சனி, 30 ஜூன், 2018

நம்ம பசங்களை நாம பாராட்டாம...





1)  தீரச்செயல் என்பதைவிட சமயோசிதம் என்று சொல்லலாம்.  நல்ல மனங்கள் வாழ்க. 





2)  அடடே... !  உணவு தரமாக இருந்ததை தொடர்ந்து.....  தரமாகத் தயாரித்த ஊழியர்களையும் பாராட்ட வேண்டும்.







3)  நற்செயலில் முதல் ஆளாக....  பாராட்டுகள்.





4)  இவரைப்பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.  அதனால் என்ன, அவரது சேவை தொடர்கிறதே..  வாழ்க அவர்.

//மேலும், தங்கள் பிறந்த நாள், திருமண நாளன்று, அன்றைய அன்னதான செலவை ஏற்றுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நாட்களில், அப்பளம், வடை மற்றும் பாயசம் என்றெல்லாம் அன்னதானத்தில் துாள் பறக்கும். சிலநாள் எதுவும் கிடைக்காத போது, அரிசி, காய்கறிகளை கலந்து, கலவை சாதமாக போட்டு விடுவார். எப்படியும் தன்னை நம்பி வந்தவர்களை பட்டினி போட மாட்டார்.//






5)  "நம்ம பசங்களை" நாம பாராட்டாம வேற யார் பாராட்டுவார்கள்?!!





31 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா கீதாக்கா பானுக்கா எல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. புறா குஞ்சு சேஃபா போச்சானு வாசித்துவிட்டு வரேன்....பக்கத்து வீட்டு வில்லன் பாஞ்சானாமே ....இப்ப சீட் நுனில இருக்கேன்...நகத்தைக் கடிச்சுட்டு...க்ளைமேக்ஸ் திரில்லிங்க் முடிவு சுபமானு பார்த்துட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. எல்லோருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  6. அஞ்சு வீட்ல தானே...

    புறா புள்ளங்க மேல பாய்றதே பூனையனுங்களுக்கு பொழப்பா போச்சு!...

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் துரை அண்ணா இளவரசி காப்பாற்றப்பட்டாள். ஏஞ்சல் (தேவதை) இருக்க பயமென்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அதிலயும் இவங்க வீட்டிலயும் குட்டிச் சாத்தான்கள் இருக்கே ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நம்ம பசங்க இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான மாணவர்கள் உள்ள தமிழகத்தில்தான். கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் சகடைகளும் நிறைந்து இருப்பது வருத்தமான விடயமே...

    பிறர் பசியை போக்குவதைவிட உயர்ந்த செயல் உலகில் வேறில்லை.

    பதிலளிநீக்கு
  11. எல்லாமே வாசித்துவிட்டேன் ஸ்ரீராம்.. இதோ கமென்ட் போட வரேன்...நெட் போயிருந்துச்சு...அதுக்குள்ள கடமைகள்...ஆத்திட்டு வரேன்

    துளசி ஒரு கல்யாணத்திற்காகக் குடும்பத்தோடு பயணத்தில்....நேற்றைய அவரது கமென்டையே நான் இன்னும் போடலை ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அனைத்து நல்ல உள்ளங்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் நல்ல செய்திகள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    வாழத்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. அந்த மாணவர்களுக்கு அமெரிக்க நாஸா நிறுவனத்திற்கு சென்று வர, மத்திய அரசு டிக்கெட் கொடுக்கவேண்டும். அதற்குத் தாமதமாகுமெனில் (ஏகப்பட்ட procedures), தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யலாம். முதல் அமைச்சர் நிதி இருக்கிறது, செக்‌ஷன் 110 என்றெல்லாம் அவர்களுக்குத் தோதுப்பட்ட போது அரசியல்வாதிகள் பேசுவார்கள்! அல்லது நமது சினிமா ஸ்டார்கள், கிரிக்கெட் ஸ்டார்கள், தமிழ்நாட்டில் பிஸினெஸ் செய்யும் கார்ப்பரேட் ஹவுஸஸ் முன்வந்து நாலு டிக்கெட் வாங்கித்தரலாம் . நடக்குமா இந்த நாட்டில்?

    பதிலளிநீக்கு
  15. நம்ம பசங்க ஆச்சரியப்படுத்துகிறார்கள். பாராட்டுகள்.

    இந்த மாதிரி கண்டுபிடிப்புகள் அதற்கப்புறம் ஃபாலோ அப் செய்யப்படுதானு தெரியலை. ஏன்னா அதுக்கப்புறம் எதுவும் அதைப் பற்றி செய்திகள் அந்தக் கோள் அங்கு போய் என்ன தகவல்கள் அனுப்பிச்சு? எவ்வளவு நாள் அனுப்பிச்சு அதோட லைஃப் எப்படி இயங்குது இப்படியான தகவல்கள் வெளிவருதா? தெரியலை..வந்தால் நல்லாருக்கும்...

    ரயிலை விபத்திலிருந்து தடுத்து அத்தனை உயிர்களையும் காப்பாரற்றிய ஸ்வபன் தேவ் வர்மா வுக்கு ராயல் சல்யூட்!!! பரம்வீர் சக்ரா அவார்ட் ஜனுவரி 26 2019ல் கொடுக்கப்படும் என்று நினைக்கிறேன்

    அந்த மதுரைக்கார அன்ன பூரணி பற்றி வாசித்தது நினைவுருக்கு மீண்டும் வாசித்தேன்...தொடரட்டும் அவரது நற்செயல். வாழ்த்துகள்.

    பளாஸ்டிக் இல்லாமல் இருப்பது எத்தனையோ முறை சொல்லப்பட்டு தொடங்கப்பட்டு ப்ளாஸ்டிக் குவளைகளால் கைகழுவப்பட்டு....இப்போது மீண்டும் சேலம் முன்னோடியாக வந்துள்ளது. வரட்டும் செயல்முறையில் வரும் என்று நம்புவோம்...எல்லா இடங்களிலும்.

    கேரள ஆலப்புழா கலெக்டருக்கு வாழ்த்துகள் இப்படிச் செக் செய்வதற்கு மற்றும் தரமான உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    கேரளத்து மக்கள் பொதுவாகவே சொல்வது கேரளத்தில் உணவு சுத்தம் என்றும், விலையும் குறைவு ஆனால் தரமான உணவு என்றும் தமிழ்நாட்டிற்கு வந்தால் சாப்பிடுவது பயமாருக்கு விருத்திகேடு தரமில்லை என்றும் சொல்வதைக் கேட்டுள்ளேன்.

    கீதா



    பதிலளிநீக்கு
  16. ஏகாந்தன் அண்ணா உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன் அதுவும் அந்தக் கடைசி வரிகள். எத்த்னையோ செய்யலாம் தான்...அந்த மாதிரி என்கரேஜ்மென்ட் இருந்தால் ஏன் நம்மூரில் ப்ரெய்ன் ட்ரெய்ன் என்ற கூவலுக்கே இடமிருந்திருக்காதே...ஆனால் அந்த ப்ரெய்ன் ட்ரெய்ன் பற்றியும் யாரும் கவலைப்படுவதாக இல்லையே. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் நம் பள்ளிகள் கல்லூரிகளின் தரம் உயர்ந்திருக்குமே. ஊழல் இல்லாத பினாமிக்கள் இல்லாத கல்வி கிடைத்திருக்குமே

    கீதா

    பதிலளிநீக்கு
  17. புதிய கண்டுபிடிப்புகளின் பலன் சாதாரண மக்களுக்குச்சென்றடைதல் முக்கியம் நல்ல செயல்களை பதிவிட்டுப் பாராட்டுவதுபிடித்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  18. 1,2,4 முன்னரே படிச்சது தான். சேலத்துக்கு முன்னாலேயே திருச்சியில் முக்கியமாய் ஶ்ரீரங்கத்தில் ப்ளாஸ்டிக்கைத் தடை செய்தாச்சு. அதே போல் சுத்தமான நகரத்தில் முதலிடமும் (இந்திய அளவில்) பெற்றிருந்தது. இப்போப் பழைய குருடி கதவைத் திறடி தான்! :(

    பதிலளிநீக்கு
  19. 5. நல்ல துடிப்பான இளைஞர்கள். பாராட்டுகள். அரசு விரைவில் இவர்கள் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. காலம்பரத்திலே இருந்து இங்கே வர முயன்றும் முடியலை! காலையில் இன்னிக்குப் பட்டுக் குஞ்சுலு வந்தது. குஞ்சுலுவைப் பார்க்கணுமே! அதனால் வரலை! அதுக்கப்புறமா வீட்டு வேலைகள்! அப்புறமா உட்கார்ந்தால் எ.பி. திறக்காமல் இம்சை! சரினு கணினியையே மூடி வைச்சுட்டுப் போய்ப் படுத்துட்டேன். இப்போத் தான் வர முடிஞ்சது!

    பதிலளிநீக்கு
  21. அந்த நம்ம பசங்களுக்கு நல்ல எதிர்காலம் வாய்க்க வேண்டும்.
    ரயிலை நிறுத்தி அனைவரையும் காத்த தந்தை மகளுக்கு நல்ல உடைகள் கொடுத்து கௌரவிக்க வேண்டும் இவர்கள் தான் நம் நாட்டுக்குத் தேவை.
    மதுரை அன்னபூரணி தொடர்ந்து தன் பணி செய்ய இறைவன் உதவுவான்.

    அந்தக் கலெக்டர் தினமும் எல்லா பள்ளிகளுக்கும் சென்று வந்தால் இன்னும் எத்தனையோ நல்ல வேலைகள் நடக்கும்,.
    \அனைத்து நற்செதிகளும்
    மனதை மகிழ்ச்சியால் நிறைக்கின்றன. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் 🙏.

    அனைவருக்கும் பாராட்டுகள். நல்ல செய்திகளை தொகுத்து அளிக்கும் உங்களுக்கும்தான்....

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்துகளும். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  24. அனைவரும் போற்ற தகுந்தவர்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  25. செய்தி 1 - ஆம், தந்தையும் மகளும் சமயோசிதமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். பலரின் வாழ்த்துகளும் அவர்களைச் சேரும்.

    மற்றவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!