“தாமிரபரணியை வீட்டுக்குக் கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்.”
ஹால் ஸ்தம்பித்தது. அன்று வேதமூர்த்தியின் 60 வது பிறந்தநாள். அவருக்கு விருப்பம் இல்லை எனினும் கோயிலில் சில வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்திருந்ததால் அவர் குழந்தைகள் மற்றும் மிக நெருங்கிய சுற்றம்.
மூத்தவன் சங்கர். ஆஸ்திரேலியாவில். மகள் சிவகாமி சிங்கப்பூரில். மகன் கணேசன் மதுரையில். மூன்று பேருமே தங்களுக்கான இணை தேடும் படலத்தை மூர்த்திக்கு ஏற்படுத்தவில்லை. மூர்த்தியும் அதற்கு ஆதரவே. சங்கரின் மனைவி மும்பைப் பெண். சிவகாமியின் கணவன் வெளிநாட்டில் வளர்ந்த இந்தியன். கணேசனின் மனைவி கேரளத்தவள் என்றாலும் தில்லிப் பெண்.
“கெஸ்ட்?”
“நோ! பெர்மெனன்ட்லி”
“அப்பா ஆர் யு இன் சென்ஸ்” - சங்கர்.
“தாமிரபரணி ஆறா!?” எல்லோரும் சிரித்தனர்.
“ஹோ! ஆன்டி உங்க மலயாளத் தமிழ்…….”
“ஹேய் மை மாம் இஸ் ரைட்! தாமிரபரணி நதியையான்னுதான் கேட்டு” மீண்டும் சிரிப்பலை.
“தாமிரபரணி பெண்ணோன்னு ஒரு சம்சயம்”
“இந்த ப்ராயத்துலயா?”
“பேசாம பசங்க்கிட்ட போய் இருக்கலாம்.”
“ஆனா இவர் இப்ப இந்த ஊரை விட்டு போகமாட்டாராமே”
“என்ன காரணமோ?….….”
ஏற்கனவே வேதமூர்த்தியின் வாழ்க்கை குறித்து நேரடியாகக் கேட்கும் தைரியம் இல்லாததால் பல ஐயங்கள் மர்மக் கதை போன்று மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் நரம்பில்லா நாக்குகள் கிசுகிசுப்பான குரல்களில் எல்லா திக்கும் நீண்டன.
“அப்பா நீ இன்னும் பதில் சொல்லலை. ஓபன் யுவர் மௌத். ப்ளீஸ் புட் எ ஸ்டாப் ஃபார் ஆல் த வைல்ட் கெஸ்.” – மகள் சிவகாமி.
“ஐ ஆம் நாட் பாதர்ட் அபௌட் ஆல் தீஸ் நான்சென்ஸ் கிசு கிசு.” மூக்குக் கண்ணாடியை எடுத்துத் துடைத்துக் கொண்டே, “இப்போதைக்கு என் பதில் அவள் நம் குடும்பத்துக்கு ரொம்ப முக்கியமானவள்.”
பலரது புருவங்களும் உயர்ந்தன.
“ரீஸன்?”
“சொல்றேன். இப்ப இது ஜஸ்ட் இன்ஃபர்மேஷன். எல்லாரும் இங்க இருக்கறதுனால அவங்களுக்கும் தெரியட்டும்னு. நாம இப்ப கோயிலுக்குப் புறப்படுவோம். வழிபாடு முடிஞ்சப்புறம் பேசலாம்.”
‘எதுவா இருந்தாலும் அப்பா இப்ப சொல்லாம இந்த வம்புக் கூட்டம் போனப்புறம் மெதுவா ஆரம்பிச்சுருக்கலாம். ஏன் இப்ப ஆரம்பித்தார்? யார் இந்த தாமிரபரணி? ஒருவேளை அவங்களை இன்று கோயிலுக்கு வரச் சொல்லியிருக்காரோ? கோயிலுக்கு ஏன் வரச் சொல்லணும்? அதனாலதான் எல்லார் முன்னாடியும் சொல்லிருக்கார் போல……’ - மகன் கணேசனின் மனதில் ஓடிய எண்ணங்கள்.
வேதமூர்த்தியிடம் மூன்று பேருமே அளவு கடந்த அன்பும், மரியாதையும் நட்பும் கொண்டவர்கள். அவரிடம் கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்ய மாட்டார்கள். அவரும் ஒரு நண்பனைப் போலத்தான். கணேசனுக்குச் சற்றுக் கூடுதல் எனலாம்.
கோயிலுக்குச் சென்றதும் அங்கு யாராவது பெண்மணி தென்படுகிறாரா என்று தேடினான் கணேசன். வழிபாடுகள் முடிந்ததும் பிரசாதம் படைப்பதற்காகத் திரை போட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
“இந்த மனுஷன் எங்க போனார்…இங்க தானே இருந்தார்ல”
“பிராகாரத்துல இருக்காரோ என்னவோ….” என்று சொல்லிக் கொண்டே கணேசன் எழுந்து சென்றான். கணேசனுக்குத் தெரியும் வேதமூர்த்தி எங்கே இருப்பார் என்று.
“அப்பா ரொம்ப நேரமா இங்கயே உட்கார்ந்திருக்கியேப்பா. அங்க எல்லாரும் உனக்காக காத்திட்டுருக்காங்க”
தாமிரபரணி கோயிலுக்கு வராததன் காரணம் புரிந்ததுதான். ஆனால் அந்தக் காரணம் தானே அவரைப் படுத்திக் கொண்டிருக்கிறது. கண்ணை மூடிய நிலையில் சிதறியடித்த த்யானத்தில் அமர்ந்திருந்த வேதமூர்த்திக்குச் சட்டென்று உடம்பு சிலிர்த்தது. திரும்பிப் பார்க்கவும், அருகில் வந்த கணேசன் அவரது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.
அவனுக்குத் தெரியும் அப்பா முன்பு ஊருக்கு வரும் போதும் சரி, ஊரில் இப்போது செட்டில் ஆனபிறகும் சரி பெரிய கோயிலுக்கு எதிரே இருக்கும் ஆலமரத்தடிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் ஆற்றின் படிக்கட்டில்தான் தினமும் சில மணி நேரங்கள் அமர்ந்திருப்பார் என்பது. ஆனால், சமீபகாலமாக இப்படி அவர் அமர்ந்திருப்பது ஏதோ சிந்தனைவயப்பட்டவராய், ஆற்றையே பார்த்துக் கொண்டு….பல சமயங்களில் பிரார்த்தித்துக் கொண்டு…….
“அப்பா ஏதோ ஒண்ணு உன் அடி மனசுல இருந்து ரொம்ப வாட்டுது. ரொம்ப முக்கியமான விஷயம்னும் புரிஞ்சுக்க முடியுது.”
பெருமூச்சுடன், “யெஸ் யு ஆர் ரைட். சொல்றேன்”
“வந்துருக்கறவங்க எல்லாம் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்கனு தோணுது. போனப்புறம் பேசலாம்பா. ப்ளீஸ்”
கணேசனைக் கேள்விக்குறியாய்ப் பார்த்தவருக்குப் புரிந்தது. இவன் மிகவும் மென்மையானவன். அவனுக்கு வம்புப் பேச்சுகள் பிடிப்பதில்லை. அதுவும் மூர்த்தியைப் பற்றி. புன்னகையுடன் அவன் கையைப் பிடித்து அழுத்திவிட்டு அவன் தோளில் கை போட்டுக் கொண்டார். கோயிலை நோக்கி நடந்தார்கள்.
“என்னப்பா நீ? இவ்வளவு நேரம் எங்கப்பா போய்ட்ட?” பெரியவனும், மகளும். அவர்களையும் அணைத்துக் கொண்டார். இப்படியான சில மொழிகள் குழந்தைகளுக்கும் அவருக்குமேயான தொடர்பான புரிதல்கள். பல செய்திகள் சொல்லும் மொழிகள்.
ஆதரவற்றோர் இல்லத்திற்குப் பிரசாத சாப்பாட்டை வேதமூர்த்தி அனுப்பிவிட்டு இவர்கள் கோயிலிலேயே சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள். எல்லோர் மனதிலும் வேதமூர்த்தியின் வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்ததால், மர்மமுடிச்சு பிரியப் போவதைக் கவர் செய்ய வீட்டிற்குள் இருக்கும் சாட்டிலைட் சானல்கள் தயாராகின.
“வெல், அப்பா இப்ப சொல்லுப்பா நீ சொல்ல வந்தது என்னன்னு?” மூத்தவனுக்கு இடம் பொருள் ஏவல் பக்குவம் எப்போதுமே வருவதில்லை. எல்லாம் டமால் டுமீல்தான்.
கணேசன், சங்கரிடம் கண்களால் வெயிட் என்று ஜாடை செய்து வேண்டுமென்றே பேச்சை மாற்றினான். “கொஞ்சம் பொறுங்க ரெண்டுபேரும். நாம மட்டும் இருக்கும் போது அப்பாகிட்ட பேசலாமே….” நாம மட்டும் என்பதை கொஞ்சம் அழுத்தியே சொன்னான் கணேசன்.
சாட்டிலைட் வம்புச் சானல்களுக்கு ஃபூட்டேஜ் எதுவும் கிடைக்கவில்லை. எல்லாம் மெதுவாகக் கிளம்பிச் செல்லத் தொடங்கின.
வேதமூர்த்தி நோட்புக் ஒன்றை குழந்தைகள் மூன்று பேரும் பார்க்கச் சொல்லிக் கொடுத்துவிட்டு, சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டார்.
“க்ரான்ட்பா. டுடே இஸ் யுவர் ஹேப்பி பெர்த்டே. பட் யு டோன்ட் சீம் டு பி குட் டுடே!” என்று சொல்லியபடியே வந்த மூத்த பேத்தி, சங்கரின் மகள் அவர் கன்னத்தில் தன் கன்னத்தை இழைத்தது. வாரி அணைத்துக் கொண்டார். அவர் கண்களில் கண்ணீரின் கசிவு. ‘இவள் தாமிரபரணியின் அம்சமோ?’
மனதில் கிடக்கும் நினைவுப் புத்தகம் பக்கங்களைப் புரட்டியது. பிள்ளைகள் கையில் நோட்புக்கின் பக்கங்கள் புரண்டது.
இதுவும் கடந்து போகும் என்று அடிக்கடிச் சொல்லி சமாதானம் அடையும் வேதமூர்த்திக்குச் சிரிப்புதான் வந்தது. ஆம் கடந்துதான் சென்றது. சென்றே விட்டது. அந்தக் காலம். அது மூர்த்தியின் தாமிரபரணியையும் அல்லவா கடத்திக் சென்றது! அதன் பாதிப்புகள், மனதில் ஏற்பட்ட வேதனைத் தழும்புகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது.
மனதில் எப்போதுமே தாமிரபரணி துள்ளலாய் ஓடிக் கொண்டுதான் இருக்கிறாள்! வயதாகி சுருங்கினாலும் அந்த அழகும், ஈரமும் மாறுமா என்ன? எல்லாம் பிணைப்புதான்.
நதியில் ஓடும் நீராய்
காலம்
நீரோடு சென்றுவிட்டாலும்
சில நினைவுகள் மட்டும்
நனைந்த மண்ணாய்
மனதில்
ஈரமாகவே எப்போதும்
------------எங்கள் பிளாக் ஸ்ரீராம்------------
“ஹேய்! நம்ம அப்பா ரைட்ஸ் போயம்ஸ்!!” வியப்புடன் சிவகாமி.
“ஹையோ சிவகாமி உனக்கு எப்பவுமே தமிழ் தகராறு. கீழ பாரு என்ன பெயர் போட்டுருக்குனு. ‘எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்’.”
“அப்பா எழுதினா நம்ம மூணு பேருக்கும் காட்டாம இருக்கவே மாட்டார். இது அப்பா வாசிச்ச கவிதையா இருக்கும். இல்ல அவர் ஃப்ரென்டா இருக்கலாம். பொருத்தமா இருந்ததால எடுத்துப் போட்டிருக்கார்னு தோணுது.”
“அந்தக் கவிதை ஏதோ கதை சொல்லுதுல? லெட்ஸ் ப்ரொசீட்…”
“ஹலோ எங்களுக்கும் பிள்ளையார் அப்பாயின்ட்மென்ட் கொடுத்துருக்காரு. உங்க டைம் ஓவர். கொஞ்சம் நகர்ந்துக்கறீயளா?”
யூனிஃபார்ம் பாவாடை சட்டையில், இரட்டைச் சடையின் இடைவெளியில் கைவிரலை நுழைத்து அதைச் சுழற்றியபடி கண்களில் குறும்பு கொப்பளிக்க தாமிரபரணி.
“ஹேய்! தமிழ்சினிமா போல ஹீரோயின் என்ட்ரி அதுவும் பிள்ளையார் முன்ன. சென்டிமென்ட்?!”
“ச்சூ சிவகாமி சுப்! யுட்யூப்ல படம் பார்க்கும் போது இடையில வர ஆட் போல! இனி இடையில பேசின…..இருக்கு உனக்கு……”
“கவலைப் படாத. இந்த வாட்டியும் நீதான் ஃபர்ஸ்ட் வருவ. கொழுக்கட்டை ரெடி பண்ணிடு. ஆல் த பெஸ்ட்” என்று கண்சிமிட்டி கமுக்கமான புன்சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு வேதமூர்த்தி நடந்தான்.
“ஹூக்கும் கிண்டலாலே! பாத்துக்கறம்லே உன்னைய!” தாமிரபரணிக்கு ஆச்சரியம்! வேதமூர்த்தியிடம் சில மாற்றங்கள். தன்னைப் போல் துடுக்காக இல்லை என்றாலும் பேசுவான்தான் ஆனால் இப்போது குறும்பு முகத்திலும் பேச்சிலும் கொப்பளிக்கிறதே! மீசை கூட வந்திருக்காப்புல இருக்கே ‘வயசுக்கு வந்துட்டான் போல’ என்று நினைத்தவள் ‘ச்சீய் என்ன இது கெட்ட சிந்தனை’ என்று வெட்கப்பட்டுக் கொண்டு தன் தலையில் குட்டிக் கொண்டாள்.
“பிள்ளையாரப்பா மன்னிச்சுருவ்வே. இதுக்காக என் மார்க்கை குறைச்சுப்டாத. சொல்லிக்கிடுகேன்” என்றாலும் அன்றைய தேர்வை படபடப்புடனே தான் எழுதினாள்.
இருவரும் 10 ஆம் வகுப்பு என்றாலும் வேதமூர்த்தி பி செக்ஷன் இவள் ஏ செக்ஷன். இவள்தான் எப்போதும் முதல் ரேங்க் வருவாள். வேதமூர்த்திக்கும், தாமிரபரணிக்கும் போட்டி அவர்களுக்குள் இல்லை என்றாலும் இரண்டு வகுப்பிற்கும் இடையில் உண்டு.
இந்த ஆலமரத்தடி பிள்ளையார் தான் எல்லா குழந்தைகளுக்கும் பரீட்சை முதல், பரீட்சை பேனாவுக்கு, ஜியாமெட்ரி பாக்ஸுக்கு ஆசி வழங்குவதிலிருந்து ஏதேனும் தொலைந்தால் தேடித் தருவது வரை உதவுபவர்.
குழந்தைகள் மகிழ்ச்சியிலிருந்தால் அவருக்குக் குளியல் நடக்கும். வேஷ்டி கட்டிவிட்டு கொழுக்கட்டை, அவல் பொரி வெல்லம் தேங்காய் என்று பலதும் கிடைக்கும். வருத்தம் என்றால் அவ்வளவுதான் இருக்கும் அழுக்குத் துண்டும் காணாமல் போயிருக்கும். பட்டினிதான்.
அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார். இத்தனைக்கும், எதிரில் அவர் அப்பா குடும்பத்துடன் இருக்கும் பெரிய கோயில் இருந்தாலும் இவர் என்னவோ இந்த ஆலமரத்தடியில் தன்னந்தனியாக. பிள்ளைகளும் கூட இவரிடம்தான் கூட்டம் போடுகிறார்கள். சிறிய அந்த மேடையில் தாயக்கட்டம் வரைந்து, நாலு பேர் விளையாட மூன்று பேர்தான் இருந்தார்கள் என்றால் அந்த நாலாவது நபராகவும் இவர் இருப்பார்! அதனால் எப்போதுமே அவர் பிஸிதான்.
காலாண்டுத் தேர்வு முடிந்து லீவும் வந்தது. ஆலமரத்தடி பிள்ளையாரின் பின்புறமாக இருக்கும் நதிக்கரையின் படிக்கட்டு, மரத்தின் விழுதுகளாலும், சிறு மண்டபத்தினாலும் மறைவிடமாகத்தான் இருக்கும். அங்கு இருப்பது யாருக்கும் சட்டென்று தெரிந்துவிடாது. அருகில் தோட்டம் வேறு. அந்த மறைவிடத்தில். அமர்ந்து பிள்ளையாரை நினைத்தபடியே தனக்குள் சிரித்துக் கொண்டே, படிக்கட்டில் வீழ்ந்திருந்த பழுத்த இலைகளை எல்லாம் அப்புறப்படுத்தி, ஆற்றில் பொரி போட்டு மீன்கள் துள்ளுவதை ரசித்தபடியும் இருந்த வேதமூர்த்தி கொலுசு சத்தமும் “ஹ்க்கும்” என்ற சத்தமும் கேட்க திரும்பிப் பார்த்தான்.
“ஹேய்! தாமிரம் என்ன இந்தப் பக்கம்? என்ன கனைப்பு? பேர் சொல்லிக் கூப்பிட்டுருக்கலாமே” வேதமூர்த்திக்கு அவளைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
“தாமிரமா? ஏய் உனக்கு கொளுப்பு ரொம்பக் கூடிப் போச்சுலே…..” இந்தப் பக்கம் வந்ததற்கு அவன் மீதாக மலர்ந்து வரும் நேசம் என்று சொல்லவா முடியும்!
“ம்ம்ம்ம்ம்…பரணி? அது நல்லால்ல… ……ம்ம்ம்ம்ம்ம் தாமர(ரை)?”
“ஹேய் நல்லாருக்கு!” வெட்கத்தில் முகமே தாமரையின் நிறமாகி ஆயிரம் தாமரை மொட்டுகள் விரிந்து ஆனந்தக் கும்மி தட்டி மனம் அடுக்கடுக்காய் விரிந்தது. சற்று நேரம் எதுவும் பேச இயலவில்லை. அவள் கழுத்துச் செயினைத் திருகியபடி தூரத்தில் பார்ப்பது போன்ற பாவ்லா.
வேதமூர்த்தி அவள் முகத்தின் அழகை ரசித்தான். தாமரை எதற்கு மை இட்டுக் கொள்கிறாள்? அவள் கண்களே கருவிழி, அடர்த்தியாக இமைகள். ஆற்றின் மீன்களையும் அவள் கண்களையும் மாறி மாறிப் பார்த்தான். கண் மையை வெளியே இழுத்து மீன்களின் வால் பகுதி இரண்டாக இருப்பது போல மெலிதாகத் தீட்டியிருந்தாள். கண்களும் மீன்கள் போலவே இருந்தன….
‘இவ்வளவு நாள் தாமிரபரணி என்றுதானே கூப்பிட்டுக் கொண்டிருந்தோம் இப்ப என்ன இப்படி ஒரு ஆராய்ச்சி….அதுவும் அவள் அழகையும்…..’ என்று மனதுள் நினைத்த வேதமூர்த்திக்குத் தன் மனதிற்குள் ஏதோ மாற்றம் ஏற்படுவது புரிந்தது.
ஓரு வாண்டு படிகளில் ஓடி வந்து ஆற்றில் குதித்தது. ‘பளக்” சத்தத்துடன் நீர் திவலைகள் இருவர் மேலும் தெறித்தது.
“ஏலேய் பாத்துலே. அங்கன பாறைல மோதிக்கிட்டா என்னாயிருக்கும்” தாமிரபரணியின் குரல் அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தது.
“மூர்த்தி எனக்கு பயமா இருக்குலே”
“ஒன் தம்பியா? ஒன்னும் ஆகல நல்லா நீஞ்சறான் பாரு”
“ஐயோ! அதில்ல. க்வார்ட்டர்லி மார்க் நினைப்பு”
வியப்புடன் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் வேதமூர்த்தி. “பிள்ளையார் பாவம்! கொழுக்கட்டை போச்!!”
“சிரிக்காத. நான் சின்ன தப்பு பண்ணிட்டேன். அதான் பயமா இருக்கு”
“எதுல கணக்குலயா? சயின்ஸ்லியா?”
“ஷ்ஷு. அது இல்ல….இது…இது…..” என்று இழுத்தவள் பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டதைப் பற்றி சொன்னதும் இன்னும் பலமாக சிரித்தான் வேதமூர்த்தி.
“ஹேய்! தாமரை கம் ஆன். நீ நினைச்சதுல தப்பு என்ன இருக்கு? பிள்ளையாருக்கு அதெல்லாம் தெரியாதா என்ன? …சரி அதுக்கும் உன் மார்க்குக்கும் என்ன சம்பந்தம்?”
“என்னவோ எனக்கு அப்படி எல்லாம் தோணும்லே.” என்று சொன்னவள் தன் தலையைக் குட்டிக் கொண்டாள்.
“இவ்வளவு தேவையில்லாத சென்டிமென்டா? ஏன் தலையைக் குட்டிக்கிட்ட? என்னை 'லே' னு சொன்னதுக்கா…..ஹா ஹா ஹா அதெல்லாம் பரவால்ல.”
“ம்….” என்றவளின் முகத்தில் அப்படியொரு வெட்கம். இரண்டிற்கும் சேர்த்து…
அப்போதுதான் அவள் கவனித்தாள். வேதமூர்த்தி அது நாள் வரை அரை ட்ராயரில் நடந்து கொண்டிருந்தவன் வேட்டி கட்டி வந்திருந்ததை.
“வேட்டிக்கு மாறிட்ட போல” அவள் வழக்கு மொழியைத் தவிர்த்து தன்னைப் போல பேச முயற்சிப்பதை மூர்த்திக் கவனிக்காமல் இல்லை.
“ஏன் நல்லா இல்லியா?”
“நல்லா துவைச்சு கட்டிக்க” என்று சொன்னவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ஹா ஹா ஹா… இது அண்ணன் வேட்டி….எனக்குன்னு இன்னும் வாங்கலை. நீங்க சொல்லிட்டீங்கல்ல கண்டிப்பா செஞ்சுருவேன்”
வேதமூர்த்தி திடீரென்று கண் விழித்து அனிச்சையாகத் தன் வேட்டியைப் பார்த்துக் கொண்டார். அவரை அறியாமலேயே புன்சிரிப்பு வந்தது.
“வேட்டி வெள்ளையா இருக்கா தாமரை? நானேதான் தோய்ச்சுக் கட்டிக்கறேன் தெரியுமா?” என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது.
“ஹேய் வெரி இன்ட்ரெஸ்டிங்க்ல? அப்ப அந்த எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் யாரு?”
“ப்ளாக் ரைட்டரா இருக்கணும். அவரைப் பத்தி வேற எதுவும் இல்லையே. நம்ம அப்பாவே ஒரு தேர்ட் பெர்சன் சொல்றது போல எழுதியிருக்கார். அதுல ஸ்ரீராம் எழுதின கவிதை…”
“அப்பா ஹேட் லவ்ட் எ கேர்ல். வெரி சர்ப்ரைஸிங்க்!”
“அப்ப நம்ம அம்மா? அம்மாவோட ஃபோட்டோஸ் காமிச்சாரே, ரொம்ப இன்டெலிஜென்ட், ரொம்ப அன்பானவங்க ஆனா என்ன காரணமோ தெரியலை, நம்மள விட்டுட்டுக் காணாம போயிட்டாங்கனு சொல்லிருக்காரே”
“அதனால்தான் நாம கூட அப்பா அம்மா கல்யாண ஃபோட்டோ காட்டச் சொல்லிக் கேட்டதுக்கு அப்பா டிண்ட் வான்ட் டு ரெக்கலெக்ட் தட் பாஸ்ட். ரொம்ப டல் ஆயிட்டார்ல”
“நமக்குக் கூட அப்பப்பத் தோணியிருக்குல்ல? அம்மா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும்னு நம்ம ஃப்ரென்ட்ஸோட அம்மவைப் பார்த்தப்ப எல்லாம் நமக்கு இல்லையேனு….ஆனா நாம கேட்டா அப்பாவுக்கு மனசு ஹர்ட் ஆயுடுமோனுதானே நாம கேட்டதே இல்லையே. ஏன் நம்ம யாருக்குமே கேட்கத் தோணலை அதுக்கப்புறமும்?”
“ஆனா அப்பாதான் நமக்கு அம்மா இல்லைன்ற அந்தக் குறை கூட இல்லாமத்தானே அன்பா இருந்தார்! என் ப்யூபர்ட்டி சமயத்துல கூட அப்பா எனக்கு எப்படி சப்போர்ட்டிவா இருந்தார்ல? அப்பாவோட அந்த அரவணைப்பு, சப்போர்ட், கைடன்ஸ், அவர் மேல இருந்த அன்பு, மரியாதை காரணமா இருந்திருக்குமோ?....சரி இப்ப எதுக்கு இந்த பாஸ்ட் கதை..ம்ம்ம்?”.
“ம்ம் அதான் தெரியலை… ஃபுல்லும் வாசிச்சாத்தான் தெரியும்.….”
காலாண்டு விடுமுறை முடியும் வரை பெரும்பாலும் தினமும் ஆலமரத்தடி பிள்ளையாரின் பின்புற படித்துறையில் மீன்களுக்குக் கொண்டாட்டமாக இருந்தது பொரி கிடைத்ததால்…கூடவே பிள்ளையாரைத் தொழுது, துணி துவைக்கும் சாக்கில் கொலுசுச் சத்தமும் கேட்டதால் மீன்கள் வாயைப் பிளந்து கொண்டு தண்ணீரின் மேற்பரப்பிலேயே இருந்து கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தன.
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டு, மார்க்குகள் வந்து மூர்த்தி முதலாவதாகவும், தாமரை இரண்டாவதாகவும் வந்திருக்க, மறு நாள் படித்துறையில் இருந்த போது தாமரை விசும்பிக் கொண்டே வந்தாள்.
“என்னாச்சு தாமரை? ரெண்டாவதா வந்ததை அக்செப்ட் பண்ணிக்க முடியலையா?”
“இல்லை மூர்த்தி எனக்கு நீ முதல் ரேங்க் வந்தது சந்தோஷம்தான். வீட்டுல அப்பாவும், அண்ணனும்தான் என்னைய திட்டினாங்க. அதுவும் உன்னைய உன் சாதி, அப்புறம் உங்கப்பா செய்யற தொழில்…அது இதுனு சொல்லி…. ….நீ முதல் ரேங்க் வந்தது சொல்லித் திட்டினாங்க……அதான்..”
“ஏய்! விட்டுத் தள்ளு. அதையெல்லாமா பெரிசா எடுத்துக்குவாங்க. எங்கப்பாவை நேரடியாவே அவங்க திட்டினாலும், தப்பா எடுத்துக்க மாட்டார். ரொம்ப மெச்சூர். அழாத. எனக்கு அழுகை பிடிக்காது. மனசக் கஷ்டப்படுத்துது. தைரியம் ரொம்ப முக்கியம்….”
அதன் பின், தான் இரண்டாவதாக வருவதை எப்படியோ மெயிண்டெய்ன் செய்துவந்தான் மூர்த்தி. அவனைப் பொறுத்தவரை தாமரை அழக் கூடாது.
“மூர்த்தி இந்த வாட்டி பந்தயத்துல நீ தோத்துட்ட. நான் தானே ஃபர்ஸ்ட் ஸோ பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை உன் ட்ரீட்!” என்று அரையாண்டில் அவள் முதலாவதாக வந்ததும் மூர்த்தியைக் கலாய்த்தவள்,
“ஸாரிடா சும்மா உங்கிட்ட விளையாடினேன். நானே செஞ்சு வைச்சுருவேன். படையலுக்கு மறக்காம வந்துரணும் என்ன? ம்ம்ம்ம்ம்.. ஒண்ணு கேப்பேன் உண்மைய சொல்லணும். நான் திட்டு வாங்கக் கூடாதுன்னுதானே வேணும்னு நீ விட்டுக் கொடுத்த?”
“அப்படில்லாம் இல்லையே. சரி அப்படியே செய்தாலும் என்ன தப்பு? நீ அழறது எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு. அதுக்காக நான் ஃபர்ஸ்ட் வரணுமின்னு நீ விட்டுத்தரத் தொடங்கிடாத. பிள்ளையார் பாவம்” என்று சொல்லிச் சிரித்தான்.
படியில் துள்ளி ஏறியவள் மூர்த்தியின் தலைமுடியை கோதி கலைத்துவிட்டு அவனைக் காதலுடன் பார்த்து சந்தோஷமாக ஓடியதை அவனால் மறக்க முடியுமா? ஆனால் இதெல்லாம் தினமுமல்ல. பல நாட்கள் பள்ளியிலேயே சந்திப்பு முடிந்துவிடும். சில நாட்கள் மட்டுமே இங்கு.
தினமும் 10 நிமிடமே என்றாலும் பல மணி நேரங்கள் பேசியது போல் என்னென்னவோ பேசினார்கள். பாடங்களிலிருந்து பொது அறிவு வரை. இருவரும் ஒருவருக்கொருவர் மெச்சிக் கொண்டனர். தர்க்கமும் இடையே. பெர்சனலாகவும் பேசிட, கூடவே காதலும் வளர்ந்தது. ஒருவருக்கொருவரின் மீதான அன்பும், மதிப்பும் உயர தாமரையின் மீதிருந்த தன் விருப்பமும் ஆழமாவதை உணர்ந்தான் மூர்த்தி.
“தாமரை உனக்கு அடுத்து என்ன படிக்கணும்னு ஆசை?”
“பயாலஜில ஸ்பெஷலைஸ் பண்ணனும்னு ஆசை இருக்கு. நம்ம ஹெச் எம் அன்னிக்கு மேல படிக்க என்னெல்லாம் படிப்பு இருக்குனு நேஷனல் லெவல் இன்ஸ்டிட்யுட் பத்தி, ஆர்வம் இருக்கறவங்களுக்குச் சொன்னார்ல அதுலருந்து மேற்படிப்பு ஐஐஎஸ்ஸி பெங்களூர், இல்ல டைஃபர், இல்ல மேத்தமேட்டிக்கல் இன்ஸ்டிட்ட்யூட் இப்படி எதுல சேர முடியுதோ அதுல சேர்ந்து பிஹெச்டி செஞ்சு அதுக்கு மேலயும் படிக்க ஆசை இருக்கு.”
“ஏய்! வாட் எ கோயின்சிடென்ஸ்! நானும் அதேதான் படிக்க ஆசைப்படறேன்.”
“உண்மையாலுமா? அப்ப நானும் நீயும் சேர்ந்தே படிக்கலாம்ல! நினைச்சா சந்தோஷமா இருக்கு”
“முதல்ல நாம யுஜி நல்ல காலேஜ்ல முடிக்கணும். அதுக்கப்புறம் கிடைக்கலைனா ஏதாச்சும் அந்த இன்ஸ்டிட்யூட்ல ரிசர்ச் ப்ராஜெக்ட்ல ப்ரொஃபஸர் கீழ அஸிஸ்ட் பண்ணிட்டு அப்படியே ஸ்டெப் பை ஸ்டெப் போயிட வேண்டியதுதான். பார்ப்போம்…”
“அப்படி ப்ரொஃபசர் கீழ சேர்ரதுக்கு ஆள் தெரிஞ்சுருக்கணுமே நமக்கு ரெஃபரன்ஸ் தர…”
“ப்ச் யுஜி பண்ணும் போது நமக்கு அதுக்கெல்லாம் வழி பிறக்கும். நான் மெட்ராஸ்ல போய் படிக்கலாம்னு நினைக்கிறேன். அங்க நிறைய லைப்ரரி வசதி எல்லாம் இருக்குல அதனால.”
“உனக்கு அது முடியும் ஆனா எனக்கு அதெல்லாம் முடியாதே…”
“அப்படி நினைக்காத தாமர. நீ இங்க படிச்சாலும் நான் உனக்கு அங்கருந்து எல்லா நோட்ஸும் அனுப்பி ஹெல்ப் பண்ணறேன். உனக்குக் கண்டிப்பா கிடைக்கும் நான் கொழுக்கட்டை படைக்க வேண்டியிருக்கும் பாரு”
அடக்க முடியாமல் சிரித்தனர். என்னென்னவோ கனவுகள். குறிக்கோள்கள். பேசினர். பேசினர். கோட்டை கட்டினர். 12 ஆம் வகுப்புத் தேர்வும் முடிந்தது.
“தாமரை, தப்பா எடுத்துக்க மாட்டனு நினைக்கிறேன். ஓப்பனாவே சொல்லிடறேன். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சுருக்கு. வாழ்க்கைலயும் உன்னோடு இணையனும்னு ஆசை இருக்கு. ஆனா, ஐ க்நோ திஸ் இஸ் நாட் த ரைட் டைம் னு..”
“ஷ்ஷ்” என்று அவன் வாயில் விரல் வைத்தாள். வேதமூர்த்தியின் முகம் அந்த நொடியில் டக்கென்று வாடியது.
“ஹேய்! மூர்த்தி” என்று சொல்லி ஒரு விஷமப் புன்னகை தாமரையின் முகத்தில்.
“நான் சொல்றதுக்குள்ள ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்? எனக்கும் அதேதான். உன்னோடு வாழத்தான் ஆசை. போதுமா? ஹேப்பி?” என்று சொல்லி அவன் முகத்தைக் கைகளில் ஏந்தியதும் மூர்த்தியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்தது.
“நாம ஏற்கனவே பேசின படி படிச்சு நல்ல வேலைல சேர்ந்தப்புறம் வீட்டுல சொன்னா அப்ப நம்ம படிப்பு, வேலை எல்லாம் வேற எதுவும் இடைல குறுக்கிடாம காப்பாத்தும்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.” தாமரை மூர்த்தியின் கண்ணோடு கண் பார்த்து நெற்றியில் ஒரு முத்தமும் கொடுத்தாள்.
மூர்த்தியின் உடல் சிலிர்த்தது. “ம்ம்ம்ம்கண்டிப்பா….” என்றான் கிசுகிசுப்பாக கண்கள் மூடிய நிலையில்…
“கண்ணைத் தொறடா…..இன்னொன்னும் சொல்லிக்கிடறேன். எங்க வீட்டுல அம்மா, அப்பா, நான், எனக்கு ரெண்டு அண்ணன்மாருங்க. எங்க வீட்டுல நான் மட்டும் சைவம்.!”
“ஹையோ! தாமரை சாப்பாடெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கலை. சரி, என் குடும்பம் பத்தியும் சொல்லிடறேன். அப்பா, அண்ணன், நான் இதுதான் எங்க குடும்பம். அண்ணனுக்கும் எனக்கும் 13 வயசு வித்தியாசம். நான் பிறந்ததும் அம்மா இறந்துட்டாங்க. எங்கப்பாவை நீ கோயில்ல பார்த்திருப்ப.”
“பார்த்திருக்கேன். ரொம்ப ஸாஃப்ட் இல்ல? அம்மா இல்லை எப்படி சாப்பாடு எல்லாம்? அம்மா இல்லைனு தோணுமா உனக்கு?”
“மூணு பேருமே சமைப்போம். ஒருத்தருக்கொருத்தர் உதவியா. ம்ம் அம்மா இல்லைனு தோணும்தான். ஆனா அப்பாகிட்ட சொன்னதில்லை. பாவம் அவர் மனசு கஷ்டப்படும்னு. பழகிடுச்சு.”
“ம்ம்..நிறையவே பக்குவப்பட்டிருக்க நீ. உனக்கு சமையல் தெரியும்னா எனக்குக் கஷ்டமில்லைனு சொல்லு” என்று சொல்லிச் சிரித்தாள்..
“என் உள் மனசு சொல்லுது உன்னோடு வாழ்ந்தா நல்லாருக்கும். நான் ரொம்ப லக்கினு. அதை நான் நம்புறேன்…அப்பாக்கிட்டயும் நான் சொல்லிட்டேன்.”
“என்னது அப்பாகிட்ட சொல்லிட்டியா!!! இப்பவேவா? எப்படிடா? அப்பா ஒண்ணும் சொல்லலியா?…”
“ம்ம்…இல்லை. அமைதியா கேட்டுக்கிட்டார். நானும் ப்ராமிஸ் பண்ணிட்டேன் கவனம் சிதறாம படிச்சு நல்ல வேலைல சேர்ந்ததுக்கு அப்புறம் தாம்பானு…...அப்ப பார்த்துக்கலாம்னு அவரும் சொல்லிட்டார்..”
“நீ என்னில் பாதி. நான் உன்னில் பாதிடா” என்று சொல்லிக் கொண்டே அவன் கைகளையும் பிடித்து முத்தமிட்டாள். அதில் அவளது கண்ணீரும்! அவனும் முத்தமிட்டான்! கண்ணீர் உப்பு கரிக்கவில்லை!
“ஏய்! தாமரை என்ன இது எப்ப பார்த்தாலும் டேம திறந்துவிடுற. ஷ்ஷு! எனக்கு அழுகை பிடிக்காது. எப்பவுமே தைரியமா இருக்கணும்.”
“ஓகேடா கிழவா! நாளைக்கு உன் கன்னத்தை நான் கைல ஏந்தும் போது என் கைய அது பதம் பார்க்கக் கூடாது சொல்லிப்புட்டேன்” என்று சொல்லி இரு கன்னங்களையும் பிடித்துக் கிள்ளிவிட்டுச் சென்றாள்.
‘யார் கண்கள் கலங்கக் கூடாது என்று நினைத்தேனோ அவள் கண்கள் கலங்கும்படியானதுக்கு நான் ஏதோ ஒரு வகையில் காரணமாகிவிட்டேனோ?’ வேதமூர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
மூன்று பேரும் ஓரக்கண்ணால் அப்பாவைப் பார்த்தனர். மெதுவாகப் பேசிக் கொண்டனர். ‘அப்பா டெய்லி கண்ணாடி பார்த்துக் கன்னதை தடவிப் பார்த்துக்கற காரணம் இதுதானா….”
“லுக்! Tயர்ஸ் ஆன் ஹிஸ் சீக்ஸ். லெட் ஹிம் கம் அவுட் ஆஃப் ஹிஸ் ஸ்டஃப்டு ஃபீலிங்க்ஸ்……”
தேர்வு முடிந்த அடுத்த நாள் வழக்கம் போல் இருவரும் படித்துறையில் சந்தித்துக் கொண்டனர். மூர்த்தியின் கன்னத்தில் சொரசொரப்பு இல்லை என்பதை தாமரை கவனிக்கத் தவரவில்லை. நமட்டுச் சிரிப்பு.
“லீவு. இனி. இப்படி நாம சந்திக்க முடியுமானு தெரியலையே மூர்த்தி. இவ்வளவு நாள் தேவையான நோட்ஸ் புக்ஸ் எல்லாம் நீ எனக்கு ஷேர் பண்ணிக்கிட்ட. இப்ப எப்படினு யோசனையா இருக்கு.”
“ம்ம்ம்நானும் யோச்சேன். நம்ம க்ளாஸ் பாண்டியன் உனக்கும் உறவுகாரப் பையன் எனக்கும் நல்ல ஃப்ரென்ட். ரொம்ப நல்லவன். அவன் கண்டிப்பா நமக்கு உதவுவான்.”
“ம்ம்ம்” என்று சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ தோன்ற பக்கவாட்டில் பார்த்த போது மேட்டில் சாலையில் கோயிலின் சற்று தூரத்தில் அவள் அண்ணன் வருவது தெரிந்தது…..…கோயில் இருக்கும் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்காத அண்ணன் வருகிறார் என்றால்……
“மூர்த்தி ப்ளீஸ் கொஞ்சம் அப்படி ஒதுங்கி தோட்டத்துக்குள்ள போய்க்க. அண்ணன் வராரு. பார்த்துட்டாருனா உன்னைய உதைச்சுத் தொலைச்சுருவாரு.. நான் மெதுவா தோச்ச துணிய எடுத்துக்கிட்டு நடக்கத் தொடங்கி சமாளிச்சுக்குவேன்…”
“தாமரை எதுக்குப் பயப்படணும்” என்று சொன்னாலும் புரிந்து கொண்டான். தாமரைக்காக மெதுவாகத் தோட்டத்துப் பக்கம் ஒதுங்கினான் மூர்த்தி. தாமரை படிக்கட்டில் இறங்கித் துணிகளை எடுத்துக் கொண்டாள்.
ஆனால், அண்ணன் படித்துறைக்கு வரவில்லை. ஒரு வேளை பிள்ளையாரின் பக்கத்தில் இருக்காரோ என்ற சந்தேகம் தாமரைக்கு. பார்த்துவிட்டாரோ என்றும் தெரியவில்லை. எனவே, திரும்பிப் பார்த்தால் மூர்த்தியை அண்ணன் கண்டுவிடுவாரோ என்ற பயத்தில் தாமரை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவள் இதயம் எழுப்பிய அந்த ஒலியையும், மனதையும் மூர்த்தியால் உணர முடிந்தது. கொடுக்க வந்து, அந்த அவகாசம் கிடைக்காததால் படித்துறையில் அவள் தன் ஃபோட்டோவைப் போட்டுச் சென்றிருப்பது தெரிந்து எடுத்து வைத்துக் கொண்டான்.
அண்ணன் அங்கு வந்ததன் பின்விளைவுகள் நன்றாகவே தெரிந்தது. அதன் பின், மூர்த்தியால் தாமிரபரணியைப் பார்க்கக் கூட முடியவில்லை. என்ன ஆனாள் என்றும் தெரியவில்லை. எப்படியும் ரிசல்ட் வந்ததும் அவள் வெளியில் வந்துதானே ஆகணும். அதுவும் சர்டிஃபிக்கேட் எல்லாம் வாங்க என்று மூர்த்தி நினைத்துக் கொண்டான்.
ரிசல்டும் வந்தது. தாமிரபரணியும், மூர்த்தியுமே மாவட்டத்தில் முதலாவதாக வந்திருந்தனர். பரிசுகள், பேப்பரில் பெயர்கள், ஃபோட்டோக்கள் என்று வந்த போதிலும் தாமரையைக் காணவில்லை. மூர்த்திக்கு இருப்புக் கொள்ளவில்லை. பாண்டியனிடம் கேட்கலாம் என்றால் அவனோ விடுமுறைக்குப் பாட்டி தாத்தா வீட்டுக்குச் சென்றவன் வரவில்லை என்றார்கள் மற்ற நண்பர்கள். தாமரை வீட்டாரும் வேறு ஊருக்குச் சென்று விட்டதாகப் பள்ளியில் பேசிக் கொண்டார்கள். எங்கு என்று தெரியவில்லை என்றும் சொல்லப்பட்டது.
மூர்த்திக்கு அதிர்ச்சி. ஒரே ஊர் என்றாலும் மூர்த்தியின் தெரு மேலூர். அவள் இருந்த தெரு கீழூர்ப்பக்கம். ஆற்றின் பாலத்தைக் கடந்தால் கீழூர் என்றாலும் கீழூர்ப்பக்கம் எல்லாம் சென்றதே இல்லையே.
சென்னையில் கல்லூரியில் சீட் கிடைத்துச் சேரும் முன் பாண்டியனை சந்தித்த போது அவனும் அதேதான் சொன்னான். மேலும் விவரங்கள் தெரியவில்லை காரணம் பங்காளிச் சண்டையாம். வேதமூர்த்தியின் வாழ்க்கை சென்னைக்கு மாறியது. அடிமனதில் தாமரை குறித்த நினைவுகள், அவளைப் பற்றிய தவிப்பு, அவளை இனி பார்ப்போமா? பார்க்க முடியுமா? வாழ்க்கையில் இணைய முடியுமா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும், வேதனையும் ….
ஏதோ ஒரு புள்ளியில்
இணைந்து விடும்
என்கிற நம்பிக்கையில்தான்
நகர்கிறது வாழ்க்கைப்பயணம்.
---------எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்----------
அந்தப் புள்ளி எப்போது? என்றாலும் அந்த நம்பிக்கையில் ஓடிக் கொண்டிருந்த வேளையில் நல்ல நண்பராக இருந்த அப்பாவின் மரணம் மூர்த்தியைக் கலங்கடித்தது. அண்ணாவும் பெரிய வேலையில் இல்லை. என்றாலும் படிப்புச் செலவை ஏற்க, கூடவே உதவித் தொகையும் கிடைக்க, மூர்த்தியும் சிறிய சிறிய வேலைகள் செய்து, எப்படியோ சமாளித்து, அதன் பின் ஐஐஎஸ்ஸியில் சேர்ந்து பிஹெச்டி முடித்து டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்சில் (டைஃபர்) மும்பையில் வேலையும் கிடைத்தது. இத்தனைக்கிடையிலும் தாமிரபரணியின் நினைவுகளும் கூடவே பயணித்தனதான் இணைந்து விடும் புள்ளியை எதிர்நோக்கி.
வேலையில் ஜாயின் செய்யும் முன் அண்ணா அண்ணியிடம் ஆசி பெற ஊருக்கு வந்த போது பாண்டியனைச் சந்தித்தான்.
“பாண்டியா இதுதான் என் விலாசம். தாமரை பத்தி ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுவியா”
“சொல்லுதேம்ல. அது கிடக்கட்டு நீ தாமரைய லவ் செய்யியால?”
“ம்….” அங்கு சற்று நேரம் அமைதி நிலவியது.
“மூர்த்தி, அவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுலே” என்று பாண்டியன் மெதுவாகச் சொல்லி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
மூர்த்திக்கு அதிர்ச்சி. அதற்கு மேல் மூர்த்தியால் ஒன்றும் பேச முடியவில்லை. உலகமே இருண்டது போன்று இருந்தது.
மூர்த்தியின் அடுத்தக் கட்ட வாழ்க்கை குறித்த அண்ணனின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், அண்ணனிடமும் அண்ணியிடமும் சொல்லிக் கொண்டு மும்பை சென்றுவிட்ட மூர்த்திக்கு வாழ்க்கையின் அர்த்தத்தையே தொலைத்தது போன்ற உணர்வு.
வெறுமையாய் வாழ்க்கை கடந்த நிலையில், பாண்டியனின் மாமா சிறிய அளவில் நடத்திவந்த ஆதரவற்றக் குழந்தைகள் இல்லத்தில் புதிதாக மூன்று குழந்தைகள் வந்திருப்பதாகவும் அவர்களை மூர்த்தி வளர்க்க முடியுமா என்றும் பாண்டியன் கடிதம் மூலம் கேட்டிருந்தான்.
“மூர்த்தி நாம செட்டில் ஆனப்புறம் நமக்கான குடும்பம்னு இருந்தாலும் அட்லீஸ்ட் ஒரு 4 ஆதரவற்றக் குழந்தைங்களையாவது நாம எடுத்து வளர்க்கலாம்ல? உனக்கு என்ன தோணுது?”
“என்ன தாமரை இப்படிக் கேட்டுபட்ட? எனக்கும்தான் அப்படியான சிந்தனை எல்லாம் உண்டுன்னு உனக்குத் தெரியும்தானே அப்புறம் என்ன கேள்வி?”
மூர்த்திக்குத் தன் வாழ்க்கைக்கான ஒரு சிறிய அர்த்தம் கிடைத்துவிட்டதாகவே தோன்றியது. நேரடியாகவே சென்றுவிட்டான்.
“மூணு பிள்ளைங்க. யாரு என்னானு ஒண்ணும் தெரியலை. விசாரிக்கணும். இங்கயும் இப்ப இடமில்ல. ஃபண்டுமில்ல. அதான் நீ வளப்பியானு? வேணா ரெண்டு ஆம்பளைப் பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போ. பொம்பளைப் பிள்ளைய வேணா வேற யார்க்கிட்டயாது வளக்கச் சொலுகேன்…ஒரு பையனுக்கு அடி வேற பட்டுருக்குது” - பாண்டியனின் மாமா.
“பெண்பிள்ளைய நான் வளக்கறதுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. மூணு பேரையுமே கூட்டிட்டுப் போறேன்…”.
மாமா உள்ளே சென்று ரெஜிஸ்ட்டரில் விவரங்கள் எல்லாம் குறித்துக் கொள்ளச் சென்றார்.
“ஏலே மூர்த்தி என்னாச்சுலே? யோசனையில நிக்க?” - பாண்டியன்
“ஒண்ணுமில்லை பாண்டியா. உன்னைக் காணலையேனு....தாமரை பத்தி ஏதாவது தெரிஞ்சுச்சாடா பாண்டி? அவ சந்தோஷமா இருக்காளா என்னனு? அவ சந்தோஷமா இருந்தா போதும்டா” பாண்டியனின் கைகளைப் பற்றிக் கொண்ட மூர்த்திக்கு வார்த்தைகள் கஷ்டப்பட்டு வெளிவந்தது.
“நான் விசயம் தெரிஞ்சா சொல்லுதேம்ல”. தாமரையின் சோகம் தெரிந்தும் ஏனோ அவனுக்கு நேரடியாகச் சொல்லும் தைரியம் இல்லை.
எல்லா நடைமுறைகளையும் முடித்து, குழந்தைகளுக்கு எப்படியேயும் பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்று பாண்டியனிடமும், மாமாவிடமும் சொல்லிவிட்டு ஒன்றும் புரியாத நிலையில் பயந்து அழுது கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் தன்னுடன் பம்பாய்க்கு அழைத்துச் சென்றுவிட்டார். 4 வயதிற்குள் இருந்திருக்கும் சங்கருக்கு, அடுத்து 3, 2 என்று மற்ற இருவரும். சங்கருக்கு தலையில் நல்ல அடி பட்டிருந்ததாலோ என்னவோ தன் பெற்றோர் பற்றி எதுவும் சொல்லவும் தெரியவில்லை.
ஒரு வாரத்தில் பாண்டியனிடமிருந்து கடிதம். அதில் தாமிரபரணியின் கணவன் அவள் சொந்த அத்தை பையன், 15 வயதுமூத்தவன் குடிகாரன், பஞ்சாயத்து தலைவன், தாமரை வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை, அந்த துக்கத்தில் அவள் அப்பா சீக்குப் பிடித்துப் போய்விட்டார்……இப்ப கணவனும் இறந்துவிட்டான்………
அதற்கு மேல் மூர்த்தியால் கடிதத்தைப் படிக்க இயலவில்லை. கிழித்துப் போட்டான்.
“மூர்த்தி எனக்கு தாமிரபரணினு ஏன் பெயர் வைச்சாங்கனு தெரியுமா? மொதல்ல தாமிரான்னுதான் வைச்சாங்களாம். எங்கப்பாக்கு நியுமராலஜில நம்பிக்கை. தாமிரபரணின்ற பெயர் 7 ஆம். வெண்கலமா, கருணையும் அக்கறையோடும் இருப்பேனாம். என் கிரகம் புதனாம்….நல்லா படிப்பேனாம். பெரிசா வருவேனாம்…..அது கரெக்ட்டாத்தானே இருக்கு! அதான் நீ எனக்குக் கிடைச்சிருக்கடா.”
அப்படிப் பெயர் வைத்தவரின் புத்தியை ஆணவம், சாதிக்கௌரவம், காழ்ப்புணர்ச்சி எல்லாம் மறைத்து தன் பெண்ணின் வாழ்க்கையைத் தானே மோசமாக்கி விட்டக் குற்ற உணர்வாக இருக்குமோ…ஆனால் கஷ்டப்படுவது தாமரை. நியுமராலஜி! என்று நினைத்த மூர்த்தி தன் வாழ்வில் முதன் முறையாக வெடித்து அழுதான்.
போஸ்ட் டாக்டோரல், ஆராய்ச்சி, ப்ராஜெக்ட்டுகள் என்று வெளிநாடு சென்ற போது குழந்தைகளையும் அழைத்துச் சென்றார். குழந்தைகளை விட்டுப் பிரிந்தது இல்லை. அவர்களை நன்றாகப் படிக்க வைத்து, நல்ல குழந்தைகளாகவும் வளர்த்து இருவர் வெளிநாட்டிலும் ஒருவன் இங்குமாக…...
ஊரில் தன் அப்பா வாழ்ந்த வீட்டையே வாங்கினார் மூர்த்தி. அண்ணனும், அண்ணியும் அதில்தான் வாழ்ந்துவந்தனர். குழந்தைகளைச் சிறு வயதில் ஊருக்கு அழைத்துவந்ததில்லை. அண்ணனும் அண்ணியும்தான் அங்கு சென்று பார்த்து வந்தார்கள். அவர்களுக்கு மூர்த்தியின் மீது அன்பும் பாசமும்…. அவனுக்கும் அவர்களிடம் மிகுந்த அன்பு. அவர்களும் இப்போது இல்லை.
ஊருக்கு வந்ததும் முதலில் அவர் சந்தித்தது ஆலமரத்தடிப் பிள்ளையாரைத்தான். கோயில், பூஜை என்று வளர்ந்திருந்தார். முன்பு போல் பிள்ளையாருடன் பேச முடியவில்லை. அருகில் தாமரை இருப்பது போன்ற உணர்வு. படித்துறை முழுவதும் மரத்தின் பழுத்த இலைகள். மூர்த்தியும் தாமரையும் சந்தித்த அந்தப் பசுமையான நாட்களின் நினைவுகளும் பதிந்திருக்குமோ?! நீர்ப்பரப்பில் எட்டி பார்க்கும் மூன்றாவது தலை மீன்களுக்கும் அவற்றின் மூதாதையர் வழி தங்களின் கதை தெரிந்திருக்குமோ? பொரி போட்டான். தாமரைதான் இல்லை. படித்துறையில் அமர்ந்து அமைதியாய் கண் மூடி நினைவுகளில் இருப்பது வழக்கமானது.....
பசுமை நினைவுகளுடன்
படுத்து கிடக்கிறது
பழுத்த இலை.
---------எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்----------
காத்துக் கிடக்கிறது என்றும் சேர்த்துக் கொள்ளலாமோ? உண்மை அதுதானே! மூர்த்தி பாண்டியனுடன் சமூகப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்படி ஒரு மாதம் முன் தன் பேத்தி மற்றும் தன் பிறந்த நாளுக்கு உணவு அளிக்க ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்ற போதுதான் அங்கு டெஸ்கில் ரெஜிஸ்ட்ரேஷன் பகுதியில் இருந்த பெண்மணியைப் பார்த்ததும் அப்படியே சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்தே போனார்.
தாமரை! அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தாமரைதானா? தாமரையேதான். அதெப்படி அந்த முகம் மறந்து போகும்? இத்தனை நாள் மனதில் சுமந்து வந்ததற்கு அர்த்தமே இல்லாதாகிவிடுமே! தலைகால் புரியவில்லை மூர்த்திக்கு. ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துவிடுவோம் என்று நம்பிய புள்ளி! ஆனால்…..
தாமரை! அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தாமரைதானா? தாமரையேதான். அதெப்படி அந்த முகம் மறந்து போகும்? இத்தனை நாள் மனதில் சுமந்து வந்ததற்கு அர்த்தமே இல்லாதாகிவிடுமே! தலைகால் புரியவில்லை மூர்த்திக்கு. ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துவிடுவோம் என்று நம்பிய புள்ளி! ஆனால்…..
வயது மற்றும் வாழ்க்கை விளையாடிய கோரத்தின் தழும்புகள் முகத்திலும் பிரதிபலிக்கிறதோ? என்றாலும் அதே முகம். அவள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. வேறு யாரும் இல்லை அருகில்.
“தாமரை” என்று மிகவும் மெல்லிய குரலில் அவள் அருகில் சென்று கூப்பிட்டதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் அதே ஒளி. ஆனால் எந்தவித உணர்வுகளும் இல்லையே. ‘அவளால் தன்னை அடையாளம் காண முடியவில்லையோ?’
“நான் மூர்த்தி” அவள் முக உணர்வுகள் அவள் குழம்புகிறாள் என்று அடையாளம் காட்டியது.
“….நான் உன்….…உங்க……ஃப்ரென்ட் மூர்த்தி”
“எனக்கு மூர்த்தினு ஃப்ரென்ட் யாருமில்லை…..என் ஹஸ்பன்ட் பெயர்தான் மூர்த்தி….நான் தாமிரபரணி. அவர் மட்டும் தான் என்னைய தாமரைனு கூப்பிடுவார்”
அதே குரல். “ஹஸ்பன்ட்” ஒரு நிமிடம் மூர்த்தி ஆடிப் போனார். அவருக்குப் புரிந்தது. ஹிஸ்ட்டீர்க்கல் அம்னீஷியா? நல்ல காலம் தன் பெயர் நினைவிருக்கிறது. வாழ்க்கையின் கோரங்களை மூளை வைத்திருக்க விரும்பவில்லை. அதை வேஸ்ட்பின்னில் போட்டு வைத்து, பழைய சந்தோஷமான பள்ளி இறுதி நாட்களின் நினைவுகளை மேலெழுப்பி வைத்திருக்கிறது. அவள் அந்த உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள்.
பாண்டியனுக்கே சில வருடங்களுக்கு முன் தானே தகவல் தெரிந்து என்னை அழைத்துச் சொன்னான்! தாமரை பித்துப் பிடித்த நிலையில் குழந்தைகளுடன் எங்கோ சென்றதாகவும் அந்த நிலையில்தான் பிள்ளைகளைப் பிரிந்ததாகவும் அந்தப் பிள்ளைகள்தான் மூர்த்தியிடம் வளர்பவர்கள் என்றும். தாமரையைக் குறித்தும் ஏதேனும் தெரிகிறதா என்று தான் முயற்சிப்பதாகவும்…..
மூர்த்திக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி உணர்வுகள். சந்தோத்தில் திக்குமுக்காடிப் போனார். தாமரையின் குழந்தைகள் தன் குழந்தைகளாக இப்போது. பாண்டியன், தாமரையின் சோகம் பற்றி சொன்னதைத் தாங்கும் சக்தி மூர்த்திக்கு இல்லாததால்…. கடந்தகாலம் எதுவும் வேண்டாம். அதைத் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? தன் குழந்தைகள்தான் தாமரையின் குழந்தைகள்! அது போதும்.
மூர்த்திக்குக் கூடவே ஓர் ஆச்சரியமும். குழந்தைகள் தங்கள் அம்மாவைக் கேட்ட போது அவர்களைச் சமாதானப்படுத்த, பள்ளியிலிருந்து செய்தித்தாள்களுக்கும், இதழ்களுக்கும் கொடுக்கப்பட்ட தாமரையின் படங்கள் அவற்றில் வந்திருந்த போது அதை கட் செய்து வைத்திருந்ததையும். அவள் கடைசி நாள் விட்டுச் சென்ற ஃபோட்டோவையும் காட்டி அம்மா என்று சொல்லி, காணாமல் போய்விட்டாள் என்று தன் வேதனயை பொதுவாகச் சொன்னது இப்படி உண்மையாகும் என்று அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லையே.
லைஃப் இஸ் எ மிஸ்ட்ரி! வாழ்க்கைச் சுழலில் எத்தனை மாயாஜாலங்கள்! எத்தனை ரகசியங்களை, புதிர்களைத் தன்னுள்ளே பொதிந்து வைத்து சூறாவளியாய் வீசி அமைதியாகும் போது ரகசியங்களை வெளிப்படுத்தி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது!
அறிந்ததிலிருந்து அவன் அடைந்த அந்தத் தவிப்பையும் சந்தோஷத்தையும் வார்த்தைகளில் வடித்திட இயலாது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து, தன் வாழ்க்கைக்குக் கிடைத்த அர்த்தம் உறுதியானது போல் தோன்றியது.
எப்படியோ தன் தாமரையுடனான பந்தம் ஒட்டிக் கொண்டுள்ளதே என்ற மகிழ்ச்சி! மனம் நிலைகொள்ளவில்லை. அவளை எப்படியேனும் கண்டுபிடித்து அவளைக் குழந்தைகளோடு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே அவனை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது அவளைக் கண்டும் அவளுக்குச் சொல்ல முடியாத நிலையில் அவள்.
எப்படியோ தன் தாமரையுடனான பந்தம் ஒட்டிக் கொண்டுள்ளதே என்ற மகிழ்ச்சி! மனம் நிலைகொள்ளவில்லை. அவளை எப்படியேனும் கண்டுபிடித்து அவளைக் குழந்தைகளோடு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே அவனை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது அவளைக் கண்டும் அவளுக்குச் சொல்ல முடியாத நிலையில் அவள்.
அவள் நினைவுப் பெட்டகத்தின் அடியில் இருப்பதையும் நினைவுகூர வைத்தால்தானே குழந்தைகளைச் சேர்த்து வைக்க முடியும். அவளுக்குக் குழந்தைகளின் ஆதரவு கண்டிப்பாக வேண்டுமே.
“தாமரை, அந்த மூர்த்தி…….. நான் தான்…..” என்று சொல்லிப் பார்க்கலாமோ என்று நினைத்துக் கைவிட்டான். ஏனோ ‘நீ சொல்லும் உன் கணவன் மூர்த்தி’ என்று சொல்ல வரவில்லை. அது நியாயமற்றது என்ற எண்ணம். ஆனால் வேறு விதமாகப் பேசிப் பார்க்கலாம் என்றும் தோன்றிட…
“ஊங்க ஹஸ்பென்ட் மூர்த்தியை நான் பார்க்க முடியுமா?”
“நீங்க அவர் ஃப்ரெண்டா? உங்க பெயர்? அவர் இங்க இல்ல வெளியூர்ல இருக்கார். அவர் வர முன்ன என்னைய கூப்பிடுவார். சொல்றேன்”
மூர்த்திக்குத் தாமரையை அந்த நிலையில் பார்க்க பார்க்க வேதனையில் தொண்டை அடைத்தது. இல்லத்தின் உரிமையாளரைச் சந்திக்க நினைத்தும் முடியவில்லை. அதற்கு மேல் வேறு யாரிடமும் தாமரையைப் பற்றிக் கேட்கவும் மனமில்லை. அவள் நினைவுகள் பிறழ்ந்திருந்தாலும் தினசரி வாழ்க்கையை அவளால் ஏதோ பார்த்துக் கொள்ள முடிகிறது என்றும் தோன்றியது அவள் செயல்களில் இருந்து. மீட்டுவிடலாம் என்றே தோன்றியது.
இரு தேதிகளையும் கொடுத்து அன்று இல்லத்திற்குத் தேவையான உணவு வந்துவிடும் என்று சொல்லிவிட்டு தாமரையிடம் வந்து கோயிலுக்கு வரச் சொல்லி அழைப்பும் விடுத்து, சாத்தியம் குறைவுதான் என்று தெரிந்தும், தேதி, நேரம் எல்லாம் எழுதிக் கொடுத்து மீண்டும் நினைவுபடுத்துவதாகச் சொல்லி வந்துவிட்டான்.
மீண்டும் இல்லத்து உரிமையாளரிடமும் சொல்லி தாமரையையும் அழைத்து வரச் சொல்லி, தாமரையிடமும் நினைவுபடுத்தி வந்திருந்தான்தான். அவள் வராததன் காரணமும் புரிந்ததுதான். தாமரையைக் கண்டுபிடித்ததும் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்ததற்கான நேரம் வந்துவிட்டது. எல்லோரும் இங்கு வரும் போது சொல்லி விட வேண்டும். முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் காத்திருக்கிறான் மூர்த்தி.
படித்து முடித்த மூவரையும் பலவிதமான உணர்வுகள் ஆட்கொள்ள என்ன பேசுவது என்று தெரியாமல் உணர்வில் சிக்கி மயான அமைதி காத்தார்கள். தங்கள் இணைகளுக்குத் தமிழ் தெரியாது என்பதால் சுருக்கமாகச் சொன்னார்கள்.
“ஒண்ணு கவனிச்சீங்களா? காலைல சொல்றப்ப அப்பா தாமிரபரணினுதான் சொன்னார். தாமரைனு சொல்லல. ஆனா மனசுக்குள்ள நம்ம அம்மா தாமரைதான் அவர் வைஃப்!”.
//"அவர் வர முன்ன என்னைய கூப்பிடுவார்”// “ஐ காட் இட் ஹௌ டு ப்ரொசீட்” கணேசன் சந்தோஷத்தில் மற்றவர்களிடமும் கலந்து பேசினான். தீர்மானித்தார்கள்.
“அப்பா! எங்க அம்மா, உன் தாமரைய கூட்டிட்டு வரலாம்பா…” கண்ணை மூடி குழந்தைகளின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று தவிப்புடன் ஆழ்ந்திருந்த மூர்த்திக்கு அந்த வார்த்தைகள் டக்கென்று சிலிர்க்கச் செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது. சந்தோஷ ஆச்சரியம் அந்த வார்த்தைகள். தன் அருகே அமர்ந்திருந்த குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“பட் அதுக்கு முன்ன ஒண்ணு செய்யணும். நீ ஃபோன்ல அம்மா கிட்ட உன் மூர்த்தி உன்னை பார்க்க வரேன்னு சொல்லி ஆல மரத்தடி டயலாக்ஸ் சிலது நீ ஃபோன்ல பேசணும். தலைமுடிக்கு டை அடிச்சுக்க. கண்ணாடி வேண்டாம். கொஞ்சம் அப்போதைய கெட்டப்….ஓகே……அப்ப பார்க்கறப்ப கொஞ்சம் அம்மாக்குப் பழைய பிம்பம் நினைவுக்கு வரலாம். நம்ம கூட வர சான்ஸ் இருக்கு. நம்புவோம். நாம அந்த ஹோம் ஓனர்கிட்ட பேசி விளக்கிடலாம். அவர் கோஆப்பரேஷனும் தேவை. எ ஸ்மால் ஸ்கிட். தென் வி வில் டேக் அம்மா டு எ டாக்டர்…ஹிப்னோ தெராப்பி..நம்ம ஸ்டெப்ஸ் சக்சீட் ஆகும்னு நம்புவோம்பா.”
மூர்த்தி கணேசனின் கைகளைப் பிடித்துக் கொண்டு. மற்ற இருவரையும் அணைத்துக் கொண்டார். சந்தோஷக் கண்ணீர்.
“தாமரை…உன் மூர்த்தி பேசறேன்மா…….உன்னைப் பார்க்க வரேன்…”
[அந்த மூன்று குழந்தைகளில் இருவர் மட்டுமே தாமரையின் குழந்தைகள் என்பதை மூர்த்தி குறிப்பிடவில்லை.]
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா...
நீக்குகாலை வணக்கம்.
அட! மீ த ஃபர்ஸ்ட்🤗🤗
பதிலளிநீக்குகீதா ரங்கன் குறுநாவலே எழுதி விட்டார் போலிருக்கிறது. வருகிறேன்.
ஹா... ஹா... ஹா...
நீக்குஆனால் படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை. அருமையாய் எழுதி இருக்கிறார்.
வணக்கம் சகோதரரே
நீக்கு/ஆனால் படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை. அருமையாய் எழுதி இருக்கிறார்./
உண்மை.. படிக்க ஆரம்பித்து நிறுத்த முடியாமல் முழுவதும் படித்து ரசித்தேன். சகோதரி கீதா ரெங்கன் மிக பிரமாதமாக எழுதியுள்ளார். இன்னமும் மனசு உணர்ச்சியில் தத்தளிக்கிறது. தங்கள் கவிதையின் நிதர்சன தாக்கங்கள் இடையிடையே மனதை சலனபடுத்த கதை மிகவும் அருமை. சகோதரிக்கு பாராட்டுக்கள். இன்றைய சிறப்பான கதையை தந்தமைக்கு மிகவும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எல்லோருக்கும் இனிய காலை வணக்கம். ஹை ஹை ஹை!! இன்று பானுக்கா முதலில் வந்துட்டாங்களே!!!
நீக்குஆஹா!! இன்று கீதாவின் கதையா....ஓ!! ஸ்ரீராம் பயமாகீதே!!!!!!!! இது கொஞ்சம் பெரிய கதையாச்சே...ஆஆஆஅ....மக்கள் இதை வாசிக்கத் தயங்கி என்னை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சொல்ல வரதுக்குள்ள நான் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு .....அப்புறமா வரேன்!!!!!!! ஸ்ரீராம். அதுவும் மதியம் மேல் தான். வீட்டு வேலைகள்....நேற்று தானே வந்தேன் இங்கு ஒரு வார துணிகள் குவிந்திருக்கு!! ஹா ஹா ஹா ஹா...6 நாள் விடுப்பிற்கு அப்புறம் இன்று வேலைக்கும் போகணும்.
ப்ளீஸ் யாரும் என்னை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சொல்லாதீங்க கதை பெரிசுன்னு....எப்படியாச்சும் வாசிச்சுருங்க...
அப்புறமா வருகிறேன்...பயந்து கொன்டே போறென்..ஹிஹிஹி
கீதா
ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும்..உங்களின் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும்...என்னையும் எழுத வைத்து எழுத்தை வளர்ப்பதற்கும்.....இங்கு வெளியிட்டமைக்கும்..எல்லாவற்றிற்கும் எத்தனை நன்றி சொன்னாலும் அதற்கு முடிவில்லை....ஸ்ரீராம்..
நீக்கு.மீ ஓடிங்க்...இப்ப ...அப்புறமா வரேன்...
கீதா
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், பானுமா, கீதா ரங்கன்.
நீக்குஇனி வரப்போகிறவர்களுக்கும் இந்த நாள் இனிய நாளாக
வாழ்த்துகள்.
ஸ்ரீராமின் கவிதைகளும், கீதாவின் கதையும் ஒத்துப் போகின்றன.
அந்தப் படித்துறை மாமா நம்மை விடுவதாக இல்லை.
தாமிரையும் அவரும் சேர்ந்து இருப்பார்கள் சந்தோஷமாக.
சற்றே நீண்ட கதை. ஆனால் சுவை.
35 வருடக் கதையாக இருக்குமோ.
ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வு.
தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்.
மனம் நிறை வாழ்த்துகள்.
//அந்தப் படித்துறை மாமா நம்மை விடுவதாக இல்லை.//
நீக்குஹா.ஹா...ஹா... சிரித்து விட்டேன் வல்லிம்மா... ராஜியைதான் குற்றம் சொல்லணும். அல்லது பாராட்டணும்! அவங்க பிளாக்லேருந்துதான் அந்தப் படம் எடுத்தேன். ஆனா ஒண்ணு... இந்தக் கதையில் அந்தப் படம் (வேண்டுமென்றே) போடவில்லை. என்றாலும் பொருத்தமான இடத்தில் எல்லார் மனத்திலும் வந்து அமர்ந்து விட்டார் பாருங்கள்!
கமலா அக்கா மனசு உணர்ச்சியில் தத்தளிக்கும் விதத்தில் இருந்ததா!! ஆஹா! மிக்க மிக்க நன்றி கமலா அக்கா. ரசித்து வாசித்தமைக்கும். ஸ்ரீராம் எல்லோரையும் ஊக்குவித்து இங்கு வெளியிட உங்கள் எல்லோரது ஊக்கமும் கருத்துகளும் தான் எனக்குத் தூண்டுகோல்...எழுத்தை இன்னும் மேம்படுத்தவும் உதவுகிறது. இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றும் எனக்கு.
நீக்குஇறுதியில் எடிட்டிங்கும் பண்ண முடியவில்லை இப்போதுதான் பார்க்கிறேன் எழுத்துப் பிழைகள் உட்பட...
மிக்க நன்றி கமலா அக்கா
கீதா
ஸ்ரீராமின் கவிதைகளும், கீதாவின் கதையும் ஒத்துப் போகின்றன.//
நீக்குமிக்க நன்றி வல்லிம்மா. மற்றும் இதைப் பற்றிச் சொன்னவர்களுக்கும், எல்லோருக்குமே பொதுவாகச் சொல்லிவிடுகிறேன். ஸ்ரீராமுக்கே தெரியாது நான் அவரது கவிதைகளை இங்குப் பயன்படுத்தியது. அவர் ஈரம் கவிதையை வியாழன் பதிவில் பகிர்ந்திருந்த போது நான் அதை ஒத்த வரிகளை என் கதையைல் பயன்படுத்தியிருக்கிறேன் என்று சொல்லி என் கதையின் அந்த வரிகளை மட்டும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஸ்ரீராமிற்கு வாட்சப்பில் அனுப்பி (அப்போது நான் கதையை முடிக்கக் கூட இல்லை. என் மனதில் தோன்றுபவற்றை சும்மா போட்டு வைத்திருந்ததோடு சரி. ஆனால் ஸ்ரீராமின் கவிதைகளை எடுத்து வைத்திருந்தேன்...கதைக்காக) மற்றவை உங்களுக்கு சஸ்பென்ஸ் என்று சொல்லி அனுப்பியிருந்தேன். அந்த வரிகளைப் பார்த்ததும் ஸ்ரீராம் அடடே என்று சொல்லி பதிலும் அனுப்பிட அப்புறம் கதை அனுப்பிய பிறகுதான் அவரது கவிதைகள் அதில் இருப்பது அவருக்குத் தெரியும்...!!!!!!!!
அந்தப் படித்துறை மாமா நம்மை விடுவதாக இல்லை.//
ஹா ஹா ஹா ஹா வல்லிம்மா நிஜமாவே அதற்கு முன்னர் மனதில் தோன்றிய கருவை மட்டும் போட்டு வைத்திருந்தேன்...படம் பொருத்தமாக வரவும்...அப்ப எழுதத் தொடங்கிய கதைதான்...நான் தான் உடனே கதையை முடிக்கும் வழக்கம் கிடையாதே..அது போச்சு போச்சு....போய்...இதோ இப்போது இங்கு.
ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் படம் இல்லாமலேயே அந்தப் பெரியவர் மனதில் வந்தது எனக்கு ஆஹா என்று தோன்றி மகிழ்ச்சியைத் தருகிறது.
மிக்க நன்றி அம்மா
கீதா
பானுக்கா அப்ப குறுநாவல்னா இதுதானா?!!! நிஜம்மாவே கேட்கிறேன். வேர்டில் இது 24 பக்கங்கள்னு காட்டுகிறது.....
நீக்குநன்றி பானுக்கா
கீதா
கீதா
அந்தக் கிழவர் படித்துறையில் நின்று ஆற்றைப் பார்த்துக் கும்பிடும் படத்தைக் காணோமே
பதிலளிநீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்
படம் போடா விட்டாலும் மனசுல வந்து உட்கார்ந்துட்டார் பாருங்க...!
நீக்குஸ்ரீராம் உங்கள் வரிகளையே மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். மிக்க நன்றி நெல்லை....
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குஅருமையான நடை. நன்றாக எழுதிருக்கிறார் கீதா. கதைக்கு பொருத்தமாய் ஸ்ரீராம் கவிதைகள்.
பதிலளிநீக்குஎன் பங்கு நன்றியை நான் சொல்லி விடுகிறேன் கோமதி அக்கா. வணக்கம். அவர் என் கவிதைகளை நடுவில் புகுத்தி இருக்கிறார் என்பது எனக்கும் படிக்கும்போதுதான் தெரியும்.
நீக்குஅப்படியா ஶ்ரீராம்? அப்போ கீதா ரங்கனைத்தான் பொருத்தமான கவிதைகளை எடுத்துப் போட்டதற்கு பாராட்டணும். கவிதை நல்லாருக்கு. இடப் பொருத்தம் மிக அருமை
நீக்குஆமாம் கோமதிக்கா அண்ட் நெல்லை ஸ்ரீராமுக்குமே தெரியாது. நான் அனுப்பிய பிறகுதான் தெரியும்...
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா அண்ட் நெல்லை, ஸ்ரீராமின் கவிதைகள் பற்றிய உங்கள் கருத்திற்கு
நான் ஏற்கனவே எழுதிய கதையில் (முடிக்க மட்டும்தான் இல்லை மற்றும் எடிட் செய்யாமல் இருந்தது..மற்றபடி வரிகள் அப்படியே.)அவர் கவிதைகள் அப்படியே பொருந்தியது எனக்கும் மிக மிக ஆச்சரியம் அதனால்தான் உடனே உடனே அதை எடுத்து வைத்துக் கொண்டேன்.
ஒரே ஒரு ஸ்க்ரீன் ஷாட் மட்டும் தான் அவருக்கு அனுப்பினேன். அவருக்கும் அது சஸ்பென்ஸாகவே இருக்கட்டும் என்று...
கீதா
அன்பின் வணக்கம் அனைவருக்கும்....
பதிலளிநீக்குவணக்கம் வாங்க... வாங்க...
நீக்குவாங்க துரை அண்ணா...
நீக்குஉண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இக்கதையை எழுதிய போது தாமிரபரணியை, மூர்த்தி தாமரையாக்கிய இடத்தில் எனக்குச் சட்டென்று அப்பெயர் தோன்றியதும் துரை அண்ணாவின் கதையின் தாமரை என்றுதான் நினைவுக்கு வந்தது. பரவாயில்லை நம்ம துரை அண்ணா...அவரின் தாமரையை இங்கு கொண்டு வந்து போட்டது ஒன்றும் சொல்ல மாட்டார்...ரசிப்பாரே!! துரை அண்ணாவை நினைத்துக் கொண்டேன்.
கீதா
அன்பின் கீதா...
நீக்குஎனக்கும் சட்டென்று மனதில் தோன்றியது.. ஆனாலும்,
தாமரையை நினைவு கூர்ந்து கதையில் பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
இது சிறுகதையல்ல, குறுநாவல். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கு
நீக்குகீதா
தூக்கம் ஆளை இழுத்துக் கொண்டு போயிற்று.... ஆனாலும் அலாரம் இல்லாமலேயே விழிப்பு..
பதிலளிநீக்குகுளியல்.. தீபவழிபாடு...
இதோ கருப்பட்டியுடன் தேநீர்..
சற்றைக்கெல்லாம் அலுவலக பேருந்து...
உலக வழக்கத்தை மீறாமல் அலுவலக
நேரத்தில் கதை வாசிக்க வேண்டும்..
அதன் பிறகே கருத்துரை...
( ஓய்... இதெல்லாம் யாரும் உன்னண்ட கேட்டாளா?...
அவா கேக்கலன்னாலும் புள்ளையாண்டான் சொல்லி வைக்க வேணாமோ!..)..
!?....
ஹா ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா....அதானே யாரும் கேக்கலைனாலும் புள்ளையாண்டன் சொல்லிக்கணும்...அதை நாங்க பார்த்துடுவோமே...
நீக்குகருப்பட்டித் தேநீரையும் பார்த்துவிட்டேனே..ஆஹா போட வைத்தது. இப்ப இங்கு கருப்பட்டி இல்லை. இல்லை என்றால் கருப்பட்டிக் காபி, தேநீர் செய்வதுண்டு...
கீதா
சேவற் கொடியோன் கதை நினைவுக்கு வந்தது கதை தலைப்பை படித்தவுடன்.
பதிலளிநீக்குசிறு வயது நேசம், அது மலராமல், வேறு வேறு பாதை போய் மீண்டும் தொடர போகிறது . தாமரையின் நினைவுகளில் வாழும் வேதமூர்த்தி.
அன்பு , புரிதல் உள்ள குழந்தைகள் கதையை நன்றாக கொண்டு போய் நிறைவு செய்து இருக்கிறார்.
"நேசம் மறப்பது இல்லை "என்று தலைப்பு இருந்து இருக்கலாம்.
கோமதிக்கா மிக்க மிக்க நன்றி கருத்திற்கு.
நீக்குஓ சேவற்கொடியான் இத்தலைப்பில் எழுதியிருக்கிறாரா? என் கதையோ அல்லது தலைப்போ காப்பி என்று ஆகிவிடாதுதானே கோமதிக்கா?
கோமதிக்கா நானும் முதலில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தலைப்பைத்தான் எடுத்தேன். அப்புறம் நேசம் என்றும் வைத்துப் பார்த்தேன். வல்லிம்மா சொல்லியிருக்கும் என் கண்ணின் பாவையன்றோவும் வைத்திருந்தேன். ஆனால் அதை முன்பு ஒரு பாட்டி தாத்தா படத்திற்கு எழுதிய இரு கதைகளில் ஏதோ ஒன்றுக்கு வைத்த நினைவு. ஆனால் ஸ்ரீராம் அதைவிடச் சிறப்பாக ஒரு தலைப்பும் கொடுத்த நினைவு. அத்தலைப்பில்தான் கதையும் வந்தது.
அப்புறம் இக்கதையை எழுதும் போது ஒரு ஃப்ளோவில் மூர்த்தி சொல்லும், நினைக்கும் வரிகள்...அழக் கூடாது கண்ணில் நீர் வரக்கூடாது...அவளைக் கண்ணில் நீர் வராமல் வாழ வைக்க வேண்டும் என்று நினைத்து இறுதியில் அவள் வாழ்க்கையே கண்ணீர் நிறைந்ததாகிவிட்டதே என்ற வரிகளி ஒரு ஃப்ளோவில் கதையில் வர....அப்புறம் எழுதி முடித்ததும் அதை பேஸ் செய்து இத்தலைப்பை வைத்துவிட்டேன்...இறுதியில் முடிவும் அப்படி ஆனதே அவள் கண்ணீரைத் துடைக்கும் முயற்சி என்று...
நீங்கள் சொல்லியிருக்கும் தலைப்பு பொருத்தமாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறதுதான்.
மிக்க நன்றி கோமதிக்கா...
பாருங்கள் இப்படி எபியில் வெளிவருவதால் நம் நட்புக்கூட்டம் நீங்கள் எல்லோரும் எவ்வளவு அழகாகக் கருத்துகள் சொல்றீங்க ...மனம் மிகவும் சந்தோஷத்தில் நெகிழ்கின்றது..
கீதா
சேவற்கொடியோன் என்பது விகடன் ஆசிரியர் எஸ் பாலசுப்ரமணியம்தான்.
நீக்குஆமாம் .
நீக்கு"நேசம் மறப்பது இல்லை "என்ற தலைப்பு வைத்து இருக்கலாம்.
பதிலளிநீக்குநெஞ்சமும் மறப்பதில்லை ...கோமதி மா.
நீக்குஎன் கண்ணில் பாவையன்றோ ம்ம்.இதுவும் நன்றாக இருக்கிறது.
நீக்குசிறு வயது நேசம் என்பதால் நேசம் மறப்பது இல்லை என்றேன்.
நீக்குநேசத்தை நெஞ்சம் மறப்பது இல்லைதான் அக்கா.
தாமரையின் நினைவுக்கு இந்த தலைப்பு
என் கண்ணில் பாவையன்றோ இந்த் அதலைப்பு வேதமூர்த்தியின் கண்களில் உள்ள தாமரைக்கு பொருத்தம் தான்.
வல்லிம்மா நீங்கள் சொல்லியிருக்கும் தலைப்பும் வைத்தேன்...கோமதிக்காவுக்குக் கொடுத்திருக்கும் கருத்தில் அதையும் சொல்லியிருக்கிறேன்.
நீக்குபாருங்க இப்படி எல்லாம் எவ்வளவு அழகான டிஸ்கஷ்ன...மனம் நெகிழ்ந்துவிட்டது.
எபி க்கும் அதன் மூல்ம கிடைத்திருக்கும் இப்படியான அரிய நட்புகளுக்கும் நேசத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியையும் சொல்லிக் கொள்கிறேன்...
கீதா
வந்திருக்கும் அனைவருக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குரொம்பப் பெரிய கதை! நீளம் அதிகம், இரு பகுதியாகப் போட்டிருக்கலாமோ?
பதிலளிநீக்குஒரு செவ்வாய் தானே வருகிறது. இரு பாகமாகப்
நீக்குபோட்டால் இன்னும் ரசித்திருக்கலாம் கீதா மா.அப்புறம் நான் கதை எழுதுவது போல இன்னும் நீண்டுவிடும்.😂😂😂😂😂😂😂😂
Futureல ரெண்டு வாரக் கதையா வந்தா குறை சொல்லப்படாது கீசா மேடம், வல்லிம்மா. இப்பவே சொல்லிப்புட்டேன்.
நீக்குவல்லிம்மா, கீதாக்கா,
நீக்கு//ஒரு செவ்வாய் தானே வருகிறது. இரு பாகமாகப்
போட்டால் இன்னும் ரசித்திருக்கலாம் கீதா மா.//
அவர் சொன்னார்தான்மா.. நான்தான் இது ஒரு வாரத்திலேயே போட்டு விடலாம் என்று வெளியிட்டு விட்டேன். இரண்டு வாரங்களாய்ப் போட்டால் நடுவில் விழும் இடைவெளியில் அந்த உணர்வு மங்கிவிடும் என்று தோன்றியது எனக்கு.
//Futureல ரெண்டு வாரக் கதையா வந்தா குறை சொல்லப்படாது கீசா மேடம், வல்லிம்மா. இப்பவே சொல்லிப்புட்டேன். //
நீக்குஎஅகுஇ
ஆமாம் வல்லிம்மா, கீதாக்கா நான் சொல்ல வந்ததை ஸ்ரீராமே சொல்லிவிட்டார்....அதே அதே!!! முதலில் அவரும் அப்படித்தான் நினைத்தார் ...அப்புறம் நான் பார்க்கறேன் எப்படினு என்று எனக்கு சஸ்பென்ஸ் வைத்துவிட்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஸ்ரீராம் சொல்லியிருப்பது போல், மேலே கோமதிக்கா சொல்லியிருப்பது போல் இரு வாரக் கதையாக வந்தால், இந்தக் கதை என்றில்லை, எந்தக் கதையுமே கொஞ்சம் அந்தன் ரசம் குறையுமோ என்று தோன்றும்.
நாம் நாவல் வாசிக்கிறோம், சில சமயம் இதழ்களில் வரும் நெடுங்கதை, குறுநாவல் கூட ஓரே இதைழ்ல் போடும் போது (தொடராக இல்லாமல்) வாசிக்கிறோம். ப்ளாகில் மட்டும் ஏன் நாம் அப்படி பெரிதாக இருக்கு என்று நினைக்கிறோம் என்றும் நான் நினைத்துப் பார்த்ததுண்டு...அது ஒவ்வொருவரின் விருப்பம் என்றும் தோன்றும்..
கீதா
நல்ல கரு. சுபமாக முடித்ததுக்குப் பாராட்டுகள். ஸ்ரீராமின் கவிதைப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு எழுதி இருப்பார் போல! அல்லது இருவருமாகச் சேர்ந்து எங்கே பொருத்தமான கவிதையை நுழைப்பதுனு ஆலோசித்திருக்கலாமோ? :))))))
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குஇன்று என்ன "நட்பை" காணவில்லை.. நேற்று நீங்கள் அதனுடன் "பேச்சு"கா" விட்டதால், நாளை வந்தால் போதுமென்று எங்காவது உலாவ சென்று விட்டதோ?
வாங்க கமலா, நம்ம நட்"பேய்" காய் விட்டதால் வரலையோனு தான் நானும் நினைச்சேன். இருந்தாலும் அதுவும் வேலை மும்முரத்தில் யாரையானும் பயமுறுத்தப் போயிட்டு அசடு வழிஞ்சுட்டு இருக்கோ என்னமோ! அதோடு இன்னிக்குக் கதையின் சென்டிமென்டில் கண்ணீர் பெருக்கிட்டு இருக்கோ?
நீக்குஹ.ஹா.ஹா.ஹா.. இருந்தாலும் இருக்கலாம். அதனுள் எத்தனை சோகங்களோ... ஆனாலும் இப்போ திடும்னு வந்து பதிலளித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.எனினும் நமக்கெல்லாம் பிற்காலத்தில் உதவும் சுவாரஸ்யமான "நட்பே"தான்.
நீக்குகீதாக்கா மிக்க மிக்க ந்னறி கீதாக்கா கருத்திற்கு.
நீக்குகவிதை புகுத்தியது ஸ்ரீராமுக்குமே தெரியாது. மேலே விரிவா சொல்லிட்டேன் பாருங்க! நீங்க எல்லாரும் தரும் ஊக்கம்தான்...மிக்க நன்றி மீண்டும்...
கீதா
நட்பேய் கௌ அண்ணாதானே!! நான் இன்னும் எபியின் முந்தைய பதிவுகளைப் பார்க்கவில்லை. அதனால தெரியலை...ஆனால் பங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பட்சி சொன்னது.....ஹா ஹா ஹா...
நீக்குபேயை ரொம்பவே ஓட்டியிருக்கீங்க!!!!!!!!!!!!!!!!!!!!கீதாக்காவும் கமலாக்காவும்!! அக்கா அது வருத்தமெல்லாம் படாதாக்கும்....அது நகைச்சுவைப் பேய்!!!
கீதாக்கா சொன்னாப்புல இன்னிக்கு நகைச்சுவை இல்லைன்றதுனால இங்க எட்டிப் பார்க்கலை போல!!!!!!!!!
கீதா
//வாழ்க்கையின் கோரங்களை மூளை வைத்திருக்க விரும்பவில்லை. அதை வேஸ்ட்பின்னில் போட்டு வைத்து, பழைய சந்தோஷமான பள்ளி இறுதி நாட்களின் நினைவுகளை மேலெழுப்பி வைத்திருக்கிறது. அவள் அந்த உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள்//
பதிலளிநீக்குஇப்படி எத்தனை பேரோ!
கோமதிக்கா இப்படி நிறையப் பேர் இருக்கின்றார்கள் அக்கா. அதுவும் 45, 50 ற்குப் பிறகு. ஒரு சிலருக்கு அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சோகங்கள் அதிர்ச்சிகள் மனம் மென்மையாக இருந்தால் இப்படியான அம்னீஷியா ஏற்பட வாய்ப்புண்டு. மனோதைரியம் இருப்பவர்கள் தப்பித்துவிடுவார்கள். இதில் தாமரைக்கு விருப்பமில்லா திருமணம்....அதிலும் சோகம்..அவள் படிக்க்ம் கனவுகள் எல்லாம் சிதைந்து போனதில் நல்லகாலம் மனச் சிதைவு இல்லாமல் அம்னீஷியாதான்....மனச்சிதைவு வந்து பாதிக்கப்பட்ட பெண்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன் கோமதிக்கா. அந்த ஹாஸ்பிட்டல் பார்த்துவிட்டால் அப்புறம் அவ்வளவுதான் நமக்கு நாம் வாழ்க்கையில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று தோன்றிவிடும்.
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
பானு சொல்வது போல் குறு நாவல்தான்.ஸ்ரீராம் சொல்வது போல் படிக்க ஆரம்பித்தவுடன் பாதியில் நிறுத்த மனம் வரவில்லை தொடர்ந்து படித்து விட்டேன்.
பதிலளிநீக்குவல்லி அக்கா, கீதா சொல்வது போல் இரு பகுதியாக போட்டால் நம் மனம் முடிவுகளை அப்படி, இப்படி என்று யோசித்து குறு குறுத்க்கொண்டு இருக்கும். இப்போது நிம்மதி பெருமூச்சு.
ஆமாம் இக்கருத்துகள் எல்லாத்துக்கும் உங்களையும் கோட் செய்து மேலே சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன்..கோமதிக்கா மிக்க நன்றி...
நீக்குகீதா
அருமையாக, அழகாக, எதிர்பாராத நல்ல திருப்பங்களுடன் மனதை கவர்ந்த கதை...
பதிலளிநீக்குதாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன் (2)
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் - தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை...
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை...
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்...
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை...
நெஞ்சம் மறப்பதில்லை...
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே... (2)
வரும் காற்றினிலும்
பெரும் கனவிலும்...
நான் - காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே...
ஒரு பூவும் இல்லை உன் தோற்றம் இல்லை
நீக்குகண்ணில் -தூக்கம் பிடிக்கவில்லை
வரிகள்ல தவறு இருக்கு. ஏதோ தளை தட்டுது.
ஆம்...
நீக்குஒரு தூதுமில்லை... உன் தோற்றமில்லை...
வேஸ்ட்பின் என்னை "நீதான்" என்கிறது...!
மிக்க நன்றி டிடி கருத்திற்கும் ஆஹா அழகான பாடலுக்கும் சேர்த்து....
நீக்குநெஞ்சம் மறப்பதில்லைதான்...மறக்காமல் இருப்பதால்தான் அவள் கண்ணில் நீர் வழிவதைத் தாங்க இயலாமல் துடைக்க நினைக்கும் மூர்த்தி!
கீதா
கொஞ்சம் அபூர்வமான நிகழ்வு. கதை நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குவேதமூர்த்தி திருமணத்தில் ஒரு பையனைப் பெற்றுக்கொண்டு, தெரியாமலேயே தாமரையின் ஒரு ஆண், ஒரு பெண் மகவுகளை தத்து எடுத்திருந்ததுபோல கதை வந்திருக்கலாமோ?
கதை படித்த பிறகு விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா பல வருடங்களுக்கு முன் பார்த்த நினைவு வந்தது. அதில் 70 வயதான பெரியவர், தன் மகள் வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டதால் அவளை வெளியேற்றி, அவள் காதலனை ஆள் வைத்து அடிக்க முயன்றதையும், தற்போது அவர்களோடுதான் வாழ்ந்துவருவதையும், மாப்பிள்ளை, தன் பெண்ணை, தானே சொந்தத்தில் தன் சாதியில் கட்டி வைத்திருந்தால்கூட அதனைப்போல் பார்த்துக்கொள்ள முடியாது என்னும்படி நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும் பேசினார்.
நெல்லை அபூர்வமான நிகழ்வுதான்....ஆனால் வேறு வகையில் நடந்துள்ளதுதான்..
நீக்குஉங்கள் கோணமும் யோசிக்க வைக்கிறது. ஆனால் மூர்த்தி திருமணம் செய்து கொண்டு பிள்ளையும் பெற்றுக் கொண்ட பிறகும் அவர் மனைவி ஒத்துக் கொள்ள வேண்டுமெ தத்தெடுக்க? அல்லது மனைவி இடையில் இறப்பதாகச் சொல்ல வேண்டும். ஆனால் என் கதையின் மூர்த்தியின் மனதில் தாமரையைத் தவிர யாருமில்லையே அப்படியான நேசம், அன்பு அது அப்படித்தான் என் மனதில் விரிந்தது கதை...
ஆமாம் நெல்லை நான் நீயா நானா பார்க்கலை என்றாலும் நீங்கள் சொன்னது போல் நடந்ததை அறிவேன். இப்படிக் கதையில் வருவது போலவும் அறிவேன்.
மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு.
கீதா
நதி போலத்தான் கதை ஓடியது.
பதிலளிநீக்குகடைசியில் அந்த இனிமையான சஸ்பென்ஸ்.
ஆஹா !
ஆஹா ஆஹா! ரிஷபன் அண்ணா!! உங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்பார்க்கவே இல்லை அண்ணா. உங்களைப் போன்ற அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் ஊக்குவிக்கும் போது மனம் மிகவும் ஊக்கம் பெறுகிறது.
நீக்குமிக்க மிக்க நன்றி அண்ணா
கீதா
முடிவு மனதை கனக்க வைத்தாலும் சுபமாகவே இருந்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை வெளியான உடனேயே படித்து ரசித்து முடித்தவுடன் ஒரு கருத்துரை இட்டேன். அதற்குள் ஒரு கமெண்ட் வந்து விட்டது. மீண்டும் மற்றோர் முறை இப்போது படித்து முடித்தேன்.
"உன் கண்ணில் நீர் வழிந்தால்" என்று கதையில் வேதமூர்த்தியை கேட்க வைத்து கதையை அழகாய் கூறி, சில, பல இடங்களில் நம் கண்ணிலும் கண்ணீரை வரவழைத்து விட்டார் கதாசிரியை சகோதரி கீதாரெங்கன். அவருக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா அக்கா மீண்டும் வந்து கதையைச் சொல்லி பாராட்டியமைக்கு மிக்க மிக்க நன்றி. கதை வெளியானதுமே வாசித்து கருத்தும் இட்டு வாவ்!!! கமலா அக்கா ஹப்பா நீங்க எல்லாம் இப்படி இங்கு எபியில் தரும் ஊக்கம் தான்!!! நன்றி நன்றி அக்கா
நீக்குகீதா
கதையின் இடையே சில பாடல்கள் மனதில் தோன்றியது... உதாரணமாக :-
பதிலளிநீக்கு// "அப்பா டெய்லி கண்ணாடி பார்த்துக் கன்னதை தடவிப் பார்த்துக்கற காரணம் இதுதானா….” //
மூர்த்தி மனதில் : - தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்... (2) எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது - பொங்கிடும் எண்ணங்கள்...!
ம்... அவை பல இருந்தாலும், கதைக்கு நடுவே ஸ்ரீராம் சாரின் கவிவரிகளுக்கு பதிலாக, அவரின் மனதில் தோன்றும் (தோன்ற வேண்டிய) பாடல் வரிகள் என்னவாக இருக்கும்...?
(க்ளு) : பாடலில் தாமரை என்கிற வரி இருக்கும்... (இருக்க வேண்டும்...)
யாரப்பா அது... நான் ஆளான தாமரை... ரொம்ப நாளாக தூங்கல... இந்த மாதிரி பாட்டெல்லாம் மட்டுமல்ல, அந்த "இது நம்ம ஆளு" படமே ஸ்ரீராம் சாருக்கு பிடிக்காது... அதனால்......... "தாமரை" பாடல் பல உள்ளது, அதில்..............................?
ரெடி ஸ்டார்ட்...
ஸ்டார்ட் ம்யூஸிக் நு டிடி சொல்லிவிட்டார்..
நீக்குடிடி நான் பாடல்களில் மிகவும் வீக் தெரிந்தாலும் டக்கென்று வரிகள் நினைவுக்கு வராது..ஹிஹிஹி...எனக்கு டக்கென்று தோன்றிய பாடல் தங்கத் தாமரை மகளே வா அருகே !! என்ற பாடல் மட்டுமே டிடி...இங்கு பலர் இருக்கின்றனர் பாடல்கள் சொல்ல...
கீதா
//தாமரைப் பூவினில் வண்டு வந்து தேனருந்த இதழ் மூடிக்கொள்ள//
நீக்குஉணர்ச்சிகளை வடிப்பதில் கீதா ரங்கன் வல்லவர். இது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது. கதையின் போக்கை யூகிக்க முடிந்தாலும் படிப்பதை நிறுத்த முடியவில்லை. சிறப்பு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குபானுக்காவிடமிருந்தும் பாராட்டு!! ஆஹா!! மிக்க மிக்க நன்றி பானுக்கா!
நீக்குஅக்கா என்னை அழைத்தும் பாராட்டியது எனக்கு மேலும் மேலும் ஊக்கம் அளிக்கிறது. பானுக்காவுடன் எழுதும் போதே நிறைய கற்க முடிந்தது. நானும் அக்காவும் கதைகள் பற்றியும் நிறையப் பேசுவோம். அக்காவும் நிறைய தகவல்கள் கொடுப்பார்.
பானுக்கா ரொம்ப நன்றி அக்கா. எத்தனை சப்போர்ட்..
எபி அண்ட் ஸ்ரீராம.....தன்யளானேன்!!!
கீதா
இடையே பொருத்தமாக கோர்க்கப்பட்டிருக்கும் கவிதைகளுக்கு யாரை பாராட்டுவது?
பதிலளிநீக்குபானுக்கா முதலில் அதற்கு ஸ்ரீராமுக்குத்தான் பாராட்டுகள்! அவர் அழகாக எழுதிய கவிதை வரிகள்! அவர் எழுதும் கவிதைகளை மிகவும் ரசிப்பேன் நான். இவை வெளி வந்த போது அட! என் கதைக்கு ஆப்ட் ஆக இருக்கே என்று எடுத்து வைத்துக் கொண்டேன்..பானுக்கா அவரைத்தான் முதலில் பாராட்ட வேண்டும்!! அப்படி உணர்வு மிக்க கவிதைகளுக்கு!!!!
நீக்குமிக்க நன்றி பானுக்கா.
கீதா
நிறுத்தாமல் படிக்கத் தூண்டிய கதை... சிலபல சினிமாக் கதைகளை நினைவுபடுத்தினாலும், மிகவும் பிடித்திருந்தது. ஸ்ரீராம் சாரின் கவிதை வரிகளை இணைத்த விதம் அருமை... கதாசிரியைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிமா வாங்க....ஓ சினிமாக் கதைகள் இருக்கிறதா ஆஹா! மீக்கு அதுவும் சுத்தம்!! ஹிஹிஹிஹி...
நீக்குஸ்ரீராமின் கவிதைகள் கதைக்கு ஜீவன் தருகிறது இல்லையா மிமா....!!!? மிக்க நன்றி கருத்திற்கு
கீதா
ஒன் ரெடீமிங் ஃபீச்சர் ஆஃப் திஸ் லாங் ஸ்டோரி இஸ் எங்க்ள்ப்ளாக் ஸ்ரீராமின் கவிதைகள் தான் நிறைய பொறுமை தேவை படிக்க கடைசியில்தான் இடியாப்ப சிக்கலும் அவிழ்கிறது/ [அந்த மூன்று குழந்தைகளில் இருவர் மட்டுமே தாமரையின் குழந்தைகள் என்பதை மூர்த்தி குறிப்பிடவில்லை./சஸ்பென்ஸ் ?]
பதிலளிநீக்குஒன் ரெடீமிங் ஃபீச்சர் ஆஃப் திஸ் லாங் ஸ்டோரி இஸ் எங்க்ள்ப்ளாக் ஸ்ரீராமின் கவிதைகள் தான் //
நீக்குநிச்சயமாக அவர் கவிதைகள் தான் கதைக்கு குறிப்பாக மூர்த்திக்கும் தாமரைக்குமே ஜீவன் கொடுத்து தூக்கி நிறுத்துகிறதோ என்றும் சொல்வேன். உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிவேன் சார்.
ஆமாம் சார் என் கதை நீண்டுவிட்டதுதான். பொறுமை தேவைதான் சார். பொறுமையுடன் படித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சார்.
சஸ்பென்ஸ் என்றில்லை... அது நமக்கு. ஆனால் குழந்தைகளுக்கு அது தெரிந்தால் அவர்கள் மனம் வேதனைப்படுமே என்ற எண்ணத்தில் அவர் தன் நோட்டில் குறிப்பிடவில்லை...
மிக்க நன்றி ஜி எம் பி சார்.
கீதா
கதைக்குள் ஆழ்ந்த மனம் கதை முடிந்த பின்னும் தத்தளிக்கிறது...
பதிலளிநீக்குமிகத் திறமையாகக் கையாள்வது சிறப்பு...
கதைக் களத்தில் நாமும் இருப்பதைப் போல இருக்கிறது....
எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும்
கதை மாந்தர்கள் குற்றமின்றி நிறைகின்றார்கள்..
எவ்வளவு பாராட்டினாலும் தகும்....
வாழ்க நலம்....
மிக்க மிக்க நன்றி துரை அண்ணா...எனக்கு என்னவோ இந்தக் கதை எழுதும் போது நீங்கள் தான் நிறையவே நினைவுக்கு வந்தீர்கள்....தாமரை என்று எழுதியதாலோ என்னவோ.
நீக்குஆனால் நீங்கள் நிறையவே நினைவுக்கு வ்ந்தாலும்... உங்கள் அளவு தமிழ் வார்த்தைகளில் விளையாட முடியவில்லை எனலாம் அண்ணா. உங்கள் சொற்களே அத்தனை இனிமையாக இருக்கும்...
மிக்க மிக்க நன்றி துரை அண்ணா பாராட்டிற்கு
கீதா
அன்பின் கீதா..
நீக்குநான் ஏதும் பெரிதாக செய்து விடவில்லை.. கதைமாந்தர்களுக்குள் நான் புகுந்து விட்டால் அவர்கள் பேசிக் கொள்வது தான்..இது எழுத்தாளர்கள் அனைவருக்கும் கைகூடி வரக்கூடியதே..
சமயத்தில் என் எழுத்துக்களைக் கண்டு நானே கண் கலங்கியிருக்கின்றேன்.. (வேற வழி!?..)
அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
//என் எழுத்துக்களைக் கண்டு நானே கண் கலங்கியிருக்கின்றேன்// - துரை செல்வராஜு சார்...இது உண்மை.
நீக்குநிறைய இயக்குநர்கள், கதாசிரியர்கள், நடிகர்கள், சினிமா படப்பிடிப்புத் தளத்துல ஒரு காட்சி நடந்துகொண்டிருக்கும்போது கண்ணீர் விட்டு அழுதிருக்கேன், கதாசிரியர் கதை சொல்லும்போது கேட்டு அழுதிருக்கேன், கதாசிரியரே கதை சொல்லும்போது முக்கியமான சந்தர்ப்பங்களில் அழுதுடுவார் என்றெல்லாம் எழுதியதைப் படித்திருக்கிறேன். அப்போல்லாம், சும்மா கதை விடறாங்க என்றுதான் நினைத்திருப்பேன்.
நான் கதை எழுதியபோது (கத்துக்குட்டிதான் இருந்தாலும்), உணர்ச்சிகரமான சீன்களின்போது உரையாடலும் ரொம்ப மனசால உணர்ந்து எழுதுவேன், இரண்டு மூன்று முறை படித்துப்பார்த்து சரி பண்ணுவேன்...அப்போல்லாம் எனக்குமே ரொம்பவே உணர்ச்சிவசப்படுவதுபோல இருக்கும். கற்பனைதான்..ஆனால் எழுத்தில் வடிக்கும்போது அந்த உணர்ச்சியில் ரொம்பவுமே ஆழ்ந்துவிடுவேன்.
அப்போதான், மத்தவங்க சொல்வது உண்மைனு புரிஞ்சுக்கிட்டேன்.
துரை அண்ணா அண்ட் நெல்லை எனக்கும் இப்படித்தான். நெல்லை அண்ணா சொல்லியிருப்பது உண்மைதான்.உங்களுக்கும் அப்படித்தானே இருந்திருக்கிரது!!!!!!! நான் எழுதிய சில கதைகளில் சில உரையாடல்கள் கூட என் கண்ணீரிலிருந்து பிறந்தவையாக இருக்கும்!!! அந்தக் கதை மாந்தர்களுக்குள் புகுந்துவிட்டால்...
நீக்குகதை வாசிக்கும் போதும் கூட இங்கு பல கதைகள் அப்படியே என்னை அறியாமல் கண்ணில் நீர் வரவழைத்தத்ண்டு.
நான் எழுதிய அந்த பாட்டி தாத்தா படக் கதைக்கு என் தாத்தாவும் பாட்டியும் போலவே இருந்ததால் நான் உணர்ச்சிவயப்பட்டுத்தான் எழுதினேன். என் அப்பாவின் அப்பா அம்மா அப்படியே டிட்டோ. என் கஸின்ஸ் எல்லோரும் ஏய் கீதா இது நம்ம பாட்டி தாத்தாடி எப்படிடி உனக்கு கிடைச்சுது என்றும் என் ஒரு கஸினின் மாமியார் மாமானார் ஆஹா இது கோமவள்ளி மாமியும் ஸ்ரீநிவாச மாமாவுமாச்சே யாரு எடுத்த ஃபோட்டோ எப்படிக் கிடைச்சுது என்று வியந்து எல்லோருமே அவரவர் உறவுகளைச் சொல்லி என்னைக் கூப்பிட்டுக் கேட்க ...கீதா உனக்கு எப்படி அத்தை மாமா படம் யாரு கொடுத்தா....சித்தி சித்தப்பா, பெரியப்பா பெரியம்மா அத்தான் மன்னி அத்தான் ஃபோட்டோ அட யாரு கொடுத்தா என்று ஒரு மாதமாக எனக்கு ஃபோன்கள் வந்து கொண்டிருந்தது. நானும் ஆராய்ந்து என் அப்பாவிற்கே ஊரில் உள்ள ஒரு பெண்ணின் வாட்சப்பிற்கு அனுப்ப என் அப்பா சொன்னால் சரியாக இருக்கும் என்று அவரது பெற்றோரை அவருக்கே தெரியாமல் போகுமா என்ன? என்று...அவரைப் பார்க்க வைத்தேன். அவர் சொன்னது அப்பா அம்மா மாதிரியேதான் அப்படியே இருக்கா ஆனா அவா இல்லை என்று சொல்லிட..ரயிலில் போனது எல்லாம் சரிதான் ஆனால் அவா இல்லை. நான் என் அப்பாவிடம் விவாதித்தேன் உனக்கு எப்படித் தெரியும் எப்படி அப்படி அடிச்சு சொல்லுற. இது தாத்தா பாட்டியேதான் என்று சண்டை போட்டேன். போடி போ இது அவா இல்லை என்று மீண்டும் மீண்டும் அடித்து சொல்லிட...எனக்கு பலூனில் ஊசி குத்தியது போல் இருந்தது. என்றாலும் அந்தப் புகைப்படத்தை இன்னும் அழிக்காமல் பாதுகாத்து வருகிறேன்....அது என் தாத்தா பாட்டியேதான் என்று மனதில் பதிந்ததால்...
அவர்களுக்கான கதையை எழுதும் போதும் அப்படித்தான் எனக்குக் கண்ணில் நீர் முட்டி....நான் அவர்களுக்கு மிகவும் செல்லம்..என்னை சிறு வயதில் வளர்த்தவர்கள் அவர்களே....அக்கதையில் சொல்லப்பட்டிருந்த திருமணம் நடந்த இடம் எல்லாம் உண்மையே...
கீதா
உங்கள் தாத்தா-பாட்டி கதை நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஇந்த மாதிரி வருதல் - உணர்ச்சிவசப்படல் அல்ல, உணர்ச்சி மேலிடல் இது. அப்போது நம்மைத் தாக்கும் உணர்வுகள், வேறொன்றைக் காட்ட, சொல்ல முயற்சிக்கின்றன எனத் தோன்றுகிறது.
ஆமாம் ஏகாந்தன் அண்ணா கரெக்ட் உணர்ச்சி மேலிடல். வசப்பட்லுக்கும் மேலிடலுக்கும் வித்தியாசம் உண்டே...நன்றி நன்றி அண்ணா....எனக்கு கருத்திடும் போது அது உரைக்கவே இல்லை பாருங்கள்...என் பாட்டி என்னோடு தான் இருந்து இறைவனடி சேர்ந்தார். 93 வயது ஆரம்பமான போது...என் மகனும் அவரது அன்பில் நனைந்தவன்...
நீக்குமிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா
கீதா
வாவ்.... குறுநாவல் என்று கூட சொல்லலாம். நன்றாக வந்திருக்கிறது இக்கதை. பாராட்டுகள் கீதாஜி.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கு
நீக்குகீதா
ஆஹா அருமையானதொரு நாவல் வாசித்த சந்தோசம்...
பதிலளிநீக்குஅருமை அக்கா...
மிக்க நன்றி குமார். கருத்திற்கு.
நீக்குகீதா