பானுமதி வெங்கடேஸ்வரன் :
> இந்த கானா பாடல்கள்என்று ஒன்று வருகிறதே.. அதை ரசிக்க முடிகிறதா?
# கானா பாடல்கள் எனக்குப் பிடிக்காது.
& வட சென்னை பகுதியில் பிறந்த 'இசைக் குத்து' என்று விக்கி சொல்கிறது. மறைந்த பிரபலங்களின் புகழ் சொல்லி பாடப்பட்ட வேக நடைப் பாடல்கள் என்கிறார்கள். அப்புறம் அதன் தீம் மாறி சமூக விழிப்புணர்வு, சீர்திருத்தங்கள் என்றெல்லாம் பல கிளைகள். அந்தந்த பகுதி மக்கள் மட்டும் ரசிக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்கு ரசிப்பதில்லை. கானா பாடல்களைவிட கொல்லங்குடி கருப்பாயி பாடல்களில் இருக்கும் நயம் எவ்வளவோ மேல் !
> பத்திரிகைகள் நடத்தும் சிறுகதை, நாவல் போட்டிகளில் established writers கலந்து கொள்வது சரியா?
# போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் "பிரபல" எழுத்தாளர்களை மன்னிக்க வேண்டியது நம் கடமை அல்லவா ?
& ஆஹா - பிரபல எழுத்தாளர்களுக்கு மட்டும் பசிக்காதா?
> ஊறுகாய்களின் அரசியாகிய மாங்காய்க்கு அடுத்த இடங்களை எதற்கு அளிப்பீர்கள்?
$ நெல்லிக்காய்
எலுமிச்சை
நாரத்தை
கிளாக்காய்
மூங்கில் குருத்து.
# எனக்கு எலுமிச்சை ஏற்றமிகு கடாரங்காய்
மணக்கும் மாகாளி மலையாளப் புதுமிளகு
மணித்தக்காளி மறக்காமல் மா இஞ்சி
கணக்காக அரைநெல்லி கவரும் காய்வரிசை.
& // ஊறுகாய்களின் அரசியாகிய மாங்காய்// அரசர் யாரு?
எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் ஜாதிக்காய் (Nutmeg) ஊறுகாய். அதை எனக்கு அறிமுகம் செய்த அண்ணன் இன்று உயிரோடு இல்லை.
> நம் வாழ்க்கையில் நடந்த பழைய நிகழ்வுகளை,போஸ்ட் மார்ட்டம் செய்யக் கூடாது என்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் நடக்கும் பொழுது நமக்கு முதிர்ச்சி இல்லாமல் இருந்திருக்கலாம், உணர்ச்சி வசத்தால் தவறாக நடந்து கொண்டிருக்கலாம் அதை மீண்டும் அலசும் பொழுது அந்த தவறுகளை புரிந்து கொண்டு மீண்டும் செய்யாமல் இருக்க முடியும் இல்லையா?
$ திரும்ப அசைபோடுவதில் உபயோகம் உண்டு. அதுபற்றி சீக்கிரம் அனுபவங்களாக ---
# பழைய நிகழ்ச்சிகளை நினைவு படுத்திக் கொள்வது வேறு அவற்றின் தாக்கத்துக்கு மீண்டும் மீண்டும் ஆளாவது வேறு.
அவற்றை சரிபார்த்து யோசித்தால் நன்மைகள் நிச்சயம்.
நெல்லைத் தமிழன் :
> இவருடைய கச்சேரியை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேனே என்று நீங்கள் எண்ணுபவர் யார்? ஒரே ஒருவர்தான் குறிப்பிடணும்.
# இருப்பவரில் சஞ்சய் சுப்பிரமணியன். அமரர் மதுரை மணி ஐயர்.
$ M Balamurali krishna + 17 others.
& மகாராஜபுரம் V சந்தானம்.
>இவரைச் சந்தித்தும் பேசவில்லையே, புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையே என்று நினைக்கும் நபர் யார்?
# சுஜாதா ரங்கராஜன்.
$ குருநாதர்கள் - பேசி இருக்கிறேன் நிறைய. என் முகத்தை போட்டோ எடுப்பதில் அவ்வளவு ஈடுபாடு எப்போதும் இருந்ததில்லை!
> திருமணத்துக்குச் செல்வதற்கு மிக முக்கியக் காரணங்களில், அங்கு போடப்படும் டிஃபன், விருந்தும் முக்கியமானது என்பது உண்மையா?
# உறவினர்கள், நண்பர் சந்திப்புக்கு அடுத்தபடியாக ..
$ சாப்பாட்டு ராமர்களைத்தான் கேட்கவேண்டும்!
& உண்மை இல்லை. பெரும்பாலும் திருமண சாப்பாடுகள் என் வயிற்றுக்கு ஒத்துக்கொள்வதில்லை.
> கோர்ட் மற்றும் நீதி நடைமுறைகளால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்வாதிகள் வக்காலத்து வாங்குவது, தமிழர், இந்தியர் என்றெல்லாம் காரணங்கள் அடுக்குவது ஏற்புடையதா?
# நிச்சயமாக இல்லை. ஆனால் தெரியாமல் ஒரு பாட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக மட்டுமே இருபதாண்டுகளாக சிறைவாசம் என்பது உண்மையானால் யோசிக்க வைக்கிறது.
$ நமக்கு சொல்லப்பட்டது மட்டும் உண்மை என்கிறீர்களா?. ஒரு பேட்டரி வாங்க கடல் கடந்து வரவேண்டுமா என்ன! தென்னை மரத்தில் புல் கிடைப்பதில்லை என்கிறமாதிரி இல்லை?
தமிழர் அது இது என்பதெல்லாம் ஒரு பிரதமமந்திரி வேட்பாளரைக் கொல்லத் துணிந்தவர்கள் நம்மையும் தம்முடன் சேர்த்துக் கொள்ளும் முயற்சியாகத்தான் எனக்குப்படும்.
> பழங்களிலும் ஜாதி வைத்து (பூவன் பழம் தாழ்ந்தது, கற்பூரம்/எலாக்கி உயர்ந்தது, கூழன் சக்கை தாழ்ந்தது வரிக்கன் சக்கை உயர்ந்தது, அல்ஃபோன்ஸா மாம்பழம் உயர்ந்தது, மஞ்சநாத்தி மாம்பழமா சே என்பதுபோல) பாகுபாடு பிரிக்கும் குணம் எப்படி வந்தது?
# அப்படிப் பார்க்க வேண்டாம். பழத்தின் தரத்தை சுருக்கமாக சொல்லும் யுக்தி என்று கொள்ளலாம்.
$ பழங்களின் தனித்துவம்தான்.
& பசிக்குப் புசிக்கக் கிடைக்கும்போது எல்லாப் பழங்களுமே உசத்திதான் !
> ஒரு படம் வெற்றி பெறுவதாலோ, ஒரு நடிகர், நடிகையாலோ நமக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது. இருந்தாலும் படம் வெற்றியை நினைத்து நாம் சந்தோஷப்படுவதும், நடிகரை யாரேனும் கிண்டல் பண்ணினால் நாம் கோபப்படுவதும் எதனால்?
# எனக்குப் பிடித்ததை மட்டம் தட்டினால் அது என் ரசனை மட்டம் என்று எடுத்துக் கொள்வதால் வரும் பிரச்சினை.
$ படம் / நடிகர் பற்றிய எந்தக் கருத்தும் என்னை பாதிப்பதில்லை.
& யார் யாரை கிண்டல் செய்தாலும் நானும் பொருட்படுத்துவதில்லை.
(சென்ற வாரம் நீங்க கேட்டுக்கொண்ட காரணத்தால் இதோ இங்கே தமன்னா அல்லாத ஒரு படம். )
> கம்பளி அணிந்த உடன் உடல் சூடு ஏற்படுவது எதனால்? இதே, தடித்தடியாக நாலைந்து சாதாரண போர்வையைப் போர்த்திக்கொண்டால் அந்த எஃபக்ட் கிடைப்பதில்லை.
# பிராணிகளின் சௌகரியத்துக்காக இறைவன் கொடுத்த வரம் மானிடப் புல்லுக்கும் பாய்கிறது.
$ உடல் ஈரத்தை உறிஞ்சி ஆவியாக்குவதில்லை.
> சிற்றின்பம், பேரின்பம் இரண்டுக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன?
# வயது, மனநிலை, இயலாமை காரணமாக அலுத்துப் போகும் தன்மையது சிற்றின்பம். உடல் உபாதையையும் மீறி ஆனந்தக் களிப்பில் இருப்பது பேரின்ப நிலை. ரமணர் புற்று நோய்வாய்ப்பட்ட நிலையில் கூட தன்னிலை மாறாது இருந்ததாகச் சொல்கிறார்கள்.
> பரம்பரை பரம்பரையாக நாம் நம் நிலத்தில் விளைவனவற்றைக் கொண்டு தயாரித்த நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் இவற்றைவிட, எங்கோ ஒரு இடத்தில் விளையும் ஆலிவ் ஆயில் நல்லது, பாமாலின் நல்லது, வனஸ்பதி நல்லது என்று எப்படி நம்மை மூளைச்சலவை பிறரால் செய்யமுடிகிறது?
# அச்சில் வருவதும் இணையத்தில் திரிவதும் சத்தியவாக்கு என்று நம்புவதால் வந்த வினை.
> நீங்கள் கப்பல்/போட் பிரயாணம் செய்திருக்கிறீர்களா? எப்படி உணர்ந்தீர்கள்?
# கப்பல் பயணம் செய்ததில்லை. பஹ்ரைனில் கடலில் படகு அதிவேகமாக ஆட்டம் போட்டு சென்றபோது ஏதோ பெரிய வீர சாதனையாகத் தோன்றியது. பழவேற்காட்டு உப்பனாற்றில் படகில் நாற்பது பேர்களில் ஒருவராக கடலை நோக்கிப் போனதும், சிங்கப்பூரில் ரிவர் cruise போனதும் உல்லாச அனுபவம்.
& மங்களூரில் (பனம்பூர் கடற்கரை) குடும்ப சகிதமாக போட் பயணம் செய்தோம். மிகவும் த்ரில் ஆக இருந்தது. நீரில் விசைப் படகு வேகமாக செல்லும்போது, இரண்டு பக்கங்களிலுமிருந்தும் முகத்தில் கடல் தண்ணீர் அலை அலையாக அடிக்க, தெப்பலாக நனைந்து பயணித்தோம்! கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
> மொட்டைமாடியில், இரவில் வானத்தைப் பார்த்து நிம்மதியாக உறவினர்களோடு அரட்டையடித்துக்கொண்டே சமீப காலங்களில் படுத்துக்கொண்டிருந்திருக்கிறீர்களா?
# கொசுக்கள் மலிந்த இந்த நாட்களில் இது கனவாகிப் போனது.
& சமீப காலங்களில் இல்லை.
===========
சென்ற வார பட்டிமன்றத்தின் நடுவர் (ஹி ஹி ! நாந்தேன் !!) தீர்ப்பு: " வெண் பொங்கலுக்கு சிறந்த side டிஷ் கத்தரிக்காய் புளி கொத்சு"
=========
சென்ற வார கேள்வி பதில் பகுதியில் பின்னூட்டங்களில், அப்பாதுரை அந்தப் பதிவில் இருந்த சில கேள்விகளுக்கு பதில்கள் பதிந்திருந்தார்.
அவை இங்கே :
பொய் சொல்லாமல் , பொய்யே சொல்லாமல் வாழ்தல் சாத்தியமா ?
ஒய்?
இன்னிக்கு மிக்ஸர் விரும்பிகள் நிறையபேர் இருப்பதுகண்டு இன்னொரு கேள்வி : கார மிக்சருடன் லேசா சர்க்கரை ஐ மீன் வெள்ளை சர்க்கரை தூவி சாப்பிட்டிருக்கீங்களா ?
மிக்சரில் எந்த மீனையும் தூவிச் சாப்பிட்டதில்லை.
இன்றைய தீநுண்மி போல, தீபாவளி எனும் சொல் முதற்கொண்டு, தமிழர்களிடம் தொற்றின காலம் எப்போது...?
யார் தமிழர்கள்?
தீபாவளி பக்ஷணம் செய்ய அம்மாவுக்கு உதவியது உண்டா? மனைவிக்கு?
சாப்பிட்டு உதவியதுண்டு.
இங்கே ஸ்ரீரங்கத்தில் பெருமாள் வருடா வருடம் தீபாவளி கொண்டாடுவதோடு அனைத்து சந்நிதி தெய்வங்களுக்கும் தீபாவளிப் பரிசு, புத்தாடைகள், எண்ணெய், சீயக்காய், பெண் தெய்வங்களின் சந்நிதிகளுக்கு மஞ்சள் பொடி உட்படப் பெருமாள் சார்பில் அளிக்கப்படுகிறது. இதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வேறே எந்தக்கோயிலில் இப்படி உண்டா? சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டுனு நினைக்கிறேன்.
நீ கே நீ ப?
தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் கர்நாடக இசை, மெலடி, குத்துப்பாட்டு, கிராமீய இசை இந்த ஒவ்வொன்றிலும் சிறந்தவர் என்று யாரை குறிப்பிடுவீர்கள்?
கர்நாடக இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
மெலடி: எம்.எஸ்.விஸ்வநாதன்
குத்துப்பாட்டு: எம்.எஸ்.விஸ்வநாதன்
கிராமீய இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
கர்நாடக இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
மெலடி: எம்.எஸ்.விஸ்வநாதன்
குத்துப்பாட்டு: எம்.எஸ்.விஸ்வநாதன்
கிராமீய இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
=======
இப்படி சுவையான, சுருக்கமான பதில்களை அளிக்கும் அப்பாதுரையை விடக்கூடாது என்று நினைத்தோம்.
விளைவு?
மின்நிலா பொங்கல் மலருக்காக வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அப்பாதுரை சாரின் பதில்களைப் பெற்று பிரசுரித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.
அவரிடம் இது பற்றி கேட்டோம்.
இந்த மாதம் முழுவதும் புதன் பதிவுகளில், பின்னூட்டங்களில், நீங்க அப்பாதுரை சாரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை,
" அ கே " ( or A K) என்று குறிப்பிட்டு பதிவு செய்யுங்கள். மற்ற வாசகர்கள் அ கே - கேள்விகளுக்கு பின்னூட்டங்களில் பதில்கள் எதுவும் பதிய வேண்டாம் என்று அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் கேள்விகளும், அவற்றிற்கு அப்பாதுரை அவர்களின் பதிலும் தொகுக்கப்பட்டு, மின்நிலா பொங்கல் மலரில் வெளியிடுகிறோம்.
அடுத்த வாரம் நாங்கள் பதில் சொல்லவேண்டிய கேள்விகளுக்கு " எ கே " (Or E K) என்று குறிப்பிட்டு கேட்கலாம்!
==========
பல வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க
மின்நிலா பொங்கல் மலரில் அந்த வார எங்கள் blog பதிவுகள் எதுவும் இடம் பெறாது. பொங்கல் மலர் ஜனவரி பதினான்காம் தேதி வியாழக்கிழமை வெளியாகும்.
மின்நிலா வழக்கமான வார இதழ்கள் எப்பொழுதும் போல திங்கட்கிழமைகளில் வெளியாகும்.
பொங்கல் மலருக்கு பலரும் படைப்புகளை அனுப்பிக்கொண்டு உள்ளீர்கள். எல்லோருக்கும் எங்கள் நன்றி.
==========
இந்த புதன் பட்டிமன்றம் :
காணும் பொங்கலை முன்னிட்டு --- தலைப்பு :
தமிழ்நாட்டில் எல்லா வகைகளிலும் சிறந்த ஊர் எது? ஏன்?
(தேவக்கோட்டைக்கு ஒரு ஓட்டு நிச்சயம்!)
==========
> சிற்றின்பம், பேரின்பம் இரண்டுக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன?
பதிலளிநீக்குஒன்று இட்லி, மிளகாய்ப்பொடி, நெஸ்கபே
மற்றது இட்லி, மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னி, சின்ன வெங்காய சாம்பார், தக்காளித் தொக்கு, அப்போது வறுத்தரைத்த பில்டர் காபி
ஒன்று எது? மற்றது எது?
நீக்கு> ஒரு படம் வெற்றி பெறுவதாலோ, ஒரு நடிகர், நடிகையாலோ நமக்கு ஒரு பிரயோசனமும் கிடையாது. இருந்தாலும் படம் வெற்றியை நினைத்து நாம் சந்தோஷப்படுவதும், நடிகரை யாரேனும் கிண்டல் பண்ணினால் நாம் கோபப்படுவதும் எதனால்?
பதிலளிநீக்குஇந்த இரு நடிகர்களையும் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். கோபமே வராது எனக்கு. ஒருவர் -சன் மற்றவரும் -சன்.
எனக்குத் தெரிந்து அஞ்சு -சன் இருக்கிறார்கள். நீங்க சொல்வதில் முதல் சன் தெரியும். மற்றவர் யார்?
நீக்குஇதிலெல்லாம் சந்தேகமா? சி-சன் அடுத்தது ஜெ-சன்.
நீக்குஎன் கணக்குல ஒண்ணு சரி.
நீக்குதேங்காய் சீனிவாசன்
நீக்குநான் சொன்ன -சன் கமலஹாசன்.
நீக்குநான் சொன்ன ஐந்தாவது சன் : பவர் ஸ்டார் சீனிவாசன் !!
நீக்கு> திருமணத்துக்குச் செல்வதற்கு மிக முக்கியக் காரணங்களில், அங்கு போடப்படும் டிஃபன், விருந்தும் முக்கியமானது என்பது உண்மையா?
பதிலளிநீக்குபதின்ம நாட்களில் உண்மை. [யாருக்குக் கல்யாணம் என்பது கூடத் தெரியாமல் கல்யாண சீசன் டயத்தில் மாம்பலம் வடபழனி பகுதி கல்யாண மண்டபங்களில் நிறைய புகுந்து சாப்பிட்டிருக்கிறோம். ஒரே ஒரு தடவை மாட்டிக்கொண்ட தருணம் பார்த்து சகிக்கவில்லை சமையல்.]
:)))))
நீக்குநானும் என் ஒன்றுவிட்ட சகோதரனும், ஒரு முறை அதே ஏரியாவில் ஒரு கல்யாண ரிசப்ஷன் - வெளியே பந்தலில் என். ரமணி புல்லாங்குழல் கச்சேரி நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஒ வி சகோதரன் கொஞ்சம் த்ரில் டைப் ஆசாமி. 'டேய் வாடா' என்று என்னையும் இழுத்துக்கொண்டு உள்ளே போய் விட்டான். கூட்டத்தில் நடுவே இருந்த காலி இருக்கைகள் இரண்டில் உட்கார்ந்துகொண்டோம். எனக்கு மனசு திக் திக் - அவன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சேரியை தலையை ஆட்டியவண்ணம் கண்ணை மூடி ரசிக்க ஆரம்பித்துவிட்டான்.
நீக்குஒருவர் வரிசைகளுக்கிடையே புகுந்து எங்களை நோக்கி வந்தார்.
பயத்தில் நானும் கண்களை மூடி கச்சேரி ரசிப்பவனைப் போல நடிக்கலாமா என்று யோசிப்பதற்குள் அவர் அருகே வந்துவிட்டார்.
என்னைப் பார்த்து " டிபன் சாப்பிட்டாயிற்றா ?" என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் கண்ணைத் திறந்து பார்த்த ஒ வி ச - 'வேண்டாம்' என்று தலையை ஆட்டினார்.
விசாரித்தவர் உடனே போய் இரண்டு Fanta orange பாட்டில்களைக் கொண்டுவந்து, மூடி உடைத்து, எங்களிடம் கொடுத்து, 'இதையாவது குடிங்க' என்றார். வாங்கிக் குடித்தோம்.
கச்சேரி முடிந்து, கை தட்டி பாராட்டிவிட்டு வெளியே வந்த பிறகு ஒ வி ச விடம் 'இவர்கள் ஏற்கெனவே உனக்குத் தெரிந்தவர்களா?' என்று கேட்டேன்.
" யாருக்குத் தெரியும்?" என்றான்.
அது ஒரு ஜாலியான காலம்.
நீக்குஒரு கல்யாணத்தில் அட்டகாசமான தேங்காய்ப்பால் பாயசம் போட்டார்கள் என்று நண்பன் எங்கள் அனைவரின் அப்போதைய மொத்த சொத்தான ஐந்து ரூபாயை ஓதிவிட்டான் (மொய்?); அவனை மொத்தி எடுத்து பல்லாவரத்துக்கு வித்தவுட்டில் பயந்து கொண்டே வந்தோம்..
:))
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகேள்விகள் பதில்கள் சுவாரஸ்யம்.
அப்பாதுரையைக் கேட்க கேள்விகள் அனுப்பிவிட்டேன்.
மீண்டும் கேட்கத் தோன்றும் கேள்விகளை
பிறகு அனுப்புகிறேன்.
ஊறுகாயில் மாவடு விட்டுப் போச்சோ.
இன்னும் கீதாவைக் காணோமே.
me? arrived!
நீக்குவாங்க, வாங்க!
நீக்கு//ஊறுகாயில் மாவடு விட்டுப் போச்சோ.// மாங்காய் வகையறாவில் மாவடுவும் சேர்ந்து விடுகிறது.:)
நீக்கு//பொங்கல் மலருக்காக வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அப்பாதுரை சாரின் பதில்களைப் பெற்று பிரசுரித்தால் நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குவாய்ப்புக்கு மிக நன்றி
நன்றிக்கு நன்றி!!
நீக்குகோர்ட்டில் விசாரணை நடந்து தண்டனை கிடைத்த பிறகு
பதிலளிநீக்குயாருக்காகவும்
எந்தக் காரணம் கொண்டும் வாதாடக் கூடாது.
இதைப் பற்றி இண்டெலிஜென்ஸ் அதிகாரி
விவரமாக விளக்கி இருந்தார்.
நம் ஊரில் தான் இந்த மாதிரி விட்டுக் கொடுக்கிறார்கள்.
only in Tamilnadu, I think! :(
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் உடல், மன நலத்துக்கும், அமைதியான வாழ்க்கைக்கும் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஆம்.
நீக்குபுதன் பட்டி மன்றக் கேள்விக்கு ஒரே ஒரு ஊர் சொல்ல்ணும் என்றால் மதுரை.
பதிலளிநீக்குஇரண்டாவதும் சொல்லலாம் என்றால் கோவை.
மூன்றாவதாகச் சென்னை:)
!!!
நீக்குஎப்படி வாழ்க்கையை ஆரம்பித்த சேலத்தை நீங்க மறக்கலாம்னு நான் கேட்க மாட்டேன் வல்லிம்மா
நீக்குநிக்கி கல்ரானி ...இடதுபுறம் இருப்பவர்.
பதிலளிநீக்குசரியான வம்பு தான்.:)
:))
நீக்குஜாதிக்காய் ஊறுகாய்? கேள்விப்பட்டதே இல்லையே.
பதிலளிநீக்குநீங்க ஊறுகாய் கேள்விப்பட்டதில்லை, நான் காய் கேள்விப்பட்டதில்லை
நீக்குஊட்டியில்/குற்றாலத்தில் (?) கிடைக்கும். ஆனால் நாங்க வாங்கினதில்லை. ஏமாற்று இருக்குமோனு சந்தேகமா இருந்தது.
நீக்குஜாதிக்காய் ஊறுகாய் நானும் கேள்விப்பட்டதில்லை வல்லி அக்கா. ஊறுகாயே ஒரு வகை intoxication, இதில் ஜாதிக்காய் ஊறுகாயா???
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலம் மிகத் திகழ்க எங்கெங்கும்...
வணக்கம், வாங்க!
நீக்கு//ஒரு பேட்டரி வாங்க கடல் கடந்து வரவேண்டுமா என்ன! தென்னை மரத்தில் புல் கிடைப்பதில்லை என்கிறமாதிரி இல்லை?//
பதிலளிநீக்குவக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம். பேட்டரி புதிதாக இருந்தால் தான் சரியாக செயல்படும். எத்தனை நாட்கள் காத்திருப்பு என்று அறியாத போது செயலுக்கு சற்று முன் வாங்குவது தான் சரி.
ஊறுகாய் என்னும்போது தமிழ் ஆசிரியர் வினைத்தொகைக்கு உதாரணம் சொன்னது நினைவில் வந்தது. யாரும் இஞ்சி, மற்றும் மாங்காய் இஞ்சி பற்றி கூறவில்லையே ஏன்?
Jayakumar
//தமிழ் ஆசிரியர் வினைத்தொகைக்கு உதாரணம் சொன்னது
நீக்கு:-)
//பிரபல எழுத்தாளர்களுக்கு மட்டும் பசிக்காதா// - நாம வெறும் பணத்தைப் பற்றியே எண்ணுகிறோமோன்னு நினைக்கிறேன். நல்ல ஓட்டப்பந்தய வீரன், தற்போதும் தன் உடல் சக்தி எந்த நிலையில் இருக்கிறது என்று assess பண்ணுவதற்காக தானும் போட்டியில் கலந்துகொள்வதில்லையா? தங்கள் படைப்புத் திறனை போட்டிக்கு உட்படுத்திக்கொள்வதில் தவறில்லை.
பதிலளிநீக்குEstablished எழுத்தாளனை, காசை நோக்கி நினைக்கும் வகையில் வைப்பதற்கு தமிழ்ச் சமூகம்தான் வெட்கப்படணும்.
நான் சொன்னது வயிற்றுப் பசி மட்டும் அல்ல - புகழ் பசியும் !
நீக்குபா.வெ. இன்னும் நார்த்தங்காயை விடவில்லையா? கேள்வி பதிலில், யாருக்குமே தெரியாத மூங்கில் குருத்து ஊறுகாய், ஜாதிக்காய் ஊறுகாய் என்றெல்லாம் சொல்லி, வட நாட்டில் கிடைக்கும் காய்கறி ஊறுகாய், திராட்சை இலை ஊறுகாய் என்பதுபோல வயிற்றில் புளி கரைக்கலாமா?
பதிலளிநீக்குஹா ஹா !!
நீக்கு/பா.வெ. இன்னும் நார்த்தங்காயை விடவில்லையா?// ஏன் விடணும்? இந்த பெங்களூரில் கிடைப்பதில்லை அல்லது கிடைக்குமிடம் தெரியவில்லை. அதனால் தற்காலிகமாக விட்டிருக்கிறேன். :(
நீக்கு//தெரியாமல் ஒரு பாட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக மட்டுமே// - கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எத்தனை கோர்ட், எத்தனை நீதிபதிகள், எத்தனை விசாரணை - எல்லாருமே ஒன்றும் தெரியாதவர்கள், நாம் மட்டும்தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்று நினைக்கலாமா? நளினி மற்றும் சிலர், குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்குப் போய், அது நடந்த உடன், அங்கிருந்து தப்பி, வேஷம் போட்டுக்கொண்டு, ஆபீஸிலிருந்து கிளம்பி.... - நமக்கு எப்போதுமே, நம்மைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்படாத குற்றத்தை மிகச் சாதாரணமாக எண்ணி இரக்கம் கொள்வோம். நம் சம்பந்தப்பட்டது என்றால் அதனை இறக்கும் மட்டும் மறக்கமாட்டோம்.
பதிலளிநீக்குகோவையில் சிறு குழந்தையை ஒருவன் பங்கப்படுத்திக் கொன்றான். அவனைச் சுட்டதை நாம் ஏன் ஏற்றுக்கொண்டோம்? பாவம்..கொரோனா வந்து செத்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்? அதுபோல அந்தக் குழந்தைக்கு நடந்துவிட்டது. தவறு செய்தவன் தமிழன் அல்லவா என்று ஏன் சொல்லவில்லை? ஏதோ அந்தச் சமயத்தில் மனநிலை பிறழ்ந்து அந்தக் குற்றத்தைச் செய்துவிட்டான், போகட்டும் விட்டுவிடலாம் என்று இருந்திருக்கலாமே. எல்லாக் குற்றத்தையும் வள்ளலார் வழியில் நாம் எண்ணலாமே.
ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது? பாதிக்கப்பட்டவன் அவன் ரத்த சொந்தங்கள் மட்டும்தான் குற்றத்தை மன்னிக்க முடியும். வேறு யாரும் எதுவுமே செய்ய இயலாது.
பின்னணி புரியலயே
நீக்குஜாதிக்காய் ஊறுகாய்தான் மிக அருமை என்று சொல்லும்போதே புரிந்தது, இந்த மாதிரி வெண்பொங்களுக்கு புளி கொத்சு என்று ஏடாகூட ரசனை இருக்கும் என்று.
பதிலளிநீக்குபுளி கொத்சுதான் டாப்கிளாஸ் என்றால் எல்லா இடங்களிலும் இதனை வெண்பொங்கலுக்குக் கொடுக்கணுமா வேண்டாமா? எனக்குத் தெரிந்து எங்கயுமே உங்கள் ரசனைக்குரிய காம்பினேஷன் கிடையாது.
நல்லதுக்குக் காலமில்லை ஐயா !! நாம் என்ன செய்வது!
நீக்குஊட்டி நண்பர்கள் யாராவது இருந்தால் அவர் மூலமாக ஜாதிக்காய் ஊறுகாய் ஒரு bottle வாங்கி தயிர் சாதத்திற்குத் தக்க துணையாக சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்.
நீக்குஎனக்கு ஊட்டி நண்பரின் நண்பர்தான் தெரியும். பெங்களூரில் அவர் இருக்கும் இடத்தைத் தேடணும். முன்பாவது அவர் குரோம்பேட்டையில் இருந்தார்
நீக்கு//புளி கொத்சுதான் டாப்கிளாஸ் என்றால் எல்லா இடங்களிலும் இதனை வெண்பொங்கலுக்குக் கொடுக்கணுமா வேண்டாமா?
நீக்குஇது கேள்வி. (நான் ஒரு ஹோட்டலில் கூட புளி கொத்சு பொங்கலுடன் கொடுத்துப் பார்த்ததில்லை.)
அரிசி உப்புமாவுக்குத் தான் புளி கொத்சு! வெண்பொங்கலுக்குக் கத்திரிக்காய், வெங்காயம் போட்ட சிதம்பரம் கொத்சு முறையில் பண்ணினது.
நீக்குஅது வேறொன்றுமில்லை, புளி கொத்ஸுவிற்காக புளி கரைத்து கரைத்து சரக்கு மாஸ்டரின் உதவியாளருக்கு கை புண்ணாகி விட்டதாம், மேலும், பொங்கல்+புளி கொத்ஸு என்றால் அதைத்தவிர மற்ற ஐட்டங்கள் போணியாகவில்லையாம், அதனால்தான் ஹோட்டல்களில் புளி கொத்ஸுவை கை விட்டு விட்டார்கள். ஹி ஹி .
நீக்கு:))))))))
நீக்குஎந்த ஊரிலும் காதர்க் கடைகளில் ஊறுகாய் கிடைக்கிறது
நீக்குமுயன்ற்ரு பாருங்கள்
மாகாளி
ஜாதிக்காய்
மூங்கில் குருத்து
தாமரத்தண்டு
இன்னும் பல
கதர்க்கடை
நீக்குAK
பதிலளிநீக்கு1. வானம் வசப்படும், எண்ணமே வாழ்வு, நூறுவயது வாழ்வது எப்படி என்றெல்லாம் புத்தகங்கள் எழுதும் ஆசிரியர் எவருமே தாங்கள் எழுதியதைக் கடைபிடித்ததாகத் தெரியவில்லையே. அவர்களுக்கே தாங்கள் எழுதுவதில் நம்பிக்கை இல்லையா?
2. பாவம், புண்ணியம் என்பதை ஓரிரு வரிகளில் விளக்க முடியுமா?
3. உண்ணும் உணவுக்கும் ஒருவரது நடத்தைக்கும்-குணத்துக்கும் தொடர்பு உண்டா?
4. அம்மா என்று நினைக்கும்போது நீங்கள் மிஸ் செய்யும் ஒன்று என்ன?
5. திரும்ப பதின்ம வாழ்க்கை வாழ்ந்த இடத்திற்குத் திரும்பி அந்தச் சூழலில்-வீடு, சுற்றுச்சூழல், வாழ இயலுமா?
அவருக்கு அனுப்பி வைக்கிறேன். (அப்பாதுரை சார் - பதில்களை எனக்கு அனுப்புங்க- பொங்கல் மலர் கே ப பகுதிக்காக!)
நீக்குஅப்பாதுரை அவர்களின் சுறுக் பதில்கள் நன்று.
பதிலளிநீக்குஇந்த வாரத்தின் கேள்வி பதில்களையும் ரசித்தேன்.
தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
நன்றி.
நீக்கு//மொட்டைமாடியில், இரவில் வானத்தைப் பார்த்து நிம்மதியாக உறவினர்களோடு அரட்டையடித்துக்கொண்டே// கூடவே காற்றில் மிதந்து வரும் நாதஸ்வர இசை, இதை ஏன் விட்டு விட்டீர்கள்.? அவையெல்லாம் நாம் தொலைத்து விட்ட பொற்காலங்கள் ஐயா! மீண்டு வரவே வராது. ஹு.....ம்.....!
பதிலளிநீக்குபானுக்கா அதே அதே நாதஸ்வர இசை செமையா இருக்கும் அதுவும் மைல்ட் வால்யூமில்...இப்போதும் சில சமயம் ஏதேனும் ஒரு நாதஸ்வரம் கேட்பதுண்டு இரவில் படுக்கும் முன் ஆனால் மொட்டைமாடியில் இல்லை!!!! பெரும்பாலும் நாதஸ்வரம் இல்லை என்றால் ஏதேனும் ஒரு இசைக்கருவி கேட்டுத் தூங்குவதுண்டு. இரவு புல்லாங்குழலும் இனிமையா இருக்கும் கேட்க.
நீக்குபட்டாசு வெடித்தால் கண்ணழகிக்கு புல்லாங்ககுழல் போட்டுவிட்டால் அமைதியாகப் படுத்துவிடுவாள்!
கீதா
பொதிகைல இசை அரங்கத்தில் (லைவ்) நாதஸ்வர இசை என்றதுமே ஆஹா ரொம்பநாளாச்சே கேட்கலாமே என்று உட்கார்ந்தால், வெறும் சினிமாப்பாடல்கள். இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது?
நீக்குஅடக் கடவுளே!
நீக்குஇரண்டு நாட்கள் முன்பு பொதிகையில் ஷேக் சின்ன மௌலானா சாஹேபின் பேரனின் பேட்டியை கேட்டேன். இரவில் நாதஸ்வரம் கேட்டு விட்டு தூங்கச் செல்லுங்கள், உங்கள் உடலில் இருக்கும் வியாதியெல்லாம் விடை பெற்று சென்று விடும். என்றார்.
பதிலளிநீக்குஅப்படியா! ஆச்சரியமா இருக்கு.
நீக்கு//இருக்கும் வியாதியெல்லாம் விடை பெற்று சென்று விடும்.// புதிய வியாதிகள் உட்புகுந்துவிடும் என்று சொல்ல நினைத்திருப்பாரோ?
நீக்குஇரவில் தூங்கப்போகுமுன் எதைக் கேட்கிறோமோ அது நம் மனதில் சுற்றிக்கொண்டே இருக்கும்.
கட்டமரன், போட், கப்பல் பயணம் செய்த அனுபவம் உண்டு. இதில் கட்டமரன் தான் ரொம்பவே த்ரில், வயிற்றில் அமிலம் சுரக்கும்!
பதிலளிநீக்குகீதா
ஆ !! சமீப காலங்களில், கலைஞருக்குப் பின் நான் கேள்விப்படும் கட்டுமரம் !!
நீக்குமொட்டை மாடியில் 10 வருடங்களுக்கு முன் உறவினர்களுடன் படுத்த அனுபவம் உண்டு. மதுரையில். வானைப் பார்ப்பது என்ன சுகானுபவம் என்றால் கூடவே நல்ல இசை இருந்தால் ஆஹா. ரொம்பப் பிடிக்கும். ஆனால் அன்று அது மட்டும் இல்லை..
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்கு//மதுரையில். வானைப் பார்ப்பது என்ன சுகானுபவம் என்றால்// - நான் 8வது ஃபைனல் எக்ஸாம் முடித்தபிறகு, தாளவாடி உயர்நிலைப்பள்ளி அரசு அலுவலர்கள் இருவர் அவங்க ஊருக்கு வெகேஷனுக்குச் செல்லும்போது என்னை அவங்களோட அனுப்பினாங்க. அதில் ஒருவர் ஈரோடு, இன்னொருவர் மதுரை. மதுரைக் காரரிடம் என்னை திருநெல்வேலி பஸ்ஸில் ஏற்றிவிடச் சொல்லியிருந்தார். மதுரையில் ஒரு நாள் தங்கினேன். அப்போ, வெயில் காலம் என்பதால், அவங்க வீட்டு மொட்டை மாடியில் நிறைய தண்ணீர் தெளித்தார்கள், இரவில் மொட்டை மாடியில் படுக்க சௌகரியமாக இருக்கும்னு.
நீக்குஇதுல மதுரைல வானத்தைப் பார்ப்பாங்களாம், சுகானுபவமாம்
:))))
நீக்குஎன்னது திருமணங்களுக்குச் செல்வது சாப்பிடவா..? எல்லா திருமணங்களிலும் பால் பாயசம், உ.கி.கார கறி, அவியல், பீன்ஸ் பருப்பு உசிலி, மினி ஜாங்கிரி என்று ஒரே மெனு. ரிஸப்ஷன்களில் தடிமனாக சப்பாத்தி, அல்லது எண்ணெய் குடித்திருக்கும் பூரி, சன்னா, புலாவ், சாம்பார் சாதம், தயிர் சாதம், ஐஸ் க்ரீம் வித் ட்ரை குலாப் ஜாமூன்.. இதுதானே? அதையும் வெட்கம் கெட்டு போய் நாமே சாப்பிட வேண்டும். சாப்பிட வாருங்கள் என்று அழைக்கவோ, பந்தி விசாரிக்கவோ, ஆட்கள் கிடையாது. நீண்ட நாட்களாக பார்க்காத உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கவே திருமணங்களுக்கு செல்வேன்.
பதிலளிநீக்குஉண்மை, உண்மை!
நீக்குஇவங்க ஒருவேளை வாரத்துக்கு ஒரு திருமணம், விசேஷத்துக்குச் செல்றவங்களாக இருக்குமோ?
நீக்குவிகடனில் ஒரு தடவை போட்டிருந்தார்கள். தஞ்சைப் பகுதியில், இந்தத் தவிசுப் பிள்ளைதான் திருமணத்துக்கு உணவு தயாரிப்பு என்று கேள்விப்பட்டு அதற்காகவே செல்வார்களாம்.
இப்போல்லாம் ஸ்டாண்டர்ட் மெனு. அதுவும் தவிர அந்த மெனுவில் உள்ள பலவற்றை நாமே அடிக்கடி செய்து சாப்பிடுவோம். அதனால ஸ்பெஷல் இல்லை.
இவங்க ஒருவேளை வாரத்துக்கு ஒரு திருமணம், விசேஷத்துக்குச் செல்றவங்களாக இருக்குமோ?//சென்னையில் இருந்தவரை ஆமாம்.
நீக்குஅட! பரவாயில்லையே!
நீக்குதமிழ் நாட்டில் எல்லா வகைகளிலும் சிறந்த ஊர் என்றால் கோவை எனப்படும் கோயம்புத்தூர்தான். வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் , மரியாதையாக பேசி பழகும் மக்கள். இனிப்பான சிறுவாணி தண்ணீர்(இப்போது சுவை மாறி விட்டதாமே?)
பதிலளிநீக்குஅடுத்தது நான் பிறந்து வளர்ந்த திருச்சி. தமிழகத்தின் மத்தியில் இருப்பதால் இங்கிருந்து தமிழகத்தின் எல்லா மாவட்டங்களும் சுலபத்தில் அடையும் தூரத்தில். காவேரி பாயும் அழகான ஊர். கோவில்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் பஞ்சம் கிடையாது.
சுவையான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்த வாரம் நிக்கி கல்ராணியின் தரிசனம் கிடைத்தது. அடுத்த வாரம் மடோனா செபாஸ்டியனை எதிர்பார்க்கலாமா?
பதிலளிநீக்குஅடுத்த வாரத்துக்கான கேள்வியா?
நீக்கு//தரிசனம் கிடைத்தது// - இவங்கதான் குஷ்பு கோவிலுக்கும் நன்கொடையாளர்களில் ஒருவராக இருந்திருப்பாரோ? தரிசனமாமே.
நீக்குஎந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்திலும் அழகின் வடிவமாக இருக்கிறாளோ,அந்த தேவியை வணங்குகிறேன்.
நீக்கு// எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்திலும் அழகின் வடிவமாக இருக்கிறாளோ,அந்த தேவியை வணங்குகிறேன்.// ஆஹா ! சூப்பர்.
நீக்குஆஹா.... இது புது விளக்கமாக இருக்கே... ஒன்று பா.வெ. 'சாமியாரிணி' ஸ்டேடஸை நோக்கிப் போய்க்கிட்டிருக்காங்க. ... இல்லைனா இளைஞர்களுக்கு தப்பிக்க ஒரு வழி காண்பிச்சிருக்காங்க. எந்த அனுமானம் சரியா இருக்கும்?
நீக்கு//சந்தித்தும் பேசவில்லையே, புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லையே// - இதைக் கேட்டதற்குக் காரணம், நான் பஹ்ரைன் செல்ல சென்னை ஏர்போர்ட் லாஞ்சில் இருந்தபோது, கமலஹாசன் அங்கு வந்து உட்கார்ந்திருந்தார். பேசத் தயக்கம். அதிகாலை என்பதால் கொஞ்சம் கண் அயர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் எஸ்.பி.பி, அவர் மனைவி மற்றும் ஷைலஜாவுடன் வந்து அதே லாஞ்சில் உட்கார்ந்தார்கள். எஸ்.பி.பி. கமலை டிஸ்டர்ப் செய்யவில்லை. நான் நினைத்திருந்தால் அவங்களிடமும் கமலிடமும் பேசி, போட்டோ எடுத்துக்கொண்டிருக்கலாம். அதனை மிஸ் பண்ணிவிட்டேன். அதுபோல, மும்பையிலிருந்து சென்னை செல்லவேண்டிய விமானத்துக்கு, கடைசி நிமிடத்தில் ஏர்போர்ட் பஸ்ஸில் சென்றபோது இரண்டு மூன்றுபேர்தான் பஸ்ஸில் இருந்தோம், நான், காவஸ்கர் மற்றும் இன்னொருவர். அப்போதும் போட்டோவோ இல்லை ஆட்டோகிராபோ வாங்கவில்லை. இன்னொரு முறை சென்னை-மும்பை முதல் வகுப்பில் பயணம் செய்தபோது டி.எம்.எஸ். எனக்கு இடதுபக்கம் இடைவெளி விட்ட சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போ அவரிடம் பேசத் தயங்கிவிட்டேன்.
பதிலளிநீக்குபிரபலங்களைக் கண்டால் பேசுவதற்கு எனக்கும் தயக்கம் உண்டு. ஏதேனும் 'சுள்'ளென்று சொல்லி அவமானப் படுத்திவிடுவார்களோ என்ற பயமும் காரணம்.
நீக்கு//தமிழ்நாட்டில் எல்லா வகைகளிலும் சிறந்த ஊர் எது? ஏன்? // - யாருடைய அம்மா மிகவும் சிறந்தவர் என்று கேட்பதுபோல இருக்கிறது. எனக்கு எங்க நெல்லை ஜங்ஷன், பாளையங்கோட்டை மற்றும் என் கிராமம்.
பதிலளிநீக்குஎல்லாவகையிலும் ஒரு ஊர் சிறப்பாக இருக்க, 1. எல்லாம் கிடைக்கணும் காய், பால், மளிகை, நல்ல ஹோட்டல், இனிப்பு கடைகள் 2. சினிமா தியேட்டர், கோவில், குளம் அல்லது ஆறு இவை இருக்கணும் 3. மத ஒற்றுமையும் பிரச்சனைகள் இல்லாத அமைதியும் இருக்கணும் 4. கள்ளர் பயம் இருக்கக்கூடாது 5. அங்கிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல இரயில் பேருந்து போன்றவை இருக்கணும் 6. ஆட்டோ ஓட்டுநர்கள் என்ற பெயரில் பயணிகளிடம் அடாவடி செய்பவர்கள் - சென்னையைப் போல இருக்கக்கூடாது. இப்போ சொல்லுங்க...இந்த மாதிரி ஊர் எங்க இருக்குன்னு
ஆ ! பாளையங்கோட்டை என்று சொன்னாலே - - - - எனக்கு வேற ஞாபகம்தான் வரும்!
நீக்குஸ்ரீராமுக்கும் உங்களைப் போலத்தான் நினைவுக்கு வந்து வியாழன் பதிவில் சொல்லியிருக்கிறாரே ஹாஹா
நீக்கு:))
நீக்குபடத்தில் வலதுபுறம் இருப்பவர் யார் என்று சொல்லவேயில்லையே?
பதிலளிநீக்குயார் என்று எனக்கும் தெரியவில்லை. ஏதோ ஆன்மீகப் பெரியவர் என்று நினைக்கிறேன்!
நீக்கு