1) சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் கை முறுக்கு சுற்றும் வேலை செய்து, வாரம், 200 முதல், 250 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இதன் மூலம் கல்லுாரி படிப்புக்கான செலவுகளை சமாளிக்கிறேன்.
முதலாம் ஆண்டு கட்டணம் இலவசம் என்பதால், இந்த ஆண்டு சிரமமில்லை. அடுத்த ஆண்டு முதல், 23 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். - சேலம் பூங்கொடி.
2) லினி - தெய்வம் இனி...
3) அனாதரட்சகர்...
4) இதன்படி, ஏரியிலிருந்த சீமைக் கருவேல மரங்கள் அனைத்தும், வேருடன் அகற்றப்பட்டன. நம் கையே நமக்குதவி. பெரம்பலுார் அருகே, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, ஏரியை சீரமைத்துள்ளனர்.
3) அனாதரட்சகர்...
4) இதன்படி, ஏரியிலிருந்த சீமைக் கருவேல மரங்கள் அனைத்தும், வேருடன் அகற்றப்பட்டன. நம் கையே நமக்குதவி. பெரம்பலுார் அருகே, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, ஏரியை சீரமைத்துள்ளனர்.
வாழ்க..
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…
பதிலளிநீக்குகீதா
அதானே
பதிலளிநீக்குகொஞ்சம் அசந்தால் போதும்! பதிவு வந்துடும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஆ! ஒரு சிறிய துளியில் 2 வது ஹா ஹா ஹா ஹ
பதிலளிநீக்குஇன்று எபி திறக்க வர முடிந்தது
கீதா
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாபெரும் சதி நடந்திருக்கு. விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். இல்லை எனில் போராட்டம், கடை அடைப்பு!
பதிலளிநீக்கு//விசாரணை கமிஷன் வேண்டும்.. //
நீக்குஆகா!...
விசாரணைக்கு கமிஷன் வேண்டும்...
உங்க கடையடைப்புனால அவருக்குத்தான் சாப்பாட்டுப் பிரச்சனை கீசா மேடம்
நீக்குஅன்பின் ஸ்ரீராம் , கீதாS/கீதாR மற்றும் அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா நான் ரெஃப்ரெஷ் பண்ணிக் கொண்டே இருந்தேன்.....இடையில் வாட்சப்பில் கொஞ்சம் இத்தூனூண்டு கவனம் செலுத்திய போது 6 என்று காட்டியதும் ஆஹா யாரெல்லாம் வந்துருக்கப் போறாங்களோனு படக்கென்று இங்கு ஓடி வந்துவிட்டேன்...ஹா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
நர்ஸ் லினி பத்திப்படிச்சேன். மற்றவை புதுசு. அழகாய்க் கை முறுக்குச் சுற்றி இருக்கும் இளம்பெண் நல்லபடி படித்து முன்னேற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபெரம்பலூர் மக்கள் வாழ்க...
பதிலளிநீக்குஸ்ரீராம் சுவர் ஏறிக் கொண்டு இருக்கார்...ஹூம் ஸ்ரீராம் எபி எல்லோருக்கும் பாராசூட் வழங்கலாம்..உங்களுக்கும் ஒன்னு அனுப்பி வைக்கறேன்....ஹா ஹா ஹா ஆஹா ஆனா உங்களுக்குத் தலை சுத்துமே உயரம் போனால்...அதான் யோசனையா கீது
பதிலளிநீக்குகீதா
அனைவருக்கும் இனிய சனி வணக்கம்! (அதாவது சனிக்கிழமை வணக்கம்!)
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா சென்னை
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார், கீதா ரெங்கன், கீதா அக்கா...
பதிலளிநீக்குஉங்கள் தளங்களில் வரும் பின்னூட்டங்கள் உங்கள் மெயில் பாக்ஸுக்கு வருகின்றனவா? எனக்கு ஊ....ஹூம்!
என்ன கீதாக்கா... உங்க ஊர் சமயபுரம் மச்சினி... ச்சே.. மசினி நேத்து கலக்கு கலக்குன்னு கலக்கிடுச்சு!
பதிலளிநீக்கு// //விசாரணை கமிஷன் வேண்டும்.. //
பதிலளிநீக்குஆகா!...
விசாரணைக்கு கமிஷன் வேண்டும்... //
இது பாயிண்ட்டு... இது மேட்டரு!!!
வாங்க செல்லப்பா ஸார்.. நல்வரவு.
பதிலளிநீக்குதிருமதி லினி அவர்களை சிறப்பிக்க வார்த்தைகள் ஏது...
பதிலளிநீக்குஅவர்தம் குடும்பத்திற்கு எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக...
ஶ்ரீராம், நானே இன்னிக்குப் புலம்பலுக்கு இந்தப் பின்னூட்டங்கள் மெயிலுக்கு வராததைப் பத்திச் சொல்லலாமானு யோசிச்சேன். உங்களுக்கும் வரலைனு தெரிஞ்சதும் ஹையா ஜாலி! ஜாலியோ ஜாலி! அதைப் பத்திக் கவலைப்படப் போறதில்லை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்! :))))
பதிலளிநீக்குஎன்னது சமயபுரத்துல மச்சினியா!..
பதிலளிநீக்குஇது அந்த மசினிக்கு தெரியுமா?...
// உங்களுக்கும் வரலைனு தெரிஞ்சதும் ஹையா ஜாலி! ஜாலியோ ஜாலி! அதைப் பத்திக் கவலைப்படப் போறதில்லை. //
பதிலளிநீக்குகீதாக்கா.... அப்பா..........டி... உங்களுக்கும் வரலையா? துளசி டீச்சரும் புலம்பி இருக்காங்க... அவங்களுக்கும் வரல்லையாம். செட்டிங்ஸ்ல எல்லாம் சரியாதான் இருக்கு. ஆனாலும்.. மற்ற பதிவர்கள் இன்னும் கவனிக்காம இருக்காங்க போல!
DD.... DD... எங்கே நம் DD... உடனே மேடைக்கு வந்து சரி செய்ய யோசனை சொல்லவும்!
// இது அந்த மசினிக்கு தெரியுமா?... //
பதிலளிநீக்குதெரிந்ததால்தான் "ஆடி" விட்டதோ!
// சமயபுரத்து மசினி//
பதிலளிநீக்குஇப்போ புதுசு புதுசா ஆளுங்க வந்து ஏதேதோ சொல்றாங்க....
சமயபுரத்து மசினிக்கு மன அழுத்தத்தினால தான் மதம் பிடிச்சதாம்...
அதுமேல அலங்கார வஸ்திரம் போடக்கூடாதாம்....
சமூக ஆர்வலர்... சொல்றாங்களாம்...
ஸ்ரீராம் நீங்க சமூக ஆர்வலர் இல்லையா...
நம்ம கோமதி அரசு, கீதா/ கீதா, அப்பாவி அதிரா இவங்கள்ளாம் சமூக ஆர்வலர் இல்லையா....
யானையை திருக்கோயில் நிகழ்வுகளில் இருந்து அப்புறப்படுத்துவற்கு யாரோ காய் நகர்த்துகிறார்கள்.....
அதுக்கு ஏத்த மாதிரி
நம்ம அர நிலயத் தொறையும்!?....
சீரங்கம் பெரிய ரங்குவை அந்தக் காலத்துல பார்க்க வந்த ராஜாக்களோட கஜங்கள் போட்ட சத்தம் பெருங்கடலை விட பெருசா இருந்துச்சுன்னு ஆழ்வார் சொல்றார்....
கருவூராரும் இந்த மாதிரி
தஞ்சாவூர்.. ல இருந்ததா சொல்றார்..
இன்னமும் தஞ்சாவூர் அரண்மனையில யானை கட்டுற கொட்டடிகளை பார்க்கலாம்...
அழிச்சதும் ஆக்ரமிப்பும் போக மிச்சம்...
தஞ்சாவூர் அரண்மனையில 10/15 யானைகள பார்த்ததா எங்க தாத்தா சொல்லியிருக்கார்...
அப்படி இருந்த தமிழ்நாட்டு கோயில்..ல ஒத்தை யானய மேய்க்க....
மசினியோட பேச்சு துணைக்கு
ஒரு மச்சான் வேணாமா!...
திருச்செந்தூர்.. ல
இந்த மாதிரி அவனும் அவளுமா ரெண்டு பேர் இருந்தாங்க...
ஏதோ கஷ்ட காலம்....
ரெண்டுல ஒன்னு போய்ச் சேந்துடுத்து...
தஞ்சாவூர் பெரிய கோயில்லயும் இப்படி நடந்துருக்கு.. ஒங்களுக்குத் தெரியுமா!..
துரை ஸார்..
பதிலளிநீக்குகோவில்களில் யானையைப் பார்ப்பது சந்தோஷம்தான். நாம் அவற்றை வினாயயகரின் அம்சமாகப் பார்க்கிறோம். யானையைத் திருக்கோவில் நிகழ்வுகளிலிருந்து அப்புறப்படுத்த நிகழும் முயற்சிகள் வேறெதோ முயற்சிகளின் ஆரம்பமாக இருக்கலாம். அவை தடுக்கப் படவேண்டியவையே. அறநிலையத்துறை கைகளிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.. அவை கோவில் நிலங்களுக்கு வாங்கும் வாடகை அநியாயம். போல வேறு அம்சங்களும் உண்டு.
பெண்யானைகளுக்கு மதம் பிடிக்காது என்கிறார்கள். ஆனால் யானைகளை அவைகளின் இயல்பு வாழ்க்கையிலிருந்து மாற்றி மனிதன் கொடுமைப் படுத்துகிறானோ என்று எனக்குத் தோன்றும். அவ்வளவு பெரிய உருவத்தை அடிமையாக்கி பணம் சம்பாதிக்கிறான். யானைகள் என்று இல்லை எந்த ஒரு வனவிலங்களும் அப்படிதான். அவை வாழும் இடங்களை மனிதன் அழித்து அவைகளின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான்.
// அதுமேல அலங்கார வஸ்திரம் போடக்கூடாதாம்....//
நான் இன்னும் இந்தச் செய்தி படிக்கவில்லை. தஞ்சாவூர் கோவில் செய்தி கேள்விப்பட்ட நினைவு இல்லை. கேரள யானைகளின் அட்டகாசம் பார்த்திருக்கிறேன். பிரிட்டிஷ்காரனிடமிருந்து விடுதலை அடைய போராடிய இந்தியர்களை பார்ப்பது போல மனிதனிடமிருந்து விடுதலை அடைய நடக்கும் யானைகளின் போராட்டமாக எனக்குத் தெரியும்!
// மசினியோட பேச்சு துணைக்கு
ஒரு மச்சான் வேணாமா!...//
ஆம்.. மச்சானைப் பார்த்தீங்களா என்று அது ஜானகி குரலில் பாடியது நம் காதில் விழவில்லை! தஞ்சாவூர் சம்பவம் என்ன?
காலை வணக்கம். இன்னும் முழுமையாக படிக்கவில்லை. உருட்டியதில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட செய்தி மனதை கவர்கிறது. வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குலினியைப்பற்றி ஏற்கனவே படித்தேன்.
காலை வேளையில் ஏன் மசினியைப்பற்றி டிஸ்கஷன்?. நேற்று அது அந்த பாகனை சுருனையைப்போல பிரட்டியதை பார்த்த கிலி இன்னும் தீரவில்லை.
பதிலளிநீக்கு// நேற்று அது அந்த பாகனை சுருனையைப்போல பிரட்டியதை//
பதிலளிநீக்குஆமாம். முதலில் மறைக்காமல் காட்டியபோதே நானும் பார்த்தேன். கேரள யானை அட்டகாசங்கள் இன்னும் பயங்கரம் பானு அக்கா.
அரசை எதிர்பாராமல் எல்லா கிராம மக்களும் இப்படி இறங்கவேண்டும்.
பதிலளிநீக்குகடைசிச் செய்தி தவிர மற்றவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன். அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
பதிலளிநீக்குஸ்ரீராம் யானை பற்றிய உங்கள் கருத்திற்கு ஹைஃபைவ்! அதே அதே ...
பதிலளிநீக்கு//பெண்யானைகளுக்கு மதம் பிடிக்காது என்கிறார்கள். ஆனால் யானைகளை அவைகளின் இயல்பு வாழ்க்கையிலிருந்து மாற்றி மனிதன் கொடுமைப் படுத்துகிறானோ என்று எனக்குத் தோன்றும். //
ஆமாம் ஸ்ரீராம், அவற்றிற்கு அதிக சத்தம் கூடாது. அவை நாய்களைப் போல அல்ல. அவை காட்டு விலங்குகள். அவற்றை நாட்டிற்குள் கொண்டு வந்து நம் இஷ்டத்திற்கு அவற்றைப் பழக்கும் போது மன அழுத்தம் உண்டாகிறது. அந்த மன அழுத்தம் பில்டப் பாகி பில்டப் பாகி ஒரு நாள் வெடிக்கிறது. மனிதனுக்கும் இப்படித்தானே!! அவற்றின் மூளை அமைப்பு அப்படி. அனிமல் சைக்காலஜி என்று பாடமே இருக்கு.
//கேரள யானைகளின் அட்டகாசம் பார்த்திருக்கிறேன். பிரிட்டிஷ்காரனிடமிருந்து விடுதலை அடைய போராடிய இந்தியர்களை பார்ப்பது போல மனிதனிடமிருந்து விடுதலை அடைய நடக்கும் யானைகளின் போராட்டமாக எனக்குத் தெரியும்!//
மிக மிக ரசித்த வரிகள் ஸ்ரீராம். மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதற்குத்தான் வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என்று ஒவ்வொன்றின் குணாதிசயங்களை வைத்துப் பிரித்திருக்கிறார்கள். பறவைகளுக்கும் பொருந்தும்.
கீதா
துரை அண்ணா ஆனைகளைக் கோயிலில் வளர்த்தால் முறையாகப் பாதுகாக்க வேண்டுமே. அவற்றிற்கும் நம்மைப் போல உணர்வுகள் உண்டுதானே. அதுவும் யானைகள் குடும்பமாக வாழ்பவை ஆயிற்றே. ஒரு வேளை மசினிக்கு (ஹை பெயர் வித்தியாசமா இருக்கே!!!) "அந்த" நாட்களோ? நீங்கள் சொல்லியிருப்பது போல் அதற்கு ஆண் துணை வேண்டியிருந்ததோ என்னமோ? பாகன் மார்கள் யானையின் சைக்காலஜி புரியாமல் ஹூம் என்னவோ போங்க....எனக்கென்னவோ பாவம் அவை என்றே தோன்றுகிறது. அதற்கு மதம் பிடித்தால் பலரும் ஆனை மோசம் என்கிறார்கள் நம்மில் எத்தனை பேர் மதம் பிடித்து அலைகிறார்கள்!!
பதிலளிநீக்குகீதா
சேலம் பூங்கொடி க்கு வாழ்த்துகள்! கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கூட இதனையே ஒரு சுய குடிசைத் தொழிலாகத் தொடங்கலாம்...உழைக்கும் கரங்கள் உதவும் கரங்களாகட்டும்! குடிசைத் தொழிலாகத் தொடங்கினால் இன்னும் சில பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே...
பதிலளிநீக்குலினி மனம் வேதனையானது. பாவம் தன் நலம் நோக்காமல் உதவியிருக்கிறார்.
ஆமாம் யாரும் அனாதை இல்லை. அவர் கடைசியில் சொல்லியிருப்பது போல் இன்னொரு மனிதன் இருக்கும் போது யாரும் அனாதை இல்லை..மேலும் இச்சேவை தொடரட்டும்...வாழ்த்துவோம்.
முதலில் அந்தனிலத்தைப் பார்த்ததும் ஏதோ வயல் வெளி என்று நினைத்துவிட்டேன் அப்புறம் தான் தெரிந்தது ஏரி என்று. இப்படி எல்லா கிராமங்களும் தங்கள் கிராமங்களை உயர்த்த முன்வந்தால் கிராம ராஜ்ஜியம் செழிக்கும்!
எல்லா செய்தியும் நல்ல செய்திகள்
கீதா
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாபெரும் சதி நடந்திருக்கு. விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். இல்லை எனில் போராட்டம், கடை அடைப்பு!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா கீதாக்கா மார்க்கெட்டுலருந்து மாமா நீங்க சொல்லாத காயெல்லாம் வாங்கிட்டு வந்துட்டார்னா!! ரெண்டு ரெண்டா வாங்கிட்டார்னா ஹா ஹா இல்லை எபிக்குள்ள வரும் போதே பதிவு வந்துருச்சுனா...அப்ப வீட்டுல இன்னிக்கு கிச்சன் அடைப்பா!!! ஹா ஹா ஹா....
கீதா
// உங்களுக்கும் வரலைனு தெரிஞ்சதும் ஹையா ஜாலி! ஜாலியோ ஜாலி! அதைப் பத்திக் கவலைப்படப் போறதில்லை. //
பதிலளிநீக்குஹை ஹை ஹை டிங்கிரி டிங்காலே எங்களுக்கு கமென்ட் வந்துருக்கே!! ஹே ஹே ஹே ஹே!! (கீதா வடிவேலு ஸ்டைலில்....இது உனக்குத் தேவையா...நாளைக்கே பாரு உனக்கு கமென்ட் பாக்ஸ்குள்ள வராது...!!!)
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசெவிலியர் வினியின் முடிவு சோகமானது.
அவர் குடும்பம் நலமே வாழ பிராத்திப்போமாக.... ஏரியை தாங்களே சீரமைத்த கிராம மக்களும் மற்றும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இவர்களை பற்றி அறிந்து கொள்ள தாங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா சகோ உங்கள் உடல் நலம் தேவலாமா? தற்போது எப்படி உள்ளீர்கள்?
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரி
நீக்குஎன் உடல் நிலையை பற்றி விசாரித்தமைக்கு மிகவும் நன்றிகள். இந்த தடவை ஏதோ வைரஸ் காய்ச்சல் போலும். எங்கள் வீட்டில் முதலில் குழந்தைகளுக்குத்தான் மாறி மாறி அதிகமாக இருந்தது. பிறகு பெரியவர்களுக்கு என்று வந்து விட்டது. இப்போது அனைவருக்கும் தற்சமயம் குணமாகி வருகிறது. உடம்பு கைகால் வலி என அது மட்டும் விடாமல் உலா வருகிறது நானும் என் தளத்தில் பதிவுகள் இடுவது. அனைவரின் பதிவுக்கு சென்று படித்து கருத்துக்கள் இடுவது என்று அதை விரட்டியபடி இருக்கிறேன். தாங்கள் அன்புடன் விசாரித்தது தெம்பாக உள்ளது. நன்றி.
சமயபுரம் ஆனை விஷயம் செய்தியாய்த் தான் எனக்குத் தெரியும். வீடியோவெல்லாம் நல்லவேளையாப் பார்க்கலை. மற்றபடி கோயில்களில் யானைகளை வளர்ப்பதை இப்போதெல்லாம் வனவிலங்கு ஆர்வலர்கள் தடுக்கிறாங்க! :( இதைப்பத்திச் சொல்லப் போனா ஒரு பெரிய புராணமே சொல்லணும்! :(
பதிலளிநீக்கு@கமலா ஹரிஹரன், உடல்நலம் பெற்றமைக்கு வாழ்த்துகள், பிரார்த்தனைகள். விரைவில் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலம் பெறப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி
நீக்குதங்கள் பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும், எங்கள் அனைவரின் மனம் நிறைந்த நன்றிகளும்.
தங்கள் ஆசிகளுடன் அனைத்தும் நலமேயாகட்டும். மிக்க நன்றி.
கமலா ஹரிஹரன் சீக்கிரம் குணமடையணும்.
பதிலளிநீக்குமசினியோ வேற யானையோ
ஐந்தறிவு உயிர்கள், ஆறறிவு மனிதர்களுக்கு ஈடு கொடுக்கின்றன.
கூட்டமாக இருந்த வரை அவைகளின் குணம் நன்றாகத்தான்
இருக்கிறது.
இந்தக்கால மனிதர்களுக்குத் தான் மதம் பிடிக்கிறது என்றால்,அதன் விளைவு கூட இருக்கும் உயிர்களையும் பீடிக்கிறது போல.
எனக்கு த்ரிசூர் பூர விழாவைப் பார்க்கும் போதேல்லாம் மனம் கலங்கும்.
என்ன வழியோ .யாரையும் நொந்து பயனில்லை.
ஒரு அம்மா, நர்ஸ் ஆக இருந்த ஒரே காரணத்தால் உயிர் இழந்திருக்கிறார்.
பதிலளிநீக்குஒரு நோய் என்று வந்தால் எல்லோரும் சுதாரித்துக் கொள்வதற்குள்
பல உயிர்கள் பலி.
மருத்துவத்துறையின் இயலாமை.
அங்கு மட்டும் இல்லை. இங்கேயும் தங்களைப் பார்த்துக்கொள்ளும் செவிலியர்களை நான் நிறையப் பார்க்கிறேன்.
பிறகு தான் நோயாளிகள்.
அந்த முறை நம் மனிதர்களிடம் வர நாள் பிடிக்குமோ.
யாரும் அனாதை இல்லை பதிவும்,
பதிலளிநீக்குமுறுக்கு சுற்றும் பெண்ணும் என்றும் நலமோடு முன்னேறணும்.
அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குகைஎடுத்து வணங்க வேண்டும்.
நர்ஸ் செய்தி கலங்க வைத்து விட்டது.
அவர் விருப்பம் போல் குழந்தைகளை கணவர் பத்திரமாய் உடன் அழைத்து சென்று வளர்க்கட்டும்.
அனைத்து விஷ காய்ச்சலுக்கும் பவளமல்லி இலை மருந்தாம். இன்று வாட்சப் செய்தி வந்தது.
பதிலளிநீக்கு5 இலைகளை கிள்ளிப் போட்டு இரண்டு டம்பளார் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை டம்ளாராக ஆணவுடன் மிளகு, பொடித்து போட்டு, கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் காய்ச்சல், சளி குணம் ஆகி விடுமாம்.
இயற்கை ஆர்வலர் லிஸ்டில் என் பெயரையும் குறிப்பிட்டதற்கு சகோ துரைசெல்வராஜூ அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇன்று ஒரு வாட்ஸப் செய்தி பழமுதிர் சோலை குரங்க்குகளுக்கு பழம் , மற்றும் உணவு பொருட்களை கொடுக்க கூடாது என்றும் அவை பாதையோரம் பிச்சை வாங்குவது போல் அமர்ந்து வாங்கும் நிலைக்கு தள்ளபட்டு விட்டது. உணவு தேடி சாப்பிடும் பழக்கம் குறைந்து விட்டது என்கிறார்கள்.
ஸ்ரீரங்கம், சமயபுரம் செய்தி இப்போது வேறு எதையோ சொல்வதாய் வதந்தி.
பதிலளிநீக்குயானை, யானை பாகன் இருவரும் பாவம்.
பதிலளிநீக்குயானை பாகன் அவர் யானையை அடித்து இருக்க கூடாது. நட்பாய் இருந்து இருக்கலாம்.
பொழுது விடிந்தது..
பதிலளிநீக்குஇன்னும் ஒருத்தரையும் காணோம்!..
//இன்னும் ஒருத்தரையும் காணோம்!..// அதை ஏன் கேட்கறீங்க? நாலு மணிக்கு எழுந்துட்டு மணியைப் பார்த்து இப்போவே எதுக்கு எழுந்துக்கணும், என்ன செய்யறதுனு படுத்தால் திரும்ப எழுந்துக்க ஐந்தே கால் மணி! :) நம்ம ரங்க்ஸும் நல்லாக் குறட்டை! காஃபிக் கடமையே ஆறு மணிக்குத் தான் ஆச்சு. கஞ்சிக்கடமையை முடிச்சுட்டு இப்போத் தான் வந்தேன். :))))
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு