ஞாயிறு, 11 டிசம்பர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில் பகுதி 3 :: நெல்லைத்தமிழன்

 

வைகுண்டப் பெருமாள் கோவில் (பரமேச்வர விண்ணகரம், காஞ்சி) – கடைசிப் பகுதி

 முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டபடி, கோவிலின் உள்சுற்றில், நான்கு பக்கங்களிலும் சிற்பத்தொகுதிகள் உள்ளன. இவை பல்லவ அரச மரபையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் சிற்பங்கள் வாயிலாக க் கூறுகின்றன.

இரண்டாம் பரமேச்வர வர்மன் மறைந்தபிறகு, ஆட்சிப் பொறுப்பில் முக்கியமானவர்கள், சிம்மவிஷ்ணுவின் தம்பி பீமவர்மனின் தற்போதைய வாரிசு அரசனான இரண்யவர்மனிடம், பல்லவ குலத்திற்கு ஒரு அரசனைத் தர வேண்டினர். அவன், தான் சிறிது வயோதிக நிலையில் இருந்தால், தன் மகன் நால்வரையும் அழைத்து யார் காஞ்சீபுர பல்லவ அரசிற்குத் தலைமையேற்கச் செல்கிறீர்கள் என்று கேட்க, மற்ற மூவரும் மறுத்த நிலையில், சிறியவனான 12 வயது பல்லவமல்லன் தான் அரசனாகச் செல்கிறேன் என்று விநயத்துடன் சொன்னானாம்.  காஞ்சீபுரத்திற்கு வந்து அரசனாக அபிஷேகம் செய்துகொண்டான். இரண்டாம் நந்திவர்மன் என்ற பெயரும் பெற்றான்.

இவை எல்லாமே கோவில் உட்புறச் சுவரில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அடுத்த முறை செல்லும்போது நான் நிறைய நேரம் செலவழித்து இவற்றைப் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

இப்போது படத்தொகுதி.


















இது தொல்லியல்துறையின் கீழ் வரும் கோவில். வாய்ப்பு கிடைக்கும்போது, இந்தப் பழமையான கற்றளிக் கோவிலைத் தரிசிக்க மறக்காதீர்கள். நம் வரலாற்றின் அடிச்சுவட்டைக் காணத் தவறாதீர்கள்.

= = = = = = = = = = = 

37 கருத்துகள்:

  1. நிறைய படங்கள். ஆனாலும் ரசிக்க முடியவில்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யம்தான். அங்க நின்றபோது ஐந்தாம் நூற்றாண்டின் அதிசயத்தில் நிற்கிறோம் என்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. அப்போதிருந்திருந்தால் அனுமதி கிடைத்திருக்குமா என் யோசித்தேன்

      நீக்கு
  2. மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு இத்தனை படங்களை எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். என் பழைய நினைவுகள் நிறைய கிளர்த்தப்பட்டன.
    நன்றி நெல்லை.

    அதுசரி, கோயிலோடு சம்பந்தப்படாத மாதிரி
    அந்தளவுக்கு வெளித் தள்ளி இருக்கும் கோயிலின் புஷ்கரணி பார்த்து என்ன நினைத்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் மதிளையொட்டித்தான் திருக்குளம் கட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பக்கத்தில் படையெடுத்த இஸ்லாமியர்களால் கட்டப்பட்ட மசூதி

      நீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். இரு நாட்களில் உங்க ஊர் பக்கம் வருகிறேன்

      நீக்கு
    2. வருக.. வருக.. தங்களுக்கு நல்வரவு..

      அதற்குள்ளாக எனது கால் உபாதை சரியாகி விட வேண்டும்...

      நாராயண...

      நீக்கு
    3. வர்றோம் ஜனவரில. ஸ்ரீ புத்தகத்தை தயாரா வச்சிருக்க ஹாஹா

      நீக்கு
    4. Sri book? உங்க புத்தகத்தைத் தான் திரும்பக் கொடுக்கத் தயாரா வைச்சிருக்கேன். போனமுறை வருவீங்கனு காத்திருந்தோம். :(

      நீக்கு
  4. சிற்ப படங்கள் அருமை பிறகு கணினியில் காணவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. ஞாயிறு புதுப்பொலிவு பெற்றிருக்கின்றது..

    "தரவாட்டிண்ட சித்ரங்களானு.." என்று எதையாவது குறுக்கே ஏற்றாமல் இருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான சிற்பங்களை காணக் கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி...

    இந்த அழகை எல்லாம் இனி சென்று பார்க்க இயலுமா?.. தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க இயலும். தொல்லியல் துறை வசம் இருப்பதால். விரைவில் அனைத்துக் கோவில்களும் அதன் வசம் செல்லணும்

      நீக்கு
  7. பல முறை பார்த்துள்ளேன். காஞ்சிபுரத்தில் நான் ரசித்து, லயித்த கோயில்களில் இதுவும் ஒன்று. என்னை மறந்து நான் பார்த்த கோயில்களில் ஒன்று இங்குள்ள கைலாசநாதர் கோயில். வாழ்வில் ஒரு முறையேனும் அனைவரும் பார்க்கவேண்டிய கோயில்.

    சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜம்புலிங்கம் ஐயா. இரு நாட்களில் உங்க ஊருக்கு வந்து அலைபேசியில் பேசுகிறேன்

      கைலாசநாதர் கோயில் இனித்தான் பார்க்கணும்

      நீக்கு
    2. காஞ்சீபுரம் போய் கைலாச நாதர் கோயில் பார்க்காமல் யாராவது இருப்பார்களா?

      அதே மாதிரி கும்பகோணம் போய் கும்பேஸ்வரர் கோயில் பார்க்கத் தவறுவார்களா?
      கும்ப கோணத்திற்குப் பெயர் காரணமே கும்பேஸ்வரர் தானே?

      நீக்கு
    3. கைலாசநாதர் கோயில் சரித்திரத்தை வைத்து நான் ஒரு கதை எழுதி எபியில் பிரசுரமாகியிருக்கிறது. தேதி 28-1-20.
      கதையின் பெயர்: சந்திப்போம், பிரிவோம், மீண்டும் சந்திப்போம். நீங்களும் வாசித்து அதற்கு பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள் நெல்லை.
      கீழே இருக்கும் வலையில் காட்டு இடத்தில் கதையின் பெயரை இட்டு மீண்டும் படித்து விடுங்களேன். அப்படியே கைலாச நாதர் கோயில் சரிதம்!!

      நீக்கு
    4. ஜீவி சார்... வைணவ யாத்திரை குழுவுடன் செல்லும்போது இந்த இடங்கள் விட்டுப்போகும். காசி விஸ்வநாதர், காட்மண்ட் சிவன் கோவில் போன்ற விதிவிலக்குகள் உண்டு. நாங்கள் செல்லும்போதும் விடுபட்டுவிடுகிறது

      நீக்கு
    5. நிச்சயம் மீண்டும் படிக்கிறேன் ஜீவி சார்

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். நேத்திக்குப் பதிவுக்கு யாருமே வரலை. விரிவாக விமரிசனங்கள் எழுதும் தி/கீதா/கமலா ஹரிஹரன் ஆகியோர் வரலை. அதோடு கோமதி அரசுவையும் காணோம். எல்லோரும் நலம் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாய்ப் பார்க்க நேரம் எடுக்கிறது. ஆனாலும் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள். நெல்லை சொல்லுவது போல் ஒரு நாள் முழுதும் தங்கி இருந்தால் தான் ஓரளவுக்காவது பார்க்கலாம். நெல்லை விவரித்திருக்கும் பல்லவ மன்னர்களின் வாரிசுரிமை பற்றி நாவலாக அகிலனோ யாரோ எழுதிப் படிச்ச நினைவும் இருக்கு.அகிலன் தான் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாவல் பேர் நினைவுக்கு வரும்போது எழுதுங்க

      நீக்கு
    2. அத்திமலைத்தேவன் வெகு சமீபத்தில் திரு காலச்சக்கரம் நரசிம்மா எழுதினது. நான் சொல்லும் அகிலன் நாவல் பல ஆண்டுகளுக்கும் முன்னால் கல்கியில் வந்தது. தண்டிக்கலம்பகம் பற்றியும் அதில் வரும் என நம்புகிறேன். தேடிப் பார்க்கிறேன் நாவலின் பெயருக்காக.

      நீக்கு
    3. நந்திவர்மன் காதலி என்னும் நாவலை திரு ஜெகசிற்பியன் எழுதி இருக்கார். ஒரு வேளை நான் அதைத்தான் தப்பாக அகிலன் எழுதி இருப்பதாக மனதில் பதிந்து கொண்டிருக்கேனோ? ஏனெனில் அகிலனின் 3 சரித்திர நாவல்கள் தான் பிரபலம். வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றிந்த்திருநகர் மற்றவை சரித்திர நாவல் ஏதேனும் இருந்தால் நினைவில் வரலை.

      நீக்கு
    4. ஜெகசிற்பியனின் நந்தி வர்மன் காதலி மூன்றாம் நந்தி வர்மன் பற்றியது. நந்திக் கலம்பக்த்தின் பாட்டுடைத் தலைவன். தன் பெயரில் கலம்பகம் பாட வேண்டும் என்பதற்காக தன் உயிரையே தந்தவன்.
      இவன் நாலாவது சகோதரன் காடவர்கோன் கலம்பகம் இய்றறுகிறான். அரியணயைக் கைப்பற்றுவதற்காக பங்காளிகளிடையே சதி.

      ஆனால் நெல்லை குறிப்பிடுவதோ இரண்டாம் நந்திவர்மன் பற்றியல்லவா?

      நீக்கு
  10. சிற்பப் படங்கள் பலதும் அழகு. வரலாறுகள் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!