திங்கள், 17 ஜூன், 2019

திங்கக்கிழமை : இலை அடை _ பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


இலை அடை
தேவையான பொருள்கள்:

பச்சை அரிசி   -  1 1/2 ஆழாக்கு 
தேங்காய் துருவல் - மீடியம் சைஸ் தேங்காய் ஒன்றை 
                                       துருவியது 
வெல்லம்     -  தேங்காய் துருவல் அளவு 
ஏலக்காய் பொடி - சிறிதளவு 
நெய்                     - 1 டேபிள் ஸ்பூன் 
வாழை இலைகள்(must)

செய்முறை:

இதில் இரண்டு ப்ரிபரேஷன்கள் இருக்கின்றன. ஒன்று பேஸ் மாவு, இரண்டாவது பூரணம். பேஸ் மாவிற்கு அரிசியை ஊற வைத்து அரைக்க வேண்டும். 



எனவே பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரங்கள் ஊற வையுங்கள். அது ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் பூரணத்தை ரெடி பண்ணி விடலாம்.





தேங்காய் பூரணம் இரண்டு விதமாக செய்யலாம். சிலர் வெல்லத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,வெல்லம் கரைந்த பின் பின்னர் அதில் தேங்காயை சேர்த்து பூரணமாக கிளறுவார்கள். சிலர் தேங்காய், வெல்லம் இரண்டையும்  ஒன்றாக போட்டு கிளறி விடுவார்கள். நான் இரண்டாவது முறையை பின்பற்றுகிறவள்.  பூரணம் ரெடியானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய், கொஞ்சம் ஏலப்பொடி சேர்த்து கிளறி ஆற விடவும்.

அரிசி நன்றாக ஊறியதும், அதை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் கெட்டியாகவும்,நைஸாகவும் அரைத்துக் கொள்ளவும். 






இப்போது இங்கிரிடையேன்ட்ஸ் தயார். இலை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.



வாழை இலையை தண்ணீர் விட்டு துடைத்து, பின் அதில் அரைத்த அரிசி மாவை ஒரு சிறிய கரண்டி அல்லது பெரிய ஸ்பூனால் ஊற்றி, தோசை வார்ப்பது போல *வட்டமாக தேய்த்து, 




அதில் ஒரு ஓரத்தில் பூரணத்தை வைத்து, மறு பக்க இலையோடு சேர்த்து மடித்து மூடவும், 



மூடிய பக்கம் கீழே இருக்கும் வண்ணம் இட்லி தட்டில் வைத்து வேக வைக்க வேண்டும். ஒரு தட்டில் மூன்று அல்லது நான்கு இலை அடைகள் வைக்கலாம். நன்றாக வேக 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். சற்று சூடு ஆறியதும் இலையை உரித்தால், அழகான, சுவையான இலை அடைகள் தயார்.



* மாவை தேய்ப்பதில் கவனம் தேவை, மிகவும் மெலிதாகவும் இருக்கக்கூடாது, மிகவும் தடிமனாகவும் இருக்கக்கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். 



பின் குறிப்பு: இதில் தேங்காய் பூரணம்தான் வைக்க வேண்டும் என்பதில்லை. சக்கை விழுது என்னும் பலாப்பழ விழுதோடு தேங்காய் சேர்த்து அதையும் பூரணமாக வைத்து மூடலாம். ஊற வைத்த அவல், தேங்காய், வெல்லம், இவற்றோடு பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து  பூரணமாக செய்து, வைத்து மூடலாம்.

கேரளாவின் பாரம்பரிய உணவான இதன் செய்முறையைப் பார்த்து பயந்து விடாதீர்கள்.  கணினியை இயக்குவது எப்படி என்று படித்தால் தலை சுற்றும், ஆனால் செய்வது மிகவும் சுலபமாகவே இருக்கும். அதுபோலத்தான் இதுவும். செய்து பாருங்கள்.

62 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் எல்லோருக்கும்

    அட பானுக்கா ரெசிப்பி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். வாங்க.. வாங்க...

      நீக்கு
  2. என்னாச்சு இன்று அழகான ரெசிப்பி யாரும் இன்னும் சாப்பிட வரலை!?

    பானுக்கா இது எங்க பிறந்த வீட்டுல இந்த இலை அடை/அப்பம் வெகு ஃபேமஸ். தேங்காய்த்துருவல் அல்லது சக்க வரட்டி அல்லது நேந்திரன் வரட்டி ஸ்டஃபு செய்து அல்லது மாவோடு கலந்து இப்படிச் செய்வதுண்டு. என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவன் இருந்த வரை அதிகம் செய்ததுண்டு.

    ரொம்ப நன்றாக வந்திருக்கிறது பானுக்கா...சூப்பரா இருக்கு

    தேங்காய்த் துருவலோடு சக்கை வரட்டியைக் கலந்து அல்லது வெறும் சக்கை வரட்டி மட்டும் வைத்தும் அது போல நேந்திரன் பழத்தையும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைனல் ரிசல்ட் படங்களை பார்க்கும்போது நாவில் நீரருவி!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் ரொம்ப டேஸ்டியாவும் இருக்கும்...எங்க வீட்டுல இது மாலை டிஃபனுக்கு செய்வாங்க

      நாரோயில்ல...

      கீதா

      நீக்கு
  3. பானுக்கா அப்புறம் என் அம்மாவின் அம்மா மாவோடு சக்கைப் பழச் சுளைகளையும் போட்டு அரைத்துவிட்டு தேங்காய் பூரணம் வைத்து இப்படிச் செய்வார். அப்படியும் செய்ததுண்டு...நேந்திரன் பழம் போட்டும்.

    சூப்பர் பானுக்கா ஆசையைக் கிளறி விட்டுட்டீங்க. ஆனா தித்திப்பு!! வெல்லம் தான் என்றாலும் கூட.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  5. அருமையான தித்திப்பு இலை அடை .

    திருவனந்தபுரத்தில், நாகர்கோவிலில் திரளி இலை கிடைக்கும் அதில் செய்வோம். இலை கொழுகட்டை என்று சொல்வோம். திரளி இலை கொழுக்கட்டை அத்தனை மணமாய் இருக்கும்.

    பானுவின் செய்முறை படங்கள் எல்லாம் அருமை.
    இலையில் எழுதுவதால் அடை என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
    அவர்கள் சொல்வது போல் பூரணம் இனிப்பு அவல், கார அவல் எல்லாம் வைத்து செய்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்.. அப்படியே என் பால்ய நினைவுகளுக்குக் கூட்டிட்டுப் போயிட்டீங்க.

      இலையில் எழுதுவது - இலை வடாமுக்கும் எழுதறதுன்னுதான் சொல்வாங்க

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் திரளி கொழுக்கட்டை சாப்பிட்ட பால்ய நினைவுகளா?
      அடைபிரதமனுக்கு அரிசியை அரைத்து வாழை இலையில் எழுதி வேக வைத்து பின் அதை துண்டு துண்டாக்கி பயாசத்தில் போடுவோம். அள்ளி தெளித்தால் போல் மாவை இலையில் தெளித்தும் வேக வைப்பார்கள்.

      நீக்கு
    3. இல்லை கோமதி அரசு மேடம்.... சின்ன வயசுல கேட்டது, "இலைவடாம் எழுதிட்டயோ" அல்லது "எப்போ இலைவடாம் எழுதப்போற"ன்னு... அதுக்கு அப்புறம் "எழுதறது" என்ற வார்த்தை இந்த அர்த்தத்துல கேட்டதே இல்லை.

      நீக்கு

  6. எளிமையாக இருக்கிறது ஆனால் என்ன செய்ய வாழை இலை கிடைப்பதுதான் அரிது......கேராளவில் இருந்து இங்கு வரும் இலை அடையை நாங்கள் வாங்கி சாப்பிடுவதுண்டு. இன்று கூட கேரளாவில் இருந்து வரும் நெய்யப்பம் சாப்பிட்டேன். இது ஃப்ரீசரில் வாங்கி வைத்து சாப்பிடும் ஐட்டங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் மதுரைத்தமிழன், இதுவரை இதை நான் சுவைத்ததே இல்லை.

      நீக்கு
    2. ஸ்ரீராம் வாங்க எங்க வீட்டுக்கு செஞ்சு தரேன்...இல்லைனா பானுக்கா வீட்டுக்குப் போவோம். (எல்லோரும்தான் ) அவங்க ஒரு வெரைட்டி செய்வாங்க நான் இதுல வேறொரு வெரடிட்டு செய்து எல்லோரும் எஞ்சாய் செய்வோம்.
      இது மதுரை தமிழன் உங்களுக்கும் சேர்த்துதான் இன்விட்டேஷன்!!

      மதுரைத் தமிழன் நீங்க இருப்பது கிழக்குப் பகுதிதானே! அங்கு வாழை இலை பதப்படுத்தியது கண்ணில் தென்பட்டது என்று என் உறவினர்கள் சொன்னாங்களே.

      அப்படி இல்லைனாலும் பிரச்சனை இல்லை. ஒரு தட்டில் தட்டே இட்லி செய்யனு இப்ப அடுக்குத் தட்டு கிடைக்குதே அதில் கொஞ்சமே கொஞ்சம் தே எண்ணெய் தடவி விட்டு இப்படி அக்கா செய்திருப்பது போல் மாவை கொஞ்சமாக ஊற்றி ஸ்டஃபிங்க் மேலே வைத்து (என்ன மடக்க முடியாது) இல்லை என்றால் இட்லி துணி சின்ன சின்னதாக இருந்தால் அதிலும் மடக்கியே செய்யலாம். ஸ்டீம் செய்து பாருங்க. கிட்டத்தட்ட பிள்ளையார்க் கொழுக்கட்டை போலத்தானே.

      ஏனென்றால் எங்கள் வீட்டில் சில சமயம் இட்லி மாவு அல்லது இந்த மாவை கொஞ்சமாக இட்லி தட்டில் ஊற்றி தேங்காய் பூரணம் அல்லது பச்சைப்பயறு வெல்லம் கலந்த பூரணம் நடுவில் வைத்து மேலே கொஞ்சம் மாவை ஊற்றி ஸ்டஃப்ட் இட்லி/அப்பம் செய்வாங்க. துணியில் என்றால் மடக்கி.

      ஸோ அப்படிச் செஞ்சு பாருங்க. வரும் என்று தோன்றுகிறது. நான் இலை அப்பம் துணியில் செய்தது இல்லை. அடுத்த முறை செய்யும் போது செய்து பார்த்து வருகிறதா என்று சொல்லுகிறேன்...

      இனி மாலையில்தான் தளம் வர முடியும்.

      கீதா

      நீக்கு
    3. மதுரைத்தமிழன், ஸ்ரீராம் - தயவுசெய்து கீதா ரங்கன் சொல்றதை நினைத்து ரொம்ப சந்தோஷப்படாதீங்க... உள்ளூர்ல நான் மூணு வாரமா இருக்கேன். இந்த மாதிரி சொல்லலை (சொன்னா நான் வந்துடுவேன்னு தெரியும்). அதுனால நீங்கள்லாம் எங்கயோ இருக்கீங்க, நிச்சயம் வரமாட்டீங்கன்னு நம்பிக்கிட்டு, 'வாங்க வாங்க'ன்னு வருந்திக் கூப்பிடறாங்க.

      அதுனால திருநெவேலி கீதா ரங்கன் இன்விடேஷனை நம்பாதீங்க...ஹா ஹா ஹா

      நீக்கு
    4. //இதுவரை இதை நான் சுவைத்ததே இல்லை.// - ஸ்ரீராம்... தென்னிந்தியர்களுக்காக, குறிப்பா மலையாளிகளுக்காக, கேரளாவில் ஒர் நிறுவனத்திலிருந்து (அவங்க ஃபேக்டரில தயார் செய்யறாங்க), ஃப்ரீஸ் செய்யப்பட்ட பருப்புவடை (ஆமைவடை), மசால் தோசை, அரிசிஅப்பம், இலை அடை என்று பல வெரைட்டிகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு டிஸ்டிரிபியூட் செய்யறாங்க. நான் அப்பமும் பருப்பு வடையும் வாங்கியிருக்கேன்.

      உள்ளூர்ல இருந்துக்கிட்டு (சென்னை) இலை அடை சாப்பிடலைன்னு சொல்றது ஆச்சர்யம்தான். நான்லாம் எங்க போனாலும், சாப்பிட என்ன ஸ்பெஷல் என்று தேடுவேன்....ஹாஹா

      நீக்கு

    5. @கீதா ///எங்கள் வீட்டில் சில சமயம் இட்லி மாவு அல்லது இந்த மாவை கொஞ்சமாக இட்லி தட்டில் ஊற்றி தேங்காய் பூரணம் அல்லது பச்சைப்பயறு வெல்லம் கலந்த பூரணம் நடுவில் வைத்து மேலே கொஞ்சம் மாவை ஊற்றி ஸ்டஃப்ட் இட்லி/அப்பம் செய்வாங்க///

      எங்க ஊரில் அதாவது செங்கோட்டை பக்கம் இந்த மாதிரி செய்து கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொடுப்பது வழக்கம்

      நீக்கு
    6. @ஸ்ரீராம்.


      ///ஆனால் மதுரைத்தமிழன், இதுவரை இதை நான் சுவைத்ததே இல்லை.////

      அப்படியா அப்ப நம்ம வீட்டிற்கு ஒரு விசிட் அடியுங்கள் கண்டிப்பாக வாங்கி தருகிறேன் சுவைத்து மகிழலாம் நீயூஜெர்ஸி சென்னைக்கு கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது சந்தேகம் இருந்தால் உங்கால் ஊர் ரியல் எஸ்டேட் விற்பனையாளரிடம் கேட்டு பாருங்கள்

      நீக்கு
    7. @நெல்லைத்தமிழன் கீதா அவர்கள் என்னை ஏமாற்றமாட்டார்கள் அவர்கள் ரொம்ப நல்லவர் என்று கீதாவை சந்தித்த எனது டூப் சொல்லி இருக்கிறார்

      நீக்கு
    8. மதுரை தமிழன் சொல்வது போல் கர்ப்பமான பெண்களுக்கு பச்சைப்பயறு வெல்லம் கலந்த் பூரண சினை இட்லி செய்து கொடுப்பார்கள் . எங்கள் பக்கமும்.( திருநெல்வேலி)

      நீக்கு
    9. //நீயூஜெர்ஸி சென்னைக்கு கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது சந்தேகம் இருந்தால் உங்கால் ஊர் ரியல் எஸ்டேட் விற்பனையாளரிடம் கேட்டு பாருங்கள்//
      ஹாஹாஹா!

      நீக்கு
    10. //பூரணம் அல்லது பச்சைப்பயறு வெல்லம் கலந்த பூரணம் நடுவில் வைத்து மேலே கொஞ்சம் மாவை ஊற்றி ஸ்டஃப்ட் இட்லி/அப்பம் செய்வாங்க. துணியில் என்றால் மடக்கி.// நோ நோ, இதையெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது. அந்த வாழை இலை வாசனையோடு சாப்பிடுவது ஒரு தனி டேஸ்ட்.

      நீக்கு
    11. @Nellai Tamizhan://உள்ளூர்ல நான் மூணு வாரமா இருக்கேன். இந்த மாதிரி சொல்லலை (சொன்னா நான் வந்துடுவேன்னு தெரியும்).//
      நீங்கள் வருவீர்கள், ஆனால் சாப்பிடுவீர்களா? ஏனென்றால், மற்றவர்கள் வீட்டில் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் என்று யாரோ சொன்னார்கள், அவர் பெயர் 'மு'வில் தொடங்கும் என்று நினைக்கிறேன்.
      //

      நீக்கு
    12. ஆமாம் பா.வெ. மேடம்....இது என்னிடம் உள்ள கெட்ட குணம். இதனை என்னால் மாற்றிக்கொள்ள இயலாது. உண்மையாகவே 'அந்தராத்மா' சொன்னால்தான் எங்கும் நான் சாப்பிடுவேன். ஆனால் கடையில் வாங்கின எண்ணெய் இல்லாத ஸ்வீட்ஸ் (எனக்குப் பிடித்ததாக இருந்தால்) எங்கும் சாப்பிடத் தயங்க மாட்டேன். ஜாங்கிரி, மைசூர் பாக், மைதா ஸ்வீட்ஸ் போன்று.... இதை எழுதும்போது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.

      தாய்வானுக்கு நான் போயிருந்தபோது ஒரு கம்பெனியைப் பார்வையிட்டேன். (ஹார்ட்வேர் பிரச்சனைகளைப் பேசுவதற்கான பயணம்). அவங்க எனக்காக லஞ்ச் ஆர்கனைஸ் பண்ணறோம், மதியம் போகலாம் என்றார்கள். நான், எனக்கு எதுவும் வேண்டாம், பழங்கள் மட்டும் லஞ்சுக்குப் போதும், வேறு எதுவும் சாப்பிடுவதில்லை என்று அங்கு போன உடனேயே சொல்லிவிட்டேன். அதனால் லஞ்ச் அறையில் எனக்கு மட்டும் பழங்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

      ஒரு நீண்ட கான்ஃபரன்ஸ் மேஜையில் கால் பகுதி, வெவ்வேறு பழங்கள், அழகாக வெட்டப்பட்டவை, முழுதுமானவை என்று, 15 ஆட்கள் சாப்பிடும் அளவு எனக்கு வைத்திருந்தார்கள் (ஒருவேளை பழங்களின் நான் என்ன சாப்பிடுவேன் என்ற சந்தேகம் அவங்களுக்கு வந்ததான்னு தெரியலை).

      எதையும் புகைப்படம் எடுக்கும் நான் இதனை புகைப்படம் எடுக்க மறந்துவிட்டேன். நினைவில்தான் இருக்கிறது.

      நீக்கு
    13. மதுரை மிக்க மிக்க நன்றி!!

      நெல்லை நீங்க தான் யார் வீட்டிலயும் சாப்பிட மாட்டேனு சொல்றவராச்சே! அதனால் தான் நான் உங்களைக் கூப்பிடுவதில் தயக்கம். ஆனாலும் நான் உங்களைக் கூப்பிடவில்லைனு எல்லாம் சொல்லக் கூடாதாக்கும்!!! ஹா ஹா ஹா

      நான் சொல்லிருக்கேனா இல்லையா நீங்க வராட்டியும் பரவாயில்லை நான் செஞ்சு கொண்டு வந்து தரேன்னு?!! நீங்க அதுக்கு இதுவரை பதில் சொல்லவே இல்லையே!!! ஹிஹிஹிஹிஹி...

      ஸ்ரீராம், மதுரை எல்லாம் அப்படியில்லையாக்கும் சாப்பிட்டுருவாங்க.....

      நெல்லை பானுக்காகிட்ட கேட்டுக்கோங்க...அவங்கதான் கினிபிக்!!!நான் செஞ்சு சாப்பிட்டா ஒன்னும் ஆகாதுதானேன்றதுக்கு!!! ஹா ஹா ஹாஹ் ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  7. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    இனிப்பான இலை அடை பார்க்கவே ருசியாக இருக்கிறது.
    வெல்லமும். தேங்காயும் சேர்ந்து பூரணத்தோடு மிக வாசனையாக இருக்கும். பாட்டி இதை
    உப்பு பலகாரமாகச் செய்வார்.
    வடாம் செய்யும் நாட்களில் இலை அடையும் சேரும்.
    மிக நல்ல படங்களுடன் அழகாக விளக்கி இருக்கிறீர்கள் பானுமா.

    ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மற்றொரு முறையில் சக்கை அல்லது நேந்திரன், தேங்காய் அரிசி கொஞ்சம் வெல்லம் ஏலப்பொடி எல்லாமும் போட்டு (கொஞ்சம் சுக்கு பொடியும் சேர்த்துப்பாங்க) அரைத்து அல்லது அரைத்த அரிசி மாவில் சக்கை வரட்டி தேங்காய் எல்லாமும் மிக்ஸ் செய்து அப்படியே இலை அப்பமாகவும் செய்வாங்க. நான் வீட்டில் சக்கை, நேந்திரன் இல்லாதப்ப வாழைப்பழத்திலும், மாம்பழத்திலும் கூடச் செய்ததுண்டு அதுவும் டேஸ்டியாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கீதா என்னவோ இது அதுனு ஒவ்வொரு ரெசிப்பி போடும் போது சொல்றாளே என்று நினைக்காதீங்க..ஒன்றும் பெரிய வித்தை இல்லை..சூழல் தான் காரணம்..நான் அடுக்களை மட்டுமே என்று இருந்த காலங்கள். அதுவும் குடும்பம் பெரியது. குழந்தைகளும், குடும்பங்களும் அப்போதெல்லாம் கூடும் காலம். அப்படிக் கற்றுக் கொண்டு நிறைய செய்ததுதான். அப்போதெல்லாம் அடுக்களை தவிர வேறொன்றும் நானறியேன் பராபரமே என்று இருந்த காலங்கள். ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  11. கலை நடையாய் இலை அடை - நன்னெஞ்சே..
    இலை அடையே என்றும் அடை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறவித் துயர்தனை களைக - அதற்கே
      இறைவியை என்றும் நினை

      வாழ்க்கைச் சாகரம் கடினம் - கடக்க
      வழித்துணை இறைவன் ஆவான்

      இந்த மாதிரி யோசனை பண்ணி இன்னும் நல்லா குறள்கள் எழுதுவதை விட்டுவிட்டு, இலை அடைக்குப் போய் குறள் எழுதியிருக்கிறீர்களே..இது அடுக்குமா துரை செல்வராஜு சார்?

      நீக்கு
    2. நெல்லை அவர்களின் குறளும் அருமை.. தவிரவும்

      நல்ல உணவு சாத்வீகம்..
      மனதில் சாத்வீகம் நிறைவதால்
      இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் இனிதாகிறது...

      நீக்கு
    3. ஆஹா! என் இலை அடை உங்களை கவிதை பாட வைத்து விட்டதே!! அஹோ பாக்யம்! அஹோ பாக்யம்! மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  12. காலை வணக்கம்.

    இலை அடை அருமையாக வந்துள்ளது. எளிய செய்முறை.

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... போன வாரம் வெளியிட்டிருந்தீர்களானால், இங்க என் பையனுக்கும் மற்றவர்களுக்கும் செய்துகொடுத்திருப்பேன். சுலபமான செய்முறைதான்.

    என்னவோ எனக்கு கடைகளில் வாங்கும் இலை அடையோ (திருவல்லிக்கேணி நல்லதம்பி தெரு பஜ்ஜி கடையில் கடைசியாக சாப்பிட்டது), பிள்ளையார் கொழுக்கட்டையோ (மைலாப்பூர் டேங்க், சரவண பவனுக்கு 10-15 கடைகள் தள்ளி புதிய பெரிய கடையில் சாப்பிட்டது) பிடிப்பதில்லை. கொஞ்சம் மனசுக்கும் பிடிப்பதில்லை. அதே மைலாப்பூர் டேங்கில் ராஜா காஃபி கடை அருகே, தினமும் கிடைக்கும் உப்பு, திதிப்பு கொழுக்கட்டைகள் நன்றாக இருக்கு.

    நானே இவைகளைச் செய்யணும்னு நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று பயணப்படுவதால்..... சரி... அடுத்த முறை செய்துட்டாப் போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... போன வாரம் வெளியிட்டிருந்தீர்களானால், இங்க என் பையனுக்கும் மற்றவர்களுக்கும் செய்துகொடுத்திருப்பேன்.//
      என்னிடம் க ர் ர் ர் ர் ர் ர்..ரி பயன் இல்லை சகோ, ரெசிபி அனுப்புவதோடு நம் கடமை முடிந்து விடுகிறது. மற்றவை ஸ்ரீராம் கையில். பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  13. தமிழ்க் கொழுக்கட்டையின் மலையாளப் பதிப்பு...

    இங்கே கேரளீயர்களின் கடைகளில் கிடைக்கிறது... வெல்லம் விலை அதிகம்.. அதனால் வெள்ளைச் சீனியுடன் Dedicated Coconut சேர்த்து சிவப்பு அரிசி மாவில் செய்து விற்கிறார்கள்...

    ரப்பரைக் கடித்தி இழுப்பதாக இருக்கும்..

    சமயத்தில் எப்போதாவது நாட்டுச் சர்க்கரைப் பூரணத்துடன் கிடைக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> Desiccated Coconut <<<

      நாம தான் கிறுக்கு ன்னா..
      கூகுளும் சமயத்தில
      கிறுக்கு ஆகிடுது!....

      நீக்கு
    2. //தமிழ்க் கொழுக்கட்டையின் மலையாளப் பதிப்பு...// சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
  14. மிக அருமையான குறிப்பு! பலாப்பழமும் சேர்த்து நான் செய்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. //கேரளாவின் பாரம்பரிய உணவு//

    உண்மை எனக்கு மிகவும் பிடித்தமானது மேடம்.

    பதிலளிநீக்கு
  16. எல்லாருக்கும் இனிய திங்கள் காலை வணக்கம் from :) cwc predicted winners :))

    பதிலளிநீக்கு
  17. எல அடை சூப்பரா இருக்கு பானுக்கா .இதே ரெசிப்பி இங்கே நூலப்பத்தில் (இடியாப்பம் ) செஞ்சிருக்கேன் ,இதுவரை இலை அடை செஞ்சதுமில்லை சாப்பிட்டதுமில்லை .எனக்கு ஒரு பிரிட்டிஷ் நட்பு இருக்காங்க அவங்க வீகன் என்பதால் இப்படிப்பட்ட உணவுகள் அவங்களுக்கு செய்து தருவேன் .இதை விரைவில் செய்து பார்த்து சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  18. எங்களுக்கு வாழை இலை பூ தண்டு எல்லாம் கிடைக்கிறது என்பதை அருமை பெருமையுடன் அமெரிக்காவில் இருப்போர் தெரிந்துகொள்ள அறிவித்துக்கொள்கின்றேன் :)

    பதிலளிநீக்கு
  19. வேலைக்கு புறப்படணும் bye bye :)

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரி

    நல்ல குறிப்புகளுடனும். தெளிவான படங்களுடனும், அருமையான சிற்றுண்டி. நாங்கள் சிறு வயதாயிருக்கும் போது (அம்மா வீட்டில்) இதை சாப்பிட்டுள்ளேன். தேங்காயின் நறுமணம், பூரணத்துடன் வெல்லம், ஏலத்தின் சுவை இன்னமும் என் நாவில் நினைவுடன் நிற்கிறது. தங்கள் செய்முறையையும், படங்களையும் பார்க்கும் போது இப்போதும் செய்ய ஆசை பிறக்கிறது. கண்டிப்பாக செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா. அவசியம் செய்து பார்த்து விட்டு எழுதுங்கள்.

      நீக்கு
  21. இலை அடை..இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் தமிழகத்தில் இதைச் செய்வது அபூர்வம்தான். என் பிறந்த வீட்டில் இதை செய்தது கிடையாது. திருமணத்திற்கு பின்னர்தான் நான் கற்றுக் கொண்டேன். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. ஆஹா இலை அடை. சில முறை சுவைத்தது உண்டு.

    பதிலளிநீக்கு
  23. // கணினியை இயக்குவது எப்படி என்று படித்தால் தலை சுற்றும்...//

    சுற்றுவது நின்றால் விடை சே... வடை... ம்ஹீம்... அடை கிடைக்கலாம்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! சாப்பிட்ட பிறகு தலை சுற்றாமல் இருந்தால் சரி. நன்றி டி.டி.

      நீக்கு
  24. எங்கள் குடும்பங்களில் இந்த இலை அப்பம் செய்வது உண்டு சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன். பெரும்பாலும் சக்கைப் பழம் வைத்துச் செய்வோம்.

    உங்கள் ரெசிப்பி படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. நேரிலும் சுவையாக இருந்திருக்கும் என்றும் தெரிகிறது
    வாழ்த்துகள்
    மற்ற திங்கட்கிழமை பதிவுகளுக்கு வரவில்லையே என்று ஸ்ரீராம்ஜி நினைக்காதீர்கள். வேறு காரணம் இல்லை எங்கள் வீட்டில் கேரளத்து உணவு மட்டுமே சமைப்பது வழக்கமாகிவிட்டதாலும் வேறு எதுவும் புதியதாகச் செய்வது இல்லை என்பதாலும் என்ன சொல்வது என்று தெரியாததால் வருவதில்லை. இங்கு பல கருத்துகள் சொல்லியிருப்பார்கள் அந்நாளில்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. என்னதான் பூரணமெல்லாம்சேர்த்து இனிப்பாக்க முயன்றாலும் ஒரு சில பாகங்களில் இனிப்பு இல்லாததை தவிர்க்க முடியாது ஆகவே இலையடை மாவில் சிறிது உப்பு சேர்த்தல் நலமே

    பதிலளிநீக்கு
  26. அருமையான செய்முறை ...

    உடுப்பியில் முதல் முறை சுவைத்த போதே மனதில் நின்ற சுவை ..பின் சில முறை சுவைத்தாலும் செய்து பார்க்கும் எண்ணம் வரவில்லை ...

    இன்று இங்கு பார்க்கும் போது எளிய முறையில் இருப்பதால் செய்து பார்க்கும் ஆசை வருகிறது ...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!