புதன், 27 ஜூன், 2018

கேட்டுப்பார், கேட்டுப்பார்! ஓபசோஉகபமி புதன்


      
இன்றைய பதிவில் மஞ்சள் சீனியரும், நீலவண்ணக் கண்ணனும், முக்கிய காரணங்களுக்காக பிசியாக உள்ளதால், எப்பவும் பதில் சொல்லும் பச்சை மண்ணும், இதுவரை இங்கே தலை காட்டாமல் இருந்த சிவப்பு எழுத்து ஜூனியரும் பதில் அளித்துள்ளனர். 
    
அதிரா :

அந்தப்பூஸூஊஊஊ மலையாளமா பேசுது?

ப: அது மழலையாளம் !  

இந்த வாரம் நீங்கள் பார்த்த அழகான ஒன்று ?//
கெள அண்ணன் தன் வைஃப் ஐச் சொல்லலே அவ்வ்வ்வ்வ்வ் 

ப: இந்த வாரம் பார்த்தது என்றுதானே கேள்வி? எப்பவும் பாக்கற பியூட்டி என்றா கேட்டார்கள்?

எப்பவாவது.. எந்தப் படமாவது பார்த்து நெஞ்சடைத்து கண்கலங்கியதுண்டோ? அது எந்தபடம்?/படங்கள்.. 

ப: ஹோசூர் தியேட்டர் ஒன்றில், ரிக்ஷா மாமா என்று ஒரு படம் எப்பவோ பார்த்தேன். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்தது அந்தத் தியேட்டர். பல காட்சிகளில் கண் கலங்கினேன். (பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருமல் தாத்தா ஒருவர் விட்ட சுருட்டுப் புகை, கண்களை பாதித்ததால்!) 

எங்கள் புளொக்கின் 2 வது ஆசிரியர், சிக்கும் போன பின்பு அடுத்து எங்காவது சுற்றுலா போனாரோ? அல்லது போவதற்குப் பிளான் பண்ணியிருக்கிறாரோ?:) 

ப: கேள்வியை அவருக்கு அனுப்பினேன். ஒன்றும் பதில் சொல்லவில்லை! சொல்லாமல் செய்வர் பெரியோர்!

துளசிதரன் : 

அந்த நீலவண்ணக் கண்ணன் யார்?  

ப: அட ராமா! இன்னமும் தெரியவில்லையா! 

என் மனதில் கேள்விகள் எதுவுமே எழவில்லையே! ஏன்? நான் அதிராவைப் போல் ஞானியாகிவிட்டேனா? 

ப: கேள்விகள் எழவில்லை என்றால் கவலை இல்லை. என் பள்ளிக்கூட நாட்களில், ஓர் ஆசிரியர் - எந்தப் பையனையாவது பார்த்துக் கேள்வி கேட்டார் என்றால் பையன் உடனே எழவில்லை என்றால் திட்டுவார். நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்கும் பொழுது, உடனே எழுந்து, "பதில் தெரியாது " என்று சொன்னால் கூட மன்னித்து, உட்காரச் சொல்லிவிடுவார்!

   
     
கீதா சாம்பசிவம் :

அந்த நீலவண்ணக் கண்ணன் ஶ்ரீராம் தானே கேஜிஜி சார்?  

ப: இல்லை என்று சொன்னால் சரியாக இருக்காது என்பதில் ஏதும் ஐயம் இல்லை.

அப்போ இந்தச் சிவப்பு வண்ண மனிதர் யாராக்கும்? 

ப: யாரோ மர்மயோகி!

//தலய்க்கு மய் போடுவது என்பது மய்யமாக இருக்கவேண்டும். ஆங்காங்கே சர்வாதிகார இருள் முடிக்குள் சில ஜனநாயக வெண்மை ஒளிக்கீற்றுகளும் தெரியவேண்டும். //இது கேஜிஜி இல்லைனு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க? 

ப: இது தவறு என்று சொன்னால் அது சரியாக இருக்கும். 

கேஜிஜி சார்! உப்புமான்னா எல்லோரும் ஓடறாங்க! நீங்க எப்படி?

ப: ஓடமாட்டேன்! ஒளிஞ்சிண்டுடுவேன்!
  
ஓட்ஸ் தோசை என்று புதிய காலை உணவு ஒன்றைக் கண்டுபிடித்தேன். புதிய மார்பிள் நான் ஸ்டிக் தவாவில் வார்த்து சாப்பிட்டேன். பரம திருப்தி.// இது நீலவண்ணக் கண்ணன் பதில் இல்லையோ?  

ப: இல்லை. 

எல்லாரும் மொபைலை வைச்சுட்டு ஏதோ பேசிட்டே இருக்காங்க! ஆனா எனக்கு அப்படி ஏதும் தோணறதே இல்லையே? ஏன்? 

ப: ரொம்பப் பேருங்களுக்கு, மொபைல் ஒரு எஸ்கேப் ரூட். 
சில வருடங்களுக்கு முன்பு, என் பெண்ணின் சிறிய வயதுத் தோழியை, சாலையில், எதிர் திசையில் அந்தப் பெண் வந்துகொண்டிருக்கும் பொழுது, பார்த்தேன். அருகில் வரும்பொழுது, 'சௌக்கியமா?' என்று கேட்கலாம் என்று நினைத்தேன். அந்தப் பெண் என்னை அடையாளம் கண்டவுடன், திடீரென்று அவள் கையில் இருந்த மொபைலில், யாரிடமோ பேசுவதுபோல பேசிக்கொண்டே, என்னைக் கடந்துசென்றாள்! நான், சரி அப்புறமா சந்தர்ப்பம் வந்தால் விசாரிக்கலாம் என்று நினைத்து கடந்து சென்றேன். அப்புறம் திரும்பிப் பார்த்தால், அந்தப் பெண் மொபைலை காதிலிருந்து  எடுத்து, என்னைத் திரும்பிப் பார்த்து, நான் பார்ப்பதை அறிந்ததும், தேள் கொட்டியது போல வேகமாக நடந்தாள்!

நாரத கான சபா வாசலில் ஒருநாள் மதியம் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் கச்சேரி கேட்கச் சென்றிருந்தேன். சபா வாசலில், ஸ்ரீரஞ்சனியின் அப்பா, சந்தானகோபாலன் நின்றிருந்தார். அவரருகே நான் சென்றதும், அவர் தன் மொபைலை எடுத்து காதருகே வைத்துக்கொண்டு, யாரோ பேசுவதைக் கேட்பவர் போல, ஊம் கொட்ட ஆரம்பித்தார். 

இதே மொபைல் டெக்னிக்கை, அதற்கப்புறம் நானும் அப்பப்போ செய்ய ஆரம்பித்துவிட்டேன்!

மொபைலில் நீங்க சினிமா பார்ப்பீங்களா? பார்த்திருந்தா என்ன படம் பார்த்தீங்க? 

ப: மொபைலில் சினிமா பார்ப்பது இல்லை. ஐ பி எல் மாட்ச் பார்த்ததுண்டு. ஐ பாடில் சில தமிழ் சினிமாக்கள் பார்த்தது உண்டு. சினிமாப் பெயர் எல்லாம் ஞாபகம் இல்லை. துப்பறிவாளன்(?), வி ஐ பி 2 என்று சில பெயர்கள் ஞாபகம் இருக்கு.
  
ஓட்ஸ் தோசை  ஏற்கெனவே நான், வல்லி எல்லாம் செய்திருக்கோமே! இதுக்கு என்ன சொல்லப் போறீங்க? 

ப: நான் செய்த ஓட்ஸ் தோசை, ரொம்ப சிம்பிள். ஓட்ஸ் எடுத்து மிக்சியில் மாவாக அரைத்து, பின் அதில் தாராளமாக தண்ணீர் சேர்த்து, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு போட்டு, வார்த்து சாப்பிட்டேன். 

கேஜிஜி சார், உங்களோட புதிய சமையல் கண்டுபிடிப்பு என்ன? அதுக்குப் பாராட்டுக் கிடைச்சதா? நீங்களே உங்களைப் பாராட்டிக் கொண்டீங்களா? 

இன்றைக்கு, நீர் ஊற்றிய பழைய சாதத்தில், கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு, உப்புப் போட்டு, கொஞ்சம் ஓட்ஸ் போட்டு, மிக்சியில் அரைத்து, தோசை செய்தேன். சுவையான சீவல் தோசை! நானே என் முதுகில் தட்டிக் கொடுத்துக்கொண்டேன்! 

இந்தத் தோசைக்கு, ஓபசோஉகபமி என்று  பெயரிட்டிருக்கிறேன். 

நாளைக்கு என்ன சமைக்கிறது என்பதை இன்னிக்கே திட்டம் போடுவீங்களா?
எங்க வீட்டில் என் கணவர் எக்கச்சக்கமாய்க் காய்கறிகள் வாங்கிட்டு என்னிடம் வாங்கிக் கட்டிப்பார். அப்படி அனுபவம் உங்களுக்கு உண்டா? 

ப: சமையல் திட்டம் எல்லாம் அப்பப்போ ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்து, என்ன இருக்குதோ அதற்குத் தகுந்தாற்போல்தான். நான்கைந்து நாட்களுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வருவேன். பெரும்பாலும் காரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், கத்திரிக்காய், புடலங்காய் புதினா, கறிவேப்பிலை வாங்குவேன். 

 புடலங்காயை என்ன செய்யலாம்?  

ப: insomnia என்னும் தூக்கமின்மைக்கு, புடலங்காய் ஒரு சிறந்த மருந்து. சுத்தப்படுத்தி, நறுக்கி, லேசாக வேகவைத்து, மிக்சியில் போட்டு அரைத்து, கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி, அதில் தேவையானால் லேசாக உப்புப் போட்டு, கொஞ்சம் மிளகுத் தூள் தூவி, இரவு எட்டு மணிக்குக் குடிக்கவேண்டும். பத்து மணியிலிருந்து குறைந்தது ஆறு மணிநேரம் அயர்ந்து தூங்கலாம்!
              
பொதுவா எல்லோருக்கும் தெரியச் சாப்பிடுவதை விடத் தெரியாமல் எடுத்துச் சாப்பிடுவது ரொம்ப ருசி! அப்படி நீங்க சாப்பிட்ட உணவு எது? அப்போக் கையும் களவுமா மாட்டிக் கொண்டு முழிச்சிருக்கீங்களா? 

ப: என் அம்மா செய்த ஸ்வீட் வகைகள் எல்லாவற்றையுமே திருடித் தின்றிருக்கிறேன். எல்லோருக்கும் தெரிய சாப்பிடும்போது என்ன ருசியோ அதே ருசிதான், திருடிச் சாபிடும்பொழுதும்! ஆனால் திருடித் தின்பதில் ஒரு திரில் எக்ஸ்ட்ரா! 
   

  

ஶ்ரீராம் சமையல்லே அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது பத்தி நிறையச் சொல்லி இருக்கார். அப்படி உங்க அம்மாவுக்கு நீங்க ஒத்தாசை செய்திருக்கீங்களா?

ப: அம்மா சமையலில் ஒத்தாசை செய்யக் கூப்பிட்டது இல்லை. படித்த காலங்களிலும் சரி, வேலை பார்த்த நாட்களிலும் சரி காலை ஆறுமணியிலிருந்து, மாலை வரை வீட்டில் இருந்தது இல்லை. லீவு நாட்களில் ஓய்வு மட்டும்தான்! உழைப்பு கிடையாது!

உங்க மனைவி சமையல் நல்லா இருக்குமா? உங்க அம்மா சமையல் நல்லா இருக்குமா? அல்லது உங்க சமையல் தான் உங்களுக்குப் பிடிக்குமா? 


ப: எங்க எல்லோர் சமையலுமே நல்லா இருக்கும். எல்லாமே எனக்குப் பிடிக்கும். 
    
ச்ரீராமுக்கு அனுஷ்கா, நெ.த.வுக்குத் தமன்னா! இன்னும் சிலருக்கு நயன் தாரா! அப்படி உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்? ஏன் பிடிக்கும்? 

ப:    
பெயர் : தெரியாது!
ஏன் பிடிக்கும் என்றும் தெரியாது. இன்றைய ஃபேவரிட் நடிகை. நாளை மாறிவிடும்!


இப்போதுள்ள நடிகைகளிலே நன்றாக நடிப்பவர்கள் யார்? 

ப: நடிப்பது என்று பார்த்தால் நயன்தாரா பரவாயில்லை என்று தோன்றும்.   

                
  திரைப்படங்கள் பழைய படங்களின் பெயரிலேயே வரது எனக்குக் குழப்பமா இருக்கு! உங்களுக்கு? அதே கண்கள் என்னும் பெயரில் முன்னர் வந்த ஏவிஎம் படம் ஓர் மர்மப் படம். கிட்டத்தட்ட அதே போல் ஓர் மர்மப் படம் அதே பெயரில் இப்போவும் வந்திருக்கு! இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 

ப: எனக்கு அந்தக் காலத்து அதே கண்கள் மட்டும்தான் தெரியும். அந்தக் காலத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த படம். 


ஏஞ்சல் :

சலாமியா ஒரு இடத்தின் பேர்தானே ? 

ப: விக்ரம் படத்தில் ஜனகராஜ் பேசுவது சலாமியா மொழிதானே? 

1,உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குவது எது ?

ப: Facebook & WhatsApp.


2,அம்மா சுட்ட தோசை உங்கள் மனைவி சுட்ட தோசை ..3 வித்யாசங்கள் ப்ளீஸ் ?
இந்த கேள்விக்கு வரும் பதில்களால் மூன்று பேரின் வீட்டிலும் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பில்லை :))

ப: அ தோ நெஞ்சைத் தொட்டது. ம தோ கண்ணைக் கவர்ந்தது.

அ தோ ஏழ்மைச் சுவை. ம தோ வசதியில் வார்த்தது.

அ தோ சைடுக்கு மிளகாய்ப்பொடி, எண்ணை. 
ம தோ சைடுக்கு (எனக்குப் பிடிக்காத) சட்னி.  


3, நல்லவர் , ரொம்ப நல்லவர் வித்யாசம் கூறவும் .?

ப: நல்லவர் = கடன் கொடுத்தவர். ரொம்ப நல்லவர் = கொடுத்தக் கடனைத் திருப்பிக் கேட்காதவர். 
         
4, உங்ககிட்ட ஒரு கடிகாரம் டைம் மெஷின் கவுண்ட் டவுன் டைமருடன் கொடுத்தா சரியா உங்க வாழ்க்கையில் எந்த மறக்க முடியா இனிய சம்பம் நடந்த நேரம் அதை நிப்பாட்டுவிங்க ?
            
ப: ஹைஸ்கூலில் படித்த நாட்கள். 

5 ,உங்களை பற்றிய மூன்று சுவாரஸ்யமான உண்மைகள் ? 

ப: காற்றில் கற்பனைக் கோட்டைகள் கட்டுபவன். 

அமேசான் வெப் சைட்டில் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அதை வாங்கி உபயோகித்து ஆனந்தப்படுவது போல சில நிமிடங்களைக் கழிப்பேன். 

யாரைப் பார்த்தாலும், யாருடன் பேசினாலும் அவர்களின் அசைவுகளைக் கூர்ந்து கவனித்து, அவர் எப்பேர்ப்பட்ட ஆள் என்று ஒரு கணிப்பு செய்து வைத்துக்கொள்வேன்.

எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு உடனே ரியாக்ட் செய்யமாட்டேன். எதையும் புன்னகையோடு கேட்டுக்கொண்டு, பிறகு நன்கு யோசித்துதான் ஆக்சன்!   
               

6,ஞாபக மறதியால் அசடு வழிந்தது சமீபத்தில் எப்போது ?

ப: எப்பவும் ஆன் லைனில் மின் கட்டணம் செலுத்துவேன். சென்ற மாதம் மறந்துபோய், பணம் கட்டாமல் விட்டு, மின் இணைப்பைத் துண்டிக்க ஆள் வந்துவிட்டதால் அசடுவழிய வேண்டியதாயிற்று. 
     
7,நமக்கெல்லாம் ஏன் கனவு வருது ?
இதை நிறுத்த வழி இருக்கா ?

ப: கனவுலகம் ரொம்பக் காம்ப்ளிகேட்டட் சமாச்சாரம். பல தியரிகள் உள்ளன. ஆனால் கனவுகள் அந்த எந்தத் தியரியுலும் முழுவதுமாக அடங்குவதில்லை!  நிறுத்த வழி? ரொம்ப சிம்பிள். தூங்கவே கூடாது. 
   
8, ஈமெயில் /கடிதம் /இரண்டின் சாதக பாதகம் ?
      
ப: ஈ - இம் என்பதற்குள் போய்ச் சேர்ந்துவிடும். கடிதம் ஆமை வேகம்தான்! கடிதத்தை snail mail 
என்று சிலர் குறிப்பிடுவது உண்டு. 

(கைப்பட எழுதிய )கடிதம் என்பதில் ஒரு பெர்சனல் டச் இருக்கும். ஈ மெயிலில் அதெல்லாம் உணரமுடியாது. 

ஈ யில் காபி பேஸ்ட் வசதி உண்டு. கடிதத்தில் கை வலிக்க எழுதியே ஆகவேண்டும். 


9,பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்கிறார்களே ஏன் ?
    
ப: அந்தக் காலத்தில் பொன் என்பது செல்வத்திற்கும், புதன் என்பது புத்திசாலித் தனத்திற்கும் தொடர்புகொண்டு பேசப்பட்டது. செல்வம் கிடைக்கும்; சம்பாதிக்கலாம். புத்திசாலித்தனம் என்பது இயல்பாக வரவேண்டுமே தவிர பொன்னைப் போல கிடைக்காது அல்லது சம்பாதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள் முன்னோர். 

10, பேய் படம் பார்த்து பயந்த அனுபவங்கள் ?
என்ன படம் அது ?
     
ப: 'யார் நீ ' படத்தைப் பார்த்து அந்தக் காலத்தில் பயந்தது உண்டு. அப்புறம் சைக்கோ படத்தைப் பார்த்தேன். பயப்படவில்லை. 

பேய் படம் இல்லை. ஆனால் ஓர் ஆங்கிலப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கேட்ட இசையால் இதயத்துடிப்பு இரண்டு மடங்காகி, இயல்பு நிலைக்கு வர, இரண்டுமணி நேரம் ஆயிற்று. 

(ஒருவேளை இவர் சொல்கின்ற படமும் சைக்கோ படம்தானோ?) 

என்றைக்காவது உங்கள் வீட்டு பாஸை . ஐ மீன் மனைவி , உங்கள் அக்கா தங்கை பேரை சொல்லி (எதோ ஒரு மறதியில் ) அழைத்து :)மாட்டிக்கொண்டதுண்டா :) ? 

ப: என்னது! பாஸை பெயர் சொல்லிக் கூப்பிடுவதா! அதற்கெல்லாம் தைரியம் வந்தது இல்லை! 
ஜோக் ஒரு பக்கம் இருக்க, அக்காக்கள் இருவரும் வயதில் ரொம்ப மூத்தவர்கள். அவர்களை, பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. தங்கையோடு அதிகம் சண்டைகள் போட்டதுண்டு. ஆனால் மனைவியை பெயர் மாற்றிக் கூப்பிட்டது இல்லை. 

மாதவன் :

That's *Extrapolation* (finding a value of y(x), beyond the given limits of 'x'). (not Interpolation) 

A: My AMIE text book and the evening college lecturer referred it as Newton's forward interpolation only for predicting a future value based on a set of existing values. 

One day during winter in a town, everyone felt that the day was double the cold that was felt the previous day. For, eg. if someone used 1 sweater the previous day, to receive a particular warm comfort, he/she needed 2 sweaters to keep him/her self the same warm-comfort on the day of this report.

The newspaper on that day reads the previous day's temperature was 0 degree Celsius. What's the temperature on that day ? 

A: 16 deg F.
     
வாட்ஸ் அப் 
    
பானுமதி வெங்கடேஸ்வரன் :
      
பள்ளியில் ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் வைத்ததுண்டா? அப்படி பட்டப்பெயர் வைத்து மாட்டிக்கொண்டிருக்கிறீர்களா?  

ப: படித்த காலத்தில், நிறைய பேருக்கு நாமகரணம் செய்ததுண்டு. அதற்காக மாட்டிக்கொண்டதில்லை. 

பாலிடெக்னிக் படித்த காலத்தில் சீனியர் வைத்த பெயர்களை ஜூனியர்கள் மாற்றாமல் உபயோகப்படுத்தியது உண்டு. ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில், கார்பென்ட்ரி பிரிவில் அதிகாரம் செய்யும் ஆல் இன் ஆல் அய்யாக்கண்ணு ஒருவருக்கு, பாலிடெக்னிக் சீனியர் மாணவர்கள் வைத்திருந்த பெயர் B.C.
(அதாகப்பட்டது Bachelor of Carpentry).
என்னுடன் படித்த (வெள்ளை உள்ளம் படைத்த)  மாணவன் ஒருவன், அது அவருடைய பெயரின் இனிஷியல்ஸ்  என்று தவறாக நினைத்து, Foundry வகுப்பு ஆசிரியரிடம் சென்று, "சார், என்னை பி சி சார் கூப்பிடறார். போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொன்ன அன்று எல்லா வொர்க் ஷாப் ஆசிரியர்களும் விழித்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் வந்து, அந்த வெ உ மாணவரிடம், 'எனக்கு என்ன பெயர்?' என்று பேரனைக் கொஞ்சுகின்ற தாத்தா போல, ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்!

      
ப: ஆசிரியருக்கு வைத்த பட்டப் பெயர் : கோட்ஸ்டாண்ட். மாட்டவில்லை! 

(அதாவது கோட் ஸ்டாண்டில் கோட்டை மாட்டவில்லை என்கிறாரோ?)

மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்!



106 கருத்துகள்:

  1. அட இன்னிக்கு நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்!

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்.

    // அட இன்னிக்கு நான் தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்!//

    ஆம், கௌ அங்கிள் ஆச்சர்யங்களின் காரணம்.

    பதிலளிநீக்கு
  3. ஆஆஆஆஆஅ இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் வெங்கட்ஜி வகுப்புக்கு லேட்டான துரை அண்ணா கீதாக்கா பானுக்கா எல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இன்னிக்கு நினைச்சேன் புதன் ஓடிப் போணும் லேட்டாகக் கூடாதுனு லேட்டா போனா கௌ அண்ணா ஆசிரியர்கள் எல்லாம் பெஞ்ச் மேலதான் ஏத்துவாங்க...ஆனா ஆனா அடுப்பு வேலை அப்புறம் தீஞ்சு போச்சுனா இங்க டின் கட்டிடுவாங்களே ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்கள் தளத்தில் உங்களிடம் ஒரு விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளேன்!

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் நான் வழக்கமா புதன் நா காலைல 5 மணிக்கே எபிய ஓபன் பண்ணிடுவேன்...அப்போ எல்லாம் வெங்கட்ஜியும் 5.30க்கு பதிவு போடுவாரா. ...அப்புறம் கில்லர்ஜி ராக்கோழி....காலைல இந்த மூனையும் பார்க்க சரியா இருக்கும்...இன்னிக்கு லேட்டாகிப் போச்சு...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. லேட்டா வரவங்க எல்லாம் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பெஞ்சைப்போடுங்க.. ஏறி நிற்கிறோம் என்று சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்கள் தளத்தில் உங்களிடம் ஒரு விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளேன்!//

    ஹா ஹா ஹா பார்த்துட்டேன் ஸ்ரீராம். இதோ இன்று அனுப்பி வைக்கிறேன். 4 பேருக்கு அனுப்பணும் இன்று அனுப்பறேன். இரண்டு நாளா அனுப்ப முயற்சி ....முடியலை...இன்று கண்டிப்பாக அனுப்பிவிடுவேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எல்லோருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  12. இன்னிக்கு புதன்கிழமைனு நல்லா ஞாபகம் இருந்தது. ஹெஹெஹெ, அது எப்படினு தெரியலை. அதான் மெதுவாவே வந்துக்கலாம்னு விட்டுட்டேன்.அதோட ஐந்தில் இருந்து ஐந்தரை வரை ரொம்ப முக்கியமான நேரம். கஞ்சி கொதிக்கும். :)))))))

    பதிலளிநீக்கு
  13. கௌதமன் சார், அந்த சிவப்பு வண்ணக் குழந்தை ஏன் 3 கிளவிகள் சே, எல்லாம் இந்த அதிராவால் வந்தது! கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுத்திருக்கார்? இப்போத் தான் எழுதக் கத்துக்கறாரோ?

    பதிலளிநீக்கு
  14. புடலங்காய் குறித்த மருத்துவச் செய்தி நான் அறியாத ஒன்று. பகிர்வுக்கு நன்றி. நம்ம வீட்டில் கிலோக் கணக்கில் புடலங்காய் வாங்குவதால் முயன்று பார்க்கணும். :)))))

    பதிலளிநீக்கு
  15. புடலங்காயில் பஜ்ஜி போடலாம். ஸ்டஃப் செய்யலாம்னு சொல்லுவீங்கனு பார்த்தேன். புதுசா ஒண்ணைச் சொல்லி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  16. // ஐந்தில் இருந்து ஐந்தரை வரை ரொம்ப முக்கியமான நேரம். கஞ்சி கொதிக்கும். ://

    அரைமணிநேரமா? ஏன்?

    பதிலளிநீக்கு
  17. @ஸ்ரீராம், சிறுதானியங்கள் வேக நேரம் எடுக்கும். அதோட கிட்ட இருக்கலைனா அடியிலே போய்ப் பிடிச்சுண்டா என்ன செய்யறது? அதான்!

    பதிலளிநீக்கு
  18. கே.ப.ரசிக்க வைத்தன...
    புடலங்காய் கூட்டு எனக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  19. அப்ப பதில் சொன்னது கீதா ரங்கனா.
    இல்லையே நெ தவா.
    சிவப்புவண்ணனா. யாரது. ஒரே குழப்பம்.
    சாயந்திர வேளை பார்த்தீர்களா. ப்ரெயின் டயர்ட்.

    ஒஹோ கில்லர் ஜியா

    பதிலளிநீக்கு
  20. ஆளைக் காணலை..ன்னு ஒரே களேபரமா இருக்கும்..
    அப்படி...ன்னு நெனைச்சா!...

    ??????....

    பதிலளிநீக்கு
  21. (பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருமல் தாத்தா ஒருவர் விட்ட சுருட்டுப் புகை, கண்களை பாதித்ததால்!) //

    ஹா ஹா ஹா ஹாஹாஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஓபசோஉகபமி//

    ஒன்னு விட்டுட்டீங்க கௌ அண்ணா ஓபசோஉகபமிதோ....ஹிஹிஹிஹிஹி...பூஸார் இதற்கு விளக்கம் சொல்லணும் ஏன்னா அவங்க தமிழ்ல டி யாக்கும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. அரைமணிநேரமா? ஏன்?//

    ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....அங்கேயே கீதாக்க பதில் சொல்லிருக்காங்க பாருங்க அவங்களும் இப்ப நீங்க ஒழுங்கா நோட்ஸ் படிக்கறதில்லைனு சொல்லுவாங்க பாருங்க...கஞ்சி கொதிக்கும் நு சொல்லிருக்காங்க பாருங்க...

    கீதாக்கா ஸ்ரீராமுக்கு இம்பொஸிஷன் கொடுங்க....

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஆளைக் காணலை..ன்னு ஒரே களேபரமா இருக்கும்..
    அப்படி...ன்னு நெனைச்சா!...

    ??????....//

    அண்ணா நீங்க 6 மணிக்கு மெதுவா வருவீங்கனு நினைச்சு நான் கிச்சனுக்கு ஓடிட்டேன்...அப்புறம் இப்பத்தான்...அப்பத்தானே காபி கஞ்சி எல்லாம்வ் வரும்...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம் கஞ்சி கொதிக்க அரை மணி நேரம் சிம்ல (சிம் 1 ஆ சிம் 2 ஆனு கேட்கப்படாதுனு சொல்லிப்புட்டேன்!!!!) வைச்சுக் கொதிக்கவிடுவாங்க இல்லையா கீதாக்கா....அப்பத்தான் கஞ்சி நல்லா வேகும்...அப்பப்ப கிளறி....சரியாக்கா...பாருங்க நான் நல்லா உங்க நோட்ஸ் படிச்சிருக்கேனாக்கும்...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  26. மொபைல் டெக்னிக் ஹா ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா ஓ அதான் விஷயமா எப்பவும்மொபைல் காதுல இருக்கறது...எனக்குத் தெரியாம போச்சே...மீ சரியான அபிஷ்டு...

    பதிலளிநீக்கு
  27. சிறப்பு. அடுத்த தொகுப்புக்கு என்னுடைய கேள்விகளையும் அனுப்பி வைக்கிறேன்.

    முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02
    https://newsigaram.blogspot.com/2018/06/Mudi-Meetta-Moovendhargal-02.html
    #முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம்

    பதிலளிநீக்கு
  28. பகல் கனவுதான் மீக்கு..ஹா ஹா ஹா…அது ஏதாவது கதைக்கு சிந்திக்கும் போது…
    டெய்லி வாட்சப்ல யாராவது குட்னைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்னு கொடுத்துட்டே இருக்காங்க ஆனா எனக்கு கனவே வரதில்லை..…ராத்திரி படுத்தா அடுத்த செகன்ட் தூக்கம். காலைல 4 மணிக்கு கரீக்டா இன்டெர்னல் அலார்ம் எழுப்பி விட்டுரும்….

    கீதா



    பதிலளிநீக்கு
  29. புடலங்காயுடன் உகி போட்டு தேங்காய் வ மி ஜீரகம் அரைத்துப் போட்டு தாளித்த கூட்டு ரொம்ப நல்லாருக்கும். இதுக்குப் பருப்பு தெவையில்லை உகி போடுவதால். என் அம்மாவின் அம்மா செய்யும் கூட்டு. குடும்பம் பெரிசு ஸோ இந்தக் கூட்ட பண்ணி வைச்சுருவாங்க….பெரிய அடுக்கு ஃபுல்லும்….சுட்ட அப்பளம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  30. புடலங்கா” அப்படினு சிலர் வாக்குவாதம் அல்லது திட்டும் போது பயன்படுத்தப்படறாத கேட்டுருக்கேன்…..

    ஆனா அதுக்கு இப்படி ஒரு மருத்துவ குணம் இப்பத்தான் கேக்கறேன் கௌ அண்ணா. புடலங்காயை மத்த காயோடு போட்டு சூப் செஞ்சுருக்கேன் ஆனா தனியா செஞ்சதில்லை. உங்க குறிப்பு சூப்பர்…செஞ்சுருவோம்ல!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. புடலங்காய் குறித்த மருத்துவச் செய்தி நான் அறியாத ஒன்று. பகிர்வுக்கு நன்றி. நம்ம வீட்டில் கிலோக் கணக்கில் புடலங்காய் வாங்குவதால் முயன்று பார்க்கணும். :)))))//

    கீதாக்கா அதிரடி மிரட்டப் போறாங்க ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  32. கீதா ரங்கன்... இப்போ எங்க நல்ல புடலங்காய் வருது? நானும் ஓரிரு வாரமா பார்க்கிறேன். ஒருவேளை சீசன் இல்லையோ?

    பதிலளிநீக்கு
  33. ஒவ்வொருவரும் வந்து, அந்த வெ உ மாணவரிடம், 'எனக்கு என்ன பெயர்?' என்று பேரனைக் கொஞ்சுகின்ற தாத்தா போல, ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்!//

    ஹா ஹா ஹா ஹா ஹா இல்லைனா இன்னும் பபெ சொல்லி உரக்கக் கூவிட்டாங்கனா...ஹா ஹா ஹா (காலேஜ் படிக்கும் போது இப்படிப் பசங்கள் கூவியதுண்டு!!)

    எங்க க்ளாஸ்லயும் கூட டீச்சர்ஸ்கு பட்டப்பெயர் வைக்கனே ஒரு க்ரூப் உண்டு. ரூம் போட்டு யோசிச்சு வைப்பாங்க....ப்ளக் இப்படினு ஒரு ஹெச் எம் கு பெயர். கையை அபிநயம் பிடித்து வகுப்புஎடுக்கும் டீச்சருக்கு அபிநயசுந்தரி, பால் போடுவது போல யாராவது பின் பெஞ்சுல தூங்கினா சாக்பீஸ போடுவாங்க சில சமயம் ஸ்பின்னாகி தாக்கும்....ஸோ அவங்களுக்கு திரிபுரசுந்தரி நு பெயர்.

    ஒரு டீச்சர் ஹை ஹீல்ஸ் போட்டுத்தான் வருவாங்க டொக் டொக் நு ஸவுண்டோட ஸோ அவங்களுக்கு குதிரை.

    நெத்தில பெரிய குங்கும பொட்டு வைச்சுட்டு வரவங்களுக்கு "வட்ட நிலா"

    ஒரு டீச்சர் ட்ராமா ப்ராக்டீஸ் எங்களுக்குக் கொடுக்கும் போது தலைல ஒரு வளைங்க சீப்பை கொண்டைல வைச்சுட்ட்டுருப்பாங்க எப்பவும்....ஸோ அவங்க பெயர் "பிறை சூடி, அம்புலிமாமி"

    இன்னும் உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  34. நெத இன்னிக்குக் கூட எங்க வீட்டுல புடலங்கா கூட்டுதான். நல்ல இளசு. கொஞ்சம்நீட்டமாவும் இருந்துச்சு. தாம்பரத்துலருந்து....மூன்று புடலங்காய் 10 ஓவா...

    எனக்கு நல்ல ஒல்லியா நீளமா என் உயரத்துக்குக் கிடைக்குமே!!!! அந்தப் புடலங்காய் ரொம்பப் பிடிக்கும்!!!

    இங்கல்லாம் குட்டையா கொஞ்சம் குண்டா இருக்கு புடலங்கா...ஆனாலும் ஒகேதான் இளசா இருந்தா..

    கீதா.

    பதிலளிநீக்கு
  35. பிறை சூடி, அம்புலிமாமி" ஓகே கீதா.. காரணப்பெயர் நல்லாயிருக்கு. ஆனால் பட்டப்பெயர் சுருக்கமா இருக்க வேண்டாமோ!

    பதிலளிநீக்கு
  36. //ஸ்ரீராம் கஞ்சி கொதிக்க அரை மணி நேரம் சிம்ல (சிம் 1 ஆ சிம் 2 ஆனு கேட்கப்படாதுனு சொல்லிப்புட்டேன்!!!!) வைச்சுக் கொதிக்கவிடுவாங்க இல்லையா கீதாக்கா....அப்பத்தான் கஞ்சி நல்லா வேகும்...//

    புரியுது கீதா... வயசானவங்களுக்கு கஞ்சி நல்லா வேகணும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  37. //ஆளைக் காணலை..ன்னு ஒரே களேபரமா இருக்கும்.. அப்படி...ன்னு நெனைச்சா!...//

    துரை செல்வராஜூ ஸார்... புலி வருது கதையாகிவிட்டதோ!

    பதிலளிநீக்கு
  38. //இப்போ எங்க நல்ல புடலங்காய் வருது? நானும் ஓரிரு வாரமா பார்க்கிறேன். ஒருவேளை சீசன் இல்லையோ?// நெ.த. கும்பகோணம் போனப்போ என்னை விட உயரமான புடலங்காய் வாங்கிட்டு, அடுத்தடுத்து ஓ.சா.விலே செலவு பண்ண முடியாம முழிச்சுட்டு முந்தாநாள் தான் பஜ்ஜி போட்டு முடிச்சேன். இங்கே உயரமான புடலை (ஹிஹிஹி நீட்டுப் புடலைனு ஏன் சொல்லணும்?) கிடைப்பதில்லை. எப்போவானும் திருச்சி போனா அபூர்வமாப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  39. //புரியுது கீதா... வயசானவங்களுக்கு கஞ்சி நல்லா வேகணும் இல்லையா?// ஆமாம், தாத்தா! :)))) அதோட சிறு தானியம் அதிகம் வேகாமச் சாப்பிட்டாக் குழந்தைங்களுக்கு ஜீரணம் ஆகாதுங்கோ! :)))

    பதிலளிநீக்கு
  40. கௌதமன் சார், உங்களுக்குப் பதில் சொல்லக் கஷ்டமான கேள்வி எது?

    இங்கே உங்களைக் கேள்வி கேட்கும் எங்களில் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்பவர் யார்?ஏன்?

    எந்தக் கேள்வி உங்களைச் சிந்திக்க வைத்தது?

    எந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தடுமாறினீர்கள்?

    எரிச்சல் அடைய வைத்த கேள்வி எது?

    பதிலளிநீக்கு
  41. அப்புறமா வரேன் மிச்சத்துக்கு! ஒரேயடியாப் பயமுறுத்தலை! :))))

    பதிலளிநீக்கு
  42. /// ஓபசோஉகபமி ///

    ஓ இதுதான் சலாமிப் பாசையோ?:) அவ்வ்வ்வ்வ்வ்:)) எப்பூடி என் கண்டுபிடிப்பூஊஊ?:)

    பதிலளிநீக்கு
  43. ///
    எனக்கு நல்ல ஒல்லியா நீளமா என் உயரத்துக்குக் கிடைக்குமே!!!! அந்தப் புடலங்காய் ரொம்பப் பிடிக்கும்!!! //

    கீதா இங்கு எங்கள் தமிழ்க்கடையில் சூப்பர் புடலங்காய் கிடைக்குதே பெரும்பாலும்..

    பதிலளிநீக்கு
  44. சே..சே..சே... கீசாக்கா போனதடவை ஒரே தோசைக் கிளவியா.. வெரி சோரி கேள்வியாக் கேட்டதால இந்த வாரப்பதில்களை ஓசை:)) உடனேனே ஓட்டி விட்டார் கெள அண்ணன்:)..

    பதிலளிநீக்கு
  45. தமனா அனுக்கா:) குறைந்தது 4 வித்தியாசங்கள் கூறவும்?:).. இதுக்கு நீல வண்ணப் பதில்களும் நிட்சயம் தேவை:))

    பதிலளிநீக்கு
  46. //Thulasidharan V Thillaiakathu said...
    ஓபசோஉகபமி//

    ஒன்னு விட்டுட்டீங்க கௌ அண்ணா ஓபசோஉகபமிதோ....ஹிஹிஹிஹிஹி...பூஸார் இதற்கு விளக்கம் சொல்லணும் ஏன்னா அவங்க தமிழ்ல டி யாக்கும்!!!!

    கீதா//

    கீதா அது சலாமிப் பாசை:) தமிழ் எனில் நான் முதல் கொமெண்ட்டிலேயே ஜொள்ளி இருப்பேனெல்லோ:)))

    பதிலளிநீக்கு
  47. கொஸ்ஸன் நெம்பர் (*) :-
    நீண்ட தூரம் சைக்கிள் ஓடிய அனுபவம் உண்டோ?[நான் ஓடியிருக்கிறேன் 30 கிலோ மீட்டர்].

    வெயிலுக்கு மயங்கி விழுந்த அனுபவம் உண்டோ? [நான் விழுந்திருக்கிறேன் ஹா ஹா ஹா].. ஆனா மயங்கும்போது எனக்குத் தெரியும் .. உடனே அப்பாஆஆ எனக் கத்தியிருக்கிறேன்ன்.. அப்பா டக்கெனத் தாங்கி விழவிடாமல் பிடிச்சிருக்கிறார்.. இரு தடவைகள்.. சின்ன வயசிலதான் எல்லாம்..

    ஆம் என்றாலும் இல்லை என்றாலும் விளக்கத்தோடு பதில் தேவை.

    பதிலளிநீக்கு
  48. //எரிச்சல் அடைய வைத்த கேள்வி எது?///

    ஹா ஹா ஹா கீசாக்கா இது உங்கட ஓசைக் கிளவியாத்தான் இருக்கும் ஹையோ ஆண்டவா ஏற்கனவே கீசாக்கா என்னோடு கோபத்தில இருக்கிறா:)) இப்போ இது வேறையா:))

    பதிலளிநீக்கு
  49. சிலபேர் தங்கள் வீட்டில மட்டும் பந்தி பந்தியாகக் கதைக்கிறார்கள்.. பதில்களும் பந்தியாகக் குடுக்கிறார்கள் ஆனா அடுத்தவங்க வீட்டுக்குப் போனால் ஒரு சொல்லு மட்டும் பேசி விட்டு சென்று விடுகிறார்களே இவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?:)

    பதிலளிநீக்கு
  50. // ஆனா அடுத்தவங்க வீட்டுக்குப் போனால் ஒரு சொல்லு மட்டும் பேசி விட்டு சென்று விடுகிறார்களே /

    யாராயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  51. புரியுது கீதா... வயசானவங்களுக்கு கஞ்சி நல்லா வேகணும் இல்லையா?//

    ஹா ஹா ஹா ஸ்ரீராம் கரீக்டா பாயின்ட் புடிச்சிட்டீங்க....ஆனா பாருங்க அவங்க குயந்தை நான் குயந்தைக்கும் ஜீரணம் ஆகணுமே நு சொல்லிடுவாங்க பாருங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  52. புரியுது கீதா... வயசானவங்களுக்கு கஞ்சி நல்லா வேகணும் இல்லையா?//

    ஹா ஹா ஹா ஸ்ரீராம் கரீக்டா பாயின்ட் புடிச்சிட்டீங்க....ஆனா பாருங்க அவங்க குயந்தை நான் குயந்தைக்கும் ஜீரணம் ஆகணுமே நு சொல்லிடுவாங்க பாருங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  53. ஸ்ரீராம் அந்தப் பட்டப் பெயர்கள் எல்லாம் எங்கள் வகுப்பில் ஒரு தாதா க்ரூப் உண்டு அவங்க கையிலதான்...சில சமயம் இப்படிப் பெயர் வைச்சுட்டு பேசிக்கும் போது திரிபு, அபிநயம், அம்புலி இப்படிச் சொல்லிக்குவாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  54. கீதா அது சலாமிப் பாசை:) தமிழ் எனில் நான் முதல் கொமெண்ட்டிலேயே ஜொள்ளி இருப்பேனெல்லோ:)))//

    ஹலோ அப்படியெல்லாம் தப்பிக்க முடியாதாக்கும் ஒயிங்கா அதை விளக்கிச் சொல்லிட்டுப் போங்கோ!!! அது தமில்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  55. அதிரா அதுக்கு ஆன்ஸர் சொல்லலினா இம்பொஸிஷன் உண்டு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  56. // ஆனா அடுத்தவங்க வீட்டுக்குப் போனால் ஒரு சொல்லு மட்டும் பேசி விட்டு சென்று விடுகிறார்களே /

    யாராயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்./

    நானும் யோசிக்கிறேன்....நான் நீங்களா இருக்குமோனு ஹிஹிஹிஹிஹி....அப்புறம் நான் தானோனு அல்லது கீதாக்காவை வம்புக்கு இழுக்க்க்க்க்க்க்க்க்க்க்....சரி சரி அதிராவே சொல்லிடுவாங்க பாருங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  57. கௌதமன் சார்! காசு சோபனா பேரிலேயே காசு இருக்கே! எல்லோருக்கும் கொடுப்பாங்களா? :))))

    பதிலளிநீக்கு
  58. தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை வைச்சால் பிடிக்குமா? வேர்க்கடலை வைச்சால் பிடிக்குமா? அல்லது எதுவுமே கூடாதா?

    இது வரை நீங்க சாப்பிட்டதிலேயே மிகவும் பிடிச்ச உணவு எது? எங்கே? யார் எப்போச் சமைச்சாங்க?

    பதிலளிநீக்கு
  59. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவதிலேயே உங்க திறமைக்குச் சவால் விட்ட கேள்வி எது?

    பதில் சொல்லும்போதுத் திண்டாடிய அனுபவம் உண்டா?

    கேள்விக்குப் பதில் சொல்லறேனு மாட்டிக் கொண்டதாய் நினைப்பீங்களா?

    நாங்க கேட்கும் சில கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைச்சிருக்கும். அப்போ ஏதேனும் தேடிக் கண்டு பிடிக்கும்படி நேர்ந்திருக்கா? அதாவது கூகிளாரின் தயவை நாடிப் போவீங்களா?

    பதிலளிநீக்கு
  60. //Geetha Sambasivam said...
    வரேன், முடிஞ்சா! :)))))))//

    ஆங்ங்ங்ங் கீசாக்காஆஆஆஆஆஆஅ இந்தாங்கோ பூட்ஸ் ஹையோ இப்பவும் டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர்:) அது பூஸ்ட்:)) இந்தாங்கோ இந்தாங்கோ குடிச்சிட்டுக் கொண்டினியூ:)).. இனி என் செக்கும் கூடையில கொண்டு வருவா.. வரும்வாரம் பிங் கலரிலயும் ஒருவர் வந்து பஞ்ச பாண்டவர்களாகலாம் பதில் ஜொள்ள ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  61. ஆசிரியர்களிலேயே ச்ரீராம் தான் சின்னவர்னு நினைச்சேன். அப்போ இந்தச் சின்னவர் யாரு? நீலவண்ணக் கண்ணன் ச்ரீராம் தானே?

    பதிலளிநீக்கு
  62. // ச்ரீராம் தான் // // ச்ரீராம் தானே//

    கர்ர்ர்ர்ர்ர்ர்....

    பதிலளிநீக்கு
  63. //ஸ்ரீராம். said...
    // ச்ரீராம் தான் // // ச்ரீராம் தானே//

    கர்ர்ர்ர்ர்ர்ர்....

    June 27, 2018 at 3:5//
    ஹா ஹா ஹா எவ்லோ வேலை இருந்தாலும் பெயரை விட்டுக்குடுக்க மாட்டாராம்:)

    பதிலளிநீக்கு
  64. இன்னொன்று என் புத்தி இப்போ வேலை செய்வதால் கேட்கிறேன்.. பிக்கோஸ் மனம் போன போக்கில் கடசிக் கிளவியை சே சே கேள்வியைக் கேட்டு விட்டேன்.. அதனால .. என்னைச் சொல்கிறாவோ அதிரா.. என்னைச் சொல்கிறாவோ அதிரா என் நீங்க ஆராவது பதட்டமாகிடப்போறீங்க.. பிளீஸ்ஸ் அப்படி இல்லை யாரும் டென்சனாகிடாதீங்கோ.. இங்கு என்றில்லை.. இது பேஸ் புக்கில் இருந்த காலத்திலும் நான் அவதானிச்ச ஒன்று.. ஆனா கேள்வி கேட்கப் பயம்.. தப்பாகிடுமோ என.. அதனால கேட்பதில்லை.. இப்போ பெரும்பாலும் நம்மோடு பழகும் எல்லோருமே ரேக் இட் ஈசி ரைப் ஆனோர் என்பதனால துணிஞ்சு கேட்டிட்டேன்ன்... இருப்பினும் ஓவர் விளக்கம் கொடுத்ததை நீக்கி விடுறேன்ன்.. பிக்கோஸ் நேக்குப் பயம்மாக்க்க்கிடக்கூஊஊஊஊஊஉ:))

    பதிலளிநீக்கு
  65. //Geetha Sambasivam said...
    ஆசிரியர்களிலேயே ச்ரீராம் தான் சின்னவர்னு நினைச்சேன். அப்போ இந்தச் சின்னவர் யாரு? நீலவண்ணக் கண்ணன் ச்ரீராம் தானே?//

    அது அவர்தான் கீசாக்கா.. இவர் அவரை விடச் சின்னவராம்.. அநேகமா எல் கே ஜி ஆக இருப்பார்:) ஐ மீன் கிண்டகாடினைச் சொன்னேன்:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  66. //கர்ர்ர்ர்ர்ர்ர்....// ஹெஹெஹெ, சில சமயம் மாத்த மறந்துடுது! :)))))

    பதிலளிநீக்கு
  67. ///ஓவர் விளக்கம் கொடுத்ததை நீக்கி விடுறேன்ன்.. பிக்கோஸ் நேக்குப் பயம்மாக்க்க்கிடக்கூஊஊஊஊஊஉ:))

    June 27, 2018 at 4:07 PM//


    noooooooooooooooo,.. enakku venum

    பதிலளிநீக்கு
  68. //ஞானி:) athira said...
    This comment has been removed by the author.
    June 27, 2018 at 3:42 PM
    ஞானி:) athira said...//

    ஸ்ரீராம் எனக்கு இந்த நேரம் மியாவ் சொன்ன நீக்கின கமெண்ட் வேணும் .
    நான் பார்க்குமுன்ன இங்கே யாரும் எதையும் டிலீட்ட கூடாது

    பதிலளிநீக்கு
  69. ச்ரீராம்//

    ஸ்ரீராம் உங்கள் பெயர் எப்படி இருந்த ஸ்ரீராம் இப்படி ச்ரீராம் ஆகிப் போச்சே!!!! நோ நான் ஸ்ரீராமுக்கு ஆதரவா கொடி பிடிக்கிறேன்....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  70. ஸ்ரீராம் தானே ஜூனியர்...நீலவண்ணக் கண்ணன் என்றால் எப்பவுமே பாப்பாதானே!! (கிருஷ்ணனை எல்லாரும் பாப்பா மாதிரிதானே பாவிப்பது வழக்கம்!!) இல்லையா ஸ்ரீராம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  71. //பெயர் : தெரியாது!
    ஏன் பிடிக்கும் என்றும் தெரியாது. இன்றைய ஃபேவரிட் நடிகை. நாளை மாறிவிடும்!//


    அந்த பொண்ணு படத்தை போட்டு கூகிள்ன்னா பேர் மால்விக்கா ஷர்மா னு கூகிள் சொல்லுது

    பதிலளிநீக்கு
  72. //
    உங்ககிட்ட ஒரு கடிகாரம் டைம் மெஷின் கவுண்ட் டவுன் டைமருடன் கொடுத்தா சரியா உங்க வாழ்க்கையில் எந்த மறக்க முடியா இனிய சம்பம் நடந்த நேரம் அதை நிப்பாட்டுவிங்க ?

    ப: ஹைஸ்கூலில் படித்த நாட்கள்//

    ஹாஹாஆ இனிய சம்பவம்ன்னு சொன்னா ..திருமண நாள் அல்லது உங்க boss ஐ முதலில் சந்தித்த நாள்னு எதிர்பார்த்தேன் :)

    பதிலளிநீக்கு
  73. ஏஞ்சல் அது என்ன கிளவி? அதிரா அழிச்சுப்பூட்டாங்கோ...ஏஞ்சல் சதி சதி....என்னவோ சதி!! அது கமென்ட் இல்லை கேள்வி...அதுக்கு அப்புறம் பாருக்ன அந்தக் கேள்வி கேட்டதுக்கு பயந்து விளக்கம் கொடுத்துட்டு டபக்குனு பயந்து கேள்விய எடுத்துட்டாங்க....(விளக்கத்த மட்டும் எடுக்கலை ஹா ஹா ஹா)

    கீதா

    பதிலளிநீக்கு
  74. இதுவரைக்கும் வராத அந்த சிவப்பெழுத்து ஜூனியர் உடனே இங்கே வரவும் :)ஒண்ணுமில்லை எங்க தலைவி அதிரடி மியாவ் உங்களை ராகிங் செய்யணுமாம் :)

    பதிலளிநீக்கு
  75. கீதா கேள்வி இருக்கு ஆனா விளக்கத்தை தான் அழிச்சிப் ப்போட்டு மியாவ்

    பதிலளிநீக்கு
  76. யாராவது செலிபிரிட்டியை பார்க்க வேண்டும் என்று துடித்ததுண்டா? அப்படி ஆசைப்பட்டு சந்தித்த அவர் ஏமாற்றமளித்தாரா? சந்தோஷமூட்டினாரா?

    பதிலளிநீக்கு
  77. //Angel said...
    ///ஓவர் விளக்கம் கொடுத்ததை நீக்கி விடுறேன்ன்.. பிக்கோஸ் நேக்குப் பயம்மாக்க்க்கிடக்கூஊஊஊஊஊஉ:))

    June 27, 2018 at 4:07 PM//


    noooooooooooooooo,.. enakku venum///

    நான் ஜொன்னேனே எனக்கு எடிரி வெளில இல்லை:) வீட்டுக்குள்ளேயேதான்:)) முச்சந்தி முனியாண்டிச் சாத்திரியார் அப்பவும் சொன்னார் பிள்ள ஒரு கிழமைக்கு காலம் சரியில்லை காணாமல் போயிடு என:)).. மீ தான் இது என்ன கண்டறியாத சாத்திரம் என ஏசிப்போட்டு வந்தேன்:).. நானே கிளவியைக் கேட்டு வம்பில மாட்டும் கட்டம் வந்திடுமோ எனப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊஉ.. மீ ஒரு கிழமைக்குக் காணாமல் போகிறேன்ன்ன் என்னை ஆரும் தேட வேண்டாம்ம்ம்.. ட்றம்ப் அங்கிளோடு ஒரு அப்புறிக்கன் மீட்டிங் போகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  78. கீதா கேள்வி இருக்கு ஆனா விளக்கத்தை தான் அழிச்சிப் ப்போட்டு மியாவ்//

    அப்படியா நானும் தேடினேனே....பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  79. இல்லை :) விட்ருவோம் கீதா இருந்தாப்ல இருந்து இந்த பூனையை ஓட்ட அபூர்வமா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு நமக்கு .இதை வச்சி கொஞ்சம் நாள் நாம் அப்பர் ஹேண்ட் எடுக்கலாம் :)
    ஆனா எதுனாலும் பூஸ் விளையாட்டாத்தான் சொல்லியிருப்பாங்க :) சோ காணாமப்போனது போனதாவே இருக்கட்டும் :)

    பதிலளிநீக்கு
  80. )ஒண்ணுமில்லை எங்க தலைவி அதிரடி மியாவ் உங்களை ராகிங் செய்யணுமாம் :)//

    இன்னாது? இது ? தானைத்தலைவி கீதாக்காவுக்குப் போட்டியா?!!! தானைத்தலைவி இருக்க பூஸார் வால் ஆடுதா!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  81. இல்லை :) விட்ருவோம் கீதா இருந்தாப்ல இருந்து இந்த பூனையை ஓட்ட அபூர்வமா ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு நமக்கு .இதை வச்சி கொஞ்சம் நாள் நாம் அப்பர் ஹேண்ட் எடுக்கலாம் :)//

    ஹா ஹா ஹா ஹைஃபைவ்!!! அந்த முச்சந்தி முனியாண்டிச் சாமியார் வேற சொல்லிருக்காராமே ஒரு கிழமை நேரம் சரியில்லைனு...ஹா ஹா ஹா ஹா அப்ரிக்காக்கு எஸ்கேப் ஆறதுக்கு முன்ன அமுக்கிடுவோம் பூஸாரை..எல்லா வழிக்கும்.அலர்ட் கொடுத்துடலாம் ஏஞ்சல்...ட்ரம்ப் தாத்தாவுக்கு சொல்லிடலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  82. பல பதில்கள் எனக்கும் ஒத்துப்போனது...!

    பதிலளிநீக்கு
  83. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் கேள்வி பதில்கள் அருமை. ஒவ்வொரு கேள்விக்கும் உண்மையான பதில்கள் கொடுத்திருக்கும் விதத்தையும், விதவிதமான பதில்களை வண்ணங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தையும் மிகவும் ரசித்தேன். மிக ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. எனக்குத்தான் படிக்க வருவதற்கு கொஞ்சம் (நிறையவே) தாமதமாகி விட்டது. வருந்துகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  84. தானைத்தலைவி கீதாக்காவுக்குப் போட்டியா?!!! தானைத்தலைவி இருக்க பூஸார் வால் ஆடுதா!!! ஹா ஹா ஹா ஹா//

    haahaaa :)

    ஆமால்ல :) நான் நினைச்சேன் ...கீதாக்காவை கூப்பிடுங்க :) உடனே சபைக்கு அந்த சிவப்பு எழுத்தை மிரட்டியே ஆகணும்

    பதிலளிநீக்கு
  85. இன்னிக்கு எனக்கு கேள்வி கேட்கும் மூட் வரலை ..அடுத்த புதனுக்குள் அனுப்பறேன் :)

    பதிலளிநீக்கு
  86. Angel said...
    இல்லை :) விட்ருவோம் கீதா/

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது எடுத்த முயற்சியை நிறுத்தியது:)) தேடுங்கோ தேடுங்கோ.. இன்னும் அரை மணி நேரத்தில மீ அப்புறிக்கா பயணம் வித் ட்றம்ப் அங்கிளோடு:)

    பதிலளிநீக்கு
  87. என் பதிவுக்கு போட்டியா பெரிய பதிவா போட்டிருக்கீங்களே! எத்தனை கேள்வி, எத்தனை பதில்கள்.. தலை சுத்துதுடா சாமி

    பதிலளிநீக்கு
  88. 1,பேய் ,பிசாசு ,பூதம் இதெல்லாம் வெவ்வேறா இல்லை ஒன்றுதானா ??
    எனக்கு விளக்கம் அனைவரிடமிருந்தும் தேவை :)

    2,இந்த உலகத்தில் சிலர் பணக்காரர் சிலர் PAUPER ஏன் இந்த வித்யாசம் ?

    3, கண்ணுக்கு மை அழகா ?
    யார் கண்ணுக்குண்ணும் தெளிவுபடுத்தனும் ?

    4, ஸ்பைஸ் கேர்ள்ஸில் உங்களுக்கு பிடித்தவர் :)

    5, உங்களின் பெயர் (உங்களுடைய பெயரின் ) சூட்டப்பட்டதன் காரணம் ?

    6,பிறரிடம் பிடிக்காத 3 விஷயங்கள் ?

    7,ரகசியமாய் நீங்கள் மெச்சும் ,ரசிக்கும் நபர் ?
    இதில் ஒரு ஆண் ஒரு பெண் இரு பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றது ?

    8,பிடிக்காத பாடல் வரிகள் ?
    (எனக்கு இந்த குயிலை பிடிச்சி காலை உடைச்சி பாட்டை கேட்டாலே வெறி கிளம்பும்
    அதுமாதிரி மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை இதுவும் பிடிக்காது )

    9,நீங்கள் செடிப்பிரியரா ? சமீபத்தில் வாங்கிய புது செடி என்ன ?

    10,சமீபத்தில் கனவில் துரத்திய நாலுகால் விலங்கு ?


    பதிலளிநீக்கு
  89. //நாங்க கேட்கும் சில கேள்விகள் உங்களைச் சிந்திக்க வைச்சிருக்கும். அப்போ ஏதேனும் தேடிக் கண்டு பிடிக்கும்படி நேர்ந்திருக்கா? அதாவது கூகிளாரின் தயவை நாடிப் போவீங்களா?//

    ஹாஹாஹா! கீதா அக்கா, நல்ல ஜோக். கான்ஃபிடென்ஸ் தேவைதான், ஆனால் ஓவர் கான்ஃபிடென்ஸ் உடம்புக்கு ஆகாது.

    பதிலளிநீக்கு
  90. 4, ஸ்பைஸ் கேர்ள்ஸில் உங்களுக்கு பிடித்தவர் :) ???

    கேள்விக்குறி போடலைன்னா பதில் வராதே :) அதான் மீண்டும் போட்டேன்

    பதிலளிநீக்கு
  91. // அந்தக் காலத்தில் பொன் என்பது செல்வத்திற்கும், புதன் என்பது புத்திசாலித் தனத்திற்கும் தொடர்புகொண்டு பேசப்பட்டது. செல்வம் கிடைக்கும்; சம்பாதிக்கலாம். புத்திசாலித்தனம் என்பது இயல்பாக வரவேண்டுமே தவிர பொன்னைப் போல கிடைக்காது அல்லது சம்பாதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்.//

    //அ தோ நெஞ்சைத் தொட்டது. ம தோ கண்ணைக் கவர்ந்தது//.

    எனக்கு மிகவும் பிடித்த பதில்கள்..

    கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    விருந்தினர் வருகையால் தாமதமாக படித்து கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  92. //லேட்டா வரவங்க எல்லாம் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க ஹா ஹா ஹா ஹா ஹா//

    கீதா,

    வாத்தியார் பாடம் நடத்தும் போது லேட்டாக போனால் வகுப்பறைக்குள் விடமாட்டார். வகுப்பறைக்குள் உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனிக்கவில்லைஎன்றால் , வீட்டுபாடம் செய்து வரவில்லை என்றால் ஏறு பெஞ்சு மேல் என்பார்.

    நீங்கள் தாமதமாக பதிவை படிக்க வந்தாலே பெஞ்சுமேல் ஏற வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  93. //ப: insomnia என்னும் தூக்கமின்மைக்கு, புடலங்காய் ஒரு சிறந்த மருந்து. சுத்தப்படுத்தி, நறுக்கி, லேசாக வேகவைத்து, மிக்சியில் போட்டு அரைத்து, கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி, அதில் தேவையானால் லேசாக உப்புப் போட்டு, கொஞ்சம் மிளகுத் தூள் தூவி, இரவு எட்டு மணிக்குக் குடிக்கவேண்டும். பத்து மணியிலிருந்து குறைந்தது ஆறு மணிநேரம் அயர்ந்து தூங்கலாம்!//

    உண்மைதானே ? விளையாட்டு இல்லையே?

    பதிலளிநீக்கு
  94. இந்தாங்கோ இதில 1002 தேங்காய்ஸ்:) இருக்கு.. இது நான் மலேசியா முருகன் கோயிலில இருக்கிற வைரவருக்கு சிதறு தேங்காய் அடிப்பதாய் வேண்டினேன்... இந்தாங்கோ இந்தாங்கோ அஞ்சுவும் கெள அண்ணனும் மாறி மாறி அடிச்சு உடைங்கோ:)).... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா என் ஒரு நேர்த்தி முடியப்போகுது ஒரு மாதிரி:)


    http://cdn.c.photoshelter.com/img-get2/I0000LLqkDevHzLs/fit=1000x750/Sri-Lanka-Colombo-8279502.jpg

    பதிலளிநீக்கு
  95. அச்சச்சோ வைரவருக்கே பொறுக்கல்லப்போல கர்ர்ர்ர்:) அது 101 ஆக்கும்:)) எப்பூடி 1002 வந்துது?:))

    பதிலளிநீக்கு
  96. நான் கேட்க நினைச்சு ரிசர்வில் வைச்சிருந்த கிளவிங்களை எல்லாம், சேச்சே, இந்த அதிரடியோட தமிழ் போகவே மாட்டேங்குதே! :P :P கேள்விங்களை எல்லாம் நெல்லைத் தமிழர் வாட்சப்பில் கேட்டிருக்கார். யோசிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  97. @ @கீதாக்கா ..ஒழுங்கா ழ ள ண ன போட்டுத்தான் எழுதுவேன் இப்போல்லாம் எனக்குமிந்த பூஸாரால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருதே :)

    பதிலளிநீக்கு
  98. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!