ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

ஞாயிறு : கூண்டில் ஒரு குரங்கு


கூண்டில் ஒரு குரங்கு  



அதை இவர்கள் பார்க்கிறார்களா?  அல்லது அது இவர்களை பார்க்கிறதா?


முகத்தை முகத்தை ஏன் மறைக்கிறாய்...


அட, நம்மூரு ஊமத்தம்பூதான்!




அந்த முழுக்கை சட்டை நபர் அலைபேசியை கீழேயே வைக்க மாட்டார் போலும்!


அட, எவ்வளவு எடுத்தாலும் அந்த ஒரு குரங்குதான்ப்பா....


மாறுதலுக்கு வெளியே ஒன்று!


படமெடுக்க குரங்கு கிடைக்காதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்!


மேயாத மான் மட்டுமல்ல, பயந்த மான்!  "சிலை போல ஏனங்கு நின்றாய்?"

"ஏன்னா இவர் படம் எடுக்கறார் இல்லை?"


ஆனால், இதைப்பார்க்க இங்குதான் வரவேண்டும் என்றில்லை!


வெளியேயே எடுத்துக் கொண்டிராமல் உள்ளேயும் ஒரு க்ளிக்!


வேட்டி கட்டியிருக்கும் மரம்!



அடர் மரம் ; படர் மரம்!


"பலகைல என்ன எழுதி இருக்கு?" -   "ஒரு கைலதான் எழுதியிருப்பாங்க...   செத்த முன்னால போயி பாருங்க தம்பி!"


"படம்" முடிஞ்சுடுச்சாம்...    திரும்பிப் போறாங்க....!!!

50 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
    வல்லிமாவுக்கு குட் ஈவினிங்க்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி அடுத்து செவ்வாய் மாலைதான் வலைப்பக்கம் வர முடியும்....பயணம்.

      படங்கள் பார்த்துட்டு வரேன்

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
  2. படமெடுக்க குரங்கு கிடைக்காதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்!//

    வேட்டி கட்டியிருக்கும் மரம்//

    ஹா ஹா ஹா ஹா ஹையோ ஸ்ரீராம்...சிரித்துவிட்டேன்....இருங்க காப்பி ஆத்திட்டு மீண்டும் வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வாழ்க நலம்..
    அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேற்பு அளித்த/அளிக்கப் போகும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நல்வரவு.

      நீக்கு
    2. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார், கீதா அக்கா.

      நீக்கு
  4. அழகான படங்கள். அனைத்தும் ரசித்தேன் - படங்களுக்கான குறிப்புகள் சேர்த்து!

    பதிலளிநீக்கு
  5. கேஜிஜி சாரின் வர்ணனைகள் அபாரம். நல்லா ரசிச்சிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா இது ஸ்ரீராம் இன்று வர்ணனைகள் கொடுத்தது....இன்றைய கமென்ட்ஸ் பார்த்தா ஸ்ரீராம்னு தான் எனக்குத் தோனுது...

      கீதா

      நீக்கு
    2. இல்லை தி.கீதா. வர்ணனைகளோடு வெளியிட்டதும் திரு கேஜிஜி தான். சந்தேகமே இல்லை. :)

      நீக்கு
    3. ஒரு ஞாயிறுதான் நான் ஏமாந்து போனேன் கௌ அண்ணா கொடுத்திருக்க நான் ஸ்ரீராம்னு நினைத்து கமென்ட் போட்டேன்...அப்புறம்தான் அக்கா உங்க கருத்து பார்த்தப்புறம் தான் தெரிஞ்சுது ஆஹா கௌ அண்ணா ன்னு...

      இன்னிக்கு நான் உஷார் ஆகிட்டேன் ஹா ஹ அஹ அதிரா ஸ்டைல்ல சொல்லனுன்னா என்னை யாரும் பேய்க்காட்ட முடியாதாக்கும்!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. கீதாக்கா இப்பத்தான் புரியுது....இது கேஜி (எஸ்) மாமா வின் சுற்றுலா படங்கள். (எபி வாட்சப் குழுமத்திலிருந்து கேஜிy, கேஜிஎஸ், கேஜிஜி (கௌ அண்ணா) இப்படி நான் அடையாளப்படுத்திக் கொண்டது) ஸோ இப்போதைய ஞாயிறு பதிவுகள் அவருடையது. கேஜிஎஸ் என்று நான் அடையாளப் படுத்திக் கொண்டிருந்தேனா...அதனால தான் கேஜி ந்னதும் கௌ அண்ணான்னு நினைச்சுட்டேன். கேஜிஜி க்கும் கேஜிக்கும் கொஞ்சம் குழம்பிப் போனேன்....கேஜிஜி நா கௌ அண்ணா கேஜி நா கேஜிஎஸ் னு புரிந்து கொண்டுவிட்டேன்....கரீக்டா ஆசிரியர்களே?!!!!..

      படத்துக்கான கமென்ட்ஸ் தான் ஸ்ரீராம் நு தெரியுது....

      ஸாரி, ஸ்ரீராம், கேஜி மாமா, கௌ அண்ணா ஏதாவது தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்கங்க....பேர் அடையாளத்தில் கொஞ்சம் குழம்பிப் போனேன்...இப்ப தெளிவாகிடுச்சு...ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    5. தி/கீதா, படங்கள் அனுப்பி இருப்பது கேஜிஎஸ். படங்களைக் கருத்துக்களோடு வெளியிட்டிருப்பது கேஜிஜி! உங்கள் மொழியில் கௌ அண்ணா! சரியா? ஶ்ரீராம் இல்லை/இல்லை/இல்லவே இல்லை. இல்லை, ல்லை, லை, ஐ, ........ (எதிரொலி)

      நீக்கு
    6. தப்பு, தாளம், தலைவலி மேளம்! நானும், உங்கள் எல்லோரோடும்தான் ஞாயிறு பதிவுகளைப் பார்ப்பது வழக்கம்.

      நீக்கு
    7. kg at எங்கள் Blog - 7 hours ago// பதிவு வெளிவந்ததும் டாஷ்போர்ட் காட்டிய/காட்டும் செய்தி! இன்றைய நிலவரம்.

      ஸ்ரீராம். at எங்கள் Blog - 1 day ago// இது நேற்றைய நிலவரம்! :)))))

      நீக்கு
    8. நாங்கல்லாம் "தப்பு, தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை" என்போம். இது புதுசா இருக்கு. ஆனால் இதையும் விளையாட்டில் சேர்த்துக்கலாம். :)))))

      நீக்கு
    9. நேற்றே ஸ்ரீராம் தலையில் குட்டி விட்டார். ஹிஹி அ.வ.சி.அ.வ.சி.

      நீக்கு
  6. பல"கை"யைப் பெரிசு பண்ணி பார்த்ததிலே கட்டண விபரங்கள் தான் எனத் தெரிகிறது. வழக்கம் போல் இந்தியருக்குக் குறைந்த கட்டணம், வெளிநாட்டினருக்கு அதிகக்கட்டணம்.

    பதிலளிநீக்கு
  7. "பலகைல என்ன எழுதி இருக்கு?" - "ஒரு கைலதான் எழுதியிருப்பாங்க... //

    ஹா ஹா ஹா பலகை ஒரு கை..சூப்பர்..

    ..பல கைகள் சேர்ந்து உருவாக்கிய பலகை!!

    "படம்" முடிஞ்சுடுச்சாம்// ஹா ஹா ஹா...அதான் எல்லாரும் ஏதோ சாப்பிடப் போறாங்க போல. அது சரி அப்ப அடுத்த வாரம் தொடராதா?!! உங்கள் படங்கள் வருமோ? இல்லை இன்னிக்கு ஓவர்னு சொல்லுறீங்களோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கே பயண விளக்கம் எழுதி போரடிச்சுடுத்தா?

    பலகை/ஒருகை. மிகவும் ரசித்தேன். பிரில்லியன்ட்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய படங்களுக்கான கேப்ஷன்ஸ் சூப்பர்!!! அத்தனையும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. படங்களும் வாசகங்களும் இரசிக்க
    வைத்தன.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    அனைத்துப்படங்களும், அதற்கு தகுந்தாற்போல் விமர்சன வாசகங்களும் நன்றாக உள்ளது. ரசித்தேன். இயற்கையின் சூழலுடன் அழகிய இ(ப)டங்கள். படங்களின் வரிசையில் முதலிலிருந்து 2 ஆவதும், கடைசியிலிருந்து மேலே 2 ஆவதும், படத்திற்கேற்ற வாசகங்கள் அருமையாக இருந்தது. மிகவும் ரசித்தேன். (பலகை.. ஒருகை). (கொஞ்சம் சுருக்கிக் சொன்னால் பிடிக்குமேயென்று வெண்டைக்காய் பாணியில் கருத்திட்டு விட்டேனோ.!)ஹா ஹா ஹா

    வேட்டி கட்டிய மரம். அ(ப)டர் மரம் மிகவும் நன்றாக உள்ளது. வானமே எனது எல்லை என்று தனித்துப்பறக்கும் பறவை ராஜா மிக அழகு. ஒவ்வொரு படங்களிலும் மரங்களின் ராஜ்ஜியத்தை ரசித்தேன்.

    கூண்டிலிருந்தால்தான், ஒவ்வொருவரும் படங்களாக எடுக்கிறார்களோ என்னவோ என, கேமராவில் மாட்டாமல் ஒரு மாறுதலுக்காக "அப்பாடா"வென வெளியே மரமொன்றில் தனியாக வந்தமர்ந்து சிந்திக்கும் என்னையுமா? அதுவும் அதே பெயரில்... எனக்கேட்கிறார் ஏழாவது படத்திலிருப்பவர்.. ஹா ஹா ஹா ஹா.

    படங்கள் எங்கு எடுக்கப்பட்டவை? எல்லா படங்களும், அதற்கேற்ற வர்ணனைகளும் மிகவும் நன்றாக உள்ளது. மிக, மிக ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா... வருகைக்கும், வரிவரியான ரசனை வார்த்தைகளுக்கும் நன்றி. இது எந்த இடம் என்று சென்ற வாரமே சொன்ன மாதிரி குவாஹாட்டி ஜு! இப்போதும் லேபிளில் இருக்கிறது. இந்த இடத்தை வைத்து சில வாரங்கள் ஓடும்!

      நன்றி.

      நீக்கு
    2. // இந்த இடத்தை வைத்து சில வாரங்கள் ஓடும்!//
      ஹா ஹா ஹா சிறு திருத்தம்:), சில மாதங்கள் ஓடும்:)).. ஒரு கு.ரங்காரை வச்சே ஒரு போஸ்ட் போட அவரால மட்டும்தேன் முடியும் ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)..

      நீக்கு
  12. வெளியே எந்தச் சலனமுமில்லாமல் சுகந்திரமாக தடியில் இருக்கும் என் கிரேட் குரு ரொம்ப அழகு...

    ஊமத்தம்பூ ஊரை நினைவு படுத்துது.

    காரிலே இருக்கும் பிள்ளையாரை டக்கெனப் பார்க்க, நடு ரோட்டில் மரத்தில் தொங்குவதைப்போல தெரியுது:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா. காரில் இருக்கும் பிள்ளையார் வெளியே மரத்தடியிலா? உங்கள் கண்ணில் அரசமரத்தடி பிள்ளையார் தெரிகிறார் போல!

      நீக்கு
  13. மனமொரு குரங்கு என்பார்கள் அதைப்படம் பிடிக்க முடியுமா குரங்குகளின் சேட்டைகள் என்றும்ரசிக்கலாம் அதுவுமவை கூண்டுக்குள் இருந்தால் பயமில்லாமல் ரசிக்கலாம்

    பதிலளிநீக்கு
  14. வேட்டி கட்டியிருக்கும் மரம் அருமை..

    அன்னலும் நோக்கினார் கதைதான்.. குரங்கு மனிதனை பார்க்க... மனிதன் குரங்கை வியந்து பார்க்க....

    பதிலளிநீக்கு
  15. குரங்கு வியாபித்த இடத்தில் மானும் புகுந்தது.
    பலகையில் ஒரு கைதான் எழுதி ரிஉக்கும்.
    சூப்பர்.
    எனக்கு இது ஸ்ரீராம் கைவண்ணம் என்றே தோன்றுகிறது
    பல மாதங்கள் தொடருமா. ஆஹா.👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பல மாதங்கள் ஓடாது. சில வாரங்கள் ஓடும்!

      நீக்கு
  16. அழகான் படங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட வரிகளும் ரசனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!