வெள்ளி, 2 டிசம்பர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161202 :: பாக்காதீங்க, கேக்காதீங்க!





     

10 கருத்துகள்:

  1. வீடியோ நன்றாக இருந்தது .
    ரொம்பவே இயற்கையாக .
    இதே போல 2011 ஜப்பான் சுனாமி வீடியோ பார்த்தால் அமைதியா இருக்கற இந்தக் கடல் ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளாற இப்படியா ஆக்ரோஷமாக ஆகும்
    என்று தோணும் .It is available in you tube

    பதிலளிநீக்கு
  2. ஒரு மழைநாளில் சன்னலோரம் அமர்ந்து ரசித்த சந்தோஷத்தைக் கொடுத்தது அண்ணா...
    அருமை.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்லா இருந்தது. நல்ல மழையைப் பார்த்தே வருடக்கணக்காக ஆகிவிட்டது. இடிச் சத்தம்தான் பயம் இது ஒருவேளை பூர்வ ஜென்ம அனுபவத்தால் இருக்கலாம். ஆனா இந்தமாதிரி அடைம்லைன் அனுபவமே செமயா இருக்கும் (நகரத்தில் அல்ல. கிராமங்களில், அதுவும் அருகில் ஆறு இருக்கும் கிராமங்களில்) மழைச் சத்தமே காதுக்கு இனிமையா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. இடியும் மின்னலும்... அப்பாடி.... இடிச்சத்தம் தில்லியில் கேட்பதே இல்லை!

    பதிலளிநீக்கு
  5. 1970களில் திருச்சியில் நான் எழுதி இயக்கிய நாடகம் மனசாட்சி மேடையேற்றினேன் அதையே பதிவிலும் எழுதி இருக்கிறேன் 2013 மார்ச் முதல் அதைல் முதல் காட்சியில் இடியுடன் கூடிய மழை பெய்வதாகக் காட்டும் ஒரு காட்சி இருந்தது அதனைப் பதிவில் காட்ட ஒரு காணொளியையும் இணைத்தேன் அந்த நினைவு இதைப் பார்த்தவுடன் வந்தது சுட்டியில் நீங்களும் பாருங்களேன்
    http://gmbat1649.blogspot.in/2013/03/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  6. ஜி.எம்.பி சார்.. அந்தக் காட்சியில், மழை வருவதை எப்படி மேடையில் காண்பித்தீர்கள் என்று எழுதவில்லையே.. 1979ல், தூய சவேரியார் மேல்'நிலைப் பள்ளி ஆண்டு விழாவில், மேடையில், மழையைக் காண்பிக்க, நாடக ஆசிரியர் தமிழாசிரியர் கிரகோரி அவர்கள் ஒரு உத்தி மேற்கொண்டார். பெரிய சன்னல் போன்றதைச் சுவரில் ஏற்படுத்தி, அதில் 4 அடிக்கு 4 அடி சட்டம் வைத்து, அதில், தடிமனான நூலினை, முழுவதுமாக வரி வரிபோல் செய்து, சுவற்றின்பின்னாலிருந்து அதனை அதிருமாறு செய்தார். (வீணையின் தந்தி அதிர்வதுபோல, ஆனால் இந்து, கிட்டத்தட்ட 60 நூல் வரிகளும் அதிரும். மேடைக்கு முன்பிருந்து பார்க்கும்போது, சன்னலின் வழியாக, மழை பெய்வதுபோல் தெரியும்)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!