கொலுசு 1
துரை செல்வராஜூ
நூற்றுக்கணக்கான புறாக்கள்..
புகை நிறப் பூக்களை வானில் வீசியது போல காற்றின் மேலேறித் தவழ்வதும் சடாரெனக் கீழிறங்கி கோபுரப் பதுமைகளுக்கு இடையில் அமர்வதும் -
அந்த ஆலய வளாகமே இயற்கையின் தீற்றலாக இருந்தது...
ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முற்பட்டதாகிய பசுபதீஸ்வரர் திருத்தலத்தில் -
சோழர்கள் திருப்பணி செய்து திருக்கோயிலைக் கட்டி வைத்தனர்...
அதுவும் ஆயின ஆயிரம் ஆண்டுகள்...
அத்தகைய கோயிலுக்குள் 1970 களின் மாலைப் பொழுது ஒன்று..
ஆனாலும் சந்நிதிகள் திறக்கப்பட்டிருந்தன...
கையைத் திருப்பிப் பார்த்தான் கார்த்திகேயன்..
பிறந்த நாளுக்காக அப்பா வாங்கித் தந்திருந்த கடிகாரம் 4:55 என்றது..
கொடிமரத்தின் அருகில் நின்று மூலஸ்தானத்தை நோக்கி வணங்கி விட்டு பிரகாரத்தில் மெல்ல நடந்தான்..
அக்னி மூலை.. மடப்பள்ளியில் இருந்து புகை மேலெழுந்து கொண்டிருக்க -
பிரகாரத்து மண்டபத்தில் மலர் தொடுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர்...
அந்தப் பக்கமாக பழைய பெட்டி ஒன்றின் மீது தவில்களும் நாகஸ்வரங்களும் சிவப்புத் துணியால் மூடப்பட்டிருந்தன...
திருமாளிகைப் பத்தி முழுவதும் கொற்றக் குடைகள், சூரிய சந்திர பதாகைகள், பூவேலை மிக்க தொம்பைகள், திருவாசிகள், ரிஷபம், மயில், மூஞ்சூறு வாகனங்கள் - என, அணிவகுத்திருந்தன..
தெக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் வணங்கி விட்டு வடக்காகத் திரும்பினால் அண்ணாமலையார்...
நேர் எதிராக பால சுப்ரமணியன் சந்நிதி..
இக்கோயிலில் இந்த இடம் விசேஷமானது... கார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தமான இடம்...
அண்ணாமலையாருக்கு முன்னால் இருந்த பத்ம பீடத்துக்கு அருகில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்... இங்கிருந்து வேண்டிக் கொண்டால் கேட்டது கிடைக்கும் என்றொரு நம்பிக்கை...
அந்த சில விநாடிகளில்
மெல்லியதாக கொலுசுச் சத்தமும் மல்லிகைப் பூ வாசமும் அவனைக் கடந்து சென்றது...
மின்னலென மெய் சிலிர்த்து அடங்கியது...
சில நிமிடங்கள் கழித்து எழுந்து கொண்ட கார்த்தி மீண்டும் அண்ணாமலையாரையும் அறுமுகனையும் வணங்கி விட்டு திருச்சுற்றில் நடந்து கிழக்காகத் திரும்பினான்...
கோமுகத்தை அடுத்த துர்கா மண்டபத்தில் ஜடை நிறைய மல்லிகைப் பூவுடன் அவள்!...
அவள் - ஸ்வர்ணலக்ஷ்மி...
நிஜத்தில் கலைச்செல்வி..
பதினெட்டு வயதுடனே இன்றைக்கும்...
பாவாடை தாவணி... பட்டுப் பாவாடை.. அரக்கு நிறப் பட்டியுடன் மாம்பழ மஞ்சள்...
மூன்று மைல்களுக்கு அப்பால் இருந்த கிராமத்தில் இருந்து இங்கு வந்து படித்த இவனுடன் ஒன்பது, பத்து, பதினொன்று என மூன்று வருடங்கள் படித்தவள்..
பதினொன்றாம் வகுப்பின் கடைசி நாளன்று -
" துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா!... "
- என்று பாடி எல்லாரையும் கலங்கடித்து கண்களில் நீரை வரவழைத்தவள்..
பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மேற்கொண்டு தொடரவில்லை என்று கேள்வி..
பள்ளியில் அறிவும் அழகும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு சிலருள் இவளும் ஒருத்தி..
ஆனாலும் இவளுக்குத் தோழிகள் என்று எவரையும் சொல்ல இயலாது..
அவள் பாட்டுக்கு வீட்டிலிருந்து பள்ளிக்கு தனியாக நடந்து வருவாள்... தன்னுடன் யாரும் பழகுவதில்லை என்பதால் மதியச் சாப்பாடு கொண்டு வருவதே இல்லை...
தெப்பக் குளத்தின் வடகரை - வடக்கு மட விளாகம்... இந்தத் தெருவில் தான் அவளது வீடு...
சின்ன மாளிகை மாதிரி அலங்காரமாக இருக்கும்...
மதியத்தில் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு கையில் குடையுடன் திரும்புவாள்..
வகுப்பறை மாணவிகளுடன் தேவையானால் சின்னஞ்சிறு புன்னகை.. அது மட்டுமே...
ஒன்பதாம் வகுப்பில் தெரிந்திராத விவரங்கள் எல்லாம் பத்தாம் வகுப்புக்குள் வந்ததும் தான் தெரிந்தன.. புரிந்தன...
கிருஷ்ணமூர்த்தி தான் சொன்னான் -
தெப்பக் குளத்தின் வடகரை - நித்ய கல்யாணிகள் வசிக்கும் தெரு என்று..
கிருஷ்ணமூர்த்தி உள்ளூர்க்காரன்.. நம்பாமல் இருக்க முடியவில்லை..
அதன்பின் ஸ்வர்ணாவின் மீது கழிவிரக்கம் தோன்றியது...
ஒரு நாள் குரலைத் தாழ்த்திக் கொண்டு கார்த்தி கேட்டான்...
இப்பவும் அங்கே அப்படித் தானா!?... - என்று...
அந்தக் காலத்தில எப்படியோ!.. இப்போ அப்படி எல்லாம் இல்லை... ஆனாலும் பக்கத்து ஊர் ஜமீன்தார் எப்போதாவது ஸ்வர்ணா வீட்டுக்கு வண்டியில வருவார்...
அதிர்ந்தான் - " என்னடா சொல்றே!.. "
" அவர் தான் ஸ்வர்ணா..வோட அப்பா.. ந்னு பேசிக்குவாங்க!... "
அதற்கு அப்புறம் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.. ஆனாலும் அவள் மீது இவன் மனம் பரிவுடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது...
பள்ளி இறுதித் தேர்வுக்குப் பின் இவ்வூருக்கு வருவதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது...
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஸ்வர்ண லக்ஷ்மியைப் பார்க்கிறான்...
அவளுடன் பேச வேண்டும் என்ற ஆவலுடன் விரைந்து நடந்தான்..
அவளோ விருட்டென நடந்து தல விருட்சத்தைக் கடந்து சபா மண்டபத்தின் படிகளில் ஏறினாள்..
துர்காம்பிகை பாதத்தருகில் விளக்குகள்.. அம்பிகையின் மீது மலர்ந்தும் மலராத மல்லிகை மாலை.. ஸ்வர்ணாதான் அணிவித்திருக்க வேண்டும்...
புன்னகையுடன் நின்றிருந்த அம்பிகையை வணஙகி - நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டு நடராஜர் மண்டபத்தை நெருங்கினான்...
அங்கே அவன் கண்ட காட்சி!.. [ அடுத்த வாரம் பார்ப்போமா... ]
ஃஃஃ
(தொடரும்)
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்கா தெனின்..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
வாழ்க நலம்!
நீக்குநலமே வாழ்க என்றென்றும்..
பதிலளிநீக்குநன்மைகள் சூழ்க எங்கெங்கும்..
இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..
வரவேற்போம்.
நீக்குஇன்று எனது ஆக்கத்தினை பதிவு செய்து அன்புடன் ஊக்கம் அளிக்கும் ஸ்ரீராம் அவர்களுக்கும்
பதிலளிநீக்குசித்திரங்களால் சிறுகதையினை சிறப்பித்திருக்கும் அலங்காரக் கலைமணி திரு KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
அலங்காரக் கலைமணி !!! ஆஹா ! நன்றி.
நீக்குஅந்த மாம்பழ நிறப் பட்டும் அரக்கு நிறமும் கதையை மேலும் சிறப்பிக்கின்றன...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மழையினால் பாதிப்புற்றவர்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு மழையை வரவேற்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நீக்குதுரையின் கதை வந்தே சில நாட்கள் ஆகிவிட்டனவே என நினைத்துக் கொண்டிருந்தேன். வித்தியாசமான கோணத்தில் கதையை ஆரம்பித்துள்ளார். வீட்டிலிருந்து தனியாகப் பள்ளிக்கு வருவாள், சக மாணவிகள் யாரும் பேச மாட்டார்கள் என்றதுமே சூழல் புரிந்தது. தொடரக் காத்திருக்கேன். விறுவிறுப்பான கட்டத்தில் கதையை நிறுத்தி இருக்கார். வழக்கம்போல் அழகான வர்ணனைகள், அதிலும் அந்தப் பெண் உடுத்தி இருக்கும் உடையைப் பற்றிச் சொல்லி இருப்பதும் அதற்கேற்றாற்போல் கேஜிஜியின் படத்தேர்வும் கதைக்கு மெருகூட்டுகிறது.
பதிலளிநீக்குநன்றி, நன்றி!
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குதிரு. கௌதம் அவர்களும் கலா ரசிகரே.. அதில் சந்தேகம் ஏதுமில்லை..
சுவாரசியம்.
பதிலளிநீக்குநித்யகல்யாணிகள் - இப்போது தான் இந்த சொல் தெரிந்து கொண்டேன். பொருள் யூகிக்க முடிகிறது. இந்த சொல் வட்டார வழக்கமா?
நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இப்போதான் மறுபடியும் நினைவிற்குக் கொண்டுவந்துள்ளார், து செ !
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. இளம் பிராயத்தில் கேள்விப் பட்ட வார்த்தை நித்ய கல்யாணி.. அதை இந்த வேளையில் பயன்படுத்திக் கொண்டேன்..
நீக்குசுவாரசியம்.
பதிலளிநீக்குநித்யகல்யாணிகள் - இப்போது தான் இந்த சொல் தெரிந்து கொண்டேன். பொருள் யூகிக்க முடிகிறது. இந்த சொல் வட்டார வழக்கமா?
சுவாரசியம்.
பதிலளிநீக்குநித்யகல்யாணிகள் - இப்போது தான் இந்த சொல் தெரிந்து கொண்டேன். பொருள் யூகிக்க முடிகிறது. இந்த சொல் வட்டார வழக்கமா?
நீங்க ஒரு தடவை சொன்னா .. அது ???
நீக்குமூணு தடவை சொன்ன மாதிரி.. க்விஷ்! ☝🏽
நீக்குஅனைவருக்கும் இனிய செவ்வாய்க் கிழமைக்கான வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் நலமுடன் வளமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
அன்பு துரையின் கதை வண்ணக் களஞ்சியமாக எண்ணங்களைப்
பொழிகிறது.
பழையகால வித்தியாசமான வீதிகளை
நாசூக்காகக் குறிப்பிட்டிருக்கிற அழகு வியக்க வைக்கிறது.
கோவில் அழகு கண்முன் நிற்கிறது.
எங்கள் கபாலீஸ்வரர் கோவில் நினைவுக்கு வந்தது.
அங்கும் தியானம் செய்ய இடம் இருக்கும்.
வெள்ளிக்கொலுசு அணிந்த ஸ்வர்ணா,
கார்த்திக்கின் மனம் அறியட்டும்.
கதைக்கு அழகு கூட்டி இருக்கும் படம் அருமை.
இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா.!
சரி இருப்போம். மிக நன்றி அன்பு துரை, ஸ்ரீராம்.
நம் கோமதி வந்தால் இன்னும் அழகாக வர்ணிப்பார்.
வரவேண்டும்.
ஆம், நீங்கள் சொல்லியிருப்பவைகளை ஆமோதிக்கிறேன்.
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குதிருமதி கோமதி அரசு அவர்கள் மனம் தேறி வலைப் பக்கம் எப்போது வருவார்களோ.. தெரியவில்லை..
விரைவில் வருவார்கள் என்று நம்பிக்கை கொள்வோம்..
இதெல்லாம் தப்பு இப்படியா நிறுத்துவது
பதிலளிநீக்குஅதானே!!
நீக்குஅதானே!..
நீக்குதிடுக்கிட வைத்த கருத்துரை..
அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
கதை நிகழ்ந்த இடங்களுக்கு நம்மையும் அழைத்துச் செல்வது துரை சாரின் சிறப்பு. நாமும் கார்த்திகேயனோடு கோவிலுக்குள் சென்று,அண்ணாமலையார் முன் கண் மூடி அமர்ந்து தியானிக்கிறோம், வலமாக திரும்பி, துர்க்கையை வணங்கி நடராஜ மண்டபத்தை நெருங்கி காத்திருக்கிறாம், அவருடைய சுபமான முடிவுக்காக.
பதிலளிநீக்குஆஹா ! சிறப்பான கமெண்ட் ! நன்றி.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகதையின் விவரிப்பு அழகு ஜி
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன் கலைச்செல்வியை...
நன்றி.
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குசுவாரஸ்யமான நடை.. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஇந்தப் பாணியில் படித்த பல கதைகள் நினைவுக்கு வருகின்றன. முடிவு புதுவிதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
பதிலளிநீக்குபார்ப்போம்.
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்
காத்திருப்போம்.
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..
நீக்குஆர்வத்துடன் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..நலம் தானே?...
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
பதிலளிநீக்குகதை தங்கள் பாணியில் அருமையான வார்த்தைகளுடன் நன்றாக ஆரம்பித்துள்ளது. இதன் அடுத்த பகுதியையும் மிக எதிர்பார்ப்புடன் தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். நேற்றைக்கு வர இயலாமல், கொஞ்சம் தாமதமாகி விட்டது. வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குதாமதம் ஆனால் என்ன?.. ஒரு குறையும் இல்லை..
மகிழ்ச்சி.. நன்றி..
அழகான விவரிப்புகளுடன் சிறப்பான கதை. அடுத்த வாரத்தில் வெளியாகப் போகும் அடுத்த பகுதிக்கான காத்திருப்பில் நானும்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..