தேடி எடுத்துவிட்டோம்ல
வெகு தூரத்தில் இருந்து குழந்தைகள் வந்து செல்வதால் பள்ளிகளை சீக்கிரம் மூடுகிறார்களா இல்லை தீபாவளியை முன்னிட்டா?
நட்பில்லையா? தனியாய்ப் போவது தப்பில்லையா?
குளிருடைக்குள் மறைந்திருக்கிறதோ சீருடை?
சேச்சே... டாஸ்மாக் இல்லீங்க....
பை எங்கே பாப்பா?
இங்கிட்டும்...
அங்கிட்டுமாய்...
"பேசும்.....
மணிமொட்டு
ரோஜாக்கள்....
இலை இருக்கோ இல்லையோ.... மரம் நிறையப் பூ
எங்கு நோக்கினும் ...
பூக்கள் இல்லாத வீடுகளே இல்லை
கண்ணாடியில் தெரிவது நானல்ல!
ஒரு frame க்குள் அடங்காத மரம்
இங்கும் முடிவதாயில்லை...
இந்த உணவு விடுதியின் ....
பார்க்கிங் பரப்பு பார்த்தால் பெரிய கனவுகள் இருக்கும் போலிருக்கிறது
"ஹாய்...."
வந்து விட்டோம் 'அந்த முக்கியமான' இடத்துக்கு
வாருங்கள் விருந்தினர்களே....
வாழ்க நலம்..
பதிலளிநீக்குவாங்க.. வாங்க
நீக்குஅன்பின் Kgg, ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
உங்களுக்கும் இனி வரப்போகும் நம் நடுப்பு, உறவுகள் அனைவருக்கும் நல்வரவு துரை ஸார்.
நீக்குவந்திருக்கும் நண்பர்களுக்கும், வரவேற்ற துரைக்கும், இனி வரவிருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.
நீக்குஅனைவருக்கும் நல்வரவு!
நீக்குபள்ளிப் பிள்ளைகளின் படங்கள் கொள்ளை அழகு....
பதிலளிநீக்குவண்ண மயமாய் கண் கவர்கின்றன...
சொல்லி விடுகிறேன்!
நீக்குஇலை கொண்ட கிளைகளை
பதிலளிநீக்குவெட்டினான் மனிதன்..
ஆனாலும் என்ன?..
பூக்களாய்ப் பூத்து
நிழல் கொண்டு நிற்பேன்!...
என் தோழன் அல்லவோ மனிதன்!..
அடடே... ஆச்சர்யக்குறி.
நீக்குமுதல் படம் என்ன நடமாடும் இட்லிக் கடை!?...
பதிலளிநீக்குஇரண்டாவதான கேத்தலில் சுக்கு காபியா?!...
சென்ற வாரம் மாருதி வேனில் சூப்பர் மார்க்கெட் என்று சொல்லபப்ட்ட விடயம்!
நீக்குதுரை சொன்னப்போவே சொல்லணும்னு நினைச்சு மறந்துட்டேன். அங்கெல்லாம் ஏது இட்லி!
நீக்குஅங்கே இட்லி இல்லாவிட்டாலும்
நீக்குஅது போல வேறொன்று!...
பக்கத்தில் உள்ள பாத்திரத்தில் தெரிகின்றன - உருண்டைகளாய்...
துரை, பக்கத்தில் உள்ள கெட்டில் மேல் வைத்திருப்பவை முட்டைகள்! இட்லி அல்ல! :)))))
நீக்கு>>> சென்ற வாரம் மாருதி வேனில் சூப்பர் மார்க்கெட் என்று சொல்லப்பட்ட விடயம்!...<<<
பதிலளிநீக்குசென்ற வாரம் மாருதி வேனில் சூப்பர் மார்க்கெட் என்று சொல்லப்பட்டு - விடுபட்ட விடயம்!...
எவ்வளவு பொறுப்பு!.. பாத்திரங்களின் தூய்மையே அங்கு உண்பதற்கான ஆவலைத் தூண்டுகிறது...
ஆம்,
நீக்கு'விடுபட்ட' விடுபட்டுவிட்டது! விடுபட்டாலும் அர்த்தம் வந்து விடுகிறது. விடுபட்டது பாதிக்கவில்லை இல்லை? விடுங்கள்....!
>>> வந்து விட்டோம் 'அந்த முக்கியமான' இடத்துக்கு!... <<<
பதிலளிநீக்குதங்கும் விடுதி!..சரியா?..
எனக்கு எப்படித் தெரியும்?!! ஹவ் டூ ஐ நோ?!!
நீக்கு//ஹவ் டூ ஐ நோ?!!// - என்ன சமீபத்தில் 'வசூல்ராஜா' படம் பார்த்தீர்களா ஸ்ரீராம்?
நீக்குசூப்பர் மார்க்கெட் + உணவு விடுதிப் படம் சுத்தமாய் அழகாய் இருக்கிறது. ஆனால் உள்ளே என்ன உணவோ என்னும் கவலை மனதை அரிக்கிறது! வடகிழக்கு மாகாணங்களில் உள்ள இந்த உணவுப் பிரச்னையாலேயே (இல்லாட்டி மட்டும் வாழ்ந்ததா? ம.சா.கேள்வி!) அங்கே போக மனம் ஈர்ப்பு இல்லை.
பதிலளிநீக்குபள்ளி செல்லும் பிள்ளைகளின் கள்ளமில்லா அழகு மனதைக் கவர்ந்தது. கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் போகன்வில்லாக்கள் மனதில் அம்பத்தூர் வாழ்க்கையை நினைவூட்டுகிறது. அம்பத்தூர் விடிடுச் சுற்றுச் சுவரில் அவற்றோடு இருந்த படங்களை எங்கேனு தேடணும்! :)))))
பதிலளிநீக்குஅந்த முக்கியமான இடம் சர்ச்சா? படங்கள் எல்லாம் அழகான அருமையான கோணங்களில் எடுக்கப் பட்டிருக்கின்றன. ஒன்றைத் தவிர்த்து! "ரோஜாக்கள்" என்னும் தலைப்பில் உள்ள சிறுவர்களின் படம் மட்டும் நான் எடுத்தாற்ப்போல் இருக்கிறது. :))) மற்றவை அழகு, அருமை!
பதிலளிநீக்கு//நான் எடுத்தாற்போல்//- அப்போ அந்தப் படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லுங்கள் கீசா மேடம்
நீக்குஇனிய ஞாயிறு வணக்கம் அன்பு ஸ்ரீராம், துரை செல்வராஜு,மற்றும் கீதாமா.
பதிலளிநீக்குகுழந்தைகளின் படங்கள் அத்தனையும் அழகு. அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளும் விறுவிறுப்பு.
அப்பாடி வந்து விட்டார்களா. நீண்ட பயணம். பூக்களின் வண்ணம்
மிக அருமை. எத்தனை எத்தனை வண்ணங்கள்.
ஞாயிறு நல்ல படங்களுடன் மொட்டவிழ்த்திருக்கிறது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
இட்லி பானையைத் திறந்தால் ஆவி பறக்கும் இட்லி வருபா?
அது இட்லிப் பானை இல்லை. மோமோக்கள் வேகின்றன என நினைக்கிறேன். இந்தப் பாத்திரத்தின் பெயரே வேறே! மனதில் இருக்கு! யோசிக்கிறேன்.ஆனால் சென்னையிலும் கிடைக்கின்றன.
நீக்குகீதாக்கா அண்ட் நெல்லை அது மோமோ தான். இது மோமோ ஸ்டீமர், இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது என்றாலும் நாம் நார்மலாக இட்லி செய்வது போல் இட்லி தட்டிலும் ஸ்டீம் செய்யலாம்.
நீக்குநான் வீட்டில் செய்ததுண்டு.
இங்கு வீட்டருகில் ஒரு டார்ஜிலிங்க் குடும்பத்தினர் தினமும் மாலையில் மோமோஸ் சுடச் சுட விற்கிறார்கள். சைவம், அசைவம் இரண்டுமே. தனி தனி ஸ்டீமர்களில்...
கீதா
அடைவரையும் அணைத்துக்கொள்ளும் பிரேசில் மாடல் இயேசு சிலை அழகு
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் எல்லோருக்கும்...
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் பூத்துக் குலுங்குவது போல்!
மாருதிவேன் போன வாரம் போட்ட மொபைல் உணவகம் இன்று கடை விரிச்சாச்சு போல!!!! சூடான இட்லி தோசையா கிடைக்கப் போகுது!!! என்னவா இருக்கும் சாப்பாடுனு நினியக்க..ஹா ஹா ஆனா சுத்தமா இருக்கு..
கீதா
எல்லோருக்குமே இட்லி தான் நினைவு! சரியான இட்லி ரசிகர்கள்! முன்னெல்லாம், அதாவது கல்யாணத்துக்கு முன்னாடியும், அப்புறமும் சில வருடங்கள் எனக்கு இட்லி என்றாலே எரிச்சலும், கோபமும் வரும். அதை மறைத்துக் கொண்டு தான் பண்ணுவேன். அம்மா எனக்கு மட்டும் தனியாக இலுப்பச்சட்டி தோசை வார்த்துக்கொடுப்பா! அதெல்லாம் நினைவில் வந்து தொலைக்கும். இப்போல்லாம் இட்லி கிடைச்சாலே போதும்னு மனதைத் தேத்திக் கொண்டு விட்டேன்! :))))))
நீக்குபின்னர் வருகிறேன் மற்ற படங்களுக்கு...
பதிலளிநீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குமுதல் படத்தில் பாத்திரங்களின் சுத்தம் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஸ்டவ் இன்னும் பற்றவைக்கவில்லையோ!
காற்றில் தீ வேகமாய் பரவி பாத்திரத்தை கரிபிடிக்க வைக்கும் . சாலை ஒரத்தில் இருக்கும் தேயிலை கடையில் கெட்டில் கரி படிந்து இருப்பதை பார்த்து இருக்கிறேன் வட நாட்டில்.
கோமதி, அது ஸ்டவ் அல்ல! கொய்லா எனப்படும் (கல்கரி) நிலக்கரி, பத்தர் கி கொய்லா என்பார்கள் வடக்கே எல்லாம். அவை போட்டுச் சமைக்கின்றனர் பெரும்பாலும். புகை எல்லாம் வராது. சீக்கிரமும் ஆகும். அங்கெல்லாம் காற்று மிகுதியால் பற்ற வைத்த உடனே வேகமாகச் சமைக்கலாம். மூன்றுமே அந்த அடுப்புகள் தான்! இதில் கரி பிடிக்காது!
நீக்குநீங்கள் சொன்ன பிறகுதான் பார்த்தேன் மீண்டும் கரி அடுப்பை.
நீக்குநன்றி கீதா தகவலுக்கு.
பள்ளி செல்லும் குழந்தைகள் படம் அழகு.
பதிலளிநீக்குபை எங்கே பாப்பா ? பள்ளி விட்டு வீட்டில் பையை வைத்து விட்டு சீர் உடையுடன் கடைக்கு வந்து இருப்பாளோ அந்த குழந்தை?தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட. கையிலும், வாயிலும் ஏதோ இருக்கே!
வாருங்கள் குழந்தைகளே! என்று அன்பாய் அழைக்கும் ஏசுவின் படம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாருங்கள் விருந்தினர்களே என்று கை விரித்து அனைவரையும் அழைத்து அணைப்பது போல் உள்ள ஜீஸஸ் ஸை நான் எங்கள் பள்ளியில் பார்த்திருக்கிறேன். மேரி மாதாவும். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் பள்ளிக்குள் செல்லும் போதும் காலேஜிற்குள் செல்லும் போதும் வணங்கிவிட்டுச் சென்றதுண்டு.
பதிலளிநீக்குஇப்போதும் வணங்கினேன் ரசித்தேன்...இது கடைசியில் போட்ட சிறப்பும் அதாவது எபி வாசக அன்பர்கள் அனைவரையும் வரவேற்று அணைத்துச் செல்வது போன்ற அர்த்தமும்....
சூப்பர்!!
கீதா
படங்களே கவிதையாய்,,,/
பதிலளிநீக்குமரங்களில் பூத்திருக்கிற மலர்களும் கைகால் முளைத்த
நீக்குபுஷ்பங்களாய் நகர்ந்து செல்லும் மலர்ச்செடிகளும்,,,/
பூக்கள் அழகு
பதிலளிநீக்குகடைசி படத்தின் வசனத்தை ரசித்து சிரித்தேன் ஜி
குழந்தைகளின் படங்களும், அதற்கான வாசகங்களும் அருமை. கை விரித்து விடுதிக்கு வரவேற்கிறாரா ஏசு நாதர்?
பதிலளிநீக்குகுழந்தைகளின் படம் ரொம்ப அழகாக இருக்கிறது. பூக்களும் தான் வயலட் பூ...எல்லாம்
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇவ்வார படங்கள் அருமையுடன் அழகாகவும் இருக்கின்றன. முதல் படம் பாத்திரங்கள் பளிச்சிடுகின்றன. காஃபி போன்ற பானத்தை தயார் செய்ய ஆயுத்தமாகிறாரோ..? உணவை (இட்லி மாதிரிதான் இருக்கின்றது.) வைத்துக் கொண்டு கேட்பவருக்காக வேறு எதையோ தேடுகிறார் போலும்.
பெரிய மரங்கள், அதை விட கண் கவர் பூக்கள் அழகு. பூப் போன்ற ஒவ்வொரு குழந்தைகளும் மிக மிக அழகு.
பையை தனியே விட்டு வந்த குழந்தை தங்கள் தலைப்புக்கு உதவியாக இருந்திருக்கும் நோக்கத்தில்தான், தான் விட்டு வந்த பையை பற்றிய நினைவின்றி ஜாலியாக இருக்கிறார் போலும்...
கண்ணாடியில் தெரிபவரை, "ஹாய்" எனும் போதே அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று பார்த்தால்,யாரென்று கண்டு பிடிக்க முடியாமல் முகத்திற்கு நேராகவே கையசைத்து விட்டார். ஹா ஹா.
முக்கியமான இடத்திற்கு வந்தவர்களை அன்புடன்தானே வரவேற்க வேண்டும். பொருத்தமானவர்தான் வரவேற்கிறார். அன்புக்கு அடையாளம்.அனைத்தும் அருமை பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
குழந்தைகளின் படங்களும் அழகு...
பதிலளிநீக்குவணக்கம்....
பதிலளிநீக்குஅழகான படங்கள்....
பள்ளிச் சிறார் படங்களும் நாட்டு நடப்பும் அருமை
பதிலளிநீக்குகேஜிஎஸ்- இன் கேமரா இந்த முறை சரியாகப் ’பார்த்து’ வேலை செய்திருக்கிறது! லோக்கல் குழந்தைகளின் படங்கள்..
பதிலளிநீக்குபடங்களும் வாசகங்களும் அருமை. மழலை மொட்டுகள் மனதைக் கவருகிறார்கள். பூத்துக் குலுங்கும் மலர்கள் அழகு.
பதிலளிநீக்குஅதெப்படி பை இல்லாமல் பாப்பா பள்ளிக்குச் செல்வார் :)? படம் எடுத்த கோணத்தில் பையின் பெரும்பாகம் மறைந்து விட்டது, அவ்வளவே. குழந்தையின் வலப்பக்கம் முதுக்குப் பின்னால் பை தொங்குகிறது. இடது கையில் பென்சில். வலது கையால் பையினுடைய ஸ்ட்ராக் முனையை முறுக்கிப் பிடித்தபடி ஸ்டைலாக நடை போடுகிறார் பாப்பா! படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.
*ஸ்ட்ராப்
பதிலளிநீக்குஇரு குழந்தைகளின் தோளிலும் பை பின்னால் தொங்குவதின் அடையாளம் தெரிகிறதே!
பதிலளிநீக்குராமலக்ஷ்மி சொன்னபிறகு பார்த்தேன் ஸ்ட்ராப் தெரிகிறது தோளின் ஓரம்.
பதிலளிநீக்குஆம்... பை தெரிகிறது என்பதை கவனித்தும்தான் நான் அப்படித் தலைப்புக்கொடுத்தேன். அதை கவனித்து முதலில் சொன்ன ராமலக்ஷ்மிக்குப் பாராட்டுகள். யார் கிட்ட? அவரிடம் ஏமாற்ற முடியுமா?
பதிலளிநீக்கு"உன் கண் உன்னை ஏமாற்றினால் டடடா டடடா டடடா" பாடல் நினைவுக்கு வருகிறது!
:))!
பதிலளிநீக்கு