காலை நாலரைக்கு எழுந்து விடும் எனக்கு பல் தேய்த்ததும் காஃபி வேண்டும் என்பதால் நானே போட்டு விடுவேன்.
ஸ்வாமிக்கு விளக்கேற்றி, சர்க்கரை கலந்த பால் வைத்தபின் காபியை எடுத்துக்கொண்டு கணினி முன் அமர்ந்தால் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துப் பருக இரண்டு மூன்று நிமிடங்கள் பிடிக்கும்! சின்ன டம்ளரில் முக்கால் டம்ளர். அவ்வளவுதான். இன்னும் ஒரு வாய் வேண்டும் என்று தோன்றும் சமயம் காஃபி முடிந்துவிட வேண்டும்.என் மாமியார் காஃபி சூடாக வேண்டும் என்று கேட்பார். பாலை முதல்முறை காய்ச்சும்போது மட்டும்தான் காஃபி சாப்பிடுவார். இரண்டாம் முறை சூடுசெய்தால் சாப்பிடமாட்டார். பிடிக்காது. அவரிடம் காபியைக் கொடுத்தபின் - டபராவுடன் கொடுக்கவேண்டும் - அதை ஆற்றுவார்... ஆற்றுவார்... ஆற்றுவார்... திடீரென முகத்தை அண்ணாந்து வாய்திறந்து காஃபியை தண்ணீர் குடிப்பது போல கடகடவென்று குடித்து விட்டு டபராவுக்குள் டம்ளரைச் செலுத்தி எடுத்துக் கொண்டு வந்து கழுவி வைத்து விடுவார்.
அப்புறம் காஃபி குடித்து என்ன பயன் என்று எனக்குத் தோன்றும் அந்த மணத்தை அனுபவிக்கவேண்டும். கசப்பான அந்த சுவையை அனுபவிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நாக்கில் இட்டு சுவைத்துக் குடிக்க வேண்டும்! இவர் என்னடாவென்றால்...! இவரைப்போல சிலர் இருக்கிறார்கள்தான். அதேபோல காஃபியை சுவைத்தபின் அந்த மணம், சுவை நாக்கைவிட்டு அகலும்வரை வேறு எதையும் வாய்க்குள் போட மனம் வராது. பொதுவாக காஃபி என்றில்லை, எது சாப்பிட்டாலும், சாப்பிட்டு முடித்தபின் அதன் சுவையின் நினைவில் கொஞ்ச நிமிடங்களை கழித்து விட்டுதான் தண்ணீர் கூட குடிப்பது வழக்கம்.
பின்னாட்களில் என் அப்பா காஃபி குடித்து முடித்த கையோடு ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து குடிப்பார். வாய் கொப்பளிப்பார். ஆரோக்கியமாம். இதற்கு காபியே குடிக்க வேண்டாமே... ஆரம்ப காலங்களில் அவர் அப்படி செய்து நான் பார்த்ததில்லை.
என் காஃபியை நானே போட்டுக்கொள்வது எனக்குப் பிடிக்கும். நம் சுவை நாமறிவோம், நம் நாக்கறியும்! அதென்னவோ ஹோட்டல்களிலும், திருமண விழாக்களிலும் 'சர்க்கரை போடாமல் காஃபி' என்றால் அவர்களாக டபுள் ஸ்ட்ராங் என்று சேர்த்துக்கொண்டு டிகாக்ஷனை அதிகமாக ஊற்றிக் கலந்து தந்து விடுகிறார்கள். என்ன டிசைனோ.. நான் சர்க்கரை போடாமல் நார்மல் டிகாக்ஷனுடன் காஃபி என்று சேர்த்துச் சொல்வது வழக்கம் எனினும் இதிலும் ஒரு ஆபத்து என்ன என்றால் டிகாக்ஷன் அளவு தேவைக்கும் குறைவாக இருக்கும்! இன்னும் கொஞ்சம் டிகாக்ஷன் கேட்டால் அவர் ஒரு வெற்றி புன்னகை பூப்பார், ஏதோ அவர் டபுள் ஸ்ட்ராங் மேதை போலவும் நாம் ஒன்றும் அறியாத பேதை போலவும்... இங்கு காஃபிக்கு அதிக சர்க்கரை போட்டுக்கொண்டு குடிக்கும் நண்பர்களை மன்னித்து விடுகிறேன்! காஃபியின் அருமை தெரியாதவர்கள்!!! பாயசம் என்று ஒன்று தனியாக இருப்பதை மறந்தவர்கள்!
அதே போல காஃபி சாப்பிடும்போது துணைப்பொருட்களாக மேரி பிஸ்கட் போன்ற இன்னபிற வஸ்துக்களை சேர்த்து சாப்பிடுவதும் எனக்குப் பிடிக்காது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காஃபி போடுவதே ஒரு கலைதான். இப்போதெல்லாம் டபரா இல்லாமல் டம்ளரில் மட்டுமே காஃபி (வீடுகளில்) தருகிறார்கள். ஆனால் என் அம்மா ஒவ்வொருவருக்கும் டபரா வைத்துதான் காஃபி கலப்பார்.அவரவர் டம்ளர், அவரவர் டபரா என்று வேறு வைத்திருப்போம்! தனித்தனியாக அழகாக டிகாக்ஷன் ஊற்றுவதே சாலச் சிறந்ததது. எட்டு பத்து பேர் வீட்டுக்கு வந்து விட்டால் சுலபமான பணி என்றும், நான் இதிலேயே சிறப்பாக கலப்பேனாக்கும் என்றும் சிலர் ஒரு போணியில் காய்ச்சிய பாலைக் கொட்டி, மொத்தமாக சர்க்கரை போட்டு, டிகாக்ஷனை சொர்ரென்று மொத்தமாக ஊற்றி கலந்து கலக்கிக் கொடுப்பார்கள். அந்த காஃபி எனக்கு ஒரு மாற்று அல்ல, சில மாற்றுகள் கம்மி! என் அம்மா காஃபி கலக்கும் லாவகம் பற்றி சமீபத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்த உறவொன்று சொன்னபோது நெ(ம)கிழ்ந்து போனேன்.
ஒவ்வொருவரையும் நினைவு வைத்துக் கொள்ள என்னவெல்லாம் விஷயங்கள் இருக்கிறது பாருங்கள்..
நானே காலையில் காஃபி போட்டுக்கொள்ளும் டபராவில் ஒரு ஆற்று ஆற்றி நுரை பொங்கும் காஃபியை ஒரு டம்ளரில் மட்டும் எடுத்துக் கொண்டுதான் வந்து அமர்கிறேன்.
அதே சமயம் காஃபியை ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய லோட்டா போல ஒன்றில் எடுத்துக் குடிக்கும் பழக்கமும் இல்லை. நூறு எம் எல் பிடிக்கக் கூடிய டம்ளரில் 75 எம் எல் அல்லது 60 எம் எல் அளவு.. அவ்வளவுதான். என் சில உறவினர் வீடுகளில் பெரிய பெரிய டம்ளர்களில் காஃபி தருவார்கள். குடிக்க சற்று சிரமமாக இருக்கும். அலுத்துப் போகுமளவு குடிக்கக்கூடாது.
என் இப்போதைய அலுவலகத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். ஐம்பது வயதாகும் முதிர்கண்ணன். அவர் வரும்போதே பிளாஸ்க்கில் காஃபி கொண்டுவந்து விடுவார். ஒன்று, வீட்டில் போட்டு எடுத்துக் கொண்டு வருவார். அல்லது அடையார் ஆனந்த பவனிலிருந்து வாங்கி வருவார். காஃபி அருமை தெரிந்தவர். சர்க்கரை தனியாக, காஃபி தனியாகத்தான் வாங்கி வருவார். அந்த சமயம் நாங்கள் நான்குபேர் இருப்போம். எல்லோருக்கும் காஃபி கொடுத்து விடுவார். கப்புகளும் அவரே கொண்டு வருவார். சில சமயங்களில் அவர் தாகம் தீராமல் இரண்டு கப், தண்ணீர் குடிப்பதுபோல உடனேயே மறுபடி ஒரு கப்பும் காஃபி குடிபப்தை பார்த்திருக்கிறேன். நானும் சில வருடங்களுக்கு முன் ஒரு அதி காலையில் அது மாதிரி ஒரே ஒருமுறை ஒரு கடையில் குடித்ததுண்டு. அது நினைவுக்கு வரும். அந்த ஒருமுறைதான்.
கடைகளில் காஃபி விற்பனை துவங்கும்போது குடிப்பது நலம். பின்னர் செலவாக செலவாக பால் மேல் பால் ஊற்றி கொஞ்சம் புளிப்பு வாடை, புகை வாடையுடன் அதன் தரம் சற்றே தாழ்ந்திருக்கும்போது குடிப்பது அந்த அதிகாலை முதல் காஃபியின் சுவைக்கு ஈடாகாது. என்ன செய்ய.. அது மாதிரி நேரங்களில் காஃபி குடிக்கும் சந்தர்ப்பம் வந்தால் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் வேறு அண்டாவில் வேறு பால் ஊற்றிக் காய்ச்சும் கடைகளும் உண்டு. சமயங்களில் அதில் நாம் இருந்து விட்டால் அதிருஷ்டசாலிதான்!
கோல்ட் (ஐஸ்) காஃபி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் சிறு வயதில் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் என் மாம்பழச்சொம்பில் அம்மா தரும் சூடான காஃபியை ஒரு ஸ்பூன் வைத்துக் கொண்டு சொட்டு சொட்டாக நக்கி ஒரு மணிநேரம் ஆற, ஆற, குடித்திருக்கிறேன்! இல்லையில்லை நக்கியிருக்கிறேன்! (ச்சீய்)
டிகாக்ஷன் போடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது காஃபியின் சுவை. எப்படி போடுவது என்று நான் விளக்கப் போவதில்லை. எல்லோருக்குமே தெரியும். ஆனால் வித்தியாசமாக தயார் செய்பவர்களும் உண்டு.
பால் ஆடைகட்டி காய்ந்தபின் காஃபி கலக்க வேண்டுமா, நுரைத்து பொங்கி வந்ததும் காஃபி கலக்க வேண்டுமா என்பதில் மாற்றுக்கருத்து உண்டு. பொங்கிய நுரையைக் கலந்து வெங்கடேஷ் பட் காஃபி கலந்ததை நான் ரசிக்கவில்லை! அவரிடம் இதைச் சொல்ல வேண்டாம். 'அவன் யார் பெரிய இவனா' என்று அவர் கேட்பதை நான் விரும்பவில்லை.
என் நண்பன் செங்குட்டுவன் வீட்டில் பாலை சூடாக்கி, கவனிக்கவும் சூடாக்கி அதில் காபித்தூளை போட்டு வடிகட்டி ஒரு அகலமான பாத்திரத்தில் மூடி வைத்திருப்பார்கள். நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது "ஏலேய் செங்குட்டு.. செங்குட்டு" என்று அலறுவார்கள். அருகில் சென்றால் "தேக்ஸாவில் காபி வைத்திருக்கிறேன்.. மொண்டு குடி" என்பார்கள். இவனும் பானையிலிருந்து தண்ணீர் எடுப்பது போல ஒரு டபராவிலோ, டம்ளரிலோ அதை 'மொண்டு குடிப்பான்'. எனக்கும் வேண்டுமா என்று கேட்பான். நான் ஓடியே வந்து விடுவேன்! அவர்களுக்கெல்லாம் காஃபி சாப்பிடுவது ஒரு கடமை!
பித்தளை டம்ளர் பித்தளை டபராவில் காஃபி கொடுத்தால், குடித்தால் சுவை என்றொரு பிரமை இருக்கிறது. அதற்கு கும்பகோணம் டிகிரி காஃபி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காஃபிக்குதான் சுவையே தவிர, டபரா, டம்ளருக்கல்ல.
எப்போதுமே முதலில் இறங்கும் ஏழெட்டு சொட்டு டிகாக்ஷன் போட்டே காஃபியை சுவைக்க நாம் என்ன அம்பானி பரம்பரையா, அதானி பரம்பரையா? எப்போதாவது அந்த அதிசுவை வாய்க்கும். அப்போது நிதானமாக அனுபவியுங்கள் அந்தச் சுவையை!
====================================================================================================
எதையோ மறைக்க நினைக்கும் உணர்ச்சிகள்...
=======================================================================================================
கொஞ்ச நாட்களுக்குமுன் யார் பேயோன் என்று நாம் மறந்துபோய்ப் பேசிக் கொண்டிருந்தோம் இல்லை?
இந்தப் பதிவில் ஜீவி எங்கள் நண்பர் என்று உரத்துச் சொல்லி வந்தேன்!
==========================================================================================================
மனதை அசைக்கும் புகைப்படங்கள். 'தேவையா இதெல்லாம் என்று கேட்க வைக்கும் முயற்சிகள்...
===============================================================================================================
பொக்கிஷம்.. குமுதப் பக்கங்கள்..
'பிறகு என்ன' என்று எனக்குத் தெரியாது. காரணம் 7 ஆம் பக்கம் என்னிடம் இல்லை.
சரி சொல்லக் காரணம்.....
விடாமுயற்சி
ஜெயின் இந்த ஓவியம் எந்தக் கதைக்கு என்று எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியுமா?
வராது... வந்தால்....
========================================================================================================
'எங்கள்' 'தலைமை ஆ'சிரி'யர்' திரு கே ஜி ஜி க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா வணக்கம் பிரார்த்திப்போம்.
நீக்கு
பதிலளிநீக்குகாபி புராணம் அருமை. எழுதத் தெரிந்தவருக்கு எப்பொருளும் கரு தான். கீசாக்கா வின் அழல் அமுதகம் போல.
பிரபல கவிஞரின் பிரபல கவிதை இது தானா?
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
சாண்டில்யன் பற்றி
வாரப்பத்திரிக்கைகள் கோலோச்சிய காலத்தில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு தரம் வாசகர்கள் நிரந்தரமாய் இருந்தனர். குமுதம் 20 இல் இருந்து 40 வயது வரை உள்ளவர்களை ஈர்த்து முன் வரிசையில் இருந்தது. மறைமுகமான கிளுகிளுப்பு குமுதத்தின் ஸ்பெஷல். அந்த வகையில் சாண்டில்யன் ஒரு எஸ்பெர்ட். மற்ற பத்திரிகைகள் குமுதம் அளவிற்கு சாண்டில்யனுக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை. அதுவும் ஒரு காரணம் ஆக இருக்கலாம்.
பொக்கிஷம் 7ஆம் பக்கம் தான் இல்லை 74 ஆம் பக்கம் இருக்குமே பாருங்கள், போடுங்கள்.
என்ன இருந்தாலும் என்னைக் கவரும் ஜோக்குகளுக்கு ஆனந்த விகடன் தான் பெஸ்ட்.
Jayakumar
பாராட்டுக்கு நன்றி!
நீக்குபிரபல கவிஞரின் பிரபல கவிதை இதுவல்ல, இது அதை ஞாபகபப்டுத்தும் என்று சொல்லி இருந்தேன். நீங்கள் சொல்லி இருப்பது சினிமாப பாடல்.
கிளுகிளுப்பு மட்டுமல்ல சாண்டில்யன் ஸ்பெஷல்.. ஒரு ஹீரோவை மாஸாக வெளிப்படுத்தும் திறமை, போர்க்காட்சிகளில் லாவகம்... 74 ம் பக்கமும் அந்த பைண்டிங்கில் இல்லையே! ழிமுதம் ஜோபிக்ஸ் கொஞ்சம் வழவழா கொழகொழாதான்! கன்னுக்குத் தெரியாமல் சின்னதாக வேறு பிரிண்ட் செய்திருப்பார்கள்!
ஜெஸி, மற்ற பத்திரிகைகள் சுதந்திரம் கொடுக்கவில்லை என்று இல்லை. சாண்டில்யன் எல்லாம் ஸ்டார் எழுத்தாளர்கள். தனக்கு சுதந்திரம் இருக்கும் பத்திரிகைகளில் மட்டுமே அவர் எழுதினார்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலங்கள் வாழ்க
வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆஹா.. காஃபியின் சுவையான மணமே என்னை எழுப்பி விட்டது.. இன்றைய வியாழன் கதம்பத்தில் இந்த காஃபி தந்த சுறுசுறுப்பில் நடப்பது அனைத்துமே பிரமாதமாகத்ததான் இருக்கும்.
என்னவொரு ஒற்றுமை.....! காஃபியை ப் பற்றி நானும் இப்படி விலாவாரியாக எழுத என் மனதுக்குள் ஒரு பதிவே எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால், தாங்களும் அதற்குள் எழுதியே விட்டீர்கள். நான் இன்னமும் பால், காப்பித்தூள் கடைகளிலேயே அதன் தேர்வில் குழப்பிக் கொண்டு நிற்கிறேன் போலும்..! . நீங்கள் அருமையான காஃபி கலந்து கையிலேயே தந்து விட்டீர்கள். நன்றி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா என்ன ஒற்றுமை... எண்ணிய எண்ணியங்கெய்துப... வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஎந்தத் தலைப்பிலும் ரசனையாக நல்லா எழுதறீங்க. உங்கள் எழுத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போதே, வீட்டு வாசலில் டம்ளர் டபராவோடு காபிக்குச் சிலை வைத்திருக்கிறேன் என்று முடிப்பீர்களோ என எண்ணும்படியான எழுத்து. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி நெல்லை. சில சமயங்களில் காபியும் வெறுத்துப் போய் இரண்டு நாட்கள் தள்ளி வைப்பதும் உண்டு.
நீக்குகாஃபி பற்றி நானும் சில/பல பதிவுகள் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி போட்டிருக்கேன். சுட்டி தேடித் தரேன். மற்றபடி சர்க்கரை இல்லாக் காஃபி எனில் என் மாமியார்/நாத்தனார்களும் ஸ்ரீராம் சொன்னாப்போல் டிகாக்ஷனைக் கொட்டிக் கொஞ்சூண்டு பாலை விட்டு ஞாபகமாகச் சர்க்கரையை நிறையப் போட்டுக் கொடுப்பாங்க. நல்லவேளையாக தினசரி காலை/மாலை காஃபி போடுவது என்னுடைய வேலையாக எடுத்துக் கொண்டேனோ! பிழைத்தேனோ!
பதிலளிநீக்குநாமெல்லோருமே காபி பற்றி பதிவுகள் எழுதியருப்போம். கடகடவென தண்ணீர் போல காபி குடித்தவரைப்பற்றி எழுதப்போய் மற்ற விவரங்களும் இடம்பெற்று விட்டன.
நீக்குகாபி சாப்பிடும் வழக்கமில்லை. அதிசயபாக, காபிப் பிரியர்களின் (வெறியர்களின்?) வீட்டிலிருந்து வந்த மனைவிக்குக் காபி பிடிக்காது.
பதிலளிநீக்குகாப எந்த அளவுக்கு ஒருவரை அடிமையாக்குதுன்னா, ஆசாரக் கட்டுப்பாட்டை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளும் அளவு. காபி சாப்பிட்டாத்தான் பலருக்கு நாள் துவங்கும். காபி இல்லைனா தஙைவலி (என் அம்மாவுக்கு காபி சாப்பிட்டாகணும்). என்னதான் இருக்கு என சில நேரம் வெளியில் சாப்பிட்டுப் பார்த்தால் கசந்து வழியது. மேலும் எழுதி, ரசனையில்லாதவன் என்ற பெயர் வாங்கும் விருப்பமில்லை.
பெங்களூரில் நல்ல காபி 10-15 ரூபாய்க்குள் கிடைத்துவிடும்.
இங்கு 35 ரூபாயாவது ஆகிறது். மதுரையில் விசாலம் காபி கடையில் காபி பிலமாதமாய் இருக்கும். அதற்குரிய மரியாதையைத் தந்து கொடுப்கார்கள்
நீக்குசாண்டில்யனைப் பற்றிய எழுத்து ஜீவி சாரோடதா? படித்த நினைவு.
பதிலளிநீக்குசாண்டில்யனின், போர்க்காட்சிகள், கதை எழுதும் லாவகம் எனக்குப் பிடிக்கும். கடலை போடும் பகுதிகள், நாவலின் ஆரம்பப் பக்கங்களாக, 200 வார்த்தைகள் கொண்ட வரி வர்ணனை போன்றவைகளை ரசிப்பதில்லை.
ஓவியர் லதா வரையும் பெண் ஓவியங்கள் எனக்குப் பிடிப்பதில்லை.
ஆம். நாம் இதை க்ரூப்கிலும் பேசினோம்!
நீக்குhttps://sivamgss.blogspot.com/2006/11/148.html இன்னும் சில பதிவுகள் உண்டு. தேடணும். :(
பதிலளிநீக்குநீங்க எழுதாத ஒரு பதிவு, 2024ல் மோடி பிரதமராகப் பதவியேற்கும் வைபவம்தான்.
நீக்குathu!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :P
நீக்குஹா.்். ஹா... ஹா... நெல்லை... அக்கா ஆல் இன் ஆல் ரைட்டர். குறிப்பாக ஆன்மீகத்தில் அவரை அடிச்சுக்க ஆளேது?
நீக்குமனதை அசைத்துப் பார்க்கும் புகைப்படங்கள்.... இவங்கள்லாம் இருப்பதைவிடப் போவதே நல்லது. பெற்றோர்கள், உடன்பிறந்தோர் போன்றவர்களை மதிக்காதவர்கள் இருந்து என்ன பயன்?
பதிலளிநீக்கு87களில் தொலைக்காட்சியில், சிறிய விமானத்திலிருந்து பாராசூட்டில் சின்னப் பையன் குதித்துச் சாதனை செய்யப்போகிறான், காஷ்மீர் பகுதியில். பெற்றோர்கள் வாயைப் பிளந்துகொண்டு பார்க்கிறார்கள். கீழே விழும்போது, பாராசூட் திறக்காமல் தரையில் மோதி இறக்கிறான். இதனை பொதிகை தொலைக்காட்சி காண்பித்தது. அந்தப் பெற்றோர் பைத்தியங்களை நினைத்து எரிச்சல் வந்தது.
நான் வேலை பார்த்த மேட்டூரில், சிஏ முடித்து அங்கு வேலை பார்த்த இளைஞன், பெங்களூரில் எம்பிஏ படிக்கச் சென்றான். முதல் மாடியில் மதிளில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது நிலை தவறிக் கூழே விழுந்து கழுத்துக்குக் கீழ் வெஜிடபிள் ஆகிவிட்டான். கவனக் குறைவு, ரிஸ்க் பற்றிய அறிவின்மை போன்றவை பெரும் விபத்துக்குக் காரணமாகிவிடுகிறது
ஆய்க்குடி ராமகிருஷ்ணன் நினைவில் வருகிறார். கடற்படை உத்தியோகத்திற்காகப் பேட்டிக்குச் சென்றவர் கடைசியில் கழுத்துக்குக் கீழ் உணர்வில்லாமல் போனதும், ஆய்க்குடியில் அவர் ஆரம்பித்த அமர் சேவா சங்கமும் இப்போது அது பல்கிப் பெருகி நல்லவிதமான சேவைகளைச் செய்து வருவதும் நினைவில் வருது.
நீக்குசமீப காலங்களில் செல்பி மோகத்தாலும் இப்படி எல்லாம் நடக்கும் விபரீதங்கள் அதிகரித்து வருகிறது.
நீக்குஅச்சுப்பிச்சு நகைச்சுவைகளில் காயின் சுண்டுவது மாத்திரம் ரசிக்கமுடிந்தது.
பதிலளிநீக்குகுமுதம் பாணி!
நீக்குhttps://sivamgss.blogspot.com/2014/03/blog-post_22.html
பதிலளிநீக்குhttps://sivamgss.blogspot.com/2014/03/blog-post_23.html
https://sivamgss.blogspot.com/2014/03/blog-post_24.html
இந்தப் பதிவுகளில் ஸ்ரீராம் கருத்துகள் வந்திருக்கின்றன. கடைசிப் பதிவில் 2019 ஆம் ஆண்டில் நெல்லை கூடப்பதில் கொடுத்திருக்கார் என்பதை இப்போத் தான் பார்க்கிறேன்.
சட்டுனு எல்லாவற்றையும் தேடி எடுத்துட்டீங்க... அப்புறம் பார்க்கிறேன்.
நீக்குகௌதமன் சாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன், பிறருடைய உடல் நலப் பிரச்சனைகளால் வரும் டென்ஷன் இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅவர் சார்பில் நன்றி.
நீக்குஎன் சார்பிலும் நன்றி!
நீக்குதிரு கௌதமன் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என்றென்றும் இதே சுறுசுறுப்புடனும் மன மகிழ்ச்சியுடனும் வாழவும் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குதிரு. கௌதமன் சகோதரருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளையும் அன்புடன் கூறிக் கொள்கிறேன். எந்நாளும் சகோதரர் ஆரோக்கியமாக இருக்க இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி.
நீக்குஅவர் சார்பில் நன்றி.
நீக்குஎன் சார்பிலும் நன்றி!
நீக்குஜோக்குகள் எல்லாம் ஓகே ரகம் தான். குமுதம் நகைச்சுவைத்துணுக்குகளில் கூடப் பல சமயங்கள் இரட்டை அர்த்தங்களோடு வரும். ஆகவே அவ்வளவாப் பிடிக்காது. விகடன், கல்கி நகைச்சுவைத் துணுக்குகள் ஓகே. மனதை அசைக்கும் புகைப்படம் மனதை வேதனையில் ஆழ்த்தியது. அந்தக் குழந்தை பாவம் குட்டியின் கண்களில் கண்ணீர்!சாண்டில்யனை எல்லாம் படிக்கும் வாய்ப்பு எனக்குப் பதின்ம வயதில் கிடைத்தது இல்லை. குமுதமே தெரியாமல் தான் படிக்கணும். இதில் சாண்டில்யன் தொடர் வந்தால் எல்லோருக்கும் அப்பாவிடமிருந்து கட்டளை பறக்கும். கீதா வந்தால் குமுதம் கொடுக்கக் கூடாது என. நான் படித்த சாண்டில்யனின் முதல் நாவல் கன்னிமாடம் தான். தாத்தா வீட்டில் படிச்சேன்.அங்கே கட்டுப்பாடெல்லாம் கிடையாது. பெரும்பாலான குமுதங்கள்/அதன் தொடர்கள் படிச்சதெல்லாம் தாத்தா வீட்டில் தான். உள்ளூராக அமைந்து விட்டதால் அடிக்கடி போகவும் வாய்ப்புக் கிடைக்கும்.
பதிலளிநீக்குகுமுதம் ஜோக்ஸ் கொஞ்சம் போர்தான். அஞ்சு பைசா அம்மு, குண்டு மம்மா போன்ற தொடர் சித்திர ஜோக்ஸ் கொஞ்சம் ரசிக்கும்படி இருக்கும்!
நீக்குகாபி தான் இந்த நூற்றாண்டு சோமபானம் என்று நினைப்பவன். அதிகாலை எழுந்ததும் ப.தே. வந்ததும் காபி ரெடியாக இருக்கிற மாதிரி என்மனைவி பார்த்துக் கொள்வார்.
பதிலளிநீக்குஅந்த காபி போதும். எவ்வளவு நேரம் கழித்து குளித்தாலும் அது வரை அந்த ஒரு டம்ளர் காபி போதும். ஆனால் குளித்து வந்தவுடனே பயங்கரமாகப் பசித்து வயிற்றுக்கு ஏதாவது தேடும்.
அப்புறம் மதியம் 3 மணி சுமாருக்குத் தான் அடுத்த காபி. இந்த நேரத்தில் ஏதாவது வேலையாக வெளியில் இருந்தால் ஹோட்டலுக்குப் போயானும் காபி குடிக்க வேண்டும் என்றில்லை. கூலாகத் தவிர்த்து விடுவேன். கடந்த 20 ஆண்டுகளாக பெரும்பாலும் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டதில்லை.
விருந்தினர் வீட்டிற்கு வந்தால் டபரா செட்டுடன் காப்பி கொடுப்பது தான் மரியாதை என்று சொல்வார்கள்.
//காபி தான் இந்த நூற்றாண்டு சோமபானம் என்று நினைப்பவன்//
நீக்குகட்டாயம் சொல்லலாம்! காலை காபி நானேதான் போட்டுக்கொள்ள வேண்டும். மற்ற சமயங்களில் பாஸ் வந்து விடுவார்!
கண்ணீருக்கும்
பதிலளிநீக்குபுன்னகைக்கும்
என்ன பொருத்தம்
இந்த அபொருத்தம்?..
சிரித்தாலும் கண்ணீர் வரும்; அழுதாலும் கண்ணீர் வரும்.
நீக்குஜீவியை இங்கு பார்த்ததில் சந்தோஷம்.
பதிலளிநீக்குஎபியையும் பூவனமாக நினைத்துத் தான் எது ஒன்றும் எழுதுவது பல ஆண்டுகளாக மனசில் படிந்த பழக்கம்.
அதே மாதிரி சில ஆண்டுகளாக எபியைத் தவிர வேறு எந்த தளத்திற்கும் போய் வாசித்ததில்லை: (ஓரிரண்டு தடவைகள் தவிர)
எபியை கொஞ்சம் கொஞ்சமாக வாரப் பத்திரிகை மாதிரி ஆக்க வேண்டும் என்பது என் அடங்கா அபிலாஷை.
கிட்டத்தட்ட இப்போதே அப்படிதானே இருக்கிறது.. இல்லையா? ஹிஹிஹி..
நீக்குஇல்லை. வாரப்பத்திரிகை வாசிப்பு மாதிரியான வாசிப்புக்கு வாசகர்கள் இன்னும் தயாராகவில்லை. அப்படி தயாராவதற்கு சில சோதனைகள் செய்து பார்க்க வேண்டும். எபிக்கு இது ஆகாது அது ஆகாது என்று ஒதுக்கற போக்குகள் மாற வேண்டும்.
நீக்குவாராவாரம் மின் நிலா ஒரு வார இதழ் போலவே தயாரிக்கப்பட்டு வெளியிடப் படுகிறது. இதற்கு மேலும் வாரப்பத்திரிகை என்றால் அது எப்படி?
நீக்கு7- ஆம் பக்கமா?
பதிலளிநீக்கு74- லாம் பக்கமா?
74..
நீக்குபதிவில் 7 என்று தப்பாக டைப்பியுள்ளேன்.
அந்த உச்சி மாடி
பதிலளிநீக்குஉச்சியிலும்
குப்பைக் குவியல்?
நமக்கென்றே
தவிர்க்கவே முடியாத
நமக்கான தடயங்கள்.
அது நம்மூர் இல்லை!!
நீக்குஞானக் கூத்தனின்
பதிலளிநீக்குமைந்தன் திவாகர்
சரி
திவாகர் தான் பேயோன்
அதுவும் சரி
கேள்வி என்னவென்றால்
ஞானக்கூத்தனை வைத்துத் தான்
பேயோனை அடையாளப் படுத்த வேண்டுமா
என்பது தான்.
நமக்கு யாரென்று தெரிய வேண்டுமில்லையா? சில வாரங்களுக்குமுன் க்ரூப்பிலோ, இங்கேயோ யார் என்று தேடிக்கொண்டிருந்தோம், கேட்டுக்கொண்டிருந்தோம்...
நீக்குஇரவு நெடு நேரம்
பதிலளிநீக்குஆகி விட்டது
இனி நாளை வருவேன்.
உறங்கி ஓய்வெடுத்து வாருங்கள்!
நீக்குகாஃபி புராணம் அருமை.. இங்கே இதுபற்றி மேலதிகமாக எழுதினால் கொல்லர் தெருவில் ஊசி விற்பது போல் ஆகி விடும்..
பதிலளிநீக்குகாஃபி ரசிகனாகிய நான் காஃபியை (தேநீரையும்) விட்டு விலகி விட்டேன்..
முடியவில்லையே... என்னால் முடியவில்லையே...!
நீக்குநண்பர் கௌதமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாஃபி புராணம் பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு.
பதிலளிநீக்குகிராமங்களுக்கு போய் அவர்கள் கொடுக்கும் காப்பித்தண்ணி குடித்து இருக்கிறீர்களா ஜி ?
முக்கால் லிட்டருக்கு கொஞ்சம் குறைவான பித்தளைச் செம்பில் கொடுப்பார்கள்.
காஃபியை கண்டு பிடித்தவன் யாருடா ? என்று மனம் கேட்கும்.
கௌதமன் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கில்லர்ஜீ நீங்கள் அரபிகளுடைய காப்பி தண்ணி குடித்திருக்கிறீர்களா? கசாயம் போல்...
நீக்குJayakumar
//காஃபி புராணம் பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு.//
நீக்குஹா.. ஹா.. ஹா... பொருத்தம்!
பித்தளை சொம்பில் முக்கால் லிட்டர் காஃபியா.. அம்மாடி... நான் அம்பேல்!
ஆஹா காலையில் காபி ராகம் இனிமை!!!!! ஸ்ரீராம். ரசித்துப் பருகினேன்!!!
பதிலளிநீக்குஎனக்கும் எழுந்ததும் காபி வேன்டும். ரசித்துக் குடிக்க வேண்டும். ஹைஃபைவ். எனக்கு நீங்கள் படத்தில் போட்டிருக்கும் டம்ப்ளரில் பாதிதான் இப்பல்லாம் குடிப்பேன். அதாவது கடைகளில் எல்லாம் இப்ப ஒரு சின்ன கப் வைச்சிருக்காங்களே பேப்பர் கப் அந்த அளவுதான். ஆனா ரசித்துக் குடிப்பேன்.
எனக்குச் சூடாக வேண்டும்.
கீதா
சாரி கீதா... பேப்பர் கப்பிலும் பீங்கான் கோப்பையிலும் எனக்கு காஃபி குடிக்க பிடிப்பதில்லை. கோப்பையில் குடித்தால் அது இன்ஸ்டன்ட் காஃபி என்றொரு மனப்பிரமை!
நீக்குஅந்த மணத்தை அனுபவிக்கவேண்டும். கசப்பான அந்த சுவையை அனுபவிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நாக்கில் இட்டு சுவைத்துக் குடிக்க வேண்டும்! //
பதிலளிநீக்குடிட்டோ டிட்டோ டிட்டோ......
நானும் காஃபி புராணம், அனுபவங்கள் என்று ஒரு பதிவு இரு பதிவுகளாகப் போட்ட நினைவு....உங்க கமென்டும் அங்கு உண்டு...
கீதா
நானேயும் முன்பேயும் எழுதி இருக்கிறேன்.
நீக்குகாஃபியை சுவைத்தபின் அந்த மணம், சுவை நாக்கைவிட்டு அகலும்வரை வேறு எதையும் வாய்க்குள் போட மனம் வராது. பொதுவாக காஃபி என்றில்லை, எது சாப்பிட்டாலும், சாப்பிட்டு முடித்தபின் அதன் சுவையின் நினைவில் கொஞ்ச நிமிடங்களை கழித்து விட்டுதான் தண்ணீர் கூட குடிப்பது வழக்கம்.//
பதிலளிநீக்குஹைஃபைவ் இதூவ்ம் டிட்டோ......ஹையோ ஸ்ரீராம் ஹப்பா நம்ம கட்சிக்கு ஆள் இருக்காங்களே!!!
கீதா
ஆஹா... தன்யனானேன்! (தனியனில்லை! )
நீக்குநான் சர்க்கரை போடாமல் நார்மல் டிகாக்ஷனுடன் காஃபி என்று சேர்த்துச் சொல்வது வழக்கம் எனினும் இதிலும் ஒரு ஆபத்து என்ன என்றால் டிகாக்ஷன் அளவு தேவைக்கும் குறைவாக இருக்கும்! //
பதிலளிநீக்குஅதே அதே.....ஹையோ இன்னிக்கு வரிக்கு வரி நம்ம சுவை மமதை அப்படியே ஸ்ரீராம் எழுதியிருக்கிறாரே!!!!!
கீதா
மமதையா, மனதையா கீதா?
நீக்குஇந்த பாராவின் கடைசி வரிகளை அப்படியே வழி மொழிகிறேன். காபியில் சர்க்கரை அதன் சுவையைக் கெடுத்துவிடும் என்பது தான் என் எண்ணமும்
பதிலளிநீக்குகீதா
அஃதே... அஃதே....
நீக்குஅடுத்த குட்டி பாராவும் டிட்டோ.....மீக்கும் பிடிக்காது....காபிக்குத் துணைகள்...
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கும் தனி தனியாகத்தான் நானும் கலப்பது வழக்கம். ஆனால் மாமியார் வீட்டில் விசேஷங்களின் போது மட்டும் 15 காபிக்கு மேல் ஆர்டர் வந்தால் ஒரே சமயத்தில் வந்தால் சர்க்கரை சேர்க்காமல் கலந்து சர்க்கரை யார் யாருக்கு என்று போட்டுக் கலப்பது அங்கு வழக்கம். எல்லோருக்கும் சமீப காலங்களில் பேப்பர் கப் என்பதால்.
கீதா
//தனித்தனியாகக் தான் கலப்பது// ஓஹோ ஓஹோ பிடித்தவர்கள் பிடிக்காதவரைப் பொறுத்தா?
நீக்குபேப்பர் கப்பில் ஊற்றினால் அது ஒரு வாசனை வரும். ஒன்லி டம்ளர்!
நீக்குபிடித்தவர்கள் பிடிக்காதவரைப் பொறுத்தா? krrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
நீக்குபாலைக் காய்ச்சி வைத்துவிட்டால் அதில் காஃபி போட்டால் நன்றாக இருக்காது. என் மாமியார் வீட்டில் ஒவ்வொருத்தராகக் காஃபிக்கு வந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே தான் காஃபி கலக்கணும். டிகாக்ஷன் மட்டும் மொத்தமாகப் போட்டு வைத்துக்கொள்வோம். பாலைக் காய்ச்சி அதில் டிகாக்ஷனை ஊற்றிக் காஃபியைத் தம்பளரில் விட்டு டபரா வைத்துச் சர்க்கரை சேர்த்துக் கொடுப்போம். நினைவாகச் சர்க்கரை அடியில் இருக்குனு சொல்லிடுவோம். அப்போத் தானே சர்க்கரையைக் கலந்து ஆற்றிச் சாப்பிடுவார்கள்.
நீக்குகாபி படம் சூப்பரோ சூப்பர் நுரை ததும்பி!!!! அப்படியே எனக்கும் சூடா காபி இங்க தள்ளி விடுங்க, ஸ்ரீராம்!!!!!
பதிலளிநீக்குகீதா
எடுத்துக்குங்க கீதா... ஆனாலும் சாப்பாட்டு நேரத்தில் எல்லாம் காஃபி நாட் அலவ்ட்!
நீக்குகாஃபி சுவையான பகிர்வு காஃபி போடுவதே கலை தான். எனக்கு சற்று சூடாக இருக்க வேண்டும் காலையில் மட்டும்தான் அப்புறம் 10மணி, பி.ப 3மணி பாலில்லாத தேநீர் குடிப்பேன்.
பதிலளிநீக்குதிரு.கெளதமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஜோக்ஸ் ரசனை மகளுக்கு கோபம் வந்தால்..... ஹா...ஹா.
நன்றி மாதேவி. உங்கள் படைப்புகளும் ஏதாவது இங்கு இடம்பெறவேண்டும் என்று விரும்புகிறேன், முன்னரே சொல்லி இருக்கிறேன்.
நீக்குதிரு.கெளதமன் அவர்களுக்கு அன்பின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎனக்கு ஐஸ் காபியும் ரொம்பப் பிடிக்கும் ஸ்ரீராம்...அதில் பல வகைகள் உண்டே அத்தனையும்...
பதிலளிநீக்குகீதா
பொங்கிய நுரையைக் கலந்து வெங்கடேஷ் பட் காஃபி கலந்ததை நான் ரசிக்கவில்லை!//
பதிலளிநீக்குஹாஹாஹா நானும்...
நீங்கள் சொல்லியிருக்கற வகைலதான் காபி நான் ரசிப்பதும் என்றாலும் வெளியில் சென்றால், கடையானாலும், வீடுகளானாலும், கல்யாண விசேஷங்களானாலும் காபி எப்படி இருந்தாலும் குடிப்பது வழக்கம். சுவை பத்தி கவலைப்படுவதில்லை. அதைக் குறையாகவும் நினைப்பதில்லை.
செங்குட்டு வீட்டில் கலந்த விதத்தில் கலக்கும் காபியும் குடித்ததுண்டு!!!
ஆனால் நம் வீட்டில் மட்டும் நீங்க சொல்லிருக்காப்லதான்.
கீதா
வெளியிடங்களில் கொடுப்பதைக் குடித்துதானே ஆகவேண்டும் கீதா... வேறு வழியில்லையே.. விசேஷங்களில் கால் காப்புக்கும் குறைவான அளவே காபி வாங்கி கொள்வேன்.
நீக்குஎப்போதுமே முதலில் இறங்கும் ஏழெட்டு சொட்டு டிகாக்ஷன் போட்டே காஃபியை சுவைக்க நாம் என்ன அம்பானி பரம்பரையா, அதானி பரம்பரையா?//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா....அதே அதே இங்கும்...என்றாலும் நம் வீட்டில் இது நாங்க இருவர் மட்டும் இருக்கறப்ப குடிப்பதுண்டு!!!!!
கீதா
முதல் சொத்துகளை எடுத்து விட்டால் அப்புறம் வருபவை தனியாக எடுத்து வைத்தாலும் ரெண்டாம் சார்ட் தரம்தான் இருக்கும்!
நீக்குகுழந்தைகள் படங்கள் அழகு! ஆனால் கூடவே ஒரு வருத்தமும் ஏற்படுகிறது.
பதிலளிநீக்குகவிதைகள் இரண்டுமே அட்டகாசம் ரசித்தேன் ஸ்ரீராம், இரண்டாவது சூப்பர்.
குழந்தைகள் எதற்கோ வருந்தி அழும் போது - அம்மாவைத் தேடி அழும் குழந்தைகள் அம்மாவைக் கண்டதும் அலல்து தாங்கள் விரும்பிக் கேட்டவை கிடைக்காதவையைக் கண்டதும்அதைக் கண்டதும் அழுகையுனூடே சந்தோஷச் சிரிப்பு என்றுதான் தோன்றுகிறது
கீதா
வருத்தமில்லை கீதா... சட்டென அள்ளி அணைக்கத் தோன்றும் உணர்வு!
நீக்குஜீவி அண்ணா அவர் தளத்தில் எழுதியதை வாசித்த நினைவு இருக்கிறது
பதிலளிநீக்குகீதா
Yes.
நீக்குஅந்த புகைப்படம்.....தேவையில்லாத ரிஸ்க்.....உயிருக்கு மதிப்பில்லை.
பதிலளிநீக்குகீதா
என்ன சொல்ல... சாதனைகளுக்கு ஆசைப்படுகிறார்கள். எத்தனையோ ரிஹர்சல்களில் தப்பித் பிழைத்திருந்திருப்பார்.
நீக்குபிறகு?
பதிலளிநீக்கு74 ஆம் பக்கம் போய் பாருங்க ....அப்புறம் நடுல சில பக்கங்களைக் காணோம்னு சொல்லப்பிடாது கேட்டீங்களா என்று ஸ்ரீராம் சொல்வது போல்!!! ஹிஹிஹிஹி
கீதா
74 ஆம் பக்கம் அங்கு இல்லையே.. குமுதத்தில் 38 ஆம் பக்க மூலை என்று ஒன்று வரும் தெரியுமோ...
நீக்குசென்னையின் தண்ணீர்ப் பிரச்சனை அப்பவேவா...?
பதிலளிநீக்குஜோக்ஸ் ஓகே....
கீதா
நன்றி கீதா.
நீக்குஎனக்குத் தெரிந்து அறுபதுகளில் எங்க அண்ணா/தம்பிக்குத் திருமலையில் உபநயனம் பண்ணினப்புறமா நாங்க குடும்பத்தோடு முதல் முறை சென்னை வந்தப்போவே கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். உறவினர் வீடுகளில் எல்லாம் தங்க முடியலை. அதன் பிறகும் நான் வேலை விஷயமாக அடிக்கடி சென்னை வந்து போறச்சே எல்லாம் அந்தக் குழாயில் தண்ணீர் அடிச்சு அடிச்சுக் கை பிய்ந்து போயிடுமோனு நினைப்பேன்.
நீக்குகௌ அண்ணாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபர்த்டே பேபி ரொம்ப பிஸி போல!!!! கொண்டாட்டத்தில்! அதான் பேபியைக் காணலையோ!!
கீதா
:)))
நீக்குஉதவியாளர் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். வரும் ஞாயிறு அன்றுதான் திரும்புவார் என்று நினைக்கிறேன். அதனால் blog பக்கம் வருவது குறைவான நேரம் மட்டுமே.
நீக்குOh! :(
நீக்குஎன்னே காஃபி ரசனை...!
பதிலளிநீக்குமூத்தவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
நன்றி DD.
நீக்குஹாஹாஹா கேஜிஒய் தான் எல்லோரையும் விடப் பெரியவர். அடுத்து கேஜிஎஸ். காலம் ஆகிவிட்ட மாமா கேஜி விஸ்வேஸ்வரனுக்குப் பின்னரே கேஜிஜி. அவருக்குப் பின்னர் கேஜி ஜவர்லால்.
நீக்குஎங்கள் எல்லோருக்கும் மூத்தவர் கே ஜி வெங்கடரமணி.
நீக்குOho! அவர் தான் காசு சோபனாவா? இவரை இன்று வரை அறிந்ததே இல்லை.
நீக்குகாபி புராணம் சுவையாக இருந்தது.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் பாட்டி, தாத்தா, அப்பா, சித்தப்பா ஆகியோர் கட்டங்காப்பி என்ற 'ஒன்லி டிகாக்ஷன்' ஐ பொழுது போகாமால் சும்மாவே குடித்து காலி செய்பவர்கள் ..
ஆனால் அம்மா, சிறு வயதில் (அதிகம் காபி குடிப்பவர்) என்று யாராலோ கேலி செய்யப்பட, வைராக்கியமாக(!) அவர் குடிப்பதை நிறுத்தி விட்டார். இன்று வரை குடிப்பதில்லை. குழந்தைகளுக்கும் அதிகம் பழக்கிவிடவில்லை. அதனால் நான் இருந்தால் காபி குடிப்பேன் இல்லை என்றால் டீ , horlicks, boost, போர்ன்விட்டா எதுவும் ஓகே என்று தான் இருப்பேன்.
நல்ல காபி யின் சுவையே தனி தான்.
நன்றி.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், கௌதமன்!
பதிலளிநீக்குஶ்ரீராம், காலை 5 க்கு வந்தால் எனக்கும் காபி கிடைக்கும். வந்தால் எப்படி குடிக்கணும்? சொல்லுங்க.. பயிற்சி பண்ணி கொள்றேன்...
வைஷ்ணவி
குடிக்கக் குடிக்கப் பயிற்சி! நன்றி வைஷ்ணவி,
நீக்குவாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றி.
பதிலளிநீக்கு