தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்.
சென்னை: 'நிவர்' புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவங்கின.
இந்நிலையில், புயல் கரை கடந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கின. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மட்டும், வகுப்புகளை நடத்த வேண்டாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
====
கிராமங்களில் இயற்கையை பாதுகாக்க உருவாக்கப்பட்டது கோயில் காடுகள் . இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில் காடுகள் இருக்கிறது. தமிழகத்தில் 44 8 கோவில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. . ஹிமாச்சல் பிரதேசம் , மஹாராஷ்டிரா கேரளா , கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் கோயிலை சுற்றி காடுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் காடுகள் ஏன் அமைக்கப்பட்டது , அதனால் என்ன பயன் என்பது பற்றி சொல்கிறார் இந்திய வனமரபியல் இனப்பெருக்க நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி கண்ணன் .
இது குறித்து கனகராஜ் கூறுகையில், " பல்லடம் தாலூகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாருக்காக வழங்கப்பட்ட அரசு ஜீப் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்து கிடக்கிறது. இது தொடர்பான செய்தி தினமலர் திருப்பூர் பதிப்பில் சமீபத்தில் வெளியானது. இருந்தும் ஜீப் பராமரிக்கப்படாமல் கிடந்தது கண்டு கவலை அடைந்தேன். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் ஜீப்பை சுத்தம் செய்தேன். பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று பயன்படாத வாகனங்கள் ஏராளமாக கிடக்கின்றன. அவற்றை பயன்படுத்தவோ, அல்லது ஏலத்துக்கு விடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஜீப்பை தூய்மைப்படுத்திய பின், இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை தாசில்தார் பானுமதி ஜீப்பை பராமரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோடீஸ்வரரான கனகராஜ், அரசு ஜீப்பை தூய்மைப்படுத்திய சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
====
விருந்தோம்பல் தமிழர்களின் பண்பாடு. மனிதர்கள் மட்டுமின்றி வீடு தேடி வரும் மாடுகளுக்கும் தினமும் உணவு வழங்கி வருகின்றனர் இந்த தம்பதிகள். பம்மல் பகுதியை சேர்ந்த நீலகண்டன் காயத்ரி தம்பதியை தேடி தினமும் 15 மாடுகள் உணவுக்காக வருகின்றன.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லா நாட்களும் நல்ல நாட்களாக
இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குகாலை வணக்கம்.வாங்க!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். புயல், மழை,வெள்ளம் காரணமாக அவதிப்படுவோருக்குப் பிரார்த்தனைகள். விரைவில் இந்தச் சூழ்நிலை மாறி நல்ல நிலைமை உண்டாகட்டும். பெரிய பெரிய நாடுகளே வெள்ளத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் தவிக்கையில் அடிப்படைக் கட்டமைப்புகள் குறைவான நம் நாட்டில் இத்தனை தூரம் பாதுகாப்பதே பெரிய விஷயம். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கமும் நன்றியும். நேற்று மழை என்னை ரொம்பவே படுத்தி விட்டது. இன்னமும் கொஞ்சம் அரசு சுத்தப்படுத்துவதிலும் அடிப்பு எடுப்பதிலும் முன்கூட்டி அதிக கவனம் எடுத்திருந்தால் நேற்றைய சென்னை தண்ணீர்த்தேக்கங்களைத் தவிர்த்திருக்கலாம். தென் மாவட்டங்களில் மழை என்று சொல்லி நேற்று சென்னையில் செம மழை!
நீக்குஇறைவனுக்கு நன்றி சொல்வோம்.
நீக்குஇந்த வார நேர்முறை/மறைச் செய்திகள் அனைத்துமே புதியவை. கோயில் காடுகள் பற்றிய செய்திகள் முற்றிலும் புதியவை. மற்றச் செய்திகளும் அறியாத செய்திகள். அனைத்துப் பகிர்வுக்கும் நன்றி. காணொளியை மத்தியானமாப் பார்க்கணும். அந்த ரயில் ஓவியம் முகநூலில் கூடப் பகிர்ந்தனர் என நினைவு.
பதிலளிநீக்குநன்றி. அப்புறமாய் பாருங்க...
நீக்குநன்றி, மீண்டும் வருக!
நீக்குகுழந்தைகள் பாதுகாப்பாக வீட்டுக்குள் படிக்கும் காட்சி மிக அருமை. கூடிய விரைவில்
பதிலளிநீக்குதீ நுண்மிகள் விலகி
குழந்தைகள் சுதந்திரமாக உலவ வேண்டும்.
பிரார்த்திப்போம் .
நீக்குகோயில் காடுகள் பற்றிய காணொளி எனக்குப் புதியது.
பதிலளிநீக்குஎத்தனை முன்னேற்றமாக நம் முன்னோர்கள்
மூலிகைகளை வளர்த்திருக்கிறார்கள்!!!
திரு கண்ணன் அருமையாக எடுத்துச் சொல்கிறார்.
ஆச்சரியமாக இருக்கிறது. பேரங்களுக்கும் காண்பிக்கிறேன்.
ரயில் வண்டியை ஓவியமாக்கிக் கொடுத்திருக்கும் தலைமை ஆசிரியருக்குப்
பாராட்டுகள்.
உள்ளே வெளிச்சத்துக்கு ஜன்னல்கள் வைத்திருப்பார்களோ.
மிக நல்ல முயற்சி. அந்தக் உழந்தைகளுக்கு உண்மையான ரயில் பயணம் அமைய வேண்டும்,
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநேற்று அடை மழையாகப் பெய்ததைப் பார்த்தேன்.
பதிலளிநீக்குவிடுமுறை எடுத்துக் கொள்ள முடியாத உங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் கடினம்.
நம் ஊரை நினைத்து உண்மையில் வருத்தமாக இருக்கிறது.
என்றுதான் இந்தத் தொல்லைகள் தீருமோ.
நல்ல காலம் பிறக்கட்டும்.
நீக்குதிரு கனகராஜ் போலவே எல்லோரும் முயற்சித்தால்
பதிலளிநீக்குஒரு புரட்சியே நடந்துவிடும் நல்ல் உள்ளம் வாழ்க.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஎல்லாச் செய்திகளும் நல்ல செய்திகளாக இருந்தாலும்,
பதிலளிநீக்குமாடுகளுக்கு உணவு கொடுக்கும் நீலகண்டன் தம்பதிகளை
நினைத்து மனம் நெகிழ்கிறது.
எத்தனை கொடையாளிகள் தாங்கள் உண்ணுவதைக் குறைத்து
வரும் ஜீவன் களுக்கு உணவிடுவதை என்ன சொல்லிப்
பாராட்டுவது. அந்தம்மா கண்களில் காணப்படும்
ஒளி உண்மையாக மனதைத் தொட்டது.
இவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் கொடுக்க வேண்டும்.
பிரார்த்திப்போம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஇவங்களை எப்போவோ பார்த்த நினைவு. முன்னெல்லாம் எழுதுவாங்களே... அந்த கமலா ஹரிஹரன் மேடமா இவங்க?
நீக்குசந்தேகமில்லாமல் அவங்களேதான்.
நீக்குஹா.ஹா.ஹா.
அமெரிக்க மாணவி கீதாஞ்சலி பற்றி பத்திரிக்கையில் படித்தேன்.
பதிலளிநீக்குமிகத் துடிப்பாகச் செயல்படும் இந்தக் குழந்தை
மேலும் மேலும் வளர வேண்டும். மனம் நிறை வாழ்த்துகள்.
வாழ்த்துவோம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
சென்னையில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் ஆரம்பித்தது மிக சந்தோஷம். இருந்தாலும், விரைவில் இந்த தொற்று விடைபெற்று குழந்தைகள் எப்போதும் போல் இயல்பாக பள்ளி, கல்லூரி சென்று படித்து வரும் காலங்கள் வர அனைவரும் பிராத்தனைகள் செய்வோம்.
திரு.சச்சின் பற்றிய செய்தியும், திரு கனகராஜ் அவர்கள் செய்த செயலும் போற்றத் தகுந்தது. இந்திய வம்சாவளி சாதனை சிறுமிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். காணொளிகள் பிறகு காண்கிறேன். அனைத்து செய்திகளும் பயனுள்ளவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி, மீண்டும் வருக!
நீக்குபடித்த செய்திகள். இருப்பினும் அவர்களைப் போற்றும் விதமாக பகிர்ந்த விதம் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
நன்றி.
நீக்குகனகராஜ் அவர்களை வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குவணக்கம்.
நீக்குஎல்லாமே நல்ல செய்திகள்!
பதிலளிநீக்குசிறுமி கீதாஞ்சலிக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!
நன்றி, நன்றி.
நீக்குஇந்த வாரத்தின் நே.ம.செ. அனைத்தும் அருமை. அனைவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகோயில்காடுகள்! ந.செ.!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபயனுள்ள செய்திகள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு