திருமால் வடை – Special உளுந்து வடை - நெல்லைத்தமிழன்
இந்த வடையை நான் பஹ்ரைனில்தான் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன். அங்க இதனை திருமால் வடை என்று சொல்வாங்க. ஒரு வடை 150 fils (சுமார் 18 ரூபாய், 2010களில்). பெரும்பாலும் வெள்ளிக்கிழமை காலையில்தான் போடுவார்கள். நான் அந்த ஹோட்டலுக்குப் போய் 8 வாங்கிக்கொண்டு, அப்படியே காய்கறிகள் வாங்க செண்டிரல் மார்க்கெட்டுக்குச் செல்வேன். அந்த ஹோட்டல் நடத்தியவர் ஹோட்டல் நட த்துவதில் ரொம்ப ஆசையும் ஆர்வமும் உள்ளவர். அங்கேயே முதலில் தஞ்சாவூர் ஹோட்டல் என்று ஒன்று நட த்தினார். பிறகு சில வருடம் கழித்து எங்கள் வீட்டுப்பக்கம் ஆரியபவன் என்ற பெயரில் நட த்தினார். அந்த விஷயங்களை பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.
அவரிடம் பெயர்க்காரணம் கேட்க விட்டுப்போய் விட்டது. எனக்குத் தோணுது, வெங்காயம் உபயோகிப்பதால் (அதனை நாங்க, சங்கு சக்கரம் என்று கலோக்கியலாகச் சொல்லுவோம். என்ன, சங்குசக்கரம்லாம் சாப்பிடறயா என்போம்) திருமால் வடை என்று நாமகரணம் சூட்டிட்டார் என்று நினைக்கிறேன்.
தேவையானவை
முழு உளுந்து – 1 கப் – இதனை 1 மணி நேரம் ஊறப்போட்டு வடிகட்டவும்.
பெரிய வெங்காயம் – 1 – இதனை சிறிய துண்டுகளாக்கி, கையினால் கசக்கி விடணும். அப்போதான் அது இதழ் இதழா பிரியும்.
2 பச்சை மிளகாய் சிறிது சிறிதாக கட் பண்ணினது.
இஞ்சி - சிறிது சிறிதாக கட் பண்ணியது – 1 ½ டேபிள் ஸ்பூன்.
கட்டிப் பெருங்காயத்தை நீரில் கரைத்து 2 ஸ்பூன் பெருங்காய ஜலம்.
கருவேப்பிலை கொஞ்சம்
தேவையான உப்பு
நசுக்கிய சீரகம் 1 ஸ்பூன்.
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மிக்ஸில கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொர கொரன்னு உளுந்தை அரைக்கணும். இதில் சில பருப்பு முழுதாக இருந்தாலும் தவறில்லை.
இந்த மாவில், பெருங்காயம் ஜலம், கட் பண்ணிவைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி கட் பண்ணினது, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம், தேவையான உப்பு சேர்த்து பிசையவும்.
கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும்.
வாழை இலையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு, மெல்லிய பெரிய வடையாகத் தட்டி நடுவில் துளையிடவும்.
ஒவ்வொரு வடையாகப் பொரித்தெடுக்கவும். ஒரு வடை, உள்ளங்கையைவிடப் பெரிதாக இருக்கணும்.
இந்த வடை மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும். ருசி சொல்லி மாளாது (ஹாஹா)
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலிருந்தும் துன்பம் அகன்றிடப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குஒருவர் சொன்னார்... நமக்கு கிரகங்கள் சாதகமா இருக்கும்போது முன் ஜென்மங்களில் செய்த புண்ணியங்கள் bag open பண்ணி நல்ல பலன்கள் கொடுப்பாராம். கிரகநிலை சரியில்லைனா பாவங்கள் bag open பண்ணுவாராம். நம்ம புண்ணியங்கள் தீர்ந்துவிட்டால், நல்ல கிரக அமைப்புகள் இருந்தாலும் வாழ்க்கை சுமாராத்தான் போகுமாம். ப்ரார்த்தனைகள் பண்ணினா அவன் இரங்குவானா? எனக்கென்னவோ சந்தேகம்தான்
நீக்குபிரார்த்தனையில் நம்பிக்கை இல்லை போல! மனதாரப் பிரார்த்தித்துப் பாருங்கள். குறைந்த பட்சமாக எதையும் தாங்கும் வல்லமையைப்பெறலாம்.
நீக்குப்ரார்த்தனையில் நம்பிக்கை இல்லாமலில்லை. உனக்கு அதில் நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று இரண்டு வருடமாக பெருமாள் பண்ணறார். என்ன செய்ய?
நீக்குஆஆஆ!!! நம்பிக்கை இன்னும் அதிகமாகணும்னும் சிலநேரம் இப்படி சூழல்கள் வரலாம்.ப்ரார்திணையை கைவிடாதீங்க .எப்பவும் வேலை முடிஞ்சி சண்டேசில் வீட்டுக்கு வ்ரும்போது எங்க சர்ச் பக்கமா காரை ஓட்டிட்டு வரச்சொல்வேன் .நேத்து பயங்கர தலைவலி நேரா வீட்டுக்கு போங்கன்னு சொன்னேன் பிறகு மீண்டும் கணவரிடம் இல்லை சர்ச் வழியா போவோம்னு சொன்னேன் .சர்ச் பாஸ் பண்ணதும் மகள் கேட்டா //அம்மா ஹெட் ஏக் போச்சான்னு ?//அவ நினைச்சா சர்ச் பார்த்ததும் தலைவலி போயிடும்னு நான் நினைப்பதா :) .உடனே சொன்னேன் அப்படியெல்லாம் உடனே மிரக்கிள்ஸ் நடக்காது ஆனா எனக்கு மனசுக்கு ஒரு திருப்தி அந்த திருப்தியில் வலி குறைந்த ஒரு உணர்வு .அப்படிதான் நெல்லைத்தமிழன் பிரார்த்தனைகளும் வலியை தாங்கும் சக்தியை மென்டல் ஸ்ட்ரெங்த்தை கொடுக்கும் .
நீக்குபெருமாள் உங்களுக்கு நம்பிக்கை இருக்கானு தான் பார்க்கிறார் நெல்லைத் தமிழரே1 அவர் மேல் எந்தக் குற்றமும் இல்லை. விதியை வெல்ல எவராலும் முடியாது.ஆண்ட்வன் துணையுடன் நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ளலாம்.
நீக்குஇன்னிக்கும் மீ த போணி? வடைங்கறதாலே நிறையவே போணி ஆயிடும்னு நம்பறேன். திருமால் வடைனு பெயரைப் பார்த்ததும் இங்கே/அழகர் கோயில் போன்ற திருத்தலங்களில் கிடைக்கும் "பெருமாள் வடை"யைத் தான் சொல்றாரோனு பார்த்தால்! கடைசியில்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதலில் இருந்தே அது வெங்காய வடை! என்ன கொஞ்சம் கொரகொரனு அரைச்சுட்டு வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கணுமாம். இதுக்குத் திருமால் வடைனு பேரா?
பதிலளிநீக்குசென்ற வருட இறுதியில் பாண்டிய நாடு, சேர நாடு திவ்யதேச யாத்திரையில் முதன் முதலா மதுரைல இரண்டு அழகர் கோவிலுக்கும் சென்றேன். அங்க வடை போன்ற தோசை பிரசாதங்கள் வாங்கினேன். வடையைப் பார்த்த நினைவு இல்லை. நெய்ல பொரிச்சா (என் சந்தேகம், 90% எண்ணெய், 10% நெய்யாருக்கும்னு... திருப்பதியா முழு நெய் உபயோகிக்க) எவ்வளவு எண்ணெய், உடம்புக்கு ஆகாதேன்னு தோணிடுச்சு.
நீக்குமதுரையிலே எனக்குத் தெரிஞ்சு ஒரு அழகர் கோயில் தான். அங்கே வடையும் கிடைக்கும், தோசையும் கிடைக்கும். ஆனால் மடப்பள்ளியிலே வாங்கணும். நாங்க இந்தப் பிரசாத ஸ்டால்கள் வந்தப்புறமாவே நாங்க அதில் எந்தக் கோயிலிலும் எதுவுமே வாங்குவதில்லை.
நீக்குயாத்திரை குழுவில் போகும்போது, நின்னு பிரசாதம் வாங்கல்லாம் அவங்க அனுமதிப்பதில்லை. பெருமாள் தரிசனம் மட்டும்தான் முக்கியம், ஒரு தடவை திருப்தி வரலையா, பதினைந்து நிமிடங்கள் காத்திருக்கவும் தயார், திரும்பவும் சேவிச்சுட்டு வாங்கோ, பிரசாத ஸ்டால்லலாம் நிற்கக்கூடாது என்பார்.
நீக்குஇப்படிச் சொல்றதுல அர்த்தம் இருக்கு. பிரசாத்த்தைச் சாப்பிட்டால், அவர் பண்ணி வைத்திருக்கும் உணவு வீணாயிடும், இன்னொன்று, உடம்புக்கு ஒத்துக்கலை என்று மற்றவர்களுக்கு இடஞ்சலாயிடும்னு.
திருப்புல்லாணில, நீங்க எழுதியிருந்தீங்கன்னு, நானும் மனைவியும், தரிசனம் முடிந்த கையோடு மடப்பள்ளில வாங்கிப் பருகினோம். (நாங்க ரெண்டுபேரும் கடகடன்னு முதல்லயே தரிசனத்துக்குப் போயிடுவோம்)
அந்த ஊறின உளுந்தெல்லாம் அரைகுறையா மசிஞ்சிருப்பதால் வெங்காயத்தோடு எண்ணெயில் பொரிக்கும்போது கரகரனு வந்துடும். நல்லாத் தான் இருக்கும். ஆனால் வெங்காய வடைனு பெயரை மாத்துங்க நெல்லை! :)))))))
பதிலளிநீக்குஇன்றைக்கு நிலைய வித்வான் கச்சேரின்னு நினைத்து வந்தேன்.
நீக்குகீசா மேடம் தனியா இருந்தா பயப்படுவாங்களேன்னு நினைத்து, நானும் வந்துட்டேன்னு சொல்லிக்கறேன்.
thankeees, thankeess,
நீக்குநான் கிளம்பறேன். ஜிம், யோகா போகணும் (எடை மட்டும் குறைவேனாங்குது. நேற்று மேல்கோட்டை முறைல கேசரி பண்ணச் சொல்லி சாப்பிட்டேன். ஜிம் போயே ஆகணும்)
நீக்குஇன்று ஆண்டவன் ஆஸ்ரம்ம் போகணும். தளத்திற்கு வரத் தாமதமாகும்.
ஜிம் என்றால் என்ன செய்வீர்கள்? சினிமாவில் காட்டுறவாது போல "அழகு... அழகு... நீ நடந்தால் நடை அழகு" என்று நடந்து கைகளால் ஒரு பெரிய இரும்பு பாரை வலது இடதாக நகர்த்தி, எடை தூக்கி என்றெல்லாம் செய்வீர்களா?
நீக்குஹா ஹா.... நான் ட்ரெட்மில் இன்னபிற எக்சர்சைஸ்கள்தான். ஒரு மணி நேரம். பிறகு ஒரு மணி நேரம் யோகா (approximate timeதான்). ஆரம்பிச்சு மூணு வாரம் ஆகுது. யோகால சூர்யநமஸ்கார் உண்டு. வெயிட் தூக்க மாட்டேன். அப்போ அப்போ back pain வரும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பேன்)
நீக்குசினிமால கதாநாயகிக்காக ஜிம்ல எக்சர்சைஸ் பண்ணற மாதிரியோ இல்லை கதாநாயகிக்கு கொடுத்த காசை வசூல் பண்ண அவளை ஜிம்ல எக்சர்சைஸ் பண்ணறமாதிரி செய்து ஒளிப்பதிவாளர் கர்ணன் பாணில படம் பிடிப்பாங்க.
நிறைய ஜோக்குல படித்த மாதிரியே, ஜிம்முக்கு ரெகுலரா போகிற (பாடி பில்ட் பண்ணறவங்க) ஆண்கள், சாம்பார் வாளியை இரு கைகளிலும் தூக்கிட்டு நடக்கிற மாதிரியே நடக்குறாங்க. அது ஏன்?
//நிறைய ஜோக்குல படித்த மாதிரியே, ஜிம்முக்கு ரெகுலரா போகிற (பாடி பில்ட் பண்ணறவங்க) ஆண்கள், சாம்பார் வாளியை இரு கைகளிலும் தூக்கிட்டு நடக்கிற மாதிரியே நடக்குறாங்க. அது ஏன்?//
நீக்குஹா... ஹா.. ஹா... நானும் கவனித்திருக்கிறேன்! சாம்பார் வாளிதானா? அடிபம்பில் தண்ணீர் அடித்து வாளியில் தூக்கி வருவது போல என்று இருக்கக் கூடாதா?!!
//அடிபம்பில் தண்ணீர்// - ஹாஹா.... இடத்துக்கேற்ற சிந்தனைதான். இங்க அப்படி நான் பார்த்ததில்லை (ஏன்..அடையாறிலும் பார்த்ததில்லை).. அது சரி.. ஏப்ரல்லதானே அந்தக் கவலை
நீக்குநெ.த. சூரிய நமஸ்காரத்தில் எல்லாவிதமான posture களிலும் ஒரு நிமிடம் நின்று செய்து வந்தாலே போதும். மற்றவை தேவை இல்லை. அதுக்கே ஒன்றரை மணி நேரம் ஆகும், சரியாகச் செய்து வந்தால்.
நீக்குமுதல்ல சூர்ய நமஸகாரத்துல சில poses சரியா வருவதில்லை. மொத்தம் 12 ஸ்டெப்ஸ். நான் அனேகமா 13 தடவை சூர்யநமஸ்கார் செய்கிறேன். கடைசி 13வது ஒவ்வொரு ஸ்டெப்லயும் ஐந்து breath. இது எல்லா பாகங்களுக்கும் movement கொடுக்கணும்னு செய்யறேன். பனிரெண்டு-பதினைந்து நிமிஷமாகும்
நீக்குhttps://freetamilebooks.com/ebooks/yogasanam யோகாசனம். சுட்டி ஏற்கெனவே சில/பல முறை கொடுத்திருக்கேன். இருந்தாலும் மறுபடி கொடுக்கிறேன். இலவசத் தரவிறக்கம் தான் எப்போதும். முடிஞ்சால் பாருங்க/படிங்க.
நீக்குஇங்கே போன வாரம் தம்பி வந்திருக்கிறச்சே அவங்களுக்காக நம்ம ரங்க்ஸ் வெளி ஆண்டாள் சந்நிதிக்குப் பக்கத்திலே பக்ஷணங்கள் போடும் மாமியிடம் பெருமாள் வடை வாங்கி வந்தார். குட்டிக் குட்டியாக! அந்த மாமி 4 வடை பத்து ரூபாய்னு கொடுப்பதால் ரொம்பக் குட்டியாத் தான் போடுவாங்க. இங்கே பெருமாள் வடை/திருமால் வடை எனில் கறுப்பு உளுந்தை முழுசாக எடுத்துக் களைந்து கொஞ்சம் போல் அரிசியைச் சேர்த்துக் கொண்டு நன்கு களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கணும். பின்னர் ஒன்றிரண்டாக அரைத்துக் கொண்டு மிளகு, உப்புச் சேர்த்துக் கொண்டு வடையாகத் தட்டிப் போடுவாங்க. உள்ளே கூடு விட்டுக் கொண்டு மொறுமொறுனு வரும். இதைத் தான் இங்கே பெருமாள் வடைனு எல்லாக் கடைகளிலும் கொடுப்பாங்க. நெல்லை சொன்ன வெங்காய வடையை இல்லை.
பதிலளிநீக்குஶ்ரீரங்கம் வெளி ஆண்டாள் கோவில் அருகில் வெங்காய வடையை எதிர்பார்ப்பதே தெய்வ குத்தம்னா! ஹாஹா
நீக்குவெங்காயத்தின் மேல் இவ்வளவு கோபம் ஏன் பெருமாளுக்கு!
நீக்குஇந்த செய்முறை எல்லாம் படிக்க சுலபமாதான் இருக்கு. ஆனால் வடையாகத் தட்டும்போது நினைத்தபடி வருவதில்லை!
நீக்குமசால் வடை வெங்காயம் போட்டுச் சீடைமாதிரி அளவிலே தருவாங்க. ஐந்து வடை 10 ரூபாய். ஒரு வாய்க்குக் காணாது. வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய், உருளைக்கிழங்கு பஜ்ஜி, போண்டோ என விதம் விதமாய்க் கிடைக்கும். எது வேணுமோ அதைச் சொன்னால் போட்டுக் கொடுப்பாங்க. மாலை நாலரையிலிருந்து இரவு எட்டு மணி வரை.
நீக்குவெங்காயம் உம்மாச்சிக்கு ஒத்துக்காதே! அதனால் தான்! @ஸ்ரீராம்!
நீக்குஶ்ரீராம் சொன்னதுல அர்த்தம் இருக்கு.
நீக்குபஹ்ரைன்ல கடை வச்சிருந்த தஞ்சைக்கார்ர் உணவகம் வைக்கும் passion நிரம்ப உள்ளவர். நல்லா அரையடி சைசுல வடை தட்டுவார். நான் செய்தபோது கொஞ்சம் பெரிதாகத் தட்ட முயன்றால் அதை எடுத்து இலுப்புச்சட்டியில் போட முடியலை.
உளுந்துவடை செய்தபோதும் அச்சடித்தமாதிரி அழகா வரலை
பெரிதாக வடையைத் தட்டினால் அது வேகும்/மூழ்கும் அளவுக்கு எண்ணெய் வைக்கணும். அத்தனை எண்ணெய் வைத்துப் பண்ணும்போது மிஞ்சினால் கஷ்டம். நான் மிச்சம் எண்ணெயைப் பயன்படுத்துவதில்லை என்பதால் சிக்கனமாகவே எண்ணெய் வைப்பேன். பெரிதாக வேண்டுமெனில் ஒரு ஒரு வடையாகப் போட்டு வேக விட்டு எடுக்கணும். உருளைக்கிழங்கு போண்டோவுக்கெல்லாம் எண்ணெய் நிறைய வைத்தால் மூழ்கிப் பொரிந்து உருண்டையாக வரும். இல்லைனால் மேலே தட்டையாக வந்துடும்.
நீக்குஇங்க வீட்லயும் இரண்டாவது முறை எண்ணெய் உபயோகிப்பதில்லை என்பதால், திடும்னு அப்பளாம் பொரி என்றால், மனைவி, தாளிக்கும் சிறிய கடாயில் எண்ணெய் விட்டு, கால் கால் அப்பளமா பொரிப்பாள். ஹாஹா
நீக்குநானும் உங்கள் மனைவி போல சிறிய கடாயில்தான் அப்பளம் பொரிப்பேன். இதற்காக சிறிய அப்பளம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீக்குகறுப்பு உளுந்தை முழுசாக எடுத்துக் களைந்து கொஞ்சம் போல் அரிசியைச் சேர்த்துக் கொண்டு நன்கு களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கணும்.// அரை மணி நேரம் ஊறினால் போதாது ஆறு மணி நேரம் ஊற வேண்டும். அப்போதுதான் க்ரிஸ்பாக வரும். மஸ்கட்டில் இருந்த பொழுது ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டிய வடை மாலைக்கான மிளகு வடை நாம்தான் பண்ண வேண்டும். பிறகு அதை செய்து கொடுக்க ஆட்கள் வந்து விட்டார்கள். ஹோட்டல்களில் ஆஞ்சநேயருக்கு சாற்ற வடைமாலை செய்து தரப்படும் என்று அறிவிப்புகள் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
நீக்குபாவெ மேடம்... அரை மணி அல்லது முக்கா மணிக்குமேல மிளகுவடைக்கு உளுந்து ஊறக்கூடாது.
நீக்குஅது சாதாரண உ.வடைகளுக்கு. ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டிய மிளகு வடைக்கு உளுந்து அதிக நேரம் ஊறினால்தான் அதன் புசு புசு தன்மை போகும்.வடை க்ரிஸ்ப்பாக இருக்கும். இல்லாவிட்டால் ஜா்கிரி பருப்பு என்னும் பழைய உ.பருப்பு வாங்க வேண்டும்.
நீக்குகறுப்பு உளுந்து போட்டு அரைத்து வார்க்கும் தோசைக்குக் கூட உளுந்தைக் களைந்து விட்டு அப்படியே கிரைண்டரில் போடுவது உண்டு. சின்னமனூரில் என் சித்தி வீட்டில் உளுந்து களையும்போது ஊறுவது தான். ஆஞ்சநேயர் வடைமாலை வடைக்குக் களைந்து போட்டே அரைப்பார்கள். உளுந்தை ஊறவைக்கக் கூடாது என்று சொல்லியே கேள்விப் பட்டிருக்கேன். நானும் அப்படியே அரைச்சிருக்கேன். தோல் எடுத்த உளுந்து விரைவில் ஊறும். ஆனால் கறுப்பு உளுந்து அரைக்க அரைக்க மாவு நிறையக் காணும். வடையும் மெலிதாகத் தட்ட வரும். அரைக்கும்போது உப்போ, மிளகு பொடியோ சேர்க்க மாட்டோம். பின்னர் சேர்ப்போம். கருகப்பிலை, பெருங்காயமெல்லாம் கிடையாது. வீட்டுக்குச் சாப்பிடப் பண்ணுவது எனில் கருகப்பிலை, பெருங்காயம் சேர்ப்போம். எடுக்கும்போது உப்பும், மிளகு பொடியும் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுப்போம். ஆறு மணி நேரமெல்லாம் ஊறினால் எண்ணெய் குடிக்கும்.
நீக்கு//ஐந்து வடை 10 ரூபாய்.// - அடுத்த தடவை இதை நினைவில் வைத்துக்கொள்கிறேன். நான் தாளவாடி என்ற ஊரில் இருந்தபோது ஒருவர் (அப்பாவி) நீங்க சொல்ற சைஸுக்கு மசால்வடை 5 பைசா வீதம் விற்பார் (78). அவரையும் அங்க பேட்மிண்டன் விளையாடிட்டு வடை வாங்க வர்றவங்க ஏமாத்துவாங்க. 10 சாப்பிட்டுட்டு, 6ன்னு கணக்கு சொல்வாங்க.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஎன்றென்றும் நலம் வாழ்க...
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குஅன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
பதிலளிநீக்குஇன்று நெல்லைத்தமிழனின் வடையா. அமோகமாகப் போணி
ஆகிறது.:)
அனைவரும் என்றும் ஆரோக்கியமுடன் இருக்க
இறை அருள் இருக்கட்டும்.
முரளிமா, வெங்காய வடைக்கு இன்னோரு
பெயர் திருமாலா!!!!!!!
என்னடா இது !!!அதிசயமாக இருக்கிறதே.;)))
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்கு"சங்கு சக்ர தாரி"... குறுக்க வெட்டினா சக்கரம், நெடுக வெட்டினா சங்கு.
நீக்குஆனாலும் இது சாத்வீக உணவல்ல என்று பகவத் கீதை சொல்கிறது (இப்போதான் ஒரு கீதை கோர்ஸ் பண்ணினேன்)
Good Morning ma.
பதிலளிநீக்குஅழகர் மலையின் தோசையும் வடையும் அமிர்தம் இன்னும் மறக்க
பதிலளிநீக்குமுடியவில்லை.
சுக்கு எல்லாம் போட்டு நன்றாக இருக்கும்.
இப்போது எப்படியோ. ரொம்ப நாளானாலும் கெடாது.
ஆமாம் வல்லிம்மா. நல்லா பொரிச்ச தோசை மாதிரி இருக்கும். ரொம்பவே ருசி.
நீக்குரொம்ப நாள் எப்படி வைக்க முடியும்? வாங்கி மறுநாளுக்குள் தீர்ந்துவிடாது?
இந்த வடையின் அளவே பெரிதாக அழகாக
பதிலளிநீக்குஇருக்கிறது.
பங்களூருக்கு வரவேண்டியதுதான். பானு, நீங்கள்,கீதா ரங்கன்
என்று
ஒவ்வொரு பக்ஷணமும் ருசிக்கலாம்.
வாங்கோ வாங்கோ. ஆவலுடன் வரவேற்கிறோம். ஏர்போர்ட்டிலிருந்து நேராக கீதா ரங்கன் வீட்டிற்கு சென்று, காலை உணவை முடித்துக் கொண்டு, மதியம் நெல்லை வீட்டில்,சாப்பி்டு விட்டு, இரவு உணவிற்கு எங்கள் வீட்டிற்கு வந்து விடலாம்.
நீக்கு//ஒவ்வொரு பக்ஷணமும் ருசிக்கலாம்.//- அதுக்கென்ன வல்லிம்மா. வாய்ப்பு கிடைக்கட்டும்.
நீக்குஉளுந்து வடையை விட கடலைப் பருப்பு வடை தான் பிரியம்..
பதிலளிநீக்குஇதற்கும் மேலாக வாழைப்பூ வடை... ஆஹா!..
வாங்க துரை செல்வராஜு சார்..... உளுந்து வடைதான் எப்போதுமே சூப்பர் என்பது என் எண்ணம் (ஒரு எக்செப்ஷன்... சோம்பு பூண்டு போடாத மசால் வடை).
நீக்குஸ்ரீ ராமுக்கு வடை பார்சல் அனுப்பினீர்களா? அவர் தான் வடை கேட்டார்.
பதிலளிநீக்குவாங்க ஜெயகுமார் சார்... நான் ஶ்ரீராம்ட பிரேமா விலாஸ் முந்திரி அல்வா கேட்டதற்கு ப்ராம்டா அல்வா கொடுத்துட்டார். நான்தான் எனக்கே வடையை வைத்துக்கொள்ள வில்லையே
நீக்குவடை நான் கேட்டேனா
நீக்குநினைவில்லையே...
படைகொண்டு தாக்கும் வாடைக்காற்றில்
உடை மிக அணிந்து - குளிருக்குத்
தடை போட்டிருக்கிறேன்
எடை ஏறும் கவலையில் இருப்பவர்
எனக்கு இப்போது
வடை அனுப்புவாரா !!!
வடைகளை குவித்து புடை சூழ
நீக்குகடையேதும் போடாவிட்டாலும், உங்களுக்கென பத்தோடு பதினொன்றாய் தடையின்றி அனுப்புவேனே எனவும் சொல்லியிருப்பார். ஹா.ஹா.ஹா.
அருமையாக பாடியிருக்கிறீர்கள்.
"வாடைக் காற்றில்
நீக்குசூடான வடைகள் - அடுத்தவர்
எடையைப் பற்றி
எனக்கென்ன கவலை" ஹாஹா.
கமலா ஹரிஹரன் மேடம்... எங்க வீட்டில், உளுந்தை base ஆகக் கொண்டு வடைகள் செய்தால், பையனுக்குப் பிடிக்கும். சாபுதானா, குனுக்கு போன்றவை மகள் சாப்பிடுவாள், பையனும் சாப்பிடுவான்.
நீக்குநான் அபூர்வமா ஒன்றிரண்டு சாப்பிடுவேன். பெங்களூர் குளிரில் கொஞ்சம் மந்தமாக இருக்கு. எதைச்சாப்பிட்டாலும் வெயிட் போடுது.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த நாள் எனக்கு (எங்களுக்கு) நிஜமாகவே நன்னாள்தான். எங்கள் ஆச்சார்யர் பெங்களூருக்கு எழுந்தருளியிருக்கிறார். ஆஸ்ரமம் போய் அவரை எல்லோரும் சேவித்துவிட்டு வந்தோம்.
நீக்குநல்லது. இன்றைய தினம் தங்கள் குருவின் தரிசனம் தங்களுக்கு மகிழ்வை தந்திருக்கும். அவர் ஆசிகள் அனைவருக்கும் நன்மையையே தரட்டுமென நானும் அவர் அடி பணிந்து வேண்டிக் கொள்கிறேன். 🙏.🙏.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் சகோதரர் நெல்லைத் தமிழரின் ரெசிபியான திருமால் வடை (அந்தப் பேரையும் சேர்த்து சொல்லாவிட்டால் அவர் கோபித்துக் கொள்ளப் போகிறார். யார் என யோசிக்க வேண்டாம்...? சாட்சாத் அந்த திருமால் தான்..அதுவும் இந்த மார்கழியில்.. ஹா.ஹா.ஹா) நன்றாக உள்ளது. ஆனால் நான் வருவதற்குள் நான்கு பேர்களுக்கு மேலாக பதிவர்கள் வந்திருப்பதால் நான்கு ஒரு பங்காக்கி அங்கிருந்த ஒரு வடையும் போயிருக்குமே.... (ஆகா.. வடை போச்சே..:) )
படங்களுடன் செய்முறை விளக்கங்கள் அழகாக இருக்கிறது. அதைப்பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிறைய வடைகள் இருந்த தட்டை படமெடுக்க மறந்துவிட்டேன்.
நீக்குஇந்த வடை சூப்பராக இருக்கும். அதிலும் வெங்காயம் சேர்ப்பதால்.
நினைவாக இதனைப் பண்ணி வைத்திருங்கள். வந்துவிடுகிறேன்.
அனைவருக்கும் காலை வணக்கம். சாதாரண உளுந்து வடைக்கு திருமால் வடை என்று பெயர் வைத்து விட்டால் திங்கற கிழமையில் இடம் பிடித்து விடலாம் போல.. நல்ல டெக்னிக்!
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். நீங்க சொல்றது உங்களுக்கே அடுக்குமா? ஹாஹா
நீக்குஉளுந்து வடைல எத்தனை வெரைட்டி இருக்கு. சாதாரண உளுந்து வடை, மிளகு வடை, திருமால் வடை.....னு லிஸ்டே இருக்கு.
வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே
நீக்குநடுவில் வந்து ஒரேயொரு வடையை ஆர்வத்துடன், அதுவும் போச்சேயென பார்த்து கொண்டிருந்த என்னை கவனிக்கவில்லை போலும். ஹா.ஹா.
என் மனைவியின் உறவினர்கள், நான் சமையலில் எக்ஸ்பர்ட் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுக்கு ஏற்ற மாதிரி ஏதேனும் ஸ்வீட் நான் செய்து அவங்க சாப்பிட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்வாங்க.
நீக்குஎன் மனதுக்குத்தான் தெரியும் (குறைகுடம் கூத்தாடுது... நிறைகுடம் எப்போதுமே தளும்புவதே இல்லை என்று).
விரைவில் புத்தாண்டில் சில பல இனிப்புகள் செய்முறைகளோடு வருகிறேன்.
என் மகனுக்கு உளுந்து வடைதான் பிடிக்கும். சிறுவனாக இருந்த பொழுது இதை விஷ்ணு வடை என்பான். வடை செய்து கொடுத்தால் அதை ஆள்காட்டி விரலில், சொருகிக் கொண்டு தோளுக்கருகில் வைத்துக்கொண்டு சக்ரதாரி போல போஸ் கொடுப்பான்.
பதிலளிநீக்குஆக.. இந்த வடை பெருமாளுக்கு உகந்ததாய் ஆகி விட்டது.
நீக்குஎனக்கு இந்த வடை, சோம்பு போடாத மசால்வடை (அதுக்காக தொட்டால் கை முழுவதும் எண்ணெய் ஒட்டிக்கொள்ளக்கூடாது), சாதாரண உளுந்து வடை+தேங்காய் சட்னி - இவையெல்லாம் ரொம்பவே பிடிக்கும்.
நீக்குஇப்போல்லாம் ஒரிஜினல் "அனுமார் வடை"தான் எங்குமே செய்வதில்லை. பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாத ஸ்டால் வடையில் மிளகுலாம் மிஸ்ஸிங். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வடை மெத்தை மாதிரி இருக்கும்.
எண்ணெய் இல்லாத வடைக்கு... மக்ஸிமம் ஒரு மணிநேரம் மேல் ஊறவிடக்குடா உழுந்தை அப்போ எண்ணெய் குடிக்காது மற்றும் அரைச்ச பின் கொஞ்ச நேரம் பிரிஜ்ஜில் வச்சுப்போட்டு எடுத்துச் சுட்டால்ல்ல் ஆஆவ்வ்வ். சொவ்ட் அண்ட் கிரிஸ்பி தேன்ன்ன்ன்ன்
நீக்குவாங்க அதிரா... உங்க பின்னூட்டத்தைவிட உங்க மொழி நடை ரொம்பவே கவர்கிறது. இங்கிலீஷ் காரனுக்கும் விளங்கணும், அரைகுறை ஃப்ரெஞ்ச் மாதிரியும் இருக்கணும், தமிழ் போலவும் தோணணும் என்று ரொம்பவே மெனெக்கெட்டிருக்கீங்க.
நீக்குஇதுல என்ன எழுதியிருக்கீங்க என்று நாங்க புரிஞ்சுக்க உங்க செக் உதவி செய்வாங்களா? ஹாஹா
எண்ணெய் உறிஞ்சாத /எண்ணெய் குடிக்காத வடை செய்யணும்னா .அதிகபட்சம் ஒரு மணிநேரத்துக்குமேல் உளுந்தை நீரில் ஊறவிடக்கூடாது .அப்போதான் அது எண்ணையை தன்னுள் தக்க வைக்காது :) மேலும் உளுந்தை அரைத்தபின் அதை ஒரு படத்திரத்தில் வழித்துப்போட்டு குளிர்சாதனப்பெட்டியில் சிறிது நேரம் வைத்து பிறகு எடுத்து வடையாக தட்டி சுட்டால்
நீக்கு///சொவ்ட் அண்ட் கிரிஸ்பி தேன்ன்ன்ன்ன்//
இதை படிக்கும்போது இதை எப்படி எழுதுவேன் :)))))))))))) ஒரு பொருள் soft/ பஞ்சுபோல் மென்மையா ஆக இருக்கும் அல்லது crispy யாக மொறுமொறுன்னு இருக்கும் .எங்க ஸ்கொட்லாந்து பூனைக்கு மட்டும் எப்படி ரெண்டும் சேர்ந்து வரும் :)))))))))))))))
இதில //தேன் //வேற சேர்த்திருக்காக மேடம் :) அதென்ன doughnuts ஆ
நீக்குக்ரிஸ்பி - வடையின் வெளிப்பகுதி. சாஃப்ட் - சாப்பிடும்போது நர நரவென இருக்காமல் - நல்லாவே எழுதியிருக்காங்க.
நீக்குஎனக்கு ஒருத்தர் சொன்னது. வடைக்கு அருக்கும்போது, ஐஸ் வாட்டர் சேர்த்து அரைத்தால் நல்லாருக்கும்னு
ஹா ஹா ஹா இப்போதான் பார்க்கிறேன் இதை நேற்று பிசியோ பிசீஈஈ இன்று லாஸ்ட் டே ஸ்கூஊஊஊல்... 26 ம் திகதியில் இருந்த்ஹு ஒரு மாதம் புல்ல்ல்ல்ல் லொக்டவுனுக்குள் நுழைகிறோம் லைக் ஏப்ரல்ல்ல்🥰🥰🥰🥰🥰
நீக்குஇனி இங்க இணையத்துல உங்களைப் பார்க்கலாமா இல்லை க்வில்டுக்குள்ளதான் இருப்பீங்களா?
நீக்குஆஆஆஆஆஆ கஸ்டப்பட்டு என் பிரேக் இல் ஒரு கொமெண்ட் ரைப் பண்ணி அனுப்பினால் எரர் ஆப் போச்ச்ச்ச்ச் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் சனி அங்கிள் மாற்றம் தேன்ன்ன்ன்ன்ன்ன்😅
பதிலளிநீக்குநேற்று என் மனைவி எனக்கு 7 1/2 இன்னும் சில மாதங்களில் முடியுதுன்னா. இன்று காலைல, நான் தவறாச் சொல்லிட்டேன். கடைசி 2 1/2 வருஷம் இன்னும் சில மாதங்கள்ல ஆரம்பிக்கும்னா. என்னத்தைச் சொல்ல? சனி எங்க மாறினா எனக்கென்ன.
நீக்குஹா ஹா இப்போ பாதசனியாமே 2.5 வருடத்துக்கு ஆனா யூப்பரா இருக்குமாம் பார்ப்போம்ம்ம்😌
நீக்குபாத சனினா காலுக்கு ஆபத்தாமே
நீக்குஎனக்குப் பிடிச்ச... ஏன் எங்கட வீட்டிலயும் எல்லோருக்கும் பிடிச்ச வடை... கிறிஸ்மஸ் ஹொலிடேயில் செய்து அஜத்தப் போறேன்:)... ஆனா பிழைச்சுதோ... பிறிச்சில் எல்லாம் வைக்க மாட்டேன்ன்ன்ன்ன்... எவ்ளோத்தைத்தான் பிரிஜ்ல வைக்கிறதாம் கர்ர்ர்ர்ர்:).... நேரே ஜென்னைக்கு பார்சல் பண்ணிடுவேன்😅. இது நேற்று எங்கட ஆத்தில் தோண்டிய சே சே தோன்றிய ரெட்டை வானவில்லின் மேல ஜத்தியம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 😎😎😎😎
பதிலளிநீக்குசும்மா ரெட்டை வானவில்னு எழுதக்கூடாது. இங்க வீட்டுக்கு இண்டீரியர் செய்யும் நேரத்தில் நான் மட்டும்தான் வேலை செய்பவர்களோட இருந்தேன். அப்போ ஒரு நாள், வானத்தில் இரட்டை வானவில் தோன்றியது. படமெடுத்து வைத்திருக்கிறேன். நீங்க உங்க இடுகைல, படம் எடுத்திருந்தால் போடுங்க.
நீக்குஇந்த வடையின் ருசியே அந்த வெங்காயத்தில்தான் இருக்கு. பொடியா கட் பண்ணக்கூடாது.
நான் எந்த வடை எனினும் ஓவரா வெங்காயம் போடுவேன், ஓரளவுகு உறைப்புக் குறைந்த கேரளாப் பச்சை மிளகாயும் நன்கு போடுவேன்.. அதுதான் சுவை. இனி கொஞ்சம் பெரிதாகக் கட் பண்ணிப் போடுறேன்.
நீக்குவானவில் படங்கள் ஏற்கனவே போட்டிருக்கிறேன்.. எங்களுக்கு ஆற்றில் அடிக்கடி வரும்.. இன்றுகூட தொடர்ந்து வானவில் ஸ்கூலில் தோன்றியது.. அது இங்கு மழை அதிகம் என்பதால் வானவில்லுக்கு குறைவில்லை.
எடுத்த படங்களைப் போடுகிறேன் விரைவில்..
வானவில் பார்த்தால் லக் ஆமே? உண்மையோ?:))
ரெண்டு வானவில்ஒரே சமயத்தில் பார்த்தால் லக்தான். ஹா ஹா
நீக்கு///அந்த விஷயங்களை பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.////
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்போ பார்த்தாலும் இதையே ஜொள்ள்றார்ர்ர்ர் ஒண்டைக்கூடச் சொல்லக் காணம்... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் மீ ரொம்ம்ம்ப நல்ல பொண்ணூஊஊஊ
மிகுதி பின்பு
எல்லாம் எழுதினா வளவளன்னு ஆயிடுமே என்ற எண்ணம்தான்.
நீக்குஅவருக்கு உணவு தயாரிப்பதில், Hotel நடத்துவதில் passion. Unfortunately அவருடைய முயற்சில அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. நான் அவர்கிட்ட சொல்லி, வெறும் பரோட்டா வாங்கிவருவேன் (ஒன்று 10 ரூபாய்.... பிறகு 15 ரூபாய்). மனைவியை சைட் டிஷ் பண்ணச் சொல்லுவேன். அந்த ஊர்ல நல்ல மாங்காய் வந்த சமயம் அவர் ஆவக்காய் ஊறுகாய் போடுவார். நல்லாருக்கு, முழு பாட்டிலும் வேணுமா என்று சொல்லி எனக்குக் கொடுப்பார் (பணத்துக்குத்தான்).
ஹோட்டலுக்குள்ள என்ன பண்ணறோம் என்றெல்லாம் எனக்குக் காண்பிப்பார் (தேங்காய் சட்னிக்கு, தேங்காய் பொடி சாக்குல கேரளாலேர்ந்து வரும். அதை ஊறவைத்து, மிளகாய் இன்ன பிற போட்டு அரைத்து ஃப்ரீசர்ல வைத்து, அந்த வாரத்துக்கு தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொண்டு, புதிதாக தாளித்து சட்னி ரெடி பண்ணுவதெல்லாம் சொல்லுவார்......ஹாஹா..விஷயம் தெரிந்து நான் அங்க சாப்பிடும்போது சட்னிலாம் வேண்டாம்னுடுவேன்)
அவர், பேக்கரியும் ஹோட்டலின் ஒரு பக்கத்தில் வைத்தார். எல்லாமே சைவம். ரொம்ப நல்லா இருக்கும். இதைப் பார்த்த சிலர் போட்டுக்கொடுக்க, உணவு அதிகாரிகள், ஹோட்டல் லைசன்ஸுல பேக்கரி ஐட்டம் விற்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அந்த இன்வெஸ்ட்மெண்ட் வேஸ்ட் ஆகிடுச்சு.
அந்த ஊர்ல, எனக்கு நிறைய மனிதர்களோட பழகும் சந்தர்ப்பம் வந்தது (வெளிநாடுகளுக்கெல்லாம் போகும்போது, அவங்க அவங்ககிட்ட அந்த ஊர் கலாச்சாரம் எல்லாம் friendlyயா கேட்டுத் தெரிந்துகொள்வேன். எங்க கம்பெனிக்கு ஒரு ப்ராஜக்ட் சம்பந்தமா வந்த programmer இடம்-அவருக்கு 50 வயசு இருக்கும் சின்னப் பையன் மாதிரி இருப்பார், பேசிக்கொண்டிருந்தபோது, 'You know..I am allowing my son to stay with me and I am paying rent' என்று ஏதோ magnanimousஆ ஒன்றைச் செய்வது போலச் சொன்னார்...ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம்)
//(தேங்காய் சட்னிக்கு, தேங்காய் பொடி சாக்குல கேரளாலேர்ந்து வரும். அதை ஊறவைத்து, மிளகாய் இன்ன பிற போட்டு அரைத்து ஃப்ரீசர்ல வைத்து, அந்த வாரத்துக்கு தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொண்டு, புதிதாக தாளித்து சட்னி ரெடி பண்ணுவதெல்லாம் சொல்லுவார்.//
நீக்குஓ இதுதான் நடக்கிறதோ ஹோட்டேல்களில்... நானும் நினைப்பதுண்டு, கேட்டவுடன் விதம் விதமாக எப்படித்தர முடிகிறதென.
அதிலும் வடை தோசை மா எல்லாம் ஃபிறீசரில் வைக்கிறார்கள், கேட்டவுடன் மைகுறோவேவில் சூடாக்கிப்போட்டு சுட்டுத்தருகின்றனராம் .. என்ன கொடுமை பாருங்கோ...
//'You know..I am allowing my son to stay with me and I am paying rent'//
ஹா ஹா ஹா பின்ன இங்கு 18 ஆனதும் பிள்ளைகள் வெளியே போயிடோணும் என எதிர்பார்ப்பினம், கொஞ்சம் வசதியான பெற்றோர் எனில் உதவுவோரும் உண்டு. எங்கள் பக்கத்து வீட்டுப் பிள்ளைக்கு 24 வயசு, யுனி முடிச்சு பாங்கில வேர்க் பண்ணுறா, அவவுக்கு இன்னும் போய் ஃபிரெண்ட் யாரும் இல்லை, அதனால பெற்றோருடனேயே இருக்கிறா, பணம் கொடுப்பது பற்றிய விபரம் தெரியாது. போய் ஃபிரெண்ட் இருந்தால் தனியே போய் விடுவினம்.
பெரும்பாலும் உழைக்கும் பிள்ளைகள் எனில், பெற்றோருக்கு பணம் கொடுப்பார்களாம், அல்லது தங்குவது ஃபிறீயாக விடுவினம் பெற்றோர் ஆனால் உணவை அவர்களே வாங்கிச் சாப்பிடோணுமாம்..
என்ன செய்தாலும் இந்த விசயத்தில மட்டும் நம்மவர்களைப்போல வரவே வராது... ஆனா அப்படி செய்து நம் நாட்டுப் பிள்ளைகள்தானே அதிகமாக பெற்றோரைக் கவனிக்காமல் போகிறார்கள்.. அப்படிப்பார்க்கையில் இந்தச் சனம் செய்வதும் சரிதான் போலும்:))
அதிரா... இந்த டாபிக் நிறைய எழுத ஆசைதான்.
நீக்குஅங்க சோஷியல் செக்யூரிட்டி, ப்ரொடக்ஷன் (அரசு பாதுகாப்பு) எல்லாம் கேரண்டி. இங்க வீட்டைவிட்டு வெளில போனா ஆபத்தல்லோ?
நம்ம ஊர்ல பசங்க சிம்ப்ளா, என்னை வளக்கறது உங்க கடமைனு அவங்க எம்பது வயசானாலும் நினைப்பாங்க. அப்பா வீடு என்பது சொந்த வீடு மாதிரி அந்யோன்யம்.
பெற்றோர் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நம்ம கடமையைத்தான் செய்யறோம். அவங்க நம்மை ஆதரிப்பாங்கன்னு எதுக்கு எதிர்பார்க்கணும்?
பிடித்தமானது
பதிலளிநீக்குவாங்க கரந்தை ஜெயக்குமார் சார்.
நீக்குதிருமால் வடை – Special உளுந்து வடை -..ஆஹா அருமையா இருக்கே ..
பதிலளிநீக்குடக்குன்னு பிளான் பண்ணி செய்யலாம் போலவே ..சீக்கிரம் செஞ்சு பார்க்கிறேன்
வாங்க அனுராதா ப்ரேம்குமார்... மார்கழி இடுகைகள்ல கலக்கறீங்க. நானும் நாளை பகல்பத்து/ராப்பத்துக்காக ஒரு கோவிலுக்குச்-தமிழகத்தில், செல்கிறேன். 4 நாட்கள்.
நீக்குசெய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்யச் சொல்வாங்க.
எனக்கு மெதுவடையை விட இது நல்லா இருக்கும்போல தோணறது . என் கணவருக்காகவே செய்யணும் .நிச்சயம் செய்திட்டு சொல்றேன்
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சலின். செய்தீங்கன்னா இடுகைல போடுவீங்க. உங்க இருவருக்கும் நேரம் ஏன் கிடைக்கலை?
நீக்குதிருமால் வடை பெயர்க்காரணம் நல்லா இருக்கு :) சிலர் மட்டும் எப்படி ஒரே அளவா வடை சுடறாங்கன்னு ஆச்சர்யமா யிருக்கும் :)
பதிலளிநீக்குசாதாரண ரோட்டுக் கடைல அளவெடுத்த மாதிரி பஜ்ஜி, வடைலாம் செய்வாங்க. அவங்க திறமையை நினைத்து ஆச்சர்யமா இருக்கும். நிறைய தடவை செய்து பழகியிருப்பார்களோ?
நீக்குஉங்களுக்கு ஒரு உண்மை சொல்லோணும் நெ தமிழன்...
பதிலளிநீக்குசத்தியமாக உங்கள் முதல் பந்தி/பரா தவிர இன்னும் எதுவும் படிக்கவில்லை இந்தப் போஸ்ட்டில்... நைட்தான் றிலாக்ஸ் ஆ வருவேன் எல்லா இடமும்😂😂😂😂
ஓ.. நீங்க வௌவால்அல்லது ஆந்தை ஜாதியா? இரவு வேலை பகலில் தூக்கம்..ஹாஹா
நீக்குஇப்போதான் வடை ரெசிப்பி பார்த்து முடிச்சேன். பாதி உளுந்தைவிட முழு உளுந்துதான் அனைத்துக்கும் சுவையாக இருக்கும். அதிலும் எங்கட அம்மா வடைக்கு அரைக்கும்போது 80 வீதம் தான் அரைப்பா, ஒருவித ரவ்வைப்பதத்திலதான் அரைப்பா, அதுதான் மொறுமொறு என சுவையாக இருக்கும்.
பதிலளிநீக்குஇந்த வடையை அதிகம் தட்டையாக்கிட்டீங்கள்போல இருக்குது படத்தில, கொஞ்சம் மொத்தமாகப் போடலாம் என நினைக்கிறேன்.
இப்போ நான் கல்லிருக்கும் கிரைண்டர் வாங்கிட்டேனெல்லோ ஓன்லைனில... அதில அரைச்சு உளுந்து வடை சுட்டால்.. சுவை சொல்லி வேலையில்லையாக்கும் ஹா ஹா ஹா.
வடை சுட்டால் சொல்லி வேலையில்லை. ஆறு மாசபா இட்லி தோசை பண்ணாதவங்க, இப்போ வடை செய்யப்போகிறாங்களாமா? நம்பிட்டேன்.
நீக்குஉண்மையா செஞ்சா உங்க தளத்துல படம் போடுங்க
திருமால் வடை!
பதிலளிநீக்குபெருமாள் வடை சாப்பிட்டதுண்டு! திருவரங்கத்தில் வெளி ஆண்டாள் சன்னதி அருகே மாலை வேளைகளில், தள்ளு வண்டியில் ஒரு பெண்மணி செய்து தருவார்! ரொம்பவே நன்றாக இருக்கும்.
வாங்க வெங்கட். வெளி ஆண்டாள் கோவிலை விட பஜ்ஜி கடை என் லிஸ்ட்ல இருக்கு
நீக்கு