தேவையான பொருள்கள்:
மைதா மாவு ------ 11/2 கப்
புளித்த தயிர் ------ 1 கப்
பச்சை மிளகாய் --- 2 அல்லது 3
இஞ்சி ------ ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை ---- சிறிதளவு
பொரிப்பதற்கு எண்ணெய் ----- தேவையான அளவு
உப்பு ------- தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய், தோல் சீவப்பட்ட இஞ்சி இவைகளை பொடியாக அறிந்து கொள்ளவும்.
அதில் மைதா மாவு, உப்பு சேர்த்து கலந்து விட்டு, தயிரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.
மாவு கைககளில் ஒட்டிக் கொண்டால், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பிசைந்தால் சரியாகி விடும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, அது காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை கிள்ளி, போட்டு, ஓசை அடங்கியதும் எடுக்கவும்.
வடி கூடையில் டிஷ்யூ பேப்பரை போட்டு அதில் பொரித்த பகோடாக்களை போட்டால், அதிகப்படியான எண்ணையை அது உறிஞ்சி கொண்டு விடும்.
சுவையான, மிருதுவான பகோடா ரெடி.
இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, அண்ணா, அக்கா, தம்பி, நட்புகள் எல்லாருக்கும்! ..
பதிலளிநீக்குகீதா
இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குசாப்பிடத் தயாரா வந்துட்டேன். என்ன இருக்கு?
பதிலளிநீக்குமைதா பகோடா சூடா இருக்கு... சாப்பிட்டுட்டு காஃபி சாப்பிடுங்க...
நீக்குகாஃபி குடிச்சுட்டேன். காஃபி குடிச்சுட்டு இம்மாதிரிப் பொரித்தவை, வறுத்தவை சாப்பிடப் பிடிக்கிறதில்லை. காஃபிக்கு முன்னாடி தான். ஆகவே 2வது காஃபிக்கு முன்னாடி எடுத்துக்கணும். :))))))
நீக்குநான் அப்பவே எடுத்துக் கொண்டுவிட்டேனே!!! ஸ்ரீராம்....எல்லாரும் வருவாங்க...எல்லோருக்கும் வேணும்ல...இல்லைனா நானே காலி பண்ணியிருப்பேன்....ஹா ஹா ஹா ஹா
நீக்குசூப்பரா இருக்கு பானுக்கா!!...சூப்பர்...இது செஞ்சு ரொம்ப நாளாச்சு...
கீதா
பதிவின் அளவைப் பார்த்ததுமே அட இது பானுமதி அக்காவாத்தான் இருக்கனும் என்று நினைத்துக் கொண்டே தலைப்பைப் பார்த்தால் அதே!!!
பதிலளிநீக்குஇதோ வரேன் பதிவு முழுவதும் பார்க்க...
கீதா
மங்களூர் போண்டோ என்போம். முந்தாநாள் கூட வெங்காயம் போடாமல் பண்ணினேன்.
பதிலளிநீக்குஎன்னாது.... மங்களூர் போண்டாவா? தவறா எழுதிட்டீங்க கீதா சாம்பசிவம். மங்களூர் போண்டா மிளகு, உளுந்து மா சேர்ந்து டென்னிஸ் பாலை விட சிறிய சைஸ் இல்லையோ?
நீக்குநாராயண நாராயண
என்ன நாராயண நாராயண!!!!!!? ஹா ஹா ஹா ஹா
நீக்குபெரியவங்க சொன்னா கேட்டுக்கனும் கெளவி கேட்கப்படாது.....
கீதா
மங்களூர் போண்டா எனறால் ஊற வைத்த உளுந்தை அரைத்து, தேங்காயை பல்லு பல்லாக கீறிப்போட்டு, முழு மிளகு சேர்த்து நெ.த.சொல்லியிருப்பது போல டென்னிஸ் பந்தை விட சிறியதாக உருட்டி போட வேண்டும். அப்படித்தானே?
நீக்குhttp://adupankarai.kamalascorner.com/2012/01/blog-post_31.html
நீக்குhttp://tamil.webdunia.com/article/indian-food-recipes/mysore-bonda-suitable-for-evening-tiffin-116022000015_1.html
மங்களூர் போண்டா
https://www.awesomecuisine.com/recipes/18329/mangalore-bonda-in-tamil.html
https://tinyurl.com/y4vtm4rc
https://tinyurl.com/y2efaaex
https://tinyurl.com/y358xv5d
https://tinyurl.com/y5txvxyv
முதல் இரண்டும் மைசூர் போண்டாக் குறிப்புக்கான சுட்டிகள்.
நீக்குnooo :) @நெல்லைத்தமிழன் ..கீதாக்கா சொல்றதுதான் சரீஈ :)
நீக்குகோலி பஜ்ஜி /மங்களூர் போண்டா எல்லாம் மைதா தயிர் கொஞ்சூண்டு அரிசிமாவு சேர்த்து செய்றது .ஆனா ஒண்ணு நீங்க சொன்ன டென்னிஸ் பால் மிக சரி :) அடிச்சி விளையாடலாம் :)
உடுப்பில ஆசையா வாங்கிட்டு நொந்துபோய் வீசினேன்
கீசா மேடம்... வம்பு வளர்த்தாலும், நீங்க அதற்கு சரியான பதில் கொடுத்திருப்பதைப் பாராட்டறேன்.
நீக்குஆனாலும் பாருங்க, மைதா மாவு என்பது சமீப காலங்கள்லதான் வந்தது. ஆனா மீனாட்சி குறிப்புகளையெல்லாம் பார்த்தீங்கன்னா, போண்டான்னா பொதுவா உளுந்து + அரிசிதான்.
மத்தபடி நாளைக்கு நானும் தமிழக கோதுமை மாவுல (இல்லைனா ஸ்காட்டிஷ் தப்பாப் புரிஞ்சுக்குவாங்க) உருட்டிப் போட்டு, தேங்காய், மிளகைச் சேர்த்து பொரித்து, நெல்லை போண்டான்னு சொல்லிக்கவேண்டியதுதான். நெட்லயும் ஒரு தடவை போட்டாச்சுன்ன, உங்க மாதிரி பழம் பெரும் சமையல் நிபுணிகள், அதையும் நம்பிக்குவீங்க. ஹா ஹா.
கோதுமையை அரைத்த மாவில் தான் நான் வெல்ல தோசை, உப்பு தோசை பண்ணுவேன். எங்க பிறந்த வீடுகளிலே முழுகோதுமையை ஊற வைச்சு அம்மா, பெரியம்மா எல்லாம் அரைப்பாங்க. நான் கோதுமை ரவையை ஊற வைச்சு இப்போவும் பண்ணுவேன். பொதுவாகவே மைதா குறைவான பயன்பாடுதான். இப்போ ரொம்பக் குறைச்சாச்சு. ஆகவே கோதுமை மாவிலும் பஜ்ஜி, பஜியா, போண்டா செய்யலாம் என்பதை அறிக! :))))
நீக்குஇப்போல்லாம் மைதாவின் பயன்பாட்டைக் குறைச்சுட்டதால் இட்லி மாவிலேயே கொஞ்சம் போல் கோதுமை மாவு சேர்த்துப் பண்ணினேன். வெள்ளையப்பமாகச் செய்வது எனில் தனியா அரைச்சுச் செய்தால் தான் நன்றாக வரும்.
பதிலளிநீக்குஆ... வெள்ளையப்பம்...
நீக்குமதுரை கோபு அய்யங்கார் கடை, நாராயண கஃபே!
நாராயண கஃபே எங்கே இருக்கு? அநேகமா மதுரைப் பயணம் ஒண்ணு இருக்கு. அங்கே போய்ப் பார்க்கலாம் வெள்ளையப்பத்தை!
நீக்குஅது ரெஸ் கோர்ஸ் காலனியில் இருக்கிறது / இருந்தது. மேலும் வடமலையான் ஆஸ்பத்திரி பக்கமும் ஒன்று உண்டு. அது பீபீகுளத்தில் இருக்கிறது!
நீக்குஆஹா எங்க பாட்டி சொல்லும் பெயரும் நினைவுக்கு வந்துருச்சே அதே அதே ஸ்ரீராம் மைதா வெள்ளை அப்பம்....அப்புறம் கீதாக்கா சொன்ன மைசூர் போண்டா...இதே...போலத்தான்..குனுக்கு மாமியார் வீட்டில்
நீக்குகேரளத்து பெயர் தான் டக்குனு நினைவுக்கு வரலை...வரேன்....
கீதா
மைசூர் போண்டா நான் திருமணத்துக்கு முன்னரேயே முயற்சி செய்திருக்கிறேன் கீதா!!!
நீக்குமைசூர் போண்டோ எனில் நாங்க உளுந்து அரைத்துத் தான் பண்ணுவோம். இதை மங்களூர் போண்டோ என்போம். யாரானும் திடீர்னு வந்துட்டா அப்போ அவசரத்துக்குப் பண்ணுவது தான். அடிக்கடி எல்லாம் பண்ணினது இல்லை. அதிலும் இப்போ நோ மைதா!
நீக்குமைசூர் போண்டா நான் திருமணத்துக்கு முன்னரேயே முயற்சி செய்திருக்கிறேன் கீதா!!!//
நீக்குசூப்பர் ஸ்ரீராம்...நீங்கதான் அம்மாவுக்கு சின்ன வயசுலேயே கிச்சன்ல நிறைய உதவி செஞ்சுருக்கீங்களே!!! கண்டிப்பா நல்லா வந்துருக்கும் முதல் முயற்சியே..
சரி சரி நாங்க எல்லாரும் ஒரு நாள் திங்க வந்துடுவோம்...ரெடியா இருங்க!!!
கீதா
ஸ்ரீராம், அந்த முந்திரி அல்வா மதுரையில் எந்தக் கடையில் கிடைக்கும்? முன்னே ஒருதரம் சொன்னீங்க. மறந்துட்டேன். மனசில் இருக்கு வெளியே வர மாட்டேன்னு அடம்.
நீக்குஇதே இதே இதே!!! இதை எங்க வீட்டுல குனுக்குனு சொல்லுவாங்க பானுக்கா...
பதிலளிநீக்குநாள் கிழமைகளில் செஞ்சா இப்படி இல்லைனா சி வெங்காயம் அல்லது பெ வெ போட்டு செய்வதுண்டு...செம டேஸ்டியா இருக்கும்...இதையே நிறைய பெ வெ மெலிதாக அரிந்து போட்டு பொரிச்சு அதுக்கு பேரு கேரளால இருங்க பேரு டக்குனு நினைவுக்கு வரல...சொல்றேன்...
அப்புறம் வரேன்...
கீதா
குனுக்கு என்பது புளித்த அடை மாவில் செய்வது இல்லையோ? மீந்து போன அடை மாவில் வெங்காயம் சேர்த்தோ, சேர்க்காமலோ செயவதைத்தான் நாங்கள் குனுக்கு என்போம்.
நீக்குபானுக்கா நீங்க சொல்லுறது சரியே...ஆனான் என்னன்னா இப்படிச் சின்ன சின்னதா கிள்ளிப் போடுவது எல்லாத்தையும் பொதுவா குனுக்குனு சொல்லிட்டு....அது எதுல செய்யறோமோ அந்தப் பொருளின் அடைமொழியோடு...உளுந்து குனுக்கு, மைதா குனுக்கு, அடைமாவு குனுக்கு.கோதுமை குனுக்கு...ரவை குனுக்கு..வெஜிட்டபிள் குனுக்குனு சொல்லி...எங்க வீட்டுல நாமகரணம் சூட்டிடுவாங்க...ஆமாம் புளிப்பும் கொஞ்சம் உண்டு புளித்த தயிர்..சேர்த்து...
நீக்குபானுக்கா நாம் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கறாப்ல தான் இதுவும் ஹா ஹா ஹா ஹா ஹா...
கீதா
பானுக்கா பக்கோடானா நம்ம வீட்டுல ரொம்பவெ க்ரிஸ்பா அதாவது நார்மல் கடலைமாவுல செய்வோம்ல அப்படி. மைதா மாவையும் தயிர் விட்டோ அல்லது கொஞ்சமா தண்ணி சேர்த்தோ பிசிறி அதுல என்னெல்லாம் சேர்க்கனுமோ அது சேர்த்து வெங்காயம் சேர்த்தோ இல்லாமலோ செய்யறத பக்கோடானு...
நீக்குகீதா
எங்க வீட்டில் குணுக்குவெனத் தனியா ஊற வைத்து அரைத்துச் செய்வோம். நவராத்திரியில் ஒரு நாள் நிவேதனம் குணுக்குச் செய்வது உண்டு. இந்த வருஷம் செய்த குணுக்குவுக்கு அதிகமாய் டிமான்ட் இருந்தது. கிடைக்காதவங்க எல்லாம் புலம்பினாங்க. :)))))) என்னையும் சேர்த்து! :)
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குஆஹா.... காலையில் சுடச்சுட பகோடா.... நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஇதுக்கு எங்க வீட்டில பேரு மூஞ்சில வெடிக்கிறது. ஹாஹா.
பதிலளிநீக்குமைதாமாவு குணுக்கு. போண்டா என்றால் உளுந்து அரைத்த போண்டா.
இல்லாவிட்டால் உருளைக்கிழங்கு போண்டா.
பானுமா,கீதாமா, கீதா ரங்கன், ஸ்ரீராம் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.
அழகா பொரிந்திருக்கிறது மா. யம் யம்.
காலை வணக்கம் வல்லி அக்கா. மூஞ்சில வெடிக்கறதா..? ஹாஹாஹா. இது வெடிக்காதே, ஜவ்வரிசியில் போடும் குணுக்குதான் டமால், டுமீல்.
நீக்குபானுக்கா !!! ஒரேஒருதடவை தேன்மிட்டாய் செய்ய ஆசைப்பட்டு இந்த மைதாமாவை பொரிக்க :) ஹேண்ட் கிரெனெட் கெட்டது போங்க :) எனக்கு சீடையே வெடிச்சி தெறிக்கும் ஹஆஹாஆ
நீக்குபகோடா செய்முறை படங்களுடன் அருமை.
பதிலளிநீக்குமுன்பு எல்லாம் அடிக்கடி மாலை நேரம் பகோடா உண்டு வீட்டில் .குழந்தைகளுக்கு பிடிக்கும். அதுவும் மழை நாளில் மாலை நேரம் பகோடா என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
எல்லா மாவிலும் செய்வேன்.
மழை பெய்யும் பொழுது சூடான பக்கோடா+டீ=ஏறக்குறைய சொர்க்கம்!
நீக்குபகோடாவுக்கு முதல் தேவை கடலை மாவு. என்றாலும் நானும் எப்போதேனும் கடலைமாவு குறைவாய் இருக்கும் நேரங்களில் எல்லா மாவுகளையும் சேர்த்துக் கொண்டு அதோடு பொட்டுக்கடலையைச் சிவக்க வறுத்து மாவாக்கிச் சேர்த்துக் கொண்டு பண்ணுவது உண்டு.
நீக்குபகோடா நல்லா இருக்கு. நாங்க மைதா சேர்ப்பதில்லை.
பதிலளிநீக்குமைதாவை தவிர்க்கும் காரணம் ஆசாரமா? ஆரோக்கியமா?
நீக்குரெண்டும், போத்! :)))) எங்க பையர், மாட்டுப்பெண், பெண் வீட்டில் எல்லாம் ரவை,மைதா வாங்குவதே நாங்க போனால் தான்! :)))) நான் ரவை வாங்குகிறேன். மைதா வாங்குவதில்லை. எப்போவானும் யாருக்கானும் செய்து கொடுக்கணும்னாலோ இல்லை ஏதேனும் தேவை என்றாலோ அரை கிலோ வாங்குவேன். 3,4 மாசம்வந்துடும். ரவா தோசைக்குக்கூட கோதுமை மாவு தான் சேர்க்கிறேன்.
நீக்குநானும் கூட போளி செய்வதற்காக மட்டுமே மைதா வாங்குவேன், போளி செய்தது போக மிச்சமிருக்கும் மாவை கரைத்த தோசை, அல்லது இப்படி பக்கோடா போடா உபயோகப் படுத்திக் கொள்வேன்.
நீக்குஆரோக்கியம்தான் பானுமதி வெங்கடேச்வரன் மேடம் (as per my wife). எனக்கு எப்போவாவது மைதாமாவு கரைத்த தோசையும், அதில் இனிப்பு தோசையும் மிகவும் பிடிக்கும், பண்ணச் சொல்லுவேன் (எனக்கு மட்டும்). அப்புறம் என் மனைவி முன்னொரு காலத்தில் செய்துகொண்டிருந்த மைதாவில் செய்யும் ஸ்வீட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
நீக்கு'ஆசாரம்'னு சொல்றவங்க (என்னைப் பொறுத்தவரையில்), கொஞ்சம் போலின்னு தோணுது. உண்மையான ஆச்சாரம்னா, தக்காளி/வெங், ஆங்கிலேயக் காய்கறிகள், சேமியா, ஜவ்வரிசி, ப்ராசஸ் செய்த எதையும் (ஜீனி, மைதா போன்று) சாப்பிடக்கூடாது. ஆறு அல்லது கிணற்று நீர் (நேரடியாக எடுத்தது. சும்மா, ஆத்துத் தண்ணிதானே பைப்ல வருதுன்னு ஜல்லியடிக்கக்கூடாது).
மைதா பக்கோடா அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நன்றி.
நீக்குஎனது சாய்ஸ் பக்கோடா என்றால் கடலை மாவில் செய்வது மட்டும்தான் மைதா பலகாரம் என்றால் மைதாவில் வெல்லம் கரைத்துவிட்டு அதில் வாழைப்பழமும் கலந்து பிசைந்து தேங்காயௌ சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டு மாவில் கலந்து சிறு உருண்டையாக எண்னெயில் பொரித்து எடுத்தால் சாப்பிட நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குவாழ்க நலம்...
பதிலளிநீக்குஇதுவும் புதுமையாகத்தான் இருக்கிறது...
ஆனாலும் உடல் நலம் கருதி மைதாவை 90% குறைத்தாகி விட்டேன்.. முற்றாக நிறுத்த முடியவில்லை... இங்கே காலை உணவு Bread தான்..
இட்லியில் கூட ஓரளவுக்கு மைதாவைச் சேர்க்கின்றனர் - பேராசை பிடித்தவர்கள்..
நல்லா இருக்கு ...நானும் மைதாவில் செஞ்சது இல்ல
பதிலளிநீக்குஎளிதான செய்முறை... நன்றி...
பதிலளிநீக்குகேரளா சாயக்கடைகளில் உள்ளி வடை என்று நிறைய (பக்கோடாவுக்கு போடும் அளவு) பெரிய வெங்காயம் நீளத்தில் அரிந்து , கொஞ்சம் மிளகாய்ப்பொடி சேர்த்து உருண்டையாக பொரித்து எடுப்பார்கள். இப்பொழுது அதிகமாக கிடைக்கிறது. காரணம் பெரிய வெங்காயம் 3 கிலோ 50 ரூ தான்.
பதிலளிநீக்குJayakumar
ஓ அவ்ளோ மலிவோ வெங்காயம் .. இங்கு ஒரு கிலோ உங்கள் ரூபாயில் 70-80 விக்குது. ஆனா இங்கு எப்பவும் இதே ரேஞ்சிலேயே இருக்கும்.
நீக்குஇங்கே ஒரு கிலோ பதினைந்து ரூபாய் தான். 3 கிலோ வாங்கினால் 45 ரூபாய்க்குக் குறைவாய்க் கொடுக்கிறாங்க. அவ்வளவு செலவு இல்லையே என்பதால் வாங்குவது ஒரு கிலோவுக்குள் தான். நாட்டுத்தக்காளியே 20 ரூ விற்றது இன்னிக்கு 30 ரூ விற்கிறது. சுத்தமான சுவையான நாட்டுத் தக்காளி.
நீக்குதிண்டுக்கல் தக்காளி இன்னும் விலை குறைவு.
நீக்குஓ அருமையான ஈசிப் பக்கோடா, தலைப்புப் பார்த்து நினைத்தேன் முறுக்குரலில் பிழியோணும் என.. கோதுமைக்கு இஞ்சி எதுக்கு வாசத்துக்கோ....
பதிலளிநீக்குதெய்வமே தெய்வமே :) இது மைதா இது மைதா தாத்தா தா தா மைதா :)
நீக்குஇஞ்சி வாசத்துக்கா இருக்காது அநேகமா digestion க்காக இருக்கும் .எதுக்கும் பானுக்கா சொல்லட்டும்
நீக்குAllo misder.... kothumai is maitha:)...
நீக்குஏஞ்சலின் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... எனக்கே அதிரா 'கோதுமை மாவு'ன்னு சொல்லும்போது புரியுது. உங்களுக்கு இன்னும் புரியலையா?
நீக்குஉங்களுக்கான தண்டனை - ஜனகராஜ் நடித்த ஒரு குறிப்பிட்ட படம் ('எங்க ஊர்ல இதை இப்படித்தான் சொல்வாங்க') இரண்டு முறை பார்க்கவும். அது என்ன படம் என்று தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளவும்.
https://66.media.tumblr.com/7538a091cb5177b42a50e787c06c3f8a/tumblr_mer5riTLl51rch75qo1_400.gif
நீக்கு🙈🙈🙈🙈🙈🙈
நீக்குஇங்கே இனிமேல் தான் குளிர் காலம் ஆரம்பிக்கும். அப்போது நல்ல சுட சுட செய்து சாப்பிட வேண்டியது தான்.
பதிலளிநீக்குமைதா பக்கோடா ஆசையை தூண்டுகிறது.
பதிலளிநீக்குசிறிய ஐயம் டிஷ்யூ பேப்பர் கிடைக்காத கிராமங்களில் பக்கோடா செய்தால் எண்ணையை உறிஞ்சு எடுப்பது எப்படி ?
மழைக்கால தேனீர் வேளையில் தின்பது சுகம் திருச்சியில் ஒருமுறை வைகோ டி தமிழ் இளங்கோ அவர்களுக்கு ஹோட்டலில் செய்ததைக் கொடுத்த நினைவு
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குசுவையான மைதா பக்கோடா. நானும் செய்திருக்கிறேன். முந்தியெல்லாம் வெறும் மைதா மட்டும் வெங்காயம் நிறைய பொடிதாக நறுக்கிப் போட்டு கரைத்து தோசை வார்த்தால் ஒல்லியாக டேஸ்டாக நன்றாக இருக்கும். இப்பதான் மைதா உடம்புக்கு கெடுதல் என்று தெரிந்த பிறகு அவ்வளவாக பயன்படுத்துவதை விட்டாச்சு. (எதுதான் உடம்புக்கு கெடுதல் இல்லாததாக இருக்கு.! அது வேறு விஷயம்..தினம் ஒன்றை கேள்விபடுகிறோம்.) படங்களுடன் செய்முறைகளும் மிகவும் அழகாக உள்ளது. கருத்துக்களில் சொல்வது போல் மழை காலத்திற்கு உகந்த சுவையான நொறுக்குத்தீனி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எல்லா பின்னூட்டங்களையும் படிச்சிட்டு வந்தாச்சி :)
பதிலளிநீக்குநானும் மைதா சேர்ப்பதில்லை :) லேயர் பரோட்டா எல்லாம் சுட்ட காலம் போச்சு ..ஆனா இதை ராஜ்கிரா அரிசிமாவு காம்பினேஷனில் செஞ்சு பாக்க தோணுது .பாப்போம்
லேயர் பராத்தா/பராந்தாவுக்கு கோதுமை மாவே சிறந்தது. கோதுமை மாவில் செய்வதே பராத்தா/பராட்டா/பராந்தா. மைதாவில் செய்தால் அது புரோட்டா! க்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))
நீக்குகிக்கிய் :) அது writing எர்ரர் ..ஸ்ஸ் அப்டிலாம் சொல்ல மாட்டென் :))))) புரோட்டா வேற ப்ரோட்டா வேறேன்னு இப்போதான் தெரியும் ஹாஹாஆ
நீக்குஆமாம், ஏஞ்சல், மைதா மாவில் செய்வது BHUROTTA, paratha or parantha இல்லை. இஃகி. இஃகி/
நீக்குதயிருக்கு பதிலா புளிச்ச இட்லி மாவு சேர்த்து பாருங்க. நல்லா இருக்கும்
பதிலளிநீக்குyes. நான் புளித்த இட்லி மாவில் மைதா இருந்தால் கொஞ்சம் போல் சேர்த்து அல்லது கோதுமை மாவு சேர்த்துப் பண்ணுவேன்.
நீக்குமைதா உடலுக்கு நல்லதில்லையாமே அப்படியா
பதிலளிநீக்குமைதா பகோடா அருமை இன்று காலை தான் ஓட்ஸ்சூப் பால்க் பகோடா.
பதிலளிநீக்குமைதாவில் பகோடாவா?
பதிலளிநீக்கு