சுருக்கமாக......
ஒரு விளக்கம்.. முந்தைய பதிவில் கமெண்ட்ஸுக்குஒரு சிறு விளக்கம். நான் பஸ்ஸில் காசி நோக்கிச் செல்லவில்லை. (யமுனை) ஆற்றங்கரை நோக்கிச் செல்லும்போது எடுத்த புகைப்படங்கள். நடந்து போகவில்லை. பஸ்ஸில் சென்றேன்.
இனி 'பக'வின் தொடர்ச்சி....
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அதைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். இதில் நான் அறியாமல், சில விஷயங்கள் சொல்லாமலோ, மாற்றியோ சொல்லி இருக்கலாம். அதை கீதா அக்கா திருத்துவார். அல்லது விஷயம் தெரிந்த யாரும் திருத்தலாம். இதில் நான் சிறுவன்.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அதைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். இதில் நான் அறியாமல், சில விஷயங்கள் சொல்லாமலோ, மாற்றியோ சொல்லி இருக்கலாம். அதை கீதா அக்கா திருத்துவார். அல்லது விஷயம் தெரிந்த யாரும் திருத்தலாம். இதில் நான் சிறுவன்.
காசி யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று மணல் எடுத்துக் கொண்டு பாதுகாத்துக்கொண்டு காசி கிளம்புவார்கள். அந்த மணலைதான் வேணி மாதவர் என்கிறார்களா தெரியவில்லை. முதலில் திரிவேணி சங்கமம். அதற்கு அலஹாபாத் செல்லவேண்டும். சிலர் காசி சென்று அங்கிருந்து அலஹாபாத், மறுபடி காசி பிறகு கயா மறுபடி காசி என்று சென்று வருகிறார்கள். அது அவரவர்கள் பயணத்திட்டத்தைப் பொறுத்தது, அல்லது வழக்கத்தைப் பொறுத்தது, அல்லது அழைத்துச் செல்பவர்களைப்பொறுத்தது!
திரிவேணி சங்கமத்தில் சங்கல்பம், ஸ்ராத்தம், வேணி தானம், திரிவேணி சங்கம முழுக்கு முடித்து, அட்சய வடம் அடிப்பாகம் தரிசித்து, காசியில் ஹிரண்ய ஸ்ராத்தம் செய்து, அட்சயவடம் நடுபாகம் தரிசித்து, கயா சென்று அங்கு ஸ்ராத்தம்செய்து, அட்சயவடம் மேல்பாகம் / விஷ்ணுபாதம் சென்று பிண்டம் வைத்து ஸ்ராத்தம் முடித்து, மறுபடி காசி வந்து பஞ்ச கட்ட ஸ்ராத்தம்(படகில் சென்று செய்வது. படகிலேயே பிண்டம் தயார் செய்வார்கள்) முடித்து தம்பதி பூஜை முடித்து திரும்பவேண்டும் என்று பொதுவாகச் சொல்லலாம். அதாவது நம் முன்னோர்கள் ஆன்மா கயாவில் இல்லாது போகும் பட்சத்தில் காசியில் இருக்கலாம் என்கிற அடிப்படையில் காசியில் வந்து ஒரு ஸ்ராத்தம். தம்பதிபூஜை இந்தக் காரியங்களின் சம்பூர்ணத்தைக் குறிக்கிறது.
தன்னைப் பார்த்தாலே (பார்க்கும் அல்லது தீண்டும்) மக்களுக்கு மரணம் இல்லாதிருக்கவேண்டும் என்று வரம் வாங்கிய கயாசுரன் எனும் அரக்கனை, அதனால் யாரும் மரணம் அடையா நிலையில் பூமியின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட, தேவர்களின் அல்லது யமனின் வேண்டுதலுக்கிணங்கி கயாசுரனை ஒடுக்க எண்ணிய விஷ்ணு தனது ஒரு பாதத்தால் அவனை அழுத்த அவன் பாதாள லோகம் செல்வதாகவும் அப்போது அவன் வேண்டுதல்படி அந்த ஊர் அவன் பெயரால் கயா என்றே அழைக்கப்படுவதாகவும், அவன் பசியைத் தீர்க்க தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பித்ருக்களுக்கு பிண்டம் கொடுக்க வந்து கொண்டே இருப்பார்கள், அப்படிச் செய்து அவர்களும் அவர்கள் குலத்தோரும் முக்தி பெறுவார்கள் என்றும், அதனாலேயே உனது பசி தீரும் என்று விஷ்ணு கயாசுரனிடம் சொன்னதாகவும், அப்படி யாருமே அங்கு பிண்டம் கொடுக்க வராமல் போகும் நாள் உலகத்தின் முடிவு (பிரளய) நாளாக இருக்கும் என்றும், அந்தப் பிரளய காலத்தில் கிருஷ்ணன் ஆலிலையில் மிதந்து வருவார் என்றும் சொன்னதாக ஐதீகம்.
அட்சயம் என்றால் திவ்யமானது, வளர்ந்துகொண்டே இருப்பது, அழிவில்லாதது என்று பொருள். வடம் என்றால் மரம். இங்கிருக்கும் ஆலமரம் அட்சயவடமாக பார்க்கப்படுகிறது. வேர்ப்பாகம் ப்ரயாக்ராஜிலும், நடுப் பாகம் காசியிலும், மேல் நுனி பாகம் கயாவிலுமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அல்லது அந்தந்த ஊர்களில் ஊருக்கும் அந்த மரங்களின் அந்தந்த பாகம் சிறப்புப் பெறுகிறது என்றும் கொள்ளலாம்.
அந்த அட்சய வடம் எனும் ஆலமரம், தானும் தேவருலகத்துக்கு வந்து விடுவதாகச் சொன்னபோது பூமியில் அதற்கு இருக்கும் கடமைகளைச் சொல்லி, பிரளய காலம் வரும்போது அதுவும் தேவர் உலகம் சேரும் என்றும் சொன்னதாக புராணம்.
கயாவில் இருக்கும் அட்சயவடத்தில் நம் முன்னோர்கள் காத்திருப்பார்கள், நான் பெற்ற மகன்களில் ஒருவனாவது என்னைக் கடைத்தேற்ற இங்கு வருவானா என்று காத்திருப்பார்களாம். நாம் அங்கு சென்று பிண்டம் வைத்து வழிபட்டதும் அவர்கள் திருப்தி அடைந்து மேலுலகம் செல்வதாக நம்பிக்கை. இதை பண்டிட் சொல்லும்போது அசையாத மனமும் அசையும், மனம் கலங்கும். நான் இங்கு சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறேன். அங்கு மிகவும் விளக்கமாக சொல்லப்படும். அப்படி பிண்டம் வைத்து கயாவில் ஸ்ராத்தம் செய்யும் பட்சத்தில் முன்னர் சில தலைமுறைகளும், பின்னர் சில தலைமுறைகளும் பயனடைவார்கள் என்று சொன்னார் பண்டிட். முன்பின் எத்தனைத் தலைமுறை என்று அவர் சொன்ன எண்ணிக்கை கவனத்தில் இல்லை. அது முக்கியமும் இல்லை!
அலகாபாத்தில் யமுனைக்கரையில் முதலில் சங்கல்பம் செய்து கொள்வார்கள். பின்னர் ஜோடியாக வந்திருப்பதைப் பொறுத்து ஸ்ராத்தம் ஹிரண்யமாகவோ, அன்னஸ்ராத்தமோ செய்கிறார்கள். தம்பதியாக வருபவர்கள் முதல் தடவை வரும்போது வேணி தானம் செய்யலாம். அடுத்தடுத்த வருகைகளில் அவசியம் இல்லை. கணவன் மனைவியை ஜோடியாக அமரவைத்து, பரஸ்பரம் கால் அலம்பி சுத்தம் செய்தபின் ஒரு மந்திரம் சொல்லக் சொல்வார்கள். அதாவது மனைவி கணவனைப் பார்த்தும், பின்னர் கணவன் மனைவியைப்பார்த்தும் சொல்லச் சொல்வார்கள்.
இதுமாதிரி இதுமாதிரி நான் உங்களுக்கு அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ இதுமாதிரி இதுமாதிரி செய்த தப்புகளை மன்னிச்சுடுங்க... இதுமாதிரி இதுமாதிரி மரியாதை இல்லாம பேசி, இதுமாதிரி இதுமாதிரி நடந்திருந்தா மன்னிச்சிடுங்க.... என்றெல்லாம் சொல்லணும்! பாதிக்குமேல் இந்தக்காலத்துக்குப் பொருந்தாது. அந்த 'அறியாமல் செய்த பிழைகள்" லிஸ்ட்டில் என்னென்னவோ வரும்.
பிறகு கணவன் மடியில் மனைவியை அமரவைத்து தலை முடியைப் பிரித்து மூன்று பிரிவாக்கி பின்ன வேண்டும். பெண்களின் பின்னல் பார்க்கும்போது இரண்டுதான் இருப்பது போல தோன்றும். ஆனால் மூன்று பின்னல்களைக் கொண்டது. இந்த விளக்கத்தை அங்கிருந்த வாத்தியார் ஸ்பெஷலாகச் சொன்னார். எதற்கோ? சரஸ்வதி நதியைக் குறிக்கிறாரோ என்னவோ! பின்னி பூ வைத்த பின் நுனிமுடியில் கொஞ்சூண்டு கத்தரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு ஆண்களும் சிறு வபனம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்வோரும் உண்டு. கத்தரித்த அந்த முடியை மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கில் வைத்து கங்கையில் திரிவேணி சங்கமத்தில் விடவேண்டும். பின்னர் திரிவேணி சங்கமத்தில் முழுக்கு.
இங்கிருந்து யமுனை.. எதிர்ப்பக்கமிருந்து கங்கை... இரண்டும் சேருமிடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் (அந்தர்வாகினி) சரஸ்வதி நதி. இந்த மூன்று நதிகள் சேருமிடத்தில் முங்கிக் குளிக்க வேண்டும். கங்கையில் குளிப்போருக்கு(ம்) முன்பின் பல தலைமுறைகளின் பாவம் தீருமாம். நம்பிக்கை.
என் அப்பா போனதில்லை. என் தாத்தா போயிருக்க வாய்ப்பில்லை. கொள்ளு, எள்ளு தாத்தாக்களின் யாராவது சென்றிருப்பார்களா, தெரியாது. என் மகன்களுக்கு இப்போதைக்கு இதிலெல்லாம் நம்பிக்கையும் இல்லை, சுவாரஸ்யமும் இல்லை. பின்னர் அந்த சுவாரஸ்யங்கள் வருமா, தெரியாது!
சுகுமார் சென்னையிலிருந்து கிளம்பும்முன்னர் அளித்த அட்வைஸ்... 'கங்கை உட்பட அங்கு எந்த புண்ணிய நதியிலும் நீராடும் முன்பு தங்குமிடத்திலிருந்தே குளித்து சுத்தமாகப் போ... நதியில் இறங்கும் முன்பு சங்கல்பம் செய்யவேண்டும். நதியில் இறங்கியதும் நதியை வழிபடு...'
எனவே ஹோட்டலிலிருந்து கிளம்பும்போதே குளித்து விட்டுதான் கிளம்பினோம். எந்த நதியில் இறங்கும் முன்னரும் சங்கல்பம் செய்து கொண்டுதான் இறங்கவேண்டுமாம்.
கரையிலேயே பண்டாக்கள் அலைகிறார்கள். பதினெட்டு வயது இருபது வயது மதிக்கத்தக்க பண்டா கூட ஒருவர் கண்ணில் பட்டார். முதலில் காசு ஒன்றும் தரவேண்டாம் என்றுதான் சொல்வார்கள். எல்லாம் முடித்தபின் "மனசுபோல" கொடுக்கச் சொல்வார்கள். கரையில் செருப்பை விட்டால் அதைப் பார்த்துக்கொள்ள "ஏதாவது" தரச் சொல்வார்கள் அங்கு பூ விற்றுக்கொண்டிருக்கும் பெண்கள், அல்லது இதற்காகவே அமர்ந்து கொண்டிருக்கும் பெண்கள்.
செருப்புகளை கரையிலேயே வைத்து விட்டு நதியில் இறங்கவேண்டும். துணிகளைத் துவைக்கக் கூடாது. யாராவது செருப்புக்கு காலுடன் நதியில் இறங்கி விட்டால் அங்கிருக்கும் படகோட்டிகள் முதல், அங்கிருக்கும் பண்டா, யாசகர்கள், சாமியார்கள், வியாபாரிகள் வரை அனைவரும் ஒரே குரலில் அலறுவார்கள். அவ்வளவு கட்டுப்பாடு. நம்மூர் நினைவு வராமல் இருக்குமா எனக்கு? சொல்லுங்கள். நாம் நதிகளில் என்னென்ன செய்கிறோம்?!!
இதுபோன்ற பயணங்களை மனைவியுடன் சேர்ந்து மேற்கொள்வதே சிறந்தது. ஸ்ராத்தம் செய்ய மனைவி அவசியம். இல்லாவிட்டால் பாதி பலனாவது கிடைக்குமா தெரியாது. ஸ்ராத்தம் செய்யும் இடத்தில் பிண்டம் மனைவி இருப்பது சிலாக்கியம். இன்னொருவர் நாம் செய்ய வேண்டிய கர்மாவுக்கு பிண்டம் தயார் செய்து தருவது தர்மசங்கடம்... அதுவும் கயாவில் 80 பிண்டங்கள்....
நாங்கள் போன சமயம் கும்பமேளா முடிந்த சமயம். பூர்ண கும்பமேளா 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். பாற்கடலில் கடைந்து எடுக்கப்பட்ட அமுதக்கலசத்தை எடுத்துச் செல்லும்போது அதிலிருந்து நான்கு துளிகள் விழுந்த இடம் அலஹாபாத், ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக். இந்த நான்கு இடங்களிலும் கும்பமேளா நடக்கும். ஆறு வருடங்களுக்கு ஒருமுறை அர்த்தமேளா ஒன்றும் நடக்குமாம். 144 வருடங்களுக்கு ஒருமுறை மஹா கும்பமேளா.
ப்ரயாக்ராஜிலதாவது அலகாபாத்தில் பூர்ணகும்பமேளா 2025 இல் நடைபெறும். இப்போது முடிந்திருப்பது அர்த் கும்பமேளா. மூன்று வருட இடைவெளியில் ஹரித்வாரில் கும்பமேளா.நாசிக்கிலும், உஜ்ஜையினியிலும் பூர்ண கும்பமேளா மட்டும்தான். அர்த் கிடையாது. 2028 இல் டியூ!
கும்பமேளா சமயம் போயிருந்தால் நடக்கக் கூட இடம் இருந்திருக்காது. நல்லவேளை. நாங்கள் போன சமயம் எல்லாக் கோவிலிலுமே கூட்டமில்லாமல் தரிசிக்க முடிந்தது. வெயில் ஆரம்பிக்கும் காலம். போகப்போக"மாஹாவெயில்" வருமாம்!! நாங்கள் பிழைத்தோம்.
ஆத்மருணம், தேவருணம், பித்ருருணம் இவை மூன்றும் முறையே ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்), காசி, கயாவில் கழிக்கப்படுவது. சமணர்களின் தத்துவம் கூட படிப்படியான பயிற்சிகளால் ஆத்மாவை மறைக்கும் கர்மங்களை நீக்கலாம் என்கிறது. ஆத்மகடன்களிலிருந்து விடுபட்டு, பித்ருக்களையும், தேவர்களையும் திருப்தி செய்து வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நம்மை அழைத்துச் செல்லும் டிராவல்ஸ்காரர்களை கவனமாக நாம் தெரிவு செய்யவேண்டும். சமீபத்தில் கேதார்நாத் சென்று வந்த வித்யா சுப்பிரமணியம் மேடம் பணிக்கர் ட்ராவல்ஸே மோசம் என்று சொல்லியிருக்கிறார். அங்கு பின்னூட்டமிட்ட ஒருவர் ஜெயலட்சுமி டிராவல்ஸ், மஹாலக்ஷ்மி டிராவல்ஸ் பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் குறிப்பிடும் ஜெயலட்சுமி டிராவல்ஸ் இவர்தானா என்று தெரியவில்லை.
என் சித்தப்பா இந்த டிராவல்ஸ்காரர்களையே அணுகுவதில்லையாம். நேராக சங்கரமடத்தில் முன்பதிவு செய்துவிட்டால், மற்றவர்களுக்கு அவர்கள் ஏற்பாடு செய்து விடுகிறார்கள். இதுமாதிரி அவரவர்கள் சார்ந்த சமூகத்துக்கு வசதிகள் உண்டு என்று நம்புகிறேன். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நகரத்தாருக்கு கட்டளை உண்டு.
எங்கள் டிராவல்ஸ் காரர்களிடமும் குறைகள் இருந்தன. சில இடங்களை அவசரப்படுத்தி அழைத்து வந்து விட்டனர். உதாரணமாக சங்கர மடம். நாங்கள் கீழே மட்டுமே பார்த்தோம். மாடிக்கெல்லாம் செல்லலாம் என்று பின்னர் தெரிந்தது. இன்னும் யோசித்துப் பார்த்தால் நாங்கள் சென்ற சங்கரமடம் கோவிலே இது இல்லை, அதுவேறு என்று இப்போது தெரிகிறது. அதேபோல வேறுசில நடைமுறைகள். ப்ரயாக்ராஜில் எங்களை அந்த கோட்டைக்குள் அழைத்துச் செல்லவே இல்லை. அதனால் அங்கே உள்ளிருக்கும் பெரிய ஸ்வாமி சிலைகளையும், அதைவிட அட்சயவடத்தின் முதல் பாகத்தையும் பார்க்கவே இல்லை.
சிலர் இங்கிருந்து கிளம்பும்போதே சாஸ்திரிகளுடன் சென்று விடுகின்றனர். அல்லது அந்த ஊரில் இருக்கும் தங்கள் வாத்தியார் அல்லது நட்புகள் மூலம் தெரிந்த பண்டிட்களை அமர்த்திக்கொள்கின்றனர்.
அங்கிருக்கும் பண்டிட்டுகள் பொதுவாக சொல்வது, "இங்கிருக்கும் சாஸ்திரங்கள், சட்டதிட்டங்களே வேறு.. உங்கள் ஊர் சாஸ்திர சட்ட திட்டங்களை இங்கு பேசாதீர்கள். அவைகள் இங்கு மாறுபடும். இங்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். சில விஷயங்களை இங்கு ஸ்ட்ரிக்ட்டாக பார்க்கவேண்டிய தேவை இல்லை...."
ரொம்ப சிரத்தையாக செய்ய வேண்டும் என்றால் ப்ரயாக்ராஜிலேயே இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்து ஒவ்வொரு நாளும் சங்கல்பம், வேணி தானம், ஸ்ராத்தம், திரிவேணி ஸ்நானம், மறுபடி அன்ன ஸ்ராத்தம் என்று செய்ய வேண்டும். இப்போது எங்கே நேரமிருக்கிறது? இதெல்லாம் ஒரே நாளில் முடித்துக் கொண்டு நாங்கள் கிளம்பினோம்.
===============================================================================================
சென்ற வார கிசுகிசுவை ஓரளவுக்கு கண்டுபிடித்து விட்டீர்கள். இதுவும் அதே காலகட்டத்து கிசுகிசுதான். சமீபத்தில் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.
இந்த குமுதம் காரங்க கிட்ட இது ஒரு கெட்ட பழக்கம்.
எதையாவது கேட்டு / போட்டு விடை அறுபதாம் பக்கம், நாற்பத்தெட்டாம் பக்கம் என்றெல்லாம் போட்டு விடுவார்கள்.
அப்போதைக்கு ஓகே... சுவாரஸ்யம். உடனே பார்த்து விடலாம்.
இப்படி பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் இப்போது எப்படி விடை தெரிந்து கொள்வது?
இதை எழுதிய அமைச்சர் யாராயிருக்கும்?
ஃபேஸ்புக்கில் பதிலே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
=================================================================================================
துக்ளக்கில் வாரா வாரம் யாராவது ஒரு வி ஐ பி உடன் வாசகர்கள் கலந்துரையாடல் இருக்கும். அந்தவகையில் திரு சுகி சிவம் அவர்களுடன் 2015 ஆம் வருடம் நடந்த கலந்துரையாடலிலிருந்து... இது நான்கு பகுதிகளாக ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வாரங்களிலும் வெளிவரும். அப்போது இந்த முன்னுரை இருக்காது! ஒரே நேரத்தில் வெவ்வேறு அலசல் வேண்டாம்! இந்தவாரம் இது பற்றி...
======================================================================================================
இப்போ மறுபடி 2015 லிருந்து 1979 ஆம் வருஷத்துக்குப் போறோம். ஒரு நகைச்சுவைத் துணுக்கு! ஓவியர் செல்லம் என்று நினைக்கிறேன். இப்போது இது போன்ற ஜோக்ஸ் வந்தால்?
========================================================================================================
====================================================================================================
வெளியில் நடக்கும் விபத்தையே நான் நேரில் பார்த்தவனல்ல. நான் செல்லும் வண்டியே விபத்துக்குள்ளாக்கப் போகிறது என்றால்? ஆச்சர்யமான அனுபவம்.
ஒரு முக்கியமான அலுவலக வேலையாக தலைமை அலுவலகம் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். ஆஸ்தான ஆட்டோ. மிகவும் நிதானமாக ஓட்டுபவர் அவர். வேகம் எல்லாம் எடுக்க மாட்டார். மாலை நாலேகால் மணி இருக்கும். சாலையில் நல்ல போக்குவரத்து இருந்தது. நாங்கள் அப்போது வந்து கொண்டிருந்த சாலை சற்றே சரிவான சாலை என்பதால் சற்றே வேகம் கூடிய நிலை. திடீரென ஆட்டோக்காரர் "ஸார்.... ஸார்.... ஸார்...." என்று அலறினார்.
ஏனோ எனக்கு உடனேயே அவர் ஏன் அலறுகிறார் என்று புரிந்து விட்டது. "என்ன அண்ணே... பிரேக் பிடிக்கவில்லையா?"
கூட்டத்தில் ஓடும் குழந்தையைப் போல, கட்டுப்பாடிழந்த ஆட்டோ, நின்றுகொண்டிருந்த வாகனங்களுக்கிடையே வேகம் குறையாமல் சென்றுகொண்டிருந்தது வினோதமாக இருந்தது. எங்கள் ஆட்டோ வேகம் குறையாமல் செல்ல, எதிரே டிராபிக்கில் வண்டிகள் ஸ்லோவாகி நின்றுகொண்டிருக்க, இவர் வண்டியை கிடைத்த இடுக்குகளில் திருப்பி ஒட்டிக் கொண்டிருந்தாலும், ஆட்டோ நுழைந்து செல்லும் அளவு பெரிய இடைவெளி ஒரு நிலையில் கிடைக்காததால் முன்னால் நின்றுகொண்டிருந்த டெம்போ மீது சென்று மோதியது எங்கள் ஆட்டோ. பெரிய சத்தம். ஆட்டோவின் முன் கண்ணாடி உடைந்து நொறுங்கியிருக்க, என் அலைபேசி சாலையில் கிடந்தது. அலைபேசியும் சௌக்கியமாக இருந்தது. எனக்கும் பெரிதாக ஒன்றும் ஆகவில்லை என்கிற ஆச்சர்யத்தோடு நான் அதை எடுத்துக் கொண்டு ஓட்டுநரைப் பார்த்தேன். அசைவின்றி இருந்தார். பயந்துபோய் தோளைத்தொட்டு இரண்டுமுறை உலுக்கியதும் நிலைக்கு வந்தார். நான் வண்டி மோதப்போகிறது என்று உணர்ந்த உடனேயே ஓட்டுநர் இருகைக்கு பின்னே இருந்தக் கம்பியை இறுகப் பற்றி அமர்ந்து விட்டேன். மனதில் ஏனோ பயமில்லை. எந்த உணர்வுமே இல்லை. 'அவ்வளவுதான் எல்லாம்' என்று மட்டும் தோன்றியது.
எங்கள் இருவருக்குமே இரண்டு முழங்கால்களும் லேசாக வீங்கி வலி. என் வலது கைவிரல்கள் (இப்போதும்) மடக்க முடியாமல் வலி. வீக்கம் இல்லை. அவருக்கு நெற்றியிலும், வலது கண் அருகிலும் கண்ணாடி குத்தி மிக லேசான கீறல்.
ஆச்சர்யமான எஸ்கேப். அந்த அதிர்ச்சி மட்டும் இரவுவரை நீங்கவில்லை. பின்னால் வந்த வண்டிகள் இடித்திருந்தால் சப்பையாகியிருப்போம். சிக்னலில் நீண்ட தூரம் வண்டிகள் நின்றுகொண்டிருந்த காரணத்தினால் பின்னால் வந்த வண்டிகள் ஸ்லோ ஆகியதாலும் பிழைத்தோம். வீட்டுக்கு வந்ததும் கைகால் கழுவிக்கொண்டு முதலில் கடவுளுக்கு ஒரு நன்றி சொன்னேன்!
நலம் வாழ்க..
பதிலளிநீக்குவாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..
வணக்கமும் நல்வரவும்.
நீக்குஅன்பு ஸ்ரீராம்,
நீக்குஇப்போது உடம்பு தேவலையா. பகவான் காப்பாற்றினார் அப்பா.
ரொம்ப வலித்திருக்குமே.
உடம்பைப் பார்த்துக் கொள்ளவும்.
இனிய காலை வணக்கம்.
இந்தத் தடவை வாராணசி ,இலஹாபாத் எல்லா இடங்களையும் நன்றாக
விவரித்திருக்கிறீர்கள்.
பத்தினியுடன் தான் சிரார்த்தம் செய்வதே ஒத்துக் கொள்ளப் படும்.
எல்லா ட்ராவல்ஸிலும் ஏதாவது சிறு குறை இருக்கத்தான் செய்யும்.
என்ன செய்யலாம்.
கங்கையில் தீர்த்தமாடிய வேளை அனைத்தும் நல்லதாக நடக்கட்டும்.
அமைச்சர் எழுதின கவிதையைப் பார்த்தால் யார் என்று தெரியவில்லை.
அந்த நடிகை ஜோக் பிரமாதம்.
வரவேற்ற துரைக்கும் மற்றவர்களுக்கும் நன்றி.
நீக்குவாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குசிறு வலிகளைத் தவிர வேறொன்றுமில்லை.
சுருக்கமாகச் சொல்லி விட்டேன் என்று கீதாக்கா சொல்லியிருக்கிறார். பத்தினியுடன் ஸ்ராத்தம்தான் சிலாக்கியம். ஆனால் என்ன செய்ய?!
நன்றி அம்மா.
>>> காசி யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று மணல் எடுத்துக் கொண்டு பாதுகாத்துக்கொண்டு காசி கிளம்புவார்கள்...<<<
பதிலளிநீக்குகாசி யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் செல்வதற்கும் முன் - குல தெய்வக் கோயிலிலும் வீட்டருகில் உள்ள கோயிலையும் வழிபட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்....
ஆமாம்... குலதெய்வத்திடம் அனுமதி வாங்கியே எல்லாக் காரியங்களும் செய்யவேண்டும் என்று சொல்வார்கள்.
நீக்கு//அந்த மணலைதான் வேணி மாதவர் என்கிறார்களா தெரியவில்லை. // வேணி மாதவர் எல்லாம் இல்லை. ராமேஸ்வரத்து மணலில் லிங்கம் பிடித்துப் ப்ரயாகையில் திரிவேணி சங்கமத்தில் சிவ சஹஸ்ரநாமம் சொல்லி வழிபாடுகள் நடத்தி அங்கே அந்த லிங்கத்தைக் கரைப்பார்கள். அந்த இடத்தில் இருந்து கங்கை ஜலம் எடுத்துக் கொண்டு திரும்ப ராமேஸ்வரம் போய் ராமநாதருக்கு அபிஷேஹம் செய்ய வேண்டும் என்பது ஐதிகம். நாங்கள் அப்படித் தான் செய்தோம்.
நீக்குநான் ராமேஸ்வரம் செல்லாததால் இந்த விவரங்கள் தெரியவில்லை.
நீக்குகாசியில் மூழ்கி ராமேஸ்வரத்தில் எடுத்த மணலைக் கரைத்து விட்டு அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து ஸ்ரீ ராமலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பயணத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும் என்றும் சொல்வார்கள்... மீண்டும் குல தெய்வக் கோயிலில் சென்று வழிபடுதல் வேண்டும்...
பதிலளிநீக்குஆமாம்.. இதைச் சொல்ல மறந்து விட்டேன். மறுபடி அந்த யாத்திரை ராமேஸ்வ்ரத்தில்தான் நிறைவுறும்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். தலைப்பு திடுக்கிட வைக்கிறேன்? கம்பியில்லா சந்தோஷம். கடவுளுக்கு நன்றி.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா. நன்றி.
நீக்குநகைச்சுவைத்துணுஙக்கு மிகவும் அருமை.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குஇந்தச் சொல்லழகி, சொக்கழகி - எனது சேகரிப்பிலும் இருக்கிறது..
பதிலளிநீக்குஅடுத்துள்ள நடிகை நகைச்சுவைத் துணுக்கு செல்லத்தினுடையது தான்...
நினைவில் உள்ளது...
பிள்ளைகள் பெற்றுக் கொண்டபின் நடிகர் ஒருவர் கல்யாணம் செய்து கொண்டது நினைவில் இருக்கிறதா!...?
//இந்தச் சொல்லழகி, சொக்கழகி - எனது சேகரிப்பிலும் இருக்கிறது..//
நீக்குஅப்போது உங்களிடமும் கொலையுதிர்காலம் பைண்ட் பண்ணி வைத்திருக்கிறீர்கள்!
//பிள்ளைகள் பெற்றுக் கொண்டபின் நடிகர் ஒருவர் கல்யாணம் செய்து கொண்டது நினைவில் இருக்கிறதா!...? //
மறக்க முடியுமா?!!!!
ஞே..... அது யார் பா.
நீக்குகீதா அக்கா கரெக்ட்டாகச் சொல்வார்.
நீக்குஹாஹா. வம்பு? வல்லி, உங்களுக்குத் தெரிஞ்சவர் தான். நம்ம உ.நா. வேறே யாரு? 2 பெண்கள் பெற்றுக்கொண்ட பின்னர் தானே கல்யாணம் செய்து கொண்ட புரட்சியாளர் இல்லையோ! :)))))))
நீக்குசில தினங்களுக்கு முன் நானும் எனது நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டோம்...
பதிலளிநீக்குஇளையராஜா அவர்களின் இசையை மட்டும் ரசித்து மகிழ்வோம்... - என்று...
//இளையராஜா அவர்களின் இசையை மட்டும் ரசித்து மகிழ்வோம்... - என்று... //
நீக்குஅஃதே!
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பார்கள்..
பதிலளிநீக்குகடவுள் அருகிருந்து தங்களையும் அந்த ஓட்டுனரையும் காத்து இருக்கின்றார்...
உங்களோடு சேர்ந்து நானும் நன்றி கூறுகிறேன்...
//தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பார்கள்..
நீக்குகடவுள் அருகிருந்து தங்களையும் அந்த ஓட்டுனரையும் காத்து இருக்கின்றார்...
//
ஆமாம்... எனக்கும் அதேதான் தோன்றியது. குறிப்பக முன்னால் அமர்ந்திருந்த ஓட்டுநர்! நன்றி.
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஶ்ரீராம் சாஸ்திரி எழுதிய காசி யாத்திரை முறைகளைப் படித்தேன். குலதெய்வ வழிபாடு குறிப்பிடவில்லையே? பிறகு வருகிறேன்
ஆமாம். துரை ஸாரும் நினைவு படுத்தி இருக்கிறார். மறந்திருக்கிறேன். குலதெய்வத்தை மறப்பதே தொழிலாகி விட்டது!
நீக்குஅதென்ன அந்த ஆட்டோவில் FOR HTRE என்று எழுதியிருக்கிறது?..
பதிலளிநீக்குஎழுதிய புண்ணியவானைதான் கேட்கவேண்டும்!
நீக்குஉற்று கவனித்தேன். FOR HIRE - ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஸ்டைல் பூ வரைந்திருக்கிறார் பெயிண்டர். I க்கு வரைந்த பூ அதை T ஆகக் காட்டுகிறது. அவ்வளவுதான்!
நீக்கு>>> நான் பெற்ற மகன்களில் ஒருவனாவது என்னைக் கடைத்தேற்ற இங்கு வருவானா என்று ..<<<
பதிலளிநீக்குமனம் கலங்கி விட்டது ஸ்ரீராம்...
நான் வாங்கி வந்த வரம் என்னை வேறு வழியில் நடத்துகின்றதே..
என்ன செய்வேன்.. என்ன செய்வேன்!..
அங்கு அவர் இன்னும் விளக்கமாகச் சொல்லும்போது கண்கள் கலங்கி நீர் வழிவதைத் தவிர்க்க, தடுக்க முடியவில்லை.
நீக்குஅன்பு துரை, நல்ல ஆத்மாக்களுக்கு இறைவனே துணை மா. வருந்த வேண்டாம்.
நீக்கு//அங்கு அவர் இன்னும் விளக்கமாகச் சொல்லும்போது கண்கள் கலங்கி நீர் வழிவதைத் தவிர்க்க, தடுக்க முடியவில்லை.// சமீபத்தில் காசி,கயா, திரிவேணி சங்கமம் சென்று வந்த என் சகோதரர் இதைத்தான் கூறினார். யாராக இருந்தாலும் கயாவில் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியாது என்றார்.
நீக்குகாசியிலே மனம் இளகத்தொடங்கி விடும். கயாவில் வழிந்தோடும்.
நீக்குதுரை செல்வராஜு சார்...இதுக்குத்தான் நான் இப்போவே (மனைவி கூட வர முடியாவிட்டாலும், இங்குள்ள பொறுப்புகள்னால) போயிட்டு வந்துடணும்னு பார்க்கிறேன். பிறகு சந்தர்ப்பம் வருமோ இல்லை உடம்புதால் சரியா இருக்குமோன்னு சந்தேகங்கள் எழுது.
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் வந்திருப்பவர்களுக்கு இனி வரப் போகும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குதலைப்பு ஒரு பாடலை நினைவூட்டியது ஸ்ரீராம்...வரேன் கொஞ்சம் அப்புறமாக
கீதா
இனிய காலை வணக்கம் கீதா...
நீக்குநினைவுக்கு வருவது ஒரு பாடல் மட்டும்தானா?
ஒன்றில்லை... ஸ்ரீராம் இருங்க சொல்றேன்...
நீக்குயமுனா நதி இங்கே ராதை முகம் அங்கே என்று ஒரு பாடல் உண்டு தானே?!
கங்கைக்கரைத் தோட்டம்
கங்கை யமுனை இங்குதான் சங்கமம்
யமுனை ஆற்றிலே
கங்கைக்கரை மன்னனடி...
ஆகாய கங்கை...
கீதா
கங்கை நதியோரம் ராமன் அடைந்தான் பாடல்? வரப்பிரசாதம் படம்! யமுனா நதி இங்கே எனக்கு மிகவும் பிடித்த எஸ் பி பி பாடல்!
நீக்குஎனக்கும் கயா போக ஆசைதான். என் அம்மா,அப்பா,மற்ற பெரியோர்களுக்கு
பதிலளிநீக்குபிண்டம் கொடுக்க.
அன்னமிட்டவர்களுக்கு நாம் மறு நன்றி சொல்ல வேண்டாமா.
இளையராஜா பற்றி உங்கள் கருத்துதான் எனக்கும்.
வாங்க வல்லிம்மா..
நீக்குஎல்லாம் அமைவதுதான். இல்லையா? திருப்பதி போய் பெருமாளை பார்க்காமல் வந்தவன் நான்!
ஆரம்பத்தில் நீங்கள் நிறுத்திவைத்திருக்கும் பஸ்ஸைப் பார்த்தால் நீங்கள் ஏதோ முக்திநாத்துக்குப் புறப்படுவதுபோல் ஒரு தோற்றம்! அதற்கப்புறம் நேராகக் கீழே.. குமுதம், சுகிசிவம், இளையராஜா, ஆட்டோ.. நல்ல கதம்பம்.
பதிலளிநீக்கு//..எனக்கு உடனே அவர் ஏன் அலறுகிறார் என்பது புரிந்துவிட்டது.//
சிலசமயங்களில், நொடியில், நமக்கு நிறையவே புரிந்துவிடும். ஆனால் செய்வதற்கு ஏதுமிருக்காது.. எனக்கும் இப்படி ஒரு டமால் 13 வயதில் நடந்திருக்கிறது. நெற்றிக்காயத்துடன் நொறுங்கிய பஸ்ஸின் முன் சீட்டிலிருந்து இறங்கினேன்.
வாங்க ஏகாந்தன் ஸார்...
நீக்குமுக்திநாத்துக்கும் இவர்கள் பஸ் செல்கிறதே... இந்த பஸ் படம் முன்னரும் பகிர்ந்திருந்தேன்.
ஆம்.. நொடியில் புரிந்தது. இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.//
பதிலளிநீக்குஹிஹிஹி மீ தெரியாத லிஸ்ட் ஸ்ரீராம்...நீங்க சொல்லிருக்கும் இராமெஸ்வரம் மணல் கொண்டு போதல் இதெல்லாமே இப்பத்தான் கேட்கிறேன்.
கயா பெயர்க்காரணம், கயாசுரன் பற்றியும் அட்சய வடம் நா என்னா என்றும் தெரிந்து கொண்டாச்சு.
வேர்ப்பாகம் ப்ரயாக்ராஜிலும், நடுப் பாகம் காசியிலும், மேல் நுனி பாகம் கயாவிலுமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். //
இது எப்படி என்று யோசிக்க வைத்தது...அடுத்து வரும் வரி...
//அல்லது அந்தந்த ஊர்களில் ஊருக்கும் அந்த மரங்களின் அந்தந்த பாகம் சிறப்புப் பெறுகிறது என்றும் கொள்ளலாம்.//
இதுதான் இருக்குமோ என்று தோன்றியது.
கீதா
அதை மணல் என்று கூறக்கூடாது கீதா. சிவலிங்கம்! ராமேஸ்வரத்தில் கடலில் நீராடி கடல் மண்ணில் மூன்று லிங்கங்கள் பிடித்து,சிவ பெருமானை அதில் ஆவாஹனம் செய்து, பூஜித்து, இரண்டு லிங்கங்களை கடலிலேயே கரைத்து விட்டு, மூன்றாவதை வீட்டில் பூஜித்து,பின்னர் அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் கரைக்க வேண்டும்.
நீக்குவைணவர்களுக்கு ராமேஸ்வர யாத்திரை உண்டா என்று தெரியவில்லை.
ஆகா... மேலும் தகவல்கள்....
நீக்குஅருமை....
வைணவர்களுக்குக் காசியிலோ, பிரயாகையிலோ வேலை இல்லை என நினைக்கிறேன். சுற்றுலா, தீர்த்த ஸ்நானம் மாதிரி வரலாம். விரும்பினால் வேணி தானம் செய்யலாம். அவங்களுக்கு கயாவில் தான் முழுக்க முழுக்க வேலை!
நீக்குவாங்க கீதா... எனக்குக்கொஞ்சம் அல்பபெருமையா இருக்கு! நான் சொல்லிக் கூட ஒருவர் புதிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்!
நீக்குமணல் என்றுசொல்லக்கூடாதுதான் பானு அக்கா.. ஆனால் அங்கு வந்த பண்டிட் எனப்படும் வாத்தியார் ராமேஸ்வரத்திலிருந்து மண் எடுத்து வந்தவர்கள் என்றுதான் குறிப்பிட்டார்.
ஆமாம் கீதா அக்கா... கயாவில் வானவர்களைப்பார்த்தேன். மற்ற இடங்களில் பார்க்கவில்லை.
//கயாவில் வானவர்களை// வைணவர்களை
நீக்குஅந்த 'அறியாமல் செய்த பிழைகள்" லிஸ்ட்டில் என்னென்னவோ வரும்.//
பதிலளிநீக்குஒன்றும் யாமறியோம் பராபரமே! அப்பனே உன்னிடம் சரண்!
கீதா
இல்லை கீதா.. நான் சொல்ல வந்தது என்னென்னமோ பிழைகள் லிஸ்ட்டில் அடல்ட்ரியும் உண்டு!!!!
நீக்குஎன்னாது.... 'அடல்டரி' அறியாமல் செய்த பிழையா? அடக் கடவுளே.... 'அடல்டரி' செய்பவர்கள் 10 வயதுக்கும் குறைவானவர்களா? (7 வயதுவரைதான் அறியாத பிழை/பாவம்)
நீக்குஅறியாத பிழைல, பிறருக்கு நல்லதுன்னு நினைத்து ஒன்று செய்யறீங்க, அது அவருக்கோ அல்லது வேறொருவருக்கோ கெடுதலாக முடிந்துவிடுகிறது..உங்கள் நோக்கம் நல்லது செய்ய நினைத்தது. அதனால் அது 'அறியாத பிழை'ல வரும். (உங்க வீட்டு பால்கனிலேர்ந்து, தொட்டியில் மலர்ந்து வாடியிருக்கும் ரோசாவை, வெளில தூக்கி எறிய நினைக்கிறீங்க. அவசரத்துல தொட்டியோட தூக்கி எறிந்தது, பக்கத்துவீட்டு ஆளின் காலில் விழுந்தால், அது அறியாத பிழையா? தெரியாது)
நீக்குஇதை எல்லாம் நாம் அங்கு நமக்குள் பேசிக்கொள்ளலாம்!
நீக்குபெண்களின் பின்னல் பார்க்கும்போது இரண்டுதான் இருப்பது போல தோன்றும். ஆனால் மூன்று பின்னல்களைக் கொண்டது. இந்த விளக்கத்தை அங்கிருந்த வாத்தியார் ஸ்பெஷலாகச் சொன்னார். எதற்கோ? //சரஸ்வதி நதியைக் குறிக்கிறாரோ என்னவோ!//
பதிலளிநீக்குபின்னல் விவரம் படித்த போது எனக்கும் சரஸ்வதி நதியைச் சொல்கிறாரோ என்றுதான் தோன்றியது ஸ்ரீராம் நீங்களும் அதேதான் சொல்லிருக்கீங்க...
கீதா
சில விவரங்கள் அவர்கள் வேகமாகச் சொல்லித் தாண்டிச் சென்று விடுகின்றனர் கீதா. காதில் கேட்பது பாதி. நினைவில் நிற்பது பாதி... இங்கு கொடுப்பது மீதி!
நீக்கு'கங்கை உட்பட அங்கு எந்த புண்ணிய நதியிலும் நீராடும் முன்பு தங்குமிடத்திலிருந்தே குளித்து சுத்தமாகப் போ... நதியில் இறங்கும் முன்பு சங்கல்பம் செய்யவேண்டும். நதியில் இறங்கியதும் நதியை வழிபடு...'//
பதிலளிநீக்குஇது எல்லா நதிகள், அருவிகள், வாய்க்கால், குளங்கள் என்று பொருந்தும் என்பதே என் தனிப்பட்டக் கருத்து. அப்படிச் செய்வதால் மக்கள் பயன்படுத்தும் ஷேம்பூ, எண்ணெய் சோப்பு என்று தண்ணீர் அசுத்தம் ஆகாமல் இருக்கும். அது நாம் நீருக்குக் கொடுக்கும் மரியாதையும் கூட. எல்லா நீர்நிலைகளும் புனிதமானவை தானே இல்லையோ
கீதா
நதிகள் எல்லாமே ஸ்பெஷல்தான். ஆனாலும் இவை புண்ணிய நதிகள் இல்லையா? மேலும் கங்கையில் மற்ற ஆறுகள் இணையும். கங்கை வேறெந்த நதியோடாவது இணையுமா?!
நீக்குதுணிகளைத் துவைக்கக் கூடாது. யாராவது செருப்புக்கு காலுடன் நதியில் இறங்கி விட்டால் அங்கிருக்கும் படகோட்டிகள் முதல், அங்கிருக்கும் பண்டா, யாசகர்கள், சாமியார்கள், வியாபாரிகள் வரை அனைவரும் ஒரே குரலில் அலறுவார்கள். அவ்வளவு கட்டுப்பாடு. நம்மூர் நினைவு வராமல் இருக்குமா எனக்கு? சொல்லுங்கள். நாம் நதிகளில் என்னென்ன செய்கிறோம்?!!//
பதிலளிநீக்குஅதே அதே அதே நாம் நதிகளில் என்னென்ன செய்கிறோம்...நான் சொல்ல வந்ததை நீங்களும் சொல்லிட்டீங்க ஸ்ரீராம் ஹைஃபைவ்!!!
இதற்கு மேலே கருத்திலும் சொல்லியாச்சு...
கீதா
@கீதா ரங்கன் - வட இந்தியர்களுக்கும் நமக்கும் அதுதான் வித்தியாசம். நாம் கடவுளை வணங்கும் முறை, அது சார்பான சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம், பக்தி கம்மி. வட இந்தியர்களுக்கு பக்தி அதிகம், உணர்வுபூர்வமான பற்றுதல் அதிகம். நாம் பிரசாதம் சாப்பிட்டுவிட்டு, இல்லை குங்குமத்தை கோவில் தூண்களில் தடவுவோம் நீர் நிலைகளை தெய்வம் என்று பேசுவோம் ஆனால் மதிப்பதில்லை. அவங்க உணர்வு பூர்வமாக மதிக்கிறாங்க.
நீக்குஅவங்க உணர்வு பூர்வமாக மதிக்கறாங்க//
நீக்குவடக்கில் இருக்கும் எல்லா நீர் நிலைகளிலுமா இல்லை புனித நதிகள் கங்கை யமுனை காசி, கயா, பகுதியில் மட்டுமா? தில்லியில் யமுனையைப் பார்த்திருப்பீங்களே..
கீதா
கங்கை ஜலம் வைத்திருக்கும் கிண்ணத்தைக் கூட மிதிக்க மாட்டார்கள். நாங்க கங்கை ஜலம் கொண்டு போன ப்ளாஸ்டிக் கானிற்குக் குங்குமம் எல்லாம் வைக்கச் சொல்லி அறிவுறுத்தினார்கள். தில்லி யமுனையைப் பார்த்தால் குளிக்கவே தோணாது! :(
நீக்குபொதுவா கங்கை ஜலத்தை யாரும் தூஷிப்பதோ வீணாக்குவதோ அதில் எச்சில் உமிழ்வதோ, கை, கால் அலம்புவதோ இல்லை.
நீக்கு//நாங்க கங்கை ஜலம் கொண்டு போன ப்ளாஸ்டிக் கானிற்குக் குங்குமம் எல்லாம் வைக்கச் சொல்லி அறிவுறுத்தினார்கள்//
நீக்குஎங்களை அப்படிச் சொல்லவில்லை! ஆனால் அவர்கள் தங்கள் பக்தியை அதிகப்படியாய் நம்மிடம்- தென்னாட்டவரிடம் - காட்சிப் படுத்துகிறார்களோ என்று ஒருகணம் எனக்குத் தோன்றியது.
//..தங்கள் பக்தியை அதிகப்படியாய் நம்மிடம்- தென்னாட்டவரிடம் - காட்சிப் படுத்துகிறார்களோ என்று..//
நீக்குசரியாகத்தான் தோன்றியிருக்கிறது உங்களுக்கு. இந்த மிகைப்படுத்துதல் அங்குள்ள பண்டிட்ஜிகளிடம் தாராளம்.
நிஜ விபத்தா? முதலில் எப்போதும்போல் நீங்கள் சிறிய கதை எழுதியிருப்பீர்கள் என்று காலையில் நினைத்தேன்.... அதிர்ச்சியான அனுபவம், ஆனால் எல்லாம் நன்றாக முடிந்தது (துரை செல்வராஜு சார் கதையைப் போல்) என்பது மகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றி நெல்லை. துரை செல்வராஜூ கதை போல, விக்ரமன் படம்போல...! ஆனாலும் விரல்களில் வலியுடனேயே தட்டச்சுகிறேன்!
நீக்குகவிதை நல்லருக்கு...ஆனா அந்த அமைச்சர் ம்ம்ம்ம்ம் எம்ஜிஆர் ஆட்சி இல்லையோ அப்போதூ? அப்ப இருந்த அமைச்சர் அதுவும் கவிதை எழுதின அமைச்சர்..ம்ம்ம் காளிமுத்து? அவர்தான் தமிழில் பி ஹெச் டி னு கேள்விப்பட்டிருக்கேன். (ஹிஹிஹி தமிழ்ல பிஹெச் "டி" வாங்கினவங்கதான் கவிதை எழுதணும்னு இல்லைதான்!!!!!!)
பதிலளிநீக்குகீதா
யார் யார் யார் அவர் யாரோ... ஊர் பேர் தான் தெரியாதோ!
நீக்குநாஞ்சில் மனோகரனோ என்று தோன்றியது. ஆனால் அவர் அமைச்சராக இருந்திருக்கிறாரா?
நீக்குஅந்த புக்ல ஏதோ சிக்னேச்சர் இருக்கு போல ஏதோ மணியம் நு ....
பதிலளிநீக்குசுகிசிவம் பதில் ஒரு வகையில் நன்றாகத்தான் இருக்கிறது...ஆனால் நம் மனம் என்னவோ அதற்கு உடன்படுவதில்லையே....மேலை நாடுகளில் பெற்றோர் தனியாகத்தான் இருக்கிறார்கள்...அல்லது கணவனோ மனைவியோ தனியாகவும் இருக்கிறார்கள்தான்...ஆனால் ம்ம்ம்ம்ம் அன்று வல்லிம்மா கூட ஒருவரைப் பற்றி எழுதியிருந்தார்...அவர்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் ஓர் அம்மா பற்றி...ஆனால் மனம் வருந்தத்தனஏ செய்கிறது...நமக்கும். எனவே அக்கருத்தை ஏற்க மனம் விரும்பவில்லை என்றோ, ஏற்க மறுக்கிறது என்றோ ஏற்க முடியவில்லை என்றோ சொல்வதை விட இன்னும் பக்குவப்படவில்லை என்றே சொல்லிக் கொள்கிறேன்...
கீதா
சிக்னேச்சர் ஸ்ரீராமின் அப்பா போட்டது.
நீக்குஓ ஸ்ரீராமின் அப்பா பாஹே அவர்களின் கையெழுத்தா!!!
நீக்குநன்றி கௌ அண்ணா
அந்த கையெழுத்து ஶ்ரீராமின் அப்பாவினுடையதாகத்தான் இருக்கும் என்று யூகித்து விட்டேன்.
நீக்குஓ ? வெரி குட். மிக நன்று!
நீக்குஆம்.. அது என் அப்பாவின் கையெழுத்து! வீட்டிலிருக்கும் புத்தகங்களுக்கு எண்ணிக்கைக்கு கொடுத்து கையெழுத்துப் போட்டு, சமயங்களில் தேதி கூட போடுவார்!
நீக்குவாழ்க்கை பற்றிய ராஜா கருத்து ரொம்ப நல்லாருக்கு..
பதிலளிநீக்குஸ்ரீராம் உங்கள் கருத்தே எனக்கும் அவரது இசையமைப்பை மட்டும் ரசித்தால் போதும் என்பதே என் எண்ணமும். சாதாரண மனிதனிலிருந்து ஃபேமஸ் புள்ளிகள் வரை ப்ளஸ் மைனஸ் எல்லோரிடமும் இருக்குதானே. ப்ளஸ் மட்டும் பார்ப்போம்...திறமையை மட்டும் பார்ப்போம்..
பொதுவாகவே நமக்கு ஒருவரைப் பிடித்தால் அவரது திறமையைத்தானே பார்க்கிறோம் மைனசைப் பார்ப்பதில்லை...அதே போல பிடிக்காதவர் என்றால் அவர் திறமையை விட அவர் மைனஸ் தான் முதலில் கண்ணில் படும்..
கீதா
ஏனோ இளையராஜா ஏதாவது பேசி விடுகிறார்.
நீக்குஸ்ரீராம் கடைசி செய்தி வாசித்ததும் ஓ மை காட் என்று முதலில் நான் இப்போது செய்தது இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் வந்தேன் ஸ்ரீராம்.....நெஜமாகவே வாழ்வின் விளிம்பு. கொஞ்ச நேரம் அமைதியாகிட்டேன் ஸ்ரீராம் என்ன சொல்ல என்று தெரியவில்லை...திக் திக் திக்....
பதிலளிநீக்குகீதா
ஆட்டோ ஓட்டுநர் உங்கள் ஆஸ்தான நண்பர் தானே அவர்தானா நீங்கள் எனக்கு கூட ஒரு முறை அறிமுகம் செய்தீங்க..கீதாக்கா பேத்தி காதுகுத்தல் நிகழ்வுக்கு போனப்ப...அவர்தானா?
நீக்குஅவர் முன்னிருக்கை..சத்தியமா நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை. அவருக்கு ஒன்றும் ஆகாததுக்கும் நன்றி சொன்னேன்...எப்படி டென்ஷன்ல இருந்திருப்பார் அதிலும் கூட இடையிடையே ஓட்டிச் சென்றிருக்காரே ஸ்ரீராம்...அதுவே பெரிய விஷயம்....சரிவில் இறங்கும் போது ஹேன்ட் ப்ரேக்கும் (ஆட்டோவில் உண்டோ?) போட்டாலும் கவனமாகப் போட வேண்டும் இல்லை என்றால் வண்டி குட்டிக்கரணம் அடிக்கும் வாய்ப்பும் உண்டு. அவர் பாவம்...நினைத்துக் கூடப் பார்க்க முடியலை...
சீக்கிரம் உங்கள் இருவரின் காயங்கள் குணமாகிடட்டும். அவரது மனமும் இந்த ஷாக்கிலிருந்து மீண்டுவிட வேண்டும்..
கீதா
அந்த ஆஸ்தானம் எங்களையும் ஶ்ரீராம் வீட்டுக்கு அழைத்துச் சென்று பின்னர் அம்பத்தூரில் அண்ணா வீட்டிலும் கொண்டு விட்டார். நடந்து போர மாதிரித் தான் ஆட்டோ ஓட்டுவார்! வண்டியில் ஏதோ கோளாறு இருந்திருக்கணும். வேணும்னு எல்லாம் பண்ணக் கூடியவர் அல்ல! எல்லாம் நல்லபடியாக இருப்பதற்கு ஆண்டவனுக்கு நன்றி.
நீக்குஆமாம். அவரேதான் கீதா அண்ட் கீதாக்கா... வயது எழுவதை நெருங்கி கொண்டிருக்கிறார்! நிதானமானவர். எந்த வித கெட்ட அப்பழக்கமும் கிடையாது. காசு அதிகம் வாங்குவது கேட்டபழக்கம் என்று அவர் நினைப்பதில்லை! கேட்ட பழக்கம்!
நீக்குகாசியை குறித்து சொல்லும் அளவுக்கு எமக்கு பக்குவம் போறா...
பதிலளிநீக்குவிபத்தில் காயமின்றி தப்பியமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
நன்றி கில்லர்ஜி.
நீக்குநன்றி கில்லர்ஜி.
//மனதில் ஏனோ பயமில்லை. எந்த உணர்வுமே இல்லை. 'அவ்வளவுதான் எல்லாம்' என்று மட்டும் தோன்றியது. //
பதிலளிநீக்குஇதே போன்றதொரு மன நிலை எனக்கும் சில முறை ஏற்பட்டிருக்கு. அந்த நொடியில் மனம் அமைதியாய் உணர்வு இல்லாமல்...
கீதா
மரத்துப்போய்......!!!
நீக்கு//நான் பஸ்ஸில் காசி நோக்கிச் செல்லவில்லை//
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ என்ன இது புயுக்கதையாக்கிடக்கூ.. பஸ்ல கனவு கண்டு எழும்பி இப்படிச் சொல்றாரோ.. நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல நில்லுங்கோ வாறேன்ன்...
காசிக்கு அப்புறம்தான் போகப்போறோம் அதிரா... அதுவும் வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டுதான் காசி. புகைப்படம் எடுத்த நேரம் உள்ளூரில் இருக்கும் ஆற்றங்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்!
நீக்கு///நடந்து போகவில்லை. பஸ்ஸில் சென்றேன்.
பதிலளிநீக்கு//
ஹா ஹா ஹா என்னா ஒரு விளக்கம்.. இப்பூடிச் சொன்னால்தானே என் போன்ற குழந்தைகளுக்கும் அஞ்சு போன்ற பெரியவர்களுக்கும் புரியும்:))..
//இனி 'பக'வின் தொடர்ச்சி.... //
இதென்ன திரும்படியும் கொயப்பம்.. பக?:)
// இதில் நான் சிறுவன்.//
யூ மீன்ன்ன்ன்ன் அண்ட 12? ஹா ஹா ஹா:))
ப க = பயணக் கட்டுரை.
நீக்குஓ மை கடவுளே.. “காப” எனப் போட்டிருந்தால் லபக் எனக் கண்டு பிடிச்சிருப்பேனாக்கும்:)) ஹ ஹா ஹா....
நீக்குகா ப என்று போட்டிருந்தால், நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆனால் நாங்க எல்லோரும் முடியைப் பிய்த்துக்கொண்டு, பாயைப் பிராண்ட சென்றிருப்போம்! கா ப என்றால் என்ன? கால் பந்து?
நீக்குஹா ஹா ஹா காசிப் பயணம்:)... எங்கட டெய்சிப்பிள்ளையைக் கேட்டாலே சொல்லிடுவாவே:)
நீக்குகாப என்றால் என்னவென்று நான் நீங்கள் சொல்லும் முன்பே புரிந்துகொண்டேன் என்று சொல்ல விரும்புகிறேன்! உங்களுக்குதான் பக தெரியவில்லை!
நீக்கு//காசி யாத்திரை மேற்கொள்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று மணல் எடுத்துக் கொண்டு பாதுகாத்துக்கொண்டு காசி கிளம்புவார்கள்//
பதிலளிநீக்குஇது புதுத்தகவல்... எனக்குத் தெரிந்து பிளைட்டில நேரடியாகப் போய் குளித்து வந்ததுபற்றித்தான் கேள்விப்பட்டேன்ன்... இதில எனக்கொரு டவுட் ஸ்ரீராம்.. கேட்கலாம்தானே.. ஏனெனில் நீங்க சொல்லியிருக்க்கும் முறைகள் படிக்கும்போது[காசியில் செய்தவை].. இது அனைவருக்கும் பொதுவான முறைகளோ அல்லது பிராமணர்களுக்கானதோ?
எல்லா ஹிந்துக்களுக்குமானதுதான் அதிரா. அவரவர் குல வழக்கப்படி திதி கொடுக்க வேண்டும்.
நீக்குபிராமணர்களுக்கு மட்டும் இல்லை! அனைவருக்கும் இதே மாதிரியான நியமங்கள் உண்டு. அவரவர் குல வழக்கப்படி வேறுபாடுகள் இருக்கலாம்.
நீக்குஉங்களுக்கான பதில்கள் வந்து விட்டன அதிரா!
நீக்குநன்றிகள் பானுமதி அக்கா கீசாக்கா ஶ்ரீராம்
நீக்கு//எனக்கும் பெரிதாக ஒன்றும் ஆகவில்லை என்கிற ஆச்சர்யத்தோடு நான் அதை எடுத்துக் கொண்டு ஓட்டுநரைப் பார்த்தேன். அசைவின்றி இருந்தார். பயந்துபோய் தோளைத்தொட்டு இரண்டுமுறை உலுக்கியதும் நிலைக்கு வந்தார். நான் வண்டி மோதப்போகிறது என்று உணர்ந்த உடனேயே ஓட்டுநர் இருகைக்கு பின்னே இருந்தக் கம்பியை இறுகப் பற்றி அமர்ந்து விட்டேன். மனதில் ஏனோ பயமில்லை. எந்த உணர்வுமே இல்லை. 'அவ்வளவுதான் எல்லாம்' என்று மட்டும் தோன்றியது. //
பதிலளிநீக்குகடைசி செய்தி படித்தவுடன் அதிர்ச்சி.
காயமில்லாமல் கடவுள் காப்பாற்றினார்,அவருக்கு நன்றி.
அந்த நிமிட அனுபவம் சொல்ல முடியாது.
அத்தையிடம் சொல்லி சுற்றி போட சொல்லுங்கள்.
ஜஸ் ஓத்தடம் கொடுங்கள் வலி குறையும் கை, கால்களுக்கு.
ஆட்டோ ஓட்டுனரும் சிறு காயங்களுடன் தப்பித்தார் கடவுளுக்கு நன்றி.
வாங்க கோமதி அக்கா... இன்னும் எம் ஐ எல் லுக்குத் தெரியாது. அவர் அவரின் தங்கை வீடு சென்றிருக்கிறார், அவர்கள் அண்ணன்
நீக்குகல்கத்தாவிலிருந்து வருவதால் அவரைச் சந்திக்க!
நன்றி அக்கா.
ஸ்ரீராம் இம்முறை கீசாக்காவை மிஞ்சிட்டீங்க:)) ஒரு கங்கைப்படம் கூடப் போடாமல் எழுதித்தள்ளிட்டீங்க:)) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்கு//இதுமாதிரி இதுமாதிரி நான் உங்களுக்கு அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ இதுமாதிரி இதுமாதிரி செய்த தப்புகளை மன்னிச்சுடுங்க... இதுமாதிரி இதுமாதிரி மரியாதை இல்லாம பேசி, இதுமாதிரி இதுமாதிரி நடந்திருந்தா மன்னிச்சிடுங்க.... என்றெல்லாம் சொல்லணும்! //
ஹா ஹா ஹா வீட்டில சொறி சொல்லாதோரெல்லாம் யூப்பர் மாட்டி:)).
//பிறகு கணவன் மடியில் மனைவியை அமரவைத்து தலை முடியைப் பிரித்து மூன்று பிரிவாக்கி பின்ன வேண்டும். //
ஹா ஹா ஹா சோட் கெயார் எனில் என்ன கதி?:) .. ஹா ஹா ஹா அதுசரி கணவரோ பின்னி விடோணும்? ஸ்ரீராம் உங்களுக்குப் பின்னத் தெரியுமோ?:).. ஆ.. நெல்லைத்தமிழன் இப்பவே பின்னிப்பழகத் தொடங்கிட்டாராம் எனக் கேள்வி:))
ஜடை பின்னுவது என்ன கம்ப சித்திரமா?... எனக்கு ஜடை பின்னத் தெரியுமே!...
நீக்குஎனக்கும் தெரியும். ஆனால் எனக்கு நீளமானக் கூந்தல் இல்லையே!
நீக்குஇது வேறயா!..
நீக்குபடம் கொஞ்சம் பாக்கி வைத்து இங்கு போட்டிருக்கலாம் அதிரா.. ஆனால் படிப்பதில் கவனம் கலைந்துவிடும் என்று..
நீக்குபின்னி விடுவது பெரிய விஷயமா என்ன? பின்னி விடுவேன் பின்னி! சிறு வயதில் அம்மா மாதாந்திர விடுமுறை நேரத்தில் தங்கைக்கு ஓரிருமுறை பின்னி விட்ட அனுபவம் இருக்கிறது!
நீங்க எல்லோரும் நினைப்பதுபோல பின்னல் ஒன்றும் ஈசியானதல்லவாக்கும் கர்ர்ர்ர்:))..
நீக்குபோங்கோ ஸ்ரீராம் நீங்க ஏமாத்திப் போட்டீங்க.. போன போஸ்ட்டில் காசிப்படம் எது? என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே.. ஓட்டோவையும்.. ஓட்டோவில் ஆன்ரியையும் போட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவை எல்லாம் அலாகாபாத் எனச் சொன்னீங்க...
காசியில் கோயில் இல்லையோ? ஏன் நதிப்படம் ஏதும் போடவில்லை... மீ ரொம்ப ஏமாந்து போய் தேம்ஸ்க்குப் போகிறேன்ன்ன் என்னை ஆரும் தேடாதீங்கோ:).. அஞ்சூஊஊ என்னைப் பத்து மணி நேரத்துக்குத் தேடக்கூடாது:))
எப்பவும் ரிவர்ஸ் ஆர்டரில் படிப்பதால் முதலில் அதிர்ச்சியை கண்டேன்.!!! இப்படி நொறுக்குப்பட்டிருக்கே ஆட்டோ :(
பதிலளிநீக்குஇறைவனுக்கு நன்றி ..பாக்கவே பயங்கரமா யிருக்கு .மருத்துவரிடம் போனீங்களா ?
காப்பாற்றியஇறைவனுக்கு நன்றி என்று படிக்கவும்
நீக்குநன்றி ஏஞ்சல். மருத்துவரிடம் போகும் அளவு பெரிய விஷயம் எதுவும் இல்லை.
நீக்குஸ்ரீராம் குடும்ப விழா ஒன்றில் பங்கேற்று, அங்கே சந்தோஷமான, சிரிப்பு முகத்துடன் மேடையில் நின்றுகொண்டிருக்கும் படம் எனக்கு குடும்ப வாட்ஸ் அப் குழுவில் சற்று முன் வந்தது. அவர் பதில்கள் அளிக்க வரும் வரை, நீங்கள் எல்லோரும் பொறுமையாகக் காத்திருக்கும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி, வணக்கம்!
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஆஆஆஆ கெள அண்ணன் அவர் இங்கு வருமுன் அந்த செல்வியை சே சே செல்பியை இங்கின போட்டிட்டு ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ:)
நீக்குசதாபிஷேகம் என்று சொன்னாரே! அது அவருக்கா? எங்களை மாதிரி சிறுவர்களையெல்லாம் அழைப்பதில்லையா?
நீக்குஇன்று என்னுடைய மனைவியின், அத்தையின், பேத்தியின், மருமகளுக்கு வளைகாப்பு. அங்குதான் சென்றிருக்கிறார் ஸ்ரீராம். நான் பெங்களூரில் இருப்பதால் செல்ல இயலவில்லை!
நீக்குஒரு வாரம் முன்பு சாதாபிஷேகம் நடந்தது என்னுடைய ஒன்று விட்ட அண்ணனுக்கு.
நீக்குஅதிரா! செல்வியை எல்லாம் நான் இங்கே போட்டேன் என்றால், அவர் என்னை எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவிலிருந்து நீக்கி விடுவார். அப்புறம் எனக்கு பொழுதுபோக்கு இல்லாமல் போர் அடிக்கும்!
நீக்குஅதே... அதே... இல்லவிழா முடிந்து மூன்று மணிக்கு வந்தேன். உடனே கடமையாற்ற வந்து விட்டேன்! நெல்லை! சதாபிஷேகம் கடந்த முப்பத்தியொன்றாம் தேதி..
நீக்கு///பெண்களின் பின்னல் பார்க்கும்போது இரண்டுதான் இருப்பது போல தோன்றும். //
பதிலளிநீக்குநீங்கள் முன்னால நிண்டு பார்த்திட்டுச் சொல்றீங்களோ? பின்னால நிண்டு பார்த்திட்டு இப்பூடிச் சொல்றீங்களோ?:) எனக்கு டவுட்டு டவுட்டா வருதே ஹா ஹா ஹா .. இங்கு ஃபஷனே இதுதானே.. ஸ்கூலில் பிள்ளைகள் 3,5, பின்னல்களோடுகூட வருவினம் விதம் விதமாக.
3, 5 பின்னல்களா? பார்க்க வித்தியாசமாக இருக்குமே!
நீக்குhttps://www.fashionisers.com/wp-content/uploads/2016/03/sporty_workout_hairstyles_for_gym37.jpg
நீக்குஇளையராஜா ..நேற்று அவர்பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தேன் ..கிசுகிசு ஒன்னும் தெரியலை :)
பதிலளிநீக்குநேற்று உங்கள் கேள்வி பார்ததுமே நினைத்துக் கொண்டேன், நாம் ஒன்று இதேபோல நாளைய பதிவில் இணைத்திருக்கிறோமே என்று!
நீக்குஹாஹாஹா :) இந்த மாதிரி ஒரே நேரம் நிறைய நடந்திருக்கு நேற்று நானா முந்திட்டேன் :) .தூக்கத்தில் இன்னும் 5 கேள்வி தோணிச்சி அதை இன்னிக்கு தூக்கத்தில் recap செஞ்சி அடுத்த வாரம் கேட்கணும்:)
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குடூ டைம்ஸ் ஒரே கமெண்ட் பப்லிஷ் ஆகி அதான் ஒன்றை எடுத்தேன் :)
நீக்குஆஆஆஅ நான் இங்கிருந்த போதே அஞ்சுவும் லாண்டட்டோ.. நேரமின்மையால் கவனிக்காமல் ஓடிட்டேன்ன்ன்ன்
நீக்கு//இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//
நீக்குOK!
//டூ டைம்ஸ் ஒரே கமெண்ட் பப்லிஷ் ஆகி அதான் ஒன்றை எடுத்தேன் :)//
நீக்குok... ok...!!
//பின்னர் திரிவேணி சங்கமத்தில் முழுக்கு.
பதிலளிநீக்கு//
ஹரிதுவாரும் இப்படி மூன்று நதிகளும் சங்கமிக்கும்/ஆரம்பிக்கும் இடம்தானே..
//என் சித்தப்பா இந்த டிராவல்ஸ்காரர்களையே அணுகுவதில்லையாம். நேராக சங்கரமடத்தில் முன்பதிவு செய்துவிட்டால்//.
முதல்தடவை போகும்போது இப்படிச் செல்வது கஸ்டமென நினைக்கிறேன்.. இனிமேல் எனில் நீங்களும் இப்படிப் போய் வரலாம்.
//
ஆமாம் அதிரா. பழகி விட்டால் நமக்கே புரிந்துவிடும்.
நீக்குமுதல்முறையாகவே இருந்தாலும் ஏற்கெனவே போனவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு முன்பதிவு செய்து கொண்டு போகலாம். சங்கர மடம், நகரத்தார் மடம், திருப்பனந்தாள் காசி மடம் போன்ற மடங்களில் தமிழர்கள் தங்க காரியங்கள் செய்ய எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுப்பதோடு குறைந்த கட்டணத்திலேயே உணவும் வழங்குவார்கள்.
நீக்குஆஆஆஆஆஆஆ அப்போ காசியை விட்டு திரும்பும் கட்டுரையா அடுத்ததடவை? இல்லை எனக்கு காசியில் எடுத்த படங்கள் வேணும்.. அந்த நதி, கோயில்.. நதிக்கரைப்படிகள்.. அங்கிருந்த மரங்கள் இப்படி.. ஏன் அங்கு படங்கள் எடுக்கவில்லையோ ஸ்ரீராம்? இப்பூடி ஏமாத்துறீங்க கர்ர்ர்ர்ர்ர்:))
பதிலளிநீக்குபோன வாட்டி எவ்........ளோ படங்கள் போட்டேன்... ஏமாத்தறேன்னுட்டீங்களே அதிரா... முருகா.....
நீக்குகொலை உதிர்காலம்//
பதிலளிநீக்குஅப்பாவின் கை எழுத்துத்தானே..
அந்த அமைச்சர் கருணாநிதித்தாத்தாவாக இருக்குமோ?..
Grrrrrrr
நீக்குஆமாம் அப்பாவின் கையெழுத்துதான். கவிதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை! அந்த அமைச்சரே இதை யதேச்சையாகப் படித்து விட்டு வந்து சொன்னால்தான் உண்டு!
நீக்குதுக்ளக் கேள்வி-பதிலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது... சுகிசிவம் அங்கிள் இப்படிச் சொல்லிப்போட்டு, தன் பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்த பின்பும் இன்னும் ஏன் அவர் முதியோர் இல்லம் போகாமல் இருக்கிறார்?.. ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே யா?.. எனக்கு அவரின் ஸ்பீச் ரொம்ப ரொம்பப் பிடிக்கும் ஆனா இப்படி சிலது எங்காவது எரிச்சலூட்டுவது போல சொல்லி விடுவார்.
பதிலளிநீக்குஇளமையில் இப்படிச் சொல்வது சுலபம், ஆனா வயதாக ஆக.. தான் தெரியும் அந்நிலைமை.. ஜி எம் பி ஐயாவைப்போல எங்கட அம்மாவும் அடிக்கடி மரணம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பா.. அப்போ எனக்கு கவலையாக இருக்கும்.. ஒருவேளை நமக்கும் வயதாகும்போது இப்படித்தான் யோசனைகள் வருமோ என எண்ணுகிறேன்..
ஆனா எங்கட அப்பா முழுக்க முழுக பொஸிடிவ் சிந்தனையாளர், யாராவது திட்டினால்கூட, அது தன் நன்மைக்கே என ஈசியாக எடுப்பார்.. வியப்பாக இருக்கும்... ஆனா அவர் மரணத்தை நினைக்காமல் அறியாமல் போய் விட்டார்.
முதியோர் இல்லம் போவது அவ்வளவு கட்டாயமா? எல்லோரும் போகவேண்டும் என்றா சொல்கிறார்? அப்படி இருந்தால் நாட்டில் முதியோர் இல்லங்கள் காணாது! அந்த நிலைமையில் இருப்பவர்களை சொல்கிறார். கீதாக்கா அப்போது இந்தக் கருத்தை அங்கு ஆதரித்து கருத்திட்டிருந்தார் என்று நினைவு.
நீக்கு//..எங்கட அம்மாவும் அடிக்கடி மரணம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பா.. ஆனா எங்கட அப்பா முழுக்க முழுக பொஸிடிவ் சிந்தனையாளர்..//
நீக்குஅதிராஜி, மரணத்தைப்பற்றி சிந்திப்பவர், பேசுபவர் எல்லாம் நெகட்டிவ் சிந்தனையாளரல்ல!
அந்த மாதிரி பேச்சுகள் மகன் / மகள்களை வருத்தப்படுத்தும் என்பதால் அப்படிச் சொல்கிறாரோ?
நீக்குஎனக்குப் புரியுதில்ல ஏ அண்ணன்.. மரணம் என்பது எல்லோருக்கும் உண்டுதான், ஆனா நல்லவிதமாக சிந்திப்பது அதாவது... நான் நலமாக இருப்பேன்.. பேரப்பிள்ளைகளின் திருமணம் எல்லாம் பார்ப்பேன் இப்படியனதுதானே பொசிடிவ் சிந்தனை.. அதை விட்டுப்போட்டு, நான் அடுத்த வருசம் இருப்பேனோ தெரியாதே... பேரனின் யூனிவசிட்டி முடிவுகள் பார்ப்பேனோ தெரியாதே.. எப்ப என்னாகுமோ.. இப்படி எல்லாம் நினைப்பது நெகடிவ்வான சிந்தனை தானே?.. இளவயதில் மரணம் பற்றிப் பேசுவதற்கும்.. வயதான காலத்தில் மரணம் பற்றிப் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை நான் உணர்கிறேன்.
நீக்குஜோக் ஹா ஹா ஹா இந்தக்காலம் எனில் அறிவிக்கவே வேண்டாம்ம்.. தானாக வந்துவிடும் தகவல்கள்..
பதிலளிநீக்குஉண்மைதான் இருப்பது ஒரே வாழ்க்கை.. அதை மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் முன்னெடுத்துச் செல்வது நம் கைகளில்தான் இருக்கிறது.
நான் அதைச் சொல்ல வரவில்லை. நடிகைகளைக் கேவலப்படுத்தி விட்டனர் என்று பத்திரிகை மேல் பல்வேறு சங்கங்கள் பாய்ந்திருக்கும். அரசியல்வாதிகள் தங்கள் கருத்து மழைகளைப் பொழிவார்கள்!
நீக்குஏனோ எலெக்க்ஷன் result prediction meme v .ஓட்டப்பாய் :) போட்டது கண் முன் வருது :) ஈஸியா எடுக்க வேண்டியதைக்கூட இப்போல்லாம் பெரிசுப்படுத்தறாங்க :))
நீக்குஅதேதான்.. பாவமன்னிப்பு மாதிரியோ வேறு சில படங்களோ இப்போது புதிதாக வெளிவர முடியாது!
நீக்குஓ மை கோட்ட்ட்.. அந்தக் காசிக்குப் போய் வந்த பலன் தான் நீங்கள் நலமோடு வீடு வந்து சேர்ந்திருக்கிறீங்க.. இனி ஓட்டோவைப் பார்த்தாலே நடுங்குமே...
பதிலளிநீக்குஅரே... பூஸார்....
நீக்குஇனிமேல் ஓட்டோ தான் ஸ்ரீராமைப் பார்த்து நடுங்கும்!...
நன்றி அதிரா..
நீக்குஇன்றும் இல்ல விழாவுக்கு ஓலா ஆட்டோவில்தான் போனோம். ஒவ்வொரு சிக்னலிலும் ஆட்டோ மெதுவாகி நின்றபோது ஆச்சர்யமாகவும் நிம்மதியாகவும் இருந்தது!
பீதியின் மீதி!
துரை அண்ணன், ஓட்டோ நடுங்குதோ இல்லையோ இப்போஸ்ட் படிக்கும் எல்லோரும் ஓட்டோவைப் பார்த்தால் நடுங்கப் போகினம் ஹா ஹா ஹா நலவேளை இங்கு ஓட்டோ கிடையாது:)
நீக்குகாசி பயணத்தொடர் நிறைய செய்திகளுடன் நன்றாக இருக்கிறது. இனி போகிறவர்களுக்கு உதவும்.
பதிலளிநீக்குகிசு கிசு கவிதை யார் என்று தெரியவில்லை. அப்பாவின் கையெழுத்து பார்த்தேன்.
இளையராஜா பிறந்தநாள் அன்று ரேடியோசிட்டியில் நாள் முழுவதும் இளையராஜா பாடல்தான்.
அவரை மதிக்கும் ரசிகர்கள் நிறைய ஆனால் அவர் பேச்சு நல்லாதான் இல்லை.
//காசி பயணத்தொடர் நிறைய செய்திகளுடன் நன்றாக இருக்கிறது.//
நீக்குகீதா அக்கா கருத்து வேறுவிதமாக இருக்கிறது!!!
அப்பா கையெழுத்து, இளையராஜா பேச்சு... ஆம்!
நன்றி அக்கா.
காசி, கயா, திரிவேணி சங்கமம் பற்றிய ஆன்மீக விஷயங்களையும், நம்பிக்கைகளையும் சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் ஶ்ரீராம். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குநான் ஆஸ்தான ஆட்டோக்காரர் ஏதோ ஏமாற்றி இருக்கார் என நினைத்துவிட்டேன். கடைசியில் இப்படி ஆகிவிட்டதா? பிழைத்தது பூர்வஜன்ம புண்ணியம்! மனம் பதறல் இன்னமும் அடங்கி இருக்காது! கவனமாகவே இருக்கவும். ரொம்பவே நேரம் சரியாக இல்லை! :(
பதிலளிநீக்குஆமாம் கீதா அக்கா. பதற்றம்தான்.
நீக்குநன்றி.
ஏதோ வேகத்திலும் அவசரத்திலும் எழுதினமாதிரி அமைந்துள்ளது காசியாத்திரை பயணக்கட்டுரை. உங்களோட கிசுகிசுவிற்கு பதில் தெரியவில்லை. இளையராஜா அப்படி என்ன சொன்னார்? எல்லோருமே அவரைக் குறை சொல்லி இருக்காங்க! என் கவனத்தில் இதெல்லாம் வருவது இல்லை!
பதிலளிநீக்குகீதாக்கா அது அறிஞ்சோ அறியாமலோ வார்த்தைகளை விடறார் ..இந்த இன்ஸ்டன்ட் புர்ச்சி :) யாளர்கள் சமூகம் எல்லா இடத்திலும் அவரை தாகோதாக்குனு தாக்குது :) அவரை அவர் மனநிலையை நிறையபேர் புரிஞ்சிக்கலை பாவம் அவர் அதனால்தான் நான் அவரை ஒன்னும் சொல்லல .
நீக்கு//ஏதோ வேகத்திலும் அவசரத்திலும் எழுதினமாதிரி அமைந்துள்ளது காசியாத்திரை பயணக்கட்டுரை./
நீக்குஅச்சச்சோ...!
கிசுகிசு என்னோடது இல்லை! குமுதம்! எனக்கும் அதற்கு பதில் தெரியவில்லை.
இளையராஜா 96 படத்தில் இவர் பாடல்கள் உபயோகப்படுத்தியது தவறு என்றும், ஆண்மையற்ற செயல் என்றும் இன்னும் அந்த விழாவில் ஒருமாதிரியும் நடந்து கொண்டிருக்கிறார்.
அவர் பேசியதை, நடந்து கொள்வதைப் படிக்கும்போது என்னைப்போன்ற அவரின் தீவிர ரசிகனுக்கு கொஞ்சம் தர்மசங்கடமாய்த்தான் இருக்கிறது ஏஞ்சல்.
நீக்குஅவரை ஒரு 75 வயது தாண்டிய ,முதுமையின் எல்லைக்குள் எட்டி பார்க்கும் அருகாமையும் அன்பும் செலுத்thina மனைவியை இழந்த ஒரு குழந்தையா தான் எனக்கு தோணுது .இளையராஜா போன்றோர் நிறையபேர் இருக்காங்க அவர் லைம்லைட்டில் இருப்பதால் அனைவருக்கும் தெரிகிறது .
நீக்குவிளையாட்டுக்கா சொல்லலை இந்த பூவோடும் பொட்டோடும்ன்னு நிறைய லேடிஸ் பேசுவாங்க சொல்வாங்க அந்த கஷ்டம் முதிய வயதில் தனித்து விடப்படும் ஆண்களுக்கே தெரியும்
உங்கள் பார்வையிலிருந்து பார்க்கும்போது நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடிகிறது ஏஞ்சல். நீங்கள் அன்புமயமானவர்.
நீக்குஇளையராஜா சர்ச்சையாக ஏதேனும் சொல்லி/செய்துவிடுகிறாரா? அல்லது இளையராஜாவைப்பற்றி சர்ச்சைகளைக் கிளப்பவேண்டும் என சிலர், மீடியா உட்பட, அலைகிறார்களா? கவனிக்கவேண்டியவிஷயம். ராஜாபற்றி, ஏஞ்சல் ஒருவரே சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது.
நீக்குராஜா பற்றி அப்படி ஒரு புரிதல் வருவதை மனதார வரவேற்கிறேன்.
நீக்குநன்றி ஏகாந்தன் சார் அண்ட் ஸ்ரீராம் ..எங்க குரு தலைவீ மேதகு மியாவ் எப்பவும் ஒன்று சொல்வார் ஒருவரை திட்டுவதோ புறக்கணிப்பதோ இல்லை அவமானப்படுத்தறோம் எதோ ஒன்று அந்த சூழலை நம்மை அந்த இடத்தில வைத்து பார்க்கணும்னு .
நீக்குஅப்படி பார்த்தாலே பல பிரச்சினைகள் முளைக்காது .
வேணிதானம் இரண்டாம் முறை வேண்டாம் எனச் சிலரும், வேண்டும் எனச் சிலரும் சொல்கின்றனர். சங்கரமடத்தில் முன்பதிவு செய்து விட்டும் போகலாம். நாங்கள் 20 வருடம் முன்னால் போனப்போ ஸ்வாமிமலை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் என்பவர் எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார். இப்போ அவங்க அண்ணன், தம்பி இருவரும் இல்லை! பிள்ளைகள் தான் எடுத்துச் செய்வதாகச் சொல்கின்றனர்.
பதிலளிநீக்குசுவாமிமலை கனபாடிகள் பற்றி சுகுமாரும் சொன்ன நினைவு. சுவாமிமலை அவருக்கு குலதெய்வம்.
நீக்குஅந்த "சுகுமார்" பத்தி இன்னும் ஏதோ சொல்லாதது பாக்கி இருக்கே! முன்னரே அப்படித் தோன்றியது!
பதிலளிநீக்குஎன்னவாக இருக்கும்? எனக்கு அப்படித் தோன்றவில்லையே!
நீக்குதிரிவேணி சங்கமத்துக்குச் சென்றிருக்கிறோம் அண்ணாஎல்லா சிரர்ர்தங்களையும் சிரத்தையுடன் செய்தார் என்மனைவியும் அண்ணியும் உதவினர் நான்பார்த்துக் ல்கொண்டிருந்தேன் நிறைய விஷயங்கள் அப்போது யாரும்சொல்ல வில்லை சும்மா போய் வந்ததுதான் நினைவில்
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார். அப்போது உங்கள் அண்ணிக்கோ யாருக்கோ உடல் நலமில்லாமல் போனது என்றும் நினைவு, அல்ஸைமர்ஸ் மாதிரி...
நீக்குஅண்ணிக்குதான் அல்ஜிமெர்ஸ் துவக்க காலம்
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதம்பம் அருமை. காசி கயா திரிவேணி சங்கமம் என அனைத்து செய்திகளைப்பற்றி விபரமாக தெரிந்து கொண்டேன். மற்ற செய்திகளும் அருமை.
கடைசியில், ஆட்டோ செய்தி சற்று நிறையவே பயமுறுத்தி விட்டது. கடவுளுக்கு நன்றிகளை நானும் தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலம் பார்த்துக் கொள்ளவும்.
எந்த நேரத்திலும் எதிர்பாராமல் சிலசமயம் ஏதாவது இப்படி நடந்து விட்டால் மனம் அதிர்ச்சியடைகிறது. கடவுளுக்கு மறுபடி நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா...
நீக்குகருத்துகளுக்கும் கரிசனத்துக்கும் நன்றி அக்கா.
//ஆஸ்ரமங்கள் 20-22 வயது இளைஞர்களை மொட்டையாக்குவதில்// - இது கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம். தங்கள் கடமையை மறந்து சிறு வயதிலேயே ஆஸ்ரமத்தில் சேர்பவர்கள் (ஜக்கி, பிடதி போன்று) அடையக்கூடியது என்னவாக இருக்கும்? (வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம் என்று பிற்காலத்தில் வருந்துவதைத் தவிர?
பதிலளிநீக்கு//முதலில் காசு ஒன்றும் தரவேண்டாம் என்றுதான் சொல்வார்கள். எல்லாம் முடித்தபின் "மனசுபோல" கொடுக்கச் சொல்வார்கள். // - இது ஒரு பெரிய பிரச்சனைதான். நான் ஆட்டோக்காரனிடமே பேரம் பேசி இவ்வளவுதான் என்று நிச்சயத்துக்கொள்ளாமல் எங்கும் செல்வதில்லை. 'கொடுக்கறதைக் கொடுங்க' என்று சொன்னாலே அவங்க ஃப்ராடுதான்.
பதிலளிநீக்குஅது கவலைப்படும் அளவு பெரிய பிரச்னை இல்லை நெல்லை. அவர்களை எளிதாகக் கடந்து விடலாம்.
நீக்குஏகாந்தன் ஸார்...
பதிலளிநீக்குஎன் அப்பாவின் கையெழுத்தை இங்கு பார்த்திருப்பீர்கள்... அதை வைத்து என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்களேன்... சிறு ஆர்வம்!
உங்கள் அப்பாவின் கையெழுத்தைப் பின்னூட்டம் மூலமாகத் தெரிந்துகொண்டேன். மேலே ’கொலையுதிர் காலம்’ என எழுதியிருப்பதும், கீழே யாருடைய பெயரையோ கையெழுத்தைப்போல் இட்டிருப்பதும் - இரண்டும் அவரது எழுத்துக்கள் என நினைத்து ஆராய முயற்சிக்கிறேன்!
நீக்குநன்றி ஸார். ஆம், அது இரண்டும் காலம் சென்ற என் அப்பாவின் கையெழுத்துதான். காத்திருக்கிறேன்.
நீக்குஎனக்குக் கிடைத்த மெட்டீரியலை வைத்து, எனக்குத் தெரிந்தவரை ஆராய்ந்ததில், உங்கள் அப்பா இப்படி இருந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது:
நீக்குதன்னம்பிக்கை உடையவர். ப்ராக்டிக்கலான மனிதர், இன்ப துன்பங்களை சமமாகப் பாவிக்கப் பழகுபவர். ஆனால், ஆழமான உணர்வுகளை மறைப்பதில் கவனம் உண்டு.
அனுசரித்துப்போதல் அல்லது நிலைமைக்கு ஏற்றபடி தன்னை சரிசெய்துகொள்ளும் இயல்புடையவர்.
படத்தில் காட்டியிருப்பதைப்போல் அவர்போடும் கையெழுத்தும் அமைந்திருந்தால் -
ப்ராபல்யம், பெருமையின் மீது ஆசை.
கடவுளுக்கு நன்றி. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும். அதிர்ச்சியிலிருந்து மீண்டிருப்பீர்கள் என்றாலும், என் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபயணக்கட்டுரையில் விரிவான அறியாத தகவல்கள் பல. நல்ல பகிர்வு.
சுகி சிவம் மற்றும் இளையராஜா கூறியிருப்பன நன்று.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஆட்டோ ஒரு பிரேக் போட்டாலே பயங்கரம் அதிலே பறப்புவேற தப்பியது ஆச்சரியம்தான்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி மாதேவி.
நீக்குஎதிர்பாராத விபத்தில் சிக்கினாலும் நல்லபடியாக அதிலிருந்து மீண்டு வந்தது நிம்மதியை அளிக்கிறது! ஆனாலும் அதிர்ச்சி கொஞ்ச நாட்களுக்கு இருந்து கொண்டிருக்கும். கவனமாக இருங்கள்! உங்களால் நடக்க வேண்டிய நல்லவை இன்னும் நிறைய இருக்கிறது என்று தான் இதற்கு அர்த்தம்!!
பதிலளிநீக்குநன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஆச்சர்யமான எஸ்கேப்
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே
நன்றி நண்பரே...
நீக்குகயா சிரார்த்த விளக்கங்கள் சிறப்பு! புதிர் விடை கண்டுபிடிக்க முடியவில்லை! விபத்திலிருந்து மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி 'தளிர்' சுரேஷ்.
நீக்குமிக விரிவான செய்திகள் இன்றைய பயணக் கட்டுரையில் ....அருமை ...
பதிலளிநீக்குஆனாலும் கடைசியில் மிக அதிர்ச்சி ...நல்ல காலம் இறைவன் துணை இருந்தார் ....வாழ்க நலம் என்றும் ...
நன்றி அனுபிரேம்.
நீக்கு