நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சனி, 12 டிசம்பர், 2020
இ வா நே ம செ
விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை.
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில், காற்று இல்லாத சூழலில் தாவரங்களை வளர்ப்பது குறித்தும், ஆய்வு நடக்கிறது. அமெரிக்காவின், 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் உதவியுடன் நடக்கும் இந்த ஆய்வு திட்டத்தின் கீழ், ஏற்கனவே கடுகு, முட்டைக் கோஸ், சிவப்பு லெட்யூஸ் ஆகியவை விளைவிக்கப்பட்டன. இதையடுத்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், முள்ளங்கி வளர்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
அவற்றை, நாசா விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், பக்குவமாக குளிர்சாதனப் பெட்டியில், பாதுகாப்பாக வைத்தார். அடுத்த ஆண்டு, 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்கலம் மூலம், இந்த முள்ளங்கிகள் பூமிக்கு எடுத்து வரப்பட்டு, ஆய்வு செய்யப்படும்.இது குறித்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் ஆராய்ச்சிக் குழு, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தி:
சுவையான முள்ளங்கி, ஊட்டச்சத்து நிறைந்தது. விரைவாக வளரக் கூடியது. அதனால், அதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். நாங்களே எதிர்பார்க்காத வகையில், பூமியை விட விண்வெளி ஆய்வு மையத்தில் பல மடங்கு விரைவாக வளர்ந்துள்ளது.புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில், தாவரங்களின் அதிவேக வளர்ச்சி குறித்த ஆய்வுக்கு, இது உதவும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
====
வேலை இழந்த கணவனை ஊக்குவித்த மனைவி.
====
எல்லை தாண்டி வந்த சகோதரிகள் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைப்பு,
ஜம்மு : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு சகோதரிகளும் நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கஹூதா பகுதியை சேர்ந்த லைபா ஜபாயர் 17 சனா ஜபாயர் 13 என்ற இரு சகோதரிகள் நேற்று முன்தினம் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அந்த இரண்டு மைனர் சிறுமியரையும் பாதுகாப்புப் படையினர் தடுப்பு காவலில் வைத்தனர்.
இந்நிலையில் அந்த இரண்டு சிறுமியரும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இரண்டு சிறுமியரும் 'சாக்கன் தா பாக்' எல்லைப் பகுதி வழியாக இன்று பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
மக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அந்த சகோதரிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த இரு சிறுமியருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி ராணுவ வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஏழைகளுக்கு உதவுவதற்காக நடிகர் சோனு சூட், தனது 8 சொத்துகளை ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சோனு சூட் தனது பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இரண்டு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகள் என 8 சொத்துக்களை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே ரூ.10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார் என்றும், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் இருந்து 10 கோடி ரூபாய் லோன் வாங்க கடந்த செப்டம்பர் 15ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி நவம்பர் 24ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
===================
அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கிராபினை கொண்டு, மின்வேதியியல் சென்சார் என்ற தொடுதிறன் கருவியை உருவாக்கினர். இதை பயன்படுத்தி, கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும் பரிசோதித்தனர். அதில், கொரோனா மாதிரியில் வைரஸ் மரபணு மூலக்கூறு இருப்பதை 5 நிமிடத்துக்குள் அக்கருவி கண்டுபிடித்தது. இது, கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.
விண்வெளியில் விளைந்திருக்கும் முள்ளங்கிகள் மிகப் பெரிய செய்தி. எத்தகைய கூறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை அறியக் கிடைக்கும் போது அதிசயங்கள் காத்திருக்கலாம். மிக நன்றி.
கணவனை ஊக்குவித்த மனைவி. அவர் மிக பாக்கியம் செய்தவர். இத்தனை பாடுபட்டு பல்ப் உற்பத்திசெய்யும் அவர்கள் உழைப்பு வீணாகாமல், மேலும் மேலும் வளர வேண்டும். அமைதியாக உதவி செய்யும் மனைவியைப் பார்க்கும் போதே மனம் நிறைகிறது... காணொளி மிக அருமையாக இருந்தது. மேட் இன் இந்தியா. எத்தனை அருமையான சொற்றொடர். இந்தத் தம்பதிகள் செழிக்க வேண்டும். மிக நன்றி.
பெரியசாமியாகக் கும்பிடும் நந்தகுமாருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். மகத்தான சேவை. எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மை செய்திருக்கிறார். இவரைப் பின்பற்றி இன்னும் நிறைய நீர் நிலைகள் ஏற்பட வேண்டும்.யானைகள் பிழைக்க மலைகள் தழைக்க, கிராமங்கள் செழிக்க இறைவன் துணை கருணை புரியட்டும்.
இந்த வார பாசிட்டிவ் செய்திகள் மண்ணுக்கும், விண்ணுக்குமாக உயர்ந்து நிற்கிறது! வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்ட பாகிஸ்தானிய சகோதரிகளை பரிசு கொடுத்து அனுப்பி வைத்த நம் ராணுவ வீரர்களின் மனித நேயம் பாராட்டத்தகுந்தது. விண்ணைத் தொடும் விலை என கேள்விப்பட்டிருக்கிறோம், விண்ணப்பித்த தொடும் கறிகாய்கள்! 'போனா வராது, பொழுது போனா கிடைக்காது ஸ்பேஸ் முள்ளங்கி' என்று கூவுவது கேட்கிறது.
அனைத்துச் செய்திகளும் புத்தம்புதியவை. அறியாதவை, தெரியாதவை. இந்த விண்வெளி முள்ளங்கி (ராடிஷ்) கிடைத்தால் நாளைக்கு சாம்பார் வைத்திருக்கலாம். உறவினர் வராங்க! :)))) பல்ப் செய்தி திறந்து பார்க்கிறேன். இந்திய ராணுவத்தினரின் செய்கை பாராட்டத்தக்கது.
இங்க முள்ளங்கி கிலோ 10-20 ரூபாய். இது சீசன் போலிருக்கு. அப்போ உங்க ஊர்ல இன்னும் கம்மியா விலை இருக்கணும். அதை வைத்து சாம்பார் வைக்காமல், விண்வெளில விளைவிச்ச முள்ளங்கி வேணுமாமே...
சோனு சூட் பற்றி முகநூலில் படித்த நினைவு. ஆனைக்குத் தண்ணீர் காட்டுபவரையும் முகநூலில் பார்த்தேனோ? கொரோனா அடியோடு ஒழியும்படியான மருந்தை விரைவில் கண்டு பிடிக்கட்டும். இன்னிக்குக் காலம்பர எழுந்திருக்கும்போது ஆறு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமா கணினியில் உட்கார்ந்தா வேலை ஆகாதுனு கணினியில் உட்காரவே இல்லை. வேலை முடிஞ்சு வர ஒன்றரை ஆகி விட்டது. வர வர ரொம்ப மெதுவா வேலை செய்யறேனோ? :(
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇந்திய வம்சாவளியினர் க்ராபின் கொண்டு
இந்தப் புது சாதனையைக் கொண்டு வந்திருப்பது
மிக மிக மகிழ்ச்சி.
மனம் நிறை பாராட்டுகள்
வாங்க வல்லிம்மா... வணக்கமும் நன்றியும்.
நீக்குதவறி வந்த அண்டை நாட்டுப் பெண்களை ப்
பதிலளிநீக்குபாதுகாப்போடு அனுப்ப நம் இந்திய மனித உள்ளங்களால் தான் முடியும்.
மிக மிக அருமையான அன்பு செய்தி.
நன்றி ஜி.
நன்றி வல்லிம்மா.
நீக்குவிண்வெளியில் விளைந்திருக்கும் முள்ளங்கிகள் மிகப் பெரிய செய்தி.
பதிலளிநீக்குஎத்தகைய கூறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன
என்பதை அறியக் கிடைக்கும் போது அதிசயங்கள் காத்திருக்கலாம்.
மிக நன்றி.
நன்றி வல்லிம்மா.
நீக்குஎத்தனையோ மனிதர்களைக் காணும்போது 'ஸோனு ஸூட்
பதிலளிநீக்குதம்பதியினர் செயல் நெகிழ வைக்கிறது. நீண்ட ஆரோக்கியமும்
நல் ஆரோக்கியமும் பெற வேண்டும்.
True. நன்றி வல்லிம்மா.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க..
நீக்குவிண்ணிலும் மண்ணிலும் புதுமைகள் நிகழட்டும்...
பதிலளிநீக்குஅப்படியே ஆகட்டும். நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குகணவனை ஊக்குவித்த மனைவி. அவர் மிக பாக்கியம் செய்தவர்.
பதிலளிநீக்குஇத்தனை பாடுபட்டு பல்ப் உற்பத்திசெய்யும் அவர்கள் உழைப்பு
வீணாகாமல், மேலும் மேலும் வளர வேண்டும்.
அமைதியாக உதவி செய்யும் மனைவியைப் பார்க்கும் போதே
மனம் நிறைகிறது...
காணொளி மிக அருமையாக இருந்தது.
மேட் இன் இந்தியா. எத்தனை அருமையான சொற்றொடர்.
இந்தத் தம்பதிகள் செழிக்க வேண்டும். மிக நன்றி.
அதே... அதே... நன்றி வல்லிம்மா.
நீக்குபெரியசாமியாகக் கும்பிடும் நந்தகுமாருக்கு
பதிலளிநீக்குஎத்தனை நன்றி சொன்னாலும் தகும். மகத்தான சேவை. எல்லா ஜீவராசிகளுக்கும் நன்மை
செய்திருக்கிறார். இவரைப் பின்பற்றி
இன்னும் நிறைய நீர் நிலைகள் ஏற்பட வேண்டும்.யானைகள் பிழைக்க
மலைகள் தழைக்க,
கிராமங்கள் செழிக்க இறைவன் துணை கருணை புரியட்டும்.
விலங்குகளின் தாகத்தைத் தீர்த்த நந்தகுமார் ஒரு முன்னோடி, பாராட்டவேண்டும். நன்றி வல்லிம்மா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும், நன்றியும்.
நீக்குவிண்வெளியில் அறுவடை செய்து அடுத்து யாரை அறுக்கப் போறாய்ங்களோ...
பதிலளிநீக்குபாக்கிஸ்தான் சகோதரிகளை பத்திரமாக திருப்பி அனுப்பியவர்களுக்கு ஓர் இராயல் சல்யூட்.
சுயதொழில் விளக்கம் தந்த மகேஷ்-ரம்யா தம்பதிகளை வாழ்த்துவோம்.
நடிகர் சோனு சூட்டை வாழ்த்துவோம்.
நன்றி.
நீக்குஇந்த வார பாசிட்டிவ் செய்திகள் மண்ணுக்கும், விண்ணுக்குமாக உயர்ந்து நிற்கிறது! வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்ட பாகிஸ்தானிய சகோதரிகளை பரிசு கொடுத்து அனுப்பி வைத்த நம் ராணுவ வீரர்களின் மனித நேயம் பாராட்டத்தகுந்தது. விண்ணைத் தொடும் விலை என கேள்விப்பட்டிருக்கிறோம், விண்ணப்பித்த தொடும் கறிகாய்கள்! 'போனா வராது, பொழுது போனா கிடைக்காது ஸ்பேஸ் முள்ளங்கி' என்று கூவுவது கேட்கிறது.
பதிலளிநீக்குஹா ஹா !
நீக்குஅனைத்துமே சாதனைச் செய்திகள் தான்! காலையில் இதைப்படிக்கும்போது மனம் புத்துணர்ச்சி பெறுகிறது!!
பதிலளிநீக்குநாளிதழ்களின் படித்தவை. மிகவும் மனதைத் தொட்டது எல்லையைத் தாண்டிவந்த,இளம் பெண்கள் பற்றிய செய்தி.
பதிலளிநீக்குஅனைத்துச் செய்திகளும் புத்தம்புதியவை. அறியாதவை, தெரியாதவை. இந்த விண்வெளி முள்ளங்கி (ராடிஷ்) கிடைத்தால் நாளைக்கு சாம்பார் வைத்திருக்கலாம். உறவினர் வராங்க! :)))) பல்ப் செய்தி திறந்து பார்க்கிறேன். இந்திய ராணுவத்தினரின் செய்கை பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குஇங்க முள்ளங்கி கிலோ 10-20 ரூபாய். இது சீசன் போலிருக்கு. அப்போ உங்க ஊர்ல இன்னும் கம்மியா விலை இருக்கணும். அதை வைத்து சாம்பார் வைக்காமல், விண்வெளில விளைவிச்ச முள்ளங்கி வேணுமாமே...
நீக்குஇது ஆசையா, பேராசையா இல்லை பேபேராசையா?
சோனு சூட் பற்றி முகநூலில் படித்த நினைவு. ஆனைக்குத் தண்ணீர் காட்டுபவரையும் முகநூலில் பார்த்தேனோ? கொரோனா அடியோடு ஒழியும்படியான மருந்தை விரைவில் கண்டு பிடிக்கட்டும். இன்னிக்குக் காலம்பர எழுந்திருக்கும்போது ஆறு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமா கணினியில் உட்கார்ந்தா வேலை ஆகாதுனு கணினியில் உட்காரவே இல்லை. வேலை முடிஞ்சு வர ஒன்றரை ஆகி விட்டது. வர வர ரொம்ப மெதுவா வேலை செய்யறேனோ? :(
பதிலளிநீக்குசோனு சூட் அவர்களின் இரக்கம் எனும் புகழ் என்றும் நிலைக்கும்...
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
அனைத்தும் நல்ல செய்திகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குசிறப்பான செய்திகள். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு