அதில் பாருங்கள்..... எப்போதும் சொல்வதுபோல நான் படம் பார்ப்பவன் அல்ல. பாடல்கள் கேட்பவன். எனவே இந்தப் பாடல் தெரியும். படம் அப்ற்றி எதுவும் தெரியாது.
வைரமுத்துவின் வரிகளுக்கு சங்கர் கணேஷ் இசை. எஸ் பி பாலசுப்ரமணியம் - எஸ் ஜானகி பாடிய பாடல்.
அப்போதெல்லாம் SPB தான் பாடிய பாடல்களில் எங்காவது ஒரு இடத்தில் சிரிப்பார். நாங்கள் அவர் எந்த இடத்தில் சிரிக்கிறார் என்று கவனித்து ரசிப்பவர்கள் உண்டு. இந்தப் பாடலில் முதல் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடத்தில சிரிக்கிறார்!
ரொம்ப ரசித்த பாடல். காட்சியில் ராஜீவும் அருணாவும். காட்சியில் பெரிய கவர்ச்சி இல்லை - வழக்கம்போல. பாடல் பெரிதும் ரசிக்கப்பட்ட பாடல். இப்போதும் ரசிக்க முடியும்.
சந்தனப்புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகைதானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும் விடிந்ததும் காய்ந்துவிடும்
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது
சேலைதொடு மாலையிடு இளமையின் தூது விடு
பாடு.....
என்னோடு கொண்டாடு பண்பாடு தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை
நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வையிடு மன்மதச்சேதி கொடு
பாடு......
வாழ்க நலம்...
பதிலளிநீக்குநலமே விளைக....
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குநல்வரவு துரை செல்வராஜூ ஸார். இனிய காலை வணக்கம்.
நீக்குஅனைவருக்கு நல்வரவும் வணக்கமும் வைச்சுக்கிறேன். வரவேற்ற துரைக்கு நன்றி. கீதா சென்னையில் இருப்பாங்க! அதான் தாமதமோ?
நீக்குநல்வரவும் வணக்கமும் கீதா அக்கா... கீதா ரெங்கன் இன்று பெங்களூரு திரும்புகிறார் என்று நினைக்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குநாடோடி ராஜா படம் மற்றும் இந்தப் பாடல் கேட்ட மாதிரி இல்லை. இப்போது தான் கேட்டேன்.
பதிலளிநீக்குபடத்தை விடுங்கள் வெங்கட்... இந்தப் பாடல் காதில் விழுந்த நினைவு இல்லையா? ஃபேமஸ் பாட்டாச்சே....
நீக்குகேட்ட மாதிரி இல்லை ஸ்ரீராம்.
நீக்குவெள்ளிக் கிழமை விடியும் நேரம்
பதிலளிநீக்குவாசலில் கோலமிட்டேன்...
வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி
கூந்தலில் பூ முடித்தேன்....
இப்படியும் ஒரு திரைப்பாடல்...
பாய்ந்தது ஓய்ந்தது காய்ந்தது
கடைசியில் பேரும் புகழும் தீய்ந்தது...
ஒன்றும் சொல்வதற்கில்லை...
ஹா.....ஹா. ஹா... துரை ஸார்... சட்டுனு இப்படிச் சொல்லிட்டீங்களே....!!
நீக்குஅன்பு துரை ராஜு இனிய காலை வணக்கம்.சுசீலாவின் இனிய குரலில் அந்தப் பாடலை இன்று கேட்டேன்.
நீக்குமிக அருமை.
அன்பு ஸ்ரீராம், வெங்கட் மற்றும் அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள். காணொளி இல்லாமல் பாட்டைக் கேட்டால் இனிமையாக இருக்கிறது. Happy Morning Bhanuma.
வல்லிம்மா....
நீக்குஇனிய காலை வணக்கம்.
சுசீலாவின் இனிய குரலில் ?
காணொளி இல்லாமல் பாட்டைக் கேட்டால் இனிமையாக இருக்கிறது...???
புரியவில்லை. நீங்கள் எந்தப் பாட்டைச் சொல்கிறீர்கள்? துரை செல்வராஜூ ஸார் இருக்கும் பி சுசீலா பாடலையா?
துரை சொல்வது என்னனு புரியலையே?????????????
நீக்குகீதாமா துரை சொல்வது ஜெஜே பற்றி. அந்தப் பாடல் நீ என்ற படத்தில் சுசீலாம்மா பாட ஜெயலலிதா நடித்திருப்பார்.
நீக்கு@ஸ்ரீராம் ராஜீவ்,அருணா பாடல் கேட்டாலே போதும் .பார்க்க வேண்டாம்னு சொன்னேன்.
OH! Me a tube light! :D
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.
நீக்குகனவு பாடல் இனிமை.
பதிலளிநீக்குகேட்ட நினைவு இல்லை.
இப்போது கேட்டேன் .
படமும் பார்த்தது இல்லை.
நன்றி கோமதி அக்கா.
நீக்குநாடோடி ராஜா கேள்விப் பட்ட படமா இருக்கு. ஆனால் பார்த்ததும் இல்லை; பாடலைக் கேட்டதும் இல்லை. புதுசு, முழுக்க முழுக்கப் புதுசு.
பதிலளிநீக்குநீங்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நீக்குபடம் கேள்விப்பட்டிருக்கிறேன். பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. சிவாஜிக்கு பிறகு வந்த நடிகர்கள் அவரை காபி அடிக்க முயன்றது போல, கமலுக்கு பிறகு வந்த நடிகர்கள் அவர் போல நடிக்க, நடனமாட முயன்றார்கள். அவர்களுல் ராஜீவும் ஒருவர். ஹீரோவாக சோபிக்க முடியாமல் வில்லனாக மாறினார். பாரதி படத்தில் ஷாயாஜி ஷிண்டேக்கு குரல் கொடுத்திருந்தார்,சிறப்பாக இருந்தது.
பதிலளிநீக்குஆமாம். இவரெல்லாம் பாலைவனச்சோலை உட்பட சில படங்களில் நடித்து கொஞ்ச காலம் தாங்கியவர்கள்! ராஜீவ் காக்கிச்சட்டை படத்தில் கூட வில்லனாக நடித்திருப்பார்.
நீக்கு80களில் வந்த பாடல்களில் எஸ்.பி.பி மட்டுமல்ல, ஜானகியும் பாடல்களுக்கு நடுவே சிரிப்பார், எரிச்சலாக வரும்.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்.
நீக்குஇந்த சிரிப்புக்காகத் தான் இன்றைய பதிவுக்குள் இந்தப் பாடல் வந்திருக்கிறது என நினைக்கிறேன்.... பாடலின் வரிகள் வக்ரமானவை...
நீக்குநீங்க ஏன் விருந்து சாப்பிடறப்போ குரங்கை நெனைக்கிறீங்க?..
முதல்லே இந்தப் பாட்டு விருந்தும் இல்லை.. மருந்தும் இல்லை...
அப்புறம் எங்கே குரங்கு பக்கத்தில இருந்தும் அதை நெனைக்கிறது?...
இருந்தாலும் என் தமிழுக்குப் பஞ்சம் என்று ஒரு வரி எழுதியவராயிற்றே - கவிஞர்....
ஜானகி சிரிப்பது எனக்கும் எரிச்சல் வரும்! ஆனால் எஸ் பி பி சிரிப்பது ரசிப்பேன்.
நீக்குதுரை ஸார்... வரிகள் வசீகரமாக இருந்தாலும் அர்த்தமில்லாத வரிகள். வாடா மலராயினும் சூடா மலர்கள் போல!
நீக்குஜானகியின் சிரிப்பு எரிச்சல் வரும் என்று சொன்ன ஒரே ஆள் நீங்க தான். ஆண் குரலில் பிளிரும் எல்.ஆர்.ஈஸ்வரி குரலை ரசிப்பவர், இப்படி சொல்வதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீக்குவாங்க ஸ்ரீ சரவணக்குமார்.... நான் ஜானகியம்மாவுக்கு ரசிகன்தான். கோபித்துக்கொள்ளாதீர்கள்.
நீக்கு///ஜானகி சிரிப்பது எனக்கும் எரிச்சல் வரும்!//
நீக்குஹா ஹா ஹா ஸ்ரீராம் உண்மையைச் சொன்னால் எனக்க்கும் பெரிசா பிடிக்காது... அது ஏதோ அவவின் சில செய்கைகள் செயற்கை போல ஒரு உணர்வு எனக்கு..
அருமையான பாடல்
பதிலளிநீக்குமுதன்முறையாக கேட்கிறேன்.
நன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியம்.
நீக்குநல்ல பாடல். நிறையதடவை முன்னொருகாலத்தில் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி நெல்லைத்தமிழன்.
நீக்குஇதழ்களில் வழியும் ..விடிந்ததும் காய்ந்துவிடும்..
பதிலளிநீக்கு- விடிகாலைலயே வெயில் ஜாஸ்தி போலருக்கு. வெட்ட வெளியில படுக்காதீங்கப்பா..
பார்வை வேறானது, இங்கு வேர்வை ஆறானது
- அருகில் வந்து அமர்ந்திருப்பது தீவிரவாதிதான்..சந்தேகமில்லை.
ஹா... ஹா... ஹா... ஏகாந்தன் ஸார்.... பொருத்தமாய் இருக்கிறது!
நீக்குகேட்ட மாதிரி தான் இருக்கு...!
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குபடமும், பாடலும் கேட்ட மாதிரியே இல்லியே!
பதிலளிநீக்குஆச்சர்யம்.
நீக்குஇதுவரை கேட்டதில்லை இப்போது கெட்டு ரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குஸ்ரீராம்! ஜானகியம்மா சிரிப்பது எரிச்சலாக இருக்கிறதா? LR ஈஸ்வரி கிர்ர்ர்ர்ர்ர் என்று உறுமிக்கொண்டே பாடுகிற பாட்டை எல்லாம் என்னவென்று சொல்வீர்கள்? :))))
பதிலளிநீக்குகிருஷ் ஸார்... நான் எல் ஆர் ஈஸ்வரி ரசிகன். சிவந்த மண் பாடல் தவிர மற்ற பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
நீக்குஎனக்கும் பிடிக்கும் ஈஸ்வரி..
நீக்குஆஷா போன்ஸ்லேயையே அசத்திய தமிழரசி!
என்னது.... சிவந்த மண் எல் ஆர் ஈஸ்வரி பாடல் பிடிக்காதா? இது என்ன கொடுமை. (பட்டத்து ராணி) அவங்க பாடினதுல அருமையான பாடல்னா அது... (நான் 6ம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா கூட்டிக்கொண்டு சென்ற படம் அது)
நீக்குசாட்டையடியைத் தொடர்ந்து வரும் குரல்தான் காரணம்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பாடலாகத்தான் இருக்கிறது. இதுவரை கேட்டதில்லை. படமும் இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. எஸ். பி. பியின் பாடல் என்பதினால் இப்போதுதான் ரசித்துக் கேட்டேன். நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா... நலம்தானே? பதிவொன்றையும் உங்கள் பக்கம் காணோமே...
நீக்குராஜீவ் காந்தி பாட, அருணா ஆடிய பாடலை ரசித்தேன்.
பதிலளிநீக்குAhaaa.
நீக்குஹா... ஹா.. ஹா... கில்லர்ஜி!
நீக்குபாட்டுக் கேட்டமாதிரியே ஒரு ஃபீலிங்காக இருக்கு.. அழகிய பாடல், இப்படியே இன்னும் வேறு பாடல் கேட்டமாதிரி வருது... எனக்கு மட்டும்தான் இந்த வியாதியோ என்னவோ..:).
பதிலளிநீக்குஇருக்கலாம் அதிரா.
நீக்குசுபமுகூர்த்தம் எனும் படத்தில் வரும் "நான் இரவில் எழுதும் கவிதை முழுதும்" எனும் பாடல் நினைவுக்கு வரலாம்!
ஸ்ரீராம் அருமையான பாடல் செம பாடல்....நான் நிறைய கேட்டிருக்கேன் ஆனால் விவரங்கள் எதுவும் அப்ப தெரியாது இப்ப உங்களின் பதிவு மூலம் தான் இசையமைப்பாளர் தெரியும்...
பதிலளிநீக்குஎஸ்பிபி செம...சங்கர் கணேஷ் இப்படி ஒரு அழகான ராகத்தில் மெட்டு போட்டிருப்பது வாவ்!! அதுவும் எங்கும் டிவியேட் ஆகாமல்...கம்பீர நாட்டையா திலங் ராகமான்னு ஒரு சந்தேகம் வருது...இரண்டிற்கும் ஆரோகணம் சேம்...அவரோகணத்தில் ஒரே ஒரு ஸ்வரம் மட்டும் தான் வித்தியாசம் இரட்டை சகோதரிகள் போல!!! இந்தப் பாட்டைக் கேட்டதும் உடனே ராஜாவின் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் திலங் ராகம் தான் நினைவுக்கு வருது...ஆனால் சந்தனப் புன்னகை கம்பீர நாட்டை போலத்தான் இருக்கு....
சலநாட்டை(பனிவிழும் மலர்வனம்), கம்பீர நாட்டை, திலங்க் எல்லாத்துலயும் இப்படியான பாடல்கள் அதாவது காதல் பாடல்களும் போடலாம்னு...காட்டும் பாடல்கள்...அருமை..
பாட்டு செம பாட்டு ஸ்ரீராம்.... மிகவும் ரசித்த பாடல்...இப்ப மீண்டும் ரசித்தேன்....
கீதா
படமும் பார்த்த நினைவு இருக்கிறது. படம் அப்படி ஒன்றும் சொல்வதிற்கில்லை.
பதிலளிநீக்குபாடல் நல்ல பாடல். ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.
துளசிதரன்