ஞாயிறு, 17 ஜூன், 2018

ஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..






"நதி எங்கே போகிறது....?"



"நதியோரம்...   நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியமாடுது மெல்ல..  நானந்த ஆனந்தம் என்சொல்ல?"



"நதிக்கரையோரத்து நாணல்களே...   என் நாயகி அழகைப் பாடுங்களே..."



மீன் பிடிக்கிறாரா?  தண்ணீரில் விழுந்த எதையோ கம்பை வைத்து எடுக்க முயற்சிக்கிறாரா?



"செவ்வானமே தேர் கொண்டு வா...   வெண்மேகமே சீர் கொண்டுவா..."


.ஆமாம்...   அக்கரை பச்சைதான்!



"அடி ஆத்தைக் கடந்துடலாம்...  ஆசையை என்ன செய்ய..."



கங்கையில் முதல் காலடி வைக்கும் முன்...!



"போச்சுடா...   இப்படிப் படம் எடுத்தாலே இதை வைத்து ஒரு கதை எழுதுங்கன்னு கேக்கறது இவங்க வழக்கமாச்சே...   "

61 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. // நதி எங்கே போகிறது?... //

    எங்காவது போய் நல்லா இருக்கட்டும்...
    ஊருக்குள்ளே வந்தால் உருக்குலைச்சுடுவானுங்க!..

    மடையைக் கட்டி இறைச்சுடுவானுங்க!...

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  5. //எங்காவது போய் நல்லா இருக்கட்டும்... ஊருக்குள்ளே வந்தால் உருக்குலைச்சுடுவானுங்க!.. மடையைக் கட்டி இறைச்சுடுவானுங்க!...//

    ஹா.... ஹா.... ஹா... பயந்து ஓடுகிறதோ!

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஸ்ரீராம்..
    கும்மோணத்துல இருந்து திரும்பியாச்சா!..

    பதிலளிநீக்கு
  7. //கும்மோணத்துல இருந்து திரும்பியாச்சா!.. //

    நேற்றிரவு 11.45 க்கு நலமாய் வீடு சேர்ந்தோம்! நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நதி நல்லா சுத்தமா இருக்கே! அதனால் தமிழ்நாட்டில் உள்ளது இல்லை. கடைசிப் படத்தில் இருக்கும் பெண்?ஆண்? எங்கேயோ பார்த்த முகம்!

    பதிலளிநீக்கு
  9. ஶ்ரீராம், மெதுவாத் தூங்கிட்டு வாங்க. ஜிவாஜி பதிவு உங்கள் கருத்துக்காகக் காத்துட்டு இருக்கு!

    பதிலளிநீக்கு
  10. நதிகள் பற்றிய பதிவுகள் பாராட்டுக்குரியது என் வலைத்தளம் இப்பொழுது இந்த பெயரில் வருக கருத்தினை வழங்க கேட்டுக்கொள்கிறேன்
    http://kavithaigal0510.com

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம்.

    படங்கள் அழகு.

    நதி, கடல், வானம், இயற்கை இவற்றை ரசித்துக் கொண்டே இருக்கலாம் - அலுப்பே வராது இல்லையா....

    பதிலளிநீக்கு
  12. காலைக்காட்சி அழகிய வரிகளுடன் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  13. "நதி எங்கே போகிறது....?"//

    எங்கோ போகிறது. இது எதுக்கு உங்களுக்கெல்லாம்?!

    பதிலளிநீக்கு
  14. "நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..."//

    பாடிப்பாடி எனக்கு வாய் வலிக்குது!

    பதிலளிநீக்கு
  15. ..கங்கையில் முதல் காலடி வைக்கும் முன்...!//

    காலைப் பார்த்தேன். விரல்கள் கோணலாக..சரியில்லை. ஆளுந்தான்!

    பதிலளிநீக்கு
  16. "அடி ஆத்தைக் கடந்துடலாம்... ஆசையை என்ன செய்ய..."//

    பூட்டி வைங்க மூலைல.. பிற்பாடு யூஸ் ஆகும்!

    பதிலளிநீக்கு
  17. அழகிய நதிக்கரைக் காட்சிகள்!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    நலமுடன் கோவில்கள் உலா முடிந்து திரும்பி விட்டீர்களா? மிக்க மகிழ்ச்சி.

    நதி படங்கள் மிகவும் அழகாக உள்ளது.
    படங்களுக்கு பொருத்தமான பாடல்கள். செவ்வானமும் மலைகளின் பிண்ணனியும் நதியின் அழகும் எதற்கும் வளைந்து தரும் நாணலை பாட வைக்கிறதோ?

    நதிகரையோரத்தில் அமர்ந்திருக்கும் அவர் மீன் பிடிக்கிறாறோ.. இல்லையோ நீங்கள் அவரை படம் பிடித்து விட்டீர்கள். அவரையும், கதை எழுத வாக்காய் போஸ் கொடுப்பவரையும் பாத்தால், மூன்று வாரங்களுக்கு முன்பு ஞாயிறன்று வந்த பதிவில் புகைப்படம் எடுத்தவர் இவர்தான் என்று நீங்கள் அறிமுகப்படுத்தியவர் மாதிரி உள்ளதே? அவர்தான் என நினைக்கிறேன். இல்லையா? அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. படங்கள் நல்லா வந்திருக்கு. பாடல் நலைப்பும் நல்லாத்தான் இருக்கு. "புள்ளே" மிஸ்ஸிங்.

    பதிலளிநீக்கு
  20. பல பாடல் வரிகள் தலைப்பாய்

    பதிலளிநீக்கு
  21. பாடலும் படங்களும் அருமை.
    இவை எல்லாம் சிக்கிம் பட தொடர்ச்சிதானே !

    நதிபடங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  22. மீன் பிடிப்பது போல் போஸ் கொடுப்பவரும், கடைசியில் படியில் உட்கார்ந்து இருப்பவரும் ஒருவரே என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. நதி தூங்குதா விழித்து இருக்கா என்று தொட்டுப் பார்ப்பது போல் தெரிந்தது
    எனக்கு.

    பதிலளிநீக்கு
  24. 'ஆழம் தெரியாமல் காலைவிடாதே' என்று அந்த கால் யோசிக்குதோ!

    பதிலளிநீக்கு
  25. //மீன் பிடிக்கிறாரா? தண்ணீரில் விழுந்த எதையோ கம்பை வைத்து எடுக்க முயற்சிக்கிறாரா?//

    நதி தூங்குதா விழித்து இருக்கா என்று தொட்டுப் பார்ப்பது போல் தெரிந்தது
    எனக்கு.

    பதிலளிநீக்கு
  26. //கங்கையில் முதல் காலடி வைக்கும் முன்...!//

    'ஆழம் தெரியாமல் காலைவிடாதே' என்று அந்த கால் யோசிக்குதோ!

    பதிலளிநீக்கு
  27. குலதெய்வ கோவில் தரிசனம் , குடந்தை கோவில்லள் தரிசனம் நன்றாக செய்து இருப்பீர்கள். குடும்பத்தினர்களுடன் பயணம் மனதுக்கு இனிமையாக இருந்து இருக்கும்.

    பகிர்வுகள் உண்டு என்று நினைக்கிறேண் வலைத்தளத்தில்

    பதிலளிநீக்கு
  28. ///நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..///

    தலைப்பே தளதளக்குது.. எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டும் வரிகளும்...

    //"நதி எங்கே போகிறது....?"///
    இதிலென்ன சந்தேகம்.. யாரையோ தேடித்தான்..:)

    பதிலளிநீக்கு
  29. //"நதிக்கரையோரத்து நாணல்களே... என் நாயகி அழகைப் பாடுங்களே..."//
    ஸ்ரீராம் ஊரில பெரிய பெரிய மரங்களைத்தான் நாணல் என்பினமோ?:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) நேக்கு சந்திராஷ்டமம் நடக்குது:))

    பதிலளிநீக்கு
  30. //மீன் பிடிக்கிறாரா? தண்ணீரில் விழுந்த எதையோ கம்பை வைத்து எடுக்க முயற்சிக்கிறாரா?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீனுக்கு ஃபூட் குடுக்கிறார்:)

    //.ஆமாம்... அக்கரை பச்சைதான்!//

    படங்கள் எதுவும் தெளிவாகவே இல்லை.. பச்சையும் தெரியல்ல செவ்வானத்தையும் காணம்.. சூரியனை நோக்கிக் கமெரா இருந்திருக்குது போலும்.. நான் கப்பல் படம் எடுத்ததைப்போல... அது சரி இது யார் எடுத்த படங்கள்? எந்த 6...

    பதிலளிநீக்கு
  31. //"அடி ஆத்தைக் கடந்துடலாம்... ஆசையை என்ன செய்ய..."//

    6 ஐக் கடக்கும்போதே ஆத்தில:) கொட்டிடுங்கோ:)).

    ///கங்கையில் முதல் காலடி வைக்கும் முன்...!///

    நீல் ஆம்ஸ்ரோங் ரேஞ்சுக்குப் போயிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா முதன் முதலில் தேம்ஸில் குதிக்கும்போது எடுத்துப் போட்டாலும் பறவாயில்லை:)).

    ///"போச்சுடா... இப்படிப் படம் எடுத்தாலே இதை வைத்து ஒரு கதை எழுதுங்கன்னு கேக்கறது இவங்க வழக்கமாச்சே... "///

    நோஓஓஓஓஓ படம் பார்க்கவே.. சோகமயமான கதைக்கருத்தான் வருது... சிரிக்கிறமாறி:) ஒரு படம் போடலாமெல்லோ:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:) ஏகாந்தன் அண்ணனை விட:)) பிக்கோஸ் அவர் ரிவிக்குள் பூந்து ஃபுட்போல் வேல்ட் கப் பார்க்கிறார்:) மீ ஒரு 10 அடி தூரத்தில இருந்தெல்லோ பார்க்கிறேன்:))

    பதிலளிநீக்கு
  32. @athira: ..சிரிக்கிறமாறி:) ஒரு படம் போடலாமெல்லோ:)) //

    போட்டுவிட்டு தலைப்பை இப்படிக் கொடுக்கலாம்:
    சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்..

    பதிலளிநீக்கு
  33. //சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்..//

    ஹா ஹா ஹா சிலபேர் வந்து இப்பூடியும் சொல்லிப்போடுவினம் ஏகாந்தன் அண்ணன்:)-
    பொம்பிளை சிரிச்சாப் போச்சு:) புகையிலை விரிச்சாப் போச்சூ:))

    பதிலளிநீக்கு
  34. ஆத்து மேட்டில ஒரு பாட்டு கேக்குது விட்டுப் போச்சு.
    இந்தப் பதிவுக்கு பொருத்தமாக இருந்திருக்கும் ஸ்ரீராம்.
    படங்களும் தலைப்புகளும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  35. அருமையான படங்களும் எண்ணங்களும்

    பதிலளிநீக்கு
  36. வாங்க கீதா அக்கா.. //எங்கேயோ பார்த்த முகம் //

    நீங்க அங்கே போகும்போதும் இருந்தாரோ...!

    பதிலளிநீக்கு
  37. தா அக்கா...

    //ஜிவாஜி பதிவு //

    அதிலும் பின்னூட்டம் போட்டாச்! பின்னூட்டங்கள்! அதற்கடுத்த குழந்தைப்பாடல் பதிவிலும் போட்டாச்!

    பதிலளிநீக்கு
  38. மன்னிக்கவும் காபி செய்யும்போது 'கீ' விட்டுப்போச்சு...

    இந்த "கீ" யை அங்கு சேர்த்துக் கொள்ளவும்...

    பதிலளிநீக்கு
  39. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.. உங்கள் தளம் வந்து கருத்திட்டு விட்டேனே...

    பதிலளிநீக்கு
  40. காலை வணக்கம் வெங்கட்.. (நேற்று காலை சொன்னதற்கு இன்று காலை வணக்கம்!!! ஹிஹிஹி...) நன்றி வெங்கட். நீங்கள் சொல்லி இருக்கும் லிஸ்ட்டில் யானை, ரயில், விமானம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
  41. வாங்க ஏகாந்தன் ஸார்.. என்ன ஒரே எசப்பாட்டு மழை?

    //எங்கோ போகிறது. இது எதுக்கு உங்களுக்கெல்லாம்?!//
    கஷ்டப்படும் எங்கள் பக்கம் வரக்கூடாதா என்றுதான்!

    //பாடிப்பாடி எனக்கு வாய் வலிக்குது!//
    பலன் ஒன்றும் இல்லைங்கறீங்களா!

    //காலைப் பார்த்தேன். விரல்கள் கோணலாக..சரியில்லை. ஆளுந்தான்!//
    ​இது "ஒருகால்" ஜோசியமாக இருக்குமோ!!!​

    //பூட்டி வைங்க மூலைல.. பிற்பாடு யூஸ் ஆகும்!//
    மனசுல ஏற்கெனவே பூட்டி வைத்திருக்கும் ஆசைகள் நிரம்பி வழிகின்றனவே...! இடமேயில்லை!

    பதிலளிநீக்கு
  42. வாங்க சகோதரி க.ஹ...!!

    உலா முடிந்து சனிக்கிழமை இரவு திரும்பினேன்!

    //முன்பு ஞாயிறன்று வந்த பதிவில் புகைப்படம் எடுத்தவர் இவர்தான் என்று நீங்கள் அறிமுகப்படுத்தியவர் மாதிரி உள்ளதே//

    ஒரு வகையில் பதில் சரி.. ஆனால் காட்டப்பட்ட ஆள் தப்பு. காலை மட்டும் காட்டுபவர்தான் நீங்கள் சொல்லி இருப்பவர்!

    பதிலளிநீக்கு
  43. வாங்க நெல்லை.. புள்ளே வேண்டாம் என்று எடுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க ஜி எம் பி ஸார்... ஆமாம். நன்றி.

    பதிலளிநீக்கு
  45. வாங்க கோமதி அக்கா...

    // மீன் பிடிப்பவரும், உட்கார்ந்திருப்பவரும் ஒருவரே என்று...//

    எனக்கும் அப்படித் தோன்றியது. படம் எடுத்தவருக்கே நினைவிருக்குமோ இல்லையோ!

    பதிலளிநீக்கு
  46. கோமதி அக்கா...

    //நதி தூங்குதா விழித்து இருக்கா என்று தொட்டுப் பார்ப்பது போல் தெரிந்தது எனக்கு.//

    ஆஹா.... அருமையான கவித்துவமான கற்பனை. விழித்திருந்தால் எப்படி அதை அந்த நதி வெளிப்படுத்தும்?

    பதிலளிநீக்கு
  47. வாங்க கோமதி அக்கா...

    // 'ஆழம் தெரியாமல் காலைவிடாதே' என்று அந்த கால் யோசிக்குதோ!//

    ஹா.... ஹா... ஹா... இருக்குமோ!

    //குலதெய்வ கோவில் தரிசனம் , குடந்தை கோவில்லள் தரிசனம் நன்றாக செய்து இருப்பீர்கள். குடும்பத்தினர்களுடன் பயணம் மனதுக்கு இனிமையாக இருந்து இருக்கும். பகிர்வுகள் உண்டு என்று நினைக்கிறேண் வலைத்தளத்தில்//

    ஆம். பயணம் வெகு இனிமை. பகிர்வுகள் இருக்கவேண்டும் என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  48. வாங்க அதிரா..

    // எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டும் வரிகளும்...//

    அதே படத்திலிருந்தே இன்னொரு பாடலின் வரிகளையும் இணைத்திருக்கிறேன் கவனிக்கவில்லையா?!!

    பதிலளிநீக்கு
  49. வாங்க அதிரா..

    // ஸ்ரீராம் ஊரில பெரிய பெரிய மரங்களைத்தான் நாணல் என்பினமோ?//

    நாணல்களை மாற நிழல் மறைத்திருக்கிறதாக்கும்... உங்கள் கன்னுக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  50. அதிரா..

    //படங்கள் எதுவும் தெளிவாகவே இல்லை.. பச்சையும் தெரியல்ல செவ்வானத்தையும் காணம்.. சூரியனை நோக்கிக் கமெரா இருந்திருக்குது போலும்.. நான் கப்பல் படம் எடுத்ததைப்போல... அது சரி இது யார் எடுத்த படங்கள்? எந்த 6...//

    படம் எடுத்தவர் படித்திருப்பார் இந்த கமெண்ட்டை!


    ​// படம் பார்க்கவே.. சோகமயமான கதைக்கருத்தான் வருது... சிரிக்கிறமாறி:) ஒரு படம் போடலாமெல்லோ:)) //

    அதை அப்படி மாற்றி எழுதுவதும் ஒரு திறமை, கலை அதிரா... முயற்சி பண்ணுங்களேன்!!

    பதிலளிநீக்கு
  51. // சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்.. //

    ஏகாந்தன் ஸார்.. சிரிக்காவிட்டால் விடமாட்டேன் என்றும் சொல்லலாம். (ராஜேந்திரகுமார் தலைப்பு அது!)

    பதிலளிநீக்கு
  52. வாங்க வல்லிம்மா...

    ஆமாம்... நாணல் பாட்டை எடுத்துட்டு இந்த வரிகளை சேர்த்திருக்கலாம்! நினைவில்லாமப் போச்சு!

    பதிலளிநீக்கு
  53. நன்றி நண்பர் ஜீ.யா.கா.லிங்கம்!​

    பதிலளிநீக்கு
  54. படங்கள் எல்லாமே மிக அருமை என்றால் தலைப்புகள் அபாரம். மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  55. படங்கள் எல்லாம் செமையா இருக்கு...நீர் நிலைகள் எப்படிப் பார்த்தாலும் அழ்குதான்...

    நதி எங்கே போகிறது கடலைத் தேடி!!!

    கடலரசனே உன்னோடு சங்கமிக்க
    ஓடோடி வருகிறேன்
    மனிதர்கள் என்னைச்
    சிதைப்பதற்குள்
    ஓடோடி வருகிறேன்!
    இளமைத் துள்ளலுடன்
    இருக்கும் நான்
    மனிதர்கள் படுத்தும் பாட்டால்
    சுருங்கி வற்றிக் கிழவியாகும் முன்
    உன்னுடன் சங்கமிக்க வேண்டும்!
    ஓடோடி வருகிறேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  56. "போச்சுடா... இப்படிப் படம் எடுத்தாலே இதை வைத்து ஒரு கதை எழுதுங்கன்னு கேக்கறது இவங்க வழக்கமாச்சே... "//

    ஹா ஹா ஹா ஹா அதானே!!

    எல்லா தலைப்பும் செம ஸ்ரீராம் படங்களும் கொள்ளை அழகு! பாடல்கள் தலைப்பும் நீங்கள் கொடுத்தவையும் எல்லாமே செம...ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!