சென்ற வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் இரவு ஹோட்டலில் சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டது.
எப்போதும் ரவா, ஆனியன் ரவா என்றே போகிறோமே என்று முதல் நாள் வாழ்க்கையில் முதல் முறையாக நெய் ரோஸ்ட் என்றேன்! கொழுப்புதான்! சமீப காலங்களில் பூரி பரோட்டா எல்லாம் அலுத்துப்போய் சோலாப்பூரி வேறு ஆர்டர் செய்யும் வழக்கம் இருந்தது.எல்லாம் அவபத்தியம்தான்!
அழகாக வழக்கம்போல கோபுரமாய் நிறுத்தி நெய் ரோஸ்ட் எடுத்து வந்து செர்வ் செய்தார்கள். வீட்டில் தோசைக் கல்லிலிருந்து தோசையை எப்படி கோபுரம் போல சுருட்டுவது என்று பல நாட்களுக்கு முன்னால் முயற்சித்தது நினைவுக்கு வந்தது. யு டியூப் பார்க்காமலேயே திடீரென ஒருநாள் ரகசியம் பிடிபட்டிருந்தது.எப்போதிலிருந்து, யார் இந்த வடிவத்தை முதலில் பிடித்தார்கள் என்று நினைவில்லை.
சரவணபவன்காரர்களோ...
ஒருவர் தொடங்கினால் எல்லோரும் அதை பாலோ செய்துவிடுகிறார்கள்!
எப்போது சரவணபவன் கைமாறியதோ, அப்போதே அந்த ஹோட்டல்கள் அருகிவிட்டன.
நெய் ரோஸ்ட்டைப் பொறுத்தவரை எனக்கு சாம்பார், சட்னி எல்லாம் அனாவசியம். சுத்த்த்தமாய் அனாவசியம். கும்பாச்சியாய் நின்று கொண்டிருக்கும் ரோஸ்ட்டை மெல்ல மடக்கி படுக்கை வசமாக்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக வெறுன்னயே சாப்பிட்டு முடித்து விட்டேன். தட்டின் ஓரத்தில் வைத்திருந்த மூவகை சட்னிகளில் ஒன்றையும் தொடவில்லை. சொல்லப்போனால் அது கொஞ்சம் தோசைப் பகுதியை ஈரமாக்கி நனைத்து வைத்திருந்தது கோபம்தான், வருத்தம்தான்!! சாம்பார் கிண்ணத்தை எடுத்து தூரத்தில் வைத்து விட்டேன். எங்கும் சோடை போகாமல் எல்லா இடமும் மொறுமொறு, வாசனை. ரோஸ்ட் முடிந்ததும் ஒரு காஃபி குடித்து எழுந்தேன். இது நான் சாப்பிட்டது அடையார் ஆனந் பவன்.
அடுத்த நாள் செல்ல நேரிட்டது சங்கீதா. முதல் நாளே நெய் ரோஸ்ட் சாப்பிட்டபோது அனாவசியமாக பேப்பர் ரோஸ்ட் நினைவு வந்திருந்ததால் இப்போது அதை ஆர்டர் செய்தேன்.
சர்வர் "நெய் ரோஸ்ட் ஆர்டர் செய்யுங்களேன்.. இது தயாராக நேரமாகும்" என்றார். அதில் ஏதோ அர்த்தமிருந்ததோ என்னவோ...! 'பரவாயில்லை' என்று காத்திருந்தேன். "உங்களுக்கு முன்னதாகவே மற்றவர்களுக்கு வந்து விடும்" என்றார். "சரி" என்றேன். பாஸ் ஆர்டர் செய்திருந்த சோலாப்பூரி அழகாக ஜோடியாக வந்தது. எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் ஆர்டர் செய்திருந்த மசாலா தோசையும் மோசமான பார்மில் வந்திருந்தது. அவர்கள் சாப்பிட்டு முடித்தார்கள்.
ஒரு வழியாக பேப்பர் ரோஸ்ட் வந்தது. சொன்னாற்போல பாஸின் இலையையும் சேர்த்தே ஆக்கிரமித்தது. அருகிலிருந்தோர் என் தோசையை பார்த்தபடியே அவரவர்கள் டிபனை சாப்பிட்டார்கள்! நான் போட்டோ எடுக்க இடம் பத்தாமல் சிரமப்பட்டதை பார்த்த சர்வர் என் செல்லை வாங்கி அவரே ஃபோட்டோ எடுத்துக் கொடுத்தார். மதுரையில் வருடா வருடம் ஹோட்டல் பிரேம் நிவாஸில் தோசை திருவிழா என்ற ஒன்று நடக்கும். அதில் இதைவிட நீளமான தோசையை எல்லாம் கொண்டுவந்து செர்வ் செய்து படத்தில் பார்த்திருக்கிறேன் - . அதை இரண்டு மூன்று பேர்கள் சாப்பிடுவார்கள்.
ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்தவன் ஏமாந்தே போனேன். சும்மா கருக்கிக் கொடுத்திருந்தார்கள். இதையும் இரண்டு பேராவது சாப்பிடலாம். உண்மையான ரோஸ்ட் என்றால் ஒருவருக்கே போதும். இது டூப்ளிகேட்!
மதுரையில் கோபு ஐயங்கார் கடையில் சாப்பிட்ட பேப்பர் ரோஸ்ட் நினைவுக்கு வந்தது. கல்லில் தோசையை ஊற்றி, மேலாப்போல் வழித்து எடுத்து, எண்ணெயோ நெய்யோ ஊற்றிக் காத்திருந்தால், பேப்பரைவிட மெலிதாக இருப்பதை சுருட்டி தட்டில் போட்டால் வாயில் போட்ட உடன் கரைவது போல
இரண்டு வாயில் காணாமல் போய்விடும். இது சாப்பிட சாப்பிட தீரவே தீராமல், சுவையும் இல்லாமல், சாம்பார் சுவையும் பொருந்தாமல்...கடமையே என்று முடிந்தவரை சாப்பிட முயற்சித்து பாதிக்கு மேல் வேஸ்ட் செய்தேன். சாம்பாராவது நல்ல சுவையில் அமைந்த்திருந்தால் அதை ஊற்றியாவது சாப்பிட்டிருக்கலாம். அதிலும் சங்கீதா காரர்கள் ஏமாற்றி விட்டார்கள்.
==========================================================================================================================
பேஸ்புக்கில் கந்தசாமி அவர்கள் பகிர்விலிருந்து...
என்னுடைய 17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம் பொழுதை கஞ்சா போதையில் கடத்திய காலம். இக்காலத்தில் அவரை ஓர் எழுத்தாளராக அறிந்து அவர்மீது மதிப்பு கொண்டிருந்தத நானும் எழுதத் தொடங்கியிருந்தேன். அவருடைய வாழ்வின் கடைசி நாள் பற்றி மட்டும் சில விஷயங்களைக் குறிப்பிட்டு இப்பேச்சை முடிக்கிறேன்.
ஒருமுறை ‘சாவும், அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’ என்றார் ஜி. நாகராஜன். சாவை எதிர்கொள்ள அவர், தன்னைத் தயார்படுத்திக் கொண்ட தருணமும் வந்தது. எவ்வளவோ முறை மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய போதெல்லாம் மறுத்த அவர், மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு, அவராகவே முன்வந்து தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
1981 பிப்ரவரி-18ம் தேதி காலை அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் முடித்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணிபோல் பிரிந்தபோது, ‘கஞ்சா ஏதும் உபயோகிக்க வேண்டாம். வெளியில் கறுப்புப்படியும்படி ஆகிவிடக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும் டாய்லெட்டில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘சாயந்தரம் வரும்போது போட்டுக் கொண்டு வந்து தருகிறேன் இரவு டாய்லெட்டில் உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்றதும் என்னிடம் அதைக் கொடுத்து விட்டார்.
மீண்டும் சாயந்தரம் 5 மணி போல் நண்பர் சிவராமகிருஷ்ணனும் நாணும் அவரைப் போய்ப் பார்த்தோம். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக் கொண்டு போயிருக்கவில்லை. ‘போடத் தெரியவில்லை’ என்று சிகரெட் பாக்கெட்டையும் கஞ்சா பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தேன். பேசிக் கொண்டேயிருந்தார். மனித இனம் போரில் மாண்டு கொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசினார். இடையில் டாய்லெட் போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாளமுடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, ‘கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்’ என்று வாய் விட்டுக் கதறி அழுதார். திரும்ப வந்து படுக்கையில் படுத்துக் கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. “குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் “சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.
மறுநாள் காலை , பிளாஸ்கில் காப்பியோடு போனபோது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விட்டிருந்தார். அவர் ஜிப்பா பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட்டும் சிறு பொட்டலமும் உபயோகிக்கப்படாமல் அப்படியே இருந்தன. என் குற்றவுணர்வுகளில் ஒன்றாக அந்தப் பொட்டலம் இன்னமும் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது
சி.மோகன்
நன்றி: குமுதம் தீராநதி
====================================================================================================
இணையத்திலிருந்து எடுத்த 'ரசித்த புகைப்படங்கள்' வரிசையிலிருந்து...
==============================================================================================
தோசை பற்றிய மூட நம்பிக்கை...!
கவுஜ...!
========================================================================================
பொக்கிஷம்..
அந்தக் காலத்தில் மருத்துவர்கள் தமிழகம் முழுக்க சுற்றி 'மருத்துவச்சேவை' புரிந்திருக்கிறார்கள்!
மெரீனா எழுதி இருக்கும் இதன் தொடர்ச்சி வேண்டுமா, இதுவே போதுமா?!
கோபுலு ஜோக்!
இது ஸ்ரீதர் ஜோக்!
மெச்சூரிட்டி..!!
ஜெயராஜ் ஓவியம் என்பதை நம்ப முடிகிறதா? நெல்லை?!
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி ஸார்.. வாங்க..
நீக்குஜிம்மி லிவர்க்யூர் அந்தக் காலத்தில் ரொம்ப ஃபேமஸ். தலைமை நிலையம்: கும்பகோணம்
பதிலளிநீக்குஅதே மாதிரி புகழ் வாய்ந்த
இன்னொன்று: க்ரைப் வாட்டர். கைக்குழந்தைகள் வைத்திருப்போர் க்ரைப் வாட்டரும் கையுமாக இருப்பார்கள்.
கிரைப்வாட்டர் சுவை எனக்குப் பிடிக்கும்! குழந்தைக்கு கொடுக்கும்போது நைசாய் கொஞ்சம் டேஸ்ட் பார்ப்பேன்! ஆனால் என் குழந்தைகளுக்கு கொடுத்தது கிடையாது!
நீக்குஎனக்கு என்ன பிடிக்கும்னு சொன்னா சிரிப்புதான் வரும்.
நீக்குமதுரை செண்ட்ரல் தியேட்டருக்கு அடுத்த சந்தில் ( நேராகப் போனால் திண்டுக்கல் ரோடு வந்து விடும்)
பதிலளிநீக்குஜி.நாகராஜன் குடியிருந்தார்.
ஜி. நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' யாரேனும் வாசித்திருக்கிறீர்களோ!
அந்த சந்தில்தான் எம் எஸ் அம்மா இருந்த வீடு இருக்கிறது. அங்குதான் அப்பா அண்ணன் குடும்பத்தோடு கொஞ்ச காலம் குடியிருந்தார். ஜி. நாகராஜனின் புத்தகம் ஒன்றை அப்பா கலெக்ஷனில் பார்த்த ஞாபகம். எடுத்து வாசிக்க வேண்டும்!
நீக்குஅப்படியா?
நீக்குமலரும் நினைவுகளின் சந்தோஷமே சந்தோஷம்.
நம்ம ஜெஸி ஸார் ஜி. நாகராஜனை நினைவில் கொள்ள வேண்டும்.
நான் முன்பே நாகராஜனின் ஒரு நிமிசக் கதைகள் (4 மைக்ரோ கதைகள்) பற்றி எழுதி விட்டேன். அப்போது மோகன் எழுதியதையும் படித்தேன். ஆனால் அந்த இருண்ட பக்கத்தை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன்.
நீக்குJayakumar
நீங்கள் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் ஜெமோ அல்லது எஸ்ரா ரசனையின் அடிப்படையிக் தானே உங்கள் தேர்வுகள் இருக்கு. அதுக்காக சொன்னேன்.
நீக்குநாமாக நாம் வாசித்து ரசித்த புத்தகத்தையோ கதையையோ இந்தப் பகுதியில் நம் ரசிப்பாய் பகிர்ந்து கொண்டால் மட்டுமே இந்தப் பகுதி களை கட்டும். அது வரை வேறு தளங்களில் இருப்பதை இங்கு மறுபடியும் எடுத்துப் போட்ட உணர்வே மிஞ்சும்.
நீக்குகம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும். ஸ்ரீ ராம் சாப்பிட்ட தோசையும் கட்டுரை எழுதும்!!
பதிலளிநீக்குஆமாம் இந்த வயசில் சாப்பிட்டால் தான் உண்டு, 60 ஆனால் அது கொழுப்பு, இது ஸுகர், இது வாய்வு என்று ஒவ்வொன்றாக தடா போட்டுக்கொள்ளும்.
லிவர்க்யூர் விளம்பரத்தில் முதல் இடம் திருவனந்தபுரம். அதில் உள்ள கணபதி ஐயர் கடை இப்போதும் உண்டு. இடப் பெயர் தவறாக உள்ளது. அட்டக்குளங்கரை என்றிருக்க வேண்டும். அட்டைகள் உள்ள குளம் இருந்த இடம் என்ற ஆகுபெயர்.
ஜோர். ஆமாயணம் மழலை மொழியில் இருந்தாலும் மழலை எழுதவில்லை என்பது தெரிகிறது.
கோபுலு ஜோக் ஜோர். கடைசியில் "நேரே போங்க" என்று போர்ட் எழுதி பிடிப்பதாக போட்டிருக்கலாம்.
Jayakumar
நேயர் விருப்பம் இருந்தால் மட்டுமே ஆமாயணம் இரண்டாம் பக்கம் வெளியாகும்! அப்போது விளம்பரத்தில் உள்ள கடை இன்னும் இருப்பது ஆச்சர்யம்.
நீக்குஓம வாட்டரின் பக்குவம் தான் க்ரைப் வாட்டர்.
நீக்குஇல்லை. ஓம வாட்டர் காரமாயிருக்கும். இது சற்று இனிப்பு கலந்திருக்கும்!
நீக்குஅதுக்குத் தான் ஓம வாட்டரின் பக்குவம் என்றேன். அடிப்படை ஓம வாட்டர் தான்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..
நீக்குதோசைப் புராணம் அருமை... அதை அடித்துக் கொள்ள ஏதும் இல்லை..
பதிலளிநீக்குஹிஹிஹிஹி...
நீக்குகவிதை கவிதையாக இல்லாததால் கவுஜ என்று தலைப்பு வைத்தீர்கள் போலும்.
பதிலளிநீக்குJayakumar
அப்போதெல்லாம் இப்படி எழுதிவிட்டு கவுஜ என்றுதான் சொல்வதுதான் வழக்கமாக இருந்தது!
நீக்குதோசை புராணம் சூப்பர் ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குவலை உலகையே வெறுத்து விட்டார்களோ ஸ்ரீமதி கோமதி அரசு?..
பதிலளிநீக்குஅவர்கள் சொந்த வேலைகளில் பிஸி என்று நினைக்கிறேன். இல்லைனா கண்டிப்பா தளங்களுக்கு வந்து கருத்து எழுதுவாங்க
நீக்குஅக்கா இன்றுதான் மகன் வீட்டில் யு எஸ்ஸில் இறங்கி இருக்கிறார்கள். சற்று ஓய்வெடுத்து அப்புறம் வந்து படிக்கக் கூடும்.
நீக்குவிசாரிப்புக்கு நன்றி சகோ துரை செல்வராஜூ
நீக்குவலை உலகை வெறுக்க முடியுமா?
மனதுக்கு மகிழ்ச்சி, ஆறுதல் தரும் நண்பர்களை என்றும் அன்புடன் நன்றியுடன் நினைத்து கொண்டே தான் இருக்கிறேன்.
வருவேன் இனி நேரம் கிடைக்கும் போது எல்லாம். மகன் வீட்டுக்கு நேற்று வந்தேன். ஸ்ரீராமிடம் எல்லோரையும் கேட்டதாக சொல்ல சொன்னேன்.
நீங்கள் சொல்வது சரிதான் நெல்லை. பிள்ளைகள் வரவு, அவர்கள் வந்து இருக்கும் போது முடிக்க வேண்டிய வேலைகள் . என்று நேரம் சரியாகி விட்டது.
நீக்குநேற்று இங்கு உள்ள நேரப்படி 9 மணிக்கு மகன் வீட்டுக்கு வந்தோம்.
இனி கிடைக்கும் நேரங்களில் வருவேன் வலைத்தளம்.
//அக்கா இன்றுதான் மகன் வீட்டில் யு எஸ்ஸில் இறங்கி இருக்கிறார்கள். சற்று ஓய்வெடுத்து அப்புறம் வந்து படிக்கக் கூடும்.//
நீக்குஆமாம், ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். நன்றி ஸ்ரீராம்.
ஊரில் வலை பக்கமே வர நேரம் இல்லை. பிள்ளைகள் வந்து இருக்கும் போது அடுத்து அடுத்து செய்து முடிக்க வேண்டிய வேலைகள் என்று அதில் கவனம். வேறு சிந்தனைக்கு இடமே இல்லாமல் போய் விட்டது.
ஊத்தாப்பம் பிடிக்காதோ...?
பதிலளிநீக்குஎல்லாமே அலுத்து விடுகிறது DD...!
நீக்குதமிழக தோசை சாம்பாரை அடிச்சிக்க முடியாது.
பதிலளிநீக்குவிஜிபில சாப்பிட்ட நாலடி நீள குடும்ப தோசை நினைவுக்கு வருது
//தமிழக தோசை சாம்பாரை அடிச்சிக்க முடியாது.//
நீக்குநான் இன்னும் வெயிலில் வாடாததால் நிழலின் அருமை தெரியவில்லை!
மனைவியின் சாப்பாடு ரொம்பப் பிடிக்கணுமா? சென்னைல சரவணபவன்ல சாப்பிடுங்க. மனைவிக்கு கோயில் கட்டுவீங்க
நீக்குசுடச்சுட மூத்த குழந்தையின் முதுகில் தோசை -- வலியில் அழுது அழுது தூங்கும். இவங்க தயாரிப்புப் பணியில் தொந்தரவு இல்லாமல் ஈடுபடலாம்னா?
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா...
நீக்குஎன்ன இடு நெய் ரோஸ்ட் போட்டும் யாரும் ரொம்ப இல்லை?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நெய் ரோஸ்ட் கொலஸ்ட்ரால்னா இல்லை போரடிச்சுப் போச்சா!!! ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
எல்லாமே போர் அடிச்சுப் போயிடுது கீதா...
நீக்குஆமா ஸ்ரீராம் அதைச் சொல்லுங்க...இப்ப ஒண்ணுமே...சரி சரி புலம்பலை...நெல்லை அப்புறம் வருத்தப்படுவார்.
நீக்குகீதா
எனக்கு வீட்ல லஞ்ச் (காலை 10:45) போரடிச்சாச்சு. மோர் சாதம் காய்னு வாரத்தில் மூன்று நாட்கள்
நீக்குவீட்டில் ரவா, ஆனியன் ரவா தோசை நல்ல ரோஸ்ட் மாதிரி செய்ய வரும் என்றாலும் கூட, ஹோட்டல் போக வேண்டி வந்தால் அங்கு நான் விரும்புவது ஆனியன் ரவா தோசையாகத்தான் இருக்கும்!!!!!
பதிலளிநீக்குகீதா
முன்பு போல ஹோட்டல்களில் ரவா தோசையில் சிறப்புற்று விளங்க கில்லாடி செப்கள் இல்லை கீதா.. தண்டங்கள்1
நீக்குஆமாம் ...தோசை.நடுல பல சமயம் அவ்வளவா நல்லாருக்காது...கனமா வேற இருக்கும்
நீக்குகீதா
கௌரி கிருஷ்ணா, மங்களாம்பிகா - கும்பகோணம் - ரவா தோசை சூப்பர்
நீக்குஸ்ரீராம் நானும் வீட்டில் இப்படி கோபுரம் போலச் செய்வதுண்டு. நன்றாக வரும். ஆனால் என்ன கல்லு சின்ன கல்லு எனவே கோபுரம் சின்னதாதான் வரும்!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஆமாம்.. சமயங்களில் நடக்கும்போதே தொய்ந்து விழுந்து விடும்!
நீக்குஹாஹாஹாஹா அடுத்த கோபுரம் உடைந்து சாயுதே!!! ட்வின் டவர் போல!!!!!
பதிலளிநீக்குஅட! ஸ்ரீராம் கை கொடுங்க நானும் நெய் ரோஸ்ட் அப்படியே சாப்பிடுவேனாக்கும். நோ சாம்பார் சட்னி!...
கீதா
Same Pinch...
நீக்குஇது என்னாப்பா ரசனை.. சட்னி சாம்பார் கலந்து சாப்பிட்டா ஆஹா ஓஹோ
நீக்குஆமா ஸ்ரீராம் இவ்வளவு பெரிய ரோஸ்ட் இருவர் சாப்பிடலாம்...நான் அதனாலயே இது ஆர்டர் செய்வது அபூர்வம்....ஆனா கூட உள்ளவங்க சாப்பிடறேன்னு சொன்னா சொல்வதும் வழக்கம்.
பதிலளிநீக்குகீதா
சாப்பிடலாம். ஆனால் சுவை இல்லையே கீதா...!
நீக்குஎழுத்தாளர் எப்படியான பழக்கத்துக்கு அடிமையாகியிருந்திருக்கிறார்! மனிதர்கள் போரில் மரிப்பதற்கு வருந்துபவர் இப்படி போதையில் உழலும் மக்களைப் பற்றி வருந்தியிருக்கமாட்டாரோ அவரே போதை மருந்து எடுத்ததா இருந்திருக்கலாம்...
பதிலளிநீக்குகீதா
எனக்கு அந்த செய்தி புதிது!
நீக்குமுதுகில் தோசை!!! இப்பத்தான் கேள்விப்படுகிறேன் ஸ்ரீராம் இந்த மூட நம்பிக்கையை.
பதிலளிநீக்குமொத்து மொத்துனு முதுகுல விழறதை எங்க வீட்டுல 'இரு இரு பாட்டிகிட்ட போட்டுக் கொடுக்கறேன்...இன்னிகு இருக்கு உனக்கு முதுகுல தோசை' என்று ஒருவருக்கொருவர் கறுப்பு அஞ்சல் (ஹிஹிஹிஹி) கொடுத்துக்குவோம்~!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
எந்த வீட்டில் இந்த நம்பிக்கையை கடைபிடித்தார்களோ!
நீக்குகவுஜ - ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்.
பதிலளிநீக்குஆமாயணம் சின்னக் குழந்தை சொல்வது போல அழகாக எழுதியிருக்கிறார். நம்ம பூஸார் நினைவுக்கு வருகிறார்....
கீதா
ஸ்ரீதர் ஜோக் - ஹாஹாஹாஹா...அதானே!!!
பதிலளிநீக்குபத்திரிகைக்கும் வயதாகிறது - ரசித்தேன்
அது ஜெயராஜ் ஓவியமா....சத்தியமா நம்ப முடியலை...
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தோசை புராணம் நன்றாக உள்ளது. நீங்கள் சாப்பிட்டு பகிர்ந்த தோசைகள் பார்க்க நன்றாக உள்ளது. இன்றைய தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
இந்த கூம்பு வடிவ தோசைகள் எங்கள் வீட்டு சின்ன குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உணவகங்களுக்குச் செல்லும் போது இதைப்போல ஆர்டர் பண்ணி வந்தவுடன் அவர்கள் முகத்தில் பூக்கும் மகிழ்வை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
இந்த மாதிரி நீள தோசை நெல்லையில் சரவணபவனில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை சாப்பிட்டுள்ளோம். அப்போது அதன் விலை நாற்பதுதான். அதை என்னால் பாதி கூட சாப்பிட முடியவில்லை.
இங்கு அருகில் இருக்கும் ஒர் உணவகத்தில் ரவா தோசை (பெரிது நல்ல கரகர மொறு மொறு..... ஆனால், பல்லை கொஞ்சம் பதம் பார்க்கும்.) அறுபது ரூயாய்தான். இரண்டு முறை சாப்பிட்டுள்ளேன். பொறுமையாக நல்ல பசி இருக்கும் போது சாப்பிட முடிகிறது ஆனால் தொட்டுக் கொள்ள சட்னியை தவிர்த்து எதுவும் சரியாக அமையவில்லை. கூடவே தரும் காய்கறிகள் கலந்த ஒரு கூட்டு வாயில் வைக்கவே விளங்காது. ஆனால், இங்குள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். . தற்சமயம் நெல்லையிலிருக்கும் நெல்லைத் தமிழருக்கு கூட அந்த கூட்டு மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். ஹா ஹா ஹா. (இந்த கருத்தைப் பார்த்தால், அவர் உடனே ஓடி வந்து விடுவார்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கர்நாடக உணவு என் நாக்கிற்குப் பிடிப்பதில்லை. த நா சாம்பார் தேசம்.
நீக்குநெல்லைக், combo breakfast, ,ரவா தோசை, இப்போ கிளம்பும் நேரத்தில் தோசை சாம்பார்...
தாங்கள் அடிக்கடி இங்குள்ள சாம்பார், தோசைகளுக்கு தரும் சப்ஜி பற்றி கருத்துரைகளில் கூறுவது நான் அறிவேன்...! .அதனால்தான் இங்குள்ள தோசைகளை பற்றி எழுதும் போது உங்கள் நினைவு வரவே சும்மா சொன்னேன்.
நீக்குஆம். முன்பு தமிழ் நாட்டு சாம்பார் போல் வராது. ஆனால், இப்போது அங்கும் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு சில இடங்களில் சிறப்பாக அமையலாம். இன்று நல்லதொரு உணவுகளை நீங்கள் சாப்பிட்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கவிதை கொஞ்சம் புரியவில்லை. (எனக்கு மட்டுந்தானா?) தலைப்பும் புதிதாக உள்ளது.
முதுகில் தோசை.. செய்தி விநோதமாக உள்ளது. பொதுவாக அடிப்பதைதான் அப்படிச் சொல்வார்கள்.
அந்த ஓவியபாணி ஜெயராஜ் அவர்கள் வரைந்தது என நன்றாக தெரிகிறதே..
ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஜெ ஓவியபாணி.... புடவை அதீத கீழ் இருக்கும். புடவைக் தலைப்பு பூநூல் போல இருக்கும். செயற்கையான போஸ். கவர்ச்சி தூக்கில். அவ்வளவே.
நீக்குஆனாலும், அந்த மாதிரி ஓவியங்களில்தான் அவர் பிரபலமானார்.
நீக்குதொன்னூறுகளின் ஆரம்பத்தில் பாம்பேயில்தான் கோன் தோசையை முதல் முதலாக பார்த்தேன். எண்பதுகளில் வி.ஜி.பி கோல்டன் பீச்சில் ஃபேமிலி தோசை என்று நூறு ரூபாய்க்கு ஒரு பெரிய தோசை கிடைக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஹோட்டலுக்குச் சென்றால் என் ஆப்ஷன் ஆனியன் ரவா மசாலா.
பதிலளிநீக்குஆனியன் ரவா ஓகே, மசாலா ஊஹூம்! ஃபேமிலி தோசை கேள்விப்பட்டிருக்கிறேன். நன்றி பானு அக்கா,'
நீக்குதோசை படங்கள் , எல்லாம் அருமை.
பதிலளிநீக்குதோசைகள் பற்றிய செய்திகள் சுவையானவை.எனக்கு தோசைதான் பிடிக்கும் எந்த ஓட்டல் போனாலும் தோசை சொல்லி விடுவேன்.
வி,ஜி.பி கோல்டன் பீச் போய் பேமிலி தோசை சாப்பிட்டு இருக்கிறோம். குடும்பத்தோடு போய்.
மற்ற செய்திகள், கவிதை எல்லாம் படித்தேன்.தோசை மூடநம்பிக்கை கடவுளே !
வாங்க கோமதி அக்கா.. கருத்துரைக்கு நன்றி.
நீக்குவெளியே தோசை சாப்பிடுவது என்றால் எனக்கும் இந்த நெய்ரோஸ்ட் பிடிக்கும்.
பதிலளிநீக்குஜோக்ஸ் வழமைபோல ஹா...ஹா.