெரியாது..

ஆனாலும் - சோழமண்டலச் சாலையில் அது ஓடிக் கொண்டிருந்தது...

தட...தட... என்று பேரிரைச்சலுடன் புறப்பட்ட அந்த வண்டியின் நடுப்பகுதியில் இடது ஓரமாக அமர்ந்திருந்தேன்...

சமீபத்தில் பெய்த மழையால் -
நகரச் சாலைகள் குண்டுங்குழியுமாக மாறியிருந்தன...

டமார்... டுமார்... - என்ற சத்தத்துடன் அந்தக் குண்டுகளுக்குள்ளும்
குழிகளுக்குள்ளும் விழுந்து எழுந்து விழுந்து எழுந்து ஓடிக்
கொண்டிருந்தது - வண்டி...

உழவூர் கடைத்தெருவில் இறங்கும் வரைக்கும் இந்த அவஸ்தை தான் என நினைத்துக் கொண்டேன்...

எனக்கு முன்னதான இருக்கை காலியாக இருக்க அதற்கு முன்னிருந்த இருக்கையில் தன் மகனுடன் இளம் பெண் ....

கூந்தல் முழுக்க மல்லிகைச் சரங்கள்.. அவற்றுடன் சேர்ந்து குழற்கற்றைகளும் பின் புறமாகப் பறந்து கொண்டிருந்தன...

இந்த வளைவு அந்த வளைவு புது மேம்பாலம் எல்லாமும் பின்னோக்கி ஓடின..

மாநகர எல்லையைக் கடந்த வேளையில் பின்னாலிருந்து யாரோ தோளை வருடினார்கள்...

திரும்பினால் - அந்தப் பெரியவர் அவருக்குப் பின்னால் கையைக் காட்டினார்..

அந்தப் பக்கம் - வலது புறத்தில் அமர்ந்திருந்த அம்மா- எனக்கு முன்பாக
அமர்ந்திருந்த பெண்ணை அழைக்குமாறு கையைக் காட்டினார்கள்...

அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் தோற்றம் -
அந்தக் கால பண்டரிபாய் அவர்களை நினைவூட்டியது -

திருத்தமான முகத்தில் செந்நிறக் குங்குமம்...

பொன் வண்ணக் கண்ணாடியும் தீட்சண்யமான விழிகளும் அவர்கள் பள்ளி ஆசிரியை என்று சொல்லாமல் சொல்லி நின்றன...

நான் எழுந்து முன்னிருக்கையின் கம்பியைத் தட்டினேன்..

அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள்...

என்றும் மாறாத இளம் புன்னகை சிலரது முகத்தினில் தான் நித்ய வாசம் செய்யும்...

அப்படியான புன்னகை அப்பெண்ணின் முகத்தில்...

அந்தப் பெண் என்னை ஏறிட்டு நோக்க - நான் பின்புறம் கை காட்டினேன்...

கல்பனா நல்லா இருக்கியா...ம்மா!...

பின்னாலிருந்து கேட்க - இந்தப் பெண்...

டீச்சர்!.. என்று வீறிட்டாள்...

எங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒருசிலர் சட்டெனத் திரும்பிப் பார்த்தனர்..

அந்த ஒரு நொடிக்குள் துள்ளி எழுந்த அந்த கல்பனா பின்னால் ஓடி
அவளது ஆசிரியையின் கால்களைத் தொட்டு வணங்கினாள்...

அருகில் இருந்த எனக்கு மெய் சிலிர்த்தது..
மற்றவர்களுக்கும் அதே.. அதே...

டீச்சர் நல்லா இருக்கிங்களா டீச்சர்?...
உங்களப் பார்த்து எத்தனை வருசம் ஆச்சு!..

- கண்களைத் துடைத்துக் கொண்டாள் - கல்பனா...

தம்பீ.. இங்க வா?... இவங்க தான் எங்க டீச்சர்... எம் பையன்...மா..
அருண்!.. டீச்சருக்கு வணக்கம் சொல்லுப்பா!..

அருகில் வந்த சிறுவனை அணைத்து உச்சி முகர்ந்தார் அந்த ஆசிரியை..

இப்போ எங்கே...ம்மா இருக்கீங்க...

ஒரே கேள்வி இருவரிடத்தும்...

நான் பட்டுக்கோட்டையில இருக்கிறேன்...மா!..
சார் ரிடயர்டு ஆகிட்டாங்க... எனக்கு இன்னும் ரெண்டு வருசம் இருக்கு...

அப்பாவும் ரிட்டயர்டு ஆகிட்டாங்க டீச்சர்... ஒரத்த நாட்டுக்குப் பக்கத்து
கிராமந்தான் புகுந்த வீடு...

லொட.. லொட... என்று ஓடிக் கொண்டிருந்தது வண்டி..

டீச்சர்.. இங்க வந்து உட்கார்ந்துக்குங்க...

சரி..ம்மா என்றபடி - எனக்கு முன்னால் காலியாக இருந்த இருக்கையில் டீச்சர்
அமர்ந்து கொள்ள - கல்பனா தொடர்ந்தாள்...

அவரு பேங்க்..ல வேல பார்க்கிறார்.. வீடு வாசல்.. வாய்க்கால்
வரப்பு..எல்லாம் இருக்கு.. நல்ல குணம்...

மேலே படிக்கணும்..னு உனக்குத் தோணலையா?...

அப்பா ஆசைப்பட்டுட்டாங்க... ஊரு உலகம் கெட்டுக் கெடக்கு...ன்னு  ரொம்பவே பயம்... நான் ஒன்னுஞ் சொல்லலை...  அதுவும் ஆச்சு... எட்டு வருசம்..

இருந்தாலும் இத்தனை வருசமா என்னைய நினைப்பு வெச்சிருக்கீங்களே!...

மறக்க முடியுமா கல்பனா... உங்களையெல்லாம்... ஜானகி, பாலா, வேணி, கமலி, ரேவதி, கீதா, கோமதி, பானு, அந்த ஆதிரா, ஏஞ்சல்.. - அடடா எப்படிப்பட்ட ஸ்டூடன்ஸ் நீங்க எல்லாம்!.. நெஞ்சுக்குள்ளேயே இருக்கீங்க!...

இப்போ அன்பு எங்கேம்மா இருக்கு?...

அன்பா?... எங்கே..ன்னு தெரியலை கல்பனா!..

மெலிதாகச் சிரித்துக் கொண்ட கல்பனா -

நான் உங்க பையன் அன்பழகனைக் கேட்டேன்... - என்றாள்...

அவனைத் தானம்மா நானும் சொன்னேன்...

என்ன டீச்சர் சொல்றீங்க!... - கல்பனாவின் குரலில் பதற்றம்...

ஆமாம்மா!... ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒருநாள் ஒரு பொண்ணை
அழைச்சுக்கிட்டு மாலையுங் கழுத்துமா வந்தான்...

அப்படியே இடிஞ்சு போய்ட்டோம்...ஆனாலும் ஒன்னுஞ்சொல்லலை...
மனசைக் கல்லாக்கிட்டு வீட்டுக்குள்ள வா....ன்னு கூப்பிட்டோம்...

அவன் வரலை... அந்தப் பொண்ணோட கிளம்பிட்டான்... நான் மனசு கேக்காம ஓடிப் போய் அந்தப் பொண்ணோட கழுத்துல என் சங்கிலியக் கழற்றிப்  போட்டேன்....

அதுக்கப்புறமா எப்பவாவது வாசல் பக்கம் வந்து நின்னு நல்லாருக்கியா..ன்னு கேட்பான்... ரெண்டு மூனு மாசத்துல அதுவும் நின்னு போச்சு...

அவனோட கூட்டாளிப் பசங்க அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போறப்ப சொன்னாங்க...  அவன் பேரெல்லாம் மாறிப் போச்சு..ன்னு..

மனசே மாறிப் போனப்புறம் பேரு மாறுனா என்ன?.. மாறாட்டி என்ன?...

என்னம்மா.. இந்த மாதிரி ஆயிடிச்சு... சாருக்கும் அன்புக்கும் ஏதாவது
பிரச்னையா அம்மா!...

அதெல்லாம் இல்லை கல்பனா... ஒத்தைப் பிள்ளையப் பெத்துக்கிட்டு அதுக்கிட்ட கோபதாபத்தைக் காட்டுற ஆளுங்களா நாங்க!... உசிருல வச்சி தாங்கினோம்!...  எப்பவாவது சார் ஏதாவது நல்லது சொல்லுவாரு!.. அதுல அவன் என்ன கோளாறக் கண்டானோ?...

எப்படி அம்மா இதெல்லாம் தாங்கிக்கிட்டீங்க?...

நாம வாங்கி வந்த வரம் அவ்வளவு தான்டா கண்ணா!...

சாருக்கு ஒரு தடவை உடம்பு சரியில்லாம போச்சு.. என்னோட அண்ணந் தம்பிங்க கூட என்னா..ன்னு வந்து கேக்கலை... அவங்களுக்கு நாங்க நல்லா இருக்கோம்..  அவங்களுக்கு ஒன்னும் ஒத்தாசை செய்யலை.. ன்னு வருத்தம்...

அவங்களும் வயல் வரப்பு.. ந்னு நல்லா இருந்தவங்க தான்...
விவசாயம் கைவிட்டுப் போனதால நொடிச்சுப் போய்ட்டாங்க....

காலம் ஓடுற ஓட்டத்தோட நாமளும் ஓடிக்கிட்டு இருக்கோம்...
நம்ம தாகத்துக்கே தண்ணி கிடைக்கலை.. இதுல பிறத்தியாருக்கு உதவலே..ன்னு சொன்னா.. எப்படிம்மா?...

உளூர்... உளூர்.. சார் நீங்க உளூர் டிக்கெட் தானே?.. எந்திரிச்சு வாங்க...

நடத்துனரின் சத்தம்...

ஒரத்த நாட்டுக்குப் போடுங்க சார்!...

அருகில் வந்து காசை வாங்கிக் கொண்டு சீட்டைக் கிழித்துக் கொடுத்தார்

மீண்டும் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினேன் - நான்...

அதுதான் நாங்க முடிவெடுத்துட்டோம்... வீடு கட்டுனதுல கொஞ்சம் கடன்
பாக்கியிருக்கு... அதை அடைச்சிட்டு வீட்டை ஏதாவது அனாதை ஆஸ்ரமத்துக்கு எழுதிக் கொடுத்துட்டு அதுலயே.. போய்ச் சேர்ந்துக்கலாம்..ன்னு...

வர்ற பென்ஷனை அப்படியே அவங்ககிட்ட கொடுத்துட்டா - தங்கமா தாங்கலேன்னாலும் ஒரு தகரமாக் கூடவா தாங்காம போய்டுவாங்க?...

நீங்க எதுக்கும்மா.. அனாதை ஆஸ்ரமத்துல சேரணும்!.. நான் இல்லையா?.. எங்க வீட்டுக்காரர் இல்லையா?... இதோ இவந்தான் உங்க பேரன்... இன்னொரு தடவை அந்த மாதிரி சொல்லாதீங்க...

வண்டியின் பேரிரைச்சலிலும் கல்பனாவின் விசும்பல் ஒலி தெளிவாகக் கேட்டது...

இந்த சேதி மட்டும் கீதாவுக்கும் கோமதிக்கும் தெரிஞ்சா போதும்...
அலறிக்கிட்டு வந்துடுவாங்க!... நாங்க இருக்கோம்.. அம்மா!.. கவல எதுக்கு!..

எங்கண்ணு... இந்த மாதிரி நீ சொன்னதே வயித்துல பால வார்த்த மாதிரி இருக்கு...

அதெல்லாம் இருக்கட்டும்... இனியொரு தடவை அந்த மாதிரி சொல்ல மாட்டேன்னு சொல்லுங்க...

அந்த ஆசிரியை மெல்லச் சிரித்தார்...

உங்க விருப்பப்படி வீட்டையும் பணத்தையும் என்ன வேணாலும் செஞ்சுக்குங்க...  ஆனா நீங்களும் ஐயாவும் எங்க வீட்டுக்கு வந்துடணும்...
பேச்சு...ன்னா அதான் ஒரே பேச்சு...

அருண்.. ஆச்சிய நம்ம வீட்டுக்குக் கூப்பிடுப்பா!... - என்றாள் கல்பனா...

ஆச்சி.. நீங்களும் தாத்தாவும் எங்க வீட்டுக்கு வந்துடுங்க!.. - என்றான்
அந்தச் சிறுவன்...

அருகில் அமர்ந்திருந்த கல்பனாவை மெல்ல அணைத்துக் கொண்டார் - அந்த ஆசிரியை....

பள்ளிக் கூடத்துக்கு பட்டினியா வந்த பிள்ளைங்க எத்தனையோ பேருக்கு உங்க கையால சோறு போட்டிருக்கீங்க... அந்த புண்ணியம் எல்லாம் உங்கள சும்மா விட்டுடுமா?...

என்னைக்காவது கையில குழந்தையோட உங்க பையன் வருவார்... பாருங்க!...

இல்லம்மா... அந்த நம்பிக்கை.. ஆசை எல்லாம் இல்லை... எனக்கு ஒத்தாசை செய்யனும்... ன்னு நீ நெனைச்சா... ஏழைப் பிள்ளைங்க பத்து பேருக்கு பாடம் சொல்லித் தர்ற மாதிரி ஏற்பாடு பண்ணு.. ரிட்டயர்டு ஆனதுக்கு அப்புறம் இப்படியே காலத்தை ஓட்டிடுறேன்....

அதுக்கென்னம்மா... இதோ இது தான் என்னோட நம்பர்... உங்க செல்போன் நம்பரைக் கொடுங்க... வர்ற ஞாயிற்றுக் கிழமை நானும் அவரும் அங்கே பட்டுக்கோட்டைக்கு வர்றோம்...  இதோ ஒரத்த நாடு வந்துடுச்சு... மனசைத் தேத்திக்கிட்டு தைரியமா இருக்கணும்!... நீங்க என்ன சின்னப் பிள்ளையா... உங்களுக்கு நான் சொல்றதுக்கு?..

ஆமாம் கல்பனா... இனிமே உன் கையில நான் சின்னப் பிள்ளை தான்!...
எனக்கு மறுபடியும் அம்மா கிடைச்சிருக்கா!...

கண்களைத் துடைத்துக் கொண்டார் ஆசிரியை..

ஒரத்தநாடு.. ஒரத்தநாடு... கடத்தெரு டிக்கெட் எல்லாம் எழுந்திரிச்சு வாங்க!....

- நடத்துனரின் சத்தத்துடன் அந்த வண்டி கடைத்தெருக்குள் நுழைந்தது....

இந்த மாதிரியான நல்ல உள்ளங்களால் தான் ஊரில் இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நானும் எழுந்தேன்...

இனி இங்கிருந்து தஞ்சாவூர் செல்லும் பேருந்தைப் பிடித்து -
வந்த வழியே உழவூருக்குச் செல்ல வேண்டும்!...

99 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வெங்கட் பதிவிலும் கீதா ரெங்கனைக் காணோம். ஏதோ வேலை அல்லது, கணினிக் கோளாறு. கீதா அக்கா எண்ணங்கள் வீட்டிலேயே இன்னமும் லைட் எரியவில்லை!!

      நீக்கு
    2. ஸ்ரீராம் அதே கணினி கோளாறு..சமீபகாலமா வெங்கட்ஜி, துரை அண்ணா தளம் அப்புறம் எபி ஞாயிறு எல்லாம் ஓப்பன் பண்ணினா கணினி உடனே சொங்கி ஹேங்க் ஆகிட்டுருந்துச்சு. படம் இருப்பதாலோ

      இன்றும் காலை வெங்கட்ஜி தளம் ஓபன் பண்ணியதும் ஹேங்க்...கணினிக்கு மெமரி பிரச்சனை இருக்குது அது வேற. அப்புறம் இப்பத்தான் சிஸ்டம் க்ளீன் செஞ்சு வந்துருக்கேன்.....

      தில்லி, தஞ்சாவூர் எல்லாம் இனிதான் போய்ப் பார்க்கணும்...முருகா ஓப்பன் ஆகனுமே..கணினி ஹேங்க ஆயிடக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு ஓப்பன் செய்யனும் ஹா ஹா ஹா

      அதனாலேயே எங்க வீட்டுலயும் லைட்டு போடலை...ஹிஹிஹி...எங்க வீட்டுலையும் லைட்டு போடணும் அதும் என் பதிவு படங்கள் நிறைய ....

      கீதா

      நீக்கு
    3. நெல்லை வந்தாச்சு...நான்....

      என்ன இன்று முன்னாடியே வந்துட்டீங்க போல!! ஓ ரைட் நீங்க எனக்கு சீனியர் இல்ல!!!!! (மீ ஓடிங்க் தில்லில ஒளிஞ்சுக்கிட்டேன்!!)

      கீதா

      நீக்கு
  2. கரெக்ட் டயத்துக்கு ப்ப்ளிஷ் பண்ணாத்தால இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்....

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, நெல்லை மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு - உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும்.

      நீக்கு
    2. ஹாஹா, தேடின நெல்லைக்கும், ஸ்ரீராமுக்கும் நன்னி ஹை! வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் அனைவருக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
  5. அன்பின் ஸ்ரீராம்..
    எனது படைப்பினைப் பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி....

    பதிலளிநீக்கு
  6. எண்ணங்கள், சாப்பிட வாங்க லைட் போடப்பட்டிருக்கு... கீதாக்கா வில் அரைவ் ஷார்ட்லி.....!

    பதிலளிநீக்கு
  7. கஞ்சிக்கு வறுத்துட்டு வருவாங்க கீதா அக்கா... ரொம்ப நாளா டபாய்ச்சுகிட்டு இருக்காங்களாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஒரு வாரமாக் கஞ்சிக்கு வறுக்கலை. அடுப்பின் அருகே நிற்க முடியறதில்லை. :( இன்னிக்கு எப்படியேனும் வறுக்கணும். :))) அதுக்குள்ளே இங்கே எட்டிப் பார்த்தேன்.

      நீக்கு
  8. ஹாஹா, துரை, இந்தப் பதிவில் சொல்லி இருக்கும் கீதா தி/கீதா தானே! அவங்க நேத்திக்கு கோதுமை உப்பு தோசை சாப்பிட்ட அலுப்பில் தூங்கிட்டாங்க போல! மெதுவா வருவாங்க! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோதுமை உப்பு தோசையா?...

      எனக்கெல்லாம் கொடுக்கலை!?....

      நீக்கு
    2. நீங்க வந்து அந்தப் பதிவைப் படிக்கலை, அதான் கொடுக்கலை. தி/கீதா அதைப் படிச்சுட்டு உடனே செய்தும் பார்த்துட்டு எனக்கும் வாட்சப்பில் அனுப்பிட்டாங்க! :)))))

      நீக்கு
    3. //கீதா தி/கீதா தானே! அவங்க நேத்திக்கு கோதுமை உப்பு தோசை சாப்பிட்ட அலுப்பில் தூங்கிட்டாங்க போல! மெதுவா வருவாங்க! :))))))//

      ஹா ஹா ஹா கீதாக்கா!!

      தோசை நல்ல டேஸ்டியா இருந்தது கீதாக்கா...

      ரொம்ப நல்லா க்ரிஸ்பியாவும் வந்தது. க வே கொஞ்சம் தான் இருந்தது ட்ரையாக அதைக் கையால நம்பியார் உள்ளங்கை தேய்ப்பது போல வைச்சுப் பொடித்துப் போட்டேன்.

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். துரை சாரின் கதையா? வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா. ஆமாம்.... துரை ஸாரின் கதையேதான்!

      நீக்கு
  10. நல்ல சரளமான நடையில் நல்ல கதை! இப்படியும் மனிதர்கள் இன்னமும் இருக்காங்க தான்/ கடவுளுக்கு நன்றி. இயல்பான பேச்சு வார்த்தை. நேரில் பார்ப்பது போல. கூடப் பயணம் செய்தவர் தான் பாவம் மறுபடி உழவூர் போயாகணும். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒட்டு கேட்டபடி
      கூடப் பயணம் செய்தது யார்!...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அண்ணா கீழ சொல்லிருக்கேன் இங்க வந்து பார்த்தா நீங்களும் அதே!!

      யார் யார்? எல்லாம் இந்தக் கதையைச் சொன்னவருதேன்!!

      கீதா

      நீக்கு
    3. இன்னைக்கு நல்லா களை காட்டியிருக்கு....

      நீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அம்மா இங்கும் வந்துவிட்டுப் போனார். என் அம்மா.
    எங்கள் ப்ளாகுக்கு வந்தால் இன்னோரு அம்மா. என்ன அற்புதமான கதை.
    இப்படியொரு ஆசிரியை இருந்தால் நான்,கோமதி,கீதா,,பானுமா,ஏஞ்சல், அதிரா
    அனைவரும் கல்பனாவோட அவங்களைப் பார்த்துப் போமே.

    அழகான அன்பான, இயற்கையான ஆத்மார்த்தமான அரவணைப்புடன்
    நடப்பு. உழவூரில் விளைந்த பயிர்,இப்போது செடியாகி வளர்ந்திருக்கும். யாரையுமே குறை சொல்லாமல் அன்பை மட்டுமே போதித்த ஆசிரியை என்னாளும்
    வாழ்க.

    அவரை அறிமுகப் படுத்திய துரை செல்வராஜுக்கு
    மனம் நெகிழ் நன்றி.
    அவர் வளர்த்த கல்பனா நற்பாடம் கற்ற பெண்ணாகி அன்னையும் ஆகிறாள்.
    ஸ்ரீராமுக்கும் மிகமிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியொரு ஆசிரியை இருந்தால் நான்,கோமதி,கீதா,,பானுமா,ஏஞ்சல், அதிரா
      அனைவரும் கல்பனாவோட அவங்களைப் பார்த்துப் போமே.//

      வல்லிம்மா ஹைஃபைவ் அதையேதான் நான் கீழ சொல்லிருக்கேன்!! எபி வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டா எல்லாரும் போட்டி போட்டுப் பார்த்துக்குவோமேனு...

      கீதா

      நீக்கு
    2. அன்பின் அம்மா ..
      தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மகிழ்ச்சி....

      ஏழை மாணவிகளுக்கு அன்பும் ஆதரவும் காட்டிய ஆசிரியப் பெருமக்களை நான் அறிவேன்..

      அதன் வெளிப்பாடே இந்தக் கதை...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. ஆத்தீ... இதில் இருக்கும் அத்தனைபேரும் அந்த "டீச்சரோட ஸ்டூடண்ட்ஸ்"தானா....??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பா.துரை எங்களை அந்தப் பள்ளியில் சேர்த்து விட்டார்.
      மீண்டும் படிக்கப் போகிறோம். பாரதி.

      நீக்கு
    2. மீண்டும் பள்ளி பருவம் நல்லா இருக்கும் இல்லே அக்கா!
      அதுவும் நாம் எல்லோரும் சேர்ந்து எந்த கவலையிம் இல்லாமல் .

      நீக்கு
    3. அன்பின் நெஞ்சங்களை பள்ளி மாணவிகளாக்கியதில் மகிழ்ச்சி....

      நீக்கு
    4. அன்பின் கோமதி, மீண்டும் பள்ளிக்கூடம் நாம் எல்லோரும்
      சேர்ந்து போனால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்.

      இப்பொழுது புரிந்து கொண்ட வாழ்க்கை மறந்து
      சிறுவர்களாய் சிறுமிகளாய் கலந்து உண்டு,களித்து

      என்ன் ஆனந்தம். அன்பின் துரையின் பெருந்தன்மையைச்
      சொல்லவார்த்தைகளில்லை.

      அப்பொழுது பெரியவர்களாகத் துடித்தோம்.
      இப்போது 60 வருடங்களைத் தாண்டிப் பின் நோக்கிப் பாய்கிறது.

      மனித மனத்துக்கு ஓட்டம் குறைவில்லை.
      நம் பள்ளி இப்போது எங்கள் ப்ளாக்.

      நீக்கு
    5. அன்பு துரைக்கு மீண்டும் நன்றி.

      நீக்கு
  13. கதை படித்தேன்,அழகாக இருந்தது அன்பு என்ற வார்த்தை பலருக்கும் பிடிக்கவில்லை போல,
    கல்பனாவின் நல்ல குணம் வாழ்க...!

    (இவன் -பூந்தோட்ட கவிதைக்காரன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தோட்டக் கவிதைக்காரனின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கதை மிக் மிக அருமை.

    //ஆமாம் கல்பனா... இனிமே உன் கையில நான் சின்னப் பிள்ளை தான்!...
    எனக்கு மறுபடியும் அம்மா கிடைச்சிருக்கா!...//

    கண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்து விட்டது.
    அன்பு அது தரும் தெம்பு இனி 10 பிள்ளைகள் என்ன ! அதற்கு மேலும் குழந்தைகளுக்கு இனி டீச்சர் பாடம் நடத்துவார்.

    //மறக்க முடியுமா கல்பனா... உங்களையெல்லாம்... ஜானகி, பாலா, வேணி, கமலி, ரேவதி, கீதா, கோமதி, பானு, அந்த ஆதிரா, ஏஞ்சல்.. - அடடா எப்படிப்பட்ட ஸ்டூடன்ஸ் நீங்க எல்லாம்!.. நெஞ்சுக்குள்ளேயே இருக்கீங்க!...//


    ஆஹா! அன்பான டீச்சர் மாணவிகளா நாங்கள் எல்லாம்?
    அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கதையினை ரசித்து எழுதிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. நல்ல கதை கொடுத்த சகோ துரைசெல்வராஜூ அவர்களுக்கும், கதையை கேட்டு வாங்கி போட்ட ஸ்ரீராமுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்கிழ்ச்சி.. நன்றி...

      முதல் முறையாக ஸ்ரீராம் கதை எழுதித் தருமாறு கேட்டது தான்...

      அதன் பிறகு ஆர்வம் பெருகி
      எழுதி அனுப்புகிறேன்...

      இப்படியான கதைகளுக்குள் பயணிக்கும்போது ஏற்கனவே இளகிக் கிடக்கும் நெஞ்சம் நீராக உருகி விடுகின்றது...

      வாழ்க ஸ்ரீராம்...
      வளர்க எபி...

      நீக்கு
    2. மற்ற நண்பர்களும் கதை தொடர்ந்து அனுப்புவார்கள் என்றே காத்திருக்கிறேன்.

      நீக்கு
    3. தங்களது வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. //என்றும் மாறாத இளம் புன்னகை சிலரது முகத்தினில் தான் நித்ய வாசம் செய்யும்...// சிரித்த முகத்தை எத்தனை அழகாக வர்ணித்திருக்கிறார்? அது மட்டுமா? தஞ்சை போன்ற சிறு நகர பேருந்துகளின் சாரி வண்டிகளின் நிலை குறித்து சொல்லியிருப்பது முற்றிலும் சரி.
    "அனபு எங்கே இருக்கிறது?" உங்கள் கதையில் வழிந்து ஓடுகிறது சார். காலை வேளையில் அதில் முங்கி எழ வைத்து விட்டீர்கள். நன்றி, உங்களுக்கும் எ.பி.க்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  18. உணர்வு பூர்வமான, காலத்தில் நடக்கின்ற அலங்கோலங்களைக்்கொண்ட கதை. ரசித்துப் படித்தேன்.

    ஆசிரியையை கணவன் அனுமதி இல்லாமல் அந்தப் பெண் தங்களுடன் வரச் சொல்வது அதீதமாக இருக்கிறது. கல்பனாவின் பின்னணி, ஏன் தைரியமா தங்களோட வரச் சொன்னாங்க என்பதற்கான பின்னணியை இன்னும் சொல்லியிருக்கலாம்.

    மீதி பிறகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அன்பில் விளைந்த அழைப்பு நெல்லை.
      மாயவரத்திலிருந்து நாங்கள் கிளம்பிய போது ஏன் இந்த ஊரை விட்டு போகிறீர்கள்? என்று கேட்டார்கள்.
      சொந்தங்கள் இருக்கும் இடத்தில் கடைசிகாலத்தை கழிக்க என்ற போது, நாங்கள் எல்லாம் சொந்தம் இல்லையா? தாயாய் , பிள்ளையாக இவ்வளவு காலம் பழகி விட்டோம் நாங்கள் பார்த்துக் கொள்ள மாட்டமோமா என்றார்கள் .
      அந்த டீச்சரும் உடனே போய் விட மாட்டார். ஆறுதல் வார்த்தைகள் கிடைத்த மகிழ்ச்சியில் என்னை பெத்த அம்மா நல்ல வார்த்தை கூறினாய் வருகிறேன் என்ற வார்த்தை அது.

      நீக்கு
    2. நெல்லை எனக்குத் தெரிந்தே பல குடும்பங்களில் மனைவியைக் கேட்காமலேயே கணவன்கள் முடிவு செய்வதையும் பார்க்கிறேன். கணவன் வீட்டிற்கு தன் நண்பர்கள், உறவினர்களை கூட்டிக் கொண்டு வந்துவிடுவான் ஆனால் மனைவி அவள் நட்புகளையோ, உறவுகளையோ அழைத்துவர இயலாது...

      கீதா

      நீக்கு
    3. அன்பின் நெ.த.. அவர்களைப் போலவே

      ஸ்ரீராம் அவர்களும் கேட்டிருந்தார்...

      இங்கே அன்புக்குரிய கோமதி அரசு அவர்கள் வழங்கிய கருத்துரை சிறப்பு...

      கீதா அவர்கள் சொல்லியிருப்பது போல நூற்றில் ஒன்றிரண்டு..

      வழி மொழிகிறேன்..

      நீக்கு
    4. கோமதி அரசு மேடம் நல்ல சரியான விளக்கத்தைச் சொல்லியிருக்காங்க. ஏற்கத்தக்கது ஆனால் ரிஸ்க் உண்டு.

      எங்கம்மா ஒரு தடவை என் கசின் வீட்டுக்கு வந்தபோது, காபி டீ பால் வேணுமா என்று கேட்டா. அவன் வேண்டாம்னுட்டான். போர்ன்விட்டாவாவது சாப்பிடறயான்னு கேட்டு அதுக்கும் வேணாம்னுட்டான். நான் எங்கம்தீட்ட, போர்ன்விட்டா இல்லாதபோது ஏன் கேட்ட, அவன் வேணும்னு சொன்னா என்ன செஞ்சிருப்பன்னு கேட்டு டென்ஷனாயிட்டேன்.

      நீக்கு
    5. @கீதா ரங்கன் - நீங்க சொல்றதுதானே பெரும்பாலான குடும்பங்கள்ல நடக்கும்.

      பொதுவா பெண்களுக்கு லேடீஸ் ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. ஜென்ட்ஸ் நண்பர்களை பொதுவா வீட்டுக்கு கூட்டி வர்றாங்களா? சந்தேகம்தான். எல்லாம் கணவனின் யோக்கியதையைப் பொறுத்து இருக்கு

      நீக்கு
    6. நெல்லைத் தமிழரே, இந்த விஷயத்தில் எனக்கு நடந்திருக்கிறது. கல்யாணம் ஆன புதுசிலே சென்னை அம்பத்தூர்க் குடித்தனத்துக்கு என்னைத் தேடிக் கொண்டு என் சிறு வயது நண்பர்கள் வருவார்கள். உறவும் கூட, நட்பும் கூட! அவர்களை எல்லாம் வரவேற்று உபசரித்திருக்கிறேன். இதுவே என் அப்பா வீட்டில் இருந்திருந்தால் நடக்காது. அப்பா வாசலிலேயே பேசி அனுப்பி விடுவார். ஆகவே எல்லா ஆண்களும் இப்படித் தான் எனச் சொல்லக் கூடாது/முடியாது. இப்போவும் நீங்க உட்பட என் அனைத்து நண்பர்களையும் வரவேற்று உபசரிக்கிறோம் எனில் அது யாரால்? :)))))) எனக்குத் தெரிந்த அளவுக்கு அவருக்கும் என் எல்லா நண்பர்களையும் பற்றித் தெரியும். ஆகவே சந்திக்கையில் புதுசாக இருக்காது.

      நீக்கு
  19. அன்பின் ஜி
    பேருந்தில் நானே பயணித்தது போன்ற உணர்வு.

    பல இடங்களில் உண்மைநிலை இப்படியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. ரசித்துப் படித்தேன். சந்தோஷம்.

      நீக்கு
    3. அன்பின் ராமன்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  20. கல்பனாவின் நல்ல மனம் வாழட்டும்.

    கதை சொன்ன விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  21. ஸ்ரீராம் துரை அண்ணா அண்ட் எல்லோருக்கும் வணக்கம்...

    கணினி படுத்தல்...கரண்டு வேறு போய் போய் வருது. சில சமயம் நிறைய நேரம் போயிடுது....வெங்கட்ஜி தளம் ஓப்பன் பண்ணியதும் கணினி ஹேங்க் ஆகிடுச்சு. இப்பல்லாம் படம் நிறைய இருந்துச்சுனா உடனே கணினி ஹேங்க் ஆகிறது.

    க்ரோம் ஓப்பன் பண்ணினா பிரச்சனை...க்ளீனர் போட்டு கொஞ்சம் மெமரி க்ளீன் செஞ்சு வேண்டாத குப்பை எல்லாம் நீக்கிட்டு, இதோ இப்பத்தான் வர முடிஞ்சுச்சு...கணினிக்கு வயசாகிடுச்சே. இன்னும் அப்புறம் ஃபைல்ஸ் எல்லாம் ஆர்கனைஸ் செய்யணும்...வேண்டாததை நீக்கி கொஞ்சம் வேலை இருக்கு கணினியில...

    அதான் லேட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை சிரமங்களுக்கிடையேயும்
      வருகை தந்து கருத்துரைத்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  22. துரை அண்ணே இப்படிக் கண்ணுல தண்ணி வர வைச்சுட்டீங்களே!

    ஆஹா! எங்க எல்லாரையும் ஸ்கூல்ல இட்டாந்து....சூப்பர் அண்ணா.

    ஆமாம் துரை அண்ணா பார்த்துக்குவோம்ல டீச்சரை. அதுவும் இங்க எபி க்கு வரச் சொல்லிடுங்க அத்தனை பேரும் போட்டி போட்டு டீச்சரை பார்த்துக்கிட மாட்டோம்?!!

    எங்களை எல்லாம் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி துரை அண்ணா...

    கதை அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எல்லாம் இருக்கிற நம்பிக்கையில் தான் கல்பனா அப்பைச் சொல்லியிருக்கிறாள்...

      நீக்கு
  23. ஒட்டு கேக்கதுக்காக டிக்கெட்டை கேன்சல் பண்ணி போயி ஹா ஹா ஹா

    அந்த இடத்தை மிகவும் ரசித்தேன் துரை அண்ணா. உழவூருக்கு டிக்கெட் வாங்கிட்டு கல்பானாவும் டீச்சரும் பேசுறத ஒட்டுக் கேட்க ஓரத்தநாடு டிக்கெட் வாங்கி ஹா ஹா

    அப்படி ஒட்டுக் கேட்டதுனால கதையும் கிடைச்சுச்சுல்லா...!!!!!!

    டீச்சரும் ஓரத்தநாடுதானோ...

    கல்பனாவின் மனம் வாழ்க...இப்படியும் இருக்கிறார்கள் நிச்சயமாக இருக்கிறார்கள்...

    கதை ஓட்டம் அருமை.

    அட! கதை ஒட்டுக் கேட்டவருக்கு அந்த பேருந்தின் லொட லொடவிலும் கஷ்டப்பட்டு ஒட்டுக் கேட்டு எல்லாம் இந்த எபி மக்களுக்காக கதை சொல்லணும்னு ....சூப்பர் சூப்பர்...

    //இப்போ அன்பு எங்கேம்மா இருக்கு?...

    அன்பா?... எங்கே..ன்னு தெரியலை கல்பனா!..

    மெலிதாகச் சிரித்துக் கொண்ட கல்பனா -//

    சொல்லாடல் ரசிக்க வைத்தது அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி...

      உண்மையான அன்பினை வெளிப்படுத்த வேண்டாமா!...

      தவிரவும் டீச்சர் இருப்பது ஒரத்தநாடு அல்ல..
      பட்டுக் கோட்டையில்....

      அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  24. துரை அண்ணா நன்னி நன்னி! கேட்டோ!

    எதுக்குனு சொல்லுங்க பார்ப்போம்...ஹிஹிஹி

    நெல்லைய சொல்லலை க்ளாஸ்ல அப்ப எனக்கு அவர் சீனியர்!! ஹெ ஹெ ஹெ ஹெ...

    சரி சரி ...போனா போகுது....நீங்க சொல்லிருக்கறது கேர்ல்ஸ் ஸ்கூல். நெல்லை ஸ்ரீராம் கில்லர்ஜி எல்லாம் பாய்ஸ் ஸ்கூல்!! கோமதிக்கா பானுக்கா, கீதாக்கா எங்களுக்கு கொஞ்சம் சீனியர்தான் ஆனாலும் அதிரா, ஏஞ்சல் எங்க கூட சேர்ந்து நாங்கல்லாம் என்னா அட்டகாசம் பண்ணிருக்கோம்...ஹா ஹா ஹா

    அதுவும் பாய்ஸ (ஸ்ரீராம், நெல்லை, சீனியர் கௌ அண்ணா, துரை அண்ணா எல்லாரையும்) நாங்க எல்லாம் ஓட்டுவோமாக்கும்...ஹா ஹா ஹா வல்லிம்மா, காமாட்சிம்மா எல்லாம் எங்களுக்கு ரொம்ப சீனியராக்கும்!!

    சரி அந்த ஸ்கூல் பெயர் எ ப வா? (எங்கள் பள்ளிதானே!!) ஓ எஸ் (ஹையோ இது வேற யாரும் இல்லீங்கோ...our school!!) தானே!! ஹா ஹாஹ் ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...
      பசங்க படிக்கிற ஸ்கூல் பக்கம் நமக்கு என்ன வேலை!?....

      நீக்கு
  25. //கோமதிக்கா பானுக்கா, கீதாக்கா எங்களுக்கு கொஞ்சம் சீனியர்தான்// அது உங்கள் பள்ளியில், இது துரை சாரின் எங்கள் பள்ளி, நாமெல்லாம் ஒரே வகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா ஹா ஹா ஹா..சரிசரி..ஹூக்கும் எங்கள் பள்ளினுதானே நானும் சொல்லிருக்கேன்...சரி சரி நீங்களும் எங்க கூடாத்தான் அப்படியே வைச்சுக்குவோம்!!...

      கீதா

      நீக்கு
    2. எந்த மாற்றமும் இல்லை..
      அதே.. அதே... சபாபதே...

      நீக்கு
  26. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  27. கதை மிகவும் அருமை... ரசித்துப் படித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. இன்று துரை அண்ணன் கதையோ.. வித்தியாசனான கோணத்தில் ஒரு அழகிய கதை...ஓடும் பஸ் இல் வைத்தே அவசர முடிவெடுக்கிறா கல்பனா:)...

    பஸ் இன் நிலைமையை ஆரம்பமே ஓவரா பில்டப்பூ குடுத்தமையால:)... எங்காவது சீட் கழண்டு ரோட்டில் ஆராவது விழுந்திடப்போகினமோ எனப் பயந்து கொண்டே படிச்சேன்:).. ஆனாலும் நல்ல பஸ்தான்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை..
      சீட் எதுவும் கழண்டு விழவில்லை..

      அப்படியான பஸ்ஸில் உங்களை அழைத்துச் செல்வேனா?..

      நீக்கு
  29. கதை அன்பை இழந்த தாயின் மனநிலை. ஹிந்துவல்லாத மதம் மாறி பெயரை மாற்றி விட்டானோ? எப்படி இருந்தாலும் தாய் எதையுமே சொல்லவில்லை. என்னவோ பிள்ளைகள். கூடவே இருந்தாலும் சில ஸமயங்களில் அவர்கள் அன்பை வெளிப்படுத்த முடியாத சூழ் நிலையில் கூட இருக்கிரார்கள். மாணவிக்கு தரமான அன்பைத் தரமுடிந்தது. எல்லா மாணவிகளுமே சில டீச்சரிடம், விசேஷமான அன்பைக் கொண்டவர்கள். கதை வண்டியில் அழகாக ஓடுகிறது. ஸரியாகச் சொன்னீர்கள், எ.பி.ஸ்கூலிற்கு வந்தால் அன்பு அபரிமிதமாகக் கிடைக்கும். கல்பனா குணவதி. டீச்சருக்கு இன்னும் வயது இருக்கிறது. பிள்ளை மனம்மாறி வந்து விடுவான். பாராட்டுகள் கதைக்கு. எல்லாரையும்விட ஸீனியரான நான் சொல்லுகிறேன். தி.கீதா ஸரியாகக் கணக்கு போட்டிருக்கிரார். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு காமாட்சி மா. துரையின் கணக்குப் படி நாம் எல்லாம் ஒரே
      வயது.
      உங்க சீனியாரிட்டிக்கு மதிப்பு வைத்து ஒன்பதாம் வகுப்பில் வைத்திருக்கிறார். நான் எட்டாம்
      வகுப்பு,கீதா சாம்பசிவம் ஏழாம் வகுப்பு.மற்றவர்களெல்லாம் ஆறாம் வகுப்பு. ஹாஹ்ஹா.

      நீக்கு
    2. ஆகா..
      நல்ல கலகலப்பான கருத்துரை...
      பள்ளிக்கூட நாட்களுக்கே திரும்பி விட்டது மனது..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    3. அதே மகிழ்ச்சி.நன்றி.இருவருக்கும். அன்புடன்

      நீக்கு
  30. டீச்சர் கர்ல்ஸ் ஸ்கூல் டீச்சர் போல... தெரிந்திருந்தால் டியூஷனாவது படித்திருப்பேன்...!

    பதிலளிநீக்கு
  31. திருதுரை ராஜின் கைவண்ணத்தில் கதை கல கலக்கிறது ரசித்துபடித்தேன் நல்ல நடை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  32. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை.. என்னடா இது நம்ப ஊருக்குப் பக்கத்தில வண்டிபோகுதுன்னு ஏறிப்பாத்தா, எங்கள் பிளாகே ஒரே ஸ்கூல்ல படிச்ச கதையெல்லாம் ஓடுதே. நல்ல செவ்வாக்கெழமதான் இது..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்...

      உண்மையில் நல்ல செவ்வாக் கிழமை தான்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  33. அருமையான கதை, இல்லை, நிகழ்வு!!
    கண்டக்டரும் இவர்கள் பேச்சைக் கேட்டிருந்தால் டிக்கட் கிழித்திருக்க மாட்டாரோ எனத் தோன்றியது!
    மனம் நிறைந்தது.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கண்டக்டர் கடைசி சீட்டில் இருந்ததாலும் வண்டியின் லொட லொட சத்தத்தாலும் இவர்கள்து உரையாடல் அவரது காதுகளில் விழவில்லை...

      வாழ்த்துரைக்கு நன்றி...

      நீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    நல்ல அருமையான கதை. மனதை நெகிழ வைத்து விட்டது. குண்டும் குழியுமான வழித்தடங்கள் இருந்தாலும், தடங்கல் இல்லாமல் கதை பயணித்தது. அவ்வளவு அருமையாக கதையை பயணிக்க வைத்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு அன்பினால் இணைக்கப்பட்ட பள்ளி மாணவி என்ற முறையில் நன்றி கூறிக் கொள்கிறேன். எங்கள் பள்ளியில் ஆசிரியையிடம் கற்ற அந்த அன்புதான் எத்தனை வயதான பின்னும் மாறாது எங்கும் எழுதி பாந்தமாய் பதிய வைக்க முடிகிறது.

    அன்று அன்பினால் எங்களை கட்டி வைத்த அந்த ஆசிரியைக்கு நன்றி. கதை கேட்பவரோடு ஒரே மூச்சில் கதையை படிக்க வைத்து, அன்பு கயிற்றை நினைவூட்டி அதில் மறுபடியும் கட்டுறச் செய்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கும் மீண்டும் நன்றி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஒன்றுதான் எத்தனை காலம் ஆனாலும் மாறாதது..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  35. 'அவன் பேரெல்லாம் மாறிப் போச்சு..ன்னு..' அன்புவின் இன்னொரு கதையையும் நாலே வார்த்தையில் சொல்லி விட்டீர்கள்.

    பேசுவதற்கும், நினைப்பதற்கும் வித்தியாசம் காட்ட "..." '....' இப்படி குறியீடுகள் போட்டு எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.

    பஸ் பயணுத்தூடையே கதை சொன்ன நேர்த்தி பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  36. அன்பின் ஐயா...

    அந்த எழுத்துருவில் மேற்கோள் குறிகளுக்கு ஆங்கிலத்துக்கு மாற வேண்டியதாக இருக்கிறது....

    இருப்பினும் கவனத்தில் கொள்கிறேன்..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  37. கதை மிக அருமைன, வழக்கம் போல் அன்பு ததும்பும் வரிகளுடனான படைப்பு.

    பெரும்பான்மையான ஆசிரியர்களுக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்புதான், அன்பான வரவேற்பும் தான்.. குறிப்பாகப் பழைய மாணவர்களிடத்தில், நல்ல ஆசிரியரராகக் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்துவிட்டால். என் ஆசிரிய வாழ்வின் அனுபவத்தில் சொல்லும் வரிகள்.

    கதையை ரசித்தேன். வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்....

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      ஆசிரியராகிய தாங்கள் தங்களது பார்வையில் கதையை உற்று நோக்கி கருத்துரை சொன்னதற்கும்
      அன்வின் வாழ்த்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி....

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!