சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்று ஒரு பக்திப்பாடல். உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் இயற்றிய பாடலுக்கு இசை D B ராமச்சந்திரன்.
தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்
தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
எங்கும் மணம் பரப்பும் மாலைகளே
அவன் ஈராறு கைகளாம் தாமரையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே
தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்
தங்க மயம் முருகன் சந்நிதானம்
========================================================================================================
புவனா ஒரு கேள்விக்குறி.
ரஜினியின் திரைவாழ்வில் ஒரு முக்கியமான படம். இந்தப் படம், பைரவி போன்ற படங்கள் அவருக்கு திருப்பத்தை ஏற்படுத்தி கதாநாயக அந்தஸ்த்தைப் பெற்றுத்தந்த படங்கள். சிவகுமார் உயரத்தில் இருந்தபோது சற்றே வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளரும், இயக்குனரும் தன்னை ஏமாற்றி அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்து விட்டதாக படம் வெளியானபிறகு சிவகுமார் சொன்னார்! சிவாஜி கையென்சன் தனது ஆரம்ப காலங்களிலேயே திரும்பிப்பார், கூண்டுக்கிளி, அந்த நாள், ரங்கோன் ராதா என்று பல படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்துள்ளார். சிவகுமாருக்கு ஏனோ அந்த தைரியம் வரவில்லை போலும்.
இயக்குனர் முத்துராமனுடன் ரஜினிக்கு முதல் படம். ரஜினியை பாசிட்டிவ் ரோலில் போடுவதால் முத்துராமன் கொஞ்சம் பயந்து படத்தை லோ பட்ஜெட்டில் கருப்பு வெள்ளையில்தான் எடுத்தாராம்.
மகரிஷியின் நாவல். பாடல்கள் பஞ்சு அருணாச்சலம். இசை இளையராஜா. மூன்று நல்ல பாடல்கள். அதில் இரண்டு SPB. இத்தனை நாள் இந்தத் தொடரில் இந்தப் பாடல் வராதது ஆச்சர்யம்தான்.
படம் 1977 ல் அதாவது எமெர்ஜென்ஸி காலத்தில் வெளிவந்தாலும் நன்றாக ஓடி லாபம் சம்பாதித்ததாம்.
நடபைரவி ராகத்தில் அமைந்துள்ள இன்றைய பாடல் 'விழியிலே மலர்ந்தது...'
இளையராஜா மற்றும் SPB க்காகவே இந்தப் பாடல்...
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே...
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
கையளவு பழுத்த மாதுளை - பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை - பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே யோகம் வரப் பாடும் ராகமே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதல் பாட்டு முத்தான முருகப் பெருமானின் பாட்டு. சீர்காழி என்றாலே அந்த எடுப்பும் தொடுப்பும் நமக்குப் பிடிபட்டுப் போய்விடும். இந்தப் பாடலில் அவர் உயிரும் மனமும் ஒன்றிப் பாடியிருப்பார்.
பதிலளிநீக்குபஞ்சு அருணாசலமும் கவியரசர் கண்ணதாசனின் திறமைகளில் ஒன்றிக் கலந்து பழகிப் போனவர். கேட்க வேண்டுமா?
பதிலளிநீக்குபாடலில் பெண்ணழகு அத்தனையும் போட்டி போட்டுக் கொண்டு நடை பயில்கின்றன.
இசையோ இளைய ராஜாவின் கை வண்ணத்தில் குழைகிறது. எனக்குப் பிடித்த அக்காலத்துப் பாடல்களில் இதுவும் ஒன்று.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில், முதல் பக்தி பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். நல்ல அருமையான பாடல். முருகா சரணம்.
இரண்டாவது திரைப்பட பாடலும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன்.எஸ். பி. பியின் குரலில் நல்லதொரு பாடல். இளையராஜா இசைக்கு கேட்கவா வேண்டும்..
புவனா ஒரு கேள்வி குறி என்ற கதை நாவலையே (மகரிஷி அவர்கள் எழுதிய கதை) படித்திருக்கிறேன். இந்தப்படம் பார்த்ததாக நினைவில்லை. ஒரு வேளை தொலைக் காட்சியில் வந்த போது பார்த்துள்ளேனோ என்னவோ.. அதுவும் நினைவில்லை. ஆனால் எழுத்தாளர் மகரிஷியின் நாவல்கள் மாலைமதியில் நிறைய படித்துள்ளேன்.
படம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் தன் இமேஜ் ரசிகர்கள் மத்தியில் பாதிக்கப்பட்டு விடும் என.எல்லா நடிகர்களும் நினைப்பதுதானே ..! நாம் அந்த காலத்தில் ஒரு படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் என்றால், நமக்கு நிஜ வாழ்வில் நல்லவரான நடிகர் நம்பியாரின் முகந்தானே நினைவுக்கு வரும். ஆனால், அவர் அதிலேயே புகழின் உச்சங்களுக்கு சென்றடைந்தார். இது அவரவர் விருப்பங்கள்.
இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விழியிலே மலர்ந்தது.. எனக்குப் பிடித்தமான எஸ்பிபி பாடல்களில் ஒன்று. ரம்யமான இசை இளையராஜா தந்தது.
பதிலளிநீக்கு’பாலில்.. நெய்யளவு பரந்த புன்னகை.. ’ பஞ்சு ! நீ ஒரு ரசிகன் தான்யா!
இந்தபாதிரி எழுபதின் இறுதி, எண்பதுகளில் வந்த பாடல்கள் ஹாஸ்டலில் இருந்தபோது பலமுறை கேட்டு ரசித்தவை. மனதிலும் பதிந்துபோனவை. பஞ்சுவின் எழில் கொஞ்சும் வரிகள். பாடகரின் குரல், அருமையான இசை....அருமையான பகிர்வு
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்கவே வேண்டாம்... அவ்வளவு சுகமான பாடல். உறவினர்கள் வீட்டில் பேச ஏராள விஷயங்கள் இருந்ததும், நேரம் கோனதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்ததும், இந்தத் தடவை திருச்செந்தூருக்குப் போக முடியாத காரணங்கள். அடுத்த முறை அவன் தரிசனம் வாய்க்கவேண்டும்.
பதிலளிநீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
தங்க மயம் முருகன் சந்நிதானம்
பதிலளிநீக்குசாந்தி மயம் முருகன் எழிற்கோலம்..
முருகா முருகா
முருகா முருகா
பெண்ணென்னும் பொன்னழகே
பதிலளிநீக்குஅடடா எங்கெங்கும்
உன்னழகே..
பெண்ணழகை வர்ணிப்பதில் மிக நளினமான நாகரிகமான பாடல்...
அன்றைக்கு பாவாடை தாவணியில் மிளிர்ந்தது பெண்மை.. ரசிக்க முடிந்தது..
இன்றைக்கு தோலின் நிறத்தில் லெக்கின்ஸ்.. தெருவில் வருகின்றனர்..
இன்றைய பாடல்கள் இரண்டும் சிறப்பு..
பதிலளிநீக்குமுதலாவது பக்தி சீர்காழியின் குரலில் அருமையாக அமைந்தபாடல். வெள்ளிப் பாடலாக அமைந்தது சிறப்பு.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இனியபாடல்.
பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.
இரண்டும் சிறப்பான பாடல்களே...
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்டதில்லை. இரண்டாம் பாடல் - பல முறை கேட்ட பாடல் - பிடித்த பாடலும் கூட!
பதிலளிநீக்குஇரண்டும் அருமை. சீர்காழியின் கணீர் குரலில் தங்கமய முருகனின் அழகுக்கு அழகு சேர்க்க...இரண்டாவது பாடல் எஸ் பி பியின் விழியில் விழுந்து குரலில் தேனாய் மாறி மனதில் விழுந்த ஒன்று!!! அருமையான பாடல்.
பதிலளிநீக்குதுளசிதரன்
இரண்டுமே அருமையான பாடல்கள் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇரண்டும் நிறைய கேட்டிருக்கிறேன்.
இரண்டாவது பாடல் நீங்கள் சொல்லியிருப்பது போல் எஸ்பிபி-இளையராஜா!! பாடல். ரசித்த் பாடல் ஆனா படம் இதுதான் என்பது இப்பதான் தெரிந்தது.
கீதா
புவனா ஒரு கேள்விக்குறி எங்க ஊர்ல அதாவது நாகர்கோவில் கன்னியாகுமரில ஷூட்டிங்க் எடுத்ததை பார்த்ததா பள்ளியில் தோழிகள் சொல்வாங்க. அதன் பின் செய்திகளிலும் தெரிந்தது,
பதிலளிநீக்குசிவகுமாருக்கு ஷூட்டிங்க் வசனம் பேசும் போது தெரியமலா இருந்திருக்கும்?
இப்படி வேறு ஏதோ ஒரு நடிகர் கூடச் சொன்னதா நினைவு. அதெப்படி தெரியாமல் போகும் படம் வெளிவந்தப்புறம் தான் தெரியுது எனக்குச் சொல்லப்பட்டது வேறு ஆனா எடுத்தது வேறுன்னு சொல்றாங்க எனக்குப் புரிவதில்லை இது...
கீதா
இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்குஇரண்டும் இனிமையான கேட்டேன், நன்றி.
இனிமையான பாடல்கள் இரண்டும்.
பதிலளிநீக்கு