புதன், 12 ஜூன், 2019

புதன் 190612 :: பேய்ப்படம் பாருங்க !


சென்ற வாரம் இலக்கு நிர்ணயிக்க எண்ணிக்கை அடிப்படை தேவை என்று பார்த்தோம். 

இந்த வாரம் என்ன சொல்லப்போகிறேன் என்றால் ..... இப்போ என்ன டைம்? 





கீதா ரெங்கன் :


பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்லப்பட்டாலும் பெண்களாலேயே பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது என்பது இருந்திருந்தால் மாமியார் மருமகள் நாத்தனார் பிரச்சனைகள் எழாமல் இருக்குமன்றோ?!


# உங்கள் கேள்வியிலேயே  ஓர்  உண்மை காணப்படுகிறது கவனித்தீர்களா ?

பெண்ணாக இருந்தும் மாமியார் மருமகள்களுக்கு இடையே புரிதல் ஏன் இல்லை?

& அதாகப்பட்டது, நான் சொல்லவருவது என்ன என்றால், மாமியார், மருமகள் இருவருமே ஒரே வகைப் பாம்புகள் இல்லை. ஒரு மாமியாரைப் புரிந்துகொள்ளுதல் இன்னொரு மாமியாருக்கு இயலும். மருமகளைப் புரிந்துகொள்ளுதல் இன்னொரு மருமகளுக்கு எளிது.

கோயில்களிலும் பார்க்குகளிலும், இப்போ இங்கே அபார்ட்மெண்ட்டில் யோகா பயில பிளாஸ்டிக் பாயுடன் வருபவர்களிலும் நான் கவனித்த விஷயம், இரண்டு வெவ்வேறு வீட்டு மருமகள்கள் தத்தம் மாமியார், மாமனார் பற்றி பல சங்கதிகளை சொல்லிச் சொல்லிக் கிண்டலடித்துச் சிரிப்பார்கள். வருகின்ற வெவ்வேறு வீட்டு மாமியார்களும் அவரவர்களின் மருமகள்கள் குறித்து அவ்வாறே !


சில நாட்களுக்கு முன்பு என் வீட்டு ஜன்னலருகே பேசிக்கொண்டிருந்த இரண்டு மருமகள்கள் தங்களுடைய மாமியார் போலவே மிமிக்ரி செய்து ஒருவர்க்கொருவர் நடித்துக் காட்டியதைப் பார்த்து அசந்துபோய் ...... நல்லவேளை கை தட்டி 'ஒன்ஸ்மோர்' என்று கத்தாமல் இருந்தேன்! 

சகோதரிகளுக்குள்ளேயேயும், அம்மா பெண்ணிற்கும் இடையே கூட பிரச்சனைகள் வந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருப்பதும் நடக்கிறதே...இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

               
# இரண்டையும் ஒருசேரப் பார்த்தால் பெண் என்றாலே புரிதல் குறைபாடு இயல்போ எனும் எண்ணம் ஏற்படவில்லையா ? இதற்கு என்ன காரணமாக இருக்கும் ?

முதலாவதாக, புரிதல் அளவு ஆணா பெண்ணா என்பதை வைத்து வேறுபடுமா ? ஆம் எனில் ஏன் ?

இதற்கு அவரவர் தரப்பில் ஆணோ பெண்ணோதான் விடையளிக்க வேண்டும் அல்லவா?

ஆணாக நான் நினைப்பது (சரிதானா அறியேன்) பெண் உணர்ச்சி வசப்படுவதும் பாசம் உச்சமாக இருப்பதும் இருப்பதை இழப்போமோ என்ற அச்ச உணர்வு அதிகமாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும் புது உறவாக வரும் நாத்தனார், மாமியார், மருமகள் குறித்த எதிர்மறை எண்ணங்களும் (போதனைகள் முடிவுகள் காரணமானவை) தவறு ஏதோ நடக்கப் போகிறது என்ற "எதிர்பார்ப்பு"க்கு வழிசெய்யலாம். சுயவிமரிசனம் ஆண்பெண் யாருக்கானாலும் அரிதான விஷயம்.

& அம்மா vs பெண்.

பெண்ணின் திருமணத்திற்கு முன்பு சில பிரச்னைகள் உரசல்கள் இருக்கலாம். 

பெண் திருமணம் ஆகிவிட்டால், எந்தப் பிரச்னையும் இருக்காது. 


சகோதரி vs சகோதரி : 


திருமணத்திற்கு முன்பு எந்தப் பிரச்னையும் பெரிதாக வருவது இல்லை. 


திருமணத்திற்குப் பின்: நிறைய பிரச்னைகள், உரசல்கள், மோதல்கள்  வரும். 


      
கதை என்றாலே கற்பனை தானே? நாம் கூட பேச்சுவாக்கில் யாரேனும் உடான்ஸ் விட்டால் ஏய் சும்மா கதை விடாத என்றுதான் சொல்லுகிறோம் இல்லையா? அப்படியிருக்க ஏன் கதைகளில் யதார்த்தம் தேடுகிறோம்?

# கதை கற்பனைதான் என்றாலும்  "அட, ஆமா இல்ல " என்று எண்ணவைக்கும்போது நம் மனதில் ஒரு வலிதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறந்த கதையாக நாம் பார்ப்பது இந்தவகையான சிருஷ்டிகள்தாம். மற்றவை பொழுதுபோக்கு ரகம் மட்டுமே. எனவேதான் நல்ல கதையில் ரியாலிட்டியை நாடுகிறோம். அப்புசாமி வசந்த் கணேஷ் கதைகள் வெவ்வேறு ரகம். நல்ல படைப்புகள் ஆனால் சிறந்தவை அல்ல.

           
 அதிரா : 

நீங்கள் இதுவரை ஏறாத வாகனம்/சவாரி எது? ஏற விரும்புவது என ஏதும் உண்டோ?


# ஒட்டகம், வெள்ளைக் குதிரை, ஹெலிகாப்டர், கிளைடர், பெரிய சைஸ் உல்லாசக் கப்பல் எல்லாம்தான்


& உயிருள்ள வாகனங்களில், குதிரை சவாரி மட்டும்தான் செய்துள்ளேன். கொடைக்கானல் டூர் சென்ற குழுவில், குதிரை சவாரி போகலாம் என்ற விபரீத எண்ணம்  ஒருவருக்குத் தோன்ற, ஆளுக்கு ஒரு குதிரை என்று ஏறிக்கொண்டு, கொஞ்ச தூரம்தான் பயணித்தோம் என்றாலும் -- அந்த குதிரை வாகன சவாரியை  இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. எப்போ தலைகுப்புற விழப்போகிறேனோ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்த பத்து நிமிட நேரம்! 


ஏஞ்சல் :


1,தனிமையில் இருத்தல் தனியாக இருத்தல் வேறுபாடு என்ன ?




# விலக்க விரும்பினால் தனிமை.
நாடியடைந்தால் தனி.
                   

& Is it the difference between being alone and aloof? 

2,கவலையை இன்ஸ்டன்ட்டா மறக்க 5 யோசனை ??



 கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே என்றொரு பாடல் உண்டு.

1. இசை கேட்டல்

2. விளையாட்டு. 

3. முழு நிலவரம் விளைவு பற்றிய ஆய்வு.

4. "அவன் இருக்கிறான். பார்த்துக் கொள்வான்" என்ற எண்ணம்.


5. இதுவும் கடந்து போகும் எனும் தெளிவு.


& a) சூடாக காபி அல்லது டீ குடிக்கலாம். 


     b) இப்போதைய கவலைக்குக் காரணம் என்னவோ அதை ஒரு காகிதத்தில் எழுதி, அதை ஒருமுறை படித்துப் பார்த்து, அதன் பிறகு அந்தக் காகிதத்தை துண்டு துண்டாகக் கிழித்துப் பறக்கவிட்டுவிடவேண்டும். 


c) உற்ற நண்பனிடமோ அல்லது நண்பியிடமோ எல்லாவற்றையும் சொல்லி ஆறுதல் கொள்ளலாம்.


d) மனதுக்குப் பிடித்த செயல் ஏதேனும் ஒன்றில் முழுவதுமாக மூழ்கிவிடவேண்டும்.


e) Stop worrying and start living புத்தகம் படிக்கலாம்! 


3, mnemonic எனும் ஞாபத்தில் வைக்க உதவும் நினைவுக்குறி சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழில் அதிகம் இருக்கா ?


# நெமோனிக் தமிழில் கொண்டு வருவது சாத்தியம் என்று தோன்றுகிறது.


& 'திருநாள் சந்தடியில் வெயிலில் புரண்டு விளையாட செல்வது ஞாயமா?' (இராகு காலம் அறிய ). இதைப் போன்று அவரவர்கள் ஏதேனும் சில தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் பகிர்ந்தவைகள் சில மட்டுமே. 


4, loreal lipstick நெயில் பாலிஷ் வெளிநாட்டு ஸ்ப்ரே வெளிநாட்டு கார் இன்னபிற வெளிநாட்டு சங்கதிகளை அன்றாடம் பயன்படுத்திட்டு சினிமாவில் மட்டும் தாய் நாடு தாய்மண் காந்தீயம் , நீதி நேர்மை நியாயம் மண் ,பச்சை மஞ்சள் என கலர்கலராய் ரீல் விடும் நாயகிகளும் இப்போதெல்லாம் எரிச்சலூட்டுகிறார்களே ?? இப்படி தோணுவது எனக்கு மட்டுமா ?


 போலியான விஷயங்கள் எங்கும் எதிலும் இருக்கின்றன. எரிச்சல் சலிப்பு இயற்கைதான்.


& அதானே! இங்கே பாருங்க நெல்லைத்தமிழரின் அபிமான நடிகை, சுத்தமான உள்நாட்டுச் சரக்குக்கு விளம்பரம் செய்கிறார். எல்லோரும் இவரைப்போல் இருக்க இயலுமா! (அப்பாடா இந்த வாரம் நெல்லைத்தமிழன் சாபத்திலிருந்து தப்பித்துவிட்டேன்!) 





5, காதில் ear bud போட்டு சுகமா கிளறி வெளியே எடுத்து பார்க்கும்போது பஞ்சு முனை bud இல் இல்லைன்னா எப்படி உணர்வீர்கள் ?
காலி முனையை பார்த்து அலறிய அனுபவங்கள் இருக்கா ??


அனுபவம் இல்லை. ஆனாலும் சரி செய்வது சுலபம்தானே.


& காதுக்குப் பயன்படுத்தும் முன்பாக அந்த bud பஞ்சுப் பகுதிக்கு எப்பவுமே விரல்களால் ஒரு pull testing செய்துவிடுவேன். உறுதியான நம்பகமான brand name உள்ளவற்றை மட்டுமே பயன்படுத்துவேன். ஆனால் குடைவது, கிளறுவது எல்லாம் கிடையாது! 


     6, ஒருவருக்கு மின்மடல் அனுப்பி 2 வாரங்கள் ஆகியும் பதில் வரலைன்னா என்ன செய்வீர்கள் ?


 # போன் செய்து நலம் விசாரிக்கலாம்.


& எனக்கு மின்மடல் எதுவும் வரவில்லையே? எனக்கா அனுப்பினீங்க? எனக்கு மின்மடல்கள் அனுப்புபவர்கள் மறக்காமல் ஸ்ரீராமுக்கு ஒரு நகல் அனுப்பிவிடுங்கள். நான் மின்னஞ்சல்கள் பார்ப்பது இரண்டு அல்லது  மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் இருக்கும். என்னுடைய ஜிமெயில் கணக்கில் ஒவ்வொருநாளும் அறுபது மின்னஞ்சல்கள் வருவதால் சிலவற்றைத் தவறவிட்டுவிடுவேன். 

               

7, சமீபத்தில் அச்சு பிச்சு தத்துபித்து வேலை செய்து தடுமாறிய அசடுவழிந்த சம்பவம் ஏதேனும் இரண்டு ??

   
                 
# விமரிசனம் செய்யப் போய் விபரீதமான மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் சமீபத்திய அதிர்ச்சி.

& சென்றவாரம் அருகில் உள்ள காய்கறி கடைக்குச் சென்று, வாழைப்பழம், எலுமிச்சம்பழம் இரண்டும் வாங்கினேன். மொத்தம் எழுபத்து மூன்று ரூபாய். PayTM மூலமாக பணத்தை செலுத்த முயற்சி செய்தால், அக்கவுண்டில் பதின்மூன்று ரூபாய்கள்தான் மீதி உள்ளது, அறுபது ரூபாயை உடனே செலுத்து என்று alert வந்தது! என்ன செய்வது என்று சில நிமிடங்கள் குழம்பிப்போய் வாங்கியவற்றை அப்படியே கடையில் விட்டுவிட்டு, வீட்டுக்கு ஓடிவந்து கிடைத்த சில ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் அள்ளி எடுத்துப் போய் கடைக்காரரிடம் கொடுத்தேன். இனிமேல் எப்பொழுதும் PayTM minimum balance ஐநூறு ரூபாயாவது இருக்கவேண்டும் என்று ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளேன்!
             
8, ஒருவர் உள்ளத்தால் மனமார புன்னகைப்பது சிரிப்பது என்பதை எப்படி கண்டுபிடிக்க இயலும் ?

# பார்த்தாலே தெரியுமே.


& குழந்தையின் சிரிப்பைப் பார்த்தாலே சொல்லிவிடலாம், கள்ளம் கபடம் இல்லாதது என்று. வஞ்சகச் சிரிப்பை கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். 

                
   9, ஆன்மீகத்துக்கும் மத கொள்கைகள் நம்பிக்கைக்கும் வேறுபாடு என்ன ?

# அமைதி தருவது ஆன்மீகம். நிறுவ முயல்வது நம்பிக்கை அல்லது கொள்கை.

& என்னைப் பொறுத்தவரை, ஆன்மீகம் என்பது தன்னை உணர்தல், தனக்குள் இருக்கும் கடவுளை உணர்தல். மதக்கொள்கைகள், மத நம்பிக்கைகள் எல்லாம் முன்னோர்கள் நமக்காக வகுத்துச் சென்ற பாதைகள். அதிலும் உறுதியாக நடந்தால் கடவுளை அடைய முடியும்.

                 
10, உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது அதன்படி ஒரு சட்டம் உருவாக்கலாம் அல்லது மாற்றி அமைக்கலாம் என்றால் என்ன செய்வீர்கள் ? எதை உருவாக்குவீர்கள் அல்லது மாற்றி அமைப்பீர்கள் ?
ஒரே ஒன்றுக்கு மட்டும் தான் அனுமதி .


# ஏற்றுக் கொள்ள முடியாத பிரமாண்ட அளவிலான சொத்துக்கள் அனைத்தையும் 95% கைப்பற்றி ஏலம் போடுவதற்கான சட்டம்.


& ஒழுங்காக வருமானவரி கட்டுபவர்கள் எல்லோருக்கும் இலவச இரயில் பயணம் அல்லது பயணக் கட்டணங்களில் சலுகை. 


11,இளையராஜா அங்கிள் சிவகுமார் அங்கிள் . இந்த இவர்களின் சமீப கால செயல்பாடுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?



# இளையராஜா அளவு மீறிய கர்வம்.

சிவகுமார் என்ன செய்தார் எனத் தெரியவில்லை.

ஒருவர் செலப்ரிடி என்று ஊர் சொல்லவேண்டும். அவர்களே நினைத்துக் கொள்வது துரதிருஷ்ட வசமானது.


& சிலருக்கு சில விஷயங்கள் சில சமயங்களில் எரிச்சலூட்டும். சிவகுமாருக்கு செல்ஃபி எடுப்பவர்களைக் கண்டால் பிடிக்காது என்று நினைக்கிறேன். அதன் காரணம் பல இருக்கலாம்.

எனக்கு சீரியல்கள் பார்ப்பவர்களைக் கண்டால் பிடிக்காது. ஆனால் நான் அவர்களுக்கு முன்பு போய் நின்று 'சீரியல் பார்க்காதீர்கள், நேரம் வீணாகும்' என்றெல்லாம் லெக்சர் கொடுக்கமாட்டேன்!


நெல்லைத்தமிழன்:
             
(1) அந்த அந்த சீசனில் வரும் காய், பழங்களைச் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு கேடு வருமா? மாம்பழம், பலாப்பழம் போன்றவை, சூடு காலத்தில் விளைகின்றன. ஏன் சிலர், மாம்பழம் சாப்பிட்டால் இனிப்பு ரொம்பச் சேர்ந்து எடை கூடும் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்?

                 
$ மாம்பழம் சாப்பிட்டால் வயிறு கலங்கி எடை குறையும் என்று சொல்லக்கேள்வி. அந்தந்த சீனில் வரும் பழங்களை சாப்பிட்டால் தான் புதுசுங்கள் (பழங்களுக்கு எதிர்ப்பதம்!) சாப்பிடலாம்!

இல்லையானால் frozen & de frosted தான் சாப்பிடமுடியும்.

# அந்தந்த பிரதேசத்தில் அவ்வப்போது விளையும் பழங்கள் *அங்கு வசிப்போர்க்கு* ஒத்துப் போகும் என்று நம்பப் படுகிறது. சூடு, குளிர்ச்சி என்று நாம் சொல்வதை அலோபதி மருத்துவம் ஏற்பதில்லை. அலர்ஜி மட்டுமே அவர்கள் அறிந்தது.

எதுவாயினும் அற்றாலளவறிந்து உண்டால்...பெறுவது உடம்பு நெடிதுய்க்கும் ஆறு.
               
(2) சமீபத்தில் ரசித்துப் பார்த்த தமிழ்ப்படம் எது?
               
# நான் கடைசியாக ரசித்துப் பார்த்தது காக்கா முட்டை, அட்டக்கத்தி. ரசிக்காமல் பார்த்தது "2.0" .
           
& எனக்கு நகைச்சுவைப் படங்கள் எல்லாமே பிடிக்கும். சமீபத்தில் காணக் கிடைத்தது, உள்ளத்தை அள்ளித் தா.
                          

(3)  பேய் அல்லது அமானுஷ்ய அனுபவம் ஏதேனும் எழுதுங்களேன்.😂

# பேய் / அமானுஷ்யம் நேரடி அனுபவம் ஏதுமில்லை. பயம் நிறைய இருந்திருக்கிறது. இப்போதும் சிறு அளவில் வந்து போகிறது.


& எச்சரிக்கை: பலஹீனமான இருதயம் உள்ளவர்கள் இந்த வீடியோவைப் பார்க்காதீர்கள்! இரவு நேரத்தில் பார்க்காதீர்கள். நேற்று இரவு நான் இதைப் பார்த்தபொழுது யாரோ எனக்கு அருகில் இருந்து இதைப் பார்ப்பதுபோல ஓர் உணர்வு வந்தது. யார் என்று திரும்பிப் பார்த்தால் 

...... -------- _______  ஹா கரண்ட் கட் ஆயிடுச்சு. வீல் என்று ஒரு சத்தம் .....  அடுத்த வாரம் மீதியைச் சொல்கிறேன். 

  


=================================================


இந்த வாரம் நேர மேலாண்மை (Time management) பற்றி கொஞ்சம் பார்ப்போம்.


ஒரு ஜென் கதை சொல்லுவார்கள்.


சீடன் : "நான் மலை உச்சிக்குச் செல்லவேண்டும். எங்கே தொடங்குவது? "


ஜென் குரு : "மலை உச்சியில் தொடங்கு"


இதன் உள்ளர்த்தம் என்னவோ எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் நான் இதை நேர மேலாண்மை சம்பந்தமான முதல் பாடமாக நினைக்கிறேன். 


எப்படி?


உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். 


நான், புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையத்தில் (உஸ் அப்பாடா! .... மூச்சுவிட்டுக்கொள்கிறேன்!) மாலை 3.30 க்கு புறப்படும் இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளேன் என்று வைத்துக்கொள்வோம். 


இரயிலைப் பிடிக்க, என் நேர திட்டத்தை அங்கேயே தொடங்க வேண்டும். 

3.30

மூன்று முப்பது மணிக்குக் கிளம்பும் ரயிலில், நான் குறைந்தபட்சம் மூன்று மணி இருபது நிமிடங்கள் ஆகும்பொழுது இருக்கையில் அமர்ந்திருக்கவேண்டும். 

3.20 

மூன்று இருபதுக்கு இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என்றால், மூன்று பத்துக்கு நான் பயணம் செய்யும் பெட்டியை இருக்கையை, பதிவு செய்தோர் விவரங்களை ஒட்டப்பட்ட பட்டியலில் உறுதிசெய்துகொள்ளவேண்டும். 

3.10

ஸ்டேஷன் வாசலில் குறைந்தபட்சம் மூன்று மணிக்கு இருக்கவேண்டும். 

3.00 

ஸ்டேஷன் வாசலுக்கு என் வீட்டிலிருந்து டாக்சியில் சென்றால், ஒருமணி நேரம் ஆகும். 

2.00 

எனவே டாக்சிக்கு பதிவு செய்கையில் ஒன்றே முக்கால் மணிக்கு வரும் வகையில் பதிவு செய்வேன். 

1.45 

டாக்சியில் செல்ல வேண்டாம், sub urban train ல் செல்லவேண்டும்  என்றால், பார்க் ஸ்டேஷனில் இரண்டு ஐம்பதுக்கு இருக்கவேண்டும். 

2,50

பார்க் ஸ்டேஷனில் இரண்டு ஐம்பதுக்கு இருக்கவேண்டும் என்றால், இரண்டு ஐந்துக்கு குரோம்பேட்டை இரயில் நிலையத்தில் வரும் வண்டியைப் பிடிக்கவேண்டும். 

2.05

இரண்டு ஐந்து வண்டிக்கு ஸ்டேஷனில் ஒன்று ஐம்பத்தைந்துக்கு இருக்கவேண்டும். (டிக்கெட் வாங்க கியூவில் எல்லாம் காத்திருந்தால் பொழுது விடிந்துவிடும். ஆகவே மொபைலில் UTS app வைத்துள்ளேன். அதில் டிக்கெட் எடுத்துவிடுவேன்) 

1.55

வீட்டிலிருந்து குரோம்பேட்டை ஸ்டேஷனுக்கு நடக்க சரியாக பதினாறு நிமிடங்கள் ஆகும். 

1.39

ஆக, வீட்டைவிட்டு ஒன்று நாற்பதுக்கு முன்பு கிளம்பிவிடவேண்டும். 


மலை உச்சி(3.30) யிலிருந்து தொடங்கி, திட்டம் எப்படி வகுக்கப்பட்டது பார்த்தீர்களா! 


இந்த வகையில் திட்டமிடுவதால் நான் சென்னையில் எப்பொழுதுமே இரயிலைத் தவறவிட்டதில்லை. 



முக்கிய எச்சரிக்கை : சென்டிரல் இரயில் நிலையம் போய்ச் சேர்ந்தவுடன், அது சென்டிரல் இரயில் நிலையம்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள, ஸ்டேஷன் பெயரைப் படிக்கத் துவங்காதீர்கள் ! 

 "புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்" என்று படித்து முடிப்பதற்குள் இரயில் கிளம்பிப் போய்விடும்! 😊

********************* 


ஆமாம், பெங்களூரில் எப்படி? 

பயணத்திற்கு நிச்சயம் எந்த நேர திட்டமும் சரிவராது! 


பெங்களூர் சிடி இரயில் நிலையத்தில், ஒரு இரயிலைப் பிடிக்கவேண்டும் என்றால், அதற்கு சரியாக பன்னிரண்டு மணி நேரம் முன்பாக, வீட்டிலிருந்து கட்டுசாதக் கூடையுடன், அடல்ட் டயபர் அணிந்து கிளம்பிவிடுதல் உத்தமம்! 


**************

                
அது சரி, ரயிலைப் பிடிக்க மட்டும்தான் நேர மேலாண்மையா என்று கேட்காதீர்கள். 

அலுவலகம் செல்ல, நேரத்திற்கு சினிமா தியேட்டர் செல்ல, உள்ளூர் நண்பரைப் பார்க்க என்று எல்லாவற்றிற்குமே இந்த ரிவர்ஸ் ரூட் டெக்னாலஜி உபயோகமாக இருக்கும். 


அடுத்த முறையிலிருந்து இந்த வகை திட்டம் போட்டு, அதன்படி செய்து பாருங்கள்.  


வெற்றி உங்களுக்கே! 


============================================


மீண்டும் சந்திப்போம்! 


---------------------------------------------------------------------------



86 கருத்துகள்:

  1. இனிய கால வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நெல்லை அது உங்க கேள்வியா பேய் பற்றியது. ஆஹா நான் கேட்க நினைத்திருந்தேன். திடீர்னு பல்கொட்டிப் பேய் நினைவுக்கு வந்துச்சா அட இதையே இங்கு கேட்டால் கண்டிப்பா கௌ அண்ணா தலைமுடி கொட்டிய மொட்டைப் பேய்னு ஏதாவது எழுதமாட்டாரா என்று!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..... (இந்த பதிலை, பேய் திருடிச்சென்றுவிட்டது!)

      நீக்கு
  3. எனது கேள்விகளுக்குப் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி!. பதில்கள் சிறப்பு.

    //பெண் திருமணம் ஆகிவிட்டால், எந்தப் பிரச்னையும் இருக்காது.// திருமணத்திற்குப் பிறகும் பிரச்சனைகள் குறிப்பாகச் சொத்துவிஷயத்தில் நடப்பதைப் பார்த்ததால் அந்தக் கேள்வி எழுந்தது மனதில். ஒரு சில விஷயங்களில் கூட தன் சகோதரனுக்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது என்று சண்டை போடும் பெண்களையும் கண்டதால் இக்கேள்வி எழுந்தது.

    பதில்கள் சூப்பர். மீண்டும் வருகிறேன் பேய் பார்க்க

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கௌ அண்ணா சிவப்பு எழுத்துகள் கண்ணில் பட்டுவிட்டது சிரிச்சு முடிலப்பா...ஹா ஹாஅ ஹா ஹா..

    இன்றைய காலை நல்ல நகைச்சுவையுடன் தொடங்குகிறது!. நன்றி நன்றி!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் அன்பின் வணக்கங்களுடன் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  6. மேலான கேள்விகள். அதற்குத் தகுந்த அருமையான பதில்கள்.

    பெண் களுக்குள் புரிதல் வர ஒரு விதமான ஞான நிலை வர வேண்டும்.
    முன்கூட்டியே ஒரு மணப்பெண்ணின் மனதில்
    அனுமானங்கள் புகுத்தப்பட்டு விட்டால்
    சம்ரசம் உலாவும் இடம் செல்லும் வரை தகறாறுதான்.
    பெரியவர்களாவது விட்டுக் கொடுக்க வேண்டும். நாக்கில்
    ஒரு வார்த்தை ,மனதில் ஒரு வார்த்தை கூடாது.

    அன்பில் சந்தேகம் வரக்கூடாது. கணவனிடம் அதீத Possessiveness
    கூடாது.
    அதே போல் மகன் அருகே மருமகள் நிற்கக்கூடாது என்று சொல்லும் மாமியார்களையும்
    பார்த்திருக்கிறேன்.

    எல்லாவற்றுக்கும் மேல் இது நம் வீடு,
    நம் மக்கள் எல்லோரும் சுகமாக என்னாளும் இருக்க வேண்டும் என்று
    ஒரு தாய் நினைத்துக் கொண்டே இருத்தல் குடும்பத்துக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக, மிக, மிக சரியாக, நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

      நீக்கு
    2. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வல்லி அக்கா.

      நீக்கு
    3. பெரியவங்களோட அனுபவத்தில் ரொம்ப நல்லாவே சொல்லியிருக்கீங்க வல்லிம்மா... பையன், அவன் மனைவியைக் கூட்டிக்கொண்டு திரைப்படத்துக்குச் சென்றாலே கோபப்படும் அம்மாக்களைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  7. ரயில், விமானம் இரண்டிற்கும் முதல் நாளே தயாராகிவிடுவோம்.
    மைலாப்பூரிலிருந்து சென்ட்ரல் நிலையத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே போய்விடும் வழக்கம்.
    ரயிலைத் தவற விட்டவர்களையும் பார்த்திருக்கிறேன்.
    கணவரின் கோபத்துக்கும் உள்ளாகி இருக்கிறேன்.

    வீட்டை விட்டு வெளியே வருவதே தப்புப்பா என்று புலம்புவார்.ஹாஹ்ஹா. அவ்வளவு நேரக் கெடுபிடி வைத்து விடுவேன்.😂😂😂😂😂😂😂😂

    பதிலளிநீக்கு
  8. பேய்கள் சூப்பர். கடைசியில் அலறுவது பேயா,
    காரோட்டுபவரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயம் காரணமாக நான் இன்னும் முழுவதுமாகப் பார்க்கவில்லை. இன்று பகலில்தான் முழுவதும் பார்க்க வேண்டும்!

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. அனைத்து கேள்விகளும், பதில்களும் அருமை.
    நேர மேலாண்மையும் நன்றாக இருந்தது.
    போக்குவரத்து நெரிசல், சிக்னல் போன்ற தடைகற்களை தாண்டி பயணிக்க வேண்டி இருப்பதால் அதற்கு ஏற்ப திட்டமிடுதல் வேண்டும் .

    பதிலளிநீக்கு
  11. பேய் காணொளி அருமை.
    தேர்வு அருமை.

    அதிராவின் வார்த்தை நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் அனைவருக்கும்.

    நேர மேலாண்மை விளக்கம் அருமை. இப்போல்லாம் ரயில்வே சார்ட் கிடையாதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ . அப்படியா ! நான் ரயில் பயணம் செய்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

      நீக்கு
  13. இவை எதுவுமே பேய்கள் இல்லை என்பதற்கான சாத்தியம் அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய்களே வந்து சொன்னால்தான் நம்புவீர்களா! நீங்க GRB பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ?

      நீக்கு
    2. GRB மணல் போன்ற நெய்? இப்போதான் விளம்பரம் பார்த்தேன்... என்னைச் சாக்கிட்டு நீங்கள் 'த' படம் வெளியிடவில்லையே? மற்றவற்றிர்க்குப் பிறகு வருகிறேன்.

      நீக்கு
    3. வாங்க, வாங்க ஏதோ உங்கள் பெயரைச் சொல்லி படம் பார்க்க ஏற்பாடு செய்துகொண்டேன்!

      நீக்கு
  14. பதில்கள் அனைத்துமே ரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
  15. வந்திருக்கும் நண்பர்களுக்கும், வரவிருக்கும் அனைவருக்கும் நல்வரவும், வாழ்த்துகளும், வணக்கமும், பிரார்த்தனைகளும்!

    பதிலளிநீக்கு
  16. ஹாஹா, பேயெல்லாம் பார்த்துட்டுச் சிப்புச் சிப்பா வருதுங்க! அதிலும் அந்த முதல் ஐந்தாம் நம்பரில் பள்ளி வகுப்பில் உட்கார்ந்திருக்கும் பேய், பாவம் படிச்சு முடிக்கலையேனு உட்கார்ந்திருக்குது! அதைப் போய்த் தொந்திரவு செய்து கொண்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  17. மரத்திலே தலைகீழாய்த் தொங்கும் பேயும் என்ன அழகா படம் எடுக்கப் போஸ் கொடுத்திருக்கு! அதை ரசிக்க வேண்டாமோ!

    பதிலளிநீக்கு
  18. நான் உள்ளூரில் வெளியே கிளம்பணும் என்றாலே காலை பத்தரைக்குக் கிளம்பவேண்டும் வீட்டில் இருந்து என்றால் பத்து மணிக்கே தயாராகி உட்கார்ந்திருப்பேன். ஆகவே ரயிலைப் பிடிப்பது எனில் மாலை நாலு மணிக்கு ரயில் எனில் ரயில்வே ஸ்டேஷனில் மூன்று மணிக்கே வந்து உட்கார்ந்து விடுவோம். அதுவும் சென்னை போன்ற ஊர்கள் எனில் இன்னமும் முன்னாலே கிளம்பி விடுவோம். "பெண்"களூரில் ஒரு முறை மாலை ஐந்தேகாலுக்கு ரயிலைப் பிடிக்கணும். நாங்க இருந்த ஹெப்பல்?(ஹெப்பார்?) பகுதியிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் போகணும் என்பதால் மத்தியானம் இரண்டு மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி விட்டோம். சரியாக நான்கு மணிக்கு ஸ்டேஷன் வந்தாச்சு! அப்பாடானு பெருமூச்சும் விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் அந்தக்காலம். இப்போ குறைந்தது நான்கு மணி நேரம் முன்னால் கிளம்பவேண்டும்.

      நீக்கு
  19. இப்போல்லாம் ரயிலில் சார்ட் தயார் செய்து ரயில் பெட்டியில் ஒட்டுவதில்லை! நமக்கே மொபைலில் பிஎன் ஆர் எண்ணோடு இருக்கை எண்களும், படுக்கை எண்களுமாக வந்து விடுகின்றன. அதைக் காட்டினாலே போதும்!

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  21. என்ன இருந்தாலும் பேயை ரசிக்கிறாப்போல் வேறே எதையும் ரசிக்க முடியலை! இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாமோ? எல்லாமே சமத்துப் பேய்களாகவும் இருக்கின்றன. ஒரு தொந்திரவு கொடுக்கலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஆனாலும் இதை இரவில் பார்க்கும்போது பயமாத்தான் இருந்தது.

      நீக்கு
    2. கீசா மேடம்....அப்போ எனக்கு ஒரு சந்தேகம்.... இரவு சில சமயங்களில் நீங்கள் தூக்கத்தில் கத்துவேன் என்பீர்களே.. அது யாரைப் பார்த்து அல்லது என்ன கனவு கண்டு? ஹா ஹா

      நீக்கு
    3. எனக்கு என்ன தெரியும் நெல்லைத் தமிழரே! அவர் தான் சொல்லுவார் நான் கத்தினேன் என்று. ஆகவே இதுக்கு பதில் அவரிடம் தான் கேட்கணும். ஒருவேளை பேய் தான் வந்து கத்திட்டுப் போகுமோ? ம்ஹூம், தெரியலை! இன்னிக்கு ராத்திரி கத்தினால் அவர்ட்டக் கேட்டுட்டுச் சொல்றேனே! எனக்குக் கனவுகள் எதுவுமே நினைவில் இருப்பதில்லை. எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். என்ன கனவுனு தெரியறதே இல்லை. ஆகவே நிச்சயமாப் பேய் இல்லை! :))))))

      நீக்கு
  22. இந்த மாதிரி நிறையப் பேய்களைப் "பேய்க்காட்டணும்" என நம்ம அதிரடி மொழியில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. மீண்டும் ஒரு முத்தாரம்..

    அன்பின் KGG அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நீண்ட பதிவு. மாலையில் மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே வருவேன், இங்கும் அங்கும் ..... யாரென்று யார் அறிவார் என்று பாடுவீங்களா வெங்கட்?

      நீக்கு
    2. அவரே பாவம்... ஒரு மாதத்துக்கு மேல், அவருடைய எஃபர்ட் இல்லாமல் உணவு கிடைத்துக்கொண்டிருந்தது. மீண்டும் கரண்டி பிடிக்கத் தொடங்கிவிட்டார் வெங்கட். எங்க நேரம் கிடைக்கும்?

      நீக்கு
  25. //ரசிக்காமல் பார்த்தது "2.0" .// - நானும் இதனை எங்கயாவது சொல்லணும்னு இருந்தேன். இந்தப் படத்தை ப்ரைம்ல் பார்த்தேன். கொடுமை. இந்த மாதிரி அட்டுப் படங்களை எடுக்க எப்படித்தான் சங்கருக்கு மனசு வருதோ. ஒண்ணாம் நம்பர் அறுவை. அதுமட்டுமல்ல... அழகான எமி ஜாக்சனை வைத்துக்கொண்டு வேஸ்ட் பண்ணியது, ரஜினியை கார்ட்டூன் மாதிரி காண்பித்தது என்று.. சங்கர் படம் பார்ப்பவர்களை அறுத்துத் தள்ளிவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான எமி ஜாக்சனா ! இந்த விஷயம் தமன்னாக்குத் தெரியுமா?

      நீக்கு
  26. தனித்து இருக்கத் தெரியாதவர்கள்தான் தனிமையில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
    விழித்திரு
    பசித்திரு
    தனித்திரு
    என்று விவேகானந்தர் கூறியவை சிந்திக்கத்தகுந்தது.
    "தனிமை கண்டதண்டு அதிலே
    சாரம் இருக்குதய்யே"
    என்ற பாரதியின் வாக்கு குறிப்பது கூட தனித்திருத்தலைப்பற்றிதான் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ராமலிங்க அடிகள் அல்லவா சொன்னது (வள்ளலார்). தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்று அவர் சொன்னார். அப்படி இருக்கும்போதுதான் 'நான் யார்' என்ற கேள்வியே எழும்.

      நீக்கு
    2. தமிழரிஞர்கள் விவாதம் செய்யும்போது நான் பார்வையாளன் மட்டுமே!

      நீக்கு
    3. வள்ளலார் ஸ்வாமிகள் மொழிந்ததே -பசித்திரு,தனித்திரு,விழித்திரு..

      பசித்திரு - அடுத்த பிளேட் இட்லி இன்னும் வரலையே!..

      தனித்திரு - பெண்டாட்டியை அவங்க அம்மா ஊட்டுக்கு அனுப்பிட்டு...

      விழித்திரு - தூக்கம் கண்களைக் கசக்கினாலும் அடுத்து வரும் அழுகாச்சி சீரியலுக்காக....

      இதல்ல அந்தத் திருவாக்கின் அர்த்தம்!...

      இதைப் பற்றித் தனிப் பதிவே எழுதலாம்...

      நீக்கு
    4. ஹா ஹா ஹா துரை சார்! கலக்கிட்டீங்க!

      நீக்கு
    5. //இது ராமலிங்க அடிகள் அல்லவா சொன்னது// இப்படி ஒரு மறுப்பை எதிர்பார்த்தேன். விவேகானந்தர் படங்களின் கீழே இந்த வாசகத்தை பார்த்திருக்கிறேன்.

      நீக்கு

    6. //இதைப் பற்றித் தனிப் பதிவே எழுதலாம்...//
      வீ ஆர் வெயிட்டிங்.

      நீக்கு
  27. //செலப்ரிடி என்று ஊர் சொல்லவேண்டும். அவர்களே நினைத்துக் கொள்வது துரதிருஷ்ட வசமானது// - இதுல கெளதமன் சாரின் பதில் பொருத்தமா இருக்கு. திறமை உள்ளவர்கள், பப்ளிக் ரிலேஷன்ஷிப்லயும் திறமையானவர்களாக இருக்கணும்னு அவசியமில்லை. அதிலும் இளையராஜா பல சமயம், தவறா பேசிடறார். நாம அவரை விரும்புவதற்கு அவரது இசை மட்டும்தானே காரணம். அதேபோல், ரசிகக்குஞ்சுகள், இடம் பொருள் தெரியாமல் ஓட்டை செல்போனை முகத்துக்கு நேரே நீட்டி மற்றவர்களோடு அவர்களது அனுமதியில்லாமல் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் அராஜகம் மிகவும் தவறானது.

    கேஜிஜி சார் 'சீரியல் பார்ப்பவர்களை' பிடிக்காது என்கிறார். எனக்கும் அதே மாதிரித்தான். நான் தமிழ் சீரியல்கள் எதுவும் பார்க்கமாட்டேன். (ஆங்கிலத்தில் சர்வைவர், மாஸ்டர்செஃப் போன்ற ரியாலிட்டி ஷோக்களைப் பார்ப்பேன். முன்பு சூப்பர் சிங்கர் பார்த்தேன்..அப்புறம் அதுவும் 'கதை' என்பதை அறிந்தபிறகு பார்ப்பதில்லை). எனக்குத் தெரிந்தவர்கள்லாம், சீரியலே கதின்னு இருப்பாங்க. என் நண்பன், ரெகார்டு செய்து பிறகு பார்ப்பான். என் மனைவி 8 வருஷத்துக்கு முன்னால சீரியல் பார்க்காதீங்கோ என்றாள் (நானும் அதில் இண்டெரெஸ்ட் காண்பித்ததில்லை.ஆனால் தனியா இருந்ததால் அப்படிச் சொன்னா). அதுனால நான் எப்போவுமே எந்த சீரியலும் பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  28. கேஜிஜி சார்.... பெண்கள் ஏன் பேய்க்குப் பயப்படப் போறாங்க? ஆம்பளைங்க இன்னொரு ஆம்பளையைப் பார்த்து பயப்படுவோமா? அதே மாதிரி பேய்கள் திருமணமான ஆண்களைப் பயமுறுத்தாது. ஒருவனையே இருமுறை தண்டனைக்குள்ளாக்க பேய்கள் விரும்புவதில்லை. ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இவரு உன்னை பா வெ, கீ சா எல்லோரிடமும் மாட்டிவிடப் பார்க்கிறார்! உஷாரா இருடா கே ஜி ஜி !

      நீக்கு
    2. அது சரி நெல்லைத்தமிழரே, இந்த பதிலை உங்க மனைவி படிச்சால் என்ன நடக்கும்? நேரில் பார்க்க ஆசை!

      நீக்கு
    3. கௌ அண்ணா பயப்படாதீங்க...பேய்க்காட்டிடலாம் !!!!!

      கீதா

      நீக்கு
  29. பேய் என்பது கற்பனையான ஒரு விஷயம். கற்பனை பயங்கள் பெண்களுக்கு கிடையாது என்கிறார், அப்படித்தானே நெ.த.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா - வந்துட்டாங்க ஐயா வந்துட்டாங்க! நான் பயந்ததுபோலவே ஆயிடுச்சே! இப்போ நான் எங்கே போவேன்!

      நீக்கு
    2. பேய் நிஜமான விஷயம்தான்.ஆனால் மன தைரியத்துடன் இருந்தால் அவைகளால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

      "சார்..நிஜமாவா சொல்றீங்க... இரவு தைரியமா சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்துடுவீங்களா? பயமில்லையா? நினைக்கவே கொலை நடுங்குதே சார்"

      "இதிலென்ன இருக்கு. நான் பேயோடயே 30 வருஷமா குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன். என் மனைவியோடயே தைரியமா குடும்பம் நடத்தறவனுக்கு பேயைப் பார்த்தால் பயம் வருமா?"

      நீக்கு
    3. இதை எல்லாம் நான் சொன்னா பா வெ மேடம் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பாங்க!

      நீக்கு
  30. எனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு நன்றீஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டதற்கு நன்றி! மீண்டும் நிறைய கேளுங்க!

      நீக்கு
  31. சிம்லாவில் இருக்கும் IIAS கட்டிடத்தில் தான் 1972ஆம் ஆண்டு சிம்லா ட்ரீட்டி இந்தியாவிற்கும்,பாகிஸ்தானிற்குமிடையே கையெழுத்தானது. இதில் கையெழுத்திட்டவர்கள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியும்,பாகிஸ்தானிய அதிபர் புட்டோவும். இதெல்லாம் முடிந்து சில வருடங்கள் கழிந்து புட்டோ வின் ஆவியை அங்கு பார்த்ததாக குமுதத்தில் ஆர்மி ஆபீஸர் ஒருவர் எழுதியிருந்தார்.
    நாங்கள் சிம்லா சென்றிருந்த பொழுது IIASக்கும் சென்றிருந்தோம். புட்டோவின் ஆவி கண்ணில் படுகிறதா என்று தேடினேன்..ம்ஹீம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப தைரியம்தான் நீங்க !

      நீக்கு
    2. பாவப்பட்ட ஆத்மாக்கள் அலைய வேண்டும் என்றிருக்கிறது. லால் பஹதூர் சாஸ்திரியை யாராவது பார்த்திருப்பார்களா.கொடுமையான மரணம் அல்லவா அவ்ருடையது,.

      நீக்கு
  32. 1. பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

    2. கோயில் திருவிழாக்கள், அம்மன் திருவிழாக்களில் உம்மாச்சி வந்துடுச்சுனு சொல்லி ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கக் காரணம் என்ன?

    3. அப்படி ஒரு ஆணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உம்மாச்சி வந்துடுச்சுனு சொல்லி ஆடும் பூசாரி சொல்வது/சொன்னது எல்லாம் பலிச்சிருக்குனு/ பலிக்கும்னு நம்புவீர்களா/நம்புகிறீர்களா?

    3. அது என்ன, பெண் பேய் மட்டும் எப்போதுமே மல்லிகைப்பூவும் கொலுசும் போட்டுக்கொண்டு வருது? அது இல்லாமல் வராதா?

    4. இப்போ நானே இருக்கேன் இல்ல? எனக்குக் கொலுசே பிடிக்காது? அப்போ நான் பேயாக ஆனால் எப்படி கொலுசுவெல்லாம் போட்டுப்பேன்? மாட்டேன்னு சொல்லி இருப்பேன் இல்லையா?

    5. இறந்தவர்களிடம் பேசுகிறேன் என்று சொல்லி ப்ளாஞ்செட் மூலம் பேசியவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?

    6. உங்களுக்குப் பேசிய அனுபவம் உண்டா?

    7. அல்லது மீடியமாக இருந்திருக்கீங்களா?

    8. அறுபதுகளின் ஆரம்பத்தில்? ஸ்டவ் ஜோசியம் பிரபலமாக இருந்தது! தெரியுமா? உங்க வீட்டு ஸ்டவ் ஜோசியம் சொன்னதா? சொன்னால் என்ன சொல்லி இருக்கும்?

    9. பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நீங்கள் நம்பினீர்களா? உண்மையாவே பால் குடிச்சாரா என்ன?

    10.இது வரைக்கும் நீங்க பார்த்த பேய்களிலேயே உங்களுக்குப் பிடித்த பேய் எது? பேய்ப்படத்தில் இருந்து கூட சொல்லிக்கலாம். அல்லது பேயின் படத்தையே கூடப் போடலாம்! எதுவானாலும் சரி!

    மிச்சத்துக்கு அப்புறமா வரணும்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா இன்னிக்கு மழைதான்! தொடர்ந்து பத்து கேள்விகளா!!

      நீக்கு
  33. எந்தப் பேய்ப்படத்தையாவது பார்த்துட்டு பயந்திருக்கீங்களா?

    நீங்க காஃபியோடு வறுத்த அதிலும் நெய் விட்டு வறுத்த முந்திரிப்பருப்பும் வேணும்னு கனவு கண்டு கொண்டு இருக்கும்போது ஒரு கை மட்டும் வந்து அவற்றை உங்களிடம் ஒவ்வொன்றாக நீட்டினால் என்ன செய்வீர்கள்?

    (நான் சாவகாசமா முந்திரிப்பருப்பை ரசித்துச் சாப்பிட்டுவிட்டுக் காஃபியைக் குடிச்சுடுவேன்.)

    சில வருஷங்கள் முன்னே நீங்க பாக்கெட் பால் கொடுப்பவரிடம் பால் வாங்கிக் காஃபிக்குப் பால் காய்ச்சும்போது நடந்த அமானுஷ்யங்கள் இப்போவும் நடக்குதா? அதே பால் காரர் தானா இப்போவும் பால் கொடுக்கிறார்? வேறே ஆளா? இவருக்கானும் கால்கள் இருக்கா?

    அது ஏன் பேய்க்குக் கால்கள் கிடையாதுனு ஒரு நம்பிக்கை! கால் இருக்கும் பேயே இல்லையா? கால் இருந்தால் என்ன ஆகும்? அது நடந்து வரும் சப்தம் கேட்டு உஷாராயிடுவோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்.... எங்களமாதிரி அப்பாவிகிட்டயாவது வம்பு வச்சுக்குங்க. பரவாயில்லை. பேயை இன்சல்ட் பண்ணினீங்கன்னா, அடுத்த தடவை உங்களை வெளியூரில் ஹோட்டல் ரூமில் விட்டுவிட்டு அவர் மாத்திரம் வெளியே போகும்போது, பாத்ரூம் கண்ணாடியைப் பார்ப்பீங்க, உங்களுக்குப் பின்னால் வெள்ளையாக ஒரு உருவம் தெரியும். காபி Potல் இருக்கும் காஃபியை ஊற்றப்பார்ப்பீங்க...அது ஜூசாக மாறியிருக்கும். ஜன்னல் கதவு படீரென அடித்துக்கொள்ளும்...திரைச்சீலைகள் ஆடும். உங்க அறையிலேயே இன்னொருவர் உட்கார்ந்திருப்பதுபோல இருக்கும்... எங்க கிட்ட விளையாடற மாதிரி, பேய்ட்ட விளையாடாதீங்க...ஒரு காட்டு காட்டிடும்...

      நீக்கு
    2. ஹாஹா, நெல்லைத் தமிழரே, வெளியூரில் இருக்கையில் ஓட்டல் ரூமில் என்னைத் தனியாக விட்டுவிட்டு அவர் வெளியே போகவே மாட்டார். இரண்டு பேரும் சேர்ந்தே தான் போவோம். இல்லைனா ரூமிலேயே படுத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருப்போம். ஒருவேளை அதில் ஏதேனும் பேய் வந்தால் தான் உண்டு! காஃபி பாட் எல்லா ஓட்டலிலும் கொடுப்பது இல்லை! இப்போல்லாம் பெரும்பாலான ஓட்டல்களில் வெந்நீர்க்கு எலக்ட்ரிக் கெட்டில், காஃபி பாக்கெட்கள், சர்க்கரை, பால் பவுடர் பாக்கெட்கள், தேயிலைப் பாக்கெட்கள் வைச்சுடறாங்க. தீர்ந்து போச்சுன்னு சொன்னா நிரப்பிக் கொடுப்பாங்க. காஃபி, தேநீர் குடிக்க இரண்டு பெரிய கப்! அப்படித் தான் வைக்கிறாங்க இப்போல்லாம்! ஆகவே வீட்டில் இன்டக்‌ஷன் ஸ்டவில் காஃபி போடுவேன். அங்கே போனால் எலக்ட்ரிக் கெட்டிலில் காஃபி போடுவேன்! அம்புடுதேன் வித்தியாசம்!

      நீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    எப்போதும் போல் கேள்விகளும் பதில்களும் அருமை. சகோதரி கீதா ரெங்கன் கேட்ட கேள்விகளுக்கு தாங்கள் கூறியுள்ள தகுந்த பதில்களை ரசித்தேன்.

    நேரத்தை கணக்கிட்டு டென்ஷன் இல்லாத பிரயாணம் மேற்கொள்ள கூறியதும் சிறப்பு.

    ஆனாலும். இன்று பேய்களை பற்றிய பேச்சுக்கள் கொஞ்சம் பயமுறுத்துகிறது. இது அடுத்த வாரமும் தொடரப்போகிறது என்பதை வந்த கேள்விகள் மெய்பிக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா இவற்றுக்கெல்லாம் பேய்களைப் பகைத்துக்கொள்ளாமல் எப்படி பதில் அளிக்கப் போகிறோமோ என்று எங்களுக்கும் பயமாகத்தான் இருக்கு!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!