புதன், 23 மே, 2018

கேட்டால் தெரியும், கேள்வியும் பதிலும்! புதன் 180523



இந்த வாரம், நகத்தை .... இல்லை இல்லை விரலைக் கடித்துக்கொண்டிருப்பவர் .... முதல் கேள்விக்கு பதிலாக!   


ஏகாந்தன் : 
//..இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண்: திரு எடியூரப்பா (படம் கிடைக்கவில்லை! )//

எப்படி ஐயா கிடைக்கும்? எடியூரப்பா என்ன அனுஷ்காவா, தமன்னாவா, கீர்த்தியா - அள்ளி அள்ளிப்போட ? 



  

@ கீதா:...எபியில் வரும் எபி ஆசிரியர்கள் முதல்..//

பின்னே ..? குமுதம், கல்கி, விகடன் ஆசிரியர்களெல்லாமா வருவார்கள் எபி-யில்? 

ப: பின்னே வந்தாலும் வரலாம்!

அதிரா : 

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், உங்க பிள்ளை தானே வளரும் என்றார்கள்”. அதைப் படிச்ச காலத்திலிருந்து நான் அப்படித்தான் நடக்கிறேன்.. இது சத்தியம்.. அது எதுவாயினும் சரி:).. பிள்ளையாகட்டும் பொருளாகட்டும் எதுவாயினும் ... பழமொழிகளைப் பின்பற்றும் பழக்கம் சின்னனிலிருந்தே இருக்க்கெனக்கு... 

ஆனா இடையில ஒருவர் இதை மாற்றி எழுதினார்ர்...:)
“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.. உங்க பிள்ளையை என்ன கோடைக்கானலா வளர்க்கும்” என ஹா ஹா ஹா...

சரி இப்போ கிளவிக்கு வாறேன்ன்ன்:)) ஐ மீன் கொஸ்ஸன் நெம்பர் வன்:-
.. இதில முதல் பழமொழியைப் பின்பற்றி... நான் கிடைக்கும் நேரத்தில நண்பர்கள் புளொக்குக்குப் போனா:).. என் பக்கம் வந்து கொமெண்ட் போடுவோருக்குப் பதில் போட நேக்கு நேரமே கிடைக்குதில்லை:)).. ..[பதில் போடாததுக்கு கும்பலா வந்து கும்மிடப்போகினமோ எனும் பயத்தில சிம்பதி கலக்ட் பண்ணுறேனோ:)) ஹா ஹா ஹா]

அதனால இப்போ மோடி அங்கிளிடம் சொல்லி[வேணுமெண்டால் அதிரா சொன்னா எனச் சொல்லுங்கோ:) நா ஒண்ணும் வாணாம் ஜொள்ளலியே:))] முதல் பழமொழியைத் தூக்கிக் காவேரில போட்டிட்டு 2 வது பயமொயியை சபைக்குக் கொண்டுவரச் சொல்லுவீங்களோ?:)) 

ப: தேடிப் பாக்குறேன், கேள்வியைத்தான் காணோம்! 

கொஸ்ஸன் நம்பெர் 2. ஏன் ஆண்களுக்கு அதிகமா மொட்டை வருது?:))[ புத்தி அதிகம், சிந்திப்பது அதிகம் எனும் விடைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன]:). 

ப: உங்க முதல் கேள்வியைப் படித்துப் படித்து, முடியைப் பிச்சிக்கொன்டதில், இப்போ அடியேன் தலை யூல் பிரின்னர் ! 


  

//இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண் : திரு எடியூரப்பா ! 
(படம் கிடைக்கவில்லை! ) //

ஸ்ரீராமின் தம்பியாக இருப்பார்போலும்:)) அப்பூடி எனில்தான் படம் கிடைக்காஅது:)) ஒரு வேளை எடியூரப்பாவுக்கும் கெள அண்ணனுக்கும் எட்டு வித்தியாசம் இருக்குமோ?:) 

ப: சேச்சே ! எட்டிக்கு, குமாரசாமி எதிரி. எனக்குக் குலதெய்வம்! (செ மு குமாரசாமி )

3..எதுக்கெடுத்தாலும் பெண்களைக் குறை சொல்லுவோரை என்ன பண்ணலாம்?:)).. 

ப: சும்மா விடக்கூடாது. சண்டை போட்டு, வம்புக்கு இழுத்து, வீதியிலே நிறுத்தி, கூக்குரலிட்டு எல்லோருக்கும் உணர்த்துவோம் , பெண்கள் யார் என்பதை! 

ஏஞ்சல் : 

1,இன்னமும் bombay என்று எழுதும் வழக்கம் நம் நாட்டில் இருக்கா ? 
அதை மும்பாய் என்று மாற்றியது தெரியும் 
தகவல்கள் பல இன்னும் எனக்கு அப்டேட் ஆகாததால் சந்தேகத்தை தீர்க்க கேட்கிறேன் .



ப: பாம்பே ஜெயஸ்ரீ, பாம்பே சாரதா (பழம் பாடகி எம் ஆர் விஜயா மகள் ), எனது நண்பர் பாம்பே கண்ணன் எல்லோரும் பெயரை மாற்றிக்கொள்ளும் வரை, பாம்பே வாழ்ந்துகொண்டிருக்கும்! 

    



  









    
2,கீர்த்தி சாவித்திரி பார்த்தீர்களா ?
உங்கள் பார்வையில் ஒரு வரி விமரிசனம் 
 
ப: உண்மையைச் சொன்னால், சென்ற பதிவில் 



இதையும், உங்க கேள்வியையும் பார்த்துத்தான், அப்படி ஒரு படம் வந்திருக்கு என்று தெரிந்துகொண்டேன். நான் ஒரு கி. த !
   
    3, ஸ்ரீராம் எப்பவுமே ஏன் ஜெய்சங்கர் தாத்தா சிவகுமார் சின்ன தாத்தா படங்களா செலக்ட் செஞ்சி வீடியோ போடறார் ?
(இப்போல்லாம் மீ வெற்ரி கேர்புல் ..இங்கே ஒருத்தர் சந்தடி வாக்கில் என்னை ஆன்ட்டி ஆக்கிட்டார் :)
இனிமே பழைய நடிக நடிகையரை நான் தாத்தா பெரிய தாத்தானு தான் சொல்வேன் .


ப: எல்லாமே ஸ்ரீராமின் தந்தை,  அவருடைய சிறு வயதில்,  ரசித்த பாடல்களாக இருக்கும். 
           
4, உங்களுக்கு பிடித்த சமீப கால நடிகர்கள் ?

ப: சாரா அர்ஜுன், யுவினா பார்த்தவி , நைநிகா 


5, தூக்கத்தில் ட்ரெயினை பிடிக்க ஓடுவது காக்கா தலையை கொத்துவது எலி காலை கடிப்பது போன்ற கனவுகள் வந்ததுண்டா ?

ப: தூங்கும்போது கரப்பான் பூச்சி கால் விரலை மேய்ந்து, புண்ணாக்கி இருக்கிறது. பரீட்சை எழுதப்போய், எழுதுவதற்கு ஊர்க்கு ஒடிந்த பென்சில் மட்டும் இருப்பதைப்போல் கனவு கண்டதுண்டு. டிரெய்ன், காக்கா, எலி எல்லாம் வந்ததில்லை! 


6, இந்த பொங்கல் பொங்கல் என்கிறார்களே .எதற்கெடுத்தாலும் ஆராயாமல் பொய்ங்கிங் சரியா ? 


ப: ஆராயாமல் இருப்பதால்தான் பொங்குகிறார்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருளை ஆராய்ந்து கண்டவர் பொங்கிலர் !
               
7, இதுவரைக்கும் நீங்க வாங்கிய பொருளில் யூஸ்லஸ் பொருள்னு ஏதாச்சும் இருக்கா ?
அதாவது வாங்கிட்டு வீட்டில் தினசரி அதுக்குன்னே டைம் எடுத்து திட்டுவாங்களா :) உங்க boss 

ப: எனக்கு ரேடியோவைக் கண்டால் ஒரு கிரேஸ். இதுவரை இரண்டு டஜன் ரேடியோக்களாவது வாங்கியிருப்பேன். அதுல இப்போ உயிரோடு இருப்பது அரை டஜன் மட்டுமே! மனைவி, மகன், மகள் எல்லோருமே கேலி செய்திருக்கிறார்கள்! 

8, நாளை நமதேன்னு சொல்றாங்க அப்போ இன்று யாருது ?  

ப: நிச்சயமா, இன்று 'நாளை நமதே' என்று சொல்பவர்களுடையது அல்ல! நேற்று, 'நாளை நமதே' என்று சொனவர்களுடையதாக இருக்குமோ என்னவோ! 
     
       9,உங்களுக்கு பூனை பிடிக்குமா ?  

ப: பிடிக்கும். பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் இருந்தால். 



என் வீட்டுக்குள் வந்தால், "டா ய் " என்று கத்தி, பயமுறுத்தி ஓட வெச்சுடுவேன்!

10,pampers பயன்பாடில்லா காலத்தில் ஏதேனும் குட்டி குண்டூஸ் பேபிஸை தூக்கி 
மீண்டும் கோகிலா படத்தில் வரும் வெள்ளி பனியுருகி மடியில் வீழ்ந்து கமல் அங்கிள் போல அசடு வழிந்த அனுபவுமுண்டா ??  

ப: சிரிப்பதற்கு ஒரு ஸ்ரீதேவி இருந்திருந்தால், அப்படிச் செய்திருக்கலாம். ஆனா என்ன பண்றது! அந்தக் காலத்துல சுத்தி இருந்தவைகள் எல்லாம் பயங்கர பாமா, அடங்காத அங்கமுத்துகள்தான்! 

11) ஸ்வீட் ட்ரீம்ஸ் என்றால் என்ன மீனிங் ? 

ப: எனக்கு வந்ததே இல்லை. எனக்கு சில சமயங்களில் sweat dreams வந்து, அலறியதுண்டு! 

  வாட்ஸ் அப்: 

பானுமதி வெங்கடேஸ்வரன் :



ப: 1

2) 


   கே ஜி ஒய் கவிதை: 




சிரிக்க ஒரு காணொளி! (அனுப்பியவர் : ரேவதி சிம்ஹன். 




   

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

   

47 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். புதன் நேரத்தைச் சரியாகப் பிடித்து விட்டீர்கள்!

    :))

    பதிலளிநீக்கு
  2. அன்பின் KGG , ஸ்ரீராம் கீதா R/ கீதா S அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. ஆகா.... அருமை...
    கேள்விகளும் பதில்களும் கலகலப்பு...

    பதிலளிநீக்கு
  4. கௌதமன் சார், என்னோட கிளவிகள் இடம் பெறாமையால் வெளி நடப்புச் செய்கிறேன். சேச்சே, கேள்விகள்! இந்த அதிரா எழுதறதைப் படிச்சாலே இப்படித் தான் டங்கு வார் அறுந்து போகுது! சே மறுபடி, டங்க் ஸ்லிப்பு ஆயிடுது! :P :P

    பதிலளிநீக்கு
  5. கீதா அக்கா... உங்கள் பிறந்த நாளுக்கு எங்களின் அன்பான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. நன்னி, நன்னி எல்லோருக்கும் நன்னி!

    பதிலளிநீக்கு
  7. கீ சா என்ன கேள்வி கேட்டீங்க? எங்கே? எப்போ? முடிந்தால் வாட்ஸ் அப்ல அனுப்புங்க. அடுத்த வாரம் பதில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கு ரொம்பத்தான் குறும்பூ

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம். நான் கேள்வியே கேட்கவில்லை.
    அசடு.
    வீடியோ பதிவிட்டதற்கு மிக நன்றி மா.
    கீதா சாம்பசிவம்
    ///குழந்தைக்கு///
    மனம் நிறை பிறந்த நாள் வாழ்த்துகள்.
    என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. பிறந்தநாள் காணும் கீதா S அவர்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  11. என்னுடைய புகைப்பட கேள்வி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கேள்வியை போட்டீர்கள் சரி பதில்களையும் சேர்த்து போட்டு விட்டீர்களே..?

    பதிலளிநீக்கு
  12. இதென்ன கேள்வி! இது கேள்வி பதில் பகுதிதானே!

    பதிலளிநீக்கு
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதா! வாழ்க வளமுடன்.
    பாமாவிஜய பாடலில் வரும் கேட்டால் தெரியும் கேள்வியும் பதிலும் வரிகள் தலைப்பானதை ரசித்தேன்.
    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. சிவபூஜையில் கரடிபோல, பாதபூஜை நடந்துகொண்டிருக்கையில் தலைகாட்டிய பாதகி யார்?

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    கேள்வி பதில்கள் வழக்கம் போல் அருமை
    பதில்களில், பாம்பே ஜெயஸ்ரீ,போன்றோர் பெயர் மாற்றும் வரை பாம்பே வாழ்ந்து கொண்டிருக்கும்.. ரசித்தேன்.

    சகோதரர் கே. ஜி. ஒய் அவர்களின் கவிதை நன்றாக உள்ளது.

    காணொளியும் சிரிக்க வைத்தது.

    அத்தனையுமே அற்புதமாயிருந்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. என்னாதூஊஊஊஊஊ கீசாக்கா பிறந்திட்டாவோஓஓஓஒ.. அதுதான் நான் இன்னும் பிறக்கவே இல்லை எனச் ஜொள்ளிக்கொண்டிருந்தா:)).. இனிய “சுவீட்82” ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீசாக்கா... இன்று போல் என்றும் சளைக்காமல் சுவர் ஏறிக்குதிச்சு எங்கள் புளொக் வரவும்.. அதிராவை மறக்காமல் இருக்கவும் வாழ்த்துகிறேன்..

    என் செக்:) க்கு ரைப் பண்ண முடியாமையால.. என் செக் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. கேட் சுவீட் எல்லாம் எனக்கு அனுப்பி வைக்கவும் செக்குக்கு ஆகாது:) ஒரு மாதத்துக்கு அவ ரைப் பண்ணவும் கூடாது வெறும் பத்தியச் சாப்பாடு மட்டும்தேன்:)).. இப்போ இதைப் படிச்சாவோ.. அவவுக்கு காண்ட்ஸ் எல்லாம் ரைப் அடிக்கும் ஆனா ரைப் பண்ணி என்னைத்திட்ட முடியாதே.. ஊஊஊஊஊஊஊஉ லலலாஆஆஆஆஅ:)) அதிராவுக்கு வெள்ளி துலாவில:)..

    பதிலளிநீக்கு
  17. அது சரி கெள அண்ணன் இப்போ எதுக்குப் ஃபோனைப் பார்த்துக் கையைச் சூப்புறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வயதாகிட்டால் குழந்தை போலாகிடுவினம் எனக் கேள்விப்பட்டதுண்டு:)) ஆனா அதை ஆதாரத்தோடு நிரூபிச்சிட்டீங்களே ஹையோ ஹையோ:))

    பதிலளிநீக்கு
  18. //ப: தேடிப் பாக்குறேன், கேள்வியைத்தான் காணோம்! //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    //ப: சும்மா விடக்கூடாது. சண்டை போட்டு, வம்புக்கு இழுத்து, வீதியிலே நிறுத்தி, கூக்குரலிட்டு எல்லோருக்கும் உணர்த்துவோம் , பெண்கள் யார் என்பதை! ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *34562:).
    சந்தடி சாக்கில நீங்களும் குறை கூறிட்டீங்க:) ச்சோஒ விட மாட்டோம்ம்ம் உங்களில் இருந்து ஜண்டை:)) ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.. கீசாக்கா.. கீதா. அஞ்சு.. அலமேலு எல்லோரும் ஓடியாங்கோ தேம்ஸ் கரைக்கு:))

    பதிலளிநீக்கு
  19. //ப: சாரா அர்ஜுன், யுவினா பார்த்தவி , நைநிகா //

    நான் ஜொன்னேனெல்லோ குழந்தையாகிட்டார் கெள அண்ணன் என:)).

    //என் வீட்டுக்குள் வந்தால்,//// "டா ய் "//// என்று கத்தி, பயமுறுத்தி ஓட வெச்சுடுவேன்!//
    அது லேடிப் பூஸ் எனில் எப்பூடிக் கத்தி ஓட வைப்பீங்க?:) டவுட்டு:)).

    பானுமதி அக்கா கேட்ட பூ.. ஆன்ரி கனன் எனும் கல்யணப்பூ போல இருக்கே.

    பதிலளிநீக்கு
  20. கே ஜி வை.. என்பவர்தானோ எங்கள்புளொக்கின் 2வது ஆசிரியர் ஞாயிற்றுக் கிழமை தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்பதிவின் ஜொந்தக்காரர்?:)) அவருக்கு இங்கு எட்டிப் பார்த்துப் பதில் சொல்ல நேரமில்லை கவிதை எழுத மட்டும் ரைம் எப்படிக் கிடைச்சது என நான் கேட்கவில்லை:)).. என் செக்:) கேட்கச் சொல்லிச் சொன்னா:))... என்னை விட்டிடுங்கோ.. தப்பெனில் அவவைப் பிடிச்சுத்தாறேன் மற்றக் கையையும் கீறி விடுங்கோ இன்னும் ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருப்பாவுக்கும்:))...

    என்னை வந்து, தனக்குத் தலையை இழுத்து விடச்சொல்லி ஜொள்ளுறா:)).. இதுக்காகத்தானே ஆசைப்பட்டேன்ன்ன் அஞ்சுக்குமாரி:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  21. ////

    ஏகாந்தன் Aekaanthan !May 23, 2018 at 12:03 PM
    சிவபூஜையில் கரடிபோல, பாதபூஜை நடந்துகொண்டிருக்கையில் தலைகாட்டிய பாதகி யார்?////
    ஸ்ஸ்ஸ்ஸ் ஏகாந்தன் அண்ணன் பெண்களைத் திட்டாதீங்கோ:).. பிறகு தேம்ஸ் கரையில் டீக்குளிப்போம்ம்ம்ம்ம்:)

    பதிலளிநீக்கு
  22. @ அதிரா: ஸ்ஸ்ஸ்ஸ் ..பெண்களைத் திட்டாதீங்கோ:).. பிறகு தேம்ஸ் கரையில் டீக்குளிப்போம்ம்ம்ம்ம் //

    தேம்ஸ் கரைக்குப் போய்ச்சேர்ந்தபின்னும், டீ - யில்தான் குளிப்போம் என அடம்பிடிப்போரை என் செய்வது? ஸ்காட்லாண்டுவாழ் முருகா.. முத்துக்குமரா?

    பதிலளிநீக்கு
  23. கீதா சகோதரி/கீதாக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!! ஆரோக்கியமாக வாழ்ந்திட இறைவனிடம் பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  24. கேள்விகள்! இந்த அதிரா எழுதறதைப் படிச்சாலே இப்படித் தான் டங்கு வார் அறுந்து போகுது! சே மறுபடி, டங்க் ஸ்லிப்பு ஆயிடுது! :P :P//

    அக்கா நீங்க குழந்தை நோ கெளவி..!!! அது அதிரடிக்கான வார்த்தை அதான் அவங்க கெளவி கெளவினு அடிக்கடி சொல்லிடறாங்க...ஹிஹிஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  25. அதிரா உங்க வாலைப் பிடிச்சு செக் பண்ண உங்க செக் சொல்லிருக்காங்களாக்கும்!!! இனி நானும் வந்தாச்சு..ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  26. அதெப்படி ஏஞ்சலை ஆண்டியாக்கலாம்? அது நெல்லையின் வேலையாக்கும்! விடக் கூடாது அதிரா வாங்க...ஓ நீங்க வரமாட்டீங்க உங்களுக்கு ஒரே பொயிங்கி பொயிங்கி சந்தோஷமல்லோ....நெல்லை அப்படிச் சொன்னது...ஹா ஹா ஹா ஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இன்று போல் என்றும் சளைக்காமல் சுவர் ஏறிக்குதிச்சு எங்கள் புளொக் வரவும்.. அதிராவை மறக்காமல் இருக்கவும் வாழ்த்துகிறேன்//

    அதிரா நோ நோ கீதாக்கா இப்ப கைக்குழந்தையாக்கும்...ஸோ சுவர் எல்லாம் ஏறிக் குதிக்க முடியாது அதுக்குத்தான் பர்த்டே கிஃப்டா பாராசூட் எபி சார்பில கொடுத்துருக்காக்கும்....ஹா ஹா ஹா ஹா ஹா

    இனி எபில பாராசூட் ஃப்ரீ....யாருக்கெல்லாம் சுவர் ஏறிக் குதிச்சு வர முடியலியோ அவங்களுக்கெல்லாம்....

    இப்படியே சுவர் ஏறிக் குதிக்கறவங்களுக்கெல்லாம் புகை வரக் கடவது. நான் எப்பவுமே நேரடியா எபிக்குள்ள நுழைஞ்சுருவேனாக்கும்...நேக்கு இதுவரைக்கும் சுவர் ஏறிக் குதிக்க வேண்டியதே இல்லை.ஸ்பெஷல் என்ட்ரி!! ..ஹையோ யாரும் கண்ணு வைச்சுராம இருக்கணும் வைரவா காப்பாத்துப்பா.....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  28. கேள்வி பதில் பகுதி படித்து ரசித்தேன். தேவையான மாறுதல்களை வாட்சப்பில் பகிர்கிறேன்.

    கீதா சாம்பசிவம் மேடத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றிருப்பதைவிட ஒவ்வொரு நாளும் மேலும் சிறப்படையட்டும்

    பதிலளிநீக்கு
  29. கீதா ரங்கன்- கோர்த்துவிட்டுடாதீங்க. ஏஞ்சலின் "அனிச்சை" போன்றவர். அதனால் "தேவதையின் கிச்சன்" ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார்.

    பதிலளிநீக்கு
  30. பிறகு தேம்ஸ் கரையில் டீக்குளிப்போம்ம்ம்ம்ம்:)//

    என்ன அதிரா காபில குளிக்கரவங்க எல்லாம் வரமாட்டோம்...காபி/டீ குளிப்போம்னு சொல்லிரலாம்...இனி...

    கீதா

    பதிலளிநீக்கு
  31. இன்றைய வார கேள்வி பதிலில் மிகவும் கவர்சிகரமான படம்....அந்த நகம் கடிக்கும் மர்ம மனிதர் தான்!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  32. கீதா ரங்கன்- கோர்த்துவிட்டுடாதீங்க. ஏஞ்சலின் "அனிச்சை" போன்றவர். அதனால் "தேவதையின் கிச்சன்" ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார்.//

    ஹா ஹா ஹா ஹா ...அனிச்சை மலர்?!! பாவம் சீக்கிரம் வந்து வித விதமான ரெசிப்பிஸ் போடுவாங்க பாருங்க...நெல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கேள்வி பதில்கள் வெகு சுவாரஸ்யம்.

    அது சரி கௌ அண்ணா உங்க வீட்டுக்குள் வந்த பூஸார் என்ன பூஸார் என்று பார்க்காமலேயே டாய் என்று சொல்லி விரட்டிவிட்டுட்டீங்களோ?!! ஹா ஹா ஹா அது அதிரடி பூஸாராக இருந்திருக்கப் போகிறார். வரவேற்று பால் கொடுத்து உபசாரம் பண்ணியிருக்க வேண்டாமோ??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. பூஸாருக்கு ஒரே மண்டைக் குடைச்சல்.வித்தியாசங்கள் அப்படினு சொல்லி குழப்பியதால்... ஸ்ரீராமா அல்லது கௌ அண்ணனா என்று பார்க்கவே வந்திருப்பாரோ? ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  35. சகோதரி கீதாரெங்கனின் உயிர் தோழி பூரண உடல் நலம் பெற்று வந்ததற்கு இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள்.
    சகோதரி கீதாவின் தோழி இல்லாமல், வெறிச்சோடிய நிலைமை இன்று முதல் மாறியதற்கு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  36. ///Geetha Sambasivam said...
    கௌதமன் சார், என்னோட கிளவிகள் இடம் பெறாமையால் வெளி நடப்புச் செய்கிறேன். சேச்சே, கேள்விகள்! இந்த அதிரா எழுதறதைப் படிச்சாலே இப்படித் தான் டங்கு வார் அறுந்து போகுது! சே மறுபடி, டங்க் ஸ்லிப்பு ஆயிடுது! :P :P///

    ஆஆஆஆங்ங்ங் இதை மிஸ்சு பண்ணிட்டனே:) இதுபற்றி இப்போ பேசாட்டில் பிறகு இன்னும் ஒரு மாதம் போக கீசாக்கா வந்து ஜொள்ளுவா.. அது ஆரம்பம் முதல்லே மீதான் ஜொள்ளுறேன் அதனால எனக்கு ராயல்ட்டி//ரோயல்ட்டி வேணும் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    அது மைக் கொப்பி வலதாக்கும் ஜொள்ளிட்டேன்.. கிளவியில:)) ஹையோ என்ன இது என் கேய்வியில சே..சே... கேள்வியில ஆங்ங்ன் இப்போ கரீட்டு.. ஆரும் கை வைக்கப்புடா:))

    பதிலளிநீக்கு
  37. ///அது சரி கௌ அண்ணா உங்க வீட்டுக்குள் வந்த பூஸார் என்ன பூஸார் என்று பார்க்காமலேயே டாய் என்று சொல்லி விரட்டிவிட்டுட்டீங்களோ?!! ஹா ஹா ஹா அது அதிரடி பூஸாராக இருந்திருக்கப் போகிறார். வரவேற்று பால் கொடுத்து உபசாரம் பண்ணியிருக்க வேண்டாமோ??!!!

    கீதா//

    விடுங்கோ கீதா:) அது எடியூரப்பா வீட்டுப் பூஸ் என நினைச்சுக் கலைச்சிருப்பார் .. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ..

    பதிலளிநீக்கு
  38. ///தேம்ஸ் கரைக்குப் போய்ச்சேர்ந்தபின்னும், டீ - யில்தான் குளிப்போம் என அடம்பிடிப்போரை என் செய்வது? ஸ்காட்லாண்டுவாழ் முருகா.. முத்துக்குமரா?///

    ஏகாந்தன் அண்ணன்... முத்துக்குமாரோடு:)) வைரவரையும் சேர்த்துக் கூப்பிடுங்கோ:)).. ஞான வைரவா:)) புளியடி வைரவா எலோரையும் காப்பாத்துங்கோ அப்பனே:))

    பதிலளிநீக்கு
  39. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா உங்க வாலைப் பிடிச்சு செக் பண்ண உங்க செக் சொல்லிருக்காங்களாக்கும்!!! இனி நானும் வந்தாச்சு..ஹா ஹா ஹா ஹா

    கீதா///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா .. என் செக் ஜொன்னா இனி வால்ல பிடிச்சு ஆட்டுவேன் என:) சொன்ன அன்று நைட்டே வைரவர்:) பூஸ் வேசத்தில போய் கார்டினில் நிண்டு கத்தி இவ ஓடி கையில கடிச்சாச்சு:)).. ஹா ஹா ஹா உங்களுக்கும் இது தேவையாஆஆஆஆஆஆஆஆஆஆஆ:)) மை வைரவர் இஸ் வோச்சிங் யா:)) ஹையோ வைரவா வைரவேல் தருவேன்:)) என்னை மட்டும் காப்பாத்த்த்த்துங்ங்ங்ங்ங்ங்ங்:))

    பதிலளிநீக்கு
  40. //Thulasidharan V Thillaiakathu said...
    கீதா ரங்கன்- கோர்த்துவிட்டுடாதீங்க. ஏஞ்சலின் "அனிச்சை" போன்றவர். அதனால் "தேவதையின் கிச்சன்" ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார்.//

    ஹா ஹா ஹா ஹா ...அனிச்சை மலர்?!! பாவம் சீக்கிரம் வந்து வித விதமான ரெசிப்பிஸ் போடுவாங்க பாருங்க...நெல்லை...

    கீதா//

    ஓ அனிச்சை பூத்ததும் காணாமல் போயிடுமோ?.... ஹா ஹா ஹா அப்போ தேவதையின் சமையலை இனி அனிச்சைக் கிச்சின் என பெயர் மாற்றம் ஜெய்திடுவோம்ம்ம்ம்ம்ம்:))..

    என்ன கீதா? சீக்கிரம் வந்து விதம் விதமா ரெசிப்பி போடப்போறாவோ?:) மீ எதுக்கிருக்கேன்ன்ன்?:)) விட்டிடுவனோ நான்?:)) ஹா ஹா ஹா கொஞ்சம் இருங்கோ என் அடுத்த போஸ்ட் வரட்டும் அதில் ஒரு கூத்து இருக்கு:)) ..

    இப்போ ஒராள் பண்ட்டேஜ் ஐக் கழட்டி எறிஞ்சிட்டு ஓடி வந்தாலும் வருவா:).. நல்லவேளை இங்கின வொயிஸ் மெசேஜ் போடும் வசதி இல்லை:)).. அது கோட்:) எப்பவுமே அதிரா பக்கம்தேன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  41. அதிரா - தமிழ்ல டி மாதிரித் தெரியலையே. மோப்பக் குழையும் அனிச்சை முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து. கொஞ்சம் கலாய்ச்சதிலேயே அவங்க காணாம்ப் போய்ட்டாங்க.

    பதிலளிநீக்கு
  42. //நெ.த. said...
    அதிரா - தமிழ்ல டி மாதிரித் தெரியலையே. //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அனிச்சைக்கும் டி க்கும் என்னா சம்பந்தம்ம்ம்?:)) அது அன்று பார்த்து நேக்குக் காய்ச்சல் வந்திட்டுதா:) அம்மா ஜொள்ளிட்டா ஸ்கூலுக்குப் போக வேண்டாம் என:)) அதனால் அப்பாட்டு எனக்கு மிஸ் ஆகிடுச்சூஊஊஊஊஊஊஉ அது என் டப்போ?:)).. ஹா ஹா ஹா ஹையோ என் செக் இல்லாதது இன்று எவ்ளோ நல்லதாப் போச்சு:))..

    பதிலளிநீக்கு
  43. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் நல்லதொரு பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  44. கெள அண்ணன்.. ஒரு கேள்வி கேட்டால் அத்தோடு காணாமல் போவோர் பற்றி என்ன நினைக்கிறீங்க? ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  45. பழைய பாடலை விரும்புவோர் எல்லாருக்கும் வயசாகிவிட்டதென்றும்.. புதுப்பாடலைக் கேட்போர்தான் வயதில் குறைந்தவர்கள் எனவும் வலையுலகில் ஒரு மதிப்பீடு வைக்கிறார்களே.. அதாவது வலையுலகில் யாருக்கும் யாரின் உண்மை வயதும் தெரியாது என்பதனால்.. இப்படிச் சில விசயங்களை வைத்து தப்பாக மதிப்பிட்டு விடுவார்கள் என எண்ணி..., சிலர் பழைய பாடல்களை விரும்பினாலும் வெளியே சொல்வதில்லை. என் பக்கத்தில் நான் அதிகம் பழைய தத்துவப் பாடல்கள் போடுவேன்.. அதுக்கு ஒருவர் எனக்குப் பேசினார்.. இப்படிப் போட்டால், நீ வயதான ஒருவர் என எல்லோரும் எண்ணப் போகிறார்கள் என்று.. ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை [[யாரும் எப்படியும் எண்ணட்டும்.. எனக்குப் பிடிச்சதை நான் செய்வேன் என எண்ணும் ரகம் நன்:)]]. இது பற்றி கொஞ்சம் விரிவான பதிலை உங்கள் அனுபவத்திலிருந்து எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  46. யமப் பயலையே சீண்டும் அளவுக்கு என்ன அப்படி ஒரு விரக்தி கேஜிஒய்-சாருக்கு?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!