அதே செர்ரி blossom சாலை தான்
ஆ! அதோ ஒரு வண்டி!
பச்சை கலரில் வலது புறம் இருப்பது என்ன?
இந்த மாதிரி சாலைத் தடைகள் நிறைய இடங்களில்
மர உச்சியில் ஒரு ராட்சஸப் பறவை
சாலை நீண்டு கொண்டே இருக்கிறது
சஸ்பென்ஷன் பாலத்தடி நிறைய பேருக்கு மீட்டிங் பாயிண்ட்
இல்லை, டீ குடிக்கும் நேரமா ?
இந்த யூனிவர்சிட்டி க்கு ஒரு 60 km க்கு விளம்பரம்
போகுமிடம் வெகு தூரமில்லை
இந்த மேகங்கள் மறைக்கா விட்டால்
இடது புறமும் வலது புறமும் ஒதுங்கி நிற்கும் மலைகளுக்கு நடுவே
ஒரு பள்ளத் தாக்கு வெகுதூரத்துக்கு
தெற்கே தெற்கே இன்னும் தெற்கே
வலதுபுறம் போகும் மலைப்பாதையில் தான் நம் பயணம்
சாலையோரத்தில் ஒரு பம்ப் ஹவுஸ்
இஸ்மாயில், நிறுத்துங்க நிறுத்துங்க இங்கே சிக்னல் நல்லா வருது
நலம் வாழ்க...
பதிலளிநீக்குவாழ்க நலம்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க... வாங்க...
நீக்குஇனிய சுற்றுலா...
பதிலளிநீக்குபிரமிக்க வைக்கும் அழகு!....
நன்றி.
நீக்குமிக இனிமையான் படங்கள்...அனைத்தும் பிரம்மாண்ட அழகு. பசுமை.
பதிலளிநீக்குஅலுக்காமல் எடுத்திருக்கிறார்கள். கொடுத்திருக்கும் தலைப்புகளுடன் பயணப்படும்
அனைவருக்கும் இந்த ஊருக்குப் போக ஆவல் வரும்.
நன்றி வல்லிம்மா.
நீக்குஇனிய காலைவணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குஒரு கருத்து மட்டுமே ஒரு சமயத்தில் போட முடியுது நெட் போய்டுது..ஸோ அப்புறம் தான் அது சீராக வரும் சம்யம் வருகிறேன்...
கீதா
இனிய காலை வணக்கம் கீதா... வாங்க...
நீக்குஇனிய காலை வணக்கம் அன்பு துரை. இன்னும் வருபவர்களுக்கும் இன்னாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வல்லிம்மா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் நன்மைகள் நிறைந்த நாளாய் வளமாக ஒளி வீச இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.
படங்கள் அத்தனையும் மிக அழகாக உள்ளது. அதற்கு பொருத்தமான வாசகங்களுடன், காலையில் இயற்கையை பார்க்க, பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. மலைகளின் அழகும், தூய்மையான சாலைகளும் மனதை கவர்கின்றன.
மர உச்சியில் ஒரு ராட்சத பறவை படம் நன்றாக உள்ளது. சென்ற தடவை குதிரை மேல் கருப்பண்ணசாமி, இன்று பிரமாண்ட பறவை என மரங்களின் இயற்கை அமைப்புகள் நம் கற்பனை வளத்திற்கு தோதாக அமைந்து விடுகிறது இல்லையா? மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் .கமலா அக்கா... வாங்க... நன்றி.
நீக்குரசித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.
காலை வணக்கம் அனைவருக்கும், வர மறந்த கீசா மேடத்துக்கும் சேர்த்து... ஒருவேளை இன்று அவர்கள் ஞாயிறு என்பதால் பயணமோ?
பதிலளிநீக்குபடங்கள் எப்போதும்போல். தலைப்புகள் ரசிக்கவைத்தன.
ஹூஸ்டனில் இப்போ என்ன நேரம் என்று தெரியலையே!
நீக்குஉங்களுக்குக் காலை ஏழு மணி எனில் எங்களுக்கு இரவு எட்டரை. வர மறக்கல்லாம் இல்லை. நேத்திக்குச்சாயங்காலம் தீபாவளி மேளா பார்க்கப் போயிட்டோம். வீட்டுக்கு வர இரவு ஒன்பது மணி.உங்க நேரப்படி காலை ஏழரை மணி.
நீக்குஅபுதாபியில் எனக்கு இஸ்மாயில் என்றொரு நல்ல நண்பர் இருந்தார், மேலும் ஓட்டுனர் பள்ளியில் பயிற்சியளித்த குருநாதர் "சத்ரு" செங்கல் இஸ்மாயில் இருவரும் நினைவில் வந்தனர் தங்களால்.
பதிலளிநீக்குபடங்களை ரசித்தேன் ஜி
இரசிப்புக்கு நன்றி!
நீக்குபறவை மிகவும் பிடித்தது...
பதிலளிநீக்கு@டி.டி.: இன்றைக்குத்தான் நினைத்தேன் டி.டி.ஐ பார்த்து கொஞ்சம் நாட்களாகி விட்டதே என்று.. என்ன ஆச்சர்யம் இன்று வருகை தந்திருக்கிறீர்கள்! நூறு வயது உங்களுக்கு.
நீக்குதீர்க்காயுஷ்மான் பவ!
நீக்குநன்றி DD.
நீக்குஅனைவரின் ஆசிர்வாதத்திற்கு நன்றி... (நன்றிக்கு பதில் வணங்குகிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும்...)
நீக்குஆனால்... இத்தனை நாள் வராததற்கு என்ன காரணம் என்பது ஸ்ரீராம் சாருக்கு தெரியும்...
உடல் நலமாக இருக்கிறீர்களா டிடி? உடல்நலத்தையும் கவனித்துக்கொள்ளவும்.
நீக்குவெகு அழகான படங்கள். 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா..' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க பயணம் செய்வது போன்ற பிரமை.
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஇந்த 'செந்தாழம் பூவில்' பாடலை எங்கு கேட்டாலும் உடனே மனது என் ஹாஸ்டல் நாட்களுக்குப் போய்விடும் (9-10 ம் வகுப்பு ஹாஸ்டல்). விவரிக்க முடியாத உணர்வு ஏற்படும். (ஆனா இதெல்லாம் ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுடுவாரா? ம்ஹும்.)
நீக்குநெல்லைத்தமிழன் நெஞ்சில் ஏதோ 'கலர்'க் கனவுகள் தெரியுது. கதையா எழுதி அனுப்பிடுங்க நெ த!
நீக்குகேஜிஜி சார்... நான் படித்தது (கல்லூரி மேல் நிலைப் படிப்பு வரை) ஆண்கள் படிப்பதில். இதில் 'கலர்' கனவுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை... அப்போ அந்த மாதிரி சிந்தனையே எனக்கு வந்ததே இல்லை. ஹாஸ்டல்ல நிறைய தடவை சினிமா பாடல்கள், ஞாயிறு அன்று திரைக்கதைலாம் போடுவாங்க. அப்போ மனசுல தங்கினவை. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது, உணர்வு, அந்தக் காலத்துக்கே உடனே என்னை அழைத்துச் சென்றுவிடும்.
நீக்குசாலை அழகு ரம்யமாக இருக்கிறது. இதையெல்லாம் ரசிக்கத் தானே இந்தப் பயணம்?.. நீண்டு கொண்டே போகிறது என்று ச்சூ கொட்டினால் எப்படி?..
பதிலளிநீக்குஅதானே!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க... வாங்க...
நீக்குசாலைகளில் கூட்டம், சாரி சாரி யாக செல்லும் வண்டிகளின் அணி வகுப்பு இல்லாமல் அமைதியான நீண்ட சாலை கண்ணுக்கு அழகு.
பதிலளிநீக்குஇதயத்திற்கும் இதம் தரும்.வாகனங்களின் ஒலி வேகமாய் போகும் வாகனங்கள் இதயதுடிப்பை அதிகரிக்கும்.
மலைபயணம் அருமை, படங்களும் நன்றாக இருக்கிறது.
நன்றி.
நீக்கு/மர உச்சியில் ஒரு ராட்சஸப் பறவை\நீ என்னவாக நினக்கிறாயோ அதுவாக ஆகிறாய் இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் சொல்வதுபோல as the fool thinketh the clock clicketh
பதிலளிநீக்குஏதேனும் உள்குத்து இருக்குதோ என்று ஒரு சம்சயம் ......
நீக்குரயிலில்போகும்போதுநம்நினைப்புக்கு ஏற்ப ஓசைகள் கேட்பது போல் இ அதைத்தான் சொல்லி இருக்கிறென்உள்குத்டா அப்படிஎன்றால் .....>
நீக்குபச்சை கலரில் வலது புறம் இருப்பது என்ன?//
பதிலளிநீக்குஐதோ drum வேற தொங்க விட்றுக்கா மாதிரி தெரியுது. ஒரு வேள drum standஆ இருக்கும்!
படங்கள் அத்தனையும் அருமை. ஆட்களைத் தான் காணோம்!
நன்றி!
நீக்குபயணக் காட்சிகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குஇங்குள்ளோர் அனைவருக்கும் காலை வணக்கம், இந்திய நண்பர்களுக்கு மாலை/இரவு வணக்கம். வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபோன வாரம் (?)கருப்பண்ணசாமியைச் செடியில் தரிசித்தாயிற்று. இப்போ கருடனா? ராக்ஷதப் பறவை? எல்லாப் படங்களும் அழகு. நீண்ட சாலைகள் வெறிச்சோடி இருப்பதைப் பார்க்கவே கண்ணுக்கு ரம்மியம். இம்மாதிரிக் கூட்டமில்லாச் சாலைகளில் நீண்ட பயணம் செல்லவேண்டும். படங்களுக்குக் கொடுத்திருக்கும் தலைப்புகளும் நன்றாக உள்ளது. கடைசி இரு படங்களை விட்டுட்டீங்க போல.
பதிலளிநீக்குகத்திரிக்காய்க்கறிப் பதிவு புத்தம்புதிது. பழசுனு நினைச்சுட்டு யாரும் வரலை போல. கௌதமன் சார் மட்டும் வந்திருக்கார்.
பதிலளிநீக்குகீசா மேடம்... உடனுக்குடன் பின்னூட்டம் வெளிவருகிற மாதிரிச் செய்துவிடுங்களேன். பல சமயங்களில் பின்னூட்டம் போட்டோமா என்பது நினைவில் இல்லாமல் போய்விடுகிறது (நீங்களும் உடனுக்குடன் ரிலீஸ் செய்வதில்லை). அந்தக் கால இணைய தளமா..வேண்டாத பின்னூட்டங்கள் வருவதற்கு?
நீக்குஇந்தியாவிலேயே இது முடியாத ஒன்று. எனக்கு நேரம் கிடைக்கிறச்சே தான் கணினியில் உட்காருவேன் நெல்லைத்தமிழரே! வீட்டு வேலைகளுக்குத் தான் முன்னுரிமை. கணினியில் உட்கார்ந்தால் அதில் செய்ய வேண்டிய, எழுத வேண்டிய சொந்த வேலைகளுக்கு முன்னுரிமை. பல சமயங்களிலும் இவற்றைப் பார்த்து பதில் கொடுப்பதில் நேரம் செலவாகி விடும்.பின்னர் அவசரமாகப் பதிவுகளை ஒரு பார்வை. மத்தியானம் தான் என்னோட நேரம். உட்காருவேன். அநேகமா பதில்கள், பதிவுகள் எழுதுவது எல்லாம் அப்போத் தான். ஆனால் அநேகமா இங்கே வந்ததில் இருந்து சில பதிவுகளில் என்னால் முடிந்தவரைக்கும் விரைவில் கருத்துக்களை வெளியிட்டுப் பதிலும் சொல்லி வருகிறேன். இதுக்கு மேலே முடியாது! :))))))
நீக்குஒரு சில பதிவுகளில் வேண்டாத பின்னூட்டங்கள் வந்தன/ இன்னமும் சிலர் ஏதேனும் வம்பு பண்ணுவார்கள். கண்டுக்கறதில்லைனாலும் நீங்கள் நினைக்கிறாப்போல் எல்லாம் இல்லை.
நீக்குபடங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. இது போன்ற இடங்களுக்கு எல்லாம் போகும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை எனவே இப்படிக் கண்டு களித்துக் கொள்ளலாம்.
நீக்குபடங்கள் அனைத்தையும் ரசித்தேன்.
துளசிதரன்
கீதாக்கா நானும் பார்க்க வேண்டும் பதிவு வந்தது தெரிந்தது ஆனால் கணினி படுத்தலால் வர இயலவில்லை நேற்று
நீக்குகீதா
ஸ்ரீராம் இப்பத்தான் படங்களையே முழுசா பார்க்க முடிந்தது.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாமே மலைகள் எனவே அழகுக்குக் கேட்க வேண்டுமா..
அந்தப் பாலம் படம் மற்றும் வலது புறம் சாலை அங்குதான் னம் பயணம் அந்தப் படம் ரொம்ப அழகு.
முதல் படம் பார்த்ததும் அட பாத்தாப்ல இருக்கிறதே என்று தோன்றியது செர்ரி ப்ளாஸம் படம்!!!
கீதா
அந்த ராட்சசப் பறவை ஆமாம் ல ஏதோ பெரிய கோழி போல இருக்கு!! அது
பதிலளிநீக்குகீதா
அழகிய படங்கள்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குதொடரட்டும் பயணம். படங்களும்!