கே சோமு இயற்றிய பாடலுக்கு இசை கீரவாணி. இது இப்போது பிரபலமாய் இருக்கும் கீரவாணியா, வேறு ஒருவரா என்று தெரியவில்லை. அமைதியான இந்தப் பாடல் நெஞ்சை அள்ளும் சுசீலாம்மா பாடல்களில் ஒன்று.
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே….
========================================================================================
மகனே நீ வாழ்க...- 1969 ல் வெளிவந்த படம். ஜெய்சங்கர்- லட்சுமி, நாகேஷ், மேஜர், அஞ்சலிதேவி நடித்துள்ள திரைப்படம். M. கிருஷ்ணன் இயக்கத்தில் கண்ணதாசன் பாடல்களுக்கு இசை T R பாப்பா. பாடல்கள் என்றால் ஏதோ ஏகப்பட்ட பாடல்கள் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இரண்டே பாடல்கள்! ஒன்று இன்று பகிரும் இந்தப் பாடல். இன்னொன்று TMS சுசீலா பாடும் 'ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி' பாடல்!
இன்றைய பாடல் காட்சியைப் பார்க்கும்போதே கதை அமைப்பு எப்படி போகும் என்பது தெரிகிறது!
இத்தனை காலம் பெற்று, பாசத்துடன் வளர்த்து பெட்ரா மகளை அலலது தங்கையை இன்னொரு வீட்டுக்கு வாழ் அனுப்பும்போது அந்த பெற்றவர்கள் (இங்கு அண்ணன்) மனம் என்ன பாடுபடும்? அதுவும் ஒரே மகள் என்றால் இன்னும் சிரமம்.
தன் தங்கை லஷ்மியை பணக்கார வீட்டில் மருமகளாகக் கொடுக்கும் ஏழை அண்ணன் நாகேஷ், பெண்ணை அவர்கள் வீட்டில் விடும்போது அந்த வீட்டாரைப் பார்த்து பாடும் பாடலாய் வருகிறது. பி சுசீலாவும், சீர்காழி கோவிந்தராஜனும் குரல் கொடுத்திருக்கும் ஒரு அருமையான கண்னதாசன் பாடல்.
அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தெய்வமகள் வாழ்க
அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தெய்வமகள் வாழ்க
இளையமகன் போல வரும் புதியமகள் வருக
இந்த மனை ஆள வரும் அன்புமனம் வாழ்க
பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு
பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு
பொன்மணி சரத்தோடு வாழ்த்தும் புன்னகை முகம் உண்டு
தாய்வழி உறவென்று நினைத்து வாழிய நலம் கொண்டு
தாங்கிட கிளை உண்டு மயிலை தழுவிட துணை உண்டு
தங்கத்தட்டில் பூச்சரத்தோடுவெற்றிலை களிப் பாக்கு
தங்கத்தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு
வைத்து தாய் போல் உன்னை வருக என்றழைக்கும்
உள்ளத்தைக் களிப்பாக்கு - கண்ணே
உள்ளத்தைக் களிப்பாக்கு
கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித் தமிழினிலே
கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித் தமிழினிலே
அந்த மன்னவன் நெஞ்சம் மயங்கிடவேண்டும் வாழ்க்கை உறவினிலே
வாழ்க்கை உறவினிலே
நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
ஒரு நினைவும் கனவும் ஏழைத் தங்கை நிழலைத் தொட்டதில்லை
கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெண்ணைத் தரவில்லை
கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெண்ணைத் தரவில்லை
உங்கள் நல்ல மனங்களை எண்ணித் தந்தேன் வேறொரு நினைவில்லை
மஞ்சள்பூசி மாலை அணிந்து மாளிகை வரும் பெண்ணை
மஞ்சள்பூசி மாலை அணிந்து மாளிகை வரும் பெண்ணை
தன் மடியில் வைத்து காத்திடவேண்டும் நீங்கள்தான் அன்னை
இனி நீங்கள்தான் அன்னை
மாமி என்றால் அவள்தானொரு காலத்தில் மருமகள்தான் அல்லவா
குலசாமியின் பெயரால் சத்தியம் செய்தேன் தாய்க்கொரு மகளல்லவா
மகளே மகளே மணமகளே என் வாசலில் வரவேண்டும் - என்
வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்கலம் பெறவேண்டும்.-என்
வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்கலம் பெறவேண்டும்.
ஸ்ரீராமின் மருமகளை நாமும் வரவேற்று வாழ்த்துவோம்!
பதிலளிநீக்குஇளையமகன் போல வரும் புதியமகள் வருக
நீக்குஇன்பமனை ஆளவரும் அன்புமனம் வாழ்க
இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக
நீக்குஇந்த மனை ஆளவரும் அன்பு மகள் வாழ்க..
அட.... இது என்ன புதுச் செய்தி... புதிய மகள், ஶ்ரீராம் குடும்பத்தின் பாசப் பிணைப்பை இன்னும் அதிகமாக்கட்டும. வாழ்க பல்லாண்டு
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குசகோதரர் ஸ்ரீராம் அவர்களின் புதிய மகளை வரவேற்போம். மனையறம் சிறக்க வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
கலைவாணி நின் கருணை தேன்மழையே
பதிலளிநீக்குவிளையாடும் என் நாவில் செந்தமிழே.,
இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் வேறெதுவும் செய்வதில்லை..
செயல ற்று நின்று விடுவேன்..
ஸ்ரீ சரஸ்வதியை நினைத்திருந்தால் என்னைப் போன்ற கல்லும் சொல்லாதோ கவி!..
காலதேவனின் அருட்கொடை அந்தப் பாடல்..
பதிலளிநீக்குகலைமகள் அருளால் காலமெல்லாம் வாழ்க..
அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
பதிலளிநீக்குஆடிவரும் தீபமென
தெய்வ மகள் வாழ்க...
இந்தப் பாடலை கேட்க நேர்ந்ததில் இருந்தே எனக்கு மனப்பாடம்...
காரணம் எனக்கு இரண்டு தங்கைகள்..
முழுக்க முழுக்க மங்கலச் சொற்கள் ததும்பி வழியும்...
அண்ணன் தங்கை பாசம்..
பதிலளிநீக்குஅக்கா தம்பி பாசம் இதெல்லாம் இன்றைய இளசுகளுக்குப் புரியாது..
அண்ணன் தங்கை என கூடி வாழ்ந்த வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.. நன்றி..
/// அழகுமகள் கோலமென பழகும் மகள் வருக
பதிலளிநீக்குஆடி வரும் தீபமென தெய்வமகள் வாழ்க.. ///
அழகு மயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தெய்வமகள் வாழ்க..
எழுத்துப் பிழைகள் இருக்கின்றன..
மீண்டும் ஒருதரம் பாட்ளை கேட்டு சரி செய்யலாம் எனில்
திருப்பதி சானலில் சஹஸ்ரநாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது..
சற்று பொறுத்து கவனிப்போம்..
பதிலளிநீக்குஇரண்டாம் பாடல், திருமணத்தில் ஒலிக்கும் பாடலை உல்டா செய்து இசையமைக்கப்பட்டிருக்கிறது. பாடலும் அருமை
பதிலளிநீக்குதங்கத்தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை
பதிலளிநீக்குகளிப் பாக்கு ..
வைத்து தாய் போல் உன்னை வருக என்றழைக்கும்
உள்ளத்தைக் களிப்பாக்கு!..
தமிழ் விளையாடுகின்ற இடம்..
தமிழோடு
விளையாடுகின்ற இடம்..
ஒரு காலகட்டத்தில் நம் ஆழ்ந்த ரசிப்பினிடையே தமிழ் ஓவரா விளையாடிக்கொண்டிருந்ததோ.
நீக்குஅதான் இப்ப பம்மிப் பதுங்கிக் கிடக்கவேண்டியிருக்கு போல. காலம்.. கஷ்டகாலம்..
முதல் பாடல் பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்
பதிலளிநீக்குஇது தமிழ்த் தேர்வுக்கு மாணவ மாணவியர் மட்டம் அடிக்கின்ற காலம்...
பதிலளிநீக்குவாள்க திராவிடம்!..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பக்திப் பாடல் அடிக்கடி கேட்டு மனனம் செய்து பாடி மகிழ்ந்த பாடல். சரஸ்வதி அன்னையை நேரிலே நோக்கி நாமே மெய்யுருக பாடுவதாக தோன்றும். அருமையான பாடல்.
இரண்டாவதும் அருமையான பாடல். இன்று பொருத்தமான பாடலை கேட்டு ரசித்தேன். ஒரு பெண்ணை பெ.ற்று வளர்த்து கன்னிகாதான பலனை அனுபவிப்போர்க்கு இதன் அருமை புரியும். நல்ல வாழ்க்கை அனைவருக்கும் அமைய எந்நாளும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அருமையான இரு பாடல்களை தந்த தங்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
பதிலளிநீக்குஒரு நினைவும் கனவும் ஏழைத் தங்கை நிழலைத் தொட்டதில்லை ..
இப்படிப் பாட்டெழுதிய கவியரசர்
மாணவியர் கூடி சரக்கு அடிப்பார்கள் என்றோ
மாணவ மாணவியர் பேருந்து நிழற் தகரத்தில் இன்று மணம் கொள்வார்கள்... அதையும் படம் பிடித்துப் பதிவில் போடுவார்கள்.. என்றோ நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்!!...
//மகளே மகளே மணமகளே என் வாசலில் வரவேண்டும் - என்
பதிலளிநீக்குவாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்கலம் பெறவேண்டும்.-என்
வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்கலம் பெறவேண்டும்.//
தன் இனிய மருமகளுக்கு சகோதரர் ஸ்ரீராம் வாழ்த்து சொல்லி வரவேற்கிறார்!
நானும் அவரோடு இணைந்து வாழ்த்து சொல்லுகிறேன்!
அறுபதுகளில் மிகவும் புகழ் பெற்ற பாடல்! எல்லா திருமணங்களிலும் தவறாமல் ஒலிக்கும் பாடல்!!
முதல் பாடல் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இப்போதுதான் கேட்பது போன்ற உணர்வு.
களிப் பாக்கு என்பது
பதிலளிநீக்குபிஞ்சு பாக்கினை நறுக்கிப் பதப்படுத்தி பல் இல்லாத தாத்தா பாட்டியர்க்கு என பக்குவப்படுத்துவது..
மதுரை வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம்..
இப்போதும் கிடைக்கின்றதா தெரியவில்லை....
களிப்பாக்கு..
பதிலளிநீக்குகளிப் பாக்கு..
களிப்பு ஆக்கு!..
ஆகா!..
இருந் தமிழே உன்னால் இருந்தேன்!..
வானோர் விருந்து அமிழ்தம் எனினும் வேண்டேன்!..
காலம்..
பதிலளிநீக்குகலி காலம்..
கஷ்ட காலம்..
இல்லேன்னா தமிழ்த் தேர்வுக்கு பசங்க வராமல் இருப்பார்களா?..
உருப்படாததுகள்..
இங்கே தான் தமிழ் தெரியாவிட்டாலும் மேலே மேலே போகலாமே
இரண்டும் அருமையான பாடல்கள்.
பதிலளிநீக்குவீட்டுக்கு வந்த பெண்ணை மகளாக வரவேற்று நடத்துவது மிகுந்த நற்பண்பு வாழ்க குடும்பம்.
அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குஅடிக்கடி கேட்கும் பாடல் முதல் பாடல். நவராத்திரி காலங்களில் தினம் கேட்கும் பாடல்.
பதிலளிநீக்குஅடுத்த பாடலும் பிடிக்கும்.
மருமகளை மகளாக நடத்தினால் வீட்டுக்கு நல்லது.
ஸ்ரீராம் வீட்டுக்கு பெண் இல்லாத குறையை போக்க வந்த மகள் மருமகள். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
__/\__
நீக்குமுதல் பாடல் கேட்டு ரசித்த பாடல். இரண்டாம் பாடலும் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் மகள் - மணமக்களுக்கு வாழ்த்துகள்.