திங்கள், 7 மே, 2018

'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி



கோஸ் பிட்லே 



 நறுக்கிய கோஸ்.... 



நல்ல கோஸ் வாங்கி பொடிதாக நறுக்கி வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள். ( நான் ஏன் நல்ல என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றால் நான் வீட்டிலிருந்த வாங்கி நான்கு நாட்கள் ஆகி விட்ட நிலையில் இருந்ததை அவசரத்திற்கு பயன்படுத்தினேன். நீங்கள் ப்ரெஷ்ஷாக வாங்கி கொள்ளவும்.)  


குளித்து முடித்து சமர்த்தாக
அமர்ந்திருக்கும்  கோஸ்....




நறுக்கியதை நன்றாக அலம்பி விட்டு ஒரு வாணலியில் கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு, தாளித்த பின் அலம்பிய கோஸைப் போட்டு கொஞ்சம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். 


தண்ணீரிலிருந்து நீச்சலடித்து தப்பிக்கத்தெரியாமல் மூழ்கியிருக்கும் பருப்புகள்....




ஒரு கப் துவரம்பருப்பு, பாதி கய் கடலைப் பருப்பு எடுத்துக் கொண்டு அலம்பி விட்டு கோஸ் நறுக்கும் நேரத்தில் ஊற வைத்துக் கொண்டால், செளகரியமாக இருக்கும். அவ்வாறு  ஊறிய பருப்பை குக்கரில் சாதத்துடன் வைத்து  வேக வைத்துக் கொண்டு விடவும் .

கலரில் நான் எப்படி? சும்மா தகதகவென மின்னுகிறேனா? தானே பெருமிதபட்டுக் கொள்ளும் புளிக்கரைசல்....





ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை  எடுத்து ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.. கோஸ் நன்கு வெந்ததும் அதனுடன் இந்த கரைசலை சேர்க்க வேண்டும். 


நான் மட்டும் இங்கே, என்னுடன் சேரப் போகும் கூட்டணிகள் எங்கே? என அமரத்தலாய் கேட்கும் கோஸ்....






புளி கரைசலை வெந்த கோஸுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு போட்டு, ( முதலில கோஸ் வேகும் போது அதற்கு தகுந்த உப்பு மட்டுந்தான் போட்டோம்)  கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.

நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தாலும், தனிகட்சியா? "என்னவோ ஒன்னும் புரியலை போ" அலுத்துக் கொள்ளும் வெந்தயம் தக்காளி கறிவேப்பிலை...



ஒரு தக்காளியை சுத்தப்படுத்தி அதன் காம்பு பகுதியை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். (இந்த காம்பு பகுதியில் ஏராளமான பாக்டீரியா இருக்கிறது எனவே அதை நீக்கி விடுவது நல்லது. ) கறிவேப்பிலை மூன்று ஆர்க்குகள் அலம்பி வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் சற்று சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மூன்றையும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.




தனியாக அரைபட்டாலும்  நாங்கதான் முதலாக்கும்.... 




புளிக் கரைசலுடன்  சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் கோஸ் கலவையில் இந்த அரைத்த விழுதை சேர்க்கவும். 

வறுக்க ஆஜராகியும் வட்டமேஜை மாநாட்டில் கலந்து பேசிக் கொண்டிருக்கும் பொருட்கள்....



துவரம் பருப்பு, கடலைப்பருப்பு,  உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு  என தலா ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லிவிரை நாலு ஸ்பூன், வத்தல் பத்து ( இது காரத்தைப் பொறுத்து அவரவர் விருப்பம்) என்று எடுத்துக் கொண்டு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த பொருட்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அட, தட்டில் இடமில்லையென்றால், என்னை மறந்து விடுவீர்களா என்ன? நான் இல்லாமலா? என கோபமாய் எட்டிப்
பார்க்கும் தேங்காய்....



அந்த தேங்காய் மூடியில் பாதி துருவி,  அரைக்க வறுத்த மசாலா பொருட்களை ஆறுவதற்காக ஒரு தட்டில் கொட்டிய பின்  அதே வாணலியில் அதையும் லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.


நாங்கள் வாசமாக இருந்தாலும் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கூடிப் பேசி விவாதம் எழுப்பலாமென்றால், வட்ட மேஜையை காணவில்லையே? பெரும் சோகத்தில் விழுது....




புளி கலவையுடன் சேர்ந்து  கொதித்து  வெந்தயம் வாசம்  வந்ததும் வறுத்து வைத்திருக்கும் ஆறிய மசாலா  பொருட்களையும்,  தேங்காயையும் மிக்ஸியில் போட்டு ஒரளவு நைசாக அரைத்துக் கொண்டு  அந்த, விழுதையும் கலந்து கொதிக்க விடவும்.


கடைசியில் நானும் இதில் சேர்ந்தாச்சு. இப்ப திருப்தியா என்ற கடைந்த பருப்பு.....



பத்து நிமிடங்கள் கொதி வந்ததும்  வெந்த பருப்புகளையும் நன்கு மசித்து  அதனுடன்கலந்து கொதித்து சேர்ந்து வரும் போது

  அடுப்பை அணைத்து விடவும். 


ஆயிரம் இன்னல் பட்டு பெருங்காயத்துடன் உங்களுக்காக நான் தயார்...



கடைசியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு உ.. ப தாளித்துக் கொண்டு அதனுடன் பெருங்காயத்தை போட்டு பொரித்து சேர்த்தால் பிட்லே வாசனையாக தயாராகி இருக்கும்.


நாங்கதான் ஒன்னு சேர்ந்துட்டோமே இப்ப நீங்க சாப்பிட தயாரா? ? கோஸ் பிட்லே....







சாதத்தில் நெய் விட்டு இந்த கோஸ் பிட்லே கலந்து சாப்பிட  சுவையாக இருக்கும்.    தோசை சப்பாத்திக்கும்  தொட்டுக் கொள்ளலாம். 

67 கருத்துகள்:

  1. இனிய “திங்க”ற காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. ஹை மீ ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ!! ஹெ ஹெ ஹெ ஹெ...

    கீதாக்கா காபி ஆத்திட்டுருக்காங்க!!! துரை அண்ணா கதவு திறக்க முயற்சி!! ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  6. அட!! கமலா சகோதரியின் ரெசிப்பி....டிடெய்ல்டா இருக்கு...பின்னாடி வாரேன் ருசிக்க....கடமை அழைக்கிறது....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி. சகோதரியின் ரெசிப்பி டிடெய்லா இருக்கு என்ற விமர்சனத்துக்கு நன்றி. கடமையை முடித்து விட்டு ருசித்து விட்டீர்களா? நான்தான் தாமதம். பாராட்டுதலுக்கு நன்றி சகோதரி..

      நீக்கு
  7. கோஸ் பிட்லையைப் போல வர்ணனையும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரரே

      கோஸ் பிட்லையைப் போல வர்ணனையும் அருமை...என்ற கருத்தைப் பார்த்து மனம் மகிழ்ந்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  8. புதுமையான ரிசிப்பியாக இருக்கிற்தே குட் சிக்கிரம் செஞ்சு பார்த்துடுறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரரே

      புதுமையான ரிசிப்பியாக இருக்கிற்தே குட் சிக்கிரம் செஞ்சு பார்த்துட்டேன் என்று நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கும் பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். நன்றி.

      நீக்கு
  9. // பின்னாடி வர்றேன்... கடமை அழைக்கிறது..//

    // கீதா//

    எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  10. அவ்விடத்தில் இன்னும் காஃபி ஆத்திக்கிட்டே இருக்காங்க போல...


    ஆளை இன்னும் காணோம்!...

    பதிலளிநீக்கு
  11. // அவ்விடத்தில் இன்னும் காஃபி ஆத்திக்கிட்டே இருக்காங்க போல... ஆளை இன்னும் காணோம்!... //

    மதியானம்தான் வருவாங்க!

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. Vithavithamaana varnanaiyodu vithyaasamana recipe!! Will try, thanks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி

      விதவிதமான வர்ணனையோடு வித்தியாசமான ரெசிப்பி . என வாழ்த்தி, கருத்திட்டு பாராட்டுதல்களும் தந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  14. காலை வணக்கம்! கோஸில் பிட்லையா? வரேன் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பிட்லேயை ரசிக்க பிறகு வருகிறேன் என கூறியமைக்கும் நன்றி சகோதரி.

      நீக்கு
  15. ஆயிரம் இன்னல்பட்டு "பெரும் காய"த்துடன் தயார்.

    மனவேதனையோடு இரசிக்க வைத்த வார்த்தைகள் சகோ ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரரே

      /மனவேதனையோடு இரசிக்க வைத்த வார்த்தைகள் சகோ ஸூப்பர்./

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், ரசித்ததற்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      நீக்கு
  16. கோசில் கூட பிட்லே யா. ஏகப்பட்ட வேலை சேர்க்கிறதே.
    ரிசல்ட் நன்றாக இருக்கும்.
    செய்து பார்க்கணும். படங்களும் காப்ஷன் களும் சூப்பர்.
    வாழ்த்துகள் மா .கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      கொஞ்சம் வேலைதான். ஆனாலும் அரைத்து விடும் சாம்பார், கூட்டுக்கள் அந்த மாதிரி வேலைகள்தான்.. செய்து பாருங்கள். சுவையாக இருக்கும். தங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி சகோதரி..

      நீக்கு
  17. காலை வணக்கம் 🙏. கோஸில் பிட்லை - வாவ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் என் காலை வணக்கம். இன்று "எங்களி"ல் என் கோஸ் பிட்லே ரெஸிபியை பார்த்ததும், மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். அதை பகிர்ந்தமைக்கு முதலில் சகோதரருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோஸ் பிட்லே ரெஸிபியை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

    கொஞ்சம் வேலைகளை முடித்துக் கொண்டு மறுபடியும் அனைவருக்கும் நன்றி கூற வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.


    பதிலளிநீக்கு
  19. கோச் பிட்லே அருமை.
    செய்முறை சொல்லியவிதம் அருமை.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. கோஸ் பிட்லையா? பிட்லே என்றும் சொல்லாமில்லையா? ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர். எனினும் திருத்தத்திற்கு நன்றி.

      நீக்கு
  21. கோஸ் பிட்லை படங்களுடன் செய்முறை அருமையாக வந்துள்ளது. சாத்த்துக்கு நல்ல காம்பினேஷன்.

    சொல்லியவிதம் அருமை. படங்களுக்கான கமென்ட்ஸ் ஶ்ரீராம் உபயமோ?

    எந்த காய், பழத்தின் காம்புப் பகுதியில் பொதுவா அளவுக்கு அதிகமாக கெமிக்கல், பூச்சிக்கொல்லி இருக்கும். அதனால்தான் அந்தப் பகுதியை நீக்கவேண்டும்

    பாராட்டுகள் கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எந்த காய், பழத்தின் காம்புப் பகுதியில் பொதுவா அளவுக்கு அதிகமாக கெமிக்கல், பூச்சிக்கொல்லி இருக்கும். அதனால்தான் அந்தப் பகுதியை நீக்கவேண்டும்/

      உண்மை.. அனைத்து காய் பழங்களிலும் அப்படித்தான். ஆனால் வெளியிலோ, வேறு இடங்களிலோ சாப்பிடும் போது, தக்காளியை காம்பு பகுதி நீக்காமலேயே உபயோகப்படுத்தி வருவதை பார்த்திருக்கிறேன். அப்படி பார்த்ததின் விளைவாய் இதில் குறிப்பிட்டேன்.

      செய்முறை, படங்கள் அருமை என்ற பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  22. எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திருக்கலாம்...//

    ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா அது காலைல வந்து ஆஜர் வைக்கலைனா அப்புறம்நான் ஆப்ஸென்ட்னு க்ளாஸ்ல ஸ்ரீராம் ரெஜிஸ்டர்ல போட்டுருவார் ஹா ஹா ஹா....அப்புறம்....நாங்க களாஸுக்கு லீவு எல்லாம் போடாம வரணும்னு நினைப்போமாக்கும்...அதுவும் திங்கற க்ளாஸ்...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி

      நீங்க லீவு போடாம வரணும்னு நினைக்கிற நல்ல ஸ்டுடென்ட்..வாழ்த்துகள் சகோ. நான் தினமும் காலை வகுப்பையே கட் செயறவளாக்கும். ஹா. ஹா. ஹா ஹா

      நீக்கு
  23. பதில்கள்
    1. வாங்க சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரெசிபியை ரசித்து ருசித்ததற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  24. வித்தியாசமான பிட்லா. அதாவது அரைத்து விடுவதைச் சொன்னேன் சகோ. தக்காளி வெந்தயம் அரைத்துவிடுவதில்லை...கொத்தமல்லி விரை மற்றும் பாசிப்பருப்பு சேர்த்துச் செய்ததில்லை. பிட்லைக்குப் பொதுவாக எங்கள் வீட்டில் கொத்தமல்லி சேர்க்காமல் சேர்த்தாலும் கொஞ்சமே கொஞ்சம் தூக்கலாக இல்லாமல்...... தேங்காய் வறுத்து அதெல்லாம் அப்படியே தக்காளியும் இல்லாமல்.

    கொத்தமல்லி சேர்த்துச் செய்வதை ரசவாங்கி என்று சொல்வதுண்டு...கத்தரிக்காய் ரசவாங்கி

    உங்கள் குறிப்புகள் வித்தியாசமாக இருக்கிறது. குறித்துக் கொண்டேன் சகோ. செய்து பார்க்கிறேன்...

    ரெசிப்பி சொன்ன விதம் செமையா இருக்கு. அவை எல்லாம் பேசிக் கொள்வது போல சேர்த்திருப்பது மிகவும் ரசித்தேன். ரொம்ப நன்றாகச்சொல்லியுள்ளீர்கள் விரிவாக படங்களுடன்

    மிக்க நன்றி சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ..

      கத்திரிக்காய் ரசவாங்கியில் தங்கள் செய்முறையை தெரிந்து கொண்டேன். நன்றி.

      கத்திரிக்காய், வெண்டை, சேனை முதலியவற்றில் கூட இந்த மாதிரி பிட்லைகள் செய்யலாம். தக்காளி சேர்த்தால் நாம் எடுக்கும் புளியின் அளவு போதவில்லையென்றால் சற்று சமன்படுத்தும். வெந்தயம் வறுத்து சேர்த்தால் வாசனையாக இருக்கும். வேறு ஒன்றுமில்லை.

      செய்முறைகளையும், படங்களையும் பாராட்டி சொல்லியிருப்பது கண்டு மகிழ்வடைந்தேன். ரசித்து பாராட்டியமைக்கு மிக மிக நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  25. விவரித்த விதமும் சுவையாக இருந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /விவரித்த விதமும் சுவையாக இருந்தது/

      தங்கள் மனம் நிறைந்த பாராட்டுதலுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நீக்கு
  26. கமலா சகோ வாங்க வாங்க நீங்களும் எபி கிச்சன்ல ஜாயின் பண்ணியாச்சா!! சூப்பர்...வாங்க வாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி

      தங்கள் மீள் வருகைகளுக்கு மிக மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /கமலா சகோ வாங்க வாங்க நீங்களும் எபி கிச்சன்ல ஜாயின் பண்ணியாச்சா!! சூப்பர்...வாங்க வாங்க/

      ஆமாம் சகோ.தங்கள் அனைவரின் அன்புகளுக்கும் கட்டுப்பட்டு இன்று முதல் எபி கிச்சனில் இணைந்து விட்டேன்.

      தங்களனைவருடனும் என்னையும் கிச்சனுக்குள் இணைத்து என் சுமாரான சமையல் கலைத்திறமையை அறிமுகப் படுத்திய சகோதரர் ஸ்ரீ ராம் அவர்களுக்கும், உங்களனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  27. //படங்களுக்கான கமென்ட்ஸ் ஶ்ரீராம் உபயமோ?//

    இல்லை, நெல்லை.. அவர்களே எழுதியதுதான்.

    பதிலளிநீக்கு
  28. ஆவ்வ்வ்வ் இன்று கமலா சிஸ்டரின் “கன்னி” ரெசிப்பியோ?:).. ஆரம்பமே அசத்தலான படங்களோடு ஒரு முட்டைக் கோவா ரெசிப்பி:). சூப்பரா இருக்கு.. ஆனா கொஞ்சம் வேலை அதிகம் சொல்லிட்டா:))..

    கன நாளைக்குப் பிறகு... இண்டைக்கு எப்பூடியாவது காலை வச்சிடோணும் எனக் கங்கணம் கட்டினேனே:)).. லெக்ஸ் சு எங்கின வைக்கிறது காண்ட்ஸ்சூ எங்கின வைக்கிறது எனப் புரியுதில்லை:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      வாங்க வாங்க நலமா? உங்களைத்தான் காணோமே என்று பல நாட்களாய் தேடிக் கொண்டிருக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /ஆவ்வ்வ்வ் இன்று கமலா சிஸ்டரின் “கன்னி” ரெசிப்பியோ?:).. ஆரம்பமே அசத்தலான படங்களோடு ஒரு முட்டைக் கோவா ரெசிப்பி:). சூப்பரா இருக்கு.. ஆனா கொஞ்சம் வேலை அதிகம் சொல்லிட்டா:)/

      ஆம் சகோதரி. உங்களைவரின் ஊக்குவித்தலுடன், எ.பி கிச்சனில் என் முதல் முயற்சி. செய்முறையை பார்த்து கஸ்டமென்று நினைக்கிறீர்களா? இதை எளிதாக செய்து விடலாம்.

      தங்கள் பாராட்டுகளுக்கு என் மன மகிழ்வோடு மனம் நிறைந்த நன்றிகளும்.

      நீக்கு
  29. வித்தியாசமான ஒரு ரெசிப்பி. நாங்க எப்பவும் கோவா வகைகளுக்கு தேசிக்காய்தான் சேர்ப்போம், பழப்புளி சேர்ப்பதில்லை.. அது இங்கு நீங்க பழப்புளி சேர்த்திருப்பது புதுமை. முதல் ரெசிப்பிக்கு வாழ்த்துக்கள்.. தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நானும் கோஸ் பொடித்துவல், கூட்டு என புளி சேர்க்காமல் செய்வதுதான் வழக்கம். ஒரு வித்தியாசதிற்காக இந்த மாதிரி அடிக்கடி செய்வேன். அதையே பதிவாக்கி எ. பி கிச்சனுக்கு அனுப்பினேன். அதை வெளியிட்ட சகோதரருக்கு நன்றிகள்.

      தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றிகள்.

      நீக்கு
  30. //படங்களுக்கான கமென்ட்ஸ் ஶ்ரீராம் உபயமோ?// - ஸ்ரீராம் - இல்லை, நெல்லை.. அவர்களே எழுதியதுதான்.

    கமெண்டுகள் மிக அருமை. பாராட்டுகள் கமலா ஹரிஹரன். ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரரே

      கமெணடுகள நான் எழுதியவைதான் என தெளிவுபடுத்திய ஸ்ரீராம் சகோதரருக்கு நன்றிகள்.

      மீள் வருகை தந்து அவையெல்லாம் நன்றாக இருப்பதாக ரசித்துப்பாராட்டிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  31. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/

    பதிலளிநீக்கு

  32. கோஸ் பிட்லே! பேரே சுவாரஸ்யம். ஹர்ஷா போக்லே என்பதுபோல் காதில் விழுந்தது!

    //படங்களுக்கான கமென்ட்ஸ் ஶ்ரீராம் உபயமோ?/

    யாரு எதை எழுதினாலும், க்ரெடிட் ஸ்ரீராமுக்கே போகுமாறு ப்ரொக்ராம் செய்யப்பட்டுள்ளதோ? எல்லாத் திட்டும் மோதிக்கே என்பது போல !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் சுவாரஸ்யமான பெயர் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /யாரு எதை எழுதினாலும், க்ரெடிட் ஸ்ரீராமுக்கே போகுமாறு ப்ரொக்ராம் செய்யப்பட்டுள்ளதோ? எல்லாத் திட்டும் மோதிக்கே என்பது போல !/

      எல்லா புகழும் ஒருவருக்கே..
      உண்மையில் சொல்லப்போனால், இன்றைய பதிவின் விளைவால், அவரால்தான் எனக்கு இத்தனை பாராட்டுக்களும்..

      பாராட்டுக்கு நன்றிகள் சகோதரரே.

      நீக்கு
    2. ////காந்தன் Aekaanthan !May 7, 2018 at 3:56 PM

      கோஸ் பிட்லே! பேரே சுவாரஸ்யம். ஹர்ஷா போக்லே என்பதுபோல் காதில் விழுந்தது!///

      என் காதில் ஆஷா போஸ்லி:) என விழுந்துதே:)

      நீக்கு
  33. நான் கோஸில் மிளகூட்டல் செய்திருக்கிறேன், பிட்லை செய்ததில்லை. முயற்சி செய்கிறேன். படங்களும், கேப்ஷன்களும் பிரமாதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி

      தாங்கள் மீள் வருகை தந்து சொல்லிய விதத்திற்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி.

      /நான் கோஸில் மிளகூட்டல் செய்திருக்கிறேன், பிட்லை செய்ததில்லை. முயற்சி செய்கிறேன். படங்களும், கேப்ஷன்களும் பிரமாதம்/

      கோஸ் மிளகூட்டலும் மிகவும் நன்றாயிருக்கும். பாசிப்பருப்புடன் சேர்த்து செய்திருக்கிறேன். தாங்களும் பிட்லே செய்து பார்ப்பதாக கூறியதற்கு மகிழ்ச்சி.

      தங்கள் பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  34. தண்ணி பஞ்ச காலத்தில் இங்க மனுசாளே குளிக்குறதில்லை. உங்க வீட்டில் கோஸ்லாம் குளிக்குதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      /தண்ணி பஞ்ச காலத்தில் இங்க மனுசாளே குளிக்குறதில்லை. உங்க வீட்டில் கோஸ்லாம் குளிக்குதே/

      ஹா.ஹா. ஹா. ஹா. முதலிலேயே இது தோணியிருந்தால், "நீங்ககெல்லாம் குளிக்காட்டியும் நாங்க எப்படியாச்சும் குளிச்சிடுவோமே" என கோஸ்ஸை சொல்ல வச்சுருப்பேனே..

      சும்மா ஜோக்காகத்தான் சகோதரி தவறாக நினைக்க வேண்டாம்.
      மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  35. ஸாதாரமமாக கோஸில் பொரித்த குழம்பு, கூட்டு,வகைகள் செய்வதுடன் ஸரி. புளிசேர்த்துச் செய்வதில்லை. அழகாக புளி, வெந்தயப்பொடி எல்லாம் சேர்த்து, அரைத்துவிட்டு,அழகாக அவைகளையும் கதா பாத்திரங்களாகப் பேசச் செய்து எழுதினதை வரவேற்கிறேன். பாராட்டுகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /அழகாக புளி, வெந்தயப்பொடி எல்லாம் சேர்த்து, அரைத்துவிட்டு,அழகாக அவைகளையும் கதா பாத்திரங்களாகப் பேசச் செய்து எழுதினதை வரவேற்கிறேன். பாராட்டுகள் அன்புடன்/

      தாங்கள் கூறுவது போல கோஸில் செய்திருக்கிறேன். ஒரு வித்தியாசத்திற்காக இந்த மாதிரி செய்தேன்..

      தங்கள் அன்பான பாராட்டுக்கள் என்னை மகிழ்ச்சியடைய செய்கின்றன. தட்ட்டிக்கொடுத்து ஊக்கமிகு வார்த்தைகளைக்கூறி, பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  36. மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மிகவும் நன்று எனப் பாராட்டியமைக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  37. ?/கொத்தமல்லி சேர்த்துச் செய்வதை ரசவாங்கி என்று சொல்வதுண்டு...கத்தரிக்காய் ரசவாங்கி // அதே, அதே.

    இம்மாதிரிச் செய்வதை நாங்க கூட்டுக் குழம்பு என்போம். முட்டைக்கோஸீல் செய்ததில்லை. அவரை, கொத்தவரை, கத்திரிக்காய், சேனைக்கிழங்கு,வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றீல் செய்வோம். வர்ணனைகள் அபாரம். நல்ல வளமான கற்பனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
      நிறைய தகவல்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன காய்கறிகளில் நானும் செய்திருக்கிறேன். ஒரு வித்தியாசத்திற்காக கோஸிலும் விதவிதமாய்..

      தங்கள் பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  38. பதில்கள்
    1. வாங்க சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் அருமை எனும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  39. கோஸ் பிட்லை புதுமையான ரெசிபி. சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!