பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை ஷண்முகம். இசை டி ஆர் பாப்பா.. பாடியிருப்பவர் சீர்காழி கோவிந்தராஜன்.
பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும். முருகா …
(பன்னிரு விழிகளிலே)
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
ஷண்முகா …
…
(பன்னிரு விழிகளிலே)
உன்னிரு பதம் நினைந்து அன்புடன் தினம் பணிந்து
முருகா … முருகா உன்னிரு பதம் நினைந்து …
அன்புடன் தினம் பணிந்து
திண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து
(பன்னிரு விழிகளிலே)
பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா (2)
வண்ணமயில் ஏறும் வடிவேல் அழகா (2)
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா
பன்னிரு விழிகளிலே … பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும்-
=================================================================================================
பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் பி ஆர் பந்துலு இயக்கத்தில் 1959 ஆம் வருடம் வெளியான திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். படத்தைப் பற்றிய விவரங்கள் அநேகமாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்திருக்கும்! அதிலிருந்து ஒரு பாடல் இன்று
படத்தில் எந்தெந்த வேடம் யார் யார் ஏற்றார்கள் என்று விவரங்களை டைட்டில் கார்டில் போட்டார்கள்!
கு மா பாலசுப்ரமணியம் எழுதிய பாடல் வரிகளுக்கு ஜி ராமநாதன் இசையமைக்க எஸ். வரலக்ஷ்மி பாடியுள்ள பாடல்.
பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்துள்ள பாடல்.
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறாத இன்பங்கள் சேர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே
நீ சீராட வாராய் செந்தேனே - இந்தப்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே
நீ சீராட வாராய் செந்தேனே
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ஆ..ஆ..
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி எங்கள் சிந்தை எல்லாம் இன்பமூட்டி
நீ ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை கண்டாலும் ஆகாது மானே அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே
நீ பண் பாட வாராய் செந்தேனே
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குஇரண்டு பாடல்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்..
நீக்கு'கொன்சி கொஞ்சி வா, குஹனே'-- அடுத்த வெள்ளிக்கு என் விருப்பம்.
பதிலளிநீக்குஇப்படி ஒரு பாடலா? கேள்விப்பட்டதில்லையே.. பார்க்கிறேன். யார் பாடியது?
நீக்குஇந்த ஶ்ரீராமுக்கு இவ்வளவு வருடங்கள் கழித்து இந்த 'பன்னிரு விழிகளிலே' பாடலைப் பகிரணும்னு தோன்றியதே....
பதிலளிநீக்குஎனக்கு மிக மிகப் பிடித்த பாடல். வரிகளை வாசிக்கும்போதே சீர்காழி மனதுக்குள் ஏறி அமர்ந்துகொள்கிறார்.
துன்பம் வரும் வேளையெல்லாம் ஆறுதலும் நம்பிக்கையும் கொடுக்கும் வரிகள். இன்னொன்று, நீயல்லால் தெய்வமில்லை..எனது நெஞ்சே.... அடுத்தது, நினைத்தபோது நீ வரவேண்டும். நீல எழில் மயில் ...
நினைத்தபோது நீ வரவேண்டும் இந்த ஜூலையில் போட்டு விட்டேன் என்று நினைவு.
நீக்குநீயல்லால் தெய்வமில்லை..எனது நெஞ்சே.... அடுத்தது, நினைத்தபோது நீ வரவேண்டும். நீல எழில் மயில் ...//
நீக்குநெல்லை எல்லாமே அருமையான பாடல்கள்
ஆமாம் ஸ்ரீராம் நினைத்த போது நீ வர வேண்டும் பகிர்ந்திட்டீங்க
கீதா
இரண்டாவது பாடலின் முதல் வரியை முணுமுணுத்தாலே
பதிலளிநீக்குஎஸ். வரலெஷ்மி நினைவுக்கு வந்து
வீ.பா.கட்டபொம்மனில் அவர் பூண்ட வேடத் தோற்றமும் மனதில் படியும். நல்ல குரல் வளம் கொண்ட நடிகை.
ஆமாம். பல்லாண்டு வாழ்க படத்தில் இந்தப் பச்சக் கிளிக்கொரு பாடலும் இவர்தான். குணா படத்திலும் கூட பாடி இருக்கிறார்.'
நீக்குசிங்காரக் கண்ணே... மிக அருமையான பாடல்.
பதிலளிநீக்குஅந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஜக்கம்மா.... பாடலின் போது, இப்போதாவது அவள் கண் திறந்து கட்டபொம்முவைக் காப்பாற்றுவாளா என்று தோன்றும். அப்போ இசையமைச்சவங்க திறமை, அளப்பரியது. அதுக்கு ஏற்ற மாதிரி பாடல் புனைபவர்கள். இப்பயும் இருக்காங்களே...
இதுவரைக்கும் கூட இந்தப் படம் முழுமையாக நான் பார்த்ததில்லை!
நீக்கு1959-ம் வருடம் ஐயா! நான் பள்ளி இறுதித் தேர்வு எழுதிய வருடம். சேலம் ஓரியண்டல் தியேட்டரில் ரிலீஸ். நடிகர் திலகத்தின் பிர்மாண்ட கட்அவுட். இப்பொழுது கூட, அந்த
பதிலளிநீக்கு'வானம் பொழியுது; பூமி விளையுது உனக்கேன் கிஸ்தி'?' வசனத்தை மனப்பாடமாய் சொல்வேன். சிவாஜி என்றால் கட்டபொம்மன், கட்டபொம்மன் என்றால் சிவாஜி என்று சொல்லும் படியான நடிகர் திலகத்தின் ஆவேச நடிப்பு.
ஆனால் அதே சமயத்தில்
வீ.பா.க.க்குப் போட்டியாய்
குறைந்த செலவில் வெகு துணிச்சலாய் கண்ணதாசன் பெயரைச் சொல்லி வெளிவந்த 'சிவகங்கைச் சீமை' உண்மையிலேயே ஒரு தமிழன் படமாய் ஒப்பனை சகிதமாய் மிளிர்ந்ததை
மறக்கவே முடியாது.
குன்றின் மேல் சுடர் விட்ட அகலாய், அந்த பிர்மாண்டத்தை எதிர்கொண்ட தீரம், மருது சகோதரர்களை மக்கள் மனத்தில் பதிய வைத்த
பாங்கு மறக்கவே முடியாது.
உண்மை.. உண்மை..
நீக்குஆம், கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீக்குஅதெல்லாம் சரிதான்..... கனவிலும் ஒருவர் அப்படிப் பேசியிருக்க முடியுமா?
நீக்குஎல்லார்க்கும் இனியதாக
பதிலளிநீக்குஇந்நாள் அமையட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஆனாலும்,
பதிலளிநீக்குஅன்று ஆங்கிலேயன் எழுதி வைத்ததைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வழிப்பறியன் - என்ற கூச்சலும் தமிழ்நாட்டில் உண்டு ..
கட்டபொம்மன் கொள்ளைக் காரன் - என்று கல்கண்டு தமிழ்வாணன் எழுதிய புத்தகத்தைப் படித்ததுண்டா,?..
எடுத்து வைத்திருக்கிறேன். படிக்க வேண்டும்.
நீக்குகெட்டிபொம்மு என்பது தான் அவர் பெயர். தெலுகுக் காரர். பாளையத்து சேனாதிபதி பதவியில் இருந்து சிற்றரசராக ஆனவர்.
நீக்குகட்டபொம்மன் படத்திலேயே தானதிகாரி தானியக் கொள்ளை அடித்ததாகவும் கட்டபொம்மன் அதை விசாரித்து தண்டிப்பதாகவும் சாமர்த்தியமான ஒரு காட்சி வரும். தமிழ்வாணனின் ஆதாரபூர்வமான வரலாற்று சான்றுகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திசை திருப்பலாக நுழைக்கப்பட்ட காட்சி இது.
தமிழ்வாணனின் இந்தப் புத்தகத்தை ஒரு மாத காலமாக படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன். எப்போது நேரம் வாய்க்கிறதோ...
நீக்கு//தமிழ்வாணனின் இந்தப் புத்தகத்தை ஒரு மாத காலமாக படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன். எப்போது நேரம் வாய்க்கிறதோ...// உங்களுக்கு நேரம் வாய்க்காவிட்டால் எனக்கு அனுப்பித் தாருங்கள், படித்து விட்டு திருப்பித் தருகிறேன்.
நீக்குபதிலளி
பெண்ணும், புத்தகமும் நம் கையை விட்டுப் போனால் திரும்ப வராது - இது சமஸ்க்ரித பழமொழி
நீக்குவீ.பா.க. படத்தில் தானாதிகாரியாக நடித்தவர் எம்.ஆர். சந்தானம் அவர்கள்.
நீக்குஇவர் என்ன காரணத்தினாலோ
(ராபின் ஹூட் போல என்று நினைவு)
ஒரு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அது தெரிந்து கட்டபொம்மன் அவரைக் கண்டிப்பதாக காட்சி.
அந்த இடத்தில் வரும் கட்டபொம்மன் சொல்வதாக வசனம்:
"தானாதிகாரி அவர்களே! நீங்கள்
இப்படிச் செய்ததற்கு
நாளைய உலகம்
என்னை அல்லவா கொள்ளைக்காரன் என்று தூற்றும்?"
பூலித்தேவன் (புலித்தேவன்) பற்றி தமிழ்வாணன் எழுதித் தான் பரவலாக அவர் அறியப்பட்டார். கட்ட பொம்மனுக்கெல்லாம் முற்பட்ட பாளையக்காரர்
நீக்குகாலத்தவர் அவர். இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனே என்பார் தமிழ்வாணன்.
வரலக்ஷ்மி அவர்கள் பாடிய
பதிலளிநீக்குவெள்ளிமலை மன்னவா! (கந்தன் கருணை) ஏடு தந்தானடி தில்லையிலே!.
(ராஜ ராஜ சோழன்) பாடல்களும் சிறப்பிடம் பெற்றவை..
ஆமாம். ஆமாம்.
நீக்குஇரண்டும் வெள்ளிக்குரல் பாடல்கள். சூப்பர்
நீக்குபன்னிரு விழிகளிலே...
பதிலளிநீக்குஅதெல்லாம் அன்றைக்கே மனப்பாடம்!....
:))
நீக்குஇரு பாடல்களும் மிகவும் ரசித்த பாடல்கள். அருமையான பாடல்கள், ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
ஆமாம் கீதா.
நீக்குமுதல் பாடல் பீம்ப்ளாசி, இரண்டாவது பாடல் பிருந்தாவன சாரங்கா...என் சிற்றறிவிற்கு எட்டியவரையில்..அருமையான இசையில் ராகங்கள்...
பதிலளிநீக்குகீதா
ஓ.. முத பாடல் பீம்பிளாஸா?
நீக்குஇஃகி இஃகி என்று சொல்பவரையும், வணக்கம் சகோதரரே என்று வரிக்கு வரி விளித்துக் கொண்டே வரும் இருவரையும் காணவில்லையே.....!!!!
பதிலளிநீக்குகீதா
வரிக்கு வரி - ஒவ்வொரு கருத்திற்கும்!!!
நீக்குகீதா
ஆமாம். கமலா அக்கா எங்கோ வெளியூர் செல்லப்போவதாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கீதா அக்கா முழு உடல்நலம் பெறவில்லை.
நீக்கு//இஃகி இஃகி என்று சொல்பவரையும், வணக்கம் சகோதரரே என்று வரிக்கு வரி விளித்துக் கொண்டே வரும் இருவரையும் காணவில்லையே.....!!!!// பா.வெ. என்று ஒருத்தி இருந்தாள் என்பதை மற்றவர்கள் மறந்திருக்கலாம், நீங்களுமா கீதா? Out of sight, out of mind... that's life. Geetha akka ennudaiya ou padhivirku FB il comment pottirundhaar.
நீக்குபா.வெ. அவர்களுக்கு...உண்மை. Out of sight Out of mind.
நீக்குஇரு பாடல்களும் அருமையானவை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஇரண்டு பாடல்களும் சிறப்பானவை.
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்கு@ ஜீவி அண்ணா..
பதிலளிநீக்கு// தமிழ் வாணனின் ஆதார பூர்வமான வரலாற்று சான்றுகளுக்கு.. //
அவருக்கு கிறித்தவ #₹#₹#₹#₹ கள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்த புத்தகம் அது..
மண்ணின் மைந்தன் மீது வெள்ளை நரிகள் அவதூறாகக் கூட எழுதி ஆவணப் படுத்தி இருக்கலாம் அல்லவா?..
ஓ.. வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கரா!..
மண்ணின் மைந்தன் இல்லையா?..
இருவேறு கருத்துகள். எது உண்மையோ...
நீக்குமண்ணின் மைந்தன் என்ற பதமே தவறு. அதன் அர்த்தம் என்ன? நம் மண்ணின் மைந்தன் என்பவர் ஆப்பிரிக்க நீக்ரோக்களாமே
நீக்குஆ.ஊ.ன்னா கிருஸ்தவ மிஷனா? அன்னாட்களில்
நீக்குகிருஸ்தவ மத நிருவனங்கள் கல்விக்குச் செய்த தொண்டு அளப்பரியது.
வீரபாண்டிய கட்டபொம்மன் வழிபட்ட முருகன், தேவி ஜக்கம்மா விக்ரகங்கள் திருச்செந்தூர் கோயில் இரண்டாம் பிரகார மண்டபத்தில் உள்ளன..
பதிலளிநீக்குஇன்றும் காணலாம்..
அப்படியா?
நீக்கு'பன்னிரு விழிகளிலே ' எங்கள் வீட்டில் ஒலித்த பாடல் பக்திப் பாடல்கள் அனைத்தும் எங்கள் அப்பாவுக்கு பிடித்தமாக இருந்தது.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் ஓரிரு தடவை இலங்கை வானொலியில் கேட்டிருக்கிறேன்.
நல்ல இனிமையான பாடல்கள்.
பதிலளிநீக்குசற்றுமுன்: ரிஷப் பந்த் காயங்களுடன் ஆஸ்பத்திரியில். அதிகாலை கார் விபத்து. தப்பித்ததே அதிசயம்..
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாகிற்கு தவறாமல் வர வேண்டும் என்று புத்தாண்டு தீர்மானம் எடுதுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..:))
பதிலளிநீக்குவீ.பா.க.பொ. படத்தில் எஸ்.வரலக்ஷ்மி பாடும் 'மயில்...வேல் முருகா..' என்று ஒரு பாடல் உண்டு. அதுவும் நன்றாக இருக்கும். 'சிங்கார கண்ணே பாடலை..' நான் விரும்பி கேட்டதாக நினைவு.
பதிலளிநீக்குமனம் கனிந்தருள் வேல் முருகா!..
பதிலளிநீக்குகவிஞர்
கு.மா. பால சுப்ரமணியம் அவர்கள்..
இந்தப் பாடல் என் மனதை என்னவோ செய்யும். இதுவும் ஜக்கம்மா என்று பெருங்குரல் எடுத்துப் பாடும் பாடலும் எனக்கு சோகத்தை வரவழைப்பவை
நீக்கு@ நெல்லை
நீக்கு// இந்தப் பாடல் என் மனதை என்னவோ செய்யும்.. //
உண்மை தான்..
இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
வரலக்ஷ்மியின் குரல் மிகவும் பிடிக்கும், இதில் மிகவும் குழைவாக இருக்கும் அவர் குரல்.
போர்க்கள காட்சியில் இந்த குழந்தை பெரியப்பா ! பெரியப்பா ! என்று அழைக்கும் அது மனதை கனக்க வைக்கும் தியேட்டரில் எல்லோரும் அழுவார்கள்.
வாங்க கோமதி அக்கா.. அந்தக் காலத்துக்கே போயிட்டீங்க போல..
நீக்குவீரபாண்டிய கட்டம் பொம்மன் பாடல்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கும்.
பதிலளிநீக்குமனம் கனிந்தருள் வேல் முருகா பாடலில் பின்னனி இசை கதையை சொல்லும் மிக அருமையான பாடல்.
ஆமாம். அந்தக் காலத்தில் பாடல்கள் ஒன்றை ஒன்று போட்ட போட்டுக்கொண்டு ஜெயிக்கும்.
நீக்குஎக்காலத்திலும் ரசிக்கத்தக்கப் பாடல்கள்.
பதிலளிநீக்குஆமாம் முனைவர் சார்.
நீக்குhello my name is sikhachauhan Nice article good information Thankyou
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம் நடந்தால் கூடவே வருது என் உடம்பு. என்ன செய்வது? சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வெளியே போயிருந்ததையும் முக்கியமாய்ப் பரவாக்கரைக்கு, வேறே எந்தக் கோயிலையும் இறங்கிப் பார்க்கலை என்பதையும் சொல்லி இருந்தேன். யாருமே கவனிக்கலை போல! அதுக்குப் பின்னால் செவ்வாய்க்கிழமை மதுரை போக இருந்தோம். நான் வரலைனு சொல்லிட்டேன். கடைசியில் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போய் யாருமே போகலை. குழந்தை உடம்பு இன்னமும் சரியாகலை!:(
பதிலளிநீக்குநாடு மாறுதல் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை போல.. குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னாலே கஷ்டமாகத்தான் இருக்கும்.
நீக்குஎன்னோட மடிக்கணினியைப் பையர் வாங்கி வைச்சுண்டுட்டார். அவரோடது அலுவலகக் கணினி. அதில் சொந்த வேலைகள் செய்ய முடியாது என்பதால் கிட்டத்தட்ட நாலைந்து நாட்களாகக் கணினி எனக்குக் கிடைக்கலை. இப்போக் கூடப் பையர் வெளியே போனதால் கேட்டு வாங்கிக் கொண்டு வந்திருக்கேன். வந்ததும் மறுபடி வாங்கிக்கொண்டு விடுவார். :)))))
பதிலளிநீக்குஅச்சச்சோ... பின்ன எப்படி உங்கள் கமெண்ட்ஸை நாங்கள் பார்ப்பது?
நீக்குபாடல்கள் இரண்டும் நிறையக் கேட்டு ரசித்தவை.. வரலக்ஷ்மியின் குரல் வளம் யாருக்கும் கிடைக்காத ஒன்று.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்கு