வியாழன், 15 டிசம்பர், 2022

உபாதி சகிதமாகிய எண்ணரிய உயிர்களுள்....

 ஒரு திருமணத்துக்காக சேலம் செல்ல வேண்டி இருந்தது.  ரயிலில் செல்ல பதிவு செய்திருந்தோம்.  ஆனால், திடீரென ரயில்வே காரணம் சொல்லாமல் இங்கிருந்து சேலம் செல்லும் ரயிலை கேன்சல் செய்தது!

நேரமின்மையால் ரொம்ப யோசிக்காமல் ஒரு டவேரா எடுத்துக் கொண்டு (இரண்டு குடும்பம்) கிளம்பினோம்.  ரயிலுக்கும், டவேராவுக்கும் கட்டணத்தில் பெரிய மாறுதல் இல்லை என்றாலும், நேரத்திலும், சௌகர்யத்திலும் வித்தியாசம் இருந்தது!  சௌகர்யம் பற்றி சொல்ல வேண்டாம், உங்களுக்கே தெரியும்.  நேரம் என்றால் ரயிலில் இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாமாம்.  ஆனால் டவேராவிலோ ஏழு மணி நேரத்தைத் தாண்டியது!

காலை எட்டரைக்குக் கிளம்பி கையில் எடுத்துக் கொண்ட பொடி இட்லியை பத்தரைக்கு மேல் வண்டியிலேயே சாப்பிட்டு விரைந்தோம்.  கன்னாபின்னா டைமிங்கினால் மதிய சாப்பாடு எங்கும் நிறுத்தவில்லை, சாப்பிடவில்லை.  மண்டபம் சென்று விட்டால் நேரத்தைப் பொறுத்து சாப்பாடோ டிபனோ சாப்பிட்டு விடலாம் என்று பார்த்தால் மண்டபத்தை அடையும்போது நாலரை ஆகியிருக்க, டிஃபனுக்கு ஓடினால், இன்னும் தயாராகவில்லையாம்.

மண்டப வாசலில் விநாயக மகாராஜா..




தயாரானபோதோ...

பசியுடன் காத்திருந்தவர்களிடம் போண்டா ரெடி என்கிற சொல் சுவிட்ச் போட்டாற்போல் சுறுசுறுப்பு ஊட்ட எழுந்து ஓடினோம்.

ஒன்று இலையை சின்னதாக கொடுத்திருக்கவேண்டும், அல்லது போண்டா என்று சொல்வதை பெரிதாகவாவது கொடுத்திருக்க வேண்டும்,  சீடை சைசில் போண்டாவைப் பார்த்ததும் சுர்ரென்று ஏறி சப்பென்று ஆனது.  இரண்டு போட்டுக் கொடுத்தார்கள். மறுபடி கேட்டால் ஒன்றே ஒன்று வைத்தார்கள்!  மண்டபம் அருகில் கடைகளும் எதுவும் இல்லை. இரவு உணவு வரை காதிருப்பதைத்தவிர வேறு வழி இல்லை.  யானைப் பசிக்கு...

இரவு ஹோட்டல் ஸ்ரீ சாந்த் தில் தங்கினோம்.  ஸ்ரீ ஷாந்த் என்றால் கிரிக்கெட்டர் ஸ்ரீஷாந்த் ஹோட்டலோ என்று நினைத்தேன்.  இல்லையாம். சாந்தி என்பதை ஷாந்த் என்று ஸ்டைலாக வைத்திருக்கிறார்கள்.


சேலம்...  மலைகள் சூழ்ந்த அழகான ஊர்.  மிக அழகான ஊராக இருக்கிறது.  ஊருக்குள் கட்டிடங்கள் வெகு நெருக்கமாக இருக்கின்றன.  ஆறேழு வருடங்களுக்கு முன் நான் பார்த்த சேலத்துக்கு இப்போது ஊர் மாறி இருக்கிறாற்போல் பட்டது.  ஊர் முழுக்க பாலங்கள்.  எடப்பாடி உபயம் போல..



மறுநாள் மதியம் கிளம்பி சென்னை திரும்பும் வழியில் உலகத்திலேயே உயரமான முருகன் சிலையை அருகில் சென்று தரிசித்து வந்தோம். ஒன்றரை மணிக்கு கிளம்பி ஒன்பதரை மணிக்கு சென்னை அடைந்தோம்!
==============================================================================================================

பணி முடிந்து திரும்பும் நேரம் கண்ட காட்சி..  "இதை எல்லாம் எவன் சாப்பிடுவான்" என்றும் வசனம் போடலாம்.  "வயிறு Full அப்பா...  தூக்கம்தான் வருது..  யாரவது எடுத்துக்கறதுன்னா கூட எடுத்துக்குங்க" என்று வசனம் எழுதலாம்.  "தூங்கிட்டு அப்புறம் வயிறு காலியான உடனே சாப்பிடுவேன்..  தைரியம் இருந்தா தொட்டுப் பாருங்க..   தூங்கறேன்னு நினைக்கறீங்களா" ன்னும் வசனம் எழுதலாம்!



======================================================================================================

அகம்புற ஆராய்ச்சி விளக்கத்தின் முகவுரை...  என்ன புரிந்தது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


உபாதி சகிதமாகிய எண்ணரிய உயிர்களுள் எஞ்ஞான்றும் எங்கணும் நான் நானென்னும் போதவடிவில்லாது நிகழும் உயிர் ஒன்றேனும் இல்லவே இல்லை.  இல்லையாயினும், அவ்வுயிர்களாகிய போதங்களுள், ஓர் கடத்துக்கு உபாதான காரணமாயிருக்கின்றது எந்த மட்பொருளோ அந்த மட்பொருளொன்றே எண்ணரிய கடபேதங்கட்கும் உபாதான காரணமாக இருக்குமாறு ஓர் போதத்துக்கு உபாதான காரணமாயிருக்கிறது எந்த ஆதாரப் பெரும் போதமோ அப்போத மொன்றே மேற்படி சோபாதிகமாகிய எண்ணரிய போதங்கட்கும் உபாதான காரணமாக இருந்திலங்குகின்றது.   இஃது வறிய சொல்வாதமன்று, சுருதி யுக்தி அனுபவங்கட்கு ஒத்த அர்த்தவாத சம்மதம்.  இங்ஙனமிருக்கும் அவ் வாதாரப் பெரும் போதமானது, அதிட்டானாரோபங்கட்கு இயைந்த சுத்தாசுத்த கேவலங்கட்கு அதீதமுற் றிருக்கின்றது.  அவ்வாறிருக்கினும், அஃது அவதாத்திரய முதலியனவாக நிகழும் அஞ்ஞான திசைக்கண் மேற்படி எண்ணரிய சிவபோதமாகவும், இருவித சமாதிகளென்னும் ஞானதிசைக்கண் ஏகமாகிய சிவபோதமாகவும் ஆரோப அதிட்டானங்கட்கு இயைந்து பிரகாசிக்கின்றது.  இங்ஙனம் பிரகாசிக்கின்ற இவ்விரு போதமும் மேற்படி ஆதாரமாகிய முதற்போதத்தின்பாலதன்றோ?  அதனால், அவ்வாதாரமாகிய முதற்போதமானது தற்போத மெனப்படும்.  அதாவது, தானே தானாகிய போதமென்பதா மென்க.   என்னை?
======================================================================================================

மறுநாள்...  இதே இடம்..   இதே போஸ்..  டுமீல்...   டுமீல்...
=============================================================================================================


=========================================================================================================

பொக்கிஷம்...!  

சிரிப்பா வருது...!  கணக்கு போட்டுச் சொல்லுங்க...


அட..   ஒரு கதை விட முடியுதா...   பெருமை அடிச்சுக்க முடியுதா...!


பல இதழ்களில் உள்ளே நேரு பற்றி நிறைய கட்டுரைகள்...

மூன்று வீரர்கள்...

விஸ்வநாதன் ராமமூர்த்தி மேல் கோபுலுவுக்கு என்ன கடுப்போ...!

95 கருத்துகள்:

  1. சேலம் என் வாலிப வயது
    காலத்து வாழ்ந்த நகரம்.
    1956-லிருந்து 1962 வரை துள்ளித் திரிந்த பருவம் அது. சேலம் பற்றிய பல மறக்க முடியாத நினைவுகள் என் மனசில் விதையாய் ஊன்றப்பட்டுப் பூத்துக் குலுங்கி வாசமளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது சென்று பாருங்கள்..   பழைய சேலமாயிருக்காது என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. சேலம் -மேட்டூர் 89, 90 என இருமுறை வேலைபார்த்த இடம். அந்த நாட்கள் திரும்பிவருமா?

      நீக்கு
  2. //நேரம் என்றால் ரயிலில் இரண்டரை மணி..//

    தட்டச்சுப் பிழையோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயிலில் சென்றால் இரண்டரை மணிநேரத்தில் சென்று விடலாமாம்.

      நீக்கு
    2. அது என்ன மாம்?..
      நீங்கள் தான் டிக்கெட் புக் பண்ணியிருந்தீர்களே?

      நீக்கு
    3. ரயிலில்தான் போகவில்லையே...   கேன்சல் செய்துவிட்டதே அரசு..  டவேராவில் அல்லவா சென்றோம்?

      நீக்கு
    4. பதிவு செய்திருக்கும் பட்சத்தில் பயண நேரம் தெரிந்திருக்குமே என்பதற்காக கேட்டேன்.

      சென்னை to சேலம் ரயிலில் குறைந்தது
      5 மணி நேரம் ஆகும்.

      நீக்கு
    5. அப்படியா? பாஸின் தம்பி (சித்தப்பா மகன்) சொன்ன விவரம் வைத்து நான் சொல்லி இருக்கிறேன். முன்பதிவு செய்ததும் அவனே..

      நீக்கு
    6. அதானே பார்த்தேன்..

      ரயிலில் சென்றிருந்தால் சேலம் சூலமங்கலத்திலிருந்து (ரயில் நிலையம் இருக்கும் இடம்) கல்யாண சத்திரம் விலாசம் தேடி வர இரண்டு மணி நேரம் கூட ஆகியிருக்கும்.
      அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. மாப்பிள்ளை மாதிரி சத்திர வாசலில் இறங்கிக் கொண்டு..

      நீக்கு
    7. ஓ...  அப்படியா?  அப்போ வண்டியில் சென்றது வசதிதான் இல்லையா..  ஓகே ஓகே..

      நீக்கு
  3. திருமண நிகழ்வு... அண்ணன் மகளுக்கு இரு நாட்கள் முன்பு.. இரண்டு கிலோ எடை கூடியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் சாப்பாடா...  என்ஜாய்!

      நீக்கு
    2. 8.5-9 லகரம் ஆச்சாம். கிளம்பும் அன்று இரவு உணவு உண்ணவில்லை. எவ்வளவுதான் இனிப்பு சாப்பிடுவது?

      நீக்கு
    3. இப்போதைய காலத்துக்குக் குறைச்சல் தான். அது சரி, நீங்க சொல்லுவது கல்யாணச் சத்திரம் வாடகை, மற்றச் செலவுகள் சேர்த்தா? இல்லைனா சாப்பாட்டுச் செலவு மட்டுமா?

      நீக்கு
    4. இது சாப்பாடு. சீர் பட்சணங்கள் இத்யாதி எவ்வளவுன்னு கேட்கணும். சத்திரம் 8 ஆயிருக்கலாம். டெகரேஷன் 2 இருக்கலாம். 15 ஏசி அறைகளுக்கு எவ்வளவுன்னு கேட்கணும். மற்றச் செலவுகளையும் விசாரிக்கணும்.

      நீக்கு
    5. லகரம் ஆவது பெரிதில்லை.  சுவை இருந்ததா என்பதே கேள்வி!

      நீக்கு
    6. சாப்பாடு சீர் பட்சணங்களோடு, வெற்றிலை பாக்குப்பை,காசி யாத்திரை எல்லாம் கூட கேட்டரர் பொறுப்பெடுத்துக் கொள்வார்.

      நீக்கு
    7. 8.5-9 லகரம் ஆச்சாம்.//

      ஆஆஆநெல்லை நிஜமாவா? இது சாப்பாடு செலவு மட்டுமோ?

      கீதா

      நீக்கு
  4. மூன்று வீரர்கள் என்று நேதாஜி இருட்டடிப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அப்போது டீ குடிக்கப் போயிருந்தாராம்.

      நீக்கு
    2. ஹூம்! இவங்க 3 பேருமே இந்திய அரசியலில் இல்லைனா இந்தியா எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கும் என எண்ணிப் பார்த்துப் பெருமூச்சு விட வேண்டியது தான். சுமார் அறுபது வருடங்கள் இவங்க கைகளில் மாட்டிக்கொண்டு தேசமும் மக்களும் பட்டாச்சு! போதும்டா சாமி!

      நீக்கு
  5. உபாதான காரணம் நிமித்த காரணம்... காலையில் தலைசுற்றல்

    பதிலளிநீக்கு
  6. உபாதான காரணம் நிமித்த காரணம்... காலையில் தலைசுற்றல்

    பதிலளிநீக்கு
  7. ஓம் தத்புருஷாய வித்மஹே
    மஹா சேநாய திமஹி
    தந்தோ சண்முக: பிரசோதயாத்.

    அழகா.சரணம்
    ஆறுமுகா சரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று சுவாமிமலை முருகன் தரிசனம். திருவலஞ்சுழி, பழையாறை, இன்னொரு புராதானமான மண்ணியாறு பிரியுமிடத்தில் சிறிய சிவபீடம், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர், விஷ்ணு துர்க்கை எனப் பலத் திருத்தல தரிசனங்கள்

      நீக்கு
    2. சுவாமிமலை எங்கள் இரண்டாவது குலதெய்வம்.

      நீக்கு
  8. கவிதைகளில் சொல்லி சொல்லாமல் விடுவதே தனி அழகு.

    ஹிஹி.. ஸ்ரீராமிற்கு இதெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்?

    ஜன்னலையும் மூடு..

    அந்த 'உம்'மை தான் எவ்வளவு நாஸூக்காய்ப் பதிந்திருக்கிறது?.. ஹூம்.. இதெல்லாம் எல்லோராலும் முடிகிற வேலை அல்ல..

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்திப்போம். முற்றிலும் குணமாகி விட்டதா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      முற்றிலும் என்று சொல்ல முடியவில்லை. போன வாரத்தை விட இப்போது வலி குறைந்து எழுந்து நடமாடுகிறேன். தாங்கள் சொல்வது போல, இறைவன் புண்ணியத்தில் முற்றிலும் விரைவாக குணமாக வேண்டும். தங்களது அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சீக்கிரமே முழுசும் சரியாகி குடுகுடுவென நீங்கள் ஓடியாடி  பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    4. சீக்கிரமே குடுகுடு பாட்டியாகவா? ஹா ஹா ஹா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் அருமை. தாங்கள் சென்று வந்த திருமணம் நன்றாக நடை பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி. நாங்களும் பல வருடங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து ஒரு உறவின் திருமணத்திற்கு சேலம் சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்து ஸ்கந்தகிரி செல்ல வேண்டுமென ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை.

    இப்போதுதான் இந்த முருகன் சிலை, முருகன் கோவில் அங்கு வந்துள்ளதோ ? அப்போது இதைப்பற்றி செவிவழி கேட்டிருந்தால் சென்றிருப்போமோ..? அதுவும் தெரியவில்லை. ஆக மொத்தத்தில் அன்று தரிசிக்க முடியாத முருகனை இப்போது தரிசித்து கொண்டேன்.

    கவிதை அருமை. வார்த்தைகளின் சுருக்கம் கவிதையை சிறப்பிக்கிறது. காதலியின் மனம் நோகாமல் அந்த காதலன் சொன்ன விதம் நன்று. (இதே மனைவி என்றால் சொன்ன அடுத்த நொடியில் கண்டு கொ(ன்று)ண்டு விடுவாள்.ஹா ஹா ஹா ) ஏற்கனவே இதை தங்கள் பதிவுகளில் படித்த நினைவும் வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. ஜோக்லாம் பார்த்துத் தேர்ந்தெடுக்கக்கூடாதா? தற்போதைய காலம்போல் நீங்களே ஹாஹாஹா ஹிஹி போட்டுக்கொள்ளணும்போல இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் எல்லா ஜோக்ஸுமே    (இப்போ) வரும் வாய்ப்பு கம்மி.  மேலும் எப்படி இருந்ததோ அப்படியே போட்டால்தான் காலத்தின் கண்ணாடி!

      நீக்கு
  12. காரில் செல்வது சௌகரியம்-4,5 பேர்கள் இருந்தால். இரயில் மிக சௌகரியம் என்பதை சமீப காலங்களில் உணர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயில் பயணம் நிறையச் செய்தாச்சு. என்றாலும் இன்னமும் பிடித்தது அது தான். பிரச்னை என்னன்னா, ரயிலில் ஏறவோ/இறங்கவோ முடியாத காரணத்தால் இப்போல்லாம் வெகுதூரப் பயணம் எனில் விமான சேவை/அருகே எனில் காரிலேயே என ஆகிவிட்டது. :( இப்போக் கடந்த ஒன்றரை வருடங்களாக எங்குமே பயணம் செய்யவில்லை. :(

      நீக்கு
    2. இன்று மெஜஸ்டிக் இரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குப் பெட்டியை இழுத்துக்கொண்டு பொடி நடையாக நடந்தே வந்துவிட்டேன்.

      நீக்கு
    3. வரவர பிரயாணங்களே போர் அடிக்கும் போல...(ஏதோ ரொம்ப பிரயாணம் செஞ்சு கிழிச்சாப்போல!)

      நீக்கு
  13. கீதா சாம்பசிவம் மேடம் விரைவில் நல்ல உடல்நலத்துடன் இணையத்துக்கு தன் திரும்பவேண்டும். இப்போல்லாம் கலாய்க்கவே மனம் வருகுதில்லை

    பதிலளிநீக்கு
  14. பல்சுவைக் கதம்பம் சிறப்பாக உள்ளது. மார்ட்டின் லூதர் கிங் ஒளிப்படம் மனதைவிட்டு அகல மறுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மார்ட்டின் லூதர் கிங் ஒளிப்படம் மனதைவிட்டு அகல மறுக்கிறது.// yes.

      நீக்கு
  15. ரோஜாவின் ராஜா
    -------------
    வலமும் இடமும் மோத விடாது
    நடுவில் நின்றான் எங்கள் நாயகன்
    மேற்கே கிழக்கை விழுங்க விடாது
    வீழ்ந்தே கிடந்தான் எங்கள் மன்னன்

    --- கண்ணதாசன்

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. ஓய்!.. பழசு எப்படிங்காணும் இளசு ஆகும்?!..

    தெரியாதா?..
    பழசு வேணா இளசு ஆகாம இருக்கலாம்..

    ஆனா, இளசு என்னிக்குமே பழசு ஆகாதுங்காணும்!..

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். பிரார்த்தனைகள். ஒரு வழியாய்த் தமிழ்நாடு முக்கியமாய்ச் சென்னை மழையிலிருந்து விடுபட்டு விட்டதோ? 17 ஆம் தேதி மழை இருக்கும்னு சொல்லிட்டு இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  20. நீங்க சேலம் போகப் போவது தெரிஞ்சிருந்தால் பக்கத்தில் "இளம்பிள்ளை" கிராமத்திற்குப் போய்த் துணிமணிகள், ஜவுளி எடுத்து வரச் சொல்லி இருப்பேன். என்ன போங்க! கடையில் விற்பதை விட மிக மிகக் குறைவான விலையில் நல்ல துணிகள், புடைவைகள் கிடைக்குமாம். விட்டுட்டீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பக்கத்தில் "இளம்பிள்ளை" கிராமத்திற்குப்.. //

      உண்மை தான்.. நான் சென்றிருக்கின்றேன்..

      அப்படியே பக்கத்தில்
      கஞ்சமலை.. காலாங்கிச் சித்தர் பீடம்..

      ஜீவனுள்ள திருத்தலம்..

      நீக்கு
    2. எந்த இடமும் சென்று வருவதற்கு, பார்க்க நேரமே இல்லை கீதா அக்கா.

      நீக்கு
  21. @ ஸ்ரீராம்..

    //அவர் அப்போது டீ குடிக்கப் போயிருந்தாராம்.//

    டீ குடித்து விட்டு எங்கேயாவது போய் விடுமாறு அனுப்பப்பட்டார்..

    பதிலளிநீக்கு
  22. காலங்கார்த்தாலே "உபாதி" பற்றி எல்லாம் படிக்கணுமானு யோசனையில் அதை சாய்ஸில் விட்டுட்டேன். இந்த முருகனைப் பிரதிஷ்டை செய்தது பற்றியும் கேள்விப் பட்டிருக்கேன். அந்தப் பக்கமே அதிகம் போனதில்லை. சேலத்துக்குப் போனதில்லை. ஆனால் எங்க பெண் பிறந்ததும் மதுரையிலிருந்து சென்னை/அம்பத்தூர் வரச் சேலம் வழியாகத் தான் போய்ச் சேர்ந்தோம். அதுவும் முதல் நாள் சனிக்கிழமை காலை கொல்லம்/சென்னை விரைவு வண்டியில் கிளம்பி மறுநாள் ஞாயிறன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் சென்னை சென்ட்ரல் போய்ச் சேர்ந்தோம். எங்க பெண் எழும்பூரில் எல்லாம் வந்து இறங்க முடியாதுனு அப்போவே பிறந்து 45 நாளிலேயே சொல்லிட்டா. அப்போவும் டிசம்பர் மாதம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலங்கார்த்தாலே "உபாதி" பற்றி எல்லாம் படிக்கணுமானு யோசனையில் அதை சாய்ஸில் விட்டுட்டேன்.//

      அப்படீன்னா என்ன?

      நீக்கு
    2. படிக்கலைனு அர்த்தம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அப்போ உபாதிக்கு உங்களுக்கும் அர்த்தம் தெரியாதா?

      நீக்கு
  23. நேரு ஆட்டத்தில் இறங்கினாரோ இல்லையோ...

    மௌண்ட் பேட்டன் உடனடியாக ஊரைக் காலி செய்ய வேண்டியதாயிற்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவிலேயே இருந்திருக்கலாமோ? நேரு எழுதின கடிதங்களை அனுப்பி வைக்கக் கப்பல் செலவானும் ஆகி இருக்காது. மிச்சப் படுத்தி இருக்கலாம். :(

      நீக்கு
    2. நேருவின் ஆட்டம் பற்றி படிக்க ஆசை!  கப்பல் அளவா லெட்டர் எழுதினார்?!

      நீக்கு
    3. இல்லை ஸ்ரீராம். எட்வினா+நேரு கடிதப் பரிமாற்றங்களுக்காகச் சிறப்புக் கப்பல் போனது என ஆதாரங்களுடன் படிச்சிருக்கேன். அதே போல் இப்போ பானுமதி சர்ச்சில் சொன்னதாக எழுதி இருந்ததையும் "க்ரவுன்" தொடரை ஹூஸ்டனில் பார்த்தப்போக் கேட்டேன். ரொம்பவே அவமானமா இருந்தது எனக்கு! :(

      நீக்கு
  24. கவிதையா அது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சேலத்துக் கல்யாணக் காலை ஆஹாரம் ஃபோட்டோக்கள், முருகன் ஃபோட்டோக்கள் எல்லாமும் முகநூலிலும் பார்த்து ரசிச்சாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவிதையா அது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

      ​ஹிஹிஹி.. ஏன் இப்படி சொல்லிட்டீங்க..

      நீக்கு
  25. மெம்பிஸில் பெண் இருந்தப்போ இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்றாள்.உள்ளுக்குள் எனக்கு வியப்பாக இருந்தது! நாமா இங்கெல்லாம் வந்திருக்கோம் என.

    பதிலளிநீக்கு
  26. பயண நேர தவறுதலால் சிரமம் ஆனது...

    சாரல்...? வயதாகி விட்டதோ...?

    பதிலளிநீக்கு
  27. நேரம் என்றால் ரயிலில் இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாமாம். ஆனால் டவேராவிலோ ஏழு மணி நேரத்தைத் தாண்டியது!//

    ஆஆஆஆ ஸ்ரீராம் என்னாது இரண்டரை மணி நேரத்துல சென்னைலருந்து சேலம் போய்டலாமா? பறக்கும் ரயிலா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி

    டவேரா நல்லாருக்கும் பயணம் செய்ய. என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தது ரயில்தான்.

    ஆம் ஸ்ரீராம் சேலம் அழகான ஊர். சுத்தி மலை ஏற்காடு! இப்ப குளிருதோ?! முன்ன கொஞ்சம் குளிர் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பறக்கும் ரயிலா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி//

      இருங்க..  மச்சானைக் கேட்கிறேன்!

      //இப்ப குளிருதோ?!//

      அது இல்லாமலா?

      நீக்கு
  28. பதில்கள்
    1. அச்சச்சோ...   முதல் கமெண்ட் வந்து விடுமேன்னு பார்த்தேன்.

      நீக்கு
  29. சேலம் என்றதும் ஜீ.வீ. சாரும், வல்லி அக்காவும் நினைவுக்கு வந்தார்கள். சென்னை டு சேலம் இரண்டு மணி நேரத்திலா? கேப்பையில் நெய் வடிகிறது என்றால் நம்பி விடும் கேனையனா நீங்கள்?கவிதை -- ஹாஹா!ஜோக்குகள் -- ம்ம்ம் நேரு --- Very charishmatic!. கிரௌன் ஆங்கில சீரிஸில் மவுண்ட் பேட்டனைப் பார்த்து சர்ச்சில்,"he is the one who gave India and his wife to the chuckled Nehru" என்னும் டயலாக் நினைவுக்கு வந்தது.  கமலா ஹரிஹரனுக்கு என்ன ஆனது? ஒரு விவரமும் தெரியவில்லை. ப்ளாகரில் கமெண்ட் அனுப்புவது கஷ்டமாக இருக்கிறது. அதனால் வர முடியவில்லை.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்பி விடும் கேனையனா நீங்கள்?//

      ஹிஹிஹி ஆமாம். எளிதாக இருக்கிறது!

      சர்ச்சில் கமெண்ட் இப்போதுதான் கேள்விப்பப்படுகிறேன்.  சூப்பர்.

      நீக்கு
  30. அந்தச் செல்லம் இப்படிக் கூட நினைக்கலாம்...ஹூம் எப்ப பாரு இதே மேரி பிஸ்கட்தானா..அலுத்துப் போச்சு....

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கவிதை - ஹாஹாஹா ஏற்கனவே பகிர்ந்து வாசித்த நினைவு ஆனாலும் இப்பவும் சிரிச்சிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!