1990 இல் வெளிவந்த திரைப்படம் பெரிய வீட்டுப் பண்ணைக்காரன். கார்த்திக் கனகா நடித்த படம். முந்தைய வருடம் வெளியான பாண்டி நாட்டுத் தங்கம் தந்த வெற்றியினால் அதே போல எடுக்க நினைத்திருப்பார்கள் போலும். இளையராஜா கைவிடவில்லை.
வழக்கம்போல நான் பார்க்காத படம். பாடல்களை ரசிக்கத் தவறவும் இல்லை! இவை எல்லாம் பெரும்பாலும் நான் அலுவலகம் செல்லும்போது ஜெயவிலாஸ் பஸ்களில் போடக் கேட்டு ரசித்த பாடல்கள்...
ரசிக்கத்தக்க பாடல்களைக் கொடுத்திருப்பார் இளையராஜா. மனோ குரலில் 'சும்மா நீ நிக்காதே' பாடல், 'முத்துமுத்து மேடைபோட்டு' என்று யேசுதாஸ்- ஜானகி குரலில், 'மல்லிகையே மல்லிகையே' என்று யேசுதாஸ்-சித்ரா குரலில்...
இன்று மூன்று பாடல்களை பகிர்கிறேன். (ரொம்ப ஓவரோ!!)
மூன்றாமிடத்தில் சும்மா நீ நிக்காதே பாடல்... கவிஞர் பிறைசூடன் எழுதிய பாடல். மனோ குரல். எஸ் பி பியின் நகல்குரல் என்று அப்போது சொல்லப்பட்டவர். அப்புறம் தனியாக ஒருஇடத்தைப் பிடித்துக்கொண்டார்.
சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே
ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக இங்கு உழைக்கணும் அதுக்காக
உண்மை உழைப்புக்கு பலன் உண்டு உயர்வாக
நன்மை விளைந்திடும் நமக்காக
வெள்ளிமணிதான் ஒலிக்கும் எங்க மீனாக்ஷி சிரிப்பினிலே
வெண்ணிலவுதான் சிரிக்கும் அவள் கண் ஆட்சி அரசினிலே
வந்து அவள் அழகைக்கண்டால் அந்த சொந்தமொழி மறந்துவிடும்
சொல்லிச் சொல்லிப் பாட்டெடுத்தால்
துன்பம் சொல்லிக்கொண்டு பறந்து விடும்
தந்தாளே பொன்னுலகம் வந்தோமே பாடுபட
இது போனா மறுபடி வருமா
கை அசைவில் நாதம் எழும் சிறுகண் அசைவில் கீதம் வரும்
கொல்லவரும் கொடியவரும் இவர் மெல்லிசைக்கு அடிபணிவார்
பைந்தமிழின் காணிக்கையோ நல்ல பண்ணிசைக்கும் மாணிக்கமோ
தன் உழைப்பில் உயர்ந்தவர்தான் என் இளையராஜனம்மா
நல்ல மனம் நல்லுழைப்பு அன்னையருள் இங்கிருந்தா
இந்த உலகம் அவன் காலடியில்
இரண்டாம் இடத்தில் யேசுதாஸ் - சித்ரா பாடியிருக்கும் இந்தப்பாடல் கவிஞர் நா காமராஜன் எழுதிய பாடல்.
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளிவரும் தென்றலையே நீ சேர்த்துப்போ
நோய்கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
சந்திரனும்சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்ட்து பெண்ணே
மணிக்குயில்பாடும் குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா
மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா
என்மனசு என்னிடமில்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை
கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில்
பாலும்
இன்பத்தேனும் கலந்தோடும்
ஆடிப்பாடத்தான் வரும் ஆசைத் தேரும் நீ
முதலிடத்தில் மனோவும் சித்ராவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் கவிஞர் மு மேத்தா எழுதியது.
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து
தாவுதடி
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே
ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என்முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம் அது உன் முகமானதென்ன
வாடையில் வாடிடும் பூவினைப்போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு தோழியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா
ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி
அம்மனின் கோவிலிலே அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மனக்கோவிலிலே மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள் வருமா
நலம் வாழ்க..
பதிலளிநீக்குவாழ்க நலம்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க... வாங்க...
நீக்குபுள்ளியாய் விண் மீனும் மறைந்து கொள்ள
பதிலளிநீக்குவெள்ளியாய் விடிந்து வந்த பொழுதே வாழ்க..
தள்ளியே போகட்டும் துன்பங்கள் தன்னால்
நீக்குஅள்ளியே வரட்டும் இன்பங்கள் எல்லாம்....
ஆகா..
நீக்குஅள்ளியே வரட்டும்
இன்பங்கள் முன்னால்!...
எல்லாப் பாடல்களும் இனிமையே..
பதிலளிநீக்குஅதிலும் -
நிக்கட்டுமா!... போகட்டுமா?...
மிகவும் பிடிக்கும்....
எனக்கும்!
நீக்குஅதைப் பகிரப் போய்தான் அதிலிருக்கும் இன்னும் இஙுபாடல்களை வேறெப்போது பகிரப்போகிறோம் சேர்ந்தே பகிர்ந்துவிடுவோம் என்றே பகிர்ந்து விட்டேன்!
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்...
பதிலளிநீக்குஇந்தப் படம் பற்றியும் தெரியாது வழக்கமான கருத்துதான் ஹா ஹா ஹ
பாடல் கேட்டுவிட்டு வருகிறேன்...
இப்ப பிஸி கொஞ்சம்...அப்புறம் நிறைய பதிவுகள் இருக்கு போல இன்று...இப்பல்லாம் பல சமயம் மாலை ஆகும் போது தளம் வர முடிவதில்லை ஸோ நேற்றையது பதில் அப்புறம் ஏகாந்தன் அண்ணா பதிவு இனிதான் பார்க்கணும் ஸ்ரீராம்..!!!!!!!!!!!!!!!!!
கீதா
துரை அண்ணா இனிய காலை வணக்கம் உங்க பதிவும் வந்திருக்கு போல...பார்க்கிறேன்...
நீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா... மெதுவா வாங்க... நீங்க வந்துதான் ராகம் சொல்லணும்!
நீக்குஆறு மணிக்கெல்லாம் அதிரடியாய்ப் வரும் கருத்துரைகள்...
நீக்குஇன்றைக்கு ஏனிந்த தாமதம்?...
அதிரடி கருத்துகள்
நீக்குஆறுமணிக்கு
வருவதெல்லாம்
அபூர்வமே!!
துரை அண்ணா ஹா ஹா ஹா ஹா
நீக்குஆமாம் இன்று துரை அண்ணா முதலில் அந்து வாழ்த்து சொல்லட்டும்னுதேன்!!!!! ஹா ஹா ஹா
இன்று கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது...மாசப்பிறப்பு என்பதால்..
கீதா
ஸ்ரீராம் ஹா ஹா ஹா
நீக்குஅதிரடி கருத்துகள்//
ஆமாம் அவங்க அபூர்வம்...
அண்ணா கேட்டபடி என்றால் அப்படியும் என் கருத்து அதிரடியா இருக்காதுதான்!!!!!!
கீதா
சந்தடி சாக்கில என் பெயரும் அடிபடுதே இங்கின:)) கருத்து வேறாக இருப்பினும்:) பெயர் என்னுடையதாக்கும் ம்ஹூம்ம்:) விடமாட்டேன்ன்:))
நீக்குஇன்னிக்கு துலா மாசம்.. முதல் நாள்...
நீக்குசர்க்கரைப் பொங்கல் வைத்தாயிற்று..
சந்தோஷமாக சாப்பிட்டாயிற்று...
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.
இந்தப்படம் கேள்விப்பட்டுள்ளேன். (வழக்கப்படி தொலைக்காட்சி உபயமாக இருக்கும்.) அந்த மூன்றாவது பாடல் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போதே பாட்டு மனசுக்குள் வந்தது. நல்ல இனிமையான பாடல்.
மற்ற இரண்டும் கேட்டால் நினைவுக்கு வரும்மோ என்னவோ! கொஞ்சம் நேரம் கழித்து கேட்டு விட்டுச் சொல்கிறேன். மீண்டும் வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... காலை வணக்கம்.
நீக்குஇனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
மெதுவா வாங்க... கேளுங்க... சொல்லுங்க!
அனைவருக்கும் நல்வரவு,காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வழக்கம்போல் தெரியாத படம், கேட்காத பாடல்கள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா...
நீக்குநல்வரவும், நன்றிகளும்.
கணினி சார்ஜ் ஆகிவிட்டதா?
கணினியை 2,3 தரம் சார்ஜ் செய்ய வேண்டி இருக்கு ஸ்ரீராம். காலை அதாவது அம்பேரிக்காக் காலை 99% சார்ஜில் எடுத்து வேலையைத் தொடங்கினால் ஒன்றரை மணி நேரம் தான் வருது. பின்னர் மத்தியானம் கொஞ்ச நேரம் பார்ப்பேன். அப்போவும் சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது. ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நிற்பதில்லை. ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதே கணினி சார்ஜ் 99% இருந்தால் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வரும். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஅனைவருக்கும் இனிய வெள்ளி வணக்கம்.
நீக்குஐப்பசி நன்னாள் வணக்கம் கூட என்பிரார்த்தனைகளும்.
நிக்கட்டுமா தான் மிக மிகப் பிடிக்கும்.
மற்ற இரு பாடல்களையும் விட்டுவிட மனமில்லை. ரசித்துப் பாடி இருக்கிறார்கள்.
பாடல்வரிகளும் அமுதம். நன்றி ஸ்ரீராம்,
வாங்க வல்லிம்மா... இனிய வெள்ளி வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி. மற்ற இரு பாடல்களையும் கூட கேட்கலாம். நன்றாய் இருக்கும்.
நீக்குகீதாக்கா புது மடிக் கணினியா?
நீக்குபழசு நா பேட்டர் வீக் ஆகிக் கொண்டு வருதுன்னு அர்த்தம்
நீங்க இப்ப அங்க இருக்கறதுனால பேட்டரி கூட நீங்க அங்கிருந்து வாங்கி வந்துரலாம்...என் மைத்துனர் அங்கிருந்துதான் வாங்கி வருகிறார் அவர் கணினி டாக்டர்!!
கீதா
"நிற்கட்டுமா போகட்டுமா" எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகாலை வணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குசும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே ! பாடல் எம். ஜி. ஆர் பாணியாக இருக்கிறது. பிறருக்கு உதவி மயம்.
பதிலளிநீக்குஇளையராஜா புகழ் பாடுகிறது பாடல்.
இப்போது தான் கேட்பது போல் இருக்கிறது இந்த பாடல்.
அடுத்த இரண்டு பாடல்களும் கேட்டு இருக்கிறேன், இனிமை.
'நிற்கட்டுமா போகட்டுமா" அடிக்கடி கேட்டு இருக்கிறேன் இனிமையான பாடல்.
பகிர்வுக்கு நன்றி.
//சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே ! பாடல் எம். ஜி. ஆர் பாணியாக இருக்கிறது. பிறருக்கு உதவி மயம்.
நீக்குஇளையராஜா புகழ் பாடுகிறது பாடல்.//
ஆமாம்... அப்படிதான் இருக்கிறது பாடல். கடைசி சரணம் இளையராஜா புகழ்... அவரை ஏன் கொடியவர்கள் கொல்ல வரவேண்டும் என்கிற கேள்வி வரும்!! ஆனால் கேட்க நன்றாயிருக்கும் குரலும், இசையும்...
அந்த காலகட்டத்தில் வந்த இளையராஜாவின் பாடல்களுக்காகவே பல சுமாரான படங்கள்கூட பெரு வெற்றிகளை பெற்றன. அதுபோல இந்த பாடல்களூம் இனிமையானவைதான்.
பதிலளிநீக்குமோகன், விஜயகாந்த், ராமராஜன் அனைவரும் இதனால் பயன் அடைந்தனர்!
நீக்குநன்றி ஜோஸப் ஸார்.
சகோதரி ராஜி அவர்களின் ஞாபகம் தான் முதலில் வந்தது...
பதிலளிநீக்குஇனிமையான பாடல்கள்...
இதற்கு முன் பகிர்ந்த ஒரு கார்த்திக் பாடலில் அவரை நினைவுகூர்ந்திருந்தேன். இப்போது மறந்துவிட்டேன்!!!1
நீக்குநன்றி DD.
ஸ்ரீராம் மூணு பாட்டுமே கேட்டிருக்கிறென். செம பாட்டுகள். மூணுமே பிடிச்ச பாடல்கள் தான்...உங்க ரேங்கிங்க் டிட்டோ...ஒரு வாட்டி கேட்டுவிட்டேன்.
பதிலளிநீக்குஎல்லாமே நல்ல ராகங்கள்...இன்னும் கேட்டுட்டு ஒவ்வொண்ணா ராகம் சொல்லறேன்...செம ம்யூசிக்!!
கீதா
கேட்டுட்டு சொல்லுங்க மெதுவா..
நீக்கு//எல்லாமே நல்ல ராகங்கள்.// - மோசமான ராகங்கள் மூணு சொல்லுங்க பார்ப்போம்.
நீக்குமுதல் பாட்டில் ஆபோகி சாயல் தெரியுது. இரண்டாவது தோடியோ? மூன்றாவது சிவரஞ்சனி. சரியா கீதா ரங்கன்? (படிக்கறவங்க நினைச்சுக்குவாங்க...நெல்லைத்தமிழன் ராகங்களில் எக்ஸ்பர்ட் என்று. ராகம் தெரிஞ்சவங்க ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் போதாதா?)
நல்ல ராகம் கெட்டராகம்னு இல்லைதான். ஆனால் ஆஹிரி ராகம் கேட்டால் சோறு கிடைக்காது என்று சொல்வார்கள்!
நீக்குநெல்லை எதுவுமே மோசமான ராகங்கள் கிடையாது. ஆனால் சில ராகங்கள் கேட்டால் அது மனதை உருக்கி அல்லது கொஞ்சம் மனதை உலுக்கி நம்மை அறியாமல் கண்ணீர் வரவழைக்கும்...சில ராகங்கள் தாளம் போட வைக்கும்....சில மயக்கும்...
நீக்குஅது மெட்டு போடுபவர்களைப் பொருத்தும் என்று சொல்லலாம். எனக்கு மிகவும் ஆச்சரியம் ஒரு ராகத்தில் மிகவும் patho மெட்டு மற்றொரு மெட்டில் வேறு ஒரு உணர்வைத் தரும்படி இருக்கும் அது இப்ப மறந்து போச்சு நினைவுக்கு வந்ததும் சொல்றேன்...ஸோ எதையுமே ஹேண்டில் செய்வதிலதான் இருக்குனு எனக்குத் தோன்றும்.
கீதா
நெல்லை கை கொடுங்க நீங்களும் எக்ஸ்பெர்ட் தான் முதல் பாடலில் ஆபோகி சாயல் தெரியுதுதான்...சூப்பரோ சூப்பர்!!!! குடோஸ் நெல்லை!! பாராட்டுகள்!!
நீக்குகீதா
கீதா ரங்கன்... அப்போ இன்னைலேர்ந்து நானும் தினசரிக்கு 'இன்றைய ஜோதிடம்' எழுத ஆரம்பிக்கப்போகிறேன். சத்தியமா எழுதும்போது சும்மா ஏதோ எழுதினேனே தவிர பாடலை முழுசும் கேட்கலை, ராகமும் சுத்தமா எனக்குத் தெரியாது. பார்த்தீங்களா.. ஜோசியத்துல 50% ப்ராபப்லிட்டி இருக்கற மாதிரி, என் ராக ஞானத்துல 33% ப்ராபப்லிட்டி இருக்கு போலிருக்கு. ஹா ஹா
நீக்குஇந்த மூணு பாட்டும் கேட்ட மாதிரியே நினைவிலில்லை. நான் 90களிலிருந்து பாட்டு கேட்டதில்லை. டேப், விசிடி படங்களிலும் பாட்டை ஸ்கிப் செய்யும் வழக்கம் கொண்டவன்.
பதிலளிநீக்குஆனா கனகாவைப் பார்த்த பிறகுதான் அவரது வாழ்க்கை, எப்படி அது கிட்டத்தட்ட பாழாய்ப்போனது என்றெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது.... பாவம் அவர்.
இந்த மூணு பாட்டுமே கேட்ட நினைவில்லை என்பது சற்றே ஆச்சர்யம்தான் நெல்லை. சற்றே....
நீக்குநீங்கள் போட்டிருக்கும் பாடல்களை தலை கீழ் வரிசையில் நான் ரசித்தேன். முதல் பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. எம்.ஜி.ஆர். பாடல் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் பாடல், எல்லோருக்கும் எம்.ஜி.ஆர். ஆக ஆசை.
பதிலளிநீக்குஓ.. அப்படியா? அவரவர்க்கு அவரவர் ரசனை! இரண்டாவது எப்படியும் இரண்டாவதில்தான் இருக்கிறது பாருங்கள்!
நீக்குஇப்பாடல்கள் கேட்டதில்லை. கேட்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி.
நீக்குநிக்கட்டுமா போகட்டுமா - பாடல் வாசஸ்பதி!! கேட்டதுமே புரிந்துவிட்டது...
பதிலளிநீக்குஅருமையான பாடல். என்ன ஒரு ராகம்... மனோ எஸ்பிபி நகலேதான் சுத்தாதெவில் வரும் அந்த சிரிப்பு கூட எஸ் பி பி போல ட்ரை செய்திருக்கிறார்.
கீதா
வாசஸ்பதியா.. பார்க்கிறேன்.
நீக்குவாசஸ்பதியா? யாரந்த பிரகஸ்பதி !
நீக்கு:)))
நீக்குஏதோ தலைவலி மருந்து பெயர் மாதிரி இருக்கு இல்லே?
நீக்குஎனக்குத் தெரிந்தது வனஸ்பதிதான்.
நீக்குமல்லிகையே மல்லிகையே தூதாக
பதிலளிநீக்குமுதல்ல டக்குனு கீரவாணியோன்னு தோனிடுச்சு...அப்புறம் கேட்டப்புறம் கீரவானி இல்லைனு தெரிஞ்சுடுச்சு //ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்ட்து பெண்ணே //
இந்த லைன் வந்ததும் நான் கெஸ் பண்ணின ராகத்தை உறுதிப் படுத்த கீஸ் வாசித்து அந்த ராகத்துல இருக்கற பாலமுரளியோட ஒரு க்ருதி ஜய ஜய பத்மனாப முராரே கேட்டு.....உறுதிப் படுத்தி...சரசாங்கி ராகமாதான் இருக்கணும்.
கீதா
ஆமாம்... இதே பாடலை மதுரை மணியும் பாடியிருக்கிறார். இந்த வீடியோ பாருங்கள். இவரும் சொல்கிறார். எல்லோரும் சொல்லும் பாட்டு, மீனம்மா மீனம்மா, ராஜனோடு ராணி வந்து, தானந்தன கும்மிகொட்டி கும்மி கொட்டி, என்றென்றும் ஆனந்தமே போன்ற பாடல்களும் இதே ராகம் என்று விளக்குகிறார்.
நீக்குhttps://www.youtube.com/watch?v=EQAXNZiDUmA
ஓஹோ பார்க்கிறேன் ஸ்ரீராம்...ஓ மதுரை ஜி எஸ் மணி ஆமாம் அவர் நிறைய வீடியோ போட்டிருக்கார்....பார்க்கிறேன்...
நீக்குகீதா
மதுரை ஜி எஸ் மணி இல்லை, நம்ம மதுரை மணி அய்யர்...!!
நீக்குhttps://www.youtube.com/watch?v=lqnuOG1wyzE
ஓ...ஒகே ஸ்ரீராம் கேட்கிறேன்...ரெண்டு லிங்க் கொடுத்துருக்கீங்களே....இனிதான் கேட்கணும் எடுத்து வைத்துவிட்டேன்...
நீக்குமிக்க நன்றி நன்றி ஸ்ரீராம் இப்படிப் பாடல்கள் பற்றி பேசுவது மீண்டும் என் மாமி, கஸின்ஸ் எல்லோருடனும் பேசுவது போல சந்தோஷமா இருக்கு ...மீண்டும் ராகங்களை எல்லாம் புதுப்பித்துக் கொள்கிறேன்..என்ன முன்னாடி எல்லாம் நல்லா டக் டக் நு நினைவு இருக்கும்..ஸ்வரங்கள் முதல்... இப்ப அது கொஞ்சம் மூளையைத் தேடி எடுக்க வேண்டியிருக்கு நினைவுக் கிடங்கில் இருந்து ஹா ஹா ஹா
கீதா
ரசனைக்குநன்றி கீதா... அந்த காணொளிகளை பார்த்து ரசியுங்கள்.
நீக்குபார்த்தேன் கேட்டேன்!!! ரசித்தேன்! நம்ம மதுரை மணி அவர்களின் கார்ட்டூன் கேஷவ் வரைஞ்சு போட்டிருப்பதையும் ரசித்தேன்!!!!!! ஸ்வாதித்திருநாள் க்ருதி என்பதும் முதலிலேயே கெஸ் பண்ண முடிந்தாலும் உறுதியும் ஆனது...
நீக்குமற்ற காணொளி ஆம் இவர் இப்படி நிறைய காணொளிகள் கொடுத்திருக்கிறார் போலத் தெரியுது...அப்ப எனக்கு இங்க டவுட் வரக்கூடியதை இங்கு போய்ப் பார்த்தா தெரிஞ்சுக்கலாம் போல..(ஒன்லி இளையராஜான்னு தெரியது பயங்கர ஃபேன். ஆனால் எல்லா ராகங்களுக்கும் இருக்கான்னு தெரியலை..பார்த்துட்டா போச்சு. இந்த ராகத்துக்கும் நிறையப் பாடல்கள் சொல்லியிருக்கிறார்..)
மிக்க மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஆஆஆஆஆஆ இம்முறை நம்மட முத்துராமன் மாமாவின் மூத்தமகன் நடிச்ச படப் பாட்டூஊஊ.. நான் கார்த்திக்கின் படங்கள் பார்க்கத் தவறியது குறைவே.. இதேபோல பொன்னுமணி படம் டிவிடி போட்டு பக்கத்து வீட்டினர் எல்லோரும் கூடிப் பார்த்து.. அழழெண்டு அழுது சாப்பிட முடியாமல் தொண்டை அடைச்சதும் 90 களில்தான் ஹா ஹா ஹா.. அதில் வரும் நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று பாடம் இப்பவும் நெஞ்சை விட்டகலாதது.
பதிலளிநீக்குமுதல் பாடல் பெரிதாக கேட்டதில்லை, அல்லது ரேடியோவில் போயிருந்தாலும் மனதில் பதியவில்லை.. ஏனைய இரண்டும் பிடிக்கும்.. ஆனா பெரிதாக என் ஃபேவரிட் பாடலுக்குள் இல்லை.
நீங்கள் இப்படி ஒவ்வொரு படமாக எடுத்து, அதில் பிடிச்ச பாடல்களைப் பகிர்வதும் நன்றாக இருக்கு..
அக்காலம் தொடங்கி இன்றுவரை கோடிப்படங்கள் வந்திருக்குமே.. அதனால படம் படமாகப் போட்டாலும் போட்டு முடியாது பாடல்கள்.
ஆஹா... பெயர் மாறிவிட்டதே... பெயரில்லை, அடைமொழி!
நீக்குகோடி படங்களா? அம்மா...டி! மூன்று பாடல்களும் கேட்டிருக்கிறீர்களா? இப்போது கேட்டீர்களா அதிரா?
இப்போது கடைசி இரண்டையும் தான் கேட்டேன், முதலாவது வரிகளை மட்டும் படிச்சேன், ஆனா நீங்க கேள்வி கேட்டவுடன் ஓடிப்போய் முதலாவதையும் கேட்டு விட்டேன்.. ஆனாலும் இம்முறை 3 வதுதான் மூன்றிலும் முதலாவது:).
நீக்குமூன்றாவது பாட்டுக்காட்சியில் வருவது கீதா போட்ட ஸ்ரீரங்கக் கோபுரமும் மொட்டை மாடியும் போல இருக்குதெல்லோ..
//ஆஹா... பெயர் மாறிவிட்டதே... பெயரில்லை, அடைமொழி!//
நீக்குஇம்முறை போஸ்ட் போடாமலே மாறிவிட்டது:)) அஞ்சுவிடம் பிடுங்கி விட்டேன்ன்:)) ஹா ஹா ஹா.. சனி ஞாயிறு பிஸியாக இருக்கும் என்பதால.. இனி எப்போ போஸ்ட் போட முடியுமோ தெரியாது..
நானும் "நிக்கட்டுமா போகட்டுமா" படலைப் பகிர வந்துதான் மற்ற இரண்டு பாடல்களை பகிர்ந்தேன் புன்னகை இளவரசி அதிரா! எப்போதுமே என் தெரிவை - முதலிடத்தில் வைத்திருக்கும் தெரிவை கடைசியாகத்தான் பகிர்வேன். பந்தியில் பிடித்த ஸ்வீட்ட்டை கடைசியில் சாப்பிடுவது போல...!
நீக்குஹா... ஹா... ஹா... அப்போ அடுத்த இரண்டு நாட்கள் இந்தப்பக்கம் வரமாட்டீர்களா? எதை எதை மிஸ் செய்யப்போகிறீர்களோ!
நீக்கு//எதை எதை மிஸ் செய்யப்போகிறீர்களோ!//
நீக்குஇல்லை ஸ்ரீராம் இல்லை:)) என்னைத்தான் எல்லோரும் மிஸ் பண்ணப்போகினம்:)) எனக்குப் பாருங்கோ தற்புகழ்ச்சி பிடிக்காது:)) ஹா ஹா ஹா:))..
அப்படி இல்லை முடிஞ்சால் வருவேன்ன்.. பொதுவா சனி ஞாயிறில் பிஸிதானே...
//இம்முறை 3 வதுதான் மூன்றிலும் முதலாவது:).
நீக்குமூன்றாவது பாட்டுக்காட்சியில் வருவது கீதா போட்ட ஸ்ரீரங்கக் கோபுரமும் மொட்டை மாடியும் போல இருக்குதெல்லோ.. //
கையை கொடுங்கள் அதிரா, நான் நினைத்ததையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.
//ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என்முகம் பார்த்திருந்தேன்
பதிலளிநீக்குஓடையில் பார்த்த முகம் அது உன் முகமானதென்ன //
அருமையான வரிகள்... மக்களுக்கு இப்படித்தெரிகிறது, ஆனா அதிரா போன்ற ஞானிகளுக்கு.. அதில் ஆண்டவன் முகம் தெரியுமாகும்:))
ஆமாமாமாம்.. நீங்கள் பாரணையில் இருக்கிறீர்கள் இல்லையா? அதுதான்
நீக்குஇதாரு புதுசா புன்னகை இளவரசி!! ஹா ஹா ஹையோ அதிரா...எனக்கு இந்த அடை மொழி பார்த்ததும் நான் என் கஸின்ஸ் சேர்ந்தால் நான் மிமிக் செய்யும் கே ஆர் விஜயதான் நினைவுக்கு வருவார்..இப்பவும் அதுதான் நினைவுக்கு அவரைப் போல நடந்து என்று நான் செய்ய அவங்க எல்லோரும் சிரிப்பாங்க...
நீக்குகீதா
ஆகா... புன்னகை இளவரசி.. அதிராவுக்கு மிக பொருத்தமான அடை மொழி பெயர்தான். அனைவருடனும் அன்பாக பேசி "சினேகமானதால்" இப்பெயர் தங்களுக்கு பொருத்தமான பெயர்தான்.! (உங்களுக்கு விரத காலத்தில் குளிர் வரும் என்பீர்கள். இப்போது அங்கு குளிர வேறு அதிகம் உள்ளது எனவும் நேற்று சொல்லியதாக நினைவு.) இருப்பினும் சொல்கிறேன். "புன்னகை இளவரசி" நன்றாக இனிய கானம் போல்,இன்றைய வெள்ளி பாடல்களுக்கு நிகராக உள்ளது. வாழ்த்துக்கள்.
நீக்குஅதிரா.... பேசாமல் சுக்குக் காபி, இஞ்சிக் கஷாயம் வைத்துச் சாப்பிடுங்கள். ஓவர் ஐஸ் வைப்பதில் உங்களுக்கு ஜலதோஷம் வந்திருக்குமே.. ஹா ஹா... 'இளவரசி'ன்னு போட்டுக்கிட்டீங்க. அப்படீன்னா நான் 'நெல்லைக் குழந்தை' என்றுதான் போட்டுக்கணும்.
நீக்குவணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே
நீக்கு"தமிழுக்கு அமுதென்று பேர்" இன்னும் அந்த பாடலில் தமிழுக்கு எத்தனையோ அழகான யெயர்கள்..(இந்த சாக்கில் இன்று அந்தப் பாடலையும் கேட்டு ரசித்தேன். எ. பியில் ஏற்கனவே போட்டாகி விட்டதோ? தெரியவில்லை... நல்ல பாடல்.. கேட்க கேட்கச் சலிக்காது. பொதுவாக இங்கு வரும் அனைவரின் நே. விருப்பமாக இருக்குமென நினைக்கிறேன்.) இப்படி தங்கள் பெயரிலேயே பாதியளவு தமிழ் அடங்கி உள்ளதே..! நீங்கள் ஏன் "நெல்லைக் குழந்தை" என்றெல்லாம் பேர் வைத்துக்கொள்ள வேண்டும்.?
உங்களுக்கும் ஐஸ் வைத்து விட்டேனோ என நினைக்க வேண்டாம். ஹா.ஹா.ஹா.உள்ளதை உள்ளபடிச் சொன்னேன். நன்றி.
இளையராஜாவின் பாடல்கள் இனிமையானதுதானே என்றும்!
பதிலளிநீக்குwwww.Katrinpakkangal.blogspot.com
நன்றி நண்பர் விமலன்பேராளி.
நீக்கு//யேசுதாஸ்- ஜானகி குரலில், 'மல்லிகையே மல்லிகையே' என்று யேசுதாஸ்-சித்ரா குரலில்... //
பதிலளிநீக்குஅவர் ஜேசுதாஸ் இல்லையோ?..
முன்னால் எல்லாம் நானும் ஜேசுதாஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவரை யேசுதாஸ் என்று அழைப்பதே சரி என்று தெரிந்து கொண்டபின் (எங்கே என்று கேட்காதீர்கள்! எங்கேயோ!) அப்படியே சொல்கிறேன்.
நீக்குகே.ஜெ.ஏசுதாஸ்.. அது சுருக்கமா ஜேசுதாஸ்னு ஆக்கிட்டாங்க. மலையாளிகளுக்கு அவர் தாஸேட்டன்.
நீக்குஆமாம் அவர் ஏசுதாஸ் தான் ஆனால் நான் பெரும்பாலும் தாஸேட்டன் என்று சொல்லிப் பழக்கம் ஆனால் கருத்து சொல்லும் போது ஜேசுதாஸ் நு தமிழில் வாசித்து அப்படியும் வந்துருது...ஹிஹிஹி
நீக்குகீதா
இரண்டு கார்த்திக்கையும் வித்தியாசம் காட்ட என்ன வழி?..
பதிலளிநீக்குஒரு கார்த்திக் தானே இதில்?!
நீக்குஇதில் வரும்பாடல்களைக் கேட்டதில்லை இப்போதுகேட்கும்போது எல்லாமே ஸோ ஸோ ரகம்தானென்று தோன்றுகின்றது
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
நீக்கு//இவை எல்லாம் பெரும்பாலும் நான் அலுவலகம் செல்லும்போது ஜெயவிலாஸ் பஸ்களில் போடக் கேட்டு ரசித்த பாடல்கள்...//
பதிலளிநீக்குஅலுவலகம் செல்ல.. ஜெயவிலாஸ் பஸ்?..
லேசான குழப்பம்.. ஓ! இதற்கு முன்னால் வசித்த இடமா?.. அப்போ எங்கே இருந்தீர்கள்?..
மதுரையிலிருந்து வத்ராப், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற காலங்கள் ஜீவி ஸார்.
நீக்கு//ரசிக்கத்தக்க பாடல்களைக் கொடுத்திருப்பார் இளையராஜா..//
பதிலளிநீக்குரசிக்கத்தக்கதாய் இசை அமைத்திருப்பார் இளையராஜா.
அப்படியும் சொல்லலாம் ஜீவி ஸார்.
நீக்கு//கை அசைவில் நாதம் எழும் சிறுகண் அசைவில் கீதம் வரும்
பதிலளிநீக்குகொல்லவரும் கொடியவரும் இவர் மெல்லிசைக்கு அடிபணிவார்
பைந்தமிழின் காணிக்கையோ நல்ல பண்ணிசைக்கும் மாணிக்கமோ
தன் உழைப்பில் உயர்ந்தவர்தான் என் இளையராஜனம்மா
நல்ல மனம் நல்லுழைப்பு அன்னையருள் இங்கிருந்தா
இந்த உலகம் அவன் காலடியில் .. //
வெளிப்பட ஐஸ் வைத்தால் இயல்பாய் இல்லாமல் எதிர்பார்ப்பில் தான் அத்தனையும் என்று தோன்றுகிறது!
அப்போதெல்லாம் டைட்டில் பாடல் என்ற ஒன்று வைத்து அதை இளையராஜா குரலில் பாடவைத்தால் படம் ஹிட் என்கிற நம்பிக்கை இருந்தது. அதை வைத்து இளையராஜா "பாட்டாலே புத்தி சொன்னார்... பாட்டாலே பக்தி செய்தார்... பாட்டுக்கு நான் பாடுபட்டேன்.. அந்தப் பாட்டுக்கள் பலரகம்தான்..." என்றொரு டைட்டில் சாங் பாடியிருந்தார்.
நீக்குசும்மா நீ சுத்தாதே பாட்டின் மெட்டு மற்றும் இன்டெர்லூட் எல்லாம் கேட்கும் போது ராகேஷ்வரி/பாகேஸ்ரீ இந்த இரண்டின் பேஸ் என்று என் சிற்றறிவு சொல்லுது. ...ஒரே ஸ்வரங்கள். ராகேஸ்வரி ராகத்தில் மல்லடி சகோதரர்கள் பாடின ஒரு தில்லானா கேட்டேன். பா, ரா ரெண்டு ஸ்ரீ களும் கிட்டத்தட்ட ட்வின்ஸ்...ஸ்வரங்கள் பார்த்தேன் ஒரே ஸ்வரங்கள். சில ஸ்வரங்களில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் பாடுவதில் தான் வித்தியாசம் என்று தெரிகிறது!!!!!!!!!!!!!!!! பார்க்கிறேன் இன்னும்...
பதிலளிநீக்குகீதா
நான் கூட 'காத்திருந்த மல்லி மல்லி' பாடல் அமிர்தவர்ஷினி என்று நினைத்தால் ஆங்கோர் அறிஞர் அதை பந்துவராளி என்றார். ஏனென்று கேட்டபோது இடையில் வரும் சில்மிஷங்களை கண்டுகொள்ளக் கூடாதென்றார்!
நீக்குஸ்ரீராம் நீங்கள் சொன்னது அதான் அமிர்தவர்ஷினி என்று சொன்னது முக்கால்வாசி கரெக்ட் இடையில் கொஞ்சம் வேறு நோட்ஸ் டச்சிங்க் இருக்குதான் முக்கியமா சரணத்தில்...அப்படி உலாத்திவிட்டு அதுவும் ஒரு வரியில் மட்டும் இன்னும் வித்தியாசமாக போய்ட்டு மீண்டும் அமிர்தவர்ஷினிக்கு வந்திடும் பாட்டு...ஸோ நீங்க சொன்னது தப்பில்லை..
நீக்குகீதா
இந்த இரண்டு ஸ்ரீக்களும் ட்வின்ஸ்தான் ஸ்ரீராம் ஆனால் ஆபோகி க்கும் இவர்களுக்கும் கொஞ்சம் நெருக்கும் இருக்கும் போல ஸோ ஆபோகி வருதுன்னு சொல்லலாம் போல இந்த சும்மா நீ சுத்தாதே....ஹையோ இந்த வரிகள் இந்தப் பாட்டு மெட்டுக்கும் பொருந்திடும் போல இருக்கே!!!!!!ஹா ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
ஓ....
நீக்கு/கை அசைவில் நாதம் எழும் சிறுகண் அசைவில் கீதம் வரும்
பதிலளிநீக்குகொல்லவரும் கொடியவரும் இவர் மெல்லிசைக்கு அடிபணிவார்
பைந்தமிழின் காணிக்கையோ நல்ல பண்ணிசைக்கும் மாணிக்கமோ
தன் உழைப்பில் உயர்ந்தவர்தான் என் இளையராஜனம்மா
நல்ல மனம் நல்லுழைப்பு அன்னையருள் இங்கிருந்தா
இந்த உலகம் அவன் காலடியில் .. //
இது பிறைசூடன் அவர்களின் வரிகள். ம்ம்ம்ம் இது ராஜாவைத் தூக்கி வைத்துப் பாடுவது போல...இவரே எழுதினாரா அல்லது சொல்லப்பட்டு எழுதினாரோ? ஆனால் இசையமைப்பாளர் இந்த வரிகளைத் தவிர்த்து வேறு படத்துக்கும் அந்த சீனுக்கும் ஏற்றாற் போல எழுதச் சொல்லியிருக்கலாம். அவர் இசைவுடன் தானே இசை!
இதே போல இன்னொரு பாட்டும் கூடச் சொல்லுவாங்களே...ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டையில்லே கொடியுமில்லே
அப்பவும் நான் ராஜா
இதுவும் கூட என்று சொல்லலாம் இல்ல?
கீதா
"ஓரம்போ ஓரம்போ" பாடல் வந்த காலத்திலேயே இளையராஜா பெயரை பாடலில் புகுத்தி ஜால்ரா அடிப்பது வந்துவிட்டது. (பண்ணப்புரம் சின்னத்தாயி பெத்த மகன் பிச்சமுத்து ஓடிவராண்டோய்). அப்புறம் வாலி, 'சின்னத் தாயவள் பெற்ற ராசாவே' என்று பல இடங்களில் இளையராஜாவையும் மற்றவர்களையும் தூக்கிவைத்துப் பாடியிருப்பார்)
நீக்குவேறு சில பாடல்களிலும் உண்டு என்று நினைக்கிறேன்!
நீக்குராஜா கையை வச்சா... அது ராங்கா போனதில்லை...
நீக்குஆமாம் நெல்லை அண்ட் ஸ்ரீராம்....இந்தப் பாடல்களும் இப்ப பார்த்தாப்புறம் தான் நினைவு வருது!
நீக்குகீதா
ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என்முகம் பார்த்திருந்தேன்
பதிலளிநீக்குஓடையில் பார்த்த முகம் அது உன் முகமானதென்ன
வாடையில் வாடிடும் பூவினைப்போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
தேரடி வீதியிலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு தோழியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா //
வரிகள் நல்லாருக்கு ரசித்தேன்..
இந்தப் பாட்டில் வரிகள் எல்லாமே நல்லாருக்கு ஸ்ரீராம்
கீதா
ரசித்திருப்பதற்கு நன்றி கீதா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இதில் முதல் பாடல் அதிகமாக கேட்ட நினைவில்லை. 2வதும் 3வதும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். நீங்கள் கூறியபடி "நிக்கட்டுமா" பாடல்தான் மனதில் முதலில், நிலைத்து நிற்கிறது. நல்ல பாடல். மனோ, சித்ரா குரல் பாடலின் இனிமையான இசைக்குப் பொருத்தமாக உள்ளது.
நானும் மனோ வந்த புதிதில், எஸ. பி. பி குரல் என சில பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன். அவ்வளவு ஒற்றுமையாக இருக்கும். அப்புறம் போகப் போகத்தான் கொஞ்சம் வேறுபாடு உணர ஆரம்பித்தேன்.
வெள்ளி பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன. பாடலை கேட்டு ரசித்த அந்த பழைய நினைவுகளை, மீட்டுத் தருகின்றன.
இன்றும் அருமையான பாடல்களை தொகுத்து தந்ததற்கு மிகுந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆரம்பம் முதலே மனோ- எஸ் பி பி குரலில் எனக்குக் குழப்பம் வந்ததில்லை கமலா அக்கா.
நீக்குரசித்ததற்கு நன்றி!
இப்பாடல்கள் எதுவும் கேட்டதில்லை ஸ்ரீராம்ஜி. அச்சமயம் நான் கேரளத்துப் பக்கம் ஒதுங்கிவிட்டதால் கேட்க முடியாமல் போயிற்று. படம் பற்றியும் தெரியவில்லை.
பதிலளிநீக்குஇப்போதுதான் முதல் முறை கேட்டேன். நன்றாக இருக்கிறது. மூன்று பாடல்களுமே.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குகாணொளி பார்க்க இயலவில்லை! பிறகு தான் பார்க்க வேண்டும் ஸ்ரீராம். தொடரட்டும் பதிவுகள்.
பதிலளிநீக்கு