ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

ஞாயிறு : வெம்பு கரிக்கு 1000....


என்ன சொன்னாலும் கு.கூ. வை விட்டு நகர மனம் வருவதில்லை



கட்டியிருக்கும் கயிற்றிலும் கலைநயம் புகுந்ததோ ?




விரல் கொண்ட நீளம் கம்பியைத் தாங்க....




இவ்வளாவூண்டு pheasant க்கு பெரிய வீடு கொடுத்தவங்க


என்னை மட்டும் ஏன்  இவ்வளவு சின்ன



வீட்டில் அடைச்சு வச்சு அழகு பாக்கறாங்க ?





கொம்பு உளதற்கு ..........


குதிரைக்குப் 10



வெம்பு  கரிக்கு 1000 என்று யானை கிட்டேயே போகாமல் இப்படிப்
பூனை சைஸில் போட்டோ எடுத்தால்....

48 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
  2. படத்துக்கான கமென்ட்ஸ் செம....சிலதுக்கு புன்னகைத்தேன்...சிரித்தேன்...

    அந்த ரெண்டாவது படத்தில் உள்ள நம்மவருக்கு நெத்தில போட்ட விபூதிப்பட்டை புருவம் வரை வந்துருக்கு போல!!!!!நெத்தி தெரியலை... ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்க அந்த ரெண்டாமவர்..விபூதி போட்டு அப்படியே கையில் ஏதோ ஸ்லோக புக் வைத்து பார்த்து தியானத்தில்/ப்ரேயரில் இருக்காப்ல இருக்கு !!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. முதலாமவருக்கு ஒரே குறுகுறுப்பு அதென்னடா யராடா அது நம்மை ஃபோட்டோ புடிக்கிறது?!! அப்படினு பார்க்கறாப்ல இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கட்டியிருக்கும் கயிற்றிலும் கலைநயம் புகுந்ததோ ?//

    ஆமாம் அதே அதே...ரொம்ப அழகா இருக்கு நம்மவர் ஒருவர் குட்டியை வழுக்கிவிடாமல் பிடித்திருப்பது போல இருக்கு...டக்கென்று பார்க்க

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் நல்வரவு....

    கலகலப்பான படங்கள்.. வர்ணனை அழகு...

    பதிலளிநீக்கு
  6. ஒருபக்கம் பாவமாக இருக்கிறது இல்லையா!...

    பெரிய தம்பியெல்லாம் சேந்து சின்னத்தம்பியப் புடிச்சி ஜெயில்ல போட்டுட்டாங்களாமே...

    ஈவு இரக்கம் இல்லாத மனுச செம்மம் என்ன கதிக்கு ஆளாகப் போகுதோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது? சின்னத்தம்பிய புடிச்சி ஜெயில்ல போட்டுட்டாங்களா?!!! ஹயோ பாவம் அது....அப்ப பயிறிசி கொடுக்கப் போறாங்களா?

      கீதா

      நீக்கு
    2. தன் உணவு, இருப்பிடம் எல்லாம் பறி போகும் போது அவங்களுக்கும் கோபம் வராம இருக்குமா?!!!

      கீதா

      நீக்கு
    3. ஆமாம்... சின்னத்தம்பியின் விஷமம் தாங்கவில்லையாம். ஆனாலும் உற்சாகமாக, மகிழ்வுடனும் அன்புடனும் வழியனுப்பி வைத்திருக்கிறார்கள் தங்கள் தோட்டம் மற்றும் உழைப்பை இழந்த அந்த ஊர்க்காரர்கள்.

      நீக்கு
    4. சின்னத்தம்பியைப் பிடிக்கும்போது கூட காயம் எதுவும் படாமல் பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

      மக்களின் ஆதரவும் அதற்கு இருக்கிறது.

      வனத்துறையினரும் அதன்மேல் அன்புடனே இருக்கிறார்கள்.

      எனவே அது அடைபடுவதைத்தவிர வேறு கொடுமைப்படுத்தப் படாது என்று...


      ம்

      லா .
      .
      .
      .
      .
      .
      .
      ம்!

      நீக்கு
    5. ஓ!!! ஓகே ஓகே....பரவால்ல ஊர்க்காரர்கள்...

      ம்ம்ம்ம்ம்ம் இப்படியேதான் விலங்குகள் மனிதர்களுக்கு இடையே உள்ள இந்தப் போராட்டம் நீடித்துக் கொண்டெ இருக்கும் போல..

      நாமும் அவர்களின் இருப்பிடத்திற்குள், ஆனை அழித்தடங்களுக்குள் நுழையாமல் இருக்கனும்....வீடு எல்லை வகுத்துக் கொண்டு.....அப்ப அவங்களும் அவங்க இருப்பிடத்துக்குள்ள ஜாலியா சுத்திட்டு இருப்பாங்க...

      கீதா

      நீக்கு
    6. நம்புவோம் ஸ்ரீராம். .... மக்களிடையே மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது தெரியுது உங்க பதில் கருத்து பார்த்ததும்.....பார்ப்போம்...

      கீதா

      நீக்கு
    7. நள்ளிரவு, 1:40 மணிக்கு, கரோலில் அடைக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஐந்து நிமிடம் நகராமல் நின்ற சின்னத்தம்பி, 'கரோலுக்குள் செல்வதைத் தவிர வேறு வழியில்லை' என, நினைத்தது போல எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், உள்ளே சென்றது....

      நீக்கு
    8. 'கரோலுக்குள் செல்வதைத் தவிர வேறு வழியில்லை' என, நினைத்தது போல எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், உள்ளே சென்றது....//

      பாவம் தான் ஆனாலும் சமத்துக் கட்டி, கரும்பு குட்டி!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  7. மூன்றாமவர் (முதலாமவரோ? இல்லை அவர் உறவினர்?!!!!!) ஏதோ சொல்லிக் கத்துவது போல இருக்குல்ல? அடேய் என்னைய கூட்டுல போட்டுட்டு நீங்க வெளிய ஜாலியா திரிஞ்சு என்னையவெ ஃபோட்டோ எடுத்து....திறந்து விட்டுப் பாருங்க...நான் உங்க காமேராவை புடுங்கி உங்களையே ஃபோட்டோ எடுத்துருவேன்ல!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். கீதாவுக்கு என்ன காலை வேளையிலேயே கற்பனை சிறகடித்து பறக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம்.

      ஆமாம்... உற்சாகக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்கிறார் கீதா...

      "கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி...' என்கிற எஸ் பி பி பாடல் நினைவுக்கு வருகிறது!!!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா...பானுக்கா அண்ட் ஸ்ரீராம்....ஆஹா பாட்டும் கூட!!!!

      கீதா

      நீக்கு
  9. வந்திருக்கும் வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு.

    பதிலளிநீக்கு
  10. அது என்ன தலைப்பிலே "வெம்பு கரிக்கு 1000?" நிஜம்மாவே புரியலை. அல்லது மூளை அதாவது அதிரடி பாஷையிலே கிட்னி வேலை செய்யலை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
      வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
      தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
      நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

      நீக்கு
    2. ஹிஹி, ஆமா இல்ல! ம.ம.இல்லையா. யோசிக்க முடியலை! நீதிவெண்பாவெல்லாம் பள்ளியோட மறந்தும் போயாச்சே! :(

      நீக்கு
    3. ஶ்ரீராம்.... நான் நினைத்தேன்.. நீங்க அந்த மாதிரி இலக்கிய சைடுல போயிருக்க மாட்டீங்களே என்ற. ஆச்சர்யம்.

      நீக்கு
    4. அப்புறம்... மனிதனுக்கு உடம்பெல்லாம் விஷம் என்று ஒரு பாடல் உண்டு. அதைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

      நீக்கு
    5. கீதாக்கா எனக்கும் முதலில் தலைப்பு என்ன இது என்று தோன்றியது....அப்புறம் உள்ள போனப்புறம் ஸ்ரீராம் சொல்லியிருக்கும் கேப்ஷன்ஸ்லருந்து பிடிபட்டது...ஆனாலும் பாருங்க எனக்கு முழு பாட்டும் நினைவுக்கு வரலை...அதைசக் கேட்டு இங்க சொல்ல வரும் போது இங்கு கருத்துகள் வந்துருச்சு.....ஸ்ரீராமும் இங்க சொல்லிட்டார்...

      கீதா

      நீக்கு
    6. //ஶ்ரீராம்.... நான் நினைத்தேன்.. நீங்க அந்த மாதிரி இலக்கிய சைடுல போயிருக்க மாட்டீங்களே//

      உங்கள் யூகம் சரியே... இன்றைய கேப்ஷன்ஸ் என்னோடாதில்லை - ஒன்றைத்தவிர! அந்த ஒன்று எது என்றும் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்!

      இன்றைய கேப்ஷன்ஸ் எல்லாமே படம் எடுத்தவரே கொடுத்தது!

      நீக்கு
    7. உங்கள் யூகம் சரியே... இன்றைய கேப்ஷன்ஸ் என்னோடாதில்லை - ஒன்றைத்தவிர! அந்த ஒன்று எது என்றும் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்!//

      அந்த ஒன்று "கலைநயம்"??!!!!

      கீதா

      நீக்கு
  11. இத்தனாம்பெரிய மிருகக் காட்சிசாலையிலே குரங்குக்கூண்டையும் கிளிக்கூண்டையும் தவிர்த்து வேறே ஒண்ணும் இல்லையா? வான்கோழிகளைச் சேர்க்கலையோ? அதுங்க தான் இருக்கா? வேறே ஒண்ணும் இல்லையா? அடுத்த வாரங்களில் வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரம் வேண்டாம் அம்மா.... இது கலைப்படம். மெதுவா ஞாயிறு பகுதி மிருக்க்காட்சிக்கு வெளியே வர சிலபல வாரங்கள் (மாதங்கள்) ஆகும்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ நெல்லை உங்க கமென்ட் பார்த்து சிரிச்சு முடிலப்பா...அதுவும் சத்தமா வேற சிரிப்பு.....

      கீதா

      நீக்கு
  12. அந்த இரண்டாவது குரங்கார் நல்லாத் தூங்கறாரா? பின்னால் கயிறுக்கு மேலே பார்த்தால் ஒரு கணம் நம்ம சுப்புக்குட்டிங்க மாதிரி இருந்தது. நல்லவேளையா அது மரக்கொம்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதாக்காவுக்கு சுப்புக் குட்டிகள் தான் எப்பவும் நினைவுக்கு வராங்க...அதுவும் இப்ப சமீபத்துல வேற பார்த்துட்டாங்க!!!!

      மீக்கு அந்தக் கயிறு வேற மாதிரி தோனிச்சு...ஒரு குட்டி மரத்தண்டில் ஏறுவது போல...

      கீதா

      நீக்கு
  13. கிளிக்கான கேப்ஷன் கரீக்டு ஸ்ரீராம் அதே அதே ...

    அதே போல ஆனையாருக்கும் ....அதானே இத்துனூண்டா ஆகிடுச்சு...ஒரு வேளை பக்கத்துல போக பயமா இருந்திருக்கும்....ஜூம் பண்ணி எடுத்திருக்கலாமோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பழையது கேட்கின் என்ற தலைப்பையும் பழைய(மு)து கேட்கின் என்று மாற்றினால் என்ன?
    Jayakumar

    பதிலளிநீக்கு
  15. கடல் அலையும் யானையும் குரங்கும் பார்க்கப்பார்க்க அலுப்பூட்டாதவை

    பதிலளிநீக்கு
  16. பெரும்பாலான யானைகளுக்குத்தச்ங்கள் பலம்தெரிய விடாமல் வளர்க்கின்றனர்

    பதிலளிநீக்கு
  17. படங்களும் காப்ஷன் களும் பிரமாதம். கொம்புளதற்கு
    பாடல் பாட்டி அடிக்கடி சொல்வார்.மதுரைப் பாட்டி.
    அவருக்குத் தெரிய நியாயம் இல்லை. மனிதர்களை விட மாக்களே நல்லது என்று.
    கயிறு+முன்னோர் படங்கள் வெகு யதார்த்தம்.
    நெ.த சொல்லி இருக்கும் பாடல் தேளுக்குக் கொடுக்கில் விஷம் மாத்திரம்
    ஞாபகம் இருக்கு.
    சின்னத்தம்பிங்கறது யானையா. இன்னும் நிறைய செய்திகள் படிக்கணூம்.

    பதிலளிநீக்கு
  18. படங்கள் அத்தனையும் அழகு. அதற்கான கேப்ஷன்ஸும் ஸ்ரீராம்ஜி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. முதல் படமும், மூண்றாம் படமும் ஒரே மாதிரி இருக்கே!
    கறுப்பு உடலும், வெள்ளை புருவமும் உள்ள குரங்கார் அழகு.
    யானை இவ்வளவு பக்கம் வந்தும் பெஞ்சில் அமர்ந்து இருப்பவர்கள் பயப்படவில்லையே!

    பதிலளிநீக்கு
  20. அருமையான கவரேஜ். கோமதிம்மா சொன்னது போல யானையைக் கண்டு பயப்படவில்லை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள். பார்வையாளர்களா அல்லது அங்கேயே பணியாற்றுகிறவர்களா தெரியவில்லை. யானை அருகே செல்ல நான் மிகவும் பயப்படுவேன்:).

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!