புதன், 16 டிசம்பர், 2020

எம்ஜிஆர் ரஜினி இரண்டு பேருக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமை என்னென்ன?

 


பானுமதி வெங்கடேஸ்வரன் :

தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை இரண்டில் எந்த மனப்பான்மை கொண்டவரை சமாளிப்பது கடினம்?

# உயர்வு மனப்பான்மை கொண்டவரால் நமக்கு சங்கடம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தமக்குத் தாமே சங்கடங்களை ஏற்படுத்திக் கொள்வர்.

& தாழ்வு மனப்பான்மை கொண்டவரை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அவருடைய தா ம பா வை சரி செய்துவிடலாம். உ ம பா கொண்டவரிடம் சரி சமமாக பேச இயலாது. எனவே, அவரை சமாளிப்பதுதான் கடினம். 

எம்ஜிஆர் ரஜினி இரண்டு பேருக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமை என்னென்ன?

# தமது கலைத்துறையில் பெரிய வெற்றி இருவருக்கும் பொது. அரசியலில் எம் ஜி ஆர் சாதித்ததை மற்றவர் இன்னும் சாதிக்காதது வேற்றுமை. 
ஆன்மிகத்தில் ரஜினி பெரிய ஆள் என்ற மாயையை மற்றவர் முயன்று பார்க்காதது ஒரு வேற்றுமை. ஒருவர் கொடை வள்ளல் அடுத்தவர் கொள்வள்ளல் ?

& ஒற்றுமை : இருவருமே சூப்பர் ஸ்டார். வேற்றுமைகள் நிறைய உள்ளன. 

"காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்" என்று பாட்டுப் பாடி ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அடிமைகள் கூட்டத்தை உருவாக்கினார் சிஸ்டம் சரி இல்லை என்னும் ரஜினி என்ன செய்வார்?

# சோறு கண்டவிடத்து காக்கைகள் குவிவது இயல்பு.  சிஸ்டம் சரியில்லாததைக் காண்பது எளிது செப்பனிடல் கடினம்.

& சிஸ்டத்தை சரி செய்ய முனைவார் என்று நினைக்கிறேன். வந்தால் பார்ப்போம். 

====  

இந்த வாரம் எங்களை யாரும் அதிகம் கேள்வி கேட்கவில்லை என்பதால், நாங்க கேட்கிறோம். 
நீங்க பதில் சொல்லுங்க :

1 )  கோவிட் தடுப்பூசி வந்தால், உங்கள் பார்வையில் முதல் மூன்று பிரிவினர் யார் யாருக்கு தடுப்பூசி போடப்படவேண்டும்? (அரசு சொல்வதை விடுங்க. உங்கள் வரிசை என்ன?) 

2)  கைக்கடிகாரம் - இந்தக் காலத்தில் யாருக்கு அதிகம் பயன்படுகிறது?

3) வீட்டிலிருந்து கொசுவை விரட்ட சரியான சாதனம் எது?
a ) கொசுவத்திச் சுருள். 
b ) கொசு அடிக்கும் bat 
c ) good night /  all out
d) வேறு ஏதாவது? 

4)  ஐந்து வயதுக்குள் இருக்கும் - பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு என்ன பரிசு தேர்ந்தெடுப்பீர்கள்? 

5)   பள்ளிக்கூட ஆண்டு விழாக்களில், ஆண்டறிக்கை என்ற ஒன்றை வாசிப்பார்களே, அதை எப்பொழுதாவது, காது கொடுத்து கேட்டதுண்டா? 

=========

மின்நிலா பொங்கல் மலருக்கு படைப்புகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்றி. 

இன்னும் அனுப்புபவர்கள், இந்த மாதக் கடைசிக்குள் அனுப்பிவைக்கவும். 

கேள்வி கேட்பவர்கள் எல்லோரும் போனவாரம் மௌன விரதம் இருந்துவிட்டீர்கள். இந்த வாரம் மௌனத்தைக் கலைத்து, கேளுங்கள். 

மின்நிலா அப்பாஜி பதில்களுக்குக் கேள்வி கேட்பவர்கள், தவறாமல் "AK " என்று குறிப்பிட்டுக் கேள்வி கேட்கவும். 

நன்றி, மீண்டும் சந்திப்போம். 

==== 



94 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்றைய கேள்வி பதில் ஓகே

    ஆசிரியரின் கேள்விகள் யோசிக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  2. தாழ்வு மனப்பான்மை கொண்டவரைச் சமாளிப்பதுதான் கடினம். இருவரையும் ஜால்ரா மூலம் சமாளித்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தா ம உள்ளவர்கள் ஜால்ரா சத்தம் எல்லாம் கேட்பார்களா?

      நீக்கு
    2. தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களிடம் ஈகோ ஜாஸ்தி. அதைச் சமாளிப்பது கடினம் அல்ல. இருவரிடமும் நாம் தாழ்ந்து போகணும், சொல்வதை டைஜஸ்ட் பண்ணிக்கணும், ஆபீஸ்ல பாஸ் கிட்ட மேனேஜ் செய்வதுபோல

      நீக்கு
    3. நமக்கு எதிரே தாழ்வு மனப்பான்மை இருக்கிறவர்கள் நின்றால்  நாம் உயர்வு மனப்பான்மை கொண்டவர்களாகி விடுவோமா?

      நீக்கு
    4. இதில் நாம் எதில் சேர்த்தி என எப்படி கண்டுபிடிப்பது? முதலில்,அதை நிர்யணிப்பது நாமா? இல்லை, எதிராளியா?

      நீக்கு
    5. கமலா அக்கா... நம்மைப்பற்றி எதிராளியும், எதிராளியைப்பற்றி நாமும்!

      நீக்கு
  3. கொசுவை விரட்ட சரியான சாதனம் - அது கொசுவின் எண்ணிக்கையைப் பொறுத்தது.

    சென்னையில் ஒரு தடவை பாத்ரூமில் exhaust fan gapமூலமாக உள்ளே வந்து கொண்டிருந்த கொசுக்களை மேட் உபயோகித்து கொல்லமுயன்று தோற்றிருக்கிறேன். நூற்றுக்கணக்காக கொன்றும் வந்துகொண்டே இருந்ததால் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொசு மேட் உபயோகித்தால் கொசுக்கள் செத்துப் போவதில்லை என்று நினைக்கிறேன்.  மறுபடி எழுந்து இருமடங்கு ஆவேசத்துடன் கடிக்கின்றன என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. சென்னைல என் பெட்ரேம்ல, சன்னல் இடுக்கு வழியே ஒரு முறை கொசுக்கள் படையெடுத்தன. பேட்டை வைத்து எவ்வளவுதான் கொல்வது? கை வலியினால் விட்டுவிட்டேன். நம்புவது கடினம்... இரு தடவையும் நூற்றுக்கணக்காக. மேலும் மேலும் கொசுக்கள் படையெடுத்தன.

      அன்றுதான் சரித்திரங்களில் படித்த போர்களும் நினைவுக்கு வந்தன. காலகேயர்கள் மாதிரி, படைபடையா வீர்ர்கள் வந்தால் எப்படி சமாளிப்பது?

      என்னைப் பொருத்தவரையில், கொசுவலை மிக உபயோகமானது. எங்கப்பா, ஆர்மிக்குக் கொடுக்கும் கொசுவலை வைத்திருந்தார். அதைக் கட்டிவிட்டு உள்ளே படுத்தால் சுகமான தூக்கம் கேரண்டி.

      நீக்கு
    3. உங்களுக்காவது ஒரு திறப்பு இருந்து அதன் வழியே வந்தது.  மூடிய அறைக்குள் எங்கள்மேல் படையெடுத்தது ஒருமுறை.  அடிக்க அடிக்க வந்து கொண்டே இருந்தது.

      நீக்கு
    4. அகல் விளக்கில் வேப்பெண்ணெய் தீபம் ஏற்றி வைக்கலாம். குட்நைட் போன்றவற்றின் மருந்து நிரப்பும் இடத்தில் வேப்பெண்ணெயை ஊற்றிவிட்டு குட்நைட்டை வைப்பது போல் வைத்துப் பாருங்கள்.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இனி வரும் நாட்களில் தொற்று பெருகாமல் குறைந்து கொண்டே வந்து முற்றிலும் அழியப் பிரார்த்திப்போம். பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் அந்த மனப்பான்மையிலிருந்து விடுபட நம்மைக் குற்றவாளியாக்கிப் பார்த்து மகிழ்வது உண்டே. உயர்வு மனப்பான்மை கொண்டவர்களிடம் பேசுவதே கடினம். நம்மை எல்லாம் பொருட்டாக நினைத்துப் பேச மாட்டார்கள். பொதுவாக இரண்டு மனப்பான்மையுமே நெருங்கிப் பழகுபவர்களிடம் இருந்தால் பழகக் கடினம் தான். கவனமாகப் பேச வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  எனக்கும் இருவகையினரிடமும் அனுபவம் இருக்கிறது!

      நீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    நலம் வாழ்க என்றென்றும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார் ..  வணக்கம்.

      நீக்கு
  7. எம்ஜாரும் சரி, ரஜினியும் சரி முற்றிலும் வெவ்வேறு மனப்பான்மை கொண்டவர்கள். பிரபலமானவர்கள் என்பதில் மட்டும் ஒற்றுமை இருக்கலாம். மற்றபடி ஒப்பிடும்படியானவை ஏதும் இல்லை. ரஜினியின் ஆன்மிகம் என்பது வேறே! எம்ஜாரின் பக்தி வேறே! பொதுவாக எல்லோரும் பக்தியையே ஆன்மிகம் என்று சொல்லிடறாங்க! அது வேறே! இது வேறே! ரஜினி ஆன்மிகத்தினுள் செல்ல முயற்சி செய்து வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுல என்னங்க பார்க்க முடியும்? எம்ஜிஆருக்கு தொண்டர்கள் பலம் பொதுமக்கள் ஆதரவு இருந்தது. அப்போ தட்டுல இருந்தது, ஜிலேபி, கம்மர்கட், மிக்சர், மசால பொரி. அதனால் மக்களுக்கு தேர்ந்தெடுப்பதும் சுலபமா இருந்தது, பெரும்பான்மையானவர்கள் ஒரே மாதிரி சிந்தித்தனர்.

      ஆனால் இப்போ தட்டுல, ஜிலேபி, ஜாங்கிரி, அல்வா, போளி, கம்மர்கட், குச்சிபிஸ்கட், தேன் மிட்டாய் என்று பலவகைகள் இருக்கு. அதனால கிளியரா இதைத்தான் தேர்ந்தெடுப்பாங்க என்று சொல்வது கொஞ்சம் யோசனையா இருக்கு. எதுக்கு வம்பு, பிடிக்காவிட்டாலும் கம்மர்கட்டையே தேர்ந்தெடுப்போம்னு நினைப்பாங்களா என்று தெரியலை. ஆனா நிச்சயமா கம்மர்கட்டைவிட்டு, இந்த ஸ்வீட்தான் அதிக ஆதரவு பெறும்னு சொல்லத் தெரியலை.

      நீங்க என்ன சொல்றீங்க?

      நீக்கு
    2. தட்டில் இருப்பது எல்லாமே ஸ்வீட் என்று நினைக்கும் உங்கள் பரந்த எண்ணம் போற்றுதலுக்குரியது.

      நீக்கு
    3. எனக்கு ரஜினியின் நடிப்பின் மேலோ அவர் சொல்வதின் மேலோ அதிகம் நம்பிக்கை எப்போவுமே கிடையாது! ஒரு நடிகர்! புகழ் பெற்றவர்! ஆன்மிகத்தில் நுழைய முயற்சி செய்து வருகிறார். அதற்கு இப்போது அரசியலைத் துணை கொள்ளப் போகிறாரோ எனத் தோன்றுகிறது.

      நீக்கு
    4. இந்த அழகிலே "உல(க்)கை நாயகர் வேறே "ஒரே நாடு! ஒரே பிரதமர்!" என்று இருப்பது ஆபத்து எனத் திருவாய் மலர்ந்தருளி இருப்பதாக முகநூல் செய்திகள் கூறுகின்றன. பின்னே எத்தனை நாடுகளாகவும் எத்தனை பிரதமர்களாகவும் இருக்கணும்னு சொல்லலை!ன் இவரெல்லாம் அரசியலில் நுழைந்தால்! :(

      நீக்கு
  8. 1.அப்பாதுரைக்கான கேள்வி: "பக்தி" "ஆன்மிகம்" இரண்டையும் இந்தக் காலத்தில் அனைவரும் குழப்பிக் கொள்கிறார்களே! அதற்கான வேறுபாடாக எதைச் சொல்லுவீர்கள்?
    2."அவனன்றி ஓரணுவும் அசையாது!" என்பதை நீங்கள் உணர்ந்த தருணம் எது? ரொம்பத் தனிப்பட்ட காரணங்களாக இருந்தால் பதில் சொல்ல வேண்டாம். விட்டுடுங்க. ஆனால் உணர்ந்திருந்தால் அதை மட்டும் சொன்னால் போதும்.

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  நல்வரவும், நன்றியும், வணக்கமும்.

      நீக்கு
  10. எம்ஜியார் ஆட்சியில் பொன்னும் மணியும் விளைந்து உதிர்ந்து ஓடியது...

    இப்போது இந்த ரசினியை முட்டுக் கொடுத்து நிமிர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்...

    எல்லாம் காலக் கொடுமை...

    மாதா பிதா செய்த பிழை மக்கள் தலையிலே - என்பது சொல் வழக்கு..

    அது இப்போது தமிழகத்துக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி 
      பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை சேருமடி 
      சேர்த்து வைத்த புண்ணியம்தான் 
      சந்ததியைக் காக்குமடி...."

      நீக்கு
    2. அருமையான பாடலை நினைவு கூர்ந்ததற்கு மகிழ்ச்சி...

      நீக்கு
    3. ***எம்ஜியார் ஆட்சியில் பொன்னும் மணியும் விளைந்து உதிர்ந்து ஓடியது...***

      எனக்குத் தெரிய டாஸ்மாக் சாராயமும்தான் திறந்து விடப் பட்டு தெருக்குத் தெரு ஓடியது!! கண்ணிருந்தும் குருடராகத்தானே வாழ்ந்து முடிக்கிறோம். பார்க்க வேண்டியதைத்தான் நாம் பார்க்கிகிறோம். எல்லொருக்குமே இதுபோல் ஒரு வியாதி இருக்கு! நீங்க எப்படி விதிவிலக்காக முடியும்? பொன்னு விளைந்து ஓடுச்சா?!! காமடி பண்ணாதீங்க சார்!

      நீக்கு
    4. துரை சொல்லி இருப்பது "வஞ்சப் புகழ்ச்சி அணி"யைச் சேர்ந்தது.

      நீக்கு
    5. ***துரை சொல்லி இருப்பது "வஞ்சப் புகழ்ச்சி அணி"யைச் சேர்ந்தது.***

      அப்படினு நீங்க சொன்னா சரிதாங்க, கீதா மேடம்! :)

      நீக்கு
  11. இனிய காலை வணக்கம் மா. பானுமதியின் கேள்விகளுக்குப் பதில் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. தாழ்வு மனப்பான்மை கொண்டவரிடம் பழகுவதே கடினம்.
    உயர்வு மனப்பான்மை கொண்டவரை
    நெருங்குவதே கடினம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் அதனாலேயே எதிராளி செய்வதை எல்லாம் குற்றக் கண்ணோடு பார்ப்பார்கள். அவங்களுக்கு ஆலோசனைகள் சொல்லுவார்கள். தாங்கள் தான் நியாயமாக நடப்பதாகவும் சொல்லிக் கொள்வார்கள்.

      நீக்கு
  13. கொசுவெல்லாம் இருக்கட்டும். எங்க வீட்டில் விதவிதமான வண்ணாத்திப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள்னு எப்படியோ உள்ளே வந்துட்டு நாங்க என்னமோ அதை உள்ளே அழைத்தாற்போல் சமையலறையில் அடுப்பில் வந்து உட்கார்ந்துக்குதுங்க. இன்னிக்குக் காஃபி கலப்பதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு. இப்போக் கூடப் பக்கத்தில் சோஃபாவில் ஓர் வெட்டுக்கிளி உட்கார்ந்திருக்கு! நேத்திலேருந்து போகலை.அதைத் தின்ன வந்த பல்லியை விரட்டிக் காப்பாத்திட்டோம். இருந்தாலும் வீட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியலை! என்ன செய்யலாம்? :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலுக்குத் தெரியாமல் ஒரே போடா போட்டுடுங்க!  நானும் சொல்ல மாட்டேன்!  இல்லைன்னா லேசா தலைல தட்டி அதை நியூஸ் பேப்பரில் சேகரித்து வெளியில் விட்டுடுங்க.

      நீக்கு
    2. பூர்வ ஜென்ம நட்பு பாசத்தோடு பார்க்க வந்திருக்கலாம்..

      நீக்கு
    3. ஹாஹாஹா, ஏகாந்தன், நீங்க சொல்வது உண்மையாக இருக்கலாம். அம்பத்தூரில் இருந்தவரை நாய்கள், பூனைகள், விதம் விதமான பாம்புகள், பெருச்சாளி, எலித்தொல்லைகள். ஆனாலும் விடாமல் ரசித்தோம். போதாததுக்கு வேப்ப மரத்தில் நடக்கும் குயில்/காக்கை சண்டை! பொழுதே போதாது. இங்கே வந்ததில் இருந்து விதம் விதமான வண்ணாத்தி/பட்டுப் பூச்சிகள். கீழே கிடந்த வெட்டுக்கிளி ஒன்றைக் கீரைத்தண்டு போல இருக்கேனு எடுக்கப் போனால் தன் ஆன்டென்னாவை நீட்டிப் பயமுறுத்துது!

      நீக்கு
    4. பட்சிகளும், வளர்ப்புப் பிராணிகளும் நம்மைச் சுற்றிவருவது நல்லதுதான் எனத் தோன்றுகிறது. அதே சமயம் சிறுஜீவன்கள் விஷயத்தில் கவனமாகவும் இருக்கவேண்டும்!

      நீக்கு
    5. கர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம்

      நீக்கு
    6. ஏகாந்தன், அதெல்லாம் பாம்புகளோடு குடித்தனமே நடத்தி இருக்கோம்! அதுக்குச் செல்லப் பெயர் கூட உண்டே! "சுப்புக்குட்டி" என்பது செல்லப் பெயர்.

      நீக்கு
  14. கொசுவுக்கு bat தான் உசத்தி.
    நிஜ பாட்டும் சாப்பிடும்.
    கையிலிருக்கும் வலைமட்டையும் கொசுவை சாப்பிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. bat இல் பட்டு நிறைய கொசுக்கள் சாவதில்லை.  இரவு  இரண்டு மணிக்குமேல் மயக்கம் தெளிந்து "நான் யார்?  எங்கே இருக்கேன்" னு கேட்டுட்டு இரண்டு மடங்கு வீர்யத்துடன் கடிக்கின்றன என்று தோன்றும்!  மேலும் பேட் மறுபடி மறுபடி கராப் ஆகிவிடும்.  புதுசு புதுசா வாங்கணும்!

      நீக்கு
    2. 😂😁😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

      நீக்கு
    3. //..மேலும் பேட் மறுபடி மறுபடி கராப் ஆகிவிடும். புதுசு புதுசா வாங்கணும்!

      சீனாக்காரன் அப்பிடித்தான் செய்வான். அப்பதான் அவன் economy வளரும் ! நீங்கள் கொசுவை நாளெல்லாம் அடிச்சுக்கிட்டிருங்க.. அவன் பணத்தை அடுக்கிகிட்டிருப்பான்.
      வேற ஏதாவது பேசினா, அடுத்த வைரஸ அவுத்துவிட்டுருவான்..

      நீக்கு
  15. ஐந்து வயதுக்குழந்தைக்கு அதன் ஐக்யூ விரிவடையும் வண்ணம் பரிசுகளை ஆலோசித்துத் தேர்ந்தெடுக்கலாம். அம்பேரிக்காவில் ஆண் குழந்தை எனில் தனியான பரிசு, பெண் குழந்தை எனில் தனியான பரிசு எனத் தனியாக வைத்திருப்பார்கள். அதிலும் வயது வாரியாக உண்டு. அப்படித் தேர்ந்தெடுக்கணும். இங்கே இன்னமும் அந்த மாதிரி வரலைனு நினைக்கிறேன். குழந்தையின் அறிவு விசாலமடையும் வண்ணம் அது இன்னமும் அதிகக் கேள்விகளைக் கேட்கும் வண்ணம் பரிசுகளைக் கொடுக்கலாம். எங்க கு.கு.வுக்குப் புதிர்கள் நிறைந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறாங்க. அவற்றைக் கண்டு பிடித்துப் போடுவதில் அதன் புத்தி செல்லுவதால் விஷமம் குறைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையின் இயற்கையான விஷமத்தை நாம் குறைக்க முயற்சித்து, அதில் வெற்றிகண்டால், குழந்தை இன்னொரு எந்திரமாக உருவாக, பெற்றோர்கள் பெருமுயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ, end result இதுதான்..

      தனி ஒரு மனிதனின் ’intelligence’ பற்றிய, அதை ’அளவிட’ நாம் ‘கண்டுபிடித்த’ IQ -கணக்கீடே (Intelligence Quotient) ஒரு அபத்தம். மனிதன் தன் மூளையைக் கசக்கி உருவாக்கிய எண்ணற்ற அபத்தங்களில் இது குறிப்பிடத்தக்கது.

      நீக்கு
    2. நீங்க வேறே ஏகாந்தன், அதெல்லாம் விஷமம் குறையவில்லை. கொஞ்சம் மாறுதலும் வேண்டுமே! அதோட விஷமத்தை நீங்க பார்த்ததில்லை. அதனால் சொல்றீங்க! விஷமம் பொறுக்க முடியாமல் போகும்போது தான் அதை மாற்றியே ஆக வேண்டி இருக்கு. இல்லைனால் ஐபாட், டிவியில் கார்ட்டூன் பார்ப்பேன் எனப் பிடிவாதம் பிடிக்கும். விளையாட்டும் இருக்கணும் இல்லையா?

      நீக்கு
  16. உங்கள் முதல் கேள்விக்கான பதில்,
    தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியவர்கள் மருத்துவத்துறையில் இருக்கும் அனைவரும்.

    மருந்துத் துறையில் இருப்பவர்கள் அடுத்த நிலை,
    ராணுவத்தில் இருப்பவர்கள் அடுத்த நிலை,

    ஆம்புலன்ஸ் பணியில் ,காவல் பணியில் இப்படி முதல்
    உதவிக்குச் செல்லும் அனைவரும்.
    பிறகே வயதானவர்கள், தலைவர்கள், மக்கள் என்று தொடரும்.

    பதிலளிநீக்கு
  17. ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைக்கு

    அன்பு ஆசிகள் கொடுத்துவிட்டு
    அது ரசிக்கும் ,விரும்பும் பண்டங்களைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
    ஜூலா வாங்கித்தரலாம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அது ரசிக்கும் தின்பண்டங்கள்// அதன் பெற்றோருக்குத் தெரியாமல் வாங்கித்தரலாம். இல்லைனா அவங்ககிட்ட பேச்சு வாங்கறது யாரு?

      நீக்கு
  18. எம் ஜி ஆருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் நிறைய
    வித்தியாசம் இருக்கிறது.
    மக்களுக்கு ஒரு தலைவன் வேண்டும் என்று நினைப்பவர்கள்
    நம்மூரில் அதிகம்.

    எம் ஜிஆர் உண்மையில் நிறைய ஏழைகளுக்குச் செய்வார் என்பது அப்போதைய செய்தி.
    இப்போது இருப்பது போல கோடிகளில் புழங்கி
    இருந்தால் இன்னுமே செய்திருப்பார்.

    ரஜினி வழி தனி வழி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அருமை. ஒரே குடும்பத்தில் இருந்தாலும், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் அவர்களுக்கு கஸ்டங்களை தக்க வைத்துக் கொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களிடம் நிறைய விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருக்கும் என்பது உண்மை. அதனால் அனுகூலம் அடைபவர்கள்தான் இந்த உயர்ந்த மனப்பான்மை உடையவர்களாக மாறி விடுகிறார்கள். இருவரையும் திருத்துவது அந்த ஆண்டவன் செயல்தான்.

    எம் ஜி.ஆர், ரஜினி இருவரின் நடிப்புமே வேறுபட்டவைதானே.. அரசியலிலும் அவர்கள் இயல்புபடி வேறுபட்ட முயற்சிகளை கொண்டு வந்து தந்து நடிப்பால் கவர்ந்ததை போன்று மக்கள் மனங்களை கவர்ந்து கொள்வார்கள். "இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை." இதை நாம் சொல்லவில்லை...பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. ரசனையான பதில்கள்.

    டார்டாய்ஸ் உபயோகப்டுத்தி அதன் புகையை நாம்தான் சுவாசித்து வியாதிகளை பெருக்கி கொல்'கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..டார்டாய்ஸ் உபயோகப்டுத்தி அதன் புகையை நாம்தான் சுவாசித்து வியாதிகளை பெருக்கி கொல்'கிறோம்.//

      தன் வினை தன்னைச் சுடும்..

      நீக்கு
  21. கோவிட் வேக்சினை முதலில் குத்த வேண்டியோர் முதலில் வேக்சினை  கண்டுபிடிச்ச  குழு அவங்க குடும்பத்தினர் நெக்ஸ்ட்   அரசியல்வாதிகள் பிரதமர் முதல் அமைச்சரவையில் உள்ள ஆளும் எதிர் சுயேச்சைகள் அப்புறம் அடுத்த லெவலில் உள்ள உயர் அதிகாரிகள்  அப்புறம் எல்லா டாப் லிஸ்டில் உள்ள பணக்காரங்க அப்புறம் மருத்துவர்கள் அப்புறம் பொதுமக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! எல்லாம் சரிதான். ஆனால் பணக்காரங்க என்று லிஸ்ட்ல ஒரு category சேர்த்திருப்பது மட்டும் ஆச்சரியமா இருக்கு.

      நீக்கு
    2. பணக்கராங்க என்பது பல விஷயத்தை யோசிச்சி எழுதினது ..ஒரு வட இந்திய பண  முதலை தன மகளின் திருமணத்துக்கு வருவோர்க்கு கொடுக்க கிஃப்ட்டை இங்கே லண்டன் வந்து ஆர்டர் கொடுத்திருந்தார் . நம் நாட்டில் எவ்வளவோ பொருட்கள் இருக்க இப்படி நம் நாட்டு மக்களை ஏய்த்து சம்பாதிச்ச பணத்தை வெளி நாட்டில் கொண்டாந்து கொட்டும் பணக்காரங்க கூட முதலில் குத்திக்கணும் ..எதுக்கு முதலில் இவங்கல்லாம் குத்தணும்னு சொல்றேன்னா நோயிலிருந்து பாதுகாக்க அல்ல :) இந்த வேக்சின் 100% உத்தரவாதம்னு இவங்களை எல்லாம் வச்சித்தான் டெஸ்ட் பண்ணனும் :)))))))

      நீக்கு
    3. பணக்காரங்க அரசியல்வாதிங்கலாம் முதலில் குத்திக்கணும் என்பது அன்பாலோ ஆசையாலோ அல்ல :) அவங்களுக்கு வரும் சைட் எபெக்ட்ஸ் பார்த்து நாம் உஷார் ஆகத்தான் :))))))

      நீக்கு
    4. அவ்வ் !! ரொம்ப தீவிரமா யோசிச்சிருக்கீங்க !!

      நீக்கு
  22. மற்ற பதில்களுக்கு அப்புறமா வரேன் 

    பதிலளிநீக்கு
  23. 1) தடுப்பூசி தயாரிப்பாளருக்கு...
    2) நம்பிக்'கை' இல்லாதவர்களுக்கு...
    3) ஙௌ...
    4) திருக்குறள்...
    5) எழுதிக் கொடுத்தது உண்டு...

    பதிலளிநீக்கு
  24. 1.நம்மால் திரைப்படத்தைத் தாண்டி யோசிக்க முடியவில்லையே ஏன்?
    2. திரைப்பட நடிகர்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடுமா?
    3.நடிகர்களை தெய்வமாக வணங்கும் பழக்கம் எப்போது முதல் ஏற்பட்டது?
    4. நெடுந்தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தன்மையை இழந்தே காணப்படுகிறார்கள். அதை ரசிக்க முடிகிறதா?
    5. ஒரு நெடுந்தொடரில் இரண்டு சிறுவர்கள் ஐந்து, எட்டு வயதுக்குள்ளாகப் பெரியவர்கள் போல் சதித்திட்டம் தீட்டித் தங்களுக்கு வேண்டாத பெண் குழந்தையைப் பழி வாங்க நினைக்கிறார்கள். இது சரியல்ல என்று தெரிந்தும் ஒளிபரப்பாவது சரியா?

    இப்போதைக்கு அடுத்து வாரக் கேள்விகள் 5. திரும்ப வந்தாலும் வருவேன்.

    பதிலளிநீக்கு
  25. கோவிட் தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டியவ முதல் மூன்று பிரிவினர் 1. மருத்துவ துறையில் இருப்பவர்கள் 2. காவல் துறை, வங்கி மற்றும் பொதுத்துறை ஊழியர்கள். இவர்கள் லாக் டவுன் காலத்திலும் வேலை பார்த்தார்கள்.3. உணவகங்கள் வைத்திருப்பவர்கள், மெஸ் மற்றும் கேட்டரிங் நடத்துபவர்கள் எல்லோருக்கும் போட்டு மிச்சம் இருந்தால் கடைசியாக சினிமாகாரர்களுக்கு போடலாம்.
    2. இது என்ன கேள்வி? எல்லோருக்கும்தான். நீரில்லா நெற்றி பாழ் என்பது போல் கை கடிகாரம் இல்லாத மணிக்கட்டு பாழ்.
    3. மஸ்கிடோ பேட், கொசுவர்த்தி சுருள் இவை எல்லாவற்றையும் விட பெட்டர் ஜன்னல்களுக்கு வலை அடித்து, ஆறு மணிக்கு முன்பு எல்லா கதவுகளையும் மூடி விடுவது. 
    4. உடை, ஆக்டிவிட்டி புக்.
    5. ஆஹா! யார் என்ன பேசினாலும் கேட்பது என்னும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு. எங்கள் கல்லூரியில் முதல்வர் பேசும்பொழுது எந்தெந்த இடத்தில் கை தட்டுவதற்காக பாஸ்  விடுவார் என்பது இப்போது கூட நினைவில் இருக்கிறது. 

    பதிலளிநீக்கு
  26. 2)  கைக்கடிகாரம் - இந்தக் காலத்தில் யாருக்கு அதிகம் பயன்படுகிறது?
    இப்போல்லாம் வாட்ச் கட்டறாங்களா :) எல்லாம் போனில்  இல்லேன்னா அலெக்ஸ்சாகிட்ட டைம் கேக்கறாங்க :))
    3, 3) வீட்டிலிருந்து கொசுவை விரட்ட சரியான சாதனம் எது?           எல்லாரும் பாட்டு கத்துக்கிட்டு பாட்டு பாடுங்க  பாட்டு சத்தம் கேட்டு கொசு மார்ஸுக்கு ஓடிடும் :))

    4,  5 வயசு குழந்தை உறவுக்குள் இருந்தா  .அதற்க்கு முதலில் ஒரு பேங்க்  சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி குடுக்கணும் .ஒரு அழகான piggy பேங்க் உண்டியல் வணங்கி கொடுக்கணும் அதில் பணம் சேர்க்கும் ஆசையாய் வரும் .ஏற்கனவே  அக்கவுண்ட் இருந்தா அதில் ஒரு தொகையை போடணும் . சிறு சுய தம்பட்டம் எங்க பொண்ணுக்கு 2 வயசிலேயே அக்கவுண்ட் ஓபன் பண்ணோம் :)))))))) 
    5,,5)   பள்ளிக்கூட ஆண்டு விழாக்களில், ஆண்டறிக்கை என்ற ஒன்றை வாசிப்பார்களே, அதை எப்பொழுதாவது, காது கொடுத்து கேட்டதுண்டா?  
                  ஓஒ கேட்பதுண்டு அதில்தான் முதல் மதிப்பெண் வாங்கறவங்களுக்கு ஸ்டைபெண்ட் பரிசெல்லாம் அனௌன்ஸ் செய்வாங்க :)) 

    பதிலளிநீக்கு
  27. எல்லோரும் பிசி போல இருக்கு! கேள்விகள் குறைவாகவே கேட்டிருக்கிறார்களே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!