புதன், 27 பிப்ரவரி, 2019

புதன் 190227: மனைவி அமைவதெல்லாம் ...


சென்ற வாரக் கேள்விகள் இரண்டு கேட்டிருந்தோம். முதல் கேள்விக்கு ஏற்கெனவே நாங்கள் பதில் கூறிவிட்டதால், இப்போ மறுபடியும் இங்கே நாங்க ஒன்றும் சொல்லப்போவதில்லை. 

ஆனாலும், கீதா சாம்பசிவம் அவர்கள் அளித்திருந்த ஒரு கமெண்ட்டுக்கு மட்டும் இங்கே கொஞ்சம் பதில் அளிக்க முயல் ..... கிறேன். 


//& ஹி ஹி! ஒரு டெரரிஸ்ட் கூடத்தான் நாற்பது வருடங்களுக்கு மேலாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்கேன்!// 
எல்லா ஆண்களுமே திருமண வாழ்க்கை ஆரம்பித்ததும் அல்லது மனைவி குறித்துச் சொல்லுபவை இப்படித் தான் இருக்கிறது. திருமணம் செய்து கொண்டு மனைவியின் கெடுபிடிக்குப் பயந்து வாழ்க்கை நடத்துவதாகச் சொல்லாதவர்களே இல்லை. இதை வைத்துப் பல நகைச்சுவைத் துணுக்குகளும் வருகின்றன. ஆனாலும் ஆண்களே பெரும்பாலும் பெண்களைத் துரத்துகின்றனர். அந்த அடிமை வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர். திருமணம் ஆவதற்கு முன்னர் தேவதையாகக் காட்சி அளிக்கும் அதே காதலி, திருமணத்தின் பின்னர் ஒரு டெரரிஸ்ட் ஆக (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) காட்சி அளிப்பதன் உண்மையான காரணம் என்ன? அல்லது காதலியே மனைவியானால் அவள் திருமணத்திற்குப் பின்னர் இப்படித் தோற்றம் அளிப்பதன் காரணம் என்ன?





   
என்னுடைய பணிவான பதில் இதுதான்:

உண்மையிலேயே மனைவி ராக்ஷஷியாக வாய்க்கப்பெற்றவர்கள், அது பற்றி எந்த விதத்திலும், எங்கும் வெளியே சொல்லமாட்டார்கள். சாதுவாக, தலையாட்டி பொம்மையாக. நமக்கேன் வம்பு என்று மௌனவிரதம் மேற்கொள்வார்கள். புரிந்துணர்வு கொண்ட மனைவி வாய்க்கப்பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அந்த மனைவிக்குத் தெரியும், தன்னுடைய கணவனைப் பற்றி. என்னுடைய மனைவியின் புரிந்துணர்வு, நேர்மை, தியாகம் எல்லாவற்றையும் நான் நன்கு உணர்ந்தவன். 


இரண்டாவது கேள்வியாகிய ஆசிரியரிடம் லீவுக்கு விண்ணப்பித்தல் / அல்லது காரணம் கூறுதல் தொடர்பான கேள்விக்கு, வழக்கமான 'உடம்பு சரியில்லை' , 'வீட்டுல விசேஷம் ' போன்ற பதில்களையும், 'என்ன ஆனாலும் சரி, உண்மையைச் சொல்லிவிடுவேன் ' என்ற பதில்களையும் ஒதுக்கிவிட்டு வித்தியாசமான பதில் என்று பார்த்தால், திண்டுக்கல் தனபாலனின், பதில் தேறுகிறது. 

டுத்த நாள் வகுப்பு ஆசிரியரிடம், "ஏதோ ஒரு விசயம் நான் சொன்னதற்காக, நீங்கள் லீவு எடுத்துக் கொண்டு விட்டீர்கள்... நீங்கள் இல்லாமல் எனக்கு வகுப்பறை வர பிடிக்கவில்லை... அதனால் நான் நேற்று வராதத்திற்கான எனது லீவு லெட்டர் இந்தாங்க..."

ஆனால், அதற்கு அப்புறம் அவர் எங்களுக்கு ஒரு கொக்கி வைத்துவிட்டார்! 

படைப்பாற்றல் தொடர ஒரு கேள்வி :- "ஆமா, அது என்ன விசயம்...?"

என்னுடைய பதில் : " சார் ! நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப்படிவம் நாளை தாலுக்கா ஆபீசில் கிடைக்குமாம். இதைக் கேள்விப்பட்ட உடனேயே எனக்கு உங்கள் ஞாபகம்தான் சார் வந்தது!" 

======================================

எங்களுக்குக் கேள்வி அனுப்ப நீங்க எல்லோருமே மறந்துவிட்டதால், என்னுடைய இந்த வார சிறுதுளி இதோ: 

சிம்பிளா ஒரு கேள்வி:

சி என்ற எழுத்துடன் ஆரம்பிக்கும் விலங்குகளின் பெயர்களை எழுதுங்கள். 

======================================

இந்த வாரமாவது மறக்காம ஏதாவது கேள்வி கேளுங்க! 

மீண்டும் சந்திப்போம்! 

++++++++++++++++++++++++++++++++++++++
             

121 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. உண்மையிலேயே மனைவி ராக்ஷஷியாக வாய்க்கப்பெற்றவர்கள், அது பற்றி எந்த விதத்திலும், எங்கும் வெளியே சொல்லமாட்டார்கள். //

    யெஸ்ஸு யெஸ்ஸு...அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவா ஜாடிக்கேத்த மூடிதான் அமையும்

      நீக்கு
    2. எல்லோரும் அப்படி எல்லாம் இல்லை தி/கீதா.குறைந்த பக்ஷமாக மன ஆறுதலுக்கேனும் நெருங்கிய உறவினர்/நண்பரிடம் சொல்லுபவர்கள் உண்டு. எல்லாம் சொல்லாட்டியும் ஓரளவுக்கேனும் சொல்லுவார்கள்.எங்கள் உறவிலேயே பார்த்திருக்கேன்.

      நீக்கு
    3. //பொதுவா ஜாடிக்கேத்த மூடிதான் அமையும்//

      இல்லை நெ.த. எல்லோருக்கும் அப்படி அமைந்து விட்டால் சண்டையோ, சச்சரவோ ஏது? எங்க வீடுகளிலேயே இதற்கான உதாரணங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    4. கீசா மேடம்... சண்டை சச்சரவு இல்லாமல் இருவர் இருக்க முடியுமா? அது பாஸிங் க்ளௌட்ஸ் மாதிரி. இரண்டு பேருக்கும், கம்பு எடுத்து சண்டை வருது, அருவாளால் வெட்டிக்கிட்டாங்க என்பதுதான் மூடி சரியில்லாத ஜாடி. ஹா ஹா.

      நீக்கு
    5. நெல்லைத் தமிழரே, நீங்க என்னை விட அதிகம் அனுபவம் உள்ளவர் இல்லை என்றாலும் பொருந்தாத திருமண ஜோடிகளை அதிகம் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். சண்டை, சச்சரவு என்பது வேறு. நான் சொல்வது வேறு. ஒரு உதாரணத்துக்கு அப்படி எழுதினேன். உண்மையில் மனம் பொருந்தாமல் வாழ்க்கை நடத்துபவர்கள் நிறைய இருக்கின்றனர்.

      நீக்கு
  3. சி தமிழ் எழுத்து சி தானே?

    சிங்கம், சிறுத்தை, சிங்கவால் குரங்கு, இன்னும் வரேன் கிச்சன் ல வேலை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பு தான் "சிங்கவால் குரங்கு"

      சோலைமந்தி என்பதே சரி...

      கருங்குரங்கு என்றும் சொல்வதுண்டு...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நெல்லை....

      கௌ அண்ணா ஏதோ சீரியஸா ஒரு கேள்வி கேட்டிருக்கார்னு நானும் கொஞ்சம் சீரியஸா பதில் சொல்லலாம்னு பார்த்தா...

      கௌ அண்ணா சிம்பன்ஸி கணக்கில் உண்டா? சிப்மங்க்?
      இம்புட்டுதான் ஆங்கில் எழுத்துனா நிறைய சொல்லலாம்...

      கீதா

      நீக்கு
    3. டிடி தகவலுக்கு நன்றி.... ஓ சிங்கவால் குரங்கின் பெயர் சோலை மந்தியா... கருங்குரங்குனா வேற இல்லையோ...

      கீதா

      நீக்கு
  4. அன்பின் KGG , ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். சி ல ஆரம்பிக்கிற எல்லா மிருகங்களையும் கீதா சொல்லிவிட்டதால் எனக்கு தெரியவில்லை. வேறு ஏதாவது சொல்லணும்னால் ஸீல் தான்
    சொல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா....

      உங்கள் ஊரில் பேய்க்காற்று குறைந்ததா?

      நீக்கு
    2. குறைந்து விட்டதுமா. குளிர் ஆரம்பித்தது. சித்திரை வந்தால் சீற்றம் தணியும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம்.

    வந்தால் ஏகப்பட்ட கேள்விகள். இல்லைனா ஒண்ணுமே இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை....

      கா க வெ பெ பெ வெ....!!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம்... நீங்க எழுதினது என்னன்னு யோசித்துப் பார்க்கிறேன்... புரியலையே...

      நீக்கு
  7. //புரிந்துணர்வு கொண்ட மனைவி வாய்க்கப்பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அந்த மனைவிக்குத் தெரியும், தன்னுடைய கணவனைப் பற்றி. என்னுடைய மனைவியின் புரிந்துணர்வு, நேர்மை, தியாகம் எல்லாவற்றையும் நான் நன்கு உணர்ந்தவன்.//

    :(((((((( I am sorry, my question hurts you. :((((((((

    என்னுடைய கேள்வியை நான் சரியாக் கேட்கவில்லை. தனிப்பட்ட முறையில் எ.பி. ஆசிரியர்களையோ அல்லது நண்பர்கள் யாரையுமோ கேட்கவில்லை. பொதுவான கேள்வி. மனைவியைக் கண்டாலே பயம் என்னும் ஆண்கள் அத்தகைய நகைச்சுவைத் துணுக்குகளை அதிகம் ரசிக்கும் ஆண்கள், அதே பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வது ஏன்? திருமணம் என்பதில் மனைவியின் கை தான் ஓங்கி இருக்கும் எனப் பல நகைச்சுவைத் துணுக்குகள் வந்தும் ஆண்கள் பெண்ணின் பின்னாலேயே அலைவது ஏன்? அந்தப் பெண் திருமணத்துக்கோ அல்லது காதலிக்கவோ மறுத்தால் கோபமோ ஆத்திரமோ கொள்வது ஏன்? அந்தப் பெண்ணைக் கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் கொள்வது ஏன்?

    மற்றபடி திரு கேஜிஜி அவர்களுக்கு இதனால் ஏதும் மன வருத்தம் அல்லது கஷ்டம் ஏற்பட்டிருந்தால் மனப்பூர்வமாக வருந்துகிறேன். எனக்குப் புரியும்படி கேட்கத் தெரியவில்லை. மிகவும் மன்னிக்கவும்.

    திருமண வாழ்வின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்தும், புரிந்தும் அனைவரும் திருமணத்தை விரும்புவதும், அந்தத் திருமணம் ஆகலை எனில் வருந்துவதும் விசித்திரமாக இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, இல்லை நிச்சயமாக மனவருத்தம் எதுவுமில்லை. இந்த வாரத்திற்கு வேறு எதுவும் ஹாட் சப்ஜெக்ட் கிடைக்காததால் இதை எடுத்துக்கொண்டேன். அவ்வளவுதான்! 😃

      நீக்கு
    2. விளக்கைத் தேடும் விட்டில் பூச்சிக்கு லாஜிக் கேட்கறீங்களே கீசா மேடம்.

      ஐயோ பாவம் ஆண்கள் என்று சப்போர்ட்டுக்கு வருவீங்கன்னு பார்த்தா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. திருமண வாழ்வின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்தும், புரிந்தும் அனைவரும் திருமணத்தை விரும்புவதும், அந்தத் திருமணம் ஆகலை எனில் வருந்துவதும் விசித்திரமாக இல்லையா?//

      கீதாக்கா இந்தக் கேள்வியை நான் கன்னா பின்னாவென்று ஆதரிக்கிறேன்!! எனக்கு இது அடிக்கடி மனதில் தோன்றும்.

      அதுவும் ஒருவரின் மகளுக்கு மனசு ரீதியாகச் சிலப் பிரச்சனைகள் இருந்தும் கல்யாணம் என்று தேடி தேடிக் கல்யாணம் செய்து டிவோர்ஸ் ஆகி அவளுக்குச் சிலப் பயிற்சிகள் என்று கொடுத்து மீண்டும் கல்யாணம் செய்யனும்னு நினைக்கிறவங்களை என்ன சொல்ல?

      நான் இத்தனைக்கும் அவங்களுக்கு முதல் கல்யாணம் போதே இப்படியானவங்களுக்கு கல்யாணம் என்பதை விட தன்னைப்பாத்துக்கறதுக்கு தன் காலில் நிற்க முதல்ல பார்க்கனும் கல்யாணம் ரொம்ப கஷ்டம் என்று சொல்லியும் புரிந்து கொள்ளாமல்...இது ஆணுக்கும் பொருந்தும்...

      ஆனால் பொதுவா ஆணுக்கு மனப் பிரச்சனை நா கூட பெண்கள் இருந்துடறாங்க..ஆனால் பெண்ணுக்கு மனப் பிரச்சனைனா ஆண்கள் கூட வாழறது அபூர்வம்...அப்படியே வாழ்ந்தாலும் பல சங்கடங்களில்தான் வாழறாங்க...அதுவும் நான் பார்த்து வருகிறேன்...

      கீதா

      நீக்கு
  8. ரசனையான பதில்கள்.
    வீட்டிலிருந்து சட்டென காட்டுக்குள் பாய்ந்து விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறென்ன செய்வது?...

      சித்தியானந்தா மாதிரி மடாலயம் அமைக்காமல்...!?...

      நீக்கு
  9. கன்னத்தில் காதல் குறி..
    கையிலோ அப்பளக் குழவி..
    அணைப்பதும் இந்தக் கை..
    அடிப்பதும் இதே கை..
    ஆஹா.. இதல்லவோ வாழ்க்கை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா துரை அண்ணே!!!! ஹா ஹா ஹா ஹா ரசித்தேன்..

      இதை மதுரை தமிழன் பார்க்கலியேனு இருக்கு...ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    2. துரை சார், உங்களுக்குத் தோன்றிய இதே எண்ணம் எனக்கும் தோன்றியது.
      பனி இல்லாத மரர்கழியா?
      படை இல்லாத மன்னவரா?
      அடியில்லாத மண வாழ்வா?

      நீக்கு
    3. செல்லமான அடி, பொய்க்கோபம் இதெல்லாம் பொன் வசந்தம்.... அதிலும் குறைந்தபட்சம் காதைப் பிடித்தாவது திருகி இருக்க வேண்டும்... இதெல்லாம் இல்லையெனில் என்ன வாழ்வு?.

      ஆனால் இதெல்லாம் அந்த 90 நாட்களுக்குள் தான்...

      நீக்கு
  10. சிவிங்கிப்புலி ( உலகின் வேகமான நில விலங்கு)

    சிறுத்தை
    சிம்பன்சி
    சிம்பான்சி,
    சிங்கம் I
    சிங்கம் II
    சிங்கம் III
    சிங்கம் IV விரைவில்... (அனுஷ்கா உண்டு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹாஹா...சிரிச்சு முடிலப்பா....அதுவும் அனுஷ் என்று சொல்லி இங்க பலரையும் குளிர்விச்சுட்டீங்களே!!!!

      கீதா

      நீக்கு
    2. //..(அனுஷ்கா உண்டு)//

      சிங்கினி ரோலில்தானே !

      நீக்கு
    3. சூப்பர் டி.டி. ஏகாந்தன் சார் சிரிச்சு முடியல.. சிங்கினியோ, லங்கிணியோ எங்களுக்கு அது அனுஷ்கா!

      நீக்கு
    4. ஸ்ரீராம் கோபமா இருக்கார்!

      நீக்கு
    5. அதான் இந்தப் பக்கமே வரதில்லைனு வைச்சிருக்காரா? :) போகட்டும், யாராவது அனுஷ்கா படத்தைப் போடுங்கப்பா! கூடவே ஶ்ரீராமோட பாஸுக்கும் தகவல் கொடுத்துடுங்க!

      நீக்கு
    6. ஏகாந்தன் அண்ணா ஹையோ சிரிச்சு முடில....சிங்கா சிங்கினு சொல்லிக்கலாமே!!! எப்படியோ எங்க அரம க்கு கொண்டாட்டம்...என்ன சொல்றீங்க பானுக்கா அண்ட் ஸ்ரீராம்..!!!

      கீதா

      நீக்கு
  11. கௌ அண்ணா அந்தப் படம் பார்த்து சிரிச்சு முடில...இனி எங்கள் ப்ளாக் பக்கம் போவியா?!!

    போமாட்டேன் போமாட்டேன்.... தி மோ படத்துல பாலையா மாதிரி முட்டாக்கு போட்டுப் போவேனே!!!..ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஏயும், பியும் கேள்வி கேட்காவிட்டால் யாருமே கேட்க மாட்டீர்களா? பின்னூட்டம் மட்டும் போட்டு விட்டு ஒதுங்கி விடுவீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே பானுக்கா :) தொடர்ந்து நாமே கேட்கிறோம்னு ஒரு இடைவெளி விட்டேன் :) சரி சர்ச் போயிட்டு வந்து கேட்கிறேன் :)

      நீக்கு
  13. // இந்த வாரமாவது மறக்காம ஏதாவது கேள்வி கேளுங்க //

    உங்கள் பாணியிலே ஒரு கேள்வி...

    எனது மகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது...

    "அப்பா... 'பு' என்று முடியும் 100 தூய தமிழ் சொற்களை சொல்லுங்க... எங்க தமிழ் ஆசிரியர் எழுதி வர சொன்னாங்க..."

    "அன்பு, ஆர்பரிப்பு, இனிப்பு" என்று ஆரம்பித்து, இது போல் "நீயும் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களை வைத்து நீயே யோசித்து எழுது" என்று சொல்லி விட்டேன்... (200-க்கு மேல் வந்தது...!)

    எங்கள் Blog வாசகர்களுக்கு இங்கே சில விதிமுறைகள் :

    1) அப்பு, ஆப்பு, கப்பு (துர்நாற்றம்), கப்பு (cup), மப்பு, மாப்பு, குப்பு, சுப்பு, சூப்பு - இவைகள் எல்லாம் சொன்னால் நிராகரிப்பு...!

    2) அடுத்த வாரத்தில் உங்கள் குழந்தைகள் எத்தனை தமிழ் சொற்களை சொன்னார்கள் என்பதை மட்டும் சொல்லவும்...

    3) நீங்கள் சொல்ல வேண்டியது - மனிதருக்கு வேண்டிய முக்கிய பத்து 'பு' மட்டும்... (எடுத்துக்காட்டு : 1. அன்பு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பு தமிழ்ச் சொல் அல்லவா!..
      அதை ஏன் நிராகரிக்க வேண்டும்?..

      ஏன் ஐயா... நிராகரிப்பு என்பது தமிழா?..

      அச்சொல் தமிழ்ச்சொல் அல்ல..

      நீக்கு
    2. கீழ் உள்ளது போல் சொன்னால், பலருக்கும் புரியாது...

      1) அப்பு, ஆப்பு, கப்பு (துர்நாற்றம்), கப்பு (cup), மப்பு, மாப்பு, குப்பு, சுப்பு, சூப்பு - இவைகள் எல்லாம் சொன்னால் மறுப்பு...!
      1) அப்பு, ஆப்பு, கப்பு (துர்நாற்றம்), கப்பு (cup), மப்பு, மாப்பு, குப்பு, சுப்பு, சூப்பு - இவைகள் எல்லாம் சொன்னால் புறக்கணிப்பு...!

      மற்றபடி நிராகரிப்பு என்பது பெயர்ச்சொல்...

      நீக்கு
    3. ஒவ்வொரு ஊரிலும் பேச்சுத் தமிழ் என்பது மாறுபடும்... அவை வேண்டாம் என்பதே குறிக்கோள்...

      மற்றபடி எவ்வாறு யார் என்ன சொல்கிறார்கள் என்பதே எனது கண்காணிப்பு அல்லது கணிப்பு...

      நிறைய அறிந்து கொள்ள வேண்டியதும் எனது வாய்ப்பு...

      நன்றி ஐயா...

      நீக்கு
    4. மனிதனுக்கு வேண்டியதா? அன்பு, பண்பு, வம்பு, கம்பு (வம்பு வளர்த்தா இது வேணுமே), சொம்பு, நல்ல வளர்ப்பு, தொடுப்பு(னு சொன்னா நீங்க அடிக்க வரக்கூடாது), கூடாதது திணிப்பு

      நீக்கு
    5. டிடி எனக்குத் தெரிந்தது அன்பு, நகைப்பு, சிரிப்பு!!!!!!! அதிலும் சிரிப்பு!! நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னாப்ல..!!! ஹா ஹா ஹா

      இருங்க நானும் சொல்றேன் தமிழ்க்சொற்கள் நல்ல கேள்வி...

      கீதா

      நீக்கு
  14. 1) அன்பு
    2) பண்பு
    3) படிப்பு
    4) உழைப்பு
    5) சுறுசுறுப்பு
    6) சேமிப்பு
    7) (வாழ்வில்) பிடிப்பு
    8) (அன்பின்) அரவணைப்பு
    9) (இதயங்களின்) இணைப்பு
    10) (தீமையிலிருந்து) தற்காப்பு
    11) (இயற்கையைக் காக்கும்) பொறுப்பு
    12) ( நாடு காக்க வேண்டும் என்ற ) நினைப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பு

      அடுத்த வாரம் புதன் அன்று இருக்கு இன்னும் கலகலப்பு

      நீக்கு
    2. உங்களது பத்தில் முக்கியமானது இல்லை... இருந்தாலும் நன்றி ஐயா...

      அது மனித குலத்திற்கே வாய்ந்த அருமருந்து...

      நீக்கு
    3. இத்தனையும் பொருந்தி இருந்தாலே வாழ்வில் பொங்கி விளைந்திடும் சிரிப்பு....

      நீக்கு
    4. நீங்க சொன்னது எனக்கு 'உவப்பு'.

      நீக்கு
    5. பத்தில் இருக்க வேண்டுமே என நினைப்பு...
      சொல்வார் எனும் தவிப்பு...
      இதுவே அடியேன் எதிர்ப்பார்ப்பு...
      கிடைத்ததே தித்திப்பு...

      நீக்கு
    6. டிடி கலகலப்புடன் இருக்கும் நகைப்பு!!!! சிரிப்பு! அதற்குப் பஞ்சமில்லை களிப்பு இங்கு...

      கீதா

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
    எனக்கு பூரி கட்டையை வைத்து அடிக்க வருவதை பார்த்த்தும் "அவர்கள் உண்மைகள்"(மதுரை தமிழன்) நினைவுதான் வந்தது. அவர்தான் அடிக்கடி சொல்வார் பூரிகட்டை அடி பற்றி.
    அவரும் காதல் மணம் புரிந்தவர். அது செல்ல அடி. விளையாட்டு சண்டை.

    பதிலளிநீக்கு
  16. இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு இவையே தமிழ் உணவின் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணே எங்களுக்கும் கொடுங்க கொஞ்சம் வாய்ப்பு!!!!!!

      ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  17. நெல்லைத் தமிழன் சொன்னது போல் பொதுவாக ஜாடிக்கு கேத்த மூடிதான் அமைகிறது.

    //வாழ்க்கைத் துணை-இறைவன் கொடுத்த வரமே:

    தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதியர் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை.”பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள்,பிடாரியைக் கட்டி வைத்து விட்டாகள்”
    என்பனவெல்லாம் அறியாமையே. அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்,துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும்.அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க அது பல் பேர் மனதில் பிரதிபலிக்க,மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள்.இதையே”
    ’மனம்போல் மாங்கல்யம்’ என்றும் ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும் சொல்கிறார்கள்.
    இப்படி சொன்னது _ வேதாத்திரி மகரிஷி.

    பதிலளிநீக்கு
  18. முகத்தில் வேணும் சிரிப்பு..
    வேண்டாம் விலக்கு வெறுப்பு..
    இனிமையில் மனதைத் திருப்பு
    இளமைக்கு அதுவே துடுப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் துடிக்கிறதே ஒரு படபடப்பு...
      ஏனென்று சொல்வதில் ஒரு பதைபதைப்பு...
      கருத்துரையைக் கண்டு வியப்பு...
      தொடரட்டும் உங்கள் படைப்பு...
      மற்றவரும் தொடர வேண்டுமே என தவிப்பு...

      நீக்கு
    2. இதைவிட உங்களுக்கு முக்கியம் அடுப்பு. சமையல் செய்ய துடிப்பு. எல்லாத்துக்கும் மேல உப்பு.

      நீக்கு
    3. ஹா... ஹா... செம...
      வீட்டிலும் படித்து விட்டு சிரிப்பு - அலை போல...

      நீக்கு
  19. நேரிய வழியில் நடப்பு..
    என்றும் இல்லை களைப்பு..
    கை விளக்காகும் படிப்பு..
    கருத்தில் கொண்டால் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  20. நல்லவர் கைகளில் இணைப்பு..
    நாளும் கூடும் மதிப்பு..
    பொய் முகம் காட்டும் நடிப்பு
    நாறிப் போகுமே பிழைப்பு...

    பதிலளிநீக்கு
  21. நல்லவர் கைகளில் இணைப்பு..
    நாளும் கூடும் மதிப்பு..
    பொய் முகம் காட்டும் நடிப்பு
    நாறிப் போகுமே பிழைப்பு...

    பதிலளிநீக்கு
  22. கணிக்க வேண்டும் பொருள் இருப்பு
    அதுவே இங்கு என் பொறுப்பு..
    பிழை எதும் இல்லாத கணிப்பு..
    நெஞ்சினில் நிம்மதி இருப்பு..

    பதிலளிநீக்கு
  23. பெருங்குளம் நீர்வெளிப் பரப்பு..
    நீர் உயர்ந்தால் உயரும் வரப்பு..
    வரப்பே வாழ்வின் செழிப்பு..
    அது இல்லையேல் எங்கிலும் தவிப்பு..

    பதிலளிநீக்கு
  24. மாதக் கடைசி.. இருப்பு சரிபார்க்க வேண்டும்.. பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  25. மாதக் கடைசி.. இருப்பு சரிபார்க்க வேண்டும்.. பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி கேட்டது அடுத்த வாரத்திற்கு... 200-ல் சிறிது சொல்லி விட்டீர்கள்... அடுத்த வாரம் தொடருவோம் ஐயா... நன்றி...

      நீக்கு
  26. "எனக்கு தி ஜானகிராமன் "மலர் மஞ்சம்" நாவலில் சொன்ன சிரகாரி கதை ஞாபகம் வந்தது . அதை என் பாணியில் சொன்னேன்" என்று ஆரம்பிக்கிறார் பதிவர் R P ராஜநாயஹம் மனைவி டெர்ரரிஸ்ட் என்றால் அந்தக் கதையில் வருகிற மாதிரி அல்லவா இருக்கவேண்டும் கௌதமன் சார்?

    " சிரகாரி ,சிரகாரி ன்னு ஒருத்தன் . அவன் பெண்டாட்டி அவனை கோபம் வரும் போது அடி வெளுத்து விடுவாள் . புருஷன் பொஞ்சாதி சண்டையில் புருஷனை உரித்து விடுவாள் .

    இவன் வீட்டில் அடி வாங்கி வெளியே வந்து விழுந்து (தலையில் முடியில் நான்கைந்து ஈர்க்குச்சி) எழுந்து பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து " யோவ் ! உம்மகிட்ட சன்னாசம் எப்படி வாங்குறது ன்னு நூறு தடவை கேட்டுட்டேன் . என்னை இந்த சண்டாளி கொலை செய்யுறதுக்கு முன்ன சொல்லி தொலையும் .இல்லேன்னா கொலை பழி உம்மேலே தான் . என் பாவம் உம்மை சும்மா விடாது "

    பக்கத்து வீட்டுக்காரன் பதிலே சொல்லாமல் " வீட்டுக்குள்ள போ " என சமாதானமாக சொல்வான் . அடிக்கடி இப்படி அவன் அடி வாங்கும்போதெல்லாம் " யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லு " என்று பக்கத்து வீட்டுக்காரனிடம் புலம்புவான் .

    ஒரு நாள் வீட்டுக்குள்ளிருந்து விளக்குமாறு அடி வாங்கி வெளியே வந்து விழுந்தவுடன் "யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லுய்யா " என்றான் .

    பக்கத்து வீட்டுக்காரன் எழுந்தான் . தான் கட்டியிருந்த நாலு முழ வேட்டியை கிழித்து கோமணமாக கட்டினான் . " இப்படி தாண்டா ! " என சொல்லி விட்டு அவன் விறு விறு என நடந்து விட்டான் . அவன் சந்நியாசி ஆகி கிளம்பி போயே விட்டான் !

    இந்த சிரகாரி அடுத்த தடவை பொண்டாட்டி இடம் அடி வாங்கியவுடன் எதிர்த்த வீட்டுக்காரனிடம் கேட்க ஆரம்பித்து விட்டான் " யோவ் சன்னாசம் எப்படி வாங்குறது சொல்லுயா "

    பதிலளிநீக்கு
  27. கடுகு சிறிதானாலும் காரம் பெரிதாமே:).. நான் போஸ்ட்டுக்குச் சொன்னேன். ஹா ஹா ஹா. முடிஞ்சால் திரும்ப வாறேன்.. ஏன் எதுக்கு எண்டெல்லாம் கேய்க்காதீங்க:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க ஏன் இந்தக் கேள்விலாம் கேட்கப்போறோம். ஜாடி நிறைய கருப்பு வடை, அது என்னா வடை, பருத்தித்துறை வடை பல நூறு - இதெல்லாம் யாருக்கும் கொடுக்காம சாப்பிட்டா அப்புறம் ஏன் வராது வயிற்றுவலி...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நல்லாத்தான் கற்பனை ஓடுது நெ.தமிழனுக்கு:)..

      நீக்கு
  28. வாசகர்கள் பலரும் சினிமாவுக்கு பாட்டெழுதலாம்ராஜேந்தர் வரமாட்டார் போட்டிக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நெனச்சேன்!
      யேய்!
      என் பையன் பேரு சிம்பு,
      பண்ணாத அவன் கிட்ட வம்பு,
      கையில் எடுத்தான்னா கம்பு
      உன் கதை கந்தல் நம்பு!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா இதை இப்பவே டி ஆர் க்க்கு ஃபார்வேர்ட் பண்றேன்

      டீ ஆர்க்கு சிலிர்ப்பு

      வருவார்! கொழுப்பு என்று சொல்லிக் கொண்டே! (டிடி இந்தக் கொழுப்பு நல்ல கொழுப்பு!!! ஆப்பு கப்பு எல்லாம் இல்லையாக்கும் ஹா ஹா ஹா)

      காப்பு! எங்களுக்கு இருக்குத் தற்காப்பு!

      கீதா

      நீக்கு
  29. சிங்கம், சிங்கமுக குரங்கு, சிறுத்தை, சிறுத்தைப்புலி

    பதிலளிநீக்கு
  30. சின்சில்லா /chinchilla
    சித்திரகாயம்..இதை யாரோ ஒருவர் பதிவில் படிச்சேன் :) புலியின் மற்றொரு பெயராம்
    சிப்மன்க்

    பதிலளிநீக்கு
  31. அடுத்த வாரம் என்றார் தனபாலன், இந்த வாரமே துவங்கி விட்டதே பர பரப்பு.
    மிக அருமையாக இருக்கிறது.
    மாத கடைசி இருப்பு பார்க்க செல்கிறார் இல்லையென்றால் இன்னும் பல உள்ள இருப்புகள் வெளி வரும்.
    திண்டுக்கல் தனபாலன், துரைசெல்வாரஜூ, நெல்லைதமிழன், கெளதமன் சார் எல்லாம் எழுதியது வியப்பு., படிக்க களிப்பு.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    இந்த வார புதன் கேள்வி கணைகள், பதிலுக்கு பதில் கணைகள் என்று இரு கணைகளை கொண்டு தாக்கா விட்டாலும், சிரிப்பு கணைகளை கொண்டு தாக்கி, சிரித்து ரசிக்க வைக்கிறது. கருத்துரைகளை படித்ததும், "பூ.. பூவாய் பூத்திருக்கும். பூமியிலே ஆயிரம் பூ. பூவிலே சிறந்த பூ என்ன பூ?.. அன்பு.." என்ற பாடல் நினைவுக்கு வந்ததை தவிர்க்க இயலவில்லை. இன்றைய பதிவு சுவாரஸ்யமாக இருந்தது.

    உள்ளத்தில் சிரிப்புடன், களிப்பு வர, அனைவரின் தமிழார்வம் கண்டவுடன் பெருமிதத்தில் மதிப்பு தன்னால் கூடி வர, மனதினிலே ஏற்பட்ட மலைப்பு அறிந்திங்கே தீபாவளி போன்ற சிறப்பு இல்லாமலே மத்தாப்பு கொளுத்தி மகிழ்வோடு கொண்டாடியது இந்தப்பதிப்பு. இனி இத்தலைப்பு கொண்டு அடுத்த புதனில் படைப்பு வரும் வேளையினை உயிர்ப்புடன், ரசித்து மகிழ வேறு எதிர்பார்ப்பு ஏதுமின்றி, நாமெல்லாம் எதிர்நோக்கி காத்திருப்போம்.

    (சகோக்களின் தமிழார்வ பிரதிபலிப்பு என்னையும் ஏதோ கிறுக்க வைத்தது. எழுதியது தப்பு தப்பாக இருக்கலாம். அவ்வாறு இருப்பினும்,மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.)

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்புக்கு மகிழ்ச்சி...
      ஒருவருக்கொருவர் சகஜமாக பாண்டி ஆடும் களம் இது... தங்களது கைவண்ணத்தில் கருத்துரை அழகுதான்...

      மன்னிப்பு என்பதெல்லம் எதற்காக அம்மா....

      நீக்கு
    2. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      என் கருத்துரையையும் ஏற்று எனக்கு உற்சாக பதில் அளித்தமைக்கு மிகவும் மகிழ்வடைகிறேன் சகோதரரே.

      தங்கள் அழகு தமிழுக்கு முன் என்னுடைய தமிழ் நடை சிறு தூசி என எனக்கு ஒரு ஐயப்பாடு. அதனாலேயே பெரும்பாலும் பதிவுகளுக்கு வரும் அனைத்து கருத்துரைகளிலும் கலந்து கொள்ள ஆசை இருப்பினும் என் மனம் ஒரு தடை விதித்து விடும்.படித்து ரசிப்பதோடு சரி! தங்களது ஊக்கமிகும் வார்த்தைகளுக்கு மிகுந்த் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. துரை அண்ணே நம்ம பு கணக்குல மன்னிப்பு வேனுமே!!!! நீங்க முன்னாடியே சொல்லிட்டீங்களோ?!!!

      கீதா

      நீக்கு
    4. கமலா ஹரிஹரன் மேடம்

      பூவிலே சிறந்த பூ குஷ்பு என்றுதானே நினைத்தேன். அன்பு என்று சொல்றீங்களே ஹாஹா

      நீக்கு
  33. இன்றைய பதிவில் பதில்கள் அருமை

    அந்த விசயம் சுவையான பதில்...

    படம் நல்ல நகைச்சுவை. எபி பக்கம் போவியா என்றால் எப்படி எங்களால் இங்கு பதில் கொடுக்க முடியும்?!

    உங்கள் கேள்விக்குப் பதிலும் வந்துவிட்டதே சிங்கம் என்றெல்லாம். சிற்றெறும்பு சொல்ல நினைத்தால் அது விலங்கினத்தில் சேராதே. அதே போல் சிட்டுக் குருவியும்...சில் என்று கடல்வாழ் உயிரினம் இருக்கிறது.

    துளசிதரன்




    பதிலளிநீக்கு
  34. அன்பு
    ஆர்ப்பரிப்பு
    இயல்பு
    ஈர்ப்பு
    உவப்பு
    ஊக்குவிப்பு
    என்பு
    ஏற்பு
    ஐ ....ஒன்னும் தெரியலை :)
    ஒப்பு
    ஓரமைப்பு (ஹீ ஹீ :)
    ஒள .....................ஹீஈ ஹீஈ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்பு //
      அல்லோ மிஸ்டர்.. இது என்ன சொல்?:)) ஹா ஹா ஹா விடமாட்டமில்ல:)

      நீக்கு
    2. என்பு-எலும்பு. என்பதனை வெயில் போலக் காயுமே- குறள் வகுப்புக்கும் போகலையா அதிரா

      நீக்கு
    3. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
      என்பும் உரியர் பிறர்க்கு.

      நீக்கு
    4. @நெல்லைத்தமிழன் அன்னிக்கு சிமியோன் டீச்சர் லீவாம் :) இல்லைன்னா மியாவ் கிளாஸை கட்டடிச்சிட்டு மரத்தில் ஏறி மீனாட்ஷி பழம் பறிக்க போயிருப்பாங்க :)

      நீக்கு
    5. என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பி லதனை அறம்.
      அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

      ஏஞ்சலின் - அதிராவோட 'டமிள் டி', 1500 மில்லி மீட்டர்ல 2வதா வந்தது - இது இரண்டும் போதும் நமக்கு, அவங்களை ஆயுள் முழுவதும் கலாய்க்க.

      நீக்கு
    6. ஹையோ அது என்பு இல்ல:) நான் வேறு ஒரு சொல்லெல்லோ பாவிச்சேன்:) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  35. கரும்பு ,கருப்பு ,கசப்பு கரிப்பு , ,கண்டிப்பு ,கண்ணசைப்பு கண்காணிப்பு , ,கடுப்பு ,கசரிபு ,காழ்ப்பு ,எறும்பு, விரும்பு ,அரும்பு ,எலும்பு ,எழும்பு ,கொம்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரும்பு(வண்டு), பருப்பு, பொறுப்பு, வெறுப்பு, விருப்பு, செருப்பு, வரப்பு, பரப்பு, சிறப்பு, கரும்பு, புலம்பு, திகைப்பு, நகைப்பு, வரப்பு, பரப்பு, விரிப்பு, களிப்பு, களிம்பு, வம்பு, பாம்பு, ம்ப்பு, உசுப்பு, பசப்பு, மறப்பு, சிரிப்பு, மறப்பு, அரிப்பு, கரிப்பு, நடிப்பு, ஜில்லிப்பு, முறைப்பு, எரிப்பு, நிரப்பு, உரப்பு, கறுப்பு, ஏற்பு, இழப்பு, இளைப்பு, களைப்பு, வளைப்பு, கடுப்பு, கசப்பு, அன்பு, வார்ப்பு, மூப்பு, இழப்பு, பூப்பு, சூப்பு, ஓம்பு, பாம்பு, காம்பு, களிப்பை, இறப்பு, மறப்பு, மறைப்பு, வளைப்பு, மலைப்பு, அடைப்பு, வசம்பு, கம்பு, பிறப்பு, முறைப்பு, அழைப்பு, அறுப்பு, வரப்பு, வறுப்பு, இடுப்பு, நொடிப்பு, துடிப்பு, உடுப்பு, துடுப்பு, படிப்பு, வடிப்பு, நடிப்பு, கூப்பு, ஏற்பு, வனப்பு, வசம்பு, ஆர்ப்பரிப்பு, வார்ப்பு, இருப்பு, கற்பு, வெற்பு, அர்ப்பணிப்பு, சார்பு, மார்பு, நரம்பு, வரம்பு, நிலவேம்பு, வேம்பு, சேம்பு, அம்பு, தும்பு, காம்பு, மாண்பு, மன்பு, தீம்பு, வீம்பு, சோம்பு, தெம்பு, செம்பு, உடுப்பு, துடுப்பு, ஜெயிப்பு, தோற்பு, காழ்ப்பு, சேர்ப்பு, விரைப்பு, வறுப்பு, முறைப்பு, உறைப்பு, களிப்பு, எக்களிப்பு, கனைப்பு, வனப்பு, தண்டிப்பு, ஈர்ப்பு, வகுப்பு, பாதிப்பு, பதைப்பு, மதர்ப்பு, மன்னிப்பு, அணைப்பு, இளைப்பு, பாதிப்பு, பசப்பு, கொழுப்பு, குழப்பு, குழம்பு, இரும்பு, இருப்பு, தடுப்பு, நடப்பு, கல்லுப்பு, கார்ப்பு, தூர்ப்பு, விளைவிப்பு, இரைப்பு, தண்டிப்பு, நம்பு, தப்பு-மிஸ்டேக், தப்பு-வாத்யம், அப்பு-பூசு, படைப்பு, புடைப்பு, செரிப்பு, கனைப்பு, கர்ஜிப்பு, துறப்பு, அடைப்பு, வாதிப்பு, பாதிப்பு,

      நீக்கு
    2. விகசிப்பு, ரசிப்பு, மோப்பு, தேய்ப்பு, தோய்ப்பு, காய்ப்பு, வாய்ப்பு, சோதிப்பு,

      நீக்கு
    3. ///பாம்பு///
      ஹையொ இது என்ன புது வம்பு:) மனித வாழ்க்கைக்கு இது தேவையோ கர்ர்ர்ர்ர்ர்:)).

      நீக்கு
    4. குரைப்பு, மறைப்பு, உவப்பு, சிலிர்ப்பு, குறைப்பு, காப்பு, அரப்பு, சுரப்பு, படபடப்பு, வெடவெடப்பு, கெம்பு, சில்லிப்பு, பறிப்பு, உரிப்பு, துறப்பு, உறுப்பு, மறுப்பு, சிறப்பு

      நீக்கு
    5. @ நெல்லைத் தமிழன்

      https://101clipart.com/wp-content/uploads/16/Crying%20Baby%20Animated%20Gif%2023.gif

      நீக்கு
    6. வணக்கம் சகோதரரே

      ஆகா.. அடுத்த புதன்தானே 200 சொற்களை சகோதரர் தனபாலன் அவர்கள் கேட்டிருந்தார். முயற்சிக்கலாம் என இருந்தேன். இவ்வளவு விரைவில் அடுத்த புதன் வந்து விட்டதே என்ன மாயமிது.! என்ற வியப்பில், நான் எழுதிக் கொண்டிருந்த சொற்களாகிய "பு"வையெல்லாம்"பூ"என ஊதி புறந்தள்ளி விட்டேன். ஹா ஹா ஹா ஹா. தலை சுற்றிய போதும், சுற்றும் இடங்கலெல்லாம்"பு" எழுத்தும் சுற்றி வந்தன. இரவு கனவிலும், அதே எழுத்துதான் வந்து கூத்தாட போகிறது என நினைக்கிறேன். ஆல்ரெடி சகோதரி கீதா ரெங்கன் மயங்கி விட்டார். நானும் அதே நிலைக்கு போய் கொண்டிருக்கிறேன். தங்களது திறமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. நிரப்பு, விரைப்பு, எரிப்பு, எக்காளிப்பு, ஏய்ப்பு, ஏமாப்பு (எழுமையும் ஏமாப்புடைத்து), வாய்ப்பு, வாளிப்பு, சுவாசிப்பு, வாசிப்பு, அம்பு, இரப்பு, பார்ப்பு, பறம்பு, வரம்பு, பொற்பு, எற்பு, பாப்பு, யாப்பு, காழ்ப்பு, காப்பு, கடப்பு, படப்பு (வைக்கோல் போர்)

      நீக்கு
    8. கமலக்கா நெ தமிழனை டிஸ்ரேப் பண்ணாதீங்கோ:) அவர் கருமமே கண்ணாயிருக்கிறார் ஹா ஹா ஹா ஹையோ ஹையோ எல்லோரும் பிரைமறி ஸ்கூலுக்குப் போயிட்டினம்:)

      நீக்கு
  36. 'பு' என்று முடியும் வார்த்தைகள் அடுத்த வாரம் சொல்ல வேண்டுமா? இந்த வாரமே சொல்லி விட வேண்டுமா என்று சந்தேகம் இருந்தது. நிறைய பேர்கள் சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது.
    மனித வாழ்க்கைக்கு வேண்டிய பத்து 'பு'க்கள் என்பதால் என் அறிவுக்கு எட்டியவரை கூறுகிறேன்:
    1. அன்பு
    2. அரவணைப்பு
    3. உப்பு
    4. களிப்பு
    5. கரிப்பு
    6. எதிர்ப்பு(இதுவும் முன்னேற்றத்திற்கு அவசியம்)
    7. சிரிப்பு
    8. நோன்பு
    9. உயிர்ப்பு
    10. கணிப்பு
    11. படிப்பு
    12. உழைப்பு
    13. ரசிப்பு


    பதிலளிநீக்கு
  37. சேமிப்பு என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  38. //மனித வாழ்க்கைக்கு வேண்டிய பத்து 'பு'க்கள்//


    ohh நான் அதை கவனிக்கலை

    பதிலளிநீக்கு
  39. ஆஆஆவ்வ்வ்வ் மீதான் 100 ஆவது... சி யில் ஆரம்பிக்கும் அனிமல்.. ~சிக்கின்~ ஆஆஆவ்வ் பரிசு எனக்கே:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ சிக்கன் நாங்களும் சொல்லிருப்போம்ல்லோ...ஆனா அது தமிழ் வார்த்தை அல்ல

      கீதா

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ் நான் சொன்னனே.. ஆண்டவன் குடுத்தாலும் ஐயர் விடமாட்டாராம் குடுக்க:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தமிழ்லயும் சிக்கின் தானாம் கீதாஅ, கடைக்காரர் சொன்னார் அவ்வ்வ்வ்வ்வ்வ்:). ஹா ஹா ஹா.

      நீக்கு
  40. இந்தக் கேள்வி கேட்கலாமா என்று தெரியவில்லை. பாகிஸ்தான் மீது நேற்றைய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி உங்கள் கருத்து என்ன? அதன் பின் வந்த தகவல்கள் அதாவது கமாண்டர் ஒருவரை அவர்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் அப்புறம் அவர் தான் நன்றாக இருப்பதாக வீடியோ ஃபேஸ்புக்கில் வந்தது எல்லாம் கொஞ்சம் பயத்தைக் கொடுத்ததே. அதனால்தான் இந்தக் கேள்வி.

    தமிழ்நாட்டில் ப்ளாஸ்டிக் கவர்கள் தடைசெய்ப்பட்டுள்ளதாக அறிகிறேன். கவர்களை மட்டும் தடைசெய்தால் ப்ளாஸ்டிக்கை முழுவதும் ஒழித்துவிட முடியுமா? பால்கவர் போன்றவை அன்றாட வாழ்வில் வரும் ஒன்று அல்லவா?. (எங்கள் வீட்டில் கறந்த பால் தான் வீட்டிற்குக் கொண்டு தருவார்..) தடையும் இருக்கட்டும் மேலை நாகளைப் போல் இவற்றை சரியான முறையில் டிஸ்போஸ் செய்வதை நடைமுறைப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்குமில்லையா?

    பள்ளிகளில் சாக்பீஸ் பயன்படுத்துவதை விட வொயிட் போர்ட் பென் பயன்படுத்தினால் சாக்பீஸ் துகள்களினால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வரும் மூக்கடைப்பு அலர்ஜி தவிர்க்கலாம் இல்லையா? உங்கள் கருத்து?

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
  41. பிறப்பு, இறப்பு
    அன்பு, பரிவு, ஆதரவு
    படிப்பு, உழைப்பு, சிறப்பு
    உப்பு உவர்ப்பு துவர்ப்பு புளிப்பு இனிப்பு கசப்பு
    சிரிப்பு, நகைப்பு
    வளர்ப்பு .. ஹையோ மயக்கம் வருது.. இந்தக் ஹோம் வேர்க் வேண்டாம், வேறு குடுங்கோ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா மேலே மேலே பாருங்க இதெல்லாம் வந்தாச்சு!!! அல்ரெடி சொல்லிப்போட்டாங்கோ....நெல்லை லிஸ்ட் பார்க்கலியோ நான் பார்த்து மயங்கிக் கிடக்கேனாக்கும்!!...

      ஹையோ மயக்கம் வருது.. இந்தக் ஹோம் வேர்க் வேண்டாம், வேறு குடுங்கோ:).//

      ஹா ஹா ஹா ஹா ஹா...மீயும் அதான் கொஞ்சம் சொல்லிப் போட்டு ஓடிட்டம்..!!! தூங்கப் போறேன்..

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!