வியாழன், 14 பிப்ரவரி, 2019

மந்தையைப் போல் நடத்தப்படும் மக்கள்



மதியம் இரண்டரை மணிக்கு காலி செய்துகொண்டு கிளம்பி விடலாம் என்று சொல்லி இருந்தார்கள்.  அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு நாங்கள் இரண்டு மணிக்கு வந்தபோது யாரும் கிளம்பும் அறிகுறியையே காணோம்.  ஆனால் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள்.  மஃப்டியில் இருந்தார்கள்!  பேக்கிங் செய்த அறிகுறியே இல்லை.  யாரோ நான்கு பேர் அறைச் சாவியைத் தராமல் கொண்டுபோய்விட்டார்களாம்.  'ஐயாயிரம் ரூபாய் கீழே வை' என்று கேட்டுக்கொண்டிருந்தார் தங்குமிடத்தின் பொறுப்பாளர்!

எங்கள் பெட்டிகளுடன் வேஷ்டி கட்டிக்கொண்டு நாங்கள் தயாராய் வெளியே நின்று கொண்டிருந்தோம்.  வேஷ்டி என்ற உடன் நினைவுக்கு வருகிறது.

இடையில் நடந்த ஒரு விஷயம் பற்றிச் சொல்ல விட்டுப்போய் விட்டது.  முதல் நாள் இரவு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் கவனத்துக்கு வந்தது.

'மர்ஃபி லா' கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அது மாதிரிதான்.  

எல்லா முறையும் வேஷ்டி எடுத்துப்போகும் நாங்கள் இந்தமுறை வேஷ்டி எடுத்துப்போகவில்லை.  என்ன காரணமோ...  கொண்டு போகவில்லை.  பேண்ட்ஸ் ஷர்ட் வைத்து அட்ஜஸ்ட் செய்துவிடலாம் என்று நினைத்துப் போனோம். 

ஆனால் பாலாஜியைத் தரிசிக்க முன்னூறு ரூபாய் புக்கிங்கில் தரிசனத்துக்குச் செல்லும்போது அவரவர்கள் அவரவர்களுடைய பாரம்பரிய உடையில்தான் இருக்கவேண்டுமாம்.  முன்னர் (எப்போதோ) பார்த்ததற்கு திருப்பதி இப்போது எவ்வளவு மாறி இருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்தோம்.  புதிய சட்டதிட்டங்கள் எல்லாம் அமலாகியிருக்கின்றன என்றார்கள்.  அப்போது பேச்சுவாக்கில் திருவனந்தபுரம், குருவாயூர் போல சட்டையைக் கழற்றிவிட்டு உள்ளே செல்லவேண்டும் என்று ஏதாவது விதி கொண்டு வந்து விட்டார்களா என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்!

அதாவது நாங்கள் வேஷ்டி கட்டிக்கொண்டு செல்லவேண்டும்.  பேண்ட்ஸ் மேலே வேஷ்டி கட்டலாம் என்றார்கள்.  (பேண்ட்ஸ் மேலே வேஷ்டி கட்டிக்க கொண்டு செல்லலாமா? என்று தங்குமிடத்தின் பொறுப்பாளரை விசாரித்தபோது "It is up to you and your attitude" என்றார் வெறுப்புடன்!) அல்லது வெள்ளை பேண்ட்ஸ்  இருந்தால் கூட பரவாயில்லை என்றார்கள்.  

மகன்கள் பீதியானார்கள்!  எனக்கும் கவலைதான்!  இந்தமுறை  பார்த்து வேஷ்டி கொண்டு வரவில்லை.  

கவலைப்பட ஒன்றுமில்லை, தரிசனத்துக்கு நுழையும் இடத்திலேயே வேஷ்டிகள் வாடகைக்கும், விலைக்கும் கிடைக்கும் என்றார்கள்.  கடைசி நிமிடத்தில் பதட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று தோன்றியது.

இதுவே இலவச தரிசனத்துக்கு செல்லும் இடத்தில இந்த கண்டிஷன்ஸ் கிடையாது!

வாகன ஓட்டுனரிடம் சொல்லி நான்கு வேஷ்டிகள் விலைக்கு வாங்கச் சொன்னேன்.  அவரும் மதியம் உணவு உண்ண செல்லும் முன்பு கொண்டு வந்து தந்திருந்தார்.  650 ரூபாய்!

கூடவே  ஆதார் கார்ட் ஒரிஜினல் கையில் இருக்கவேண்டும் என்றார்கள்.  நல்ல வேளையாக யதேச்சையாக அவற்றை எடுத்துக் போயிருந்தோம்.

ஓட்டுநர் எனக்கு மிகவும் நெருங்கிய நட்பாகிவிட்டார்!  'எத்தனை மணிக்கு தரிசன நேரம்' என்று கேட்டார்.  '4 மணிக்கு' என்றேன்.   மணிக்கட்டைத் திருப்பிப்  பார்த்தார்.  மூன்றேகால்.  "என்ன ஸார்?" என்றார்!  

மூன்றே முக்காலுக்கு பரபரப்பாக எல்லாவற்றையும் வண்டியில் ஏற்றிவிட்டு, எந்த வண்டியில் வந்தோமோ, அதே வண்டியில் அவரவர் ஏறிக்கொள்ள, வண்டி புறப்பட்டது.

வளைந்து வளைந்து வண்டி சென்றுகொண்டிருக்கும்போது எல்லோரும் பரபரப்பாக கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டிருந்தார்கள்.  என்ன என்று பார்த்தால் 300 ரூபாய் புக்கிங்கின் ப்ரிண்டவுட்.  

அடடா...   நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லையே...   அருகில் அமர்ந்திருந்தவர் 'அது கட்டாயமில்லை' என்றார்.  'ஆதார் கார்ட் வைத்திருக்கிறீர்களா' என்றார்.  'வைத்திருக்கிறோம்' என்றதும், 'அதைக் காட்டினாலே போதும் நீங்கள் புக் செய்திருக்கிறீர்கள் என்று அது காட்டிவிடும், கவலை வேண்டாம்' என்றார்.

ஓட்டுநர் எச்சரித்தார், " செருப்பை வண்டியிலேயே விட்டுச் செல்லுங்கள்.  செல்லையும் வைத்துவிடுங்கள்..  இதோ இது என் அலைபேசி நம்பர்.  இதை உங்களில் ஒருவரிடம்  கொடுக்கிறேன்.  தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் யார் மூலமாவது இந்த நம்பருக்குக் கூப்பிடுங்கள்..  நான் எங்கே காத்திருக்கிறேன் என்று சொல்கிறேன்" என்றார்.  முன்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்ணும், இன்னொரு ந(ண்)பரும் அந்த நம்பரை ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டார்கள்.

வண்டியிலிருந்து இறங்கினோம்.  வண்டி கிளம்பிச் சென்று மறைந்தது.

கும்பல் கும்பலாக நின்று கொண்டு பிரிண்ட்டவுட்டை சேகரம் செய்துகொண்டிருந்தவரை நெருங்கினேன்.

"நாங்கள் ப்ரிண்டவுட் கொண்டு வரவில்லையே"

"அடடா...   ஏன்?"

"தெரியாது..."

"இது தெரியாதா?  என்ன இப்படிச் சொல்றீங்க?" 

"இப்போ என்ன செய்வது?"

எங்களை அற்பமாகப் பார்த்த அருகில் இருந்தவர் கணக்கெடுக்கும் பணியில் மும்முரமானார்.  நேரமாகிறதே!

ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். ஆனால் அதைவிட ஏற்கெனவே தாமதமாக வந்திருப்பதால் எங்களுக்குக் குறைந்த முக்கியத்துவமும், தரிசன வரிசைக்குச் செல்ல அவசர முக்கியத்துவமும் கொடுத்து வேகமாக நடக்கத் தொடங்கினார்கள்.

நாங்களும் கூடவே நடந்தோம்.  வேஷ்டி தடுக்கியது.......


========================================================================================================

டிஸ்கி :  காதலர் தினத்துக்கும் கீழ்வரும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தமில்லை!



நேற்று வாட்ஸாப்பில் ஒரு ஃபார்வேர்ட் வந்திருந்தது.  எம் ஓ மத்தாய் புத்தகத்திலிருந்து எடுத்தது என்று சொல்லி நேரு குடும்பத்தை சின்னாபின்னமாக்கியிருந்தது அந்த ஃபார்வேர்ட்.  முகமது அலி ஜின்னா, பரூக் அப்துல்லா எல்லாம் நேருவின் சகோதரர்கள் என்றது.  மோதிலால் நேரு பற்றியும் ஏதேதோ சொன்னது!



குடும்பக் குழுமத்தில் யார் இந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறார்கள் என்று கேட்டபோது சரியான பதில் இல்லை.

அப்புறம் கூகிளில் தேடியபோது வேறு சில விவரங்கள் கிடைத்தன.  குறிப்பாக மத்தாய் எழுதி, கடைசி நிமிடத்தில் புத்தகத்தில் சேர்க்காமல் விட்ட "She" என்கிற அத்தியாயம் பற்றி...



அதைப் படித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.  அப்புறம்தான் வியாழன் பதிவுக்கு ஏதாவது ஒப்பேற்ற வேண்டுமே என்று நினைவுக்கு வந்தது.  அவசரம் அவசரமாகக் கடமையாற்றத் தொடங்கினேன்!

மத்தாய் புத்தகம் படித்த நண்பர்கள் இருப்பார்கள்.  குறிப்பாக கிருஷ் ஸார்!


===================================================================================================

இது பிப்ரவரி 2015இல் முகநூலில் நான் பகிர்ந்தது.  இப்போது நிறைய கோவில்களுக்குச் சென்று வந்த நெல்லைத்தமிழனும், கீதா அக்காவும் இதை ரசிப்பார்கள்.  கீதா அக்கா முக நூலில் அப்போதே தானும் இதுபற்றி எழுதி இருந்ததாய்ச் சொல்லியிருந்தார்.  கட்டுரையின் கடைசியில் அதை இணைத்திருக்கிறேன்.






மனம் திறந்த வெளிப்படையான கட்டுரை :

...................... எல்லா கோயில்களிலும் சதாரண மக்களின் பக்தி என்னை வியக்க வைத்தது. பற்றுடை அடியவர்களுக்கு எளியவன் என்ற நம்மாழ்வாரின் வரியை என்னைத் திரும்பத் திரும்ப நினைக்க வைத்தது. ஆனால், பெரும்பாலான கோயில்களில் மக்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை. மந்தைகள் போல நடத்தப்படுகிறார்கள். சுரண்டுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சுரண்டப் படுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு குறைந்தபட்ச அளவிலாவது அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியும். ஆனால், சில பெரிய கோயில்களைத் தவிர, மற்ற கோயில்கள் எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருக்கின்றன.

மலைக் கோயில்:
சோளிங்கர் கோயிலுக்குச் செல்ல 1,300 படிகள் ஏற வேண்டும். போகும் வழியில் அமைக்கப்பட்டிருக்கும் கூரை, படி ஏறுபவர்களைக் கதிரவனிடமிருந்து காப்பாற்றுகிறது. ஆனால், உச்சியை அடையும் வரையில் கழிப்பறை வசதி கிடையாது. இடையில் இருக்கும் கழிப்பறைக் கட்டிடங்கள் பத்திரமாகப் பூட்டப்பட்டிருந்தன. 

மேலே ஏறினால், கருவறையை அடைவதற்கு ஒடுக்கமான கூண்டுகள் வழியாகச் செல்ல வேண்டும். சிறிது பருமனாக இருந்தால் பக்கவாட்டில்தான் செல்ல முடியும். தீ விபத்து நேர்ந்தால் மலை உச்சியிலிருந்து கீழே வராமலே நேராக மேலுலகம் சென்றுவிடலாம். 

இந்த வழி மனிதர்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. செல்லும் வழியெல்லாம் குரங்குகள். கருவறைக்கும் சில குரங்குகள் கூடவே வந்தன. அனுமனின் வழித்தோன்றல்களாக இருக்கலாம். சிரிப்பையே அறியாத அர்ச்சகர்கள். இறைவன் அடியில் இருக்கிறோம் என்ற எண்ணம் நம்மிடம் இருந்தாலும், அர்ச்சகர்களின் பார்வை அந்த எண்ணத்தை உறிஞ்சி எடுத்துவிடும்.

அரங்கனும் ஆடலரசனும் :
அரங்கன் கோயில் மிகவும் சுத்தமாக இருக்கிறது. ஆனால், மனம் வெளுத்தவர்களை கோயிலைப் பராமரிப்பவர்களிடையே காண்பது அரிதிலும் அரிது. எல்லா இடங்களிலும் கூட்டம். பணம் இருந்தால் கூட்டத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. கரை வேட்டி கட்டியிருந்தால், அரங்கனே என்னை வந்து பார்க்க வேண்டும் என்று ஆணையிடலாம். அர்ச்சகர்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்தால், தடைகள் எளிதாக விலகிவிடும். 

ஒழுங்காக வரிசையில் நின்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்குத்தான் பல தடைகள். எப்போது நடை திறப்பார்கள், எப்போது மூடுவார்கள் என்பதைக் கோயிலில் திருநாட்கள் நடக்கும் நாட்களில் கண்டுபிடிப்பதே கடினம். நாங்கள் சென்ற அன்று, தடைகளையும் வரிசைகளையும் மீறிச் சிலர் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் கரை வேட்டிக்காரர்கள் சிலர்; மடிசார் புடவை கட்டியிருந்த மூதாட்டி ஒருவர்; வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று அறிவித்துக்கொண்டிருந்த உடைகள் அணிந்த பெண்கள் இருவர்.

“யார் இவர்கள்?” என்று வரிசையில் நிற்கும் பெண் கேட்டார்.

முன்னால் நின்றுகொண்டிருந்த இளைஞர் உடனே சொன்னார், “உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் ரங்கநாதனின் சொந்தக்காரர்கள்.”

சிதம்பரத்தில் இருக்கும் ஆடலரசன் கோயிலுக்கு வருபவர்களில் சிலர், அதைத் தங்கள் சொந்தக்காரர் வீடாக - குறிப்பாக வீட்டுக் கழிப்பறையாக - நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம், அதன் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வருபவர்களுக்கு வந்தால், அவர்கள் மீது நம்மால் கோபம் கொள்ள முடியாது. 

‘சிவ சிவ’ என்று பெரிதாக எழுதப்பட்டிருந்த சுவரின் கீழ் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தவர்களைக் கண்டு அவர்களுக்கு ஆத்திரம் வந்தால், சற்று தொலைவில் ‘சிவ சிவ’ என்று எழுதப்பட்டிருக்கும் காவி வேட்டியைக் கட்டியிருக்கும் ஒருவர் நின்றுகொண்டே அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும் நிலையைக் கண்டால் அவரைச் சிவலோகத்துக்கு உடனே அனுப்பிவிடலாம் என்ற எண்ணம் வரலாம்.

சீர்காழிக் கோயில்கள் :
சீர்காழியைச் சுற்றி ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பல கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் பல கோயில்களில் மதியத்துக்குப் பிறகே நடை திறக்கப்படுகின்றன. கோயில் பிரகாரங்களில் ‘குடி’ மக்கள் கணிசமாகப் புழங்குகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகப் பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு கோயிலில் அர்ச்சகர் வரவேயில்லை. 

கோயிலின் காப்பாளர் கருவறையின் கதவைத் திறந்து காட்டினார். 

மற்றைய கோயில்களின் அர்ச்சகர்கள் விவரித்ததைவிட மிக அழகாகக் கோயிலைப் பற்றிச் சொன்னார். ‘நீங்களே தீர்த்தம் எடுத்துக் கொள்ளுங்கள். நான் தொடக் கூடாது’ என்றார். ‘நீங்கள் தொடக் கூடாது என்றால், நாங்களும் தொட அருகதை அற்றவர்கள்’ என்று சொல்லி வெளியே வந்தோம்.

- - பி.ஏ. கிருஷ்ணன், - 'தி இந்து'  


=============================================================================================

ரீமிக்ஸ்!
ஐந்து வருடங்களுக்கு முன் முகநூலில் பகிர்ந்து இதை சற்றே மாற்றிப்போட்டு கீழே தந்திருக்கிறேன்.  இதற்கும் நேற்று அனுஷ் படம் வெளியிடப்படாததற்கும் சம்பந்தம் இல்லை!





நீயும் வரவில்லை - நீ 
சொல்லிச் சென்ற 
வார்த்தைகளை 
காற்றும் சொல்லவில்லை 
தேற்றுவாரின்றி 
விசும்பும் மனம். 

அதே போல இப்போது சற்றே மாற்றி எழுதப்பட்ட இன்னொன்று.



நீ 
விலகிச் சென்றாலும் 
கூடவேதான் இருக்கின்றன 
உன் நினைவுகள்.

==================================================================================


ரசிக்க ஒரு பழைய ஜோக்.....  இதெல்லாம் அப்பவே அப்படிதான் இல்லை?  1950 க்கு முன்னால்!



153 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
    வல்லிமாவுக்கு குட் ஈவினிங்க்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆஹா!! அனுஷ் ரொம்ப அழகா இருக்காங்களே!!! மேக்கப் கூட இல்லை!!! நெல்லை இதை கவனிக்கவும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மேக்கப் கூட இல்லை //

      அதைச் சொல்லுங்க!

      நீக்கு
    2. கீதா ரங்கன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. நெல்லை இதுக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு சொல்லுறீங்களே....அவங்க கன்னடபடத்துல ஜஸ்ட் ஒரு டான்ஸ்கு ஆடினதைப் பார்த்தீங்கனா நீங்களும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு சொல்லிடுவீங்க...ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. மஃப்டியில் இருந்தார்கள்! //

    ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் ரசித்தேன்.

    அனுஷ்...... :) நெல்லை எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.....

    கவிதைகள்.... சிறப்பு.

    கோவில்கள் நிலை வேதனை.

    திருப்பத் அனுபவங்கள் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.

      நெல்லை... மேடைக்கு வரவும்.

      வெங்கட் காலிங்.... (அன்பு அழைப்பல்ல இது!!!)

      நீக்கு
    2. வெங்கட்... என்னை, "தமன்னா படத்தோடு மேடைக்கு வரவும்" னுதானே எழுதியிருந்தீங்க. ஶ்ரீராம் ஏன் "தமன்னா படத்தோடு" என்பதை சென்ஸார் செய்திருக்கிறார்?

      நீக்கு
    3. சிறு திருத்தம் நெ.தமிழன்:), தமனா படத்தோடு அல்ல.. தமனாவோடு ஹா ஹா ஹா:).

      நீக்கு
  5. நேரு குடும்பம் பற்றிய இப்படியான தகவல்கள் வியப்பு...என்னென்னவோ தகவல்கள் வெளியாகின்றன...என்னவோ உடனே "குப்பையைக் கிளறிடும் கோழியே" பாடல் நினைவுக்கு வந்தது!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா.. நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது என்றாலும் சந்தேகப்பட வைக்கும் எழுத்து. ஏனெனில் அவர் இருந்த இடம்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் நம்ப சிரமமாத்தான் இருக்கு...ஆனா உங்க அடுத்த வரி...

      //சந்தேகப்பட வைக்கும் எழுத்து. ஏனெனில் அவர் இருந்த இடம்!//

      ஓஹோ...அப்ப வாசிக்கநும்....

      கீதா

      நீக்கு
    3. நாம் சிறுகுழந்தைகளாக பள்ளிச்சிறுவர், சிறுமியர்களாக இருந்தபோதே, நேருவைப்பற்றி ஒரு தேவதைத்தனமான பிம்பம் வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்டு பாடப்புத்தகங்களில் வந்துகொண்டிருந்தது. வாத்யார் சொன்னாலோ, பெரியவர்கள் சொன்னாலோ அது சரியாகத்தான் இருக்கும் என ’அந்தக்கால நாமும்’ கண்மூடித்தனமான பக்தியோடு நம்பிவந்தோம். நேருமாமா, சாச்சா நேரு (வடக்கே), எப்போதும் ரோஜாப்பூவோடு புன்னகைக்கும், காலமெலாம் வெண்புறாவாகப் பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் கனவானாகவே மனதில் படிந்திருந்தார் . (மத்திய அரசின் செம பப்ளிசிட்டி campaign அப்போதெல்லாம்). டைனிங் டேபிளிலே தட்டை மட்டும் பார்த்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, டேபிளுக்குக் கீழே விளையாட்டுகள் தெரிந்திருக்கவில்லை. அல்லது தெரிந்துகொள்ளும் இஷ்டமில்லை! (ஏதோ,பெரிய்ய இடத்தில் வகையா சோறு போடுகிறார்களே என்று சாப்பிட்டுவிட்டுப்போகாமல்..) மத்தாய் போன்று, பலவருடங்கள் அந்த மோசடிக்குடும்பத்தை நெருங்கிப் பார்த்தவர்- ஒரு insider வந்து,’ ஐயோ அந்த ஆளா.. அது ஒரு குடும்பமா..’ என்று ஆரம்பித்தால் நம்பியவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது..நம்ப மறுக்கிறது ஏமாளி மனம். என்ன செய்வது நமது நாட்டின் சரித்திரத்தையே, நேருவுக்கும், அவருக்குப் பின்னர் 16 வருடம் ‘கோல்’ ஓச்சிய அம்மையாருக்கும் பிடித்தமானவர்கள்தானே , அவர்களின் உத்தரவுப்படிதானே எழுதியிருக்கிறார்கள். இருப்பினும், உண்மை என்பது வெளிச்சத்துக்கு ஒரு நாள் வந்துதானே தீரும், அது என்னதான் லேட்டாக வந்தாலும். அது மோதிலால் ஆக இருந்தாலென்ன, ஜவஹர்லால்-ஆக இருந்தாலென்ன, அதற்குப்பின் வந்த இத்தாலியப் பிஸ்ஸாக்களாக இருந்தால்தானென்ன -முகமூடிகள் வரிசையாக கிழியத்தானே செய்யும்? ஆனால் இப்போதும், கண்ணை மூடிக்கொள்வேன், காதைப்பொத்திக்கொள்வேன் என்று சிலர் மூடநம்பிக்கையோடு அடம்பிடித்தால் எப்படி!

      நீக்கு
    4. ஏகாந்தன் சொல்வது முற்றிலும் சரியே! மோதிலால் நேரு பற்றியும் ஷேக் அப்துல்லா பற்றியும் சொல்லப்பட்டிருப்பவை Open Secret. சொல்லப் போனால் மோதிலால் நேரு குடும்பம் காஷ்மீரத்து பிராமணர்களே அல்ல என்பதே நான் அறிந்தது. அவர் தாத்தா காலத்தில் பண்டிட் என்னும் அடைமொழியைச் சேர்த்துக்கொண்டு பூணூல் அணிந்து அலஹாபாத் வந்ததாகக் கேள்விப் பட்டேன்/படித்தேன்.

      நீக்கு
    5. வாங்க ஏகாந்தன் ஸார்... ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் மத்தாய் எழுதிய புத்தகம் மட்டும்தானே?

      நீக்கு
    6. கீதா அக்கா.. நீங்கள் சொல்லியிருப்பது(ம்) அந்த வாட்ஸாப் பார்வேர்டில் இருக்கிறது. அனுப்புகிறேன்.

      நீக்கு
    7. //... ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் மத்தாய் எழுதிய புத்தகம் மட்டும்தானே?//

      ஓ, அப்படி ஒரு திருப்தியா! இல்லை.. மேலும் சில புத்தகங்களைக் கீழே தருகிறேன்:

      1. An Indian Dynasty - Tariq Ali (Picador Books- very popular work)
      2. The Life of Indira Nehru Gandhi - Katherine Frank ( best seller )
      3. Nehru Dynasty - KN. Rao
      4. The Dynastry - The Nehru Gandhi Story - Jad Adams, Philip Whitehead
      5. Persons, passion and politics - Mohamed Yunus

      -இங்கே முகமது யூனஸ் யாரென்று கேட்கமாட்டீர்களென நம்புகிறேன்.
      On Indira's life - few more..


      நீக்கு
    8. * correction to No.4 above: The Dynasty- The Nehru Gandhi Story -Jad Adams, Phillip Whitehead

      Addition No. 6: Nehru's 97 Major Blunders - Rajnikant Puranik

      நீக்கு
    9. குறித்துக் கொண்டிருக்கிறேன் ஏகாந்தன் ஸார்.

      (எப்போ, எங்கே) படிப்பேனோ... தெரியாது!

      நீக்கு
  6. கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தோழியின் உடையை நனைக்க, “அழாத DD” என்று சொல்லிக் கொண்டே வந்த அழைப்புகளைத் துண்டித்தார்.

    நீயும் வரவில்லை - நீ
    சொல்லிச் சென்ற
    வார்த்தைகளை
    காற்றும் சொல்லவில்லை
    தேற்றுவாரின்றி
    விசும்பும் மனம்.

    வெங்கட் அவர்களும் நீங்களும் சொல்லி வைத்துக்கொண்டு ஒரே போன்ற பதிவு இன்று வெளியிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜேகே அண்ணா அங்கும் இங்கும் இப்படி பொருத்தி வாவ்!! செம ரொம்ப ரசித்தேன் இதையும்....

      கீதா

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா...

      அங்கு(ம்) காரணம் இதுதான் என்று தெரியாது!

      மேலும்,

      அங்கு கொடுத்திருக்கும் எங்கள் லிங்க் "சுசீ..." லிங்க் சென்று அதையும் படித்துக் கருத்திட வேண்டுகிறேன் ஜேகே ஸார்.

      நீக்கு
    3. சுசீ எழுதப் போய் வைகைல கைவை ச்சு மாட்டிக்கிட்டீங்க போல ஹா அஹ ஹா ஹா ஹா...கதைய விட்டுப் போட்டு மாரல் ஆஃப் த ஸ்டோரின்னு எல்லாம் சொல்லி...ஹா ஹா ஹா

      இத மட்டும் இங்க சொல்லிடறேன் அப்பத்தான் தேஸ்ம்கு மண்டை குடையும்....அவனைப் போலவே சுசியை தேடட்டும் பூஸார்!!! ஹா ஹா ஹா ஹா

      மற்ற கருத்து அங்கே!!

      கீதா

      நீக்கு
    4. கருத்து அங்க விழுந்துச்சான்னு தெரியல ஸ்ரீராம்...

      இன்னிக்கு ரெண்டு மண்டை குடைசல்...சுசீ என்ன ஆனாள்? அவங்க ரெண்டு பேருக்கும் சண்டை தீர்ந்து சுபம் போட்டாங்களா? அதே மாதிரி அன்பு காலிங்க்....அட்டென்ட் செய்யப்பட்டு அன்பு மீண்டும் மலர்ந்ததா?!!!! ஆனால் நல்ல கதைக்கருக்கள் ரெண்டுமே!!!

      கீதா

      நீக்கு
    5. வாங்க கீதா... கருத்தை வெளியிட்டு விட்டேன். வைகை விஷயம்... ஹா... ஹா... ஹா...!

      நீக்கு
  7. மத்தாய் என்ற பெயரைப் பார்த்ததும் "மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங்க்" எனும் மலையாளத்திரைப்படம் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம் மத்தாய் எழுதிய புத்தகம் அப்போது உடனே அரசால் ban செய்யப்பட்டது என்று வருது....ஆனால் நெட்டிலேயே இருக்கு போல...அதுவும் இலவச டவுன்லோட்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கு. ஆனா pdf சப்போர்ட் செய்யாது. வேறு வடிவில் படித்தேன் (கொஞ்சம்)

      நீக்கு
  9. பழசும் மாற்றப்பட்டதுமா உங்க கவிதைகள் செம ஸ்ரீராம்....ரொம்ப ரசித்தேன்....

    கூடவே அந்த சாச்சுட்டரி வார்னிங்கையும் தான் ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா..

      பழசு / புதுசு எது பெட்டர்?!!

      நீக்கு
    2. ஸ்ரீராம் முதல் கவிதை ரெண்டுமே நல்லாருக்கு...என்னனா பழசு ஷார்ட் பீரியடைக் குறிக்குது....மனம் விசும்பினாலும் நாளை வருவாள் என்ற நம்பிக்கை இருக்கும்...

      ரெண்டாவது அங்கு பீரியட் எதுவும் சொல்லவில்லை...எனவே நிரந்தரமாய்??!! அப்ப அந்த விசுமபல் இன்னும் சற்றுக் கூடுதல் அழுத்தமாகப் பொருந்துவதாய்த் தோனுது!

      கீதா

      நீக்கு
    3. ரெண்டாவது கவிதைலயும் புதுசு இன்னும் அழுத்தமாக..கூடவே இருக்கு என்பதில் வெளியாகிறது!

      கீதா

      நீக்கு
    4. கவிதைகளை ரசித்ததற்கு நன்றி கீதா. பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள்!

      நீக்கு
  10. //நாங்கள் தயாராய் நின்று வெளியே கொண்டிருந்தோம். // வார்த்தையை மாத்திப் போடுங்க ஸ்ரீராம். :)

    பதிலளிநீக்கு
  11. வேட்டி எடுத்துக்கொள்ளாது போய்ச் சேர்ந்தால்
    பேட்டி கொடுப்பார் ஸ்ரீனிவாசன் என்று நினைப்பா!
    *
    மெட்டியெல்லாம் இல்லை எனக் காலைக் காண்பிக்கும்
    ஷெட்டியையெல்லாம் போயும் போயும்
    கட்டிக் கரும்பே கனியே சாறே எனக் கதைத்துக் களித்து
    பொட்டி தூக்கி அலையவும் கங்கணம்
    கட்டிக் கட்டி அலைகிறார்களே இன்னும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேட்டி எடுத்துக்கொள்ளாது போய்ச் சேர்ந்தால்
      பேட்டி கொடுப்பார் ஸ்ரீனிவாசன் என்று நினைப்பா!//

      ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ ஏகாந்தன் அண்ணா சிரிச்சு முடிலப்பா...

      அடுத்து நம்ம அனுஷை சொன்னது...உங்க வரிகளை ரசித்தேன்

      ஆனா.....ஏதோ சின்னஞ் சிறுசுகள் இங்க அனுஷை ரசித்து கும்மி அடிச்சுட்டுப் போகட்டும்னு விடாம இப்படி நீங்க சீனியர்னு காமிச்சுக்கனுமா ஹிஹிஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
    2. //...ஏதோ சின்னஞ் சிறுசுகள் இங்க அனுஷை ரசித்து கும்மி அடிச்சுட்டுப் போகட்டும்னு ..//

      ஓ! 39-வயசு அனுஷை ரசிப்பவர்கள் சின்னஞ்சிறிசுகள்.. ம்.. புரிகிறது!
      ஆனால் நான் கீசு-வைப் போன்றவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்!
      உடனே ‘கீசு கீசென்று ஆனைச்சாத்தன்..’ நினைவுக்குவந்துவிடவில்லையே!

      நீக்கு
    3. //ஆனால் நான் கீசு-வைப் போன்றவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்! //

      ஹா ஹா அண்ணா செம... ஊசி கேப்ல கீசு அனுஷை விட சின்னப் பொண்ணுனு சொல்லி நீங்க இளவட்டம்னு...ஹா ஹா ஹா.....

      உடனே ‘கீசு கீசென்று ஆனைச்சாத்தன்..’ நினைவுக்குவந்துவிடவில்லையே!//

      ம்ஹூம்! சின்னஞ்சிறுசான நேக்கு "கீச் கீச் என்றது கிட்ட வா என்றது" சமீபத்திய செசிவா பாடல்தான் வந்துச்சு!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    4. வாங்க ஏகாந்தன் ஸார்... வேட்டியோ, வெட்டியோ... அழகைக் கைவிட அவ்வளவு சீக்கிரம் முடிவதில்லை!

      நீக்கு
    5. கீசு? அதற்கு சும்மா இருக்கலாம்!!!

      நீக்கு
    6. ஆமாம். அழகை அள்ளலாமே தவிர, தள்ள முடியாது!

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். என்ன இன்று காலையிலேயே இத்தனை கும்பல்? திருப்பதி மகாத்மியம் என்பதாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா நேத்தே கீதாக்கா பிரார்த்தனை பண்ணிக்கறேன்னு சொன்னாங்களே பாருங்க வொர்க்ட் அவுட்!! அப்புறம் இன்று வியாழன் நேத்ர தரிசனமாக்கும்!!! திருப்பதி மகாத்மியம்!!

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் பானு அக்கா... இன்று என்னவோ காலையிலேயே களைகட்டி இருந்தது!

      நீக்கு
  13. //காதலர் தினத்துக்கும் கீழ்வரும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தமில்லை!// காதலர் தினத்துக்கும் அனுஷ் படத்துக்கும் அது குறித்த கவிதைகளுக்கும் சம்பந்தம் இல்லைனு வந்திருக்கணுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே கீதா அக்கா அர்த்தம் அந்த டிஸ்கிக்கு... அவர் ஒத்தை வரிலே சொல்லிட்டார்.!! ஹா ஹா ஹா...அந்த டிஸ்கி கீழ வந்திருக்கனும் தெரியாம அது மத்தாய்க்குப் போயிடுச்சுனு நினைக்கிறேன்....

      ஆத்துல போட்டாலும் அளந்து போடனும் ந்றத ஸ்ரீராம் கிருத்தியமா ஃபாலோ பண்றார்!!!!

      கீதா

      நீக்கு
    2. கீதா அக்கா... எல்லாப் படங்களுமே பொதுவாகப் போட்டிருக்கலாம்! ஆனால் சும்மா கிண்டல் செய்வதற்காக அங்கு மட்டும் போட்டேன்!

      நீக்கு
  14. மத்தாயோட அந்தப் புத்தகத்தை முழுதும் படித்துள்ளேன் எனத் தெரிவித்துக் கொ"ல்"கிறேன். இப்போ சமீபத்தில் எல்லாம் இல்லை. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா... முழுசும் படிச்சுருக்கீங்களா... அப்போ வெயிட் பண்ணுங்க.. நான் ஒரு பார்வேர்ட் அனுப்பறேன். அது அதில் இருக்கான்னு சொல்லுங்க.

      நீக்கு
  15. பொதுவா எந்தக்கோயில்களுக்குப் போனாலும் திருவிழா சமயம் போகவே கூடாது. அதுவும் பிரபலமான கோயில்களுக்கு. ஆனாலும் நேற்று என் கொழுந்தனார்(க்ர்ர்ர்ர்ர்ர்ர் மதுரைப்பழக்கம் வந்துடுத்து!) என் மைத்துனர் பையர் பெரிய ரங்குவைப் பார்க்கச் சென்றபோது காத்தாடிக் கொண்டிருந்தார் பெரிய ரங்கு. திருப்பள்ளியோடத் திருவிழா நடப்பதால் நம்பெருமாள் ஊர் சுத்திட்டு இருக்காரே! அதான். பெரியவருக்குக் கொஞ்சம் ஓய்வு! இலவச தரிசனத்திலேயே உம்மாச்சியைப் பார்த்துவிட்டுக் காத்திருக்கும் நேரம் இல்லாததால் தாயார், ராமாநுஜர், சக்கர்த்தாழ்வார்னு எல்லோரையும் பார்த்துட்டு வந்தார். வழியில் நம்பெருமாளும் கோயிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கவே அவரையும் பார்த்தாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவா நான் படித்தது, உற்சவர் கோவில் நடை தாண்டிவிட்டால் மூலவர் தரிசனம் கிடையாது என்றுதான். இருவரும் ஒருவரே என்பது தாத்பர்யம். கீதா சாம்பசிவம் மேடம்... விளக்கம் ப்ளீஸ்

      நீக்கு
    2. ஒருமுறை உப்பிலியப்பன் கோயிலில் உற்சவர் புறப்பட்டதும் திரையிட்டு இருந்தார்கள்...

      மகாசிவராத்திரி அன்று மூன்றாம் காலம் நடராஜர் வீதியுலா எழுந்தருளி கோயிலுக்குத் திரும்பிய பிறகே மகா தீபாராதனை செய்து விபூதிப் பிரசாதம் வழங்கினார்கள்.. விரிவான தகவல்களை கீதா அக்கா அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்..

      நீக்கு
    3. மகா சிவராத்திரி என்றது தஞ்சை பெரிய கோயிலில்....

      நீக்கு
    4. மதுரையில் அப்படித் தான் நடக்கும். உற்சவர் வெளியே போனதும் கோயில் நடை சார்த்தப்படும். ஆனால் இங்கே ஸ்ரீரங்கத்தில் அப்படி இல்லை. எல்லாத் திருவிழாக்களிலும் நம்பெருமாள் வெளியே போனாலும் பெரிய ரங்குவைச் சேவிக்கலாம். தடை ஏதும் இல்லை. நாங்களும் இப்படிப் பலமுறை சேவித்திருக்கோம். அதுவும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் போது இராப்பத்து/பகல்பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் முழுக்க முழுக்க வெளியே தான் குடித்தனம். பெரிய ரங்குவுக்கு முத்தங்கி சார்த்தி தரிசனத்துக்குத் தயார் செய்திருப்பாங்க. நம்ம அதிர்ஷ்டம் கூட்டம் இல்லைனா இலவச தரிசனத்திலேயே பார்க்கலாம். சிவன் கோயில் நடைமுறையும், பெருமாள் கோயில் நடைமுறையும் முக்கியமாய் ஶ்ரீரங்கம் கோயில் நடைமுறை வித்தியாசப்படும்.

      நீக்கு
    5. இந்த உரையாடல்களுக்கெல்லாம் நான் என்ன சொல்வது.. பெரியவர்கள் சொல்லியிருப்பதை நானும் படித்துத் தெரிந்து கொள்கிறேன்.

      நீக்கு
    6. ஸ்ரீரங்கத்தில் நடைமுறை மற்றக் கோயில்களில் இருந்து மாறுபட்டவை. ஆகையால் நம்பெருமாள் வெளியே சென்றிருந்தாலும் மூலவரைச் சந்திப்பதில் பிரச்னைகள் இருப்பதில்லை. கூட்டம் அதிகம் இருக்காது வைகுண்ட ஏகாதசித் திருவிழா சமயங்களைத் தவிர்த்து. வைகுண்ட ஏகாதசி சமயங்களில் மூலவரைப் பார்க்கவும் கூட்டம் தாங்காது. ஆனால் அநேக சிவன் கோயில்களில் மூலஸ்தானம் உற்சவர் வெளியே போனதுமே சார்த்திவிடுவார்கள். தேர்த் திருவிழா எனில் தேர் நிலைக்கு வந்தபின்னர் நடை திறந்து அன்றைய நடைமுறைக்கேற்றவற்றைச் செய்த பின்னரே மூலஸ்தானம் திறக்கப்படும். திருப்பதி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சுமார் பத்து வயதில் இருந்து பல வருடங்களாகப் போய் வந்தாலும் கோயிலின் நடைமுறைகள் எதுவும் தெரியாது.

      நீக்கு
  16. ஸ்ரீராம் டிடிடி (TTD) சானலைப் பார்ப்பதே இல்லைனு நினைக்கிறேன். இப்போத் தமிழில் கூட ஒளிபரப்பறாங்களே! அதில் கீழே டிஸ்ப்ளேயில் திருமலை தரிசனத்துக்கு உள்ள நியமங்கள், சட்டதிட்டங்கள், பக்தகோடிகள் உடைகள் அணிந்து வரும் முறை எனத் திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்ப வந்து கொண்டே இருக்கும். அதிலேயே ஆதார் கட்டாயம் என்பதையும் தெரிவித்திருப்பார்கள். இலவச தரிசனத்துக்கு வேஷ்டி அவசியம் இல்லை என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. மற்றபடி தரிசனத்துக்குச் செல்லும்போது ஆண்களுக்கு வேஷ்டி, பெண்கள் புடைவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சல்வார், குர்த்தா அணிந்து தான் போகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை தடவை பார்த்தாலும் முக்கியமான சமயத்தில் மறந்துவிடும். ஒரு தடவை என் பெண்ணுக்கு வரிசை ஆரம்பிக்கும் இடத்தில் 150 ரூ துப்பட்டாக்கு செலவழித்தேன். இரண்டாம் முறை, துப்பட்டாவுடன் சென்றும், சென்றிருந்த பஸ்ஸில் இன்னொரு பெட்டியில் வைத்துவிட்டதால் 100 ரூபாய்க்கு வாங்கினேன். இன்னும் உங்க வீட்டுக்கு வருவதற்குத்தான் ஆதார் கேட்கலை. எல்லா இடத்திலும் கேட்கறாங்க.

      நீக்கு
    2. இன்னும் உங்க வீட்டுக்கு வருவதற்குத்தான் ஆதார் கேட்கலை. எல்லா இடத்திலும் கேட்கறாங்க.//

      ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....ஹையோ நெல்லை இதை வாசித்து சிரிச்சு சிரிச்சு இதோ கருத்தை அடிக்கும் போதும் அடிக்க முடியாம + அடக்க முடியாம சிரிச்சுட்டுருக்கேன்...

      கீதா

      நீக்கு
    3. நானே கேட்கணும்னு தான் இருந்தேன். அந்தப் பாரம்பரிய உடை அணிந்திருந்ததால் சும்மா விட்டுட்டேன்! :))))

      நீக்கு
    4. மிக அரிதாக அந்த சேனல் (நான்) பார்ப்பேன். நெல்லைத்தமிழன் சொல்லி இருப்பது போல முக்கியமான நேரத்தில் இவை எல்லாம் நினைவுக்கு வருவதில்லைதானே?

      நீக்கு
    5. நாங்க தினமும் நாத நீராஞ்சனம் அரை மணி நேரமாவது கேட்டுடுவோம். அதைத் தவிர்த்தும் சில சமயங்களில் உற்சவரைக் காட்டிச் சில திருவிழாக்களின் நேரடி ஒளிபரப்பு இருக்கும் அதைப் பார்க்கவும் போடுவோம்.

      நீக்கு
  17. மாற்றிப்போட்ட கவிதைகள் மாற்றுக்கருத்தைக் கொடுக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய வாலன்டைன்ஸ் தினத்துக்கான சிறப்புப் பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா. கருத்து பெரிய அளவில் மாறாது. வார்த்தைகள் இடம் மாறும்போது சிலசமயம் நிஜமாகவே இக்கவிதை போல ஏதாவது ஒன்று அமைந்துவிடும்! அதுதான்!

      நீக்கு
  18. திருப்பதி பயணம், திருப்தியாக இருந்ததாகத் தெரியவில்லையே. ஆனால் வெங்கற்றமணனைக் கண்டதும் எல்லாம் மறந்திருக்கும்.

    நேருவைப் பற்றி மத்தாய் புத்தகமா.
    எல்லோரும் போயாச்சு விட்டுடலாமே.
    அனுஷ்கா அழகிதான்.

    ஸ்ரீரங்கம் பற்றி நானும் பின்னூட்டம் இட்டிருக்கிறேனா. ஹூம் நிஜம் தான்.

    கீதாவின் அனுபவங்கள் சிலவை நன்றாகவே இருந்திருக்கின்றன.

    அனைவருக்கும் அன்பர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி வல்லிம்மா..

      காத்திருக்கும் கடுப்பு, துன்பம் முழுக்க வெங்கட்ரமணனை கண்ணாரக் கண்டதும் மறந்து கண்ணீர் துளிர்த்து விடும். உண்மைதான்.

      மத்தாய் புத்தகம் - எல்லோரும் போயாச்சுதான் -மத்தாய் உட்பட. ஆனால் சுவாரஸ்யம் போகவில்லையே... !!

      நீக்கு
  19. பல்வகைச் செய்திகள் அருமை. திருப்பதி பயண அனுபவம் அனைவரும் எதிர்கொள்வதே. அந்த She தொடர்பாக படித்துள்ளேன். அவர் Mrs G எனப்படுகின்ற இந்திரா காந்தி என்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முனைவர் ஸார்.. ஆமாம்... நெட்டில் தேடினால் கிடைக்கிறது! புத்தகத்தில் விடுபட்ட பகுதி அதுதான் என்று நாம் நம்பவேண்டும். அவ்வளவுதான்.

      நீக்கு
  20. ஸ்ரீராம் கோயில்கள் பற்றியது அத்தனையும் நானும் என் மகனும் முன்பு அடிக்கடி பேசிக் கொண்டவை. அதிகம் கோயில்கள் சென்றதில்லை என்றாலும் சென்ற கோயில்களில் கண்ட அட்ராசிட்டிஸே வேதனையாக இருந்தது...மகனுக்கு கொஞ்சம் வெறுப்பே வந்தது...அடுத்த தலைமுறையாயிற்றே....

    //முன்னால் நின்றுகொண்டிருந்த இளைஞர் உடனே சொன்னார், “உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் ரங்கநாதனின் சொந்தக்காரர்கள்.”//

    ஹா ஹா ....அதே...அதெ..

    ‘நீங்கள் தொடக் கூடாது என்றால், நாங்களும் தொட அருகதை அற்றவர்கள்’ என்று சொல்லி வெளியே வந்தோம்.//

    டாப் டாப்!!! கைதட்டுகிறேன் இதற்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதியது, நடந்துகொண்டிருப்பவைதான். இந்தத் தடவை, புள்ளம்பூதங்குடியில் அர்ச்சகர் வருவதற்கு சிறிது நேரமானது. அப்போ அங்கிருந்த மெய்க்காவலர், பெருமாள் பற்றிச் சொன்னது (அர்ச்சகர் சேவை செய்துவைப்பது போலவே) மனதை நெகிழ்த்தியது.

    "நீங்களே தீர்த்தம் எடுத்துக்கொள்ளுங்கள்" - இது அதீதமாக இருக்கிறது. அர்ச்சகர் இல்லாதபோது யாரும் அதனைத் தொட முடியாது. ஒருவேளை, கிருஷ்ணன் அவர்கள் முழு ஸ்வரூபத்துடன் சென்றிருந்தால், அவரும் அவ்வளவு ஆசாரமானவர் என்று 'தவறாக' நினைத்து (இதில் மெய்க்காவலரின் குட் வில் தான் கவனிக்கத் தகுந்தது) அவர், அவரையே தீர்த்தம் எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாம். இருந்தாலும் இது சரியான முறை கிடையாது.

    சோளிங்கரிலும் ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாகத்தான் (திறந்திருந்தால் மக்கள் மிஸ்யூஸ் செய்கிறார்கள்) பூட்டியிருக்கலாம். இதனை அந்த அந்த ஊர் உழவாரப் பணி செய்வோர் எடுத்துச் செய்தால் நல்லது. தரிசனத்துக்கு முந்தைய கூண்டு போன்ற பகுதி, அங்கு பெரிய குறை. அதிலும் அந்தக் கூண்டுப் பகுதியில் இருக்கும்போதே சட் சட் என்று குரங்குகள் நம்மிடையே நுழைந்து ஓடுவது இன்னும் திகில்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான்... இதற்குதான் இது போன்றவற்றை இங்கு பகிர்வது.. அவரவர்கள் அவரவர்கள் கருத்தை, அனுபவத்தைப் பகிரும்போது நமக்கும் சில விஷயங்கள் தெளிவாகும்.

      நீக்கு
  22. இதயத்தின் உள்ளே இன்முகத்துடன் நமக்கு இறைவன் அருள் செய்ய காத்திருக்க கல்லிலும்,முள்ளிலும், மண்ணிலும், நீரிலும் அவனை தேடினால் இப்படித்தான் மரியாதை கிடைக்கும். யாரும் திருந்த போவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட உள். உள்ளே உறைகின்றான் அவன். உண்மைதான் பட்டாபிராமன் ஸார்.

      நீக்கு
    2. இதயத்தில் அவனை தரிசிக்க தடையும் இல்லை கட்டணமும் இல்லை ஆனால் யாரும் அதற்க்கு முயற்சி செய்வதில்லை. தந் உடலில் வலு இருக்கிறது. காசு இருக்கிறது அதைக் கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் இந்த உடலை தூக்கி கொண்டு செல்வதில்தான் விருப்பம். அது சரி என் இசை அலுத்துவிட்டதா.?ஆளையே காணோம்?

      நீக்கு
    3. மன்னிக்கவும் பட்டாபிராமன் ஸார்... நீங்கள் கூகுள் ப்ளஸ்ஸில் பகிர்வதைப் பார்த்து வருவேன். அங்கு ஒன்றும் நீங்கள் பகிரவில்லை போல... கண்ணில் படவில்லை.

      நீக்கு
    4. இனிமே கூகுள் ப்ளஸ் இல்லையே sriram

      நீக்கு
    5. ஸ்ரீராம் ஏஞ்சல் சொன்னதையே சொல்றேன் கூகுள் ப்ளஸ் இல்லையே நீங்களும் சொல்லித்தானே நானே தெரிந்து கொண்டேன்....

      கீதா

      நீக்கு
    6. கூகுள் ப்ளஸ் இதுவரை போகவில்லை. ஏப்ரல் இரண்டாம் தேதியோடு போய்விடும் என்கிற அறிவிப்பு மேலே காணப்படுகிறது. அதே போல மார்ச் பதினேழாம் தேதியோடு நோட்டிபிகேஷன் வராது என்றும் குறிப்பு வருகிறது.

      மற்றபடி இதுவரை இருக்கிறது. நான் தினமும் அங்கே நம் பதிவுகளை இணைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்! இன்றுகூட!

      நீக்கு
  23. திருப்பதி பயணம் கொஞ்சம் சலிப்பான பயணமாயிற்றோ...அது சரி வேட்டி தடுக்கினாலும் பாலாஜி உங்களை தடுத்திருக்கமாட்டார்..ஹா ஹா ஹா நீங்க தரிசனம் செஞ்சுருப்பீங்கன்னு நினைக்கிறேன்...உள்ள விட்டாங்கதானே?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவுல 'ஜரிகண்டி' பற்றியும் சொல்லியிருப்பார் ஸ்ரீராம்.... ஹாஹா

      நீக்கு
    2. துவாரபாலகர்களைத் தாண்டி அடுத்த மண்டபத்துக்கு வெகு அபூர்வமாக பக்தர்களை விடுகின்றனர். 1000-1500 ரூ டிக்கெட்டில் பெருமாளுக்கு அடுத்த மண்டபம் வரை விடுகின்றனர். (அதிலேயே 2000 ரூ டிக்கெட்டும் உண்டு. அதற்கு அந்த வரிசையில் போகும்போது கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள்). எதுவாக இருந்தாலும் 3-15 விநாடிகள்தாம்.

      நீக்கு
    3. 1000 ரூ தரிசனத்துக்கெல்லாம் முழு வேஷ்டிதான் அணிந்திருக்கணும் (பெருமாள் அருகில் போவதால்). உள்ளே பேண்ட் அல்லது ஹாஃப் பேண்ட் (வேஷ்டிக்கு உள்ளே) அனுமதிக்க மாட்டார்கள். அதாவது போட்டிருக்கும் உடையின் மேலேயே வேஷ்டி அணிந்தால் மஹாதுவாரத்துக்கு முந்தைய செக்கிங்கில் பிடித்துவிடுவார்கள்)

      நீக்கு
    4. முன்பு துவாரபாலகர்களைத் தாண்டி அடுத்த மண்டபம் வரை விட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். நான் போனதுண்டு. நடுவில் நீண்ட கம்பி போட்டிருப்பார்கள் அதைச் சுற்றி அப்படியே வெளியே வர வேண்டும்...

      கீதா

      நீக்கு
    5. நாங்க பலமுறை அர்த்தமண்டபம் வரை போயிருக்கோம். (அடுத்த மண்டபம் இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இப்போச் சில வருடங்களாக அர்த்த மண்டபத்தில் பக்தர்களை அனுமதிப்பதில்லை என்றார்கள். பணம் கட்டினால் அனுமதிக்கிறார்கள் என நெல்லை சொன்னது புதிய தக்வல்.

      நீக்கு
    6. கீதா... காத்திருங்களேன்.. அநேகமா (நம்புங்க) அடுத்த பதிவில் முடித்து விடுவேன்.

      நீக்கு
    7. நெல்லைத்தமிழன்.. 1000 ரூபாய் டிக்கெட்லாம் இருக்கா? முன்னூறு மட்டும்தான் என்று நினைத்தேன். என் அலுவலகத்தில் ஒருவர் மாதத்துக்கு (சிலசமயம் இரண்டுமுறை) ஒருமுறை சென்று வருகிறார். அங்கபிரதட்சணம் டிக்கெட் வாங்கி தரிசனம் செய்து அபிஷேக நீருடன் வருவார். மாதாமாதம் அது எங்களுக்கு கிடைக்கும்.

      நீக்கு
    8. //நாங்க பலமுறை அர்த்தமண்டபம் வரை போயிருக்கோம். //

      கீதா அக்கா.. பல முறையா? நன் திருப்பதி போன சமயங்களை ஒரு கைக்குள் எண்ணிவிடலாம்!

      நீக்கு
  24. பி.ஏ.கிருஷ்ணன் சொன்னதில் எனக்கு சிலவற்றில் மாற்றுக்கருத்து உண்டு. அர்ச்சகர்கள் கைகாட்டுபவர்கள் கோவில் தரிசனத்தில் முதலில் இடம் பிடிக்கிறார்கள். அதுபோலவே அதிகாரிகள் கை காட்டுபவர்களும் அப்படியே. இதில் இருவருக்கும் ஒரு அண்டர்ஸ்டேண்டிங் உள்ளது.

    நிறைய கோவில்களில் பணியாளர்கள் கிடையாது. காலை 5-6 மணிக்கு நடை திறக்கும் அர்ச்சகர், சாப்பிட 8 மணிக்குப் போனால் யார் கோவிலைப் பார்த்துக்கொள்வது? நிறைய கோவில்களில் சேவார்த்திகள் அபூர்வம். ஒரு அர்ச்சகர் பணி உள்ள கோவில்களில் அவருடைய சொந்த வேலைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் (விடுமுறை நாட்களில் கொஞ்சம் ஆட்கள் வரும்). நாங்கள் தஞ்சை மாமணிக்கோவிலுக்கு (ஒரு கோவில்) சென்றிருந்தபோது, நடை வெகு சீக்கிரம் சாத்திவிட்டார்கள், அர்ச்சகர், பிரசாதத்துடன் அரண்மணைக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார். அவர்களுக்கு என்ன என்ன நிர்ப்பந்தங்களோ.

    நவ திருப்பதியில், ஒரு கோவிலில் அர்ச்சகர், வந்திருந்த எல்லோருக்கும் (ஒரு பேதமும் பார்க்கவில்லை) பெருமாளைப் பற்றி விளக்கமாக அவர்கள் புரிந்துகொள்வதுபோல் சொல்லி, தீர்த்தம் சடாரி கொடுத்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

    அர்ச்சகர்களிலும் தவறு செய்பவர்கள் இருப்பார்கள். அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள்தாம்.

    இவை எல்லாவற்றையும்விட, நம்முடைய பக்திதான் அவனுடைய அருள் தரும் லெவலைத் தீர்மானிக்கிறது. உடையில் ஆடம்பரமாக மிடுக்காகச் சென்று ஓட்டைப் பாத்திரம் கொண்டுபோனால் எவ்வாறு தண்ணீர் கொண்டுவரமுடியாதோ அதுபோல் பக்தி இல்லாத மனத்துடன் பெருமாளின் பக்கலில் சென்றாலும் அவன் அருள் நமக்குக் கிடைக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பழமையான கோயில்களில் உதாரணமாக எங்க ஊர்க் கருவிலி போன்ற சின்ன ஊர்க்கோயில் அர்ச்சகர்கள் சாப்பிடப் போயிருந்தால் நாங்கல்லாம் அந்த நேரம் பிரகாரம் சுத்திட்டு உட்கார்ந்து காத்திருப்போம். கோயில் ஊழியரும் அர்ச்சகர்/குருக்களுக்குத் தொலைபேசியில் செய்தியைத் தெரிவிப்பார். அரைமணியாவது காத்திருக்கும்படி தான் இருக்கும்.

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன்... எல்லா இடங்களிலும் விதிவிலக்குகள் உண்டு.

      கருவிலி போல எங்கள் குலதெய்வம் கோவிலிலும் இதே போல குருக்களுக்கு முன்னரே தொலைபேசி சொல்லி விடுவோம்.அவர் தயாராய் இருப்பார். நமக்கு நேரமும் சொல்லி விடுவார்.

      நீக்கு
  25. நேரு ஃபேமிலிக்குப் போயிட்டீங்க.. இங்க ஹிந்து என். ராம் பெயரே இஸ்லாமியப் பெயர், அவர் இஸ்லாமியராகத் தன்னைப் பதிவு செய்திருக்கிறார் என்றெல்லாம் வாட்சப் மெசேஜ். எதை நம்புவது என்று நிறைய சமயங்களில் புரிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளை மட்டும் நம்புங்கள். மற்ற குப்பைகளை கண் திறந்து பார்க்காதீர்கள்.

      நீக்கு
    2. நெல்லை, நீங்க வாட்சப் செய்திகளை, தகவல்களை (செய்திகள், தகவல்கள் நான் சொல்வது) நீங்க நம்பறீங்களா?!!!!!

      கீதா

      நீக்கு
    3. ஹிந்து ராம் பற்றிய செய்தி நம்பத்தகுந்தவை அல்ல. :(

      நீக்கு
    4. ஹிந்து ராம் பற்றிய பகிர்வு எனக்கும் வந்திருந்தது. முகநூலில் கே ஜி ஜவர்லாலும் சொல்லி இருந்தார்.

      நீக்கு
    5. ஹிந்து ராம் பற்றிலாம் அது சும்மா பொய் . பிரின்ஸ் சார்லஸையே இப்படி ஒரு வதந்தி சொல்லி பெருமைபட்டுக்கிட்டது சிலர் .
      ஒரு மத சம்பந்தமான புக்கை அவருக்கு வழங்க அவர் அன்போடு பெற்றுக்கொண்டதும் வந்த ..வதந்தி :) நேர்மையா உண்மையான அன் கண்டிஷனல் அன்போடு பழகும் பலருக்கும் ஏற்படுவதுதான் ராம், charles அவர்களுக்கும் நடக்குது .

      நீக்கு
  26. இன்னைக்கு கருத்துரைகளும் கலக்கலாக இருக்கு...!

    பதிலளிநீக்கு
  27. சிறப்பான தொகுப்பு. கவிதைகளும் அனுஷும் அழகு 😍😍

    பதிலளிநீக்கு
  28. நேரு குடும்பத்து உறவுமுறைகளில் இருந்த குழப்பத்தை டாக்டர் சுப்ரமணியன் சொன்னதுக்கு மேல் எவரும் சொல்லமுடியாதே ஸ்ரீராம்! நேரு குடும்பத்தில் யார் யாருக்கு என்ன உறவு என்பதே பெரிய குழப்பம் என்று அவர் சொல்லக் கேட்டது உண்டு! (வீடியோவில் தான்)

    http://myblogkirannaik.blogspot.com/2011/09/she-written-by-m-o-mathai.html இந்தப்பக்கங்களில் மத்தாய் She என்ற தலைப்பில் என்ன எழுதினார் என்பது உடனடி reference ஆக்க கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கிருஷ் ஸார்... டாக்டர் சுப்பிரமணியன்? சுப்பிரமணியம் ஸ்வாமியைச் சொல்லவில்லையே நீங்கள்?

      நீங்கள் கொடுத்துள்ள லிங்க்கில் பின்னூட்டங்களும் வெகு சுவாரஸ்யம்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. அது அச்சு அசலாக சுப்ரமணியன் சுவாமியே தான்! டைப் பண்ணி இங்கே கொண்டு சேர்த்ததில் சுவாமியைக் காக்காய் கொத்திக் கொண்டு போய் விட்டது போல!

      நீங்கள் எதிர்பார்த்த செய்தி கிடைத்ததா? இல்லையா? அதைச் சொல்லவே இல்லை!

      நீக்கு
    4. ஓ... சுப்பிரமணியம் ஸ்வாமிதானா? அதற்கு லிங்க் கொடுக்கவில்லையே நீங்கள்?

      நான் எதிர்பார்த்த செய்தி? ஹா... ஹா.. ஹா... அதன் முதல் பகுதியை நேற்றிரவே படித்துவிட்டேன்!

      நீக்கு
  29. @ Nellai thamizhan: பொதுவாக எல்லா கோவில்களிலும் உற்சவர் புறப்பாடு ஆகி விட்டால், மூலவர் சந்நிதியை மூடி விடுவார்கள். காரணம், இறை சக்தியை உற்சவ விக்கிரகத்தில் ஆவாஹனம் பண்ணி விடுவதால், மூலவரை சேவிப்பதால் பலன் கிடையாது என்பார்கள். ஸ்ரீரெங்கத்தில் அந்த பழக்கம் இல்லை என்றாலும், நாங்கள் அங்கிருந்தவரை பெருமாளை ஏளப் பண்ணியிருக்கும் சமயங்களில், மூலவரை தரிசித்தது கிடையாது.
    திருப்பதியில் கூட இந்த சம்பிரதாயம் இல்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. எம்.ஓ.மத்தாய் நேரு குடும்பத்தை பற்றி எழுதிய பிறகு, அவரை கடுமையாக விமர்சனம் செய்து யாரோ எழுதியிருந்ததை படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானுக்கா இப்ப மத்தாய் புக் பத்தி ஸ்ரீராம் சொன்னதும் நெட்டில் பார்த்தப்ப மத்தாய் பத்தியும் விமர்சனம் இருக்கு...இரண்டுமே நான் கொஞ்சம் தான் வாசித்தேன்...முழுவதும் வாசிக்கவில்லை...

      கீதா

      நீக்கு
  31. ஹிந்து ராம் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட். அதனால் சனாதனிகளுக்கு அவரை பிடிக்காது. அவர்கள் ராம் ஆசிரியரான பிறகு வரும் ஹிந்து பத்திரிகையை நான் ஹிந்து என்பார்கள் அது ஓரளவு உண்மைதான்.
    வேறு சிலர்,"ராம் வந்த பிறகுதான் ஹிந்து மாறியிருக்கிறது, அதற்கு முன் பார்ப்பனரல்லாத ஒருவர் ஹிந்துவில் நுழைந்து விட முடியுமா?" என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  32. கோபுலு ஜோக்கை யாருமே கண்டுக்கவே இல்லையே...!! பிறிதொரு சமயம் போட்டிருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவரின் பரம ரசிகன்.எனக்கு அவரின் அனைத்து படைப்புகளும் பிடிக்கும் அவர் சித்திரங்கள் ஒன்றும் நம்மோடு பேசும். . சிறு வயதில் ஆனந்த விகடனில் அமரர் சாவி எழுதிய வழிப்போக்கன் என்ற கதையில் கோபுலுவின் சித்திரங்களை கண்டு மகிழ்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.என்னுடைய சிந்தனைசிதறல் பதிவில் அவர் வரைந்த படமொன்றினை நான் வரைந்து வெளியிட்டுள்ளேன்.

      நீக்கு
    2. அதுவா? ஜோதிடம் மாதிரியே அதுவும் அரதப்பழசுன்றதால இருக்குமோ ஸ்ரீராம்?

      நீக்கு
    3. நன்றி பட்டாபிராமன் ஸார். யாருமே ஒன்றும் சொல்லவில்லையா, அதுதான் கேட்டேன். மேலும் அப்போதைய ஜோக்ஸ் எல்லாம் ஜோக்ஸ் என்பதை மீறி ஏதோ ஒரு செய்தியைக் கடத்துபவனவாக இருக்கின்றன. (இப்போது படிப்பதாலோ என்னவோ) சிரிப்பு வருவது கம்மி குறிப்பாக ராஜு ஜோக்ஸ்.

      நீக்கு
    4. இருக்கலாம் கிருஷ் ஸார். மேலும் இரண்டு வைத்திருந்தேன். ஒன்றை ஏற்கெனவே முக நூலில் பகிர்ந்திருந்தேன்!

      நீக்கு
    5. எல்லாவற்றிக்கும் நம் மனசுதான் காரணம்

      நீக்கு
    6. ஸ்ரீராம் கோபுலு ஜோக் காலையிலேயே நான் பார்த்துவிட்டு கருத்து சொல்லாம விடுபட்டுவிட்டது....இப்ப கீழ துளசியின் கமென்ட் போடும் போது நினைவுக்கு வந்து போட்டுருக்கேன்...

      பவர் போயி ரொம்ப நேரமா வரலை...வந்ததும் நம்ம பூஸார் பதிவு விட்டுப் போயிருக்க அங்கு போனேன்..அப்புறம் பானுக்கா....அப்புறம் மீண்டும் பவர் கட்..எனக்கு வேலை என்று போக இப்பத்தான் வந்தேன்...

      கீதா

      நீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    இந்த வார கதம்பம் நன்றாக இருக்கிறது. திருப்பதியில் ஸ்வாமி தரிசனத்திற்காக பரபரப்புடன் சென்று கொண்டிருப்பதை பற்றி எழுதியிருப்பதைப் ரசித்துப்படித்தேன். உங்கள் எழுத்து நடையில் அடுத்து என்னவோ என்ற பரபரப்பு எனக்கும் கூடியது. அடுத்த வாரம் ஏழுமலைவாசன் தரிசனமா? ஓட்டமாக ஓடிய இரண்டு நாளில் ஓரிரு நிமிடங்களேனும் இறைவனை தரிசிக்க விட்டால் சரி.. அதற்குள் ஓராயிரம் ஜரகண்டி காதில் விழுந்த வண்ணம் இருக்கும். ஹா. ஹா. ஹா.

    நேரு பற்றி அறிய முடிந்தது. பிரசித்தி அடைந்தவர்கள் வதந்தியிலிருந்து தப்ப முடியாதல்லவா? இரு"தி"சேரும் போது எந்த ஒரு விஷயங்களும் இறுதியில் "தீ"யாகத்தானே மாறும். அந்த புத்தகம் படித்ததில்லை.

    தாங்கள் முக நூலில் பதிந்த கட்டுரை சிறப்பாக இருந்தது. கோவில்களின் புனிதம் காக்கப்பட வேண்டும். கோவில் சென்று தரிசித்து திரும்பும் போது மனது நிம்மதியாக இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட கோவில்களின் நிலைமை குறித்து படித்த போது சங்கடமாயிருந்தது. கோவில்களை கூடவா இப்படியெல்லாம் அசுத்தப்படுத்துகிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது.

    கவிதைகள் அற்புதம். எப்படியோ நேற்று வர முடியாத அனுஷ் இன்று இரு கவிதையையும் ரசிக்க வந்து விட்டார்.
    "நேற்று நீ விலகி சென்றாலும். நினைவுகள் உன்னோடுதான்" என்பதை புரிந்து கொண்டவராய், இரண்டையுமே பார்வையிட வந்து விட்டார். ஹா ஹா.

    ஜோக் அருமை. இதுவும் ஒரு கற்பனையின் அங்கம்தான் என்று ஜோசியத்தை எடுத்துக் கொண்டால், எதிர்கால வளம் பற்றியும் கோட்டை கட்டாமல், பயம் பற்றியும் பதறாமல், நிகழ்கால நிசர்சனத்தில் நிம்மதியாக வாழலாம். கதம்பம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      ஜருகண்டி ஸ்வாமி என்றே அவரை அழைக்கலாமோ?!!

      இரு தி சேரும்போது தீயாக மாறும்... உண்மைதான் அக்கா.

      அனுவையும் கவிதையையும் (இரண்டும் வேறு வேறு என்று நினைப்பது அஞ்ஞானம்!) ரசித்ததற்கு நன்றி.

      ஜோக்கையும் ரசித்திருக்கிறீர்கள். நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /அனுவையும் கவிதையையும் (இரண்டும் வேறு வேறு என்று நினைப்பது அஞ்ஞானம்!) /

      ஹா.ஹா.ஹா. கவிதையும்,அனுவும் ஒன்று என்று இன்றுதான் நான். தெரிந்து கொண்டேன். லேசாக அஞ்ஞான இருள் விலகி, ஞானம் வருகிற மாதிரி இருக்கிறது. ஹா ஹா ஹா.

      சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள் பதிவில் தங்களது அனுபவ நாயகி சுசீயை கண்டு ஆச்சரியப்பட்டு பதிலளித்து வந்திருக்கிறேன். எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ரசித்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  34. கோபுலுவின் கார்டூனில் அந்த உதவி ஆசிரியர் முகம் செம :) வி.வி.சி :)
    Murphy's law :) எதிர்பாராம நடப்பது :) மழைவராததுன்னு தைரியமா போன அன்னிகுப்பார்த்து கொட்டும் :)
    மஞ்சித்துக்கும் நடந்தது இதுவோ :)

    ரீமிக்சில் புது அனுஷை போடல்லையா :) என்னமோ இளைச்சிட்டதா கே.ப :)

    //டிஸ்கி : காதலர் தினத்துக்கும் கீழ்வரும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தமில்லை!/

    :)))))) அந்த கரடிக்குட்டி யாருது :)




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அந்த கரடிக்குட்டி யாருது :)//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அனுக்காவை அப்பூடி எல்லாம் ஜொள்ளக்கூடா அஞ்சு:))

      நீக்கு
    2. வாங்க ஏஞ்சல்... படத்தையே ரசித்து விட்டீர்கள்... மர்பி விதி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.. படித்திருப்பீர்கள்!

      நீக்கு
  35. ஆஆஆஆஆஅ காத்து வாங்கப் போனேன்ன்ன்.. தலையிடி வாங்கி வந்தேன்ன்ன்ன்:)).. ஆவ்வ்வ் இண்டைக்கு மீ ரெயினை மிஸ் பண்ணிடப்போறேனோ என ஓடி வந்து ஏறிட்டேன் 3ர்ட் கிளஸ்ல:)..

    //எங்கள் பெட்டிகளுடன் வேஷ்டி கட்டிக்கொண்டு நாங்கள் தயாராய் வெளியே நின்று கொண்டிருந்தோம்//

    ஏதோ தற்கொலைப்போராளி ரெடியாகிட்டமாறி:)யேஏஏஏஏஏஏ ஒரு பில்டப்பூஊஊஊ:)) கர்ர்ர்:)).. தமிழ்நாட்டில இருந்து வேஸ்டி கட்டுவது ஒரு விசயமாச்சே இப்போ:)).. ஓ மை கடவுளே எங்கள் பரம்பரை எங்கெ பாரம்பரியம் எங்கே.. எதுக்கெடுத்தாலும் பெண்களின் உடையையே குறை சொல்கிறார்களே திருப்பதி வெங்கடேசா கண் திறந்து பாரப்பா:).. ஹையோ அதிரா அடங்கு அடங்கு நோ ஃபீலிங்ஸ்யா.. ஆஆஆஆஆஅவ் நிதானத்துக்கு வந்திட்டேன்ன்ன் ஐ ஆம் ஓல்ரைட்:).. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காத்து வாங்கப் போனேன்ன்ன்.. தலையிடி வாங்கி வந்தேன்ன்ன்ன்:)).// that is Murphy's law

      நீக்கு
    2. ஆமாம் அதிரா... வேஷ்டி கட்டுவதே எனக்குப் போராட்டம்! கட்டிக்கொண்டு நடந்தால் அது மட்டும் அங்கேயே நின்றுவிடும்!!

      நீக்கு
    3. //காத்து வாங்கப் போனேன்ன்ன்.. தலையிடி வாங்கி வந்தேன்ன்ன்ன்:)).// that is Murphy's law//

      அதே... அதே...!!

      நீக்கு
  36. கடவுளைத் தரிசிக்கவும் ஐடண்டிரி கார்ட் தேவைப்படுதே... காசு குடுத்து ரிக்கெட் வாங்கி வீட்டில விட்டிட்டுப் போனீங்களோ கர்ர்ர்ர்ர்:) ஒருவர்கூடவா சிந்திக்கவில்லை அதுபற்றி...

    ///நாங்களும் கூடவே நடந்தோம். வேஷ்டி தடுக்கியது.......///
    ஆஆஆஆஆஆஆஅவ்வ் திருப்பியும் ஒரு மர்மத் தொடர்:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிக்கெட் வாங்கி வீட்டில் வைக்கவில்லை. ஆன்லைன் புக்கிங் பிரிண்ட்டவுட் எடுக்கவில்லை! மொபைல் காட்டினால் போதும் என்ற எண்ணம்!

      நீக்கு
  37. ///டிஸ்கி : காதலர் தினத்துக்கும் கீழ்வரும் இந்தப் பதிவுக்கும் சம்பந்தமில்லை!///

    ஆனா அனுக்கா படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த நல்ல அழகி கிடைக்கும்வரை அனுஷ் தொடர்வார்!

      நீக்கு
  38. //அதைப் படித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அப்புறம்தான் வியாழன் பதிவுக்கு ஏதாவது ஒப்பேற்ற வேண்டுமே என்று நினைவுக்கு வந்தது. //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கடனே என்று போஸ்ட் போடுறீங்களோ இல்லை ஆசைப்பட்டு இஸ்டப்பட்டுப் போஸ்ட் போடுறீங்களோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடனே என்று போஸ்ட் போடுறீங்களோ இல்லை ஆசைப்பட்டு இஸ்டப்பட்டுப் போஸ்ட் போடுறீங்களோ?:)//

      பதிவைப் படித்த உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?

      நீக்கு
  39. //நீயும் வரவில்லை - நீ
    சொல்லிச் சென்ற
    வார்த்தைகளை
    காற்றும் சொல்லவில்லை
    தேற்றுவாரின்றி
    விசும்பும் மனம். //

    //நீ
    விலகிச் சென்றாலும்
    கூடவேதான் இருக்கின்றன
    உன் நினைவுகள்.//

    இரண்டும் சூப்பர்ர்.. இப்போ யார் விலகியது? அனுக்கா மெலிஞ்சதும் டாட்டா காட்டிப்போட்டாவோ?:) ஹா ஹா ஹா.. இது அனுக்காவின் பழைய படம்தானே? அதுதான் ரொம்ப அழகா இருக்கிறா.. இப்போதைய படத்தில தேடுறேன் தேடுறேன் குண்டாத்தான் கிடைக்குது:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், என் மகன் கூடச் சொன்னான். மெலிந்திருக்கிறார் என்று. ரொம்ப மெலிந்தால் அனுவும் அழகில்லை!!

      நீக்கு
  40. உங்கள் திருப்பதி பயணம் கொஞ்சம் சிரமப்படுத்தியது போலத் தெரிகிறதே. கோவிலுக்குள் செல்ல முடிந்ததா? ப்ரின்ட் காப்பி இல்லை என்பதை ஏற்றுக் கொண்டார்களா? அடுத்த பதிவில் தெரியுமோ?

    நேரு பற்றிய செய்தி புதியது. இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறதோ? வாசித்துப் பார்க்க வெண்டும்.

    கோயில்கள் பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. என்றாலும் நாம் இறைவனைத்தானே தொழப் போகிறோம் அதை மட்டும் மனதில் கொண்டு சென்று வர வேண்டியதுதான்.

    கவிதைகள் மிக மிக அருமை. இரண்டும் புதியதும் சேர்த்து. ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.

    ஜோக்கும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  41. ஸ்ரீராம் ஜோக் பற்றி காலையில் சொல்ல விட்டுப் போச்சு...இதோ துளசியின் கமென்ட் போடும் போதுதான் அடடா போடாமல் விட்டுட்டோமேனு...

    ரொம்பவே ரசித்தேன்...சிரித்துவிட்டேன் என்னனா ஜோஸியம் தெரியாதே...அதான் கற்பனை உமக்கு நல்லா வருமே...ஹையோ ஹையோ....சிரிச்சுட்டேன் இப்பக் கூடப் பொருந்தும்!!!!

    கூடவே நம்ம விவேக் ஜோக் சீன் நினைவுக்கு வந்துச்சு...டிவில அன்றைய தின ஜோஸ்யம் சொல்லுவாங்க இவர் அதைப் பார்த்து...அது என்ன படம்னு நினைவுக்கு வரலை சீன் மட்டும் நினைவு....

    கோபுலுவின் சித்திரம் செம!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  42. கோபுலுவின் நகைச்சுவைப் படங்களில் சொல்லி இருக்கும் உண்மை அந்தக் காலத்தில் இருந்தே ஜோசியம் எப்படி என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதை நேத்திக்கே கொடுத்தேன். ஆனால் போகலை போல! இப்போவும் ஒரு சில கருத்துக்கள் போகாமல் இணையம் இல்லை அல்லது எரர் என்றே வந்தது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகவில்லை என்றால் ஒரு ரெஃப்ரெஷ் செய்யவேண்டும் கீதா அக்கா.

      அப்புறம் சில பழைய ஜோக்ஸ் மட்டும் ஒரு பதிவாகப் பகிரும் எண்ணம் இருக்கிறது. ஜோக்ஸ் போலதான் இருக்கும்!

      நீக்கு
  43. கோவில்களில் நடக்கும் சில செயல்கள் கோவில் பக்கமெ போகத்தயக்கமளிக்கிறது பணமிருந்தால் கடவுளை நம் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கலாம்போல ஒரு முறை ஒரு திருமணத்துக்கு மன்னார்குடிபோய் இருந்தேன் கோவில் மதிலைச்சுற்றி நடக்கவே முடியாதபடி அசிங்கம் செய்திருந்தார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னார்குடி மட்டுமல்ல, பல கோவில்களிலும் இதுதான் நிலை. திருக்கடையூரில் ரொம்பவே மோசம்.

      நன்றி ஜி எம் பி ஸார்.

      நீக்கு
  44. திருப்பதி அனுபவம், மற்றும் பதிவில் பகிர பட்ட விஷயங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    வெளிநாட்டில் உள்ளது போல் கோவில்களில் கழிப்பறை வசதி வைத்து கட்டலாம்.
    நம் மக்கள் அதையும் சுத்தமாக வைத்து கொள்ளாமட்ட்டார்கள்.

    பழைய ஜோக் ரசிக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!