வெள்ளி, 23 டிசம்பர், 2022

​வெள்ளி வீடியோ : கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும் இந்த மெல்லியளாள் புருவம் கண்டால் நாணும்…..

 நவராத்திரி பாடல்கள், அம்மன் பாடல்கள், சரஸ்வதி துர்கா பாடல்கள் என்கிற வரிசைகளில் இந்தப் பாடல் வரும்.  இந்த வரிசையில் சுசீலாம்மா நிறைய பாடல்கள் வழங்கி இருக்கிறார்.

ஜெயஜெய தேவி, மாணிக்க வீணை ஏந்தி போன்ற பாடல்கள் இந்த வரிசைதான்.  

இன்று திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக பாடல்.

யார் எழுதியது?  தெரியாது.  இசை?  தெரியாது!  பாடி இருப்பவர் சுசீலாம்மா.

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றி

குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டு
பூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை திருமகளே

திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக

அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக

திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லட்சுமீகரம்
வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லட்சுமீகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லட்சுமீகரம்

அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்

அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக 
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக

மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்

அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்

சங்கு சக்ரதாரி நமஸ்காரம் சகல வரம் தருவாய் நமஸ்காரம்
பத்மபீட தேவி நமஸ்காரம் பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்




=========================================================================================================

1982 ல் வெளியான படம் தாம்பத்யம் ஒரு சங்கீதம்.  மோகன்- சுலக்ஷனா நடித்த படம்.  இதிலிருந்து ஒரு பாடல் முன்னரே பகிர்ந்திருக்கிறேன்.  (நான் தாயுமானவன்..  தந்தையானவன்..)

இதே படத்திலிருந்து இன்று இன்னொரு பாடல்.  வெங்கட் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசை.

எஸ் பி பி குரலை ராசிக்காதவர்களுக்கு அதிருஷ்டம் கம்மி!

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ 
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ 
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ……….

இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை 
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை 
இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை 
கண்டு வர்ணணைகள் செய்வது என் வேலை 
தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை 
இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை …. 


அந்த காமன் விடும் மலர்க்கணைகள் அஞ்சும்  
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்க்கு அஞ்சும் 
அந்த காமன் விடும் மலர்க்கணைகள் அஞ்சும் 
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும் 
இந்த தோகை மயில் உறவுகளை நாடி 
கொஞ்சம் துடிதுடிக்கும் காதலனின் நாடி……

எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை 
இவள் கிள்ளிக் கிள்ளிப் பறித்துக்கொண்ட பூவை 
கை வில் அதனை வளைத்திருக்கும் நாணும் 
இந்த மெல்லியளாள் புருவம்  கண்டால் நாணும்…..

28 கருத்துகள்:

  1. சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
    சகல வரம் தருவாய் நமஸ்காரம்
    பத்மபீட தேவி நமஸ்காரம்
    பக்தர் தம்மைக் காப்பாய்
    தாயே நமஸ்காரம்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே அற்புதம்!..

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
      சகல வரம் தருவாய் நமஸ்காரம்
      பத்மபீட தேவி நமஸ்காரம்
      பக்தர் தம்மைக் காப்பாய்
      நமஸ்காரம்...

      தெய்வத்தமிழ்!..

      நீக்கு
  5. இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
    இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
    இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
    தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ…

    கன்னித்தமிழ்!..

    பதிலளிநீக்கு
  6. முதல் பாடல் பக்தி வெள்ளம்.

    தெய்வத்தமிழ் கவிஞர்கள அப்போது அதிகம்

    பதிலளிநீக்கு
  7. காமன் விடும் மலர்க்கணைகள். கனைகள் இரண்டு இடத்திலும் தட்டச்சுப்பிழை.

    பறித்துக்கொண்ட பூவை - இடையில் ப் வராது

    பதிலளிநீக்கு
  8. பாடல்கள் இரண்டும் அருமை.
    முதல் பாடல் அடிக்கடி கேட்கும் பாடல்.
    இரண்டாவது பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​மறுபடி இப்போது கேட்க வைத்து விட்டேன்!! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    வெள்ளிபாடல்களில் முதல்பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். இரண்டாவது திரைப்பட பாடல் கேட்டதில்லை. பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. முதல் பாடல் கேட்டு ரசித்திருக்கிறேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது பாட்டு கேட்டதில்லை ஆனா இப்ப கேட்டு ரொம்ப ரசித்தேன். ஊதாப்பூ ந்னு ரெண்டாவது சொல்லும் போது ஒரு கிமிக்ஸ்!!! எஸ் பி பி !! பத்தி சொல்லணுமா....சொல்லுங்க...செம....ரசித்தேன் ஸ்ரீராம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. முதலாவது பக்தி என்றால் இரண்டாவது மிகவும் இனிமை. கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. Hello to everyone 😃
    https://1stworldofarticle.blogspot.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!