வடகிழக்கு இந்தியாவின் பெரிய குவாஹாத்தி மிருகக்காட்சி சாலையில்... 432 ஏக்கரில் - 175 -ஹெக்டேர் - அமைந்துள்ள மிருகக்காட்சி சாலை மட்டுமல்ல, தாவரவியல் பூங்காவும் கூட...!
மேயாத மான்! எதையோ பார்த்து மிரளும் மான்!
130 ஹெக்டேரில் 1957 இல் தொடங்கப்பட்ட திட்டம் 1958 இல் மக்களுக்காக திறந்து விடப்பட்டதாம்.
தொடக்கத்தில் இங்கு இருந்த உயிரினங்களின் வகை 278 மட்டுமே.
போகப்போக காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள், சிம்பன்சிகள், நெருப்புக்கோழி என்று ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா விலிருந்து சேகரம் செய்திருக்கிறார்கள்!
ஆஸ்திரேலியாவிலிருந்து கங்காரு கொண்டு வந்திருக்கிறார்கள்! 1982 ல் தான் இதை தாவரவியல் பூங்காவாகவும் ஆக்கி இருக்கிறார்கள்!
2002 இல் இன்னொரு 45 ஹெக்டேர் பரப்பளவில் சேர்த்திருக்கிறார்கள்! இப்போது 17
"இந்த விவரங்களை எல்லாம் இந்த வாரத்தோட நிறுத்திக்கோங்க... க்ளாஸ் ரூம்ல உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கு! அடுத்த வாரம்லாம் வெறும் கமண்ட் மட்டும் போடுங்க சொல்லிட்டேன்..."
இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
போகப்போக காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள், சிம்பன்சிகள், நெருப்புக்கோழி என்று ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா விலிருந்து சேகரம் செய்திருக்கிறார்கள்! //
நீக்குஹா ஹா ஹா ஆனா ஒன்னு கூட கண்ணுல காணலையே! ஒரு வேளை அடுத்த வாரத்தில் வருமோ?
கீதா
படங்கள் எல்லாம் அழகாக இருக்கு உங்க கமென்ட்ஸ் பல சிரிக்க வைக்குது ஸ்ரீராம். ஆனா என்ன கங்காரு பத்தி தகவல் கொடுத்துட்டு அந்த ஃபோட்டோ எம்டியா இருக்கு கங்காரு இல்லாம ஹா ஹா ஹாஅ
நீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா...
நீக்கு130 ஹெக்டேரில் 1957 இல் தொடங்கப்பட்ட திட்டம் 1958 இல் மக்களுக்காக திறந்து விடப்பட்டதாம்.//
நீக்குவிலங்குகளைத்தான் காணலை ....அப்ப நாம போய் அங்க இருக்கலாம்னு சொல்லுங்க ஹிஹிஹிஹி...ஹையோ இன்னிக்கு எனக்கு என்னவோ ஆயிருச்சு...ஓடிடறேன்...ஓ இன்னும் காபி குடிக்கலை அதான்..ஸோ ஓடிடறேன்..
கீதா
படம் எடுக்கும்போது கங்காரு எங்கேயோ தாவிட்டார் போல!
நீக்குகீதா ரங்கன், ஶ்ரீராம் படத்தை ப்ப்ளிஷ் பண்ணும்போது கங்காரு தாவியருக்குமோ?
நீக்குஸ்ரீராமின் குறிப்புக்களோடு கூடிய படக்காட்சி அருமை.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா..
நீக்கும்ஹூம், இந்த வாரமும் கேஜிஜி மாதிரி இருக்கே! சில வார்த்தைகள்!!!!!!!!!!!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்?
நீக்குவந்த, வரப்போகும் அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா அக்கா.
நீக்குஎங்கே நெல்லைத் தமிழர்? என்னோட கதை விமரிசனப்பதிவில் நீளமாகப் பின்னூட்டம் இடுவார் என எதிர்பார்த்திருந்தேன். எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். அங்கே காணோமே? :)))))
பதிலளிநீக்குபயணத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நீக்குஆமாம். பயணம். ஆனா, ஏதோ ஒரு கதை, அதுக்கு விமர்சனம் - அதில் நான் என்ன எழுதுவது கீசா மேடம்?
நீக்குI am extremely sorry Ne.Tha. May be I am expecting too much! once again sorry! :)))))))
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுவாஹாத்தி மிருகக்காட்சி சாலை படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபுற்கள் எல்லாம் காய்ந்து இருப்பது பிடிக்கவில்லை போலும் மானுக்கு மேய மாட்டேன் என்கிறது.
தாவரவியல் பூங்கா பற்றியும் தெரிந்து கொண்டேன்.
மானும் மேயவில்லை, கங்காருவையும் காணோம்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். மான் மட்டும் தான் இருக்கு மத்ததெல்லாம்
பதிலளிநீக்குஅப்புறமோ. காப்ஷன் எல்லாம் அருமை ஸ்ரீராம்.
கண்ணில் அது மட்டும்தான் பட்டது போல! நன்றி வல்லிம்மா.
நீக்குமிருகக்காட்சிசாலை ரொம்ப ட்ரையா இருக்கறா மாதிரி இருக்கு....சீசன் போலும்...
பதிலளிநீக்குகீதா
இதற்கு நுழைவுக் கட்டணம் வாங்கியிருப்பாங்க!
நீக்குஅட்லீஸ்ட் படங்களிலாவது பார்த்தாச்சு.. போக இயலாவிட்டாலும்
பதிலளிநீக்குஹிஹிஹி... இந்த மான்கள் நம் ஊரில் கவனர் மாளிகை பக்கமே பார்க்கலாம்!
நீக்குநான், என் மனைவி, பசங்களை ஒருநாள் தாய்வான் Zooக்கு அழைத்துச் சென்றிருந்தேன் (நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கேன்). அவங்க ரசிக்கலை, இத்தனைக்கும் அழகான இடம், நிறைய விங்குகள் பறவைகள், மரங்கள்..... ஶ்ரீராம் சொன்ன கமென்ட் மாதிரித்தான் வந்தது. ஹா ஹா
நீக்குஇந்த மான்கள் நம் ஊரில் கவனர் மாளிகை பக்கமே பார்க்கலாம்!//
நீக்குஅதே அதே....சென்னைல எங்க வீட்டுப் பக்கத்துல நான் வாக்கிங்க் போற வழில கூட நிறைய மான்களைப் பார்க்கலாம். கொம்புள்ளைவை இல்லாதவை என்று....புள்ளிமான் எல்லாமே வெளியில் பார்க்கலாம்...அப்புறம் அவை பாவம் இப்படி சாப்பாட்டிற்காக வெளியில் திரிவதைப் பார்த்த நான் கிண்டி பார்க்கில் சென்று சொன்னேன். ஏனென்றால் கார் போகும் வேகத்தில் அடிவாங்கும்... அவை கிண்டி பார்க்கிலிருந்து ஐஐடி வழியாக எங்கள் ஏரியாவிற்குள்...ஐஐடியிலும் உண்டே இவை...நிறைய பார்க்கலாம். நான் சொன்னதும் அப்புறம் வெளியில் எங்கள் ஏரியாவில் காணவில்லை. அவர்கள் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள் போலும். (ஐஐடி, கிண்டி பார்க், கவர்னர் மாளிகை எல்லாமே ஒரே ஏரியாவுக்குள் எல்லை பிரித்து என்று)
கீதா
அழகான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமேயாத மான்களுக்குப் பதில் தலை நிமிர்ந்து பாயாத மான்களையாவது எதிர் நோக்கினேன் ஏமாற்றம்தான்
பதிலளிநீக்குஆமாம் ஜி எம் பி ஸார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகுவாஹாத்தி மிருகக்காட்சி சாலை படங்கள் நன்றாக பசுமையாக உள்ளது. விபரங்கள் அனைத்தும் அறிந்து கொண்டேன். "சாலை" என்ற அடைமொழியினால்,சுதாரித்து கொண்ட மிருகங்கள் எவையும் கண்களில் படவில்லை போலும். ஹா ஹா ஹா. டைட்டிலில் "மேயாத மான்" என்று நீங்கள் குறிப்பிட்டதில் அதற்கு கொஞ்சம் ரோஷம் வந்து கடைசி படங்களில் மேயலாமா என யோசித்து புற்களின் வாசத்தை சுவாசிக்கிறது. படங்களும், அதற்கு விளக்கங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சாலை என்ற பெயரினால் சுதாரித்துக்கொண்ட மிருகங்கள்... ஹா... ஹா.. ஹா... அல்லது எல்லாம் சாப்பிடப்போயிருக்கும் நேரம் இவர்கள் சென்றிருப்பார்களோ!
நீக்குபடங்களோடு விரிவான செய்திகள் நன்று.
பதிலளிநீக்குகௌஹத்தி மிருகக்காட்சி சாலை படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன. ஆனால் விலங்குகளைக் காண முடியவில்லையே. மிருகக்காட்சி சாலைதானா அல்லது சரணாலயம் போன்றதோ. ஏனென்றால் பார்த்தால் மிருகக்காட்சி சாலை போலவும் இல்லை...இயற்கையில் அமைந்ததோ மைசூர் ஜூ போல? அங்கும் கங்காரு உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு. பார்த்ததில்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
மைசூர் மிருகக்காட்சி சாலை பார்த்திருக்கோம் எண்பதுகளில். இயற்கையாக உலாவும் மிருகங்கள் என்பதால் கூண்டு வண்டியில் சென்றோம். அதே போல் மும்பை போரிவிலி மிருகக்காட்சி சாலையிலும். சிங்கம் நடுவழியில் உட்கார்ந்திருக்க எங்கள் வண்டி பத்தடி முன்னால். சிங்கனார் நகர்ந்தால் தான் வண்டி நகரும். அவருக்கு நகர இஷ்டமில்லாமல் உட்கார்ந்திருந்தார். சுமார் ஒரு மணி நேரம் ஆன பின்னர் பெரிய மனசு வந்து எழுந்து நகர்ந்தார் ஓர் கர்ஜனையுடன்! எங்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது. ஓட்டுநர் தப்பித்தோம், பிழைத்தோம் என வண்டியை எடுத்து வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தார். இது தொண்ணூறுகளில். நாங்க முதல்முதலாகத் தனியாக மும்பைக்குப் போய் வழியில் மாட்டிக்கொண்டு பின்னர் இறை அருளால் வீடு போய்ச் சேர்ந்த சமயம்!
நீக்குவெளிநாடுகளில் மிருகக்காட்சி சாலை பார்த்ததில்லை. ரொம்பவே நடக்கணும்னு எங்களைக் கூட்டிச் செல்ல மாட்டார்கள். ஆனால் பறவைக்காட்சி சாலை, மீன் காட்சி சாலைகள் நு பார்த்திருக்கோம்.
நீக்குகுவஹாத்தி மிருகக்காட்சி சாலை படங்களைப் பார்த்தபின், 20 வருடங்கள் முன்பு கென்யாவின் நைரோபி நேஷனல் பார்க், மற்றும் ஸஃபாரி அனுபவங்கள் நினைவில் தலைகாட்டுகின்றன. அங்கே நான் பார்த்தவை மிரளவைத்த சுதந்திர மிருகங்கள், திகைக்கவைத்த பறவைகள். காங்கோவிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு..
பதிலளிநீக்குதகவல்களும் தேவைதான். அழகிய படங்கள்.
பதிலளிநீக்குபடங்களும் தகவல்களும் கைகோர்க்கின்றன../
பதிலளிநீக்குஅழகான படங்கள்.
பதிலளிநீக்கு