** அம்மா மினி கிளினிக் திட்டம்: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னை: தமிழகம் முழுவதும் 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று (டிச.,14) துவக்கி வைத்தார்.
மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, முதல் கட்டமாக 630 ‛அம்மா மினி கிளினிக்'குகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் முதல்கட்டமாக 47 இடங்களில் மினி கிளினிக் துவங்கப்படுகிறது.
இந்த ‛அம்மா மினி கிளினிக்'கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். சளி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 12 வரையும், மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையும் கிளினிக்குகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
** அம்மா மினி கிளினிக் என்பது, 'அம்மா நலமகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிறகு வந்த செய்தி தெரிவிக்கிறது.
====
ஐதராபாத்:தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில், பசித்தவர்கள் வந்து இலவசமாக சமைத்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து செல்லவும், மாணவர்கள் படித்து பயன்பெற, பல புத்தகங்கள் அடங்கிய, 'அனைவருக்குமான வீடு' என்ற சேவையை, அப்பகுதியை சேர்ந்த டாக்டர் சூரிய பிரகாஷ். இவரது மனைவி டாக்டர் காமேஸ்வரி, கடந்த, 14 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, 'அனைவருக்குமான வீடு' என்ற சேவையை துவங்கினார். ஐதராபாதின், கோத்தாபேட் என்ற இடத்தில், நான்கு அறைகளை உடைய வீடு ஒன்றை உருவாக்கி, அதை ஏழை மக்களுக்காக, 24 மணி நேரமும் திறந்து வைத்துள்ளார்.இந்த வீட்டுக்கு, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அங்கு, சமையலுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் இருக்கும். தங்களுக்கு தேவையானதை சமைத்து சாப்பிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்து செல்லலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
இந்த அமைப்பினர் கொரோனா தொற்று காலத்தில் சமூக ஆர்வலர்களின் உதவியோடு மக்களின் பசி போக்க பத்து ரூபாய் பசிப்புரட்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டகுடும்பங்களுக்கு தலா ரூ. 1000 மதிப்புள்ள பலசரக்கு மற்றும் 5 கிலோ அரிசி வழங்கினர்.தொடர்ந்து 67 நாட்கள் ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர், முதியோர்களுக்கு 3 வேளை உணவுகள் வழங்கினர். இதை ஆண்டு முழுவதும் தினம்தோறும் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்கும் நோக்கத்தில்பசி புரட்சி அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
=====================
உடுப்பி மாவட்டம் பைண்டூரைச் சேர்ந்த அனுதீப் ஹெக்டேவுக்கும், மினுஷா காஞ்சனுக்கும், சமீபத்தில் திருமணம் நடந்தது. லட்சத்தீவுக்கு தேனிலவு செல்வது குறித்து ஆலோசித்த அவர்களுக்கு, தங்கள் சொந்த ஊரில் சோமேஷ்வரா கடற்கரையில், கழிவுப் பொருட்கள் சேர்ந்திருப்பது நினைவுக்கு வந்தது. அவற்றை அகற்ற இருவரும் முடிவு செய்தனர்.
அடுத்த நாள் தேனிலவுக்கு செல்லாமல், கையுறைகள் மற்றும் கோணிப்பையுடன் கடற்கரைக்கு புறப்பட்ட அவர்களை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி கவலைப்படாத அவர்கள், தங்கள் பணியை ஆர்வமுடன் துவக்கினர். இதுகுறித்து அவர்கள், சமூக வலைதளங்களில் தகவல் ஏதும் பகிரவில்லை. இருப்பினும், சேவை குறித்து அறிந்த, 1,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள அவர்களுடன் கைகோர்த்தனர். அனைவரும் இணைந்து கடற்கரையில் இருந்த, 600 டன் கழிவுகளை சேகரித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியதால், புதுமண தம்பதியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
========================
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் மல்லேஸ்வர் ராவ், ஓட்டல், திருமணங்களில் வீணாக்கப்படும் உணவுகளை சேகரித்து, 2,000 பேரின் பசியை போக்கும் சேவை செய்து வருகிறார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை, மனுவுடன் ஒரு மூதாட்டி நின்றிருந்தார். அவரிடம் கலெக்டர் அன்பழகன் விசாரித்தபோது, அவர் கோரிப்பாளையம் பாத்திமா, 78, எனத் தெரிந்தது.அவர், வயல்காட்டு தெருவில், பாண்டியராஜன், வனஜா தம்பதி வீட்டில், 50 ஆயிரம் ரூபாயில் ஒத்திக்கு குடியிருந்தார்.
தற்போது, வீட்டை காலி செய்து அருகில் வசிக்கிறார். ஒத்திப் பணத்தை திரும்பி தராததால், மனு கொடுக்க வந்தது தெரிந்தது. உடனடியாக, பாத்திமாவை, அவரது வீட்டிற்கு தன் காரில் கலெக்டர் அழைத்து சென்றார். தாசில்தார் முத்துவிஜயனிடம், விசாரித்து, விரைவில் பணத்தை பெற்று கொடுக்க உத்தரவிட்டார். தாசில்தார் விசாரித்தபோது, வனஜாவும் வறுமையில் இருப்பதால், வீட்டை மறு ஒத்திக்கு விட்டு, பணத்தை திருப்பி வழங்குவதாக உறுதியளித்தார்.
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇன்றைய பாசிடிவ் செய்திகள் மிகவும் நன்று
காலை வணக்கம் நெல்லை. வாங்க... நன்றி.
நீக்குஅனேகமான செய்திகள் படித்திராதவை.
பதிலளிநீக்குஇலவச தங்கும் மற்றும் உணவு தயாரித்துக்கொள்ளும் வசதி - புதுமைச் சிந்தனை. இதைப் படித்தவுடன், மும்பையில் அந்தக் காலத்தில் இத்தகைய facility ஒன்று இருந்ததை எனது அண்ணன் உபயோகித்தது நினைவுக்கு வருது (மிக்க் குறைந்த பணத்துக்கு ஒரு படுக்கை, அங்கு தங்கி மும்பை வேலைகளை முடித்துக் கொள்ளலாம். ஹோட்டல்ல தங்க எக்கச்சக்கமாக ஆகும் என்ற நிலைமை)
ஓ... அப்போதே இருந்ததா?
நீக்குவீணாகும் உணவு -- மிகப் பெரிய சேவை இது. மற்றவர்களுக்காக தான் இரந்து சேவை செய்ய மனமும் நேரமும் உழைப்பும் வேண்டும். வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஆம். உண்மை. என்னால் எனக்கான அத்யாவசிய வேலைகளையே நேரத்துக்கு ஒழுங்காய்ச செய்து கொள்ள முடிவதில்லை!
நீக்குஇனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம். அன்பு முரளிமா.
நீக்குஎல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய இறையிடம் பிரார்த்தனைகள்.
வணக்கம் வல்லிம்மா... வாங்க..
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் நன்மை பெருகிடப் பிரார்த்தனைகள். மழை நின்று சூரியன் வெளிவந்து ஒளி வீசிப் பிரகாசிக்கவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க...
நீக்குஅத்தனை செய்திகளும் நலமானவை நன்றி. தேனிலவை,கடற்கரை சுத்தத்தில் செலவழித்த தம்பதியர்க்கௌ இறைவன் நல் வாழ்வை அளிக்கட்டும்.
பதிலளிநீக்குபசி போக்கும் அனைவரும் வித விதமான முறையில் நன்மை
செய்து வருகிறார்கள்.
அதுவும் வீணாகும் உணவைச் சேகரித்துக் கொடுப்பவர்களுக்கு
எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
இந்தக் கொரோனா காலம் தான் எத்தனை
விதமான நன்மைகளை வெளிக்கொணர்கிறது!!!!!!
இந்த செய்திகள் அனைத்தும் நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருக்கிறது.
மிக நன்றி மா ஸ்ரீராம்.
நன்றி அம்மா.
நீக்குஎல்லாச்செய்திகளும் புதுசு. மும்பைப் படுக்கை நெல்லை சொன்னது போல் புனேயிலும் உண்டு. கல்கத்தாவிலும் உண்டு. ஆனால் அதுவும் இப்போதெல்லாம் அதிகக் கட்டணம். பின்னர் வரேன்.
பதிலளிநீக்குகட்டணம் என்றால் அத்தமில்லையே...
நீக்குவெளில தங்க 500 ரூபாய் ஆகும் என்ற நிலைமையில் அப்போ (89) படுக்கைக்கு 30-50 ரூபாய். இது வேலைக்கு இண்டர்வியூக்கு போறவங்க, எம்பஸி வேலைக்காகப் போறவங்களுக்கு உபயோகம்.
நீக்குஆனா பணம் உள்ளவங்களும் இதை மிஸ்யூஸ் பண்ணுவதுதான் இத்தகைய facilityயின் நோக்கத்தைச் சிதைப்பது. (உதாரணமா கோவை சாந்தி இண்டஸ்ட்ரீஸ்.... ஏழைகளுக்காக அமைத்த ஃபார்மஸி, உணவு சேவை..என்று பலவற்றையும் பணமுள்ளவர்களும், தங்கள் பணத்தைச் சேமிப்பதற்காக உபயோகித்தாங்க. அந்த ஏரியாவில் உள்ள வீடுகள்லாம் வாடகை அதிகமாம், 20 ரூபாய்லயே உணவுலாம் அங்க சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதற்காக. ரேஷன்ல ஏழைகளுக்குக் கொடுப்பவைகளை (2000 ரூ முதற்கொண்டு) காரில் வந்து வாங்கிட்டுப் போறவங்க அனேகர். இப்படி இருக்கு நம்ம மக்களின் நல்லெண்ணம்.
காரில் வந்து இறங்கி ரேஷனில் இலவச அரிசி வாங்கியவரைப் பார்த்திருக்கிறேன்!
நீக்குபராமரிப்புக்குச் செலவு செய்ய வேண்டாமா? புனேயில் அறை கிடைப்பது கஷ்டம் எனில் வாடகை அதை விட அதிகக் கஷ்டம். ஆகவே ஒரு நீண்ட கூடத்தில் ரயில்வே டார்மிடரி மாதிரிக் கட்டில்கள் போட்டுப் பக்கத்திலேயே ஒரு அலமாரியும் கொடுத்துடுவாங்க. கட்டணத்தோடு தான். சாப்பாடு அங்கேயே போடுபவர்களும் உண்டு. இல்லை எனில் வெளியே சாப்பிட்டுக்கலாம்.
நீக்குதிருமதி .மெக்கென்சி.... இன்னும் நிறைய நலங்களாய்ச் செய்யட்டும்.
பதிலளிநீக்குஇந்த ஊரில் என்ன செய்தாலும் அதிலும் குற்றம் கண்டுபிடிப்பார்கள்.
அப்படி ஒரு நல்லவரை காயப் படுத்த முயற்சித்துத்
தோற்றனர்.
குற்றம் கண்டு பிடிப்பவர்கள் எங்குதான் இல்லை?!!
நீக்குதிரு சூரியப் ப்ரகாஷும் அவர் மனைவியும் செய்யும்
பதிலளிநீக்குதொண்டு மனதுக்கு நெகிழ்ச்சி. மேன்மேலும் வளம் அடையட்டும்.
வாழ்த்துவோம்.
நீக்குபோற்றத்தக்கோரின் அருமையான செயல்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஸார்.
நீக்குநன்றி.
நீக்குமருத்துவர் சூரிய பிரகாஷ் மற்றும் அவரது மனைவியின் சேவை போற்றுதலுக்குறியது
பதிலளிநீக்குஆம். நன்றி ஜி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... காலை வணக்கமும் நன்றியும்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க..
வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
தெலுங்கானா ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் சூரிய பிரகாஷ் தம்பதியரின் நல்ல மனம் போற்றப்பட கூடியது. அவர்களின் அனைவருக்குமான வீடு என்ற திட்டத்தில் உதவி செய்யும் அந்த மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.
அதே தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மல்லேஸ்வர் ராவ் அவர்களின் முயற்சியால் தினமும் இரண்டாயிரம் பேருக்கு மேலாக பசியைப் போக்கும் சேவை உண்மையிலே சிறப்பானது.
தேனிலவை ரத்து செய்து விட்டு, கடற்கரை சுத்தம் செய்யச் சென்ற தம்பதிகளை மனமாற வாழ்த்துவோம்.
இன்றைய நே.ம.செய்திகள் அனைத்தும் மனதிற்கு மகிழ்வூட்டுகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குதேனிலவுக்கு செல்லாமல் கடற்கரையை சுத்தப்படுத்திய இளம் தம்பதியினர் வாழ்க பல்லாண்டு. விவாகரத்து பெற்று தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கும்,மெக்கன்ஸி கருத்தை கவர்கிறார்.
பதிலளிநீக்குபுது ஊர்களுக்கு செல்பவர்களுக்கு தங்கும் இடம் ஒரு பிரச்சனை. அப்படிபட்டவர்களுக்கு உதவும் டாக்டர்.சூர்ய பிரகாஷ்,அவர் மனைவி காமேஸ்வரி இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
உணவகங்களில் வீணாகும் உணவால் பசியாற்றுபவர்களின் சேவை சிறப்பானது. மொத்தத்தில் இன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே எத்தனை நல்ல உள்ளங்கள்!என்று எண்ண வைத்தது.
நன்றி பானு அக்கா.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கில்லர் ஜி.
பதிலளிநீக்குஇன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
நன்றி.
நீக்குஅனைத்துச் செய்திகளும் போற்றப்பட வேண்டியவையே!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅம்மா மினி கிளினிக் நல்ல முயற்சி. வெளி நாடுகளில் இவை போன்றவற்றை ஹெல்த் சென்டர் என்பார்கள். இந்த கொரோனா காலத்தில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பெரிய ஆஸ்பத்திரிகளில் வைத்தியம் பார்ப்பதில்லை. தனியார் மருத்துவனைகள் ஆன் லைனில் வைத்தியம் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள். ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? மினி கிளினிக் கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
பதிலளிநீக்குஅரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சோலார் பேனல்கள் அமைப்பதும் வரவேற்க்கத்தக்க முயற்சி. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது பெரிய குடியிருப்பு வளாகங்களிலும் இதை பின்பற்றலாம்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
நன்றி.
நீக்குஇப்படி சில மனிதர்களால் தான் உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .
பதிலளிநீக்கு