காண்ட்வி
புவனா குமார்
ஒரு கப் கடலை மாவுக்கு ஒரு கப் கட்டித் தயிர் வேண்டும். அந்த தயிரை நீ....ர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு Thinனா தோசை மாவு போல கரைத்துக் கொண்டு அதில் மஞ்சள் பொடி போட்டுக் கொள்ளவும். மேலும் அதனுடன் பச்சை மிளகாய் (உங்கள் காரத் தேவைக்கேற்ப) இஞ்சி, தேவைப்பட்டால் கொத்தமல்லியும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். அதை நீர்க்கக் கரைத்துள்ள மோரில் கலக்கவும். இப்போது அந்த கடலை மாவையும் இதில் சேர்த்து கலக்கவும். கட்டி இல்லாமல் தண்ணியாய் கரைத்து கிளறி வைத்துக் கொள்ளவும். டீ வடிகட்டி போல எதிலாவது இந்த
கரைத்த மாவை வடிகட்டிக் கொள்ளலாம். தப்பித்தவறி திப்பி திப்பியாய் இருந்தால் கூட வடிகட்டி எடுத்து விடலாமாம். புவனா சொல்கிறார்.
சில தட்டுகள் எடுத்து தலைகீழாக கவிழ்த்து வைத்து விட்டு சிறிது எண்ணெய் தடவி (அல்லது அப்படியே கூட) தயாராய் வைத்துக் கொள்ளலாம் அப்புறம் முடிந்தால் நான்ஸ்டிக் அல்லது சாதாரண வாணலி எடுத்துக்கொண்டு அதில் இதை கொட்டி, (எண்ணெய் தேவையில்லை) கிளறிக்கொண்டே வரவும். அது கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி வழுவழு என்று க்ரீம் போல வரும். இந்நிலையில்.அதை தயாராக வைத்துள்ள தலைகீழ் தட்டுகளில் ஸ்மூத்தாக ஸ்ப்ரெட் செய்ய வேண்டும். ஆனால் வேகமாக செய்ய வேண்டும். ஓரொரு கரண்டி அதில் ஊற்றி, தட்டு முழுவதும் தின் லேயராக பரப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு கடுகு, சீரகம், எள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்துமல்லி, பெருங்காயம் தாளித்து அதன்மேல் பரவலாக ஊற்றி விட்டு, பிறகு பச்சை தேங்காய் துருவலை அதன்மேல் தூவி விட வேண்டும். அதன் பிறகு அது ஆறிய உடன் பிஸ்கட் கட் செய்வது போல அதை கட் செய்ய வேண்டும். ஒரு பக்கத்திலிருந்து தொடங்கி சுற்றி சுற்றி சுற்றி சுற்றி கட் செய்துகொண்டு வரவேண்டும்.
இதை எந்த அளவு Thin ஆக தயார் செய்கிறோமோ அந்த அளவு அது சுவையாக இருக்கும் என்கிறார் புவனா குமார். கட் செய்து எடுத்து படத்திலிருப்பது போல சுருட்டி, மடக்கி விட வேண்டுமாம். தாளிதம் தவிர வேறெதற்கும் இதில் எண்ணெய் கிடையாது என்பது ஒரு ப்ளஸ் என்பது புவனா குமார் சொல்லும் முக்கியமான விஷயம்.
இன்றைக்கான அருமையான ரெசிப்பி இது. சுலபமாகச் செய்ய முடியுமான்னு தெரியலை (தட்டில் லேயராகப் பரப்புவது)
பதிலளிநீக்குஎங்களுக்கு மிகவும் பிடித்தது. நாங்கள் குஜராத்தி கடைகளில் கமன் டோக்ளா, ரவை டோக்ளாவை சஃபேத் டோக்ளான்னு (பெயர் தெரியாத்தால்) சொல்லி வாங்குவோம், பிறகு இந்த காண்ட்வி. இந்த மூன்றுமே மிகச் சுவையாக இருக்கும், அதிலும் காண்ட்வி மற்றும் ரவை டோக்ளா. (கமன் டோக்ளா சமயத்தில் மென்னைப் பிடிக்கும், ஜீனி ஜலம் அதிகமாகச் சேர்ப்பார்கள்)
நன்றி நெல்லை. நான் இதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!
நீக்குநெல்லை, செய்யலாம். நீங்க மைசூர்பாகையே அனாயாசமா செய்யறவர்...இதென்ன பிரமாதம்!!! ஈசியா வந்துடும் உங்களுக்கு. செய்து பாருங்க இங்கயும் அனுப்புங்க!
நீக்குகீதா
கீதா ரங்கன் அக்கா மாதிரி ஆட்கள் இருக்கறதுனால, ஆண்கள் சமையல் தெரியும்னே ஒத்துக்கறதில்லை. எங்க ஒத்துக்கிட்டா, நம்மை சமையலறைக்கு அனுப்பிவிட்டு அவங்க வாட்சப்ல மூழ்கிடுவாங்களோன்னு பயம்தான்.
நீக்குஹாஹாஹாஹாஹா ஹையோ முடிலப்பா...
நீக்குகீதா
ஆஹா இன்று கான்ட்வி யா!!!!
பதிலளிநீக்குகுஜராத்தி மற்றும் ராஜஸ்தான் வகைகள் அனைத்தும் பெரும்பாலும் வீட்டில் செய்வதுண்டு. தோக்ளா, கான்ட்வி, ரவை தோக்ளா, கடலைப்பருப்பு ஊற வைத்து அரைத்து புளிக்க வைத்தும் தோக்ளா செய்வதுண்டு நன்றாக வரும் ரவா இட்லி போலதான்!!
படங்கள் எடுக்காமல் விட்டதால் அனுப்ப முடியலை. இப்ப மட்டும் என்ன? இருப்பதையே அனுப்ப மீன மேஷம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கான்ட்வியும் தட்டில் பரப்பி நன்றாக சுருட்ட வரும். முழுவதும் வாசித்து வருகிறேன்.
படங்கள் எல்லாம் செமையா இருக்கு.
வரேன் பின்னாடி. இப்ப ஆஜர்
கீதா
ராஜஸ்தான் உணவை விட குஜராத்தி உணவு எனக்குப் பிடிக்கும். ராஜஸ்தானியர்கள் வெந்நீர் கேட்டால்கூட அதில் ஐந்து ஸ்பூன் நெய் விட்டுக் கொடுப்பார்களோ என நினைத்துக்கொள்வேன். அவங்க உணவு நெய் ரொம்ப அதிகம், ஆரோக்கியக் கேடு. குஜராத்தி தாலில்லாம், நாம கவனமா இல்லைனா, ரெண்டு மூணு தாலி சேர்த்துச் சாப்பிட வச்சிடுவாங்க. உணவு உபசரிப்பில் சூப்பர் ஆட்கள் அவங்க.
நீக்குஆமாம் குஜராத்தி உணவு ரொம்ப பிடிக்கும். இப்பவும் சாத்புரா மஹாராஷ்டிரா எல்லை மலை ஊர் அங்கு சாப்பிட்ட குஜராத்தி உணவு இப்பவும் நினைவிருக்கு. ராஜஸ்தான் உணவு நெய் அதிகம்தான். குஜராத்தி உணவு உபசரிப்பில் ஆமாம் ஆனா பொதுவாகவே வட இந்தியர்கள் வீட்டில் சாப்பிடும் போது நாம ரொம்ப கவனமா இருக்கணும் இல்லைனா நாம கொஞ்சம் அந்தப்பக்கம் தலைய திருப்பி பேசினோம்னா இந்தப்பக்கம் தட்டுல விழுந்துரும் ரொட்டி சப்ஜி எல்லாம்...ஹாஹாஹா அது போல பராட்டாவுக்கு மக்கன் மக்கன்னு வெண்ணை பெரிய கட்டிய போட்டுருவாங்க. ஹையோ ரொம்பக் கஷ்டமா இருக்கும்.
நீக்குஆனால் சமீபத்தில் இரு மாதங்களுக்கு முன் அருமையான வட இந்திய உணவு வீட்டு உணவு சாப்பிட்டோம்...இங்கு வந்ததும் வெயிட் கூடியிருக்கோன்னும் செக் பண்ணிக்கிட்டேன்னு வைங்க...ஹாஹாஹாஹாஹா
கீதா
ரொம்ப நல்லா செஞ்சிருக்காங்க நல்லா வந்திருக்கு. பாராட்டுகள்!
பதிலளிநீக்குதட்டில் பரப்புவதுதான் விஷயமே. அது எவ்வளவு மெலிதாகப் பரப்புகிறோமோ அவ்வளவு நல்ல சுவையாக இருக்கும்.
அப்பால வரேன்
கீதா
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
கான்ட்வி, தோக்ளா வும் கூட எண்ணை இல்லாத ஒன்று.
பதிலளிநீக்குநான் சிறுதானிய தோக்ளா செய்த போது சும்மா வீடியோ எடுத்து ஷார்ட்ஸில் போட்டிருந்தேன். கமலாக்கா, கோமதிக்காவுக்கு நினைவிருக்கும். மத்தவங்களுக்கு நினைவிருக்குமா என்று தெரியாது!! ஹிஹிஹிஹி
கீதா
இந்த சிறுதான்ய மற்றும் ஆர்கானிக் பஜனைகளை நான் நம்புவதில்லை. தைரியமிருந்தால் முழுவதும் சிறுதானியம் போட்ட்டும் அப்படி இல்லாமல் புழுங்கரிசி, உளுந்து மற்றும் கால் டீஸ்பூன் சிறுதானியம் சேர்த்து, இது சிறுதான்ய இட்லின்னு பஜனை பண்ணறாங்க. இதுபோலத்தான் முறுக்கு நொறுக்ஸ்லயும்.
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் செஞ்சது அப்படி இல்லை நெல்லை. முழுவதும் சிறுதானியத்தில் செஞ்சேன் அடுத்த முறை செய்யறப்ப போடுறேன். அது போல நொறுக்ஸும் கூட அரிசி உளுந்து சேர்க்காமல் ஆனால் சிறுதானிய மாவுக்கு பைண்டிங்க் செய்ய பொட்டுக்கடலை கொஞ்சம் சேர்க்க வேண்டும். இல்லைனா அது ரொம்ப ட்ரையா இருக்கும். நம் வீட்டில் சிறுதானியங்களில் செய்வது அப்படித்தான்...ஆர்கானிக் நானும் நம்புவதில்லை. வாங்குவதும் இல்லை. வெளியில் சிறுதானிய நொறுக்ஸ் வாங்குவதும் இல்லை.
நீக்குகீதா
புதிதாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது . நன்றாக சொல்லியுள்ளார். படங்களும் நன்று.
பதிலளிநீக்குஎல்லாரும் சொல்லியிருக்காங்க...
பதிலளிநீக்குநல்ல பட்சணமாத்தான் இருக்கும்..
நமக்கு இங்கே உள்ளதே இட்டிலி தோசைக்கு மேல எதுவும் தெரியாது..
கேணித் தவளை நான்!..
புட்டு கொழுக்கட்டை மோதகம், களி கூழ், இட்டிலி தோசை, பருப்பு அடை, இடியாப்பம் ஆப்பம், பணியாரம் பாயாசம் -
பதிலளிநீக்குநமக்குத் தெரிஞ்சதெல்லாம் இவ்வளவு தாங்க...
முறுக்கு சீடை எல்லாம் இருக்கே...
இருக்கு தான்.. ஆனா அதெல்லாம் வேற!..
சுவையான குறிப்புகள். காண்ட்வி, டோக்ளா போன்றவை இங்கே கிடைப்பதால் வீட்டில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திருச்சியில் வீட்டில் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஇதெல்லாம் சாப்பிட்டதில்லை. படம் பார்த்திருக்கிறேன். பெங்களூருவிலிருந்து அவ்வப்போது படங்கள் வரும். பெயர்கள்தான் நினைவு இருப்பதில்லை.
பதிலளிநீக்குகுறிப்பைச் சொன்னவிதம் அருமை. ஸ்ரீராமின் விவரிப்பு என்று நினைக்கிறேன்.
துளசிதரன்
காண்ட்வி, டோக்ளா செய்முறையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குசெய்வதற்கும் எளிதாக இருக்கிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய சமையல் பதிவான காண்ட்வி (குஜராத்தி வகை உணவு) படங்கள், செய்முறைகளுடன் நன்றாக உள்ளது. இதுபோல் நான் இதுவரை செய்ததில்லை. ஆனால், நம் மோர்களியை (அரிசி மாவுடன் தயிர் கலந்து) நினைவுபடுத்தும் உணவாக இருந்தது. . சகோதரி கீதாரெங்கன் அவர்கள் இதுபோல் சிறுதானிய மாவில் தயிர் சேர்த்து (டோக்ளா) அன்றைய பதிவில் செய்து பகிர்ந்ததும் நினைவில் உள்ளது. இன்றைய பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.