சென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள்.
அலுவலகத்திலிருந்து எனக்கு ஃபோனில் பேசினான் மகன். ஏதாவது புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்டான்.
அலுவலகத்திலிருந்து எனக்கு ஃபோனில் பேசினான் மகன். ஏதாவது புத்தகம் வாங்க வேண்டுமா என்று கேட்டான்.
அது கிடக்கு ஒரு லிஸ்ட்... ஆனால் உனக்குப் பார்க்கத் தெரியாது.. விடுன்னேன்!
'சும்மா சொல்லுப்பா... ஏதோ தள்ளுபடி எல்லாம் உண்டு'ன்னான்.
"மகனே, இப்படித்தான் பெரம்பூர் பக்கத்துல ஒரு புத்தகக் கண்காட்சி நடக்குது.. 50% வரை தள்ளுபடி... எல்லா பதிப்பாளர்களும் வந்திருக்காங்க என்று செய்தி படித்து, என் நண்பர் சூசைக்கு தொலைபேசி ,அவரிடம் லிஸ்ட் .கொடுத்தேன். பாவம், அவரும் போய்ப் பார்த்து ஏமாந்து வந்து செய்தி அனுப்பினார். நாம் கேக்கும் புத்தகங்களுக்கெல்லாம் அவ்வளவு கழிவு கிடையாது. யாரும் வாங்காத சில புத்தகங்களுக்குதான் அப்படி... அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே... அப்படித்தானே இங்கும் இருக்கும்..." என்றேன்.
நான் புத்தகக் கண்காட்சி போவது எல்லாம் அவனுக்குத் தெரியுமே... வீட்டிலும் பரீட்சைக்குப் படிப்பது போல புத்தகமும் கையுமாக இருப்பதை வேற பார்த்திருக்கிறானே...
"இல்லப்பா... இங்க 10% தள்ளுபடியாம்" என்றான். "அதுதாண்டா புக்ஃபேர்லயும் கொடுப்பாங்க" என்றேன்.
"அங்கே போய்விட்டு வந்தபின் எடுத்த லிஸ்ட்தானே? எதுக்கும் அனுப்பு"ன்னான். அனுப்பினேன்.
நான் அலுவலகத்திலிருந்தபோது அலைபேசியில் தொடர்பு கொண்டு புத்தகம் பெயராக வாசிக்க ஆரம்பித்தான். "டேய்.. இப்படி வாசிச்சு கட்டுப்படியாகாது" என்று சொல்லியும் வாசிக்க, அவன் ஆரம்பிக்கும் புத்தகப் பெயர்களை நான் முடித்து "நம்ம வீட்லயே இருக்குடா" என்றேன். ஆச்யர்யப்பட்டான்! வீட்டிலேயே இருக்கும் புத்தகங்கள் லிஸ்ட் அவனுக்கு தெரியவில்லை. புத்தகங்கள் படிக்கும் பழக்கம் என் வீட்டில் என்னைத்தவிர யாருக்கும் இல்லை!
ஆனாலும் அவன் சொன்ன லிஸ்ட்டில் நான் பெயர் கேட்டுத் தயங்கி சற்று யோசித்த இரண்டு புத்தகங்களை வாங்கி வந்து விட்டான். ஒன்று அருமையான புத்தகம். இன்னொன்று அவ்வளவு சுஜாதா கலெக்ஷன்ஸ் என்னிடம் இருந்தும், அதில் இல்லாத ஒரு சிறு புத்தகம். அருமையான அந்தப் புத்தகம் சுப்ரமணிய ராஜு சிறுகதைகள். விலை 410 ரூபாய். பத்து சதவிகிதம் தள்ளி காசு வாங்கியிருந்தார்கள்.
சரி, அது என்ன கிழக்குப் பதிப்பகம் ஏமாற்றி இருக்கிறது என்று தலைப்புப் போட்டிருக்கிறேனே... என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.. இது சுப்ரமணிய ராஜுவின் 70 வது ஆண்டாம்... அதை ஒட்டி அதே கிழக்குப் பதிப்பகம் அவரது புத்தகத்தை 51 % தள்ளுபடியில் தந்து கொண்டிருக்கிறது. ஆனால் என் மகன் அலுவலகத்தில் வெறும் 10 % தள்ளுபடியில் விற்றிருக்கிறார்கள்.
இடத்துக்கேற்ற வியாபாரமா? பூங்குழலி வாணிபம் என்று ரசீதில் பெயர் இருக்கிறது. ஆனால் மகன் கிழக்குப் பதிப்பகம் என்று பேனர் வைத்திருந்தார்கள் என்கிறான். யாருடைய ஏமாற்று இது? ம்......ஹூம்...
நல்லதொரு புத்தகம் கைக்குக் கிடைத்த மகிழ்ச்சியைக் கெடுத்து விட்டது இன்றய செய்தித்தாள்.
எனக்கு இரண்டு சந்தோஷங்கள் இதில்...
மகன் எனக்கு புத்தகம் வாங்கி கொடுத்தது ஒரு மகிழ்ச்சி. நான் விலை அதிகம் என்று இரண்டு மூன்று வருடங்களாக வாங்காமல் வைத்திருக்கும் "அகம் புறம் அந்தப்புரம்" புத்தகத்தைக் கூட வாங்கத் தயாராக இருந்தான். (வாட்ஸாப்பில் என்னென்ன புத்தகங்கள் என் லிஸ்ட்டில் இருக்கின்றன என்று அனுப்பி இருந்தேன்) நல்லவேளையாக அவர்கள் அந்தப் புத்தகத்தை அங்கு கொண்டுவரவில்லை.
நான் பலமுறை ஏற்கெனவே சொல்லி, கெஞ்சியும் கூட புத்தகம் படிக்காத என் பாஸ் மகன் புத்தகம் வாங்கிய சந்தோஷத்தில் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. எடுத்த உடனேயே சுப்ரமணிய ராஜு கதைகள்! தாலிக்கொடி உறவைவிட தொப்புள்கொடி உறவு பெரிதுதான்! விசு சரியாகத்தான் சொல்லியிருக்கார்!
==========================================================================================================
எங்கள் வீட்டில் எல்லோருமே நாலு கால் செல்லத்தின் ரசிகர்கள். சமீபத்தில் ஏஞ்சலின் தளத்தில் ஒரு நாலுகால் செல்லம் இலையைப் பறித்து விற்பனையாளரிடம் கொடுத்து பிஸ்கட் வாங்கிய பதிவை இளைய மகனுக்குப் படித்துக் காட்டினேன். அவன் ரசித்து விட்டு சென்னை வர்த்தக மையம் சென்றிருந்தபோது அங்கு அவன் எடுத்திருந்த புகைப்படங்களைக் காட்டினான். அதை வாங்கி இங்கே பகிர்கிறேன்...
"ஏதாவது இருக்கிறதா? எனக்கும் விருந்து உண்டா?"
"இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மனிதர்கள் யாராவது என்னை கவனிக்கிறார்களா? எவ்வளவு நேரம் சாப்பிடுவீங்க.. என் பசி தெரியாம.. அதான் என் தோழர்கள் இன்னும் காத்திருக்க என்னால் முடியாம நான் வந்துவிட்டேன் உணவு தேடி..."
"வாசனையாத்தான் இருக்கு...."
"வெறும் சாம்பாரை மட்டுமா வச்சுட்டுப் போயிருக்காங்க... இன்னும் பக்கத்தில் பார்த்தால் தெரியும்..."
"ம்..ஹூம்... என்ன கிடைக்குதோ அதுதான்... பெக்கர்ஸ் கென்னாட் பீ சூஸர்ஸ்னு சொல்வாங்களாமே..."
===========================================================================================================
இந்த வார பூ!
காரத்தைதான் தன்னால் தர முடிகிறது என்று உள்ளுக்குள் வெட்கமா? இல்லை, தனது இனம் பத்திரமாக இருக்கிறதா என்று உஷாராக பார்த்துக் கொண்டே இருக்கிறதா... ஏனோ இந்தப் பூக்கள் கீழ் நோக்கியே இருக்கின்றன... கீழே அமர்ந்து அதன் முகத்தை எடுத்த புகைப்படத்தைக் காணோம்!
=======================================================================================================
கூட்டுக்குடும்ப ஆசை எனக்கும் இருந்தது. இப்போது இல்லை என்று சொல்ல மாட்டேன், வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எழுத ஆரம்பித்த சகோதரி கமலா ஹரிஹரன் தனது கனவும் கமலாவும் தளத்தில் "எங்கள் ப்ளாக்" பற்றி கீழ்க்கண்டவாறு சொல்லி நெகிழ்த்தி உள்ளார்.
நன்றி சகோதரி.. இந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் - நீங்கள் உட்பட - இதில் பங்கு உண்டு. எல்லோருக்கும் நன்றி.
அன்று நடக்காத ஒன்றை, தெரியாத முகங்கள் ஏற்படுத்திய உற்சாக உறவுக் கூட்ட மகிமையை, அப்படி சேர்ந்து பேசி, கூடி மகிழ்ந்திருக்கும் உறவின் பெருமையை அறிய வைக்க இன்று "எங்கள் ப்ளாக்" மூலமாக உணரும்படி ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
ஒரு குடும்பமாக தினமும் அவரவர்கள் சந்தோசங்கள், வருத்தங்கள் ஆற்றாமைகள் ஆக்கங்கள் என பகிர்ந்து கொள்ளும் எ. பி உறவின் கூட்டங்களுக்கு நடுவே நானும் தினமும் பேசி உலாவி வருவது அன்றைய "நினைவுகளை" புரட்டிப்பார்த்துச் சென்றது. இங்கும் ஒரு சிலரை தவிர அனைவரும் அறியாத தெரியாத முகங்கள்தான். (என்னையும் சேர்த்து) ஆயினும் உடல் நலம் சரியில்லாத போது அன்புடன் விசாரிப்பதிலிருந்து, அனைவரது உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஒரு உறவு குடும்பமிது.
என் வலைத்தளம் ஆரம்பித்து எனக்கு தெரிந்த மாதிரி பதிவுகள் எழுதி அதற்கு கருத்துக்கள் வரும் போது, அதற்கு பதிலளித்து எனக்கு புன்னகைக்க மட்டுமே தெரியும். ஆனால் நான் புன்னகைப்பது யாருக்குத் தெரியும்? ( மோனலிஸாவின் புன்னகை என்றால் "இதுதான்" என்று அனைவரும் உணர்ந்தது. ஆனால் அது விலை மதிப்பற்றது.. ) இங்கு வந்து குடும்பத்தில் எ. பி குடும்பத்தில் ஒருவர் என்று ஆன பின்தான் புன்னகையிலிருந்து சற்று முன்னேறி வாய் விட்டு சிரிக்க கற்றுக் கொண்டேன். ஹா. ஹா. ஹா.ஹா மிகவும் நன்றி "எங்கள் ப்ளாக்" சகோதர சகோதரிகளே அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
===================================================================================================
கூட்டுக்குடும்ப ஆசை எனக்கும் இருந்தது. இப்போது இல்லை என்று சொல்ல மாட்டேன், வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி எழுத ஆரம்பித்த சகோதரி கமலா ஹரிஹரன் தனது கனவும் கமலாவும் தளத்தில் "எங்கள் ப்ளாக்" பற்றி கீழ்க்கண்டவாறு சொல்லி நெகிழ்த்தி உள்ளார்.
நன்றி சகோதரி.. இந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் - நீங்கள் உட்பட - இதில் பங்கு உண்டு. எல்லோருக்கும் நன்றி.
அன்று நடக்காத ஒன்றை, தெரியாத முகங்கள் ஏற்படுத்திய உற்சாக உறவுக் கூட்ட மகிமையை, அப்படி சேர்ந்து பேசி, கூடி மகிழ்ந்திருக்கும் உறவின் பெருமையை அறிய வைக்க இன்று "எங்கள் ப்ளாக்" மூலமாக உணரும்படி ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
ஒரு குடும்பமாக தினமும் அவரவர்கள் சந்தோசங்கள், வருத்தங்கள் ஆற்றாமைகள் ஆக்கங்கள் என பகிர்ந்து கொள்ளும் எ. பி உறவின் கூட்டங்களுக்கு நடுவே நானும் தினமும் பேசி உலாவி வருவது அன்றைய "நினைவுகளை" புரட்டிப்பார்த்துச் சென்றது. இங்கும் ஒரு சிலரை தவிர அனைவரும் அறியாத தெரியாத முகங்கள்தான். (என்னையும் சேர்த்து) ஆயினும் உடல் நலம் சரியில்லாத போது அன்புடன் விசாரிப்பதிலிருந்து, அனைவரது உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கும் ஒரு உறவு குடும்பமிது.
என் வலைத்தளம் ஆரம்பித்து எனக்கு தெரிந்த மாதிரி பதிவுகள் எழுதி அதற்கு கருத்துக்கள் வரும் போது, அதற்கு பதிலளித்து எனக்கு புன்னகைக்க மட்டுமே தெரியும். ஆனால் நான் புன்னகைப்பது யாருக்குத் தெரியும்? ( மோனலிஸாவின் புன்னகை என்றால் "இதுதான்" என்று அனைவரும் உணர்ந்தது. ஆனால் அது விலை மதிப்பற்றது.. ) இங்கு வந்து குடும்பத்தில் எ. பி குடும்பத்தில் ஒருவர் என்று ஆன பின்தான் புன்னகையிலிருந்து சற்று முன்னேறி வாய் விட்டு சிரிக்க கற்றுக் கொண்டேன். ஹா. ஹா. ஹா.ஹா மிகவும் நன்றி "எங்கள் ப்ளாக்" சகோதர சகோதரிகளே அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
===================================================================================================
என்ன ஆச்சு? யாரும் வரலை?
பதிலளிநீக்குஎல்லோரும் நலம் தானே? தி.கீதா வரலைனால் காரணம் இருக்கு. துரை சார்? வேலை அதிகம்? பானுமதி? ஶ்ரீராம்? எங்கே போனீங்க எல்லோரும்? தனியா இருக்க பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்குங்கோ! :(
பதிலளிநீக்குபதிவைப் படிச்சாச்சு. பின்னர் விமரிசனம். முதல்லே யாரானும் வாங்க!
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா அக்கா... இங்கேதான் இருக்கேன்...
பதிலளிநீக்குதுரை ஸார் இணைய இணைப்பு கிடைக்காமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இன்னும் ஐந்து நிமிடங்களில் பானு அக்கா வருவார். கீதா ரெங்கன் மகனுடன் பிஸி!
பதிலளிநீக்குநான் வந்தேன்.... காலை வணக்கம்
பதிலளிநீக்குஅருமை காலையில் பதிவர் சந்திக்க்ம் இடமாக எங்கள் ப்ளாக் இருப்பதில் மகிழ்ச்சி.எங்கள் ப்ளாக்கும் ஒரு கூட்டுக் குடும்பம்தான்
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குவாங்க முரளிதரன்... காலை வணக்கம். நன்றி.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஏமாந்த கதை மிக வருத்தம்.
உங்கள் பையன் தமிழ் படிக்க ஆரம்பித்தது மிக சந்தோஷம் மா.
பாஹே தாத்தா சொல்லி இருப்பார்.
பச்சை மிளகாய்ச் செடியும் பூக்களும் வண்ண மயம்.
மீண்டும் வருகிறேன்.
வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபூங்குழலி ஏமாற்றியதற்கு கிழக்குப் பதிப்பகம் என்ன செய்யும்?
மகன் வாங்கி வந்து கொடுத்த புத்தகத்தை சுஜா படிப்பது மகிழ்ச்சி.
நீங்களும் புத்தகம் வாங்கி கொடுத்து இருக்க வேண்டும் அன்பளிப்பாய் அப்போது படித்து இருப்பார்.
பச்சை மிளகாய் செடியும் பூவும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகமலா ஹரிஹரன் அவர்கள் சொன்னதை படித்தேன் அவர்கள் சொல்வது உண்மை.
எங்கள் ப்ளாகிற்கு வாழ்த்துக்கள்.
செல்லத்துக்கு கொஞ்சம் இடலி, தோசை மிச்சம் வைத்து இருக்கலாம் பாவம் அதற்கு ஏமாற்றம்.
பதிலளிநீக்குபதிவர்களின் கூடம் "எங்கள் ப்ளாக்" வாழ்க வளர்க!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய காலை வணக்கம். இன்று வியாழன் கதம்பமாயிற்றே என சீக்கிரமாக படிக்க ஆரம்பித்தேன். புத்தகம் வாங்கிய கதை ரசனையான இருந்தது. ஆனால் விலையில் ஏமாற்றம் கொஞ்சம் வருத்தத்துக்குரியது. எதிலெல்லாம் ஏமாற்றுவது என்ற ஒரு தரம் இல்லாமல் போய் விட்டது. நல்ல புத்தகத்தை தங்கள் குடும்பம் வாசித்து மகிழ்வது மகிழ்ச்சி. சுப்பிரமணிய ராஜு கதைகள் நானும் நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்த போது படித்திருக்கிறேன். இன்ன கதை என நினைவில்லை. எழுதியவரின் பெயர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. தொப்புள் கொடி உறவு பற்றி நீங்கள் சொன்னது உண்மை. ஒரு சிறந்த தாயின் இயல்பான குணம் அது. கூடவே என்றும் மாற்றவியலாததும். அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
செல்லங்களின் ஒவ்வொரு புகைப்படங்களும் அருமை. அழகாய் புகைப்படம் எடுத்த தங்கள் மகனுக்கு வாழ்த்துகள். செல்லங்களின் மனதை படித்த தங்களுக்கும் பாராட்டுக்கள். அதற்கேற்ற வர்ணனைகள் அருமை.
மிளகாய் செடி படங்கள் அழகாய் இருந்தன. தன் சிறப்பு தனக்கே தெரியாமல் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை குணத்துடன் பிறந்து வளர்ந்து விட்டதோ என எண்ண வைக்கிறது அதன் வளர்ப்பாகிய பூக்கள்.
அருமை
படித்துக் கொண்டே வரும் போதே என்னைப் பற்றியும் எழுதியிருந்ததை கண்டதும் நானும் மிளகாய் பூக்களானேன். ஹா ஹா ஹா
உண்மையாகவே எ. பி ஒரு சிறந்த கூட்டுக்குடும்பமென்று என் மனதில் அப்போதே பட்டதை எழுதினேன். உண்மைக்கு உடன் பாராட்டாக தங்களிடமிருந்து இன்றைய கதம்பத்தில் என் எழுத்துக்களை இணைந்திருப்பது கண்டு மிகுந்த மகிழ்வுடன் கூடிய மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கதம்பம் நன்றாக இருந்தது..
இதை நான் தட்டச்சு செய்வதற்குள் மாலை வணக்கத்தையும் சொல்லி விடலாம். நடுவில் மின்சாரம் வேறு இல்லை.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வியாழன் கதம்பம் எப்போதும்போல் அருமை
பதிலளிநீக்குபச்சைமிளகாய்ச் செடியை மிகவும் ரசித்தேன். இங்கு நடக்கும் இடத்தில் வெண்டைச் செடிகளை காயுடன் பார்த்து மகிழ்வேன். இன்னும் படமெடுக்கலை.
சில பதிப்பகங்களுக்கு நேரில் சென்றால் 25% கழிவு கிடைக்கும். நான் அப்படித்தான் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்திருக்கிறேன்.
தாலிக்கொடி-தொப்புள்கொடி உறவு - இதை முதல் குழந்தை பிறந்தபின்பே தெரிந்திருக்குமே. மனைவிக்கு முதலில் குழந்தைகள், அப்புறம்தான் கணவன். சில சமயங்களில் அவங்க பெற்றோர், சகோதர சகோதரியர் வந்தா, அதுக்கு அப்புறம்தான் கணவன். ஹாஹாஹா
பதிலளிநீக்குதிரு. நெ.த. அவர்களின் கருத்தை அழுது கொண்டே இரசித்தேன்.
நீக்குவாங்க வல்லிம்மா... வணக்கம். என் பையன் எனக்கு வாங்கி கொடுத்தானே தவிர அவன் வாசிக்கவில்லைம்மா...பாஹே தாத்தா சொல்லிக்கொண்டேதான் இருந்தார்... ஹூம்!
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... பூங்குழலிக்கு தெளிவான வழிகாட்டுதல்களை கிழக்கல்லவா கோத்திருக்கவேண்டும்? கொஞ்சம் விலையைக் குறைக்கச் சொல்லிச் சொன்னதற்கு அங்கிருந்த விற்பனையாளர், "கிழக்கு ஸார்... யார் கிட்ட?" என்றாராம். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று மகன் என்னிடம் கேட்டான்.
பதிலளிநீக்குகோமதி அக்கா.. நான் விருந்துகளில் சாப்பிடும்போது அனாவசியமாக எதையும் போட்டுக்கொள்ள மாட்டேன். அதனால் வீணும் செய்ய மாட்டேன். சிலபேர் அப்படி மீதம் வைத்தால்தான் மற்ற உயிர்களுக்காகும் என்பார்கள். ஆனாலும் எனக்கு அதில் சம்மதமில்லாததால் எதையும் மிச்சம் வைக்காமல் / வீணாக்காமல் சாப்பிட்டு விடுவேன்! ஆனால் இங்கு செல்லத்தின் ஏமாற்றம் பாவமாகத்தான் இருக்கிறது!
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி... நன்றி உங்கள் கருத்திற்கு.
பதிலளிநீக்குவாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..
பதிலளிநீக்குஇந்தப் புத்தகம் சுப்ரமணியர் ராஜுவின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு.
மிளகாய்ப் பூக்கள் தாழ்வுணர்ச்சியுடன் இருப்பது போலல்லாமல் ஏதோ ஒன்றை வாட்ச் செய்துகொண்டே இருப்பது போலவே எனக்குத் தோன்றியது!
//படித்துக் கொண்டே வரும் போதே என்னைப் பற்றியும் எழுதியிருந்ததை கண்டதும் நானும் மிளகாய் பூக்களானேன்.//
ஹா... ஹா... ஹா... நல்லா எழுதறீங்க...
வாங்க நெல்லைத்தமிழன்... பதிப்பகங்களின் பெரும்வகையில் பேசினால் அப்படி கொஞ்சம் கூடவே தள்ளுபடி கிடைக்கும்தான். ஆனால் எல்லா பதிப்பகங்களிலும் அல்ல. படங்களை ரசித்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குநெ.த
பதிலளிநீக்கு//சில சமயங்களில் அவங்க பெற்றோர், சகோதர சகோதரியர் வந்தா, அதுக்கு அப்புறம்தான் கணவன். ஹாஹாஹா//
ஆமாம்... ஆமாம்... ஆமாம்.... ஆமாம்.... ஆமாம்... காதல் கல்யாணங்களில் கூட இப்படி இருக்கிறது பாருங்கள்... அதுல மட்டும் என்ன ஸ்பெஷல்னு கேட்காதீங்க!
வாங்க கில்லர்ஜி... நெகிழ்த்துகிறீர்கள்.
பதிலளிநீக்குஸ்ரீராம் - //காதல் கல்யாணங்களில் கூட இப்படி இருக்கிறது பாருங்கள்// - நான் கங்கை அமரன் எழுதிய புத்தகங்களின் தொகுதியை (நக்கீரனில் எழுதியது) படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படி ஆழ்ந்த காதல் திருமணம் அவர்களோடது என்றெல்லாம் விவரித்திருக்கிறார். திருமணம் நடக்கணும் என்று அவரது காதலி தூக்கமாத்திரைகள் விழுங்கியதையெல்லாம் எழுதியிருக்கிறார்.
பதிலளிநீக்குஇதே கங்கை அமரன் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு திறமைகள் கொண்டிருந்தாலும், ஒரு மனைவிக்கு அவளது கணவன் சாதாரணம்தான் என்று. (அதாவது அவர் மனைவி கலாவுக்கு கங்கை அமரன் 'ஆ எவ்வளவு பெரிய ஆள்' என்ற வியப்பு இல்லை என்ற த்வனியில்)
அதுவும் தவிர, ஒரு செயலின் பயன் கிடைத்த பிறகு, தொடர்ந்து செயல் மிதே ஒருவர் நெருக்கம் காட்டமுடியுமா? 'காதல், திருமணம்' என்பது செயல். குழந்தைகள் குடும்பம் என்பது பயன். (ஆனா காதல் திருமணம் செய்துகொண்ட நிறைய பேரின் கருத்து வேறுமாதிரி இருக்கக்கூடும்)
இவர் (க.அ) இண்டெரெஸ்டிங் ஆகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் எழுதறார். அது இ.ராவின் குணத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுது.
///எங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்///
பதிலளிநீக்குகிழக்குப் பறவை மேற்கில் பறக்குதூஊஊஊஊ... :) ஸ்ரீராம் இண்டிரெக்ட்டா என்னமோ ஜொள்ள வாறார்ர்:)).. அஞ்சு சென்னைக்கு கிழக்கிலே எந்த ஊர் இருக்குதெனக் கொஞ்சம் கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ:)) ஊரைக் கண்டுபிடிச்சால் மீ ஆளைக் கண்டு பிடிப்பேன்:)) ஹையோ இது வேற கண்டு பிடிக்கிறது..:).
நெல்லை,
பதிலளிநீக்குகங்கை அமரன் எழுதியதா? தலைப்பு? அவர் மேடைகளில் சுவாரஸ்யமாகப் பேசுவார். இளையராஜாவுக்கு நேர் எதிர். சமயங்களில் இளையராஜா செய்யும் தவறுகளை தைரியமாகச் சுட்டியும் காட்டுவார்.
//அதுவும் தவிர, ஒரு செயலின் பயன் கிடைத்த பிறகு, தொடர்ந்து செயல் மிதே//
அது என்னவோ உண்மைதான்! கிடைக்கும் வரைதான் ஆவலாதி. அப்புறம் அவதிதான்!!
அதிரா.. அந்தப் பாடல் எனக்குப் பிடிக்காது. ஆனால் நாளைய பாடல் கிழக்கு சம்பந்தப்பட்டதுதான்!!
பதிலளிநீக்கு///நெ.த. said...
பதிலளிநீக்குதாலிக்கொடி-தொப்புள்கொடி உறவு - இதை முதல் குழந்தை பிறந்தபின்பே தெரிந்திருக்குமே. மனைவிக்கு முதலில் குழந்தைகள், அப்புறம்தான் கணவன்.////
ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்:)) இங்கின “சில மனைவிமார்கள்” எனப் போடவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் எல்லாம் அப்படி இல்லை ஒரு கண் குழந்தைகள் மற்றக் கண் கணவர் இப்படித்தான் எப்பவும் நினைப்பேன்ன்.. அதுக்காக இடது கண் ஆரு வலது கண் ஆரு என புயுக் கொயப்பத்தை உண்டாக்கிடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:))..
/// சில சமயங்களில் அவங்க பெற்றோர், சகோதர சகோதரியர் வந்தா, அதுக்கு அப்புறம்தான் கணவன். ஹாஹாஹா///
ஹலோ எச்சூச்ச்மீஈஈ.. இதில் என்ன தவறு இருக்கு.. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாம் எனப் பெரியவங்க ஜொள்ளியிருக்கினம்:)).. வீட்டிலிருப்போரை எப்பவும்தான் கவனிப்போம்.. எப்பவாவது வருவோரை அவர்கள் வரும்போது கவனிக்கோணும்.. அந்த நேரமும் வந்தோரை விட்டுப்போட்டு கணவரையே கவனிச்சால் அது தகுமாஆஆஆஆ?:))..
நான் பார்த்திருக்கிறேன் சில குடும்பங்களில் எப்பவுமே தன் பிள்ளைக்கே முக்கியத்துவம்.. ஒரு வீட்டுக்குப் போனாலும் சரி இல்ல அடுத்த வீட்டுக் குழந்தை நம் வீட்டுக்கு வந்தாலும் சரி, தன் குழந்தைக்கே முக்கியத்துவம் முன்னுரிமை குடுப்போர் இருக்கிறார்கள்.. அதை நான் அடியோடு வெறுப்பேன்.
என் வீட்டுக்கு ஒரு குழந்தை வந்திட்டால், அக்குழந்தைக்கே முதலிடம் தருவேன் நான், என் பிள்ளையை எப்பவும் நான் கவனிப்பேன் தானே.. அடுத்தவர்கள் முன்னால்தான் என் பிள்ளையை தூக்கிப் பிடிக்கோணும் என என்ன முக்கியம்?:))
//ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஅதிரா.. அந்தப் பாடல் எனக்குப் பிடிக்காது. ஆனால் நாளைய பாடல் கிழக்கு சம்பந்தப்பட்டதுதான்!!///
ஹா ஹா ஹா மொத்தத்தில கிழக்கால ஏதோ புரொப்பிலம்:)) அப்பூடித்தானே:))
அதிரா...
பதிலளிநீக்கு////நெ.த. said...
தாலிக்கொடி-தொப்புள்கொடி உறவு - இதை முதல் குழந்தை பிறந்தபின்பே தெரிந்திருக்குமே. மனைவிக்கு முதலில் குழந்தைகள், அப்புறம்தான் கணவன்.////
ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்:)) இங்கின “சில மனைவிமார்கள்” எனப் போடவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் எல்லாம் அப்படி இல்லை ஒரு கண் குழந்தைகள் மற்றக் கண் கணவர் இப்படித்தான் எப்பவும் நினைப்பேன்ன்.. அதுக்காக இடது கண் ஆரு வலது கண் ஆரு என புயுக்//
இதெல்லாம் நெல்லைதான் பதில் சொல்லணும். பொறுப்பு எனக்கில்லை!!! ஹா... ஹா... ஹா...
//ஹா ஹா ஹா மொத்தத்தில கிழக்கால ஏதோ புரொப்பிலம்:)) அப்பூடித்தானே:))//
பதிலளிநீக்குஅதிரா... அப்போ பதிவு புரியவில்லையா? குழப்பி இருக்கேனா?
////ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குநெ.த
//சில சமயங்களில் அவங்க பெற்றோர், சகோதர சகோதரியர் வந்தா, அதுக்கு அப்புறம்தான் கணவன். ஹாஹாஹா//
ஆமாம்... ஆமாம்... ஆமாம்.... ஆமாம்.... ஆமாம்... காதல் கல்யாணங்களில் கூட இப்படி இருக்கிறது பாருங்கள்... அதுல மட்டும் என்ன ஸ்பெஷல்னு கேட்காதீங்க!///
ஹா ஹா ஹா எவ்ளோ நாளாக இதை மனதிலே காவிக்கொண்டு திரிந்திருப்பார் ஸ்ரீராம்:) கொட்டுவதுக்கு ஒரு இடம் கிடைக்காதோ என ஹா ஹா ஹா... அஞ்சு நேசறியில் கேய்க்க முடியாத கிளவிகளை ஹையோ கேள்விகளை எல்லாம் இத்தனை “65” வருசமாக் காவி வந்து, இப்போ கெள அண்ணன் மாட்டினார் எனக், கூடையால அள்ளிக் கொட்டுவதைப்போல:)) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ ரொம்ப பிஸியாக்கும் என்னைத்தேடக்கூடாது ஜொள்ளிட்டேன்ன்ன்:))
//அதிரா... அப்போ பதிவு புரியவில்லையா? குழப்பி இருக்கேனா?
பதிலளிநீக்குJune 14, 2018 at 12:30 PM//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டிசுரேப்பு பண்ணாதீங்கோ ஸ்ரீராம்.. நான் எங்கே பதிவுக்க்குள் நுழைஞ்சேன்:)) இன்னும் தலைப்பை விட்டு உள்ளே போகவே இல்லையே கர்ர்ர்:))
அதிரா...
பதிலளிநீக்கு//ஹா ஹா ஹா எவ்ளோ நாளாக இதை மனதிலே காவிக்கொண்டு திரிந்திருப்பார் ஸ்ரீராம்:) கொட்டுவதுக்கு ஒரு இடம் கிடைக்காதோ//
கரெக்ட். ஆனால் பலபேர் மனக்குறையை நான் ஒருத்தன் சொல்லி இருக்கேனோ என்னவோ!
// நான் எங்கே பதிவுக்க்குள் நுழைஞ்சேன்:)) இன்னும் தலைப்பை விட்டு உள்ளே போகவே இல்லையே கர்ர்ர்:)) //
இப்போ நியாயமா நான்தான் கர்ர்ர் சொல்லணும்!
///நான் புத்தகக் கண்காட்சி போவது எல்லாம் அவனுக்குத் தெரியுமே... வீட்டிலும் பரீட்சைக்குப் படிப்பது போல புத்தகமும் கையுமாக இருப்பதை வேற பார்த்திருக்கிறானே...///
பதிலளிநீக்குஹா ஹா ஹா வேலை.. வேலை விட்டால் புத்தகம் இல்லை எனில் கொம்பியூட்டர்ர்.. ஆனா காதல் கல்யாணத்திலும் பெரிய மாற்றம் இல்லை எனப் புலம்பல்ஸ் மட்டும் குறைவில்லை ..:)) ஹையோ எனக்கென்னமோ ஆச்சு இண்டைக்கு:)).
உங்கள் மகன் முடிவெடுத்திருக்கிறார்.. எப்படியாவது உங்களுக்கு புத்தகங்கள் வாங்கித்தருவதென.. அதனாலதான் ஃபோஸ் பண்ணி வாங்கித் தந்திருக்கிறார் அது ஹப்பிதானே... என் கணவரும் சொல்லும் ஒரு விசயம் நினைவுக்கு வருது.. மனதுக்கு ஒரு பொருள் நன்கு பிடித்துக்கொண்டால் வாங்கி விட வேண்டும்.. காசுக்கணக்குப் பார்க்கக்கூடாது..... அப்படித்தான் உங்கள் மகனும் நினைத்திருப்பார் போலும்...
அதிரா..
பதிலளிநீக்கு//ஆனா காதல் கல்யாணத்திலும் பெரிய மாற்றம் இல்லை எனப் புலம்பல்ஸ் மட்டும் குறைவில்லை ..:)) ஹையோ எனக்கென்னமோ ஆச்சு இண்டைக்கு:)).//
அவங்க விடாம போன்ல இல்ல இருப்பாங்க? நான் அவங்க முகத்தைப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்க முடியுமா? கர்ர்ர்...!!!!!
// மனதுக்கு ஒரு பொருள் நன்கு பிடித்துக்கொண்டால் வாங்கி விட வேண்டும்..//
என்னுடைய கொள்கையும் அஃதே...!
அதிரா - //ஒரு கண் குழந்தைகள் மற்றக் கண் கணவர்// - ஜாலியா எழுதியிருக்கீங்க. ஆனால் இது சாத்தியமில்லாதது. ஆனால் அதுல தவறில்லை. நான் நிறையபேரை கவனித்திருக்கேன் (சொந்த அனுபவமும் இருக்கு). 'தாய்' என்பது ஒரு பொறுப்பு. 'மனைவி' என்பதும் பொறுப்புதான் ஆனால் பெண், 'தாய்' என்ற பொறுப்பில்தான் மிளிருவாள், ஏன்னா, 'மனைவி' என்பதில், ரத்த சம்பந்தம் இல்லை.
பதிலளிநீக்கு'தானாடாவிட்டாலும் சதை ஆடும்', 'Blood is thicker' என்றெல்லாம் படித்திருப்பீர்களே ('டி' ஆக்கும்ம்ம்ம்)
இன்னொன்றும் யோசித்துப் பாருங்கள். ஒரு தாய்க்கு 'எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான்' என்று பொதுவாகச் சொன்னாலும், உண்மை நிலவரம் அப்படி இருக்காது. 3 பசங்கள்னா, முதல் பையன், தனக்கு 'அம்மா' என்ற ஸ்தானத்தை வழங்கியதாலும், 3வது 'கடைக்குட்டி' என்பதாலும் தாய் கூடுதல் ஒட்டுறவுடன் இருப்பாள் (பொதுவா). உங்களையும் மற்றவர்களையும் அவதானித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும்.
//இன்னொன்றும் யோசித்துப் பாருங்கள். ஒரு தாய்க்கு 'எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான்' என்று பொதுவாகச் சொன்னாலும், உண்மை நிலவரம் அப்படி இருக்காது.//
பதிலளிநீக்குஉண்மை நெ.த.. சாத்தியமில்லாத விஷயமும் கூட.
//3வது 'கடைக்குட்டி' என்பதாலும்//
இரண்டுக்குப்பின் எப்போதும் வேண்டாம்!!!
அந்த “விரும்பிச் சொன்ன பொய்கள்” ஹெடிங் பார்க்கவே புத்தகம் வாங்கோணும் எனும் ஆசை வருகிறது... குட்டிக் குட்டிக் கதைகள் எனக்கு படிக்கப் பிடிப்பதில்லை புத்தகத்தில்.....
பதிலளிநீக்கு//சரி, அது என்ன கிழக்குப் பதிப்பகம் ஏமாற்றி இருக்கிறது என்று தலைப்புப் போட்டிருக்கிறேனே... என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.. ///
ஹா ஹா ஹா நல்லவேளை தெளிவாக விளக்கம் குடுத்திட்டீங்க..:))
மகனின் கை எழுத்து ரொம்ப அழகு.... பொக்கிசம்:).
///நான் பலமுறை ஏற்கெனவே சொல்லி, கெஞ்சியும் கூட புத்தகம் படிக்காத என் பாஸ் மகன் புத்தகம் வாங்கிய சந்தோஷத்தில் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.///
ஹா ஹா ஹா இதுக்குக் காரணம் என்ன தெரியுமோ? மகன் வாங்கித்தந்ததில் எனக்கும் சம உரிமை உண்டு மீயும் படிப்பேன் என்பதாகும் ஹா ஹா ஹா...
//எடுத்த உடனேயே சுப்ரமணிய ராஜு கதைகள்! தாலிக்கொடி உறவைவிட தொப்புள்கொடி உறவு பெரிதுதான்! விசு சரியாகத்தான் சொல்லியிருக்கார்!//
இவ்ளோ காலமும் அவ புக் படிக்க மாட்டேன் எனச் சொல்லிக்கொண்டுதானே இருந்தா:)).. இப்போ படிக்கத்தொடங்கிட்டா எனச் சந்தோசப்பட்டீங்க இல்ல:)).. இனித்தான் இருக்கு வசனம் வசனமா அடி:)) ஹா ஹா ஹா .. நான் எங்கு சொன்னேன் சுஜாத்தாதான் எழுதியிருக்கிறார் எனச் சொல்லித்தப்பிடலாமெல்லோ ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))
////3வது 'கடைக்குட்டி' என்பதாலும்//
பதிலளிநீக்குஇரண்டுக்குப்பின் எப்போதும் வேண்டாம்!!!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்பூடித்தான் எங்கட அப்பா அம்மாவும் இருந்தவையாம்ம்.. ஆனா ஏதோ பை மிசுரேக்கா இடைவெளி விட்டு, மீ வந்திட்டேனாம்ம்ம்ம்ம்ம் அதனால் படு செல்லம் வீட்டில்:)) ஹா ஹா ஹா.
அதிரா...
பதிலளிநீக்கு//மகனின் கை எழுத்து ரொம்ப அழகு.... பொக்கிசம்:).//
பொக்கிஷமோ இல்லையோ... பாசம். திருமணத்துக்குப்பின்னும் அது தொடர மருதமலை முருகன் அருள்புரியவேண்டும்!
//மகன் வாங்கித்தந்ததில் எனக்கும் சம உரிமை உண்டு//
ஆனால் நான் வாங்குவதில் முழு உரிமையும் அவருக்குதானே?!!
//ஆனா ஏதோ பை மிசுரேக்கா//
ஹா... ஹா.... ஹா....
//அவங்க விடாம போன்ல இல்ல இருப்பாங்க? நான் அவங்க முகத்தைப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்க முடியுமா? கர்ர்ர்...!!!!!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஸ்ரீராம் இங்கும் ஒரு கணவர் இப்படித்தான் சொன்னார் எப்ப பார்த்தாலும் மனைவி அவங்க வீட்டுக்காரர்களுடன் ஃபோனிலேயே பேசிக்கொண்டிருப்பா என.... அதைக் கொஞ்சம் மாற்றத்தான் வேணும்:)...
நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவரா இருக்கிறீங்க, கொஞ்சம் உங்க பொஸ் ஐ மிரட்டிப்பார்க்கலாமே ஹா ஹா ஹா ... ஹையோ முருகா படிச்சதும் கிழிச்சிடுங்கோ நான் இண்டைக்கு கீரை மசியல்போல ஆகிடப்போகிறேன்:)) அஞ்சூஊஊஊஊஊ கமோன் பிளீஸ்ஸ் ஜெல்ப் மீ:)) எனக்கு செவின் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊ:))
@ஸ்ரீராம்
பதிலளிநீக்கு///ஆனால் நான் வாங்குவதில் முழு உரிமையும் அவருக்குதானே?!!//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பின்ன உங்களை அடுத்தவங்களுக்கு பங்கு குடுக்க முடியுமோ?:) நீங்க ஆசைப்பட்டாலும் கூட...:) ஹா ஹா ஹா ஹையோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ வைரவா என்னைக் காப்பாத்துங்ங்ங்:))
அதிரா..
பதிலளிநீக்கு//கொஞ்சம் உங்க பொஸ் ஐ மிரட்டிப்பார்க்கலாமே//
நான் நல்லா இருக்கறது உங்க கண்ணை உறுத்துகிறது போல...
//ப்ப பார்த்தாலும் மனைவி அவங்க வீட்டுக்காரர்களுடன் ஃபோனிலேயே பேசிக்கொண்டிருப்பா//
என் பாஸ் என் பக்க உறவினர்களிடமும் அதே நேரம் பேசுவார்! ஆனால் ஒன்று.. நான் பாஸ் கிட்ட பேசவேண்டும் என்றாலே போனில்தான் தொடர்பு கொள்ளவேண்டும் - அவர் அடுத்த அறையில் இருந்தாலும்! கால் இண்டரப்ஷன் பார்த்து வந்து என்ன என்று (சைகையில்) கேட்பார்!
//பின்ன உங்களை அடுத்தவங்களுக்கு பங்கு குடுக்க முடியுமோ?//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் புத்தகம் அல்லது வாங்கும் பொருள்கள் பற்றிச் சொல்கிறேன்!
@ நெ.தமிழன்
பதிலளிநீக்கு//இன்னொன்றும் யோசித்துப் பாருங்கள். ஒரு தாய்க்கு 'எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான்' என்று பொதுவாகச் சொன்னாலும், உண்மை நிலவரம் அப்படி இருக்காது. 3 பசங்கள்னா, முதல் பையன், தனக்கு 'அம்மா' என்ற ஸ்தானத்தை வழங்கியதாலும், 3வது 'கடைக்குட்டி' என்பதாலும் தாய் கூடுதல் ஒட்டுறவுடன் இருப்பாள் (பொதுவா). உங்களையும் மற்றவர்களையும் அவதானித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும்.//
இது உண்மைதான் நெ.தமிழன்.. அதில என்னைப்பொறுத்து. பாசம் காடுவது செல்லம் கொடுப்பது மட்டும்தான் மாறுபடும் மற்றும்படி ஒன்றாகத்தானே கவனிப்போம்ம்..
எங்கள் வீட்டில் மூத்தவரை[இப்போ அல்ல சின்ன வயதில்] மிரட்டினால் அழுவார்.. ஆனா அதேபோல சின்னவரை மிரட்டினால்ல் உடனே சொண்டை நீட்டிக் கொண்டும் அழுது கொண்டு லிப் கிஸ் தர ஓடி வருவார்ர்.. அப்போ சின்னனை மிரட்ட எப்படி மனசு வரும்?:)).. இதனால மூத்தவர் கேட்பார்ர் அவரை மட்டும் மிரட்டுறீங்க இல்ல என ஹா ஹா ஹா...
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//பின்ன உங்களை அடுத்தவங்களுக்கு பங்கு குடுக்க முடியுமோ?//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் புத்தகம் அல்லது வாங்கும் பொருள்கள் பற்றிச் சொல்கிறேன்!///
அது எல்லோருக்கும் புரியும் .. ச்சும்மா மிரட்டினேன்ன்:))
ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன் ஒருதடவை சொனது நினைவுக்கு வருது...
“பதறாதீங்க ஸ்ரீராம்” ஹா ஹா ஹா..
///என் பாஸ் என் பக்க உறவினர்களிடமும் அதே நேரம் பேசுவார்! ஆனால் ஒன்று.. நான் பாஸ் கிட்ட பேசவேண்டும் என்றாலே போனில்தான் தொடர்பு கொள்ளவேண்டும் - அவர் அடுத்த அறையில் இருந்தாலும்! கால் இண்டரப்ஷன் பார்த்து வந்து என்ன என்று (சைகையில்) கேட்பார்!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா இப்போ பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயும் ஃபோனில்தான் அழைக்கிறோம்.. பிள்ளைகளையும்.. இல்லாவிட்டால் கூப்பிட்டால் காது கேளாது:)
ஸ்ரீராம் - //பாசம். திருமணத்துக்குப்பின்னும் அது தொடர மருதமலை முருகன் அருள்புரியவேண்டும்!// - பாசம் எப்போதும் இருக்கும். இருந்தாலும், அவங்க அன்பு எப்போதும் 'கீழ் நோக்கித்தான் பாயும்'. பையருக்கு முதலில் 'மனைவி' அப்புறம் கொஞ்ச வருடத்தில் அவங்க பசங்க என்றுதான் இருக்கும். மனசில் பெற்றோர் மீது பாசம் இருக்கும். இரண்டு பேரிடத்தில் கான்ஃப்லிக்ட் வந்தால், அவருடைய சப்போர்ட், பசங்க, மனைவி என்ற ஆர்டரில்தான் இருக்கும். இதுதானே உலக இயல்பு. ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குபொதுவா 'எதிர்பார்ப்பு' இல்லைனா ஏமாற்றமே இல்லை. ஆனால் நாம் எல்லாரும் சாதாரணர்கள்தானே. எதிர்பார்ப்பு இருக்குமல்லவா?
அதிரா..
பதிலளிநீக்கு//ஏகாந்தன் அண்ணன் ஒருதடவை சொனது நினைவுக்கு வருது...
“பதறாதீங்க ஸ்ரீராம்” ஹா ஹா ஹா.. //
ஆஹா... எப்போ? மறந்துட்டேனே...!
//இப்போ பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயும் ஃபோனில்தான் அழைக்கிறோம்.//
எல்லா இடத்திலும் இதே நிலைதான் என்பது ஒரு ஆறுதல்!
நெல்லை...
பதிலளிநீக்கு//அவங்க அன்பு எப்போதும் 'கீழ் நோக்கித்தான் பாயும்'. பையருக்கு முதலில் 'மனைவி' அப்புறம் கொஞ்ச வருடத்தில் அவங்க பசங்க என்றுதான் இருக்கும். மனசில் பெற்றோர் மீது பாசம் இருக்கும். //
உண்மை. நாம் நம்மை வைத்தேயும் கணக்கு பண்ணலாம். மாற்ற முடியாத நிலை.
எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். (இங்கு போட்ட கமெண்ட் சும்மா..) ஆனால் என் பாஸ் ரொம்பவே எதிர்பார்ப்பார் என்பது என் எண்ணம்.
புத்தகம் வாங்கிய கதையே ஒரு கதை ஆக்கி விடலாம் சார்
பதிலளிநீக்குஆஃப்கானிஸ்தான் க்ரிக்கெட் மேட்ச்சுக்கு மத்தியில் இந்தப்பக்கம் வந்து எட்டிப் பார்ப்போமெ என்று பார்த்தால் ஏகப்பட்டது ஓடியிருக்கிறதே அதற்குள்..எங்கே புகுவது, எப்படிப் புகுவது என்பதே பெரிய விஷயமாக இருக்கும்போலிருக்கிறதே..
பதிலளிநீக்குஎப்போப்பார்த்தாலும் பெரிய, பெரிய அல்லது கலர்ஃபுல்லான பூக்களையே கேமராக்கள் தேடி ஓடுதே என நினைத்திருக்கையில், மிளகாய்ச் செடியிலும் பூ இருக்கும் எனத் தேடிக் கண்டுபிடித்த கேமராவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அந்த அதீத கவனம் தாங்கமுடியாமல்தானோ ஒவ்வொரு பூவும் இப்படி வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு..:
அடடா என்ன அழகு..
அருகே வந்து பழகு ...!
//பொதுவா 'எதிர்பார்ப்பு' இல்லைனா ஏமாற்றமே இல்லை. ஆனால் நாம் எல்லாரும் சாதாரணர்கள்தானே. எதிர்பார்ப்பு இருக்குமல்லவா?//
பதிலளிநீக்குநான் சொல்ல நினைத்ததை அப்படியே நெ.தமிழன் சொல்லிட்டார். நானும் எப்பவும் மனதை திடப்படுத்துவேன் எதிர்பார்க்கக்கூடாது என, எதிர்பார்ப்பதை விட பிள்ளைகளுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது.. அவர்களுக்கு என்ன பிடிக்குதோ அப்படியே அவர்களைச் சுகந்திரமாக விட்டிடோணும் என்றுதான் நினைப்பேன்...
ஆதிகாலத்தில் பெற்றோர் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருந்தமையால், வயதானதும் வருமானம் இல்லாமல் போய் விடும் அப்போ பிள்ளைகளையே அனைத்துக்கும் எதிர்பார்க்கோணும் ஆனா இக்காலத்தில் அப்படி நிலைமை யாருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன், அதனால இக்கால எதிர்பார்ப்பதென்பது நம் சுகயீனத்தைக் கவனிக்கவும் நம்மை அன்பாக விசாரிக்கவும்தானே..
இன்னொன்று இப்போ நாம் திடமாக இருக்கிறோம் எதிர்பார்க்கக்கூடாது என நினைக்கிறொம், ஆனா அந்த வயது, அந்த தனிமை, அந்த சூழல் ஏற்படும்போது நம் மனம் எப்படி மாறுமோ அதுவும் அந்த மருதமலை வள்ளிக்கே வெளிச்சம்:))
சரி இண்டைக்கு நான் அதிகம் பேச மாட்டெனாக்கும்:)..
பதிலளிநீக்குஹா ஹா ஹா அந்த நாலுகால் வைரவச் செல்லம் என்ன அழகா உணவை தேடுகிறது மேசையில்.. சிலபேர் எனில் ஜம்ப்பண்ணி ஏறிவிடுவார்கள்.. இவர் ஏறவில்லை...
யாரும் அடிச்சு விரட்டாதது மனது மகிழ்ச்சி.
ஆஹா மிழகாய்ப் பூக்கள் அழகு... எவ்ளோ மிழகாய்கள்.. நான் இங்கு வீட்டுக்குள் நட்டேன்ன்ன் நிறையப் புத்தது ஆனா ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென ஒரு காய் காய்த்தது.. அதுக்கே அள்வில்லா மகிழ்ச்சி நமக்கு:))
ஹா ஹா ஹா கமலா சிஸ்டர் ஒளிவு மறைவின்றிப் பேசியிருக்கிறா.. அவ இப்பொ வரவர முன்னேறிக்கொண்டேஏஏஏஏஏஏ வருவது அவரது எழுத்துக்களில் தெரியுது... ஆரம்பம் பயப்படுவோம்ம் எப்படி இருப்பார்களோ என்ன என்ன நினைப்பார்களோ எண்டெல்லாம்.. பின்பு பழகிட்டால்ல்ல் அடிதடிதேன் ஹா ஹா ஹா:)).
பதிலளிநீக்கு____________()_____________ சுபம்!!.
வளர ஆரம்பித்த பொழுதே கருகி விட்ட நல்ல எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜு. சாவியில் பாலகுமாரனோடு சேர்ந்து இவர் எழுதிய இரட்டையர் கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருக்கும். அரசியல் பற்றி இவர் எழுதிய
பதிலளிநீக்குஅடித்து அடித்து துவைத்துப் பார்த்தேன்
அழுக்கு போகவில்லை
கையில் எடுத்து உற்றுப் பார்த்தேன்
நீரே அழுக்கு
என்னும் புதுக் கவிதை மறக்க முடியாதது.
வீடுகளில் இலையில் மட்டுமே உணவருந்திய காலத்தில் இலையின் ஓரத்தில் கொஞ்சமாக சாதத்தை எடுத்து வைத்து விட்டுதான் எங்கள் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், காரணம், சாப்பிட்ட இலையை வாசலில் கொண்டு எறியும் பொழுது ஓடி வரும் நாய்கள் மன்னிக்கவும் செல்லங்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதால்தான்.
அதிரா சொல்லியுள்ளவற்றில் சிலதை அப்படியே ஆமோதிக்கிறேன்.
'வாணிபம்’ என்று அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். கூடவே இன்னும் பத்து ரூபாய் வாங்காமல், 10% டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டாம்?
பதிலளிநீக்குஅப்பாவுக்குப் பிடிக்குமே என்று ஆசை ஆசையாய் பிள்ளைவாங்கிக்கொண்டு வந்து கொடுக்க, ஆனந்தப்படுங்கள். பர்சண்ட்டேஜ் கதை எதற்கு?
அபூர்வமான புத்தகம் எனத் தோன்றுகிறது. சுப்ரமண்ய ராஜுவை அந்த சுப்ரமண்யன் ஏன் இவ்வளவு அவசரமாகக் கூப்பிட்டுக்கொண்டானோ?
அலுவலகங்களிலும் புத்தக எக்சிபிஷன் செய்றாங்களா !!
பதிலளிநீக்குஎன் மகளுக்கு புக்ஸ்னா ரொம்ப பிரியம் .நிறைய கலெக்க்ஷன்ஸ் வச்சிருக்கா .பாக்கெட் மணிலாம் புக்ஸுக்கே செலவழிப்பா .எனக்கு முன்பிருந்த ஆர்வம் கணினியால் குறைந்தது :)
ஸ்ரீராமுக்கு வேலைக்கு போகும் மகன் !! ஆச்சர்யம் :) எதோ ஸ்கூல் போற பிள்ளைங்கன்னு நினைச்சேன் :)
பிள்ளைங்க கிட்டருந்து கிஃப்ட் என்பது எவ்ளோ சந்தோஷமான விஷயம் :) அதில் குற்றம் பார்க்க கூடாது :)
பதிலளிநீக்குஎனக்கு அப்படி சந்தர்ப்பம் திருமணத்துக்குமுன் அமையலை அப்போதான் பெர்த்டே கூட பெரிசா செய்ய மாட்டோம் ஊரில் .
மகனோட கையெழுத்து முத்து முத்தா இருக்கு
தடங்கலுக்கு வருந்துகிறேன்
பதிலளிநீக்கு@மியாவ் எனக்கு போலன் அலர்ஜி எதோ மிஸ்டேக் விட்டா மன்னிப்பார் நெல்லை தமிழன் .ஆனா நீங்க மிளகாய் பழத்தை மிழகாய்ன்னு எழுதியிருக்கீங்க ஞானி :)
Fuchsia/ப்ளீடிங் ஹார்ட்லாம் கீழ்நோக்கியே பூக்கும் ஹம்மிங் பேர்ட்ஸ் கு அது வசதி என்பதால்
பதிலளிநீக்குமிளகாய் காய் ஹெவி என்பதால் அதற்க்கு வசதியா முன்னாடியே கீழ்நோக்குதோ :)
ஆஹா செல்லம் ..பரவாயில்லை யாரும் குழந்தையை துரத்தலை ..சின்னத்தில் நான் ஸ்கூலுக்கு போற வழியில் ஒரு கடையில் பைரவச்செல்வத்துக்கு முறுக்கு வாங்கி போட்டேன் .இப்போ நினைச்சா கஷ்டமாயிருக்கு .அது கடிக்க கஷ்டபட்டுச்சோ என்னமோ ஆனா சாப்பிட்டு முடிக்கும்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉங்க ஜூனியருக்கும் வளர்ப்பு பிராணிகள் மிகவும் பிடிக்குமா :) சிலசமயம் பேரண்ட்ஸுக்கு பிடிச்ச விஷயங்கள் அப்படியே பிள்ளைங்களுக்கு தொடரும் எங்க குடும்பத்தில் வம்சா வழியா வருது :) வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு
பதிலளிநீக்கு@ அஞ்சு
பதிலளிநீக்கு//ஸ்ரீராமுக்கு வேலைக்கு போகும் மகன் !! ஆச்சர்யம் :) எதோ ஸ்கூல் போற பிள்ளைங்கன்னு நினைச்சேன் :)///
ஆவ்வ்வ்வ்வ்வ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் ஏதோ வாய் மாறிச் சொல்லிட்டார்ர்:)) இதை எல்லாம் காக்கா போயிடோணுமாக்கும்:)) பப்புளிக்கில போட்டுக் காட்டி உடைக்கக்கூடாது:)). அவர் தான் குழந்தை என கமலா சிஸ்டரின் பக்கம் சொல்லியிருக்கிறார்ர்:)).. ஒருவேளை வயதானால் குழந்தை என்பினம்:)) அந்தக் கொயந்தையா இருப்பாரோ?:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:))..
///மிளகாய் காய் ஹெவி என்பதால் அதற்க்கு வசதியா முன்னாடியே கீழ்நோக்குதோ :)
///
என்னா ஒரு அறிவு என் செக்குக்கு:)) அப்போ பூசணிக்காய்ப் பூ ஏன் மேல் நோக்கிப் பூக்குதூஊஊஊஊஉ?:)) டெல் மீஈஈஈஈஈ:))
@பானுக்கா .எல்லா உயிரிரிடத்தும் அன்பு பாராட்டுற மாதிரிதான் நம் பெரியவங்க முன் யோசனையா செஞ்சாங்க .இலையில் சிறிது உணவு .அப்புறம் எறும்புக்கு மாக்கோலம் குருவி தங்க மாடம் .இப்படி நிறைய .உங்க அம்மா பிரசவமான பெண் பைரவிக்கு மழை நாளில் உணவு கொண்டுபோனது நினைவுக்கு வந்தது (பின்னூட்டத்தில் சொன்னிங்க )
பதிலளிநீக்குஞானி:) athira said...
பதிலளிநீக்கு@ பானுமதி அக்கா..
///அதிரா சொல்லியுள்ளவற்றில் சிலதை அப்படியே ஆமோதிக்கிறேன்.
//
ஆவ்வ்வ்வ் நன்றி நன்றி...வர வர எனக்கு சிஷ்யைகள் கூடிக்கொண்டே வருகினம்:))
@ஞானி .பூசணிக்கா கொடி வகை .சில மலர்கள் பெண்டண்ட் வகை
பதிலளிநீக்குநான் ஒரு தரம் சொன்னதை ஞானி முன்னூறுதரம் சொல்லி உடைச்சிட்டாங்க :)))))))
பதிலளிநீக்கு///Angel said...
பதிலளிநீக்குதடங்கலுக்கு வருந்துகிறேன்
@மியாவ் எனக்கு போலன் அலர்ஜி எதோ மிஸ்டேக் விட்டா மன்னிப்பார் நெல்லை தமிழன் .ஆனா நீங்க மிளகாய் பழத்தை மிழகாய்ன்னு எழுதியிருக்கீங்க ஞானி :)///
அல்லோ மிஸ்டர்.. அந்தப் படத்தில எங்கிருக்கு பயம்?:)) அதிலிருப்பது எல்லாமே காய் தானே? அதான் மிமீ மீமீஈஇ ஓஓஒ அந்த ழ புரொப்ளமோ ஹையோ பழையபடி நம் இமேஜ் ஐ டமேஜ் பண்ணுதே இந்த ழ/ள..
இதுக்குத்தான் அப்பவே கேட்டேன் கெள அண்ணனை.. இதுபற்றி மோடி அங்கிளோடு பேசி.. ழ/ள வை அகராதியில இருந்து தூக்கி விடச் சொல்லி:)) நான் சொன்னா ஆரு கேய்க்கிறா கர்ர்:))
// ஒருவேளை வயதானால் குழந்தை என்பினம்:)) அந்தக் கொயந்தையா இருப்பாரோ?:) //
பதிலளிநீக்குஅது இந்த அகில உலகத்துக்கே தெரியும் அந்த செகண்ட் இன்பன்ஸி குயந்தை நீங்க மட்டும்தான்னு
@SRIRAM
பதிலளிநீக்கு//June 14, 2018 at 3:23 PM
ஞானி:) athira said...
This comment has been removed by the author.//
இந்த கமெண்ட் எனக்கு உடனே வேணும் :)
//Angel said...
பதிலளிநீக்குAngel said...
@ஞானி .பூசணிக்கா கொடி வகை .சில மலர்கள் பெண்டண்ட் வகை//
விடமாட்டேன்ன் இண்டைக்கு எனக்கு நிதி கிடைக்கோணும்.. ச்ச்சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் சொல்ல விட மாட்டேன்ன்ன்ன் மிளகாய் பாரமெனில் அப்போ ஆப்பிள்.. ஒரேஞ் எப்பூடி?:)) ஆவ்வ்வ்வ்வ் ஞானியிடம் ஒரு ஆராட்சி அம்புஜம் மாட்டீஈஈஈஈஈ:))..
//நான் ஒரு தரம் சொன்னதை ஞானி முன்னூறுதரம் சொல்லி உடைச்சிட்டாங்க :)))))))///
ஹா ஹா ஹா அதுதான் ஞானிகளின் ஸ்பெஷாலிட்டியே:))
///Angel said...
பதிலளிநீக்கு@SRIRAM
//June 14, 2018 at 3:23 PM
ஞானி:) athira said...
This comment has been removed by the author.//
இந்த கமெண்ட் எனக்கு உடனே வேணும் :)///
ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதென்ன புயு வம்பாப்போச்சூஊஊஊஊ:))
http://www.likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg
/ கீழே அமர்ந்து அதன் முகத்தை எடுத்த புகைப்படத்தைக் காணோம்!//
பதிலளிநீக்குயூ மீன் SELFIE ?
///Angel said...
பதிலளிநீக்கு// ஒருவேளை வயதானால் குழந்தை என்பினம்:)) அந்தக் கொயந்தையா இருப்பாரோ?:) //
அது இந்த அகில உலகத்துக்கே தெரியும் அந்த செகண்ட் இன்பன்ஸி குயந்தை நீங்க மட்டும்தான்னு//
ஹலோ மிஸ்டர்ர்ர்ர்:)).. கோமதி அக்கா தெளிவாச் சொல்லிட்டா.. அஞ்சு தேவதை..., அதிரா குழந்தை என:))..
தேவதைகளுக்கு எப்பவும் ஒரு 70 பிளஸ்தான்:))) ஹா ஹா ஹா :)) கடவுளே கல்லெல்லாம் வருதே:))
கோமதியக்கா சொன்னது முதிய குழந்தை :) 80 தாண்டினா எல்லாம் பேபீஸ் அப்படிதான் உங்களை சொன்னாங்க .
பதிலளிநீக்குதேவதைகளுக்கு வயதில்லை .கடவுள் பக்கத்தில் இருப்பவங்க தெரியுமா
பெண்களின் சில குணதிசயங்களைப் பற்றி அவ்வப்போது எழுதி இருக்கிறேன் உறவுகள் என்னும் தலைப்பிலும் எழுதி இருக்கிறேன் எப்பவுமே பெண்களுக்கு தங்கள் உறவுகள்தான்முக்கியம் கணவர் பக்கௌறவுகள் எப்பவுமே இரண்டாம் பட்சம்தான்
பதிலளிநீக்குவாங்க அசோகன் குப்புசாமி ஸார். அதான் எழுதிட்டேன்!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... வான்மழை வந்தது ; ரன்மழை நின்றதோ?!! எல் ஆர் ஈஸ்வரி பாடலைச் சொல்லி பூ புகைப்படத்தை ரசித்ததற்கு நன்றி! பூ பூதான்! சிறியதாய் இருந்தாலும், பெரியதாய் இருந்தாலும்! சின்னதாய் இருப்பதால் "பூ..." என்று விட்டுவிட முடியுமா?!!
பதிலளிநீக்குஆஹா கமலா சகோதரி அழகா எழுதியிருக்கீங்க .உங்க எழுத்து நடை படிக்கும்போது எனக்கு இளமதியின் எழுத்து அவர் ரைட்டிங்ஸ் நினைவுக்கு வருது ,
பதிலளிநீக்குகமலா சகோதரி நீங்க மட்டுமில்லை நாங்களும் நல்லா அரட்டை கலாட்டானு தான் இங்கே களை கட்டும் :)
கமலா சகோதரி நீங்க மட்டுமில்லை நாங்களும் நல்லா அரட்டை கலாட்டானு தான் இங்கே களை கட்டும் :)
பதிலளிநீக்குஹையோ பாதி கமெண்ட் தான் பப்லிஷ்
இம்மாதிரி சந்தோசம் கூட்டு குடும்பங்களில் தான் கிடைக்கும்
அதிரா..
பதிலளிநீக்கு//அப்போ பிள்ளைகளையே அனைத்துக்கும் எதிர்பார்க்கோணும் //
இந்தக் காலத்தில் வருமானத்துக்காகவோ வாழ்வுக்காகவோ பிள்ளைகளை எதிர்பார்க்கும் நிலை பெரும்பாலும் இருக்காது. ஆனால் கொஞ்சம் அருகில் இருக்கவேண்டும், என்கிற எண்ணம் வேண்டுமானால் இருக்கலாம்.
//ஆனா அந்த வயது, அந்த தனிமை, அந்த சூழல் ஏற்படும்போது நம் மனம் எப்படி மாறுமோ//
அதான்... ஆனானப்பட்ட சுஜாதாவே எங்கேயோ ஒருமுறை சொல்லி இருக்கிறார் என்று நினைவு.
அதிரா..
பதிலளிநீக்கு//மிழகாய்ப் பூக்கள்//
அழகாய் இருப்பதால் அவை மிழகாய்ப் பூக்கள் ஆனதுவோ.. !
வாங்க பானு அக்கா..
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருக்கும் கவிதை தேனீயோ படித்த நினைவு இருக்கிறது. இலையில் ஓரத்தில் ஒருபிடி உணவு - புதிய தகவல். ஆனால் எங்கள் வீட்டில் செல்லங்களுக்கென்று அம்மா சாதம் மிச்சம் வைத்துவிடுவார். கடைசியில் சென்று அதற்கென வைத்திருந்த ஒரு அலுமினியத் தட்டில் போடுவோம்!
வாங்க ஏகாந்தன் ஸார்.. வாணிபம்தான். அவர்களேதான் குறைத்துக் கொடுப்பதாய்ச் சொல்லி இருக்கரியார்கள். அதைத்தான் கேட்டேன். புத்தகம் வந்தது சந்தோஷம். மகன் வாங்கி கொடுத்தது இரட்டிப்பு சந்தோஷம். அதைத்தானே பதிவாய் இட்டிருக்கிறேன்!!
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்...
பதிலளிநீக்கு//அலுவலகங்களிலும் புத்தக எக்சிபிஷன் செய்றாங்களா !!//
எங்குதான் செய்யவில்லை? அலுவலகங்களில் என்னதான் செய்யவில்லை! உங்கள் பெண்ணுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பது மகிழ்ச்சி. இங்கு அது இல்லை! சொல்லிச் சொல்லி டெண்டுல்கர், டிராவிட் புத்தகங்கள் இரண்டும், ஒரு சேட்டன் பகத் புத்தகம் ஒன்றும் மட்டும் படித்தான்! மற்றபடி கிரிக்கெட்...... கிரிக்கெட்.... கிரிக்கெட்...
//மகனோட கையெழுத்து முத்து முத்தா இருக்கு //
நன்றி. சொல்கிறேன் அவனிடம்.
வாங்க ஏஞ்சல்...
பதிலளிநீக்கு//னா நீங்க மிளகாய் பழத்தை மிழகாய்ன்னு//
அழகாய் இருக்கிறது மிளகாய் எனும் வார்த்தையை ஒரே வார்த்தையாய் காயின் செய்துவிட்டார் அதிரா!
//மிளகாய் காய் ஹெவி என்பதால் அதற்க்கு வசதியா முன்னாடியே கீழ்நோக்குதோ ://
நான் நினைத்ததை அதிரா கேட்டு விட்டார்!
//உங்க ஜூனியருக்கும் வளர்ப்பு பிராணிகள் மிகவும் பிடிக்குமா ://
பதிலளிநீக்குரொம்ப.... அதுவும் இளையவனுக்கு!
//இப்படி நிறைய .உங்க அம்மா பிரசவமான பெண் பைரவிக்கு மழை நாளில் உணவு கொண்டுபோனது நினைவுக்கு வந்தது (பின்னூட்டத்தில் சொன்னிங்க )//
அதான் ஏஞ்சல்... உங்கள் ஞாபக சக்தியைப் பார்த்து வியப்பதோடு சற்றே பொறாமையும் படுகிறேன்!
ஏஞ்சல்...
பதிலளிநீக்கு//பூசணிக்கா கொடி வகை .சில மலர்கள் பெண்டண்ட் வகை//
ஓகே ஓகே!
//இந்த கமெண்ட் எனக்கு உடனே வேணும் :)//
அங்கே இருக்கும் குவியலில் எது அது என்று தெரியவில்லையே... நான் வேற படிச்ச உடனே கிழிச்சுடுவேன்!!!
ஏஞ்சல்...
பதிலளிநீக்கு/யூ மீன் SELFIE ?//
இல்லை... பூவின் முகத்தை எடுத்தேன்! அதைக் காணோம்!
வாங்க ஜி எம் பி ஸார்..
பதிலளிநீக்கு//எப்பவுமே பெண்களுக்கு தங்கள் உறவுகள்தான்முக்கியம் கணவர் பக்கௌறவுகள் எப்பவுமே இரண்டாம் பட்சம்தான்//
என் பாஸ் அப்படி அல்ல... இரண்டு பக்கமும் சமஅளவில் பேசுவார்.
@ஸ்ரீராம்
பதிலளிநீக்கு//அதான் ஏஞ்சல்... உங்கள் ஞாபக சக்தியைப் பார்த்து வியப்பதோடு சற்றே பொறாமையும் படுகிறேன்!///
http://tamil.boldsky.com/img/2016/09/06-1473143974-buttermilk-copy.jpg
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குஅதிரா..
//மிழகாய்ப் பூக்கள்//
அழகாய் இருப்பதால் அவை மிழகாய்ப் பூக்கள் ஆனதுவோ.. !//
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஸ்ரீராம் இப்ப்போ முக்கால் ஞானீஈஈஈஈஈ:) அதாவது பொசிடிங் திங்கிங்:)) ஹா ஹா ஹா.. இப்பூடி எல்லோரையுமே ஞானி ஆக்கிட்டால் மீ தப்பித்திடலாம் ஈசியா:))
ஹாஹா :) ஸ்ரீராம் ஒருத்தர் பாருங்க மோர் குடிக்கிறாங்க :)
பதிலளிநீக்குஇங்கே எல்லா பாஸ்போர்ட் மற்றும் ஹோம் ஆபிஸ் விஷயங்களுக்கு கேட்பாங்க இந்த நாட்டுக்கு முதல் வந்த நாள் தேதி.இதுவரைக்கும் என் கணவர் போனில் பதில் சொல்லுமுன் பேசிக்கிட்டே என்னை கூப்பிடுவார் :) டேட் மந்த் சொல்லுங்கன்னு :) இதோட எத்தனை முறை சொன்னாலும் அவருக்கு நினைவிருக்காது
என் இன்லாசும் சொல்வாங்க பாராட்டி ..ஒருவேளை நான் பிறந்த மாதம் டிசம்பர் அதில் பிறந்தவங்க எண்ணங்களைநினைவுகளை அசைபோடும் குணமுள்ளவர்கள் அதனால்தான் மறக்கறதில்லையோ தெரில
கூடவே வல்லாரை ஸ்மூத்தியும் உதவுதுன்னு நினைக்கிறேன்
100 :)
பதிலளிநீக்குஇன்று கடைசிப் பந்தியாக ஆகிவிட்டது..
பதிலளிநீக்குபொண்ணு மாப்பிள்ளை சுமாரா இருந்தாலும்
கல்யாண களை ஆரவாரமா இருக்கும்!...
இன்னைக்கும் பொண்ணு மாப்பிள்ளையும் ( அதாவது பதிவு!..)அழகோ அழகு..
கல்யாண கச்சேரியும் ஏக தடபுடல்.. ஆரவாரம்!..
மொய் வெச்சவங்களுக்கு தேங்காய் பை கொடுத்தே கை வலிச்சிருக்கும்!..!?...
Angel said...
பதிலளிநீக்கு///என் இன்லாசும் சொல்வாங்க பாராட்டி ..ஒருவேளை நான் பிறந்த மாதம் டிசம்பர் அதில் பிறந்தவங்க எண்ணங்களைநினைவுகளை அசைபோடும் குணமுள்ளவர்கள் அதனால்தான் மறக்கறதில்லையோ தெரில
கூடவே வல்லாரை ஸ்மூத்தியும் உதவுதுன்னு நினைக்கிறேன்///
ஹலோ அது ஸ்ரீராமுக்கு எல்லோ குடுத்தேன்:)) சே..சே. நன்மைக்குக் காலமில்ல:))
நானும் எவ்ளோ நேரம்தான் பொறுமை காப்பதாம்:) பேசாமல் விட்டா ஓவராத் துள்ளுறா:))
நம் மூளை என்பது ஒரு கொம்பியூட்டர் மாதிரி:)) அதில ஓவரா அனைத்தையும் சேஃப் பண்ணினால் ஸ்லோ ஆகிடும்.. அத்தோடு புது விசயங்களை உள் வாங்குவதும் ஸ்லோவாகிடும்:))... இப்போ புய்யுதோ அதிரா எதனால இவ்ளோ புத்திஜாலியா:)) இருக்கிறேன் என்பதன் ரகசியம்:))[ஹா ஹா ஹா அமைதி அமைதி:)) உண்மைகள் சிலசமயம் கசக்கும்ம்ம்:)) என ஒளவைப்பாட்டி ஜொள்ளியிருக்கிறா:))]].. அதாவது என் கொம்பியூட்டரைத் தூசு தட்டி.. தேவை இல்லாதவற்றை அகற்றிப் போட்டு தேவையானதை மட்டுமே நினைவில வச்சிருப்பேன்ன் மற்ரதெல்லாம் மேலோட்டமாகப் படிச்சிட்டுப் போயிடுவேன்ன்.. மனசோடு மட்டும்:)) புத்திக்கு எடுத்துப் போய் சேவ் பண்ணுவதில்லை:))...
ஆனா அஞ்சு அப்படியில்லை.. இருப்பது பொறுக்கியது எடுத்தது உண்டது உறங்கியது அனைத்தையும் சேவ் பண்ணி வச்சு.... ஆங்ங்ங்ங்ங் இதுக்கு மேல வாணாம்ம்ம்.. இந்தாங்கோ மோர் குடிங்கோ:)) ஹையோ இன்று 102 ஆவது கொமெண்ட்:)) எனக்கு ஆப்பு வச்சிடும்போல இருக்கே:)).. என் கொமெண்ட்டைச் சொன்னேன்:)) இன்று எனக்குப் பாப விமோசனமே கிடைக்காதென நினைக்கிறேன்ன்ன் மீ ஜம்பிங்ங்ங்ங்ங்:))
//மொய் வெச்சவங்களுக்கு தேங்காய் பை கொடுத்தே கை வலிச்சிருக்கும்!..!?...///
பதிலளிநீக்குஎன்னாதூஊஊஊஉ தேங்காய்ப்பையாஅ எனக்கேதும் கிடைக்கல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னைப் பேய்க்காட்டிப் போட்டினம் பை தராமல்ல்ல்ல்:))
///Angel said...
பதிலளிநீக்குஆஹா கமலா சகோதரி அழகா எழுதியிருக்கீங்க .உங்க எழுத்து நடை படிக்கும்போது எனக்கு இளமதியின் எழுத்து அவர் ரைட்டிங்ஸ் நினைவுக்கு வருது ,..!?...///
ஆவ்வ்வ்வ்வ் இதே நினைவுதான் என் மனதிலும் ஓடுது.. கமலா சிஸ்டர் பேசுவது எழுதுவது அப்படியே இளமதி போலவேதான்.. உலகில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்களாமே:))..
பிளீஸ்ஸ் என்னைப்போல இருக்கும் மிச்சம் ஆறு:) இது வேற ஆறைக் கொஞ்சம் ஆராவது தேடித்தர முடியுமோ?:) வைர ரிஸ்லெட் தருவேன்ன்:)).. ஆளுத்தள்ளுபடி வந்ததும்:)
ஒரே எண்ணில் பிறந்தவங்க சிந்தனை ஒரே மாதிரி இருக்கும் :)
பதிலளிநீக்குஎன் ஹப்பியும் நானும் ஒரே நேரம் ஒரே சிந்தனையில் இருப்போம் :) நீங்களும் நானும் சேம் எண் அதோட நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லும்போது ஆச்சர்யமா இருக்கும் .உங்களுக்கும் எனக்கும் ரெண்டே வித்யாசம் ஒன்னு நீங்க என்னை விட 6 மந்த்ஸ் அக்கா :)
நெக்ஸ்ட் எனக்கு பிடிக்காத அந்த ஜொல்லுவதெல்லாம் மை மை ப்ரோக்ராம் ஹாஆஅஹா
பிளீஸ்ஸ் என்னைப்போல இருக்கும் மிச்சம் ஆறு:) இது வேற ஆறைக் கொஞ்சம் ஆராவது தேடித்தர முடியுமோ?:) வைர ரிஸ்லெட் தருவேன்ன்:)).. ஆளுத்தள்ளுபடி வந்ததும்:)
பதிலளிநீக்கு//
https://i.pinimg.com/originals/79/49/ad/7949ad3cf81522ce80551c7efb6f4a23.jpg
ஸ்ரீராம் தேங்காய்ப்பையில் எனக்கு பிடிச்ச நேந்திரம் சிப்ஸும் வச்சி தந்ததுக்கு தாங்ஸ்
பதிலளிநீக்குஸ்ரீராம் - பதிவு போட்டுட்டீங்க இல்ல. நிச்சயம் 150 ரூபாயோ அல்லது அதுக்கு ஈடா ஒரு புத்தகமோ 'கிழக்கு பதிப்பகத்து'ல இருந்து வந்துடும்... ஹா ஹா ஹா
பதிலளிநீக்கு///https://i.pinimg.com/originals/79/49/ad/7949ad3cf81522ce80551c7efb6f4a23.jpg///
பதிலளிநீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
//நீங்களும் நானும் சேம் எண் அதோட நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லும்போது ஆச்சர்யமா இருக்கும் //
:)
////உங்களுக்கும் எனக்கும் ரெண்டே வித்யாசம் ஒன்னு நீங்க என்னை விட 6 மந்த்ஸ் அக்கா :)//// நில்லுங்கோ வாறேன்ன்ன் எய்தவர் இருக்க அம்பை நொந்து என்ன பலன்:)) இதுக்குக் காரணம் நெ.தமிழன் அண்ணாதானே?:)[அதிராட முறையில ஜொன்னேன்:))] இப்பவே ஒரு பிஸ்னஸ் கிளாஸ் சென்னைக்கு புக் பண்ணுறேன்ன்:))) முன்னே வச்ச்ச காலைப் பின்னே வைய்க்க மாட்டேன்ன்:)).
///நெக்ஸ்ட் எனக்கு பிடிக்காத அந்த ஜொல்லுவதெல்லாம் மை மை ப்ரோக்ராம் ஹாஆஅஹா//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க எல்லாம் கண் போட்டுத்தான் அது இப்போ நிண்டிடிச்சீஈஈஈஈஈஈ:(:(:(
ஏஞ்சல்...
பதிலளிநீக்கு// நான் பிறந்த மாதம் டிசம்பர் அதில் பிறந்தவங்க எண்ணங்களைநினைவுகளை அசைபோடும் குணமுள்ளவர்கள் அதனால்தான் மறக்கறதில்லையோ தெரில
கூடவே வல்லாரை ஸ்மூத்தியும் உதவுதுன்னு நினைக்கிறேன்//
என் பாஸ் நவம்பர். அவங்களும் பயங்கரமா ஞாபகம் வச்சுப்பாங்க! ஆனா வல்லாரை எல்லாம் சாப்பிடறதில்லை!
அதிரா..
பதிலளிநீக்கு//ஸ்ரீராம் இப்ப்போ முக்கால் ஞானீஈஈஈஈஈ:)//
நான் அரைஞானிதான். அதாவது அஞ்ஞானி! மோருக்கு நன்றி.
வாங்க துரை செல்வராஜூ ஸார்... இன்னும் காணோமேன்னு கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். மெயில் தட்டலாமான்னும் யோசிச்சுக்கிட்டிருந்தேன். பயண ஏற்பாட்டில் பிஸி.... எனவே ஒத்திப் போட்டதில் நீங்களே வந்து விட்டீர்கள். ஏன், காலையில் வரவில்லை?
பதிலளிநீக்கு// தேங்காய்ப்பை கொடுத்தே கைவலித்திருக்கும்...//
பதிலளிநீக்குஹா... ஹா.. ஹா... இன்று உடனுக்குடன் சுடச்சுட...
//கமலா சிஸ்டர் பேசுவது எழுதுவது அப்படியே இளமதி போலவேதான்.//
பதிலளிநீக்குஅவங்கதான் மாறுவேஷத்தில் வர்றாங்களோ!!!
ஏஞ்சல்...
பதிலளிநீக்குநேந்திரம் சிப்ஸா? அதை உங்கள் பையில் வைத்து விட்டேனா? பயணத்துக்கு உதவும் என்று வாங்கி உங்கள் பையில் வைத்துவிட்டு இங்கே தேடிக்கொண்டிருக்கிறேன்!!! ஹிஹிஹி...
//ஸ்ரீராம் - பதிவு போட்டுட்டீங்க இல்ல. நிச்சயம் 150 ரூபாயோ அல்லது அதுக்கு ஈடா ஒரு புத்தகமோ 'கிழக்கு பதிப்பகத்து'ல இருந்து வந்துடும்... ஹா ஹா ஹா //
பதிலளிநீக்குயார் நெல்லை இதெல்லாம் பார்த்து எனக்கு கொடுக்கப் போறாங்க? தப்பித்தவரிப் பார்த்தாலும் கம்முனு இருந்துடுவாங்க!
/// ஏன் காளையில் வரவில்லை?...
பதிலளிநீக்குஸ்ரீராம்..///
அரக்க பரக்கக் கிளம்பும்போது
எல்லாமும் சரியாக இருக்கும்...
இன்று ஆர அமர கிளம்பியதால்
Rooter மறந்து போனது....
சில நாட்களாகவே இணையம் படுமோசம்.
நாளை ரமலான் பண்டிகை...
முழு நாட்டிற்கும் விடுமுறை -
உணவகங்கள் நீங்கலாக!...
தின்று தீர்க்க வேண்டுமே!...
/// ஏன் காலையில் வரவில்லை?..///
பதிலளிநீக்குஇணையம் ஜங்..ஜங்.. என்று குதிக்கிறது....
காலையானது காளையாகிப் போனது!..
துரை செல்வராஜூ ஸார்...
பதிலளிநீக்குகாலையிலேயே உங்களுக்கு இணையப் பிரச்னை இருக்கும் என்று சொல்லி இருந்தேன். சரியாகப் போச்சு.
ரமலான் வாழ்த்துகள்! பிரியாணி வாழ்த்துகள்!
// வாழ்த்துகள்.. //ஸ்ரீராம்...///
நீக்குவாழ்த்துகள்... சரி..
பிரியாணி?....
அதெல்லாம் கிடையாது.... அதற்கும் நமக்கும் வெகுதூரம்...
ஆனி அமாவாசையை அடுத்து
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா தொடக்கம்....
அம்பாளே சரணம்....
.. சேட்டன் பகத் புத்தகம் ஒன்றும் மட்டும்..//
பதிலளிநீக்குஇது மலையாள ’சேட்டன்’ அல்ல! (ச்)சேத்தன் பகத். முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் ஷர்மா போல (mid-80s team)
பஞ்சாபி ஹிந்து. டெல்லிக்காரர். மணந்தது அனுஷா (தமிழச்சி, அவரோடு படித்தவர்)
//இது மலையாள ’சேட்டன்’ அல்ல! (ச்)சேத்தன் பகத்.//
பதிலளிநீக்குஆமாம்...
:)))
3 இடியட்ஸ் ,கிக் ,2ஸ்டேட்ஸ் இவற்றில் பெரும்பங்கு chetanபகத்துக்கு உண்டு .
பதிலளிநீக்குone இந்தியன் கேர்ள் ஒரே ஒரு பொண்ணா அமைஞ்சிட்டதால் அனைவரையும் ரெப்ரெஸன்ட் செய்யாததால் அந்த புக் பிடிக்கலை .
பதிப்பகத்தாரின் செய்தி கேட்டு வியந்தேன். என்ன செய்வது?
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஐயா.
பதிலளிநீக்கு// பிரியாணி?....
பதிலளிநீக்குஅதெல்லாம் கிடையாது.... அதற்கும் நமக்கும் வெகுதூரம்... //
ஹா... ஹா... ஹா... எப்பவுமே கிடையாதா?
//ஆனி அமாவாசையை அடுத்து
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா தொடக்கம்....//
ஓகே ஓகே துரை செல்வராஜூ ஸார்...
பதிவும் அதைத் தொடர்ந்து வந்த
பதிலளிநீக்குபின்னூட்டங்களும் அருமையிலும் அருமை
ஒரு பெரிய விருந்தில் கலந்து கொண்ட திருப்தி
கிழக்குப் பதிப்பதகத்தின் விஷயம் கொஞ்சம்
கசந்தாலும்...
நன்றி ரமணி ஸார்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபண்டிகை கால அலங்காரங்கள்!
பதிலளிநீக்குபண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிப்பதில் இருக்கும் சுகமே அலாதியானதுதான். வீட்டை சுத்தப்படுத்தி, சுவர் அலங்காரங்கள் செய்து, வண்ணங்களை திருத்தி என, வீட்டையே குதூகலப்படுத்துவது பண்டிகை நாட்களுக்கே உண்டான அழகு. இதோ சித்திரை திருநாள் வந்துவிட்டது. இந்த இனிய நாளில் வீட்டின் அழகை அதிகப்படுத்த, e1life.com அலங்கார ஐடியாக்களை பரிந்துரைக்கிறது.
http://www.e1life.com/11560/tips-for-home-decoration-on-festival-days/
சுப்ரமணிய ராஜு சிறுகதைகளின் தொகுப்பு என்னிடம் உள்ளது. வாசித்திருக்கிறேன். மகனிடமிருந்து பரிசாகக் கிடைத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநான்கு கால் செல்லத்தின் படங்களும் அதற்கான வாசகங்களும் அருமை.
மிளகாய்ச் செடி காய்த்துக் குலுங்குகிறது. பூக்களின் படங்களில் இன்னும் ஃபோகஸ் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆக வேண்டும்:).
திருமதி கமலா ஹரிஹரன் பகிர்வு.. நெகிழ்வு! எங்கள் ப்ளாக்.. நல்லதொரு குடும்பம்.. பல்கலைக் கழகம்! இன்று போல் என்றும் வாழ்க.. தொடர்க!
ஹையோ ரொம்பவே மிஸ் பண்ணிருக்கேன் வியாழன் கும்மியை...ஹும்...
பதிலளிநீக்குஸ்ரீராம் உங்கள் மகன் வாங்கிக் கொடுத்த புத்தகம் உங்களுக்கு ஒரு பொக்கிஷம். பாஸிற்கும் தான். மகன் அழகாகக் கையெழுத்திட்டு அன்புடன் கொடுத்திருப்பதை நான் மிகவும் ரசித்தேன். Blessed to have such a son. கண்டிப்பாக இறுதிவரை அவர் அப்படியே உங்களிடம் இருப்பார்!!! ஸ்ரீராம்.
இளையவர் எடுத்த செல்லங்கள் படங்கள் எல்லாம் செமை...அதற்கு உங்கள் கமென்ட்ஸ் அருமை. மிக மிக ரசித்தேன். என்ன அழகு இல்லையா....
அந்தப் பதிப்பகம் இப்படி ஏமாற்றியது மோசம்.
கமலா சகோவின் வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன் நான். என் மகனிடம் அடிக்கடிச் சொல்லுவது எபி பற்றி, எபி குடும்பம் பற்றி எல்லாம் சொல்லுவதுண்டு.
மட்டுமல்ல இங்கு கே வா போ க வுக்கு எழுதுவது திங்க பதிவுக்கு எழுதுவது எல்லாமே என்னை ஊக்கப்படுத்தி என்னை மட்டுமின்றி இங்கு எல்லோரது எழுத்தும் ஊக்கப்படுத்தப்படுவதால் இது போன்ற ஒரு ஊக்கம், போட்டி பொறாமை இல்லாத கருத்துகள் இப்படி மகிழ்ச்சியாக அன்போடு பரிமாறிக் கொள்வது எல்லாம் பத்திரிகை உலகில் கிடைக்குமா என்றால் இல்லை என்பதே என் தனிப்பட்டக் கருத்து.
எபி க்கு எப்போதும் இது நிலைத்திட மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும், பிரார்த்தனைகளும்!!
கீதா
ஹையோ ரொம்பவே மிஸ் பண்ணிருக்கேன் வியாழன் கும்மியை...ஹும்...
பதிலளிநீக்குஸ்ரீராம் உங்கள் மகன் வாங்கிக் கொடுத்த புத்தகம் உங்களுக்கு ஒரு பொக்கிஷம். பாஸிற்கும் தான். மகன் அழகாகக் கையெழுத்திட்டு அன்புடன் கொடுத்திருப்பதை நான் மிகவும் ரசித்தேன். Blessed to have such a son. கண்டிப்பாக இறுதிவரை அவர் அப்படியே உங்களிடம் இருப்பார்!!! ஸ்ரீராம்.
இளையவர் எடுத்த செல்லங்கள் படங்கள் எல்லாம் செமை...அதற்கு உங்கள் கமென்ட்ஸ் அருமை. மிக மிக ரசித்தேன். என்ன அழகு இல்லையா....
அந்தப் பதிப்பகம் இப்படி ஏமாற்றியது மோசம்.
கமலா சகோவின் வரிகளை அப்படியே டிட்டோ செய்கிறேன் நான். என் மகனிடம் அடிக்கடிச் சொல்லுவது எபி பற்றி, எபி குடும்பம் பற்றி எல்லாம் சொல்லுவதுண்டு.
மட்டுமல்ல இங்கு கே வா போ க வுக்கு எழுதுவது திங்க பதிவுக்கு எழுதுவது எல்லாமே என்னை ஊக்கப்படுத்தி என்னை மட்டுமின்றி இங்கு எல்லோரது எழுத்தும் ஊக்கப்படுத்தப்படுவதால் இது போன்ற ஒரு ஊக்கம், போட்டி பொறாமை இல்லாத கருத்துகள் இப்படி மகிழ்ச்சியாக அன்போடு பரிமாறிக் கொள்வது எல்லாம் பத்திரிகை உலகில் கிடைக்குமா என்றால் இல்லை என்பதே என் தனிப்பட்டக் கருத்து.
எபி க்கு எப்போதும் இது நிலைத்திட மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும், பிரார்த்தனைகளும்!!
கீதா
மிளகாய்ச் செடி காரமா!!! படம் அப்படிச் சொல்லவில்லையெ! இனிப்பாய் இருக்கிறதே அந்தப் பூ கூட என்ன அழகு! நேரில் பார்ப்பதை விட படத்தில் இன்னும் வித்தியாசமாய் அழகாய் இருப்பது போலத் தெரிகிறது. ஃபோட்டோ ஜெனிக்??!!!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
உங்கள் மகனுடன் நீங்கள் இருந்த அந்த ஒரு வார சந்தோஷத்தை விட இந்த கும்மி பெரிதில்லை கீதா... மகன்கள் பற்றிய பாராட்டுதல்களை நன்றி. அவர்கள் இதைப் படிக்கக் கூடமாட்டார்கள். மிளகாய்ச் செடி படம் இனிப்பாய் இருக்கலாம்! மிளகாய் காரம்தானே? ஹா... ஹா... ஹா...
பதிலளிநீக்குஏஞ்சல் சாஜிக்கு நினைவுத்திறன் அதிகமா..எண்ணங்களை அசை போடுவதா....அப்ப என் பையன் எக்செப்ஷன்....அவனுக்கு என் ஜீன் வந்துருச்சு போல....மறதி மறதி மறதி...ஆனா இங்க மறதினு சொல்லுறது வந்து நாம் மைன்ட்ல ப்ரியரெட்டைஸ் செய்வதுதான்....எதுக்கு முக்கியட்துவம் கொடுக்கிறோமோ அது நினைவிருக்கும் பின்னாடி லிஸ்ட்ல இருந்துச்சுனா மறந்துரும்...அதே போல ரெண்டு பேருமே நடந்ததை அதுவும் நெகட்டிவான நினைவுகளை நினைத்துப் பார்க்கறது இல்லை...வீட்டுல யாராவது சொன்னாக் கூட எங்களுக்கு நினைவு இருக்காது...ஹா ஹா ஹா ஹா.... நான் சாஜி இல்லை ஹிஹிஹி
பதிலளிநீக்குநேற்று அடித்து போட முடியாம நெட் இல்லாம....அப்படியே இருந்துச்சு...இப்பதான் வெளியிட முடியுது...
கீதா
ஸ்ரீராம்ஜி உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்! பெரியவர் உங்கள் விருப்பம் அறிந்து புத்தகம் பரிசாக அளித்தது மிகவும் மகிழ்வான விஷயம். ஒரு தந்தையாக உங்கள் மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் அவரது கையெழுத்துடன் கூடிய அன்பளிப்பு. இந்த அன்பு வாழ்க்கை முழுவதும் தொடரட்டும். அந்த இறைவனின் அருள் கிடைக்கப் பெறுக.
பதிலளிநீக்குஆனால் பதிப்பகங்கள் இப்படி எல்லாமும் செய்வார்களா என்பது வியப்பாக இருக்கிறது.
உங்கள் இளையமகன் எடுத்த புகைப்படங்கள் அருமை. அவருக்கும் வாழ்த்துகள்.
எங்கள் ப்ளாக் பற்றி கமலா ஹரிஹரன் சகோதரியின் வரிகள் நெகிழ்ச்சி. உண்மைதானே!
நல்லதொரு கதம்பம்.
துளசிதரன்
துளசி பல பதிவுகளுக்குக் கமென்ட்ஸ் அனுப்பியிருந்தார். ஆனால் எது எதற்கு என்பது இல்லாமல் ஒரு மெயிலில் அனுப்பியிருந்ததால் அவை எதற்கு என்று தேடி தேடி பார்த்து பதிய வேண்டியதானது. இப்போது சொல்லியிருக்கிறேன் தலைப்பில் ஒரு சிறு பகுதியும் ப்ளாக் பெயருமேனும் கொடுத்தால் எளிதாக இருக்கும் என்று...(கீதா)
உங்கள் மகனுடன் நீங்கள் இருந்த அந்த ஒரு வார சந்தோஷத்தை விட இந்த கும்மி பெரிதில்லை கீதா//
பதிலளிநீக்குஆமாம் உண்மைதான் ஸ்ரீராம்...அது கும்மியைப் பார்த்ததும் பொயிங்கிட்டேன் ஹா ஹா ஹா ஹா...
மகன் கள் பார்க்க மாட்டார்கள் தான் என் மகனும் அப்படித்தானே...ஆனால் நாம் அதை அவர்களிடம் சொல்லுவோம். அவ்வளவுதான்...
கீதா