கீதா ரெங்கன் :
பெண்களின் மனது ஆழமானதா? மனதில் என்ன இருக்கு என்பதைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமமா? அப்படி பார்த்தால் மனம் என்பதே ஆழமானதுதானே ?(மூளையின் ஒரு பகுதிதான் மனம். மூளையைப் பற்றி இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாது அது ஒரு wonder. அதுமுடிவற்றதுனும் ஆழமானதுன்னும் மருத்துவ உலகம் சொல்லுது) ஏன் பெண்களின் மனம் மட்டும் அப்படிச் சொல்லப்படுகிறது?
$ ஆழம் என்பதை விட சிக்கலானது என்றிருக்கலாம்.
எந்தப்பட்டம் யார் கையில் என்று புதிர் போடுவார்கள் அந்த மாதிரி வழியில் எத்தனை திசை மாற்றங்கள் இருக்கின்றன என்பது ஆழத்தை கூட்டிக் குறைத்துக் காட்டலாம்.
# பெண்களின் மனம் புரிந்து கொள்ள முடியாத மர்மமா என்று ஒரு ஆண் கருத்து சொல்வது சரியாக இருக்காது. பெண்கள் நேரடியாக எதையும் சொல்வதற்கு பதிலாக சற்று சுற்றிவளைத்து பூடகமாக சொல்வார்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.
ஒரு பெண் இல்லை என்று சொன்னால் பார்க்கலாம் என்றும், பார்க்கலாம் என்று சொன்னால் சரி என்றும், சரி என்று சொன்னால் அவர் பெண்ணே அல்ல என்றும் ஒரு ஜோக் சொல்வது வழக்கம். இதெல்லாம் வெறும் ஜோக் தான். ஜோக்கை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
& ரொம்ப யோசித்துப் பார்த்தேன், நான் ஒன்று சொல்லலாமா வேண்டாமா என்று. சரி என்ன ஆனாலும் சரி, சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தேன். சொல்லிவிடவா? 1
அடக்க ஒடுக்கமான அதிரா (கேட்ட குண்டக்க மண்டக்க கேள்வி!)
1. எனக்கு ஒரு பழக்கம் இருக்கு, நாம் வேலை செய்யும் இடங்களில், ஜிம் போகுமிடம்,மோல்கள் இப்படி அடிக்கடி போகும் இடங்களில்.. நான் எப்பவும் ஒன்றையே பாவிப்பேன், அதாவது ஸ்ராவ் றூம் எனில், ஒரு கதிரையையே பிடிச்சு இருப்பேன், அதில் வேறு ஆராவது இருந்தால், ஒருமாதிரி இருக்கும் இடம் மாறி இருக்க.
இதேபோல ஜிம் இலும் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் மெசின்களில்தான்[ஒரே மெஷின் பல இடத்தில் இருக்குமெல்லோ] வேர்க் பண்ண பிடிக்கும், ரொயிலட்டுகள்கூட, மாத்தி மாத்திப் போக மாட்டேன் ஏதோ டிஸ்கஸ்ட்டிங் போல இருக்கும்.. ஒன்றையே யூஸ் பண்ணுவேன்.. இப்படிப் பழக்கம் உங்களுக்கும் உண்டோ?.. இப் பழக்கம் எங்கள் அப்பாவில் இருந்தது, வீட்டில் ஒரு குறிப்பிட்ட செயாரை பிடிச்சு அதில்தான் எப்பவும் இருப்பார், வேறு ஆரும் இருந்திட்டால், இருக்காமல் உலாத்திக்கொண்டிருப்பார் அப்போ நமக்குப் புரிஞ்சிடும் ஹா ஹா ஹா:).
# எல்லாம் ஒரு பழக்கம் தான். வழக்கமான (பழைய) தலையணை மேல் ஒரு பிடிப்பு வருகிற மாதிரி. இதுவே சற்று தீவிரமாக இருந்தால் அது ஒருவகை மனக் கோளாறு என்று சொல்கிறார்கள்.
என்அலுவலக நண்பர் ஒருவர் டாய்லெட் சென்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தைதான் பயன் படுத்துவார். விசாரித்தபோது "நியூமராலஜிப்படி எனக்கு மூணாம் நம்பர்தான் ராசி" என்று சொல்லி வியக்க வைத்தார்.
& உண்டு, உண்டு. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. மனோதத்துவ அறிவியலாளர்கள், இதற்கு 'மோனோ ஏக்தோ அசம்பாவ்யாம் ஃபோபியானோ' என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்படி ஒரே இடம், ஒரே வகை இருக்கை என்று இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு சௌகரியம் - எதைத் தேர்ந்தெடுப்பது என்று அனாவச்யமாக நேரத்தை வீணடிக்கவேண்டாம். காண்டீனில் வரிசையில் நின்று ஒவ்வொன்றாக தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு வரும்போது அப்பளக் கூடையில் இருக்கும் எல்லா அப்பளங்களும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கும். நிறைய பபிள்ஸ் இருக்கின்ற முழுவதும் பொரிந்துள்ள, அப்பளங்களை ஒரு பார்வை ஆழமாகப் பார்ப்பேன். ஏதோ ஒன்று எனக்காக பொறிக்கப்பட்டது என்று பெயர் எழுதியிருப்பதுபோல் தோன்றும். அதை எடுத்துக்கொள்வேன் ! சிரிக்காதீங்க!
& உண்டு, உண்டு. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. மனோதத்துவ அறிவியலாளர்கள், இதற்கு 'மோனோ ஏக்தோ அசம்பாவ்யாம் ஃபோபியானோ' என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்படி ஒரே இடம், ஒரே வகை இருக்கை என்று இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு சௌகரியம் - எதைத் தேர்ந்தெடுப்பது என்று அனாவச்யமாக நேரத்தை வீணடிக்கவேண்டாம். காண்டீனில் வரிசையில் நின்று ஒவ்வொன்றாக தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு வரும்போது அப்பளக் கூடையில் இருக்கும் எல்லா அப்பளங்களும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கும். நிறைய பபிள்ஸ் இருக்கின்ற முழுவதும் பொரிந்துள்ள, அப்பளங்களை ஒரு பார்வை ஆழமாகப் பார்ப்பேன். ஏதோ ஒன்று எனக்காக பொறிக்கப்பட்டது என்று பெயர் எழுதியிருப்பதுபோல் தோன்றும். அதை எடுத்துக்கொள்வேன் ! சிரிக்காதீங்க!
2. எப்போதாவது காண்டம் கேட்டதுண்டோ?.. அதில் நம்பிக்கை இருக்குதோ?
# காண்டம் என்றால் நாடி ஜோதிடத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நேரடி அனுபவம் இல்லை. பிரமிக்க வைக்கும் சில "கதைகளைக்" கேட்டிருக்கிறேன். எங்கள் பிளாகிலும் குறிப்பிட்டதாக நினைவு. எல்லாம் மோசடி என்று பரவலாகப் பேசப் படுகிறது.
& ஒருவேளை சோழி ஜோஸ்யமோ? கேட்டதில்லை.
ஏஞ்சல் :
1, எங்கே சென்றாலும் எதையாவது நினைவா வாங்கி வரும் பழக்கமுடையவரா நீங்கள் ?அப்படி சமீபத்தில் வாங்கியது என்ன ?
$ ஆனந்தமான நினைவுகளை
என் நினைவுப் பொருள்கள் சற்றே வித்தியாசமானவை
ஒரு பதிவு தயாராகிறது.
# அந்தப் பழக்கம் உண்டு. அண்மையில் சிங்கப்பூரிலிருந்து சாவி வளையங்கள் சாக்லேட்கள் தவிர ஒகாரினோ எனும் ஆச்சரியம் தரும் ஊதல் இசைக் கருவி.
& கோயில்களுக்குச் சென்றால், அதன் ஸ்தலபுராணம், புத்தக வடிவில் கிடைத்தால் வாங்கி வருவேன். படம் பார்த்து மேலோட்டமாகப் படித்து பத்திரப்படுத்தி வைப்பேன். சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றால், வித்தியாசமாக ஏதாவது கண்ணில் பட்டால், பர்ஸுக்கு அடங்கிய செலவு என்றால் வாங்குவேன். இல்லையேல் வாங்கமாட்டேன்.
2, சமீபத்தில் தியேட்டர்ல படம் பார்த்தீர்களா ? என்ன படம் ?
# குழந்தைகள் படம் 7D பார்த்தேன்.
& ஒரு பெரிய கண் படம். (ஆப்பரேஷன் தியேட்டரில்)
& ஒரு பெரிய கண் படம். (ஆப்பரேஷன் தியேட்டரில்)
3, //ஏன் // என்ற கேள்வியை எப்போ எந்த சூழலில் கேட்பது சிறந்தது ? கடந்த கால நிகழ்வை வைத்தா இல்லை நிகழ்க்கால சம்பவங்களை வைத்தா ?
$ ஏன் என்ற கேள்வியைத் தனியாகக் கேட்காமல் (5W + 1H ) யார், என்ன, ஏன், எங்கு, எப்போது, எப்படி என்று கேட்டு பதில்களை ஆராய்ந்தால் நேற்று இன்று நாளை எப்போதும் நல்லது.
# அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்பது எப்போதும் சிறந்தது. செயல்பாடு எண்ணத்தின் தூண்டலால் பிறக்கிறது. எண்ணம் என்பது கடந்தவைகளின் தாக்கத்தால் உண்டாகிறது.
& 'ஏன்' என்ற கேள்வியை எப்போ எந்த சூழலில் கேட்கக்கூடாது என்பது மட்டும் எனக்கு அனுபவபூர்வமாகத் தெரியும்.
உதாரணம் :
திருமதி : " ஏங்க - தீபாவளிக்கு என்னுடைய அம்மா அப்பா இங்கே வராங்களாம். "
திருமதி : " இந்த வருடம் தீபாவளிக்கு நான் பட்டுப்புடவை எடுத்துக்கலாம்னு இருக்கேன்."
திருமதி : " இந்த வெங்காயங்களைக் கொஞ்சம் உரித்துத் தாங்க "
ஆக, திருமதி சொல்வது எதற்கும் ஏன் என்று கேட்டால் நான் கையேந்தி பவன்களைத் தேடி அலையவேண்டியதிருக்கும்!
& 'ஏன்' என்ற கேள்வியை எப்போ எந்த சூழலில் கேட்கக்கூடாது என்பது மட்டும் எனக்கு அனுபவபூர்வமாகத் தெரியும்.
உதாரணம் :
திருமதி : " ஏங்க - தீபாவளிக்கு என்னுடைய அம்மா அப்பா இங்கே வராங்களாம். "
திருமதி : " இந்த வருடம் தீபாவளிக்கு நான் பட்டுப்புடவை எடுத்துக்கலாம்னு இருக்கேன்."
திருமதி : " இந்த வெங்காயங்களைக் கொஞ்சம் உரித்துத் தாங்க "
ஆக, திருமதி சொல்வது எதற்கும் ஏன் என்று கேட்டால் நான் கையேந்தி பவன்களைத் தேடி அலையவேண்டியதிருக்கும்!
4, இப்போல்லாம் பேய் னு சொன்னாலோ எழுத்தை பார்த்தாலோ குபீர்னு சிரிக்கிறேன் இதன் காரணம் என்ன ? ஒருவேளை எங்கள் பிளாகில் வந்த சிரிப்பு பேயார் காரணமா இருப்பாரோ ?
$ சார்லீ சாப்ளின், நாகேஷ்,வடிவேலு யாரை நினைத்தாலும், பல்கொட்டிப் பேயாக இருந்தாலும் சிரிப்பது இயற்கையே.
# நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
& நமக்குப் பரிச்சயமான பேய் என்றால் சந்தோஷமாகத்தான் இருக்கும்.
& நமக்குப் பரிச்சயமான பேய் என்றால் சந்தோஷமாகத்தான் இருக்கும்.
5, நாம் நினைப்பது பிறருக்கும் பிறர் நினைப்பது நமக்கும் தெரிந்தால் உணர்ந்தால் என்னாகும் ? அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் ?
$ அப்புறம் என்ன கொஞ்சம் வாட்ட சாட்டமாக வளர்ந்தவர் பற்றி தப்பாக நினைக்கத் தோன்றுமா என்ன!
# மாபெரும் குழப்பம் உண்டாகும். அப்படி நேருமானால் கண்காணாமல் ஓடி ஒளிவது நன்று.
& எப்பவும் தனித்து எங்கேயும் போகாமல், ஒரு கூட்டத்துடனே போய் வருவேன். பல எண்ணங்கள் சூழ்ந்த இடத்தில் என்னுடைய எண்ணம் எது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதுதானே! தனியாக நடைப்பயிற்சி செய்ய இயலாமல் போய்விடும். இல்லையேல் ' எந்தக் கடையில நீ அரிசி வாங்குறே ?' என்று நினைப்பதோ ' ச்சே ஓட்டடைக்குச்சிக்கு யாருடா சுடிதார் மாட்டிவிட்டது ' என்றோ நினைப்பது எதிரே வருபவருக்குத் தெரிந்தால் என்னைச் சட்டினி செய்துவிடமாட்டார்களா!
6, மாடர்ன் ஆர்ட் எதை குறிக்கிறது எதை நமக்கு சொல்ல வருகிறது ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை தற்கால மாடர்ன் ஆர்ட் நீங்கள் பார்த்து ரசித்த மாடர்ன் ஆர்ட் எதாவது இருந்தா எனக்கும் விளக்கவும் ?
$ மாடர்ன் ஆர்ட் தற்காலத்ததாகத்தானே இருக்கும்? அது எதைக் குறிக்கிறது என்று நமக்கு விளங்கிவிட்டால் அது சாதாரண ஆர்ட் ஆகிவிடும்.
# மாடர்ன் ஆர்ட் என்பது மன ஓட்டத்தின் பிரதிபலிப்பு என்கிறார்கள்.
இதில் எனக்குப் புரிந்த சில விஷயங்கள்:
ஓர் ஆமை, மாட்டிடம் வந்து, "என் குழந்தைக்காகப் பால் கறந்து கொள்ளவா?" என்று கேட்கிறது. அதற்கு அந்த நாலு கால் பிராணி 'சாரி (அம்மையே) ஆமையே நான் ஒரு காளை' என்று சீற்றமாகச் சொல்கிறது. கேள்வி பதிலைக் கேட்ட சிரிப்புப் பேய்கள் சுற்றிலும் விழுந்து விழுந்து சிரிக்கின்றன. எல்லாவற்றையும் நோட்டமிடும் வெள்ளைக்காரன், 'இதில் எதற்கு வரி விதிக்கலாம்? சிரிப்புக்கா, சிந்தனைக்கா, பாலுக்கா, அல்லது காளைக்கா' என்று யோசிக்கிறான்!
ஓர் ஆமை, மாட்டிடம் வந்து, "என் குழந்தைக்காகப் பால் கறந்து கொள்ளவா?" என்று கேட்கிறது. அதற்கு அந்த நாலு கால் பிராணி 'சாரி (அம்மையே) ஆமையே நான் ஒரு காளை' என்று சீற்றமாகச் சொல்கிறது. கேள்வி பதிலைக் கேட்ட சிரிப்புப் பேய்கள் சுற்றிலும் விழுந்து விழுந்து சிரிக்கின்றன. எல்லாவற்றையும் நோட்டமிடும் வெள்ளைக்காரன், 'இதில் எதற்கு வரி விதிக்கலாம்? சிரிப்புக்கா, சிந்தனைக்கா, பாலுக்கா, அல்லது காளைக்கா' என்று யோசிக்கிறான்!
7, நகைச்சுவை உணர்வு என்பது இயல்பிலேயே அமையும் குணமா ?
$ அனுபவங்களால் தூண்டப்படலாம்.
# ஆம்.
& எனக்குத் தெரிந்து, sagitarians எல்லோரும் பிறவியிலேயே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.
8, இக்கால குழந்தைகள் அதாவது 10 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளிடம் அப்பாவித்தனம்//இன்னொசென்ஸ் இருக்கிறதா ?
$ குழந்தைகள் வளரும் இடம் சூழ்நிலையால் குழந்தைத்தனம் மாறலாம்.
அவர்களும் நம்மைப்போல் அம்புலிமாமா கதைகளை ஆசைப்பட்டு படிக்கவில்லை என்றாலும் anime பார்க்கிறார்கள். Anime பார்க்கும் சிறுவனிடம் என்ன கார்ட்டூன் என்று கேட்டுப்பாருங்கள்.
# அடம் பிடிவாதம் சாமர்த்தியம் இருக்கிறது. இன்னசன்ஸ் கூட இருக்கிறது ஆனால் வெளிப்படையாக அல்ல.
& பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் இன்னசன்ஸ் எப்பவும் உண்டு. ஆனால் அந்தக் காலக் குழந்தைகளிடம் இருந்தது நூறு சதவிகிதம் என்று கொண்டால், இந்தக் காலக் குழந்தைகளிடம் நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் வரை என்று சொல்லலாம்.
& பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் இன்னசன்ஸ் எப்பவும் உண்டு. ஆனால் அந்தக் காலக் குழந்தைகளிடம் இருந்தது நூறு சதவிகிதம் என்று கொண்டால், இந்தக் காலக் குழந்தைகளிடம் நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் வரை என்று சொல்லலாம்.
9, கோபம் வெறுப்பு பொறாமை எரிச்சல் போன்ற துஷ்ட குணங்கள் எங்கே வளர்கின்றன ? இவை இயற்கையில் அமைந்த குணங்களா இல்லை சூழலால் உருவாகின்றனவா ?
$ எல்லா துஷ்ட குணங்களுக்கும் நாம் தான் காரணம்.
# எல்லா குணங்களும் மனதில் ஆசைமுதலான ஐந்து உணர்ச்சிகளால் வளர்கின்றன. சூழலும் நம் குறைபாடுகளும் காரணம்.
& "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
& "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
10, நாம் எல்லாருமே ஒரே மாதிரி இருந்தா அதாவது ஒரே குணம் இயல்புடன் இருந்தா இந்த உலகம் எப்படி இருக்கும் ?
$ எறும்பு புற்று போலிருக்கும்.
# மிகவும் அலுப்பாக இருக்கும்.
& நானே கேள்வி கேட்டு, நானே பதில் சொல்லி, நானே இரசித்து, நானே சிரித்து, நானே கமெண்ட் எழுதி அதற்கும் நானே நன்றி சொல்லி ........ ஒரே நாளில் பைத்தியம் பிடித்துவிடும்.
$ எறும்பு புற்று போலிருக்கும்.
# மிகவும் அலுப்பாக இருக்கும்.
& நானே கேள்வி கேட்டு, நானே பதில் சொல்லி, நானே இரசித்து, நானே சிரித்து, நானே கமெண்ட் எழுதி அதற்கும் நானே நன்றி சொல்லி ........ ஒரே நாளில் பைத்தியம் பிடித்துவிடும்.
11, மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுளை நிந்திப்பதேன் ?
$ அவனுள் இருக்கும் கடவுளோ?
# எல்லாம் அவன் செயல் என்பதால்தான்.
& ஆமாமுங்க - பெண்கள் எல்லாவற்றிற்கும் கணவனை மட்டும் நிந்திக்க முடியாது அல்லவா! கடவுள் என்று ஒருவர் இருப்பதால், அவர் கணவர்களின் பாரத்தை சுமக்கிறார்! (கடவுளுக்கு நன்றி சொல்லும் கணவன்மார்கள் சார்பாக !)
& ஆமாமுங்க - பெண்கள் எல்லாவற்றிற்கும் கணவனை மட்டும் நிந்திக்க முடியாது அல்லவா! கடவுள் என்று ஒருவர் இருப்பதால், அவர் கணவர்களின் பாரத்தை சுமக்கிறார்! (கடவுளுக்கு நன்றி சொல்லும் கணவன்மார்கள் சார்பாக !)
12, பேய்கள் இசைக்கு மயங்குமா ?
$ பேய் இசைக்கு மயங்குமா தெரியாது ஆனால் இசைவாணர்கள் pay க்கு மயங்குவதுண்டு.
"நான் என்ன பாம்பா - இசைக்கு எல்லாம் மயங்க! கால் இல்லேன்னா என்னையும் பாம்பு என்று சொல்லிடுவீங்களா ? கிர்ர்ர்ர்ர் !"
& நான் பதில் சொல்வதற்குள் பேயார் முந்திக்கொண்டு ஏதோ சொல்லியிருக்கார்!
13 ,சமூக வலைத்தளங்கள் இந்நூற்றாண்டின் வரமா ? அல்லது சாபமா ?
$ நெருப்பு வரமா சாபமா?
# இணையதளம் வரம். சில சமூக தளங்கள் சாபம்.
& வரம் / சாபம் எல்லாம் பயன்படுத்துபவர்களைப் பொறுத்த விஷயம். நல்ல விஷயங்களைத் தேடிக் கற்றுக்கொள்பவர்களுக்கு அவை வரப்ரசாதம்.
& வரம் / சாபம் எல்லாம் பயன்படுத்துபவர்களைப் பொறுத்த விஷயம். நல்ல விஷயங்களைத் தேடிக் கற்றுக்கொள்பவர்களுக்கு அவை வரப்ரசாதம்.
நெல்லைத்தமிழன் :
1. வாட்சப்ல, இந்த ஸ்லோகம் தினம் சொல்லுங்க, இதை 10 பேருக்கு ஃபார்வார்ட் பண்ணுங்க, உங்களுக்கு எல்லா நன்மையும் கிடைக்கும், அதிசய கண்டுபிடிப்பு, தினம் பாகல்காய் ஜூஸை ரெண்டு ஸ்பூன் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர் வருவதே இல்லை என்று கண்டமேனிக்கு ஃபார்வர்ட் செய்கிறார்களே.. அவர்கள் மனநிலையைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
# பதிவுகள் போடுவதும், லைக்குகள் தேடுவதும், பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரிக்க ஏங்குவதும் கிட்டத்தட்ட ஒரு மனோவியாதி அளவுக்கு வந்து விட்டது. எங்கிருந்தோ வந்து விழும் தகவலை யாருக்காவது பயன்படும் என நம்பி அதிகம் பகிருங்கள் என்ற வேண்டுகோளுடன் பரபரப்புவது அதிகம் ஆகிவிட்டது. அவ்வகை "வியாதியஸ்தர்களை" அடையாளம் கண்டு கொள்வது எளிதாகி விட்டது.
& அவர்கள் மனநிலை பற்றி ஒன்றும் அதிகம் நினைப்பதில்லை. லேசாகச் சிரித்துவிட்டு கடந்துவிடுவேன். அப்படி வரும் செய்திகளை நிச்சயம் ஃபார்வார்ட் செய்யமாட்டேன்!
2. ஒரு உறுப்புக்கு மத்திரம் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்ற வரம் கிடைத்தால், எந்த உறுப்பு முக்கியம் என்று நீங்க நினைப்பீங்க?
# கண், அடுத்தபடி காது. (உறுப்பு என்றால் மூளை இதயம் போன்ற உள் உறுப்பு அல்ல என்று எண்ணி பதில் சொல்கிறேன்.)
& என்னுடைய பதிலும் அதே, அதே!
3. படிப்பில் ரொம்ப சூட்டிகையாக முதல் ரேங்க் வாங்கறவங்க எல்லாம் வாழ்க்கைல பெரிய நிலைக்கு வர்றாங்களா?
# இளம் வயதில் படிப்பில் கெட்டி என்பது எதிர்காலத்தில் மேன்மை எய்த வாய்ப்பைத் தேடும் சாமர்த்தியம் வரக்கூடும் என்பதற்கான அறிகுறி. அந்த சாமர்த்தியம் நினைவாற்றலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, பகுத்தறியும் திறன் குறைந்திருக்குமானால் out of school , out of comfort என்றாகிவிடும். அந்த வகை முதன்மையாளர்கள் பத்தாம் வகுப்பில் மின்னி பன்னிரண்டாவது வகுப்பில் அஸ்தமனமாகிவிடுவார்கள்.
4. இந்த குணம் ரொம்ப முக்கியம், இந்த குணம் மோசமானது என்று நீங்கள் நினைக்கும் ஒரு குணம் என்னது?
# தயை முக்கியம். வஞ்சனை மோசம்.
& அன்புள்ளம் மு. கோபம் மோ.
5. தீபாவளிக்கு புது டிரஸ், ஆர்வம் இதெல்லாம் இப்போதும் இருக்கிறதா?
# இலவச (அன்பளிப்பு) உடுப்புகள் அதிகரித்து புத்தாடை விருப்பத்தை அறவே நீக்கி விட்டது.
& கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் வருத்தப்படுவது இல்லை. நிற்க. எனக்கு சென்ற வருடம் கிடைத்த இலவச pant bitஐத் தைக்கக் கொடுத்து வாங்கி வைத்துள்ளேன். சற்றுமுன் அமேசானில் ஒரு வெள்ளை நிற சர்ட் ஆர்டர் செய்தேன். நாளை வந்துவிடும்.
6. ஏன் பெண்களுக்கு தங்க நகைகளின்மேல் அவ்வளவு ஆசை? அதுபோல் ஆண்களை அளவுக்கு அதிகமாக வசீகரிப்பது என்னது?
# தங்கம் மதிப்பு மிக்கது என்பது உலகளவில் இரத்தத்தில் ஊறிப்போன விஷயம். பெண்கள் நகைகளை விரும்புவதுபோல ஆண்கள் தங்கக் காசு, நாணயங்களை விரும்பக்கூடும். பெண்கள் அழகு படுத்திக்கொள்ள ஆசைப் படுவது இறைவன் கொடுத்த வரம் (அ) சாபம்.
ஆண்கள் gadget பிரியர்கள். பக்தி அல்லது போதை வசப்பட்ட ஆண்கள் இந்த விதிக்கு விலக்கு. அவர்களது ஈடுபாடு வேறு திசையில் இருக்கும்.
& புதுசாக, வித்தியாசமாக ஏதாவது பொருள் விளம்பரத்தில் பார்த்தால் - ஐநூறு ரூபாய்க்குள் அதன் விலை இருந்தால், வாங்கிவிடுவேன்.
==========================================
காடராக் 'டூ'
அப்புறம் சில நாட்கள் கழித்து, சர்ஜரி என்று கேள்விப்பட்டவுடன், எல்லோரும் என்ன செய்வார்களோ அதை செய்தேன். அதாவது second opinion தேடிச் சென்றேன். அது பம்மலில் உள்ள கண் ஆலயம் ஒன்று.
மத்யான நேரத்தில் வந்தால் கூட்டம் இருக்காது என்று தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் அங்கே பயங்கரக் கூட்டம்.
உட்கார்ந்து, காத்திருந்து, உட்கார்(ந்திரு)ந்து, மீண்டும் சொட்டு மருந்துகள், எழுத்துக் கூட்டல்கள் எல்லாம் முடிந்து, அவர்களின் டாக்டர், " கவலையே வேண்டாம், கண்ணாடி அணிந்தால் போதும்" என்று சொல்லிவிட்டார். அங்கேயே அப்போதே ஸ்டைலான, உடையாத வகை கண்ணாடி ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தேன். கண்ணாடி மூன்று நாட்களில் வீடு தேடி வந்து சேர்ந்தது. அதை இன்னும் பத்திரமாக, அதிகம் பயன்படுத்தாமல் வைத்துள்ளேன்.
இதெல்லாம் மூன்று வருடங்களுக்கு முந்தைய கதைகள்.
அப்புறம் காடராக்ட் விஷயத்தை சுத்தமாக மறந்திருந்தேன்.
மீண்டும் பார்வைக் கோளாறு மூன்று மாதங்களுக்கு முன்பு தலை தூக்கி என்னைப் பார்த்தது.
கூகிளில் தேடி பாவனா படம் பார்க்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் - வலது கண்ணால் பார்த்தால் துல்லியமாக பார்க்க முடியும்.
அதே படத்தை வலது கண்ணை மூடிக்கொண்டு, இடது கண்ணால் சற்று தூரத்திலிருந்து பார்த்தால், பா என்னைப் பார்த்து, பேய் காட்டுவது போல இருக்கும்! (சுருக்கமாகச் சொன்னால் தமன்னா போல இருக்கும்.!)
(யார் அங்கே பல்லை நற நற என்று கடிப்பது? நெ.த?)
பேச்சு வாக்கில் பார்வைக் கோளாறு விஷயத்தை என் பையனிடம் சொல்லி வைத்தேன்.
சரி, ஐ டெஸ்ட் செய்துவிடலாம் என்று சொல்லி பையர் என்னை அழைத்துச் சென்ற இடம் பெங்களூரின் 'போ அப்பா ஐ டோண்ட் கேர் ' ஹாஸ்பிடல்.
சரிதான், - விடாது கருப்பு என்று இது என்னைத் துரத்துகின்றதே என்று நொந்துபோனேன்.
ஆனால், இந்த ஹாஸ்பிடலில் கண்ணைப் பரிசோதனை செய்யும் டாக்டர் அழகாக, அனுஷ்கா போல இருந்தார். (நெ த பல்லை இரண்டாம் முறையாக நற நறக்கிறார்!)
வழக்கமான சொட்டு மருந்து + சோதனைகள் முடித்த பின்னர் இங்கேயும் துண்டுச் சீட்டு எழுதினார்கள். இப்போ விலைவாசி எல்லாம் ரொம்பக் கூடிடுச்சு என்று தெரிந்துகொண்டேன்.
26500 / 30000/ 32500/ 39000
65000 /
+ Lab, Medicines etc.
பின்னாலேயே ஒரு க்ளூவும் கொடுத்தார்கள். அதிக பட்சமான அறுபத்தைந்தாயிரம் சில இன்சூரன்ஸ் கம்பெனிகள் அனுமதிப்பதில்லை உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் செக் செய்துகொள்ளுங்கள்.
நன்றி, அப்புறம் மீண்டும் தொடர்புகொள்கிறோம் என்று சொல்லி புறப்பட்டோம்.
==================================
அடுத்த வாரம் தொடர்கிறேன்.
===================================
26500 / 30000/ 32500/ 39000
65000 /
+ Lab, Medicines etc.
பின்னாலேயே ஒரு க்ளூவும் கொடுத்தார்கள். அதிக பட்சமான அறுபத்தைந்தாயிரம் சில இன்சூரன்ஸ் கம்பெனிகள் அனுமதிப்பதில்லை உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் செக் செய்துகொள்ளுங்கள்.
நன்றி, அப்புறம் மீண்டும் தொடர்புகொள்கிறோம் என்று சொல்லி புறப்பட்டோம்.
==================================
அடுத்த வாரம் தொடர்கிறேன்.
===================================
நலம் வாழ்க...
பதிலளிநீக்குவாங்க...வாங்க...
நீக்குவாழ்க நலம்!
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ சார்.
நீக்குவணக்கம் து செ சார்!
நீக்குவிடாக்கண்டன் கேள்விகளும் கொடாக்கண்டன் பதில்களுமாக...
பதிலளிநீக்குஅருமை...
விடாக் கண்ட கேள்விகளும், கண்ட மாதிரி பதில்களும்!
நீக்குபேய்களை விட்டு விடாமல் நாம பாராயணம் செய்துகொண்டிருப்பதால்
பதிலளிநீக்குநிச்சயம் அவற்றின் அருளாசி உண்டு என்று நினைக்கிறேன்...
இருக்கட்டுமே!
நீக்குவணக்கம் எல்லோருக்கும்..
பதிலளிநீக்குநன்றி எனது கேள்விக்குப் பதில் கொடுத்த்ருப்பதற்கு...இன்னும் முழுவதும் வாசிக்கவில்லை ...அப்புறம் தான் வர முடியும்! பவர் கருணை வைக்க வேண்டும்!
கீதா
வணக்கம் கீதா ரெங்கன்... வாங்க...
நீக்குவணக்கம் கீதா ரெங்கன்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை ததும்பும் பொன்னாளாக அமையவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி!
நீக்குஅனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பேயாரைப் பார்த்ததுமே எனக்கு சந்தோஷம் வருது! அது ஏன்னு தெரியலை! அதிலும் இங்கே வந்து கேள்விக்குப் பதில் வேறே சொல்லி இருக்கார்.
பதிலளிநீக்குபேயார் சார்பில் நன்றி!
நீக்குஹாஹா :) கீதாக்கா எனக்கும் பேயாரை பிடிச்சுப்போச்சு :) கலகலன்னு இருக்கார் இந்த லகலக பேயார் :)
நீக்குஅ ர ம, த ர ம, பா ர ம, எல்லாம் ஆச்சு, இப்போ பே ர ம வந்துடுச்சா!
நீக்குஎனக்குத் தெரிந்து அல்லது நான் அறிந்தவரையில் இந்தக்காலக் குழந்தைகள் gadgets and devices இவற்றுக்கு அடிமையாகி இருக்கின்றனர். பெற்றோரும் செல்ஃபோன், ஐபாட் ஆகியவற்றைக் குழந்தைகளிடம் கொடுத்துவிடுகின்றனர். இது எவ்வளவு தூரம் நல்லது எனத் தெரியவில்லை. குழந்தைக்குப் பிடிவாதம் தான் அதிகரிக்கிறது. அதோடு சின்ன வயசிலேயே இவற்றை வெகு நேரம் பார்ப்பதால் கண்கள் சீக்கிரம் சோர்வடைகின்றன.
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குஎல்லாக் கேள்விகளும் அருமை. திரு கேஜிஎஸ் ஏதோ பதிவு தயாராகிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநாங்களும். ஆ எ பா.
நீக்குநெல்லைத்தமிழர் கேட்டிருப்பது போல் எல்லாப் பெண்களும் நகைக்கு அடிமை இல்லை. நகைகளே அணிய விரும்பாத பெண்களும் உண்டு. சில ஆண்கள் தாம்புக்கயிறு அளவில் கழுத்தில் சங்கிலி, கைகளில் கங்கணம், ப்ரேஸ்லெட் என அணிகின்றனரே! அவர்களை நெ.த. பார்த்ததே இல்லையா? கட்டை விரல் தவிர்த்த எல்லா விரல்களிலும் மோதிரம் அணிபவர்களும் உண்டு.
பதிலளிநீக்குகீசா மேடம்... எனக்கும் ஒரு காலத்தில் தாம்புக் கயிறு செயின் வாங்கி அணியணும் (20 பவுனாவது), கையில் பெரிய கங்கணம் தங்கத்தில் வாங்கிக்கணும், ஐந்து நவரத்ன மோதிரமாவது கையில் போட்டுக்கணும்னு ஆசை. முதல் இரண்டும் மனைவி சொல்லிச் சொல்லி ஆசையைத் துறந்தேன். நவரத்ன மோதிரத்துக்கு நான் எடுத்துப் பார்த்தபோதெல்லாம் வாங்க அவள் அனுமதி தரலை. ஹா ஹா. எங்கள் கம்பெனியில் இலங்கையைச் சேர்ந்த சாதாரண சூபர்வைசர் தாம்புச் சங்கிலி, கங்கணம் போட்டுக்கொண்டிருப்பார். (அங்கெல்லாம் பயம் என்று ஒன்று கிடையாது).
நீக்குஒரு தடவை அங்கிருந்து சென்னை வரும்போது விமானத்தில் ஒரு பெண் விரல்கள் நுனியிலிருந்து முழங்கை முழுவதும் தங்கத்தோடு ஜொலித,து வந்ததைப் பார்த்தேன். எவன் கைகளை வெட்டப் போறானோ என்று நினைத்துக்கொண்டேன்.
எனக்கும் நகை ஆசை எதுவும் கிடையாது. புன்னகை மட்டுமே!
நீக்குநகை என்றால் அது பெண்களுக்குத்தான் அழகாக்கும்.. கானமயிலாடக் கண்ட வான் கோழி தானும் ஆடிய கதையாகும் ஆண்கள் ஓவர் நகை போடுவது...
நீக்குஒரு மோதிரம்... ஒரு மெல்லிய செயின்.. இதுவரை போட்டால் ஓகே இதுக்கு மேல ஆண்களுக்கு நகை அழகல்ல... எனக்கும் ஓவரா நகை போட்டிருக்கும் ஆண்களைப் பிடிக்காது... சில ஓவர் நகைப் பெண்களையும் பிடிக்காது:).
அடுத்த புனை பெயர் நகைப்பகையார்?
நீக்குசங்கமித்ரா யாருனு ஒரு வாதம் நேற்றைய பதிவின் கருத்துகளிலே ஓடிட்டு இருக்கு. ஏஞ்சல் சொன்னது பாதி சரி. இவர்கள் இருவரின் தந்தை சாம்ராட் அசோகன்.
நீக்குஅனுஷ்கா அக்கா படத்தையும் தமன்னாக்கா படத்தையும் போட்டிருந்தால் முறையே ஸ்ரீராமும், நெ.த.வும் ஜென்மம் சாபல்யம் பெற்றிருப்பார்கள்.
பதிலளிநீக்குகீசா மேடம்.... நான் விரதம் ஆரம்பித்திருக்கிறேன்.... இனி இந்த ஆசை கிடையாது
நீக்குஅப்போ அடுத்த வாரம் தமன்னா படங்கள் போட்டுத் தாக்குவோம்!
நீக்குநோஓஓஓ கீசாக்காவுக்கு எல்லோரும் அக்காவோ கர்ர்ர்ர்ர்:)... கொள்ளுப்பேத்திகளாக்கும்:)... நான் ஜொன்னனே அம்பேரிக்கா போய் எல்லாமே மறந்து போயிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்:)
நீக்குஅவங்களே இதுக்கு பதில் சொல்லட்டும்!
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நகைப்பகையார், சங்கமித்ரை, துங்கபத்ரா, அதிரடி அதிரா, என்ன? கொள்ளுப்பேத்தி உங்களுக்குத் தான் எனக்கு இல்லை!
நீக்குதுங்கபத்ரா, ////
நீக்குஹா ஹா ஹா என் நாரதர் கலகம் இனிதே ஆரம்பித்து விட்டதே:)... இனி ஒதுங்கி இருந்து வறுத்த கச்சான் சாப்பிட்டுக்கொண்டே புதினம் பார்க்க வேண்டியதுதேன்:)..
அவங்க திரும்ப ஓய்வு எடுக்கப்போயிட்டாங்க!
நீக்குகாலங்கார்த்தாலே ஓய்வா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஹி ஹி !
நீக்குஇவ்வளவு பௌவ்யமாக எல்லாவற்றுக்கும் கீழே போடவேண்டியதில்லை. அதன் பெயர் ‘பௌவ்யனா’ இல்லை!
பதிலளிநீக்குஎங்கேயாவது அந்தப் படத்தைப் போடவேண்டும் என்று தோன்றியது. காடராக்ட் கண் ஒரு சாக்கு!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குகேள்வி பதில் பகுதி கொஞ்சம் அதிகம் என்று மனதில் தோன்றியது. 10 கேள்விகள்னு வச்சிக்கிட்டு, கண் தொடர் ஜாஸ்தி எழுதியிருக்கலாம்.
பதிலளிநீக்குபாயிண்டு நோட்டட். வரும் வாரங்களில் முயற்சி செய்கிறேன்.
நீக்குஊஇக்குறிப்பு:)
நீக்குகட் பண்ணுவதாயின் நெ டமிலனின் கிளவியில் கை வையுங்கோ:).. அதிராட கொஸ்ஸன்ஸில கை வைக்கப்புடாதூஊஊஊ:)
அப்படி எதையாவது கட் பண்ணவேண்டும் என்றால் - காடராக்ட் கட்டுரையை கட் பண்ணுவேன். கேள்வி கேட்பவர்களை நோக விடமாட்டேன்.
நீக்கும்ஹூம், வேண்டாம் காடராக்ட் கட்டுரை வேணும், வேணும், கட்டாயமாய் வேணும்.
நீக்கு"ட்" வந்துடுச்சே?
நீக்கு// ம்ஹூம், வேண்டாம் காடராக்ட் கட்டுரை/// :-(
நீக்குஅனைத்து கேள்விகளையும், பதில்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குகாடராக் 'டூ' அனுபவ தொடர் அருமை.
நன்றி!
நீக்குவித்தியாசமான கேள்விகள்... நல்ல பதில்கள்...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகேள்வி, பதில்கள் வழக்கம் போல அனைத்தும் அருமையாக உள்ளது. ரசித்தேன்.
காடராக்"டூ" பற்றிய அனுபவம் நன்றாக உள்ளது. படிக்கும் போது வார்த்தைகளின் நகைச்சுவையில், "நன்றாக உள்ளது" என்று நான் சொன்னாலும், "தலைவலியும், திருகு வலியும்" உணர்ந்த உங்களுக்கு கஸ்டமாகத்தான் இருந்திருக்கும், என் கணவருக்கு அந்த அனுபவம் வரும் போது, அதை கண்கூடாக நானும் உணர்ந்திருக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி 'கண்'ணா ! நன்றி.
நீக்குஆஆஆ பாவனா அக்கா ஹொஸ்பிட்டலுக்கு எதுக்காக வந்தா?:)
பதிலளிநீக்குபதிவைப் படிங்க சரியா புன்னகை இளவரசி, சங்கமித்ரா, // கூகிளில் தேடி பாவனா படம் பார்க்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்//
நீக்குநோஓஓ நான் இதை ஒத்துக் கொள்ள மாட்டேன்.. ஒரு கிளவியைக் கேட்டால் சே சே கால் வச்சதுமே டங்கு ஸ்லிப்பாகுதே... கேள்வி கேட்டால் எஸ்கேப் ஆகாமல் இமயமலை போயெண்டாலும் பதில் எடுத்து வந்து சொல்லோணுமாக்கும்ம்ம்ம்ம்ம்ம்:)
பதிலளிநீக்குசொல்லிட்டேனே!
நீக்குதலைப்பே பயமுறுத்திவிட்டது.
பதிலளிநீக்குஇசையில் அவ்வளவு பயமா!
நீக்குசே..சே.. ஒரு கொமெண்ட்டை ஒயுங்காப்போடக்கூட நேரம் கிடைக்குதில்லையே வைரவா.. கண்பட்டதோ நெஞ்சம் புண்பட்டதோ:))
பதிலளிநீக்கு/பேய்கள் இசைக்கு மயங்குமா ?//
கேள்வி கேட்டதும் ஒரு பெண்தானே:)?.. ஹா ஹா ஹா “பெண் என்றால் பேயும் இரங்கும்[மயங்கும்]:) .. பெண்ணுக்கு இசை பிடிக்கும்:)).. அப்போ பேய்க்குப் பிடிக்காமல் போகுமோ?:)
ஒரு பஸ்ஸில் ஒருவர் சீட்டில அழகாக இடம் பிடிச்சிருந்தார், ஒரு வயசான பெண் ஏறினா, இருக்க இடமில்லை, இந்த அழகாக ஒய்யாரமாக இருந்தவருக்குப் பக்கத்தில் தள்ளாடிக்கொண்டு நிண்டா.. அப்போ இதைப் பார்த்த எழும்பி நின்று கொண்டிருந்த இன்னொருவர்..இருந்தவரைப் பார்த்துக் கேட்டார்ர்.. “பெண் என்றால் பேயும் இரங்குமே:).. நீங்கள் இரங்காமல் இருக்கிறீங்களே” என..
அதுக்கு அவர் சொன்ன பதில்..
“அது பேய் தான் இரங்கும் நான் இரங்கமாட்டேன்”.. ஹா ஹா ஹா..
ஹா ஹா ஹா ஆம்மாம்.
நீக்கு//$ ஆழம் என்பதை விட சிக்கலானது என்றிருக்கலாம்.//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) .
// பெண்களின் மனம் புரிந்து கொள்ள முடியாத மர்மமா என்று ஒரு ஆண் கருத்து சொல்வது சரியாக இருக்காது.//
கரீட்டு:))..
//ஒரு பெண் இல்லை என்று சொன்னால் பார்க்கலாம் என்றும், பார்க்கலாம் என்று சொன்னால் சரி என்றும்//
எனக்கென்னமோ இக்காலத்துப் பெண்கள் எதிலும் ஸ்ரெயிட் ஃபோவேர்ட் என்பதுபோலத்தான் தெரியுது.. நானும் அப்படித்தான்.. எந்த சந்தேகம் வந்தாலும் அடிச்சுப் பிடிச்சுக் கேட்டுக் அக்தைச்சு அப்பவே அதை முடிச்சுப் போட்டு நோர்மல் மூட்டுக்கு திரும்பி விடுவேன்..
முகத்தைப் பத்து நாட்களுக்கு இழுத்து வைத்திருக்கும் பெண்களையோ ஆண்களையோ கண்டால் கெட்ட கோபம் வரும்...
நல்ல பாலிசி. நல்ல வேளை - நாங்க உங்க கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டோம். இல்லாங்காட்டி அடிச்சுப் பிடிச்சு பல்லை ஒடச்சு முடிச்சிருப்பீங்க!
நீக்கு//ரொம்ப யோசித்துப் பார்த்தேன், நான் ஒன்று சொல்லலாமா வேண்டாமா என்று. சரி என்ன ஆனாலும் சரி, சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தேன். சொல்லிவிடவா? 1//
பதிலளிநீக்குகண் இப்போ நலமோ கெள அண்ணன்?:)) ஹா ஹா ஹா..
கண்ணு நலமே, உங்கள் புண்ணியத்தில்.
நீக்கு//அடக்க ஒடுக்கமான அதிரா (கேட்ட குண்டக்க மண்டக்க கேள்வி!) //
பதிலளிநீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) பின்ன ஈசியான கிளவியைக்:) கேட்டு உங்களை நோகாமல் நொங்கு சாப்பிட வைப்பதில் என்ன இருக்கு:))..
பொறுங்கோ இந்தியாவில் இருப்போரையே விசாரித்து இந்தக் காண்ட சாத்திரத்துக்கு வேறேதும் பெயர்கள் இருக்கோ எனச் சொல்கிறேன்..
இல்லை சோளி உருட்டிப் பார்ப்பதுமில்லை.. அதுவெல்லாம் நம்பிக்கை இல்லாதது.. இது உள்ளதை உள்ளபடி சொல்லும் சாத்திரம்... பலருக்கு சொன்னது அப்படியே நடந்திருக்குது.
அப்போ அது நாடி ஜோதிடம்தான்!
நீக்கு//1, மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுளை நிந்திப்பதேன் ?//
பதிலளிநீக்குமனிசரில் உள்ள ஒரு பழக்கம், நம் தவறுகளை இலகுவில் நம் மனம் ஏற்காது.. நாமா தவறு செய்தோம்.. இல்லையே நல்லதை நினைச்செல்லோ செய்தோம்.. இப்படி மனம் கிடந்து தவிக்கும்.. இதனால பலர் தன் தவறுக்கு காரணம்.. அப்பா அம்மா சகோதரம் கணவன் மனைவி அடுத்த வீட்டுக்காரர் ஒபிஸ் பொஸ்.. இப்படி ஆரையாவது குறை சொல்வார்கள்.. பழியை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் எல்லா மரிதருக்கும் குறைவு என்பதனால, பழியை இன்னொருவர் மீது போட்டுவிட்டு, நான் நல்ல பிள்ளை எனச் சொல்லுவர்,
ஆனா அதிராவைப்போல ஞானியாகிவிட்ட ஒரு சிலர்தான்... ஹா ஹா ஹா வெயிட் வெயிட் பொறுமை பிளீஸ்ஸ்ஸ்..
“உன்ன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி”என்பர்:)).. இப்படிச் சொல்லிட்டால் கடவுளுக்கு மனம் நோகாது.. அவர் அதை தாராளமாக ஏற்றுக் கொள்வார்.. நமக்கும் நம்மில பிழை இல்லை:) கடவுளாலதான் இப்பூடி ஆச்சு என மனம் நிம்மதி அடைஞ்சிடும்:))..
அடுத்தவரைக் குறை சொன்னால்.. அவர்களோடு மனஸ்தாபம் வருமெல்லோ அவர்களின் மனமும் சேர்ந்து நோகுமெல்லோ:)) ஹா ஹா ஹா... இருப்பினும் அதிராவின் தவறுகளுக்கெல்லாம் காரணம் அஞ்சுதான்ன்ன்ன்ன்ன்:))
கடைசியில வெச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச் ---- அங்கேதான் நிக்குறீங்க. (அவங்க வந்தவுடன் ஓடுங்க !)
நீக்குநான் ஓல்ரெடி புகைக்கூட்டுக்குக் கீழேதான் இருக்கிறேன்ன்ன்... மின்னுதுபோல இருக்கு சற்று நேரத்தில் இடி முழங்கலாம்:)
நீக்கு//ஹா ஹா ஹா... இருப்பினும் அதிராவின் தவறுகளுக்கெல்லாம் காரணம் அஞ்சுதான்ன்ன்ன்ன்ன்:))//
நீக்குஅப்பாடி :) எப்படியோ பூனை தானும் தப்பு செய்வேன்னு ஒத்துக்கிடுச்சே :) வெற்றீயே
//13 ,சமூக வலைத்தளங்கள் இந்நூற்றாண்டின் வரமா ? அல்லது சாபமா ?//
பதிலளிநீக்குபொதுவாக இக்கால இண்டநெட் வசதிகளை ஒப்பிட்டுச் சொல்கிறேன்...
வரம்தான்.
*நேரம் மிச்சமாகுது தேடுதலால்.
*பொழுது நன்கு போகுது
*அடுத்தவர் பற்றிப் பேசும் ஊர்வம்பு..கொசிப் குறையுது
*தேவை இல்லாத பிரச்சனைகள் வருவது குறைவு..
*முந்திய காலம்போல இரவுபகலாக ஊர் சுற்றாமல் பிள்ளைகள் வீட்டோடு இருக்கின்றனர்
*பணம் மிச்சமாகுது... புத்தகம் வாங்கும் செலவு மிச்சம், ரியூசன் செலவு மிச்சம், படம் பார்க்கும் ரிக்கெட் செலவு மிச்சம்
*சண்டை குறையுது, மனம் கனத்தால் ஏதாவது கொமெடி பார்த்தால்/பாடல் கேட்டால் தன் பாட்டில் மனம் இலகுவாகுது.. டொக்டர் செலவு மிச்சம்:)).. இதனாலதான் இக்காலத்தில் மன நோயாளிகள் குறைவோ?:))
*பேப்பர் வாங்கும் செலவு மிச்சம், உடனுக்குடன் அனைத்துலக செய்திகளும் கிடைக்குது.
*பொது வாகனங்களில் செல்லும் போது அடுத்தவர் வாயைப் பார்த்துக் கொண்டிருக்க தேவையில்லை, நாமும் நம்பாடும் என இருக்க முடியுது.. அதாவது “முழிசிக்கொண்டிருக்காமல்” நம்மை நாமே நல்ல அழகாக வச்சிருக்க முடியுது:) ஹா ஹா ஹா.
*எப்பவும் யாரையும் பிரிந்திருக்கும் ஃபீலிங் இல்லாமல்/ அருகில் இருக்கும் உணர்வு கிடைக்குது.
100 / 100 . very good answer.
நீக்கு/;/இதனாலதான் இக்காலத்தில் மன நோயாளிகள் குறைவோ?:))/
நீக்குஹையோ பூனைக்கு புரியலை முந்திக்கால த்தில் குறைவா யிருந்தவங்க இப்போ நிறைய இல்லையில்லை எல்லாருமே ஆகிட்டோம் :) அதனால் தான் உங்களுக்கு தெரியல்ல
ஊரோடு ஒத்தோடிட்டால் ஏது மனநோய்:)) எல்லாரும் ஒன்றுதான் அஞ்சு ஹா ஹா ஹா... புளொக்கில் கும்மி அடிப்பதும் ஒருவித மனநோய்தானே ஹா ஹா ஹா.
நீக்கு//கூகிளில் தேடி பாவனா படம் பார்க்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் - வலது கண்ணால் பார்த்தால் துல்லியமாக பார்க்க முடியும். //
பதிலளிநீக்குஓ புரிஞ்சுபோச்ச்:)) கெள அண்ணனின் கண் பிரச்சனைக்கு முக்கிய காரணம் பா அக்காவோ?:)) ஆஆஆஆ.. பா வை ப எனவும் ஜொள்ளலாம்.. ப என்றால் பசு.. கெள என்றாலும் பசு ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் எப்பூடி என் கண்டுபிடிச்ச்ப்பூஊஊஊஊஊஊஊஊஊஊ?:))
அரே பா பா ! பாவுக்கும் பசுவுக்கும் முடிச்சுப்போடும் இந்த சங்கமித்திரையை என்ன சொல்வது!
நீக்கு//..ப என்றால் பசு.. கெள என்றாலும் பசு..//
நீக்குஅப்படி என்றால்.. கௌ அண்ணன் என்றால் ’பசு அண்ணன்’ என்றா அர்த்தம்! புரிஞ்சிருச்சு துங்கபத்திரா..
துங்கபத்திரா///
நீக்குஹா ஹா ஹா லபக்கெனப் பாடமாக்கிட்டாரே ஏ அண்ணன் இந்தப் பெயரை:)....
ஹா ஹா ஹா பசு அண்ணன் எனவும் சொல்லலாம் அவரை:)... பிக்க்க்க்க்கோஸ்ஸ்ஸ்:) பசுவுக்கு கோபம் வராது... அன்பாக இருக்கும்:)..
இந்த கேள்வி பதில் பதிவுகள் பல விஷயங்களை அள்ளித் தரும் பதிவுகளாக உள்ளன. பங்களித்த அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குபாராட்டிய உங்களுக்கும் நன்றி சார்.
நீக்கு//26500 / 30000/ 32500/ 39000
பதிலளிநீக்கு65000 / //
தி நகர் வித்தியோதையா பள்ளி பின்புறம் இருக்கும் ராஜன் அய் கேர் - ஆசுபத்திரியைத் தேர்ந்தெடுத்தேன். இங்கு இதே மாதிரி 4 வித ரேட்கள் சொன்னார்கள். நான் ரொம்பவும் அதிகமும் இல்லாத ரொம்பவும் குறைச்சலும் இல்லாத ரூ; 55000 (ஓரு கண்ணுக்கு) தேர்ந்தெடுத்தேன். இரண்டு வார இடைவெளிகளில் இரண்டு கண்களுக்கும் காடராக்ட் ஆப்ரேஷன் ஆச்சு.
பின்னால் இடது கண்ணுக்கு Macular Degeration என்ற உபாதை வந்து நடு விழிப் பார்வை பார்க்கமுடியாமல் போனதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
அது சரி, Macular Degeneration என்றால் என்ன?..
இது தான்:
https://www.macular.org/what-macular-degeneration
பயமுறுத்துரீங்களே!
நீக்கு//ஒரு உறுப்புக்கு மத்திரம் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்ற வரம் கிடைத்தால், எந்த (வெளி) உறுப்பு முக்கியம் என்று நீங்க நினைப்பீங்க? //
பதிலளிநீக்குஎன்னைக் கேட்டால்--
கண். அடுத்தபடியாகக் கால்கள்.
உண்மைதான்.
நீக்குநல்ல பதில்கள்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குஇணையத்தை மேய்கையில்.. இப்படி ஒரு கேள்வி கண்ணில்பட்டது. புதன் என்றாலே பேய்தானா! சரி, ஸ்பெஷலிஸ்ட் இருக்கையில் நமக்கேன் பதட்டம்? அவர்கள் கேட்டதை, நான் இங்கே போட்டுவிட்டு ஓடுகிறேன். எதற்கும் விழித்திருந்தே.. பதில் சொல்லுங்கள்:
பதிலளிநீக்கு“தூங்கும்போது ஆளை அமுக்கும் அமுக்குவான் பேய் பற்றி தெரியுமா?”
நான் நினைச்சேன் இந்தவாரத்தோடு பேய் முடிஞ்சிடுமாக்கும் என:) ஆனா முடியாது போலும்:)...ஹா ஹா ஹா
நீக்குஅஞ்சு பேயை ஓட விடாமல் கொஸ்ஸன்ஸ் :) எடுத்து வாங்கோ:) பேய்க் கொஸ்ஸான்ஸ்:)
பதில் சொல்கிறோம்.
நீக்குஆஆஆ மைக் கிளவி நொம்பெர் வன்:)
பதிலளிநீக்கு1. பேய்க்கு ஏன் வெள்ளை ஆடைதான் பிடிக்கும்?
பதில் சொல்கிறோம்.
நீக்குஸ்ஸ்ஸ் யப்பா :) இன்னிக்கு நிறைய வெளிவேலைகள் இப்போதான் வந்தேன் ..மிக்க நன்றீஸ் எனது கேள்விகளுக்கு பதில் தந்ததற்கு
பதிலளிநீக்குகேட்டதற்கு நன்றி.
நீக்குவாவ் ocarina பற்றி ஓடிப்போய் அறிந்துகொண்டேன் சூப்பர் அழகா இருக்கே .இசை மிக அழகா வருது
பதிலளிநீக்குநானும் அப்புறம் பார்க்கவேண்டும்.
நீக்குஅப்போ பாவனா இஷியூ வரலைன்னா காடராக்ட் பக்கம் போயிருக்க மாட்டீங்களா :))சரி தொடருங்கள் :) நாங்களும் தொடர்கிறோம்
பதிலளிநீக்குஹா ஹா ஹா ! அப்படியும் இருக்கலாம்!
நீக்குநானும் பேயார் பற்றியே ஆரம்பிக்கிறேன் :) ஹாலோவீன் வேற வருது :) அதனால் அவங்களுக்கு டெடிகேட் செய்யணும் :)
பதிலளிநீக்கு1, பேயார் இரவில்தான் உலாவுவார் என்று சொல்லப்படுது ஆனா எங்கள் பிளாக் பேயார் மட்டும் ஆல் ரவுண்டரா ?? இரவு பகல் எந்நேரமும் விசிட்டிங் வராரே எப்பிடி ?
2, பேயார் மைண்ட் ரீடிங்க்லாம் செய்வாரா ?
3,பேய்கள் எப்போ தூங்குவாங்க ? தூக்கமே வரலைன்னா ரொம்ப கஷ்டமா இருக்குமே ?அதோட அவங்க என்ன சாப்பிடுவாங்க ? பசியோடயே இருப்பாங்களா இல்லைனா பசி வரவே வராதா ?
4, ஆற்றலுக்கு /சக்திக்கு அழிவில்லை என்பது உண்மையா ?
5, சுதந்திரம் முழு சுதந்திரம் என்பது சாத்தியமா ?
6,Tamanna’ (Try And Measure Aptitude And Natural Abilities). தமன்னா டெஸ்ட் வந்த மாதிரி அனுஷ்க்கா /பாவனா எல்லாம் வருமா ?
நீக்குஇது காமெடிக்குதான் கேட்டேன் :))))))))))))))))))
பதில்கள் அளிப்போம்.
நீக்குசங்கமித்ரா 100
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீதான் 101:)) எது பெரிசூஊஊஊஊ?:) ஹா ஹா ஹா..
நீக்கு104
நீக்கு