==============================================================================================
ஏகாந்தன் ஸார் விருப்பத்துக்காக "அடுத்த வீட்டுப் பெண்" படத்திலிருந்து கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே" பாடல்!
வேதாந்தம் இயக்கத்தில், ஆதி நாராயண ராவ், அஞ்சலி தேவி தயாரிப்பில், தஞ்சை ராமையா தாஸ் திரைக்கதை எழுத, டி ஆர் ராமச்சந்திரன், அஞ்சலி தேவி நடிக்க, தஞ்சை ராமையா தாஸ் பாடல்களுக்கு ஆதி நாராயண ராவ் இசையில் 1960 இல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம்.
இந்தப் பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்த பாடலாம்.
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
========================================================================================
இனி என் விருப்பம் :
1972 இல் வெளிவந்த நகைச்சுவைப்படம் அவசரக்கல்யாணம். ஜெய்சங்கர் கதாநாயகனாகவும் நாகேஷ் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்த திரைப்படம். தியாகராஜன் இயக்கத்தில், கண்ணதாசன் பாடல்களுக்கு இசை டி ஆர் பாப்பா.
டி ஆர் பாப்பா?
திருத்துறைப்பூண்டி ராதாகிருஷ்ணன் பாப்பா! சிவசங்கரன் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் ஏன் பாப்பா ஆனார் என்கிற விவரம் இல்லை. புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞராக இருந்தவரை ஜோஸப் தளியத் மலையாளத்திலும் தமிழிலும் (ஆத்மசாந்தி) இசை அமைப்பாளராக 1952 இல் அறிமுகப்படுத்தினார். நாற்பதுகளில் இவர் எஸ் ஜி கிட்டப்பாவின் சகோதரர் எஸ் ஜி காசி அய்யருடன் பணியாற்றி இருக்கிறாராம்.
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய புகழ்பெற்ற சின்னஞ்சிறு பெண்போல பாடல் இவர் இசை அமைத்ததுதான். அபிராமி அந்தாதிக்கும் இவர்தான் இசை.
பாடலுக்கு வருவோம். பி சுசீலா பாடியிருக்கும் கண்ணதாசன் பாடல். இவ்வளவு இனிமையான இந்த மெலடி படத்தில் ரமா பிரபாவுக்காக அமைக்கப்பட்டது சற்றே ஆச்சர்யம். உடன் நாகேஷ்.
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா கண்ணா
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை – அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா –
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி
கண்ணா
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் – பின்பு
தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம் –
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதாஅக்கா... வணக்கம், நல்வரவு, நன்றி.
நீக்குகேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குநல்ல பாடல்கள். அடுத்த வீட்டுப்பெண்ணைத் தமிழில் பார்க்கலை/பார்த்ததில்லை. சந்தர்ப்பமே வாய்க்கலை. ஆனால் படோசன் பார்த்திருக்கேன். கிஷோர் குமார் பாடி நடித்த படம். இந்தப் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பே .. நாளைக்குக் காலம்பரக் கேட்கிறேன். அவசரக்கல்யாணம்னு படம் வந்ததும் தெரியாது. அறிமுகத்திற்கும் நன்றி. டி.ஆர். பாப்பா இசையில் தான் "சின்னஞ்சிறு பெண் போல" என்பது எனக்குப் புதுச் செய்தி. நன்றி.
பதிலளிநீக்குநான் எந்த மொழியிலும் பார்க்கவில்லை! படோசன் பாடல்கள் பிடிக்கும். கிஷோர் ரசிகன் அல்லவா! பி சுசீலாவின் இந்தப் பாடல் எனக்கு அப்போது மிகவும் பிடிக்கும்.
நீக்குசீர்காழி அவர்களது ஆஸ்தான கலைஞர் அல்லவா - TR பாப்பா அவர்கள்...
நீக்குஎத்தனை எத்தனை பாடல்கள்..
தெய்வீக இசைக் களஞ்சியமாக!...
ஆம்... எத்தனையோ பாடல்கள்...
நீக்குமுதற்பாடல் நினைவிலுள்ளது...
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் மீண்டும் நினைவுக்கு வந்தது..
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குவழக்கம்போல் இரண்டு படங்களையும் நான் பார்த்ததில்லை! பாடல்களை முன்பு AIR-லும், இப்போதெல்லாம் Youtube தயவிலும் சிலசமயங்களில் கேட்க வாய்க்கிறது. ஹிந்தியின் படோஸன், நம்ப அடுத்தவீட்டுப்பெண் தானா! ஆனால் அவர்கள் அவர்களது இயல்புக்கேற்றபடி, தாராளமாகக் கொலைசெய்திருப்பார்கள்.
பதிலளிநீக்குடி ஆர் பாப்பாபற்றிய தகவல்கள் தெரிந்தது. நாகேஷை ஒரு நாலு நிமிஷம் பேசாதிருக்கச் சொன்னால் அவருக்குப் பெரும் சித்திரவதை! ரமாபிரபா தரிசனம் ரொம்ப நாட்களுக்கப்புறம்.. ஆந்திராக்காரியோ?
அந்தக்கால தேவதைகள், அவ்வப்போது தங்கள் கால் விரல்களால் தரையில் சித்திரம் வரையப்பார்ப்பார்கள் என்பதை நினைவுக்குக் கொணர்ந்த காலைப்பொழுதிற்கு நன்றி.
வாங்க ஏகாந்தன் ஸார். முன்னரே ஒருபாடலில் படோசன்- அடுத்த வீட்டுப்பெண் பற்றிப்பேசியிருக்கிறோம்! எனவே அதிகம் சொல்லவில்லை.
நீக்குரமாப்ரபா ஆந்திராதான். சரத்பாபுவை மணந்தார்!
கால் விரல்களில் கோலம் போடுவதே இப்போதெல்லாம் நாக்ஷிச்சுவை ஆகிவிட்டது. நகைச்சுவைக்கு காட்சிகளில்தான் இடம்பெறுகிறது!!
//ரமாப்ரபா ஆந்திராதான். சரத்பாபுவை மணந்தார்!//
நீக்குஇது மிகவும் பழைய செய்தி. பழைய செய்தி சரத்பாபு ரமாப்ரபாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகர் நம்பியாரின் மகளை மறுமணம் செய்து கொண்டது. இருவருக்குமே அது மறுமணம்.
ஹா... ஹா... ஹா... ஆமாம்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க...
நீக்குஇரண்டும் கேட்ட பாடல்களே...
பதிலளிநீக்குகே.ஜே.யேசுதாஸின் முதல்பாடல் "நீயும் பொம்மை நானும் பொம்மை" இசை டி.ஆர்.பாப்பா படம் பொம்மை.
ஆமாம். நன்றி ஜி.
நீக்குரசித்த பாடல்கள்...
பதிலளிநீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி
நன்றி DD.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குஇரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள்தான்.
பதிலளிநீக்குஇரண்டு படங்களும் சிரிப்பு படங்கள்.
இரண்டும் பெண்ணை ஏமாற்றும் படம்
முதல் படம் பாட தெரியாது ராமசந்திரனுக்கு பின்னால் குரல் கொடுப்பார் தங்கவேலு.
நாகேஷ் ரமாபிரபாவிடம் சூரக்கோட்டை ஜமீன்தார் என்று பொய் சொல்லி இருப்பார்.
இரண்டு பாடல்களையும் கேட்டேன்.
நன்றி.
ஓ... நீங்கள் படங்கள் பார்த்திருக்கிறீர்கள்! நன்றி கோமதி அக்கா.
நீக்குஅனைவருக்கும் மிக அன்பு வணக்கங்கள்.
பதிலளிநீக்குஇரண்டுமே மிக நல்ல பாடல்கள்.
பிபிஎஸ் சார் குரலில் முதல் பாடல் கண்ணாலே
வானொலியில் கேட்டு மகிழ்ந்த காலங்கள் அருமை. அடுத்த வீட்டுப் பெண் முழுவதும் தங்கவேலுவின் அவர் மனைவியின் நகைச்சுவை
இப்பவும் நன்றாக இருக்கும்.
அஞ்சலி,ராமச்சந்திரன் இருவரும் சுமார்.
படோசன் மசாலா.
இரண்டாவது படம் கோவையில் இருக்கும்போது
பார்த்திருக்கிறேன். ரமாபிரபா நல்ல நடிகை.
காசேதான் கடவுளடாவில் நல்ல கலாட்டா செய்வார்.
அவ்வளவாகக் கண்டுகொள்ளப் படவில்லையோ.
மிக மிக நன்றி ஸ்ரீராம்.
இரு பாடல்களுமே நல்ல சாய்ஸ்.
"உத்தரவின்றி உள்ளே வா!" படத்தில் நாகேஷுடன் ஜோடி. சிறப்பாக நடித்திருப்பார். முன் ஜென்மம் நினைவுக்கு வந்தாற்போன்றதொரு பாத்திரம். செந்தமிழில் பேசி நடிக்கணும். அவர் குரலா, டப்பிங்கானு தெரியலை. ஆனால் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தன.
நீக்குவாங்க வல்லிம்மா... உத்தரவின்றி உள்ளே வா படமும், காசேதான் கடவுளடா படத்தில் கொஞ்சமும் பார்த்திருக்கிறேன். அதில் வருபவர் ரமாப்ரபாவா?
நீக்குடி.ஆர் பாப்பா நிறைய பக்தி பாடல்கள் இசை அமைத்து இருக்கிறார்.
பதிலளிநீக்குஅருணகிரி நாதர் படம் அவருக்கு மேலும் சிறப்பு செய்தது. டி.எம்.எஸ்க்கு புகழ் சேர்த்த பாடல்முத்தைதரு பக்தி சரவண பாடல் இப்போதும் எங்கும் ஓலிக்கும் அவர் பேரை சொல்லி. அது போல் சின்ன்சிறு பெண் போல
சீர்காழிக்கு புகழ் சேர்த்த பாடல்.
ஓ... அருணகிரிநாதர் கூட இவர்தானா? என்ன அருமையான பாடல்கள் அவை...
நீக்குபாடல் சிபாரிசுக்கு ஏகாந்தன் சாருக்கு நன்றி.
பதிலளிநீக்குஅப்போது பாடலைக் கேட்டே வளர்ந்த பிறகு
பின்னாட்களில் தொலைக்காட்சியில் அவ்வளவு ரசிக்க முடியாது.
அடுத்த வீட்டுப் பெண் ரசிக்கும்படியாக இருக்கும்.
அப்புறம் வந்த அவசரக் கல்யாணம் அவ்வளவு ரசிக்க முடியவில்லை.
இப்போது ஜீரணிக்க முடியாது .வயதாகிவிட்டது பாருங்கள்.
ரமாப்ரபா, கவர்ச்சி வேடங்களுக்கே தான் ஒதுக்கப் பட்டதாக
பின்னாட்களில் சொல்லி இருப்பார்.
அவசரக்கல்யாணம் என்றொரு படம் வந்தது, இந்தப் பாடல் மனதில் இல்லாவிட்டால் என் கவனத்துக்கே வந்திருக்காது அம்மா.
நீக்கு'கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே' இனிமையான பாடல். டி.ஆர்.பாப்பா பற்றிய தகவல்கள் சுவை.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்கு//கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே .. //
பதிலளிநீக்குஇயல்பான நகைச்சுவை உணர்வு பீறிட்டுக் கொண்டு வரும் பாடல்.
டி.ஆர். ராமச்சந்திரனும், தங்கவேலுவும் சக்கை போடு போடும் பாடல்.
இந்த ஒரே பாடலை பின்னணியில் எத்தனை பாடகர்கள் பாடுகிறார்கள் என்பதைச் சொல்லவில்லையே?..
எத்தனை பின்னணிப் பாடகர்களா? ஒருவர்தானேஜீவி ஸார்?
நீக்குP.B. ஸ்ரீநிவாஸ் ஒருத்தர் தானா?.. நான் P.B.S.-- வேறு ஒரு பாடலோடு குழப்பிக் கொண்டிருக்கிறேன்.
நீக்குஇதற்காக யோசிக்கும் பொழுது தான் இன்னொரு பாடல் நினைவுக்கு வந்தது. எம்.எஸ்.வி-யின் அட்டகாசமான இசையமைப்பு, ஜெமினியின் நடிப்பில் தான் எவ்வளவு துள்ளல்?.. வேறு எவர் காதல் காட்சியில் இந்த அளவு இளமைத் துள்ளலோடு நடித்திருக்கிறார்கள்?.. கமல் எல்லாம் சும்மா.
ஏ.எல். ராகவன் -- ஜமுனா ராணி பின்னணி இசையில்
பாக்கியல்ஷ்மி படத்தில்.. இதோ எனது நேயர் விருப்பம்.
சிங்காரச்சோலையே! உல்லாச வேளையே!
பொல்லாத இந்த மாலை நேரமே!
விடியோ காட்சியாய் பாடலைப் விரைவில் போடுங்கள்!
ஜனங்கள் ரசிக்கட்டும்!
ஹா...ஹா... ஹா... நீங்கள் ஜெமினியின் பெரும் ரசிகர் என்று முன்னரே தெரியுமே!
நீக்குஎனது ஐந்து வயசு பாலகன் பருவத்தில் டி.ஆர்.பாப்பா வீட்டுக்குப் போனதும் பூஜையில் கிண்ணத்தில் வைத்திருந்த கல்கண்டை அவர் எனக்கு எடுத்துக் கொடுத்ததும் நினைவில் இருக்கிறது. அவர் பிரபலமாகாத காலம் அது. வயலின் தான் அவரது அடிப்படை வாத்தியம். எங்கள் எதிர் வீடு. அவர் வயலின் வாசித்துக் கொண்டிருக்கும் போது சமர்த்தாய் விஷமம் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.
பதிலளிநீக்குகொடுத்து வைத்தவர் தாங்கள்...
நீக்குஅடடே... அவர் வீட்டுக்கு எதிரில் குடி இருந்தீர்களா? அவர் உங்களுக்கு கல்கண்டு எல்லாம் கொடுத்திருக்கிறாரா?
நீக்கு//தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்..//
பதிலளிநீக்குசொல்வதற்கென்ன?.. அப்புறம் யாரு பத்து மாசம் சுமக்கறது?.. :))
ஹா... ஹா.. ஹா....
நீக்கு//கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே!..//
பதிலளிநீக்குஇந்தப் பாடலின் காட்சி
உள்ளத்தை அள்ளித் தா.. என்ற படத்தில்
காப்பி அடிக்கப்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும்....
ஆமாம் இல்லே?
நீக்குரமாப்ரபா என்றதும் அவர் பற்றிய நினைவு பகிர்கிறேன் ஒரு முறாஐ நாங்கள் விஜயவாடாவில் இருந்து சென்னை வர முதல் வகுப்பில் புக் செய்திருந்தோம் நாலு பெர்த்ட்தும் எங்களுக்கானது ரமாப்ரபா அவர் உக்கே உரியசாமர்த்தியத்த்டன் எங்கள்பர்த்தில் அவரது [பொருட்களை வைத்து யாரிடமோபேசிக்கொண்டிருந்தார் நான்மிக மரியாதையுடன் அவர் தவறக எங்கள் பர்த்திலிடம்பிடித்ட்க்ஹிருக்கிறார் என்றேன் உடனே அவர் முதல்வகுப்பு எங்களுக்கு வேண்டுமானால் பெரிதகைருக்கலாம் அது மிகச் சதாரணமானது என்று கூறி குய்யோ முறாஐயோ என்றுஜ் கூச்சலிட்டார் நானவரை எங்கள் பர்தை காலி ச்ர்ய்ய கட்டாயப்படுத்தினேன் அவருக்கு இருந்த புகழுக்கு எல்லோரும் பணிவார்கள் என்னும் அவரது எண்ணத்தை மாற்றினேன் அதன் பின் வேறெங்கோ இடம்பிடித்து போய்விட்டார்
பதிலளிநீக்குஆச்சர்யமான அனுபவம் ஜி எம் பி ஸார்... அவர் பிரபலமானவர் என்பதால் விட்டுக்கொடுத்து விடுவீர்கள் என்றே எதிர்பார்த்திருப்பார் அவர். டி டி ஆர் கூட அவருக்கு சாதகமாக இருப்பார் என்றும் எதிர்பார்த்திருப்பார்!
நீக்குதட்டச்சு பிழைகள் மன்னிக்கவும்
பதிலளிநீக்குஅது பரவாயில்லைஜி எம் பி ஸார்.
நீக்குரமாப்ரபா இப்படி நடந்து கொண்டாரா. அநியாயமாக இருக்கே!
பதிலளிநீக்குநடந்து கொண்டிருக்கிறாரே.... பிரபலங்கள் தங்கள் பிரபலத்தைஉபயோகப்படுத்திக் கொள்ளத் தயங்குவதே இல்லைம்மா.
நீக்குடிஆர் பாப்பா அவர்களைப் பற்றிய செய்திகளும் அனைத்தும் அருமை. இத்தனை நல்ல பாடல்களை அளித்திருக்கிறாரே. அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
நீக்குஇரண்டு பாடல்களும் அருமை.
பதிலளிநீக்குநன்றி நெல்லைத்தமிழன்.
நீக்குபடம்: பாக்கியலஷ்மி
பதிலளிநீக்குசிங்காரச் சோலையே! உல்லாச வேளையே!
பொல்லாத இந்த மாலை நேரமே!
அடுத்த பகுதிக்கு என் நேயர் விருப்பம்!
போட்டுடலாம் ஜீவி ஸார்.
நீக்குஆஆஆ ஶ்ரீராம் உங்கள் இம்முறைப் பாட்டைத்தான் நான் பல வருடங்களாகத் தேடிக் கொண்டிருந்தேன்... அதை ஒரு ஒரு போஸ்ட்டாகப் போடுகிறேன் அதனால இங்கு எதுவும் சொல்லாமல் போகிறேன்:)...இப்பாடலை ஒரே ஒரு தடவைதான் கேட்டேன் பின்பு தேடிக் களைச்சு விட்டேன்...
பதிலளிநீக்குநினைவில் நிற்பது... மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்... வசனம் மட்டுமே:)..
ஏ அண்ணனின் பாடல் பல தடவை காதில் தவழ்ந்த பாடல்..
வாங்க அதிரா... இங்கே கொஞ்சமாவது சொல்லியிருக்கக் கூடாதோ... அல்லது வேறு ஏதாவது சொல்லி இருக்கக் கூடாதோ!!!!
நீக்குஇரண்டு பாடல்களுமே இனிமை. இரண்டாவது பாடல் இப்போது தான் பார்க்கிறேன் எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.