சனி, 3 டிசம்பர், 2022

7 மாதங்களில் 3500 குளங்கள் மற்றும் நான் படிச்ச கதை (JC)



======================================================================================================




==========================================================================================================



===========================================================================================================================


=======================================================================================================================


===========================================================================================================================================================================


 நான் படிச்ச கதை - J K C

பாயசம் - தி . ஜானகிராமன்


முன்னுரை

இன்று தி ஜா வின் ஒரு கதை…..பாயசம். ஒரு பெரிய மனிதர், சிறிய மனசு. திடகாத்திர உடம்பு, வன்மம் நிறைந்த உள்ளம், தொலைக்காட்சி தொடர்களில் வருவது போன்று ஒரு பழி வாங்கும் எண்ணம் உள்ளவர் செய்யும் ஒரு சின்னப் பையன் செயல்ஒரு பெரிய கதையின் தோற்றுவாயாக ஒரு நாள் காட்சி தான் இந்தக் கதை.

தி ஜா  கதை என்று நினைத்து எழுதவில்லை. அவருடைய மனதில் பொங்கியதை அப்படியே எழுதியுள்ளார். கதை நிகழ்ச்சிகள் (பால்), கதை மாந்தர்களின் உள்ளக் கிடைக்கைகள் (அரிசி), காட்சி  வர்ணனைகள் (சீனி), உவமைகள், உருவகங்கள் (முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய்என்று மனதில் இருந்து வரும் எண்ணங்களை ஒரு பால் பாயசமாகப்  பரிமாறுகிறார். ஆனாலும் பாயசம் ஒரு சிலருக்கு கசப்பாகத் தோன்றலாம்.

பதிவின் நீளம் கருதி கதை முழுதும் தரப்படவில்லை. சுருக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது. கதையின் சுட்டி கொடுத்திருக்கிறேன். சுருக்கமும் ஏறக்குறைய அவருடைய வார்த்தைகளிலேயே தரப்பட்டுள்ளது. அவர் எழுதிய முறையில் அல்லாமல் புரிந்துகொள்ள ஏதுவாக கதை சுருக்கமும்  சற்றே நேர்கோட்டில் (linear mode) புனையப்பட்டுச் சொல்லப்படுகிறது.

கதையின் சுட்டி :

அழியாச்சுடர்கள் - பாயசம் 

பாயசம்—-- தி ஜா 

சாமநாது : பெரியவர். 77 வயசு. ஆனாலும் கல்லு போன்ற தேகம், திடகாத்திர உடம்பு. சாமநாதுவின் மனைவி வாலாம்பாள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அவள் பெற்ற முதல் இரண்டு பிள்ளைகள் - இந்த உலகத்தில் இல்லை. மூன்றாவது பெண் - இல்லை. நாலாவது பெண் - கலியாணமாகி மூன்றாவது வருடம் கணவனை இழந்து, பிறந்து வீட்டோடு வந்துவிட்டாள். பழுப்பு நார் மடி கட்டிக்கொண்டு பிறந்த வீட்டோடு வந்துவிட்டாள். ஐந்தாவது - பையன் - டில்லியில் ஏதோ வேலையாய் - சித்திரம் வரைகிறானாம். ஆறாவது பையன் - உள்ளூரில் தான்.

சுப்பாராயன் : சாமநாதுவின் அண்ணா பையன். 66 வயது. மூட்டு வியாதி, மண்டை கிறுகிறுப்பு, ப்ளட் ப்ரெஷர் போன்ற வியாதிகள் உண்டு. ஏழு பெண்கள். நாலு பிள்ளைகள். படிப்பு படிப்பு தான். சாமநாது தான் பெயருக்குப்  படிக்க வைத்தார்.

சுப்பராயனைப் படிக்க வைக்க முடியவில்லைதான். ஊருக்கு வந்தான். ஓடிப்போனான். கோட்டையில் கடையில் உட்கார்ந்து கணக்கு எழுதினான். அங்கே சண்டை. கடை வாடிக்கை ஒருவரிடமே கடன் வாங்கி பாதி பங்கு லாபத்திற்கு அதே மாதிரி மளிகைக்கடை வைத்தான். பயலுக்கு என்ன ராசி! முகராசியா! குணராசியா! சின்னக் கடை மொத்தக் கடையாகி, லாரி லாரியாக நெல் பிடித்து, உளுந்து பிடித்து, பயறு பிடித்து இருபது வருஷத்துக்குள் இருபது லட்சம்  சொத்து. உள்ளூரிலேயே கால் பங்கு நிலம் வாங்கியாகி விட்டது.

பாகம் பண்ணி சாமநாதுவுக்குப் பாதி கொடுத்தான். சாமநாதுவுக்குக் கோபம். அவர் பங்கு ஊருக்கு சற்று எட்டாக் கையில் விழுந்தது. அது மட்டுமில்லை. ஆற்றுப்படுகைக்கும் எட்டாக்கை. சண்டை. அப்போதுதான் வாலாம்பாள் சொன்னாள்: “என்ன! கொடுத்து வச்சேளா? உங்க பாட்டா சம்பாதிச்ச சொத்தா - இல்லே உங்க அப்பா சம்பாதிச்சதா? ஒண்டியா நின்னு மன்னாடி சம்பாதிச்சதை பாவம் சித்தப்பான்னு கொடுக்கறான். இந்த தான மாட்டுக்கு பல்லு சரியாயில்லெ, வாலு சரியாயில்லியா? பேசாம கொடுத்ததை வாங்கி வச்சுக்கட்டும். ஊரிலே கேட்டா வழிச்சுண்டு சிரிப்பா. “

ஆற்றின் குறுக்கே புதுமாதிரிப் பாலம் - புதுப்பாலம் -. சுப்பராயன்தான் பாலம் இந்த ஊருக்கு வருவதற்குக் காரணம். அவன் இல்லாவிட்டால் நாற்பது மைல் தள்ளிப்போட்டிருப்பார்கள். சர்க்காரிடம் அவ்வளவு செல்வாக்கு.

வலது பக்கம் - பின்னால் - வேளாளத் தெருவில் - புகை - வெல்லம் காய்ச்சுகிற புகை. சுப்பராயன் தான் கரும்புப் பயிரைக் கொண்டு வந்தான் ஊருக்கு - எதிரே அக்கரையில் நாலு இடத்தில் புகை, வெல்ல ஆலைப் புகை - எல்லாம் சுப்பராயன்.

அதோ பள்ளிக்கூடம் - சுப்பராயன்.

பாலத்துக்கு ஓரமாக கோவாப்பரட்டி - சுப்பராயன்.

இன்று சுப்பராயனின் கடைசி பெண் ஏழாவது பெண்ணுக்கு கல்யாணம். சாமநாதுவின் மனதில் அசூயை.  ‘சுப்பராயா, எப்படிடா இப்படி ஏழு பெண்ணைப் பெத்தே! ஒரோரு குட்டிக்குமா கலியாணம்னு ரயில் ரயிலா சம்பந்திகளையும் மாப்பிள்ளைகளையும் மச்சுனன்களையும் கொண்டு இறக்கறே!’

மணலூரார் கலியாணம்னா கலியாணம்தான்” - சாமநாதுவே சொல்லிக்கொண்டார். அவர் குடும்ப ஊரே இல்லை. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் (புரோகிதப்) பிழைப்புக்காக மணலூரை விட்டு இங்கு குடியேறி, ஒரு (அக்ரஹாரத்து) ஓரத்தில் ஒரு குச்சில் நுழைந்தது. இப்போது தெரு நடுவில் பக்கம் பக்கமாக இரண்டு மூன்று கட்டு வீடுகளில் சொந்த இடம் பிடித்துவிட்டது. மணலூர்ப் பட்டம் போகவில்லை. உள்ளூரான்களை எகிறி மிஞ்ச வந்த இந்த நிலை சாமநாதுவின் பார்வையிலும் நடையிலும் இந்தக் கணம் எப்படித் தெறிக்காமல் போகும்? உள்ளூர், வந்தவர்கள் எல்லாரும் பார்க்கட்டும்.

சாமநாதுவின் வீடு, சுப்பராயன் வீடு இரண்டும் அண்ணன் தம்பியாக நிற்கின்றன. இரண்டு வாசல்களையும் அடைத்து பந்தல், திண்ணையெல்லாம் புது வேட்டிக் கூட்டம். உள்ளே கூடத்தில் பூ, பிச்சாணா, குழந்தைகள் இரைச்சல், ட்ரங்குகள்.

இனி மீதிக்கதை அப்படியே சுருக்கப்படாமல்.

அரசமரத்தை விட்டு, பாதை அதிர அதிர, காவேரியை நோக்கி நடந்தார் சாமநாது. நுனியை எடுத்து இடுப்பில் செருகி, முழங்கால் தெரிகிற மூலக்கச்சம். வலது தோளில் ஒரு ஈரிழைத் துண்டு - திறந்த பாள மார்பு, எக்கின வயிறு, சதை வளராத கண், முழுக்காது - இவ்வளவையும் தானே பார்த்துக்கொண்டார்.

தண்ணீர் முக்கால் ஆறு ஓடுகிறது. இந்தண்டை கால் பகுதி மணல். ருய்ருய் என்று அடியால் மணல் அரைத்துக் கொண்டு நடந்தார்.

மேளம் லேசாகக் கேட்கிறது. கூப்பிடுவார்கள். குடும்பத்திற்குப் பெரியவன். சித்தப்பா சித்தப்பா என்று சுப்பராயன் கூப்பிட்டுக்கொண்டு வருவான் - இல்லாவிட்டால் அவன் தம்பிகள் கூப்பிடுவார்கள் - என்னமோ நான்தான் ஆட்டி வைக்கிறாற் போல... கூப்பிடட்டும்....

ஈரிழையை இடுப்பில் கட்டி முடிச்சிட்டு சாமநாது தண்ணீரில் இறங்கினார். முழுக்குப் போட்டு, உடம்பைத் தேய்த்தார்.

(நர்மதே சிந்து காவேரி என்று சுலோகம் சொல்லிக்கொண்டே பிழிந்து) உடம்பைத் துடைத்து (க்கொண்டு) அரை வேட்டியைப் பிழிந்து கொசுவி உதறிக் கட்டி (க்கொண்டு) விபூதி பூசிக்கொண்டு நடந்தார் சாமநாது. (சித்தப்பா சித்தப்பா என்று அரற்றுவான் சுப்பராயன் பாவம்.)

நாயனமும் தவுலும் நெருங்கிக்கொண்டிருந்தன. அரசமரத்து மேடைமுன் நின்று பிள்ளையாரையும் கல் நாகங்களையும் கும்பிட்டுவிட்டு விரைந்தார். தெருவில் நுழைந்தார்.

அவர் வீடு, திண்ணையெல்லாம் புது வேட்டிக் கூட்டம். உள்ளே கூடத்தில் பூ, பிச்சாணா, குழந்தைகள் இரைச்சல், ட்ரங்குகள்.

தாண்டிக்கொண்டு உள்ளே போனார். வேட்டியைக் கட்டிக்கொண்டார். கொல்லைக்குப் போய் காலை அலம்பி வந்து ஜபத்திற்கு உட்கார்ந்தார்.

மேளச்சத்தம்.

அப்பா, கூப்பிடுறாப்பா?” - நார்மடித் தலை எட்டிப் பார்த்தது. சிறிசு முகம்.

இதோ.”

சாமநாது வெளியே போனார்.

சித்தப்பா, எங்க போய்ட்டேள்?”

சுப்பராயன் குரல். மூச்சு வாங்குகிற குரல், கூனல் முதுகு.

மாலை மாற்றுகிறார்கள் - பெண்ணும் பிள்ளையும். அதையும் ஊஞ்சலையும் பார்த்தால், பார்வதி பரமேச்வரனை, லக்ஷ்மி நாராயணனைப் பார்க்கிற புண்யமாம். ஊரிலிருக்கிற விதவைகள்கூட மூலை முடுக்கெல்லாம் வந்து நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பல். ஒடிந்த பல், அழுக்கிடுக்குப் பல், தேய்ந்த பல், விதவைப் பல், பொக்கைப் பல், சமையற்காரன் கூட வந்து நிற்கிறான்.

கண்ணூஞ்சலாடி நின்றார்....”

நாயனக்காரன் வாங்கி வாசிக்கிறான் அந்தஊஞ்சலை’!

சாமநாதனுக்கு மூச்சு முட்டிற்று. மெதுவாக நகர்ந்தார். வியர்வை சுடுகிறது. காற்றுக்காகக் கொல்லைப்பக்கம் நடந்தார். கூடத்தில், காக்காய் இல்லை. கொல்லைக்கட்டு வாசற்படி தாண்டி கடைசிக்கட்டு. அங்கும் யாருமில்லை. கோட்டையடுப்புகள் மொலாமொலா என்று எரிகின்றன. கூட்டம் கூட்டமாக நெருப்பு எரிந்தது. தவலை தவலையாகக் கொதிக்கிறது. சாக்கு மறைவில் எண்ணெய்ப் பாடத்தோலும் அழுக்குப் பூணூலுமாக ஒரு பயல் வெள்ளரிப் பிஞ்சு நறுக்குகிறான். வேறு ஒரு பிராணி இல்லை. பார்வதி பரமேச்வராள் மாலை மாற்றுகிற காட்சியில் இருக்கிறான்கள்.

கோட்டையடுப்புக்கு இப்பால் மேடைமீது ஒரு பாரி ஜோட்டுத் தவலை. இடுப்பளவு - மேல் வயிறளவு உயரம் பாயசம்  மணக்கிறது. திராட்சையும் முந்திரியுமாக மிதக்கிறது. எப்படித்தான் தூக்கி மேடைமீது வைத்தான்களோ? மேல் வளையங்களில் கம்பைக் கொடுத்து பல்லக்கு மாதிரி இரண்டு பேராகத் தூக்கினால்தான் முடியும். ஐந்நூறு அறுநூறு பேர் குடிக்கிற பாயசம்.

நான் ஒண்டியாகவே கவிழ்த்து விடுவேன்.

சாமநாது இரண்டு கைகளையும் கொடுத்து மூச்சை அடக்கி, மேல்பக்கத்தைச் சாய்த்தார். ப்பூ - இவ்வளவுதானே. அடுத்த நொடி, வயிறளவு ஜோட்டி, மானம் பார்க்கிற வாயை, பக்கவாட்டில் சாய்த்துப் படுத்துவிட்டது. பாயாசம் சாக்கடையில் ஓடிற்று.

வெள்ளரிப் பிஞ்சு நறுக்குகிற பயல் ஓடிவந்தான்.

தாத்தா தாத்தா!”

சாமநாதுவுக்கு முகம், தோலியெல்லாம் மணல் படர்ந்தது.

அரிவாள் மணையை எடுத்துண்டுன்னா வரான் பயல்!

கை கால் உதறல் - வாய் குழறிற்று.

படவாக்களா, எங்கே போயிட்டேள் எல்லாரும் - இத்தனை பெரிய எலியைப் பாயசத்திலே நீஞ்சவிட்டுவிட்டு. இத்தனை பாயாசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள் - கிராதகன்களா! மூடக்கூடவா தட்டு இல்லே?”

ஒரு வேலைக்காரி ஓடிவந்தாள்.

என்னா பெரியசாமி!”

ஆமாண்டி - பெரியசாமி பார்க்காட்டா, பெருச்சாளி முழுகின பாயசம்தான் கிடைச்சிருக்கும். போங்கோ, எல்லாரும் மாலை போட்டுண்டு ஊஞ்சலாடுங்கோ..?”

இன்னும் நாலைந்து பேர் ஓடிவந்தார்கள்.

நார்மடியும் முக்காடுமாக அந்தப் பெண்ணும் ஓடி வந்தாள்.

வேலைக்காரி அவளிடம் சொன்னாள்.

எப்படிப்பா இத்தணாம் பெரிய ஜோட்டியை சாச்சேள்!”

அவள் உடல், பால்முகம் - எல்லாம் குரு படர்கிறது.

போ அந்தாண்டைஎன்று ஒரு கத்தல். “நான் இல்லாட்டா இப்ப எலி பாஷாணம்தான் கிடைச்சிருக்கும். பாயசம் கிடைச்சிருக்காது.”

பெண் அவரை முள்ளாகப் பார்த்தாள். கண்ணில் முள்  மண்டுமோ?

சாமநாதுவுக்கு அந்தப் புதரைப் பார்க்க முடியவில்லை. தலையைத் திருப்பிக்கொண்டு, “எங்க அந்த சமையக்கார படவா?” என்று கூடத்தைப் பார்க்கப் பாய்ந்தார்.

- பெ பெ பே பே

பே பெ பே பே எ -

ஆனந்த பைரவியில் ஊஞ்சல் பாட்டை வாங்கி நாயனம் ஊதுகிறது.

வாலாம்பாள் பாடுகிற மாதிரியிருந்தது.

****

கதை அச்சு வடிவில் சுட்டி  :

அழியாச்சுடர்கள்

கதை ஒளி/ஒலி வடிவில் சுட்டி :

Youtube :     பாயசம் | தி. ஜானகிராமன் | பாரதி பாஸ்கர் | Bharathy Baskar

குறும்படமாக

நெட்ஃப்ளிக்சில் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் டெல்லி கணேஷ், ரோஹிணி, அதிதி பாலன் நடித்து இந்த சிறுகதை வெளியாகி இருக்கிறது.


குறும்படக் காட்சிகள்


பாயசம் தி.ஜா.வின் முழு வீச்சும் வெளிப்படும் சிறுகதை. மனித மனத்தின் அசூயையை, பொறாமையை, உறவுகளுக்குள்ளே இருக்கும் அகங்காரப் (ego) பிரச்சினைகளை அருமையாக சொல்லி இருக்கிறார்.”

இந்த சிறுகதையை ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் சிறந்த தமிழ் சிறுகதை பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.

நன்றி விக்கி

ஆசிரியர் பற்றிய குறிப்பு.

 

தி. ஜானகிராமன் (1921 - 1982) மன்னார்குடி வட்டம் தேவக்குடி என்ற ஊரைச் சார்ந்தவர்.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி..வும் பயின்றவர். ஆசிரியர் பயிற்சியில் (எல்.டி) பட்டம் பெற்ற பின் 11 ஆண்டுகள் பள்ளியாசிரியராகப் பணியாற்றினார்.

1945 - 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றினார். 1960 -1974 வரை தில்லி வானொலி நிலையத்தில் உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தார். பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தஞ்சாவூர் நிலத்தின் வாழ்க்கையை எழுதியவர் என்றும், இசை சார்ந்த நுட்பங்களை இலக்கியமாக்கியவர் என்றும் விமர்சகர்களால் கருதப்படுகிறார்மோகமுள் அவருடைய மிகச்சிறந்த நாவலாக கருதப்படுகிறது அம்மா வந்தாள் நாவல் பெரிய விவாதங்களை உருவாக்கியது

சமகால தஞ்சை மண்ணின் எழுத்தாளர்களான கு. பா ரா, எம் வீ வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு ஆகியோரின் உற்ற நண்பர்.

1979-ல் ஜானகிராமனுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப் பட்டது

மெய்மறக்க வைக்கக்கூடிய உணர்வு நிலைகளைக் கதைகளில் வெளிப்படுத்துவதே தன் இலக்கிய அளவுகோலாக தி.ஜானகிராமன் குறிப்பிடுகிறார். ``உணர்வு இல்லாமல் இயந்திரரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டி நம்மைப் பிரமிக்கவைக்க முடியும். ஆனால், மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள்" என்கிறார்.

68 கருத்துகள்:

  1. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. மஞ்சரி ஆசிரியராய் இருந்த தி.ஜ.ர.விடமிருந்து வேறுபடுத்திக் காட்ட
    இலக்கிய உலகில்
    ஜானகி ஸாரை தி.ஜா. என்றே அழைப்பது வழக்கம்.

    பதிலளிநீக்கு
  3. ஜெயமோகனுக்கு தி.ஜா.வின் மேல் என்ன காண்டோ (எரிச்சலோ?)
    தெரியவில்லை. ஜானகி ஸாரின் எத்தனையோ உன்னத சிறுகதைகள் இருக்க இந்தக் கதையை அவரின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதையால் பெறப்படும் நீதி என்னய்யா என்று எஸ்.ரா.விடம் கேட்டால் அவர் இன்னொரு பக்கம் மூஞ்சியைத் திருப்பிப்பார் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கதையால் நீதி பெறணும் என்பது என்ன அவசியம்? இந்தக் கதையிலேயே, நாம் அவரைப்போல் இருந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றும் இல்லையா? சித்தப்பாவை விட்டுக் கொடுக்காதவன் போல நாம் இருக்கணும், எவ்வளவு பணம் வந்தாலும் உறவை விடக்கூடாது, மேலே கொண்டுவரணும் என்பதே நீதிதானே

      நீக்கு
  4. புதிய தொழில் நுடபத்தில் முழு அளவிலான கட்டுரை...

    கைத்தொலைபேசிக்குள் பெரிதாக்கி இப்படியும் அப்படியுமாக நகர்த்தி ஏற்றி இறக்கி உருட்டிப் புரட்டி.......

    படிப்பதற்கு மிக மிக சிரமம்..
    தற்சமயம் கண்களுக்கு இத்தனை சிரமத்தை ஏன் தரவேண்டும் என்று தோன்றுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்திகள் பகுதியைச் சொல்கிறீர்கள் என்றால்...

      ஒரு விளக்கம்...


      தினமலரில் காபி பேஸ்ட் செய்ய முடியாமல் செய்து விட்டார்கள்!!!  நல்ல செய்தியைப் பகிர வேண்டிய கட்டாயம் குறுக்கு வழிகளை நாட வேண்டி இருக்கிறது.

      நீக்கு
  5. மண்ணிற்கான மாண்பினைச் செய்துள்ளனர்..

    அவரவர்க்கும் இயன்ற வகையில் மண்ணைக் காத்திட வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு பாயசத்தையும் கீழே கவிழ்த்த எழுத்தாளனின் வக்கிரத்தை எதற்காகக் கொண்டாடுவது!. இதுவா தஞ்சை மண்ணின் குணம்?..
      புரியவில்லை..

      நமக்குப் பிடிக்க வேண்டும் என்ற நியதியா?..

      நீக்கு
    2. இதை ஏன் எழுத்தாளனின் வக்கிரமாய்க் கொள்ளணும் தம்பி துரை? சாமநாதுவின் பாத்திரப்படைப்பு! அவ்வளவு நேரமாய் வக்கிரமான சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த மனது விஷத்தைக் கலந்த பின்னரும் கடினமாகவே இருந்த மனம், திடீரென மாறிப் பாயசத்தைக் கொட்டிக் கவிழ்த்ததன் மூலம் அவர் மனமாற்றத்தை நாம் உணர முடிகிறது அல்லவா? அதான் கதாசிரியரின் வெற்றி. அவர் அப்படிக் கவிழ்க்கலைனால்? கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. தஞ்சாவூரான் சொந்த அண்ணா பிள்ளை கல்யாணத்திலேயே நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்னுட்டான் என்றல்லவோ பழி வந்து சேரும்?

      நீக்கு
    3. என்னாது..... இது புச்சாக் கீதே.... நான் புரிந்துகொண்டது, அவரது வக்கிர புத்தியினால், சும்மா பாயசத்தில் எலி விழுந்தது என்ற சாக்கைச் சொல்லிவிட்டு, பாயசத்தைக் கவிழ்த்தது. அவரது எண்ணம், பாயசத்தைக் கவிழ்ப்பது, மற்றவர்களின் சந்தோஷத்தைக் கண்டு பொறாத குணம்.

      நீக்கு
    4. அதுவும் தான்! எப்படி வேணாலும் முடிவை யூகம்செய்ய இடம் கொடுப்பது தானே ஓர் நல்ல சிறுகதையின் அழகு. நான் இப்படி நினைச்சுக்கறேன். நீங்க நினைப்பதும் பொருத்தமாகவே உள்ளது.

      நீக்கு
    5. இந்தக்கதை பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டமாக இருந்தப்போ எழுதினது. அதனால் இப்போதைய தஞ்சாவூரை மட்டும் எடுத்துக்க வேண்டாம். இம்மாதிரிக்கேவலமான மனிதர்களை நிறையவே பார்க்கலாம், எல்லா ஊர்களிலும்.

      நீக்கு
    6. அதுவும் தான்! எப்படி வேணாலும் முடிவை யூகம்செய்ய இடம் கொடுப்பது தானே ஓர் நல்ல சிறுகதையின் அழகு. நான் இப்படி நினைச்சுக்கறேன்.//

      அதே கீதாக்கா நானும் அப்படித்தான் . கூடவே நீங்கள் சொல்லியிருக்கும் இந்த வரிகளும் கடைசி வரிகளும்....//

      //சாமநாதுவின் பாத்திரப்படைப்பு! அவ்வளவு நேரமாய் வக்கிரமான சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த மனது விஷத்தைக் கலந்த பின்னரும் கடினமாகவே இருந்த மனம், திடீரென மாறிப் பாயசத்தைக் கொட்டிக் கவிழ்த்ததன் மூலம் அவர் மனமாற்றத்தை நாம் உணர முடிகிறது அல்லவா?//

      கீதா

      நீக்கு
    7. துரை அண்ணா, அது கீதாக்கா சொல்லியிருப்பது போல் அந்தக் கதாபாத்திரப்படைப்பு.

      பொதுவாகவே கதைகளில் இருந்து நாம் அந்த ஆசிரியரின் மனதைப் படிக்கப் பார்க்கிறோம்....அல்லது அவரது எண்ணங்களைப் படிக்கப் பார்க்கிறோம். அதனால் அந்த ஆசிரியரின் மீதே நமக்குச் சில சமயம் பிடிக்காமல் போவதும் நடக்கிறது. அப்படி என்றாலும் அக்கதை வெற்றி என்றே எனக்குத் தோன்றும். அந்த அளவிற்கு அந்தக் கதை நம்மை பாதிக்கிறது என்பதால்....
      இன்னும் சொல்லலாம் நேரம் இல்லை....கதாபாத்திரங்களை வைத்துக் கதாசிரியரைக் கணிப்பது இயலாது என்பதே என் எண்ணம்,

      அதுவும் அக்கா சொல்லியிருப்பது போல் எல்லா ஊர்களிலும் இப்படியான கதாபாத்திரங்கள் உண்டுதானே.

      கீதா

      நீக்கு
  6. சாமநாது ஒரு கேரக்டர்.
    நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத கேரக்டர்.
    அந்த கேரக்டரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (தொடர்ச்சி)
      அற்புதமாக எழுத்தில் வடித்துக் காட்டியதில் ஜானகி ஸார் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கொள்ளலே தகும்.

      நீக்கு
    2. அப்படித்தான் எழுத்தாளரின் எழுத்தை அணுகணும். இல்லையென்றால் எல்லோரும் நீதிபோதனைக் கதைகள் எழுதவேண்டியதுதான்.

      நீக்கு
    3. சாமநாதுவை விட மோசமான குணமுள்ளவர்கள் எல்லாம் உண்டு. அதிலும் அண்ணன் குடும்பம்/தம்பி குடும்பம் என நினைத்துப் பழி வாங்கும் மனிதர்கள் நிறையவே உள்ளனர். சாமநாதுவை நினைத்தால் கடைசியில் அவர் திருந்துகிறாரே! அதை உதாரணமாக எடுத்துக்கலாம். அதோடு அந்தக் கால கட்டத்தில் இப்படி எல்லாம் நடந்திருக்கு எனப் பெரியோர் சொல்லியும் கேட்டிருக்கேன்.

      நீக்கு
    4. என்னாது.... சாமநாது திருந்தினாரா? அப்படீன்னு உங்கள்ட வந்து சொன்னாரா? கதையை நல்லாத்தான் படிச்சீங்களா? இல்லை உங்கள் கற்பனையை ஓட்டிவிட்டீர்களா?

      நீக்கு
    5. கதையைப் பல முறை படிச்சிருக்கேன். நீங்க சொல்றாப்போல் மனதுக்குள் தோணினாலும் கடைசியில் அவர் திருந்திட்டார்னே ஏத்துப்போமே எனத் தோன்றுகிறது. இதோ எடுக்கும்படியான இடத்தில் புத்தகம் இருந்தால் எடுத்துப் படிச்சுட்டு மறுபடி வரேன்.

      நீக்கு
    6. சாமநாது திருந்தினாரா இல்லையா என்று ஆசிரியர் முத்தாய்ப்பாகச் சொல்லாமல் விட்டிருப்பதே அழகான முடிவு....அதுவும் இலைமறைகாயாக அவர் பெண்ணின் பார்வையை சமாளிக்க முடியாமல் வேறு என்னவோ சொல்லி சமாளித்துச் செல்லும் போதுகடைசி வரியாக

      //ஆனந்த பைரவியில் ஊஞ்சல் பாட்டை வாங்கி நாயனம் ஊதுகிறது.

      வாலாம்பாள் பாடுகிற மாதிரியிருந்தது.//

      இதில் முடிவு அடங்கியிருப்பதாகத்தான் தெரிகிறது.

      கீதா

      நீக்கு
    7. நெல்லை அந்தக் கடைசி வரி சாமிநாதுவின் மனம் உணர்வதின் ஆரம்பம் என்றும் கொள்ளலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது...

      கீதா

      நீக்கு
    8. ஜீவி அண்ணா ஏன் உதாரணமாகக் கொள்ளக் கூடாது என்கிறீர்கள்? அவரைப் போல் நாம் இருக்கக் கூடாது என்று நாம் நினைக்கலாமே.....அதுவும் உதாரணம் எனலாம்தானே இல்லையா? ஒன்று நேர்மறை உதாரணம் மற்றொன்று எதிர்மறை அதை நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் உதாரணம்...

      கீதா

      நீக்கு
  7. மிக அருமையான தன் எழுத்தில் வடித்துக் காட்டிய விதத்தில் தி.ஜா. வெற்றி பெற்றிருக்கிறார் என்று கொள்ளுதலே தகும்.

    பதிலளிநீக்கு
  8. தஞ்சாவூர் என்று கண்ணில் தென்பட்டதால் மட்டுமே வந்தேன்...

    பதிலளிநீக்கு
  9. ஜானகுராமன் அற்புதமான எழுத்துக் கலைஞர்.

    தி.ஜா. - தி.ஜான்னு தலைலே தூக்கி வைச்சிண்டு கொண்டாடறீங்களே ஐயா, அவரோட கதை ஒண்ணை படிச்சுப் பாக்க கொடுங்களேன்யா'ன்னு யாராவது கேட்டால் இந்தக் கதையைப் பரிந்துரைக்க யோசிக்கணும் -- அதுக்காக சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி ஜா வின் பெயர் சொல்ல மோக முள். அவரை வசை பாட அம்மா வந்தாள். இதுவே பொதுக்கருத்து. 

      நீக்கு
    2. அப்போ மரக்குதிரை?

      தி.ஜா.வின் எந்த நாவலும் சோடை போனதேயில்லை.

      ஒவ்வொன்றும் ஒருவகை உன்னதம்.

      நீக்கு
    3. மரக்குதிரையா அல்லது மரப்பசு வா?

      நீக்கு
    4. மரப்பசு தான். காலம்பரவே சொல்ல நினைச்சு விட்டுப் போயிடுத்து! :(

      நீக்கு
    5. மரப்பசு தான். நினைவோட்ட குழறுபடிகளில் பசு, குதிரையாகி விட்டது.

      நீக்கு
  10. தனக்கு இந்த மாதிரி அதிருஷ்டம் இல்லையே என்றே எண்ணி எண்ணி வக்கிரத்தை வளர்த்துக்கொண்ட மனதைக் கதை வடிவில் படைத்துள்ளார். மனித மன வக்கிரம். எழுத,து என்பதே எழுத்தாளனின் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது. படைப்பாளன், இந்த குணத்தைப் பொதுவெளியில் வைக்கணும் என்று விரும்பியிருக்கிறார். அவ்ளோதான்.

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  11. இன்றைய பாசிடிவ் செய்திகளில் என்னைக் கவர்ந்தது, சிறு குட்டைகள் வெட்டும் வேள்வி. அது நிலத்தடி நீரைப் பன்மடங்காகப் பெருக்கக்கூடியது.

    தமிழக அரசியலில் ஜெ வின் சிறந்த திட்டமான கண்டிப்பான மழை நீர் வடிகால் தேக்கம் கிடப்பில் போடப்பட்டது சோகம்தான். அந்தத் திட்டத்தின் பின்விளைவாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது எனப் பல செய்திகள் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. மேல் கொடுத்துள்ள கதைச்சுட்டிகள் சரியாக இல்லை. சரியான சுட்டி தாழே 

    https://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_19.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகத்தான் இருக்கிறது.   சுட்டியை க்ளிக்கினால் சரியாகச் செல்கிறதே...

      நீக்கு
    2. செல்லும். கதைப் பக்கத்திற்கு செல்லவில்லை. முகப்புக்கு மட்டும்.

      நீக்கு
    3. நீங்கள் சரியாக கிளிக் செய்து பார்க்கவில்லை என்று தெரிகிறது

      நீக்கு
  13. //இல்லை
    யென்றால் எல்லோரும் நீதிபோதனைக் கதைகள் எழுதவேண்டியதுதான்...//

    மிக மிக நல்ல கருத்து..

    பதிலளிநீக்கு
  14. நல்செயல் மாந்தர்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  15. கண்பார்வைத் திறன் குறைந்த கலெக்டர் பற்றிப் படிச்சிருக்கேன். இதுக்கு முன்னாடியும் கண் பார்வை இல்லாத ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கலெக்டராக இருந்த நினைவு. கோத்தகிரிப் பெண்ணைப் பற்றிச் செய்தித்தாள்கள் அலறுகின்றனவே. நாக்பூர் செய்தியும் குளங்கள் வெட்டி இருப்பதும் புதிய தகவல்கள். அனைத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பொறாமையிலும் ஆற்றாமையிலும் பொங்கிக் கொண்டிருந்த மனது திடீரெனப் பாயசத்தைக் கொட்டி ஒரு நொடியில் மாற்றம் காண்கிறது. இந்த மாற்றத்தை இயல்பாய் நம்மையும் ஏற்க வைக்கிறார் திரு தி.ஜானகிராமன் அவர்கள். இப்படியான மனிதர்களை நிறையப் பார்த்திருக்கேன். வட்டு வட்டாக மருமகள் தோசை வார்ப்பதைப் பொறுக்க முடியாமல் மாமியாரும்/நாத்தனாரும் அதில் சுடுநீரை ஊற்றுவதைக் கண்டிருக்கேன். பின்னர் அவர்களே அதைச் சாப்பிடும்படி நேர்ந்ததையும் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல் உணர்ந்ததையும் பார்க்க நேர்ந்தது. இங்கே அண்ணா பிள்ளை. இதுவும் சகஜமாக நடக்கும் ஒன்றே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதில் சுடுநீரை ஊற்றுவதைக் கண்டிருக்கேன். // ஆஹா..எவ்வளவு அருமையான குணம்... வயதான பிறகு, போகும் காலத்தில் திருந்தியிருப்பாங்களே.. என்னை மன்னிச்சுக்கோ என்று சொல்லியிருப்பாங்களே

      நீக்கு
    2. திருந்தினாங்களா இல்லையா? தெரியாது நெல்லை. நமக்கு என்ன அதைப் பற்றி!

      நீக்கு
    3. இல்லை கீசா மேடம்...இந்த மாதிரி மருமகளைக் கொடுமைப்படுத்துபவர்கள், பொதுவாக மாமியார் என்ற நிலையில் வீட்டுக்கு வந்த மருமகள்களை, அதிலும் மூத்த மருமகளை வேலைக்காரியைவிட மோசமாக நடத்துபவர்கள், கட்டக் கடைசிக் காலத்தில், உனக்கு ரொம்பத் துன்பம் கொடுத்துவிட்டேன் இல்லையா? என்று மனமுருகுவதுபோல் பேசுவார்கள். அந்த அப்பாவிப் பெண்ணும், அப்படீல்லாம் இல்லைம்மா... அம்மா சொன்னால் தவறா? என்றெல்லாம் பதில் சொல்லும்போது ஒரு ஆறுதலை அந்த மாமியார் அடைவார்.. எத்தனை இதுபோன்ற நிகழ்வுகள்...

      நீக்கு
    4. ஹா ஹா நெல்லை ....மன்னிச்சுக்கோ என்று சொல்பவர்கள் கொஞ்சம் பேர் தான்.....

      கீதா

      நீக்கு
    5. கதைகளிலா, படங்களிலா, சீரியலிலா, நெல்லை?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    6. நிஜத்தில்தான்.... பாதிக்கப்பட்டவர் என்னிடம் சொன்னது... அவ்வளவு பெரியவங்க... கடைசி காலத்தில் சொல்லும்போது என்ன செய்வது? அதனால என்னம்மா என்றுதான் சொன்னேன். பண்ணினதை அழிச்சுட முடியுமா? என்றார்.

      பசங்க, இந்த மாதிரி, அப்பா... நீங்க அப்போ இப்படிச் சொன்னீங்க, அதைக் கேட்டபோது தரமுடியாதுன்னீங்க என்றெல்லாம் எப்பவாவது சொன்னால், ரொம்ப ஸாரிம்மா.. மன்னிச்சுக்கோ என்று சொல்லுவேன். அவங்களைக் கடுப்பாக்கிடும் இந்த பதில்.

      நீக்கு
    7. சில காயங்கள் ஆறவே ஆறாது நெல்லை. நீங்க உங்க குழந்தைகளிடம் இன்னமும் இணக்கமாக நடந்திருக்கலாமோ என அடிக்கடி எண்ணிக் கொள்வேன். நீங்க எங்கேயோ கோபுரத்தில் உட்கார்ந்த வண்ணம் குழந்தைகளைப் பார்த்திருக்கீங்க! போதும்! இனியாவது கீழே இறங்கி வந்து சரிசமமாக நடந்துக்கோங்க! இதில் எந்தவிதமான ஈகோவும்(அகங்காரம்?) பாதிக்கப்படாது. என் வயதும் உங்களிடம் பழகி வரும் பழக்கமும் இதைச் சொல்ல வைத்துள்ளது. அதே போல் சாரி எல்லாம் கேட்காதீங்க. அவங்க சுட்டிக்காட்டினால், "அப்போ தெரியலை எனக்கு. இப்போ உணர்ந்து கொள்கிறேன்." என்று சொல்லுங்க.

      நீக்கு
  17. சாமி/மநாதுவின் மன வக்கிரங்கள் எல்லாம் அவர் சிந்தனைகளின் மூலமே வெளிப்படுகிறது. அவ்வப்போது அவரின் மனசாட்சியாக வரும் இறந்து போன மனைவி. சிறு வயதில் விதவையாகி விதவைக்கோலத்துடன் பூரண அழகோடு அங்குமிங்கும் செல்லும் சாம/மிநாதுவின் பெண்! இந்தக் கதை இருக்கும் புத்தகம் என்னிடம் இருக்கு. தம்பி கொடுத்தார். இதுவும் மோகமுள்ளும். எருமைப்பொங்கல் என்றொரு தொகுப்பும் உண்டு. பார்க்கணும் எதில் இந்தக் கதை வந்திருக்குனு! சில தொலைக்காட்சித்தொடர்களில் பாயசத்தில் விஷம் கலக்கும் காட்சிகளைக் காண நேர்ந்தால் எனக்கு தி.ஜானகிராமனும் இந்தக் கதையும் நினைவில் வரும். சமீப காலங்களில் தன் வினை தன்னைச் சுடும் என்பது அப்படியே பலித்து வருவதையும் பார்த்துக் கொண்டிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்.... ஒரு நல்ல புத்தகத்தை உங்கள் கையெழுத்திட்டு எனக்குத் தாங்க (ஜனவரில அங்க வரும்போது)

      நீக்கு
    2. வழிப் பயணத்தில் படிக்கத் தம்பியிடமிருந்து எடுத்து வந்தது. என்னோடது இல்லை. என்னோடதுனு சொல்லும் புத்தகங்கள் எல்லாம் கோயில்கள் பற்றித் தான். எனக்கு வந்தவை. :)))))

      நீக்கு
    3. அப்போ உங்களோடதுன்னு சொல்லிக்க ஒரு நல்ல புத்தகம்கூட இல்லையா? எல்லாம் ஆட்டையைப் போட்டு வந்தவைதானா? ஹா ஹா ஹா

      நீக்கு
    4. பைன்டிங் புத்தகங்கள் எல்லாம் நான் சேர்த்தவையே! 30 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் தூள் தூளாக வருது. நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் நிறைய உள்ளன. கௌதமன் சார், மதுரையிலிருந்து ஸ்ரீராமின் அண்ணா, ஜிஎம்பி சாரி, வைகோ, ரிஷபன்,கடுகு,இன்னும் உறவினர்கள்/நண்பர்கள் கொடுப்பார்கள் அல்லது அனுப்பி வைப்பார்கள். அவை தான் என்னிடம் உள்ள புதிய புத்தகங்கள். நான் இன்று வரை புத்தகக் கண்காட்சியெல்லாம் பார்த்தது இல்லை. ஒரு புத்தகம் கூட வாங்கியதில்லை. ஆன்மிகக் கண்காட்சி திருவான்மியூரில் நடந்தப்போ அங்கே வள்ளலார் பற்றிய புத்தகம், விவேகானந்தரின் அறிவுப்புனலே! அருட்கனலே! (ரா.கண்பதி) தெய்வத்தின் குரல் போன்றவை வாங்கிக் கொண்டேன். தெய்வத்தின் குரல் இணையத்திலேயே கிடைச்சாலும் கையில் வைத்துப் படிப்பதில் உள்ள ஆனந்தம் தனி.

      நீக்கு
    5. ..ஒரு புத்தகம் கூட வாங்கியதில்லை.//

      நல்லாருக்கு !

      நீக்கு
  18. //மன்னார்குடி வட்டம் தேவக்குடி // தேவக்குடி இல்லை, தேவன்குடி, தேவங்குடி என வழக்கு. எங்கள் உறவினர்கள் பலர் இன்னமும் அங்கே இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  19. Geetha Sambasivam "7 மாதங்களில் 3500 குளங்கள் மற்றும் நான் படிச்ச கதை (JC)” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    //மன்னார்குடி வட்டம் தேவக்குடி // தேவக்குடி இல்லை, தேவன்குடி, தேவங்குடி என வழக்கு. எங்கள் உறவினர்கள் பலர் இன்னமும் அங்கே இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  20. இன்றய பாசிட்டிவ் செய்திகளில் என்னை மிகவும் கவர்ந்தவை நிலத்தடி நீர் பெருக்கி குளங்கள் பெருக்கிய செய்தி...இப்படி எல்லா ஊர்களிலும் செய்யலாம்...

    பாஸ்கர் ஹலாமி, ஸ்ரீமதி இருவருமே மிகச் சிறந்த முன்னுதாரணமாகிறார்கள். ஆர்வமும் உழைப்பும் இருந்தால் என்ன பின்னடைவும் இருந்தாலும் முன்னுக்கு வரலாம் என்பதைக் காட்டுபவர்கள். அதுவும் ஸ்ரீமதி விடா முயற்சியால் 4 வது முறை நீட் எழுதி வெற்றி பெற்றிறுக்கிறார்! அதுவும் இப்படியான பின்னணியிலிருந்து. இது எத்தனை உயரிய முன்னுதாரணம்!

    அந்தப் பெண்ணின் பெயர் மறந்துவிட்டது....ஒரு பெண் நீட் தேர்வில் இடம் கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்துகொண்டதும் அதை ஒட்டி கூக்குரல்களும், அரசியலும் நினைவுக்கு வருகிறது. இப்பெண் இப்படி வெற்றி பெற்றதைக் கொண்டாடி யாரேனும் எழுதினார்களா?!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்பெண்ணின் விடா முயற்சி, வைராக்கியம், குறிக்கோளை நோக்கிய உழைப்பு இதை முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள் என்று சொல்லி??!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. தி ஜா வின் இக்கதை ஜெகே அண்ணா பகிர்ந்ததிலிருந்துதான் தெரிந்து வாசித்தேன்.
    தாழ்வுமனப்பான்மையால் ஏற்படும் பொறாமை, வக்கிரபுத்தி இது மிக யதார்த்தமான கேரக்டர். இப்படியான குணங்கள்தான் பலருடைய ஆளுமையையும் கெட வைக்கிறது.

    கதையை வெகு இயல்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் தி ஜ. அதானே எழுத்தாளரின் வெற்றி!

    முடிவு அருமை...இயல்பான முடிவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஜெ கே அண்ணா, அல்ல்து வேறு யாரேனும் இந்தப் படத்தின் வெப் சீரிஸ் நவரசம் நு வசந்த் எடுத்த ஒவ்வொரு உணர்வு பேஸ் கதைகள் 9 ல் இந்த பாயசம் பாத்தீங்களா?

    நான் எந்த ஓடிடி யிலும் பணம் கட்டவில்லை எனவே பார்க்க வாய்ப்பில்லை.. ஆனால் பார்க்க ஆசை உண்டு. வசந்தின் டைரக்ஷன் என்பதால்

    இதை எதற்குக் கேட்கிறேன் என்றால், இந்த எபி சோடில் கதை - தி ஜா என்று போடுகிறார்களா? போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    ஆனால் இதை விமர்சிக்கும் ஒரு இளசுக்கு இது திஜா கதை என்றே தெரியலை. இவங்க எல்லாம் எதுக்கு விமர்சனம்னு யுட்யூப்ல இப்படி பப்ளிக்கா பேசறாங்க? காமெடியா இருக்கு. இந்தப் படத்தின் மைனஸ் என்று கதையின் சில அம்சங்களைச் சொல்லி, ஆனால் டைரக்டர் ஸ்க்ரிப்ட் நல்லாருக்கு என்றும் சொல்கிறார் அந்த இளசு. கதை யாருடையது என்று யுட்யூப் டிஸ்க்ரிப்ஷன் பாக்ஸ்லயும் இல்லை அந்த இளசும் சொல்லலை....இப்படி எதுவும் தெரியாமல் எப்படி இவர்களால் பேச முடிகிறது பொதுவெளியில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் பார்க்க ஆசை உண்டு. // நேரம் உண்டா? ஏற்கனவே டிராஃப்டில் ஏகப்பட்டது உண்டு. புதிதாக நிறைய எழுத யோசனைகள் மாத்திரம் உண்டு.

      நீக்கு
  23. இக் கதையை குறும்படமாக பார்த்திருக்கிறேன். அவரின் வன்மம்தான் எமது மனதை சங்கடப்படுத்தும் . பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!