சனி, 29 ஜூன், 2019

சுமித்ராவின் மகன்கள் - நக்கீரர்கள் மேயும் இடம்


1)  ".......எவ்வளவு மழை பெய்தாலும் புயல் அடித்தாலும் வேலைக்கு வராமல் இருந்தது இல்லை, கூட்டிப் பெருக்கும் வேலை என்றாலும் அதிலும் நேர்த்தியாக உழைத்தவர் இவர் இருக்கும் இடத்தில் ஒரு குப்பை கூளத்தை பார்க்க முடியாது அதிகம் பேசாதவர் ஆனால் அசராத உழைப்பாளி கடமையில் அர்ப்பணிப்போடு இருந்திருக்கிறார்; எந்த ஒரு புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவரைப் போல ஒரு தொழிலாளி கிடைப்பது அபூர்வம்'' என்று நகராட்சி நிர்வாகிகள் மனம் திறந்து பாராட்டி பேசிக்கொண்டு இருந்தனர்.




அப்போது கண்களைத் துடைத்தவாறு கலெக்டர் பேச ஆரம்பித்தார்.
கலெக்டராகிய நானும் இந்த என்ஜீனியரும் இந்த டாக்டரும் மூவரும் ஒரே வயிற்றில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பிகள்.  எங்களைப் பெற்றெடுத்த தாய் யாரோ அல்ல.. இதோ உங்கள் முன் நேர்மையான துப்புரவு தொழிலாளியாக பெயர் எடுத்து நிற்கிறாரே சுமித்ரா தேவி அவர்தான் எங்கள் தாய்...."



3) மறுபடியும் தவிர்க்க முடியாமல் ஒரு தண்ணீர்க்கதை.  ஆமாம் 250 அடி, முன்னூறு அடி என்றெல்லாம் ஆழத்தை அதிகப் படுத்திக்க கொண்டே போகலாமோ?




5)  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்திராம்பட்டு அரசு துவக்கப் பள்ளியில், போதிய ஆசிரியர்கள் இல்லாததால், கிராமத்து பெண்களே, பாடம் நடத்தி, அசத்தி வருகின்றனர்.  இக்கிராமத்தைச் சேர்ந்த மற்றும் வெளியூர்களில் இருந்து, மருமகள்களாக வாழ வந்துள்ள, படித்த பெண்கள் நான்கு பேர், ஊதியம் ஏதுமின்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இவர்கள், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மாற்றி, மாற்றி வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.  இக்கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர் தங்கவேலன் என்பவர், உடற்கல்வி ஆசிரியராகவே மாறி, மாணவர்களுக்கு, தினமும் உடற்பயிற்சி கற்றுத் தருவதுடன், விளையாட்டு போட்டிகளிலும் ஈடுபடுத்தி வருகிறார்.... 




அரசு என்ன செய்கிறது? என்று கேட்கக்கூடாது. நாம்தானே அரசு.


7)  இலவசமாகக் கொடுக்கும் எதற்கும் மதிப்பில்லைதான்.  எனினும்...

"..................சென்னையில் பணியாற்றிய இவர், ஒராண்டுக்கு முன், மணப்பாறைக்கு மாறுதலாகி வந்தார்.இங்கு வந்தது முதல், போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தினமும், சாலையோரத்தில் நடத்தி வருகிறார். மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.'தலைகவசம் உயிர் கவசம்' என, நேற்று முன்தினம், தன் சொந்த செலவில், இருசக்கர வாகன ஓட்டிகள், 50 பேருக்கு, இலவசமாக, ஹெல்மெட் வாங்கி வழங்கியுள்ளார்...................




9)  "..................இதையடுத்து, தனி ஆளாக நடவு செய்ய, ராஜலட்சுமி முடிவு செய்தார். அவர் மட்டும், மூன்று நாட்களில், 1 ஏக்கர் நிலத்தில், நெற்பயிர்களை நடவு செய்தார். மாணவியின் இந்த செயலுக்கு, அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வெகுவாக பாராட்டினர்............."

தஞ்சை அருகே, 1 ஏக்கர் நிலத்தில், தனி ஆளாக, நெற்பயிரை நடவு செய்த கல்லுாரி மாணவிக்கு, பாராட்டுகள் குவிந்துவருகின்றன.




=====================================================================================================

கடந்த வார - 22-6-19 முதல் 28-6-2019வரையிலான பதிவுகளின் விமர்சனம்... 



எங்கள் ப்ளாகின் வார விமரிசனத்தில் இன்று என்பங்கு.  என்னிடம் விமரிசனம் எழுதக் கேட்கும் ஸ்ரீராமுக்கு நிறையவே தில். 'குண்டக்கா மண்டக்கா' என்று ஏதாவது எழுதி பெயரை (அப்படி ஒன்று இருந்தால்) கெடுத்துக்கொள்ளாதே'  என்று உள்மனம் சொன்னாலும்  நான்  நானாகத்தானே இருக்க முடியும்

சனி 22-06-2019  பாசிடிவ் செய்திகள் 

பெரும்பாலும் தினமலர் பத்திரிகை உபயம். இம்மாதிரி பாசிடிவ் செய்திகள் ஏதாவதுபலன் தருகிறதா?  நல்லது நினைப்பவர்கள் எங்காவது நல்லது செய்து கொண்டுதான்  இருக்கிறார்கள்.  அதை வாசகப் பெருமக்களுக்கு  எடுத்துச்செல்கிறது எங்கள் ப்ளாக். அல்ஜிமர் வியாதியால்  கஷ்டப்படும் பலருக்கும் உதவி செய்கிறது பாலக் காட்டில் இயங்கும் காருண்யா இல்லம் அது பற்றி நான் ஒருபதிவு எழுதி நண்பர்கள் உதவி கோருகிறது அந்நிறுவனம்  என்று எழுதி இருந்தேன்.  தேவைப்பட்ட டிடெயில்ஸை  கொடுத்திருந்தேன். 

ஆனால், அலாஸ்...! ஒருவர்கூட உதவ வில்லை. படிக்க நன்றாக இருக்கும்   பலசங்கதிகள்  நம்மால் பின்பற்ற முடிவதில்லை.  இருந்தாலும்   நல்லநிகழ்வுகள் எங்கோ நடக்கிறதுஎன்பது மகிழ்ச்சி தரும் செய்தியே. தண்ணிர் பற்றக்குறை என்பது ஒரு சீசனல் செய்தியாகி விட்டது. தொலைக்காட்சிகளில்  நீருக்காக அலையும் மக்களை நோக்கும் போது  பெரும்பாலும் அடிமட்ட பிரஜைகளாகவே இருக்கிறார்கள்.  ஓரிரு குட நீருக்காக  அலைபவருக்கு  அது போதுமா என்பதே பெரிய கேள்விக்குறி!  அவர்கள் பலரும்  ஒரு மிஸ்ட் கால் தராதவர்களோ? ஒரு  பிரபல சினிமா பெரியவர் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால் நதிகளை இணைக்கும்பணி நிறைவேறலாம் என்று சொன்னது ஏனோ இப்போது நினவுக்கு வருகிறது.  எந்த நல்ல  செய்தியும்  டோக்கனிசமாக இருக்கலாமா  என்னும் கேள்வியோடு இன்றைய விமரிசனம்  நிறைவு பெறுகிறது

ஞாயிறு  23-06 – 2019

 இன்றைய எங்கள் ப்ளாகில்விமரிசனம்செய்யும்படி எனக்கேதும்  தெரிய வில்லை.  புகைப்படங்களின்  அணிவகுப்பு. ம்யூசிய விசிட்.  இதில் இருக்கும்படங்கள் நெஞ்சில் நீங்கா நினைவாய் இருக்குமா?  படம் எடுக்கும் போது இன்னும் சில விளக்கங்கள்  தேவைப்படலாம். வில் அம்புடன்  உண்டி  வில்லும்   உபயோகப்படுத்தியதை பெருமையுடன் பேசிக்கொண்டே இருக்கிறோமா நாம்?   பின்னூட்டங்கள் வழக்கம் போல்  வாட்ஸாப்  நிலையிலேயே இருக்கின்றன. ஏதோ ஓரிருவர் கருத்து சொல்லி இருக்கிறார்கள். ஊக்கப்படுத்தவேண்டியதுதான். ஆனால்……..  அதற்காக  குறை என்று தோன்றுவதைச் சொல்லக் கூடாதா?  பின்னூட்டங்கள் ஏதோ வருகைப்பதிவேடு போல் இருக்கிறதே..

திங்கக் கிழமை  24-06-2019

இன்று  திங்கக்  கிழமை என்னும் நினைவே இருக்கவில்லை. தில்லையகத்து கீதா சமையல் குறிப்புகளுக்காகக் கூடவே மெனக்கெடுகிறார்.  தானாக செய்ததைச் சொன்னால் யாராவது குறை கூறுவார்களோ  என்னும் சந்தேகத்தில் எல்லோரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் செய்வதுபோல் ஒருபாவனை! என்ன செய்ய! யாரும் குறை சொல்லக் கூடாது இல்லையா? ஆனால் இன்றைய விமரிசனம் வேறு மாதிரி அமைந்து விட்டது. வெண்டைக்காயை லேடிஸ் ஃபிங்கர் என்பார்கள்.  லேடிஸ் ஃபிங்கர்  மிருதுவாக சன்னமாக இருக்கும் என்பதை குறிப்பது. அம்மாதிரி வெண்டைக்காய்கள்கிடைப்பது கடினம்.  கடைகளில் ஒடித்துப் பார்க்கவிடமாட்டார்களே!
 திங்கக் கிழமை யில் வரும்சமையல் குறிப்புகள் பலரும் செய்துபார்த்து இருப்பர்.  வித்தியாசமாக, பலரும்   செய்து பார்க்காத,  சமையல் குறிப்புக்காக காத்திருக்கிறேன் ஒரு சினிமாவில் வந்த வசனம்  நினைவுக்கு வருகிறது  ஒருவர் ஒன்று சொல்வார் மற்றவர் /அதுதான் தெரியுமே/ என்பார்...
  
வெண்டைக்காய்
 – ¼ கிலோ
கொத்தமல்லி விரை  ஒரு டேபிள் ஸ்பூன் (படத்துல அந்த தட்டுல இருக்குப் பாருங்க..அந்த ஸ்பூன்) (இதைப் பொடியாகவும் போடலாம்)

 ஓ அப்படியா அதான்  தெரியுமே

ஜீரகம் – ½ டேபிள் ஸ்பூன் (இதையும் பொடியாகவும் போடலாம்)
சிவப்பு மிளாகாய் தூள் – 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்  

ஓ இதுவும் தெரியுமே

கொப்பரை – துருவியது ¼ கப் அல்லது தேங்காய் துருவியது ¼ கப் அதை கொஞ்சம் லைட்டாக வறுத்து ஈரம் கொஞ்சம் போனால் போதும். 
கறிவேப்பிலை 3, 4 குச்சி இலைகள் – (இது கொஞ்சம் ட்ரையாக இருந்ததால் பொடித்துக் கொண்டுவிட்டேன். அதைப் படம் எடுக்காமலும் விட்டுவிட்டேன். 
உப்பு – தேவையானது. உப்பு போடணும் அல்லவா 

அதுவும்  தெரியுமே

ஒரு எலுமிச்சம் பழம். (தேசிக்காய்) இதோ எல்லாம் நாங்கள் எடுத்து வைச்சாச்சு  
தெசிக்காய் 

இது என்ன தெரியலையே (அடுப்பங்கரையில் பூனை இருக்க வேண்டுமா  தெரியாதே.....

25-06 – 2019  கேட்டு வாங்கிப் போட்டகதை

கதை கீதாரெங்கனுடயது என்றதுமே சில நல்ல வார்த்தைகள் சொல்லலாமே என்று நினைத்தேன்.   தில்லையகத்து கீதாவுக்கு எதையும் ஷார்டாக  ஸ்வீட்டாக  சொல்லத் தெரியுமா என்பதே என் சந்தேகம்.  படிக்கும் போதே சரியான இடியாப்ப சிக்கல் போல் இருக்கிறதே என்று தோன்றியது நிஜம். கதைகளில் பல வகை உண்டு. அதெல்லாம் கதாதசிரியரின் கற்பனையை  பொறுத்தது.  கதை என்றால், ஒரு துவக்கம், நடுவு,  பின் ஒருமுடிவு என்று இருக்க வேண்டும் என்று தள வாசகர்களில் ஒருவர் சொன்ன நினைவு.  கதையைக் கொண்டுபோக சிரமப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.  

அந்த மாதிரி நேரங்களில் ஸ்ரீராமின்  கவிதைகள் கை கொடுத்து இருக்கிறது என்றே தோன்றுகிறது.  பொதுவாக காதல் என்பது பெண்களுக்கு ஒரு நாவல். ஆண்களுக்கு ஒரு அத்தியாயமென்பார்கள். ஆனால் இக்கதையில் நேர்மாறாக இருக்கிறது.  கீதா விமரிசனம் பாசிடிவாக இருக்கவேண்டுமென்று விரும்புவார். நான் சொல்லி இருப்பதெல்லாம் அது நோக்கி எழுத முனக்கும் என்றே நம்புகிறேன். நண்பர் விஜி தேவைக்கு மீறி ஒருவார்த்தை கூட இருக்கக் கூடாது என்பார்.  அது கவிதைகளுக்குப் பொருந்தலாம்.  

ஆனால் கதைகள் அப்படி அல்ல. வாசகர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நெல்லை தமிழன் சொன்னதுபோல் கதையில் ஒருமுதியவர் ஆற்றங்கரையில் அமர்ந்திருப்பது போல் படம்  மிஸ்ஸிங். எனக்கு என்னவோ கீதா அதே படத்துக்கு இரண்டு மூன்று கதைகள் எழுதி வைத்திருப்பார் போல தோன்றுகிறது.  அதில் இதுவும் ஒன்றாயிருக்கலாம்.  அறுபது வயது என்பது ஒரு வயசல்ல! ஏனோ தெரியவில்லை, அறுபது வயதுக்காரர்களை மிக வயதானவர் போல் எண்ணுகின்றனர்.

26-06 -2019 பேய்க்கவிதைகள்

 எங்கள் ப்ளாகின் தினங்களில் கேள்விகளுக்கு பதில் கொண்டது யார் எப்போது கேள்விகள் கேட்கிறார்களென்றே எனக்குத் தெரியவில்லை. 
கேள்வி கேட்பவர்கள் தனக்கு பதில் தெரியாததால் கேள்விகள் கேட்கிறார்களா,  பதில் சொல்பவர் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து பதில் தருகிறாரா?  பள்ளிகளில் கேள்வி கேட்பவருக்கு ஏதோ பதில் தெரிந்திருக்கும்.   விடை கூறுபவர் தான் நினைத்ததை பதிலாகக் கூறுகிறாரா  என்று சோதித்துப் பார்ப்பார்கள. 

பகுப்பாய்வு செய்வதெல்லாம்  நடக்கிறதா?  ஏதோ டைம்பாஸ்...   நிறைய கற்பது உபயோகப்படாமல் போகிறது. வலைத்தளமே ஒரு தமாஷ்ஆகிப் போகிறது.  எல்லாமே நகைச்சுவைதானா? மனதில்  பட்டதைச் சொன்னால் சிலர் வருந்துவார்கள். ஆகவே எதையும் கண்டும் காணாமல் போவதே  நல்லது என்னும்  கொள்கையே  வலைத்தளங்களில்  காணப்படுகிறது.  பதில்  கூறுபவர்
 / கேட்கப்படும் எந்த  ஏன் கேள்விக்கும் பொய்யான பதில்கள் கூடாது.  'ஏன் ஏன் பகுப்பாய்வு'  உங்களுக்கு நீங்களேசெய்துகொள்ளும் சுய பரிசோதனைஆகவே உங்களை நீங்களே கேள்வி கேட்டுஉண்மையான பதில்கள் கூறிநிகழ்வின் மூலகாரணத்தை அறிந்துகொள்ளுங்கள்
நாம் எங்கோ உடோப்பியவில் இருக்கிறோமா  
வலைத்தளங்களில் இருந்து  யாராவது கற்கிறார்களா? நிறையவே நக்கீரர்கள் மேயும் இடமல்லவா?  நானும் அப்படித்தானோ?  அப்படித்தான் தோன்றும் பலருக்கும்.

 27=06- 2019 பல்லிக்கு ஒரு கவிதை 

நைமிசாரண்யம் என்பது பற்றி குறிப்புகள் பல...  108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்று என்பதை அறியும்போது  இம்மாதிரி பாடல்களை எழுதிய வைணவ பெரு மக்களுக்கு  குருவாயூர் தெரியாதது  ஆச்சரியமே. அயோத்தி அருகே இருக்கும் நைமிசாரண்யத்துக்குப்போய் பாடல்கள் புனைந்தவர்கள்  அருகில் இருக்கும் குருவாயூர் பற்றிக் கூறாததால் அது பாடல் பெற்ற தலமாக வில்லை.  வாட் எ பிட்டி!  கோவில்களைச் சுற்றிய இடங்களில் இயற்கை உபாதைகளைத் தணித்துக் கொள்ளும் இடங்களில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமியின்   கோவில் மதிலைச் சுற்றியுள்ள இடம் முதலாவதாக இருக்கும்.  'ஏண்டா வந்தோம்?' என்று ஆகி விட்டது எனக்கு.  ஆண்டு 1970 என்று நினைவு.

/    நான் எல்லா சன்னதிகளிலும் பத்து ரூபாய் போட்டேன்.  பத்திரிநாதர் அருளாய் பிரம்படியும் வாங்கிக்கொண்டேன்வாங்கிக்கொண்டோம்!இங்கு தீர்த்தமாடிய பின்தான் லலிதா தேவியைத் தரிசிக்கச் செல்லவேண்டும் /

வட இந்தியக் கோவில்களுக்குப் போனால்  இந்த தர்ம அடி  உண்டுபோல்  தெரிகிறது.  காசியில் பைரவர் சந்நதியில் அடிக்க வந்த பண்டாவைத் தடுத்துவிட்டேன்.   பாவம் என் அண்ணா...  அடியும் வாங்கி பணமும்  கொடுத்தார்.

கோமுகி அல்லது கோமதி நதி ஆழம் இல்லையா?  குளிக்க முடிந்ததா?

28-06-2019 வெள்ளி வீடியோ

 இன்றைக்கு ஸ்ரீராமை பாராட்டியே தீருவது என்று இருக்கிறேன்.   பின்னேஎன்ன?  சும்மாவா? இணையத்தில் மேய்ந்து பலரும் கேட்காத

 பாடல்களை போடுவது...  அதற்கும்  பாடல் தவிர அக்கப்போர் புரியும்  வாசகர்கள், யார் யார் என்றும், அவர் சரித்திரம் என்னவென்றும்,  பலரும் அறிந்திராத தகவல்கள்!  சும்மாவா? காரண கர்த்தாவைப் பாராட்ட வேண்டும்தானே...?

80 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்... வாங்க... வாங்க...

      இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. இன்றைய பதிவுக்கு வரேன் இருங்க முதல்ல நேற்றைய பதிவில் வந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை அதான் பானுக்கா அப்புறம் அதுக்குப் பதில்னு நிறைய கொடுத்திருக்காங்களே அதை இப்பத்தான் வாசிக்கிறேன்...ஸ்ரீராம் அதனால அதை முடிச்சுட்டு இங்கு வருகிறேன்..

      கீதா

      நீக்கு
    3. சரிதான் காலையில் பழையதா?!!

      நீக்கு
    4. ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பழையதும் சுவை மிக்கதாக்கும்!!!!!!

      கீதா

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... நல்வரவும் வணக்கமும்.

      நீக்கு
    2. அக்கா ஏகாந்தன் அண்ணா ஏற்கனவே எழுதியாச்சே..

      கீதா

      நீக்கு
    3. ஆரம்பத்தில் "குண்டக்கா மண்டக்கா"வைக் கவனிக்கலை. அதைப் பார்த்தே புரிஞ்சிருக்கணும். அ.வ.சி.

      நீக்கு
  3. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்த வார விமரிசனம் யார் என்பதுக்குப் பரிசு உண்டோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா விமர்சனம் ஜிஎம்பி ஸார்

      கீதா

      நீக்கு
    2. grrrrrrrrr......டிபிகல் தமிழ்நாட்டு பிரஜை அக்கா நீங்கள்.. எல்லாத்துக்கும் பரிசு கேக்கறீங்க!

      நீக்கு
    3. முழுசும் படிச்சதும் தான் ஜிஎம்பி சார் எனப் புரிந்தது. ஏகாந்தன் விமரிசனம் எழுதியது மறந்து போச்சு! உம்மாச்சி பத்தியும் நைமிசாரணியத்தைப் பத்தி எழுதி இருப்பதையும் படிச்சதும் ஜிஎம்பிசார்னு புரிஞ்சது.

      நீக்கு
    4. ஒரு காலத்தில் எ.பி. போட்டி வைச்சுப் பரிசும் கொடுத்துக் கொண்டிருந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்! :P:P:P:P

      நீக்கு
    5. ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் சிரித்துவிட்டேன்....

      கீதாக்கா குயந்தை....ஊக்கப் பரிசுதான் கேக்கறாங்க இல்லையாக்கா ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    6. கௌ அங்கிள் வந்து பத்தாயிரம் புள்ளிகள் ஊக்கப்பரிசு கொடுப்பார்.. வெயிட் ப்ளீஸ்!

      நீக்கு
    7. ஹா ஹா ஹா நூறு பாயிண்டுகள்தான் !

      நீக்கு
    8. ஹை கௌ அண்ணா அந்த 100 பாயிண்டுகள் எனக்குத்தானே!!!!!!!!!!!!!!!!!!! எனக்கேதான்!!!

      கீதா

      நீக்கு
  4. ஜி எம் பி ஸார் என் பதிவுகளுக்கு உங்கள் விமர்சனத்திற்கு மிக்க மிக்க நன்றி சார்.

    நான் மீண்டும் மீண்டும் சொல்லுவது நான் பாசிட்டிவ் என்று சொல்லுவது எதிர்மறைக் கருத்துகள் சொல்லக் கூடாது என்று அல்ல. எதிர்மறைக் கருத்துக்களையும் சொல்லலாம். அதைச் சொல்லும் விதத்தில் சொல்ல வேண்டும் என்பதே.

    நாம் ஆஹா ஒகோ என்று புகழ வேண்டிய அவசியம் இல்லை சார். ஆனால் சொல்லும் வார்த்தைகள் மிக மிக முக்கியம்.

    //இப்படி எழுதுவதை விட நீ இப்படி எழுதிப் பார்க்கலாமே....இதை இப்படிச் சொல்லலாமே கொஞ்சம் மாற்றிப் பாரேன் உன் ஸ்டைலை நீ இப்படிச் செய்தால் இன்னும் மிளிரும்..//..இப்படியான வார்த்தைகளில் மறைவில் இருப்பது நீங்கள் சொல்லும் விமர்சனம் தான். ஆனால் ஊக்கம் தரும் வார்த்தைகள்.

    இதெல்லாம் நான் என் மகனுக்காகப் பின்பற்றியது. அவன் மிக மிக கஷ்டப்பட்டான் படிப்பதற்கு. பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி. அப்படிக் கற்றுக் கொண்டதுதான் சார் மனித உளவியல்.

    மிக்க நன்றி ஜி எம் பி சார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      எனக்கு எண்ணிக்கை விட்டுப் போய் விட்டதா. 9 எண்கள்
      போட்டிருக்கு.
      முதலில் சுமித்ரா தேவி,2, பிறகு திருக்கோவிலூர் தண்ணீர் பம்ப்,
      3, ஹெல்மெட் கொடுத்தவர்,
      4, ஒரு ஏக்கரில் தனியே நாற்று நட்ட சின்னப் பெண்.
      பிறகு ஜி எம் பி சார் விமர்சனம்.
      எல்லாமே மிக நன்றாக இருந்தது. இதோ செக் பண்ணிட்டு வரேன்.

      நீக்கு
    2. முடிவே பண்ணிட்டீங்களா கீதா ஜி எம் பி ஸார் என்று?!

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம். நன்றி.

      நீக்கு
    4. யெஸ் ஸ்ரீராம்....

      எழுத்து காட்டியது. ஸார் என்னைப் பற்றி அடிக்கடி சொல்லும் கருத்துகள், என் பதிவுகள் வெளியாகும் போது அவர் இடும் கருத்துகள் க்ளூ.,

      இரண்டாவது...குறிப்பாக அந்தக் காருண்யா இல்லம் மிகப் பெரிய க்ளூ...

      கீதா

      நீக்கு
    5. அப்புறம் எபியில் பிற பதிவுகளுக்கு வரும் ஸாரின் கருத்துகள் - புதன், வியாழன் - எல்லாம் ஜி எம் பி சார் தான் என்று சொல்லுகிறது

      கீதா

      நீக்கு
    6. ஸார் என் கருத்தை தவறாக நினைக்காதீங்க சார். அதற்குக் காரணம் என் சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களும் காரணம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை. என்னுடன் வளர்ந்தவர்கள் - 9 பேரும் - எல்லோருமே ரேங்க் ஹோல்டர்ஸ். நான் மட்டுமே படிப்பில் வீக். குறிப்பாகக் கணக்கில். அப்புறம் ஃபிஸிக்ஸில். எனவே என்னை பெரியவர்கள் எல்லோரும் லாயக்கற்றவள், படிப்பு ஏறலை முட்டாள் என்றுதான் சொல்லுவாங்க. அதுவும் சாதாரணமானவை அல்ல. ஒருவரின் மனதை அதுவும் ஒரு குழந்தையின் மனதைக் கீறிப்பார்க்கும் அளவிற்கு. எனக்குத் தாழ்வு மனப்பான்மை மிகவும் அதிகரித்தது. அது இன்னும் என்னை பாடங்களில் ஃபெயிலாக வைத்தது. என்னை அந்தத் தாழ்வுமனப்பான்மையில் இருந்து மீட்டெடுட்தது என் பள்ளி ஆசிரியைகள் மேரி லீலா மற்றும் ஸ்டெல்லா மேரி ஆசிரியைகள். அதன் பின் தான் என் படிப்பில் கிராஃப் ஏறியது. கல்லூரியில் சிறப்பாகச் செய்யவும் முடிந்தது. அங்கும் எனக்கு ஆசிரியைகள் ஊக்கம் கொடுத்தனர். அப்போது கற்றுக் கொண்ட உளவியல் பாடங்கள் சார். யார் மனதையும் சுருங்க வைக்காமல் அவர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்பது.

      அனுபவங்கள் நமக்கு நிறையப் பாடங்கள் கற்றுத் தரும் சார். அதனால்தான் நான் அப்படிச் சொன்னது.

      கீதா

      நீக்கு
    7. ஸார் என்னைப் பற்றி அடிக்கடி சொல்லும் கருத்துகள்,//

      சாரி!. என்னைப் பற்றி என்று தவறாக வந்துவிட்டது. மன்னிக்கவும். என் எழுத்துகள் பற்றி, நான் சொல்லும் கருத்துகள் பற்றி என்று வந்திருக்கணும்...இப்பத்தான் கவனிச்சேன்...

      கீதா

      நீக்கு
  5. வெள்ளிக் கிழமை பதிவுகளைப் பாராட்டியது சூப்பர் சார்...ஆமாம் ஸ்ரீராமின் உபயத்தால் நானும் பல பாடல்கள் கேட்கிறேன் அதுவும் அறிந்திராத பல பாடல்கள். ஸ்வாரஸ்யமான டே...நேற்று கூட செம தகவல்கள் ...இனிதான் பார்க்கணும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் பாசிட்டிவ் செய்திகளில் இரண்டாவது நம்பரைக் காணவில்லையே. மிஸ் ஆகிடுச்சா? முதல் செய்தி அப்படியே செய்தியோ லிங்க் இல்லை போலும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிங்க் இப்போ கொடுத்துட்டேன் கீதா... ஸாரி... மிஸ் பண்ணியிருக்கேன்.

      நீக்கு
  7. கலெக்டராகிய நானும் இந்த என்ஜீனியரும் இந்த டாக்டரும் மூவரும் ஒரே வயிற்றில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பிகள். எங்களைப் பெற்றெடுத்த தாய் யாரோ அல்ல.. இதோ உங்கள் முன் நேர்மையான துப்புரவு தொழிலாளியாக பெயர் எடுத்து நிற்கிறாரே சுமித்ரா தேவி அவர்தான் எங்கள் தாய்.,,,"
    //

    மனம் அப்படியே நெகிழ்ந்துவிட்டது ஸ்ரீராம்.

    சுமித்ரா தேவி அன்னைக்கு வணக்கங்கள்! மெய் சிலிர்த்தது..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஜி எம் பி சார் இப்படியானவர்களைப் பற்றி வாசிக்கும் போது மனது எப்படிச் சந்தோஷப்படுகிறது இல்லையா. மற்றொன்று பலரும் வலது கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்ரு நினைத்து உதவலாம் இல்லையா..நீங்கள் வெளியிட்ட அந்த இல்லத்திற்கு உதவுபவர்கள் இருக்கலாம் ஆனால்.வெளியில் சொல்லாமல்...சொல்ல விரும்பாமல் இருப்பவர்களூம் இருக்கலாம் இல்லையா

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ புத்ராம்பட்டுப் பெண்கள் விட்டுப் போச்சோ. மிகவும் பாராட்டுக்குரிய
      விஷயம். விளையாட்டுப் பயிற்சி கொடுக்கும் ராணுவ வீரருக்கும் வாழ்த்துகள்.

      சுமித்ரா தேவியைப் பார்த்து வியக்கத்தான் முடிகிறது.
      அபூர்வப் பிறவி. மூன்று பிரசித்தி பெற்ற மகன்கள்
      இருந்தும் வேலை செய்திருக்கிறார்,அதுவும் துப்புரவுப் பணியில்
      என்றால் மஹாத்மாவுக்குச் சமம்.

      திருக்கோவிலூர் இளைஞர்களைப் பார்த்து மிகவும்
      பெருமையாக இருக்கிறது . இவர்கள் போல் ஒரு மாவட்டத்துக்கு நாலவர் இருந்தால்
      போதுமே.

      இந்தத் தஞ்சைப் பெண்ணுக்குத்தான் என்ன உரம். தனியாளாக
      ஒரு ஏக்கரில் நாற்று நட்டிருக்கிறாரரே. வளமுடன் வாழ வேண்டும்.

      நீக்கு
    2. ஜிஎம்பி சாருக்கு வணக்கம். மிக அருமையாக அலசி இருக்கிறார்.
      நேர்மையான கருத்துகள்.
      அத்ற்குப் பாந்தமாக கீதாவும் பதில் சொல்லி இருப்பது மிக அழகு.

      நீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  10. ஆழ் துளைக் கிணறு எடுத்து ஊருக்கே தண்ணீர் சப்ளை ...ம்ம்ம்ம்

    செய்தி நன்றாக இருந்தாலும் இப்படித் தோண்டிக் கொண்டே போனால் நிலத்தடி நீரும் வற்றி விடாதோ? மழை பெய்தால்தானே பூமிக்கடியில் நீர் சேமிப்பு தொடரும். அப்படிச் சேமிக்கும் அளவு மழை பெய்யவும் வேண்டுமே. ..சேமிக்கும் இடமெல்லாம் கட்டிடங்கள் பெருகினால் மழை பெய்தாலும் வெள்ளம் தான் வரும்...என்னவோ போங்க. இது அரசு கண்டிப்பாகத் தலையிட்டு பல விதிமுறைகளை வலுக்கட்டாயமாக்க வேண்டும்...மக்கள் பாவம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் - ஆழ்துளைக் கிணறு - என்பதே அடுத்தவர்களின் சொத்தைத் திருடுவது என்பது என் அபிப்ராயம். பொதுச் சொத்தை எடுத்து பிறருக்கு தானம் வார்ப்பதில் என்ன பெருமை இருக்கிறது?

      எனக்கு அதிகாரம் வந்தால் 'ஆழ்துளைக் கிணறு' வைத்துள்ளவர்கள் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் அரசுக்கு வரி செலுத்தணும் என்று சொல்லுவேன். இது எல்லோருக்கும் (கிரவுண்டு வாங்கி அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தன் ஹோட்டல்களுக்கு தண்ணீர் சப்ளை பண்ணிக்கொள்ளும் அனைவருக்கும்) பொருந்தும்.

      நீக்கு
    2. கண்டிப்பாக நெல்லை! உங்கள் கருத்திற்கு அப்படியே டிட்டோ செய்கிறேன்.

      அதான் உங்களுக்கு அதிகாரம் உங்கள் கையில் வரலை ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  11. சுமித்ராதேவி அம்மாள் அவர்களுக்கு எமது இராயல் சல்யூட்.

    வினர்சனம் படித்து வரும்போதே இது ஜியெம்பி ஐயா என்று நினைத்தேன்.

    கருத்துரையில் எல்லோரும் சொல்லி விட்டனர்.

    ஐயா எதையும் வெளிப்படையாக பேசுபவர்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல செய்திகளையும் படித்தேன்.

    வார வமர்சனத்தைப் படித்தேன். விமர்சனம் எழுதுபவர் தன் மனதில் நினைப்பதை அப்படியே எழுதுவது அதற்கு ஒரு உண்மைத் தன்மையைத் தருகிறது. விமர்சகர் யார் என்று குறிப்பிட்டிருக்கலாம். விமர்சனத்தை ரசித்தேன்

    கீதா ரங்கனின் இந்தவார சமையல் குறிப்பு நான் இதுவரை சாப்பிடாதது. என் மனைவி செய்த, நான் சாப்பிட்ட பிறகு அவர் உறவினர் வீட்டில் சிறிது மாறுதல்களோடு செய்வது வழக்கம் என்று சொன்னாள். கீதா ரங்கனின் கடுகோரை போன்றவை எங்களுக்கு புதுசு.

    பதிலளிநீக்கு
  13. புத்திராம்பட்டு அரசுப் பள்ளி வாவ் போட வைத்தது!!! பாருங்கள் கிராமத்து மக்கள்அதுவும் கிராமத்திற்கு வந்த படித்த மருமகள்கள் ஊதியம் இல்லாமல் எப்படி முனைந்து வருகிறார்கள் தங்கள் கிராமத்தை தன்னிறைவு பெறும் கிராமமாக ஆக்குவதற்கு! இதுவும் புல்லரிக்க வைத்த செய்தி!!!

    ஸ்ரீராம் அருமையான செய்தி.

    அரசு தலை குனிய வேண்டாமோ? அப்போ அரசின் பணி என்னவோ?!! அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?

    கீதா

    பதிலளிநீக்கு
  14. தில்லையகத்து கீதாவுக்கு எதையும் ஷார்டாக ஸ்வீட்டாக சொல்லத் தெரியுமா என்பதே என் சந்தேகம்.//

    ஹா ஹா ஹா ஹா ஹா....அதான் எனக்கு வரவே மாட்டேங்குதே சார். எனக்கு எழுதவே தெரியவில்லை என்றும் நான் நினைத்துக் கொள்வது உண்டுதான் சார். முயற்சி செய்கிறேன் சார்.

    மிக்க நன்றி ஜி எம் பி சார்...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு அட போட வைக்கிறார். பொதுவாக காவல்துறையினரைப் பற்றிய கருத்துகளுக்கிடையில் இப்படியும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது மிக மிக நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  17. ராஜலக்ஷ்மி!! சூப்பர் பெண்ணே! எனக்கு என்னென்னவோ நினைவுகளை வரவழைத்துவிட்டார் ராஜல்ஷ்மி! பாராட்டுகள் வாழ்த்துகள் என்ன சொன்னாலும் தகும்! அதுவும் மாணவியாக இருந்து கொண்டு! எனக்குப் பல நினைவுகள்..

    இப்படியானவர்களால் விவசாயம் தழைக்கிறது.

    இன்றைய செய்திகள் எல்லாமே அருமை சுமித்ரா அன்னையும், ராஜலக்ஷ்மியும் டாப்...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. சகோதரி கீதா அவர்கள், GMB sir - யிடம் ஒருமுறை தொடர்பு கொண்டு பேசினால் போதும், அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி நான் ஜி எம் பி ஸாரை நேரிலேயே பார்த்திருக்கேனே பல முறை!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. டிடி இன்னொன்று இங்கு நான் சார் சொன்ன கருத்துக்குத்தானே பதில்....அவரைப் பற்றிய எண்ணம் இல்லை டிடி. இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா!!!!

      எழுத்தில் வரும் கருத்துகளை வைத்துப் பொதுவாக ஒருவரைப் பற்றிச் சொல்லவும் முடியாதுதானே இல்லையா.

      கீதா

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... நான் சொல்ல வந்தது :-

      நேரில் அல்லாமல் தொடர்பு கொண்டு பேசி இருந்தால்.....

      ?

      எழுத்துகளின் நீளம் குறைவு என்பார்...!

      நீக்கு
  19. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  20. தானாக செய்ததைச் சொன்னால் யாராவது குறை கூறுவார்களோ என்னும் சந்தேகத்தில் எல்லோரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் செய்வதுபோல் ஒருபாவனை! //

    ஹா ஹா ஹா நிஜமாவே சிரித்துவிட்டேன் சார்.

    சுவைத்துப் பார்க்க முடியாதே ஹிஹிஹிஹி....அப்படிச் சுவைத்துப் பார்த்துதனே சொல்ல முடியும்... வீட்டுக்கு வரணும் இல்லைனா எல்லோரும் கூடும் இடத்தில் பாட்லக் செய்யணும்!!!!

    திங்க பதிவு சும்மா கலாய்த்தல் சார். எல்லோரையும் உள்ளே இழுத்து அது ஒரு ஜாலியாக எழுதுவது. அப்பத்தானே நட்புகள் எல்லாம் வந்து கும்மி அடிக்க முடியும் என்று.

    பூனையின் படம் போடுவது நம்ம அதிராவை கலாய்த்து அப்ப ஏஞ்சல் விரட்டுவாங்க கமென்ட்ஸில் அது ஜாலி இல்லையா சார்...அதான். இப்ப இருவருமே பிஸி.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அனைவருமே போற்றத்தக்கவர்கள். சுமித்ராதேவி மனதில் நிலைத்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  22. என் விமரிசனம் தில்லையகத்துகீதாவை வெகுவாகவே பாத்தித்து விட்டது என்னை என் எழுத்துகள் காட்டிக்கொடுத்து விடும் எப்போதும் ஒரே மாதிரிஎழுதுபவன் திருமதி கீதா ரங்கனுக்குத் தெரியும்என்னைப் பலமுறைஈ சந்தித்தவர் என்றாலும் பெங்களூர் வந்தபின் வருகிறேன் வருகிறேன் என்று சொன்னவர் இன்னும் வந்து கொண்டிருக்கிறார் இனியும் வருவாரா பார்க்கலாம்ஒரு முறை நாளும் குறிப்பிட்டிருந்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி. சார்...உங்க விமர்சனமா?

      நான் ஆகஸ்ட் மத்தியில் பெங்களூருக்கு வருவேன். அப்போது கீதா ரங்கன்(க்கா)வைப் பிடித்து இருவரும் உங்க வீட்டுக்கு வரப்பார்க்கிறோம். நான் எங்கேயோ, அவர் எங்கேயோ நீங்கள் எங்கெங்கேயோ... பார்க்கலாம் இது சாத்தியமாகிறதா என்று..

      நீக்கு
  23. இல்லை சார். நீங்கள் சொல்லியிருந்ததற்கு என் கோணத்து பதில்தான் சார். நான் சிந்திப்பதைக் கற்றத்தைச் சொன்னேன். நேகட்டிவாக எடுத்துக்கலை சார்.
    நான் சிரித்துவிட்டேன் என்று சொன்னதை பார்க்கலயா சார்..

    சார் உங்கள் வீட்டுக்கு வர நினைத்த போது என் ஹியரிங் எய்ட் சரியாக வேலை செய்யலை...அதான். இப்ப ஒரு பார்ட் டைம் வேலைக்குப் போகிறேன் சார். வீட்டருகில். இன்று கூட நினைத்தேன் சார் வரலாம் என்று. பார்க்கிறேன்...இன்று பணி முடிந்தால் பிரீ தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. இல்லை சார். நீங்கள் சொல்லியிருந்ததற்கு என் கோணத்து பதில்தான் சார். நான் சிந்திப்பதைக் கற்றத்தைச் சொன்னேன். நேகட்டிவாக எடுத்துக்கலை சார்.
    நான் சிரித்துவிட்டேன் என்று சொன்ன கருத்தை பார்க்கலயா சார்....

    சார் உங்கள் வீட்டுக்கு வர நினைத்த போது என் ஹியரிங் எய்ட் சரியாக வேலை செய்யலை...அதான். இப்ப ஒரு பார்ட் டைம் வேலைக்குப் போகிறேன் சார். வீட்டருகில். இன்று கூட நினைத்தேன்....சார் வரலாம் என்று. பார்க்கிறேன் சார்...பணி முடிந்த பிறகு பிரீ தான் நாளை மதியம் வரை.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. @ஜிஎம்பி சார் //வித்தியாசமாக, பலரும் செய்து பார்க்காத, சமையல் குறிப்புக்காக காத்திருக்கிறேன் // - ரோஸ் மில்க் செய்ய பீட்ரூட் உபயோகப்படுத்தியது, கீதா ரங்கன் எழுதிய கடுகோரை, வெண்டை ஃப்ரை போன்றவை இன்னும் நிறைய - நான் செய்துபார்க்காத, சாப்பிட்டுப்பார்க்காத ஐட்டங்கள்தானே. நீங்க நான் எழுதின 'கத்தரி பொடி தூவின கறி' செய்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  26. //ஊக்கப்படுத்தவேண்டியதுதான். ஆனால்…….. அதற்காக குறை என்று தோன்றுவதைச் சொல்லக் கூடாதா? பின்னூட்டங்கள் ஏதோ வருகைப்பதிவேடு போல் இருக்கிறதே..// ஜிஎம்பி சார்.... ஞாயிற்றுக் கிழமையைப் பொருத்தவரையில் பின்னூட்டங்கள் இப்படித்தான். பதிவில் குறை சொல்ல எதுவும் இல்லை. இது அவர்களது டைரி போன்று படங்கள் வெளியிடுகிறார்கள். அதில் என்ன குறை சொல்வது? சமீப வாரங்களில் அந்த கேப்ஷன்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  27. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. அதில் சுமித்ரா தேவி அந்தத் தாய் பாராட்டிப் போற்றப்பட வேண்டியவர். மனதில் உயரே நிற்கிறார். அது போல தனி ஒரு ஆளாக வயலில் நடவு செய்யும் ராஜலக்ஷ்மி போற்றப்பட வேண்டியவர்.

    புத்திராம்பட்டு அரசுப் பள்ளியில் ஊர்மக்களே படித்தவர்கள் பயிற்றுவிக்க, ஓய்வு பெற்ற ராணவ வீரர் உடற்பயிற்சி பயிற்றுவிக்க அதுவும் ஊதியம் எதுவும் பெறாமல். வியக்க வைக்கிறது.

    யாரென்று தெரியவில்லையே விமர்சனம் எழுதியிருப்பது. கருத்துகள் ஜிஎம்பி சார் என்று சொல்லுவதால் அவராகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நல்ல விமர்சனம். வாழ்த்துகள் சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. கோமதிக்காவைக் காணலையே என்னாச்சு? பயணத்தில் இருக்காங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் முடிந்து வந்து விட்டேன் கீதா .
      காலையில் பயணத்தில் படித்து விட்டேன்.
      பின்னூட்டம் போட வில்லை.

      நீக்கு
    2. கோமதி அக்காவை காணவில்லையே என்று நானும் நினைத்துக் கொண்டேன்.

      நீக்கு
    3. கீதா, பானு இருவரும் என்னை தேடியது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  30. துப்புரவு தொழிலாளி சுமித்ராவை வணங்கத் தோன்றுகிறது. அவருடைய சின்சியாரிட்டியை அவர் மகன்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள். வாழ்க வளமுடன்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் தனியாக நடவு செய்த ராஜலட்சுமி, இரும்புப்பெண்! அவர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.

    ஒரு ஆணுக்கு கல்வி புகட்டினால் ஒருவனை மட்டும் படிக்க வைக்கிறாய், ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டினால் ஒரு குடும்பதையே படிக்கச் வைக்கிறாய் என்பார்கள். புதிராம்பட்டு கிராமத்திற்கு வாழ வந்திருக்கும் பெண்கள் இதை மெய்ப்பித்திருக்கிறார்கள். வாழ்க!

    அப்துல் கலாம் நற்பணி மன்றத்தினர் ஆழ்துளைன் அமைத்து தண்ணீர் வழங்குவது இருக்கட்டும், இதே போல மழை நீரையும் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    தன் மூன்று குழந்தைகளை நன்கு படிக்க வைத்து பெரிய உத்தியோகத்தில் அமர்த்திய தாய் மிகவும் பாராட்ட பட வேண்டியவர்.
    வாழ்த்துக்கள் வணக்கங்கள்.
    அரசை எதிர்ப்பார்க்காமல் கிராம மக்களே ஆழ்துளை கிணறு அமைத்து கொண்டது பாராட்ட வேண்டும்.
    250அடியில் தண்ணீர் இருக்கிறது என்றால் பரவாயில்லை. சில இடங்களில் அதுவும் கிடைக்க மாட்டேன் என்கிறதே !

    அரசு பள்ளியை அந்த ஊர் மக்களே திறம்பட நடத்துவது மகிழ்ச்சி.
    கல்லூரியில் படித்தாலும் தன் நிலத்தில் நாற்று நட்டு சாதனை படைத்து விட்டார்.
    இன்ஸ்பெகடர் பாண்டி வேலு அவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தினமும், சாலையோரத்தில் நடத்தி வருவதற்கு வாழ்த்துக்கள்.
    தலைகவசம் வாங்கி தருவதற்கும் பாராட்டுக்கள்.

    அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. பாலசுப்பிரமணியம் சார் விமர்சனம் என்று நன்றாக தெரிகிறது.
    அதனால் பெயர் போட வில்லையா??
    இனி யார் விமர்சனம் செய்கிறார்கள் என்பதை சொல்ல போவது இல்லையா? வாசகர்கள் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  33. முன்னுரையே சொல்லிவிடுகிறதே விமர்சனம் செய்திருப்பது யார் என்று? குறிப்பாக "உள்மனம் சொன்னாலும் நான் நானாகத்தானே இருக்க முடியும்" என்னும் வரி எழுதியிருப்பது ஜி.எம்.பி. சார்தான் என்று அப்பட்டமாக கூறுகிறது.

    பதிலளிநீக்கு
  34. //திங்கக் கிழமை யில் வரும்சமையல் குறிப்புகள் பலரும் செய்துபார்த்து இருப்பர். வித்தியாசமாக, பலரும் செய்து பார்க்காத, சமையல் குறிப்புக்காக காத்திருக்கிறேன் ஒரு சினிமாவில் வந்த வசனம் நினைவுக்கு வருகிறது ஒருவர் ஒன்று சொல்வார் மற்றவர் /அதுதான் தெரியுமே/ என்பார்...//

    திங்கள் கிழமை கீதா செய்த வெண்டைக்காய் சமையல் குறிப்பை செய்து பார்த்து விட்டேன், நன்றாக இருந்தது.

    எதுவும் செய்ய பிடிக்காமல் அலுப்பாக இருக்கும் போது இப்படி சமையல் குறிப்புகளை படிக்கும் போது செய்ய தோன்றும் சார்.
    அதுவும் கீதா எல்லோரையும் அழைத்து சிரித்து பேசி சமையல் குறிப்பை கொடுத்தது மகிழ்ச்சியை கொடுத்தது.

    அதுதான் தெரியுமே! என்று சொன்னாலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் சார் . அல்லது நாம் அதை வேறு மாதிரி செய்து நீங்கள் இப்படி செய்து இருந்தீர்கள், நான் கொஞ்சம் மாற்றினேன் எப்படி இருக்கிறது? என்று அவர்கள் ஒரு பதிவு போடலாம்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    தான் செய்யும் தொழிலே தர்மம் என துப்பரவு தொழிலுக்கு மதிப்பு கொடுத்ததோடு மட்டுமின்றி தன் மூன்று குழந்தைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து, இன்று நல்ல நிலைமையில் இருக்கச் செய்த அந்த தாயுள்ளத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அந்த தாய்க்கு வாழ்த்துக்கள்.

    தண்ணீர் சேவை செய்து வரும் இளைஞர்களும், அரசு பள்ளியை மூடாமலிருக்க அந்த ஊர் மக்கள், குறிப்பாக அந்த ஊருக்கு வந்த மருமகள்கள் செய்யும் சேவையும் மிகப் பெரிய சாதனை. அவர்களுக்கும் மனதாற பாராட்டுக்கள்.

    போக்குவரத்து காவல் துறையை சார்ந்த வர் செய்த விழிப்புணர்ச்சி செயல்கள், அதுவும் தலைக்கவசம் வாங்கி தந்தபடி அவர் பிரசாரம் செய்வது பாராட்டுக்குரியது.

    கல்லூரிக்கும் போய் படித்தபடி, ஒரு ஏக்கர் நிலத்தில் தனியொருவராக நாற்று நட்டு சாதனை புரிந்தவருக்கும் வாழ்த்துக்கள்.

    இன்றைய விமர்சகர் பெயரே காணவில்லையே எனறுதான் அனைவரைப் போலவும் நானும் நினைத்தேன். கருத்துரைகளை கண்ட பிறகு சகோதரர் ஜி. எம்.பி அவர்கள் என தெரிந்து கொண்டேன். சுருக்கமான விமர்சனம். அழகாக தந்துள்ளார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  36. /நைமிசாரண்யத்துக்குப்போய் பாடல்கள் புனைந்தவர்கள் அருகில் இருக்கும் குருவாயூர் பற்றிக் கூறாததால் அது பாடல் பெற்ற தலமாக வில்லை.//
    இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. சமீபத்தில் எங்கோ படித்தேன், குருவாயூர் கோவில் முன்பு தேவி பாலையாக வழிபடப்பட்ட இடமாம், அதனால்தான் அந்தக் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படவில்லையாம்.

    தேவியை குழந்தை வடிவில் வழிபடுவது தேவி உபாசனையில் ஒரு முறை. அவ்வாறு வழிபடப்படும் பொழுது அவள் பாலை அல்லது வாலை என்று அழைக்கப்படுவாள்.

    பதிலளிநீக்கு
  37. சமையல் குறிப்புகளை அனுப்புகிறவர்கள் எல்லோரும் ஒரு டெம்ப்லேட்டை பயன்படுத்த, கீதா ரெங்கன் கொஞ்சம் வித்தியாசமாக நாடகப் பாணியில் எழுதுகிறார். இதைப்போய் "தானாக செய்ததைச் சொன்னால் யாராவது குறை கூறுவார்களோ என்னும் சந்தேகத்தில் எல்லோரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் செய்வதுபோல் ஒருபாவனை! என்ன செய்ய! யாரும் குறை சொல்லக் கூடாது இல்லையா?" என்று நக்கலடித்திருப்பது சரியாகப் படவில்லை. மேலும் அவருக்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எழுத வராதா? என்று கேட்டிருக்கிறீர்கள். ஒவ்வொருவர் பாணி ஒவ்வொரு விதம். பொதுவாகவே விமர்சனம் கசந்து வழிந்தது ஏன் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  38. //தனி ஆளாக நடவு செய்ய,// - ஸ்ரீராம், அந்த மாணவி ராஜலக்‌ஷ்மியின் செயல் என்னைக் கவர்ந்தது. ஏன், விவசாய பின்னணி உள்ளவங்களுக்கு பி.எஸ்.ஸி அக்ரிகல்சரில் படிக்க சீட் கொடுக்கக்கூடாது? அதாவது 25% விவசாயப் பின்னணி உள்ளவங்களுக்குத்தான் என்று ஒதுக்கீடு செய்யலாம். விவசாயப் பணியில் ஈடுபடாதவங்களைவிட இவங்க அந்தப் படிப்பு படித்தால் இன்னும் நாட்டுக்கு நல்லது இல்லையா?

    பதிலளிநீக்கு
  39. சிறப்பான செய்திகள்.

    விமர்சனம் படிக்கும்போதே ஊகம் செய்ய முடிந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!