வினை விதைத்தவன்
நெல்லைத்தமிழன்
“என்ன விஷயம் ஜி… எதுக்குக் கூப்டீங்க. சுரேஷ் (BH)பாயீ வந்தாச்சா?
“இல்லை. யாரும் இல்லை. உள்ள வாங்க…….. இன்னைக்கு இந்த டிரெஸ்ல ரொம்ப நல்லா இருக்கீங்க…… இதோ சாய் எடுத்துட்டுவரேன்” சுரேஷின் மனைவி கவிதா, சுனிலை வீட்டினுள் கூப்பிட்டாள்.
***
சுனில், இரண்டு பசங்களுக்குத் தகப்பனானாலும், எப்போதும் ஜிம்முக்குச் சென்று உடலை மெயிண்டெயின் செய்வான். பார்க்கறவங்க அவனுக்கு 30 வயசு ரேஞ்சுன்னுதான் சொல்வாங்க, 45ஐத் தொட்டபோதும். வங்கியில் பணி புரிந்தாலும் அவனுக்கு வெறும் கிளார்க்காகவே வாழ்க்கை நடத்தி, கேபிள் டிவி, தீபாவளிக்கு டிரெஸ், மற்ற நாட்களில் கைக்கும் வாய்க்குமான போட்டி, பசங்களை சாதா பள்ளியில் படிக்கவச்சு அவங்க விதிப்படி வாழ்க்கை அமையட்டும்னு நினைக்கும் மிடில் கிளாஸ் சிந்தனை இருந்ததே இல்லை. தன்னோட அப்பா, செக்ரட்ரியேட்டில் சுருக்கெழுத்தரா பணிபுரிந்து, வாழ்க்கை முழுவதும் நியாயம் நேர்மை நீதின்னு பேசி தங்களை அடிப்படை வசதிகள் கூட கொடுக்காம வளர்த்ததன் வேதனை அவனுக்குள் ஆழப் பதிந்திருந்தது. அவனுடைய மனதில் இருந்த பொறியால், அவன் நல்லாப் படிச்சான். அண்ணன் போல சேரக்கூடாதவர்களிடம் சேர்ந்து கெட்டுப்போகலை.
அண்ணன் தட்டுத்தடுமாறி பி.ஏ. சேர்ந்தபோது, இவன் மெரிட்ல பி.எஸ்.ஸி சேர்ந்தான். அண்ணனைப்போல சிகரெட், வீதி ரவுடித்தனம் என்றெல்லாம் போகாமல் படிக்கிற காலத்தில் நிறைவாகவே படித்தான். அண்ணன் பி.ஏ பாதியிலேயே டிராப் அவுட், கட்சிக்காரங்களோடு சேர்ந்து வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கும்போது, வங்கித் தேர்வுகள் எழுதுவதில் கவனம் செலுத்தினான். வங்கிப் பணி கிடைத்தபோது அவன் அப்பா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தான் ரிடையர் ஆன சமயத்தில் தன் பையனுக்கு வேலை கிடைத்தது அவருக்கு ஆறுதலாக இருந்தது. ஒரு பையன் உதவாக்கரையானாலும் இன்னொருவனாவது நல்ல வேலைக்குப் போயிட்டானே என்ற சந்தோஷத்திலேயே ஓய்வை அனுபவிக்காமல் உடனே போய்ச்சேர்ந்தார்.
“எனக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடு…. நான் போயிடறேன்” விமல், தம்பி சுனிலைப் பார்த்துக் கோபத்தோடு சொன்னான்.
“கொஞ்சமாவது புத்தியோடதான் பேசறயா? இந்தச் சிறிய வீடு ஒண்ணுதான் அப்பா வாங்கிவைத்தது. அம்மா இருக்கா இல்ல. அவள யாரு பார்த்துப்பா? அவளோட நாங்க இந்த வீட்டிலேயே இருக்கோம். நாங்களும் இப்போதானே வாழ்க்கை தொடங்கறோம்… அம்மாவோடயே என் பசங்களும் வளரட்டும்”
“அதெல்லாம் முடியாது…. என் பங்கை இப்போவே வீட்டை வித்துத் தா”
“விமல்… நான் சுனிலோடத்தான் இருக்கப்போறேன். என் வாழ்க்கைக்குத்தான் இந்த வீடு. அப்பாவோட கொஞ்சம் பென்ஷன் எனக்குப் போதும். என் காலத்துக்குப் பிறகு வீட்டு விலைல பாதியை உன் மனைவிக்குக் கொடுப்பான். உனக்கு இப்போ எதுவும் தரமுடியாது” அம்மா, இடையில் புகுந்து சொன்னாள்.
“நீ செத்தப்பறம் காசு கிடைச்சு நான் என்ன பண்றது.. இப்போவே எனக்கு வேணும்… என் பொண்டாட்டிதான் சம்பாதிக்கிறாளே… என் செலவுக்கு அவ பணம் தர்றாததுனாலத்தானே இப்போ காசு வேணும்கறேன்”
“இதோ பாரு விமல்… அண்ணியையும் கூட்டிட்டு வா… இந்த வீடு இப்போ 20 லட்சம் பெறும்… அதுல 10 லட்சத்தை அவங்ககிட்டதான் கொடுப்பேன். அந்த 10 லட்சமும், எனக்கு இப்போ கொடுக்கறதுல இஷ்டம் இல்லை. உன் பசங்க வாழ்க்கையை நினைக்கவேண்டாமா? நான் உன் திருப்திக்கு அண்ணிகிட்ட எழுதிக்கூடத் தர்றேன், பாதிப் பங்கை பணமா அவங்க கிட்ட கொடுத்துடுவேன்னு”
“இப்போவே 15 லட்சம் கொடுத்துடு.. நான் உன் வழிக்கு வராம எழுதிக்கொடுத்துட்டுப் போயிடறேன். ரெண்டு நாள்ல அவளோட வர்றேன்”.. விருட்டென்று விமல் இடத்தைக் காலி செய்தான்.
அண்ணன் செய்வது தவறு என்று தெரிந்தும், அவன் மனசு சங்கடப்படக்கூடாது என்று நினைத்து கஷ்டப்பட்டுப் புரட்டி 15 லட்சத்தைக் கொடுத்து வீட்டைத் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டான் சுனில்.
ஆனால் அவனுக்கு வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது… இப்படி கிளார்க் வேலை, அப்புறம் கஷ்டப்பட்டு பரீட்சை எழுதி ப்ரொமோஷன் என்று ஜல்லியடித்துக்கொண்டிருந்தால் அப்பாவின் வாழ்க்கைக்கும் தன் வாழ்க்கைக்கும் வித்தியாசமே இருக்காது என்று.. வங்கியில் நுழைந்த உடனேயே, இடமாறுதல் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக யூனியனில் சேர்ந்து தீவிரமாகப் பணிபுரிந்தான். மெதுவாக தன்னை நம்பியவர்களுக்கு நியாயம் கிடைக்க கட்டப் பஞ்சாயத்துகளிலும் ஈடுபட்டு, யூனியனின் அசைக்கமுடியாத தலைவர்களில் ஒருவரானான்.
அதுவரை வீட்டை மனைவி கவனித்துக்கொண்டாள். அவளுக்குத் தேவையான பணத்தை மாதா மாதம் கொடுப்பதோடு சரி. தன் அம்மாவை அவள் நன்றாகக் கவனித்துக்கொண்டதும், பசங்களைப் பள்ளியில் சேர்த்து அவங்களோட வாழ்க்கையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதும் சுனிலுக்கு ரொம்பவும் சவுகரியமாக இருந்தது. யூனியனில் கொஞ்சம் அதிகாரத்தில் நுழைந்ததும் அப்போ அப்போ சிலர் அவன் வீடுவரை பிரச்சனைகளைக் கொண்டுவந்து பேசுவது அவன் குடும்பத்துக்கு அசவுகரியமாக இருந்தது.
“ஜிக்கி… நீ சொல்றது சரிதான்.. வீட்டுக்கு மத்தவங்க பஞ்சாயத்துக்காக வர்றது பசங்க படிப்புக்கு இடைஞ்சல்தான். அவங்களுக்கு இதெல்லாம் புரிகிற வயசில்லை… சீக்கிரம் இதுக்கு ஒரு மாத்து ஏற்பாடு பண்ணிடறேன்… அம்மாகிட்ட இதைப்பற்றி ரொம்பவும் சொல்லிடாதே… அவங்க ரொம்ப தளர்ந்து போயிட்டாங்க. அவங்க காலம் வரை சந்தோஷமா அவங்க இருக்கணும்” – யூனியன் பிரச்சனைக்காக வீட்டுவரை கணவனின் ஆபீஸ்காரங்க வருவதைப் பற்றிக் குறை சொன்ன மனைவியிடம் சுனில் சொன்னான்.
யூனியன் ஆள் ஒருவன் மூலமாக அறிமுகமானவர் சுரேஷ் BHபாயீ. அவர் சிறிய சிறிய தொழில்கள் செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் ரியல் எஸ்டேட் பிஸினெஸிலும் நுழைந்திருந்தார். அவருக்கு நம்பிக்கையான ஆளும் தேவைப்பட்டது. வெறும்ன ‘சுரேஷோட அண்ணன் முன்னாள் எம்.எல்.ஏ.’ என்பதைக் காரணமாக வைத்துத் தன்னோட சேர்றவங்கள்ட அவருக்கு நம்பிக்கை இல்லை. சுனிலின் பணத்தாசையும் இன்னும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் சுரேஷ் BHபாயீயையும் சுனிலையும் ஒரு புள்ளியில் சேர்த்தது. தன் ஜிம்முக்கு தினமும் சுனில் வருவது சுரேஷுக்கு, அவனை அடிக்கடி சந்திக்க உபயோகமாக இருந்தது. தன்னுடன் மறைமுக பார்ட்னராக இருப்பதால், தன்னுடைய ஜிம்மிலேயே ஒரு அறையில், சுனில் யூனியன் சம்பந்தமான பிரச்சனைகளை சம்பந்தப்பட்டவங்களை அழைத்துப் பேசிக்கொள்ள அனுமதி அளித்திருந்தார். ஒரு வருடத்துக்குள்ளாகவே சுனிலைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அளவு சுரேஷ், சுனில் இடையேயான நட்பு வளர்ந்தது.
சுரேஷ் மிகவும் தடாலடியான ஆள். நிறைய ரவுடிகள் சகவாசம் அவனுடைய சாராயத் தொழிலுக்கும், கஞ்சா தொழிலுக்கும், பத்தாக்குறைக்கு கட்சி வேலைகளுக்கும் இயல்பாக அமைந்தது. ஆனாலும் அண்ணன் அரசியலில் ஆக்டிவ் ஆக இருப்பதால், தன் நிழல் நேரடியாகப் படாமல் இந்தத் தொழில்களை நிர்வகித்துவந்தான் சுரேஷ். ரியல் எஸ்டேட் தொழிலும், சுனிலை முன்னணியில் வைத்து வளர்ந்தது. சுனிலின் நல்ல குணம் அவனைக் கவர்ந்ததனால் தன் வீட்டிற்குக் கூட்டிச் செல்லும் அளவு நம்பிக்கை வந்தது. அவனும் ‘Bபாபி Bபாபி’ என்றுதான் சுரேஷின் மனைவியுடன் பேசுவான். பாயீ பாயீ என்றுதான் சுரேஷிடம் மரியாதையாகப் பேசுவான். நட்பின் அடித்தளம் சுனிலை, சுரேஷ் வீட்டில் இல்லாதபோதும், தொழில் சம்பந்தமான டாகுமெண்ட்ஸை வீட்டிற்குக் கொண்டு வந்து அவர் மனைவியிடம் தரவும், அவர் மனைவியிடமிருந்து டாகுமெண்ட்ஸை வாங்கிக்கொண்டு செல்லவுமாக வளர்ந்தது. சுரேஷ் பாயீயின் முழு நம்பிக்கையைப் பெற்றவனாக வளர்ந்துவந்தான் சுனில்.
***
“நான் சொன்னதை யோசிச்சீங்களா… இதுல என்ன தப்பு இருக்கு. நம்ம உறவு யாருக்கும் தெரியப்போவதில்லை… அப்புறம் என்ன” கவிதா மெதுவாக சுனிலிடம் ஆரம்பித்தாள்.
அடிமேல் அடிவைத்தால் அம்மி நகராதா…. பரவாயில்லை… அவளுக்கு உதவிதானே செய்கிறோம் என்று தன் சலனத்துக்கும் இடம் கொடுத்தான் சுனில். தீ, மேலும் மேலும் வேகமாகப் பரவத்தானே செய்யும். சுனில், கவிதாவின் தொடர்பும் வளர்ந்துகொண்டே வந்தது.
***
“எப்படித்தான் சுரேஷ் உன்னைக் கவனிக்காமல் இருக்கானோ….. தேவதை மாதிரி இருக்க” ஒரு சந்தோஷ கணங்களுக்கு அப்புறம் சுனில் சொன்னான்.
“அவனுக்கு ஆரம்பத்திலேர்ந்தே வீட்டு சந்தோஷங்களில் இஷ்டம் இல்லை… சாராயம், ரியல் எஸ்டேட், அண்ணனுக்குத் தேவையான அடி தடி உதவின்னு அதிலேயே இருக்கான்… அப்புறம் எதுக்குத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானோ”
“நல்லவேளை…. நீ என் வாழ்க்கைல வந்த…. ஏக்கமில்லாமல் காலம் போயிட்டிருக்கு” கவிதா சொன்னாள்.
“நான் கண்டுக்காம விலகியிருந்தா என்ன பண்ணியிருப்ப?” சுனில் அவளை நோக்கிக் கேட்டான்.
“விட்டிருக்கமாட்டேன்…. அவன்கிட்ட வேற மாதிரிச் சொல்லிடுவேன்னு உன்னைப் பயமுறுத்திப் பணிய வச்சிருப்பேன்” கல கலவெனச் சிரித்தபடியே சொன்னாள்.
“ராட்சசிடீ நீ”….. திரும்பவும் நெருங்கினான் சுனில்.
****
வியாபாரத் தொடர்புகள் தன் வீட்டிற்கு வர முடியாது என்பதில் சுனில் தெளிவாக இருந்தான்.
ஜிக்கிக்கும் அதில் மிகவும் திருப்தி… பணத்துக்குக் குறைவில்லாத வாழ்க்கை. இருந்தாலும் அவளுக்கு தன் கணவன் இன்னும் இன்னும் என்று ஏன் போகணும், ரியல் எஸ்டேட் தொழில்ல நிறைய போட்டி இருக்குன்னு சொல்றாரே… எதுக்கு அதில் இறங்கணும்… பேசாம வேறு ஏதாவது தன் அளவில் ஒரு பிஸினெஸ் ஆரம்பித்தால் போதாதா? வங்கிப் பணி, யூனியன் பிரச்சனைகள் தவிர நிரந்தரமாக தங்களுக்கு என்று ஒரு பிஸினெஸ் இருக்குமே… ரியல் எஸ்டேட் அவர் சொல்வது போல் மிகவும் கடுமையான போட்டியுள்ள ஆபத்தான தொழிலாயிற்றே என்ற எண்ணம்.
நிறைய தடவை கணவனிடம் அதைச் சொன்னாள். அதிலும் அம்மா காலமான பிறகு அவளுக்கு இன்னும் பொறுப்பும், குடும்பச் சுமையும் கூடிவிட்டது. பசங்க பள்ளி இறுதி வகுப்புக்கு வந்துட்டாங்க.
சுனிலுக்கு புலிமேல் ஏறிய கதை… இனிமேல் தொழிலை விட முடியாது என்று தெரியும்.. கவிதாவும் கூடுதல் போனஸாயிற்றே…
****
“நல்லவன்னு நினைச்சு வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தால் என் மனைவியோட தொடர்பு வச்சிருக்க….நம்பிக்கைத் துரோகம் பண்ணியிருக்க “ அடித்தொண்டையில் உறுமினான் சுரேஷ். ஆனால் குடிபோதையில் நாக்கு குழறித்தான் அவனால் பேச முடிந்தது.
“இப்போ நீங்க நிதானத்துலயே இல்லை சுரேஷ் Bபாயீ… இதைப் பத்தி காலைல பேசலாம். நான் எப்போதுமே உங்களுடைய ஒர்க்கிங் பார்ட்னர்தான்.”
“என்னடா ஒர்க்கிங்…. எதுலடா பார்ட்னர்…..”
…….
……..
…….
‘டமால்” – களேபரத்தில் சுரேஷ் ரத்தச் சகதியில் கிடந்ததும், போலீஸ் விசாரணையும், சுனிலையும் அவன் மனைவி ஜிக்கியையும் சிறையில் அடைத்ததும், பசங்களை அவங்க அத்தை வந்து அழைத்துச் சென்றதும், ஒர் நொடியில் நடந்த நிகழ்ச்சிபோல் ஆகிவிட்டது.
நேற்றுவரை இருந்த நிலை வேறு… இன்று கொலைக் குற்றத்தில் கணவன் மனைவி இருவரையும் தனித்தனியே அடைத்திருக்கிறார்கள்.
****
ஜிக்கியால் நடந்தவைகளை சீரணிக்க முடியவில்லை. நிறைய தொழில்கள் செய்ததைத் தவிர வேறு ஒரு தவறும் கணவன் செய்யவில்லையே. யூனியனிலும், கஷ்டப்படறவங்களுக்காகத் தானே அவர் ஆபீஸ் வேலைக்குப் பிறகும் பாடுபட்டார். நாம நல்லா வாழணும் என்பதற்குத்தானே பல தொழில்களிலும் ஈடுபட்டார். நிறைய பணம் சம்பாதிக்கணும்னு அவர் ஆசைப்பட்டது தப்பா? நானும் குடும்பத்தைப் பொறுப்பா கவனித்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யலையே. நமக்கு எதற்கு இந்தச் செய்யாத தவறுக்குத் தண்டனை.
விதிவசத்தால் இப்படி ஆகிவிட்டது என்று நினைக்காமல், பத்திரிகைக்கு எழுதினால், மற்றவர்கள் கண்களில் பட்டு நமக்கு விடிவுகாலம் வராதா? நம்ம கணவனால பலன் பெற்றவங்கள்ல யாராவது உண்மையைக் கண்டுபிடித்து உதவ மாட்டாங்களா?
கண்ணீருடன் பத்திரிகைக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தாள் ஜிக்கி.
“அன்பின் பத்திரிகை ஆசிரியருக்கு,”
************************************************************************
கதைக்கான பின்னுரை: தலைநகரம் வெங்கட் அவர்கள் சென்ற வாரத்தில் எங்கள் பிளாக்கில், “சிறையிலிருந்து ஒரு கடிதம்” என்ற கதையை எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகு எனக்கு அதன் பின்னணில கதை எழுதலாமான்னு யோசனை. எழுதி அனுப்பினேன். ஸ்ரீராமிடம், கதை சரியாக வந்திருந்தால், அடுத்த வாரமே பப்ளிஷ் பண்ணுங்கன்னு சொன்னேன். இல்லைனா, தொடர்ச்சி அல்லது பிளாட் புரியாது என்று. சரியா வந்திருக்கா?
Note: Suggestive Picturesக்கு இணையத்துக்கு மற்றும் ஓவியர்களுக்கு நன்றி.
இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் எல்லாருக்கும்! ..
பதிலளிநீக்குகீதா
அட ரொம்ப நாள் கழித்து நெல்லையின் கதையா...வரேன் வேலை முடிச்சுட்டு
நீக்குகீதா
இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஸ்ரீராம்.... வெளியிட்டமைக்கு நன்றி.... ஆமாம் கதையைப் பற்றி உங்கள் அபிப்ராயத்தை எழுதுவதில்லையே.. அதன் ரகசியம் என்ன?
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநெல்லை கதையா. முற்றிலும் மாறுபட்ட கரு.
நல்லவனாக இருந்த சுனில் எப்படி இப்படி மாறினான்.
இதற்குத் தொடர் அடுத்த வாரமா.
வல்லிமா, நல்லவனாக இருந்த சுனில் மாறுவதற்கான காரணத்தை சுனிலைப் பற்றிச் சொல்லும் போதே அவன் மனம் பற்றி நெல்லை அழகாகச் சொல்லியிருக்கிறார். அவன் அடிமனதில் இருந்ததை....எப்போதுமே இந்த அடிமனதில் இருப்பவைதான் ஒரு சிலரை ஆட்டுவிக்கிறது...இதை மனோதத்துவ ரீதியாகவும் பார்க்கலாம்.
நீக்குசில சமயம் ரௌடிகளாக இருப்பவர்கள் கூட சும்மா பூச்சாண்டி காட்டுவார்கள் ஆனால் நல்லவராக இருப்பவர்கள் கூட மாறிவிடும் தருணங்கள் நிறைய உண்டுதானே..அதுவும் அவர்கள் அடி மனதில் சில விஷயங்கள் நீரு பூத்த நெருப்பு போல இருந்து கொண்டு அதுவும் பணத்தாசை கூடவே பெண்ணின் தொடர்பு எல்லாம்....அந்தப் பெண்ணும் காரணம் தானே....அதற்கு அவள் அடி மனதில் இருந்த சில ஏக்கங்கள்....
இவ்வளவு ஏன் வெளியில் சாமியார் வேஷம் போடுபவர்கள் தத்துவம் பேசுபவர்கள் கூட ....சரி விடுங்கள் நமக்கு ஏன் அதெல்லாம்...
மனம் என்பது மிக மிக மிக கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று...
இது தொடர் இல்லைமா.....
கீதா
வாங்க வல்லிம்மா... செய்யும் தொழில் தவறாக இருந்தால், மெதுவாக தவறுகளே நம்மைத் தழுவிக்கொள்ளும்.
நீக்குஎன்னுடைய அனுபவத்தில், 'ரொம்ப கடவுள் நம்பிக்கை, பக்தி என்று ஒருவன் சொல்லிக்கிட்டே இருந்தால், அவன் மிகத் தவறு செய்பவனாகத்தான் நான் கண்டிருக்கிறேன்'.
கீதா ரங்கன் - மனித மனம் எப்போது கெட்டதாக மாறும் என்று கணிக்க முடியாது. ஆனால் பல சமயம், மற்றவர்கள் அவர்களது நடத்தையினால் பிறரை நல்லவராகச் செய்யலாம்.
நீக்குரிஷிகேசில் இருந்த ஒரு சாமியார் (அவர் சீடர்களுடன் வைத்திருந்த ஆசிரமத்தை) ஆசிரமத்தை, கொள்ளையடிக்கப் போகிறேன் என்று ஒரு கொள்ளையன் தகவல் தெரிவித்துவிட்டு தன் ஆட்களோடு வந்தானாம். அப்போ அந்தச் சாமியார், அவனிடம், "நான் நீ இங்கு கொள்ளையடிக்க வரப் போகிறாய் என்று போலீஸ் உதவியை நாடியிருக்கலாம். அதனால் வீண் சண்டையும் அழிவும்தான் நேர்ந்திருக்கும். நீ வரப்போகிறாய் என்று உணவும் தயார் செய்துவைத்திருக்கிறேன். சாப்பிடு. உனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு செல். எங்களைத் துன்புறுத்தாதே. நாங்கள் நீ சென்றபிறகும் இதைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டோம்" என்றாராம். அந்தக் கொடியவன், அவருடைய ஆசிரமத்தில் தன் பரிவாரங்களோடு சாப்பிட்டுவிட்டு, ஒரு சிறிய பரிசும் கொடுத்துவிட்டுச் சென்றானாம்.
கெட்டவர்களை நல்லவனாக ஆக்கமுடியும். நல்லவர்களை கெட்டவனாகவும் ஆக்கிவிட முடியும்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநீண்ட கதை போல..... பிறகு வருகிறேன். கடமை அழைக்கிறது.
பதிலளிநீக்குவாங்க வெங்கட்... உங்கள் பணிச்சுமையை உணர முடியுது. மெதுவா வாங்க.
நீக்குஓஹோ. மன்னிக்கணும். வெங்கட் கதைக்கு இது தொடரும்
பதிலளிநீக்குபதிவா. புரிந்தது. கூடா நட்பு இந்த முடிவில் முடிந்தது.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குசுனில் நல்லவனாக முதலில் காட்டினீர்கள். விமல்தான் (அண்ணன்) ரெளடி அரசியல் என்று இருப்பதாய் சொல்லி கடைசியில் சுனில் தப்பு செய்வதும் ஜீரணிக்க முடியவில்லை.
யார் கொலை செய்தார்கள்? சுனில் மனைவியை ஏன் கைது செய்தார்கள்?
வாங்க கோமதி அரசு மேடம்....
நீக்குநல்லவனாக இருப்பது என்பது ஒரு பெரிய தவம் மாதிரி அல்லவா? நல்லவன், எப்போதும் நல்லவனாகவே இருக்கணும்னா அதுக்கு ரொம்பவும் வைராக்கியம் வேணும், ஆசையும் குறைவாக இருக்கணும்.
உங்களுக்கு இரண்டாவது முறை படிக்கும்போது தோன்றுவதை எழுதுங்கள், நேரமிருந்தால்.
கோமதிக்கா அண்ட் நெல்லை மற்றொன்று...பொதுவாகவே மக்கள் மனதில் ஹீரோ அதாவது அது கதையானாலும் சரி, சினிமானாலும் சரி ஹீரோ என்பவன் மிக மிக மிக மிக நல்லவனாகவே இருக்கனும்...என்ற பிம்பத்தோடுதான் பார்க்கிறோம் வாசிக்கிறோம். வில்லன் என்றால் மிக மிக மிக மோசமானவன் என்ற பிம்பத்துடன்...ஆனால் பொதுவாகவே சினிமாவும் அப்படித்தான் காட்டுகிறது...ஸோ ஹீரோ நல்லவன் கொஞ்சம் தவறு இழைத்தாலும் மனது ஏற்க மறுக்கும் தான். அதனால்தான் அப்படித் தோன்றியிருக்கிறது..
நீக்குமனிதர்கள் நல்லவர்கள் கூட எல்லோரும் எப்போதும் 100% நல்லவனாகவே இருக்க முடியாதுதானே...பெர்ஃபெக்ட் என்று சொல்ல முடியாதுதானே.
கீதா
நல்லவர்கள் என்பது 'ஆசை இல்லாதவர்கள்' என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளணும். ஆசை, நம்மை நிச்சயமாக நல் வழியிலிருந்து விலகிப்போகச் சொல்லும்.
நீக்குவிறகில் தீயினன், பாலில் படு நெய் போல் - என்று சொல்வதுபோல ஒவ்வொருவரிடமும் கெட்ட குணங்களும் இருக்கும். அந்தக் கெட்ட குணம், விஷத்தைப் போல் கொடுமையானதாக இல்லாதவரை, மனிதம் முழுவதுமாக் கெட்டுப் போவதில்லை.
//யார் கொலை செய்தார்கள்? சுனில் மனைவியை ஏன் கைது செய்தார்கள்?// கோமதி அரசு, நீங்க கேட்கும் இது, இது, இதே தான் நான் நினைத்தது, கேட்டது! ம்ஹூம், யாரு புரிஞ்சுக்கறாங்க! அதுவும் தன் கணவனை நல்லவனாக நினைக்கிறா பாருங்க! அதான்! அம்புட்டு அப்பாவியானு தோணித்து! :))))) விட்டதைத் தொடர வந்துட்டேனே! :))))))
நீக்குகீதா , நெல்லை சுனிலின் பண்புகளை ஆரம்பத்தில் உயர்த்தி சொன்னார், அவர் அண்ணன் கெட்டகுணங்கள் உள்ள்வர் என்றார் அது தான் அப்படி சொன்னேன்.
நீக்குகாசு மீது ஆசை வந்து விட்டால் எப்பேர் பட்டவர்களையும் தப்பு செய்ய வைக்கும். நல்லவானகவே இருக்க வைராக்கியம் வேணும் என்பதும் உண்மை.
கீசா மேடம், கோமதி அரசு மேடம் - உண்மை எப்போதுமே நம்ப முடியாததாக இருக்கும். என் அனுபவத்தில் நிறைய பேர்களைப் பார்த்திருக்கிறேன். பொதுவெளில நிறைய எழுத முடியாது. ஆனால் உண்மையை நம்புவது கடினம்.
நீக்குவல்லிம்மா எழுதும் கதைகளைப் (நடந்த நிகழ்ச்சிகளுக்கு முலாம் பூசிக் கொடுப்பது) படிக்கும்போதும் எனக்குத் தோன்றும்
கூடா நட்பு
பதிலளிநீக்குஅடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்
வாங்க கரந்தை சார்... உங்க பின்னூட்டம் சட் என்று படித்தபிறகு தோன்றியது, 'காங்கிரஸை, கூடா நட்பு என திமுக வர்ணித்ததும், இப்போது தேர்தலுக்குக் கூட்டுச் சேர்ந்துள்ளதும், அடுத்த பதிவாக நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதும்'. வருகைக்கு நன்றி....
நீக்குபாவம் ஜிக்கி. சிறையில் அடைபட்ட பின்னரும் கூட சுனில் தன் கூடா நட்பு/கள்ளக்காதல் பற்றி மனைவியிடம் சொல்லவில்லையா? அல்லது போலீஸ் அவ்வளவு திறமையற்றவர்களா இருக்காங்களா, இதைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு! கட்டாயம் கொலைக்கான காரணம் தெரிந்திருக்கணும். அது தான் கதையில் கொஞ்சம் புரியாத மாதிரி இருக்கு. நெ.த. இதை யோசிக்கலையா?
பதிலளிநீக்குகீசா மேடம்.... நீங்க ரொம்ப அப்பாவி.... எந்தக் கணவனாவது தன்னுடைய 'இருள் பக்கங்களை' மனைவியிடம் சொல்லுவானா? போலீஸ் மெதுவாகத்தான் கண்டுபிடிப்பார்கள். நீங்க அவங்கள்ட போய் விவரத்தைச் சொல்லாதீங்க. அவங்களே மெதுவா கண்டுபிடிக்கட்டும்.. ஹாஹா
நீக்குகணவன் சொல்லாமல் மறைக்கவே மறைக்கட்டும். உங்க நினைப்புப்படியே இருந்தாலும் கணவனின் ஒரு சின்ன மாற்றம் கூடக் காட்டிக் கொடுக்கும். என்னனு புரியாமல் வேணா இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று நெருடும். போலீஸ் அவ்வளவு முட்டாளும் இல்லை.இரண்டு பேரும் கத்திச் சண்டை போட்டிருக்காங்களே! அதோடு இருவரின் நெருக்கமும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கொலையாளியோ, தப்பு செய்பவனோ ஏதோ ஓர் அடையாளத்தைத் தன்னையும் அறியாமல் விட்டிருப்பான்.
நீக்குகீசா மேடம்... இங்க எழுதலாமான்னு யோசனை. என் மனைவி இதைச் சொல்வதை அப்ரூவ் பண்ண மாட்டா.
நீக்குநல்ல கவுரவமான பெரிய வேலைல இருக்கிறவனை, எனக்கு 'இவன் நல்லவன். இவன் மனைவி இவன் பேச்சைத் தட்ட மாட்டா. நல்ல அன்னியோன்னியமான குடும்பம் இவங்களோடது, நான் இவங்க வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கிறேன் சில தடவை' என்று ஒருவன் எனக்கு வேறு தேசத்தில் அறிமுகப்படுத்தினான் (இந்தியர்கள்தான்). அன்று இரவு அந்தப் பெரிய வேலைல இருக்கறவன் செய்த வேலை, அந்த ஊர்ப் பெண்ணை தன் அறைக்குக் கூட்டிவந்ததுதான். (நான் அடுத்த அறையில் தங்கியிருந்தேன் அந்த ரிசார்டில்). என்னிடம் சொல்றான், எங்க ஆபீஸ் வேலையாப் போனாலும் இதைச் செய்வேன் என்றான். பணம் கிரெடிட் கார்டுலேர்ந்து ஸ்வைப் பண்ணினான்.
அவன் மனைவி எவ்வளவு அப்பாவியா இருக்கணும்?
விதிவசம்னு ஜிக்கி யோசிப்பது சரியில்லையே! இது சுனிலால் ஏற்பட்டது அல்லவா? ஆனால் வெங்கட் எழுதி இருந்தது முற்றிலும் வேறு கோணம். சரி, சரி, நெ.த. அடிக்க வரதுக்குள்ளே மீ த எஸ்கேப்பு!
பதிலளிநீக்குஜிக்கிக்கு இதுவரை உண்மை விஷயம் தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் என்ன?
நீக்குஇப்போதானே ஜெயிலுக்குப் போயிருக்காங்க. போலீஸ் விசாரணை அவ்வளவு சுலபமா நடந்து முடியுமா? அதிவும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில்?
தல்வார் ஆருஷி கேஸ் ஞாபகம் இருக்கா?
தவறு செய்யாதவங்க ஜெயில் தண்டனை பெறுவதில்லையா?
கஞ்சி சாப்பிட்டுக்கொண்டே யோசிங்க கீதா சாம்பசிவம் மேடம்....
நெ.த. உங்கள் கதை எழுதும் திறமைக்கு ஒரு சல்யூட். ஆனால் சிறையில் அடைக்கும்போதும் கைது செய்யும்போதும் குற்றம் என்ன என்பதையும் வாரன்ட் இருக்கிறது என்பதையும் போலீஸ் சொல்லித் தான் ஆகவேண்டும். அதோடு சுரேஷ் இறந்தப்போ சுனிலின் மனைவி அங்கே இருந்தாளா? அவள் அங்கே வரவே இல்லையே? கைது செய்தால் சுரேஷின் மனைவி கவிதாவையும், சுனிலையும் மட்டும் கைது செய்திருக்கணும். சுரேஷ் எங்கே இறந்தான்/கொல்லப்பட்டான்? அப்போ அங்கே சுனிலின் மனைவி எதற்கு வந்தாள்? அவளை ஏன் கைது செய்யணும்? எந்தக்காரணமும் சொல்லாமல் ஒரு பெண்ணைக்கைது செய்து சிறையிலும் அடைக்க முடியுமா என்ன?
நீக்குகஞ்சி சாப்பிடாமலே யோசித்தது! சுரேஷ், இறக்கும் முன்னர் சுனிலை எங்கே சந்தித்தான்? சுனிலின் வீட்டிலா? சுரேஷின் வீட்டிலா? சுரேஷ் இறந்தது எங்கே? எப்படி? எதனால்? அதற்கு சுனிலை எப்படிப் பொறுப்பாக்கினார்கள்? ஓர் உணர்ச்சி வேகத்தில் நடந்தது என்றாலும் கொலைக்குப் பயன்படுத்திய கருவி என்ன? சுரேஷ் இறந்ததற்குத் தன்னை ஏன் பொறுப்பாக்குகின்றார்கள் என்பதைக் கூட யோசிக்க முடியாத அளவுக்கு ஜிக்கி அப்பாவியா? முதலில் கணவனை என்ன, ஏது எனக் கேட்டிருக்க மாட்டாளா? சுரேஷிடம் தன் கணவன் நெருங்கிப் பழகுவது அவளுக்குத் தெரியாதா? அவனுடைய அரசியல் பின்னணி தெரியாதா? அவ்வளவு அப்பாவியாகக் கணவனை நம்பிக் கொண்டிருந்தாளா? இந்தப் பணமெல்லாம் எங்கே இருந்து வந்தது என்பதைக் கொஞ்சம் கூடக் கேட்காமல் கவலைப்படாமல் கணவனை இஷ்டத்துக்கு விட்டு விட்டாளா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் , யோசிக்க யோசிக்க, நிறையக் கேள்விகள். இப்போ உண்மையாவே வீட்டு வேலைகள் அழைக்கின்றன.
நீக்குகீசா மேடம்... அப்புறம் வருகிறேன். வெங்கட் கதையின் பின்னணில படித்தாத்தான் விடை கிடைக்கும்.
நீக்குகீசா மேடம்... உங்கள் வெளிப்படையான விமர்சனம் (அதுல நீங்க உங்க மனசுல பட்டதைத்தான் சொல்லுவீங்க) எனக்கு எப்போதுமே பிடிக்கும். நீங்கள் எழுதினதை நான் ஆவலுடந்தான் படித்தேன். எனக்கு வெங்கட் எழுதின கதையைப் படித்த உடனேயே,
நீக்கு1. எதுக்கு அவன் சுனில் கிட்ட சண்டைக்கு வரணும்? ஏன் துப்பாக்கிலாம் எடுத்துக்கிட்டு வரணும்?
2. தவறுதலா அவன் மீது குண்டு பட்டு இறந்தாலும், அவன் ஒற்றைக்கு ரெட்டைத் துப்பாக்கியோடு, அதுவும் குடிபோதையில் வந்திருக்கிறான். அதன் காரணம் என்னவாயிருக்கும்?
3. மனைவி, பத்திரிகைக்கு எழுதுவதால், அவள் அப்பாவியாகத்தான் இருக்கவேண்டும்.
என்று தோன்றியது. அந்தச் சிந்தனை விளைவுதான் இந்தக் கதை. ரொம்பவும் நான் மெருகேற்ற நினைக்கலை. அடுத்த வாரமே வெளியாகுமோ என்று தோன்றியதால்.
ஜிக்கி போன்ற அப்பாவிகள் இப்போதும் கூட இருக்கத்தான் சேர்கிறார்கள் கீதா அக்கா.
நீக்குபானுக்கா சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்...யெஸ் கணவன் மார்கள் வீட்டில் எதுவும் சொல்லாமல் இருந்தாலும் மனைவிகளும் அதீத நம்பிக்கையுடன் கணவனிடம் கேள்வி கேட்காதவர்களும் இருக்கிறார்கள்தான். சில குடும்பங்களில் கணவர்கள் மனைவிகளைப் பொருட்டாக மதித்துச் சொல்லாமல் போவோர்களும் உண்டு...மனைவிகளும் அப்பாவியாக கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று இருக்கிறார்கள்தான்...
நீக்குகீதா
எல்லாம் சரிங்க.ஆனால் வெங்கட் கதையில் என் நினைவுக்கு எட்டியவரையில் இறப்பது தான் சுனில் என்னும் எம்.எ.ஏ.தம்பி. கடைசிவரை வெங்கட் சிறைக்குப்போகும் வங்கி ஊழியர்/யூனியன் அலுவலர் பெயரையோ அவருடன் சிறைக்குச் செல்லும் அவர்மனைவிபெயரையோ சொல்லவே இல்லை.அதோடு பத்திரிகைக்கு எழுதுவதால் அப்பாவியாகிவிட முடியுமா? நல்ல கதையா இருக்கே?வேணும்னா இந்தக் கதையின் படி அவளுக்குக் கணவனோட இன்னொரு தொடர்பு தெரியாமல் இருந்ததுனு சொல்லலாம்.
நீக்குஅந்தக் கதையில் சுனில் இறப்பது அவருடன் தொழில் செய்த வங்கிக்காரர்/யூனியன் காரர் வீட்டில். இதில் எங்கேனு சொல்லலை. அதோடு வரச்சேயே இதிலே மனைவியோடசுனிலுக்கு இருந்த கள்ளத் தொடர்பைப் பற்றிப்பேசுகிறார்.ன் அது வீட்டிலேயே இருந்த ஜிக்கியின் காதுகளில் விழலையா? ம்ஹூம், அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேனாக்கும். நீங்க இப்போ இந்தக் கதையை இன்னும் மெருகேற்றிக் காரண காரியங்களுடன் எழுதினால் தான் ஒத்துப்பேன்! பத்திரிகை மூலம் தனக்கு
ஆதரவு தேடத்தானே பத்திரிகைக்கு எழுதறா? அப்போ ஜிக்கி ஒண்ணும் அப்பாவி இல்லை. ஆருஷி வழக்கே வேறே! அதைக் குறித்து ஆருஷி கொலை நடந்ததுமே படிச்சிருக்கேன். அப்போல்லாம் நிறையப் புத்தகங்கள் படிப்பேனாக்கும்.:)))))))
இரண்டு பேருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. சரி, அதைக் கவனிக்கலைனாலும் கைது செய்து அழைத்துப் போய் விசாரணை அது, இதுனு வரச்சே ஒண்ணொண்ணா வெளியே வந்திருக்கும் தானே! ஹை! விட மாட்டோமுல்ல. நெ.த. திரும்பக் கதையை எழுதி முடிக்கும்வரை விடமாட்டோமே!:))))) யாரானும் அடிக்க வரதுக்குள்ளே நான் ஓடியே போயிடறேன். :))))
நீக்குஹாஆஹாஆ :) கீதாக்காக்கு இன்னிக்கு நெம்ப டவுட்ஸ்ஸ்ஸ்ஸ் :))
நீக்குகீதா சாம்பசிவம் மேடம்.... எனக்கு ஒரு செவன்'த் சென்ஸ் சொல்லுது, நீங்கதான் போன ஜென்மத்துல 'துப்பறியும் ஜாம்பு'வாக இருந்திருப்பீங்க. இந்த ஜென்மத்துல 'வேம்பு சாம்புவாகவும், சாம்பு வேம்புவாகவும்' பொறந்திருக்கலாமோ என்று.
நீக்குஏஞ்சலின் - எந்தப் படத்துல கீசா மேடத்தின் தலைவர் 'கமல் தாசன்' சொல்லுவார்? 'பளமொளிய ரஜிக்கனும் ஆறாயப் படாது'ன்னு? நீங்க தான் தேடிக் கண்டுபிடித்து கீசா மேடத்துக்குச் சொல்லி, 'கதயை ரஜிங்கோ'ன்னு சொல்லுங்க.
//எந்தக்காரணமும் சொல்லாமல் ஒரு பெண்ணைக்கைது செய்து சிறையிலும்// - கீசா மேடம்... வெங்கட் கதையில் இதை நல்லாவே சொல்லியிருக்காரே... சுரேஷ் கொல்லப்பட்டது சுனிலின் வீட்டில். அப்போ அவங்க பசங்களும் இருந்ததால கூண்டோடு அரெஸ்ட் பண்ணி, பிறகு பசங்களை விடுவித்து கணவன் மனைவி இரண்டுபேரையும் கைது செய்யறாங்க.
நீக்குஉங்க பாயிண்ட் சரியானது. அதனை ஓரிரு வரிகளிலாவது இந்தக் கதைல சரியாச் சொல்லியிருக்கணும்.
//இந்தப் பணமெல்லாம் எங்கே இருந்து வந்தது என்பதைக்// - எங்க அப்பா, நான் எது வாங்கினாலும், எது வைத்திருந்தாலும் இது எப்படி வந்தது, எந்தப் பணம் என்றெல்லாம் நிறைய விசாரிப்பார். (என் ஆபீஸ் பாஸிடம்கூட எனக்குத் தெரியாமல், நான் எப்படி இருக்கேன் என்றெல்லாம் கவனம் வைத்துக் கேட்டுவந்தார்).
நீக்குபொதுவா மனைவி, கணவனின் நடவடிக்கை, பணம் எப்படி வருது என்றெல்லாம் ஆராயணும், தெரிந்துகொள்ளணும் என்பது உண்மைதான். எத்தனைபேர் அதனைச் செய்கிறார்கள்?
உங்கள் பல பின்னூட்டங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் இன்னொரு பெட்டர் கதையுடன் வருகிறேன்.
//இப்போதானே ஜெயிலுக்குப் போயிருக்காங்க. போலீஸ் விசாரணை அவ்வளவு சுலபமா நடந்து முடியுமா? அதிவும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில்?// இதுக்கு பதில் சொன்னேன்னு வைச்சுக்குங்க. நொந்து நூலாயிடுவீங்க. து.கா. து.கா. னு ஓடிடுவீங்க! :)))))) இன்னிக்கு மாட்டிக் கொண்டது நீங்க தான்! ஒரு கை பார்த்துட மாட்டோம்! :)))))
நீக்கு//'பளமொளிய ரஜிக்கனும் ஆறாயப் படாது'ன்னு?//
நீக்குஅவ்வ்வ் :) சினிமா விஷயத்தில் மீ வெர்றி வீக் :) நேத்து ஜனகராஜ் ஜோக்கே கண்டுபிடிக்க முடில இன்னிக்கு கமல் அங்கிளா .
ஸ்லாங் பார்த்தா ஒன்னு மை .ம.கா ரா வா இருக்குமோ ? இல்லைன்னா தெனாலியா .இதில் முன்னதை மட்டும் டிவில போட்டப்போ பார்த்தது கொஞ்சம் கொஞ்சம்
ஏஞ்சலின் - ஜனகராஜ் அந்தப் படக் காமெடி மனசுல நிக்கிது. ஆனா படம் பேர் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. அவர், தன் கிட்ட சொத்து இருக்கறதா பெரிய லிஸ்ட் போடுவார். அதை நம்பி அவருக்கு இடம் கொடுப்பாங்க குமரிமுத்துவும் இன்னொரு பெண்ணும். கடைசில சவரக் கத்தியைக் காண்பித்து இதுதான் நிலம் என்றெல்லாம் சொல்லுவார்.
நீக்குஇன்னொரு படம் கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.
இதில் ஜிக்கி ஏன் தண்டனை பெறவேண்டும் ?
பதிலளிநீக்குதவறு செய்தவர்கள் கவிதாவும், சுனிலும்தானே...
கில்லர்ஜி எனக்கும் இது தோன்றியது...ஆனால் நீங்கள் வெங்கட்ஜியின் கதையைப் படித்தால் புரியும் உங்களுக்கு...இந்தக் கதை...
நீக்குகீதா
வெங்கட்டின் கதையில் கணவனின் பேராசை பற்றி மனைவிக்குத் தெரிந்திருக்கிறது. இதெல்லாம்வேண்டாம்னும் சொல்லி இருக்கிறாள். முக்கியமாய் யூனியன் வேலைகள், இம்மாதிரிப்பேச்சுகள்! அந்த அடிப்படையில் பார்த்தாலும் ஜிக்கிக்கு விஷயம் தெரியும் தான்! அப்பாவியும் இல்லை; ஏமாளியும் இல்லை. ஏன் உண்மையாகவே இந்தக் கொலையை ஜிக்கி செய்திருக்கக் கூடாது?இஃகி, இஃகி, இஃகி.
நீக்கு2,3 நாட்களுக்கு என்னைக் காணோம்! ஊரிலேயே இல்லை!:)))))))))))))))))))))))))))))
நீக்குகீதாக்கா நெல்லை அதை அப்படியே பின்பற்றிச் எழுதவில்லை அதிலிருந்து விளைந்த இவரது கற்பனையில்...இது நெல்லை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார்.
நீக்குவெங்கட்ஜியின் கதை பேஸ் அவ்வளவே....
கீதா
ஹை, நாங்க ஒத்துக்க மாட்டோமே! நெ.த. இப்போக் கட்டாயம் பதில் சொல்லியேஆகணும்! அதெப்படி ஒரு நல்ல கதையை அரைகுறைக் கற்பனையில் எழுதலாம்! முதல்லே இருந்தே ஒழுங்கா எழுதச் சொல்லுங்க!
நீக்கு2,3 நாட்களுக்கு என்னைக் காணோம்! ஊரிலேயே இல்லை!:)))))))))))))))))))))))))))))//
நீக்குமீண்டும் பயணமா கீதாக்கா?
இல்லை வெங்கட்ஜியின் கதை வந்தப்ப நீங்க இல்லையோ...அபப்த்தான் தின்னவேலி பயணமோ..
கீதா
ஹை, நாங்க ஒத்துக்க மாட்டோமே! நெ.த. இப்போக் கட்டாயம் பதில் சொல்லியேஆகணும்! அதெப்படி ஒரு நல்ல கதையை அரைகுறைக் கற்பனையில் எழுதலாம்! முதல்லே இருந்தே ஒழுங்கா எழுதச் சொல்லுங்க!//
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா....நெல்லை நினைக்கிறார்..."அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் திரும்பவும் முதல்லேருந்தாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ" அப்படினு....
கீதா
ஹையோ, ஹையோ, நிஜம்மாவே நீங்க அப்பாவி தான். ஒத்துக்கறேன். இந்த விமரிசனத்தைப் படிச்சுட்டு நெல்லை பொய்ங்கப் போறதுக்கும் அவர் சார்பா கூடவே பொய்ங்கப் போறவங்களுக்கும் பயந்து (இஃகி, இஃகி. நிஜம்மா பயம் தான்)ஒளிஞ்சுக்கறேன்னு சொன்னால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன நீங்க, இதைக் கூடப் புரிஞ்சுக்கலை! :) வெங்கட் கதையிலும் கருத்துச் சொன்ன நினைவு. இல்லைனா கதை நினைவில் இருக்குமா என்ன?
நீக்கு//இந்தக் கொலையை ஜிக்கி செய்திருக்கக் கூடாது?// - இதுவே அருமையான ப்ளாட் கீதா சாம்பசிவம்.... ஆண்களைவிட பெண்களை நம்பாதேன்னு இதுக்குத்தான் நம்ம முன்னோர்கள் சொல்லியிருக்காங்க போலிருக்கு. இருந்தாலும், உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா சொல்லித்தர்றேன் (உபயோகமா இருக்கும்). இந்த மாதிரி சண்டை வரும்போது டிரிக்கர்ல யாரு அழுத்தினாங்களோ அவங்க கைரேகை பதிஞ்சிருக்கும். அதுல ஈசியா இது தானே சுட்டதா மத்தவங்க சுட்டதான்னு கண்டுபிடிக்கலாம். டிரிக்கர் சுத்தமா துடைத்துவைக்கப்பட்டிருந்தால் கணவன்/மனைவி இருவரில் ஒருத்தர்தான் சுட்டாங்கன்னு கண்டுபிடிக்கலாம்.
நீக்குஎனக்கு 'முதல்வன்' பட கடைசி வசனம் ஞாபகத்துக்கு வருது.... 'என்னையே அரசியல் செய்ய வச்சுட்டீங்களே' என்பதற்குப் பதில் 'என்னையே இப்படி நினைக்க வச்சுட்டீங்களே.... சிவ சிவா/நாராயணா நாராயணா'
//என்னைக் காணோம்! ஊரிலேயே இல்லை!:)// - இதைப் படித்த உடனே எனக்குத் தோணிணது,
நீக்கு'நீங்க குஞ்சுலுவைப் பார்த்து, கையால் கண்ணை மூடிக்கொண்டு, காணோம்... பாட்டி காணோம்' என்று சொல்வது போல....
இதன் தொடர்ச்சியா, இந்த மாதிரி ப்ளாட் வச்சு ஒரு சிறிய மர்மக்கதை எழுதி அனுப்புங்களேன் எங்கள் பிளாக்குக்கு.
கீதாக்கா இப்பத்தான் நேக்கு இந்த ம ம வுக்கு புரிஞ்சதாக்கும்!!! ஹா ஹா ஹா ஹா நீங்க ஏன் ஊர்லயே இல்லைனு சொன்னதுக்கு..ஹையோ ஹையோ....இப்படி ம ம வா இருக்கேனே!!! நான்...
நீக்குஇன்னிக்கு கீதாக்கா செம ஃபார்ம்ல இருக்காங்கோ!!!!!!
அது சரி கீதாக்கா, நீங்க ஊர்ல இல்லைன்ற விஷயம் அதிரடிக்குத் தெரியாது போல..!!!! இல்லைனா வந்து நீங்க ஒளிஞ்சுருக்கற இடத்தை கண்டுபிடிச்சு இழுத்துட்டு வந்துடப் போறாங்க...!!!!
கீதா
துப்பாக்கி மூவர் கைகளுக்கும் மாறி மாறிப் போனால்? எல்லோருடைய கைரேகைகளும் அதில் இருக்கும். என்னதான் துடைத்தாலும் கொஞ்சமானும் காட்டிக் கொடுக்கும். :)))))))
நீக்குஐயோ ஐயோ... பொதிகைல ஜினிமா பார்த்தா இப்படித்தான் ஜிந்திக்கத் தோணும் கீசா மேடம். துப்பாக்கில என்ன கைரேகை இருந்தாலும் தவறில்லை. ஏனென்றால் இருவரும்/மூவரும் சுரேஷ் அழுத்திடக் கூடாது என்று துப்பாக்கியைப் பறிப்பதில் குறியா இருப்பாங்க.
நீக்குடுபாக்கில டிரிகர் இருக்கும். அதை அழுத்தினாத்தான் குண்டு வெடிக்கும். அதுல ஒரு கட்டை விரல்தான் போகும்/அழுத்த முடியும். அதுனால அங்க ஒரு கைரேகைதான் இருக்கும் இருக்கணும். இருந்தா, அந்தக் கைரேகைக்காரன் குற்றவாளி. இல்லாம சுத்தமா இருந்தா, பிழைத்துக்கிடப்பவர்களில் ஒருவர் குற்றவாளி. இவ்வளவெல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறேனே... உங்களை நம்பி உங்க வீட்டுக்குச் சாப்பிட வரலாமா?
அருமை நெல்லை! எல்லாவற்றுக்கும் இன்னொரு கோணம் உண்டு என்பதை உணர்த்திய கதை.
பதிலளிநீக்குநன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... கீசா மேடம், அந்தப் பெண் ஜிக்கியே இதை எல்லாம் அறிந்து, நல்ல சந்தர்ப்பம் வந்தது என்று நினைத்து சுரேஷைக் கொன்றுவிட்டாள் என்ற கோணத்திலும் சிந்தித்திருக்கிறார் (என்ன குரூர எண்ணம் பாருங்க ஹாஹாஹா)
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஒண்ணும் குரூர எண்ணமெல்லாம் இல்லை. தினம் தினம் எத்தனை செய்திகள் வருது. கள்ளக்காதலில் குழந்தையைக் கூடக் கொல்லும் தாய் இருக்கையில் இது ஒண்ணும் அதிசயமேஇல்லை. சரி,சரி,இத்தனை நேரம் என்னைப்பொறுத்துக் கொண்டதுக்கு நன்னி ஹை! எனக்கும் தி/கீதா மாதிரி நீங்க ஏதோ அவசரத்திலே கொடுத்தாகணும் என்னும் நினைப்பிலே எழுதி அனுப்பினதாய்த் தோன்றியது. அதைச் சொல்லலாம்னு நினைக்கையில் அது எங்கேயோ போயிட்டது. மற்றபடி என் விமரிசனங்கள் உங்களைக் காயப்படுத்தி இருக்காது என மனப்பூர்வமாய் நம்புகிறேன். அதோட நீங்க எங்கள் க்ரியேஷன்ஸுக்கு எழுதின த்ரில்லர் கதை (உண்மை நிகழ்வை ஒட்டியது) கடைசி வரைக்கும் திக், திக், திக், இத்தனை வருடங்கள் கழித்தும் படிக்கையில் அந்தச் சூழ்நிலையை உணர்ந்து கொள்ள முடிந்தது. அதைப் படிக்கலைனா ஒரு வேளை இந்தக் கதை நன்றாக இருப்பதாகச் சொல்லி இருப்பேனோ என்னமோ! அதைப் படித்து இன்னமும் மனசில் வைத்திருக்கும் எனக்கு இது ஒரு சாதாரணக் கதை. என் போன்றவர்கள் இப்படி எழுதலாம். ஆனால் நெ.த.????????????????????
நீக்குகீதா சாம்பசிவம் மேடம்... உங்கள் பின்னூட்டங்களை ரசிக்கத்தான் செய்தேன் (உங்ககிட்ட, மத்தவங்க சொல்றதை 'அவங்க கருத்து'ன்னு எடுத்துக்கற மெக்னானிமிட்டியைப் பார்க்கறேன். அது அனுபவத்தால் வந்திருக்கு). விமர்சனம் ஏன் காயப்படுத்தப் போகுது? நானென்ன நடந்ததையா எழுதியிருக்கிறேன்... இல்லைனா கவிதா தான் எனக்குத் தெரிஞ்சவங்களா?
நீக்குசில கதைகள், 'ரொம்ப நல்லா எழுதியிருக்கிறோம்'னு தோணும். அதுக்கும் விமர்சனம் வரும்போது எதுல தவறுன்னு சிந்திப்பேன்.
அடுத்து இன்னொரு கதையோட வருகிறேன். இந்த வருஷம் முடிந்தால் 5-6 கதைகளை எழுதி அனுப்பி ஸ்ரீராம், 'போதுமையா போதும்' என்று சொல்லும்படிப் பண்ணிவிடுகிறேன். By the by, நான் எழுதின இரு கதை/சம்பவங்களை, இது கதை மாதிரி இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிட்டார். அப்புறம் திரும்ப வாசிக்கும்போது செய்தி மாதிரி இருந்தது. ஸ்ரீராம், இங்கு படித்து கருத்துச் சொன்னவர்கள் எல்லோரும் எனக்கு இன்னும் நல்லா கதை எழுத முயற்சிக்கணும்னு உத்வேகம்தான் தருகிறீர்கள்.
'என் போன்றவர்கள் இப்படி எழுதலாம்' - இந்த மதுரைக் குசும்புதானே வேணாம்கறது. நான் எழுதினா வெறும்ன முகஸ்துதி மாதிரி தெரியும் என்பதால் எழுதத் தயங்கறேன். நீங்க கோவில்கள் பற்றி எழுதியவைகள், அரங்கன் உலா போன்றவை கடும் உழைப்பால் வந்தவை. தொடர்ந்து எழுதுங்க. குலசேகரனை அம்போன்னு விட்டுட்டீங்க. நீங்க கொடுக்கற இடைவெளில அவன் அந்தப் பெண்ணோடு குடித்தனம் நடத்தி இரண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருப்பான்.
கதையை இப்போத்தான் வாசிக்க முடிந்தது நெல்லை.
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது. நெல்லை.
இப்போதெல்லாம் இப்படியும் நடக்கிறதுதான்...செய்திகளிலும் அடிபடுகிறதே!
ஒன்று சிம்பிளான வாழ்க்கையே ஆகச் சிறந்த வாழ்க்கை என்பது பலருக்கும் புரிவதில்லை. தேவையில்லாமல் ஆசையை வளர்த்துக் கொண்டு, தற்காலிக சில சுகபோகங்களுக்காக (பணம், பெண், பொன், மண் என்று) தங்கள் மனதையும் சலனத்துக்கு உட்படுத்திக் கொண்டு அதனால் நிம்மதியை இழந்து தன்னைச் சார்ந்தவர்களுக்கும் வேதனையை அளிக்கிறார்கள். எதற்கு இந்தத் தேவை இல்லாத தலைவலி? ஆனந்தமாக நம் வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பதை விட்டு என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு இப்படியான மனிதர்களைப் பற்றி நினைக்கையில்...
வெங்கட்ஜி எழுதியிருந்த கதையிலிருந்து எனக்கும் சில தோன்றியது. ஆனால்...ஹிஹிஹிஹிஹிஹி வழக்கமான காரணம் தான் மீ ரொம்பச் சோம்பேறி...
வாழ்த்துகள் நெல்லை
கீதா
நெல்லை எனக்கு ஒன்றே ஒன்று தோன்றியது..இது அருமையான ப்ளாட்!! த்ரில்லர் போன்ற கதைக்கான ப்ளாட்.....கொஞ்சம்...கொஞ்சமே கொஞ்சம் அவசர அவசரமாக எழுதிட்டீங்களோன்னு..தோனிச்சு....ஏன்னா உங்க கதைகள்ல நீங்க நுணுக்கமா எழுதுவது வழக்கம்.
நீக்குஎன்னால் கதையை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. பலதை நீங்கள் வாசகர்களின் யூகத்துக்கு விட்டது மற்றும்....வெங்கட்ஜியின் கதைப் பின்னணியில் என்பதை...புரிந்து கொள்ள முடிந்தது...
ஆனால் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியுமா என்று நான் யோசித்ததினால் தோன்றிய ஒன்று கொஞ்சம் விவரங்கள் கொடுத்திருக்கலாமோன்னு....கதை பெரிதானால் என்ன?
கில்லர்ஜிக்குத் தோன்றியது எனக்கும் தோன்றியது என்றாலும் அது வெங்கட்ஜியின் கதைப் பின்னணி என்பதால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது...(அது உண்மைக் கதை ஆச்சே!!!)
மற்றபடி கதை அருமை....எனக்குப் பிடித்தது ...
கீதா
கீதா ரங்கன்... வருகைக்கு நன்றி. கருத்துக்களுக்கும் நன்றி.
நீக்குஎனக்கு மனசுல எப்போதும் தோணும் (நான் கல்லூரிப் பருவம் இருந்தப்போ, அப்புறம் வேலை பார்க்கிறப்போ என்றெல்லாம்). ஒரு மனிதனுக்கு 1 கோடி ரூபாயும் ஒரு வீடும் இருந்தாலே அவன் ஆயுளுக்கும் செலவழிக்க முடியாதே பிறகு ஏன் 20 கோடி, 30 கோடி என்று சம்பாதிக்கிறார்கள் என்று. அதுவும் அரசியல்வாதிகள் 1000 கோடிலாம் சேர்த்து அதை என்ன செய்யமுடியும்?
எங்க அப்பா சின்ன வயசிலிருந்தே எனக்குச் சொன்னது... நான் சேர்த்த 100 ரூபாய் எனக்கு ஆயிரம் ரூபாய்க்குச் சமம். உனக்கு அது 1 ரூபாய் மதிப்பு கூடக் கிடையாது என்று.
இப்போவுமே (அல்லது நல்ல நிலைமையில் இருந்தபோதும்) எனக்குத் தோன்றுவது, சாதாரண வாழ்க்கை போதாதா? யாருக்கு நாம் பெரிய ஆள், பணக்காரன்னு காண்பிக்கணும்? உனக்கும் கீழே உள்ளவர் கோடி, உனக்கும் மேலே இருப்பவர் லட்சம் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்றுதான்.
என்னோட பெரியப்பா (உங்களுக்குத் தெரிந்தவர்தான்), சிம்பிள் லைஃப் போதும் என்றே வாழ்ந்தவர். எங்க கிராமத்துல லட்ச ரூபாய் வச்சிருந்தவங்கள்ல அவர் இரண்டாவது. ஆனால் கிராமத்தில் 50 குடும்பங்கள் வாழ்க்கையை விட மிகச் சாதாரணமாகவே வாழ்ந்தவர் (எனக்கு அந்த வயசுல எரிச்சலாத்தான் இருக்கும். ஆனாலும்)
//அவசர அவசரமாக எழுதிட்டீங்களோன்னு..// - உங்க எண்ணம் சரிதான்.
நீக்குவாழ்க நலம்....
பதிலளிநீக்குநலமுடன் வாழ்க துரை செல்வராஜு சார்... இன்று விடுமுறைதானே... நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்..
நீக்குஇன்று விடுமுறைதான்.. ஆனாலும் நாளைக்குத் தேவையான காய்கறிகள் இன்று supply ஆகும்.. தவிரவும் freeze ல் இருந்து சிலவற்றை இன்று வெளியே எடுத்துப் போட்டால் தான் Defreeze ஆகி நாளைக்கு Cook செய்வதற்கு ஏதுவாகும்.. அதனால் காலையில் சென்று மதியம் திரும்பினோம்....
நீக்குகதை சிரமப்பட்டு பயணித்து முடிந்து விட்டது...
பதிலளிநீக்குவாங்க திண்டுக்கல் தனபாலன். உங்க பின்னூட்டத்துக்கு நன்றி. சொல்ல வந்தது சரியாச் சொல்லலையோ? கதை ஃப்ளோ சரியா வரலையோ?
நீக்குஅவ்வாறு இல்லை... வாசிப்பவர்கள் அனைவரும் தங்களது கதை ஓட்டதிற்கேற்ப (சிந்தனைக்கேற்ப) புரிந்து கொள்ள வேண்டுமே என்கிற கவலை தான்...
நீக்குபுட்டு புட்டு சொல்வதில் ஒரு ரகம் (பாக்கியராஜ்)
சொல்லாமல் சொல்வதில் ஒரு ரகம் (பாரதிராஜா)
சொல்லியும் புரிந்து கொள்ள வைப்பதில் ஒரு ரகம் (பாலசந்தர்)
இந்த மூன்றையும் கலந்து கட்டி சொல்வது தான் இன்றைய நவீனம்...
புரியா விட்டாலும் நன்றி ஐயா...
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.....
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார்.... இதெல்லாம் (திருக்குறள்) பஸ்ல ஒட்டுவதற்கு மட்டும்தானே... ஒட்டறவங்ககூட இதை ஃபாலோ பண்ணறதில்லையே....
நீக்குநான் சொல்ல வந்தது, 'தீதும் நன்றும் பிறர் தர வாரா". அதுனால தவறே செய்யாமல், சும்மா நமக்கு தண்டனை கிடைக்காது, என்பதுதான்.
தவறு செய்யும் சூழல்/சூழலை நெருங்காதிருப்பதே உத்தமம்...
நீக்குஆமாம் துரை செல்வராஜு சார்... முன் ஜெனெரேஷனில், அப்பா/அம்மா அல்லது உறவினர்கள், யாருடன் நம்ம பிள்ளை சேருதுன்னு பார்த்துக்கொண்டே இருப்பாங்க. கெட்டவங்களோட சேர விட மாட்டாங்க. அவங்களுக்குத் தெரியும், கூடா நட்பு கேடா என்றைக்கேனும் முடிய வாய்ப்பு இருக்குன்னு.
நீக்குஇப்ப சமீபத்துல ஒரு ஆசிரியர் சொன்னார். அவங்க ஸ்கூல்ல ஒரு டீச்சரின் பின் பக்க சேலையை 8ம் வகுப்பு மாணவன் இழுத்தானாம். ஒரு மாணவன்/மாணவியை வாய் திறந்து ஒண்ணுமே சொல்ல முடியவில்லையாம். ஏதேனும் திட்டினால், மதப் பிரச்சனை, ஜாதிப் பிரச்சனை, வீட்டிலிருந்து கூட்டமாக ஆட்களை அழைத்து வருவது என்று பிரச்சனை ரொம்பப் பெரிதாகிவிடுகிறதாம். அதுக்காக, 'எக்கேடு கெட்டுப் போ' என்றும் இருக்க முடியலையாம். பாஸ் % காண்பிக்கணுமாம், இல்லைனா ஏகப்பட்ட டார்ச்சர்களாம்.
ஹாஹாஹா ஆமாம் நெல்லைத்தமிழன் .நீங்க சொல்றது அவ்வளவும் உண்மை .இங்கே fb ட்விட்டர் அப்புறம் ஸ்கூல் வெப்சைட்டிலேயே பகிரங்கமா கமெண்ட்ஸ் போட்டுடுவாங்க .சமீபத்தில் நானா படித்தது என் மகள் பள்ளிக்கூட வெப்சைட்டில் .ஒரு மாணவன் எழுதி வச்சிருக்கான் .
நீக்குகெமிஸ்ட்ரி ஆசிரியர் பெண்கள் இருக்கும் பக்கமே சென்று சிரித்துக்கொண்டே பாடம் நடத்தறார் :) ஆண் மாணவர்கள் கேள்வி டவுட் கேட்ட சொல்வதில்லைன்னு :) ..இன்னும் சில பின்னூட்டங்கள் சொல்ல முடியாதது .
அதற்கு மகளிடம் கேட்டேன் அவள் சொல்றா .மானவர்கள் டீச்சர் அணியும் உடையை கூட கிண்டல் செய்வாங்களாம் ஆனாலும் டீச்சர்ஸ் தெரியாதமாதிரி கடந்து போவாங்க என்று சொன்னாள்
ஏஞ்சலின் - இந்த ஊர்ல இன்னும் செண்டிமெண்ட், டீச்சர்னா கடவுள் என்றெல்லாம் மனநிலை இருக்குதல்லவா? அதனால்தான் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது சீரணிக்கக் கடினமா இருக்கும். என்னோட ஹாஸ்டல் வார்டன் (ஃபாதர், அவர் துணை தலைமை ஆசிரியராகவும் இருந்தார்) அவர்களை 25 வருடங்களுக்கு அப்புறம் சந்தித்தேன். அப்போ அவர் சொன்னார், 'உங்க காலத்துலலாம் உங்களை நல்வழிப்படுத்த முடிந்தது. இப்போ உள்ள பசங்களை ஏதாவது சொன்னால், எங்க பெயரைக் கெடுத்துடறாங்க (சிஸ்டர்-ஃபாதர்னு சுவத்துல எழுதி), இல்லைனா எங்களுக்கு நிறைய பிரச்சனைகளைக் கொண்டுவந்துடறாங்க' என்றார்.
நீக்குநான் பி.ஜி படித்தபோது, அந்த ஹாஸ்டல் யூ ஜி மாணவர்கள் பேராசிரியரை 'என்ன குப்பு எப்படி இருக்க' என்றெல்லாம் பேசுவதைக் கேட்டு ரொம்பவும் ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருந்தது.
வெளிநாட்டுல, நண்பர்களாத்தான் பழகறதுனால, கண்டுக்காம போயிட முடியுதுன்னு நினைக்கிறேன்.
அதே அதே .. யாரவது ஒருவருக்கு கடிதம் எழுத சொல்லியிருக்காங்க வகுப்பில் :) ஒரு மாணவன் கிம் கர்டஷியனுக்கு ஒரு மாணவன் தைரியமா liebe கர்ட்டாஷியன் னு இன்னும் நிறைய மானித்தேனேன்னு எழுதியிருக்கான் .விடைத்தாளில் பேர் இல்லைனாலும் ஆசிரியர் அவனை கண்டுபிடிச்சி //நீதானே ஊனைத்தவிர யாரும் எழுதியிருக்க முடியாதுன்னாராம் // சிரித்துக்கொண்டே அவன் என் மகள் வகுப்பு மாணவன் .இப்படி பல புரிதல்கள் இங்குண்டு .
நீக்குஆஆஆஅ கையைச் சுட்டிட்டுதூஊஊ:)... இது சுடச் சுட எழுதின கதையா?... அப்போ கொஞ்சநாளைக்கு முன் நெல்லைத்தமிழன் என் பக்கத்தில் சொன்னாரே , நைட் முழிச்சிருந்து கதை எழுதி அனுப்பினேன் என, அப்போ அந்தக் கதை எங்கேஏஏ?:)..
பதிலளிநீக்குகதை அனுப்புனதா கனா கண்டிருப்பீங்க!....
நீக்குநோஓஓஓ நெல்லைத்தமிழன் சொன்னவர்:)... இப்போ எதுக்கு அமைதியாயிருக்கிறார் எனத் தெரியல்லியே கர்ர்ர்ர்ர்ர்:)...
நீக்குஅதிரா உங்க ஞாபக சக்தியைப் பாராட்டறேன். இன்னொரு கதை(களும்) வரும், அதற்கான ஸ்லாட் கிடைத்தால். ஸ்ரீராம், கதை ஓரளவு சரியா இல்லைனா திருப்பி அனுப்பிடுவார்.... எனக்கென்னவோ அந்த இன்னொரு கதை இன்னும் நன்றாக வந்திருக்கு என்று தோன்றியது.
நீக்குகதை கலவரமாக இருந்ததனால் ரெண்டுதரம் படிச்சேன்ன்... இப்போதான் ஓரளவு புரிஞ்சிருக்கு... வழமைபோல நன்றாகவே ஒரு துப்பறியும் கதை ரேஞ்சுக்கு எழுதியிருக்கிறீங்க...
பதிலளிநீக்குஆனா எனக்கு ஒன்று மட்டும் புரியல்ல:) அந்தக்கா எதுக்கு சுப்பமார்கட்டில் ட்றொலியைப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறா:))))
பதிலளிநீக்கு"அந்தக்கா" - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சின்னப் பெண்ணைப் போய் 'அக்கா'னு சொல்றீங்களே.... நான் பேசாம கதைக்கு 4-5 தமன்னா படங்களைப் போட்டுடலாம்னு நினைத்தான் ஸ்ரீராம், கதையையே வெளியிடமாட்டாரோன்னு தோணித்து.
நீக்குஅது சரி... படம் நல்லா இருக்கா இல்லையா?
நீங்களே தமனாப்படம் அனுப்பாட்டில் வேறு ஆர்தான் தமனாக்கா:) படம் போடப்போகினம் சொல்லுங்கோ?:)...
நீக்கு.............. ....................
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... படம் நல்லா இருக்கோ இல்லையோ:), அதுக்காக ஒரு கொமெண்ட் வருகிறதென்றால்... அதி ஏதோ ஒரு வகையில் கவர்ந்திருக்கு எனத்தானே அர்த்தம்:)...
பாருங்கோ துரை அண்ணனுக்கும் அப்படம் பிடிச்சிருக்கு ஆனா ஜொள்ள மாட்டார்ர்ர்ர்ர்ர்:).. கலா அண்ணி முறைப்பா எல்லோ:)... ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:)...
அதிரா...அந்தக்கா//
நீக்குஹையோ சிரிச்சு முடிலப்பா...
நெல்லை தமன்னா படம் நீங்க போடலைனா இங்க எபில யாருமே போடப் போறதில்லை....அது சரி இப்ப புதுசா ஒரு படம் வருது பார்த்தீங்களா நெல்லை. தமனா முடி எல்லாம் வழிச்சு வாரி அப்படியே குடும்பப் பெண்ணாக....
அதிரா நீங்க அந்தப் படம் விளம்பரம் பார்த்தீங்களா? தமன்னாவின் புதுப்பட விளம்பரம்...இனிதான் வரப் போகுது....நெல்லை அதைப் பற்றி பேசமாட்டாராக்கும் அதில தமன்னா அந்த மேக்கப்பில் கொஞ்சம் வயசான பெண் போல இருக்காங்க...ஹா ஹா ஹா நீங்களே அக்கானு சொல்லலாம்!!!
கீதா
அதிரா - சும்மா அந்தப் படம் நெட்ல கிடைத்தது. மனசுல ஸ்ரீராம் அதை வெளியிட மாட்டார்னுதான் நினைத்தேன். அவசரத்துல வெளியிட்டுவிட்டாராயிருக்கும். அந்தம்மா சூப்பர் மார்கெட்ல பர்சேஸ் பண்ணும்போது இவரும் ஹெல்ப்புக்கு கூடவே போயிருப்பாராயிருக்கும். ஹாஹா.
நீக்கு@கீதா ரங்கன் //தமன்னாவின் புதுப்பட விளம்பரம்...இனிதான் வரப் போகுது..// - இது நியாயமா? ஸ்ரீராம், அனுஷ்காவின் ரசிகர் என்று சொன்னா, அதுக்காக 'இஞ்சி இடுப்பழகி' பட அனுஷ்கா படத்தை எப்போவாவது போட்டிருக்கிறாரா?
நீக்குநீங்களே சொல்லிட்டீங்க இல்லையா? தமன்னா 'மெல்லிடை அழகிதான்'. ஆனா இந்த உதயநிதி படத்துல மேக்கப் போட்டு வயசான பெண் போல காண்பிச்சிருக்காங்கன்னு......
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) ஶ்ரீராம் இல்லாத கருத்தை எப்படி அகற்றுவீங்க?:)
நீக்கு@அதிரா - பொதுவா எங்க சமயத்துல சொல்வது, "கடவுளைத் திட்டினாலும் அவர் பொறுத்துக்கொள்வார், ஆனால் அவருடைய பக்தர்களை அவமதித்தால் அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று.
நீக்குஅதுபோல, ஸ்ரீராமைக் குறித்து தவறாச் சொல்லிட்டாலும், 'அது அவங்க கருத்து' என்று விட்டுவிடுவார். ஆனால் அவருடைய 'அ'வைச் சொன்னால் பொயிங்கிடுவார். அப்புறம், எதுக்கு வம்பு என்று (ஒருவேளை பாஸ் படித்துவிட்டால் இல்லை யாராவது அவரிடம் வத்தி வைத்துவிட்டால்) அகற்றிவிட்டாரோ?
அது ராட்சசி இல்லை:)... ராட்சகி யாக்கும்:)... மீக்கு டமில்ல டி எல்லோ:)... டமிழில் டப்புக் காணும்போதெல்லாம் பொயிங்குவேன்ன்ன்ன்:)... ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:)...
பதிலளிநீக்குஹலோ குண்டூஸ் மியாவ் ..அழகான ராட்சசியே பாட்டு எழுதின உங்க அங்கிள் வைரமுத்து அப்போ தப்பா எழுதிட்டார்ரா :)))))
நீக்குஅது பாடலாம் ஆனா எழுதக்கூடாது:) ஹையோ வழிவிடுங்கோ வழிவிடுங்கோ... நான் ஜொன்னனே நேக்கு எடிரி, வெளியில இல்ல, வீட்டுக்க்க்க்குள்ளயேஏஏஏஏதான்ன்ன்ன்:)
நீக்குhttps://goo.gl/images/TfX1sY
எல்லை மீறிய எதிரியை எல்லை தாண்டிக் கிழித்த வீரரின் சாகஸங்களைக் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பிறகு வருகிறேன்.. ஜெய் ஹிந்த்!
பதிலளிநீக்குஹையோ ஹையோ:)
நீக்குஅதிரா, ஏகாந்தன் அண்ணா சொல்லியிருப்பது இந்திய செய்தி பற்றி...சர்ஜிக்கல் ஸ்ட்றைக்...அதுதான் இப்ப இங்க வைரல்...நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்...
நீக்குகீதா
ஓ நான் கிரிக்கெட் ஆக்கும நினைச்சிட்டேன்ன்ன்:)
நீக்குவாங்க ஏகாந்தன் சார்... இதை ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதமாக வெளியிடுவதையும், எல்லா அரசியல் கட்சிகளும் அடிப்படைக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று 'பிடிக்காவிட்டாலும் வரவேற்று' அறிக்கை கொடுப்பதையும் பார்த்து சிரிப்பாத்தான் இருக்கு. பாகிஸ்தான் காரன், எங்களைக் கண்டு பயத்துல, கொண்டுவந்த வெடிபொருட்களை மைதானத்துல போட்டுட்டுப் போயிட்டாங்கன்றான். உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்த மாதிரி சர்ஜிகல் ஸ்டிரைக் ஜஸ்ட் லைக் தட் செய்தாலும் உலகின் முக்கிய நாடுகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்தியா விளக்கவேண்டியிருக்கும் என்று.
நீக்குநான் உன்னிப்பாகக் கவனித்துவருகிறேன். குறிப்பாக இண்டர்னேஷனல் மீடியா, அரசுகளின் பின்னூட்டங்களை!
நீக்குInternational justice, law என்றெல்லாம் இந்தியா போன்ற பெரிய, ஜனநாயக நாடுகள், கவலைப்படத்தான் செய்யும். அடுத்த நாடு தொடர்புடைய எதிர்ச்செயல்களில், வெளிநாட்டு நண்பர்கள், முக்கியஸ்தர்கள் என, பெரும்பத்திரிக்கைகள் என briefing செய்யவேண்டிவரும். இந்த home work-ஐ மோதியின் /சுஷ்மாவின் தலைமையில் இந்தியா செவ்வனே செய்துவருகிறது. இன்றும் செய்திருக்கிறது. இதெல்லாம் part of maintaining international relations, in groups or otherwise. இதையெல்லாம் தான் எனக்கு வெவ்வேறு நிலைகளில் வெளிநாடுகளில் இருந்துகொண்டு பார்க்க நேர்ந்திருக்கிறது, பழக நேர்ந்திருக்கிறது பல வருடங்களாக from close quarters. இங்கே நிறுத்துகிறேன்..
சரி, கதைக்கு வந்திருக்கும் பின்னூட்ட ஸ்கோரைப் பார்த்தால் திகைப்பாக இருக்கிறதே.. கதைக்கா, இல்லை கவர்ச்சிப் படங்களுக்காகவா இந்தக் கூட்டம் !
நீக்குஅப்பா.... நீங்களாவது 'கவர்ச்சிப் படங்கள்'னு சொன்னீங்களே ஏகாந்தன் சார்..... இது குமுதம் பாணி.. ஹா ஹா.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஹா ஹா ஹா ஶ்ரீராம் போடாத கருத்தை அகற்றிக்கொண்டிருக்கிறார்:)
நீக்குhttps://www.meme-arsenal.com/memes/dcb5d41d0fff2ff6fefe2ed2f9603ca6.jpg
நீக்கு//ரீராம் போடாத கருத்தை அகற்றிக்கொ// - இல்லை அதிரா... அவர் எழுதின உடனேயே நான் படித்துவிட்டேன். அவர் எழுதினது,
நீக்கு"நெல்லைத் தமிழன் அதிராவை விட வயதில் சிறியவராக இருந்தாலும் நல்ல முதிர்ச்சியான கதைகளை எழுதறார். கவர்ச்சிப் படங்கள்தான் அவருடைய சிறிய வயதிற்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது'
அப்புறம் எதுக்கு எல்லோருக்கும் இந்த உண்மை தெரியணும்னு நினைச்சு, நீக்கிவிட்டார்...
அந்த அடிபட்ட படத்தை எதுக்குப் போட்டீங்க.... இப்படிப் படங்கள் வதனப் புத்தகத்தில் ஓவராக வருவதும்.... ஒரு காரணம் அதை விட்டு வெளியேறியதற்கு....
பதிலளிநீக்குபடம் பார்த்தால் போதும், கனவா வந்து துலைக்குது எனக்கு:(...
அதிரா... மற்ற படங்கள்லாம் எங்களுக்கு கனவுல வருவதில்லையே... உங்களுக்கு மட்டும் இந்தப் படம் கனவுல எதுக்கு வரணும்?
நீக்குஅது சரி... நீங்க மர்ம, பேய்ப் படங்கள்லாம் பார்ப்பீங்களா? நான் பொதுவா மியூட்ல வச்சு சில சீன்களை ஃபாஸ்ட் பார்வர்ட் பண்ணித்தான் பார்ப்பேன்.
எனக்கு நகைச்சுவைப் படங்களும், மர்ம, பேய்ப்படங்களும் தான் ரொம்பப் பிடிக்கும். ராத்திரி அதைப் பார்த்துட்டுப் படுப்பேன். நடுராத்திரி நான் அலறும் அலறலில் வீட்டில் இருக்கிறவங்களுக்கு படத்தில் உள்ள பேய்தான் வந்துடுத்தோனு தோணும்.:)))))
நீக்குஎன் பெண் இந்த மாதிரி படங்களைப் பார்த்து வீல் என்று கத்துவாள். எனக்கு எப்போதுமே நகைச்சுவைப் படங்கள்தாம் ரொம்பப் பிடிக்கும். ராத்திரி பெரும்பாலும் அந்த மாதிரி படம்தான் பார்ப்பேன்.
நீக்குஅதுசரி கீதா சாம்பசிவம் மேடம்... அப்படியாவது பயந்துகொண்டு அந்தப் படத்தைப் பார்க்கணுமா?
நான் பாளையங்கோட்டை-திருநெவேலி ரோட்டில் உள்ள தியேட்டரில், கல்லூரிப் பருவத்தில், 'புரான் மந்திர்' படம் பார்த்துவிட்டு, பல சீன்களில் கண்களை மூடிக்கொண்டும், கிளைமாக்சில் பார்த்தும் பார்க்காமலும் பயந்துகொண்டே இருந்தேன்... நீங்க அந்தப் படம் பார்த்திருக்கீங்களோ?
கீதாக்கா ஹைஃபைவ்!! நானும் அந்த லிஸ்ட்தேன்....நகைச்சுவை அண்ட் மர்ம த்ரில்லர் படங்கள் தான் ரொம்பப் பிடிக்கும்...யெஸ் நானும் மாமியார் வீட்டுக்குப் போனா...ராத்திரிதான்...மாமியாரின் திருப்பதி சேனல் 9.30 க்கு முடிஞ்சதும் அங்க போடுவார் என் மச்சினர்...பார்த்துட்டுத்தான் படுத்துப்பேன்...
நீக்குஇந்த முறை போனப்ப ஆப்ரஹேமின்டெ சந்ததிகள் மலையாளப் படம் பார்த்தேன்...கொஞ்சம் திரில்லர்தான்...
கீதா
நான் கத்திக்குத்து ரத்தம் இப்படி எந்தப் படமும் பார்ப்பதில்லை, செத்தவீட்டுக் காட்சிகள் வந்தால் போவெர்ட்தான் ஆனா இங்கு நான் படம் என்றது போட்டோக்களை... அது எப்படியும் கண்ணில தெரிஞ்சிடுமெல்லோ :) கர்ர்ர்ர்ர்ர்ர்:)..
நீக்குநல்ல படம் கனவில் வந்தா நல்லதே, இப்படி வந்தா நித்திரையில் கார்ட் ஓவரா அடிக்குதே:)
அதிரா - இதுதான் ஆண்களுக்கும் பெண்களுக்குமான வித்தியாசம். ஆண்களுக்கு மற்ற படங்கள்தான் (இடுகைல உள்ளது) நினைவுக்கு வரும். பெண்களுக்கு 'பொறாமைனால' அந்த கத்திக்குத்து படம்தான் நினைவுல இருக்கும் போலிருக்கு. அதுனால நீங்க இனிமே மாறிக்கோங்க. ஹா ஹா ஹா.
நீக்குநோவ் நான் வேற மாதிரி ..:) இதுக்கெல்லாம் அசரமாட்டேன்
நீக்கு@நெல்லைத்தமிழன் கதையை படிச்சிட்டேன் ..நிறைய விரிவா எழுதணும் பின்னூட்டம் .கதை அருமையா வந்திருக்கு .இப்போ அவசரமா டைப்பினா ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் வரும் அதனால் ..அப்புறம் வரேன் :)
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சலின் மெதுவா... உங்களை நிறைய இடங்களில் பார்க்கமுடிவதில்லை. ரொம்ப பிஸியாக இருக்கீங்களோ?
நீக்குஹா ஹா ஹா ஏஞ்சல் அதானே ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் வந்தா அப்புறம் டமில்ல டி வாங்கினவங்க கிட்ட மாட்டிக்கனும்...!!!
நீக்குகீதா
கர்ர்ர் நெல்லைத்தமிழன் நான் நேத்து கூட இங்கே மைதா /கோதுமை அரட்டையில் இருந்தேனே :)
நீக்குஉண்மைதான் ஏஞ்சலின். நான் செல்லும் சில தளங்களில் உங்களைப் பார்க்க முடியாததைச் சொன்னேன்.
நீக்குஇருந்தாலும், அதிரா வந்தாங்கன்னா, நம்ம இரண்டு பேருக்கும் கலாய்க்க ஆள் கிடைத்துவிடுகிறதோ?
இன்று என்னால கும்மி போட முடியல்லே:)..
நீக்குசரியா வந்திருக்கு நெல்லை. வடக்கத்திய டிவி சீரியல் பார்க்கிற உணர்வு.
பதிலளிநீக்குநம் மனம் கற்பிக்கும் நியாயங்களை எனக்குள்ளேயே பல தடவைகள் விலகியிருந்து வெகுவாக ரசித்திருக்கிறேன். 'அவளுக்கு உதவிதானே செய்கிறோம் என்று தன் சலனத்துக்கும் இடம் கொடுத்தான்..
சுனில்'-- என்ற இடம் அப்படியான இடம். கைதட்டத் தோன்றியது, நிஜம்..
கதையை வாசித்துக் கொண்டு வரும் போது, கதாபாத்திரங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறீர்களோ என்று தோன்றியது. கடைசியில் தான் காரணம் புரிந்தது
கதையின் ஆரம்ப மூன்றாவது பாராவிலேயே ப்ளாஷ் பேக் ஆரம்பித்து விட்டது. அதுவும் காதாசிரியர் கதையைச் சொல்கிற பாணியில். க்தாசிரியர் தன் மொழியில் கதை சொல்வதெல்லாம் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு தான் லாயக்கு. நீங்கள் தான் வளர்ந்து விட்டீர்களே! வேறே மாதிரி புது சோதனைகள் பண்ணிப் பார்க்கக்கூடாதா?
ஆனால் சரியான இடத்தில் உரையாடலில் கதையைக் கொண்டு போன சாமர்த்தியத்தையும் குறிப்பிட வேண்டும். அதற்கு ஒரு பாராட்டு ஷொட்டு.
நல்ல கதைகளுக்கு முடிவே இல்லை. அது முடிவில்லாது தொடரும் சாத்தியப்பாட்டைத் தன்னுள் கொண்டது.
அதற்காக வெங்கட்ஜிக்குப் பாராட்டு.
நீங்கள் நிறுத்தியிருக்கிற இடத்தைக் கூட முடிவாகக் கொள்ளாமல் யாராவது தொடரலாம். எழுதுவதில் சாமர்த்தியம் உள்ளவர்கள் அதைச் செய்யட்டும். வாசிக்கக் காத்திருக்கிறேன்.
ஜீவி சார்... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... நானெல்லாம் கத்துக்குட்டி. சும்மா, வெங்கட் எழுதின கதை (அவர் மனைவிதான் எழுதினதுன்னு சந்தேகம்.. வெங்கட் அதைப் பற்றிச் சொல்லவே இல்லை) என் மனசுல தோணி இதனை எழுதினேன்.
நீக்குஎன்னை மாதிரி சாதாரண கதை எழுதறவங்களையும் மதித்து நீங்க பின்னூட்டம் போட்டதை ரொம்பவும் மகிழ்ச்சியாக உணருகிறேன்.
உங்க பின்னூட்டமே கதை எழுதுவதில் பல செய்திகளைச் சொல்லுது.
ஆனா ஜீவி சார்... இந்த கதை எழுதும் ஃபார்மட், பொதுவா ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் (நான் சொல்வது தொழில் முறை அல்லது தேர்ந்த எழுத்தாளர்களுக்கு) ப்ரத்யேகமானதல்லவா? அதாவது வெறும் கதையைப் படித்து அந்த வாக்கியங்களை அவதானித்து, இந்தக் கதை இவரால் எழுதப்பட்டிருக்கும் என்று நீங்கள்லாம் சர்வ சாதாரணமாகச் சொல்லிடலாம் இல்லையா? அல்லது தேர்ந்த எழுத்தாளர்கள், பலவித ஃபார்மட்டில் எழுத முயற்சித்திருக்காங்களா (ராகிர போன்று)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇப்பொழுது தான் பின்னூட்டங்களை ஓரளவு மேம்போக்காக மேய்ந்தேன். கதாசிரியன் தான் எழுதின கதை நிகழ்வுகளுக்கு விளக்கமாகவோ நியாயம் கற்பித்தோ பேசக்கூடாது. அது மரபல்ல. அவனோட எழுத்து தான் வாசகர்களிடம் பேச வேண்டுமே தவிர அவன் அல்ல.
பதிலளிநீக்குவாசகர்கள் சொல்லி தான் எழுதியதில் தவறு ஏதாவது இருக்கிறது என்று புலப்பட்டால் அந்தத் தவறை நிவர்த்தி செய்ய இன்னொரு கதை எழுதி விட்டால் போச்சு..
எழுதினதெல்லாம் எழுதின சமயத்தில் நெஞ்சில் கிளர்ந்த உணர்வு. அதற்கு பின்னாடி 'இதுக்காக அப்படி; அதுக்காக அப்படி'ன்லாம் விளக்கம் சொன்னால் எழுதின திருப்தியே பஸ்பமாகி விடும்.
எழுதியவன் ஒருத்தன். வாசிப்பவர் பலர். பலருக்கு பலவேறான கேள்விகள். அதுக்கெல்லாம் அந்த ஒருத்தன் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
பதில் சொல்லணும்ன்னு ஆசைப்பட்டீங்கன்னா, இன்னொரு கதை தான் அதற்கான பதில். எழுதுவது
இந்தக் கதையோடு முடிந்து போகக் கூடிய சமாச்சாரமும் இல்லை.
பிரபல எழுத்தாளர்கள் அடுத்து அடுத்து வெவ்வேறு கோணங்களில் கதைகள் எழுதிக் கொண்டிருப்பதின் ரகசியம் இது தான். எழுதினதுக்கு பதிலா இன்னொண்ணு. அதுக்குத் தொடர்ச்சியா அடுத்தது. இப்படி....
ஜீவி சார்... உங்க பாயிண்ட் மிகவும் சரிதான். சமைத்த உணவை விமர்சிக்கும்போது, அதை ஜஸ்டிஃபை பண்ணுவதுபோல் மனைவி சொல்வது ரசனைக்குரியதாக இருக்காது. கதாசிரியன், குறைகளைப் புரிந்துகொண்டு அடுத்தடுத்த கதைகளில் சரி செய்து வளரவேண்டும்.
நீக்குஉங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி ஜீவி சார்.
அந்தநாள் குமுதத்தில் வருகிற கதை மாதிரியே இருப்பதாகத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா? :))
பதிலளிநீக்குவாங்க கிருஷ்ணமூர்த்தி சார்... படங்களைப் பார்த்தும் அந்த அபிப்ராயம் வந்திருக்கோ? ஆனா, அந்தக் கால குமுதம் கதைகள் நல்லாவே இருக்கும் இல்லையா?
நீக்குகுடிவெறியில் ஸுரேஷ் கத்தினது ஜிக்கிக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. சலனம், இதுவும் ஏதோ உதவிமாதிரி மனதுபாவித்து தப்பிற்கு உடந்தையான ஸுனில். தவறு செய்ய ஆண்,பெண் வித்தியாஸமில்லை. உங்கள் கதை ஒரு வித்தியாஸமான கோணம். வெங்கட் எழுதினதையும் படித்து,இதனையும் உடனே படித்தால் இரண்டு கதையின் கோணங்களும் புரியும். பாராட்டுகள். அன்புடன்
பதிலளிநீக்குவாங்க காமாட்சி அம்மா. உங்கள் கருத்துக்கு நன்றி...
நீக்குஆமாம்மா.. தவறுக்கு ஆண் பெண் பேதமில்லை. மனித மனதுதானே காரணம்.
இது கேட்டு வாங்கிப் போட்ட கதையா கேளமல் வந்ததோ என்று தோன்றியது கதையே இப்போதைய சினிமாத் தரங்களுடன் இருக்கிறதுகதை ப்டித்தால் ஏதாவது தாக்கம் ஏற்பட வேண்டு இல்லையா கதை என்பது எழுதுபவர் மனசில் தோன்றும் எண்ணங்களே சரியா தவறா என்பதெல்லாம் பார்க்கக் கூடாது சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதே முக்கியம்
பதிலளிநீக்குவாங்க ஜி.எம்.பி சார்.... நேற்று உங்கள் இடுகை என் மனதில் ரொம்ப நேரம் சலனத்தை உண்டாக்கியது. அந்த அனுபவத்தை மாதிரி, வேறு ஒரு முற்றிலும் வித்தியாசமான அனுபவம் எம்ஜியாருக்கு நேர்ந்தது என்று படித்திருக்கிறேன். (எம்ஜியாரைப் பார்க்கச் சென்ற, அவருடனேயே சினிமா வாழ்க்கையில் பயணித்த, எம்ஜியாரின் உடல் வலிவு, தீரம், சுறுசுறுப்பு, வேகமான குத்துச்சண்டை/கத்திச் சண்டை போடும் திறமை என்று எல்லாவற்றையும் உடனிருந்து பார்த்தவர், அவரது பிரத்யேக புகைப்படக்காரர், அப்போது அவரின் மனைவியோடு எம்ஜியாரைப் பார்க்கச் சென்றிருந்தார். எம்ஜியார் பக்கத்தில் போன் அடித்தபோது, இவர் எடுக்க முனைந்தபோது எம்ஜியார் இவர் கையைத் தட்டிவிட்டு, அந்த போனை நடுங்கும் கரங்களோடு, வலிமை இல்லாத நினையில் மலையைத் தூக்குவதுபோல கஷ்டப்பட்டு எடுத்தாராம். அப்போவும் தன் உடல் வலியற்ற திறன் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்ற நினைவே அவரிடம் இருந்ததாம். அந்தச் சந்தர்ப்பத்தில் எம்ஜியார் இவரிடம் சிலவற்றைச் சொன்னாராம். அப்போ இவரின் மனைவி, வெள்ளந்தியாக, 'நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலையே ஐயா' என்று சொல்லவும் எம்ஜியார் அழுதுவிட்டாராம். அவர் எழுத்தில் இந்த நிகழ்ச்சியைப் படித்தது மனதில் தைத்தது)
நீக்குநீங்கள் சொல்லியிருப்பது சரியாத்தான் தோணுது. சம்பவத்துக்கு வாய்ப்பு இருக்கான்னுதான் பார்க்கணும். சரியா/தவறான்னு பார்க்கக்கூடாது என்று சொல்லியிருப்பது ஆமோதிக்கும்படித்தான் இருக்கு. மிக்க நன்றி.
//எம்ஜியார் அழுதுவிட்டாராம்.//
நீக்குஉண்மையாக இருக்கலாம். ஆனால் அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனம்.
ஸ்ரீராம்... எம்ஜியார் பொதுவெளியில் தன் பிம்பத்தைச் சரியாகப் பேணிவந்தார். அவருடைய இயல்பான 'ஏழைகளுக்கு இரங்கும்' மனமும் நமக்கு அவரைப் பற்றிய உயர்வான பிம்பத்தை ஏற்படுத்தின.
நீக்குஇத்தனை இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் கடைசி காலம் என்பது உண்டல்லவா? அப்போது உடல் வலிமை குறையும். அரசியலில் அவருக்கு மன வலிமையும் குறைந்திருந்தது. அவ்வளவு முடியாதபோதும், ராஜீவ் காந்தியால் சிறிது மன உளைச்சலுக்கு ஆனபோதும் (ஜெ.வை துணை முதலமைச்சராக ஆக்குங்கள், உங்களுக்கு உடல் நிலை அவ்வளவு சரியில்லை என்று கொஞ்சம் ஸ்டிராங் அட்வைஸ் கொடுத்தாராம்), கத்திப்பாரா நேரு சிலை திறப்பு நிகழ்ச்சியில், பொது வெளியில், குதித்துக்கொண்டே ஏறி, தான் இன்னும் வலிமையோடு இருப்பதாக பொதுவெளியில் காண்பித்தவர் எம்ஜியார்.
வலம்புரி ஜான் புத்தகமும், சில மாதங்களுக்கு முன்பு வாசித்த புத்தகமும் நடந்தவைகளைச் சொல்கின்றன. இவங்கள்லாம் நடந்ததை எழுதும்போது, எம்ஜியார் என்ற பிம்பத்தைச் சிதைக்காமல் எழுதியவர்கள். அவரின் அன்புக்குப் பாத்திரமானவர்கள்.
எம்ஜியார், அரசியல் காரணங்களுக்காக அழுததை வலம்புரிஜான் பதிவுசெய்துள்ளார். தனிப்பட்ட முறையில் அழுததை எம்ஜியாரின் புகைப்படக் கலைஞர் நாகராஜ ராவ் எழுதிய புத்தகம். இன்னொன்றையும் படித்தேன். எம்ஜியாரின் அருகிலேயே இருந்த பத்மநாபன் என்பவரைப் பற்றியது. அவர் எம்ஜியாரின் பாதுகாப்பு/உதவிக்காக தன் வாழ்நாளைச் செலவழித்தவர். எந்தவித உதவியையும் எம்ஜியாரிடம் எதிர்பார்க்காதவர். எம்ஜியார், மனைவி ஜானகியிடம் பேசும்போது, 'அந்த நாய்க்கு-அவ்வளவு அன்பாக, உயர்வாக அவரை நினைத்திருந்தார் எம்ஜியார், ஏதாவது செய்தே ஆகணும்' என்று நெகிழ்ந்து பேசுவாராம். பிறகு பேசமுடியாத கட்டத்தில், பத்மநாபனைக் கூப்பிட்டு, அவர் மனைவியிடம் ஒரு விரலைக் காண்பித்துக் கொண்டுவரச்சொன்னாராம். 1 கோடியைக் கையில் கொடுத்தவுடன், பத்மநாபன், அழுதுகொண்டே எம்ஜியாரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாராம். (இது திரைக்கதை ஆசிரியர் கலைஞானம் எழுதிய சம்பவம்).
மிக்க நன்றி நெல்லைத்தமிழன் .இந்த சம்பவங்கள் நான் அறியாதது .எல்லாரும் 100 % நல்லவங்களுமில்லை அதேபோல எல்லாரும் 100% கெட்டவங்களுமில்லை (அரிய தத்துவத்திற்கு நன்றி மியாவ் ) ..நாம் எப்பவுமே மோஸ்ட்லீ பிரபலங்கள்கிட்ட சிலர்கிட்ட இருக்கிற 1% கெட்டதை மட்டும் அறிஞ்சிட்டு உடனே இன்னார் இப்படின்னு ஜட்ஜ் பண்ணிடறோம் :( நல்லவை பல விஷயங்கள் நம் காதுக்கு வராமல் தெரியாமலே போயிடுது ..
நீக்குஏஞ்சலின் - நன்றி... நான் இவைகளையெல்லாம் படிக்கும்போது எடுத்துக்கொள்ளும் கருத்து,
நீக்கு"இரவு நீண்டால் நிச்சயம் விடியல் இருக்கும் - கலங்கிவிடாதே
விடியல் நீண்டால் நிச்சயம் இரவு வரும் - ஆணவம் கொள்ளாதே"
//1 கோடி இருந்ததாம்..//
நீக்குஇவரு எண்ணினாராமா?..
என்ன, நெல்லை.. யார் எதை எழுதினாலும் உடனே நம்பிடுவீங்களா? அதை மனப்பாடம் பண்ணின் மாதிரி நினைவில் வேறு வைச்சிருக்கீங்க!..:)
//மணியன் எழுதியிருக்காரு.. காலை வேளைலே எம்ஜிஆர் தோட்டத்திற்கு யார் போனாலும் சுடச்சுட டிபன் நிச்சயம். வாழை இலைலே தண்ணி தெளிச்சு... //
நீக்குஇந்த மாதிரியான செய்திகளை எப்படிப் புரிஞ்சிக்கணும்ன்னு இருக்கு, இல்லியா?
ஜீவி சார்.. அப்போவே செக் பண்ணணும்னு நினைத்தேன். பிறகு உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து புத்தகத்தை ரெஃபர் செய்தேன். பலர் எழுதுகின்ற அனுபவப் புத்தகங்களைப் படிக்கும்போது (ஒரே நிகழ்ச்சி அல்லது ஒருவரைப் பற்றிய பல்வேறு சம்பவங்கள்) நமக்கு எது உண்மை என்று அனுமானிக்க முடியும்.
நீக்குபுத்தகத்தில் எழுதியிருந்தது, 'இன்றைய 1 கோடிக்குச் சமமான பணத்தை". எ.பி வாட்சப் குழுமத்தில் அந்தப் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
எம்ஜியார் அவர் கையால் பரிமாறியதும் உண்டு. கீழே கிச்சனில் போய் சாப்பிட்டுவிட்டு பிறகு வரச் சொன்னதும் உண்டு. அவர் தன்னுடைய இமேஜை கன்ஸிஸ்டண்டா மெயிண்டெயின் செய்திருந்தாலும் இயல்பான நல்ல குணங்கள்தான் வெளிப்பட்டன என்பது என் முடிவு.
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல கதை. விறுவிறுப்பாக சென்ற கதை. முதல் இரண்டு குட்டி பாராவை படித்ததும் வித்தியாசம் தென்பட்டது.அதை தொடர்ந்து சுவாரஸ்யம் குன்றாமல் கதையை நகர்த்திய விதம் அழகு.
பணம் பத்தும் செய்யும். அளவுக்கு மேல் பணத்தின் மேல் ஆசைப்பட்டால் நிம்மதியை குலைக்கும். மனச்சலனங்கள் வாழ்க்கையை கரடு முரடாக்கும் என்பதற்கெல்லாம் கதை ஒர் உதாரணம். ஆனாலும், விதியின் வசத்தால், சிலர் கடைசி காலம் வரை சந்தோஷத்தை இழக்காமல் வாழ்ந்து மறைகின்றனர்.
சகோ வெங்கட் அவர்கள் எழுதிய சென்ற வாரக் கதையை நான் இதுவரை படிக்கவில்லை. இப்போது சென்று இந்தக்கதையுடன் தொடர்புடைய அதையும் படித்து வந்தேன். ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருக்குமாறு அருமையாக எழுதிய தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கதைக்குள் ஓவியம் தாங்கள் வரைந்ததோ என முதலில் நினைத்தேன்? தங்களுக்கு ஓவியமும் வரையத் தெரியும் என பதிவுகளின் வாயிலாக கேள்விப் பட்டுள்ளேன். அதனால்தான் கேட்டேன். கதைக்கேற்ற படங்களும், ஓவியங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்...
நீக்குஎனக்கு ஓவியம் வரைய ஆசைதான். ஆனால் நேரம் எடுக்கும். அதுவும் தவிர ஓவியம் சுமாராத்தான் இருக்கும்.
'அளவுக்கு மேல் ஆசைப்பட்டால்" - இந்த அளவுக்கு ஏதேனும் அளவுகோல் இருக்கா? நான் ஒரு தடவை என் உறவினரிடம் கேட்டேன்... எவ்வளவு இருந்தால்-பணம் சேர்த்தால், 'போதும்' என்று இருந்துவிடலாம் என்று. அதற்கு அவர், அப்படிப்பட்ட அளவீடு எதுவும் கிடையாது. எது இருந்தாலும் அதுக்கு ஏத்தபடி வாழ்க்கையை வாழலாம் என்ற மனம்தான் வேணும்னு சொன்னார். மனிதனுக்கு என்ன வேணும்? இருக்க இருப்பிடம். சாதாரண உடைகள். மூன்றுவேளை மோர் சாதம் இருந்தால் போதாதா?
//ரியல் எஸ்டேட் அவர் சொல்வது போல் மிகவும் கடுமையான போட்டியுள்ள ஆபத்தான தொழிலாயிற்றே என்ற எண்ணம்.//
பதிலளிநீக்குதொழில் போட்டியால் ஆபத்து ஏற்படும் என்றபயம் சுனிலின் மனைவிக்கு இருந்து இருக்கு.
தொழில் போட்டியில் உள்ள எதிர் அணியினர் சுனிலை பற்றி சுரேஷ்க்கு போட்டு கொடுத்து விட்டார்கள் போலும்.
இரண்டு பேர் சண்டை போட்டதில் சினிமாவில் நடப்பது போல் எதிர் அணியினர் சுரேஷை கொன்று விட்டு தங்களுக்கு இடைஞ்சலாக இருந்த சுனிலையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். (இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் நகர்த்தி விட்டார்கள்)
வெங்கட் நாகராஜ் கதையில் வருவது போல ஜிக்கி நான் தான் கொலை செய்தேன் என்று ஒத்துக் கொண்டால் தன் கணவரை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தாரோ!
//நம்ம கணவனால பலன் பெற்றவங்கள்ல யாராவது உண்மையைக் கண்டுபிடித்து உதவ மாட்டாங்களா?//
அவரும் தொழில் முறை போட்டியில் தன் கணவன் மாட்டிவிட பட்டார் என்றே நினைக்கிறார் அதனால்தான் யாராவது உண்மையைக் கண்டுபிடிக்க உதவ மாட்டாங்களா என்று நினைக்கிறார். ஆனால் அவர் கண்வர் தப்பு செய்தவர் ஆச்சே!
உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து ஆக வேண்டும் என்பது போல் வினை விதைத்தவன் வினையை அனுபவித்துதானே ஆக வேண்டும்.
//இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் நகர்த்தி விட்டார்கள்)// - அட... இப்படியும் ஒரு கோணத்தில் கதை எழுதலாமே.
நீக்குஅருமையான ஐடியா கோமதி அரசு மேடம்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
கதை மிக அருமையா வெங்கட்டின் கதையோடு பொருந்தி எழுதியிருக்கீங்க நெல்லைத்தமிழன் .
பதிலளிநீக்குமுதலில் கதையில் இருக்கும் படங்களை பற்றி சொல்லியாகணும் .அழகான தேர்வு .
அந்த ஷை பொண்ணு செம்ம அழகு !! ஆயில் பெய்ன்ட்டிங்கா இருக்கும்னு தோணுது .
அந்த சின்ன பிள்ளைங்க புல்வெளியில் விளையாடும் ஓவியம் அழகு .2 வயசு இருக்கும்போது என் பொண்ணு இப்படி தலையில் தொப்பி போட்டு தரையில் இருக்கும் வைல்ட் weed டெய்சி மலர்களை பறிப்பா :)
அந்த மூணாவது படம் கவிதா சுனிலோ :)
முதலிரண்டு படங்களும் என் மனதை மிகவும் கவர்ந்தவை ஏஞ்சலின். மூன்றாவது படம், கொஞ்சம் பொருத்தமா இருக்கோன்னு நினைத்துச் சேர்த்தேன். இருந்தாலும் ஸ்ரீராம் வெளியிடமாட்டாரோன்னும் நினைத்தேன்.
நீக்குகுழந்தைகள் ஓவியம், அல்லது குழந்தைகளைக் காண்பது மன மகிழ்ச்சி தரக்கூடியதுதான்.
வெளியிடுவதில் எனக்குத் தடையில்லை!
நீக்குஇளவயதில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் சில கஷ்டங்கள் நம்மை பண்படுத்த சுனிலோட அப்பா நல்வழியில் தான் வளர்த்திருக்கார் அதை புரிஞ்சிக்கிற பக்குவம் இல்லாமப்போச்சே சுனிலுக்கு .பணம் பலதும் செய்யும் என்பது சுனிலுக்கு ரொம்ப பொருத்தம் அது அதிகரிக்க அதிகரிக்க வேண்டா குணமும் நுழைஞ்சிடுச்சி .
பதிலளிநீக்குநல்லெண்ணங்களை ஒரு புள்ளியில் இணைக்கலாம்.. ஆனா நல்லதும் கெட்டதும் இணையும்போது பாலில் கலந்த துளி விஷம்தான் நிலைமை .
.///வியாபாரத் தொடர்புகள் தன் வீட்டிற்கு வர முடியாது என்பதில் சுனில் தெளிவாக இருந்தான். //
பின்னே :) காட்சிகள் மாறி கண்முன்னே வருமே ஆனாலும் கில்லாடிதான் சுனில்
//தொடர்புகள் தன் வீட்டிற்கு வர முடியாது// - இந்த மாதிரி கேரக்டர்களையும் நான் சந்தித்திருக்கேன்.
நீக்குபொதுவாகவே வட இந்தியர்களுக்கு பணம் சம்பாதிப்பதில் கொஞ்சம் பேராசை உண்டு .வெங்கட் கதையில் பெங்காலி என்று சொன்னபோவே எழுத நினைச்சி அப்புறம் விட்டுட்டேன் .இங்கே சில பஞ்சாபி குஜராத்திகள் இருக்காங்க நகைக்கடை ஓனர்ஸ் ஆனாலும் மாலை க்ளீனிங் வேலை மெக் டோனல்ஸில் செய்வாங்க .என்னிடம் ஒருவர் கேட்டார் //நீ ஆலயத்தை க்ளீன் செய்கிறாய் அங்கு உனக்கு பணம் தர்ராங்களான்னு.பணம் தரரெட்டி நாணெல்லாம் செய்ய மாட்டேன்னும் சொன்னார் ஒருவர் :) .அவங்க பிள்ளைங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கும் . .எல்லாவற்றையும் பணம் காசுன்னு பார்த்தா அதுதான் முக்கியம்னு நினைச்சா வாழ்க்கை நரகமாகிடும் ,சுனில் விதைத்த முதல் வினை பணப்பேராசை அப்புறம் பிற வினைகள் clandestine affair நம்பிக்கை துரோகம் .
பதிலளிநீக்கு//தரரெட்டி நாணெல்லாம் //
நீக்குதராட்டி நானெல்லாம்
ஏஞ்சலின் - பொதுவாச் சொல்வதை யாரும் தவறா எடுத்துக்கக் கூடாது. குஜராத்தி, மார்வாரி, ஜெயின், மலையாளிகள் இவர்கள் பொதுவாக பணத்தாசை நிரம்பப் பெற்றவர்கள். தவறுகளைச் செய்யத் தயங்காதவர்கள். அப்புறம் 'கடவுள், உபவாசம்' என்றும் சொல்வார்கள். கேட்டால், அது வேற, இது வேற என்பார்கள்.
நீக்குஆனா அவங்ககிட்டதான் நான் நிறைய கற்றுக்கொண்டேன். வேலை கடுமையாகச் செய்வதை விட, ஸ்மார்ட்டா வேலை பார்த்து கம்பெனிக்கு பணம் சம்பாதித்துக்கொடுக்கணும் என்பதை.
நெ.த. அவர்கள் சொல்லி இருப்பவை நியாயமான வார்த்தைகள்....
நீக்குயெஸ் உண்மைதான் ..அந்த கடின உழைப்பை மட்டும் எடுத்துக்கணும் அதை எப்படி செய்றாங்க என்பதில் மட்டும் நம்முடைய சோய்ஸ் இருக்கணும் ..
நீக்குநெல்லைத்தமிழன் கதை மிக நன்றாக இருக்கிறது. மிகவும் அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். வெங்கட்ஜி அவர்களின் கதையிலிருந்து பிறந்த கதை.
பதிலளிநீக்குஉங்களுக்கு இப்படியான க்ரைம் கதைகளும் எழுத வரும் என்று நிரூபித்துஇருக்கின்றீர்கள். இன்னும் நீங்கள் முழுமையான க்ரைம் கதைகள் எழுதலாமே.
அதீத ஆசை இப்படியான சிக்கல்களில் விழ வைக்கும் என்பதுதானே வெங்கட்ஜி அவர்களின் கதையின் கருவும். இதில் கூடவே பார்ட்னரின் மனைவி - பணத்துடன் பெண்ணும் நுழைந்து விடுகிறாள். அப்பெண்ணிற்கும் சில தேவைகள். எத்தனை சிக்கல்கள்.
நன்றாகவே வந்துள்ளது! வாழ்த்துகள் பாராட்டுகள்!
துளசிதரன்
(நெல்லை ஸாரி துளசி அப்போவே அனுப்பிய கருத்தை நான் பார்க்காம விட்டுட்டு இப்பத்தான் பார்த்தேனா..ஸோ இப்பத்தான் இங்க பதியறேன்...தாமதத்திற்கு மன்னிக்கவும் - கீதா)
வாங்க துளசிதரன் சார்... நீங்க உங்க தளத்துல எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே...
நீக்குமிக்க நன்றி உங்க கருத்துக்கு. நீங்க சொன்ன மாதிரி ஒரு க்ரைம் கதை எழுத முயற்சிக்கவேண்டியதுதான்.
நெல்லை அப்போவே சொல்ல நினைத்து விட்டுப் போன கருத்து படங்கள் பற்றிய கருத்து...முதல் இரு படங்கள் செம...ரொம்பப் பிடித்தது என்றால் கடைசிபடமும் அழகு!! ம செ?
பதிலளிநீக்குகீதா
முதல் படம் ரொம்ப நல்லா ஓவியர் வரைந்திருக்கிறார்... எனக்கு இந்த ஓவியர்கள் மாடல்களை வைத்து வரையறாங்களா, அப்படீன்னா இந்த முகமும் அதே மாதிரியான்னு ஒரு சந்தேகம் உண்டு. நன்றாகவே வரைந்திருக்கிறார். நன்றி கீதா ரங்கன்.
நீக்குஇந்த தலைப்புக்கு பக்கத்தில் by நெல்லைத்தமிழன் என்று வந்திருக்கணும்
பதிலளிநீக்குஹ்ஹஹ்ஹா அப்படியே தொடர்ச்சியா படிங்க தெரியும் :))
ம்க்கும்... எனக்கு சப்போர்ட் பண்ண ஸ்காட்லாண்ட் இல்லைன உடனே என்னையே கலாய்க்கிறீங்களா? ஹாஹா.
நீக்கு